மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.2.13

Astrology.Popcorn Post சன்னியாசி ஆவதற்கு என்னடா செய்ய வேண்டும்?

 ஆதி சங்கரரின் படம் - ராஜா ரவி வர்மாவின் 
கைவண்ணத்தில் உருவானதாகும்
 
 Astrology.Popcorn Post சன்னியாசி ஆவதற்கு என்னடா செய்ய வேண்டும்?

Popcorn Post no.40

தலைப்பில் வரும் ‘டா’வை யாரும் கண்டு கொள்ள வேண்டாம். முகத்தைச் சுழிக்க வேண்டாம். எனக்கு நானே போட்டுக்கொள்வது அது! அப்போதுதான் ஒரு உற்சாகம், உத்வேகத்துடன் எழுத முடிகிறது!

சன்னியாசி ஆவதற்கு என்னடா செய்ய வேண்டும்?

ஒன்றும் செய்ய வேண்டாம். ஆசைகளைத் துறந்தால் போதும்! மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்று ஆசைகளையும் உதறித் தள்ளினால் போதும்! முடிகிற காரியமா அது? கஷ்டம்தான்!!

அமெரிக்காவில் வீடு வாங்கியவன். அந்தக் கடன் முடியுமுன்பாகவே, சென்னை அடையாறிலும் ஒரு வீட்டை, வங்கி உதவியுடன் வாங்குகிறான். கேட்டால் அமெரிக்க வீடு பிளைகளுக்காம். அடையாறு வீடு வயதான காலத்தில் அவன் வந்து தங்குவதற்காம். அத்துடன் கோவை சேலம் நெடுஞ்சாலை வழித்தடத்தில், அவனாசி அருகே பத்து ஏக்கர் நிலத்தையும் வாங்கிப் போடுகிறான். கேட்டால் அது சேமிப்புக் கணக்காம். எதிர்காலத்தில் இட விலை எல்லாம் எகிறும்போது ஒன்றுக்குப் பத்து மடங்காகப் பணம் வருமாம். எப்படி இருக்கிறது? இந்த மாதிரி ஆசாமி எல்லாம் சன்னியாசி ஆகவே முடியாது. யாருக்காகச் ச்ம்பாதிக்கிறான், எதற்காகச் சேர்க்கிறான் என்பது அவனுக்கே  தெரியாது. வயதான காலத்தில் சனீஷ்வரன் எப்படிப் புரட்டிப் போடுவான், எந்த மருத்துவமனையில் படுத்திருக்க நேரிடும், ஒருவாய்ச் சோறாவது உண்ண முடியுமா? என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது.

இதுதான் இன்றையப் பணத் தேடலின் நிலைமை. ஆயிரங்களைத் தேடி அலைபவனும் இருக்கிறான். லட்சங்களைத் தேடி அலைபவனும் இருக்கிறான். கோடிகளைத் தேடி அலைபவனும் இருக்கிறான். ஆனால் அலைபவன் எவனும் நிம்மதியாக இல்லை. அது மட்டும் உண்மை!

பாலியல் பலாக்காரம் பற்றிய செய்திகள் தினமும் வருகின்றன. பெண்ணாசையையும் மனிதர்கள் துறப்பதில்லை.

சன்னியாசம் என்றால் என்ன? அதை முதலில் பார்ப்போம்!

renounce என்ற ஆங்கில வார்த்தைக்கு (to give up) கை விடு என்று தமிழில் பொருள் வரும்.  renouncer என்றால் எல்லாவற்றையும் விட்டவன் - துறந்தவன் என்ற பொருள்வரும். துறவி என்று வைத்துக்கொள்ளுங்கள். துறவி என்றால், நம்க்குப் புத்தரும், ஆதிசங்கரரும், விவேகானந்தரும், ரமண மகரிஷியும் மனதில் வந்து நிற்பார்கள்.

Sannyasa (Devanagari: संन्यास, saṁnyāsa) is the life stage of the renouncer within the Hindu scheme of āśramas. It is considered the topmost and final stage of the ashram systems and is traditionally taken by men or women over fifty or by young monks who wish to renounce worldly and materialistic pursuits and dedicate their lives to spiritual pursuits. People in this stage of life develop vairāgya, or a state of dispassion and detachment from material life, renouncing worldly thoughts and desires in order to spend the remainder of their lives in spiritual contemplation. A member of the sannyasa order is known as a sannyasin (male) or sannyasini (female).- உபயம் விக்கி மகராஜா!

சன்னியாசி ஆவதற்கான முக்கிய அமைப்பு ஜாதகப் படி என்ன?

நான்கு அல்லது ஐந்து கிரகங்கள் வலுவாகப் பத்தாம் வீட்டில் அல்லது ஏதாவது ஒரு கேந்திர வீட்டில் இருந்தால், அந்த அமைப்பு ஜாதகனைத் துறவறத்தில் த்ள்ளிவிடும். நிச்சயம் அவன் துறவறம் பூண்டு விடுவான். உலக ஆசைகளை எல்லாம் கடாசி விட்டு, இறைவன் திருவடிகளைப் போற்ற ஆரம்பித்துவிடுவான். இறைவனின் மேன்மையை அனுதினமும் நினைக்க ஆரம்பித்துவிடுவான். உலக வாழ்க்கை ஒரு மாயை (illusion)  என்பதை உணர்ந்துவிடுவான்

அவ்வாறு இருக்கும் கிரகங்களில்
சூரியன் அதிக வலுவுடன் இருந்தால், அத்தைகைய சன்னியாசி, காடுகளில் வசிப்பான்.
சந்திரன் அதிக வலுவுடன் இருந்தால், ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், மரியாதைக்கு உரியவனாகவும் இருப்பான்.
செவ்வாய் அதிக வலுவுடன் இருந்தால், தந்திர, மந்திர சித்து வேலைகளில் நாட்டமுடையவனாக இருப்பான்.
புதன் அதிக வலுவுடன் இருந்தால், அதிகமான சீடர்களுடனும், அதிகமான பேச்சுக்களுடனும் இருப்பான். (He will be a loose talker)
குரு அதிக வலுவுடன் இருந்தால், ஒரு கையில் திருவோட்டுடனும், ஒரு கையில் தண்டத்துடனும் இருப்பான். அவனுக்குப் பல சீடர்கள்/பக்தர்கள், பின்தொடர்பாளர்கள்/  followers  இருப்பார்கள்
சுக்கிரன் அதிக வலுவுடன் இருந்தால் தேசாந்திரியாக, ஊர் விட்டு ஊர் சுற்றுபவனாக இருப்பான்.
சனி அதிக வலுவுடன் இருந்தால், உடலில் ஆடை கூட அணியாமல் பக்கிரிபோல திரிவான்

எல்லாவற்றையும் விட முக்கியமாக அந்தக் கூட்டணியில், சூரியன், சனி, செவ்வாய் ஆகிய மூவரும் இருந்தால், அந்த ஜாதகன் மனைவி, மக்களை இழந்தவனாக இருப்பான். அல்லது அவகளால் துன்பமுற்றவனாக/ சோகமுற்றவனாக இருப்பான். அல்லது அவர்கள் இல்லாதவனாக இருப்பான். அதாவது பிரம்மச்சாரியாக இருப்பான். ஜாதகத்தில் உள்ள மற்ற அமைப்புக்களை வைத்து அந்த நிலை மாறுபடும்.

சன்னியாசி யோகத்திற்கு வேறு பல ஜாதக அமைப்புக்களும் உள்ளன. அது விரிவான பாடம். பின் ஒரு நாளில் அதைப் பார்ப்போம். பொறுத்திருங்கள்

உங்களில் யாரும் சன்னியாசி ஆக வேண்டாம். அதற்காக இதை நான் பதிவிடவில்லை. ஆனால் தேவையில்லாத  ஆசைகளை மனதிற்குள் வளர்த்துக்கொண்டு அவற்றை அடையும் நோக்கத்துடன் வாழ்க்கையின் மென்மையான, மேன்மையான தருணங்களை இழந்து விடாதீர்கள்.

அன்புடன்
வாத்தியார்

========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

39 comments:

  1. குருவுக்கு வணக்கங்கள்.
    10ம் அதிபதி அமர்ந்த வீட்டுக்கு திரிகோண கேந்திர வீடுகளில் நான்கு அல்லது ஐந்துக்கும் மேற்ப்பட்ட கிரகங்கள் இருந்தாலூம் சிறந்த ஆன்மீகவாதியாக இருப்பானென்று எங்கோ படித்த ஞாபகம்.இது தவறாக இருக்கலாம்//இருப்பின் மன்னிக்கவும்.

    மிகவும் அருமையான பாடம்..இணையத்தில் பல நேரங்களில் தேடும் ஜோதிட சம்பந்தமான தலைப்புகளில் ஒன்று சன்னியாசம்..ஆன்மீகம் தொடர்பிலான ஜோதிட விஷயங்களை படிப்பதில் ஆர்வம் அதிகம் உண்டு..பாடத்துக்கு மிக்க நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய ஐயா,
    காலை வணக்கம்!

    காலகாலதாசன்
    புவனேஷ்வர்

    ReplyDelete
  3. அன்புள்ள ஐயா அவர்களுக்கு,

    பாடம் சூப்பர்.

    அதில் ஒரு வரியில் வருத்தப்படாத வாண்டுகள் சங்கத்தலைவருக்கு (அது நான் தான்) சந்தேகம் வந்தது.

    //செவ்வாய் அதிக வலுவுடன் இருந்தால், தந்திர, மந்திர சித்து வேலைகளில் நாட்டமுடையவனாக இருப்பான்.//

    "நாட்டமுடையவர்" உண்மையில் "சந்நியாசி" ஆக இருக்க இயலுமா?

    பற்று விடுமின் பற்று விடுமின் ஈசனோடாயினும் பற்று விடுமின் என்றல்லவோ திருமூலர் சொல்லுகின்றார்?

    சின்னப்பிள்ளைக்கு கிட்டும் விளையாட்டு சமான் போன்றது சித்து. நம்மிடம் இல்லாத பொது பெரிய விஷயமாக தெரியும். அதனால் ஆத்மக்ஷேமம் உண்டாகுமா? அவை வெறும் distractions. சிலருக்கு யதேச்சையாக கிடைத்தாலும் கண்டுகொள்ளாமல் விடுவார்கள், நல்லதுக்கு தேவையானால் பயன் படுத்துவார்கள். ஆனால் சித்துக்கள் வேண்டும் என்று அலைவது நல்லதல்ல எனபது ஆன்றோர் பரிந்துரை.

    அதுவும் துறவறம் என்று வந்த பின், மனசின் சங்கல்பங்களை வேரிலே அறுப்பதே கார்யம். வேறு கார்யம் இல்லை. சித்துக்கள் மந்திர தந்திரங்கள் மீது "நாட்டம்" உள்ளவர் ஒரு வேலை ascetic என சொல்லலாம். ஆனால் அவரை renunciate என சொல்லுவது சரியா?

    In other words, a san-nyaasi has no duty or obligation to perform any acts such as are done by brahamachaaris and gruhasthas. On the contrary, he is PROHIBITED from performing any such acts, as he has consciously, voluntarily, and permanently severed all connection with normal life and taken up full-time asceticism. There is no return path. It is a one-way journey.

    Ergo, a san-yaasi is NOT a Brahmin, NOT a Kshthriyan, NOT a Vaishyan, NOT a Shoodran. He is a living breathing corpse, a visible nonentity, a dead man He is suo genis -- a dead man walking. He has no relations, no family, no religion, no personal, or any other, God.

    In taking my leave, I shall recommend strongly that we distinguish between a living, breathing, food-and-water-consuming, sleeping, dreaming, waking, susceptible-to-pain human body, and an eternally subsisting, imperishable soul, a pure spirit, a spark of imputed divinity that does not have a "mind", whether capable of being "confused" or not!

    காலை பொழுதில் சிறப்பான சிந்தனைகளை சிறார்கட்கு ஊட்டும் வாத்தியார் வாழ்க.
    அவர்தம் புகழ் வளர்க. :)))))

    காலகாலதாசன்
    புவனேஷ்

    ReplyDelete
  4. சந்நியாச வாழ்வுக்கென்று மிகக் கடுமையான விதிமுறைகள் உண்டு. அவற்றை முறையாகக் கடைப்பிடித்தவர்களையே மஹான்கள் என்று போற்றுகிறோம். மிக அருமையான பதிவினைத் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  5. Ayya

    I like your Post very much.Athilum "Menmaiyaana, Meynmaiyaana tharunangalai ilanthi vidtheer",is superb.

    ReplyDelete
  6. ஆசி வழங்குபவர்களெல்லாம் சந்நி
    யாசியாக முடியாது..

    சன்னியாசியாக யாரும் முடியாதென
    சத்தியம் சொல்லும் தமிழ் பகர்கிறது..

    தவம் வேறு துறவு வேறு
    தகுதியானதை சரியாக பொறுத்தணும்

    இடம் வாங்குவதுபுத்திசாலிதனமில்லை
    இது இன்றைய இளைஞர்களுக்கு

    புரியவில்லை.. அதனை
    புரிய வைக்கும் முயற்சி நமதல்ல

    ஜாதக குறிப்புகள் சொன்ன எதுவுமின்றி
    சாதாரண ஒருவன் நீங்கள் சொன்னதில்

    இருந்து (மண்,பொண், பெண்) விலகி
    இவ்வுலகில் உள்ளதை அறிவீர் தானே

    கலகம் செய்ய வேறு இடமின்றி
    கலக்க இந்த வகுப்பறை வந்ததே..

    கார சாரமான வாததிற்குரிய பாப்
    கார்ன் பதிவு இது தான்..

    தோழி பார்வதியார் சொல்வது போல்
    விதிமுறைகள் இருக்குமானால் அது

    சன்னியாசமாக இருக்க முடியாதென்பது
    அய்யரின் கருத்து.. அவர் கூறும்

    கடுமை எளிமையானால்
    வலிமை புதுமையாகும்..

    ReplyDelete
  7. வலமாக சுழல விட இந்த பாடலினை
    வகுப்பறையில் பதிவு செய்கிறோம்

    காசிக்கு போகும் சந்நியாசி
    உன் குடும்பம் என்னாகும் நீ யோசி

    கங்கைக்கு போகும் பரதேசி
    நீ நேத்துவரையிலும் சுகவாசி

    பட்டது போதும் பெண்ணாலே
    இதை பட்டினத்தாரும் சொன்னாரே

    சுட்டது போதும் சொல்லாலே நான்
    சுகப்படவில்லை அவளாலே

    ஆதரவான வார்த்தையை பேசி
    அருமை மிகுந்த மனைவியை நேசி

    அன்பெனும் பாடத்தை அவளிடம் வாசி
    அவளை விடவா உயர்ந்தது காசி

    அவதி படுபவன் படுசம்சாரி
    அப்பா நீயோ பிரம்மச்சாரி

    இல்லறம் என்பது நல்லறம் ஆகும்
    இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்

    ReplyDelete
  8. ////Blogger Thava Kumaran said...
    குருவுக்கு வணக்கங்கள்.
    10ம் அதிபதி அமர்ந்த வீட்டுக்கு திரிகோண கேந்திர வீடுகளில் நான்கு அல்லது ஐந்துக்கும் மேற்ப்பட்ட கிரகங்கள் இருந்தாலூம் சிறந்த ஆன்மீகவாதியாக இருப்பானென்று எங்கோ படித்த ஞாபகம்.இது தவறாக இருக்கலாம்//இருப்பின் மன்னிக்கவும்.
    மிகவும் அருமையான பாடம்..இணையத்தில் பல நேரங்களில் தேடும் ஜோதிட சம்பந்தமான தலைப்புகளில் ஒன்று சன்னியாசம்..ஆன்மீகம் தொடர்பிலான ஜோதிட விஷயங்களை படிப்பதில் ஆர்வம் அதிகம் உண்டு..பாடத்துக்கு மிக்க நன்றிகள் ஐயா.////

    உங்களின் பெயரைப் பார்த்தாலே தெரிகிறது. நன்றி!

    ReplyDelete
  9. இந்த காலத்தில் துறவிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் சுக போகத்துடன் வாழ்கிறார்கள். இதற்கு மேல் எழுதினால் வாத்தியாருக்குதான் பிரச்சினை.

    ReplyDelete
  10. ////Blogger Bhuvaneshwar said...
    மதிப்பிற்குரிய ஐயா,
    காலை வணக்கம்!
    காலகாலதாசன்
    புவனேஷ்வர்/////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  11. /////Blogger Bhuvaneshwar said...
    அன்புள்ள ஐயா அவர்களுக்கு,
    பாடம் சூப்பர்.
    அதில் ஒரு வரியில் வருத்தப்படாத வாண்டுகள் சங்கத்தலைவருக்கு (அது நான் தான்) சந்தேகம் வந்தது.
    //செவ்வாய் அதிக வலுவுடன் இருந்தால், தந்திர, மந்திர சித்து வேலைகளில் நாட்டமுடையவனாக இருப்பான்.//
    "நாட்டமுடையவர்" உண்மையில் "சந்நியாசி" ஆக இருக்க இயலுமா?///////

    எனக்குத் தெரிந்த ஆசிரமம் ஒன்றில், அங்கே இருக்கும் சன்னியாசிகளுக்கு உணவு தயாரிக்கும்போது, உப்பு, புளி, காரம் மூன்றையும் உபயோகிக்க மாட்டார்கள். அது மூன்றும் இல்லாமல் உங்களால் சாப்பிட முடியுமா சொல்லுங்கள்? ஆனால் அவர்கள் சாப்பிடுகிறார்கள். அந்த உணவு கூட இல்லாமல் எப்படி அவர்களால் உயிர்வாழ முடியும். உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்த வகை உணவுகள். உயிர்மேல் நாட்ட்ம் இல்லாமல் இருக்கலாமே? அந்த உணவுகூட இன்றி வெறும் தண்ணீரைக் குடித்து விட்டு உயிர் வாழலாமே என்று வாதம் செய்தால் என்ன செய்வது? நாட்டம் என்பதை விருப்பம் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். சித்து வேலைகள் என்பது நாட்டத்தால் செய்யப்படுகிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்!

    பெண்ணின் மேல் வைக்கும் நாட்டத்திற்கும் சித்து வேலைகளில் வைக்கும் நாட்டத்திற்கும் வித்தியாசம் உண்டு. அதை விரிவாகப் பின்னொரு நாளில் எழுதுகிறேன். பொறுத்திருங்கள். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி

    ReplyDelete
  12. ////Blogger Parvathy Ramachandran said...
    சந்நியாச வாழ்வுக்கென்று மிகக் கடுமையான விதிமுறைகள் உண்டு. அவற்றை முறையாகக் கடைப்பிடித்தவர்களையே மஹான்கள் என்று போற்றுகிறோம். மிக அருமையான பதிவினைத் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி.////

    உண்மைதான். அதை நானும் சற்று அறிவேன். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. ////Blogger arul said...
    good information sir/////

    நல்லது. நன்றி நண்பரே1

    ReplyDelete
  14. ////Blogger eswari sekar said...
    vanakam sir inrya padam arumai////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. /////Blogger govind said...
    Ayya
    I like your Post very much.Athilum "Menmaiyaana, Meynmaiyaana tharunangalai ilanthi vidtheer",is superb.//////

    உண்மையை எழுதும்போது அது நன்றாகத்தான் இருக்கும். உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. //////Blogger அய்யர் said...
    ஆசி வழங்குபவர்களெல்லாம் சந்நி
    யாசியாக முடியாது..
    சன்னியாசியாக யாரும் முடியாதென
    சத்தியம் சொல்லும் தமிழ் பகர்கிறது..
    தவம் வேறு துறவு வேறு
    தகுதியானதை சரியாக பொறுத்தணும்
    இடம் வாங்குவதுபுத்திசாலிதனமில்லை
    இது இன்றைய இளைஞர்களுக்கு
    புரியவில்லை.. அதனை
    புரிய வைக்கும் முயற்சி நமதல்ல
    ஜாதக குறிப்புகள் சொன்ன எதுவுமின்றி
    சாதாரண ஒருவன் நீங்கள் சொன்னதில்
    இருந்து (மண்,பொண், பெண்) விலகி
    இவ்வுலகில் உள்ளதை அறிவீர் தானே

    கலகம் செய்ய வேறு இடமின்றி
    கலக்க இந்த வகுப்பறை வந்ததே..
    கார சாரமான வாததிற்குரிய பாப்
    கார்ன் பதிவு இது தான்..
    தோழி பார்வதியார் சொல்வது போல்
    விதிமுறைகள் இருக்குமானால் அது
    சன்னியாசமாக இருக்க முடியாதென்பது
    அய்யரின் கருத்து.. அவர் கூறும்
    கடுமை எளிமையானால்
    வலிமை புதுமையாகும்../////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி விசுவநாதன்!!!
    சன்னியாசியாக இருந்தாலும் அவருக்கும் ஜாதகம் உண்டு, காலதேவனின் விதி உண்டு. மரணம் உண்டு - தெரியுமல்லவா?

    ReplyDelete
  17. ////Blogger அய்யர் said...
    வலமாக சுழல விட இந்த பாடலினை
    வகுப்பறையில் பதிவு செய்கிறோம்
    காசிக்கு போகும் சந்நியாசி
    உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
    கங்கைக்கு போகும் பரதேசி
    நீ நேத்துவரையிலும் சுகவாசி
    பட்டது போதும் பெண்ணாலே
    இதை பட்டினத்தாரும் சொன்னாரே
    சுட்டது போதும் சொல்லாலே நான்
    சுகப்படவில்லை அவளாலே
    ஆதரவான வார்த்தையை பேசி
    அருமை மிகுந்த மனைவியை நேசி
    அன்பெனும் பாடத்தை அவளிடம் வாசி
    அவளை விடவா உயர்ந்தது காசி
    அவதி படுபவன் படுசம்சாரி
    அப்பா நீயோ பிரம்மச்சாரி
    இல்லறம் என்பது நல்லறம் ஆகும்
    இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்////

    படத்தின் பெயரையும் சொல்லியிருக்கலாமே சுவாமி! படம்: சந்திரோதயம். பாடலைப் பாடியவர்கள் டி.எம்.எஸ் & சீர்காழியார்

    ReplyDelete
  18. /////Blogger Ak Ananth said...
    இந்த காலத்தில் துறவிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் சுக போகத்துடன் வாழ்கிறார்கள். இதற்கு மேல் எழுதினால் வாத்தியாருக்குதான் பிரச்சினை./////

    அவர்கள் போலித் துறவிகள். நல்ல துறவிகளும் இருக்கிறார்கள். அதே ஐந்து கிரகங்களில் இரண்டு கிரகங்கள் வக்கிரகதியில் இருந்தால், அவர்கள் போலித் துறவிகளாகிவிடுவார்கள். மக்களால் அறியப்பட்டும் இருப்பார்கள். மாக்களால் அறியப்படாமல் அவர்களால் துதிக்கபட்டும் இருப்பார்கள். நீங்கள் சொல்லும் அதே ஆசாமியைத்தான் நானும் சொல்கிறேன்!

    பிரச்சினைகளால் எனக்குப் பிரச்சினை இல்லை. அதற்கெல்லாம் யோசித்தால் தொடர்ந்து பதிவில் எழுத முடியுமா என்ன? அத்துடன் பழநிஅப்பன் துணை இருக்கிறது!

    ReplyDelete
  19. அய்யா தொடர்ந்து பாப்கான் பொட்டலம் சாப்டா என்ன ஆவது, ஒரு விருந்து சாப்பாடு தர கூடாதா..?

    ReplyDelete
  20. அன்புள்ள ஐயா,

    //பெண்ணின் மேல் வைக்கும் நாட்டத்திற்கும் சித்து வேலைகளில் வைக்கும் நாட்டத்திற்கும் வித்தியாசம் உண்டு//

    நான் பெண்ணாசையை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே. ஏன் இப்படி திடீரென்று பெண்களின் மேல் வைக்கும் நாட்டத்தை பற்றி சொல்கிறீர்கள்?

    காலகாலதாசன்
    புவனேஷ்வர்

    ReplyDelete
  21. ///சன்னியாசியாக இருந்தாலும் அவருக்கும் ஜாதகம் உண்டு, காலதேவனின் விதி உண்டு. மரணம் உண்டு - தெரியுமல்லவா?///

    சன்னியாசியாக இருக்க முடியாது என
    சத்தியம் சொல்லும் "தமிழ்"சொல்கிறது

    காரைக்"குடி"யுடன் வாதம் செய்ய
    லால்"குடி" தான் வரவேண்டும்

    அய்யர் பரமக்"குடி" அதனால்
    அப்படியே விலகி கொள்கிறோம்

    ReplyDelete
  22. ///Parvathy Ramachandran said...
    சந்நியாச வாழ்வுக்கென்று முறையாகக் கடைப்பிடித்தவர்களையே மஹான்கள் என்று போற்றுகிறோம். ///

    காவி உடை அணிந்த அவர்
    பத்திரிகை நிருபர் கேள்விக்கு

    இப்படி பதில் சொல்லி உள்ளார்
    இப்படி அழைக்கப் பெறும் ஒருவர்

    "தப்பு செய்ய வாய்ப்பு கிடைக்கலே
    அதனால நான் நல்லவனா இருக்கேன்"

    தவறுகளை தேடி அலைபவர்
    தவறுகளை நியாயப்படுத்தும்
    "குற்றவாளி"

    வாய்ப்பு கிடைக்க வில்லை அதனால்
    தவறு செய்யாமலிருப்பவர்
    "சாதரணமானவர்"

    வாய்ப்பு கிடைத்தாலும்
    தவறு செய்யமாலிருப்பவரே
    "ஒழுக்கமானவர்"

    ReplyDelete
  23. ///Thava Kumaran said...
    10ம் அதிபதி அமர்ந்த வீட்டுக்கு திரிகோண கேந்திர வீடுகளில் நான்கு அல்லது ஐந்துக்கும் மேற்ப்பட்ட கிரகங்கள் இருந்தாலூம் சிறந்த ஆன்மீகவாதியாக...///

    அய்யா தவசீலரே
    அனுமதிப்பீரா சுட்டி திருத்த..

    ஆன்மீகவாதி அல்ல
    ஆன்மிகவாதி..

    அன்பின் மிகுதியால் சுட்டுகிறோம்
    அதிகாரமோ ஆணவமோ இல்லை

    புரிந்தவர்களுக்கு தெரியும் மற்றவருக்கு
    புரிந்த பின் தெரியும்..

    வாழ்க நலமுடன்
    வளமான பலமுடன்..

    ReplyDelete
  24. /////Blogger Ak Ananth said...
    இந்த காலத்தில் துறவிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் சுக போகத்துடன் வாழ்கிறார்கள்.////

    உண்மை தான் நீங்கள் சொல்வது
    இறைஅனுபவ சுகத்தை தானே

    துறவு வேறு... சன்னியாசம் வேறு...
    துப்புரவாக தெரிந்து கொண்டால்

    சாமி... யார் (?)
    ஆ.. சாமியார் என்பது தெரியும்?!

    ReplyDelete
  25. ///manikandan said...
    ஒரு விருந்து சாப்பாடு தர கூடாதா..?///

    விருந்துக்கு அழைப்பவர் நம்
    லால் "குடி" தோழர் தான்

    மாணவர் சந்திப்பு என சிந்திக்க தந்த
    அவரின் அழைப்பிற்கு காத்திருக்கிறோம்

    உங்களைப் போலவே..
    உங்கள் அன்பு அய்யரும்..

    ReplyDelete
  26. வணக்கம் அய்யா ,

    சன்யாசியாக பத்தாம் வீட்டில் நான்கு அல்லது ஐந்து கிரகங்கள் இருக்க வேண்டும் என்றீர்கள் . பத்தாம் வீட்டை ஐந்து கிரகங்கள் பார்த்ததாலும் (கேந்திரங்களில் நின்று ) இதே பலன்தானா ?

    ReplyDelete
  27. //////Blogger manikandan said...
    அய்யா தொடர்ந்து பாப்கான் பொட்டலம் சாப்டா என்ன ஆவது, ஒரு விருந்து சாப்பாடு தர கூடாதா..?/////

    உங்கள் ஆர்வத்திற்கு நன்றி! அடுத்தவாரம் உங்கள் ஆசை நிறைவேறும்!

    ReplyDelete
  28. /////Blogger sundari said...
    vanakkam sir,
    present sir.////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  29. ////Blogger Bhuvaneshwar said...
    அன்புள்ள ஐயா,
    //பெண்ணின் மேல் வைக்கும் நாட்டத்திற்கும் சித்து வேலைகளில் வைக்கும் நாட்டத்திற்கும் வித்தியாசம் உண்டு//
    நான் பெண்ணாசையை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே. ஏன் இப்படி திடீரென்று பெண்களின் மேல் வைக்கும் நாட்டத்தை பற்றி சொல்கிறீர்கள்?
    காலகாலதாசன்
    புவனேஷ்வர்///

    அது பொது உதாரணம்தான். யாரையும் குறிப்பதில்லை!

    ReplyDelete
  30. //////Blogger அய்யர் said...
    ///சன்னியாசியாக இருந்தாலும் அவருக்கும் ஜாதகம் உண்டு, காலதேவனின் விதி உண்டு. மரணம் உண்டு - தெரியுமல்லவா?///
    சன்னியாசியாக இருக்க முடியாது என
    சத்தியம் சொல்லும் "தமிழ்"சொல்கிறது
    காரைக்"குடி"யுடன் வாதம் செய்ய
    லால்"குடி" தான் வரவேண்டும்
    அய்யர் பரமக்"குடி" அதனால்
    அப்படியே விலகி கொள்கிறோம்//////

    ஆவினன் ‘குடி’ இருக்கிறது! நீங்கள் எத்ற்கு விலக வேண்டும்?

    ReplyDelete
  31. //////Blogger அய்யர் said...
    ///Thava Kumaran said...
    10ம் அதிபதி அமர்ந்த வீட்டுக்கு திரிகோண கேந்திர வீடுகளில் நான்கு அல்லது ஐந்துக்கும் மேற்ப்பட்ட கிரகங்கள் இருந்தாலூம் சிறந்த ஆன்மீகவாதியாக...///
    அய்யா தவசீலரே
    அனுமதிப்பீரா சுட்டி திருத்த..
    ஆன்மீகவாதி அல்ல
    ஆன்மிகவாதி..
    அன்பின் மிகுதியால் சுட்டுகிறோம்
    அதிகாரமோ ஆணவமோ இல்லை
    புரிந்தவர்களுக்கு தெரியும் மற்றவருக்கு
    புரிந்த பின் தெரியும்..
    வாழ்க நலமுடன்
    வளமான பலமுடன்./////.

    அப்படி எழுதினாலும் தவறில்லை சுவாமி!

    ReplyDelete
  32. Blogger அய்யர் said...
    ///Parvathy Ramachandran said...
    சந்நியாச வாழ்வுக்கென்று முறையாகக் கடைப்பிடித்தவர்களையே மஹான்கள் என்று போற்றுகிறோம். ///
    காவி உடை அணிந்த அவர்
    பத்திரிகை நிருபர் கேள்விக்கு
    இப்படி பதில் சொல்லி உள்ளார்
    இப்படி அழைக்கப் பெறும் ஒருவர்
    "தப்பு செய்ய வாய்ப்பு கிடைக்கலே
    அதனால நான் நல்லவனா இருக்கேன்"
    தவறுகளை தேடி அலைபவர்
    தவறுகளை நியாயப்படுத்தும்
    "குற்றவாளி"
    வாய்ப்பு கிடைக்க வில்லை அதனால்
    தவறு செய்யாமலிருப்பவர்
    "சாதரணமானவர்"
    வாய்ப்பு கிடைத்தாலும்
    தவறு செய்யமாலிருப்பவரே
    "ஒழுக்கமானவர்"//////

    சிலரைத்த தவிர, காவியில் மறைந்திருப்பவர்கள் ஒழுக்கமானவர்கள் இல்லை என்பது மக்களுக்குத் தெரியாதா என்ன?

    ReplyDelete
  33. /////Blogger அய்யர் said...
    /////Blogger Ak Ananth said...
    இந்த காலத்தில் துறவிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் சுக போகத்துடன் வாழ்கிறார்கள்.////
    உண்மை தான் நீங்கள் சொல்வது
    இறைஅனுபவ சுகத்தை தானே
    துறவு வேறு... சன்னியாசம் வேறு...
    துப்புரவாக தெரிந்து கொண்டால்
    சாமி... யார் (?)
    ஆ.. சாமியார் என்பது தெரியும்?!/////

    சொன்னால் கேட்டுக்கொள்கிறோம்! வேறு என்ன செய்வது?

    ReplyDelete
  34. /////Blogger அய்யர் said...
    ///manikandan said...
    ஒரு விருந்து சாப்பாடு தர கூடாதா..?///
    விருந்துக்கு அழைப்பவர் நம்
    லால் "குடி" தோழர் தான்
    மாணவர் சந்திப்பு என சிந்திக்க தந்த
    அவரின் அழைப்பிற்கு காத்திருக்கிறோம்
    உங்களைப் போலவே..
    உங்கள் அன்பு அய்யரும்../////

    நல்லது. தகவலுக்கு நன்றி! காத்திருத்தலுக்கும் நன்றி!

    ReplyDelete
  35. ////Blogger naren said...
    வணக்கம் அய்யா ,
    சன்யாசியாக பத்தாம் வீட்டில் நான்கு அல்லது ஐந்து கிரகங்கள் இருக்க வேண்டும் என்றீர்கள் . பத்தாம் வீட்டை ஐந்து கிரகங்கள் பார்த்ததாலும் (கேந்திரங்களில் நின்று ) இதே பலன்தானா ?////

    ஆமாம்! ஆமாம்! இன்னும் சில அமைப்புக்கள் உள்ளன. அதை விரிவாக இன்னொரு நாள் எழுதுகிறேன் நண்பரே!

    ReplyDelete
  36. பாடம் அருமை...நான்கு கேந்திரங்களிலும் கிரகங்கள் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ அமர்ந்தாலும் இந்த பலன் உண்டா?

    அருள்-தான்சானியா.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com