மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.4.12

Devotional ஆறுமுகம் எப்போது வந்து நம்முன் நிற்கும்?

Devotional ஆறுமுகம் எப்போது வந்து நம்முன் நிற்கும்?

பக்திப்பாடல்

சுட்டதிரு நீறேடுத்து தொட்டகையில் வேலெடுத்து
தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம் - அந்தக்
கட்டழகு கொண்டதொரு கந்தவடி வேலவனைச்
சாற்றுவது ஆறேழுத்து மந்திரம்!

(சுட்ட)

ஆறெழுத்து மந்திரத்தைத் தந்ததொரு சுந்தரத்தை
அந்திப்பகல் சிந்தனைசெய் நெஞ்சமே - அந்த
ஆறெழுத்து மந்திரத்தை யாரெடுத்து ஓதினாலும்
ஆறுமுகம் வந்துநிற்கும் முன்னமே!

(சுட்ட)

கந்தனடியே நினைந்து சங்கத்தமிழ் மாலைகொண்டு
வந்தனை செய்வோர்கள்மனம் ஆறுமே - பரங்
குன்றுவளர் குகனோடு தங்கிவரவே நமக்குள்
பொங்கி வரும்செல்வம் பதினாறுமே!

(சுட்ட)

-பாடலாக்கம்; திருமதி செளந்தரா கைலாசம் அவர்கள்

பாடலை எழுதியவர் பெரிய கவிதாயினி. உள்துறை அமைச்சர் திரு. ப.சிதம்பரம் அவரகளின் மாமியார். நீதியரசர் திரு.கைலாசம் அவர்களின் துணைவியார்.

பாடலில் உள்ள சொல்விளையாட்டைப் பாருங்கள். அதற்காக மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.  எளிதில் மனப்பாடம் ஆகும் முறையில் பாடல் வரிகள் அமைந்துள்ளது பாடலின் சிற்ப்பு!
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

22 comments:

  1. மிகவும் அருமையானப் பாடல் வரிகள்...
    மூன்றாம் பத்தி மிக மிக அருமை..
    பகிர்வுக்கு நன்றிகள் சார்.

    ReplyDelete
  2. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    ///ஆறெழுத்து மந்திரத்தை யாரெடுத்து ஓதினாலும்
    ஆறுமுகம் வந்துநிற்கும் முன்னமே!///
    ஆக்கம் அருமையாக உள்ளது.
    நன்றி!!

    ReplyDelete
  3. முன்னர் count down
    13ல் இருந்து
    அய்யரிடமிருந்து வந்தது நினைவிருக்கலாம்

    கவுன்ட்டவுனில் தானும்
    கலந்து கொள்ளலாமா என

    தோழி தேமொழி கேட்டிருந்தார்
    அந்த கவுன்ட்டவுனுக்கான பதில்

    வகுப்பறை பதிவுகளில்
    பார்த்திருப்பீர்கள்... அது தான்...

    நியூமராலாஜி பற்றியது
    அதைத்தான் 10லிருந்து இல்லாமல்
    13ல் தொடங்கினோம்..

    எண்ணங்களை அறிந்து
    எழுத்துக்களால் எண்ணங்களுக்கு

    உருவம் தரும் வாத்தியாருக்கு
    உளம் மகிழ்ந்து தருகிறோம் வாழ்த்து.. நன்றிகளுடன்...

    எண்ணிக்கை முடியவில்லையே
    ஏன் இப்போது சொல்கிறீரா?

    அன்பு ஆறாய் போவதால் (எண்:6)
    ஆறை தானே கடந்து இருக்கிறோம்

    என்ன அவசரம் என கேட்பவருக்க என்ன தகவல் ...

    ஏழு வரும் முன்னரே என கேட்க நினைப்பவருக்கு பதில் பின்னர் தருகிறோம்...

    எனக்கு எது பொருந்தி வருகிறதோ அது எனக்குரிய எண் என நாம் (சின்னகவுண்டர் செந்தில் போல) உரிமை கொண்டாடுவதில்லை தானே..

    அன்பிற்கும்
    அளவற்ற நட்பிற்கும்

    நன்றிகள்.. நன்றிகள்.. நன்றிகள்..

    முடக்கமல்ல தொடக்கமே என
    முழக்கமிட்டபடி சுழலவிடும் பாடல்.


    நன்றி சொல்ல உனக்குவார்தயில்லை எனக்கு நான் தான் மயங்குறேன்

    காலமுள்ள வரைக்கும் காலடியில் கெடக்க நான் தான் விரும்புறேன்

    நெடுங்காலம் நான் புரிஞ்ச தவதாலே நீ கெடசே
    பசும்பொன்னா பித்தளையா தவறாக நான் நெனசென்

    நேரில் வந்த ஆண்டவனே

    ஊரையா உனக்கு மாலயிட்ட பிறகு ஏம்மா சஞ்சலம்

    உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம்
    (நம் எண்ணங்களை குறித்தது)

    செவ்வௌனி நான் குடிக்க சீவி அதை நீ கொடுக்க
    சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர் தான்

    கால் இருக்கும் தாமரையே கையனைக்கும் ஆன்பிறையே

    உள்ளிருக்கும் நாடி எங்கும் உந்தன் உயிர் தான்

    இனி வரும் எந்த பிறவியிலும் உனை சேர காத்திருப்பேன்

    விழி மூடும் இமை போல விலகாமல் வாழ்திருப்பேன்

    உன்னை போலே தெய்வமில்லை உள்ளம் போலே கோவிலில்லை

    தினதொரும் அர்சனை தான் எனக்கு வேற வேலையில்லை

    வங்ககடல் ஆழம் என்ன வல்லவர்கள் கண்டதுண்டு

    அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லயே

    என்னுடய நாயகனே (வகுப்பறை வாத்தியார்) ஊர் வணங்கும் நல்லவனே

    உன்னுடய அன்புகந்த வானம் எல்லையே

    எனக்கென வந்த தேவதையே சரிபாதி நீயல்லவா

    நடக்கயில் உந்தன் கூட வரும் நிழல் போல நானல்லவா

    கண்ணன் கொண்ட ராதயெனே ராமன் கொண்ட சீதயென

    மடி சேர்ந்த பூ ரதமே
    மந்தில் வீசும் மாருதமே

    ReplyDelete
  4. "ஆறெழுத்து மந்திரத்தைத் தந்ததொரு சுந்தரத்தை
    அந்திப்பகல் சிந்தனைசெய் நெஞ்சமே -அந்த
    ஆறெழுத்து மந்திரத்தை யாரேடுத்து ஓதினாலும்"

    மூன்றே வரியில் ஒரு ஆராதனை- கடவுளைப்பாட
    மிஞ்சுவது யாரிதனை.

    ReplyDelete
  5. அம்மையாரைப் பற்றி இணையத்தில் தேடியதில், ரா.பி. சேதுப் பிள்ளை அவர்களால் "அருங் கலைச் செல்வி" என அழைக்கப் பட்ட கவிஞர். சிறந்த கவிதை, கட்டுரை எழுத்தாளர் மட்டுமின்றி சிறந்தப் பேச்சாளர் என்றும் அறிகிறேன். "அளவற்ற அருளாளர்" என்ற இஸ்லாமிய நூலையும் எழுதியுள்ளார். இதன் மூலம் முஸ்லீம் சமுதாயம் குறித்து நூல் எழுதிய முதல் இந்துப் பெண்மணி என்ற பெருமை இவருக்கு உண்டு என்பதும் தெரிகிறது. திருமணதிற்கு முன் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே முறையாக கல்வி கற்கும் வாய்ப்பிருந்திருந்தாலும் சொந்த முயற்சியில் கல்வி கற்று மரபுச் செய்யுள்கள் புனையும் வண்ணம் உயர்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் படைப்புகளை தமிழக அரசு பொதுவுடைமையாக்க முயற்சி எடுக்கலாம்.

    ஐயா உங்கள் பதிவுகளின் மூலம் மட்டுமே இவர் கவிதைகளை நான் அறிவேன். அறிமுகப் படுத்துவதற்கு நன்றி.

    ReplyDelete
  6. 'ஆறெழுத்து மந்திரத்தைத் தந்ததொரு சுந்தரம்'என்ன ஒரு அருமையான சொல்லாடல்.

    செள‌ந்திரா கைலாசம் அம்மையார் ரத்தினசபாபதி கவுண்டரின் பெயர்த்தி. ரத்தினசபாபதி கவுண்டர்தான் ராஜாஜிக்குத் தன் தோட்ட நந்தவனததிக்கொடுத்து காதி ஆசிரமம் அமைக்க வைத்தவர். அங்குதான் ராஜாஜியின் சேவை மனப்பான்மை வளர்ந்தது.

    ஒரு சமயத்தில் இலக்கிய உலகில் அம்மையார் முக்கியமானவராக இருந்தார்.
    அவர்களை நினைவு கூர்ந்த மேன்மைகுத் தலை வணங்குகிறேன்.

    ReplyDelete
  7. ///அய்யர் said...அந்த கவுன்ட்டவுனுக்கான பதில்....///

    அப்பாடா... பதில் தெரிஞ்சாச்சு


    //ஏழு வரும் முன்னரே என கேட்க நினைப்பவருக்கு பதில் பின்னர் தருகிறோம்...///

    சரியாப் போச்சு மீண்டும் காத்திருக்கனுமா? சரி விடுங்க...அதான் எங்களுக்கு பழக்கமாயிடுச்சே

    "என்னுடய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே உன்னுடய அன்புக்கந்த வானம் எல்லையே" என்று வாத்தியாருக்காக நல்ல பாடலைத் தேர்வு செய்து சுழல விட்டதற்கு சக மாணவர்கள் சார்பில் நன்றி.

    ReplyDelete
  8. இந்தப் பாடலை சிறு வயது முதல் சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் கேட்டிருக்கிறேன். அந்த அமைதியான, மனதை வருடும் மெட்டு என்னை எப்போதும் ஈர்க்கும். திருமதி. சௌந்தரா கைலாசம் அவர்களின் பாடல் எனப் பின்னர் தான் தெரிந்தது. அம்மையாரின் தமிழறிவு ஈடு இணையில்லாதது. பாடலின் கவிநயம், ஓசைநயம் இரண்டும் அருமை.

    ReplyDelete
  9. ////Blogger அய்யர் said...
    முருகா.. முருகா..////

    கந்தா, கடம்பா, கதிர்வேலா - என்றும்
    காக்கவேண்டும் எம்மை!

    ReplyDelete
  10. ///Blogger ஜி ஆலாசியம் said...
    மிகவும் அருமையானப் பாடல் வரிகள்...
    மூன்றாம் பத்தி மிக மிக அருமை..
    பகிர்வுக்கு நன்றிகள் சார்.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  11. ////Blogger V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    ///ஆறெழுத்து மந்திரத்தை யாரெடுத்து ஓதினாலும்
    ஆறுமுகம் வந்துநிற்கும் முன்னமே!///
    ஆக்கம் அருமையாக உள்ளது.
    நன்றி!!////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  12. ////Blogger அய்யர் said...
    முன்னர் count down
    13ல் இருந்து
    அய்யரிடமிருந்து வந்தது நினைவிருக்கலாம்
    கவுன்ட்டவுனில் தானும்
    கலந்து கொள்ளலாமா என
    தோழி தேமொழி கேட்டிருந்தார்
    அந்த கவுன்ட்டவுனுக்கான பதில்
    வகுப்பறை பதிவுகளில்
    பார்த்திருப்பீர்கள்... அது தான்...
    நியூமராலாஜி பற்றியது
    அதைத்தான் 10லிருந்து இல்லாமல்
    13ல் தொடங்கினோம்..
    எண்ணங்களை அறிந்து
    எழுத்துக்களால் எண்ணங்களுக்கு
    உருவம் தரும் வாத்தியாருக்கு
    உளம் மகிழ்ந்து தருகிறோம் வாழ்த்து.. நன்றிகளுடன்.../////

    நல்லது நன்றி விசுவநாதன்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    எண்ணிக்கை முடியவில்லையே
    ஏன் இப்போது சொல்கிறீரா?
    அன்பு ஆறாய் போவதால் (எண்:6)
    ஆறை தானே கடந்து இருக்கிறோம்
    என்ன அவசரம் என கேட்பவருக்க என்ன தகவல் ...
    ஏழு வரும் முன்னரே என கேட்க நினைப்பவருக்கு பதில் பின்னர் தருகிறோம்...
    எனக்கு எது பொருந்தி வருகிறதோ அது எனக்குரிய எண் என நாம் (சின்னகவுண்டர் செந்தில் போல) உரிமை கொண்டாடுவதில்லை தானே..
    அன்பிற்கும்
    அளவற்ற நட்பிற்கும்
    நன்றிகள்.. நன்றிகள்.. நன்றிகள்../////

    நல்லது நன்றி விசுவநாதன்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    முடக்கமல்ல தொடக்கமே என
    முழக்கமிட்டபடி சுழலவிடும் பாடல்.
    நன்றி சொல்ல உனக்குவார்தயில்லை எனக்கு நான் தான் மயங்குறேன்
    காலமுள்ள வரைக்கும் காலடியில் கெடக்க நான் தான் விரும்புறேன்
    நெடுங்காலம் நான் புரிஞ்ச தவதாலே நீ கெடசே
    பசும்பொன்னா பித்தளையா தவறாக நான் நெனச்சேன்
    நேரில் வந்த ஆண்டவனே
    ஊரையா உனக்கு மாலயிட்ட பிறகு ஏம்மா சஞ்சலம்
    உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம்
    (நம் எண்ணங்களை குறித்தது)
    செவ்வௌனி நான் குடிக்க சீவி அதை நீ கொடுக்க
    சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர் தான்
    கால் இருக்கும் தாமரையே கையனைக்கும் ஆன்பிறையே
    உள்ளிருக்கும் நாடி எங்கும் உந்தன் உயிர் தான்
    இனி வரும் எந்த பிறவியிலும் உனை சேர காத்திருப்பேன்
    விழி மூடும் இமை போல விலகாமல் வாழ்திருப்பேன்
    உன்னை போலே தெய்வமில்லை உள்ளம் போலே கோவிலில்லை
    தினதொரும் அர்சனை தான் எனக்கு வேற வேலையில்லை
    வங்ககடல் ஆழம் என்ன வல்லவர்கள் கண்டதுண்டு
    அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லயே
    என்னுடய நாயகனே (வகுப்பறை வாத்தியார்) ஊர் வணங்கும் நல்லவனே
    உன்னுடய அன்புகந்த வானம் எல்லையே
    எனக்கென வந்த தேவதையே சரிபாதி நீயல்லவா
    நடக்கயில் உந்தன் கூட வரும் நிழல் போல நானல்லவா
    கண்ணன் கொண்ட ராதயெனே ராமன் கொண்ட சீதயென
    மடி சேர்ந்த பூ ரதமே
    மந்தில் வீசும் மாருதமே/////

    உங்களின் மேலான அன்பிற்கும் பரிவிற்கும் நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  13. ////Blogger thanusu said...
    "ஆறெழுத்து மந்திரத்தைத் தந்ததொரு சுந்தரத்தை
    அந்திப்பகல் சிந்தனைசெய் நெஞ்சமே -அந்த
    ஆறெழுத்து மந்திரத்தை யாரேடுத்து ஓதினாலும்"
    மூன்றே வரியில் ஒரு ஆராதனை- கடவுளைப்பாட
    மிஞ்சுவது யாரிதனை.///

    முருகன் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது!

    ReplyDelete
  14. ////Blogger தேமொழி said...
    அம்மையாரைப் பற்றி இணையத்தில் தேடியதில், ரா.பி. சேதுப் பிள்ளை அவர்களால் "அருங் கலைச் செல்வி" என அழைக்கப் பட்ட கவிஞர். சிறந்த கவிதை, கட்டுரை எழுத்தாளர் மட்டுமின்றி சிறந்தப் பேச்சாளர் என்றும் அறிகிறேன். "அளவற்ற அருளாளர்" என்ற இஸ்லாமிய நூலையும் எழுதியுள்ளார். இதன் மூலம் முஸ்லீம் சமுதாயம் குறித்து நூல் எழுதிய முதல் இந்துப் பெண்மணி என்ற பெருமை இவருக்கு உண்டு என்பதும் தெரிகிறது. திருமணதிற்கு முன் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே முறையாக கல்வி கற்கும் வாய்ப்பிருந்திருந்தாலும் சொந்த முயற்சியில் கல்வி கற்று மரபுச் செய்யுள்கள் புனையும் வண்ணம் உயர்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் படைப்புகளை தமிழக அரசு பொதுவுடைமையாக்க முயற்சி எடுக்கலாம்.
    ஐயா உங்கள் பதிவுகளின் மூலம் மட்டுமே இவர் கவிதைகளை நான் அறிவேன். அறிமுகப் படுத்துவதற்கு நன்றி.////

    ஆமாம். அவருடைய தமிழறிவு நம்மைத் திகைக்க வைக்கும். இத்தனைக்கும் பள்ளி இறுதியாண்டு படிப்பைக்கூடத் தொடாதவர். கவியரசர் கண்ணதாசன் போல தன் சொந்த முயற்சியால் தமிழைக் கற்றுத் தேர்ந்தவர்!

    ReplyDelete
  15. ////Blogger kmr.krishnan said...
    'ஆறெழுத்து மந்திரத்தைத் தந்ததொரு சுந்தரம்'என்ன ஒரு அருமையான சொல்லாடல்.
    செள‌ந்திரா கைலாசம் அம்மையார் ரத்தினசபாபதி கவுண்டரின் பெயர்த்தி. ரத்தினசபாபதி கவுண்டர்தான் ராஜாஜிக்குத் தன் தோட்ட நந்தவனததிக்கொடுத்து காதி ஆசிரமம் அமைக்க வைத்தவர். அங்குதான் ராஜாஜியின் சேவை மனப்பான்மை வளர்ந்தது.
    ஒரு சமயத்தில் இலக்கிய உலகில் அம்மையார் முக்கியமானவராக இருந்தார்.
    அவர்களை நினைவு கூர்ந்த மேன்மைகுத் தலை வணங்குகிறேன்.////

    மேலதிகத் தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  16. ////Blogger Parvathy Ramachandran said...
    இந்தப் பாடலை சிறு வயது முதல் சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் கேட்டிருக்கிறேன். அந்த அமைதியான, மனதை வருடும் மெட்டு என்னை எப்போதும் ஈர்க்கும். திருமதி. சௌந்தரா கைலாசம் அவர்களின் பாடல் எனப் பின்னர் தான் தெரிந்தது. அம்மையாரின் தமிழறிவு ஈடு இணையில்லாதது. பாடலின் கவிநயம், ஓசைநயம் இரண்டும் அருமை.////

    எல்லாம் இறையருள். இன்னொன்று கவனித்தீர்களா? அம்மையாருக்கு 15 வயதில் திருமணம். ஒன்பதாம் வகுப்பு வரையே படித்தவர்.கவியரசர் கண்ணதாசன் போல தன் சொந்த முயற்சியால் தமிழைக் கற்றுத் தேர்ந்தவர்! ஜாதகத்தில் இதைத்தான் கல்வி வேறு அறிவு வேறு என்போம். கல்விக்கு 4ஆம் வீடு. அறிவிற்கு 5ஆம் வீடு. கல்விக்குக் காரகன் புதன், அறிவிற்குக் காரகன் (keen intelligence) குரு!

    ReplyDelete
  17. நன்றி பார்வதி, நீங்கள் கூறிய பின்பு தேடி இந்தப் பாடலைக் காணொளியில் கண்டேன்/கேட்டேன், நன்றி
    http://youtu.be/VPf4yoBdJWE

    ReplyDelete
  18. நம் முந்தைய தலைமுறையோடு மரபுக் கவிதை எழுதுவோர் எண்ணிக்கை இல்லாமல் போய்விட்டது. தமிழில் மிகச் சிறந்த, அற்புதமான மரபுக் கவிதைகளை எழுதி வந்தவர்கள் வரிசையில் இறுதிப் பட்டியலில் அம்மையாரும் ஒருவர். நீங்கள் இவரைப் பற்றி எழுதும்போது இன்னாருடைய மாமியார், இன்னாருடைய மனைவி என்றெல்லாம் எழுதினீர்கள். ஆனால் நான் சொல்ல விரும்புவது இன்னார் இவருடைய மருமகன், இன்னார் இவருடைய கணவர் என்று இவரை முன்னிலைப் படுத்தி எழுதுவதுதான் பொருத்தம் என எண்ணுகிறேன். அத்தனை தகுதிகளைப் படைத்தவர். ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஆலய குடமுழுக்கு விழாக்களில் நடைபெறும் கவி அரங்கிலும், அகில இந்திய வானொலியில் சுதந்திர தின கவி அரங்கிலும் இவர் நிச்சயம் இடம் பெற்றிருந்தார். சந்தம் மாறாத, பொருட்செறிவு மிக்க சுவையான கவிதைகள் இவருடயவை. செளந்தரா கைலாசம் தமிழுலகத்துக்குக் கிடைத்த நன் முத்து. அவரை நினைவு படுத்திய உங்களுக்கும், பின்னூட்டத்தில் அவரைப் புகழ்ந்து பேசிய அத்தனை நல்லோர்களுக்கும் தமிழர்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  19. வணக்கம் ஐயா,
    தாங்கள் கூறியுள்ளபடியே பாடலின் சந்தம் மிகவும் அருமையாக உள்ளது...அத்துடன் எளிய நடையும் பாடலின் பொருளுணர்ந்து கேட்க செய்கின்றது...எனக்கு பாடலாசிரியரின் விவரங்கள் பற்றி அதிகம் தெரியாது,அறிய செய்த வாத்தியார் ஐயாவுக்கும்,பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  20. அழகான இந்தப்பாடலைப் பதிவேற்றிய தங்களுக்கு மிக்க நன்றி.

    இப்பாடலை உடனே பாடவேண்டும் எனத்தோன்றியது.

    இலக்கண சுத்தமாகவும் சந்தங்களுக்கு கட்டுப்பட்டு எழுதப்பட்ட‌
    கவிதைகளை எந்த ராகத்திலும் பாட இயலும். இருப்பினும்
    முருகன் மேல் எழுதிய பாடலை ஷண்முகப்பிரிய ராகத்தில்
    பாடலாமே என்று நினைத்தேன். பாடினேன்.
    என்ன அழகாக அமைகிறது !!

    எனது வலையில் தொடர்பு தந்திருக்கிறேன்.

    சுப்பு ரத்தினம்.
    http://kandhanaithuthi.blogspot.com

    ReplyDelete
  21. எனக்கு மட்டும் ஒன்னும் புரியல, மக்குனு திரும்பவும் பெயரெடுத்தாச்சா...
    K.Lingan

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com