மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.2.13

சாகப்போகும்போது என்னடா செய்தான் அவன்?

சாகப்போகும்போது என்னடா செய்தான் அவன்?

ஒரு பெரும் செல்வந்தர் இருந்தார். கோடிக்கணக்கில் சொத்து. பல இடங்களில் தோட்டங்கள் பண்ணைகள்.

அவருக்கு 48 வயதில் உடல் நலமில்லாமல் போய் விட்டது. செலவழித்து வைத்தியம் பார்த்தும் பயனில்லாமல் போய் விட்டது. ஜாதகத்தைப் பார்த்த இரண்டொரு ஜோதிடர்களும் நீங்கள் ஐம்பது வயதைத் தாண்டுவது கஷ்டம் என்று சொல்லிவிட்டார்கள்.

உடனே அந்த மனிதர் ஒரு முடிவிற்கு வந்து, அதைச் செய்ல படுத்தும் முனைப்பில், உயில் ஒன்றை எழுதி அதைப் பதிவு செய்தும் வைத்து விட்டார். அத்துடன் அதன் பிரதியை தன் நண்பர்கள் இருவரிடம்  (in closed cover) கொடுத்து விட்டார்

எதிர் பார்த்தபடியே அடுத்து வந்த ஆறாவது மாதம் மனிதர் காலமாகி விட்டார்.

அதற்குப் பிறகு என்ன ஆனது?

இப்போது அது முக்கியமில்லை.

மனிதர் உயிலில் என்ன எழுதியிருந்தார்?

வாருங்கள், அதைப் பார்ப்போம்!

இருபத்தைந்து பக்க உயிலில் இருந்த முக்கியமான சாராம்சங்கள்:

1. என் மனைவி கோமதிக்கு நகைகளின் மேல் தீராத காதல். அவளுக்கு என் லாக்கரில் உள்ள பணத்தில் இருந்து இரண்டு கோடி ரூபாய்களை எடுத்து சென்னையில் உள்ள பெரிய நகைக் கடையில் கொடுத்து, அவள் விரும்பும் நகைகளை அந்தப் பணத்தின் மூலம் வாங்கிக் கொடுக்க வேண்டியது. அந்தப் பணத்தை வேறு எந்தக் காரியத்திற்கும் பயன் படுத்தக் கூடாது. அத்துடன் அடையாறில் உள்ள பெரிய வீட்டை அவளுடைய பயன் பாட்டிற்குக்
கொடுத்து விட வேண்டியது!

2. என் மகள் மஞ்சுளாவிற்கு உடைகள் மேல் நீராத பற்று. அவளுக்கு என் லாக்கரில் உள்ள பணத்தில்  இருந்து இரண்டு கோடி ரூபாய்களை எடுத்துக் கொடுத்து சென்னை பனகல் பார்க்க அருகில் உள்ள பெரிய, பெரிய துணிக் கடைகளில், அவள் விரும்பும் வண்ணத்திற்கு ஆடைகளாக எடுத்துக்
கொடுத்துவிட வேண்டியது. அந்தப் பணத்தை வேறு எதற்கும் பயன் படுத்தக்கூடாது.

3. என் மகன் பாலாஜிக்கு, கார்களின் மேல் தீராத மோகம். அவனுக்கு, என் லாக்கரில் உள்ள பணத்தில்  இருந்து இரண்டு கோடி ரூபாய்களை எடுத்துக் கொடுத்து Benz, BMW, Volkswagen Beetle, Nisan Teena, Toyota Land cruiser, போன்று சந்தையில் உள்ள Luxury Car களில் நான்கை வாங்கிக் கொடுத்து விட வேண்டியது. அத்துடன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டையும்
அவனுக்குக் கொடுத்துவிட வேண்டியது.

4. என் மைத்துன ராமசாமி எப்போது பார்த்தாலும் “மனிதனுக்கு ஆரோக்கியம் மட்டுமே தேவை. பணம் முக்கியமில்லை - health is better than wealth!”  என்று சொல்லிக்கொண்டிருப்பான். அவனுக்கு உடற்பயிற்சிக்கு உதவும் treadmill ஒன்றை வாங்கிக் கொடுத்து விடவும். ஐம்பதாயிரம் ரூபாய்க்கு நல்ல treadmill கிடைக்கும். அதற்குத் தேவையான ஐம்பதாயிரம் ரூபாயை என் லாக்கரில் உள்ள பணத்தில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது!

5. இது தவிர உள்ள எனது சொத்துக்கள் அனைத்தையும், வங்கி டெபாஸிட்டுக்கள் உட்பட, தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களுக்குக் (Library) கொடுத்து விட வேண்டியது. அதன் மதிப்பு சுமார் ஆயிரம் கோடிகளுக்கு மேல் தேறும். அதை வேறு எந்தக் காரியத்திற்கும் பயன் படுத்தக்கூடாது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இறக்குமதிச் சரக்கு. மொழியாக்கம் மட்டும் அடியவனுடையது!


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15 comments:

  1. Good moral story.Thank you,Sir.

    When we pray to God we should say " Give me whatever you think fit for me. If we ask a specific thing God will stop with that.If the choice is given to God he will give in abundance.

    ReplyDelete
  2. இப்படி அவர் செய்வாரா..?
    இருக்கட்டும் கதை தானே..

    அது சரி..
    அவர் பதவியை யாருக்கு கொடுத்தார்?

    பொது சொத்தில் நூலகம் அமைத்து
    பெத்ததுக்கு சொத்து எழுதுமவருக்கு

    இப்பவே எதுவும் கிடைக்காத இவருக்கு செத்தபிறகு கிடைப்பதென்ன?

    அவரை குறித்து எழுந்த பதிவென
    அப்படியே விடுகிறோம்

    வழக்கம் போல்
    வலமாக சுழல விடும் பாடல்

    கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
    அவன் யாருக்காகக் கொடுத்தான்?

    ஒருத்தருக்கா கொடுத்தான் -
    இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

    மண்குடிசை வாசலென்றால்
    தென்றல்வர வெறுத்திடுமா?

    மாலைநிலா ஏழையென்றால்
    வெளிச்சம்தர மறுத்திடுமா?

    உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
    ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை!

    படைத்தவன்மேல் பழியுமில்லை
    பசித்தவன்மேல் பாவமில்லை

    கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார்
    உழைத்தவர்கள் தெருவில் நின்றார்

    பலர் வாட வாட சிலர் வாழ வாழ
    ஒருபோதும் தெய்வம் பொறுத்ததில்லை!

    இல்லையென்போர் இருக்கையிலே
    இருப்பவர்கள் இல்லையென்பார்;

    மடிநிறையப் பொருளிருக்கும்
    மனம்நிறைய இருளிருக்கும்!

    எதுவந்த போதும் பொதுவென்று
    வைத்து -
    வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்!

    ReplyDelete
  3. அய்யா வணக்கம் . இதுமாதிரி ஒரு சிலர் தான் நாம் இப்போது காணமுடிகின்றது

    ReplyDelete
  4. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    நல்லதொரு பதிவு.
    சாகும்போது அவன் செய்த காரியம் நல்லதே.தனது குடும்பத்தினரின் விருப்பங்களையும் நிறைவேற்றியுள்ளார்.
    மற்ற சொத்துக்களை ஒரு நல்ல செயலுக்காக பயன்படுத்தியுள்ளார்ய
    இன்றைய மனித வாழ்வில் இது சாத்தியமா?. அப்படி நடக்கின்ற பட்சத்தில் இது ஒரு அதிசய நிகழ்வே.
    இது உண்மை நிகழ்வா அல்லது கற்பனையான கதையா.
    மனம் நிறைந்த பாராட்டுகள்.
    நன்றியுடன்,
    -Peeyes.

    ReplyDelete
  5. குருவிற்கு வணக்கம்
    இக் கதை செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற வள்ளலை நினைவுபடுத்துகிறது, இதுபோன்ற சம்பவங்கள் அக்கால மனிதர்களை நாம் மறவாமல் இருப்பதற்கு ஓர் உதாரணம்
    நன்றி

    ReplyDelete
  6. ///Blogger arul said...
    good story good moral////

    நல்லது. நன்றி நண்பரே1

    ReplyDelete
  7. ////Blogger kmr.krishnan said...
    Good moral story.Thank you,Sir.
    When we pray to God we should say " Give me whatever you think fit for me. If we ask a specific thing God will stop with that.If the choice is given to God he will give in abundance.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. ////Blogger eswari sekar said...
    vanakamsir////

    உங்களின் வணக்கத்திற்கு நன்றி!

    ReplyDelete
  9. /////Blogger அய்யர் said...
    இப்படி அவர் செய்வாரா..?
    இருக்கட்டும் கதை தானே..
    அது சரி..
    அவர் பதவியை யாருக்கு கொடுத்தார்?
    பொது சொத்தில் நூலகம் அமைத்து
    பெத்ததுக்கு சொத்து எழுதுமவருக்கு
    இப்பவே எதுவும் கிடைக்காத இவருக்கு செத்தபிறகு கிடைப்பதென்ன?
    அவரை குறித்து எழுந்த பதிவென
    அப்படியே விடுகிறோம்//////

    பொதுக்காரியத்திற்கு ஆயிரம் கோடி கொடுத்தாரே சுவாமி! அதற்கு என்ன கிடைக்க வேண்டுமோ அது (புண்ணியம்) அவர் செத்ததற்குப் பின் கிடைக்கும்!

    ReplyDelete
  10. /////Blogger Gnanam Sekar said...
    அய்யா வணக்கம் . இதுமாதிரி ஒரு சிலர் தான் நாம் இப்போது காணமுடிகின்றது/////

    ஆமாம். நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    நல்லதொரு பதிவு.
    சாகும்போது அவன் செய்த காரியம் நல்லதே.தனது குடும்பத்தினரின் விருப்பங்களையும் நிறைவேற்றியுள்ளார்.
    மற்ற சொத்துக்களை ஒரு நல்ல செயலுக்காக பயன்படுத்தியுள்ளார்
    இன்றைய மனித வாழ்வில் இது சாத்தியமா?. அப்படி நடக்கின்ற பட்சத்தில் இது ஒரு அதிசய நிகழ்வே.
    இது உண்மை நிகழ்வா அல்லது கற்பனையான கதையா.
    மனம் நிறைந்த பாராட்டுகள்.
    நன்றியுடன்,
    -Peeyes./////

    கற்பனைக் கதைதான். உங்களுடைய எண்ணப் பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  12. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    இக் கதை செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற வள்ளலை நினைவுபடுத்துகிறது, இதுபோன்ற சம்பவங்கள் அக்கால மனிதர்களை நாம் மறவாமல் இருப்பதற்கு ஓர் உதாரணம்
    நன்றி//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. ///பொதுக்காரியத்திற்கு ஆயிரம் கோடி கொடுத்தாரே சுவாமி!///

    48 வயதில் 1000 கோடிக்கு மேல் சம்பாதித்தவர் என்றால்

    அவர் இளமையில் அரசியலில் வந்து
    அஞ்சு முறையாவது முதல்வராக

    இருந்து மாநில கஜானாவில் ஒன்றும்
    இந்திய மத்திய கஜானாவிலும்

    கைவைத்து பின் "ராஜா"
    கைய வைச்சான்னு பாடுபவரா தானே

    இருக்கனும்
    இல்லையா...


    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com