மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.9.13

Astrology: ஜாதகத்தை வைத்துப் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கும் வித்தையை முதலில் தெரிந்து கொள்வோம்!

 

Astrology: ஜாதகத்தை வைத்துப் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கும் வித்தையை முதலில் தெரிந்து கொள்வோம்!

அனேக மாணவக் கண்மணிகள், ஒரு ஜாதகத்தை வைத்து, பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கும் வித்தை என்ன என்று கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்காக முன்பு மேல்நிலை வகுப்பில் பதிவிடப்பெற்ற பாடத்தை இன்று மீண்டும் கொடுத்துள்ளேன்
----------------------------------------------------------------
பயிற்சி எண் ஒன்று! (Practical Lesson No.1)

ஒரு ஜாதகத்தை அதன் பிறப்பு விவரம் இல்லாமல் கொடுக்கப்படும்போது, கிரகங்களை வைத்து, ஜாதகனின் பிறந்த தேதியைக் கண்டு  பிடிப்பதுதான் முதல் பயிற்சி

சமயங்களில் பிறந்ததேதியுடன் பொய்யான ஜாதகத்தை அல்லது தவறான ஜாதகத்தை ஒருவர் கொடுத்தால், அதைக் கண்டுபிடிப்பதற்கு இந்த உபாயம் உதவும்

கீழே ஒரு ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். ஜாதகரின் பிறந்த தேதி என்ன?



1. ஜாதகத்தில், சனி, ராகு, குரு ஆகிய மூன்று கோள்களின் நிலையை வைத்து ஒரு ஜாதகரின் பிறந்த வருடத்தைச் சொல்லிவிடலாம். 2. சூரியன் இருக்கும் இடத்தைவைத்து பிறந்த மாதத்தையும், சந்திரனின் நிலையை வைத்து பிறந்த நாளையும் சொல்லிவிடலாம்.(ஜாதகரின் நட்சத்திரம் தெரிந்தால் சரியான தேதி கிடைக்கும். இல்லையென்றால் ஒரு நாள் வித்தியாசப்படும்)

அதற்கு அக்கோள்களின் இன்றைய நிலை தெரிய வேண்டும்.

இன்றையத் தேதியில் (3.3.2010) முக்கியமான 3 கிரகங்களின் நிலை:

சனி கன்னி ராசியில் (160.03 பாகைகளில்)
ராகு தனுசில் (265.49 பாகைகளில்)
குரு கும்பத்தில் (317.51 பாகைகளில்)

பாகைகள் முக்கியமில்லை. ராசிகள் மட்டும் தெரிந்தால் போதும்.


உங்கள் அனைவருக்கும் ஜோதிட மென்பொருள் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன். அவ்வப்போது அதைப் பயன்படுத்தி உங்களுக்குத்
தேவையான விவரங்களை அதில் எடுத்துக்கொள்ளலாம்.

மேலே உள்ள இன்றைய கிரக நிலையை நானும் அவ்வாறு எடுத்துத்தான் உங்களுக்கு அளித்துள்ளேன்
---------------------------------------------------------------------
கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் சனி கடகத்தில் இருக்கிறது. இன்றையத்தேதியில் கன்னி ராசியில் இருக்கும் சனி கடகராசியின்
எல்லையான 120 பாகைகளை விட்டு 40 பாகைகள் கடந்து வந்துள்ளது. சனி மதம் ஒரு பாகையைக் கடக்கும் (30 வருடம் x 12  மாதங்கள் = 360 மாதங்கள் வகுத்தல் 360 பாகைகள் = மாதம் ஒரு பாகை. அதாவது ஒரு degree)
இன்றையத் தேதியில் இருந்து (உத்தேசமாக) கடந்துவந்த 40 பாகைகளுக்கு 40 மாதங்களைக் கழித்துக்கொள்ளுங்கள். சனி கடகத்தில் இருந்த வருடம் கிடைக்கும். 4.3.2010 கழித்தால் 40 மாதங்கள் = 4.11.2006. அத்துடன் குரு நிலையைப் பாருங்கள். குரு கும்பத்திற்கு வந்து 3 மாதங்கள் ஆகிறது அதற்கும் இந்த 40 மாதக்கணக்கில் கழித்தால் மூன்று ராசிகளைப் பின் தள்ளிவிட்டு குரு

துலா ராசியில் வந்து நிற்கும் ஆகவே ஜாதகர் அதற்கு 30 ஆண்டுகள் முன்பாகப் பிறந்தவர்.

அதை மனதில் வைத்துக்கொண்டு பார்த்தால் குருவின் நிலைமை சரியாக வராது ( இரண்டரை சுற்றில் அவர் ரிஷபத்தில் இருப்பார்) ஆகவே ஜாதகர் 60 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்.

குரு வருடத்திற்கு ஒரு ராசி அதை மனதில் வைத்துக்கொண்டு, கொடுக்கப்பட்ட ஜாதகத்தில், உத்தேசக்கணக்கிலேயே ஜாதகர்
1948ஆம் ஆண்டு பிறந்தவர் என்பது தெரிய வரும்.

ராகு பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் சுற்றை முடிக்கும் என்பதால், ஜாதகத்தில் உள்ள ராகுவின் நிலை ஜாதகரின் பிறந்த வருடத்தைக் கண்டு பிடிக்க சனியுடன் சேர்ந்து உதவும்.

சூரியனின் நிலையை வைத்து மாசி மாதத்தில் ( பிப்ரவரி 14 முதல் மார்ச் 14ற்குள் பிறந்தவர்) என்பது தெரியும்.சூரியன் மேஷத்தில் சித்திரை மாதத்தை வைத்து தன்னுடைய ஓட்டத்தைத் துவக்குவதால் மாதம் ஒரு ராசி வீதம் கும்பராசிக்கு மாசி மாதம் வந்து சேரும். இந்தக் கணக்கெல்லாம் பழக்கத்தில் மனதில் நிற்கும் பார்த்தவுடன் சொல்லத் தோன்றும்.
----------------------------------------------------------
சனி:
2010ல் - கன்னிராசி
1980ல் - கன்னி ராசி
1951ல் -  கன்னி ராசி
1921ல் -  கன்னி ராசி

நவம்பர் 2006ல் சனி - கடக ராசியில்
நவம்பர்  1976ல் சனி - கடக ராசியில்
நவம்பர்  1947ல் சனி - கடக ராசியில்
நவம்பர்  1917ல்  சனி - கடக ராசியில்

சனி ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 29.5  ஆண்டுகள். ஆகவே இரண்டு சுழற்சிகளுக்கு 59 ஆண்டுகளைத்தான் கழிக்க வேண்டும்

குரு
2010ல் - கும்ப ராசி:  2008ல் தனூர் ராசி
1998ல் - கும்ப ராசி;  1996ல் தனூர் ராசி           
1986ல் - கும்ப ராசி;  1984ல் தனூர் ராசி
1974ல் - கும்ப ராசி;  1972ல் தனூர் ராசி
1962ல் - கும்ப ராசி;  1960ல் தனூர் ராசி
1950ல் - கும்ப ராசி;  1948ல் தனூர் ராசி

மேற்கண்டவாறு ஒரு காகிதத்தில் குறித்துப்பார்த்தால் ஜாதகர் 1948ல் பிறந்தவர் என்பது தெரியவரும்
----------------------------------------------------------------
இன்னொரு குறுக்கு வழி உள்ளது. நமக்குத்தான் குறுக்குவழி என்றால் மிகவும் பிடிக்குமே:-)))

கணினி மென்பொருளில் உத்தேசமாக இன்றையத்தேதிக்கு ஒன்று, முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக இதே தேதிக்கு ஒன்று, அதற்கு 29  ஆண்டுகளுக்கு  முன்பாக இதே தேதிக்கு ஒன்று, என்று மூன்று ஜாதகப் பிரதிகளை எடுத்துப்பார்த்தால், சனி மற்றும், குருவின் நிலையை வைத்து ஜாதகரின் பிறந்த ஆண்டு மற்றும் மாதத்துடனனான கிரகநிலை (ஜாதகம்) கிடைத்துவிடும். ஜாதகரின் நட்சத்திரத்தைவைத்து ஃபைன் டியூனிங் செய்தால் தேதியும் கிடைத்துவிடும்.

இதுதான் ஜாதகத்தைவைத்து, பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கும் வழிமுறையாகும்!
-----------------------------------------------------------------
எனக்கு இன்னும் ஒரு சுலபமான வழி உள்ளது. என்னிடம் 75 ஆண்டுகளுக்கான வாக்கியப் பஞ்சாங்கப் புத்தகங்கள் உள்ளன (1926 முதல் 2000 வரை உள்ள ஆண்டுகளுக்கானது) அதுபோல திரு ராமன் அவர்களின் 100 ஆண்டுகளுக்கான பஞ்சாங்கப் புத்தகம் உள்ளது.

சனியை வைத்து வருடத்தையும், சூரியனை வைத்து மாதத்தையும் கண்டுபிடித்த அடுத்த நொடி, பஞ்சாங்கத்தில் உள்ள அதற்கான
பக்கத்தைப் பார்த்தால் போதும். (மாதம் ஒரு பக்கம்) எல்லாம் துள்ளியமாகத் தெரியவரும். என் சேகரிப்பில் அவை அனைத்தும் உள்ளன!

மற்றவை நாளை!

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

31 comments:

  1. வணக்கம் ஐயா,இன்றய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது, நன்றி

    ReplyDelete
  2. பொக்கிஷமே
    களஞ்சியமே

    என்னுடைய கேள்விக்கு பதில் தாரும் சுவாமி...

    ReplyDelete
  3. காலை 4.30 மணிக்கு கொடுத்த உலகப் புகழ் பெற்ற பெண்மணியின் ஜாதகத்தை மாற்றிவிட்டு புதிய பாடத்தை வைத்துவிட்டீர்கள். நான் இதைப் பார்க்காமல்
    அந்த ஜாதக அம்மணியைத் தேடிக்கொண்டு இருக்கிறேன்.

    இன்றைய பாடத்திற்கு இன்னொரு குறுக்குவழி. நம்முடைய ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் சனி,குரு,ராகு இருக்கும் இடத்தினை மனத்தில் இருத்திக்கொண்டால் நம் பிறந்த நாள் தெரியுமாதலால், கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்திற்கு சனி குரு ராகு இருக்கும் இடத்திற்கு 30,12,18 ஆண்டுகளைக் கூட்டி/கழித்து பிறந்த நாளைக் கண்டு பிடித்துவிடலாம்.

    ReplyDelete
  4. வாத்தியார் சொன்ன குருக்கு வழியில் தான் நான் பார்க்கிறேன். அது தான் மிகவும் ஈசியாக தெரிகிறது. என் பிரதேசத்தில் மழைக்காலமாக இருப்பதால் என்னால் கருத்துக்களை லோட் செய்ய முடியவில்லை.

    ReplyDelete
  5. Blogger Geetha Lakshmi A said...
    வணக்கம் ஐயா,இன்றய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது, நன்றி////

    அதற்காகத்தான் வலையில் ஏற்றியுள்ளேன் - கஷ்டப் பட்டு எழுதியது திருட்டுப்போனாலும் பரவாயில்லை என்று!:-))))

    ReplyDelete
  6. ////Blogger வேப்பிலை said...
    பொக்கிஷமே
    களஞ்சியமே
    என்னுடைய கேள்விக்கு பதில் தாரும் சுவாமி.../////

    தருகிறேன். அதற்கு முன் வேப்பிலை சுவாஜியின் புகைப்படம் ஒன்றை அனுப்பிவையுங்கள். பார்க்க ஆவலாக உள்ளேன்! புகைப்படம் வந்தால் மட்டுமே பதில் வரும். அர்த்தமாயிந்தா அண்ணைய்யா?

    ReplyDelete
  7. Blogger kmr.krishnan said...
    காலை 4.30 மணிக்கு கொடுத்த உலகப் புகழ் பெற்ற பெண்மணியின் ஜாதகத்தை மாற்றிவிட்டு புதிய பாடத்தை வைத்துவிட்டீர்கள். நான் இதைப் பார்க்காமல்
    அந்த ஜாதக அம்மணியைத் தேடிக்கொண்டு இருக்கிறேன்./////

    தேடலை விட்டுவிடாதீர்கள். அப்பதிவு நாளை வெளியாகும். அதற்கு முன் ஜாதகத்தை வைத்துப் பிறந்த நாளைக் கண்டுபிடிக்கும் வழிமுறையை அனைவரும் அறிந்து கொள்ளட்டும் என்று இந்த ஆக்கத்தைப் பதிவில் வெளியிட்டுள்ளேன்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    இன்றைய பாடத்திற்கு இன்னொரு குறுக்குவழி. நம்முடைய ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் சனி,குரு,ராகு இருக்கும் இடத்தினை மனத்தில் இருத்திக்கொண்டால் நம் பிறந்த நாள் தெரியுமாதலால், கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்திற்கு சனி குரு ராகு இருக்கும் இடத்திற்கு 30,12,18 ஆண்டுகளைக் கூட்டி/கழித்து பிறந்த நாளைக் கண்டு பிடித்துவிடலாம்.//////

    ஆமாம். இதுபோன்று இன்னும் சில வழிகள் உள்ளன. தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  8. /////Blogger thanusu said...
    வாத்தியார் சொன்ன குருக்கு வழியில் தான் நான் பார்க்கிறேன். அது தான் மிகவும் ஈசியாக தெரிகிறது. என் பிரதேசத்தில் மழைக்காலமாக இருப்பதால் என்னால் கருத்துக்களை லோட் செய்ய முடியவில்லை./////

    கப்பலுக்குள்தானே இருக்கிறீர்கள் ராஜா? மழை உங்களை என்ன செய்யப் போகிறது?

    ReplyDelete
  9. Respected Sir,

    Happy morning...Great service...

    God bless U.

    With kind regards,
    Ravi

    ReplyDelete
  10. Paadam migavum arumai ayya.. Naan Thiru.Kmr.Krishnan sir sonnadhu pole en jadhagathai vaithu piragu jaganadha hora-vil theduvaen, aanal kanini illamal ganikkum paadam Migavum arumai ayya.

    ReplyDelete
  11. This is the I do to find out date of year, month and with "fine-tuning" date

    ReplyDelete
  12. Subbiah Veerappan said...//கப்பலுக்குள்தானே இருக்கிறீர்கள் ராஜா? மழை உங்களை என்ன செய்யப் போகிறது?

    இணையம் கட்டாகிவிடுகிறதே.


    ReplyDelete
  13. thank you sir for the valuable lessons

    ReplyDelete
  14. அய்யா
    நல்ல ஒரு உபயோகமான பாடம்

    ReplyDelete
  15. வாத்தியார் அண்ணா
    நான் கடைசி பெஞ்சிலிருந்து முதல் பெஞ்சிக்கு வந்துவிட்டேன் இனிமே பரிட்சையில்லையா ஹி ஹி ஹி......

    ReplyDelete
  16. Ayya kmr.krishna
    thaangal kooriya kuruku vali sariyaaga vilangavillai. Pls teach us with an example.

    ReplyDelete
  17. அய்யா, மிக்க பயனுள்ள பாடம் நன்றி, அய்யா

    ReplyDelete
  18. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning...Great service...
    God bless U.
    With kind regards,
    Ravi/////

    Thanks for your valuable comment

    ReplyDelete
  19. ////Blogger Chandrasekharan said...
    Paadam migavum arumai ayya.. Naan Thiru.Kmr.Krishnan sir sonnadhu pole en jadhagathai vaithu piragu jaganadha hora-vil theduvaen, aanal kanini illamal ganikkum paadam Migavum arumai ayya./////

    நல்லது. அப்படியே செய்யுங்கள்! நன்றி!

    ReplyDelete
  20. ///Blogger செல்லி said...
    This is the I do to find out date of year, month and with "fine-tuning" date/////

    உங்கள் வழிப்படியே செய்யுங்கள். நன்றி!

    ReplyDelete
  21. ////Blogger thanusu said...
    Subbiah Veerappan said...//கப்பலுக்குள்தானே இருக்கிறீர்கள் ராஜா? மழை உங்களை என்ன செய்யப் போகிறது?
    இணையம் கட்டாகிவிடுகிறதே.////

    உங்களின் உடனடி பதிலுக்கு நன்றி தனுசு!

    ReplyDelete
  22. ////Blogger rajakala said...
    thank you sir for the valuable lessons////

    Thanks for your valuable comment

    ReplyDelete
  23. ////Blogger Kalai Rajan said...
    அய்யா
    நல்ல ஒரு உபயோகமான பாடம்/////

    Thanks for your valuable comment

    ReplyDelete
  24. ////Blogger sundari said...
    வாத்தியார் அண்ணா
    நான் கடைசி பெஞ்சிலிருந்து முதல் பெஞ்சிக்கு வந்துவிட்டேன் இனிமே பரிட்சையில்லையா ஹி ஹி ஹி....../////

    சுந்தரி என்ற பெயரை வைத்துக் கொண்டு இப்படிக் கேட்கலாமா? அதெல்லாம் உண்டு1

    ReplyDelete
  25. /////Blogger விசயக்குமார் said...
    Very Interesting Lesson./////

    Thanks for your valuable comment

    ReplyDelete
  26. //////Blogger C.Senthil said...
    Ayya kmr.krishna
    thaangal kooriya kuruku vali sariyaaga vilangavillai. Pls teach us with an example.

    வருவார். கண்ணில் பட்டால் கண்டிப்பாகப் பதில் தருவார்! பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  27. ////Blogger kimu said...
    super :)////

    Thanks for your valuable comment

    ReplyDelete
  28. ////Blogger manikandan said...
    அய்யா, மிக்க பயனுள்ள பாடம் நன்றி, அய்யா////

    Thanks for your valuable comment

    ReplyDelete
  29. ஐயா என்னுடைய நட்சத்திரம் அசுவினி ராசி மேஷம் பிறந்த தினம் திங்கள் வருடம் 1986 அல்லது 1987... என்னுடைய பிறந்த நாள் மற்றும் மாதம் தெரியாது... எனக்கு உதவி செய்ய முடியுமா... 8525859385 அழையுங்கள்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com