மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.10.13

Astrology: Answer to quiz 15

 
Astrology: Answer to quiz 15

நேற்றையப் பதிவில் கேட்கப்பெற்ற கேள்விகள்:

1.  இந்தப் பெண்ணிற்குத் திருமணம் ஆகிவிட்டதா? அல்லது இல்லையா?
2. திருமணமாகியிருந்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்குமா? அல்லது பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்குமா?
அதாவது குடும்ப வாழ்க்கை உண்டா அல்லது இல்லையா?
3. பிரச்சினை இருக்கும் என்றால் எதை வைத்துப் பிரச்சனை?

சரியான பதில்கள்:

1.ஜாதகி திருமணமானவர்.
2.நல்ல கணவர் மற்றும் குடும்ப வாழ்க்கை உள்ளது.
3.ஜாதகிக்குக் குழந்தை இல்லை. அது ஒன்றுதான் பிரச்சனை!
------------------------------------------
ஜாதகத்தைப் பாருங்கள்


1
கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்திலேயே இருக்கிறார். ஏழாம் வீட்டைப் பார்க்கும் அவரும்,  குருவோடு கைகோர்த்த சுக்கிரனும் ஜாதகிக்குத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். ஏழாம் வீட்டுக்கார்ன் சனி 12ல் அமர்ந்ததால் சற்றுத் தாமதமான திருமணம். அவ்வளவுதான்.
2
குடும்ப ஸ்தான அதிபதி (Lord of the 2nd house) சூரியன் பாக்கியத்தில் (9ஆம் வீட்டில்) ஆகவே நல்ல குடும்ப வாழ்க்கை அமைந்தது.  அத்துடன் குரு, சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய மூன்று சுபக்கிரகங்களின் பார்வையும் குடும்ப ஸ்தானத்தின் மேல் இருக்கிறது. ஆகவே நல்ல குடும்பவாழ்க்கை அமைந்தது.
3
குழந்தையின்மைக்கான காரணங்கள் என்ன என்பதைக் கீழே பட்டியலிட்டுள்ளேன்.
1.குழந்தை பாக்கியத்திற்கான வீட்டில் (ஐந்தில்) ராகு,
2.அந்த (ஐந்தாம்) வீட்டு அதிபதி செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து கெட்டிருக்கிறார். வீக்காக உள்ளார்.
3.குழந்தைக்குக் காரகன் குரு  (authority for children) அஷ்டமத்தில் மறைந்து விட்டார் அதாவது எட்டாம் இடத்தில் அமர்ந்து விட்டார். அத்துடன் விரையாதிபதி புதனுடன் சேர்ந்து செல்லாக் காசாகிவிட்டார்.
4. மேலும் அதே குரு பகவான்தான் இந்த ஜாதகத்திற்கு பாக்கியாதிபதி அதாவது Ninth Lord அவர் தன்னுடைய இடத்திற்குப் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறார். அது மோசமான இடமாகும் (It is the most melefic place for a house lord)5. இயற்கையாகவே சுபக்கிரகங்களான சுக்கிரன், குரு, மற்றும் புதன் ஆகிய மூவரும் எட்டில் அமர்ந்ததால் ஜாதகிக்குக் கைகொடுக்க  இயலாமல் போய்விட்டது!
--------------------------------------------------------------------
குழந்தை இன்மை என்பது ஒரு சாபம்தான். சாபம் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் வருந்தாதீர்கள். காலதேவன் கொடுக்கும் சாபங்களுக் கெல்லாம், இறைவன் நஷ்ட ஈட்டையும் கொடுத்துத்தான் மனிதர்களைப் படைக்கிறார். இல்லை என்றால் அனைவருக்கும் 337 என்ற மந்திரம் எப்படி வரும்?

தங்கள் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்து, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் பாதுகாத்து வளர்த்த பெற்றோர்களை எத்தனை பிள்ளைகள உதாசீனப் படுத்துகின்றன தெரியுமா? எத்தனை பெற்றோர்கள் உரிய அன்பு பாசம் அரவணைப்பு கிடைக்காமல் முதியோர் இல்லங்களில் வாடிக்கொண்டு
இருக்கிறார்கள் தெரியுமா?

அவர்களைப் பார்க்கும் போது, குழந்தை இல்லாதவர்களின் நிலைமை எவ்வளவோ மேல்!

என்ன, சமூகம் அவர்களைச் சீண்டும். அது ஒன்றுதான் வருத்தத்திற்கு உரியது! உறவினர்களோ அல்லது நண்பர்களோ திடீரென்று உங்கள் குழந்தைகள் என்ன செய்கின்றன என்று கேட்டு அவர்களைச் சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள்

லைசென்ஸ் இல்லாத வாகன ஓட்டியைப் போலீஸ்காரன் மடக்கிக் கேள்வி கேட்பதைப் போல கேள்வி கேட்பார்கள்!

கேட்டால் என்ன? அடக்கமாகப் பதில் சொல்லுங்கள்

“I do not have a child. I don't know whether it is a curse or boon. But i accepted the out come of the life destined to me, happily!”

“எனக்குக் குழந்தை இல்லை. அது சாபமா அல்லது வரமா என்று தெரியவில்லை. விதிக்கப்பெற்றதை ஏற்றுக்கொண்டு வாழும்
மனப்பக்குவம் எனக்கு உள்ளது. அதனால் நான் குழந்தையின்மைக்காக வருந்தவில்லை”. என்று சொல்லுங்கள்!

குழந்தை இருப்பவனுக்கு அவன் குழந்தைகள் மட்டுமே குழந்தைகளாக இருக்கும். குழந்தை இல்லாதவனுக்கு, அவன் செலுத்தும் அன்பினால் உறவினர்கள், நண்பர்கள் என்று மற்ற வீட்டுக் குழந்தைகளும் அவனுடைய குழந்தைகள்தான் என்ற பெருந்தன்மையால் நிறையக் குழந்தைகள். ஆகவே குழந்தையின்மை சாபமல்ல ஒரு விதத்தில் அதுவும் வரம்தான்!
----------------------------------------------------------------
இந்த ஜாதகிக்கு உள்ள முக்கியமான பிரச்சினை குழந்தை இன்மை. அதாவது குழந்தை இல்லை. அதைக் கோடிட்டுக் காட்டியவர்கள் மொத்தம் 10 பேர்கள். அவர்களின் பெயர்களைக் கீழே தெரிவித்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்! பின்னூட்டங்களைப் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். அடுத்தடுத்து வரவுள்ள ஜாதகங்களில் உங்கள் திறமையைக் காட்டுங்கள்!

சரியான விடையை எழுதிய அந்தப் பத்துப் பேர்கள்:
1.  திரு.சத்தியநாராயணன்.
2. திருமதி.கோகிலம்.
3. திரு.ஜி. முரளிகிருஷ்ணா.
4. திரு.உதயகணேஷ்.
5. திருமதி ஜனனி முருகேசன்.
6. திரு.சி.ஜீவானந்தம்.
7. திரு. A.K ஆனந்த்.
8. திரு.AMG.
9. திருமதி. தனலெட்சுமி.
10. SRi.

கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

29 comments:

  1. ஜாதகம் நன்றாக ஏமாற்றிவிட்டது.

    அஷ்டவர்கத்தில் குடும்ப ஸ்தானத்திற்கு 22 பரல் மட்டுமே. குடும்ப ஸ்தானதிபதி சூரியனின் சுயவர்க பரல் 3 மட்டுமே. லக்னாதிபதி சந்திரனின் சுயவர்கபரல் 2 மட்டுமே. சூரியன் நின்ற‌ பாக்கிய ஸ்தானத்திற்கு 23 பரல் மட்டுமே.

    எப்படி குடும்ப நன்றாக அமைந்தது?

    எல்லாம் இறையருள்தான். ஜோதிடம் எல்லாம் கடைசிபட்சம்தான்.புதிர் ஒவ்வொன்றும் என் ஜோதிட அகங்காரத்தை உடைத்து எறிகிறது.

    எளிமையாக ராசிக்கட்டத்தை மட்டும் பார்த்து பலன் சொன்னாலே போதும் போல உள்ளது.அதிகம் படித்தால் குழப்பமே மிஞ்சுகிறது.

    ReplyDelete
  2. This was a good quiz. More than find the birth date from chart. I like this kind of analysis related quizzes.

    Thanks a lot sir.. Can you please approve the comments, I just want to see how other students answered and the way they analyzed.

    ReplyDelete
  3. There are so many factors to analyse in a horoscope.

    Its just my experience that Though ashtakavarga is useful, Its only useful when you are using it to analyse the likeliness of a particular life event to occur and with respect to how much the gochara is favourable related to the particular event. I term this kind of prediction as dynamic nature of life related event.

    when analysing the static changes in life like job, marriage, child birth which are common to every human life its enough if we just analyse the rasi chart and correspoding varga chart. Its just my opinion based on my astrological analysis experiences. Often times, I find ashtavarga diverted me from the truth which actually occured on the natives life. Hope KMR Krishnan sir finds this comment useful.

    ReplyDelete
  4. Respected Sir,

    Very happy that my name placed in the list :-) and i am still Ms.Janani Murugesan not Mrs Sir :-)

    ReplyDelete
  5. நன்றி. சென்ற வாரம் கேள்விகளுக்கு க்ளு வேண்டும் என்று கேட்டிருந்தேன். அதை வாத்தியார் கொடுத்து என் பெயரும் வந்து விட்டது. இதற்குதானே (பெயர் வருவதற்கு) ஆசைப்பட்டாய் ஆனந்த் என்று கேட்காமல் இருந்தால் சரி.

    கன்னி லக்கின ஜாதகனான எனக்கு 5ல் ராகு, செவ்வாய், 11ல் கேது மாந்தி. 8ல் புதன், சுக்கிரன். எனக்கும் இதே பிரச்சினைதான் இருந்தது. திருமணமாகி 12 வருடங்கள் ஆகி இப்போதுதான் என் மனைவி கற்பமாகி (6 மாதம்) இருக்கிறார்.

    கடக லக்கின ஜாதகரான என் மனைவிக்கு 7ல் செவ்வாய், குரு. எனக்கு இருப்பது போல் 8ல் புதன், சுக்கிரன். குடும்ப ஸ்தானத்தை இரு சுபர்கள் (இருவருக்கும்) பார்ப்பதால் குடும்பத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. முன்பு குழந்தை பாக்கியம் இல்லை என்ற குறை இருந்தது.

    இங்கு கொடுக்கப் பட்ட ஜாதகத்தில் அவருக்கு 8ல் 3 சுபர்கள் இருப்பதால் மாங்கல்யத்திற்கும், குடும்ப வாழ்க்கையிலும் எந்த சிக்கலும் இல்லாமல் இருக்க வேண்டும். சந்திரன் லக்கினத்தில் இருப்பதால் நல்ல குணவதியாகவும், நல்ல அழகிய தோற்றத்துடனும் இருப்பார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. நல்லதொரு பயிற்சி ஐயா.
    ஓரு விண்ணப்பம். இதே போன்ற ஏன்ஜலீனா ஜோலீ ஜாதகத்தை தாங்கள் அலசுமாறு வேண்டுகிறேன். பிறப்பு June 4, 1975 9.09 AM Los Angeles அவருக்கும் கடக லக்னம். ஐந்தில் ராகு. அவருக்கு மட்டும் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகள் அனேகம். ஏன் அவ்வாறு? தயவு செய்து அலசுங்கள்.

    ReplyDelete
  7. புதிருக்கு பதில் சொல்பவர்கள்
    பலரும் -ve aspectகளையே

    பார்ப்பதினால் சோதிடம்
    பார்ப்பவர்கள் இப்படியோ என

    எண்ணத் தோன்றுகிறது..
    எது எப்படியோ

    எண்ணம் தெளிவானால்
    எதுவும் எளிதாகும்

    ReplyDelete
  8. திருவருள் துணையிருந்தால்
    திரும்பி நிற்கும் விதி கூட

    விதியை மதியால் வெல்லமுடியாது
    திருவருள் துணையினால் வெல்லலாம்

    எல்லாம் தெரிந்தவர்
    எவருமில்லை

    எதுவும் தெரியாதவரும்
    எவரும் இல்லை..

    அதிகம் தெரிந்தவர்கள்
    அன்று சொன்னது போல்

    திரை மறைவில் தான்
    திரைக்கு பின் உள்ள உலகத்தை

    பாருங்கள்..இங்குள்ள உலகத்தில்
    வாழுங்கள்.. மகிழ்ச்சி எப்போதும்

    இன்பமே எந்நாளும்
    துன்பமில்லை

    ReplyDelete
  9. i think what mr. satyanarayanan has told about the ashtakavarga appears to be correct. for static issues in life like job, marriage and childlessness etc., mere analysis od the planets appears to be sufficient. but for analysing dynamic changes like gochara and dasa/bukthi benefits, parals are to be considered. I have also found that this works out accurately while analysing the horoscopes of known persons. i also found that ashtakavarga diverted me from the truth many times. planetary considerations are only to be considered initially. only when there are conflicting planetary predictions, ashtakavarga can be resorted to while arriving at the conclusion. as our senior mr. kmr krishnan has told , family position was not strong and the planets also indicated that. but since lagna lord and rashi was same and lagna was good , 3 benefics in eight house helped her family life it seems. anyways, this question was a good experience. and it would be even better if our guru made it difficult by asking tricky questions instead of suggestive questions as mr. krishnan requested earlier.

    thanks and for the kind notice of the guru for his opinion !.

    ReplyDelete
  10. Sir,
    In your old lesson, you told, Only sukran at 8th place is good position as 2nd house will get his aspect. But very sad that also not helped this native in getting child.

    ReplyDelete
  11. இவ்வளவு க்ளூ கொடுத்தும் யாராலும் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான, உறுதியான பதில்களைத் தர இயலவில்லை. என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். இன்னும் கடினமான கேள்வி வேண்டுமா? முதலில் கூரை ஏறி கோழி பிடியுங்கள். பிறகு வானம் ஏறி வைகுண்டம் போகலாம்.

    ReplyDelete
  12. /////Blogger kmr.krishnan said...
    ஜாதகம் நன்றாக ஏமாற்றிவிட்டது.
    அஷ்டவர்கத்தில் குடும்ப ஸ்தானத்திற்கு 22 பரல் மட்டுமே. குடும்ப ஸ்தானதிபதி சூரியனின் சுயவர்க பரல் 3 மட்டுமே. லக்னாதிபதி சந்திரனின் சுயவர்கபரல் 2 மட்டுமே. சூரியன் நின்ற‌ பாக்கிய ஸ்தானத்திற்கு 23 பரல் மட்டுமே.
    எப்படி குடும்ப நன்றாக அமைந்தது?
    எல்லாம் இறையருள்தான். ஜோதிடம் எல்லாம் கடைசிபட்சம்தான்.புதிர் ஒவ்வொன்றும் என் ஜோதிட அகங்காரத்தை உடைத்து எறிகிறது.
    எளிமையாக ராசிக்கட்டத்தை மட்டும் பார்த்து பலன் சொன்னாலே போதும் போல உள்ளது.அதிகம் படித்தால் குழப்பமே மிஞ்சுகிறது.////

    வருத்தம் எதற்கு? உங்கள் ஜோதிட அறிவைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். சில சமயம் சில விஷயங்கள் கண்ணில் படாமல் போய்விடும். அப்படி எடுத்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  13. ////Blogger Sathyanarayanan said...
    This was a good quiz. More than find the birth date from chart. I like this kind of analysis related quizzes.
    Thanks a lot sir.. Can you please approve the comments, I just want to see how other students answered and the way they analyzed./////

    விடுவேனா? அவற்றையும் கொடுத்துள்ளேன். பாருங்கள்!

    ReplyDelete
  14. /////Blogger Sathyanarayanan said...
    There are so many factors to analyse in a horoscope.
    Its just my experience that Though ashtakavarga is useful, Its only useful when you are using it to analyse the likeliness of a particular life event to occur and with respect to how much the gochara is favourable related to the particular event. I term this kind of prediction as dynamic nature of life related event.
    when analysing the static changes in life like job, marriage, child birth which are common to every human life its enough if we just analyse the rasi chart and correspoding varga chart. Its just my opinion based on my astrological analysis experiences. Often times, I find ashtavarga diverted me from the truth which actually occured on the natives life. Hope KMR Krishnan sir finds this comment useful.////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. /////Blogger janani murugesan said...
    Respected Sir,
    Very happy that my name placed in the list :-) and i am still Ms.Janani Murugesan not Mrs Sir :-)////

    சரி. அடுத்த முறை செல்வி ஜனனிமுருகேசன் என்று போட்டுவிடுகிறேன். சரிதானே!

    ReplyDelete
  16. //////Blogger Ak Ananth said...
    நன்றி. சென்ற வாரம் கேள்விகளுக்கு க்ளு வேண்டும் என்று கேட்டிருந்தேன். அதை வாத்தியார் கொடுத்து என் பெயரும் வந்து விட்டது. இதற்குதானே (பெயர் வருவதற்கு) ஆசைப்பட்டாய் ஆனந்த் என்று கேட்காமல் இருந்தால் சரி.
    கன்னி லக்கின ஜாதகனான எனக்கு 5ல் ராகு, செவ்வாய், 11ல் கேது மாந்தி. 8ல் புதன், சுக்கிரன். எனக்கும் இதே பிரச்சினைதான் இருந்தது. திருமணமாகி 12 வருடங்கள் ஆகி இப்போதுதான் என் மனைவி கற்பமாகி (6 மாதம்) இருக்கிறார்.
    கடக லக்கின ஜாதகரான என் மனைவிக்கு 7ல் செவ்வாய், குரு. எனக்கு இருப்பது போல் 8ல் புதன், சுக்கிரன். குடும்ப ஸ்தானத்தை இரு சுபர்கள் (இருவருக்கும்) பார்ப்பதால் குடும்பத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. முன்பு குழந்தை பாக்கியம் இல்லை என்ற குறை இருந்தது.
    இங்கு கொடுக்கப் பட்ட ஜாதகத்தில் அவருக்கு 8ல் 3 சுபர்கள் இருப்பதால் மாங்கல்யத்திற்கும், குடும்ப வாழ்க்கையிலும் எந்த சிக்கலும் இல்லாமல் இருக்க வேண்டும். சந்திரன் லக்கினத்தில் இருப்பதால் நல்ல குணவதியாகவும், நல்ல அழகிய தோற்றத்துடனும் இருப்பார் என்று நினைக்கிறேன்./////

    நீங்கள் கூறுவது உண்மைதான். லக்கினத்தில் சந்திரன் இருந்தாலும் அல்லது லக்கினத்தை சந்திரன் பார்த்தாலும் ஜாதகி அழகான தோற்றம் உடையவராக இருப்பார்!

    ReplyDelete
  17. ///Blogger வேப்பிலை said...
    புதிருக்கு பதில் சொல்பவர்கள்
    பலரும் -ve aspectகளையே
    பார்ப்பதினால் சோதிடம்
    பார்ப்பவர்கள் இப்படியோ என
    எண்ணத் தோன்றுகிறது..
    எது எப்படியோ
    எண்ணம் தெளிவானால்
    எதுவும் எளிதாகும்////

    என்ன aspectஐச் சொல்கிறீர்கள் என்பதை முழுமையாக ஏன் எழுதவில்லை சுவாமி நீங்கள்?

    ReplyDelete
  18. Blogger வேப்பிலை said...
    திருவருள் துணையிருந்தால்
    திரும்பி நிற்கும் விதி கூட
    விதியை மதியால் வெல்லமுடியாது
    திருவருள் துணையினால் வெல்லலாம்
    எல்லாம் தெரிந்தவர்
    எவருமில்லை
    எதுவும் தெரியாதவரும்
    எவரும் இல்லை..
    அதிகம் தெரிந்தவர்கள்
    அன்று சொன்னது போல்
    திரை மறைவில் தான்
    திரைக்கு பின் உள்ள உலகத்தை
    பாருங்கள்..இங்குள்ள உலகத்தில்
    வாழுங்கள்.. மகிழ்ச்சி எப்போதும்
    இன்பமே எந்நாளும்
    துன்பமில்லை////

    அடடா நெஞ்சை டச்சிங் டச்சிங் பண்ணீட்டிங்க சாமியோவ்!

    ReplyDelete
  19. /////Blogger murali krishna g said...
    i think what mr. satyanarayanan has told about the ashtakavarga appears to be correct. for static issues in life like job, marriage and childlessness etc., mere analysis od the planets appears to be sufficient. but for analysing dynamic changes like gochara and dasa/bukthi benefits, parals are to be considered. I have also found that this works out accurately while analysing the horoscopes of known persons. i also found that ashtakavarga diverted me from the truth many times. planetary considerations are only to be considered initially. only when there are conflicting planetary predictions, ashtakavarga can be resorted to while arriving at the conclusion. as our senior mr. kmr krishnan has told , family position was not strong and the planets also indicated that. but since lagna lord and rashi was same and lagna was good , 3 benefics in eight house helped her family life it seems. anyways, this question was a good experience. and it would be even better if our guru made it difficult by asking tricky questions instead of suggestive questions as mr. krishnan requested earlier.
    thanks and for the kind notice of the guru for his opinion/////

    கேள்விகள் எல்லா லெவலுக்கும் பொருந்துகின்ற மாதிரி இருக்க வேண்டும். made it difficult by asking tricky questions எல்லாம் சாத்தியமில்லை. பலரும் பாதிக்கப்படுவார்கள். புரிந்து கொள்ளுங்கள் ராசா!

    ReplyDelete
  20. /////Blogger KJ said...
    Sir,
    In your old lesson, you told, Only sukran at 8th place is good position as 2nd house will get his aspect. But very sad that also not helped this native in getting child.////

    சுக்கிரன் அவருக்கு உள்ள வேலையை மட்டும்தானே பார்ப்பார். குரு பகவானின் வேலையை (authority for children) இவர் எப்படிக் கையில் எடுப்பார்?

    ReplyDelete
  21. /////Blogger Ak Ananth said...
    இவ்வளவு க்ளூ கொடுத்தும் யாராலும் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான, உறுதியான பதில்களைத் தர இயலவில்லை. என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். இன்னும் கடினமான கேள்வி வேண்டுமா? முதலில் கூரை ஏறி கோழி பிடியுங்கள். பிறகு வானம் ஏறி வைகுண்டம் போகலாம்.//////

    கூரையில் தானே ஏற வேண்டும். ஏணி இல்லாமலேயே ஏறுவதற்கு இன்னும் கொஞ்ச நாட்களில் பழகிவிடுவார்கள். உங்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். பொறுத்திருந்து பாருங்கள்!

    ReplyDelete
  22. ஐயா வணக்கம்,

    எனக்கு ஒரு சந்தேகம், பலன் சொல்லும்போது கோச்சாரத்தை கணக்கில் கொள்வதாக தெரியவில்லையே??

    ஒருவருடைய ஜாதக பலன்களுக்கு திசா/புத்தி தான் பிரதானமானதாக இருந்தாலும் நாம் கோச்சாரத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டுமல்லவா?
    இங்கே யாரும் கோச்சார பலன்களை எடுத்துக்கொள்ளவில்லையே ஏன்?

    ஏற்கனவே நடந்தவையாக இருந்தாலும் அப்போதைய கோச்சாரம் கணக்கில் கொள்ள வேண்டுமல்லவா?


    செங்கோட்டையன்.
    திருப்பூர்.

    ReplyDelete
  23. Dear Sir,

    God is supreme.

    Interpretation of horoscope may be differ to each person and depending upon limited knowledge which will not be definitely sufficient to get the knowledge of What GOD gives.

    God supercedes everything.

    Thanking you.

    ReplyDelete
  24. வாத்தியார் ஐயா, இந்த காரகத்துவத்தை பற்றி ஒரு சிறு சந்தேகம். சனி பகவான் தொழில்காரகர். அவர் 9ம் இடத்தில் திரிகோணத்தில் இருக்கிறார் என்று வைத்து கொள்வோம். அது 10ம் இடத்திற்கு 12ம் இடம். அப்போது 9ம் இடத்தில் இருக்கும் கர்ம காரகனால் தொழிலில் தடங்கல் வரும் என்று கொள்ளலாமா? அது போல் பத்தாம் வீட்டுக்காரனுக்கு 12ல் இருந்தாலும் இதே நிலை தானா? 10ம் வீட்டுக்காரர் 10ல் ஆட்சி பலத்துடன் இருக்கையில் சனி பகவான் 10ம் வீட்டிற்கு 12லோ, 8லோ, 6லோ இருந்தால் அதன் பலன் என்ன?

    ReplyDelete
  25. ////Blogger redfort said...
    ஐயா வணக்கம்,
    எனக்கு ஒரு சந்தேகம், பலன் சொல்லும்போது கோச்சாரத்தை கணக்கில் கொள்வதாக தெரியவில்லையே??
    ஒருவருடைய ஜாதக பலன்களுக்கு திசா/புத்தி தான் பிரதானமானதாக இருந்தாலும் நாம் கோச்சாரத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டுமல்லவா?
    இங்கே யாரும் கோச்சார பலன்களை எடுத்துக்கொள்ளவில்லையே ஏன்?
    ஏற்கனவே நடந்தவையாக இருந்தாலும் அப்போதைய கோச்சாரம் கணக்கில் கொள்ள வேண்டுமல்லவா?
    செங்கோட்டையன்.
    திருப்பூர்./////

    விவரமாக எழுத வேண்டும். தனிப் பதிவாகவே அதை எழுதுகிறேன். இரண்டு நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  26. /////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    God is supreme.
    Interpretation of horoscope may be differ to each person and depending upon limited knowledge which will not be definitely sufficient to get the knowledge of What GOD gives.
    God supercedes everything.
    Thanking you./////

    ஆமாம். உண்மைதான். அதை யாரும் மறுக்கவில்லையே. கர்மவினையால் ஒருவன் படும் அவஸ்தைகளுக்குக் கடவுள் காரணமாகமாட்டார். அதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
  27. /////Blogger thozhar pandian said...
    வாத்தியார் ஐயா, இந்த காரகத்துவத்தை பற்றி ஒரு சிறு சந்தேகம். சனி பகவான் தொழில்காரகர். அவர் 9ம் இடத்தில் திரிகோணத்தில் இருக்கிறார் என்று வைத்து கொள்வோம். அது 10ம் இடத்திற்கு 12ம் இடம். அப்போது 9ம் இடத்தில் இருக்கும் கர்ம காரகனால் தொழிலில் தடங்கல் வரும் என்று கொள்ளலாமா? அது போல் பத்தாம் வீட்டுக்காரனுக்கு 12ல் இருந்தாலும் இதே நிலை தானா? 10ம் வீட்டுக்காரர் 10ல் ஆட்சி பலத்துடன் இருக்கையில் சனி பகவான் 10ம் வீட்டிற்கு 12லோ, 8லோ, 6லோ இருந்தால் அதன் பலன் என்ன?/////

    சனீஷ்வரன் பத்தாம் இடத்தைதன் பார்வையில் வைத்திருப்பதும் அல்லது பத்தாம் வீட்டுக்காரருடன் சேர்க்கை அல்லது பார்வையால் இணைந்திருப்பதும்தான் முக்கியம். அப்போதுதான் முழுப்பலன், பார்க்கும் தொழிலில் மேன்மை அடைய முடியும். அத்துடன் லக்கினாதிபதி வலிமையாக இருப்பதும் முக்கியம். மற்றபடி நீங்கள் சொல்லும் நிலைகளுக்கெல்லாம் பாதிப்பலன்களோ அல்லது தவனை முறைப் பலன்களோ கிடைக்கும்!

    ReplyDelete
  28. ////Blogger redfort said...
    ஐயா வணக்கம்,
    எனக்கு ஒரு சந்தேகம், பலன் சொல்லும்போது கோச்சாரத்தை கணக்கில் கொள்வதாக தெரியவில்லையே??
    ஒருவருடைய ஜாதக பலன்களுக்கு திசா/புத்தி தான் பிரதானமானதாக இருந்தாலும் நாம் கோச்சாரத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டுமல்லவா?
    இங்கே யாரும் கோச்சார பலன்களை எடுத்துக்கொள்ளவில்லையே ஏன்?
    ஏற்கனவே நடந்தவையாக இருந்தாலும் அப்போதைய கோச்சாரம் கணக்கில் கொள்ள வேண்டுமல்லவா?
    செங்கோட்டையன்.
    திருப்பூர்./////

    விவரமாக எழுத வேண்டும். தனிப் பதிவாகவே அதை எழுதுகிறேன். இரண்டு நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com