மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

Well said

Well said
Varahamihiram, The Great

Galaxy2007 Class

Galaxy2007 Class
Classroom for Advanced Lessons

Galaxy 2007 Class -Advanced Lessons

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

இரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன!

Galaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.

அந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

வந்தவர்களின் எண்ணிக்கை

11.9.13

Astrology: Quiz புதிர் - பகுதி 7 வித்தியாசமான கேள்விகளுடன்

 
Astrology: Quiz புதிர் - பகுதி 7 வித்தியாசமான கேள்விகளுடன்

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி ஏழு

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை  வைத்துக் கேட்கப் பெற்றிருக்கும்  3 கேள்விகளுக்கும் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதை விட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்விகள்:


 மேலே உள்ள ஜாதகம் ஒரு ஆணின் ஜாதகம். பிரபலம் அல்ல! சாதாரண மனிதர்தான்!

கேள்விகள்

1. ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா?
படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? பள்ளி இறுதியாண்டு வரையிலா? அல்லது இளங்கலை பட்டப் படிப்பு வரையிலா? அல்லது  உயர்கல்வி பயின்றவரா? படிக்காதவர் என்றால் சில ஆண்டுகள் பள்ளிக்குச் சென்றவரா அல்லது மழைக்குக்கூட பள்ளிக்கூடப் பக்கம்  ஒதுங்காதவரா?

2. திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா?

3. ஜாதகர் வெளிநாடு சென்று பணி செய்ய விருப்பம் கொண்டார். அவர் விருப்பம் நிறைவேறியதா? அல்லது இல்லையா? அதாவது  ஜாதகருக்கும் கடல்கடக்கும் யோகம் உள்ளதா? அல்லது இல்லையா? அதாவது இங்கேயே குப்பை கொட்ட வேண்டியதுதானா?

எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பையும் வைத்து எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++====

29 comments:

Dallas Kannan said...

1. He is educated, at least degree holder. 8th lord sun is there, but Sukran is there and Mars is uccham and looks at his own house.
2. He is married. 7th lord is in 9th place and Guru also looks at 7th place and its lord. Will have a good wife.
3. He will work in abroad. even though 9th lord is neecham, Chanran is looking at it. Also the 12th lord has neecha panga raja yogam.

கலையரசி said...

இவருடைய பிறந்த தேதி ஏப்ரல் 16 1973 விடியல் காலை 1.47 அளவில்.(ஜகன்னாத ஹோரோ).
நல்ல தலைவனாக இருப்பார். முக்கியமாக நல்லவனாக இருப்பார்.
அதே நேரம் கோபம் உள்ளவராக , நல்ல ஆளுமை உடைய தேகத்தை கொண்டு இருப்பார். (செவ்வாய் மற்றும் நீசம் பெற்ற குரு (அவருக்கு நீச பங்க ராஜயோகத்தை கொடுத்து இருப்பார்)

1.ஜாதகர் அதிகம் படிக்க வாய்ப்பு இருந்ததாக தெரியவில்லை.
புதன் நீசம், நான்கில் எட்டுக்கு உரியவன் உச்சம் (சூரியன்).ஆனால் சுக்கிரன் இருப்பதால் கணிபொறி சம்பதமான படிப்பு படித்து இருக்கலாம்.

2.கண்டிப்பாக திருமணம் ஆகி இருக்கும். குழந்தைகள் (பெண் ஒன்று ஆண் ஒன்று) , நல்ல மனைவி ,ரசனை உள்ள வராக இருப்பார்.

3. கடல் கடந்து சென்று நிறைய பொருள் ஈட்டி இருப்பார் .(12ல் ராகு , 6 ல் கேது , இதை செய்து இருப்பார்கள் ).

Subbiah Veerappan said...

டல்லாஸ் கண்ணன் மற்றும் சகோதரி கலையரசி ஆகிய இருவரும் மூன்று கேள்விகளுக்கும் சரியான பதிலைக் காரணங்களுடன் சொல்லியுள்ளார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!
அன்புடன்
வாத்தியார்

kmr.krishnan said...

1. படிப்பு:

புதன் நீசம்.நான்காம் இடத்திற்கு 20வதே பரல். புதனுக்கு 3பரல். 8க்கு அதிபதி சூரியன் நான்காம் இடத்தில். சூரியன் சுக்கிரன் இருவரும் சுயவர்கத்தில் 3 பரல்களே.ஆயினும் லக்னத்திகு 4ம் அதிபன் செவ்வாய் 5பரலுடன் லக்னம் ஏறியது,ராசிக்கு 4ம் அதிபன் குரு 7பரலுடன் லக்கினம் ஏறியது லக்கினம் 32 பரல் பெற்றது ஆகியவை ஜாதகரை பல் இடையூறுகளுக்கு நடுவே பட்டப்படிப்புவரை கொண்டு சேர்த்திருக்கும்.மேலும் சதுர்தம்சத்தில் லக்கினாதிபதியும்,9ம் அதிபதியும்
4ல்.4ம் அதிபதி9ல். எனவே சிரமப்பட்டாவது பட்டப்படிப்பு கிடைத்திருக்கும்.

2. திருமணம்:

திருமண‌ம் ஆனவர்.7ம் அதிபன் சந்திரன் 9ல் 5 பரலுடன். குருவின் பார்வை.
7ம் இடத்திற்கு 30 பரல்.
சுக்கிரன் சூரியனால் அஸ்தஙதம் ஆனதால் திருமணத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கலாம்.

3.வெளிநாடு:

லக்கினம் மகரமானதாலும், 7க்குடையவன் சந்திரன் 9 ஏறியதாலும், 12க்குடையகுரு லக்கினம் ஏறியதலும், 12ல் ரக்ஹு நின்றதாலும் வெளிநாடு சென்று இருப்பார்.பெரும்பலும் அரபு நாடுகளாக இருக்க வாய்ப்பு உண்டு

Subbiah Veerappan said...

வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான கே.முத்துராமகிருஷ்ணன் அவர்களும் மூன்று கேள்விகளுக்கும் சரியான பதிலைக் காரணங்களுடன் சொல்லியுள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!
அன்புடன்
வாத்தியார்

Srinivasa Rajulu.M said...

Unknown said...

Sir

1. படிப்பு 8 வரை
2. மனைவி தயவில் வாழ்கை நடதுபவர்
3. வெளி நாடு வாய்பு இல்லை

நன்றி

Unknown said...

dear ayya,

Education : zero because 4th lord uchcha sevvai looks 8th lord uchcha sun. sun with enemy venus in 4th place. chandran in enemy house looked by neecha bhudhan. vidhyaakaragan guru (3rd and 12th lord neecham in 1st house ) ..so no chance for education at all.

Marriage : 7th lord in enemy house and looked by 6th lord neecha bhudhan. seventh place is looked by sevvai and neecha guru (3rd and 12th lord ) ...so no marriage.

Foriegn visit : Not possible because rasi and lagnam are not in jala rasi. 10th lord venus combusted by 8th lord sun. nineth house chandran in enemy house and looked by neecha bhudhan ....so no foreign job ...no foreign visit.

Anonymous said...

1.ஜாதகர் இளங்கலை பட்டப்படிப்பு வரையில் படித்தவர்.
கல்விகாரகன் புதன் நீச பங்கம். சமசப்தமமாக ஒன்பதாம் இடத்து
புதனும் சந்திரனும் . தன் வீட்டை தானே நீச பங்கம் ஆகிப் பார்வை இடுகிறார்.
மேலும் நாலாம் அதிபன் செவ்வாய் உச்சம். அதோடு லக்னாதிபதி
புத்தி ஸ்தானத்தில் , தன் நட்பு , யோககாரகர் வீட்டில். எனவே இவர் பிற்காலத்தில் சற்று
இடைவெளி விட்டு உயர்கல்வியும் கற்றிருப்பார். இயந்திர கல்வி.

2. திருமணமானவர். சற்று தாமதத் திருமணம். தந்தை வழியில் வரன்
அமைந்து இருக்கலாம். களத்திரத்தால் பாக்கியங்கள் உண்டு.
திருமணத் தாமதத்திற்கு சகோதரம் காரணமாக இருக்கலாம்.
களத்திரகாரகன் சுக்கிரன் தன் வீட்டைத் தானே பார்க்கிறார்.
ஏழாம் இடத்திற்கு சனி பார்வை. .

3. ஜாதகர் கடல் கடந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட
வாய்ப்பு அதிகம். 12-ல் கோதண்ட ராகு. சர லக்னம்.
வளைகுடா நாடாக இருக்கலாம்.

Kaven said...

பிறப்பு ஏப்ரல் 16, 1973 01.26 அதிகாலை
மேற்படிப்பு முடித்தவர் - நான்காம் அதிபதி லக்கினத்தில் உச்சம் + 4ஆம் வீட்டின் மேல் பார்வை. .லக்கினாதிபதி ஐந்தில் நட்பு வீட்டில்.

திருமணம் ஆனவர் - 7ஆம் அதிபதி சந்திரன் 9ல் நீசபங்கம் பெற்ற குரு பார்வையுடன். ஆனால் சனி பார்வை 7ஆம் வீட்டில் - தாமத திருமணம்

மிகவும் அதிகமாக வெளிநாடு செல்லும் மோகம் கொண்டவர். வெளிநாடு செல்ல முயற்சி செய்து ராகு திசையில் செல்ல வாய்ப்பு (12ல் ராகு) கிடைத்திருக்கும். ஆனால் வேலை தாய்நாட்டில் தான்.

redfort said...

1.Makara laknam - 4kkuriya Sevai utcham,Melum nesa banga rajajokam(Neesa gkru+utcha sevai) vidya karakar bhudhan neesam. So he is completed degree only.

2.Jathakar thirumamanavar. 7kkuriya sandran paakkiya veetil,Kalathira kaarakar sukiran 4m veetilum iruppathalalum, 7m veetai guru parppathalu tirumanam nadanthirukkum.
Sukkiran sevai manai il irupathalum pathagathipathi sevai sukkiranai paarppathalum Thirumana vaalvil piratchnai irukkum.

3.9il chandran, 9m veettkku guru paarvai,9m athipathi buthan neesam ivar veli naadu sellum kanavu nadanthirukkum. (ithanal manaiviyai pirinthiruppai sukkiranai pathagathipathi sevai paarppathal)

ravichandran said...

Respected Sir,

Answers for your questions today:

1. He has completed his school and degree education. 2nd house authority and 4th house authority are in good position and even though the authority of education is week and the same gets good planets aspect (moon)

2. He has married since 7th place is getting good aspect as well as 7th lord is in Trikona house and guru aspects. so he may have been married at his age of 32 and above.

3. He has chance to go abroad since 7th place authority is water authority and sitting in 9th house as well as 12th lord sitting in lagna.

With kind regards,
Ravichandran M.

Unknown said...

1) jadhagar nangu padithavar. in fourth house, royal grahas like sun and moon are there. house owner in lagna with guru. so well educated.
2) he is married. because eventhough utcha sevvai looking at 7th house,neecha guru is also looking at 7th house and neecha bhanga is created, thereby marriage. Further, 7th house owner is chandran, nakshtra is also chandran and chandran is in 9th house(bagya sthanam).
3) abroad chances are bright because budhan in 3rd house looking at 9th house and kethu also in budhan house and 9th house happens to be budhans house where the star lord is placed. the placement of rahu in 12th house also elevates the chances of abroad job.
IS it right, sir ?. how many marks for me ?

Palani Shanmugam said...

மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

புதிர் - பகுதி 7 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி

1. ஏப்ரல் 16, 1973 அன்று பிறந்தவர் இவர். கேந்திரத்தில் குருவும், சுக்கிரனும் இருப்பதால் இந்த ஜாதகர் மிகவும் அதிர்ஷ்டசாலி. குரு லக்கினத்தில் அமர்ந்து ஒன்பதாம் பார்வையாக சந்திரனைப் பார்ப்பதாலும், சந்திரன் ஏழாம் பார்வையாக நீச்ச புதனைப் பார்ப்பதாலும், ஜாதகரின் படிப்புக்கு தடையேற்பட வாய்ப்பில்லை. அதனால் பட்டப் படிப்பு படித்திருக்க வாய்ப்புண்டு.

2. லக்கினத்தில் உள்ள குருவும் கேந்திரத்தில் உள்ள சுக்கிரனும் திருமணத்தை நடத்தி வைத்திருப்பார்கள்.

3. செவ்வாய் மகர லக்கினத்தில் உச்சம். சூரியன் கேந்திரத்தில் உச்சம். அதனால் தலைமை ஏற்கத்தகுதியானவர். திரிகோணத்தில் ஐந்தாம் இடத்தில் உள்ள சனி நினைத்த வேலையை வாங்கித் தந்திருப்பார். ஒன்பதாம் அதிபதியை ஒன்பதாம் இடத்திலிருந்து ஜல ராசி அதிபதி சந்திரன் பார்ப்பதாலும் பன்னிரண்டாம் அதிபதி குரு லக்கினத்தில் இருந்து ஒன்பதாம் இடத்தைப் பார்ப்பதாலும் ஜாதகரின் கடல் கடந்து வெளிநாடு சென்று பணி செய்யும் விருப்பம் நிறைவேறி இருக்கும்.

Unknown said...

Respected Sir,

1.The native is not educated woul completed schooling.
Reason: bhuthikaragan bhuthan neecham. 8th lord in 4 th house not good for education.
2.The native is married.
Reason:since 7th lord in thirikonam,good placement though in paagai veedu.
3.The native would have work in abroad.
Reason : Raghu in 12th house,also 7th & 9th house related. 7th lord in 9th house.

C.Senthil said...

4-இற்கு உரியவன் லக்னத்தில் உச்சம், 4-இல் சூரியன் உச்சம், ஆகையால் ஜாதகன் நன்கு படித்தவனாக இருப்பான். 7-இற்கு உரிய சந்திரன் 9-இல் ஆகையால் திருமணம் நடந்து இருக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு இல்லை காரணம் 11-இல் மாந்தி உள்ளூர் தான்

kmr.krishnan said...

மிக்க நன்றி ஐயா!

சென்ற வாரம் கொடுத்த பெண்ணின் ஜாதகத்திலும் இரண்டு பதில்கள் மிகச் சரியாகக் கூறியிருந்தேன்.மூன்றாவது கேள்விக்குத் திட்டவட்டமாகக் கூறாததால் வெற்றியாளர் பட்டியலில் என் பெயர் வரவில்லை.சிறிது தளர்ச்சியாக இருந்தது. அதனால் இம்முறை எப்படியும் மூன்று கேள்விக்கும் சரியான பதில் கொடுக்க அதிக கவனம் செலுத்தினேன்.என் பெயரை நீங்கள் குறிப்பிட்டவுடன் பரிட்சை ரிசல்ட் பார்த்து பாஸான சிறுவனை போலத் துள்ளினேன்.


2007ல் இருந்தே வகுப்பறையைத் தொடர்ந்து வந்தாலும், பதிவு செய்து கொண்டு பின்னூட்டம் இட ஆரம்பித்தது 2009ல் ஓய்வு பெற்ற பின்னர்தான். ஆகஸ்டு 2010 தொடங்கி ஐயா எனது ஆக்கங்களை வெளியிட்டு ஊக்கம் அளித்தீர்கள்.ஜூன்2012 வரை எனது 102 ஆக்கங்கள் வகுப்பறையில் வெளியாகின‌.

வீட்டில் எட்டு பெண்களுக்கு மாப்பிள்ளை பார்த்துத் திருமண‌ம் செய்ய‌ வேண்டியிருந்தது. திருமணப் பொருத்தம் பார்க்க சோதிடர்களிடம் சென்று வந்ததில் இந்த சோதிட கணக்குகள் சிறிது வசமாகின‌.பல சோதிட நூல்களைப் புரிந்தும் புரியாமலும் கற்றேன்

பின்னர் ஐயாவின் பாடங்களைச் சிறிது சிறிதாகப் படித்ததில் ஒரு தெளிவு கிடைத்தது.படித்த நூல்களிலேயே ஐயாவின் எழுத்துதான் எளிமையும், இனிமையும், சுவாரஸ்யமும் நிறைந்தது.எனவே சோதிடம் கற்க விரும்புவோர் அனைவரும் ஐயாவின் நூல் வெளியகும் போது அவசியம் வாஙக வேண்டும்
என்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்

என் வாக்கில் புதன், சனி, வாக்கு ஸ்தனாதிபதி சூரியன். எனவே கூறுவது பலித்தது. அலுவலகத்தில் சும்மா விளையாட்டுக்குச் சொல்லப் போய் பலரும்
தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர்.இலவசம் வேறா, ஓய்வில்லாமல் பலருக்கும்
பலன் கூற ஆரம்பித்து,அதனால் பல ஜாதகங்களைப் பார்க்கவும் ஆய்வு செய்யவும் வாய்ப்புக் கிடைத்தது.இப்படிதான் என் சோதிட அறிவு வளர்ந்தது.
இன்று எனக்கே ஒரு தன்னம்பிக்கை வந்துள்ளது. அதற்கு ஐயாவின்
பங்களிப்பு விலை மதிப்பு சொல்ல முடியாதது.

நிறைய நூல்கள் படிப்பதுடன் கூட, பல ஜாதகங்களைப் பார்த்து அனுபவம் பெறுவதே முக்கியம்.இதனை இந்த மூத்த மாணவனின் ஆலோசனையாக ஏற்றுக்கொள்ள இளையவர்களை வேண்டுகிறேன்.

கே.முத்துரமகிருஷ்ணன்(லால்குடி)
kmrk1949@gmail.com

RAMADU Family said...

குரு வணக்கம்,

DOB : ஏப்ரல் 16 1973.
1. ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா?
ஜாதகர் அதிகம் படித்தவர் - 4ல் உச்ச சூரியன் மற்றும்,செவ்விக்கு பார்வை -ஏலேக்ட்ரோநிக்ஸ் அல்லது பேஷன் டிசைன் எடுத்து படித்திருப்பார்,

2. திருமணம் ஆகிருக்கும் அனால் குழந்தை பாக்கியம் கொஞ்சம் கழ்டம்தான்

3.வெளிநாட்டுக்கு பல வருடங்கள் தங்கி இருப்பார் . ராகு மற்றும் குரு இதற்க்கு உதவி இருப்பார்கள்

அன்புடன்
ரமாடு

C Jeevanantham said...

Dear Sir,

The person is studied well. because 4th lord has got utcham.

He is not married or may be married very late. because 7th lord in 9th and aspected by saturn. 7th lord is alone. there is no planet next the planet moon. So most of his life he stay alone.

He went to abroad and work.
10th lord is in 4th along with sun ucham. Placement of Raghu in 12th makes person to travel more. Sun is in ucham so he may be doing some government related works.

Thanking you sir.

Unknown said...

வணக்கம் ஐயா.

1.4ம் வீட்டில் உச்ச சூரியனுடன் சுக்கிரன்,லக்னத்தில் உச்ச நிலையில் உள்ள செவ்வாய் தன் வீட்டை தன் பார்வையில் வைத்துள்ளார்,5ம் வீடானரிசபத்திற்கு யோககாரனான சனி அமர்ந்து குருவின் பார்வையில் உள்ளார்.அவர் பட்ட மேல் படிப்பு படித்தவராக இருக்க வாய்ப்புள்ளது

2.7ம் அதிபதி சந்திரன் 9ல்,7ம்வீடு குருவின் பார்வையில் உள்ளது,ஆனால் 7ம்வீடு சனி,செவ்வாய் இருவரின்பார்வையிலும் உள்ளது,மேலும் சந்திரன் அம்ர்ந்துள்ள வீட்டின் அதிபதியும் நீச நிலையில் உள்ளார்,எனவே திருமணம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை.

3,இந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை, நீங்கள் பதில் எழுதும் போது தெரிந்துகொள்கிறேன் ஐயா. நன்றி

Sathish said...

Trying out for the first time...Please pardon me if there are mistakes

1) Mercury deblidated in 12 th house from 4th house...Education will be school level at the max

2) Mars exalted in Lagna seeing 7th house and Jupiter deblidated in lagna seeing 7th house...difficult for marriage...

3)Raghu in 12th house and Moon in 9th...Foreign possibility is high...

KJ said...

Sir, native is post graduate as sevvai aspect to fourth house where sun is uchham there.

Native is married where seventh house owner at 9 and sukran at 4 with sun.

Chandran at 9th and also magara lagna , he can go abroad and earn.

jagvettri@gmail.com said...

1. ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா?
படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? பள்ளி இறுதியாண்டு வரையிலா? அல்லது இளங்கலை பட்டப் படிப்பு வரையிலா? அல்லது உயர்கல்வி பயின்றவரா? படிக்காதவர் என்றால் சில ஆண்டுகள் பள்ளிக்குச் சென்றவரா அல்லது மழைக்குக்கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்காதவரா?
avarkuu guru mangala yogam ullathu chevvai uchham lagnathy pathi 5il ullar. Aanal 8 am athipathi suryan sukuran udan sernthulathu thadai kalviye .innum oru alasalil desigal nanraaga ullathu chandiran aduthu chevvai aduthu guru.ithu ellam irunthum buthi vendumey budhan ketu poi vittar .PADIpu varaathu aanalkandipaga pattam petrirupaar.en enral 4 am athipathi ucham.
2. திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா?
chevai laganthil irruthnaalum ,sukranudan suryan theeya graha kootani potirunthaalum. Guru mangal yogathudan laganthilirunthu lagathipathy 7am idam madrum 9am idathil ezam athipathi chandiranai
paarkirar thirumana manavar
3. ஜாதகர் வெளிநாடு சென்று பணி செய்ய விருப்பம் கொண்டார். அவர் விருப்பம் நிறைவேறியதா? அல்லது இல்லையா? அதாவது ஜாதகருக்கும் கடல்கடக்கும் யோகம் உள்ளதா? அல்லது இல்லையா? அதாவது இங்கேயே குப்பை கொட்ட வேண்டியதுதானா
12 il raghu lagnathypathi ucham povaar.

sundari said...

இவர் எஞ்ஜினியார் படிப்பு படித்தவர் லக்னத்தில் செவ்வாய் உச்சம் 4ல் சூரியன் உச்சம் இயந்திரகாரன் சனி 5ந்தில். மேலும் கன்னி ராசி 12ல் ராகு 5லிருக்கும் சனியை குரு பார்கிறார் இந்த அமைப்பு 1000 தடவை கடல் தாண்ட செய் வைக்கும் இவர் வெளியூர் சென்றார்.
திருமணம் செய்துகொண்டார். லக்னத்திற்கு 7ஆம் அதிபதி 9ல் ராசிக்கு 7ஆம் அதிபதி லகனத்தில் குரு திசை தொடக்கத்தில் ராகு தசை முடிய‌
நானு கடைசி பெஞ்சிக்கு போய் உட்கார்ந்து விட்டேன்.

Unknown said...

கல்விகாரகன் புதன் 4ம் வீட்டிற்கு 12ல் இருந்தாலும், மகர லக்னத்திற்கு யோககாரகனான சுக்கிரன் 4ம் வீட்டிலேயே இருப்பதால் கல்வி இருந்திருக்க வேண்டும். பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும்.

களத்திரகாரகன் சுக்கிரனே இந்த ஜாதகத்திற்கு யோககாரகன் ஆகிறார். 7ம் வீட்டு சந்திரன் திரிகோண பதவி அடைந்தாலும் லக்னத்தில் இருந்து குரு பகவான் 7ம் வீட்டை தனது நேரடி பார்வையில் வைத்திருக்கிறார். மேலும் 9ம் பார்வையால் 7ம் வீட்டு அதிபதி சந்திரனையும் பார்க்கிறார். ஜாதகருக்கு திருமணம் நடந்திருக்க வேண்டும்.

வெளிநாட்டு வாழ்க்கைக்கு உரிய இடம் ஒன்பதாம் வீடு. ஒன்பதாம் வீட்டிற்கு குரு பகவானின் சுப பார்வை உள்ளது. மேஷத்தில் சுக்கிரன் இருந்தால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. ஆனால் சுக்கிரனுக்கு 9ம் அதிபதி மற்றும் 7ம் அதிபதியுடன் தொடர்பு இல்லை. 7ம் அதிபதியுடன் சுக்கிரன் 6-8, 9ம் அதிபதியுடன் 2-12. ஆகவே வெளிநாடு சென்று பணி செய்திருக்க வாய்ப்பு குறைவாக தெரிகிறது.

உணர்ந்தவை! said...

Hello Sir,
Higher studies in abroad – (4th,9th and 2nd with strong/Neecha banga yoga, also Rahu dasa)
Married – Rahu-Venus dasa

Let us see.

Thanks
Satya

Subbiah Veerappan said...

Srinivasa Rajulu.M

Srinivasa Rajulu.M has left a new comment on your post "Astrology: Quiz புதிர் - பகுதி 7 வித்தியாசமான கேள்...":

1) பலமான நான்காம் இடம்; உச்சமான நான்காம் அதிபதியும் வித்யாகாரகனும் லக்கினத்தில்; இவைகள் ஜாதகர் மெத்தப் படித்தவர் என்பதை உறுதிப் படுத்துகின்றன. உச்சபலம் பெற்ற எட்டாம் அதிபதி நான்கில் நின்றாலும், யோக காரகன் (மற்றும் உயர்க்கல்வி ஸ்தானாதிபதி) வித்யாஸ்தானத்தில் நிற்பதால் (தாமதமானாலும்) உயர்க்கல்வி யோகம் உண்டு. இதுவரை இல்லையென்றால், இனியும் முயற்சி செய்ய (குருதசை சுக்கிர புத்தியில் 2014 முதல் 2017 வரை) உயர்க்கல்வி கைக் கூடும்.
2) ஏழாம் அதிபன் முக்கியமான கோணத்தில் நிறபதாலும், வளர்பிறையானதாலும், குருவின் பார்வை பெற்றதாலும் திருமண பாக்கியம் உண்டு. ஆயினும் அவர் பகைக்கிரகமான (நீச்சமான பாக்கியஸ்தானாதிபதி) புதனின் பார்வை பெற்றதாலும், பலமான பகைக்கிரகத்துடன் நின்று அஸ்தமனமாகியுள்ள களத்திர காரகனாலும், தாமத திருமணம். ராஹு தசை சுக்கிர புத்தியில் திருமணம் முடிந்திருக்கக் கூடும்.

3) வெளிநாடு சிலமுறை சென்றுவர பனிரண்டாம் இடத்தில் நிற்கும் ராகு உதவினாலும், நீச்சமான ஒன்பதாம் அதிபதியும், நீச்சமான பனிரண்டாம் அதிபதியும், மாத்ருஸ்தானத்தில் நிற்கும் பத்தாம் அதிபதியும் தாய்நாட்டு வேலைதான் என்கிறார்கள்.

தமிழ்ப் புத்தாண்டு பிறந்து இரண்டே நாட்களில் பிறந்த ஜாதகருக்கு இரண்டு கிரகங்கள் உச்சம்; இரண்டு கிரகங்கள் நீச்சம் என்றாலும் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பவர். மாந்தி பதினொன்றில் இருப்பது விசேஷம்.
-நன்றி ஐயா

Subbiah Veerappan said...

டல்லாஸ் கண்ணன்
கலையரசி
கே.முத்துராமகிருஷ்ணன்
என்.விஜயகுமார்.
ஸ்ரவாணி
எம்.ரவிச்சந்திரன்
ஜி.முரளிகிருஷ்ணா
பழநிசண்முகம்
ஜனனி முருகேசன்
ரமாடு
சி.ஜீவானந்தம்
K.J
ஜக்வெற்றி

ஆகிய பதிமூன்று பேர்களும் கேட்கப்பெற்ற மூன்று கேள்விகளுக்கும் சரியான பதில்களை எழுதியுள்ளார்கள். அவர்களுக்குப் பாராட்டுக்கள்

பெரும்பாலானவர்கள் இரண்டு கேள்விகளுக்கான பதில்களைச் சரியாக எழுதியுள்ளார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள்

கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------

Unknown said...

Oooo