மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.2.13

Astrology.Popcorn Post எட்டேகால் லட்சணமும் எமன் ஏறும் வாகனமும்!

Astrology.Popcorn Post எட்டேகால் லட்சணமும் எமன் ஏறும் வாகனமும்!

Popcorn Post No.39

ஒவ்வொன்றாக வருவோம். முதலில் எட்டேகால் லட்சணத்தை எடுத்துக்கொள்வோம். எட்டேகால் லட்சணம் என்றால் என்னவென்று தெரியுமா?

தமிழின் எண் வடிவத்தைக் கீழே கொடுத்துள்ளேன். தமிழில்  ‘அ’ என்று எண்ணால் குறிபிட்டால் எட்டு என்று பொருள். ‘வ’ என்ற எழுத்திற்கு கால் (1/4) என்று பொருள் எட்டேகால் என்பதை ‘அவ’ என்று குறிப்பிடுவார்கள். எட்டேகால் லட்சணம் என்றால் அவலட்சணம் என்று பொருள்படும்

 ஒரு பையனோ அல்லது பெண்ணோ அழகில்லாமல் இருந்தால், அவலட்சணமாக இருக்கிறான் அல்லது இருக்கிறாள் என்று சொல்லாமல் எட்டேகால் லட்சணம் என்பார்கள். எங்கள் பகுதியில் (காரைக்குடியில்) சற்றுக் கெள்ரவமாகச் சொல்வார்கள். உள்ளதுபோல இருக்கிறான் அல்லது இருக்கிறாள் என்று சொல்வார்கள். நாம அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எமன் ஏறும் வாகனம் என்பது எருமை மாட்டைக் குறிக்கும். படு சுட்டியாக இருக்கும் பையனைக் கிராமப் புறங்களில் ‘எமப் பயலாக’ இருக்கிறான் என்பார்கள். எமன் கொண்டு போவதைப் போல அசந்தால் பையனும் கொண்டு போய்விடுவான் என்று பொருள். சற்று மந்தமாக இருக்கும் பையனை எமன் ஏறும் வாகனம்போல பையன் இருக்கிறான் என்பார்கள்.

வாரியார் சுவாமிகள் சொல்வார்கள்  “இன்று எல்லோரும் எருமைப் பாலத்தான் குடிக்கிறார்கள். அதனால் தெருவில் பொறுப்பில்லாமல் எருமைகள் போலதான் நடந்து போகிறார்கள். வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்குவதில்லை”

மாடுகளிலும் பலவகை உள்ளன. உழுகின்ற மாடு, வண்டி மாடு. கோயில் மாடு என்று அவற்றையும் வகைப்படுத்தலாம். அவற்றைப் பற்றி சுவாரசியமாக எழுதலாம். அதைப் பின் ஒரு நாளில் எழுதுகிறேன். இப்போது பாடத்தைப் பார்ப்போம்

சனீஷ்வரன் சில வீடுகளில் இருக்கும்போது அழகான தோற்றத்துடன் இருப்பார். உதாரணம் துலாம் வீடு. அது அவருக்கு உச்ச வீடு. அங்கே இருக்கும்போது ஃபுல் மேக்கப்புடனும், பட்டு வேஷ்டி சட்டையுடனும், கையில் ஆறு பவுன் தங்க பிரேஸ்லெட்டுடனும், கழுத்தில் தங்கச் சங்கிலியுடனும் அழகாகக் காட்சியளிப்பார். மேஷத்தில் இருக்கும்போது சுய ரூபத்துடன் இருப்பார். எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வரும் பெண்ணைப்போல சுயரூபத்துடன் இருப்பார். அது அவருக்கு நீச வீடு.

அவர் அவலட்சணமாகக் காட்சியளிக்கும் வீடு ஒன்றும் உள்ளது. அது என்ன வீடூ?

எட்டாம் வீடு அது!

அதுதான் ஜாதகத்தில் உள்ள எட்டாம் வீடு

எட்டாம் வீட்டிற்கும் சனிக்கும் உள்ள உறவைப் பற்றி 4 பக்கங்களுக்கு விவரமாக எழுதலாம். எழுதியிருக்கிறேன், மேல்நிலைப் பாட வகுப்பில் (classroom2013) நேற்றுதைப் பதிவிட்டுள்ளேன். அதை இங்கே கொடுத்தால், பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாக, அதாவது துவைத்த ஈரம் காயுமுன்பாகவே அதைச் சுருட்டி எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள். இணையத்தில் அத்தனை நல்லவர்கள் திரிகிறார்கள். ஆகவே இங்கே காயப் போடவில்லை. மேல் நிலைப் பாடங்கள் அடுத்த ஆண்டு புத்தகமாக வரும் அப்போது அனைவரும் படிக்கலாம்.

உங்களுடைய மேன்மையான தகவலுக்காக அதில் உள்ள சில விதிகளை (Rules) மட்டும் சுருக்கிக் கொடுத்துள்ளேன்!
---------------------------------------------------------------------------------------------------
எட்டில் சனி அமர்ந்து, தன்னுடைய மூன்றாம் பார்வையாக பத்தாம் வீட்டைப் பார்ப்பது நல்ல அமைப்பல்ல! அப்படி அமையப் பெற்ற ஜாதகன் பலவிதமான சோதனை களையும், தடைகளையும் தன்னுடைய வேலையில் அல்லது தொழிலில் சந்திக்க நேரிடும்.

அத்துடன் வேலை ஸ்திரமில்லாமல் இருக்கும். ஸ்திரமில்லாமல் என்றால் என்னவென்று தெரியுமா? Instability என்று பொருள்.

எந்தத் துறையென்றாலும், ஜாதகனுக்கு அது பிடித்தமில்லாமல் போகும். கவலை அளிப்பதாக இருக்கும்.

எத்தனை திறமை இருந்தாலும், எத்தனை திறமையை வேலையில் காட்டினாலும், அந்த வேலையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து, அதன் மேல் வெறுப்பும் கூடவே இருக்கும். வேலைக்குத் தகுந்த ஊதியம் இல்லாவிட்டால், எப்படிப் பிடிப்பு வரும்? வெறுப்புத்தானே வரும்!

பத்தாம் வீட்டில் அதிகமான பரல்கள் இருந்தாலும், அல்லது பத்தாம் வீட்டுக்காரனின் பார்வையிலும் அந்த வீடு இருந்தாலும், அல்லது சுபக்கிரகங்களின் பார்வையில் அந்த வீடு இருந்தாலும், மேற்சொன்ன பலன்கள் இல்லாமல் நல்ல பலன்கள் நடைபெறும். அதையும் மனதில் கொள்க!

100 கிராம் பாப்கார்ன் பொட்டலத்திற்கு இதுதான் அளவு. வேறு ஒரு பொட்டலத்துடன் நாளை சந்திக்கிறேன்

அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20 comments:

  1. வருகை பதிவு..
    வந்தவுடன் அறிந்தோம் ஒப்பீடு

    நம் பகுதியில் வழக்கத்திலுள்ளதை
    நம் முன்னோர் சொன்னது என

    அதை எண்ணியதும்
    அப்படியே வந்த பாடலினை

    வலமாக சுழல விடுகிறோம்
    வழக்கமான அனுமதியுடன்

    எட்டேகால் லட்சணமே
    எமனேறும் பரியே

    மட்டில் பெரியம்மை
    வாகனமே – முட்டமேல்

    கூரையில்லா வீடே
    குலராமன் தூதுவனே

    ஆரையடா சொன்னாய்
    அது
    (இது ஔவையாரின் பாடல்)

    ReplyDelete
  2. குருவுக்கு வணக்கம்
    இன்றைய பாப்கார்ன் நல்லாருக்கு ஐயா..அடுத்த பதிவை எதிர்ப்பார்க்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  3. 8ம் இடத்தில் இருக்கும் சனி பகவான் காரக பாவ நாசம் செய்ய மாட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் 7ம் பார்வையாக 2ம் இடத்தைப் பார்ப்பதால் குடும்ப சுபீட்சம் குறைவாக இருக்கும் என்றும் படித்திருக்கிறேன். சனி பகவான் 8ல் (வக்கிரம்) இருக்கும் ஒரே ஒரு ஜாதகம்தான் என்னிடம் உள்ளது. 25 வயதில் இறந்துப் போனவரின் ஜாதகம். அற்ப ஆயுளுக்கு காரணம் சனி பகவானின் வக்கிர கதிதான் என்ற முடிவுக்குதான் என்னால் வர முடிந்தது. அற்ப ஆயுள் என்பதற்கான வேறு கிரக நிலைகளும் இருந்தன. (பின்னூட்டத்தில் இவ்வளவுதான் சொல்ல முடியும்.)

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா, என்னிடம் 8ல் சனி(வக்கிரம்),ராகுவுடன் உள்ள ஒரு ஜாதகம் உள்ளது.அந்த பெண் இன்ஃபொஸிஸ்ல் வேலை செய்கிறார்,அவருக்கு லக்னத்தில் சூரியன், புதன், செவ்வாய் உச்சம்,7ல் குரு உச்சம்,இரண்டு உச்சகிரகங்கள் பார்ப்பதும் சிற்ந்தது அல்ல,சனியும் 8ல் ராகுவுடன் வக்ர நிலையில் உள்ளார் அதுவும் சரியல்ல‌,2ல் சந்த்திரன் கேதுவுடன் உள்ளார்,12ல் சுக்கிரன் ஆனால் சந்தோசமாக வாழ்க்கை நடத்திக்கொண்டுள்ளார்.இன்னும் படிக்க படிக்க அந்த ஜாதகத்தில் வேறு நல்ல அம்சங்கள் ஏதேனும் உள்ளதா என்று பார்க்கவேண்டும் ஐயா, நன்றி ஐயா

    ReplyDelete
  5. sir,

    when are the books are available?

    ReplyDelete
  6. Dear Sir,

    Could you please send me this post to my Email id:
    saravana221078@hotmail.com

    or

    Please let me know the process to access "Classroom2013", I will do it.

    Thanks
    Saravanan.S
    (Coimbatore)

    ReplyDelete
  7. Dear Sir, You are very very correct in my Jathakam Sani is in 8th Place, Meena lagnam,i feel the instability in my work an Business also and many more things

    ReplyDelete
  8. meena lagnamaga irunthu 8 ill sani ucha maga irucnthalum velaiyil instability irukkama sir?

    ReplyDelete
  9. Blogger அய்யர் said...
    வருகை பதிவு..
    வந்தவுடன் அறிந்தோம் ஒப்பீடு
    நம் பகுதியில் வழக்கத்திலுள்ளதை
    நம் முன்னோர் சொன்னது என
    அதை எண்ணியதும்
    அப்படியே வந்த பாடலினை
    வலமாக சுழல விடுகிறோம்
    வழக்கமான அனுமதியுடன்

    எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
    மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேல்
    கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
    ஆரையடா சொன்னாய் அது
    (இது ஔவையாரின் பாடல்)

    திரைப் பாடல்களை ஒடிப்பது போல அவ்வையாரின் பாடலையும் ஒடித்து விட்டீர்களே சுவாமி! அவ்வையாரின் பாடல்கள் எல்லாம் வெண்பாக்கள். 4 வரிகளில் அவற்றை எழுத வேண்டும். மேலே கொடுத்துள்ளேன்

    ReplyDelete
  10. /////Blogger Thava Kumaran said...
    குருவுக்கு வணக்கம்
    இன்றைய பாப்கார்ன் நல்லாருக்கு ஐயா..அடுத்த பதிவை எதிர்ப்பார்க்கிறேன்.நன்றி./////

    நல்லது. நன்றி நண்பரே1

    ReplyDelete
  11. /////Blogger Ak Ananth said...
    8ம் இடத்தில் இருக்கும் சனி பகவான் காரக பாவ நாசம் செய்ய மாட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் 7ம் பார்வையாக 2ம் இடத்தைப் பார்ப்பதால் குடும்ப சுபீட்சம் குறைவாக இருக்கும் என்றும் படித்திருக்கிறேன். சனி பகவான் 8ல் (வக்கிரம்) இருக்கும் ஒரே ஒரு ஜாதகம்தான் என்னிடம் உள்ளது. 25 வயதில் இறந்துப் போனவரின் ஜாதகம். அற்ப ஆயுளுக்கு காரணம் சனி பகவானின் வக்கிர கதிதான் என்ற முடிவுக்குதான் என்னால் வர முடிந்தது. அற்ப ஆயுள் என்பதற்கான வேறு கிரக நிலைகளும் இருந்தன. (பின்னூட்டத்தில் இவ்வளவுதான் சொல்ல முடியும்.)/////

    நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete

  12. /////Blogger Geetha Lakshmi A said...
    வணக்கம் ஐயா, என்னிடம் 8ல் சனி(வக்கிரம்),ராகுவுடன் உள்ள ஒரு ஜாதகம் உள்ளது.அந்த பெண் இன்ஃபொஸிஸ்ல் வேலை செய்கிறார்,அவருக்கு லக்னத்தில் சூரியன், புதன், செவ்வாய் உச்சம்,7ல் குரு உச்சம்,இரண்டு உச்சகிரகங்கள் பார்ப்பதும் சிற்ந்தது அல்ல,சனியும் 8ல் ராகுவுடன் வக்ர நிலையில் உள்ளார் அதுவும் சரியல்ல‌,2ல் சந்த்திரன் கேதுவுடன் உள்ளார்,12ல் சுக்கிரன் ஆனால் சந்தோசமாக வாழ்க்கை நடத்திக்கொண்டுள்ளார்.இன்னும் படிக்க படிக்க அந்த ஜாதகத்தில் வேறு நல்ல அம்சங்கள் ஏதேனும் உள்ளதா என்று பார்க்கவேண்டும் ஐயா, நன்றி ஐயா////

    ஆகா பாருங்கள். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  13. /////Blogger arul said...
    sir,
    when are the books are available?/////

    மே மாதம் அல்லது ஜூன் மாதத்தில் வெளியாகும்

    ReplyDelete
  14. /////Blogger Saravana said...
    Dear Sir,
    Could you please send me this post to my Email id:
    saravana221078@hotmail.com
    or
    Please let me know the process to access "Classroom2013", I will do it.
    Thanks
    Saravanan.S
    (Coimbatore)/////

    வகுப்பறைக்கு சராசரியாகத் தினமும் 4,000 பேர்கள் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். மின்னஞ்சலில் பாடங்களை அனுப்புவதெல்லாம் எப்படி சாத்தியம் சொல்லுங்கள்?
    Classroom2013 வகுப்பு உறுப்பினர்களுக்கு மட்டும்தான். அதன் விதிமுறைகளைத் தெரிந்து கொள்ள முதலில் உங்களைப் பற்றி எழுதுங்கள். இங்கே அல்ல! வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரிக்கு! பதிவின் முகப்பில் அது இருக்கிறது ராசா!

    ReplyDelete
  15. ////Blogger manikandan said...
    Dear Sir, You are very very correct in my Jathakam Sani is in 8th Place, Meena lagnam,i feel the instability in my work an Business also and many more things////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. /////Blogger Subbramania balaji said...
    meena lagnamaga irunthu 8 ill sani ucha maga irucnthalum velaiyil instability irukkama sir?////

    இப்படி உதிரியான கிரக நிலையை வைத்துக்கொண்டு எப்படிப் பதில் சொல்வது? லக்கினம் மற்றும் பத்தாம் வீடு சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களையும் பார்க்க வேண்டாமா?

    ReplyDelete
  17. /////Blogger sundari said...
    vanakkam sir,
    present sir,/////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  18. ///திரைப் பாடல்களை ஒடிப்பது போல அவ்வையாரின் பாடலையும் ஒடித்து விட்டீர்களே சுவாமி! ///

    வார்தைகளை ஒடிப்பதைவிட
    வரிகளை ஒடிப்பது பரவாயில்லைஎன

    அய்யர் வரிகளை தான்
    அப்படி ஒடித்துள்ளார்...

    சில மான்கள் இன்றைய
    சினிமாவில் இப்படி ஒடைத்துள்ளன.

    முதல்வனே வனே வனே வனே வனே
    முதல்வனே வனே வனே வனே வனே

    ReplyDelete
  19. ////Blogger அய்யர் said...
    ///திரைப் பாடல்களை ஒடிப்பது போல அவ்வையாரின் பாடலையும் ஒடித்து விட்டீர்களே சுவாமி! ///
    வார்தைகளை ஒடிப்பதைவிட
    வரிகளை ஒடிப்பது பரவாயில்லைஎன
    அய்யர் வரிகளை தான்
    அப்படி ஒடித்துள்ளார்...
    சில மான்கள் இன்றைய
    சினிமாவில் இப்படி ஒடைத்துள்ளன.
    முதல்வனே வனே வனே வனே வனே
    முதல்வனே வனே வனே வனே வனே/////

    எதை வேண்டுமென்றாலும் ஒடியுங்கள். தமிழன்னை ஒன்றும் கோபித்துகொள்ள மாட்டார்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com