மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.11.12

Astrology பழம் எப்போது (டா) கிடைக்கும்?


Astrology பழம் எப்போது (டா) கிடைக்கும்?
அலசல் பாடம்!

வாரியார் சுவாமிகள் அடிக்கடி சொல்வார். “உருவத்தால் உயர்ந்த மரங்களேயாயினும், பருவத்தால் அன்றிப் பழுக்காது”

அதாவது பழுக்கும் காலம் வந்தால்தான், பூக்கும், காய்க்கும், பழுக்கும்.

படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், வீடு வாங்குதல் போன்ற முக்கியமான செயல்கள், ஜாதகப்படி, அதற்கு உரிய நேரம் வரும்போதுதான் நடக்கும். ஜாதகன் தானாக என்ன முக்கினாலும், அல்லது முயற்சி செய்தாலும் நடக்காது!

அதை மேலோட்டமாக இன்று பார்ப்போம்
--------------------------------------------------------
என்ன முயற்சி செய்தும் ஒரு ஜாதகனுக்கு உரிய வேலை கிடைக்கவில்லை. ஜாதகப்படி காரணம் என்ன? எப்போது கிடைக்கும்?

பல இளைஞர்களை வாட்டும் முக்கியமான நிலைப்பாடு (சூழல்) இது.

இன்று அதை அலசுவோம். அதாவது அந்த நிலைமைக்கான காரணங்களை அலசுவோம்
--------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்


சிம்ம லக்கினம். லக்கினத்தில் கேது.
விரையாதிபதி - 12ஆம் இடத்து அதிபதி சந்திரன். 7ல் இருந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்திருக்கிறான்.
லக்கினாதிபதி சூரியன் நீசம்.இந்தக் காரணஙகளால் லக்கினாதிபதியும், லக்கினமும் வலுவாக இல்லை.
நான் எப்போதும் சொல்வதைப் போல, லக்கினம் வலுவாக இல்லை என்றால் ஜாதகன் கஷ்டப்பட நேரிடும். உரிய நேரத்தில் எதுவும் கிடைக்காது. அல்லது அமையாது.

தொழில்காரகன் சனி நீசம் (He is the authority for work)
அத்துடன் அவர் தொழில் மற்றும் வேலை ஸ்தானத்திற்கு, அதாவது அந்த இடத்திற்குப் பன்னிரெண்டில் இருக்கிறார்.
அது நல்ல நிலைமை இல்லை.

ஜாதகனுக்கு அவனுடைய 38ஆவ்து வயதுவரை சனி மகா திசை.
தொழில் ஸ்தானத்து அதிபதி சுக்கிரன் நீசம்,
அவனுக்கும் தசாநாதனுக்கும் உள்ள உறவு 6/8 positionல் உள்ளது.

கிரக நிலைகளும், தசா நிலைமையும் ஜாதகனுக்கு ஆதரவாக இல்லை. அதனால் உரிய வேலையின்றி ஜாதகன் அல்லல்பட நேர்ந்த்து.

அடுத்து வந்த புதன் மகா திசை ஜாதகனுக்குக் கை கொடுத்தது. ஜாதகன் ஒரு நல்ல வேலையில் சேர்ந்தான்.

புதன் உச்சம் பெற்று இருப்பதுடன், 10ஆம் அதிபதி சுக்கிரனுடன் கூட்டாகச் சேர்ந்து லக்கினத்திற்கு இரண்டாம் வீட்டில் இருப்பதைக் கவனியுங்கள்.

இப்படித்தான் ஒரு ஜாதகத்தை அலச வேண்டும்
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14 comments:

  1. வாத்தியார் மீண்டும் (அல்லது நோயின் பிடியிலிருந்து மீண்டு) வந்ததில் மகிழ்ச்சி. இனி அடுத்தடுத்து பாடங்கள் தொடர்ந்து வரும் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

    நோய்கள் மாரகாதிபதிகளின் தசா, புத்தி, அந்தரங்களில் வரும் என்பது பொது விதி. லக்னாதிபதியின் தசா, புத்தி, அந்தரங்களில் உயிருக்கு கண்டம் ஏற்படும் வாய்ப்புண்டு என்று உப விதியாக கூறப்படுகிறது.

    ReplyDelete
  2. iyya

    kaalai vanakkam. Uchanum neechanum sernthal , neecha bangam allava ( bhudhan + sukran in kanni) . Also, neechanai neechanum parrthalum bangam allava ( sani in mesham sees suryan in thulam). so 4 graham , ucham petra effect varum allava ?

    en avvaru nadai peravillai


    nanri

    ReplyDelete
  3. Sir, good morning. Excellent lesson with very good example.
    MY Doubts;
    even Though budhan is ucham, Budhan is in paabakarthari yogam. How still he got good job.
    Without amsam, how we will come to know the actual power of planet.
    If we see Rajni horo, sani at dhana sthanam. But still he is rich. Bcz its athipathy is ucham in amsam. But i guess he might have invest on his wife or children name. His asram school is running on his wife name only.
    In mgr horo, sevvai is neesam in amsam and ucham in rasi but still he became cm in sevvai dasa. We need your valuable suggestion on this sir.

    Thanks,
    Sathishkumar GS

    ReplyDelete
  4. ஒரு தசாவிலிருந்து மறு தசா வந்தால் பலன்கள் மாறுபடலாம். இதை என் வாழ்விலும் அனுபவித்திருக்கிறேன். நிறைய இருக்கிறது. உதாரணமாக ஒன்று. எனக்கு ராகு தசை நடக்கும் போது ஜோதிடத்தில் ஏற்பட்ட ஆர்வம் குரு தசையின் போது சற்று சுணக்கம் ஏற்பட்டது. மீண்டும் சனி தசையில் அந்த ஆர்வம் தொடர்ந்தது.

    ReplyDelete
  5. காலை வணக்கம், நல்ல அலசல் !!

    ReplyDelete
  6. எளிமையான அலசல். நன்றி ஐயா.

    ReplyDelete
  7. குருவிற்கு வணக்கம்,
    தங்கள் உடல் நிலையை கவனித்துகொள்ளவும்.
    பாடத்துக்கு நன்றி

    ReplyDelete
  8. Oru doubt aya,
    Suriyan(neecham) and Saniyum(neecham).

    Neechanum Neechanum parthal, Neechapangu raja yogam endu kuru vathu unmai thana??

    ReplyDelete
  9. வணக்கம் குருவே,
    பதிவிற்கு நன்றிகள். 4க்கும் 9க்கும் உடையவனை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. அவர் அமர்ந்த இடம் மற்றும் பார்வை நன்றாக உள்ளதே.தன காரகனே தனஸ்தானதில் வேறு. அதுவும் நல்ல அமைப்பு தானே.337 வேலை செய்கிறது.

    ReplyDelete
  10. சல் (இது இந்தி சல்) நல்ல
    (அல)சல்..

    அலசலின் வேகம்
    அப்படியே தெரிகிறது..

    மருத்துவருக்கு நன்றிகள்
    மாற்றி வேறென்ன சொல்வது

    வாழ்க தங்களுடன்
    வளர்க எங்களுடன்

    ReplyDelete
  11. sirapana pathivu... welcome after a long gap

    ReplyDelete
  12. Happy to see you back in classroom Sir. This lesson is educative.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com