மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.11.12

Astrology ஜோதிடரின் காட்டில் எப்போது மழை?

 Astrology ஜோதிடரின் காட்டில் எப்போது மழை?

1.11.2012 வியாழன்

பொதுவாக எல்லோருக்கும் முதல் ஆசை நீண்ட ஆயுளடன் இருக்க வேண்டும் என்பது. அதில் தவறில்லை. ஜோதிடரைப் பார்க்கும்போது அதைத்தான்
கேட்பார்கள்.

ஜோதிடரும் ஜாதகனின் ஆயுள் பாவத்தைப் பார்த்துவிட்டுத்தான் பலன் சொல்ல வேண்டும். பல ஜோதிடர்களுக்கு அதற்கு நேரமில்லை. கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி வந்தவனை அனுப்பி விட்டு அடுத்தவனைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

திருமணப் பொருத்தம் பார்க்க வருகிறவர்களால்தான் அவர்களுக்கு வருமானம். வரும்போது ஐந்து அல்லது ஆறு ஜாதகங்களைக் கொண்டு வருவான். சிலர் பத்து  அல்லது பன்னிரெண்டைக்கூட கொண்டு வருவார்கள். கொண்டு வந்ததில் தங்கள் மகனுக்கு எது பொருத்தமாக உள்ளது என்று கேட்பார்கள். ஜோதிடர் நன்றாக  அலசி அவற்றில் ஒன்று அல்லது இரண்டைத் தெரிவு செய்து கொடுப்பார். அத்துடன் வந்தவன் ஜோதிடர் கேட்கும் தொகையை (ரூ.300 ல் இருந்து ஆயிரம் வரை) கொடுத்துவிட்டுப் போவான். அத்துடன் அவர் தெரிவு செய்து கொடுத்த வரன் படியாவிட்டால் மீண்டும் வருவான். சிலர் மீண்டும், மீண்டும் வருவார்கள்.

காரணம் ஜாதகம் பொருந்தினாலும் பையனுக்குப் பெண்ணைப் பிடிக்க வேண்டுமே? அல்லது பெண்ணிற்குப் பையனைப் பிடிக்க வேண்டுமே? இப்போது சம்மதம்

சொல்வதில் இருபாலருக்குமே சம உரிமை மற்றும் சம வாய்ப்பு நிலவுகிறது. ஏனென்றால் பல பெண்களும் படித்து நல்ல வேலையில் இருக்கிறார்கள்.

திருமண பந்தத்தில் பெற்றவர்கள் ஜாதகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பிள்ளைகள் தோற்றத்திற்கு (appearance)  முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.

பையன், பெண் நயன்தாரா அல்லது திரிஷா அல்லது அனுஷ்கா சர்மா மாதிரி இருக்க வேண்டும் என்பான். ஆனால் அவன் சூர்யா அல்லது ஆர்யா அல்லது
கார்த்திக் மாதிரியான தோற்றத்தில் இருக்க மாட்டான். சண்டைக் காட்சிகளில் வரும் அடியாட்கள் போல இருப்பான். அதுதான் கஷ்டம்!

ஒன்று முதல் மூன்று வருடங்கள் வரை நூறில் இருந்து முந்நூறு ஜாதகங்கள் வரை பொருத்தம் பார்த்து நொந்துபோன பெற்றோர்களை எல்லாம் நான்
அறிவேன்.

அந்த மாதிரிப் பெற்றேர்களால்தான் ஜோதிடரின் காட்டில் மழை பெய்யும்!

ஒரு நூறு ரூபாய் அல்லது ஐநூறு ரூபாயைக் கட்டணமாகக் கொடுத்து விட்டுத் தன் ஜாதகத்தை வைத்து விதம் விதமான கேள்விகளைக் கேட்பதோடு
(எழுதிக் கொண்டு வந்திருப்பான்) அவருடைய ஒரு நாள் பொழுதில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணி நேரப் பொழுதை வீணாக்குபவனை எல்லாம் ஜோதிடர்கள் விரும்புவதில்லை.

அப்படி எழுதிக் கொண்டு வந்தவனும் திருப்தியாகப் போக மாட்டான். அதுதான் கஷ்டம்.
-----------------------------------------------------------------------
சரி, சொல்ல வந்த விஷ்யத்திற்கு வருகிறேன்.

ஆயுள் பாவத்தைப் பற்றி (எட்டாம் வீட்டைப் பற்றி) எட்டு அத்தியாயங்களைப் பாடமாக எழுதியுள்ளேன். அவைகள் எல்லாம் பதிவில், பழைய பாடங்களில்
உள்ளன

இப்போது சுருக்கமாகச் சொல்ல விழைவது. நீண்ட ஆயுளைப் பற்றி!

ஒருவருக்கு நீண்ட ஆயுள் இருந்தால் மட்டும் போதாது. கடைசி மூச்சு வரை நல்ல ஆரோக்கியமும் இருக்க வேண்டும். அத்துடன் கையில் இருப்பும் இருக்க  வேண்டும். அவை இரண்டும் இல்லாம்ல நீண்ட ஆயுளுடன் இருப்பது. கதை இல்லாத படத்தில் கதாநாயகனாக நடிப்பதைப் போன்றதாகும் அதையும் மனதில்  வையுங்கள்!

1. ஆயுள் காரகன் சனியின் வலுவான பார்வை ஆயுள் ஸ்தானத்தின் மேல் விழ வேண்டும்.
2. லக்கினாதிபதி பதினொன்றில் வலுவாக இருந்தாலும் நீண்ட ஆயுள் உண்டு
3. சனி எட்டாம் வீட்டில் இருக்க வேண்டும். அத்துடன் சுப்க்கிரங்கள் ஒன்றுடன் சேர்ந்தும் இருக்க வேண்டும்.

இப்படி நீண்ட ஆயுளுக்கு மேலும் சில விதிகள் உள்ளன. முக்கியமான மூன்றை மட்டும் இங்கே கொடுத்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

20 comments:

  1. சுருக்கமான இருந்தும்; நல்லா சுள்ளுன்னு!!! இருக்கும் பாடத்திற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. எங்கள் பரம்பரையில் பலர் சிறு வயதிலிருந்து அவ்வளவாக நோய்வாய்ப்படாதவர்கள் அற்ப/நடுத்தர ஆயுளுடன்தான் இருந்திருக்கிறார்கள். அவ்வப்போது நோயால் பீடிக்கப் பட்டிருந்தவர்கள் நீண்ட ஆயுளுடன் இருந்திருக்கிறார்கள்/இருக்கிறார்கள். நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்ற இதனால்தான் சொல்லப்படுகிறதோ என்னவோ.

    ReplyDelete
  3. Very good lesson sir.
    In MGR horo, sani(lagnathypathy) sits at 7 place. But 8th place has guru parvai. That is the reason he lived 80 years? Please explain sir.

    ReplyDelete
  4. குருவிற்கு வணக்கம்
    நன்றி

    ReplyDelete
  5. நல்ல பதிவு அய்யா! முன்னாள் முதல்வருக்கு லக்னாதிபதி சந்திரன் 11ல் அமர்ந்து உச்சம். அதனால்தான் 'எனக்கு 89 ஆகிறது. தினமும் கட்சி அலுவலகத்திற்கு வருகிறேன்' என்று சமீபத்தில் கூடக் கூறினார். அடியேனுக்கு சனைச்சரன் 8க்கு உடையவர் எட்டையே பார்க்கிறார்.புதனும் சூரியனும் கூடவே சிம்மத்தில்.கிரஹ யுத்தம் இல்லை. பார்ப்போம் ஆயுள் எப்படி என்று.எனக்குச் சரீர செள‌க்கிய யோகம் உண்டு.

    எங்கள் வீட்டுப் பெண்களுக்கெல்லாம் பல ஜாதகங்களைப் பொருத்தம் பார்த்துக் கொடுத்த சோதிடர் கொடுத்த தொகையைப் பெற்றுக் கொண்டு கூறினார். இப்போதெல்லாம் அப்படியா? கறாராகக் கேட்டு வாங்கி விடுகின்றனர்.

    ReplyDelete
  6. ////Blogger Shyam Prasad said...
    மிக்க நன்றி/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  7. ///Blogger ஜி ஆலாசியம் said...
    சுருக்கமான இருந்தும்; நல்லா சுள்ளுன்னு!!! இருக்கும் பாடத்திற்கு நன்றிகள் ஐயா!////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete

  8. ////Blogger V Dhakshanamoorthy said...
    நன்றி////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  9. ////Blogger ananth said...
    எங்கள் பரம்பரையில் பலர் சிறு வயதிலிருந்து அவ்வளவாக நோய்வாய்ப்படாதவர்கள் அற்ப/நடுத்தர ஆயுளுடன்தான் இருந்திருக்கிறார்கள். அவ்வப்போது நோயால் பீடிக்கப் பட்டிருந்தவர்கள் நீண்ட ஆயுளுடன் இருந்திருக்கிறார்கள்/இருக்கிறார்கள். நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்ற இதனால்தான் சொல்லப்படுகிறதோ என்னவோ./////

    இருக்கலாம்! உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  10. /////Blogger KJ said...
    Very good lesson sir.
    In MGR horo, sani(lagnathypathy) sits at 7 place. But 8th place has guru parvai. That is the reason he lived 80 years? Please explain sir./////

    புரட்சித் தலைவரின் ஜாதகம்தானே! நேரம் கிடைக்கும்போது மீண்டும் ஒருமுறை அலசுவோம். விடுங்கள்

    ReplyDelete
  11. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நன்றி////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி உதயகுமார்!

    ReplyDelete

  12. ////Blogger eswari sekar said...
    vanakam sir/////

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. /////Blogger kmr.krishnan said...
    நல்ல பதிவு அய்யா! முன்னாள் முதல்வருக்கு லக்னாதிபதி சந்திரன் 11ல் அமர்ந்து உச்சம். அதனால்தான் 'எனக்கு 89 ஆகிறது. தினமும் கட்சி அலுவலகத்திற்கு வருகிறேன்' என்று சமீபத்தில் கூடக் கூறினார். அடியேனுக்கு சனைச்சரன் 8க்கு உடையவர் எட்டையே பார்க்கிறார்.புதனும் சூரியனும் கூடவே சிம்மத்தில்.கிரஹ யுத்தம் இல்லை. பார்ப்போம் ஆயுள் எப்படி என்று.எனக்குச் சரீர செள‌க்கிய யோகம் உண்டு.
    எங்கள் வீட்டுப் பெண்களுக்கெல்லாம் பல ஜாதகங்களைப் பொருத்தம் பார்த்துக் கொடுத்த சோதிடர் கொடுத்த தொகையைப் பெற்றுக் கொண்டு கூறினார். இப்போதெல்லாம் அப்படியா? கறாராகக் கேட்டு வாங்கி விடுகின்றனர்./////

    பழநியப்பன் அருளால் நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பீர்கள்!!! நன்றி!!!!

    ReplyDelete
  14. Ok sir. Sure we will discuss MGR horo again. Please include this question also in that session. MGR became CM in sevvai dasa which is uchham in rasi and neesam in amsam(totally out as per rule) even guru and sani in kendram. Also sevvai is 11th house owner for him (magara lagnam) , he is paavathypathy also maaragathypathy. How to tak this, as a planet uchham in rasi(sits in lagnam) has more power than all other rules and placements. Because here amsam concept totally has no effect. Bcz Becoming CM is an ultimate palan given by that planet.
    Please explain sir.

    Thanks,
    Sathishkumar GS

    ReplyDelete
  15. Respected Guruji
    First one should analyze the horoscope, when he will get marred ? what type of partner they will get ? what are the stars matchable and also the Doshas to be balanced,if, the client have clear advices on these, he need not repeatedly visit the astrologer.Further,they should select materialistic first, now that is the main agenda.Vrichigam.

    ReplyDelete
  16. நன்றி சார்...

    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com