மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

6.11.12

Astrology - Popcorn Post - வெள்ளைக்காரன் என்னடா சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனான்?

Astrology - Popcorn Post - வெள்ளைக்காரன் என்னடா சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனான்?

Popcorn Post No.30
பாப்கார்ன் பதிவுகள் - எண்.30


தேதி 6.11.2012 செவ்வாய்க் கிழமை
-----------------------------------------------
எனக்கு வரும் மின்ஞசல்களில் சில இப்ப்டியிருக்கும்:

“சார், என் தாயார் சென்ற வருடம் 30.11.2011 அன்று காலமானார்கள். அவர்களுக்குத் தலைத் திதியைக் (ஆண்டுத் திதியைக்)
கொடுக்க விருபுகிறேன். இந்த ஆண்டு எந்தத் தேதியில் அதைச் செய்ய வேண்டும்?”

அவர்கள் இறந்தபோது, அன்றையத் திதியக் குறித்து வைத்துக்கொளாததினால் ஏற்படும் கோளாறு இது

அன்றையத் தேதியில் வளர்பிறை சஷடி திதி

இந்த ஆண்டு அதே ஐப்பசி வளர்பிறை சஷ்டித் திதி 19.11.2012 அன்று வரும். அன்றையத் தேதியில் செய்ய வேண்டும்

பிறந்த நாளில் கேக் வெட்டிக் கொண்டாட வேண்டுமென்றால், வெள்ளைக்காரன் சொல்லிக் கொடுத்துவிட்டுப்போனபடி நீங்கள் பிறந்த ஆங்கிலத் தேதியில் கொண்டாடலாம். ஆனால் கோவிலுக்குச் சென்று ஈசனுக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்ய வேண்டுமென்றால், தமிழ் நாட்காட்டியின்படி நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தில் நீங்கள் பீறந்த நட்சத்திரம் எந்தத் தேதியில் வருகிற்தோ, அந்தத் தேதியில் தான் செய்ய வேண்டும்!

உதாரணத்திற்கு, நீங்கள் கார்த்திகை மாதம் ரோஹிணி நட்சத்திரத்தில், பிறந்தவர் என்றால், அந்தத் தேதியில்தான் ஒவ்வொரு வருடமும் அதைச் செய்ய வேண்டும்.

அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------------
திதியைப் பற்றிய மேலதிகத் தகவல்கள்:

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தைக் குறிப்பது.

மாதம் 30 திதிகள்.

ஒவ்வொரு மாதமும் - அதாவது 30 தினங்களுக்கு ஒருமுறை சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரும். 0 பாகையில் இரண்டும் இருக்கும். அன்று அமாவாசை. அமாவாசையில் இருந்து பதினைந்தாம் நாள் அவ்விரண்டு கிரகங்களும் எதிர் எதிராக இருக்கும். 180 பாகை வித்தியாசத்தில் இருக்கும். (ஒரு சுற்று வட்டத்திற்கு 360 பாகைகள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே!)

அமாவாசையில் இருந்து பெளர்ணமி வரை 15 திதிகள் (அவற்றை வளர்பிறைத் திதிகள் என்பார்கள். சிலர் வளர் பிறைத் தேதிகளில் வரும் முகூர்த்த நாட்களில் மட்டுமே சுபகாரியங்களைச் செய்வார்கள். சுபகாரியம் என்றால் திருமணம். புதுமனை புகுவிழா, புதுத் தொழில் துவங்கும் நன்னாள் போன்றவை)

பெளர்ணமியில் இருந்து அமாவாசை வரை 15 திதிகள்(அவைகள் தேய்பிறைத் திதிகள் எனப்படும்)

1. பிரதமை, 2. துவிதியை, 3. திரிதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13, திரயோதசி, 14. சதுர்த்தசி

அமாவாசை + வளர்பிறைத் திதிகள் 14 + பெளர்ணமி + தேய்பிறைத் திதிகள் 14 = ஆக மொத்தம் 30 திதிகள். கணக்கு சரியாகிவிட்டதா?

ஒவ்வொரு திதிக்கும் ஒரு சிறப்பு உண்டு.

அது என்ன?

அமாவாசை அன்று நம் முன்னோர்களை வழிபட வேண்டும். தந்தையார் அல்லது தாயார் மேல் உலகம் சென்றிருந்தால், அவர்களுக்காக ஒரு சிறப்பு வழிபாடு செய்தல் வேண்டும். திதி கொடுக்க வேண்டும்.

சதுர்த்தி, விநாயகப் பெருமானை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
பஞ்சமி, உலக நாயகி அன்னை பராசக்தியை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
சஷ்டி, சேவற்கொடியோனை, (அதாங்க நம்ம வேலுச்சாமி), முருகப் பெருமானை வணங்குதற்கு ஏற்ற திதியாகும் அஷ்டமி, கோகுலக் கிருஷ்ணனை வணங்குதற்கு ஏற்ற திதியாகும் நவமி, ராம அவதாரத்தை வணங்குதற்கு ஏற்ற திதியாகும் ஏகாதசி, துவாதசி, ஆகிய இரண்டு திதிகளும் செல்வத்தை அள்ளித்தரும் பள்ளிகொண்ட பெருமாளை வணங்குதற்கு ஏற்ற திதிகளாகும். திரயோதசி, எம்பெருமான் ஈசனை வணங்குதற்கு ஏற்ற திதியாகும் சதுர்த்தசி, சிவனையும், கணபதியையும் ஒரு சேர வணங்குதற்கு ஏற்ற திதியாகும் விநாயகரில் துவங்கி, விநாயகரிலேயே முடிவதைக் கவனியுங்கள் பெளர்ணமி, அண்ணாமலையில் குடிகொண்டிருக்கும் அருணாச்சலரை வணங்குதற்கு ஏற்ற திதியாகும். அத்துடன் எல்லா தெய்வங்களையும் வணங்கி மகிழ ஏற்ற திதியாகும்.

திதிகளின் பயன் அவ்வளவுதானா?

இல்லை! அதி முக்கியமான பயன் ஒன்று இருக்கிறது. ஒருவரின் தந்தை அல்லது தாயார் இறந்துவிட்டால் அவர்களுடைய இறந்த நாளைத் திதியை வைத்துத்தான் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஆண்டுதோறும் அந்த நாளில் ஆண்டுத்திதி (வருஷாப்தி) கொடுக்க வேண்டும். மேலும் இரண்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். அல்லது தட்டில் பத்துப் பத்து டாலராக இரண்டு பேருக்குக் கொடுக்கலாம் (இது தூர தேசங்களில் இருப்பவர்களுக்கு)

எந்தத் தமிழ் மாதம், வளர்பிறை அல்லது தேய்பிறையில் இன்ன திதி என்பதைக் குறித்து வைத்துக்கொள்வது நல்லது.


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26 comments:

k.umapathy said...

Respected sir,

Good morning. very good lesson for younger generation and keep in their mind.

ரமேஷ் வெங்கடபதி said...

முன்னோர்களை வணங்கிட, அதி முக்கியமான திதியை பற்றி எளிமையாக,புரியும்படி விளக்கிச் சென்ற வாத்தியார் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி! வணக்கம்!

ஜி ஆலாசியம் said...

Thanks for the lesson sir.

Parvathy Ramachandran said...

மிக வயதான என் மாமியார் மாமனாருடன், இறை கருணையால், காசியாத்திரையை நிறைவேற்றி விட்டு, நேற்று இரவு தான் ஊர் வந்து சேர்ந்தேன். அதனால் தொடர்ந்த சில நாட்களாக வகுப்பறைக்கு வர இயலவில்லை. திதிகள் சம்பந்தமான இன்றைய பதிவு மிக அருமை. அதுவும், இம்மாதத்தில்(ஐப்பசி) ரமா ஏகாதசி, நந்தினி பூஜை (கிருஷ்ணபட்ச துவாதசி)தன்வந்தரி திரயோதசி, சகோதர துவிதியை, ஸ்கந்த சஷ்டி என்று திதி சம்பந்தமான பண்டிகைகள் அணிவகுத்து வரும் வேளையில் மிக அற்புதமான, திதிகளின் முக்கியத்துவத்தை விளக்கும் மிக அருமையான பதிவு. மிக்க நன்றி.

Udhaya Kumar said...

குருவிற்க்கு வணக்கம்
பயனுள்ள கருத்துகள்.
நன்றி

SP.VR. SUBBAIYA said...

வாத்தியாருக்குக் காய்ச்சல். மருந்துகளைச் சாப்பிட்டுவிட்டு ஓய்வில் இருக்கிறார். பின்னூட்டங்களுக்கான பதில்கள் இரண்டு நாட்கள் கழித்து வெளியாகும்! அனைவரும் பொறுத்துக்கொள்ளுங்கள்!

ARASU said...

ஆசிரியருக்கு வணக்கம்,
அய்யா,
இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பது தொடர்பாக ஒரு சந்தேகம்.
30/11/2011 அன்று கார்த்திகை மாதம அமாவாசையை தொடர்ந்து வரும் சஷ்டி திதி வந்தது. எனவே இந்த ஆண்டு கார்த்திகை மாதம் வரும்
அமாவாசையை தொடர்ந்து வருகின்ற சஷ்டி தினத்தில் அதாவது 18/12/2012
அன்று திதி அனுசரிப்பதுதானே சரியாக இருக்கும். 19/11/2012 அன்று வரும்
சஷ்டி திதி அய்ப்பசி மாத அமாவாசைக்குப்பிறகு வருவதால்,இதை எப்படி
சரியானதாக எடுத்துக்கொள்ள முடியும்?
அன்புடன்
அரசு.

kmr.krishnan said...

திதி என்பதுதான் மருவி தேதி ஆயிற்றோ? தேதி தான் 'டேட்' ஆயிற்றோ?

'அதிதி தேவோ பவ' என்பது வேதவாக்கியம். சமஸ்கிருத மொழியில் 'அ' விகுதி சேர்த்துவிட்டால் எதிர்மறை ஆகிவிடும்.(இதற்கு விதிவிலக்கு உண்டு)
அதன்படி அதிதி என்றால் 'தேதிகுறிப்பிடாத' என்று பொருள்.தேதி குறிப்பிட்டு வருபவர்கள் விருந்தினர்கள். தேதி குறிப்பிடாமல் வந்து நிற்பவர்கள் அதிதி.
அதாவது திடீர் விருந்தினர்.அவர்கள் நமக்குத் தெரிந்தவர்களாகவும் இருக்கலாம் தெரியாதவ‌ர்களாகவும் இருக்கலாம்.நாம் வழங்கும் உணவைப் பெற்றுக் கொள்ளும் அதிதியை வணங்கச்சொல்கிறது வேதம் அதுதான் "அதிதி தேவோ பவ"!

நமது பண்பாட்டில் கொடுப்பவன் தன்னைத் தாழ்த்திக் கொண்டு வாங்குபவனை உயர்த்த வேண்டும். அதனால் தான் தானம் வாங்கித் தன் பசியை போக்குபவனை மிகுந்த மரியாதயுடன் 'அதிதி'என்றார்கள்.

அடிப்படைப்பாடம் அருமை, எளிமை!நன்றி ஐயா!

kmr.krishnan said...

வாத்தியார் சீக்கிரமே நலம் பெறப் பழனியாண்டவனுக்கு மகஜர் அனுப்பியுள்ளேன். கவனமாக உடல் நிலையைப் பேணவும், ஐயா!இது எங்க‌ளுடைய சுய நலத்திற்காகத்தான்.

geetha lakshmi said...

வணக்கம் ஐயா, திதி பற்றிய பதிவிற்கு நன்றி, ஒவ்வொருவரும் தெறிந்து கொள்ள வேண்டிய பதிவு, நன்றி ஐயா. வாத்யார் ஐயாவிற்கு காய்ச்சல் விரைவில் குணமாக‌ கடவுளிடம் வேண்டுகிறேன்.

thanusu said...

SP.VR. SUBBAIYA said...

வாத்தியாருக்குக் காய்ச்சல். மருந்துகளைச் சாப்பிட்டுவிட்டு ஓய்வில் இருக்கிறார். பின்னூட்டங்களுக்கான பதில்கள் இரண்டு நாட்கள் கழித்து வெளியாகும்! அனைவரும் பொறுத்துக்கொள்ளுங்கள்!////

அவசரமில்லை அய்யா நன்கு குணமான பின் வந்தால் போதும். நன்கு ஓய்வெடுங்கள்.தாங்களின் உடல் நலனே முக்கியம்.
ஜி ஆலாசியம் said...

சார்! மாத்திரைகளை சாப்பிட்டு நன்கு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
உடம்பைப் பேணிக் கொள்ளுங்கள்....

விரைவில் நலமுடன் வலம் வர அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.

RAMADU Family said...

Guru vanakkam,

Take rest and get well soon.

Regards
RAMADU.

V Dhakshanamoorthy said...

வாத்தியார் அவர்களின் உடல்நிலை விரைவில் குணமடைய

எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

renga said...

குருவிற்கு வணக்கங்கள்,
திதி பற்றிய பாடம் அருமை. நன்றிகள். குரு அவர்கள் நலமடைய ப்ரார்த்திக்கிறேன்.

அய்யர் said...

உடல் நலன் தேறி அதே உற்சாகத்துடன் தொடர
உள்ளன்போடு வேண்டுகிறோம்

முன்னர் மின்னஞ்சலில் சொன்னது போல் நாளின்
முதலில் சாப்பிடும் காபி டீ யை தவிர்க்க

கீரின் டீ சாப்பிட்டு புத்துணர்ச்சி பெறுக
கீரிட்டு பார்க்க வேண்டாம் விலையில் பெரிய வேறுபாடில்லை

வெள்ளை விஷம் (white poison) என
வெளிப்படையாக நாங்கள் சொல்லும்

உப்பு சர்க்கரை மற்றும் பாலினை
உணவிலிருந்து நீக்கி விட்டால்

சுரம் தரும் துன்பமில்லை
சுரம் நீக்கும் இந்த பதிகம் பாடி

வழிபாடு செய்கிறோம்
வணக்கங்களுடன்

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுல்ளது நீறு
செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே

அய்யர் said...

நாளைய நாள் வெள்ளி அன்றோ
நமது வகுப்பில் மலரும் வெள்ளிக்காக

பாடலினை சுழல விடும் பழக்கத்தில்
பாடி வலமாக சுழல விடுகிறோம்

சுவைக்க..
சுவைத்தவர்கள் இணைந்து களிக்க..

இந்த (முருகன்) பாடல்..

திருநீறில் மருந்து இருக்கு தெரியுமா...அதை

தினம் அணிந்தால் புகழ் இருக்கு புரியுமா..

ஆறு மணக்கும் அய்யனின் திருமருந்து நல்ல
அறிவு கண்ணை திறந்து வைக்கும் அரு மருந்து

"அன்பு வழி வாழ வைக்கும் பெரு மருந்து" நல்ல
ஆசி எல்லாம் நமக்கு என்றும் தரு மருந்து

சண்டியரை சத்து வழியில் நடத்தும் மருந்து
இளம் காளையரை காலமெல்லாம் காக்கும் மருந்து

மங்கையருக்கு மழலை செல்வம் கொடுக்கும் மருந்து திரு
மங்கலமாய் குங்குமமும் வழங்கும் மருந்து

கற்பனையில் கவிதை பாட செய்யும் மருந்து பெரும்
கள்வரையும் திருந்தி வாழ செய்யும் மருந்து

முன்வினை தந்த நோயெல்லாம் தீர்க்கும் மருந்து நம்
வாழ்வில் நல்ல செல்வம் எல்லாம் சேர்க்கும் மருந்து

Vannamalar said...

Thanks for the lessons. Hope you will get better soon.

Thank you
Vannamalar

Vannamalar said...

Thanks for the lessons. Hope you
will get better soon.

Thanks,
Jayanthi

kmr.krishnan said...

நான் அனுப்பிய 2 பின்னூட்டங்கள் பதிவாகவில்லை.

திதி பற்றி அறியத்தந்தற்கு நன்றி! வாத்தியார் வெகுவிரைவில் பூரண குணம் அடையப் பிரார்த்திக்கிறேன்

karthik said...

ஐயா தங்கள் நலம் ஆக பழனி அப்பனை வேண்டுகிறேன் ஐயா நானும் நமது மாணவ செல்வங்களும் .

Maaya kanna said...

Vanakkam Iyaa!.

ananth said...

உடம்பைப் கவனமாய் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா. வெறும் காய்ச்சல், சளி இவற்றின் காரணமாக 3 வாரங்களுக்கு மேல் மருத்துவமனையில் நான் இருக்க வேண்டியதாயிற்று. Lower respiratory tract infection என்று எனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் தன்னுடைய அறிக்கையில் எழுதியிருந்தார். வெறும் காய்ச்சலுக்கே இப்படியென்றால் பறவை சளி காய்ச்சல் (Influenza A (H1N1) வந்திருந்தால் என்ன நிலையாகியிருப்பேனோ என்ற எண்ணமும் வந்து போனது.

சரண் said...

உடல் நலத்தை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா.

Ravi said...

get well soon..

மாற்றுப்பார்வை said...

நல்ல பயனுள்ள பதிவு