மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

3.9.13

Astrology: Quiz புதிர் - பகுதி 5 வித்தியாசமான கேள்விகளுடன்

 
Astrology: Quiz புதிர் - பகுதி 5 வித்தியாசமான கேள்விகளுடன்

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி ஐந்து

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக்  கேட்கப்பெற்றிருக்கும்  3 கேள்விகளுக்கும் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

இதுவரை 700ற்கும் மேற்பட்ட பாடங்களை நடத்தியிருக்கிறேன். வீடுகளைப் பற்றியும், காரகர்களைப் பற்றியும் உங்களுக்கு நன்கு தெரியும். அத்துடன் 70ற்கும் மேற்பட்ட அலசல் பாடங்களையும் நடத்தியிருக்கிறேன். ஆகவே உங்கள் நினைவாற்றலை வைத்து இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள். அதில் ஒன்றும் சிரமம் இருக்காது.

உங்கள் பதில்களை பின்னூட்டம் மூலம் மட்டுமே சொல்லுங்கள். மின்னஞ்சல் களின் மூலம் எழுத வேண்டாம். அதை பலருக்கும் தெரியப் படுத்த வாய்ப்பு இல்லை.

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணுடைய ஜாதகம். ஜாதகி பிரபலமானவர் அல்ல. சாதாரணப் பெண்மணிகேள்விகள்
1. ஜாதகி படித்தவரா அல்லது படிக்காதவரா?

படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? பள்ளி இறுதியாண்டு வரையிலா? அல்லது இளங்கலை பட்டப் படிப்பு வரையிலா? அல்லது உயர்கல்வி பயின்றவரா? படிக்காதவர் என்றால் சில ஆண்டுகள் பள்ளிக்குச் சென்றவரா அல்லது மழைக்குக்கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்காதவரா?

2. வேலையில் இருப்பவரா? அல்லது Home Makerஆ

(அதாவது வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்பவரா?)

2. திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா?

எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பையும் சேர்த்து எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

 
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++=====

39 comments:

Dallas Kannan said...

1. Sani is in 12th house from its 4th house and Mars also looks at 4th house. So trouble in early education. But Sani is in 11th place from its 5 thplace and Sukran and Chandran is looking at 5th palce. So should be good higer education.
2. She should be working. 10th lord is in 11th lord with laknathipathi. Guru also looking at 10th place.
3. should be married. 7th lord is looking at 7the place from lakna. Guru and Buthan also looking at 8th place which is important for Girls.

Little confusion on first 2 questions as Sukran is also 8th house lord and in Pahai house. So not sure how he is reacting here ( as laknathipathi or 8th lord).

Srinivasa Rajulu.M said...

குருவையும், இறைவனையும் தியானித்துக் கொண்டு, முடிந்தவரை முயல்கிறேன். (27-10-199; 5:55காலை; இந்தியாவில் பிறந்தவர் என்பது ஒரு assumption. லாஹிரி அயனாம்சம்)
1) குட்டிச் சுக்கிரன் (வசதியான குடும்பம்) படிப்பில் நாட்டமில்லாமல் செய்திருந்தாலும், நாலாம் அதிபதி நாலுக்குப் பன்னிரண்டில் இருந்தாலும் பலமான செவ்வாயின் பார்வையினால் பள்ளிப்படிப்பை முடித்திருப்பார். நாலாமிடத்தின் அதிக பரல்கள் பள்ளிக் கல்வி மட்டும் என்றில்லாமல், பின்னாளில் பொதுவாக அவர் நன்றாகப் படித்திருப்பார் என்றே உணர்த்துகிறது.
2) ஏழு பரல்களுடன் ராசியில் சூரியனுடன் பரிவர்த்தனையான பலமான சுக்கிரன் தக்க வயதில் திருமணம் என்கிறார்.நவாம்சத்தில் பலமான ஏழாம் இடம் திருமணமானதை உணர்த்துகிறது. ஆனாலும் அங்கு நிற்கும் மாந்தியும், நவாம்ச எட்டாமிட சனியும் திருமண வாழ்வில் சில கேள்விக்குறிகளை இடுகின்றார்கள்.
3) லக்னாதிபதியும், தொழில் ஸ்தானாதிபதியும் கூட்டாக அமர்ந்துள்ள லாபஸ்தானம் சொந்தத் தொழிலில் பிரகாசிப்பதைக் குறிக்கின்றன.
சொந்த இடத்தைவிட வேற்று இடம் மிகவும் நன்றாக அமைந்திருக்கும். பல இடங்களுக்கும் சென்றிருப்பார்.
-அன்புடன்
ஸ்ரீனிவாச ராஜுலு

raja said...

1.பள்ளி இறுதியாண்டு வரையில்.

2. வேலையில் இல்லை.

3. திருமணம் ஆனவர்.

thozhar pandian said...

1.4ல் மாந்தி. 4க்குறிய சனி அந்த வீட்டிற்கு 12ல். கல்வி காரகன் புதன் மீதோ 4ம் வீட்டின் மீதோ சுபகிரகங்களின் பார்வையும் இல்லை. ஜாதகி அதிகம் படித்திருக்க வாய்ப்பில்லை. 4ம் வீட்டிற்கு 11ல் புதன் இருப்பதால் பள்ளிக்கு சென்றிருக்கலாம். ஆனால் பட்டப்படிப்பு படிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

2. 10ம் வீட்டின் மேல் குருபகவானின் பார்வை விழுகிறது. ஆனால் கர்மகாரகன் சனி அந்த வீட்டிற்கு 6ல். பத்துக்குறிய சந்திரன் அந்த வீட்டிற்கு 2ல் இலக்னத்திற்கு 11ல். வேலைக்கு செல்பவர் அல்ல. வீட்டு வேலைகளை செய்து குடும்பத்தை கவனிப்பவராக இருக்கக் கூடும்.

3. ஏழுக்குறிய செவ்வாய் இலக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டை தனது நேரடி பார்வையில் வைத்திருக்கிறார். களத்திரகாரகன் சுக்கிரன் (இவர் இலக்கினாதிபதியும் ஆவார்) 11ல், 7ம் வீட்டிற்கு திரிகோணத்தில். திருமணம் நடந்திருக்க வேண்டும்.

Udhayaganesh said...

1)4th house god in second house, so he/she will get adequate facilities for stuides. But due to ma in 4th house, i guess he/she did't concentrate much on studies.
2)10th house(moon) god in 11th house, so he/she will do own business.
3)he/she may struggle to get marriage becoz mars is looking into 7th house and venus is not in good position.
Since Lagna good sukran in 11th position & in his dasa this person may get married.

Thanks!!!Correct me I am wrong sir...

Anonymous said...

வணக்கம் !

1. நான்கில் மாந்தி இருப்பதால் பட்டபடிப்பு வரை படித்திருக்க வாய்ப்பில்லை.
எனவே பள்ளிக்கு சில ஆண்டுகள் மட்டுமே சென்றிப்பார்.
ஆரம்பக்கல்வி வீடான இரண்டாம் வீடு பாப கர்த்தாரி யோகத்தில்.
அது மட்டும் இன்றி இங்கு பகை கிரஹ சேர்க்கை.

2. வேலையில் இருப்பவர். பத்தாமாதி சந்திரன் பதினொன்றில்.
அது மட்டுமின்றி பத்தாம் இடத்திற்கு குரு பார்வை என்பதால்
தொழில் மூலம் நல்ல வருமானம் உண்டு. உணவுத் துறையாக
இருக்க அதிக வாய்ப்பு.

3. திருமணம் ஆனவர். சுக்கிர தசையில் திருமணம் நடந்திருக்கும்.

AMG said...

ஜாதகர் சிரமங்களுக்கு பிறகு பட்டப்படிப்பு வரை படித்திருக்க வேண்டும். அரசாங்க வேலையில் இருக்க வேண்டும்.(லக்னத்தில் சூ; மற்றும் லக்னாதிபதியுடன் பரிவர்த்தனை)
திருமணமாகி நல்ல குடும்ப வாழ்க்கை ( 2‍ல் பு மற்றும் குரு; 7‍ம் அதிபதி செ லக்னத்தில், சு 11‍ல்)

AMG

Thiru Mahes said...

Kalai Vannakm Ayya,

1. First question: padithavara?
lord of the 4th place Sani bagavan antha idathukku 12 il maraivu.

addition to that Mandhi is in 4th place.

iddam kodutha (sani kku) guruvum avaroda vittirkku 12 il.

Thulam lagnathirkku guru muthal thara pavi. 3 ikkum 6 ikkum uriyavar.

vidyakargan Buthan 9 ikkum 12 ikkum uriyavar antha antha vittirkku 6 mattrum 3 im idathil.

Bothan ikku iddam kodutha Sevai antha vittirukku 12 il.

siruvathil sukra tisai.. kutti sukran immm

kETHU TISAI 4 - 3 - 23
SUKRA TISAI SUKRA PUTHI 3 - 4 - 0
sUKRA TISAI SOORIYA PUT 1- 0-0
CHANDRA PUTHI 1- 8 -0
SEVAI PUTHI 1-2-0

AGGA MOTHAM 11 - 5 - 23 VARI SUKRA TISAI SEVAI PUHTI.

Sukra tisai sevai puthi vari avar pallikku sella vaippu. atharkku mel illai.

PAALI PADIPAI PATHYIL VITAVAR.

mAHES

Thiru Mahes said...

sECOND QUESTION:

Patham athipathi chandran 11 il. yud sukran. sukran lagnathukkum eittukkum oriyavar.
chandran astabapathiyudan.
Iddam kodutha sooriyano nesam.

30 - 3- 23 vari sooriya tisai veru...

ivar vellaikku selavillai.

SHE IS A HOME MAKER.

Mahes

Thiru Mahes said...

Third question
7 im vettirukku uriyavan sevai lagnathil. thannudaiya vettai 7 im paarvaiyagaa parkirar.

kalathira karagan sukran 11 il. 7 ikku 5 il. 11ikku 9 ill. arumaiyana amaippu.

Thirumanam lata aga nadathirukkum.
30-3-23 mudiya sooriya tisai

31-1-23 mudiya chandra tisai chandra puthi. suya puthil nadakka vaippu illai.

chandra tisail suya puthi mudinthu thirumanam nadanthirukkum.

She is a married person

Sir I am waiting for your answers.

Thank you sir.
Mahes

RAMADU Family said...

குரு வணக்கம் ,
நேற்றைய பரிட்சைக்கு வராமைக்கு மன்னிக்கவும் .
புதிர் 5: OCT 27 1959
1. கல்வி தடை : 4ஆம் அதிபதி அந்த வீட்டுக்கு 12ல் . கல்வி காரகன் பாபகர்த்தாரி யூகத்தில்,போறாததுக்கு 4ல் மாந்தி, குட்டி சுக்கிரன் கூடி படிப்பை கெடுதிருப்பான்
2.கலை துறையில் இருந்து வருமானம் வரக்கூடும் 3.திருமணம் நடந்திருக்க வைப்பு இல்லை - சூரியனும்,செவ்வாயும் விளையாடி இருப்பார்கள் ;

*********
தவறு இருந்தால் மன்னிக்கவும்
இப்படிக்கு
RAMADU

ravichandran said...

Respected Sir,

My answers for our today class questions as follows:-

1. she has completed her schooling only this is due to kul in 4th place as well as 4th house owner is in 12th place from that house.

2. she is married due to 2 and 7th house authority is in lagna. hence she is married but i am not sure about family life.

3. she is working women. coz 10th lord is in 11th place along with lagna authority and guru aspects also there for 10th house.

With kind regards,
Ravichandran M.

Raja said...

இவர் படித்திருக்க வாய்ப்புகள் மிக குறைவு. உங்கள் பாஷையில் மழைக்கு கூட ஒதுங்கியிருக்க மாட்டார். குட்டி சுக்கிரன் எல்லாத்தையும் கெடுத்திருக்கலாம்.

வேலையில் இருக்க வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. 10ம் இடமும் அதன் அதிபதியும் நன்றாகவே இருக்கிறனர். ( படிக்காமல் எப்பிடி வேலை கிடைக்கும், எங்கேயோ இடிக்குதே.... )

திருமணம் ஆனவர். திருமண காரகன் சுக்கிரன் நீச சூரினுடன் பரிவர்த்தனை. 7ம் அதிபதி செவ்வாய் லக்கினத்தில் உட்கார்ந்து கொண்டு 7ம் வீட்டை நேரடி பார்வையில் வைத்திருக்கிறார்.

Nagarajan said...

ஜாதகி படிக்காதவர்,4ம் இடத்தில் மாந்தி,சனியும்3ல் மறைவு
வேலைக்கு செல்லாதவர்
மணமானவர்

jagvettri@gmail.com said...

Dear Sir,
1. ஜாதகி படித்தவரா அல்லது படிக்காதவரா?
kutti sukran kandipaaga and 4 am idthuil maanthi kandipaaga siru vayathu padipu thadai seithirukkumey thavira buthan guruvudan sernthu 2 il ullathaal patta padippu padithavaraaga irruka vendum.
2. வேலையில் இருப்பவரா? அல்லது Home Makerஆ
Trade or Bussiness 10 amm athipathi 11 il kedamal sukiranudan kootu.aanal oru doubt avar irrukum idatin athipathi neecham adainthullar

2. திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா?
irandil guru 11 il chandran and sukran ulathaal chance irrukirathu. Matrapdai chevai and neecha suriyan combination problematic for marriage marriage.

Palani Shanmugam said...

மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
இந்த ஜாதகி துலா லக்கினத்தில் சிம்ம ராசியில் 1959 ஆம் வருடம் அக்டோபர் 27 அன்று காலை 6.45க்கு பிறந்தவர்.
செவ்வாயும், நீச்சமடைந்த சூரியனும் லக்கினத்தில் இருப்பதால் வசதியில்லாத குடும்பத்தில் பிறந்தவர். குருவும் புதனும் இரண்டாமிடத்தில் இருப்பதால் புத்திசாலியாக, பேச்சாற்றல் கொண்டவராக இருப்பார். ஆனால் குருவின் வீடுகளில் சனியும் கேதுவும் இருப்பதால் படிப்பில் தடை ஏற்பட்டு பள்ளி இறுதி வரை மட்டுமே படித்திருக்க வாய்ப்புண்டு.
குரு பார்வையுடைய பத்தாம் இடத்துக்குரிய சந்திரன் பதினொன்றில் சுக்கிரனுடன் சேர்ந்திருப்பதால் கலைத்துறையில் (இசை, பாடல்) ஈடுபட்டு புகழுடன் சிறப்பான வசதியான வாழ்க்கை உடையவராக இருப்பார்..
லக்கினாதிபதி சுக்கிரனும் லக்கினத்தில் உள்ள சூரியனும் பரிவர்த்தனை பெறுவதாலும், சுக்கிரனுக்கு கேந்திரத்தில் குரு இருப்பதாலும், ஏழாம் இடத்துக்கு அதிபதியான செவ்வாய் லக்கினத்தில் இருந்து ஏழாம் இடத்தைப் பார்ப்பதாலும் மனதுக்குப் பிடித்த துணைவருடனும், குழந்தைகளுடனும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை உடையவர்.

govind said...

1. I think she has done her masters(Foreigncountries also possible), Because the combination Guru+9th lord Budhan in Second.

2. She might be doing business(home or part time) related to food or consulting.

3.She is married,the reason i think is in 2nd place General benefic planets Guru+Budhan,2nd and 7th lord in lagna,no negative aspect on 2nd and 7th and moreover lagna lord and 10th lord in 11th.

Thanks for these kind of analysis lessons and for your effort !

janani murugesan said...

Respected Sir,

1.The native of the horoscope may stopped her education in the school level itself
Reason: kutti sukra dasa & lagna lord sukran in pagai veedu. higher education s nt possible as 4th lord hidden in 3rd house also presence of mandhi in 4th house.
2.The native is working
Reason:Her work is with the help of her intelligence as mercury and guru in 2nd house her work will be related to her speech. also 10th lord in 11th house s favour for her work but not that much as it is with 8th lord.
3.The native would be a divorcee.
Reason: combo of sun+mars. 7th lord mars got asthangam.

Am not that sure about my answers Sir, Though i tried.

gopi nath said...

Dear Ayya,

1. she is a school drop-out.

2. she is an artistic worker like....,actor ,traditional dancer ,creater of literature.

3. she is married to a diplomat and settled abroad.

DevikaArul said...

Vanakkam sir.. I appreciate the question. In my opinion , this kind of question is better than looking up at date-of-birth in the internet and identifying the person.
My answers
1) Education : Karaga budhan in 2nd in enemy house. But conjoined with Jupiter- jupiter amplifies everything it aspects or joins. So mercury is not entirely damaged.
Mandhi in 4th house, gives major hurdles in education.
Mars aspects 4th house - there is drive to study , though.
4th lord sani in 12 th from own house - which is also bad.
Since budhan is not totally damaged , she should be getting at least graduation.
Budhan and Guru in 2nd indicates good voice - probably a good singer / speaker at least - impressive speech and good at giving advice.
2) Job :
10 lord in 11th house : chandran in natpu house and is in 2nd place to own house. strong guru aspect to 10th house. so she definitely has a job.
suryan is neecham - so not a government job or in a leadership position - there are chances the lady may not even be a manager or heading a team.
chandran signifies matters of heart / relations. so chances are , she is in HR or consultancy or public relations. Since jupiter also aspects , more chances of HR & consultancy than PRO.
Budhan and Guru in 2nd indicates good voice - probably a good singer / speaker at least - impressive speech and good at giving advice.
Probably why she could be in HR / consultancy.
3) Marriage :
2nd and 7th lord in lagna , aspecting 7th house , though combusted by suryan. Guru in 2nd and budhan in 2nd .
karaga for husband - Guru in good place. Karaga for marriage sukran is lagna lord ( position presiding over its ownership over 8th house ) in 11th house ( suryan's house).
Though suryan and sukran are mutual enemies , they are both strengthened by parivarthanai. Hence sukran is not damaged.
She is married . Guru aspects 8th house ( 2nd from 7th house ) in-laws / husband's home and is in fact very lucky for her in-laws house.

janani murugesan said...

Sir,

Her DOB is oct 27th 1959
birth time 6 AM approx.

murali krishna g said...

1. குருவும் புதனும் சேர்ந்து இருப்பதாலும் புதன் 9-ம் வீடு அதிபதியாக இருப்பதாலும் ஜாதகி நன்றாக படித்திருப்பார் !. ஆனால் மாந்தி 4-ம் வீட்டில் இருப்பதாலும் புதன் 12-ம் வீட்டுக்கு அதிபதிஆகி கேந்திரதிலும் திரிக்கோன்னதிலும் இல்லாததாலும் , இளங்கலை படிப்போடு நிறுத்திருப்பார் !.
2.10-ம் இடத்தில கரகங்கள் இல்லை !. காரகன் சனி பார்வையும் இல்லை !. 10-ம் அதிபதி சந்திரன் அதற்கு இரண்டில் இருக்கிறார் !. அதனால், home maker தான் !.
3. 7-ம் அத்பதி லக்னத்தில் இருப்பதாலும் காரகன் சுக்ரன் (அவனே லக்னாதிபதி ) 11-ம் இடத்தில இருப்பதாலும் , கல்யாணம் நடந்திருக்கும் !.(சூரிய தசையில் நடக்கும் !). ஆனால், செவ்வாய் தோஷம் இருப்பதாலும், லக்னத்தில் செவ்வாய் சுக்ரன் வீட்டில் இருந்தாலும் சுக்ரன் செவ்வாயை விட வலுவாக இருந்தால் சூரிய தசையில் திருமணம் நடந்திருக்கும் ! .
அய்யா !, எனக்கு எவ்வளவு மார்க் ?

redfort said...

Dear Sir,

1.Jathaki go to school and discontinued with 10 std due to
4 kkuriya sani antha veettkku 12 il maraivu. viyakarakan Buthan antha veettukku 11il sanikku 12il so discontinued the school. Melum ilamaiyil sukkira thisai padippai kedutthiruppar.

2.Jathaki velaikku selpavar because 10kkuriya sandran 11il anda veettukku 2 il

3.Jathaki marraige aanavar because 7kkuriya sevvai laknathilirunthu 7m paarvaiya than veettai paarkkiraar. karakar sukkiran 11il sandiranoodu ullar.

GAYATHRI said...

Padikkadhavar (may discontinued during school/college)

She is a business woman earning well.

She is a married woman.

GAYATHRI said...

Padikkadhavar (discontinued during school/college) The owner of 4th place is in 12th for that house. And mandhi in 4th place.

She is a business woman earning wealthy. Strong placement of Lagnathipathi(venus) in 11th place with 10th owner. Less work more money.

She is a married woman. Jupitar in 2nd place and she is a married woman. Thought mars is in 12th place for 2nd house, strong placement of venus she would be definitely married.

vanikumaran said...

sir.
4
பள்ளி கல்விக்கு 4இம் இடம் அதிபதி, புதன்
4 ல் மாந்தி
4 அதிபதி 3இல் புதைன் பாப கதரி யோகதில்
பள்ளி கல்வி படிக்காதவர் என நினைக்கிறேன்

திருமணதீற்கு இடம் அதிபதிஅதிபதி சுக்கிரன்
7 இடம் அதிபதி செவ்வாய் 1ல் பார்வைல்,திருமணம் ஆகி இருக்கும் என நினைக்கிறேன்
ஆனால் 2 இடம் பாப கதரி யோகதில்,2 இடம் அதிபதி 2 க்கு 12ல்
குடும்பம் இல்லை நினைக்கிறேன்


வேலைக்கு 10இடம்,அதிபதி,கர்மாதிபதி
10இடம் அதிபதி சந்திரன் 11 லாபதில் வுடன் லக்னாதிபதி
வேலை பார்பவர் என நினைக்கிறேன்

நன்றி

Geetha Lakshmi A said...

வணக்கம் ஐயா,

1.4ம் அதிபதி அவர் வீட்டிற்கு 12ல்,4ல் மாந்தி,4ம் வீட்டிற்கு செவ்வாயின் பார்வை,பிறந்ததோ கேது தசா,ஆரம்ப கல்விக்கே தடைவர நிறைய வாய்ப்புள்ளது.

2.10ம் அதிபதி லக்னாதிபதியுடன் 11ல் அமர்ந்துள்ளது,10ம் வீட்டிற்கு குருவின் பார்வையுள்ளது,10ம் அதிபதி அவர் வீட்டிற்கு 2ல் அமர்ந்துள்ளார்,11ம் அதிபதியும்,லக்னாதிபதியும் பரிவர்த்தனையில் உள்ளனர்.அவர் கண்டிப்பாக ஒரு அழகான தொழில் அதிபராக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

3.7ம் அதிபதி லக்னத்தில்,லக்னாதிபதியும் களத்திரகாரனுமான சுக்கிரன் 11ல்,2,7,11ம் அதிபதிகள் லக்னத்தில்,ஜாதகியின் 24 வயது வரையிலும் சுக்கிரன் தசா,சிரிய வயதிலேயே திருமணம் நடந்திருக்க வேண்டும்,ஆனால் 7ம் வீடு, சூரியன்,செவ்வாய் பார்வையில் உள்ளது,மேலும் லக்னாதிபதியும், களத்திரகாரனுமான சுக்கிரன் 8ம் அதிபதியாகவும் வருகிறார்,ராகு 12ல் இருப்பதால் கோர்ட், வழக்கு என்று வாழ்க்கை இருந்திருக்கும் வாய்ப்புள்ளது.
சரிங்களா ஐயா, ஒரே குழப்பமாக உள்ளது. நன்றி ஐயா.

Mohan Balasundaram said...

27-அக்டோபர் 1959 செவ்வாய் கிழமை தசமி திதி கிருஷ்ணா பக்க்ஷம் சூரிய உதயத்தில் 6 மணிக்கு கஜகேசரி யோகத்துடன் பிறந்த இந்த ஜாதகி, ராசிக்கு 4ல், லக்னத்திற்கு 2ல் குரு உடன் கல்விக்கரகன் புதன் இருப்பதால் உயர் கல்வி கற்றிருகலாம். லக்னத்தில் செவ்வாயும் 2ல் புதனும் இருப்பதால் சட்டம் படித்து வக்கீல் தொழில் செய்யலாம். திருமணமாகி இருக்க வேணடும்

rajakala said...

kutty sukran could have hampered the woman's education. with some difficulty she would have finished graduation. she is married i think with the 7th lord in lagna and 2 natural benefics in the 2nd place.1st and 11th planets are in parivarthana yoga. and the 10th lord is placed in the 11th.hence there is a possibility of earning a huge sum through business perhaps. thats it. i ll be jittery until i hear the results. thank you sir for the question n answer session

hamaragana said...

அன்புடன் வணக்கம்
வாத்தியார் அய்யா .

1, படிப்பு இல்லை .ஏனென்றால் 4 இல் மாந்தி சுபர்கள் பார்வை இல்லை .. ஆகவே படிப்பு சுகஸ்தானம் வீடு வசதி ம்ஹும் !!
2. .10 மிடம் சிம்மம் ராசி அதுவே சுக்கிரன் பகை சேர்ந்து.கும்மி அடிக்கிறான் ..ஆகவே வேலை கிடையாது சும்மா வீட்டு வேலைகள் அதுவும் சாப்பாடு யாராவது கைல கொண்டு வந்து கொடுக்கணும்..

3.திருமணம் கிடையாது..?? 7 மிடம் மேஷம் சுபர் யாரும் பார்கலை .
திருமணம் கொடுக்க கூடியவன் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிகொண்டு முழி முழி என்று முழிக்கிறான் !!!7 மிடத்தை செவ்வாய் சூரியன் பார்க்க வேறு செய்கிறான் ..
.
கூடுதலாக ..6..12 ல் கேது ராஹு இருப்பதால் இந்த பிறவி பட வேண்டிய கஷ்டங்கள் அனைத்தும் பட்டு.. மீண்டும் ஒரு பிறவி எடுக்காது என ஒரு சின்ன யோகம்

வாத்தியார் அய்யா பலன் சொல்வது சரியா?? என பேப்பர் திருத்துங்க !!!
இல்லேன இம்பொசிசன் எழுத சொல்லுங்க !!!

Sattur Karthi said...

அனைவருக்கும் வணக்கம் !

1. ஜாதகி படித்தவரா அல்லது படிக்காதவரா?

Ans - கல்விகான அதிபதி 4 வீட்டுக்கு 11 இல் இருபினும் 4இல் மாந்தி மற்றும் 4 வீட்டுக்கான அதிபதி அந்த வீட்டுக்கு 12இல் மறைவு - சில ஆண்டுகள் பள்ளிக்குச் சென்றவராக இருக்கலாம்

2. வேலையில் இருப்பவரா? அல்லது Home Makerஆ

10இம் இடம் தொழில் தானம் அதனதிபதி 11 இல் 10 இம் வீட்டுக்கு 2 இல் வேலை செய்து வருமானம் வுண்டு

3. திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா?

7 இம் அதிபதி 1இல் இருந்து 7இம் வீட்டை பார்பதால் திருமணம் வுண்டு

இதில் தவறு இருந்தால் மன்னிக்கவும் !

நன்றி

kmr.krishnan said...

ஜாதகி 27 அக்டோபெர் 1959 அன்று காலை 6 மணி 26 நிமிடங்கள்,18 வினாடிகளுக்குப் பிறந்தவர். துலாலக்கினம்; மகநட்சத்திரம்; சிம்ம ராசி.

1.படிப்பு:

நான்காம் இடமான கல்வி ஸ்தானத்தில் மாந்தி. படிப்புக்குத்தடை.நான்காம் இட அதிபதி சனி பகவான் 3ல்.குருவின் இடத்தில் சனி கேதுவின் காலில். எனவே மத சம்பந்தப்பட்ட படிப்பு இருக்கலாம்.நாலாம் இடத்திற்கு நாலாம் இடம் செவ்வாயின் மேஷம். செவ்வாய் லக்கின பாவத்தில்.சூரிய பகவனால் அஸ்தங்கதம்.இதுவும் படிப்புக்குத்தடை.படிப்புக்காலத்தில் 24 வயது வரை சுக்கிரதசா. படிப்பைவிட கலை.காதல்,உலக இன்பங்களில் அதிக ஈடுபாடு. எனவே படிப்புத் தடைப்பட்டிருக்கலாம்.சதுர்தாம்சத்திலும் நான்காம் இடத்திற்கான செவ்வாய் உச்சம் பெற்றாலும் மீண்டும் சூரியனால் அஸ்தங்கதம்.நான்கிற்கு நான்காம் இடமான கடகத்தில் மாந்தி. மீண்டும் படிப்புத்தடை.அஷ்டவர்கத்தில் நான்காம் அதிபதி சனிக்கு மட்டுமே மிகக் குறைந்த சுய வர்கபரல்.2/8.சனி அம்ர்ந்த 3க்கு 22 பரல்தான்.பாவாதிபலன் நான்காம் இடத்திற்கு தரவரிசை10/12.எனவே ஜாதகி பள்ளிப்படிப்பில் சிறந்து விளங்கியிருப்பது துர்லபமே.10 வகுப்பு தாண்டியிருப்பது சந்தேகமே. ஆனால் கலை,ஓவியம், நாட்டியம், இசை, கதை சொல்லுதல், எழுதுதல் என்று தானாகவெ முயன்று புகழும் பெற்று இருக்க் வாய்ப்புக்கள் உண்டு.

படிக்காத மேதையாக இருக்ககூடும்.

2.வேலை:

பத்தாம் அதிபன் சந்திரன் 11 சர்வ‌லாபத்தில், லக்னாதிபதியுடன் கூட அமர்ந்துள்ளார்.இருவருக்குமே சுயவர்கத்தில் சிறப்பான பரல் பெற்றுள்ளனர்.
ச‌ந்:6/8 சுக்:7/8; பத்தாம் இட‌த்திற்கும் 32 பரல்கள். 11ம் இடத்திற்கு 38 பரல்கள்.எனவே சுயமான முயற்சியால் பலருக்கும் வேலை கொடுக்கும் நிலையில் ஜாதகி இருக்கலாம்.கர்மகாரகனான் சனி குறைந்த சுயவர்கபரலில் இருப்பதால் மாதசம்பளம் வாங்கும் வேலை எதுவும் இருக்க வாய்ப்புக்கள் குறைவு.வீட்டில் இருந்தபடியே பலருக்கும் கலைகள் கற்பித்தல், மதபோதனை செய்தல், சோதிடம் சொல்லுதல் போன்று சம்பாதிக்கக்கூடும்.

3.திருமணம்:
7ம் அதிபன் செவ்வாய் சூரியனால் அஸ்தஙதம்.பெண்களுக்கு செவ்வாயை களத்திரகாரகனாகப் பார்க்கும் ஒரு முறை உண்டு.அதன்படி செவ்வாய் அஸ்தங்கதம் என்பதால் திருமண வாழ்க்கை பாதிப்பு.

சந்திரனும் சுக்கிரனும் சேர்ந்தால் காதல், காமம் என்று பாதை மாறிவிடும்.
திருமணத்திற்கு முன்பே காதல் சாகசம்;அத‌னால் கெட்ட பெயர்.முன்பே கூறியபடி சுக்கிரன், சந்திரன் அதிக சுயவர்கபரல். எனவே திருமணத்திற்கு முன்பே வீட்டைவிட்டு வெளியேறி உல்லாசமாக வாழ்ந்திருக்கலாம்.

நவாம்சத்திலும் உச்ச சந்திரன், சுக்கிரனுக்கு நேர்பார்வை. 4 முதல் 24 வயதுவரை சுக்கிரதசா. இளமைக் கொண்டாட்டங்களுக்குக் குறைவில்லை.

எனவே திருமணம் ஆகியிருந்தாலும் இந்தக் காரணங்களால் திருமண முறிவு ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால் கஜகேசரி யோகம் உள்ள ஜாதகம். எனவே மேலே சொன்ன எல்லா வற்றையும் புறந்தள்ளி நன்றாக இருக்க வாய்ப்பு உண்டு.படிப்பு, வேலை, திருமணம் ஆகியவற்றில் உள்ள எதிர்மறைகளை கஜகேசரி யோகம் சரி செய்து என் கணிப்புக்களைப் பொய்யும் ஆக்கலாம்.

Kaven said...

ஜாதகி படிக்காதவர் - நான்காம் அதிபதி சனி அதற்கு பண்ணிரண்டாம் வீட்டில் (3 ஆம் வீட்டில்)
அவர் சொந்த தொழில் பார்ப்பவர் - லக்கினம் 11ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை மற்றும் பாத்தாம் அதிபதி 11ல்.
அவர் திருமணம் ஆனவர் - ஏழாம் அதிபதி லக்கினத்த்தில், குரு செவ்வாயின் (நட்பு) வீட்டில்

C.Senthil said...

Dear Ayya,
1)Maanthi in 4th house so i guessed she has not went to school bcos 4th house is a lead of education,properties and mother.
2)10th house lord is moon, he is in 11th place with venus. Leo place is enemy house for venu.
3)she got married.bcos guru sight has placed on 7th house

C Jeevanantham said...

Dear sir,

4th lord saturn in 3rd. Hence she may not be studied proper.

10th lord moon is in 11th. Hence she will be in job.

7th lord mars in lagna. Raghu also in 12th place. 2nd lord mars in 12th. Hence there may be problems in family life. She may be living alone.

Thanking you.

sundari said...

வாத்தியார் வணக்கம்
1. திருமணம் ஆகாதவர் இவருக்கு லக்னத்தில் பரம எதிரியான சூரியன் நீசமாகியிருக்கிறார் மேலும் 7ம் அதிபதி செவ்வாய் கூட்டாணியாயிருகிறார் மேலும் குடும்ப ஸ்தானத்தில் விரைய மற்றும் 3,6ஆம் அதிபதி குரு கூட்டாணியிலிருக்கிறார்கள் மேலும் ராகு கேது பிடியில் இந்த லக்னதிலிருந்து 5ஆம் வீடுவரை மாட்டிகொண்டுயிருகிறது மேலும் 7ஆம் வீடிருந்து 11ஆம் வீடுவரை ராகு கேது பிடித்து கொண்டிருக்கிறது.சந்திரன் சுக்கிரன் காதலிக்கும் வாய்ப்பை ரொம்ப கொடுத்திருக்கும்.

2.இந்த சகோதரி வேலையில் இருப்பவர்,

3. இவர் உயர் கல்வி பயின்றவர். 2ல் புதனும் குருவும் இருக்கிறார்கள்

ezhil said...

dear sir,

This jathaki must have finished Under Graduation,
Will be working women.
may be born in oct, 1987.
thanks and regards
Ezhil

Ramanan said...

வணக்கம் ஐயா
இந்த அறிவு தங்களிடம் இருந்து கற்றது. தவறு இருந்தால் மன்னிக்கவும்.

1.ஜாதகி ஆரம்ப கல்வி கற்று பிறகு படிப்பை விட்டவராக இருப்பார்கள். இரண்டில் குரு உடன் புதன் சேர்ந்ததாலஆரம்பக்கல்வி நடந்திருகல்லாம்.

மேற் படிப்புக்கு 4ம் இடம். அது சனிக்கு உரிய இடம்..ஆனால் அவர் அந்த வீட்டில் இருந்து 12 ல் மறைகிறார் இதனால் மேற்படிப்பு இருக்காது.

2.இவர் home maker காரணம் பத்தாம் அதிபதி எட்டாம் அதிபதியுடன் கூட்டணி. இருவரும் சேந்து லாப ஸ்தானத்தில்.

3.கல்யாணம் நடந்திருக்க வாய்பு இருக்கிறது. ஏழாம் அதிபன் அந்த வீட்டில் இருந்து ஏழாம் வீடு. மற்றும் சுக்ரன் -சூரியன் பரிவர்த்தனை..நல்ல கணவன் அமையும் வாய்ப்பு


நன்றி
ரமணன்

Subbiah Veerappan said...

1. தோழர் பாண்டியன்
2. திரு மஹேஸ்
3. நாகராஜன்
4. பழநி சண்முகம்
5. ரமணன்
ஆகிய ஐவரும் கேட்கப்பெற்ற மூன்று கேள்விகளுக்கும் சரியான பதில்களை எழுதியுள்ளார்கள். அவர்களுக்குப் பாராட்டுக்கள்

பெரும்பாலானவர்கள் இரண்டு கேள்விகளுக்கான பதில்களைச் சரியாக எழுதியுள்ளார்கள் அவர்களுக்கும் பாராட்டுக்கள்

கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்

மேல் விவரங்களுக்கு (அதாவது விளக்கங்களுக்கு) 4.9.2013 பதிவைப் பார்க்க வேண்டுகிறேன்

அன்புடன்
வாத்தியார்