மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.9.13

Astrology: ஓஹோ இதுதான் பதிலா?

 
 -------------------------------------------------------------------------------------------------------------
Astrology: ஓஹோ இதுதான் பதிலா?

நேற்றைய பதிவில் கேட்டிருந்த கேள்விகளுக்கான விடைகள்:

கேள்விகள்

1. ஜாதகி படித்தவரா அல்லது படிக்காதவரா?

ஜாதகி ஒன்பதாம் வகுப்பில் நுழைந்து எட்டிப் பார்த்ததுடன் சரி. எத்தனையோ பேர்கள் வலியுறுத்தியும், அதற்குப் பிறகு படிக்கவில்லை. ஆனால் ஜாதகி இயற்கையாகவே படு புத்திசாலி.

நான்கில் மாந்தி. நான்காம் அதிபதி சனி அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் இருவரும் சேர்ந்து படிப்பிற்கு வாய்ப்பளிக்கவில்லை. அத்துடன் குட்டிச் சுக்கிரனும் (சின்ன வயதில் வரும் சுக்கிரதிசை) சேர்ந்ததால் ஜாதகிக்குப் படிப்பில் நாட்டம் இல்லாமல் போய்விட்டது.


2. வேலையில் இருப்பவரா? அல்லது Home Makerஆ?

வேலைக்குச் செல்லவில்லை. சென்றதில்லை!

இரண்டாம் வீட்டுக்காரன் செவ்வாய் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில். அத்துடன் இரண்டாம் வீட்டில் இரண்டு பாதகர்களின் (வில்லன்களின்)  கூட்டணி (12ஆம் வீட்டுக்காரன் புதனும், ஆறாம் வீட்டுக்காரன் குருவும் அங்கே உள்ளார்கள்) சுயமாகச் சம்பாதிப்பதற்கும் கையில் காசு புரள்வதற்கும் இந்த அமைப்பு எதிரானது. அத்துடன் பத்தாம் வீட்டிற்கு ஆறில் தொழில்காரகன் சனி. பத்தாம் வீட்டுடனோ அல்லது அதன் அதிபதியுடனோ தொடர்பு இல்லாமல் அவன் ஒதுங்கிப் போய்விட்டான். இந்த அமைப்புக்களால் ஜாதகி வேலைக்குச் செல்லவில்லை. சென்றதில்லை. Home Maker மட்டுமே!


2. திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா?

திருமணமானவர். ஆனால் தாமதமான திருமணம். முப்பது வயதில்தான் திருமணம் நடைபெற்றது. அடுத்த ஆண்டிலேயே ஒரு ஆண் குழந்தையையும் ஈன்றெடுத்தார்.

ஏழாம் வீட்டுக்காரன் செவ்வாய் அந்த வீட்டிற்கு ஏழில். ஆகவே ஜாதகிக்குத் திருமணம் மறுக்கப்படவில்லை. திருமணத்தை நடத்திவைக்க வேண்டிய சுக்கிரன் பகை வீட்டில் அமர்ந்ததால் தாமதமான திருமணம். சுக்கிரனுடன் பரிவர்த்தனையான சூரியன் தன்னுடைய மகா திசையில் சுக்கிர அந்திரத்தில் திருமணத்தை நடத்திவைத்தான்.

------------------------------------------------
துலா லக்கின ஜாதகி. லக்கினாதிபதி சுக்கிரன் 11ல் இது நல்ல அமைப்பு. ஆனாலும் அது அவருக்குப் பகை வீடு. அத்துடன் அவர் அந்த வீட்டுக்காரன் சூரியனுடன் பரிவர்த்தனை. ஆனாலும் பரிவர்த்தனையான சூரியன் நீசம். ஆகவே எல்லாம் பாதி பாதியாகக் கிடைத்தது. வேண்டியது வேண்டிய அளவில் கிடைத்தது. ஜாதகி எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக இருப்பவர். இருக்கின்றவர்.
------------------------
1. தோழர் பாண்டியன்
2. திரு மஹேஸ்
3. நாகராஜன்
4. பழநி சண்முகம்
5. ரமணன்

ஆகிய ஐவரும் கேட்கப்பெற்ற மூன்று கேள்விகளுக்கும் சரியான பதில்களை எழுதியுள்ளார்கள். அவர்களுக்குப் பாராட்டுக்கள்

பெரும்பாலானவர்கள் இரண்டு கேள்விகளுக்கான பதில்களைச் சரியாக எழுதியுள்ளார்கள் அவர்களுக்கும் பாராட்டுக்கள்

கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்

அன்புடன்
வாத்தியார்

----------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

10 comments:

  1. Kalai Vanakkam Ayya,

    Ellam ungal Asirvatham.

    Nandri Ayya.

    ReplyDelete
  2. காலை வணக்கம்

    கேள்விகளுக்கு விளக்கமான பதில் தந்தமைக்கு நன்றி

    அதிலும் சரியான பதில் சொன்ன மாணவர்கள் பட்டியல் தந்தமைக்கு மிக்க நன்றி

    மிகவும் விறுவிறுப்பாக வகுப்பறை செல்கிறது !!!

    ReplyDelete
  3. Respected sir,
    Excellent teaching and gives knowledge about how to predict in a
    simple manner.
    Thanks a lot sir.
    with regards,
    k.umapathy

    ReplyDelete
  4. நல்ல பயிற்சி
    நல் வாழ்த்துக்கள்..

    காலாண்டு தேர்வு முடிந்தவுடன்
    லீவு உண்டா? (ஹி-.ஹி)

    ReplyDelete
  5. Guruji,
    This session is really good. I feel now only i have started learning real astrology with a great Master.
    Expecting at least 20 different lessons like this.
    Thank you sir.

    ReplyDelete
  6. ////Blogger Thiru Mahes said...
    Kalai Vanakkam Ayya,
    Ellam ungal Asirvatham.
    Nandri Ayya.////

    எல்லாம் இறையருள் என்று சொல்லுங்கள் - எனக்கும் சேர்த்துத்தான்!

    ReplyDelete
  7. ////Blogger Sattur Karthi said...
    காலை வணக்கம்
    கேள்விகளுக்கு விளக்கமான பதில் தந்தமைக்கு நன்றி
    அதிலும் சரியான பதில் சொன்ன மாணவர்கள் பட்டியல் தந்தமைக்கு மிக்க நன்றி
    மிகவும் விறுவிறுப்பாக வகுப்பறை செல்கிறது !!!////

    விறுவிறுப்போடு சுவாரசியமும் முக்கியம். சரிதானே?

    ReplyDelete
  8. ////Blogger k.umapathy said...
    Respected sir,
    Excellent teaching and gives knowledge about how to predict in a
    simple manner.
    Thanks a lot sir.
    with regards,
    k.umapathy////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி. தொடர்ந்து படித்துக்கொண்டு வாருங்கள் அன்பரே! எல்லாம் உங்களைப் போன்றவர்களுக்காகத்தான்!

    ReplyDelete
  9. ////Blogger வேப்பிலை said...
    நல்ல பயிற்சி
    நல் வாழ்த்துக்கள்..
    காலாண்டு தேர்வு முடிந்தவுடன்
    லீவு உண்டா? (ஹி-.ஹி)/////

    எத்தனை தினங்கள் வேண்டும்? சொல்லுங்கள்! செய்து விடலாம்!

    ReplyDelete
  10. ////Blogger Ramkumar KG said...
    Guruji,
    This session is really good. I feel now only i have started learning real astrology with a great Master.
    Expecting at least 20 different lessons like this.
    Thank you sir.////

    நல்லது. நன்றி உங்கள் விருப்பம் நிறைவேறும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com