மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.9.13

Astrology: ஒட்டு மொத்த இந்தியாவையும் முதன் முதலில் உலுக்கிய ஆசாமி

 
 Nathuram Godse

 மே’19ல் பிறந்த இந்தியர்களின் பட்டியலில் 
நாதுராம் கோட்சேயின் பெயர்தான் முதலில் வருகிறது
---------------------------------------------------------------------------------------------------------
Astrology: ஒட்டு மொத்த இந்தியாவையும் முதன் முதலில் உலுக்கிய ஆசாமி

நேற்றுப் புதிரில் கொடுத்திருந்த ஜாதகத்தைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.

மகாத்மா காந்திஜி என்றும், இந்தியாவின் தந்தை என்றும், அஹிம்சையால் எதையும் சாதிக்கலாம் என்றும் உலகிற்கு உணர்த்திய தியாகச் செம்மலை, இந்திய மக்களின் சுதந்திரத்திற்காகத் தொடர்ந்து ஆங்கில அரசுடன் கத்தியின்றி, ரத்தமின்றிப் போராடி வெற்றி பெற்ற மாமனிதரை, சுட்டுக் கொன்றதன் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவையும் முதன் முதலில் உலுக்கிய ஆசாமியின் ஜாதகம் அது.

ஆமாம். நாதுராம் கோட்சேயின் ஜாதகம் அது!

விக்கிபீடியாவில் அதைப் பற்றிய செய்திகள் நிறையக் கொட்டிக் கிடக்கின்றன! அதை எல்லாம் விவரித்து எழுதி, பழைய செய்திகளை நான் கிளறப் போவதில்லை. தெரிந்து கொள்ள விரும்பும் இளைஞர்களுக்காகவும், இளைஞிகளுக்காகவும் முக்கியமாகப் பட்ட மூன்று சுட்டிகளைக் கீழே கொடுத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் படித்துப் பார்க்கலாம்.
1
http://en.wikipedia.org/wiki/Nathuram_Godse
2
Why Nathuram Godse killed Gandhiji
http://www.topix.com/forum/religion/sikh/TFKMKHTBH6UDQU3L9
3
Nathuram Godse's speech in court.
http://badrinath.blogspot.in/2007/04/nathuram-godses-speech-in-court.html
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


நாதுராம் கோட்சேயை இந்த பாதகச் செயலுக்கு இழுத்துச் சென்ற சில கிரக அமைப்புக்களை மட்டும் இப்போது பார்ப்போம்

1. நாதுராம் கோட்சேயின் ஜாதகத்தில் ஆயுள்காரகன் சனி நீசமாகியுள்ளான். எந்த சுபக்கிரகத்தின் பார்வையும் நீசமான சனி பெறவில்லை.
19 May 1910ல் பிறந்த அவன், 15 November 1949ல் தூக்கில் தொங்கவிடப்பட்டு இறந்தான். 40 வயதைத் தொடும் முன்பாகவே அவன் ஆயுள் முடிந்து போய்விட்டது.

2. புத்திநாதன் புதன் 12ல் அதுமட்டும் அல்லாமல் அவன் ராகுவுடன் கூட்டாக உள்ளான். புதன் தனித்து இருந்தால் சுபக்கிரகம், தீய கிரகங்களுடன் கூட்டாக இருந்தால் பாவியாகிவிடுவான். புதன் சுபமாகவோ அல்லது சுபக்கிரகங்களுடன் கூட்டாகவோ இருந்தால் ஜாதகனின் புத்தி நல்ல வழியில்’ ஆக்கபூர்வமான வழியில் வேலை செய்யும். இல்லை என்றால் தீய வழியில் வேலை செய்துவிடும். லக்கினத்தையும், லக்கினாதிபதியையும் வைத்து எவ்வளவு நல்ல குணம் கொண்டவனாக ஜாதகன் இருந்தாலும், ஒரு நாள், ஒரு நாளாவது, அவனைக் கிரிமினலாக ஆக்கிவிடும். அதாவது கிரிமினல் வேலையைச் செய்ய வைத்துவிடும். அதைத் தவிர்க்கமுடியாது.

3.சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தாலும், அவன் விரைய ஸ்தான அதிபதி. அவன் முக்கிய கேந்திர வீட்டில் அமர்ந்து வலுப்பெற்று ஜாதகனின் வாழ்க்கையை விரையம் செய்து விட்டான்.

4. சூரியன் 12ல் இருந்தால் அரசிற்கு எதிரான காரியங்களைச் செய்ய நேரிடும். அரச தண்டனையைப் பெற நேரிடும். அதே நிலையில் உள்ள சூரியன் சுபக் கிரகங்களின் பார்வையைப் பெறவில்லை. மாறாக ராகுவின் கூட்டணியோடு இருக்கிறான். அதனால்தான் ஜாதகனுக்கு உச்ச தண்டனையான தூக்கு தண்டனை கிடைத்தது.

5. லக்கினத்தில் இருந்த செவ்வாயின் பார்வை மனகாரகன் சந்திரனின் மேல் விழுவதைப் பாருங்கள். அது அவனுக்கு அசாத்திய மன உணர்வுகளைக் கொடுத்தது. அவன் ஒன்றும் கொலையைத் தொழிலாகக் கொண்டவன் அல்ல. இந்த அசாத்திய, இயற்கைக்கு மாறான மன உணர்வுதான் அவனைக் கொலை செய்ய வைத்தது,

6. அவன் ஜாதகத்தில் கஜ கேசரி யோகம் உள்ளது. அது ஏன் அவனைக் காப்பாற்றவில்லை? அதே கஜகேசரி யோகம் காந்திஜியின் ஜாதகத்திலும் உள்ளது. அது ஏன் அவரைத் தப்பிக்க வைத்துக் காப்பாற்றவில்லை?

இருவர் ஜாதகத்திலுமே அந்த யோகம் அடிவாங்கிக் கெட்டுப்போய் உள்ளது. அது பற்றி இன்னொரு நாள் விரிவாகப் பார்ப்போம்

அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++
 வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24 comments:

 1. கோட்சே பற்றிய என் பதிவு ஒன்று 6 பிரவரி 2011 ல் வெளியாகியுள்ளது.
  தலைப்பு: "விமர்சனக்கள் மகாத்மாவையும் விட்டு வைக்கவில்லை"

  கோட்சே ஒரு பத்திரிகையாளர். நல்ல படிப்பாளி.

  காந்திஜியை சுட்டுவிட்டு எங்கும் ஓடவில்லை.அதிர்ந்துபோன காவல்துறையினரை
  தானே கூப்பிட்டுத் தன்னை கைதுசெய்து கூட்டிச்செல்லச் சொல்லி தானே கூறுகிறார்.தன் வழக்கினை தானே கையாளும் அளவு சட்டம் தெரிந்தவர்.தன் தரப்பு நியாயத்தை பலபக்கங்கள் உள்ள வாக்குமூலமாகத்தானே எழுத்துமூலம்
  வழக்குமன்றத்தில் சமர்ப்பிக்கிறார். அது ஒரு ரகசிய ஆவண‌மாக பல்லாண்டுகளாக வைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

  ReplyDelete
 2. ////Blogger kmr.krishnan said...
  கோட்சே பற்றிய என் பதிவு ஒன்று 6 பிரவரி 2011 ல் வெளியாகியுள்ளது.
  தலைப்பு: "விமர்சனக்கள் மகாத்மாவையும் விட்டு வைக்கவில்லை"
  கோட்சே ஒரு பத்திரிகையாளர். நல்ல படிப்பாளி.
  காந்திஜியை சுட்டுவிட்டு எங்கும் ஓடவில்லை.அதிர்ந்துபோன காவல்துறையினரை
  தானே கூப்பிட்டுத் தன்னை கைதுசெய்து கூட்டிச்செல்லச் சொல்லி தானே கூறுகிறார்.தன் வழக்கினை தானே கையாளும் அளவு சட்டம் தெரிந்தவர்.தன் தரப்பு நியாயத்தை பலபக்கங்கள் உள்ள வாக்குமூலமாகத்தானே எழுத்துமூலம் வழக்குமன்றத்தில் சமர்ப்பிக்கிறார். அது ஒரு ரகசிய ஆவண‌மாக பல்லாண்டுகளாக வைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது./////

  உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
 3. குருவும் சந்திரனும் ஒன்றாக (அல்லது 5,9 என்று) இருப்பது குருச் சந்திர யோகம் எனப்படும். கஜ கேசரி யோகம் அல்ல. அப்படி இருந்தாலும் அது ஜாதகனை எல்லா விதத்திலும் காப்பாற்றும் என்றும் சொல்ல முடியாது.

  ReplyDelete
 4. நாடி சோதிட விதிகளின் படி கோட்சேயின் ஆயுட்காலத்தைக் கணக்கிட்டால் துல்லியமாக 39 வயது வருவதைக் கண்டு அசந்து போனேன்.

  kmrk1949@gmail.com

  ReplyDelete
 5. நடந்ததையே நினைத்திருந்தால்
  என்றும் அமைதியில்லை
  என்ற

  கவிஞரின் வரிகளை
  கருத்தில் கொண்டு

  வருகை பதிவினை
  வழக்கம் போல் தருகிறோம்

  ReplyDelete
 6. I also support godse. Without proper reason, he couldn't kill Gandhi.

  ReplyDelete
 7. vanakam .sir 6.lineil..sollieuruntulam.pakavga.. Evrathan.vathiear....nengal..ezthuvathela....alasal jathkam .than....MEKAVUM PIDDITHU..

  ReplyDelete
 8. sir,u said (regarding Godse horoscope ).sun doesn't get any good planet contact.but see in his horoscope sun gets 9th contact of guru...

  ReplyDelete
 9. interesting info for me particulary on the position of sun, mars and moon
  for me also sun in 12th house with Venus, which is 6 & 11th house lord.
  mars aspecting moon from cancer which is neezam. lets see if i am able to make into history

  ReplyDelete
 10. Sir I am follower of your free classroom07 blogger since dec.2012.
  Great work sir !
  Register me as a new half baked student in your attendance register sir ! ! !

  ReplyDelete
 11. Dear Guruji,
  Please find my analysis about weak Kaja-Kesari Yogam in Gandhiji & Godse horoscope & let us know this last bench student analysis is correct?
  கஜகேசரி யோகம் கெட்டுப் போனதற்கான காரணங்கள் :
  கோட்சே ஜாதகம் :
  மாரகம் கொடுக்கவேண்டிய 2ஆம் அதிபதி சந்திரனும் & 7ஆம் அதிபதி குருவும் சேர்ந்து இருத்தல்.அவர்களை விரையாதிபதி உச்ச சுக்கிரன் ஏழாம் பார்வையால் பார்த்தல் மற்றும் அவர்களை 6ஆம் அதிபதி செவ்வாய் 4ஆம் பார்வையால் பார்த்தல்.
  காந்திஜி ஜாதகம் :
  மாரகம் கொடுக்கவேண்டிய 2ஆம் அதிபதி & 7ஆம் அதிபதியான செவ்வாய் 8 ஆம் பார்வையால் 8 ஆம் வீட்டில் உள்ள குருவை (பகை வீடு) பார்த்தல். மேலும் 2ல் உள்ள சனி 7ஆம் பார்வையால் 2ல் உள்ள குருவை பார்த்தல் & 2ல் உள்ள சனி 10ஆம் பார்வையால் 11ல் உள்ள சந்திரனை பார்த்தல். மேலும் ராகு 3 ஆம் பார்வையால் குருவை பார்ப்பதும் கஜகேசரி யோகத்தை வலுவிலக்க செய்தன.

  ReplyDelete
 12. /////Blogger Ak Ananth said...
  குருவும் சந்திரனும் ஒன்றாக (அல்லது 5,9 என்று) இருப்பது குருச் சந்திர யோகம் எனப்படும். கஜகேசரி யோகம் அல்ல. அப்படி இருந்தாலும் அது

  ஜாதகனை எல்லா விதத்திலும் காப்பாற்றும் என்றும் சொல்ல முடியாது.//////

  கஜகேசரி யோகத்தைப்பற்றி இரு வேறு கருத்துக்கள் உள்ளன. வட இந்தியாவில் குரு & சந்திரன் சேர்ந்து (conjunction) இருப்பதையும் கஜகேசரி யோகமாகக் கணக்கி டுகிறார்கள். இன்றையப் பின்னூட் டத்தில் திருவாளர் SRK அவர்கள் எழுதியுள்ள பின்னூட்டத்தைப் பார்க்க வேண்டுகிறேன்.

  நன்றி!

  ReplyDelete
 13. /////Blogger kmr.krishnan said...
  நாடி சோதிட விதிகளின்படி கோட்சேயின் ஆயுட்காலத்தைக் கணக்கிட்டால் துல்லியமாக 39 வயது வருவதைக் கண்டு அசந்து போனேன்./////

  அப்படியா? வியப்பாக உள்ளது. அதன் சுட்டியை எனக்கு மின்னஞ்சலில் அறியத்தாருங்கள். நன்றி!

  ReplyDelete
 14. //////Blogger வேப்பிலை said...
  நடந்ததையே நினைத்திருந்தால்
  என்றும் அமைதியில்லை
  என்ற
  கவிஞரின் வரிகளை
  கருத்தில் கொண்டு
  வருகை பதிவினை
  வழக்கம் போல் தருகிறோம்//////

  பழையது இல்லாமல் ஜோதிடம் ஏது? உங்கள் வருகைப் பதிவிற்கு நன்றி வேப்பிலையாரே!

  ReplyDelete
 15. ////Blogger KJ said...
  I also support godse. Without proper reason, he couldn't kill Gandhi.//////

  கடவுள் கொடுத்த உயிரைப் பறிப்பதற்கு சகமனிதனுக்கு உரிமை இல்லை. காரணம் எதுவாக இருந்தாலும் அதை ஒப்புக்கொள்ள முடியாது. அது குற்றமே!

  ReplyDelete
 16. /////Blogger eswari sekar said...
  vanakam .sir 6.lineil..sollieuruntulam.pakavga.. Evrathan.vathiear....nengal..ezthuvathela....alasal jathkam .than....MEKAVUM PIDDITHU../////

  இல்லை! எல்லாவற்றையும் நான் விருப்பதோடு ஒரே மாதிரியாக சுவாரசியத்துடன்தான் எழுத முயற்சிக்கிறேன், எழுதுகிறேன், உங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தியமைக்கு நன்றி சகோதரி!

  ReplyDelete
 17. ////Blogger A 2 Z said...
  sir,u said (regarding Godse horoscope ).sun doesn't get any good planet contact.but see in his horoscope sun gets 9th contact of guru.../////

  சூரியன் 12ஆம் வீட்டில் குடியேறியுள்ளதாலும், ராகுவுடன் கூட்டாக உள்ளதாலும், அதை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 18. /////Blogger Ram said...
  interesting info for me particulary on the position of sun, mars and moon
  for me also sun in 12th house with Venus, which is 6 & 11th house lord.
  mars aspecting moon from cancer which is neezam. lets see if i am able to make into history/////

  லக்கினம் மற்றும் லக்கினாதிபதி வைத்து எல்லாம் மாறுபடும்! அதையும் பாருங்கள்!

  ReplyDelete
 19. ///Blogger logical thinker007 said...
  Three links - Nice work sir.
  By new student//////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 20. /////Blogger logical thinker007 said...
  Sir I am follower of your free classroom07 blogger since dec.2012.
  Great work sir !
  Register me as a new half baked student in your attendance register sir ! ! !//////

  You can join in the classroom by using 'Join this site with Google connect of option at the top of my blog - Members (4,186)
  First read all the lessons posted in the blog wrote since last 6 years (Total 720 Lessons). See the side bar of my blog for details. All are free!

  ReplyDelete
 21. ////Blogger SRK said...
  Dear Guruji,
  Please find my analysis about weak Kaja-Kesari Yogam in Gandhiji & Godse horoscope & let us know this last bench student analysis is

  correct?
  கஜகேசரி யோகம் கெட்டுப் போனதற்கான காரணங்கள் :
  கோட்சே ஜாதகம் :
  மாரகம் கொடுக்கவேண்டிய 2ஆம் அதிபதி சந்திரனும் & 7ஆம் அதிபதி குருவும் சேர்ந்து இருத்தல்.அவர்களை விரையாதிபதி உச்ச சுக்கிரன்

  ஏழாம் பார்வையால் பார்த்தல் மற்றும் அவர்களை 6ஆம் அதிபதி செவ்வாய் 4ஆம் பார்வையால் பார்த்தல்.
  காந்திஜி ஜாதகம் :
  மாரகம் கொடுக்கவேண்டிய 2ஆம் அதிபதி & 7ஆம் அதிபதியான செவ்வாய் 8 ஆம் பார்வையால் 8 ஆம் வீட்டில் உள்ள குருவை (பகை வீடு)

  பார்த்தல். மேலும் 2ல் உள்ள சனி 7ஆம் பார்வையால் 2ல் உள்ள குருவை பார்த்தல் & 2ல் உள்ள சனி 10ஆம் பார்வையால் 11ல் உள்ள சந்திரனை

  பார்த்தல். மேலும் ராகு 3 ஆம் பார்வையால் குருவை பார்ப்பதும் கஜகேசரி யோகத்தை வலுவிலக்க செய்தன./////

  இந்த விளக்கம் இணையத்திலும் உள்ளது. பாரசாரர் என்னும் முனிவரின் குறிப்பை ஆதாரமாக வைத்து எழுதப்பெற்றுள்ளது. சரிதான். நன்றி

  ReplyDelete
 22. //I also support godse. Without proper reason, he couldn't kill Gandhi.//

  கே ஜே அவர்கள் நான் கோட்சேவை ஆதரிப்பதாக நினைத்துவிட்டார் போலும்.
  சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்ளும் எவரையும் நான் ஆதரிக்கவில்லை.

  கோட்சே காந்திஜியைக் கொல்ல சொன்ன காரணங்களையெல்லாம் விட காந்திஜி உலகத்திற்குப் பல நல்லவைகளைச் செய்து இருக்கிறார். இந்திய சுதந்திரப் போராட்டமே பல நாடுகள் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபட வழி செய்தது. அதற்கு காந்திஜியின் கருத்துப் பங்களிப்பு அளவிட முடியாதது.

  கோட்சே காந்திஜியைப் பார்க்கப் பயன்படுத்திய கண்கள்/கண்ணாடி மாசு அடைந்தது.

  நான் கோட்சேயின் செயலை ஆதரிக்கவில்லை. கண்டிக்கவே செய்கிறேன்.

  ReplyDelete
 23. சட்டத்தை உருவாக்குவதே
  சகலரும் அறிந்த ஒரு கைவிரல் தானே

  அய்ந்தாண்டுக்கு ஒருமுறை அது
  அடையாளமிட்டுக்கொள்ளும்

  அடுத்த சில நாட்களில்
  அழிந்தாலும் அது தானே வழி

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com