மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

17.11.12

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க!
நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க!

கடலில் இருக்கும் அத்தனை நீரும் ஒன்று சேர்ந்தால்கூட ஒரு கப்பலை மூழ்கடிக்க முடியாது. கப்பலுக்குள் அந்த நீர் புகுந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.  “அதுபோல  வாழ்வின் எந்தப் பிரச்சினையும் உங்களைப் பாதிக்கவே முடியாது. நீங்கள் அனுமதித்தால் தவிர!”

முகநூல் நண்பர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சல் வரிகள் இவைகள். உண்மைதான். மனதிற்கு ஆறுதல் அளிக்கும் வரிகள் அவைகள்.

ஆனால் கடன், நோய் போன்ற உபாதைகள் எல்லாம் உங்கள் அனுமதியின்றே, உங்கள் வாழ்க்கைக்குள் நுழையும் வலிமை உடையவை, அதை மனதில் வையுங்கள்.

நெடுஞ்சாலையில் பயணிக்கும் ஒருவனுக்கு, அவன் செல்லும் வாகனம் எத்தனை புதிதாக இருந்தாலும், அவன் எத்தனை திறமையான ஓட்டுனராக இருந்தாலும், விபத்து  நேரிடுவது அவன் கையிலா இருக்கிறது? எதிரில் வரும் ஒரு வாகன ஓட்டியின் சிறு தவறுகூட, அவனை சாய்த்து விட்டுப் போய்விடும. சமயத்தில் வ்ண்டியுடன், அவனை  மேலே அனுப்பி வைத்துவிட்டுப் போய்விடும்!

இறையுணர்வும், தெளிந்த பக்தியும், நல்ல நேரமும் மட்டுமே ஒருவனை எந்த நேரத்திலும் காப்பாற்றும்.

விதியின் விளையாட்டில், கடும் புயலையும், காற்றழுத்ததையும் தாக்குப் பிடித்து நிற்பது என்பது, எந்தக் கப்பலுக்கும் சாத்தியமில்லாததாகும். மனிதன் மட்டும் அதற்கு  விதிவிலக்கா என்ன?

   “நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
         நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க!”

என்று நம்பிக்கை தரும் வரிகளைக் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிவைத்துவிட்டுப்போனார்

அந்த நம்பிக்கையில்தான் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.

பத்து நாட்களாக வாத்தியாரை முடக்கிப் போட்டிருந்த காய்ச்சல் 90% குணமாகிவிட்டது.

பின்னூட்டங்கள் மூலமாகவும், தனி மின்னஞ்சல்கள் மூலமாகவும், வாத்தியாரின் மேல தங்களுடைய மேலான அன்பையும், பரிவையும் காட்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும், என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களின் பொறுமைக்கும், புரிந்துணர்விற்கும் விசேடமாக மீண்டும் ஒரு நன்றி!

பாடங்கள் மீண்டும் 19.11.2012 திங்கட்கிழமை முதல் துவங்கும். வழக்கம்போல வாத்தியாரின் உத்வேகத்துடன் அவை இருக்கும்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

9 comments:

அய்யர் said...

வருக... வளர்க..

ஒரு சிறு திருத்தம்... மீண்டும்
ஒரு முறை

கோவில் என உள்ளது அது
கோயில் என இருக்க வேண்டும்

கவிஞரும் கோயில் என்றே எழுதி இருப்பார்.
கவணித்து சொல்கிறீர்களா..?

renga said...

குருவிற்கு வணக்கங்கள்,
கட்டாய ஓய்வு உடலுக்கு தெம்பளிக்கலாம். மனதிற்க்கு அது பொருந்தாது. காய்ச்சல் தங்களை கடும் பாய்ச்சலுக்கு தயார் செய்துவிட்டது. இறைவன் துணை இருப்பான். உங்கள் வருகையே உற்சகமாயிருக்கிறது. நன்றி.
தங்கள் மாணவன், ரெங்கா.

GAYATHRI said...

Take care Sir. Eagerly waiting for the classes

இராஜராஜேஸ்வரி said...

இறையுணர்வும், தெளிந்த பக்தியும், நல்ல நேரமும் மட்டுமே ஒருவனை எந்த நேரத்திலும் காப்பாற்றும்.//

அருமையான அறிவுரை ..

குணமாகி வந்தது மகிழ்ச்சி ஐயா..

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்
பழனி ஆண்டவருக்கு ஆரோகர!
நன்றி

murugan said...

வணக்கம் வாத்தியாரே,

எங்கள் மீது இவ்வளவு பைத்தியாமா,MIND DIVERSION, உங்களுக்கு வேண்டும் ஐயா, OMG Oh My God 2012 Hindi, இந்த படத்தை அவசியம் பாருங்கள், உங்களுக்குள் சில புரிந்துணெர்வு வரும்

கு ரா முருகன் பி‌எஸ்‌என்‌எல்

Ashok said...

Wish you a speedy recovery!
God Bless
Regards
Ashok

Prasanna Venkatesh said...

Welcome back......
But, keep rest until complete recovery
With Regards,
Prasanna Venkatesh.

Uma said...

good to hear you are alright now!