மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.1.13

Astrology: பண்டிட் ஜவஹர்லால் நேருவின் ஜாதகம்!



 Astrology: பண்டிட் ஜவஹர்லால் நேருவின் ஜாதகம்!

அலசல் பாடம்

நமது முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் ஜாதகத்தை இன்று அலசுவோம். எல்லாம் ஒரு பயிற்சிக்காகத்தான் சாமிகளா!

பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள்
பிறந்தது 14 நவம்பர் 1889ஆம் ஆண்டு
இயற்கை எய்தியது 27 மே 1964ஆம் ஆண்டு
வாழ்ந்த காலம் சுமார் 74 ஆண்டுகள்
மனைவியின் பெயர்: திருமதி கமலா நேரு
மகளின் பெயர்: திருமதி இந்திரா காந்தி
மேல் படிப்புப் படித்தது. இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில். வழக்குரைஞர் பட்டம்
இந்தியாவின் முதல் பிரதமர் என்னும் பெருமைக்கு உரியவர் அவர். அந்தப் பதவியில் இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து, அதாவது 15 ஆகஸ்ட் 1947ஆம் ஆண்டில் இருந்து, காலமாகும் வரை, அதாவது 27 மே 1964ஆம் ஆண்டு வரை, சுமார் 17 ஆண்டுகள் அந்தப் பதவிக்குப் பெருமை சேர்த்தவர்.
----------------------------------
அவரைப் பற்றிய மேலதிகத்தகவல்கள் விக்கி மகாராஜவிடம் கிடைக்கும். அதற்கான சுட்டி:
http://en.wikipedia.org/wiki/Jawaharlal_Nehru
--------------------------------------------


---------------------------------------------------------------------------------------------
 பிறப்பு விவரம்
1889ஆம் ஆண்டு நவம்பர்மாதம் 14ம் தேதி
நேரம் இரவு 11.20 மணி
பிறந்த ஊர்: அலஹாபாத்
Allahabad: Latitude 25.28' N Longitude    81.54' E
கர்ப்பச்செல் இருப்பு புதன் திசையில் 13 ஆண்டுகள் 4 மாதங்கள் 20 நாட்கள்
பெற்றோர்கள்: மோதிலால் நேரு - ஸ்வரூபராணி
----------------------------------------------------
1. சுபக் கிரகங்களான சந்திரன், சுக்கிரன், குரு ஆகிய மூன்றும் தங்களுடைய சொந்த வீட்டில் அமர்ந்து, ஜாதகருக்கு ராஜ யோகத்தைக் கொடுத்தன. ஜாதகர்
பிறந்தது மிகப் பெரிய செல்வந்தர் வீட்டில்.

2. லக்கினத்தில் இருக்கும் சந்திரன் அவருக்கு அழகான தோற்றத்தைக் கொடுத்தது.

3. நான்காம் வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் சுக்கிரன், அவருக்கு வாழ்க்கையில் எல்லா வசதிகளையும், வீடு வாசல், பங்களா, சொத்து, சுகம் என்று எல்லாவற்றையும் வாரி வழங்கியது. அத்துடன் அது கேந்திர ஸ்தானம் அதையும் மனதில் கொள்க!

4. மற்றும் ஒரு கேந்திர ஸ்தானமான பத்தாம் வீட்டை, அதன் அதிபதி செவ்வாய் தனது விஷேசப் பார்வையில் வைத்திருப்பதைப் பாருங்கள். அது அவரை நாட்டின் பிரதமர் பதவியில் கொண்டுபோய் அமரவைத்தது.

5. காலசர்ப்பயோக ஜாதகம். அதுவும் கேது கொடிபிடிக்கும் காலசர்ப்பயோகம். சின்ன வயதிலும், மத்திய வயதிலும் அது அவரைப் பல சிரமங்களுக்கு
ஆளாக்கியது. அரசை எதிர்த்துப் போராட்டம், சிறை வாழ்க்கை என்று அனுபவிக்காத துயரங்களே இல்லை!

6. ஐந்தாம் வீட்டில் இருக்கும் சூரியன் சுப கர்த்தாரி யோகத்துடன் இருப்பதைப் பாருங்கள். ஒரு பக்கம் சுக்கிரனும், புதனும். மறுபக்கம் குரு. சுபயோகத்துடன்
இருக்கும் சூரியன் அவரை மக்களிடையே பிரபலப் படுத்தியதுடன், அவரைத் தேசியத் தலைவராக்கியதுடன், பிரதமராகவும் ஆக்கி, உலகப் புகழ் பெற் வைத்தது.

7. இரண்டில் இருக்கும் சனி, அவரைச் சிறந்த பேச்சாளராக்கியது. அது வாக்கு ஸ்தானம். சனி கர்மகாரகன்.

8. 4ஆம் வீடும், 5ஆம் வீடும் சிறப்பாக அமைந்ததால் அவர் உயர் கல்வி பெற்றார். லண்டனில் படித்தார். தனது 23ஆவது வயதில் பாரிஸ்டர் பட்டம் பெற்று வழக்குரைஞரானார்.

9. சூரியனின் சுயவர்க்கப் பரல்கள் 2 மட்டுமே. சூரியன் பலவீனமாக இருந்ததால் அவருக்கு அன்றைய அரசுடன் சுமூகமான உறவு இல்லை. 35 ஆண்டுகள்  தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் தந்தையிடமும் சுமூகமான உறவு இல்லை. அவர் சொல்லைக்கேட்டு வக்கீல் வேலை பார்க்காமல் அரசியலில் தீவிர ஈடுபாட்டுடன் இருந்தார். சுருக்கமாகச் சொன்னால் இரண்டு பரல்களுடன் பலவீனமாக இருந்த சூரியன் அதைச் செய்தது.

10. லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்தில் இருந்ததுடன், தன் சுயவர்க்கத்தில் 5 பரல்களுடன் பலமாக இருந்து அவருக்கு மன வலிமையையும், நியாயத்திற்குப் போராடும் துணிச்சலையும் கொடுத்தது.

11. அதே சந்திரன்தான், தன்னுடைய மகாதிசையில், அவருடைய வாழ்க்கை மேன்மையடையச் செய்ததுடன், அவரைப் பிரதமர் பதவியிலும் அமர வைத்து அழகு  பார்த்தது. (சந்திர திசை 4.4.1946 முதல் 4.4.1956 வரை)

12. அடுத்து வந்த செவ்வாய் திசையும் அவருக்குத் தன் வலிமையான அமைப்பினால் (சுயவர்க்கத்தில் 6 பரல்கள்) அவரைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடிக்க வைத்தது.

13. செவ்வாய் மூன்றாம் வீட்டில் 6 பரல்களுடன் வலிமையாக இருந்தது. கடக லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன். யோககாரகன் செவ்வாய் அவருக்கு
கட்சியிலும் சரி, கடைசியாக இருந்த ஆங்கில வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபுவிடமும் சரி நல்ல உறவுகளை ஏற்படுத்திக்கொடுத்தது. செல்வாக்கும், புகழும் பெற்றார். அத்துடன் பிரதமர் பதவியிலும் அமர்ந்து உலகப் புகழ் பெற்றார். காந்தீஜியின் அதீத அன்பை அவர் பெற்றதற்குக் காரணம் இந்த யோகக்காரகன்தான்.

14. செவ்வாய் திசை 4.4.1956 முதல் 4.4.1963 வரை. அந்தக் காலகட்டத்தில் அவர் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தினார். அத்துடன் அரசு சார்பில் பல
பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி ஏராளமான பேர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடிததார். வலுவாக இருந்த யோககாரகன் அதைச் செவ்வனே செய்தான்.

15. புதன் 7 பரல்களுடன் கேந்திர வீட்டில் வலுவாக இருப்பதைக் கவனியுங்கள். அவர் எடுத்துச் செய்த அத்தனை செயல்களிலும் வெற்றியைத் தேடிக்
கொடுத்ததும் உயர் கல்வியைக் கொடுத்ததும் அந்த புதன்தான்.

16. குரு 5 பரல்களுடன் ஆறாம் வீட்டில் இருந்ததால், அவருக்கு உண்டான எதிர்ப்புக்களையும், எதிரிகளையும் அவரால் துவம்சம் செய்ய முடிந்தது.

17. 4ல் இருக்கும் சுக்கிரன் 6 பரல்களுடன் வலிமையாக உள்ளார். நேருவிற்கு ரசனை உணர்வுகளையும், கலைகளில் ஆர்வத்தையும் அவர் ஏற்படுத்தினார்.
அத்துடன் அவரைச் சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளாரகவும் அவர் ஆக்கினார்.

18. 12ஆம் வீட்டில் (விரைய ஸ்தானத்தில்) ராகு இருப்பது மோசமான அமைப்பே! காத்திருந்த ராகு தன் திசை துவங்கியவுடன், அவருக்கு நோயை உண்டாக்கி, மரணத்தையும் கொடுத்தான். ராகு சனியைப் போல செயல்படுவான். 2 அல்லது 7ஆம் அதிபதிதான் மரணத்தைத் தருவார் என்பது ஜோதிட விதி. ஏழாம் அதிபதி சனியின் வேலையை விரைய ராகு செய்து முடித்தான். 27.5.1964 அன்று அவர் காலமானார். அவர் இறந்த தேதியன்று கோச்சார சனி எட்டில். லக்கினாதிபதி சந்திரன் அந்தத் தேதியில் நீசமாக இருந்தான்.

அலசல் போதுமா?

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------------------------

குழந்தைப் பருவத்தில் நேரு தன் பெற்றோர்களுடன்

சிறுவனாக இருந்தபோது எடுத்த படம்

வழக்குரைஞராக இருந்த காலத்த்யில் எடுக்கப்பெற்ற படம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

58 comments:

  1. In JawaharLal Nehru's horoscope:
    I see these points as well:
    Both lagna and lagna lord moon are hemmed between malefics (Saturn & Rahu) Papa kartari yog. I don't know if this papa kartari yog really gave any effect.

    His good speech was due to Jupiter's aspect on saturn in 2nd house and 2nd house lord being strong in the 5th house.

    ReplyDelete
  2. அலசல் போதும் ஆசான்.வெகு நாட்கள் பிறகு ஒரு நல்ல பாடம்,மிக்க நன்றி.

    ReplyDelete
  3. Thanks for this valuable lessons Sir. Looking for more such articles from you.

    ReplyDelete
  4. Sir,,
    5 planets more than 5 parals. Ithuvallava raja yogam.

    very good explanations. Thanks a lot sir. For above question, (lagna and lagnathypathy in paaba karthari yogam) lagnathypathy has 6 parals and lagnam has 30 parals. May be that could be the reason. And in one of your previous lesson, you said , if 9, 10, 11 houses are good, we can close the horo as the native should be successful person.

    Excellent lesson sir. Nandrigal pala.

    ReplyDelete
  5. பெயரை சொல்லாமல்
    ஜாதக அலசல் இருந்தால் நன்றாயிருந்திருக்கும்

    மோதிலால் என சொல்லாமல்
    நேருவெனசொன்னது தேர்தல்நேரத்தில்

    ஒட்டி வந்த
    பெட்டியோ என நினைத்தோம்..

    அலசல்
    என்ற வகையில்
    எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது
    4, 5ஆம் வீடு தான்..

    ReplyDelete
  6. lakanthirku 2 pakkumum pavagraham ullatu .

    ReplyDelete
  7. அன்பு வாத்தியாரே. அலசல் மிக மிக அருமை. பல அலசல்கள் பார்த்துள்ளோம். அவற்றில் மிகச்சிறந்த அலசல் இரண்டு. ஒன்று மகா பெரியவர். இன்னொன்று இங்கே. மற்றவைகளும் அருமை.

    Flight அவர்களே, //வெகு நாட்கள் பிறகு ஒரு நல்ல பாடம்// என்கிறீர்களே, அப்போ இதற்கு முன் வந்த பாடங்கள் நல்ல பாடங்கள் இல்லையா? அது எப்படி வாத்தியாரை அப்படி நீங்கள் கொள்ளலாம்? சொல்லலாம்? எள்ளலாம்? மனதில் உள்ளலாம்? மற்ற பாடங்களை தள்ளலாம்? கண்டனம் அள்ளலாம்? :-))))))))))))))))

    புவனேஷ்

    ReplyDelete
  8. I beg to disagree with Unknown. Kethu is with Guru. Guru is the 6th Lord as well as 9th Lord. But I guess in this case he would act as a 6th Lord, as Kethu is with him in own th house. As far as 6th house is concerned, the worse its state, the better. So the aspect of Guru might not be beneficial, on the contrary it might have won him foes.

    Vaathiyaar may clear our doubt.
    +++++

    The fact that 12th Lord and Venus are sitting together in 4th house may have given him unbridled sexual indulgence, as we all know. What say?

    ReplyDelete
  9. அருமையான பாடம். அவர் பிறந்த நாளில் நான் பிற‌ந்ததால் அவருடை பேர் கிடைத்தது.. ஆனால் கிடைக்க வேண்டியது???... இன்னும் என் கட்டத்தை அலச வேண்டும்.. நீங்கள் தான் நேரமிருப்பின் அலச வேண்டுகிறேன்.
    -ஜவகர் கோவிந்தராஜ்

    ReplyDelete
  10. வேலை பளு காரனமாக நீண்ட நாட்களாக வகுப்புக்கு வந்தும் கருத்துக்கள் எதையும் பதிவிடவில்லை. இன்றைய அலசல் பாடம் அருமை. சகல விஷயங்களையும் அலசி பளிச்சென்று காட்டிய வாத்தியாருக்கு நன்றிகள்

    ReplyDelete
  11. நல்ல பதிவுக்கு நன்றி அய்யா!

    படிப்புக்கான காரகன் புதன் 4 என்ற படிப்பூக்கான‌ பாவத்திலேயே நின்றதால் படிப்பு கெட்டு இருக்க வேண்டாமா? எப்படி படிப்பு நன்றாக வந்தது?

    ReplyDelete
  12. Excellent krishnan sir. Very good question. I just noticed that. Kaaragar veetil irunthal paava naasam.

    Sir, nehru completed his higher studies very successful and got award. So some other aspect has over come that. Pl explain sir.

    ReplyDelete
  13. Dear Sir,
    Can u please clarify our doubt? When u said karmakaraka sani gave him good speech? How is it possible? Good speech might be due to strong 2nd lord in 5th and jupiter's aspect on 2nd house and sani.

    I am unclear about jupiter's role here? I am of the opinion that guru's aspect always does good to the houses and planet's being aspected irrespective of dusthana bhav ownership. Guru being strongly placed in 6th bhav suggests that his opponents were equally stron as the native.

    Guru chandal yog would have given him unconventional views about religion & spirituality. His western edu in those times reaffirms the result of guru chandal yog.

    Also 7th lord being placed in 8th from 7th house resulted in unhappy marital life.

    ReplyDelete
  14. Athe pol thunichal karagar sevvai sits in third place. Still he is too brave. Here also the above rule is not matching.

    ReplyDelete
  15. வணக்கம் ஐயா,7ம் வீட்டில் 18 பரல்கள் உள்ளதால் அவருக்கு திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு என்ன?இல்லை சந்திரனின் பார்வையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லையா?

    5ம் வீட்டில் 21 பரல்கள்,24 பரல்களுக்கு குறைவாக உள்ளது, அதனால் ஏற்பட்ட பாதிப்பு என்ன?

    லக்னத்தின் இருபக்கத்திலும் தீய கிரகங்கள் உள்ளன, லக்ன அதிபன் 5 பரல்கள் பெற்று லக்னம் 30பரல்களுடன் இருப்பதால் தீய கிரகங்களால் பாதிப்பு ஏற்படவில்லை என்று வைத்துக்கொள்ளலாமா?

    இந்த மூன்று சந்தேகங்களையும் தீர்த்து வையுங்கள் ஐயா.

    ந‌ன்றி ஐயா.








    ReplyDelete
  16. கீதா லக்ஷ்மி அவர்கள் சொன்னது சுவாரஸ்யமாக இருந்தது. நான் உட்கார்ந்து பார்த்தேன். எது ஏன் சிற்றறிவுக்கு பட்டது:

    1. ஏழாம் வீட்டு அதிபர் யார்? சனைச்சரன். அவர் எங்கே இருக்கிறார்? இரண்டாம் வீட்டில். அது யார் வீடு? சூரியன் வீடு சிம்மம். கடும் பகைவனின் வீடு. கேதுவோடு கூட்டணி போட்ட ஆறாம் அதிபதியான குருவின் பார்வை வேறு. இரண்டாம் வீடு ஏழாம் அதிபனைக்கொண்டு வரின் மனைவி வகையில் நன்மைகள் என்பார்கள். இவருக்கு அங்ஙனம் ஏதும் வந்தாற்போல தெரியவில்லை. இவருடைய வாக்கு வன்மையால் இவர் ஒருபக்கம் புகழ் பெற்றார் என்றாலும் மறுபக்கம் தன பெயரை கெடுத்துக்கொண்டார் எனலாம். பாரபக்ஷம் இல்லாமல் தான் நாம் பேச வேண்டும். சமூகத்தின் எல்லா அங்கத்தினரிடமும் இவருக்கு அன்று நல்ல பெயர் இருக்கவில்லை.

    லக்கினத்தில் சந்திரன். இவர் அழகர். மனைவியும் இவர் அழகென்று நினைத்திருப்பார், ஏனென்றால் ஏழுக்கு எழில் சந்திரன் ஆட்சியில். என்ன இப்போ? :-)))))))))))


    2. ஐந்தாம் வீட்டில் 21 பரல்கள் தான். சரி. இங்கே அவர் மனைவி ஜாதகம் இல்லை. இவர் ராசி சக்கரத்திலேயே, மனைவியை குறிக்கும் ஏழாம் வீட்டிற்கு ஐந்தாம் வீடான பதினொன்றாம் வீட்டில் 34 பரல்கள். குழந்தைப்பேற்றை பொறுத்த வரை அது ஈடு கட்டி விடும். ஐந்தாம் வீடு நுண்ணறிவு குறிக்கும் இடம் அல்லவா? இவர் நுண்ணறிவு எப்படி இருந்தது? வெளிநாட்டு கலாசாரத்தை பிடித்து கொண்டு நம் கலாச்சாரத்தை இகழ்ந்தவர் தானே? ஒரு வேளைஐந்தாம் வீடு காரணமாக இருக்குமோ? இல்லை நுண்ணறிவுக்கு காரகனான குருவுடன் கேது சேர்க்கையால் இருக்குமோ? பொதுவாக ஐந்தாம் இடம் வீக்காக/குரு நல்ல நிலைமையில் இல்லாமல்/தீயன பண்ணும் வகையில் இருந்தால் இவர்களுக்கு பூர்வ புண்ணியம் குறைவு. குலதெய்வ அருள் இருக்காது. அதிலும் குரு ஆறாம் வீட்டு அதிபதி என்பதால் தானோ என்னமோ இவர் பிராமண குடும்பத்தில் உதித்தாலும் ஹிந்து மதத்துக்கு எதிராகவே இருந்தார். அதை நினைவில் வையுங்கள். இது எனது தனிப்பட்ட கருத்து. இங்கே தயவு செய்து சண்டை சர்ச்சை வேண்டாம்.

    +++++

    மூன்றாவது கேள்வியை வாத்தியாரிடம் நானும் கேட்கிறேன்.

    +++++

    அதே போல, இன்னொரு சந்தேகம் சூரியனுக்கு உண்மையில் சுபகர்த்தாரி யோகமா? சுற்றி இருப்பவர்கள் யார்? இரண்டு துற ஸ்தானஅதிபதிகள். பன்னிரண்டாம் அதிபனும் (புதனும்) ஆறாம் அதிபனும், கேதுவும். Are there not more reasons to consider this a paapa-karthaari Yogam than a subha karthaari yogam? Does not the scale albeit ever so slightly tilt in favour of negative side?

    +++++

    ஏற்கெனவே வாழ்ந்து மடிந்த ஒருத்தனுடைய ஜாதகத்தை நாம் அலசுவது கொஞ்சம் ஜாக்ரதையாக கையாளப்பட வேண்டிய விஷயம். ஏனென்றால், அவர் வாழ்வில் நடந்தேறிய விஷயங்கள் நமக்கு தெரியும். அதனால்,கு இது தான் காரணம் என்று பார்ப்போம். இனி தான் ஒருத்தன் வாழப்போகிறான் என்கிற போது அந்த luxury நமக்கு கிடைக்காது. இல்லையா?

    +++++

    அன்புடன்
    புவனேஷ்வர்

    _______

    ReplyDelete
  17. //////Blogger Unknown said...
    In JawaharLal Nehru's horoscope:
    I see these points as well:
    Both lagna and lagna lord moon are hemmed between malefics (Saturn & Rahu) Papa kartari yog. I don't know if this papa kartari yog really gave any effect.
    His good speech was due to Jupiter's aspect on saturn in 2nd house and 2nd house lord being strong in the 5th house./////

    லக்கினம் பாபகர்த்தாரியில் மாட்டிக்கோண்டதால், ஜாதகனின் வாழ்க்கையை 57 ஆண்டுகள் வரை போர்ராட்டம் நிறைந்ததாக, ஓய்வு இல்லாததாக, சிறைவாழ்க்கை, அரசு எதிர்ப்பு நிறைந்ததாகச் செய்ததே சுவாமி!
    நாக்கில் சனி என்பார்களே கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது வாக்கில் சனி என்று பொருள்படும். இரண்டாம் இடத்து சனிக்கு அந்தச் செயல்பாடு உண்டு! பேச்சுத் திறமைக்கு அங்கே அமர்கிறவன் முக்கியமில்லையா? யோசித்துப்பருங்கள்!

    ReplyDelete
  18. /////Blogger Flight said...
    அலசல் போதும் ஆசான்.வெகு நாட்கள் பிறகு ஒரு நல்ல பாடம்,மிக்க நன்றி.////

    அடிக்கடி இப்படிப் பதிவிட எனக்கும் ஆசைதான். ஆனால் திருட்டுப்போகிறதே! அதனால் இது போன்ற பாடங்கள் மேல்நிலை வகுப்பில் மட்டுமே அதிகமாக வரும். அது பயனாளர் பெயர் மற்றும் கடவுச் சொல் ஆகியவற்றுடன் இருக்கும். அதில் வருகின்ற பாடங்கள் புத்தகமாக வரும்போது அனைவரும் படிக்கலாம்!

    ReplyDelete
  19. /////Blogger Unknown said...
    Thanks for this valuable lessons Sir. Looking for more such articles from you./////

    மேலே உள்ள பின்னூட்டத்திற்கான பதிலை நீங்களும் படித்துப் பாருங்கள்!

    ReplyDelete

  20. ////Blogger ஸ்கூல் பையன் said...
    நல்ல அலசல்... நன்றி...////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. //////Blogger KJ said...
    Sir,,
    5 planets more than 5 parals. Ithuvallava raja yogam.
    very good explanations. Thanks a lot sir. For above question, (lagna and lagnathypathy in paaba karthari yogam) lagnathypathy has 6 parals and lagnam has 30 parals. May be that could be the reason. And in one of your previous lesson, you said , if 9, 10, 11 houses are good, we can close the horo as the native should be successful person.
    Excellent lesson sir. Nandrigal pala./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. /////Blogger arul said...
    miga arumayana padam/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி அருள்!

    ReplyDelete
  23. /////Blogger eswari sekar said...
    vanakam sir super sir padam .thankyou.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!!

    ReplyDelete
  24. ////Blogger அய்யர் said...
    பெயரை சொல்லாமல்
    ஜாதக அலசல் இருந்தால் நன்றாயிருந்திருக்கும்
    மோதிலால் என சொல்லாமல்
    நேருவெனசொன்னது தேர்தல்நேரத்தில்
    ஒட்டி வந்த
    பெட்டியோ என நினைத்தோம்..
    அலசல்
    என்ற வகையில்
    எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது
    4, 5ஆம் வீடு தான்./////.

    ஆமாம். சுபகர்த்தாரி யோகம் என்பது எல்லோருக்கும் கிடைக்காது. அது ஒரு அரிய யோகம்!

    ReplyDelete
  25. ////Blogger manikandaprakash said...
    nalla alasal////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. ////Blogger eswari sekar said...
    lakanthirku 2 pakkumum pavagraham ullatu .////

    ஆமாம். அது பாப்கர்த்தாரி யோகம். ஜாதகரை 57 வயதுவரை முடக்கி வைத்தது அதுதான்!

    ReplyDelete
  27. ஆஹா ஆஹா பாயின்ட் பாயின்ட்.

    தலைமை கிரகமான ராஜாங்கத்தை குறிக்கும் சூரியனின் வீட்டை ஆறாம் அதிபதி பார்ப்பதினால் தான் இவர் ராஜாங்கத்தை எதிர்த்தாரா? ஆறாம் வீடு வெற்றி கொள்ள கூடிய எதிரி ஆறாம் வீடு இலாகா அல்லவா? அதனால் வெற்றி உண்டாயிற்றோ?

    கெக்கே பிக்கே என்று உளறுகிறேனோ?
    ++++
    புவனேஷ்

    ReplyDelete
  28. /////Blogger Bhuvaneshwar said...
    அன்பு வாத்தியாரே. அலசல் மிக மிக அருமை. பல அலசல்கள் பார்த்துள்ளோம். அவற்றில் மிகச்சிறந்த அலசல் இரண்டு. ஒன்று மகா பெரியவர். இன்னொன்று இங்கே. மற்றவைகளும் அருமை.
    Flight அவர்களே, //வெகு நாட்கள் பிறகு ஒரு நல்ல பாடம்// என்கிறீர்களே, அப்போ இதற்கு முன் வந்த பாடங்கள் நல்ல பாடங்கள் இல்லையா? அது எப்படி வாத்தியாரை அப்படி நீங்கள் கொள்ளலாம்? சொல்லலாம்? எள்ளலாம்? மனதில் உள்ளலாம்? மற்ற பாடங்களை தள்ளலாம்? கண்டனம் அள்ளலாம்? :-))))))))))))))))
    புவனேஷ்/////

    அவர் சாதாரணமாகத்தான் சொல்லியிருக்கிறார். நீங்கள்தான் டார்ச் அடித்துக் காட்டுகிறீர்கள்:-)))))))

    ReplyDelete

  29. /////Blogger Bhuvaneshwar said...
    I beg to disagree with Unknown. Kethu is with Guru. Guru is the 6th Lord as well as 9th Lord. But I guess in this case he would act as a 6th Lord, as Kethu is with him in own th house. As far as 6th house is concerned, the worse its state, the better. So the aspect of Guru might not be beneficial, on the contrary it might have won him foes.
    Vaathiyaar may clear our doubt.
    +++++
    The fact that 12th Lord and Venus are sitting together in 4th house may have given him unbridled sexual indulgence, as we all know. What say?/////

    குருவும் கேதுவும் சேர்ந்தால் சண்டாள யோகம். தனது எதிரிகளை துவம்சம் செய்ய அந்த வீட்டுக்காரன் குருவிற்கு கேதுவும் உதவினார்! ஒரு தேசியத் தலைவரின் சொந்த வாழ்க்கையை, குணாதிசயத்தை, அலசுவது நாகரீகமல்ல!

    ReplyDelete
  30. ////Blogger Jawahar Govindaraj said...
    அருமையான பாடம். அவர் பிறந்த நாளில் நான் பிற‌ந்ததால் அவருடை பேர் கிடைத்தது.. ஆனால் கிடைக்க வேண்டியது???... இன்னும் என் கட்டத்தை அலச வேண்டும்.. நீங்கள் தான் நேரமிருப்பின் அலச வேண்டுகிறேன்.
    -ஜவகர் கோவிந்தராஜ்/////

    குமுதம் (முன்னாள்) ஆசிரியர் திரு.எஸ்.ஏ.பி. அண்ணாமலை அவர்கள் தன் மகனுக்கும் அதே காரணத்தினால்தான் ஜவஹர் பழநியப்பன் என்று பெயர் வைத்தாராம். அந்த ஜவஹர் பழனியப்பன் அவர்கள் இன்று அமெரிக்காவின் முன்னனி வைத்தியர்களில் ஒருவர். இதய அறுவை சிகிச்சை நிபுணர்!

    ReplyDelete
  31. ////Blogger thanusu said...
    வேலை பளு காரனமாக நீண்ட நாட்களாக வகுப்புக்கு வந்தும் கருத்துக்கள் எதையும் பதிவிடவில்லை. இன்றைய அலசல் பாடம் அருமை. சகல விஷயங்களையும் அலசி பளிச்சென்று காட்டிய வாத்தியாருக்கு நன்றிகள்////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி தனுசு!

    ReplyDelete
  32. /////Blogger kmr.krishnan said...
    நல்ல பதிவுக்கு நன்றி அய்யா!
    படிப்புக்கான காரகன் புதன் 4 என்ற படிப்பூக்கான‌ பாவத்திலேயே நின்றதால் படிப்பு கெட்டு இருக்க வேண்டாமா? எப்படி படிப்பு நன்றாக வந்தது?/////

    மனைவி கெட்டிக்காரியாக இருந்தால், கணவனைக் கூடையில் தூக்கிவைத்துக்கொண்டு குடும்பத்தை சிறப்பாக நடத்துவதில்லையா? அதுபோலத்தான் இதுவும். உயர்கல்விக்கான ஐந்தாம் வீடு அற்புதமாக இருந்ததால், அவர் கூடையில் வைத்து உதவி செய்தார். அது மட்டுமல்ல. 4ஆம் வீட்டில் 30 பரல்கள் உள்ளன. அதன் அதிபதி சுக்கிரன் ஆட்சி பலத்துடன் உள்ளார் அத்துடன் சுயவர்க்கத்தில் அவருக்கு 6 பரல்கள். புதனாருக்கு 7 பரல்கள். அவற்றையும் கணக்கில் சேர்த்துக்கொள்ளுங்கள் சுவாமி. இப்போது விடை கிடைக்கும்.

    ReplyDelete
  33. ////Blogger KJ said...
    Excellent krishnan sir. Very good question. I just noticed that. Kaaragar veetil irunthal paava naasam.
    Sir, nehru completed his higher studies very successful and got award. So some other aspect has over come that. Pl explain sir./////

    கிருஷ்ணன் சாருக்கு அளித்துள்ள பதில்தான் உங்களுக்கும். அதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் நண்பரே!

    ReplyDelete
  34. /////Blogger Sathyanarayanan said...
    Dear Sir,
    Can u please clarify our doubt? When u said karmakaraka sani gave him good speech? How is it possible? Good speech might be due to strong 2nd lord in 5th and jupiter's aspect on 2nd house and sani.
    I am unclear about jupiter's role here? I am of the opinion that guru's aspect always does good to the houses and planet's being aspected irrespective of dusthana bhav ownership. Guru being strongly placed in 6th bhav suggests that his opponents were equally stron as the native.
    Guru chandal yog would have given him unconventional views about religion & spirituality. His western edu in those times reaffirms the result of guru chandal yog.
    Also 7th lord being placed in 8th from 7th house resulted in unhappy marital life./////

    நாக்கில் சனி என்பார்களே கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது வாக்கில் சனி என்று பொருள்படும். இரண்டாம் இடத்து சனிக்கு அந்தச் செயல்பாடு உண்டு! பேச்சுத் திறமைக்கு அங்கே அமர்கிறவன் முக்கியமில்லையா? யோசித்துப்பருங்கள்! அவருடைய ஜாதகத்தில் 5 கிரகங்கள் வலிமையாக உள்ளன. அதில் மூன்று சுபக்கிரகங்களும் (குரு, சந்திரன், சுக்கிரன்) அடக்கம். அவைகள் ஜாதகருக்கு எல்லா நன்மைகளையும் வாரி வழங்கின! unconventional views about religion & spirituality என்பது உண்மை! ஒரு தேசியத் தலைவரின் சொந்த வாழ்க்கையை, குணாதிசயத்தை, அலசுவது நாகரீகமல்ல! அதனால் உங்களுடைய கடைசிக்குறிப்பிற்கு நான் பதில் சொல்லவில்லை!

    ReplyDelete
  35. ////Blogger KJ said...
    Athe pol thunichal karagar sevvai sits in third place. Still he is too brave. Here also the above rule is not matching./////

    செவ்வாய் மூன்றில் (தைரிய ஸ்தானம்) இருந்தால் துணிச்சல் இருக்காதா? யார் சொன்னது?

    ReplyDelete
  36. /////Blogger Geetha Lakshmi A said...
    வணக்கம் ஐயா,7ம் வீட்டில் 18 பரல்கள் உள்ளதால் அவருக்கு திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு என்ன?இல்லை சந்திரனின் பார்வையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லையா?
    5ம் வீட்டில் 21 பரல்கள்,24 பரல்களுக்கு குறைவாக உள்ளது, அதனால் ஏற்பட்ட பாதிப்பு என்ன?
    லக்னத்தின் இருபக்கத்திலும் தீய கிரகங்கள் உள்ளன, லக்ன அதிபன் 5 பரல்கள் பெற்று லக்னம் 30பரல்களுடன் இருப்பதால் தீய கிரகங்களால் பாதிப்பு ஏற்படவில்லை என்று வைத்துக்கொள்ளலாமா?
    இந்த மூன்று சந்தேகங்களையும் தீர்த்து வையுங்கள் ஐயா.
    ந‌ன்றி ஐயா./////

    ஒரு உயர்ந்த தேசியத் தலைவரின் சொந்த வாழ்க்கையை (personal life) அலசுவது நகரீகமல்ல! அவருக்குத் திருமணமாகி, இந்திரா பிரியதர்சினி என்ற் மகளும் இருந்தார். பிற்காலத்தில் தன் தந்தையைப் போலவே இந்த மண்ணின் பிரதமராக இருந்து 17ஆண்டு காலம் ஆட்சி பீடத்தை அலங்கரித்தார். பல சாதனைகள் புரிந்தார். 7ஆம் வீடு, 5ஆம் வீட்டுப் பரல்களை வைத்துப் பார்த்தால் இது சரியாகப்படாது. அவர் ஜாதகத்தில் 5 கிரகங்கள் தங்கள் சுயவர்க்கத்தில் அதிகமான பரல்களுடன் வலிமையாக இருந்தன. அதைப் பாருங்கள். காரனம் புரியும்!

    ReplyDelete
  37. செவ்வாய் மூன்றில் (தைரிய ஸ்தானம்) இருந்தால் துணிச்சல் இருக்காதா? யார் சொன்னது?

    தயவு செய்து இதை விளக்குங்கள் ஐயா. துணிச்சலுக்கு காரகர் செவ்வாய் தானே? துணிச்சலுக்கான வீடு மூன்றாம் வீடு அல்லவா? அப்போது "காரகோ பாவ நாஸ்தி" ஆகாதா?

    இதில் வேறு எதாவது சூட்சுமம் இருக்கிறதா?

    தெரியாமல் தான் கேட்கிறேன். குதர்க்கம் எல்லாம் இல்லை.

    புவனேஷ்

    ReplyDelete
  38. //ஒரு உயர்ந்த தேசியத் தலைவரின் சொந்த வாழ்க்கையை (personal life) அலசுவது நகரீகமல்ல//

    அலசல் என்று வந்துவிட்டால் தலைவர் என்ன முகம் தெரியாதவர் என்ன? நமக்கு தலைவர்களின் வாழ்க்கை தான் முற்ற முழுக்க ஓரளவுக்கு தெரியும். பக்கத்து வீட்டு ஆளின் வாழ்வு நமக்கு தெரியாது அல்லவா? அப்போது, மருத்துவர் பிரேத பரிசோதனை பண்ணி மருத்துவ அறிவு பெறுவது போல, நாம் பண்ணத்தானே வேண்டும்?

    சரி. நாகரிகம் என்று வைத்துக்கொண்டால், யாருடைய தனிப்பட்ட வாழ்வை அலசுவதும் நாகரிகம் அற்றது தானே? அங்கே தலைவர்களுக்கு மற்றும் பாரபக்ஷம் ஏன்? இங்கே, நாம் விருப்பு வெறுப்பு இன்றி, ஜோதிட அறிவுக்காக மட்டும், நேரு அவர்களை ஒரு specimen ஆகா உபயோகிக்கிறோம். அவர் மீதுள்ள மதிப்பு எப்போதும் இருக்கும்.

    ஏதோ எனக்கு தோணியதை சொன்னேன். எதாவது தவறாக இருந்தால் மன்னிச்சுக்கங்க. நேரடியாக பேசிடுவேன் ஒழிய மனசுல ஒன்னும் வில்லங்கம் இருக்காது.
    :-)))))

    புவனேஷ்

    ReplyDelete
  39. என்ன தான் வாத்தியார் கிட்டே திட்டு வாங்கினாலும், I love classroom. :))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  40. Sathyanarayana Sir, //Also 7th lord being placed in 8th from 7th house resulted in unhappy marital life//

    நீங்க எங்க உக்காந்து யோசிப்பீங்க நு சொன்னா நானும் அங்கே வர ட்ரை பண்ணறேன் அண்ணே...... :-))

    ஏழாம் அதிபன் இரண்டாம் வீட்டில் இருந்தால் மனைவி வகையில் லாபம், நல்ல மனைவி, சப்போர்ட்டிவ் மனையாள் என்று பொருள். இது தான் நான் படித்தது.

    எல்லாம் நல்லாத்தானே போயிட்டிருக்கு? ஏன் திடீர்னு கொந்தளிக்கிறீங்க? எங்கயும் தனிப்பட்டு செயல்படாதேன்னு சொல்லிருக்கோம் ல? (வடிவேலு டைலாக், ஒரு தமாசுக்கு சொன்னேன், கோச்சுகாதீங்க))

    வாத்தியார் விளக்கவும். மாணவர் பணிவுடன் வைட்டிங். :)))

    புவனேஷ்

    ReplyDelete
  41. சகோதர காரகன் செவ்வாய் 3ல் (சகோதரஸ்தானம்) இருப்பது சகோதர உறவுக்கு கெடுதல் நிச்சயம். சகோதரர்கள் இருக்க மாட்டார்கள். இருந்தாலும் அது நீடிக்காது. நீடித்தாலும் பாம்பும் கீரியுமாகதான் இருப்பார்கள்.

    காரகன் பாவ நாசம் என்பது எதை அடிப்படையாகக் கொண்டது என்பது முக்கியம். ஒன்றுக்கு மேற்பட்ட காரகம் கொண்டிருக்கும் கிரகம் எந்த காரகத்திற்கு கெடுதல் செய்யும் என்பது மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய என்று. பின்னூட்டத்தில் இதை முழுதுமாக விளக்க முடியாது.

    ReplyDelete

  42. //சமூகத்தின் எல்லா அங்கத்தினரிடமும் இவருக்கு அன்று நல்ல பெயர் இருக்கவில்லை. //

    எப்போதுமே அப்படித்தான். யாருக்குமே எல்லோரிடமும் நல்ல பெயர் கிடைக்காது.

    //வெளிநாட்டு கலாசாரத்தை பிடித்து கொண்டு நம் கலாச்சாரத்தை இகழ்ந்தவர் தானே?//

    நம் கலாச்சாரததினை இகழ்ந்தவர் எனப‌து தவறு.விமர்சித்தவர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.தினசரி கீதை ஒரு அத்யாயம் பாராயணம் செய்தார்.தியானத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். யோகா பயிற்சி செய்தார். நமது கலாச்சாரத்தில் மாற்ற வேண்டிய கூறுகளை எடுத்துக் கூறினார்.இப்படி
    விமர்சித்தவர்கள் பலர் உண்டு.இவரை மட்டும் நொந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.அதுசரி இந்துக் கலாச்சாரம் என்று ஏதாவது எல்லோருக்கும் பொருந்தும்படி ஏதாவது இருக்கிற‌தா என்ன?

    //இவர் பிராமண குடும்பத்தில் உதித்தாலும் ஹிந்து மதத்துக்கு எதிராகவே இருந்தார். அதை நினைவில் வையுங்கள்.//

    நிறைய பிராமணார்கள் 'நான் பிராமணன்' என்ற தற் செருக்குத் தவிர ஹிந்து மதத்திற்காக ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடாதவர்கள் தான். நேரு போன்றவர்கள் தங்களது குறுகிய சமூகக் கண்ணோட்டத்தை விட்டதால்தான் உலகத் தலைவராக ஆக முடிந்தது.அன்றைய உலகத் தலைவர்களில் நேருவிற்கான மதிப்பான இடம் இருக்கவே செய்தது. 1000 ஆண்டுகளுக்கு மேலாக அடிமையாக இருந்த ஒரு தேசத்தினை தலைமை தாங்கி நடத்திச் செல்ல மனிதாபிமானமும், நாட்டு மக்களின் நம்பிக்கையையும் பெறுவதற்கும் ஒரு தியாக மனது வேண்டும்.அது அவரிடம் இருந்தது.

    //இது எனது தனிப்பட்ட கருத்து. இங்கே தயவு செய்து சண்டை சர்ச்சை வேண்டாம்.//

    தனிப்பட்ட கருத்தை தனிப்படத்தான் வைத்துக்கொள்ள வேண்டும். பொதுவில் வந்து சொல்லிவிட்டு பூசி மெழுகக்கூடாது.

    நேருவின் காமத்தினைப் பற்றி நீங்கள் பின்னூட்டத்தில் சொல்லியதை நான் ரசிக்கவில்லை.அவரைப்பற்றி நிறைய 'காசிப்' உண்டு. சின்ன புத்திக்காரர்கள் வேறு ஏதும் கிடைக்காவிட்டால் எடுத்துக் கொள்ளும் ஆயுதம் 'கேரக்டெர் அஸாஸிசினேஷன்' தான்.

    ReplyDelete
  43. Sir, Bhuvanesh asked the question very clear. Pl explain. Thanks Bhuvanesh.

    ReplyDelete
  44. //////Blogger Bhuvaneshwar said...
    கீதா லக்ஷ்மி அவர்கள் சொன்னது சுவாரஸ்யமாக இருந்தது. நான் உட்கார்ந்து பார்த்தேன். எது ஏன் சிற்றறிவுக்கு பட்டது:
    1. ஏழாம் வீட்டு அதிபர் யார்? சனைச்சரன். அவர் எங்கே இருக்கிறார்? இரண்டாம் வீட்டில். அது யார் வீடு? சூரியன் வீடு சிம்மம். கடும் பகைவனின் வீடு. கேதுவோடு கூட்டணி போட்ட ஆறாம் அதிபதியான குருவின் பார்வை வேறு. இரண்டாம் வீடு ஏழாம் அதிபனைக்கொண்டு வரின் மனைவி வகையில் நன்மைகள் என்பார்கள். இவருக்கு அங்ஙனம் ஏதும் வந்தாற்போல தெரியவில்லை. இவருடைய வாக்கு வன்மையால் இவர் ஒருபக்கம் புகழ் பெற்றார் என்றாலும் மறுபக்கம் தன பெயரை கெடுத்துக்கொண்டார் எனலாம். பாரபக்ஷம் இல்லாமல் தான் நாம் பேச வேண்டும். சமூகத்தின் எல்லா அங்கத்தினரிடமும் இவருக்கு அன்று நல்ல பெயர் இருக்கவில்லை.
    லக்கினத்தில் சந்திரன். இவர் அழகர். மனைவியும் இவர் அழகென்று நினைத்திருப்பார், ஏனென்றால் ஏழுக்கு எழில் சந்திரன் ஆட்சியில். என்ன இப்போ? :-)))))))))))
    2. ஐந்தாம் வீட்டில் 21 பரல்கள் தான். சரி. இங்கே அவர் மனைவி ஜாதகம் இல்லை. இவர் ராசி சக்கரத்திலேயே, மனைவியை குறிக்கும் ஏழாம் வீட்டிற்கு ஐந்தாம் வீடான பதினொன்றாம் வீட்டில் 34 பரல்கள். குழந்தைப்பேற்றை பொறுத்த வரை அது ஈடு கட்டி விடும். ஐந்தாம் வீடு நுண்ணறிவு குறிக்கும் இடம் அல்லவா? இவர் நுண்ணறிவு எப்படி இருந்தது? வெளிநாட்டு கலாசாரத்தை பிடித்து கொண்டு நம் கலாச்சாரத்தை இகழ்ந்தவர் தானே? ஒரு வேளைஐந்தாம் வீடு காரணமாக இருக்குமோ? இல்லை நுண்ணறிவுக்கு காரகனான குருவுடன் கேது சேர்க்கையால் இருக்குமோ? பொதுவாக ஐந்தாம் இடம் வீக்காக/குரு நல்ல நிலைமையில் இல்லாமல்/தீயன பண்ணும் வகையில் இருந்தால் இவர்களுக்கு பூர்வ புண்ணியம் குறைவு. குலதெய்வ அருள் இருக்காது. அதிலும் குரு ஆறாம் வீட்டு அதிபதி என்பதால் தானோ என்னமோ இவர் பிராமண குடும்பத்தில் உதித்தாலும் ஹிந்து மதத்துக்கு எதிராகவே இருந்தார். அதை நினைவில் வையுங்கள். இது எனது தனிப்பட்ட கருத்து. இங்கே தயவு செய்து சண்டை சர்ச்சை வேண்டாம்.///////

    ஐந்தாம் வீடு சுபகர்த்தாரி யோகத்தில் அது ஏன் கண்ணில் படவில்லை, அடியவன் குறிபிட்டு எழுதியிருந்தும்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    //////அதே போல, இன்னொரு சந்தேகம் சூரியனுக்கு உண்மையில் சுபகர்த்தாரி யோகமா? சுற்றி இருப்பவர்கள் யார்? இரண்டு துர் ஸ்தானஅதிபதிகள். பன்னிரண்டாம் அதிபனும் (புதனும்) ஆறாம் அதிபனும், கேதுவும். Are there not more reasons to consider this a paapa-karthaari Yogam than a subha karthaari yogam? Does not the scale albeit ever so slightly tilt in favour of negative side?/////

    புதன் சுபரோடு (சுக்கிரன் சுபக்கிரகம்தானே சுவாமீ) சேர்ந்தால் சுபனாகி விடுவான் என்பதும், குரு ஆட்சி பலத்தோடு இருக்கும்போது வலிமையான சுபன் என்பதும் ஏன் மனதில் ஏறவில்லை. படித்ததெல்லாம் மறந்துவிட்டதா? சுபகர்த்தாரி யோகத்தை ஏதோ விளக்கம் சொல்லி பாப கர்த்தாரியாக்க முயல்வதை என்னவென்று சொல்வது?
    மனசைக் கழுவுவதற்கு டெட்டால் உள்ளதா? அல்லது வேறு ஏதாவது கிருமி நாசினி உள்ளதா?:-))))))
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  45. /////Blogger Bhuvaneshwar said...
    ஆஹா ஆஹா பாயின்ட் பாயின்ட்.
    தலைமை கிரகமான ராஜாங்கத்தை குறிக்கும் சூரியனின் வீட்டை ஆறாம் அதிபதி பார்ப்பதினால் தான் இவர் ராஜாங்கத்தை எதிர்த்தாரா? ஆறாம் வீடு வெற்றி கொள்ள கூடிய எதிரி ஆறாம் வீடு இலாகா அல்லவா? அதனால் வெற்றி உண்டாயிற்றோ?
    கெக்கே பிக்கே என்று உளறுகிறேனோ?
    ++++
    புவனேஷ்/////

    சூரியனின் சுயவர்க்கப் பரல்கள் 2 மட்டுமே. சூரியன் பலவீனமாக இருந்ததால் அவருக்கு அன்றைய அரசுடன் சுமூகமான உறவு இல்லை. 35 ஆண்டுகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். என்று பதிவில் எழுதி உள்ளேனே! அதை ஏன் படிக்கவில்லை? கெக்கே பிக்கே என்ற தன்னிலை விளக்கம் சரியாகத்தான் உள்ளது. நன்றி!

    ReplyDelete
  46. /////Blogger Bhuvaneshwar said...
    செவ்வாய் மூன்றில் (தைரிய ஸ்தானம்) இருந்தால் துணிச்சல் இருக்காதா? யார் சொன்னது?
    தயவு செய்து இதை விளக்குங்கள் ஐயா. துணிச்சலுக்கு காரகர் செவ்வாய் தானே? துணிச்சலுக்கான வீடு மூன்றாம் வீடு அல்லவா? அப்போது "காரகோ பாவ நாஸ்தி" ஆகாதா?
    இதில் வேறு எதாவது சூட்சுமம் இருக்கிறதா?
    தெரியாமல் தான் கேட்கிறேன். குதர்க்கம் எல்லாம் இல்லை.
    புவனேஷ்//////

    மைலேஜ் அதிகமாகக் கொடுக்கும் என்பதற்காக மட்டும் ஒரு காரைத் தேர்வு செய்வோமா? காரின் மற்ற அம்சங்களையும் பார்க்க வேண்டாமா? அதுபோல காரகன் ஒருவனை வைத்து மட்டும் ஒரு வீட்டின் பலனை முடிவு செய்வீர்களா? மற்ற விதிகளையும், அம்சங்களையும் பார்க்க மாட்டீர்களா?
    3ஆம் வீட்டில் 33 பரல்கள்
    அந்த வீட்டுக்காரன் அமர்ந்திருக்கும் இடத்தில் 30 பரல்கள்
    செவ்வாய்க்கு சுயவர்க்கத்தில் 6 பரல்கள்
    புதனுக்கு சுயவர்க்கத்தில் 7 பரல்கள்.
    இதையெல்லாம் எந்தக் கணக்கில் எடுத்துக்கொள்வது?

    ReplyDelete
  47. Blogger Bhuvaneshwar said...
    //ஒரு உயர்ந்த தேசியத் தலைவரின் சொந்த வாழ்க்கையை (personal life) அலசுவது நகரீகமல்ல//
    அலசல் என்று வந்துவிட்டால் தலைவர் என்ன முகம் தெரியாதவர் என்ன? நமக்கு தலைவர்களின் வாழ்க்கை தான் முற்ற முழுக்க ஓரளவுக்கு தெரியும். பக்கத்து வீட்டு ஆளின் வாழ்வு நமக்கு தெரியாது அல்லவா? அப்போது, மருத்துவர் பிரேத பரிசோதனை பண்ணி மருத்துவ அறிவு பெறுவது போல, நாம் பண்ணத்தானே வேண்டும்?
    சரி. நாகரிகம் என்று வைத்துக்கொண்டால், யாருடைய தனிப்பட்ட வாழ்வை அலசுவதும் நாகரிகம் அற்றது தானே? அங்கே தலைவர்களுக்கு மற்றும் பாரபக்ஷம் ஏன்? இங்கே, நாம் விருப்பு வெறுப்பு இன்றி, ஜோதிட அறிவுக்காக மட்டும், நேரு அவர்களை ஒரு specimen ஆகா உபயோகிக்கிறோம். அவர் மீதுள்ள மதிப்பு எப்போதும் இருக்கும்.
    ஏதோ எனக்கு தோணியதை சொன்னேன். எதாவது தவறாக இருந்தால் மன்னிச்சுக்கங்க. நேரடியாக பேசிடுவேன் ஒழிய மனசுல ஒன்னும் வில்லங்கம் இருக்காது.
    :-)))))
    புவனேஷ்///////

    நாகரீகத்திற்கான உங்கள் கோட்பாடுகளுடன் எனக்கு உடன் பாடில்லை! ஆகவே மேட்டரை இத்துடன் விட்டு விடுங்கள்!

    ReplyDelete
  48. /////Blogger Bhuvaneshwar said...
    என்ன தான் வாத்தியார் கிட்டே திட்டு வாங்கினாலும், I love classroom. :))))))))))))))))))))))))))))//////

    இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளப் பழகி விட்டேன். இல்லை என்றால் சுமார் 3,700 பேர்களை வைத்து எப்படி நான் வகுப்பை நடத்த முடியும்?

    ReplyDelete
  49. /////Blogger Bhuvaneshwar said...
    Sathyanarayana Sir, //Also 7th lord being placed in 8th from 7th house resulted in unhappy marital life//
    நீங்க எங்க உக்காந்து யோசிப்பீங்க நு சொன்னா நானும் அங்கே வர ட்ரை பண்ணறேன் அண்ணே...... :-))
    ஏழாம் அதிபன் இரண்டாம் வீட்டில் இருந்தால் மனைவி வகையில் லாபம், நல்ல மனைவி, சப்போர்ட்டிவ் மனையாள் என்று பொருள். இது தான் நான் படித்தது.
    எல்லாம் நல்லாத்தானே போயிட்டிருக்கு? ஏன் திடீர்னு கொந்தளிக்கிறீங்க? எங்கயும் தனிப்பட்டு செயல்படாதேன்னு சொல்லிருக்கோம் ல? (வடிவேலு டைலாக், ஒரு தமாசுக்கு சொன்னேன், கோச்சுகாதீங்க))
    வாத்தியார் விளக்கவும். மாணவர் பணிவுடன் வைட்டிங். :)))
    புவனேஷ்/////

    Happy married life உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து தேசத்திற்காக உழைத்ததாக சரித்திரம் இல்லை!

    ReplyDelete
  50. Blogger Ak Ananth said...
    சகோதர காரகன் செவ்வாய் 3ல் (சகோதரஸ்தானம்) இருப்பது சகோதர உறவுக்கு கெடுதல் நிச்சயம். சகோதரர்கள் இருக்க மாட்டார்கள். இருந்தாலும் அது நீடிக்காது. நீடித்தாலும் பாம்பும் கீரியுமாகதான் இருப்பார்கள்.
    காரகன் பாவ நாசம் என்பது எதை அடிப்படையாகக் கொண்டது என்பது முக்கியம். ஒன்றுக்கு மேற்பட்ட காரகம் கொண்டிருக்கும் கிரகம் எந்த காரகத்திற்கு கெடுதல் செய்யும் என்பது மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய என்று. பின்னூட்டத்தில் இதை முழுதுமாக விளக்க முடியாது./////

    உண்மைதான். உங்களின் விளக்கத்திற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  51. //////Blogger kmr.krishnan said...
    //சமூகத்தின் எல்லா அங்கத்தினரிடமும் இவருக்கு அன்று நல்ல பெயர் இருக்கவில்லை.
    எப்போதுமே அப்படித்தான். யாருக்குமே எல்லோரிடமும் நல்ல பெயர் கிடைக்காது.
    //வெளிநாட்டு கலாசாரத்தை பிடித்து கொண்டு நம் கலாச்சாரத்தை இகழ்ந்தவர் தானே?//
    நம் கலாச்சாரததினை இகழ்ந்தவர் எனப‌து தவறு.விமர்சித்தவர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.தினசரி கீதை ஒரு அத்யாயம் பாராயணம் செய்தார்.தியானத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். யோகா பயிற்சி செய்தார். நமது கலாச்சாரத்தில் மாற்ற வேண்டிய கூறுகளை எடுத்துக் கூறினார்.இப்படி
    விமர்சித்தவர்கள் பலர் உண்டு.இவரை மட்டும் நொந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.அதுசரி இந்துக் கலாச்சாரம் என்று ஏதாவது எல்லோருக்கும் பொருந்தும்படி ஏதாவது இருக்கிற‌தா என்ன?
    //இவர் பிராமண குடும்பத்தில் உதித்தாலும் ஹிந்து மதத்துக்கு எதிராகவே இருந்தார். அதை நினைவில் வையுங்கள்.//
    நிறைய பிராமணார்கள் 'நான் பிராமணன்' என்ற தற் செருக்குத் தவிர ஹிந்து மதத்திற்காக ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடாதவர்கள் தான். நேரு போன்றவர்கள் தங்களது குறுகிய சமூகக் கண்ணோட்டத்தை விட்டதால்தான் உலகத் தலைவராக ஆக முடிந்தது.அன்றைய உலகத் தலைவர்களில் நேருவிற்கான மதிப்பான இடம் இருக்கவே செய்தது. 1000 ஆண்டுகளுக்கு மேலாக அடிமையாக இருந்த ஒரு தேசத்தினை தலைமை தாங்கி நடத்திச் செல்ல மனிதாபிமானமும், நாட்டு மக்களின் நம்பிக்கையையும் பெறுவதற்கும் ஒரு தியாக மனது வேண்டும்.அது அவரிடம் இருந்தது.
    //இது எனது தனிப்பட்ட கருத்து. இங்கே தயவு செய்து சண்டை சர்ச்சை வேண்டாம்.//
    தனிப்பட்ட கருத்தை தனிப்படத்தான் வைத்துக்கொள்ள வேண்டும். பொதுவில் வந்து சொல்லிவிட்டு பூசி மெழுகக்கூடாது.
    நேருவின் காமத்தினைப் பற்றி நீங்கள் பின்னூட்டத்தில் சொல்லியதை நான் ரசிக்கவில்லை.அவரைப்பற்றி நிறைய 'காசிப்' உண்டு. சின்ன புத்திக்காரர்கள் வேறு ஏதும் கிடைக்காவிட்டால் எடுத்துக் கொள்ளும் ஆயுதம் 'கேரக்டெர் அஸாஸிசினேஷன்' தான்./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  52. //////Blogger KJ said...
    Sir, Bhuvanesh asked the question very clear. Pl explain. Thanks Bhuvanesh./////

    விளக்கம் கொடுத்துள்ளது. பாருங்கள்!

    ReplyDelete
  53. அன்பு வாத்தியாருக்கும், கிருஷ்ணன் சாருக்கும், மற்றும் என்னால் மனம் புண்பட்ட அனைவருக்கும், எனது பின்னூட்டத்தில், அவர் தனிப்பட்ட வாழ்வினை விமர்சித்ததை தவறு என ஒப்புகிறேன், மன்னிக்க வேண்டுகிறேன்.

    கொஞ்சம் பிசகாக நடந்து கொண்டு விட்டேன் தான் என நினைக்கிறேன். எந்த பின்னூட்டப்பெட்டியில் inappropriate ஆக பின்னூட்டம் இட்டேனோ, அதே பின்னூட்டப்பெட்டியில் அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சிறுவன் தவறிழைப்பின் பெரியோர் பொறுத்து, திருத்தி அருள வேண்டுகிறேன். இனிமேல் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் பொதுவில் பேசுவதில்லை என உறுதி கூறுகிறேன்.

    இதை தனிப்பட்ட மின்னஞ்சலில் கூட அனுப்பி இருக்கலாம். ஆனால் அது நல்ல ஐடியா அல்ல. brutal ஆக அலசிவது சரி என நினைத்து செய்தேன். அது தவறு என தெரிந்ததும் அதையும் பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். ஈகோ பார்த்துக்கொண்டு தவறை மறுக்க மாட்டேன். இனி இம்மாதிரி நடக்காது.

    நன்றி,
    புவனேஷ்.

    ReplyDelete
  54. உடல்நிலை காரணமாக தாமதமாக வகுப்புக்கு வந்திருக்கிறேன். மிக அருமையான அலசல் பாடம். நிறையக் கற்றுக் கொள்ள முடிந்தது.

    உயர்கல்வி பெறக் காரணமான அமைப்புக் குறித்த அலசல் அருமை. கடல் கடந்த தூரதேசங்களில் பணி வாழ்வு அமைய பிரத்தியேகமான ஜாதக அமைப்பு உள்ளது போல், கடல் கடந்து சென்று உயர்கல்வி பெற உதவிய சிறப்பான அமைப்பு குறித்து சற்று தெளிவுபடுத்த வேண்டுகிறேன். ஐந்தாம் இடத்துக்கு சுபகர்த்தாரி யோகம் இருப்பின் இவ்வாறு வெளிநாட்டுக்குச் சென்று கல்வி கற்கும் வாய்ப்புக் கிட்டுமா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com