Astrology - Popcorn Post - சனி எப்படிக் கொடுப்பான்?
Popcorn Post No.29
பாப்கார்ன் பதிவுகள் - எண்.29
தேதி 5.11.2012 திங்கட்கிழமை
---------------------------------
சனியைப்போல் கொடுப்பாருமில்லை. கெடுப்பாருமில்லை. சனி முதல் நிலை தீய கிரகம். இயற்கையிலேயே தீய கிரகம்
அப்புறம் எப்படிக் கொடுப்பான்?
அவன்தான் ஆயுள்காரகன். அவன்தான் கர்மகாரகன் (authority for work/profession) அதை மறந்துவிடாதீர்கள்.
அந்த இரண்டு செயல்களைத் தவிர மற்ற இடங்களில், சனியின் நிலைமை என்ன?
உதாரணத்திற்கு சனி நான்காம் வீட்டில் இருந்தால், ஜாதகனுக்கு தன் தாயோடு நல்ல உற்வு இருக்காது. அல்லது அவனுடைய தாயால் அவனுக்கு எந்தவிதப் பயனும் இருக்காது. நான்காம் இடம் கல்விக்கான இடமும் கூட். அங்கே வந்து அமரும் சனி, ஜாகனின் கல்வியில் கையை வைத்துவிடுவான். ஜாதகனுக்குக் கல்வியில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். ஒரு பட்டப் படிப்பை முடிப்பத்ற்குள் தாவு தீர்ந்துவிடும். அத்துடன் அது சுகத்திற்கான இடமும் ஆகும். ஜாதகனுக்கு சுகக்கேடு. கையில் காசு இருந்தாலும், சொத்து இருந்தாலும், அவனால அவற்றை அனுபவித்து சுகமாக இருக்க முடியாது.
எல்லோருக்கும் அப்படியா?
இல்லை!
சனி ஜாதகத்தில் உச்சம் பெற்று இருந்தாலோ அல்லது சொந்த வீட்டில், ஆட்சி வீட்டில் இருந்தாலோ, நன்மைகளைச் செய்வான். மேற்சொன்ன கஷ்டங்கள் எல்லாம் இருக்காது. ஆனால் சனி, தான் உச்சம் பெற்றதற்கான முழுப்பலனையும் தருவதற்கு அல்லது ஆட்சி பலம் பெற்றதற்கான முழுப்பலனையும் தருவதற்கு, அவர் சுபக்கிரகங்களான சுக்கிரன் அல்லது குருவின் சேர்க்கையையோ அல்லது பார்வையையோ பெற்றிருக்க வேண்டும்.
4ஆம் வீடு மட்டுமல்ல, மற்ற எல்லா வீடுகளுக்கும் அதுதான் பலன்.
ஆகவே உங்கள் ஜாதகத்தைப் பார்க்கும்போது அதைப் பாருங்கள்.
இது பாப்கார்ன் பதிவு. இதில் என்ன அளவு தர முடியுமோ, அதைத் தந்துள்ளேன். சனியைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் பழைய பாடங்களில் நிறைய உள்ளன. அவற்றைப் படியுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++இனிய காலை வணக்கம் ஐயா நான் தான் இன்று வகுப்பிற்க்கு பஸ்ட்
ReplyDeleteஇன்றயை பதிவு அருமை++++++++++++++++
தாங்கள் இன்று எழுதியுள்ளது என் இல்லத்தரசியின் ஜாதகத்தினை வைத்து எழுதியுள்ளது போல் உள்ளது.
ReplyDeleteசனி உச்சம்.கடக லக்னம். எனவே 4ல் சனி.குரு மிதுனத்தில் இருந்து 5ம் பார்வையாகப் பார்த்தார்.எனவே 9.5 ஆண்டுகள் வீட்டுக்குடித்தனம் செய்தவர்கள்
7.5 நாட்டு சனி இரண்டாம் சுற்றின் போது 30 வயதில் அரசு ஆசிரியப் பணியில் சேர முடிந்தது.ஆம் சனி கொடுக்கவும் செய்வார்.
நல்ல பதிவுக்கு நன்றி ஐயா!
nandri ayya... nalla pathivu
ReplyDeleteSir, useful info about Sanibagavan. For me magara lagna, sani at tenth position (uchham at thulam) but alone has no guru parvai or no sukran serkai. In navamsam sani sukra serkai at 12th position. As sani is also dhanathypathy for me, his 3rd parvai at second place (kumbam). Guru at 11 position in rasi and 9 th position at amsam. In lagnam, both sevvai(uchham) and budhan are there. I am going to face sani dasa next year. Please let me know, How the result would be.
ReplyDeleteThanks,
Sathishkumar GS
Sorry. Missed this info. Magara lagna at both Rasi and amsam.
ReplyDeleteஸ்ரீ சனீஸ்வர பகவானைப் பற்றிய பாடம். அருமை.
ReplyDeleteமறைவு ஸ்தான அதிபதியா இருந்து கோண கேந்திரத்தில் அமர்ந்தால் அது பூர்வஜன்ம பாவம்...
அவனே கோண கேந்திர அதிபதியாகி கோண கேந்திரத்திலோ! அல்லது உச்ச, ஆட்சி வீட்டில் அமர்ந்தாலும் அல்லது கோண கேந்திரத்தில் அமர்ந்து.. உச்சம், ஆட்சி பெறாவிட்டாலும், அப்படி இருக்கும் மற்ற சுப கிரகங்களின் பார்வையைப் பெற்றாலும் (இயல்பிலே சுபர் மற்றும் ஜாதகத்திற்கு சுபர்) அது பூர்வ ஜன்ம புண்ணியம்!!
பெரும்பாலும் சனி தீயவனாக ஒரு வீட்டீல் அமர்ந்தால் அந்த வீட்டின் அத்தனை அம்சங்களையும் காலி செய்ய மாட்டான்... ஏதாவது ஒன்றை கொஞ்சம் உரசிப் பார்ப்பான் என்றும் தெரிகிறது. காரணம் அந்த வீட்டிற்கு பலம் சேர்க்கும் இன்னும் பல அமைப்பு ஜாதகத்தில் இருக்கும் நிலையைப் பொறுத்து அது மாறுபடும் என்றே எடுத்துக் கொள்கிறேன் ஐயா!
இது பாப்கார்ன் பதிவு என்றுத் தெளிவாகப் போட்டு இருக்கிறீர்கள்... எனது புரிதலுக்காக எழுதுகிறேன். நன்றிகள் ஐயா!
நமது சத்தியத்தின் நாயகன் நல்லோரின் தோழனைப் பற்றிய ஒருப் பாடலையும் புனைகிறேன்.
காக்கை வாகனனே யாக்கைக் காவலனே
ஊக்கமொடு நெஞ்சுரமும் அளிப்பவனே
காக்கவாராய் நீருபூசியக் கருநீல மேனியோனே
தாக்கும் கொடுமைதனை தனித்தருள்வாய் ஈஸ்வரனே
பூக்கும் பூவெல்லாம் நின்பாதம் சேர்கின்றேன்
பூமா தேவியின் புதல்வனே - இந்த
பூவுலகில் வாழும் புண்ணியவான்களின் தோழனே
பொறுத் தருள்வாய் அப்பனே யான்புரிந்த
பொல்லா வினையாவும் பொடிப் பொடியாகி
நில்லாமல் மறைந்திடவே நித்தம் தொழுகின்றேன்
நீதியின் தலைவனே தர்மத் தேவனே
நீயாக வந்த ருள்வாய் நிமலனே!
ஓம் ஸ்ரீசனீஸ்வரனே போற்றி!
பாடம், பகிர்வு இரண்டிக்கும் நன்றிகள் ஐயா!
குருவிற்க்கு வணக்கம்
ReplyDeleteவிருச்சக்த்தில் சனி 4ல்,
அம்சத்தில் சனி 2ல், குரு பார்வை
பெற்றுள்ளது,
நன்றி
ஐயா, எனக்கு துலாம் லக்னம் 4 இல் தான் ஆட்சி, ஆனால் வக்ரம். நடப்பது குரு தசை. இன்னும் சில ஆண்டுகளில் சனி தசை துவங்க ஊள்ளது இந்த வக்ரம் தான் பயம் தருகிறது.கொடுப்பாரா கெடுப்பாரா என்று.
ReplyDeleteVANAKAM SIR EN MAGHLUKU KADAGATHIL GURU ..MAHARATHIL SANI SUKIREAN.. MEENA.LAGANAM ...
ReplyDelete
ReplyDeleteசனீஸ்வரன் பற்றிய
பாடம், சுருங்க சொல்லி
நன்கு புரிய வைத்துள்ளது.
பதிவுக்கு நன்றி !!
Very Interesting Pop Corn Feed.
ReplyDeleteThank you sir
Ashok
என்னுடைய மகன் ஜாதகத்தில் சனி, அவனுடைய லக்னமான ரிஷபத்தில் வக்ரமாக உள்ளது . சனி அவனுக்கு லக்கி ஸ்டார். 7 ம் இடத்தில் இருக்கும் சூரியன், புதன் பார்வையில் இருக்கிறார். குடுப்பார கெடுப்பர ?
ReplyDeleteகுருவிற்கு வணக்கங்கள்.
ReplyDeleteநீண்ட விடுப்பிற்கு பின் வந்துள்ளேன். சனி பற்றிய பாடம் மிக அருமை.
கன்யா லக்னத்திற்கு ஐந்திற்க்கும் ஆறுக்கும் உடையவனான சனி கடகத்தில்
(11ம் இடம்) வர்கோத்தமமாகி உள்ளார். ஆறு மாதங்களில் சனி மகா தசை தொடங்குகிறது. சனி கெடுப்பாரா? சுக்கிரன் உச்சமாகி லக்கினத்தை பார்க்கிறார்.
குரு 8ல் உச்ச சூரியன், கேது, புதனுடன் உள்ளார். செவ்வாய் 10ல், சந்திரன் ராகுவுடன் துலாமில் உள்ளனர். சந்திரன் மற்றும் சூரியனும் வர்கோத்தமமாக உள்ளனர். பிறந்த தேதி 14/04/1976 (5.10pm)..
எனது கவிதையிலே சனி பகவானை பூமா தேவியின் மகன் என்று கூறி இருக்கிறேன் அதற்கு எனது தவறானப் புரிதலும் கூட என்று நினைக்கிறேன்.
ReplyDelete''ஆனால் எனக்கு ஒரு ஞாபகம் பிள்ளையாரின் பெயர் சூட்டு விழாவிற்கோ அல்லது வேறு ஒரு சுப காரியத்திற்கோ சனீஸ்வரன் செல்ல வேண்டும் என்று அடம் பிடிப்பான் அதற்கு அவனின் தாய் இல்லையப்பா அங்கே நீ செல்ல வேண்டாம் என்று தடுத்ததாகவும் கதை. அதிலே அந்தத் தாய் பூமா தேவி என்று ஒரு ஞாபகம். ''
இருந்தும் செவ்வாய் தான் பூமாதேவியின் மகனென்றும் அதனாலே அவன் பூமிகார னென்றும் அறிகிறேன்.
தவறுக்கு வருந்துகிறேன் அனைவரும் மன்னிக்கணும்.யாவருக்கும் ஜகன் மாதாவே தாயாகிறாள்!
நன்றி.