மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

18.9.13

Astrology: Quiz புதிர் - பகுதி 9 வித்தியாசமான கேள்விகளுடன்

 
Astrology: Quiz புதிர் - பகுதி 9 வித்தியாசமான கேள்விகளுடன்

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி ஒன்பது

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது!

வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும்  3 கேள்விகளுக்கும்
பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள்.

மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு ஆணின் ஜாதகம். பிரபலம் அல்ல! சாதாரண மனிதர்தான்!கேள்விகள்

1. ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா?
படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? பள்ளி இறுதியாண்டு வரையிலா? அல்லது இளங்கலை பட்டப் படிப்பு வரையிலா? அல்லது உயர்கல்வி பயின்றவரா? படிக்காதவர் என்றால் சில ஆண்டுகள் பள்ளிக்குச் சென்றவரா அல்லது மழைக்குக்கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்காதவரா?

2. திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா?

3. ஜாதகர் வெளிநாடு சென்று பணி செய்ய விருப்பம் கொண்டார். அவர் விருப்பம் நிறைவேறியதா? அல்லது இல்லையா? அதாவது ஜாதகருக்கும் கடல்கடக்கும் யோகம் உள்ளதா? அல்லது இல்லையா? அதாவது இங்கேயே குப்பை கொட்ட வேண்டியதுதானா?

எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பையும் வைத்து எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

33 comments:

thozhar pandian said...

23 மே 1956 அதிகாலை சுமார் 3:30 மணிக்கு பிறந்தவர் ஜாதகர்.

1) கல்விகாரகனும் 4ம் வீட்டின் அதிபதியுமான புதன் 3ம் இடத்தில் கல்வி ஸ்தானத்திற்கு 12ம் வீட்டில். கல்வி பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதோடு புதனுக்கு சனிபகவானின் நேரடி பார்வை வேறு. இலக்கினாதிபதியும் 6ம் வீட்டில் மறைந்து விட்டார். ஆனால் சுப கிரகமான சுக்கிரன் நாலாம் வீட்டில் இருப்பதாலும் படிக்கும் காலத்தில் சுப கிரகமும் இலக்கினாதிபதியுமான குருபகவானின் மகாதசையும் நடப்பதால், பள்ளி படிப்பு படித்திருக்க வேண்டும். கல்லூரி செல்லும் வயதில் ஜாதகருக்கு சனி மகாதசை நடக்கும். மேற்கூறிய மற்ற அமைப்புகளினால் ஜாதகர் பட்ட படிப்பு படிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக தெரிகின்றன.

2) களத்திரகாரகன் சுக்கிரன் கேந்திரத்தில். 7ம் வீட்டு புதன் 3ம் வீட்டில், 7ம் வீட்டிற்கு 9ம் வீட்டில். திருமணம் ஆனவர். களத்திரகாரகன் சுக்கிரனின் பார்வை 7ம் வீட்டின் மேலோ 7ம் அதிபதியின் மேலோ விழவில்லை. அதனால் சற்று தாமதமாக திருமணம் நடந்திருக்க வேண்டும்.

3) 9ம் வீட்டின் மேல் 9ம் அதிபதி செவ்வாயின் பார்வையும் விழவில்லை. குரு பார்வையும் சுக்கிரன் பார்வையும் 9ம் வீட்டில் விழவில்லை. புதனின் பார்வை உள்ளது. ஆனால் அவர் கேதுவுடன் கூட்டணி போட்டு 3ம் வீட்டில் அமர்ந்துள்ளதால் அவரை இந்த ஜாதகத்தில் சுப கிரகமாக கருத முடியாது. அதோடு 9ம் வீட்டில் சனி, இராகு, மற்றும் மாந்தி. அதனால் இவர் வெளிநாடு சென்று பணி செய்திருக்க வாய்ப்பில்லை.

Dallas Kannan said...

Respected Sir
This Chart looks little tricky and I will try to do my best.
1. 4th lord is 12 from its house and it is with 6th lord and sani/raghu's look also. 3/8th lord is in 4th house. But Sukra gets Dik bala in 4th house and Guru and sukra will do good beyond it adhipatyam. Also Sukra and Buda parivarthanai. Buda and sun gives Budathitya yogam. So he would have finished degree with some trouble.
2. 7th lord is with 6th lord and sani/raghu look at it. But Sukra is in good place and Guru looks at 2nd lord and 2nd place. So would have got married.. may be late marriage.
3. Sani/Raghu/Mandhi is in 9th place and 9 th lord is in 12th place. Sani Mars parivarthanai. I have read in one of your lessons that when 9th lord is in 12 th, they could go abroad for medical purpose. 10th lord is 9 th from 10th place and it is looks at 12th place and 9th lord. So he would have gone abroad.

Thiru Mahes said...

Good morning sir.
I try to answer your first question.
lagnathipathi guru 6il. after Rahu tisai 1-9 next guru tisai 16 years.up to 17 years and 9 months.
vidhya karagan Buthan lagnathukku 3il. 4 ikkum 7 ikkum uriyavan. 4 im vittirkku 12 il. athavathu lagnathukku 3 il. athodu sani yin paarvai Buthan mel. Manthi veru. Sevai in paarvai 4im paarvaiyaaga... buthan mel. Sevai 2ikkum 9ikkum uriyavar.

So Jatahgar may studied up to his 17 yrs.
avar migutha siramathudan padithurupar. 11 or 12 classil thadai pattuirukkum.

Mahes.

gopi nath said...

anbulla Ayya...

1. the native is completed his graduation. (sun + mercury and combination )

2. the native is not married because ..looked by sani+ragu, mars, no jupiter vision, 7th lord in 3rd house.

3. the native is successful in visiting foreign land because...
10th lord guru in 6th house and looks at 12h house mars forming guru mangala yoga. since 6th house and 12th house is connected together foreign chance is very strong. also 12th lord in 9th house with rahu..so the chance becomes even stronger and sure.

br
gopinath

Thiru Mahes said...

I try answer your second question sir.
7 ikku uriya Buthan 3 il. uchham petra rahu vin paarvai. kalyan vayathil sani tisai veru. Sukran 4il. so Kalyanam romba late aaga nadathirukkum. sani tisai sukra puthiyil nadathirukkalam.
after 30 marriage.
Mahes

Sattur Karthi said...

Ans -1

4இம் இடம் அதிபதி மற்றும் கல்விக்கான அதிபதி புதன் 4 க்கு 12 இல் எனவே பள்ளி படிப்பு படித்து இருக்கலாம் .

Ans -2

7இம் இடம் அதிபதி புதன் 7க்கு 9இல் பாக்கியஸ்தானம் இல் மற்றும் திருமண அதிபதி சுக்கிரன் அதன் நட்பு வீடில் திருமணம் உண்டு.


Ans -3

9 இல் சனி ராகு & மாந்தி வேலைக்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு இல்லை ஆனால் 9 காண அதிபதி லகனதிருக்கு 12 இல் மருத்துவம் சிகிச்சைகாக வெளிநாடு செல்ல வாய்ப்பு இருக்கிறது .


சாத்தூர் கார்த்தி

Thiru Mahes said...

I try answer your 3rd question sir.
lagnathukkum 10ikkum uriya guru 6il. oru nilayan job illai. 9il rahu. thuvum uchaam petra rahu. avar muslim country ilaa vellai parkaalam. kadaisi vari avar adimai tholil thaan. 7im pavathypathyium sariyillai.
Mahes

Kaven said...

பிறப்பு: மே 23, 1956 அதிகாலை 3.29
1. ஜாதகர் உயர் கல்வி பெற்றவர். லக்னம் வர்கோத்தமம் பெற்று பலத்துடன், லக்கினாதிபதி குரு 6ஆம் ராசியில் இருந்தாலும் 5ஆம் பாவத்தில் உள்ளார் அதுவும் நட்பு வீட்டில், மூன்று (சுக்கிரன்) மற்றும் நான்காம் (புதன்) அதிபதிகள் பரிவர்த்தனையால் பலம் பெற்றன. இதனால் புதன் வக்கிரம் ஆனாலும் நன்மையே. மேலும் 12ஆம் (சனி) மற்றும் 9ஆம் (செவ்வாய்) அதிபதிகளின் பார்வையில் புதன் – அதனால் மேற்படிப்பே வெளிநாட்டில் பெற்றிருப்பார்.
2. திருமணம் ஆனவர். 7ஆம் அதிபதி புதன், காரகன் சுக்கிரன், மற்றும் லக்கினாதிபதி குரு பலத்துடன் உள்ள ஜாதகம். ஏழாம் அதிபதி சனி பார்வையில் - தாமதத்திருமணமாக இருக்கலாம்.
3. வெளிநாட்டிலேயே பெரும்பாலும் வசிப்பவர். 9ஆம் மற்றும் 12ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை கொண்டு பலம் பெற்றுள்ளார்கள். 9ஆம் அதிபதி செவ்வாய் அந்த வீட்டிற்கு கேந்திரத்தில். ராகு 9ஆம் வீட்டில். ஜாதகர் உலகம் சுற்றுபவராக இருப்பார்.

Srinivasa Rajulu.M said...

வணக்கம் ஐயா,

ஜாதகர் அனேகமாக குவாலாலம்பூரில் பிறந்தவராக இருக்கலாம். (23-05-1956; 3:15AM)

1. நான்காம் அதிபதி மூன்றில் செவ்வாய் மற்றும் சனைஸ்சரன் பார்வையுடன், கேது மற்றும் ஆறாம் அதிபன் சேர்த்தியுடன் அமர்ந்துள்ளார். பரிவர்த்தனை ஆகியுள்ள சுக்கிரன் மூன்று மற்றும் எட்டுக்குள்ளவர். வேறு நல்ல கிரகங்களின் பார்வை நாலாம் அதிபனுக்கும், ஸ்தானத்திற்கும் இல்லாததால், பள்ளிப் படிப்பே சிரமம்தான். ஆனாலும், படிக்கும் காலத்தில் ஆறில் மறைந்துவிட்ட லக்னாதிபதி மற்றும் வித்யாகாரகனான வியாழன் (பலரும் புதன் மற்றும் வியாழன் இருவரையும் கல்விகாரகனாகக் கொள்கின்றனர்) தசை நடந்துள்ளது என்பதால் அந்தக்கால எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கலாம். மூன்றாம் இடத்து புதாத்திய யோகம் ஓவியம்/ சிற்பம் போன்ற கலைகளில் வல்லவர் என்று காட்டுகிறது.

2. தாமதத் திருமணம் (களத்திரஸ்தானத்தைப் பனிரண்டில் இருந்து பார்க்கும் செவ்வாய்). திருமண வாழ்விலும் சில தடைகள் (நவாம்சத்தில் சுக்கிரனும் வியாழனும் மறைவிடங்களில்) காணப்படுகின்றன.

3. பரிவர்த்தனையான ஒன்பது மற்றும் பனிரண்டாம் அதிபதிகளும்; ஆறாம் இடத்தில் அமர்ந்த லக்னாதிபதியும், ஒன்பதாம் இடத்தைப் பார்க்கும் புதன், சூரியன் ஆகியோரும், ஒன்பதில் அமர்ந்த ராஹுவும்(நீச்சமாகி இருந்தாலும்) பிறந்த இடத்தை விட்டு, கடல் தாண்டி வாழ்வதைக் குறிக்கின்றன.
-நன்றி

vikneshkumar said...

1.The native of this horoscope has completed his UG degree...because 3 and 4 lord are in parivarthana yoga but 4th lord is in 3rd house(12th place from 4th house)and sukran is lord of 8th house too..this made him to study only upto UG degree

2.He got married...he also got a nice spouse too...because 7th house is in suba karthari yoga and 7th lord is in 3rd house(9th place from 7th house) and kalathra karaga is also well palced in 4th house with parivarthana yoga.

3.He went to overseas to work..because 9th and 12th lord are in parivarthana yoga..this happened in sani dasa because he's in parivarthana with 9th lord...

plus points in horoscope
1.5th and 7th houses-subha karthari yoga

2.rahu ucham

3.budhan(lord of 4th and 7th houses) and sukran(lord of 3rd and 8th houses) are in parivarthana

4.sani(lord of 11th and 12th houses) and sevvai(lord of 2nd and 9th houses) are in parivarthana

Anonymous said...1. ஜாதகர் படிக்காதவர்.
ஆரம்பக்கல்வி ஸ்தானமே 12 -ல் மறைவு. நான்கில்
ஜாதக பாபர் சுக்கிரன் அமர்வு. அது தவிர நான்காம்
அதிபதி புதன் அதற்கு 12-ல். சூரியனுடன் அஸ்தங்கம் என்றால்
படிப்பு , திருமண வாழ்க்கை இரண்டுமே கேள்விக்குறி தான்.
நான்கில் சுக்கிரன் திக் பலம் என்றாலும் ஜாதகர் ஜாலிப்பேர்வழியாக
இருக்கலாம்.

2. திருமணம் ஆகாதவர். திருமணவாழ்க்கையில் நாட்டம் இல்லாதவர்.
7-ம் அதிபதி புதன் அஸ்தங்கம் ஆகி இருக்கலாம்.கேதுவுடன் இணைவு.
திருமணம் ஆகி இருந்தாலும் உறவு நிலைக்காது.

3. வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு . 9-ல் மாந்தி அமர்வு.
அதனால் தடை , தாமதங்கள் ஏற்பட்டு இருக்கலாம்.
யோககாரகன் செவ்வாய் 12-ல் அமர்வு மற்றும் அதன் அதிபதி
9-ல் ஜலராசியில் ராகுவுடன் சேர்க்கை. சனி-செவ்வாய் பரிவர்த்தனை.
நாலாம் வீடு கெட்டு இருக்கிறது.
எனவே பணி காரணமாக கடல் கடக்கும் வாய்ப்பு உண்டு.

ravichandran said...

Respected Sir,

My answer for your Q-9:-

1. He has completed his schooling. 2nd house authority is sitting in 11 place from his house as well as getting guru's aspect both house and house authority.Dasa also guru dasa for first 15 years. degree or diploma completed after struggling.

2. He has married. 7th house surrounded with good planets and not affected. Venus planet also not affected even though 7th lord hemmed between kethu and sun and getting mars and saturn aspects.

3. He has gone to abroad since 9th lord is in 12th place to lakna as well as getting 10th lord aspects. 9th and 12th lord exchanged and action authority is in 12th place of 10th house. any how, he won't work his native place. he is far away from his native.

With kind regards,
Ravichandran M.

murali krishna g said...

அய்யா ,
ஜாதகர் மே 23, 1956 காலை 3 மணியிலிருந்து 3:30 மணிக்குள் பிறந்தவர். அவருக்கு இப்போது 58 வயதாகிறது . துலா ராசி மீன லக்னம் . லக்னாதிபதி குரு 6-ம் வீட்டில் . சுவாதி நட்சத்திரம் 4-ம் பாதம்.
1) புதன் 3-ம் இடத்தில் வக்கிரம் அடைந்ததோடு அஸ்தமனம் ஆகியுள்ளார் .கேது சேர்க்கை சனி, ராகு பார்வை . 2-ம் வீட்டு பரல்கள் 24, நான்காம் வீட்டு பரல்கள் 27. கல்வி சிறக்க வாய்ப்பில்லை. ஆனால் லக்னாதிபதி தசை 18 வயது வரை . ஆதலால் பள்ளி இறுதியாண்டு வரை படித்திருப்பார்.
2) ஏழாம் வீட்டை செவ்வாயை தவிர்த்து எந்த கிரகமும் பார்க்கவில்லை. எந்த கிரகமும் இல்லை. செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம். ஏழாம் இடத்து பரல்கள் 25. குடும்ப ஸ்தான பரல்கள் 24. திருமண வாய்ப்புகள் குறைவு. நடந்திருக்க வாய்ப்பு இல்லை.
3) 9-ம் அதிபதி செவ்வாய் 12-ம் வீட்டில். 12-ம் அதிபதி சனி 9-ம் வீட்டில் பரிவர்த்தனை. வர்கோத்மம் பெற்ற கேது 9-ம் வீட்டை பார்க்கிறார். தர்ம கர்மாதிபதி யோகம் (குரு செவ்வாய் இரண்டும் பார்க்கின்றன). 10-ம் இடத்தை குரு பார்க்கிறார். வெளி நாடு யோகம் உண்டு. துபாய் , அராபிய நாட்டுக்கு சென்றுஇருப்பார். சாதாரண வேலையாக இருந்திருக்கும். DRIVER, PLUMBER ELECTRICIAN போன்ற வேலைகள் பார்த்திருக்கலாம்.
சரியா, வாத்தியார் அவர்களே ? தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் !.

ravichandran said...

Respected Sir,

Just now I have sent my answer for your Q-9. in that i have to add one explanation additionally.

1. for my first question answer he has completed his degree or diploma means may be period only completed.

senthilkumar said...

4ம் அதிபதி அதற்கு 12ம் வீட்டில் அமர்ந்தாலும் அந்த வீட்டு அதிபதியுடன் பரிவர்த்தனை ஆகியிருப்பதால் ஜாதகர் படித்துருப்பார்.

சூரியன்+கேது+புதன் (செவ்வாய் மற்றும் சனியின் பார்வை) இவர் அறுவை சிகிச்சை செய்யும் டாக்டராகவோ அல்லது பொறியாளராகவோ இருப்பார்.

லக்கினாதிபதி மற்றும் முதல் நிலை சுபரான குரு பகவான், 2 மற்றும் 9ம் அதிபதியையும், 12 ம் இடமான சுகஸ்தானத்தையும், 2ம் இடத்தையும் பார்ப்பதாலும், ஜாதகத்தில் சுக்கிரன் கெடாமலிருப்பதாலும் அவருக்கு திருமண யோகம் உண்டு.

9இல் ராகு, 9ம் அதிபதியும் 12 ம் அதிபதியும் பரிவர்த்தனை. இவர் சனி திசையில் வெளிநாடு சென்றிருப்பார்.

Palani Shanmugam said...

மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

இன்று புதிர் - பகுதி 9 இல் நீங்கள் வெளியிட்டிருந்த ஜாதகத்தை வைத்து அலசி ஆராய்ந்த போது இவர் 1956 மே மாதம் 23 ந்தேதி பிறந்தவர் என்று தெரிகிறது.

1. சூரியனுடன் சேர்ந்து கல்விகாரகன் புதன் மூன்றில் மறைந்து லக்கினாதிபதி குருவுக்கு பரஸ்பர கேந்திரத்தில் இருப்பதால் இந்த ஜாதகர் பட்டப் படிப்பு படித்திருப்பார். உயர் கல்விக்கும் வாய்ப்புண்டு.
2. சுக்கிரன் கேந்திரத்தில் இருப்பதாலும், குருவின் பார்வையில் செவ்வாய் இருப்பதாலும், களத்திர ஸ்தான அதிபதி செவ்வாய்க்கும், குருவிற்கும் கேந்திரத்தில் இருப்பதாலும் இந்த ஜாதகர் திருமணம் ஆனவர். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை உள்ளவர்.
3. ஒன்பதாம் இடமான ஜல ராசியான விருச்சிகத்தில் சனி, ராகுவுடன் சேர்ந்து பத்தாம் பார்வையாக குருவைப் பார்ப்பதாலும், பன்னிரண்டுக்குரிய சனி ஒன்பதில் இருப்பதாலும், ஒன்பதுக்குரிய செவ்வாய் சனிக்கு கேந்திரத்தில் பரிவர்த்தனை பெற்று பன்னிரண்டில் இருப்பதாலும் இந்த ஜாதகர் கடல் கடந்து வெளிநாடு சென்று பணி செய்யும் விருப்பம் பூர்த்தியாகி இருக்கும்.

redfort said...

1. Jathakar padikkathavar, 4kkuriya puthan antha veettirkku 12il, vidyakarakakan buthan 3il so malaikku kooda pallikkodam pakkam pogathavar.(Laknathipathiyum 6il)

2.Thirumanam aanavar,7kkuriyavarum, kenthira palam petra sukkiranum tirumanam nadakka vali vakai seitirupparkal.

3.Veli nadu sella vaippu illai, 9 m athipathi 12il, sandran 8il, guru 6il so not possiable.

janani murugesan said...

Respected Sir,

1.The native of the horoscope did his bachelor's degree but with some difficulties.
Reason: combination of bhuthan+kethu & 8th lord sukran in 4th house results in difficulties but due to parivarthana yoga of sukran and bhuthan he should have completed his degree.Master degree is not possible due to sani+ragu in 9th house.
2.The native is Married.
Reason: Sukran in good place, though bhuthan in 3rd house wit kethu.
3.The native's chances for working in Abroad is less.
Reason:Though parivarthana yoga between the lord of 9th house(sevai) and 12th house(sani) which is not favourable. Also 10th lord guru is hidden in 6th house which is also the lagna lord.

Geetha Lakshmi A said...

வணக்கம் ஐயா,

1.4மதிபதி புதன், செவ்வாய்,சனி இருவரின் பார்வை பெற்று 4ம் வீட்டிற்கு 12ல் அமர்ந்துள்ளார்,மேலும் லக்னாதிபதியும்,வித்யா காரகனுமான குரு 6ல் செவ்வாய்,சனியின் பார்வையில் அமர்ந்துள்ளார்,3,4ம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றுள்ளதால் பள்ளிபடிப்பு படித்திருக்க வாய்ப்புள்ளது.

2.7ம் அதிபதியும் புதன், அவர் செவ்வாய்,சனியின் பார்வை பெற்றுள்ளார்,7ம் வீடும் செவ்வாயின் பார்வையில் உள்ளது,9ல் சனி,ராகு,மாந்தி,குடும்ப அமைப்பைவிட பிரம்மச்சாரி அமைப்பே அதிகம் காணப்படுகிறது,திருமணம் நடைபெற வாய்ப்புகள் குறைவு.

3.1ம் அதிபதியும்,9ம் அதிபதியும் பரஸ்பர பார்வையில் உள்ளனர்,9ம் அத்பதியும்,10ம் அதிபதியும் பார்த்துக்கொண்டுள்ளனர்,9ல் ராகு உச்சம்,இவருக்கு வெளிநாடு சென்று தொழில் செய்ய வாய்ப்புள்ளது.

Shree Ram said...

ayya,
vanakkam,
jathakar thadankaludan padithavar & thirumanam nadakavillai & kadal kadakkum yogam undu.but thadankalakum.

shreeram said...

4&7 ku udaiyavar suryanudan sernthiruppathal thadankal yerpattu padippum thirumanamum ninrupoi irukkum.but nalla kudumbam irukkum.
velinadu senru thanithu iruppar.
porul sampathippaar.

shreeram said...

ayya vanakkam,
4&7 kudaiya buthan suryan & Kethuvudan sernthu iruppathal thadankaludan Hsc varai padithiruka vaipu undu.thirumanam nadanthirukka vaipu illai.but nalla kudumbam amaiyum.velinadu senru iruppar.porul ethum kayil irukkathu.
sukathinal ellavatraiyum elanthavar.

RAJKUMAR SAMINATHAN said...

1. ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா?
இளங்கலை பட்டப் படிப்பு

2. திருமணமானவரா - Yes

3. ஜாதகர் வெளிநாடு சென்று பணி செய்ய விருப்பம் கொண்டார். Yes. Once He completed his Bachelor Degree, Saturn maha dasa would have given oppurtnity to go to Onsite.

C Jeevanantham said...

Dear Sir,

1. 4th lord mercury in 3rd place. 3rd lord sukran in 4th. exchanging the place. Parivarthan yoga. Hence He has studied good by luck. He got wealth and studies by luck.

2.7th lord mercury in 3rd, also mercury with sun and kethu. Kethu and sun is in favour. even then He may be married two times minimum due to presence of kethu and sun together with 7th lord. Sukran also helping by standing in 4th place. So He enjoys well.

3. Lagna lord in 6th place and seeing 12th place. 9th lord is in 12th. 12th lord is in 9th . exchange yoga. parivathan yoga. powerful yoga. Since there is connection between 12th lord and 9th lord, the person will go to foreign and work. The person live in foreign.

Thanking you sir.

C.Jeevanantham.

Murali said...

Lords of 1, 5, 9 houses are respectively in 6,8,12 house so horoscope needs struggle lot.

Education 2, 9 lords are in 12 the house, Mercury in 3 house with 6th lord and kethu. So a chance of getting good education is less.

Marriage : 7 th lord in 3 house with parvartha yoga. Same parivarthana yoga makes sukuran strong
So marriage life and marriage happens without much problem.

Foreign trip
9th lord in 12 the house aspected by Lagna lord and 9 and 12 lord in parivarthna s yoga so chances for going onsite is high.
kmr.krishnan said...

ஜாதகர் 23 மே 1956 அன்று காலை 3 30 மணிக்கு கரைக்குடியில் பிறந்தவர்.

படிப்பு: நான்காம் அதிபனும் கல்விகார‌கனுமான புதன் தன் வீட்டிற்கு 4ல் மறைந்து சூரியனாலும் பாதிக்கப்பட்டு, வக்ரமும் அடைந்து, கேதுவுடனும் சேர்ந்து, சுயவர்க்கத்தில் 4 பரல் மட்டும் பெற்றதால் கல்வியில் மிகச் சிறந்து விளங்குதல் இயலாது. பரிவர்த்தனை அடைந்த புதனும், சுக்ரனும்,மேலும் சுக்ரனுக்கு சுய வர்கத்தில் 6 பரல், நான்காம் இடத்திற்கு 27 பரல் ஆகியவை பள்ளிப் படிப்பினை முடிக்க வைத்து இருக்கலாம்.

1974, 18 வயதுவரை லக்னதிபதி குருவின் தசா.எனவே பள்ளிப்படிப்பு ஓரளவு நலமாக முடிந்திருக்கும்.அதன்பின்னர் சனிதசா பாடாய் படுத்தி எடுத்திருக்கும்.

சதுர்தாம்சத்தில் 4ம் அதிபன் 9ல், 7,10க்கும் உரியவனும் கல்விகாரகனுமான புதனும் 9ல்,9க்குடைய‌ சூரியன் தன் வீட்டிலேயே ஆகியவைகளைப் பார்க்கும் போது தன் சுய முயற்சியால் ஜாதகர் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடிக்க வாய்ப்பு உண்டு.

நவம்சத்திலும் 4ம் அதிபன் புதன் 2ல் லக்னாதிபதி குருவுடன் கூட. எனவே சுய முயற்சியால் கல்வியில் முன்னேறியிருக்கலாம்.

படிப்பு பட்டம் எப்படியாயினும் ஜாதகர் நல்ல கலாரசனையும், எந்த ஒரு படிப்பையும் கற்றுக்கொள்ளும் ஆற்றலும் உள்ளவரே.

திருமணம்:
திருமணம் ஆனவரே. ராசி சக்கரத்தில் 7ம் இடம் குருவாலும் வளர்பிறைச் சந்திரனாலும் அணைக்கப்பட்டுள்ளது.நவாம்சத்தில் 2ம் இடம் புதனாலும்,குருவாலும் நிரம்பியுள்ளது.சுக்கிரன் சுய வர்கத்தில் 6 பரல். 7ம் இடத்திற்கு 24 பரல்.இவையெல்லாம் திருமணம் ஆனதைக் குறிக்கும்.

சனி 9ம் இடத்தில் இருப்பது, சனிதசா 37 வயதுவரை நடந்தது ஆகியவைகளைப் பார்க்கும் போது கால்ந்தாழ்த்திய திருமணம், திருமண வாழ்க்கையில் சிக்கல்கள்.ராகு 9ல் இருப்பதால் மனைவி அதிகாரம் செலுத்துபவர்.நவாம்சத்தில் 7ம் இடம் பாதிப்பு.ராசியில் 7ம் அதிபன் அஸ்தங்கதம், வக்கிரம். இவையெல்லாம் திருமண வாழ்க்கை சுகக்கேட்டினைக் குறிக்கும்.
ஆனால் ராசி, நவாம்சம் இரண்டிலும் 9ம் அதிப‌னான செவ்வாய்க்கு குரு பார்வை. ஆகவே நன்கு அட்ஜ‌ஸ்ட் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை நடத்துவார். இரண்டாம் திருமணம் ஆகியிருக்கக் கூடும்.

வெளிநாடு:

9ம் அதிபன் 12ல் 12ம் அதிபன் 9ல். சனியும் செவ்வாயும் இது ஒரு நல்ல பரிவர்தனை அல்ல. ஆனாலும் செவ்வாயுக்கு குருபார்வை.நவாம்சத்திலும் செவ்வய்க்கு குருபார்வை.தசாம்சத்திலும் 9க்குடையவனான செவ்வாயுக்கு குருபார்வை. தசாம்சத்தில் 12க்குடைய சந்திரன் 9ல் குருபார்வையுடன். எனவே வெளிநாட்டு ஆசை நிறை வேறியிருக்கும்.

ராகு 9ல் என்பதால் அரபு நாட்டுத் தொடர்பு இருக்கலாம்.

rajakala said...

the native's 2nd house and the 2nd lord aswell is aspected by guru.so i think the native could have completed his graduation with a break possibly
the native should be married caz we see a guru-mangala yoga and sukran is also placed well.
there is a parivarthana yoga between the 9th lord and the 12th lord which gives way for foreign travel and settling thereafter.
i hope atleast one answer is correct

Ramkumar KG said...

லக்னாதிபதி ஆறில் மறைந்துள்ளார் . கல்விகாரகன் புதன் ஆறாம் அதிபதியுடன் சேர்ந்து சனியால் (12 ஆம் அதிபதி) பார்க்கப்படுகிறார் . ஆனாலும் ஒன்பதாம் அதிபதி செவ்வாயால் பார்க்கப்படுகிறார் . எனவே சுமாரான கல்விக்கு வாய்ப்பு உண்டு.

புதன் ஏழாம் அதிபதியாகி மேலே சொன்ன காரணங்களால் தாமத திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. குரு ஆறில் மறைவு.

9 , 12 ஆம் அதிபதிகள் செவ்வாய் மற்றும் சனி பரிவர்த்தனை பெற்று பத்தாம் அதிபதி குருவை செவ்வாய் பார்ப்பதால் மற்றும் 12ஆம் இடம் ஜல ராசி ஆவதால் வெளிநாடு சென்று நன்கு சம்பாதிக்க யோகம் உண்டு.

சரியா குருவே !

Senthil Nathan said...

ஐயா

இந்த சாதகர் பிறந்த நாள் : 23.05.1956, காலை : 03.30

இந்த சாதகர்:- நான்கில் சுக்கிரன் பரிவர்த்தனை இருப்பதால், மேல் நிலைப்படிப்பு வரை படித்திருக்கலாம் .
குரு தசை அதுவரையே காணப்படுகிறது.

ஏழாம் அதிபதி புதன், ஆறாம் அதிபதி சூரியன் , சனி, இராகு & கேது சம்பந்தப்பட்டதினால் இவருக்கு திருமணம் நடந்திருக்காது .

கர்ம காரகன் சனீஸ்வரர் நீர் இராசியில் பாரிவர்த்தனை அடைந்து உள்ளார் இதனால் கடல் கடந்து சென்று இருப்பார் , பத்தாம் அதிபதி பன்னிரண்டில் மறைந்து இருப்பதால் (மறைவு இடத்தில்) வெளிநாட்டில் தொழில் செய்பவர் .

செந்தில் நாதன்

PSS said...

This is my interpretation

mercury and venus are in partivarthana yoga.

The person is only school or diploma educated. He did not do his graduation. The reason is because ketu is associated with 4th lord budha in 3rd house. Due to family reason he would have dropped off education

The person is not married. Venus and Mercury in exchange position. Mercury is badly afflicted by ketu and aspect ed by saturn and Rahu.

The person is guaranteed to live abroad because 9th house has Rahu in it. Maybe when he was child itself he would have traveled with his parents

Subbiah Veerappan said...

1. சாத்தூர் கார்த்தி
2. ரெட்ஃபோர்ட்

ஆகிய இருவரும் கேட்கப் பெற்ற மூன்று கேள்விகளுக்கும் சரியான பதில்களை எழுதியுள்ளார்கள். அவர்களுக்குப் பாராட்டுக்கள்

பெரும்பாலானவர்கள் இரண்டு கேள்விகளுக்கான பதில்களைச் சரியாக எழுதியுள்ளார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள்

கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்

முழு விபரத்திற்கு அடுத்த பதிவைப் பார்க்க வேண்டுகிறேன்!

அன்புடன்
வாத்தியார்

thozhar pandian said...

வாத்தியார் அய்யா, நானும் கேட்கப் பெற்ற மூன்று கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்லி இருக்கிறேனே.

redfort said...

Nanri ayya for your valuable comments.