மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.9.13

Astrology: Quiz புதிர் - பகுதி 10

 
Astrology: Quiz புதிர் - பகுதி 10

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி பத்து

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer
என்ன Okayaயா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?



நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

க்ளூ வேண்டுமா?

ஜாதகர் இந்தியர். மக்கள் அறிந்த பிரபலம் (ஒரு வழியில்)

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

41 comments:

  1. இந்த ஜாதகத்திற்குரியவர் காந்தியடிகளை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே. பிறந்தது 19 மே 1910 காலை சுமார் 8.15 மணிக்கு.

    ReplyDelete
  2. Hello Sir,

    Nathuram Godse -He is the person

    ReplyDelete
  3. NATHURAM GODSE BORN ON 19 MAY 2010

    ASSASSIN OF MAHATHMA GANDHIJI

    ReplyDelete
  4. அனைவருக்கும் அதிகாலை வணக்கம். KMRK, தோழர் பாண்டியன், உணர்ந்தவை ஆகிய மூன்று பேர்களும் சரியான விடையை எழுதியுள்ளார்கள். அவர்களுடைய பின்னூட்டங்கள் நாளை காலை வெளியாகும். மூவருக்கும் அடியேனுடைய பாராட்டுக்கள்!அனைவருக்கும் வாய்ப்புத்தர வேண்டாமா? அதனால் விடை தெரியாதவர்கள் நாளை அதிகாலை வரை பொறுத்திருங்கள்!

    அன்புடன்
    வாத்தியார்
    4:53 AM

    ReplyDelete
  5. எனக்கும் பல இளைஞர்கள்/நடு வயதுக்காரர்கள் சுய ஜாதகத்தை வைத்து எழுதுகிறார்கள்.

    விசித்திரமான கேள்விகள் கேட்பார்கள்.பொதுவாக இளைஞர்கள் கேட்கும் கேள்விகளில் கீழ்க்கண்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு அறிய ஆசைப்படுகிறார்கள்.

    1."எனக்கு லவ் மேரேஜா அர்ரேஞ்சுடு மேரேஜா?"
    2 "லவ் மேரேஜ் என்றால் என் காதலியை எப்போது, எங்கே சந்திப்பேன்?"
    (இந்தக்கேள்விகள் 12 வயது மாணவனிடமும் இருந்து கூட வந்தது.)
    3. "நான் ஒரு பெண்ணுடன் கடந்த 4 வருடங்களாக லிவ் டுகெதெரில் இருக்கிறேன்.இப்போது அவள் கர்பமாக இருப்பாளோ என்று சந்தேகமாக் இருகிறது.திருமணம் செய்யச் சொல்லி அழுத்தம் கொடுக்கிறாள். எங்க‌ள் ஜாதகம் பொருந்துகிறதா"என்று அவசரமாகச்சொல்லவும்.
    4."எனது ஜாதகத்தில் 5ம் இட்த்தில் ராகு/கேது/சனி உள்ளார்.எனக்கு குழந்தை பிறக்குமா?"(கேட்டவர்களில் 20 வயது பிரமச்சாரியும் ஒருவர்)
    5."என் மகள் வேற்று ஜாதி/மத இளைஞனை காதலிக்கிறாள்.எங்களுக்கு அவள்
    விரும்பும் பையனைப் பிடிக்கவில்லை. என்ன பரிகாரம் செய்தால் அவள் மனம் மாறுவாள்? எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை"
    5. "என் 'இன்லாஸ்' என்னைப் படுத்துகிறார்கள்.எப்போது என் எம்ஐஎல் காலம் முடியும்?"
    6."அமெரிக்காவில் 12 வருடமாக இருக்கிறோம். தற்சமயம் வேலை போய் ஒரு வருடமாக கடனில் மூழ்கிவிட்டோம்.தாய் நாடு திரும்பலாமா? அல்லது இங்கேயே இருக்கலாமா?"
    7."மனைவி/கணவன் மீது சந்தேகமாக‌ உள்ளது. ஜாதகப்படி அவர்/அவள் அப்படித்தானா?"
    8."பையன் (16 வயது) படிக்க மாட்டேன் என்கிறான்.அவன் எதிர்கால‌ம் என்ன?"
    9."என் தாய்/தந்தை/மாம‌னார்/ மாமியார் நீண்ட நாட்களாக படுக்கையில் உள்ளார்கள். எனக்கு ஒய்வில்லாமல் அவர்களையே பார்க்க வேண்டியுள்ளது. எப்போது எனக்கு ரிலீஃப்?(அதாவது எப்போது கிழம் சாகும்?)"
    10."பக்கத்து வீட்டுக்காரன் சதா சண்டை போடுகிறான். அவனைக் கிளப்ப ஏதாவது பரிகார பூஜை சொல்லுங்களேன்."
    11. "சொத்துக்கள் பிரித்து மகன் மகளுக்குக் கொடுக்க வேண்டும்.ஆகவே என் ஆயுளைக் கூறவும்."

    இன்னும் பல உண்டு.
    kmrk1949@gmail.com

    ReplyDelete
  6. மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  7. மகாத்மா காந்தியைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியவர்கள், ஒரு குழுப் புகைபடம் எடுத்துக் கொண்டார்கள்.

    அதில் நடுவில் அமர்ந்திருந்தவர் யார் தெரியுமா? 1910ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி பூனாவின் பரமதியில் பிறந்த நாதுராம் வினாயகராவ் கோட்சே. இவருடைய இந்த மன்னிக்க முடியாத குற்றத்திற்காக அவரது 39ஆம் வயதில் தூக்கில் இடப்பட்டார்.
    -நன்றி
    ஸ்ரீனிவாச ராஜுலு

    ReplyDelete
  8. ////Blogger kmr.krishnan said...
    எனக்கும் பல இளைஞர்கள்/நடு வயதுக்காரர்கள் சுய ஜாதகத்தை வைத்து எழுதுகிறார்கள்.
    விசித்திரமான கேள்விகள் கேட்பார்கள்.பொதுவாக இளைஞர்கள் கேட்கும் கேள்விகளில் கீழ்க்கண்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு அறிய ஆசைப்படுகிறார்கள்.
    1."எனக்கு லவ் மேரேஜா அர்ரேஞ்சுடு மேரேஜா?"
    2 "லவ் மேரேஜ் என்றால் என் காதலியை எப்போது, எங்கே சந்திப்பேன்?"
    (இந்தக்கேள்விகள் 12 வயது மாணவனிடமும் இருந்து கூட வந்தது.)
    3. "நான் ஒரு பெண்ணுடன் கடந்த 4 வருடங்களாக லிவ் டுகெதெரில் இருக்கிறேன்.இப்போது அவள் கர்பமாக இருப்பாளோ என்று சந்தேகமாக் இருகிறது.திருமணம் செய்யச் சொல்லி அழுத்தம் கொடுக்கிறாள். எங்க‌ள் ஜாதகம் பொருந்துகிறதா"என்று அவசரமாகச்சொல்லவும்.
    4."எனது ஜாதகத்தில் 5ம் இட்த்தில் ராகு/கேது/சனி உள்ளார்.எனக்கு குழந்தை பிறக்குமா?"(கேட்டவர்களில் 20 வயது பிரமச்சாரியும் ஒருவர்)
    5."என் மகள் வேற்று ஜாதி/மத இளைஞனை காதலிக்கிறாள்.எங்களுக்கு அவள்
    விரும்பும் பையனைப் பிடிக்கவில்லை. என்ன பரிகாரம் செய்தால் அவள் மனம் மாறுவாள்? எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை"
    5. "என் 'இன்லாஸ்' என்னைப் படுத்துகிறார்கள்.எப்போது என் எம்ஐஎல் காலம் முடியும்?"
    6."அமெரிக்காவில் 12 வருடமாக இருக்கிறோம். தற்சமயம் வேலை போய் ஒரு வருடமாக கடனில் மூழ்கிவிட்டோம்.தாய் நாடு திரும்பலாமா? அல்லது இங்கேயே இருக்கலாமா?"
    7."மனைவி/கணவன் மீது சந்தேகமாக‌ உள்ளது. ஜாதகப்படி அவர்/அவள் அப்படித்தானா?"
    8."பையன் (16 வயது) படிக்க மாட்டேன் என்கிறான்.அவன் எதிர்கால‌ம் என்ன?"
    9."என் தாய்/தந்தை/மாம‌னார்/ மாமியார் நீண்ட நாட்களாக படுக்கையில் உள்ளார்கள். எனக்கு ஒய்வில்லாமல் அவர்களையே பார்க்க வேண்டியுள்ளது. எப்போது எனக்கு ரிலீஃப்?(அதாவது எப்போது கிழம் சாகும்?)"
    10."பக்கத்து வீட்டுக்காரன் சதா சண்டை போடுகிறான். அவனைக் கிளப்ப ஏதாவது பரிகார பூஜை சொல்லுங்களேன்."
    11. "சொத்துக்கள் பிரித்து மகன் மகளுக்குக் கொடுக்க வேண்டும்.ஆகவே என் ஆயுளைக் கூறவும்."
    இன்னும் பல உண்டு.
    kmrk1949@gmail.com//////

    சராசரியாகத் தினமும் இது போன்று 30 மின்னஞ்சல்கள் எனக்கு வரும். அதில் சில சுவாரசியமாக இருக்கும்:

    பெங்களூரில், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் இளம் பெண் ஒருத்தி தன்னுடைய பிறப்பு விவரங்களையும், தன்னுடைய காதலனின் பிறப்பு விவரத்தையும் எனக்கு அனுப்பி, 3 வருடங்களாகக் காதலிப்பதாகவும், இருவருக்கும் பொருத்தம் உள்ளதா? எப்போது தங்களின் திருமணம் நடைபெறும் என்று கேட்டு எழுதியிருந்தாள்

    நான் இப்படிப் பதில் எழுதியிருந்தேன்:

    ”3 வருடங்களாகக் காதலில் மாய்ந்துவிட்டு, இப்போது இந்தக் கருமத்தை எல்லாம் எதற்காகப் பார்க்கிறாய் பெண்ணே! பேசாமல் அவனையே திருமணம் செய்து கொள். காதல் புனிதமானது. ஒரு வாரம் அல்லது ஒரு வருடம் அல்லது பத்து, இருபது, முப்பது ஆண்டுகள் வாழந்தாலும் அந்த வாழ்க்கை ரம்மியமானது! அதைவிட்டு, ஜாதகத்தைப் பார்த்து, அதில் உள்ள அவனின் குறை தெரிந்து, பொருத்தம் இல்லை என்றால் என்ன செய்வாய்? அவனைக் கழற்றி விட்டு விடுவாயா? இல்லை அவன்தான் உன்னை விட்டு விடுவானா? அவனிடம் எத்தனை பிடிமானங்கள் உள்ளதோ - யாருக்குத் தெரியும். ஆகவே அவனையே மணந்து கொள். காதலிப்பதற்கு முன்பாக இதை எல்லாம் யோசித்திருக்க வேண்டும். பார்த்திருக்க வேண்டும். இப்போது பார்த்து என்ன பிரயோஜனம்?”

    அவள் உடனே பதில் எழுதினாள்:

    “சார், அவனைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. திருமணத்திற்குப் பிறகு அவன் முரண்டு பிடித்தால், மகளிர் காவல் நிலையத்தில் அவனைக் கொண்டுபோய் நிறுத்தி, முட்டிக்கு முட்டி தட்டி, அவனை வழிக்குக் கொண்டு வந்து விடுவேன். என் பிரச்சினை எல்லாம், என் பெற்றோர்கள் அவனை ஒப்புக்கொள்வார்களா? திருமணம் முறைப்படி நடக்குமா என்பதுதான்? அதை மட்டும் பார்த்துச் சொல்லுங்கள் ப்ளீஸ்!!!!!!”

    எப்படி இருக்கிறது?

    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  9. நாதுராம் கோட்சே

    ReplyDelete
  10. Respected Sir,
    This horoscope belongs to Nathuram Godse.

    DOB: 19th may 1910.
    Birth time: 9 AM approx.

    ReplyDelete
  11. நதுராம் கோட்சே

    ReplyDelete
  12. கேள்விகள் எப்படி கேட்க வேண்டும் என
    கேட்டுக் கொள்ள ஒரு வகுப்பு வருமா?

    என்ன கேட்க வேண்டும்
    என்பதற்கு தோழர் லால்குடியார்

    ஆலோசனைகள் தந்தால்
    அனைவரும் அதனை ஓரளவாவது

    பின்பற்றலாம் அல்லவா?
    பதிலும் பதிவும் வருமா?

    அது சரி..
    அந்த கேள்விகள் பற்றி

    எதற்கு இத்தனை பெரிய "பீடி-கை"
    என்ன செய்வது

    அவரவர் மனநிலை
    அப்படியிருக்க யாரை குறை சொல்ல

    ReplyDelete
  13. வணக்கம் ஐயா,

    19/5/1910,காலை7.50, மகாத்மாவை கொன்ற கோட்சேவின் ஜாதகம், நன்றி ஐயா.

    ReplyDelete
  14. Vanakam Ayya ,
    Gandhiryai kadavulakiya
    buthinathanum ,lagnathipathyum
    12 il maraintha
    Nathuram godse
    with regards
    Jagadesh

    ReplyDelete
  15. Nathuram Godse who assassinated Mahatma Gandhi

    ReplyDelete
  16. Guru Vanakkam,

    19th May 1910 - Nathuram Godse.

    RAMADU

    ReplyDelete
  17. Enakku nalla theriyum sir ithu en jadhakam alla.

    ReplyDelete
  18. it is the horoscope of Nathuram Godse born on 19.05.1910

    AMG

    ReplyDelete
  19. திரு KMRK அய்யா அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கு வந்த கேள்விகளை பார்த்தால் மிகவும் விநோதமாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. ஆக, தங்களின் ஒய்வு காலத்தில் தங்களுக்கு பொழுது மிகவும் சுவாரஷ்யமாகவே போய்கொண்டிருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    கோ.நந்தகோபால்

    ReplyDelete
  20. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் - பகுதி 10 இல் கொடுத்துள்ள ஜாதகத்தை அலசியபோது, பிறந்த தேதி
    19.05.1910 அன்று காலை 8.30 என்று வந்தது. கூகுளில் தேடிய போது கிடைத்த விபரம்; இந்த ஜாதகர், நமது தேசத்தந்தை மஹாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே.

    ReplyDelete
  21. Respected Sir,

    My answer for our today's Quiz No.10:-

    Date of Birth : 19.05.2010
    Time of Birth : 07:30 to 8 am
    Place of Birth: Baramati, Pune dist. Maharastra.

    Name of Native: Nathuram Godse

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  22. ayya,

    DOB: 19 May 1910

    Time: 08:29

    Place Delhi, India

    Name :Godse, Nathuram



    ReplyDelete
  23. SIR
    answer is Nathuram Godse DOB: 19/05/1910 TIME 8 AM
    BY N.VIJAYAKUMAR

    ReplyDelete
  24. Dear Sir,

    This person was born on 19th May 1910 sometime between 08:50 AM and 09:10 AM.

    I did a search on this date and found a match - Naturam Godse.

    Thank you,

    M. Elayaraja.

    ReplyDelete
  25. may 19, 1910 - nathuram godse's horoscope, the person who assassinated mahathma gandhi. right, sir ?

    ReplyDelete
  26. மதிப்பிற்குரிய ஐயா, தாங்கள் கொடுத்துள்ள ஜாதகத்திற்குச் சொந்தக்காரர் திரு.நாதுராம் வினாயக் கோட்சே.
    பிறப்பு விபரம்:
    1910 மே 19 காலை 8.28 புனேயில். உத்திராடம் 4ம் பாதம்.

    ReplyDelete
  27. Jathakar -Nathuram Godse
    Dob -19-may-1910 ,08.29 am
    Place -Baramathi,Pune district.

    Thannudaiya guru disai sani puthiyil Gandhi yai suttu kondaran.
    Laknathipathi 12il maraivu veetil athanal avan vaalkkai avanakku payan padvillai

    ReplyDelete
  28. the given horoscope is that of astrologer nathuram godse born on 19th may 1910.

    ReplyDelete
  29. The Name of the Person is : Nathuram Godse
    Place of Birth is : Baramati, Pune District, Bombay .

    ReplyDelete
  30. ayya.....the answer is Nathuram Godse
    assasin of Mahathma Gandhiji

    date of birth : 19th may 1910

    ReplyDelete
  31. Nathuram Godse

    Born - 19 May 1910 (http://en.wikipedia.org/wiki/Nathuram_Godse)

    ReplyDelete
  32. அது நாதுராம் கோட்சேயின் ஜாதகம். DOB : 19/05/1910 - TOB - 8.30 am POB - POB - Baramathi அஷ்டமாதிபதியும் ஆயுள் காரகனுமான சனி நீசம் என்பது கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  33. ஐயா...

    அந்த பிரபலத்தின் பெயர் நாதுராம் வினாயக்ராவ் கோட்சே.

    ReplyDelete
  34. புதிருக்கான சரியான விடை:

    நாதுராம் கோட்சே. 19.5.1910ல் பிறந்தவன்.பிறந்த நேரம் காலை 8:30. பிறந்த இடம் பூனாவிற்கு அருகில் உள்ள பாராமதி என்னும் கிராமம்.

    சரியான விடையை சுமார் 50 பேர்கள் எழுதியுள்ளார்கள். மின்னஞ்சலில் எழுதியவர்களையும் சேர்த்துச் சொல்கிறேன்.அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

    இந்த எண்ணிக்கை 100 ஆக வேண்டும் அதுவரை இந்தப் பயிற்சி வகுப்புத் தொடரும்!

    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com