மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.1.13

உள்ளத்திலே கட்டிய கோயிலும், வைத்த குடியும்!



உள்ளத்திலே கட்டிய கோயிலும், வைத்த குடியும்!

பக்தி மலர்

இன்றையப் பக்தி மலரை திருமதி 'பெங்களூர்' ரமணியம்மாள்  அவர்கள் பாடிய பாடலின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து இன்புறுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

--------------------------------------------------------
உள்ளத்திலே கோயில் கட்டி
உன்னை அங்கு குடிவைத்தேன்
எண்ணத்திலே தொட்டில் கட்டி
என்னரசே தாலாட்டினேன்
(உள்ளத்திலே)

கள்ளமில்லாத பிள்ளையப்பா
கருணையுள்ள தெய்வமப்பா
வாழ்வுதரும் கந்தப்பா
வந்தருள்வாய் வேலப்பா
(உள்ளத்திலே)

உன் புகழைப் பாடி வந்தேன்
உனதருளை நாடி நின்றேன்
ஓம்கார குருவே வா வா
உயர் ஞான குருவே வா வா
(உள்ளத்திலே)

தத்திமி தோம் என்று ஆடிவரும் வீரவேல்
தத்திமித்தோம் என்று ஆடிவரும் வீரவேல்
தஞ்சமென்றோர்க்கருள் தருமமிகு சக்திவேல்
தகதகிட தகதகிட என்றாடும் வெற்றிவேல்

தயவுடன் அன்பர்க்கு அருள்தரும் ஞானவேல்
தச்சதம் தகிடஜம் என்றாடும் வைரவேல்
தத்துவப் புகழ்பாடும் ஷண்முகன் கைவேல்
வெற்றிவேல் ... வீரவேல் ... சக்திவேல் ... ஷண்முகன் கைவேல்.

- பாடலைப் பாடியவர் 'பெங்களூர்' ரமணியம்மாள்



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

12 comments:

  1. பரதேகி மடிஅமர் பரமே -இந்தப்
    பரதேசி மனமதில் அமர்வாயே!
    முருகா! ஞானமுதல்வா!! இறைவா!!!

    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. கேட்க கேட்க தித்திக்காத அருமையான அய்யன் முருகன் பாடல் . நன்றி அய்யா

    ReplyDelete
  3. நல்ல‌ பாடல். ரமணியம்மாளின் கணீர் குரல் காதில் ஒலிக்கிறது.நன்றி ஐயா!

    ReplyDelete
  4. மிக அருமையான பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  5. என்னுடைய கட்டுரை 'இசைவிரும்பும் கூத்தனார்'என்ற தலைப்பில்
    தீபம் என்னும் ஆன்மீக மாதம் இருமுறை கல்கி குழும இதழில் (20 ஜனவரி 2013 தேயிட்டு இன்று 5 ஜனவரி 2013 சனிக்கிழமை அன்றே வெளியாகியுள்ளது)பிரசுரமாகியுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதில் பிர்ச்சுரமாகியுள்ள மூன்று புகைப்படங்களும் அடியேன் எடுத்ததுதான்.

    வாசித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூற வேண்டுகிறேன். 'தீபம் ஆன்லைன்' எடிஷன் உள்ளது.அது 'பெய்டு சேனலா' என்று பார்க்க வேண்டும்.

    நன்றி, வணக்கம்
    கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)

    கைபேசி:90475 16699
    தரைவழி 0431 2544699
    mail:kmrk1949@gmail.com



    ReplyDelete
  6. ////Blogger ஜி ஆலாசியம் said...
    பரதேகி மடிஅமர் பரமே -இந்தப்
    பரதேசி மனமதில் அமர்வாயே!
    முருகா! ஞானமுதல்வா!! இறைவா!!!
    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  7. ////Blogger Gnanam Sekar said...
    கேட்க கேட்க தித்திக்காத அருமையான அய்யன் முருகன் பாடல் . நன்றி அய்யா/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. ////Blogger kmr.krishnan said...
    நல்ல‌ பாடல். ரமணியம்மாளின் கணீர் குரல் காதில் ஒலிக்கிறது.நன்றி ஐயா!/////

    ஆமாம். நல்ல குரல்வளமும், இறையருளும் மிக்கவர் அவர்! நன்றி!

    ReplyDelete
  9. ////Blogger அய்யர் said...
    முருகா..
    முருகா..////

    கந்தா!
    கடம்பா!
    கதிர்வேலா!
    கார்த்திகேயா!

    ReplyDelete
  10. /////Blogger Parvathy Ramachandran said...
    மிக அருமையான பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!!

    ReplyDelete
  11. ////kmr.krishnan has left a new comment on your post "உள்ளத்திலே கட்டிய கோயிலும், வைத்த குடியும்!":
    என்னுடைய கட்டுரை 'இசைவிரும்பும் கூத்தனார்'என்ற தலைப்பில்
    தீபம் என்னும் ஆன்மீக மாதம் இருமுறை கல்கி குழும இதழில் (20 ஜனவரி 2013 தேயிட்டு இன்று 5 ஜனவரி 2013 சனிக்கிழமை அன்றே வெளியாகியுள்ளது)பிரசுரமாகியுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    அதில் பிரசுரமாகியுள்ள மூன்று புகைப்படங்களும் அடியேன் எடுத்ததுதான்.
    வாசித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூற வேண்டுகிறேன். 'தீபம் ஆன்லைன்' எடிஷன் உள்ளது.அது 'பெய்டு சேனலா' என்று பார்க்க வேண்டும்.
    நன்றி, வணக்கம்
    கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)//////

    தகவலுக்கு நன்றி. படித்துப் பார்த்துவிட்டுக் கருத்தை எழுதுகிறேன். நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com