மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.11.12

காய்ச்சலுடன் ஒரு கைகுலுக்கல்!


 காய்ச்சலுடன் ஒரு கைகுலுக்கல்!

அன்பர்களே, அன்பு உள்ளங்களே,

கடந்த ஒரு வார காலமாக வாத்தியாருக்குக் கடும காய்ச்சல். virus fever. Blood test முதல் அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து, மருத்துவர்களின் ஆலோசனைப் படி மருந்துகளை உட்கொண்டு வருகிறேன். காய்ச்சல் தணிந்துள்ளது. ஆனாலும் முற்றிலுமாகக் குணமாக வில்லை. முற்றிலுமாகத் தேறி, பழைய நிலைக்கு வருவதற்கு இன்னும் ஒரு வாரம் ஆகலாம். அனைவரும் பொறுத்துக்கொள்ளூங்கள்.

அடுத்த வாரம் முதல் பழைய உத்வேகத்துடன் பாடங்களை எழுத உள்ளேன். இழந்த நேரங்கள் சரி செய்யப்படும். கோவையில் தற்சமயம் நிலவும் 12 மணி நேர மின்வெட்டு, எவரையும் உற்சாகப் படுத்துவதாக இல்லை. அதையும் சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது. யு.பி.எஸ் உள்ளது. இருந்தும் பயன் இல்லை.  யு.பி.எஸ் சார்ஜ் ஆவதற்கும் மின்சாரம் வேண்டுமல்லவா? அதுவும் ஒரு பெரிய குறைதான்.

வருவதை எதிர்கொள்வோம். அனைவரையும் பொறுமையாக இருக்கும்படியும். வாத்தியாருக்கு, உங்களுடைய ஒத்துழைப்பை நல்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++==

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

62 comments:

  1. உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் வாத்தியாரே.... நன்றாக ஓய்வு எடுங்கள்.... பாடங்களை அப்புறம் கூடப் பார்க்கலாம்....

    ReplyDelete
  2. Please take nilavembu kashayam. It is available in all sidha and homeo pharmacy. It is the best remedy for all types of fever and also put u back to normal health. The allopathy is not having the remedy for dengue.

    ReplyDelete
  3. குருவிற்கு வணக்கம்

    நலம் பெற்று, நல்ல ஆருகியத்துடன்
    இருக்க பழனி முருகனிடம் பிறத்திகிறேன்
    நன்றி .

    ReplyDelete
  4. Respected Sir,

    I pray for your good health and wealth. God may bless to get well soon...

    Advance Dewali wishes to you and your family.....

    Have a happy sunday..

    Yours sincerely,
    Ravi-oman

    ReplyDelete
  5. ஐயா!
    நடப்பு நிலவரங்களை உன்னிப்பாக கவனித்தால் காய்ச்சல் கொசுவால் வருகிறதா? இல்லை உருவாக்கிறார்களா? நமக்கு எல்லாவற்றையும் (மொகலாய,ஆங்கிலேய மற்றும் அரசியல்வாதிகள் ஆட்சியை) சகித்துகொண்டு உயிர் வாழ தெறியும். தாங்கள் விரைவில் நலம்பெற்று வகுப்பறைக்கு வருவதற்கு ஆண்டவனை பிராதிக்கிறேன்
    அன்புடன்
    மணி
    பொன்னமராவதி

    ReplyDelete
  6. விரைவில் பூரண நலம் பெற்று ஆரோக்கியமாக மீண்டு வர, எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக !!

    ReplyDelete
  7. ஆசிரியருக்கு வணக்கம்.

    அய்யா ,

    எங்கள் வகுப்பறையின் வாத்தியார் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல
    முருகப்பெருமான் அருளை வேண்டி பிரார்த்திக்கிறேன்.
    அன்புடன்,
    அரசு.

    ReplyDelete
  8. God bless you to cure soon and proceed your services.

    ReplyDelete
  9. வலமாக சுழல விடுகிறோம்
    வழக்கம் போல் இந்த பாடலினை..



    நலந்தானா…. நலந்தானா…
    உடலும் உள்ளமும் நலந்தானா…

    நலம் பெற வேண்டும் நீ என்று….
    நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு…

    இலை மறை காய் போல்… பொருள் கொண்டு…
    எவரும் அறியாமல் சொல் இன்று…

    கண் பட்டதால் உந்தேன் மேனியிலே….
    புண் பட்டதோ அதை நானறியேன்…

    என் கண் பட்டதால் உந்தேன் மேனியிலே….
    புண் பட்டதோ அதை நானறியேன்…

    புண் பட்ட சேதியை கேட்டவுடன்…
    இந்த பெண் பட்ட பாட்டை யார் அறிவார்…?

    நடந்ததெல்லாம் மறந்திருப்போம்…
    நடப்பதையே நினைத்திருப்போம்…

    ReplyDelete
  10. Sir, we all are with you. We will pray for you to get well soon. Take rest and come back in ur style sir.
    Diwali wishes for you and our classroom family.

    Thanks
    Sathishkumar GS

    ReplyDelete
  11. குருவிற்கு வணக்கங்கள்,
    தாங்கள் விரைவில் குணமடைய இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  12. ///தங்களுக்கு சுகவீனம் என அறிந்து மனம் கவலை கொள்கிறது .. "சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் " என்று எனது பாட்டியார் அடிக்கடி சொல்வார்கள் எனவே ஒன்றைப்பற்றியும் கவலைபடாமல் ஓய்வு எடுங்கள். ///

    எனது முதல் பின்னூட்டமும் இதுவே
    வாத்தியார் ஐயா அவர்களை முதலில் வணங்கி, பாராட்டி எனது முதல் பின்னூட்டத்தை பதிவு செய்கிறேன். நான் கடந்த 3 அல்லது 4 மாதங்களாகத்தான் உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். அருமையான படைப்புக்கள்.

    உங்களது இந்த தன்னலமற்ற இந்த சேவையை / முயற்ச்சியை எந்தவித சலிப்புமின்றி தொடர்வது மிகவும் ஆச்சரியம் தரும் ஒன்றாகவே கருதுகின்றேன். ( ஒரு ஆர்வத்தில் எல்லோருமே சில விடயங்களை தொடங்கி விட்டு காலப்போக்கில் கை விட்டு விடுவார்கள் ஆனால் பல வருடங்களாக தொடர்வது என்பது அசாத்தியமே)

    எல்லாவற்றையும் தாண்டி உங்களுடைய ஒவ்வொரு பதிவுகளும் தரும் தெளிவும் அதை திறம்பட கலை நயம், நகைச்சுவையுணர்வோடு ,சலிப்பு தட்டாமல் அடுத்த பதிவு எப்போது வரும் என்ற ஆர்வம் குன்றாமல் படிக்க வைக்கும் அளவுக்கு மிக மிக புரியும் அளவுக்கு எளிமையாக தரமுடிகிற உங்களுடைய ஆற்றல் தான் என்னையும் கற்றறிய தூண்டுகிறது. ( இப்படி ஒரு ஆசான் கிடைத்திருந்தால் சிறுவயதில் இருந்தே எல்லாவற்றையும் கற்று தேர்ந்திருக்க முடியும் என்று தோன்றுகிறது.)

    எதேர்ச்சையாக சனிபெயர்ச்சி பலன்களை படிக்க வலையில் தேடியபோது உங்கள் பதிவுகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு .. அதுவே எனக்கு ஒரு சந்தர்பத்தையும் பெற்று தந்துள்ளது . அதிர்ஷ்டமாகவே அமைந்த இந்த அமைப்பு எனக்கு ஜோதிடத்தை கற்று தரும் என்று நம்புகிறேன். குறைந்தது ஜோதிடத்தை அறியவாவது தரும் என்று நம்புவோம் .

    ReplyDelete
  13. Dear Sir,

    I wish you for a speedy recovery. Please do take care of your health
    N.K.Rajan

    ReplyDelete
  14. Wishing you a speeder recovery, Sir!
    Bala

    ReplyDelete
  15. "வாத்தியாருக்குக் கடும காய்ச்சல்"
    "முற்றிலுமாகத் தேறி, பழைய நிலைக்கு வருவதற்கு
    இன்னும் ஒரு வாரம் ஆகலாம். அனைவரும்
    பொறுத்துக்கொள்ளூங்கள்"

    இந்த வரிகளைப் படிக்கும்போது
    தங்களின் கடமை உணர்வு மேலோங்கி இருந்தது.

    அய்யா தங்களின் உடல் நிலையினை முதலில் கவனியுங்கள்
    அது தான் இப்போதைக்கு நல்லது.

    தாங்கள் எப்போது வந்தாலும் வந்த பிறகு பாடம் தொடரலாம்.
    நல்லபடியாக உடல் நலம் பெறுவதற்கு ஆண்டவனைப் பிராத்திக்கிறேன்.
    வணக்கம்
    இப்படிக்கு
    தங்கள் அன்புள்ள
    வ.தட்சணாமூர்த்தி,

    Date :- 11-11-2012

    ReplyDelete
  16. Take rest sir.
    I am silent reader for 6 months.But i want to come out today.

    Regards
    Nandhaa

    ReplyDelete
  17. Wish you complete and speedy recovery. Bala, riyadh.

    ReplyDelete
  18. Dear sir,
    Good morning,take rest sir,we also pray to get the sir to be get well soon..happy diwali sir,

    ReplyDelete
  19. Respected guruji,
    Wishing you for the speedy recovery from health difficulties. Yes! power is problem always.we will wait. virichigam.

    ReplyDelete
  20. Dear sir
    Last few days there was no lessons but it seemed to me something was wrong, finaly i was right but it made me sad....pls sir take rest... dont feel anything we are here for you.... we will pray for your good health.... pls take care....

    ReplyDelete
  21. பெருமதிப்பிற்கும் பிரியங்களுக்கும் உரிய அன்புள்ள வாத்தியாருக்கு,

    தாங்கள் முழு உடல் நலம் பெற்று பதிவுகள் இட அப்பன் முருகனை வேண்டுகிறேன்.

    அடியேனுக்கும் இரண்டு நாட்களாக ஒரே தும்மல் மற்றும் காய்ச்சல் போல உள்ளது. நிலவேம்பு கஷாயம் தான் நமக்கு மருந்து நிலவேம்பு குடிநீர் என்று கிடைக்கும். அதை விட நிலவேம்பு மட்டும் கிடைத்தால் சிறந்தது இருப்பினும் சித்தா கடைகளில் நிலவேம்பு குடிநீர் கிட்டும் நிலவேம்புடன் மிளகு முதலிய சில பல மூலிகைகளை சேர்த்த கலவை. கசந்து வடியும். ஆனால் அவ்வளவு நன்றாக கேட்கும்.

    இங்குள்ள அன்பர்கள் அறிந்துகொள்ள, நிலவேம்பு பயன்பாடு பற்றி ஒரு சிறு குறிப்பு (பலருக்கும் தெரிந்திருக்கும் தெரியாதவர்களுக்கு பயன் படட்டும் என்று போடுகிறேன்):

    ஒரு குவளை நன்னீரில் ஒரு ஸ்பூன் நிலவேம்பு சூரணம் இட்டு, அதை முக்கால் குவளை ஆகும் வரையில் மிதமான தீயில் நன்கு காய்ச்சி, வடிகட்டி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து பருகவும் தேன் சேர்க்காவிட்டால் பலபேருக்கு குமட்டிக்கொண்டு வரும் அத்தனை கசப்பு.

    ஆஸ்துமா, சளி, குளிர், காய்ச்சல் போன்றவைகள் அண்டாது. இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை குடித்தால் நல்ல முன்-ஜாக்கிரதை ஏற்பாடு. டெங்கு காய்ச்சலுக்கும் மலேரியாவுக்கும் தமிழக அரசே பரிந்துரைக்கும் கஷாயமாக்கும் இது. நிலவேம்பு கஷாயம் நிலவேம்பு குடிநீர் கஷாயத்தை விட மேன்மையானது. நிலவேம்பு குடிநீரும் பருகலாம் ஆனால் அதை குடித்தால் சிறிது நேரத்திலேயே கப-கபவென வயிற்றில் நல்ல பசி எடுக்கும்.

    எனக்கு எப்படி தெரியும்? எனது அப்பா மருத்துவத்துறையில் முப்பத்து எட்டு ஆண்டுகள் செவ்வனே பணியாற்றி ஓய்வு பெற்றவர் அன்றோ! அவருடைய சித்த வைத்திய நண்பர்கள் சொன்னது.... அதனால் :)

    எங்கள் வீட்டில் நிலவேம்பு எப்போதும் இருக்கும் அக்கம் பக்கத்துக்கும் தருவது உண்டு நேற்று கூட இங்கே ஒரு பிள்ளைக்கு கஷாயம் வைத்து தந்தேன்! முதல் முறை குடிப்பவர்களின் முகம் அஷ்டகோணலாக மாறி "உவ்வே" என்று வருவதை ரசிப்பது அலாதி சுகம்! பரவாயில்லை அத்தனையும் நல்லதுக்கு தான்!

    அன்புடன்,
    புவனேஷ்வர்

    ReplyDelete
  22. அன்பு ஆசிரியர் ஐயா அவர்களின் உடல் நலம் தேறி, பழைய உற்சாகத்துடன் பணிபுரிய இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  23. வெகு விரைவில் குணமடைய முருகப்பனை பிரார்த்திக்கிறேன்!
    ‍-ஜவகர் கோவிந்தராஜ்

    ReplyDelete
  24. vanakam sir ungal udal nillal..g unamavatrku gadavulai vendikolkiran

    ReplyDelete
  25. We prey Almighty to give enough strength to over come this hardly situation. Take care Sir.

    ReplyDelete
  26. குணம் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் அய்யா.

    ReplyDelete
  27. Dear Sir,

    Take a complete rest and get well soon.

    Regards,
    Arulnithi

    ReplyDelete
  28. வாத்தியார் அவர்கள் விரைவில் நலம் பெற்று வர எல்லாம் வல்ல ஆண்டவனை பிராத்தனை செய்கின்றேம்.
    கருவூர் முருகன்.

    ReplyDelete
  29. Respected Sir,

    Get well soon sir. Take care sir. Happy Deepavali

    ReplyDelete
  30. விரைவில் பூரண நலம் பெற்று ஆரோக்கியமாக மீண்டு வர, எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக !!

    ReplyDelete
  31. வாத்தியார் ஐயா வணக்கம்,
    தங்களின் நலம் மிக முக்கியம். நன்றாக ஒய்வெடுங்கள்.மற்றவற்றை பின்பு கவனிக்கலாம்.தங்களின் நலம் வேண்டி எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.
    சுதன்.கனடா

    ReplyDelete
  32. திரு நீலகண்டப்பதிகம் (அவ்வினைக்கு இவ்வினை ....)பாடினால் விஷக்காய்ச்சல் சீக்கிரம் குணமாகும்.

    தெரிந்த அன்பர்கள் வாத்தியாருக்காக வேண்டிப் பாடவும்.
    சீக்கிரமே குணமாக வேண்டுகிறோம்.

    அன்பர்களுக்கு எல்லாம், வாத்தியாருக்கும் என் மனமார்ந்த தீபாவளி வந்தனங்கள்

    ReplyDelete
  33. get well soon sir. thiruneetrai pathu pol thadivi pathiagathai padikkavum

    மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
    சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
    தந்திரமாவது நீறு சமயத்திலுல்ளது நீறு
    செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே

    ReplyDelete
  34. I Pray Kolkata Kali will give all powers and speedy recovery
    Regards
    A.Ramakrishnan, Kolkata

    ReplyDelete
  35. Respected Sir,

    I will pray for your health sir.

    (Mandiramavathu neeru vaanavar melathu neeru
    Sundaramavathu neeru thudikkappaduvathu neeru
    Thandiramaavathu neeru samayathil ullathu neeru
    Senthuvar vaai umai pangan thiru aalavayan thiruneere).....

    Lord Siva will cure everything and you will be alright very soon sir.

    regards
    Srividhya

    ReplyDelete
  36. வாத்தியார் அவா்களுக்கு வணக்கம்... தாங்கள் உடல் நலம் சரியில்லாமல் இருப்பது எனக்கு தாமதமாகவே தெரியவந்தது.. தங்கள் எல்லாவித நலமும் பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நன்றி... வணக்கம் காஞ்சியிலிருந்து ஸ்ரீநிவாசன்

    ReplyDelete
  37. வண்க்கம் ஐயா,விரைவில் நீங்கள் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  38. We pray for your health. Here I heard you also complaining on the issue of Electricity. Instead of complaning, I hope u had the requried Wealth/Money for the Solar power, you can try to install the one. so the basic requried of required lightin and air circulation to Fan can be obtained, which will atlreast readuce 1-2kW of load from TNEB.

    I hope you can ask your followers to install one atleast in there house.

    Every one knows Saving One unit of electricity is equal to production of 2 units of Electricity.

    More over recently i read a story of a sucesscull owner of Poultry farm who producing the requried amount of electricty from his poulty waste by installing the bio gas plant. Why we can also try such thing.

    I am puting i here hoping that it will spread for atleast 1000 people and out of that 1000 atleast 10 can do it.

    ReplyDelete
  39. Happy Diwali Sir....Get Well Soon....

    ReplyDelete
  40. தம்
    எண்ணங்களை
    இந்த
    பண்ணை வகுப்பில்
    மின்னச்செய்யும்
    நட்பு நெஞ்சங்களுக்கும்...

    பல் சுவையையும்
    பாடமெடுக்கும்
    ஆசிரியருக்கும்
    வண்ண தீபாவளி வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  41. Dear Sir,

    Get Well Soon............

    affectionately,

    h.prem

    ReplyDelete
  42. Dear sir,

    I pray for your speedy recovery

    thanks
    swaminathan

    ReplyDelete
  43. தாங்கள் எப்போது வந்தாலும், எங்களுக்கு நல்ல நெறிப்படுத்தலுடனும் கடிகளுடனும் பாடம் நடத்தும் திறமை படைத்தவருக்கு எல்லாம் நல்லபடியாக உடல் நலம் பெறுவதற்கு ஆண்டவனைப் பிராத்திக்கிறேன்.

    வணக்கம்
    இப்படிக்கு
    தங்களை நேசிக்கும்
    வசந்தன்

    ReplyDelete
  44. ஐயா வணக்கம்


    பொதுநலவாதி, கொஞ்சும் சுயநலவதியாக இருங்கள் உடம்பு என்ற கோயிலில் கடவுள் கண்டிப்பாக இருக்கிறார், என்பது என் கருத்து

    கு ரா முருகன்
    பி‌எஸ்‌என்‌எல் சென்னை

    ReplyDelete
  45. ராசி நாதன் நீசமானால் குறிப்பாக சிம்ம ராசிக்காரர்களுக்கு இது போதாத காலம் போலும். உடல் காரகன் கெட்டுப்போய் படுத்துகிறான். நாளை எல்லாம் சரியாகிவிடும். கடவுள் எப்போதும் கை விட மாட்டார். தாங்கள் பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  46. வாத்தியார் சீக்கிரமே குணமாகி பழையபடி நலமுடன் திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  47. நலம் பெற்று மீண்டும்
    நலம் நாடும் உங்களை வாழ்த்தி வரவேற்கிறோம்

    ஒவ்வொருவரும் தாம் அறிந்த
    ஒரு ஆலோசனையை சொல்வர்

    இறைவழிபாட்டினை தவிர
    இவர்கள் சொல்லும் எதையும்

    எடுத்துக் கொள்ள வேண்டாம்
    என அன்பு வேண்டுகோள் வைக்கின்றோம்

    இதிலும் ஒரு சிக்கல்
    இந்த கடவுளை வணங்கு என பட்டியல்

    இருப்பினும் எல்லோரும் சேர்ந்து
    இங்கு கூட்டு பிரார்த்தனை செய்ய அழைக்கின்றோம்

    அல்லாவை வணங்குபவரும்
    அகிலம் போற்றும் கிருத்துவை துதிப்பவரும்

    ஒன்று சேர்ந்து இங்கு
    ஒரு முறை கூட்டு பிரார்த்தனைக்கு வாருங்கள்..

    திங்கள் முதல் நமது வகுப்பு
    திரும்பவும் உற்சாகத்துடன் தொடங்கும்

    வாத்தியாரின் மீது அன்புடன் உணர்வுகளை
    வாரித்தந்த உள்ளங்களுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  48. Sir take care ... get well soon .


    Sivakumar balu

    ReplyDelete
  49. வாத்தியார் ஐயா வணக்கம் உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் நலமான பின்பு பதில் அளியுங்கள் இந்தக் கேள்வியை தனிப்பட்டரீதியில் உங்களுக்கு அனுப்பியிருப்பேன் ஆனாலும் பலரும் இதற்கான பதிலை அறிந்து கொள்ளட்டும் என்பதற்காக பின்னூட்டதில் வெளியிடுகின்றேன்.

    வா.பஞ்சாங்கம் பார்பதில் சில சந்தேகங்கள் உள்ளது அதாவது ராகு கேது பாதசாரம் கார்த்திகை 18 நா-வி 6-14 விசாகம் 3ல் {து} பெயர்ச்சி என உள்ளது. நா-வி 6-14 எனறால் என்ன நேரம் என்று எப்படி கணித்துக் கொள்வது?
    நந்தன வருட கார்த்திகை மாதப்பிறப்பு வெள்ளிக்கிழமை நாடி 17 விநாடி 23 [மணி 1-05ல்] விருச்சிக ரவி. என்று உள்ளது இதில் நாடி 17 விநாடி 23 என்றால் எத்தனை மணி என்று புரிந்து கொள்ளது?
    நாடி 17 விநாடி 23 மணி 1-05 கணிப்பது எப்படி?
    ஐயா பஞ்சாங்கம் பார்பது எப்படி நேரங்களை கணிப்பது எப்படி என்று பதிவு எழுதலாமே..

    ReplyDelete
  50. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
    தாங்கள் விரைவில் குணமடைந்து குடும்பத்தினருடன் சந்தோசமாக பணி தொடர இறைவனை ப்ரார்த்தித்துக்கொள்கிறேன்.
    (குடும்பத்தினர் என்பதில் மாணவர்குடும்பம் எனும் வகுப்பறை மாணவர்களும் அடக்கம் அய்யா.)
    அன்புடன்
    எஸ்.கனகராஜ்.

    ReplyDelete
  51. பின்னூட்டங்கள் மூலமாகவும், தனி மின்னஞ்சல்கள் மூலமாகவும், வாத்தியாரின் மேல தங்களுடைய மேலான அன்பையும், பரிவையும் காட்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும், என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உங்களின் பொறுமைக்கும், புரிந்துணர்விற்கும் விசேடமாக மீண்டும் ஒரு நன்றி!

    ReplyDelete
  52. பின்னூட்டங்கள் மூலமாகவும், தனி மின்னஞ்சல்கள் மூலமாகவும், வாத்தியாரின் மேல தங்களுடைய மேலான அன்பையும், பரிவையும் காட்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும், என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உங்களின் பொறுமைக்கும், புரிந்துணர்விற்கும் விசேடமாக மீண்டும் ஒரு நன்றி!

    ReplyDelete
  53. Dear Sir,

    Please take rest some more days....

    சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்...

    Take care....:)

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com