மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.4.12

வெற்றியென்ன, தோல்வியென்ன, விளையாடிப் பார்ப்போம், வா!

திருவாளர் சனீஷ்வரன், திருநள்ளாறு
--------------------------------------------------------------------------
வெற்றியென்ன, தோல்வியென்ன, விளையாடிப் பார்ப்போம், வா!

எண் எட்டு!

எட்டாம் எண் சனீஷ்வரனுக்கு உரியது.

8,17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரியது இந்த எண். இந்த எண்ணில் பிறந்தவர்கள் மிகப்பெரிய வெற்றியாளர்களாக இருப்பார்கள். அல்லது அதிகமான தோல்விகளைச் சந்தித்தவர்களாக இருப்பார்கள். இடைப்பட்ட நிலை எண்பது இந்த எண்ணிற்குக் கிடையாது.

கும்ப லக்கினத்திற்கு உரியவன் சனி. அவனே அந்த லக்கினத்திற்கு 12ஆம் வீட்டிற்கு உரிய விரையாதிபதியும் ஆவான்.

ஆகவே அவன் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் ஜாதகனின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் இல்லையென்றால் ஜாதகனின் வாழ்க்கை பல அவலங்கள் நிறைந்ததாக இருக்கும்.

Number eight people are either great successes or great failures

மகர லக்கினம் அல்லது மகர ராசிக்காரர்களுக்கு எட்டாம் எண் சிறப்பானதாகும்.

கடகம், விருச்சிகம், மீனம், ரிஷபம், கன்னி ராசிக்காரர்களுடன் இந்த என் சம்பந்தப்பட்டால், அவர்களுக்கு இந்த எண் நன்மைகளை உடையதாக இருக்கும்.

மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய ராசிக்காரர்களுடன் இந்த எண் சம்பந்தப்பட்டால் மாறுபட்ட பலன்களைக் கொடுக்கும்.

பொறுமை, விடாமுயற்சி, சகிப்புத்தன்மை, ஆழ்ந்த லட்சியங்கள் என்று பல உயரிய குணங்களைக் கொண்டவர்களாக இந்த எண்ணிற்கு உரியவர்கள் விளங்குவார்கள்.

எட்டாம் எண்காரர்கள் நுண்ணியமானவர்கள். அமைதியானவர்கள். ஒதுங்கியிருப்பவர்கள். வாயால் பேசமாட்டார்கள். எதையும் செயலால் மட்டுமே பேசுவார்கள்.செய்கையால் செய்து காட்டுவார்கள். தங்கள் கோபத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்த மாட்டார்கள். வெற்றியை நோக்கிப் பயணிப்பதே அவர்களுடைய முக்கியமான செயலாக இருக்கும். அவர்களைச்

சுற்றியுள்ளவர்களுக்கெல்லாம், அவர்களுடைய ஆற்றலும், ஆர்வமும் தெரிந்தே இருக்கும். ஆனால் அவர்கள் யாருக்கும் தெரியாமல் தங்கள் செயலுக்கு வேண்டியதை விடாமல் செய்துகொண்டே இருப்பார்கள்

எட்டாம் எண்காரர்கள் கடுமையான உழைப்பாளிகள். எதிர்ப்படும் சிரமங்கள் தடைகளுக்கெல்லாம் கவலைப்படமாட்டார்கள்.

மெதுவாகப் பயணித்தாலும், தங்கள் இலக்கை அடையாமல் விடமாட்டார்கள். நடைமுறைப் புத்திசாலித்தனம் மிகுந்து காணப்படும். கவனக்குறைவு என்பது கிஞ்சித்தும் இல்லாதவர்கள். தங்கள் பொறுப்புக்களை உணர்ந்தவர்கள். எதிலும் பொறுப்போடு நடந்து கொள்வார்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள்.

இந்த எண்காரர்கள், தங்கள் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் விசுவாசமாக இருப்பார்கள். ஒழுக்கம், சீரிய சிந்தனை என்று பல நியதிகளைக் கடைப்பிடிப்பவர்களாக இந்த எண்காரர்கள் விளங்குவார்கள். உடல் வலிமையையும், மனவலிமையையும் ஒருங்கே பெற்று விளங்குவார்கள். மற்றவர்களைவிட அதிக நாட்கள் உயிர்வாழும் அதிர்ஷ்டத்தை
இயற்கையாகவே பெற்றிருப்பார்கள்

இந்த எண்காரர்கள் இயல்பானவர்கள். விவேகமானவர்கள். நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துப்போகக்கூடியவர்கள். இந்த அதீதக் குணங்களால் இவர்கள் வெற்றி பெறுவார்கள். சம்பாதிக்கவும் அல்லது பொருள் ஈட்டவும் செய்வார்கள்.

எல்லாவற்றையும் மீறி தங்கள் உழைப்பால் மற்றவர்களின் அங்கீகாரத்தைப் பெறுவார்கள். அதற்கு இந்த எண்காரர்கள் சந்தேகமில்லாமல் தகுதியானவர்களே!

இந்த எண்காரர்களுக்கு உரிய நிறைகள்: உறுதியானவர்கள். செயல்வீரர்கள். முனைப்பானவர்கள் (சீரியசானவர்கள்). இலக்கை நோக்கிப் பயணிப்பவர்கள். யாரையும் அளந்து பார்த்துவிடும் திறமைசாலிகள். தொழிற்திறமை மிக்கவர்கள். வீடு, வாசல், செல்வம் என்று எதையும் நிர்வாகிக்கக்கூடியவர்கள் சுதந்திரமானவர்கள். பகுத்தறிவுமிக்கவர்கள். பிடிவாதம் நிறைந்தவர்கள்.

எதற்கும் பதட்டப்படாதவர்கள் பயம் இல்லாதவர்கள். தனியாக வேலை செய்ய விரும்புபவர்கள். தங்களுக்கென்று வரைமுறைகளை, சட்டதிட்டங்களை உடையவர்கள்.

இந்த எண்காரர்களுக்கு உரிய குறைபாடுகள்: எதிரிகளுடன் மல்லுக்கட்ட வேண்டியதாயிருக்கும். தாமதங்கள், தோல்விகள், அவமானங்களைச் சந்திக்க வேண்டியதாயிருக்கும். சிலர் தீய பழக்கங்களுக்கு ஆளாக நேரிடும். மன அழுத்தங்களுக்கு உள்ளாக நேரிடும். சிலரிடம், தற்கொலை மனப்பான்மை, அடுத்தவர்களுக்கு நாம் வேண்டாதவர்களாகிவிட்டோமோ எனும்
மனப்பான்மை மிகுந்திருக்கும். ஒதுக்கப்பட்டவர்களாக, மறுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அல்லது அது போன்ற எண்ணத்துடன் வாழ வேண்டியதிருக்கும்.

career choices: Manager, investor, entrepreneur, business person, scientist, politician, financial expert, real estate, politician, athlete.

நட்பு எண்கள்: 4, 5, 6
தகாத எண்கள்: 1, 2, 9
உகந்த நாள்; சனிக்கிழமை
உகந்த நிறம்: கறுப்பு, கறு நீலம்
உகந்த நவரத்தினக்கல்: நீலக்கல்
உகந்த உலோகம்: இரும்பு
உகந்த குணம்: அன்பு, மன்னித்தல்
தொழில் அல்லது வேலை: நிர்வாகம், நிர்வாகிகள், ஊழியர்கள்
தொழிலுக்கு நட்பு எண்கள்: 1, 2, 8
திருமணத்திற்கு இசைந்த எண்கள்: 1, 2, 4

நீலக்கல்லைப் பற்றி விவரமாக முன்பே எழுதியுள்ளேன் அதைப் படித்திராதவர்கள், கீழே உள்ள சுட்டியைப் பயன் படுத்தி அதாவது சுட்டியைக் கிளிக்கி அதைப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

1.சுட்டி (URL Link)
2. சுட்டி எண் 2 (URL Link)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சனியின் பிடியால் அவதியுறுபவர்களும், துன்பப்படுபவர்களும், தினமும் கீழ்க்கண்ட மந்திரங்களின் ஒன்றைச் சொல்லி அல்லது பாராயணம் செய்து வழிபட்டால், துன்பங்கள் விலகும். விதி வலியதாக இருந்து துன்பங்கள் விலகாவிட்டாலும், அவற்றைத் தாக்குப்பிடிக்கும் சந்தி மனதிற்குக் கிடைக்கும்

"Nilanjana-samabhasam ravi-putram yamagrajam
chaya-martanda-sambhutam tam namami shaishcharam"

When translated in English, it means:

"I bow down to slow-moving Saturn, whose complexion is dark blue like nilanjana ointment. The elder brother of Lord Yamaraj, he is born from the Sun god and his wife Chaya."

Gayatri Mantra for Saturn:

"Om Sanaischaraya vidhamhe, Sooryaputraya dhimahi, tanno manda prachodayat"

'ஓம் சனீஸ்சராய வித்மஹே
சூர்ய புத்ராய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத்'

The following is the special name (nama) mantra for the Saturn as preceded by it's Shakti or power mantra. It can be used to connect with the planetary deity and to energize all the higher powers of the Saturn.

"Om Hlim Sham Shanaye Namah"

The word 'Hlim' in above mantra denotes Stambhana Shakti, the power of delaying, stopping, holding, and terminating.
-----------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

53 comments:

  1. ஆசிரியர் ஐயா,
    நான் ஆவலுடன் எதிர்பார்த்த 8ம் எண் பற்றிய பலதகவல்களைத் தாங்கி வந்த இந்தப் பதிவுக்கு நன்றி. எட்டாம் எண்ணை ஆள்வது நீதிக்கிரகம்,முப்பதுமுக்கோடி தேவர்களில் யாருக்குமே கிடைக்காத ஈஸ்வரப் பட்டம் வாங்கிய சனீஸ்வர பகவானின் ஆளுமைக்குட்பட்டது. எட்டாம் எண்காரர்கள் எந்தவொரு காரியத்தையும் நின்று, நிதானித்து, யோசித்து ஆற அமர கணகச்சிதமாக செய்து முடிக்கக் கூடியவர்கள்.மந்தமான செயல்பாடுகளை உடையவர்கள். ஒருவரைப் பற்றிய இவர்களது கணிப்பு தான் மிகச்சரியாக இருக்கும்.யாரையும் பார்த்த மாத்திரத்தில் இவர் இப்படித்தான் என்று கூறிவிடுவார்கள். எல்லோரையும் விட்டுப் பிடிப்பார்க‌ள்,இவ‌ன் எங்கே சுற்றி எங்கு போனாலும் ஒரு நாள் என்கிட்ட‌ வ‌ ந்து தானே ஆக‌ணும். அப்போக்காட்டுகிறேன் நான் யாரென்று என்று த‌ன்னுடைய‌ முறை வ‌ரும்வ‌ரை காத்திருப்பார்க‌ள்.
    அத‌ள‌பாதாள‌த்தில் விழுந்தாலும் நிமிர்ந்து நிற்கும் தார‌க‌ம‌ந்திர‌த்தை அறிந்து வைத்திருப்பார்க‌ள்.மற்றவர்களிடம் என்ன‌ வீக்ன‌ஸ் உள்ள‌து என்று ச‌ரியாக‌ அறிந்து வைத்திருப்பார்க‌ள்.க‌டின‌ உழைப்பாளிக‌ள்,இவ‌ர்க‌ளின் உழைப்பைப் ப‌ற்றிச்சொல்ல‌ வார்த்தைக‌ளே இல்லை
    உற‌வுக‌ளின் மேல் அதீத‌ப் பாச‌முடைய‌வ‌ர்க‌ள். எந்த‌வொரு விஷ‌ய‌த்திலும்(உணர்வுகளுக்கு இடம் தராமல்) ந‌டுனிலையோடு எத்த‌ர‌ப்புப் பாதிக்காத‌ வ‌கையில் முடிவெடுக்கும் ச‌மார்த்திய‌சாலிக‌ள். தெய்வ‌த்தை வ‌ண‌ங்க‌ம‌ற‌ந்தாலும் பெற்ற‌ தாய்,த‌ந்தைய‌ரை தெய்வ‌மாக‌ வ‌ணங்குப‌வ‌ர்க‌ள்.
    8ம் எண்ணை சனிபகவான் முழுவ‌துமாக‌ ஆட்சி செய்கிறார். இவர்களது அனைத்து செயல்களும் அடுத்தவர்களை பாதிக்காத வகையில் தான் அமையும்.ஒருவர் உலகப் புகழ்பெற வேண்டுமெனில் சனியின் தயவுதேவை. இன்று உலகம் முழுவதும் ஆட்சிசெய்யும் ஆங்கிலம்(சீனம் அதிகப்பேரால் பேசப்படுவது) எட்டாம் எண்ணை உடையது. குருவும்,சுக்கிர‌னும் பின்னாலிருந்து எத்த‌னை ட்யூன் போட்டாலும் அது ந‌ம‌து காதுக‌ளில் வ‌ந்து இன்னிசையாக‌ப் பாய்வ‌த‌ற்கு ச‌னியின் ஆசி தேவை.ஏனெனில் இவ‌ர் தான் க‌ர்ம‌கார‌க‌ன் அவ‌ர்க‌ள் எத்த‌னை ச‌ட்ட‌ம் போட்டாலும் இவ‌ர் கையெழுத்துப் போட‌வில்லையெனில் தீர்மான‌ம் நிறைவேறாது.
    இவர் உச்சம் பெறும் துலாம் வீட்டுக்குச் சின்னமாக தராசு வழங்கியதே அவர் எந்தப் பக்கமும் சாயாத நடுனலைவாதி என்பதற்காகத் தான்.கர்மவினைக்கேற்றபடி படியளந்து விடுவார்.
    சனி ஆளும் நட்சத்திரங்களான பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி முறையே நட்சத்திர வரிசையில் 8,17,26 என்று சனியின் எண்ணான 8 யே குறிக்கின்றன.இவர்கள் மாறுபட்ட சிந்தனை உடையவர்கள்,அவ்வளவு சீக்கிரம் யாரையும் பாராட்டி விடமாட்டார்கள்.இவர்களிடம் பாராட்டு வாங்கிவிட்டால் அதைவிட வேறு பாராட்டுத் தேவையில்லை.சனி ஆளும் ராசிகள் மகரம்,கும்பம்.இதில் மகரம் சரராசி இவர்கள் கொஞ்சம் வேகம் நிறைந்தவர்கள்.ஆனால் கும்பமோ சனியின் மந்தபுத்தி,காலம் தாழ்த்துதல் என சனியின் மொத்த குணத்தையுமே பிரதிபலிக்கும்.ஏனெனில் இது ஸ்திரராசி,எதிலும் நிதானமான செயல்பாட்டை உடையவர்கள்.கும்ப ராசிக்காரர்கள் பலருக்கும் 10 ரூபாய் நோட்டையே பத்து முறை எண்ணிவாங்கும் அளவுக்கு நிதானம் இருக்கும்,பதறாத காரியம் சிதறாது என்பார்கள்.அது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.( ந‌ம்ம‌ வாத்தியார் ஐயா அவ‌ர்க‌ள் ம‌க‌ர‌ராசிக்கார‌ர் வார‌த்தில் 4 நாள் பாட‌ங்க‌ள்,பின்னூட்ட‌ங்க‌ளுக்குப் ப‌தில்க‌ள் என‌ அனைத்தையும் இந்த‌ வ‌ய‌திலும் எந்த‌வொரு தொய்வுமின்றி ந‌க‌ர்த்துகிறார் அத‌ற்கு வ‌குப்ப‌றை ச‌க‌மாண‌வ‌ர்க‌ளின் சார்பாக‌வும் ஒரு ச‌ல்யூட்).சனி ஆதிக்கம் நிறைந்தவர்களின் உழைப்பு அப்படி.

    ReplyDelete
  2. வணக்கம் அய்யா நன்றாக உள்ளது. தலைப்பில் ஒரு பிழை உள்ளது மாற்றுங்கள்.

    http://astrovanakam.blogspot.in/

    ReplyDelete
  3. நான் 26ல் பிறந்தவன். 100க்கு 100 பொருந்துகிறது. அதீத வெற்றியையும், அதீத தோல்வியையும் சுவைத்து இருக்கிறேன்.

    என் ஜாதகம்: மகர லக்னம். மகர ராசி. லக்கினாதிபதி சனீஸ்வரர் செவ்வாயின் சாரத்தில், செவ்வாயுடன் கன்னியில் இருக்கிறார். (நவாம்சத்திலும் சனீஸ்வரர் கன்னியில் வாசம், வர்க்கோத்தமம்.) 1ல் புதனுடன் சனீஸ்வரர் பரிவர்த்தனை பெற்று இருக்கிறார். குரு தனித்து 10ல் இருக்கிறான். தற்சமயம் குரு தசை, சனி புக்தி எனக்கு நடக்கிறது. தசாநாதனும் (10ல்), புக்திநானும்(9ல்) 12- 1 நிலைப்பாடு.

    சுருக்கமாய் சொன்னால், குருவும், சனியும் என்னை தனிமைப்படுத்தி தினம் தினம் அதீத தோல்வியின் மூலம் வாழ்க்கைப்பாடம் நடத்துகிறார்கள். குரு கனிவுடன் நடத்துகிறார். சனிதான் வர்க்கோத்தம கடுமையுடன் நடந்து கொள்கிறார். புதன் புக்தி நோக்கி நாட்களை நகர்த்துகிறேன்.

    நீங்கள் நடத்திய பாடத்தின் மூலம் நான் அறிந்து கொண்டது இதுதான். சனி(க்குப்) பிடித்தவன் நான். :-)

    ReplyDelete
  4. நான் 26ம் தேதி பிறந்தவன். பல குணங்கள் ஒத்துப் போகிறது. எவையெவை என்பது எனக்கு மட்டும் தெரிந்ததாக இருக்கட்டும்.

    //அவ்வளவு சீக்கிரம் யாரையும் பாராட்டி விடமாட்டார்கள்.இவர்களிடம் பாராட்டு வாங்கிவிட்டால் அதைவிட வேறு பாராட்டுத் தேவையில்லை.//

    வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் வாங்குவதைப் போன்றது. என்ன நண்பரே சரிதானே.

    ReplyDelete
  5. 8,17,26 தேதிகளில் பிறந்தவர்கள் ஜாதகத்தில் சனிஷ்வரர் சுப பலம் பெற்றால் நல்ல நன்மையான பலன்களை எதிர்பார்க்கலாம். இல்லையென்றால் கஷ்டம்தான்.

    ReplyDelete
  6. இன்று நான்.

    அய்யா சொன்னது எல்லாமும் எனக்கு பொருந்துகிறது.பிளஸ்,மைனஸ் எல்லாம் சரியா இருக்கிறது.

    எட்டில் பிறந்து விண்ணை தொட்ட நம் ஊர் நாயகர்கள் .பெரியார் .புரட்சிதலைவர் .

    ஒரு சந்தேகம் அய்யா , அய்யா அவர்கள் தயவுசெய்து தீர்த்துவைக்கவும்.எண் கணிதம் தொடங்கியதுமே கேட்க நினைத்து பின் அமைதி காத்தேன் . நம்முடைய எண் வரட்டும் கேட்காலாம் என்று இருந்துவிட்டேன்

    இன்று நான் பிறந்த எண்(17 தேதி)வந்துள்ளது.

    நாமாச்சி நம் வேலையாச்சி என்றுஅமைதியாக இருக்கும்போது அல்லது ஒதிங்கி போகும்போது தேடிவரும் வம்புகளை ஒதுக்கினாலும் ,விட்டுக் கொடுத்தாலும் திரும்ப திரும்ப தட்டிகேட்கிரார்கள் அந்த நேரத்தில் எனக்கு மூர்க்கத்தனமான கோபம் வருகிறது.கலவரம்,சண்டை போன்ற விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்துவிடுகிறது.

    வகுப்பறைக்கு வந்து ஜோதிடத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஆரம்பித்த பின் அந்த மோசமான நாட்களின் தேதிகளையும் கோசார சந்திரனையும் பார்த்தபோது ,இரண்டு விசயங்கள் ஒத்து வந்தது.

    முதலாவதுஅவைகளின் தேதிகள் எல்லாம் எட்டில் இருந்தது.இரண்டாவது அன்றைய தினம் சந்திராஷ்டமம் சேர்ந்தது.

    08-02-2012 (இது மிக்க சமிபத்தில் -இந்தியாவில் )
    08-11-2009 (இதுவும் இந்தியாவில் )

    சாதரண எட்டாம் தேதி எது பிரச்சினையும் இல்லை . மற்ற தேதிகளில் வரும் சந்திராஷ்டமும் அவ்வளவாக ஏதும் செய்யவில்லை

    எட்டாம் தேதியும், சந்திராஷ்டமும் சேர்ந்து வந்த அந்த நாட்கள் மிக்க மோசமாக என் அனுபவத்தில் உள்ளது.
    தாங்களின் மேலான கருத்தை கேட்கிறேன்

    ReplyDelete
  7. எட்டு பற்றிய கட்டுரை வாசித்தேன் நன்றாக உள்ளது.நன்றி ஐயா!

    ReplyDelete
  8. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    எட்டாம் எண் உடையவர்களுக்கு .
    தாங்கள் கொடுத்துள்ள பலன்கள்
    மிகவும் சரியாக பொருந்தியுள்ளது.
    நன்றி!!

    ReplyDelete
  9. என் பெயர் எண் எட்டு. நிறையப் பொருந்துகிறது. என் தந்தை, ஜனவரி 17 (எம்.ஜி.ஆர். பிறந்த நாள்) ல் பிறந்தார். வாழும்போதும் உயர்வாக வாழ்ந்தார். மரணம் கூட திட்டமிடப்பட்டது போல் அமைந்தது. நீலம் மற்றும் கறுப்பு நிறங்களையே பயன்படுத்துவார். 'சனி' என்று வாயால் சொன்னதுகூட இல்லை.
    'பெரிய பகவான்' என்ற வார்த்தைகளையே பயன்படுத்துவார். தாங்கள் கூறியுள்ளது 90% க்குமேல் பொருந்துகிறது. திரு. ராஜாராமின் மேலதிகத் தகவல்களும் வழக்கம்போல் அருமை. தசாவதாரங்களில், கூர்மாவதாரம் சனிபகவானின் அம்சமுடையது என்று கூறுவர். அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete
  10. ஐயா,

    எட்டாம் எண் பற்றிய தங்களுடைய ஆக்கம் மிகவும் பயனுள்ளதாக‌
    இருந்தது.என்னுடைய ஜாதகத்தில் 2ம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருப்பதலோ
    என்னமோ சினம் மட்டும் குறையவே இல்லை.

    மற்றுமொரு விடயம், இறைவனின் அருட்கொடை தங்களைப் போன்ற‌
    சில பேருக்கு மட்டுமே வாய்க்கும், எனவே தங்களால் இயலும் வரை
    எழுதி மானுடரின் வாழ்ககையை பயனுள்ளதாக ஆக்குங்கள்.

    ReplyDelete
  11. வாங்க..(சனீஸ்சர அய்யா அவர்களே)
    வாங்க..,,

    பலரும் பயப்படும் நீவிர்
    பலம் பொருந்தியவர் மட்டுமல்ல

    பலனும் தருபவர் என அறியா
    பலரும் சுலபமாக

    தட்டி விடும் அந்த
    எட்டினை தொட்டுக் காட்டி

    சுட்டிகளையும் சேர்த்தே தந்து
    பட்டியலிட்ட பல தகவல்களுடன்

    சூசகமாக சொன்ன (உங்கள்) எண்னை
    கிலேசமில்லாமல் அறிய முடிந்தது

    எட்டு என்றதுமே அது எப்போ நம்மை
    வெட்டும் என பயப்படுபவருக்கு தந்த தைரியம் பாராட்டுக்குரியது..

    அட்டி தரப் பணியே என்றதும்
    கொட்டிக் கிடக்குதிங்கே என்றதும்

    எட்டேஎன்றதும் மகிழ்ச்சி
    துட்டுக்கேற்றது இந்த எட்டே என

    எட்டவைத்த அறிவை ஒரு
    குட்டு போட்டு சொன்னது சிறப்பு

    ஆட்டிவைப்பவர் சனீஸ்வரர் அவருக்கு
    போட்டி இல்லை எண்ணில் என

    இடித்துச் சொன்னதை கேட்டு சிலர்
    ஒடிந்து போக கூடாது என

    -ve அம்சங்களின் பட்டியலிட்டதில் ஒரு
    சல்யூட் வாத்தியாருக்கு...

    ReplyDelete
  12. தோழர் ராசாராமன் தந்த கூடுதல் தகவலுடன் சேர்த்துக்கொள்ள மேலும் சில..

    எட்டு மனிதப் பிறப்பில் திருப்புமுனை
    தொட்டு உணரும் தாயின் கரு

    முழு வளர்ச்சி பெறுவதும்
    முதல் அறிவை பெறுவதும் அப்போதே

    வார்த்தைகளுக்கு எட்டாத தெய்வானுபவத்தை

    வார்த்தைகளில்
    வடித்துக் கொடுத்த ஒப்பற்ற நூல்.

    சைவ திருமுறைகள் பன்னிரண்டில்
    பைய உணர்த்தும் எட்டாம் திருமுறை "திருவாசகம்".

    ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் குரு இருந்து விட்டால்(?)
    -விளக்கம் சிங்கை செல்வர் சொல்வார்!

    சைவ சித்தாந்தத்தின் வேத நூலாக சிவஞானபோதத்தின் எட்டாம் சூத்திரம் ஞானம் உணர்த்துவதே

    எட்டில் யோகமும் சொல்லப்படும்
    (இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என)

    எட்டுவகை யோகங்களும்
    (இடகலை, பின்கலை, சுழிமுனை என)
    எட்டி பிரிந்து புருவமத்தியில் ஒன்றாய் சேரும் வடிவமும் எட்டே

    தன்வசமாக்கும் அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்ற சித்தியும்
    எட்டில் தான்

    இறைவனுக்கும் குணங்கள் எட்டே
    தன் வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை, இயற்கை உணர்வினன் ஆதல் ஆகிய எட்டுக் குணங்களை சைவ ஆகமங்கள் எடுத்துக் கூறுகின்றன.

    இதனை வள்ளுவம்
    எண் குணத்தான் தாளை வணங்கா தலை என்ற குறள் உறுதி செய்கிறது

    அட்ட வீரட்டத் தலங்கள் தெரியும் தானே

    தாண்டவமாடும் தில்லை ஆடலரசன் காலைத் தூக்கி நின்றாடும் கோலத்தைச் சுற்றி நேர்க்கோடுகள் வரைந்தால் அது எண் கோணமாகும்.

    அந்த ஆனந்தக் கூத்தன் அந்த எட்டில் நின்று ஆடித்தான் இந்த உலகத்தைப் ஆள்கிறான்;

    மனிதப் பிறப்பில் பல நபர்கள் 8 ஆம் தேதியில் பிறந்து சாதித்துள்ளவரில்

    நம் மண்னில் பிறந்த (மனதில் நிறைந்த) இவர்கள்

    நம்ம வாத்தியார்
    மன்மோகன் சிங்,
    அத்வானி,
    ஜோதிபாசு,
    முரசொலி மாறன்
    உள்பட பலர்
    8ஆம் எண்ணில் தான்

    இப்போ சொல்லுங்கள்!
    எட்டு என்ன எண்?

    ReplyDelete
  13. வழக்கம் போல் சுழல விடும் பாடலினை நீண்ட ஊட்டமென்பதால் தனியாக இங்கே..

    அடிக்கிற கைதான் அணைக்கும்
    அணைக்கிற கைதான் அடிக்கும்

    இனிக்கிற வாழ்வே கசக்கும்
    கசக்கிற வாழ்வே இனிக்கும்

    புயலுக்குப் பின்னே அமைதி - வரும்
    துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி

    இருளுக்குப் பின் வரும் ஜோதி
    இதுதான் இயற்கை நியதி

    இறைக்கிற ஊத்தே சுரக்கும் - இடி
    இடிக்கிற வானம் கொடுக்கும்

    விதைக்கிற விதை தான் முளைக்கும்
    இதுதான் இயற்கை நியதி

    ReplyDelete
  14. /////Blogger Rajaram said...
    ஆசிரியர் ஐயா,
    நான் ஆவலுடன் எதிர்பார்த்த 8ம் எண் பற்றிய பலதகவல்களைத் தாங்கி வந்த இந்தப் பதிவுக்கு நன்றி. எட்டாம் எண்ணை ஆள்வது நீதிக்கிரகம்,முப்பதுமுக்கோடி தேவர்களில் யாருக்குமே கிடைக்காத ஈஸ்வரப் பட்டம் வாங்கிய சனீஸ்வர பகவானின் ஆளுமைக்குட்பட்டது. எட்டாம் எண்காரர்கள் எந்தவொரு காரியத்தையும் நின்று, நிதானித்து, யோசித்து ஆற அமர கணகச்சிதமாக செய்து முடிக்கக் கூடியவர்கள்.மந்தமான செயல்பாடுகளை உடையவர்கள். ஒருவரைப் பற்றிய இவர்களது கணிப்பு தான் மிகச்சரியாக இருக்கும்.யாரையும் பார்த்த மாத்திரத்தில் இவர் இப்படித்தான் என்று கூறிவிடுவார்கள். எல்லோரையும் விட்டுப் பிடிப்பார்க‌ள்,இவ‌ன் எங்கே சுற்றி எங்கு போனாலும் ஒரு நாள் என்கிட்ட‌ வ‌ ந்து தானே ஆக‌ணும். அப்போக்காட்டுகிறேன் நான் யாரென்று என்று த‌ன்னுடைய‌ முறை வ‌ரும்வ‌ரை காத்திருப்பார்க‌ள்.
    அத‌ள‌பாதாள‌த்தில் விழுந்தாலும் நிமிர்ந்து நிற்கும் தார‌க‌ம‌ந்திர‌த்தை அறிந்து வைத்திருப்பார்க‌ள்.மற்றவர்களிடம் என்ன‌ வீக்ன‌ஸ் உள்ள‌து என்று ச‌ரியாக‌ அறிந்து வைத்திருப்பார்க‌ள்.க‌டின‌ உழைப்பாளிக‌ள்,இவ‌ர்க‌ளின் உழைப்பைப் ப‌ற்றிச்சொல்ல‌ வார்த்தைக‌ளே இல்லை
    உற‌வுக‌ளின் மேல் அதீத‌ப் பாச‌முடைய‌வ‌ர்க‌ள். எந்த‌வொரு விஷ‌ய‌த்திலும்(உணர்வுகளுக்கு இடம் தராமல்) ந‌டுனிலையோடு எத்த‌ர‌ப்புப் பாதிக்காத‌ வ‌கையில் முடிவெடுக்கும் ச‌மார்த்திய‌சாலிக‌ள். தெய்வ‌த்தை வ‌ண‌ங்க‌ம‌ற‌ந்தாலும் பெற்ற‌ தாய்,த‌ந்தைய‌ரை தெய்வ‌மாக‌ வ‌ணங்குப‌வ‌ர்க‌ள்.
    8ம் எண்ணை சனிபகவான் முழுவ‌துமாக‌ ஆட்சி செய்கிறார். இவர்களது அனைத்து செயல்களும் அடுத்தவர்களை பாதிக்காத வகையில் தான் அமையும்.ஒருவர் உலகப் புகழ்பெற வேண்டுமெனில் சனியின் தயவுதேவை. இன்று உலகம் முழுவதும் ஆட்சிசெய்யும் ஆங்கிலம்(சீனம் அதிகப்பேரால் பேசப்படுவது) எட்டாம் எண்ணை உடையது. குருவும்,சுக்கிர‌னும் பின்னாலிருந்து எத்த‌னை ட்யூன் போட்டாலும் அது ந‌ம‌து காதுக‌ளில் வ‌ந்து இன்னிசையாக‌ப் பாய்வ‌த‌ற்கு ச‌னியின் ஆசி தேவை.ஏனெனில் இவ‌ர் தான் க‌ர்ம‌கார‌க‌ன் அவ‌ர்க‌ள் எத்த‌னை ச‌ட்ட‌ம் போட்டாலும் இவ‌ர் கையெழுத்துப் போட‌வில்லையெனில் தீர்மான‌ம் நிறைவேறாது.
    இவர் உச்சம் பெறும் துலாம் வீட்டுக்குச் சின்னமாக தராசு வழங்கியதே அவர் எந்தப் பக்கமும் சாயாத நடுனலைவாதி என்பதற்காகத் தான்.கர்மவினைக்கேற்றபடி படியளந்து விடுவார்.
    சனி ஆளும் நட்சத்திரங்களான பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி முறையே நட்சத்திர வரிசையில் 8,17,26 என்று சனியின் எண்ணான 8 யே குறிக்கின்றன.இவர்கள் மாறுபட்ட சிந்தனை உடையவர்கள்,அவ்வளவு சீக்கிரம் யாரையும் பாராட்டி விடமாட்டார்கள்.இவர்களிடம் பாராட்டு வாங்கிவிட்டால் அதைவிட வேறு பாராட்டுத் தேவையில்லை.சனி ஆளும் ராசிகள் மகரம்,கும்பம்.இதில் மகரம் சரராசி இவர்கள் கொஞ்சம் வேகம் நிறைந்தவர்கள்.ஆனால் கும்பமோ சனியின் மந்தபுத்தி,காலம் தாழ்த்துதல் என சனியின் மொத்த குணத்தையுமே பிரதிபலிக்கும்.ஏனெனில் இது ஸ்திரராசி,எதிலும் நிதானமான செயல்பாட்டை உடையவர்கள்.கும்ப ராசிக்காரர்கள் பலருக்கும் 10 ரூபாய் நோட்டையே பத்து முறை எண்ணிவாங்கும் அளவுக்கு நிதானம் இருக்கும்,பதறாத காரியம் சிதறாது என்பார்கள்.அது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.( ந‌ம்ம‌ வாத்தியார் ஐயா அவ‌ர்க‌ள் ம‌க‌ர‌ராசிக்கார‌ர் வார‌த்தில் 4 நாள் பாட‌ங்க‌ள்,பின்னூட்ட‌ங்க‌ளுக்குப் ப‌தில்க‌ள் என‌ அனைத்தையும் இந்த‌ வ‌ய‌திலும் எந்த‌வொரு தொய்வுமின்றி ந‌க‌ர்த்துகிறார் அத‌ற்கு வ‌குப்ப‌றை ச‌க‌மாண‌வ‌ர்க‌ளின் சார்பாக‌வும் ஒரு ச‌ல்யூட்).சனி ஆதிக்கம் நிறைந்தவர்களின் உழைப்பு அப்படி.//////

    உங்களுடைய பாராட்டிற்கும், மேலதிகத்தகவல்களுக்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி ராஜாராம்!

    ReplyDelete
  15. /////Blogger rajesh said...
    வணக்கம் அய்யா நன்றாக உள்ளது. தலைப்பில் ஒரு பிழை உள்ளது மாற்றுங்கள்.
    http://astrovanakam.blogspot.in//////

    தட்டச்சுப்பிழை. திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி!

    ReplyDelete
  16. /////Blogger மகேஸ்வரன் said...
    நான் 26ல் பிறந்தவன். 100க்கு 100 பொருந்துகிறது. அதீத வெற்றியையும், அதீத தோல்வியையும் சுவைத்து இருக்கிறேன்.
    என் ஜாதகம்: மகர லக்னம். மகர ராசி. லக்கினாதிபதி சனீஸ்வரர் செவ்வாயின் சாரத்தில், செவ்வாயுடன் கன்னியில் இருக்கிறார். (நவாம்சத்திலும் சனீஸ்வரர் கன்னியில் வாசம், வர்க்கோத்தமம்.) 1ல் புதனுடன் சனீஸ்வரர் பரிவர்த்தனை பெற்று இருக்கிறார். குரு தனித்து 10ல் இருக்கிறான். தற்சமயம் குரு தசை, சனி புக்தி எனக்கு நடக்கிறது. தசாநாதனும் (10ல்), புக்திநானும்(9ல்) 12- 1 நிலைப்பாடு.
    சுருக்கமாய் சொன்னால், குருவும், சனியும் என்னை தனிமைப்படுத்தி தினம் தினம் அதீத தோல்வியின் மூலம் வாழ்க்கைப்பாடம் நடத்துகிறார்கள். குரு கனிவுடன் நடத்துகிறார். சனிதான் வர்க்கோத்தம கடுமையுடன் நடந்து கொள்கிறார். புதன் புக்தி நோக்கி நாட்களை நகர்த்துகிறேன்.
    நீங்கள் நடத்திய பாடத்தின் மூலம் நான் அறிந்து கொண்டது இதுதான். சனி(க்குப்) பிடித்தவன் நான். :-)/////

    பிடித்தவர்களைத்தான் சனி பிடிப்பார்!:-)))

    ReplyDelete
  17. ////Blogger ananth said...
    நான் 26ம் தேதி பிறந்தவன். பல குணங்கள் ஒத்துப் போகிறது. எவையெவை என்பது எனக்கு மட்டும் தெரிந்ததாக இருக்கட்டும்.
    //அவ்வளவு சீக்கிரம் யாரையும் பாராட்டி விடமாட்டார்கள்.இவர்களிடம் பாராட்டு வாங்கிவிட்டால் அதைவிட வேறு பாராட்டுத் தேவையில்லை.//
    வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் வாங்குவதைப் போன்றது. என்ன நண்பரே சரிதானே.////

    சரிதான்!

    ReplyDelete
  18. ////Blogger ananth said...
    8,17,26 தேதிகளில் பிறந்தவர்கள் ஜாதகத்தில் சனிஷ்வரர் சுப பலம் பெற்றால் நல்ல நன்மையான பலன்களை எதிர்பார்க்கலாம். இல்லையென்றால் கஷ்டம்தான்./////

    உண்மைதான்!

    ReplyDelete
  19. /////Blogger thanusu said...
    இன்று நான்.
    அய்யா சொன்னது எல்லாமும் எனக்கு பொருந்துகிறது.பிளஸ்,மைனஸ் எல்லாம் சரியா இருக்கிறது.
    எட்டில் பிறந்து விண்ணை தொட்ட நம் ஊர் நாயகர்கள் .பெரியார் .புரட்சிதலைவர் .
    ஒரு சந்தேகம் அய்யா , அய்யா அவர்கள் தயவுசெய்து தீர்த்துவைக்கவும்.எண் கணிதம் தொடங்கியதுமே கேட்க நினைத்து பின் அமைதி காத்தேன் . நம்முடைய எண் வரட்டும் கேட்காலாம் என்று இருந்துவிட்டேன்
    இன்று நான் பிறந்த எண்(17 தேதி)வந்துள்ளது.
    நாமாச்சி நம் வேலையாச்சி என்றுஅமைதியாக இருக்கும்போது அல்லது ஒதிங்கி போகும்போது தேடிவரும் வம்புகளை ஒதுக்கினாலும் ,விட்டுக் கொடுத்தாலும் திரும்ப திரும்ப தட்டிகேட்கிரார்கள் அந்த நேரத்தில் எனக்கு மூர்க்கத்தனமான கோபம் வருகிறது.கலவரம்,சண்டை போன்ற விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்துவிடுகிறது.
    வகுப்பறைக்கு வந்து ஜோதிடத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஆரம்பித்த பின் அந்த மோசமான நாட்களின் தேதிகளையும் கோசார சந்திரனையும் பார்த்தபோது ,இரண்டு விசயங்கள் ஒத்து வந்தது.
    முதலாவதுஅவைகளின் தேதிகள் எல்லாம் எட்டில் இருந்தது.இரண்டாவது அன்றைய தினம் சந்திராஷ்டமம் சேர்ந்தது.
    08-02-2012 (இது மிக்க சமிபத்தில் -இந்தியாவில் )
    08-11-2009 (இதுவும் இந்தியாவில் )
    சாதரண எட்டாம் தேதி எது பிரச்சினையும் இல்லை . மற்ற தேதிகளில் வரும் சந்திராஷ்டமும் அவ்வளவாக ஏதும் செய்யவில்லை
    எட்டாம் தேதியும், சந்திராஷ்டமும் சேர்ந்து வந்த அந்த நாட்கள் மிக்க மோசமாக என் அனுபவத்தில் உள்ளது.
    தாங்களின் மேலான கருத்தை கேட்கிறேன்///////

    நீங்கள் சொல்லும் அந்த கூட்டமைப்பு ஒரு சில மாதங்களில் மட்டுமே வரும். பொறுமையாக இருக்க வேண்டியதுதான்!

    ReplyDelete
  20. /////Blogger kmr.krishnan said...
    எட்டு பற்றிய கட்டுரை வாசித்தேன் நன்றாக உள்ளது.நன்றி ஐயா!/////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  21. /////Blogger V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    எட்டாம் எண் உடையவர்களுக்கு .
    தாங்கள் கொடுத்துள்ள பலன்கள்
    மிகவும் சரியாக பொருந்தியுள்ளது.
    நன்றி!!/////

    நல்லது நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  22. Blogger Parvathy Ramachandran said...
    என் பெயர் எண் எட்டு. நிறையப் பொருந்துகிறது. என் தந்தை, ஜனவரி 17 (எம்.ஜி.ஆர். பிறந்த நாள்) ல் பிறந்தார். வாழும்போதும் உயர்வாக வாழ்ந்தார். மரணம் கூட திட்டமிடப்பட்டது போல் அமைந்தது. நீலம் மற்றும் கறுப்பு நிறங்களையே பயன்படுத்துவார். 'சனி' என்று வாயால் சொன்னதுகூட இல்லை.
    'பெரிய பகவான்' என்ற வார்த்தைகளையே பயன்படுத்துவார். தாங்கள் கூறியுள்ளது 90% க்குமேல் பொருந்துகிறது. திரு. ராஜாராமின் மேலதிகத் தகவல்களும் வழக்கம்போல் அருமை. தசாவதாரங்களில், கூர்மாவதாரம் சனிபகவானின் அம்சமுடையது என்று கூறுவர். அருமையான பதிவு. நன்றி./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  23. /////Blogger sundarji said...
    ஐயா,
    எட்டாம் எண் பற்றிய தங்களுடைய ஆக்கம் மிகவும் பயனுள்ளதாக‌
    இருந்தது.என்னுடைய ஜாதகத்தில் 2ம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருப்பதலோ
    என்னமோ சினம் மட்டும் குறையவே இல்லை.
    மற்றுமொரு விடயம், இறைவனின் அருட்கொடை தங்களைப் போன்ற‌
    சில பேருக்கு மட்டுமே வாய்க்கும், எனவே தங்களால் இயலும் வரை
    எழுதி மானுடரின் வாழ்ககையை பயனுள்ளதாக ஆக்குங்கள்./////

    செய்துகொண்டிருக்கிறேன். இறையருள் இருந்தால் தொடர்ந்து செய்வேன்!

    ReplyDelete
  24. ////Blogger அய்யர் said...
    வாங்க..(சனீஸ்சர அய்யா அவர்களே)
    வாங்க..,
    பலரும் பயப்படும் நீவிர்
    பலம் பொருந்தியவர் மட்டுமல்ல
    பலனும் தருபவர் என அறியா
    பலரும் சுலபமாக
    தட்டி விடும் அந்த
    எட்டினை தொட்டுக் காட்டி
    சுட்டிகளையும் சேர்த்தே தந்து
    பட்டியலிட்ட பல தகவல்களுடன்
    சூசகமாக சொன்ன (உங்கள்) எண்னை
    கிலேசமில்லாமல் அறிய முடிந்தது
    எட்டு என்றதுமே அது எப்போ நம்மை
    வெட்டும் என பயப்படுபவருக்கு தந்த தைரியம் பாராட்டுக்குரியது..
    அட்டி தரப் பணியே என்றதும்
    கொட்டிக் கிடக்குதிங்கே என்றதும்
    எட்டேஎன்றதும் மகிழ்ச்சி
    துட்டுக்கேற்றது இந்த எட்டே என
    எட்டவைத்த அறிவை ஒரு
    குட்டு போட்டு சொன்னது சிறப்பு
    ஆட்டிவைப்பவர் சனீஸ்வரர் அவருக்கு
    போட்டி இல்லை எண்ணில் என
    இடித்துச் சொன்னதை கேட்டு சிலர்
    ஒடிந்து போக கூடாது என
    -ve அம்சங்களின் பட்டியலிட்டதில் ஒரு
    சல்யூட் வாத்தியாருக்கு...//////

    உங்களின் சல்யூட்டிற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  25. /////Blogger அய்யர் said...
    தோழர் ராசாராமன் தந்த கூடுதல் தகவலுடன் சேர்த்துக்கொள்ள மேலும் சில..
    எட்டு மனிதப் பிறப்பில் திருப்புமுனை
    தொட்டு உணரும் தாயின் கரு
    முழு வளர்ச்சி பெறுவதும்
    முதல் அறிவை பெறுவதும் அப்போதே
    வார்த்தைகளுக்கு எட்டாத தெய்வானுபவத்தை
    வார்த்தைகளில்
    வடித்துக் கொடுத்த ஒப்பற்ற நூல்.
    சைவ திருமுறைகள் பன்னிரண்டில்
    பைய உணர்த்தும் எட்டாம் திருமுறை "திருவாசகம்".
    ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் குரு இருந்து விட்டால்(?)
    -விளக்கம் சிங்கை செல்வர் சொல்வார்!
    சைவ சித்தாந்தத்தின் வேத நூலாக சிவஞானபோதத்தின் எட்டாம் சூத்திரம் ஞானம் உணர்த்துவதே
    எட்டில் யோகமும் சொல்லப்படும்
    (இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என)
    எட்டுவகை யோகங்களும்
    (இடகலை, பின்கலை, சுழிமுனை என)
    எட்டி பிரிந்து புருவமத்தியில் ஒன்றாய் சேரும் வடிவமும் எட்டே
    தன்வசமாக்கும் அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்ற சித்தியும்
    எட்டில் தான்
    இறைவனுக்கும் குணங்கள் எட்டே
    தன் வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை, இயற்கை உணர்வினன் ஆதல் ஆகிய எட்டுக் குணங்களை சைவ ஆகமங்கள் எடுத்துக் கூறுகின்றன.
    இதனை வள்ளுவம்
    எண் குணத்தான் தாளை வணங்கா தலை என்ற குறள் உறுதி செய்கிறது
    அட்ட வீரட்டத் தலங்கள் தெரியும் தானே
    தாண்டவமாடும் தில்லை ஆடலரசன் காலைத் தூக்கி நின்றாடும் கோலத்தைச் சுற்றி நேர்க்கோடுகள் வரைந்தால் அது எண் கோணமாகும்.
    அந்த ஆனந்தக் கூத்தன் அந்த எட்டில் நின்று ஆடித்தான் இந்த உலகத்தைப் ஆள்கிறான்;
    மனிதப் பிறப்பில் பல நபர்கள் 8 ஆம் தேதியில் பிறந்து சாதித்துள்ளவரில்
    நம் மண்னில் பிறந்த (மனதில் நிறைந்த) இவர்கள்
    நம்ம வாத்தியார்
    மன்மோகன் சிங்,
    அத்வானி,
    ஜோதிபாசு,
    முரசொலி மாறன்
    உள்பட பலர்
    8ஆம் எண்ணில் தான்
    இப்போ சொல்லுங்கள்!
    எட்டு என்ன எண்?//////

    உங்களின் மேலதிகத்தகவல்களுக்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  26. Blogger அய்யர் said...
    வழக்கம் போல் சுழல விடும் பாடலினை நீண்ட ஊட்டமென்பதால் தனியாக இங்கே..
    அடிக்கிற கைதான் அணைக்கும்
    அணைக்கிற கைதான் அடிக்கும்
    இனிக்கிற வாழ்வே கசக்கும்
    கசக்கிற வாழ்வே இனிக்கும்
    புயலுக்குப் பின்னே அமைதி - வரும்
    துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
    இருளுக்குப் பின் வரும் ஜோதி
    இதுதான் இயற்கை நியதி
    இறைக்கிற ஊத்தே சுரக்கும் - இடி
    இடிக்கிற வானம் கொடுக்கும்
    விதைக்கிற விதை தான் முளைக்கும்
    இதுதான் இயற்கை நியதி//////

    நல்ல பாடல். பதிவிட்டமைக்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  27. ஐயா, இன்றைய எண் எட்டிற்குரிய கட்டுரை கும்பலக்கினத்தில் பிறந்த தந்தையை நினைவூட்டியது. ஆனால் எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் யாரையும் தெரியாததால் சனியின் ஆதிக்கத்தில் உள்ளவர்களின் குணநலன்களை உடையவர்கள் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்கிறேன்.

    இன்று மனநிலை தொய்வுற்றிருந்த நிலையில் உங்கள் பதிவிற்கு வந்த பொழுது, "வெற்றியென்ன, தோல்வியென்ன, விளையாடிப் பார்ப்போம், வா!" என்றது உங்கள் தலைப்பு. நீங்களே என் மனதில் உள்ளதைப் புரிந்துகொண்டு உற்சாகமூட்டியது போலிருந்தது. நன்றி.
    சுந்தரி சொல்வது உண்மை. அவ்வப்பொழுது எல்லோருக்கும் 337தான் அதை மறக்காதீர்கள் என்று நீங்கள் நினைவு படுத்துவதுதான் என்னைப் போன்றவர்கள் வகுப்பறையிலேயே சுற்றிக்கொண்டிருப்பதன் உண்மையான காரணம். எல்லாம் வாங்கி வந்த வரம், விதிக்கப்பட்டது எதுவோ அதுவே கிடைக்கும் என்று ஜோதிடத்தின் துணைகொண்டு உதாரணத்துடன் நீங்கள் எழுதும் கட்டுரைகள் சிறந்த மனவளக் கட்டுரைகள். இக்கட்டுரைகளால் பயன் பெறுவோர் என் போன்ற பலர். உதாரணத்திற்கு: http://classroom2007.blogspot.com/2012/02/astrology_13.html

    ReplyDelete
  28. ///எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் யாரையும் தெரியாததால் ///

    நம்ம வாத்தியாரை தெரியாதா..
    நம் வகுப்பறை தோழர் தனுசாரும்

    இப்போ இந்த பட்டியலில்..
    இந்த எட்டை புரிந்தால்

    எல்லாம் எட்டும்
    எதுவும் கிட்டும்

    ///உண்மையான காரணம். எல்லாம் வாங்கி வந்த வரம், விதிக்கப்பட்டது எதுவோ அதுவே கிடைக்கும் என்று //

    ஆம் இதைத்தான்
    மெய்கண்ட சாத்திரத்தின் சிவஞான சித்தியார் இந்த பாடலில் சொல்லி உள்ளது (எளிமையான பாடல் என்பதால் விளக்கம் தேவையில்லை)

    பேறு இழவு இன்ப மோடு பிணி மூப்புச் சாக்காடு என்னும்
    ஆறும் முன் கருவுட் பட்டது இவ் விதி அனுபவத்தால் தேறு நீ இனிச்செய் கன்மம் மேல் உடலிற்கு சேரும் என்றே.

    வாழ்க.. வாழ்த்துக்களுடன்..

    ReplyDelete
  29. ///அய்யர் said...
    நம்ம வாத்தியாரை தெரியாதா..
    நம் வகுப்பறை தோழர் தனுசாரும்
    இப்போ இந்த பட்டியலில்..///

    வாழ்த்துக்களுக்கு நன்றி அய்யர் ஐயா அவர்களே.
    என்ன இருந்தாலும் வீட்டில் நான்கு பக்கமும் நான்காம் எண் உள்ளவர்கள் புடை சூழ, தினமும் பழகிப் பார்க்கும் அளவில் தெரியாதுதானே, அதைத்தான் சொன்னேன்.

    எத்தனையோ பேரை இதுவரை சந்தித்திருந்தாலும் பிறந்த எண், விதி எண் பற்றி கவனத்தில் கொண்டதில்லை.
    இனிமேல்தான் "பழகிப்பார்க்க வேண்டும்" மற்ற எண் உள்ளவர்களுடன்.
    வாங்க பழகிப் பார்க்கலாம் :)))

    ReplyDelete
  30. அய்யர் said...
    எட்டில் யோகமும் சொல்லப்படும்
    (இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என)
    எட்டுவகை யோகங்களும்
    (இடகலை, பின்கலை, சுழிமுனை என)
    எட்டி பிரிந்து புருவமத்தியில் ஒன்றாய் சேரும் வடிவமும் எட்டே
    தன்வசமாக்கும் அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்ற சித்தியும்
    எட்டில் தான்
    இறைவனுக்கும் குணங்கள் எட்டே
    தன் வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை, இயற்கை உணர்வினன் ஆதல் ஆகிய எட்டுக் குணங்களை சைவ ஆகமங்கள் எடுத்துக் கூறுகின்றன.
    இதனை வள்ளுவம்
    எண் குணத்தான் தாளை வணங்கா தலை என்ற குறள் உறுதி செய்கிறது
    அட்ட வீரட்டத் தலங்கள் தெரியும் தானே
    தாண்டவமாடும் தில்லை ஆடலரசன் காலைத் தூக்கி நின்றாடும் கோலத்தைச் சுற்றி நேர்க்கோடுகள் வரைந்தால் அது எண் கோணமாகும்.
    அந்த ஆனந்தக் கூத்தன் அந்த எட்டில் நின்று ஆடித்தான் இந்த உலகத்தைப் ஆள்கிறான்

    நன்றிகள் திரு.அய்யர் அவர்களுக்கு ,
    இது போன்ற எளிய தமிழில் எழுதி என்போன்ற கடைசி பென்ச் மாணவர்களுக்கும்,புரியுமாறு செய்த கைமாறு மிகவும் அருமை.
    இதேபோல் தொடர கேட்டுக்கொள்கிறேன்.மேலும்,யோகா சூத்திரங்கள் ,அஷ்டமா சித்திகள் அருமை.

    என்னிடமும் ஒரு எட்டு..!
    உத்திரிரட்டாதியில்,மகரலக்னத்தில்,4 இல் சனிநீசம்(நீச பங்க ராஜயோகம் ) , பிறந்த தேதி :26. சனி தசை முடியும் தருவாய் (சனிதசை-குருபுத்தி ).
    இது வரை எதுவும் தெரியவில்லை.பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  31. அய்யா , அருமையான பதிவு. என் தம்பியின் எண எட்டு. என் இளைய மகனின் எண்ணும் எட்டு. நீங்கள் குறிப்பிட்டு உள்ள அத்தனை குணாதிசயங்களும் நூறு சதவீதம் ஒத்து போகிறது.(என் தம்பிக்கு). நீங்கள் சொல்வது போல் கடின உழைப்பாளி. அதீத பாசக்காரன். உறவுகளுக்கு முக்கியம் தருபவன். தன் வேலையை கெடுத்து, மற்றவர்களுக்கு உதவுவான். ஆனால் அவனை உபயோகித்து கொள்வார்கள். ஆனால் அதை அவன் தெரிந்தும் பொறுத்து செல்வான். பிடிவாதம் ஜாஸ்தி.
    அதே நேரம் அதிகம் விட்டு கொடுபவனும் அவன்தான். அவன் கடகம் லக்னம் , நான்கில் சனி உச்சம். (துலாம்).நிறைய அவமானம் , நிறைய தோல்விகள் சந்தித்து , சந்தித்தும் வருகிறான் . ஆனால் எடுத்த காரியத்தில் வெற்றி தான், தாமதமாக. இப்போ திருமணமும் லேட் ஆகி கொண்டு இருக்கிறது. அய்யாவின் பதிவின் படி செய்வாய் விரதம் நேற்று தான்(முதல் முறையாக) இருந்துள்ளான். தேமொழி சொன்னது போல் சராசரி நாட்களில் ஏற்படும் தொய்வுக்கு உங்கள் 337 மருந்துதான் ஆறுதல். அப்படியொரு நாள் தான் இன்று எனக்கு. நன்றி அய்யா.
    திரு.ராஜாராம் அவர்களுக்கு நன்றி. நிறைய தகல்வல்களை பரிமாறி கொண்டமைக்கு. உங்களின் thirst for indepth knowldege is very amazing. And heart to share is more appriciatable.
    -Kalai seattle

    ReplyDelete
  32. அய்யா , அருமையான பதிவு. என் தம்பியின் எண எட்டு. என் இளைய மகனின் எண்ணும் எட்டு. நீங்கள் குறிப்பிட்டு உள்ள அத்தனை குணாதிசயங்களும் நூறு சதவீதம் ஒத்து போகிறது.(என் தம்பிக்கு). நீங்கள் சொல்வது போல் கடின உழைப்பாளி. அதீத பாசக்காரன். உறவுகளுக்கு முக்கியம் தருபவன். தன் வேலையை கெடுத்து, மற்றவர்களுக்கு உதவுவான். ஆனால் அவனை உபயோகித்து கொள்வார்கள். ஆனால் அதை அவன் தெரிந்தும் பொறுத்து செல்வான். பிடிவாதம் ஜாஸ்தி.
    அதே நேரம் அதிகம் விட்டு கொடுபவனும் அவன்தான். அவன் கடகம் லக்னம் , நான்கில் சனி உச்சம். (துலாம்).நிறைய அவமானம் , நிறைய தோல்விகள் சந்தித்து , சந்தித்தும் வருகிறான் . ஆனால் எடுத்த காரியத்தில் வெற்றி தான், தாமதமாக. இப்போ திருமணமும் லேட் ஆகி கொண்டு இருக்கிறது. அய்யாவின் பதிவின் படி செய்வாய் விரதம் நேற்று தான்(முதல் முறையாக) இருந்துள்ளான். தேமொழி சொன்னது போல் சராசரி நாட்களில் ஏற்படும் தொய்வுக்கு உங்கள் 337 மருந்துதான் ஆறுதல். அப்படியொரு நாள் தான் இன்று எனக்கு. நன்றி அய்யா.
    திரு.ராஜாராம் அவர்களுக்கு நன்றி. நிறைய தகல்வல்களை பரிமாறி கொண்டமைக்கு. உங்களின் thirst for indepth knowldege is very amazing. And heart to share is more appriciatable.
    -Kalai seattle

    ReplyDelete
  33. அய்யா,
    தங்களின் numerology மறு பதிப்பிற்க்கு நன்றி ,
    1 - 9 இந்த எண்களில் இரண்டாம் எண்ணைத் தவிர மற்ற எல்லா எண்களிலும்
    பிறந்தவர்கள் ,எங்கள் குடும்பத்தில் குறைந்தது இரண்டு பேர்களாவது
    இருக்கிறார்கள்( 7 இல் இருவரும், & 8 இல் மூவரும் ) , 1 ,3 ,6 ம் எண்களில் பிறந்தவர்கள் தலா 6 ,4 ,3 பேர் இருக்கிறார்கள்.
    எட்டாம் எண் எனது மாமனாருக்கு உரியது
    அவரது பதொன்பாதாம் வயதில், அவரது தகப்பனாரின் மறைவிற்குப் பிறகு எடுத்துக்கொண்ட குடும்ப பொறுப்பில் இருந்து ,மிகவும் உயர்ந்தநிலைக்கு
    எல்லோரையும் உயர்த்தி சென்றார்.மற்றவர்களுக்கு அவர் செய்த ,உதவிகளும்,இறைபணியும் ,அன்னதானமும் கணக்கில் அடங்காதது.அதனால். நிறைய சொத்துக்களையும் நில புலன்களையும் இழந்தார்,என்பது வேறு விஷயம்.சுற்று வட்டார கிராமங்களில் அவரைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை
    ஏப்ரல் Ettam தேதி பிறந்த அவர், மறைந்த தினமும்,அதே April எட்டு தான்.
    அவரது 88 வது பிறந்த நாளில்,சனிக்கிழமை விடியற் காலை,ராம நவமிக்கு அடுத்த தினமான , தசமி அன்று உயிர் நீத்தார் .

    ReplyDelete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. அய்யா, நானும் 8ம் எண்ணில் பிறந்தவன். பலன்கள் ஓரளவிற்கு ஒத்து போகின்றது. கூறி இருக்கும் நல்ல பலன்கள் சுமார்தான்.. அதை தவிர்த்து அனைத்தும் மிக அருமையாக ஒத்துபோகின்றது... நான் இதுவரை உச்சத்தில் சென்றது கோபத்தில், தோல்வியில், பிடிவாதத்தில், ஏமாற்றத்தில், குறைகானுவதில் இப்படி பல...

    இதனால் எனக்கு கிடைத்த பலன்களும் ஏராளம் ... மிக தாராளம்... ம்ம் ... வாங்கி வந்த வரம் அப்படி... பிறவி எடுத்தாச்சு... பழனி ஆண்டவன் கண்ணை தொறந்தா தான் எதாவுது மாற்றம் தெரியும்..

    பதிவு மிகவும் அருமை அய்யா... மிக்க நன்றி...

    ReplyDelete
  36. அய்யா, நானும் 8ம் எண்ணில் பிறந்தவன். பலன்கள் ஓரளவிற்கு ஒத்து போகின்றது. கூறி இருக்கும் நல்ல பலன்கள் சுமார்தான்.. அதை தவிர்த்து அனைத்தும் மிக அருமையாக ஒத்துபோகின்றது... நான் இதுவரை உச்சத்தில் சென்றது கோபத்தில், தோல்வியில், பிடிவாதத்தில், ஏமாற்றத்தில், குறைகானுவதில் இப்படி பல...

    இதனால் எனக்கு கிடைத்த பலன்களும் ஏராளம் ... மிக தாராளம்... ம்ம் ... வாங்கி வந்த வரம் அப்படி... பிறவி எடுத்தாச்சு... பழனி ஆண்டவன் கண்ணை தொறந்தா தான் எதாவுது மாற்றம் தெரியும்..

    பதிவு மிகவும் அருமை அய்யா... மிக்க நன்றி...

    ReplyDelete
  37. வணக்கம் ஐயா,
    என்னுடைய விதி எண் 8 தான் ஐயா...தாங்கள் கூறிய அனைத்தும் எனக்கு பொருந்துகின்றன...நான் சிம்மம் லக்னம் என்பதால் சிரமங்கள் அதிகமாகவே உண்டு...கவலைகள் வந்தாலும் அடுத்த வேலைகளில் கவனம் செலுத்தவே பழகிக் கொண்டேன்...

    ஐயா,பள்ளியில் படிக்கும் போது,"Hall ticket"இருந்து இன்று "voterID"வ‌ரை எட்டாம் எண் என்னுட‌ன் பின்தொட‌ர்கிற‌து...ந‌ல்ல‌ ப‌திவுக்கு ந‌ன்றி ஐயா...

    ReplyDelete
  38. வகுப்பறைத் தோழர்கள், குறிப்பாகச் சென்னை நண்பர்கள் நலமா?. சுனாமி எச்சரிக்கையுடன் கூடிய நிலநடுக்கச் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இங்கே பெங்களூரில், எனது நாற்காலியும் சிறிது ஆட்டம் கண்டது. ஆனால், சென்னையில் இருந்த போதே இது பழகி விட்டதால், நிதானமாகவே வெளியில் வந்தேன். தொலைக்காட்சியில் தான் சுனாமி எச்சரிக்கை என்று தெரிந்தது. பேரழிவிலிருந்து நம்மைக் காப்பாற்ற இறைவனை வேண்டுவோம்.

    ReplyDelete
  39. எனது மாமனார் எட்டின் ஆதிக்கம் உள்ளவர் என்பதால் ,எங்கள் குடும்ப உறுப்பினர் பெரும்பான்மையினர் மகர,கும்ப லக்ன காரர்களாக இருப்பார்கள்
    அல்லது ரசியாகவேனும் இருக்கும் .எனது கணவர் மேஷலக்னம், தனுர் ராசி,ஆனால் சனி உச்சம்,
    அதே போல் எனது மகனுக்கும் லக்னாதிபதி சனி தான்,அது அமர்ந்த இடம் ஒன்பதாம் வீடு துலாம் ( உச்ச வீடு ).
    எங்கள் குடும்ப உறுபினர்களின் பிறந்த தேதியை வைத்து ஜாதக ஆராய்ச்சி செய்வதே எனது வேலை, அதன்படி தெரிந்து கொண்ட சில விஷயங்கள் ,
    பெரும்பாலும் தாய் அல்லது தந்தையின் பிறந்த தேதிகளில் தான்,அவர்கள் பிள்ளைகளும் இருக்கிறார்கள் .லக்னமும் ராசியும் தாத்தா,பாட்டிகளைப் போலவே அமைந்துள்ளது . சனி,ராகு,கேதுவும் பெற்றோர்களுக்கு உள்ளதைப் போலவே அமைகிறது என் கணவருக்கு எட்டாம் வீட்டில் ராகு உச்சம்,மகனுக்கு பத்தாம் வீட்டில் கேது உச்சம்.

    ReplyDelete
  40. ///என்னிடமும் ஒரு எட்டு..!
    .....
    இது வரை எதுவும் தெரியவில்லை.பொறுத்திருந்து பார்ப்போம்.///

    ஞானசம்பந்த பெருமான் அருளிய திருசிவபுரம் திருப்பதிகம் அன்போடு படியுங்கள்.. எதிர்நோக்கும் மாற்றம் நிச்சயம் வரும்..

    மனம் போல் வாழ்க
    கூடுதல் வாழ்த்துக்களை
    மே17ல் தருகிறோம்

    ReplyDelete
  41. ////Blogger தேமொழி said... ஐயா, இன்றைய எண் எட்டிற்குரிய கட்டுரை கும்பலக்கினத்தில் பிறந்த தந்தையை நினைவூட்டியது. ஆனால் எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் யாரையும் தெரியாததால் சனியின் ஆதிக்கத்தில் உள்ளவர்களின் குணநலன்களை உடையவர்கள் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்கிறேன்.
    இன்று மனநிலை தொய்வுற்றிருந்த நிலையில் உங்கள் பதிவிற்கு வந்த பொழுது, "வெற்றியென்ன, தோல்வியென்ன, விளையாடிப் பார்ப்போம், வா!" என்றது உங்கள் தலைப்பு. நீங்களே என் மனதில் உள்ளதைப் புரிந்துகொண்டு உற்சாகமூட்டியது போலிருந்தது. நன்றி.
    சுந்தரி சொல்வது உண்மை. அவ்வப்பொழுது எல்லோருக்கும் 337தான் அதை மறக்காதீர்கள் என்று நீங்கள் நினைவு படுத்துவதுதான் என்னைப் போன்றவர்கள் வகுப்பறையிலேயே சுற்றிக்கொண்டிருப்பதன் உண்மையான காரணம். எல்லாம் வாங்கி வந்த வரம், விதிக்கப்பட்டது எதுவோ அதுவே கிடைக்கும் என்று ஜோதிடத்தின் துணைகொண்டு உதாரணத்துடன் நீங்கள் எழுதும் கட்டுரைகள் சிறந்த மனவளக் கட்டுரைகள். இக்கட்டுரைகளால் பயன் பெறுவோர் என் போன்ற பலர். உதாரணத்திற்கு: http://classroom2007.blogspot.com/2012/02/astrology_13.html////

    உண்மைதான் சில கட்டுரைகள் எனக்கு நானே எழுதிக்கொண்டதாக இருக்கும். அந்த 337 டானிக்தான் பலமுறை எழுந்து நடமாட உதவியிருக்கிறது!

    ReplyDelete
  42. ///Blogger Kalai said...
    அய்யா , அருமையான பதிவு. என் தம்பியின் எண எட்டு. என் இளைய மகனின் எண்ணும் எட்டு. நீங்கள் குறிப்பிட்டு உள்ள அத்தனை குணாதிசயங்களும் நூறு சதவீதம் ஒத்து போகிறது.(என் தம்பிக்கு). நீங்கள் சொல்வது போல் கடின உழைப்பாளி. அதீத பாசக்காரன். உறவுகளுக்கு முக்கியம் தருபவன். தன் வேலையை கெடுத்து, மற்றவர்களுக்கு உதவுவான். ஆனால் அவனை உபயோகித்து கொள்வார்கள். ஆனால் அதை அவன் தெரிந்தும் பொறுத்து செல்வான். பிடிவாதம் ஜாஸ்தி.
    அதே நேரம் அதிகம் விட்டு கொடுபவனும் அவன்தான். அவன் கடகம் லக்னம் , நான்கில் சனி உச்சம். (துலாம்).நிறைய அவமானம் , நிறைய தோல்விகள் சந்தித்து , சந்தித்தும் வருகிறான் . ஆனால் எடுத்த காரியத்தில் வெற்றி தான், தாமதமாக. இப்போ திருமணமும் லேட் ஆகி கொண்டு இருக்கிறது. அய்யாவின் பதிவின் படி செய்வாய் விரதம் நேற்று தான்(முதல் முறையாக) இருந்துள்ளான். தேமொழி சொன்னது போல் சராசரி நாட்களில் ஏற்படும் தொய்வுக்கு உங்கள் 337 மருந்துதான் ஆறுதல். அப்படியொரு நாள் தான் இன்று எனக்கு. நன்றி அய்யா.
    திரு.ராஜாராம் அவர்களுக்கு நன்றி. நிறைய தகல்வல்களை பரிமாறி கொண்டமைக்கு. உங்களின் thirst for indepth knowldege is very amazing. And heart to share is more appriciatable.
    -Kalai seattle////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  43. ////Blogger santhanakuzhali said...
    அய்யா,
    தங்களின் numerology மறு பதிப்பிற்க்கு நன்றி ,
    1 - 9 இந்த எண்களில் இரண்டாம் எண்ணைத் தவிர மற்ற எல்லா எண்களிலும்
    பிறந்தவர்கள் ,எங்கள் குடும்பத்தில் குறைந்தது இரண்டு பேர்களாவது
    இருக்கிறார்கள்( 7 இல் இருவரும், & 8 இல் மூவரும் ) , 1 ,3 ,6 ம் எண்களில் பிறந்தவர்கள் தலா 6 ,4 ,3 பேர் இருக்கிறார்கள்.
    எட்டாம் எண் எனது மாமனாருக்கு உரியது
    அவரது பதொன்பாதாம் வயதில், அவரது தகப்பனாரின் மறைவிற்குப் பிறகு எடுத்துக்கொண்ட குடும்ப பொறுப்பில் இருந்து ,மிகவும் உயர்ந்தநிலைக்கு
    எல்லோரையும் உயர்த்தி சென்றார்.மற்றவர்களுக்கு அவர் செய்த ,உதவிகளும்,இறைபணியும் ,அன்னதானமும் கணக்கில் அடங்காதது.அதனால். நிறைய சொத்துக்களையும் நில புலன்களையும் இழந்தார்,என்பது வேறு விஷயம்.சுற்று வட்டார கிராமங்களில் அவரைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை
    ஏப்ரல் Ettam தேதி பிறந்த அவர், மறைந்த தினமும்,அதே April எட்டு தான்.
    அவரது 88 வது பிறந்த நாளில்,சனிக்கிழமை விடியற் காலை,ராம நவமிக்கு அடுத்த தினமான , தசமி அன்று உயிர் நீத்தார் .////

    மேலதிகததகவல்களுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  44. Blogger Balamurugan Jaganathan said...
    அய்யா, நானும் 8ம் எண்ணில் பிறந்தவன். பலன்கள் ஓரளவிற்கு ஒத்து போகின்றது. கூறி இருக்கும் நல்ல பலன்கள் சுமார்தான்.. அதை தவிர்த்து அனைத்தும் மிக அருமையாக ஒத்துபோகின்றது... நான் இதுவரை உச்சத்தில் சென்றது கோபத்தில், தோல்வியில், பிடிவாதத்தில், ஏமாற்றத்தில், குறைகானுவதில் இப்படி பல...
    இதனால் எனக்கு கிடைத்த பலன்களும் ஏராளம் ... மிக தாராளம்... ம்ம் ... வாங்கி வந்த வரம் அப்படி... பிறவி எடுத்தாச்சு... பழனி ஆண்டவன் கண்ணை தொறந்தா தான் எதாவுது மாற்றம் தெரியும்..
    பதிவு மிகவும் அருமை அய்யா... மிக்க நன்றி.../////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  45. ////Blogger R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    என்னுடைய விதி எண் 8 தான் ஐயா...தாங்கள் கூறிய அனைத்தும் எனக்கு பொருந்துகின்றன...நான் சிம்மம் லக்னம் என்பதால் சிரமங்கள் அதிகமாகவே உண்டு...கவலைகள் வந்தாலும் அடுத்த வேலைகளில் கவனம் செலுத்தவே பழகிக் கொண்டேன்...
    ஐயா,பள்ளியில் படிக்கும் போது,"Hall ticket"இருந்து இன்று "voterID"வ‌ரை எட்டாம் எண் என்னுட‌ன் பின்தொட‌ர்கிற‌து...ந‌ல்ல‌ ப‌திவுக்கு ந‌ன்றி ஐயா...////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  46. /////Blogger santhanakuzhali said...
    எனது மாமனார் எட்டின் ஆதிக்கம் உள்ளவர் என்பதால் ,எங்கள் குடும்ப உறுப்பினர் பெரும்பான்மையினர் மகர,கும்ப லக்ன காரர்களாக இருப்பார்கள்
    அல்லது ரசியாகவேனும் இருக்கும் .எனது கணவர் மேஷலக்னம், தனுர் ராசி,ஆனால் சனி உச்சம்,
    அதே போல் எனது மகனுக்கும் லக்னாதிபதி சனி தான்,அது அமர்ந்த இடம் ஒன்பதாம் வீடு துலாம் ( உச்ச வீடு ).
    எங்கள் குடும்ப உறுபினர்களின் பிறந்த தேதியை வைத்து ஜாதக ஆராய்ச்சி செய்வதே எனது வேலை, அதன்படி தெரிந்து கொண்ட சில விஷயங்கள் ,
    பெரும்பாலும் தாய் அல்லது தந்தையின் பிறந்த தேதிகளில் தான்,அவர்கள் பிள்ளைகளும் இருக்கிறார்கள் .லக்னமும் ராசியும் தாத்தா,பாட்டிகளைப் போலவே அமைந்துள்ளது . சனி,ராகு,கேதுவும் பெற்றோர்களுக்கு உள்ளதைப் போலவே அமைகிறது என் கணவருக்கு எட்டாம் வீட்டில் ராகு உச்சம்,மகனுக்கு பத்தாம் வீட்டில் கேது உச்சம்./////

    உங்கள் ஆராய்ச்சிகளைக் கட்டுரையாக்கி அனுப்புங்கள். பத்விடுவோம்!

    ReplyDelete
  47. ///Blogger அய்யர் said...
    ///என்னிடமும் ஒரு எட்டு..! .....
    இது வரை எதுவும் தெரியவில்லை.பொறுத்திருந்து பார்ப்போம்.///
    ஞானசம்பந்த பெருமான் அருளிய திருசிவபுரம் திருப்பதிகம் அன்போடு படியுங்கள்.. எதிர்நோக்கும் மாற்றம் நிச்சயம் வரும்..
    மனம் போல் வாழ்க
    கூடுதல் வாழ்த்துக்களை
    மே17ல் தருகிறோம்////

    மே17 உங்கள் பிறந்த தினமா?

    ReplyDelete
  48. சாட்டிங் (Chatting) பின்னூட்டங்களுக்கு வாத்தியார் பதிலளிக்கவில்லை. சமபந்தப்பட்டவர்களே ஒருவருக்கொருவர் பதில் கூறிக்கொள்வார்கள் என்று விட்டுவிட்டார்!

    ReplyDelete
  49. அய்யா,
    எனது ஆராய்ச்சிக்கு பின்னணி ஜோதிடம் கற்பதற்கான ஆர்வமே தவிர ,phd க்கு ஆன ஆராய்ச்சி அல்ல, எனது மகன் phd முடித்து Dr .பட்டம் பெற்றபின்
    கிரேட் scientist ன் அன்னை என்ற பட்டமே எனக்கு பெருமை தருவதாகும்,
    ஓரளவிற்கு உங்களது பாடங்கள் எனக்கு மனப்பாடம் ,
    ஆனாலும் தங்களின் புத்தகங்களை தான் ஆர்வமுடன் எதிர் நோக்கி காத்திருக்கிறேன் .எனது மாமனார் எல்லோருக்கும் ஜாதகம் குறித்து வைத்திருப்பதாலே அதை நான் குறிப்பேடு போல எடுத்துக்கொண்டேன்.
    பலசமயங்களில் எனது மாமனாரின் செயல்களை பார்த்து எல்லோரும்
    வியந்து இருக்கிறோம் ( அவரது குறிப்பேட்டில் அவரது மரணம் 88 இல் என்பதனையும் குறித்துள்ளார் ) அவரது நினைவாற்றலுக்கு computer brain
    என்றும் ,திட்டமிட்டப்படி சரியாக குறித்த நேரத்தில் எல்லாம் செய்ய வேண்டும் என அவர் எதிர் பார்பதற்கும்,கறார் பேர்வழி எனசொல்லுவோம்.
    எட்டாம் எண் பாடம் படித்ததும் அவரது நினைவலைகளின் தாக்கத்தை பெரிதும் ஏற்பட்டதால் தான் நானும் ஆர்வக்கோளாறினால் பின்னூட்டம் இட்டேன்.
    அதனால் எனது ஆர்வக்கோளாறுக்கு மன்னிக்கவும்.
    தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.

    ReplyDelete
  50. சந்தனகுழலி (உங்கள் பெயர் நன்றாக இருக்கிறது), நீங்கள் குறிப்பிட்ட பின்தான் நானும் எங்கள் வீட்டிலும் பெரும்பாலோர் குறிப்பிட்ட ஒரு சில ராசி அல்லது லக்கினங்களுடன் அமைந்திருப்பதைக் கவனித்தேன். நான் பிறந்த வீட்டிலும் சரி, இப்பொழுது என் வீட்டிலும் அப்படியே. கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள்.
    நீங்கள் கவனித்ததை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    நான்: மகர லக்கினம் / கும்ப ராசி
    தந்தை: கும்ப லக்கினம் / விரிச்சக ராசி
    தங்கை: விரிச்சக லக்கினம்/ ரிஷப ராசி
    அம்மா: லக்கினம் தெரியாது / மீன ராசி

    நான்: மகர லக்கினம் / கும்ப ராசி
    கணவர்: மேஷ லக்கினம்/ விரிச்சக ராசி
    மகள்: மேஷ லக்கினம்/ கும்ப ராசி
    மகன்: மீன லக்கினம் / மகர ராசி

    வீட்டில் வேறுபட்ட ராசியோ லக்கினமோ உள்ளவர்கள் விவரம் தவிர்க்கப் பட்டுள்ளது

    ReplyDelete
  51. அய்யர் said...
    ///என்னிடமும் ஒரு எட்டு..!
    .....
    இது வரை எதுவும் தெரியவில்லை.பொறுத்திருந்து பார்ப்போம்.///

    ஞானசம்பந்த பெருமான் அருளிய திருசிவபுரம் திருப்பதிகம் அன்போடு படியுங்கள்.. எதிர்நோக்கும் மாற்றம் நிச்சயம் வரும்..

    மனம் போல் வாழ்க
    கூடுதல் வாழ்த்துக்களை
    மே17ல் தருகிறோம்

    thanks sir.......

    ReplyDelete
  52. தேமொழிக்கு எனது நன்றி,
    எனது அண்ணா கல்கி மற்றும் தமிழ் ஆர்வத்தினால் எனது அக்காவிற்கு பூங்குழலி என்றும் எனக்கு சந்தனக்குழலி என்றும் பெயர் வைத்தார் ,ஆனால்
    பள்ளி,கல்லூரிகளில் இந்த பெயர் உச்சரிப்பில் பலர் தடுமாறும் போது
    எனக்கே, என்ன பெயர் இது ?என நினைக்கவைக்கும்.
    தேமொழி என்பது கூட ஒரு அரிதான பெயர் தான்,கண்டிப்பாக இப்பெயரை
    தேர்வு செய்தவர்கள் தமிழ் பற்றின் காரணமாகத் தான் தேர்ந்து எடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன் .
    .நீங்கள் நட்சத்திரப்படி பார்த்தாலும், தேதிப்படி பார்த்தாலும் இவை அநேகமாகப் பொருந்தும் ,
    எனது தந்தையும்,அண்ணாவும் 19 ம் தேதி
    நானும் எனது மகனும் 3 ம் தேதி
    அக்காவின் கணவரும் அவர்களது மகனும் 1 ம் தேதி
    மற்றொரு அக்கா வீட்டிலும் அம்மாவும் பிள்ளையும் 1 ம் தேதிதான்.
    சில தினங்களுக்கு முன் எல்லோரையும் கலாய்த்து அருமையான
    ஒரு பதிவை கொடுத்து இருந்தீர்கள்,அதற்கே பாராட்டி, பின்னுட்டம் இட நினைத்தேன் ,அதற்கான இந்த சந்தர்ப்பம் அளித்தமைக்கும் ,தங்களின் பதிவுகளுக்கு எனது வாழ்த்துக்களும்,பாராட்டுகளும் உரித்தாகட்டும் .

    ReplyDelete
  53. என் பிறந்த தேதி 17. 8 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் தந்தையினை மிக இளவயதிலே இழந்து விடுகிறார்கள்.என் தந்தை இறந்தது 26ஆம் தேதி. 88 ஆம் வருடம்.

    நான் மகர லக்னம்.கன்னி ராசி. என் மகன்கள் சனி ஆளும் நட்சத்திரங்களான பூசம்,அனுஷம்.

    இந்த பதிவில் சொல்லி இருக்கும் நிறைய விஷயங்கள் எனக்கு ஒத்து போகிறது. நன்றி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com