மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.4.12

இந்தியாவில் மட்டுமே இது நடக்கும்

மாணவர் மலர்!

 இன்றைய மாணவர் மலரை ஐவரின் ஆக்கக்ங்கள் அலங்கரிக்கின்றன!
படித்து  மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
பக்தியின் மேன்மை!
ஆக்கம் பார்வதி இராமச்சந்திரன், பெங்களூரு

இறைவன்பால் மனித உயிர்கள் கொண்டுள்ள அன்பே பக்தி. பக்திஏற்படவும், அந்த பக்தி உறுதியாக, நம்பிக்கையோடு இருக்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஸ்ரீ நாராயண பட்டத்திரி 'ஸ்ரீமந் நாராயணீயத்தில்', " பக்தி என்பது முழுமையாக இருக்க வேண்டும், அதனை விடுத்து, அந்த பக்தியானது, துயரங்களை நீக்குமா என்று ஆராய்ந்தால், உனது வாக்கான, கீதையும், வேதங்களும், தெருவில் போகும் வழிப்போக்கன் ஒருவன் கூறியது போல் அல்லவா ஆகிவிடும்? என்று குருவாயூரப்பனிடம், முழுமையான பக்தியை வேண்டுகிறார்.

பக்தியைப் பொறுத்தவரை மர்க்கட நியாயம், மார்ஜால நியாயம் என்ற இருவகையைக் கூறுவதுண்டு. மர்க்கடம் என்றால் குரங்கு. குரங்கு மரம் விட்டு மரம் தாவும் போது, குரங்குக்குட்டி தாயை இறுகப் பற்றிக் கொண்டிருக்கும். குட்டி பிடியை விட்டால் தாய் எதுவும் செய்ய இயலாது. பக்தியில் அகங்கார, மமகாரங்கள் இருந்தால், நான், எனது என்ற எண்ணம் கலந்து பக்தி செய்தால் இந்த நிலை. இதில் இறைவன் அருள் கிடைப்பது கடினம்.

மார்ஜாலம் என்றால் பூனை. பூனை, தன் குட்டியைத் தன் வாயால் கவ்வி, பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வைக்கும். அதே போல், பக்தன் இறைவன் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பிறஉயிரையும் தன் உயிர்போல் பாவிக்கும் உயர் நிலை அடையும் போது, பக்தனின் முழுப் பாதுகாப்பையும். இறைவனே எடுத்துக் கொள்கிறான். 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்பது கீதாசார்யனின் திருவாக்கு. பக்தியின் இவ்விரு வகைகளுக்கும் உதாரணங்களைப் பார்க்கலாம்.

ஆதிசங்கரர் காலத்தில், நமது வைதிக சமயத்தில் இருபெரும் பிரிவுகள் இருந்தன. அவை
1. பூர்வ மீமாம்சை,
2. உத்தர மீமாம்சை என்பன.

பூர்வ மீமாம்சை, மனிதர்களுக்கு, யோகம் ஞானம் போன்றவை தேவையில்லை. பூஜை, ஹோமம், சடங்குகள் மூலம் தேவர்களைத் திருப்தி செய்தால், கோரிய பலன்களைப் பெறலாம் அதுவே போதும் என்ற கருத்துடையது. இதுவே பெரும் செல்வாக்குப் பெற்று விளங்கியது.

'உத்தர மீமாம்சை, இறைவனொருவன் இருக்கிறான். சடங்குகளோடு, யோகம், ஞானம் இவற்றின் மூலமாக, அவனை அடைவதே மனிதப் பிறவியின் பயன் என்ற கருத்துடையது. பூர்வ மீமாம்சை வேதத்தின் 'கர்மகாண்டம்' எனவும் உத்தர மீமாம்சை 'ஞான காண்டம்' எனவும் அறியப்பட்டன.

பூர்வ மீமாம்சையின் முக்கிய குரு, குமாரில பட்டர். இவர் அதன் கொள்கைகளை ஒழுங்குபடுத்தி பிரசாரம் செய்ததால் அது 'பாட்டமதம்' எனவும் பெயர் பெற்றது. அக்காலத்தில் பௌத்தம் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தது. தர்க்கநூல் முறைகளில் அவர்கள் திறமையானவர்களாக விளங்கினர்.அதன் கொள்கைகளை அறிந்து கொண்டுஅவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, அவர்களில் ஒருவனாகச் சேர்ந்து பட்டர் அதன் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். அப்போது, அவர்கள் தன் மதத்தைக் குறைகூறும் போதெல்லாம், பட்டரின் கண்ணிலிருந்து நீர் பெருகும். அதைப் பார்த்து அவர்கள் சந்தேகப்பட்டுக் கேட்கும் போதெல்லாம், 'ஆனந்தக் கண்ணீர்' என்று பட்டர் சமாளித்தாலும் அவர்கள் சந்தேகம் தீரவில்லை.

ஒருநாள் பட்டரை ,மற்ற பௌத்தர்கள் ஏழாவது மாடிக்குக் கூட்டிபோய் அங்கிருந்து அவரைத் தள்ளி விட்டார்கள். அப்போது அவர், 'வேதங்கள் பிரமாணம் என்பது உண்மையானால் எனக்கு ஒன்றும் நேரக்கூடாது' என்று சூளுரைத்தார். அதன்படி அவருக்கு ஒன்றும் நேரவில்லை. ஆனால், ஒரு சிறு கல் குத்தி அவரின் ஒரு கண் பார்வையிழந்தது. 'எனக்கு ஏன் இந்தக் கதி?' என்று அவர் அரற்றியபோது, ஒரு அசரீரி எழுந்தது. ''குமாரில பட்டா, வேதங்கள் பிரமாணமே என்று நீ கூறியிருந்தால் உனக்கு ஒன்றும் நேர்ந்திருக்காது. மாறாக பிரமாணம் என்பது உண்மையானால் என்று சற்று சந்தேகம் தொனிக்கக் கூறியதால் இவ்வாறு நேர்ந்தது" என்று கூறியது. பக்தியில் சிறு சந்தேகமும் பெரிய இடரைத் தரும்.

இவரைப் பிற்காலத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் வாதில் வென்றார்.

ஆதிசங்கரரின் சீடரான ஸ்ரீ பத்மபாதருக்கு, ஸ்ரீ நரசிம்ம மந்திரம் உபதேசமாகியிருந்தது. அதில் சித்தி அடைய வேண்டி, ஒரு கானகத்தில் தனிமையில் அமர்ந்து அவர் அதை ஜபம் செய்யலானார்.அப்போது அங்கு வந்த ஒரு வேடன் தனிமையில் அவர் அமர்ந்திருப்பதைப் பார்த்து, "ஸ்வாமி, கொடும் மிருகங்கள் உலவும் இந்தக் கானகத்தில் இவ்வாறு அமர்ந்திருக்கக் கூடாது, எதற்காக இவ்வாறு அமர்ந்திருக்கிறீர்கள். போய்விடுங்கள்", என்று கூறினான். பத்மபாதரோ, ஒரு வேடனுக்கு எவ்வாறு புரிய வைப்பது என்று நினைத்து, ' நான் ஒரு அதிசய மிருகத்தைத் தேடி வந்திருக்கிறேன். அது இங்கே தான் இருக்கிறது. அதைப் பிடிப்பதற்காக அமர்ந்திருக்கிறேன் என்றார். வேடன் அதிசயித்து, 'இந்தக் கானகத்தில் எனக்குத் தெரியாத மிருகமா? நீங்கள் அடையாளம் சொல்லுங்கள், நான் பிடித்துத் தருகிறேன்' என்றான். அவன் போனால் போதும் என்று பத்மபாதரும், 'சிங்கத் தலையும் மனித உடலும் உள்ள விசித்திர மிருகம் அது ' என்றார்.

வேடன் 'நான் இன்று சூரிய அஸ்தமனத்திற்குள் அதைப் பிடித்து வருகிறேன்' என்று கூறிவிட்டுத் தேடப் புறப்பட்டான். கானகமெங்கும் தேடியும் கிடைக்கவில்லை. 'அந்தப் பெரியவர் உண்மையைத் தான் கூறுவார்' என்ற நம்பிக்கை அவனுக்கு. ஆதலால் உணவின்றி, நீரும் அருந்தாமல் தேடினான். மாலையும் வந்தது. 'கிடைக்கவில்லை' என்று அந்தப் பெரியவரிடம் எப்படிப் போய்ச் சொல்வேன், அவர் என்மீது நம்பிக்கை வைத்துக் காத்திருப்பாரே!!' என்று வருந்திய அவன், 'அப்படிச் சொல்வதைவிட மரணமே மேல்' என்று காட்டுக்கொடிகளால் கழுத்தை இறுக்கிக் கொள்ள முற்படும் போது, இடி இடிப்பதுபோல் பெருமுழக்கம் கேட்டது. ஆதிமூலமான இறைவன், ஸ்ரீ நரசிம்மர், அவன் முன் தோன்றினார்.

உடனே அவன், " வந்து விட்டாயா, உன்னை எங்கெல்லாம் தேடுவது, உன்னை என்ன செய்கிறேன் பார்!!!, என்று கூறி, கொடிகளால் அவரைக் கட்டினான். 'அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலை' யான ஹிரண்ய சம்ஹார மூர்த்தி ,சாதுவாக அவனுக்குக் கட்டுப்பட்டார். அவரை பத்மபாதரிடம் அழைத்துச் சென்று, 'பாருங்கள், பிடித்து விட்டேன். இப்படி மூக்கைப் பொத்திக் கொண்டு அமர்ந்திருந்தால் எப்படிக் கிடைக்கும்? நான் பிடித்துவிட்டேன். நீங்கள் சொன்ன மிருகம் இதுதானா என்று பாருங்கள்' என்றான். பத்மபாதருக்கு கொடிகளால் கட்டப்பட்டிருக்கும் பகவானைத் தெரியவில்லை. அவர் பிரமித்து நின்றிருந்த போது, நரசிம்மரின் கர்ஜனை கேட்டது. 'முழு நம்பிக்கையுடன் தேடியதால், இவனுக்குக் கட்டுப்பட்டிருக்கிறேன். பக்தியில் சந்தேகம் கூடாது. இவனின் சம்பந்தம் இருந்ததால்தான் என் குரலையாவது கேட்கிறாய், காலம் வரும்போது நான் உனக்குக் காட்சியளிப்பேன் என்று கூறி மறைந்தார். சரணாகத வத்சலனான இறைவன், தன்னையே கதி என்றிருப்போருக்குக் கட்டாயம் அருளுவான்.

ஸ்ரீ நரசிம்மரின் அவதாரத்துக்குக் காரணமே, ஒரு சிறுவனின் பரிபூரண சரணாகதி அல்லவா?.'மார்ஜால நியாயத்'துக்கு மிகச் சிறந்த உதாரணம் பக்தர்களில் சிறந்தவன் என்று போற்றப்படும்பிரகலாதனே.பிரகலாதனின் பெருமையைக் கவிச்சக்கரவர்த்தி கம்பர், கம்ப இராமாயணத்தில் இவ்வாறு கூறுகிறார்.

'ஆயவன் தனக்கு அரு மகன், அறிஞரின் அறிஞன்,
தூயர் என்பவர் யாரினும் மறையினும் தூயான்,
நாயகன் தனி ஞானி, நல் அறத்துக்கு நாதன்,
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன், உளன் ஒரு தக்கோன்

பிரகலாதனின் பரிபூரண சரணாகதி பகவானின் அவதாரத்துக்கே வழிவகுத்தது. அசுர குல வேந்தன் ஹிரண்யகசிபுவின் மகன் பிரகலாதன் கருவிலேயே எட்டெழுத்து மந்திரத்தை முற்றும் உணர்ந்தவன். தன் தந்தையின் நாமத்தையே அனைவரும் உச்சரித்திருந்தபோது, உலகத் தந்தையாகிய ஸ்ரீமந் நாராயணனின் திருநாமத்தின் பால் அளவிலாத பற்றுக் கொண்டிருந்த பிரகலாதன், தன் குருகுலத்தில் நாராயணனின் நாமத்தின் பெருமையைக் கூறுவதை, கம்பர்,

காமம் யாவையும் தருவதும், அப் பதம் கடந்தால்,
சேம வீடு உறச் செய்வதும், செந் தழல் முகந்த
ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும், ஒருவன்
நாமம்; அன்னது கேள்: நமோ நாராயணாய!

என்று அழகுறக் கூறுகிறார். தன் தந்தை தன்னைப் பல துன்பங்களுக்கு ஆட்படுத்திய போதும் இம்மியும் குறையாத இறைபக்திச் செல்வம் அவனுக்கு . இறுதியில், 'எங்கிருக்கிறான் உன் ஹரி?' என்று தந்தை வினவ, சிறிதும் சந்தேகம் இன்றி,

சாணிலும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன்; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத் தன்மை
காணுதி விரைவின்" என்றான்;

ஸ்ரீ எம்பெருமான், தன் உத்தரீயம்(அங்க வஸ்திரம்) நழுவிக் கீழே விழுவது அறியாமல் பூலோகத்துக்கு விரைந்து வந்த தருணங்கள் இரண்டு. ஒன்று, கஜேந்திரன் என்ற யானையின் குரல் கேட்டு. இரண்டாவது, பிரகலாதனுக்காக.

ஹிரண்யகசிபு விசித்திர வரங்கள் பல பெற்றிருந்தான். தனக்கு, மனிதனாலோ, மிருகத்தாலோ மரணம் ஏற்படக்கூடாது. அது போல், வீட்டின் உள்ளேயோ, வெளியேயோ, பூமியிலோ, ஆகாயத்திலோ, பகலிலோ, இரவிலோ, எந்த வித ஆயுதத்தாலோ மரணம் கூடாது என்பது அவன் வரம்.

இறைவன் வெகுவேகமாக பூலோகம் வந்தார். எந்தத் தூணை அவன் பிளப்பான் என்று அறிந்திருந்தாலும், எல்லாத் தூணிலும் ஆவிர்பவித்தார். கடும் கோபம்,சீற்றம் எல்லாம் சேர்ந்து, ஹிரண்யன் தூணைப் பிளந்த போது, அதைவிட,ஆயிரமாயிரம் மடங்கு ஆற்றலுடன், பெரும் சினமே உருவெடுத்தாற்போல்,

திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, செங் கண் சீயம்.

ஹிரண்யனோடு போர்புரிந்து வென்றார். அவன் வரத்தின்படி, மனிதனுமல்லாத, மிருகமுமல்லாத நரசிம்ம உருவில், வீட்டின் உள்ளேயும் வெளியேயும் அல்லாத, வாசற்படியில் அமர்ந்து, பூமியிலோ ஆகாயத்திலோ அல்லாமல் தன் மடியில் அவனை வைத்து, பகலும் இரவும் அல்லாத சந்தியாவேளையில் தன் நகங்களையே ஆயுதமாகக் கொண்டு அவனுக்கு முக்தி கொடுத்தருளினார்.பின் கோபம் தணிந்து, பிரகலாதனின் குலத்தினரைக் இனிக் கொல்லுவதில்லை என வரமளித்தார்.

கொல்லேம், இனி உன் குலத்தோரை, குற்றங்கள்
எல்லை இலாதன செய்தாரே என்றாலும்; (கம்ப இராமாயணம்)

அதனாலேயே, பிரகலாதனின் பேரனான, மஹாபலியை, தன் திருவடியைத் தலையில் வைத்து பாதாள உலகத்துக்கு அனுப்பினார்.

மார்ஜால நியாயத்துக்கு இன்னொரு உதாரணத்தையும் பார்க்கலாம்.

அங்கயற்கண்ணியும் ஐயனும் ஆறாறு மாதம் அரசாட்சி செய்யும் அழகுமிகு மதுரை. வரகுண பாண்டியன் அரசாட்சியில் மாதம் மும்மாரி பொழிந்து மக்கள் நல்வாழ்வு வாழ்ந்திருந்த காலத்தில், பொல்லாத வேளை, ஹேமநாத பாகவதர் உருவத்தில் மதுரையில் நுழைந்தது. அரசவையில் தன் இசைமழையைப் பொழிந்து, அதன் காரணமாக‌, மன்னனும் மற்றவரும் இன்புற்றிருந்த போது, ஹேமநாதன், பாண்டிய நாட்டுப் புலவர்களை இசைவாதுக்கு அழைத்தான். தான் தோற்றால், தானும் தன் இசைத் திறமையும் பாண்டியநாட்டுக்கு அடிமை எனவும், வென்றால், பாண்டிய நாடே தனக்கு அடிமை எனவும் பந்தயம் வைத்தான்.

அரசன் திகைத்தான். எனினும் ஒப்புக்கொண்டான். அரசவைப்புலவர்கள் போட்டியிடத் தயங்கியதால், இறையருள் வெல்லட்டும் என்று, புலவர்கள் ஆலோசனைப்படி, இறையருட் செல்வரான, பாணபத்தரை அழைத்து, பாடப் பணித்தான்.

பத்தர், அதிர்ந்தார். அரசவைப்புலவர்கள் இருக்க, இறைவன் முன் பாடும் தன்னை அழைத்ததற்குக் காரணம், புலவர்களின் யோசனையே என அறிந்து வெகுண்டார்.

மந்திரமின்றி என் பெயரை கெடுக்கும்
யாரென்றே தெரியாத
சில "இருச்சாளி காளை"களை
எந்த தந்திரம் கொண்டு அழிப்பது. (நன்றி. கவிஞர் தனுசு.)

என்று கலங்கினார். முடிவில் அரசன் வேண்டுகோள் ஆணையாக மாறவே, ஒப்புக்கொண்டு இருப்பிடம் ஏகினார். இறையருள் ஒன்றே இதிலிருந்து தன்னைக்காக்கும்.

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமசிவாயவே
என்று தெளிந்து, திருக்கோவில் சென்று, ஆலவாய் அண்ணலின் சன்னதியின் முன் நின்று, மனங்குமுறி,

சோதியனே சுடர்மிகு ஞான வடிவானவனே
வேதியனே வேதமாக நின்றொளிரும் தூயவனே
தேவி ஒருபாகனே அண்டங்களாயிரம் கடந்த
ஆதி அந்தமில்லா அமுதே!

என் துயர் தீர்த்து வைப்பாய்!! என்று கதறினார்!!!.

அமுதே அறிவே ஆனந்தமே - அடியார்
குமுத மனம் துதிக்கும் கோவே
அமு(மிர்)தம் தரவே ஆலகாலம் உண்டே
குமுதவல்லி தொழும் தேவனே! (நன்றி. கவிஞர். திரு.ஆலாசியம் அவர்கள்)

என் குறை தீர்க்க ஓடோடி வாராயோ என்று பொற்றாமரைக் குளத்துப் படிகளில் அமர்ந்து உருகினார்.

'நின்னருளாங்கதியின்றி மற்றொன்றில்லேன்' என்று பரிபூரண சரணாகதி அடைந்த பக்தனின் குரல் கேட்டு, பனிமலைமேல் வாழும் பரமன், பழந்தமிழ்ச்சங்கம் வைத்து வளர்த்த மதுரை வந்தான்.

சொக்க வைக்கும் அழகுடைய சோமசுந்தரர், பக்தனுக்காக, பழைய ஆடை அணிந்து பிறைச்சந்திரனை அரிவாளாக்கி, தன் இடுப்பில் வைத்து, தேய்ந்த செருப்பணிந்து, பழைய யாழ் ஒன்றை மீட்டியவாறு விறகு சுமந்து வந்ததை, பரஞ்சோதி முனிவர், ' திருவிளையாடற் புராணத்தில்'.

அழுக்கு மூழ்கிய சிதர் அசைத்து அவிர் சடை அமுதம்
ஒழுக்கு வான்மதி வாங்கியே செருகியது ஒப்ப
மழுக்கு கனல் வெள் வாய்க் குயம் வலம் படச் செருகி
இழுக்கு தேய் செருப்பு அருமறை கடந்தான் ஏற்றி.

என்று விவரிக்கிறார். இரவு வரை வீதிகளில் அலைந்து பொழுதைக் கழித்துவிட்டு, இரவானதும் ஹேமநாதன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து இறைவன் பாட, அதைக் கேட்ட ஹேமநாதன் அயர்ந்து போய் விசாரிக்க, தான் 'பாணபத்தரி'டம் இசை பயின்றதாகவும், தனக்கு இசை சரிவர வராததால் அவர் சொல்லிக்கொடுக்க மறுத்து விட்டதாகவும் கூறக் கேட்ட ஹேமநாதன், அவரே மறுநாள் தன்னுடன் போட்டியிட்டுப் பாடப் போகிறார் என அறிந்து, தன் இசைத் திறமை முழுவதும் பாண்டிய நாட்டுக்கே அடிமை என்று சாசனம் எழுதிக் கொடுத்து விட்டு இரவுக்கிரவாக ஓடி விடுகிறான்.
நடந்தவை யாவும் தன் கனவில் இறைவன் வந்து சொல்லக் கேட்டு, அரசனிடம் அறிவிக்கிறார் பாண பத்தர். 'நீயே கதி' என்று சரணடைந்த பக்தனுக்காக விறகு சுமந்த இறைவனின் திறம் எண்ணி

தேவனே தேவாதி தேவனே ஆதிமூலனே
மூவரின் அன்னை முழுமுதற் காதலனே
மூவாமருந்தே முப்புரம் அழித்தவனே எப்புறமும்
மேவ எங்கும்நிறை பிரம்மமே! (நன்றி. கவிஞர் திரு. ஆலாசியம்)

உன் திருவருளுக்கு எவ்விதம் நன்றி சொல்வேன்!!! என்று உடலும் உள்ளமும் ஆனந்தமீதுற இறைவனை வணங்கினார்.

முழுமையான பக்தி என்பது இறைவனிடம் நம்மை மனமார ஒப்படைத்தலே. இறைவன் அத்தகைய பக்தியை நமக்கு அருள அவனையே பிரார்த்திப்போம்.

பயின்மதி நீயே பயின்மதிதருதலின்
வெளியும் நீயே வெளியுறநிற்றலின்
தாயும் நீயே சாயைதந்துகத்தலின்
தந்தையும் நீயே முந்திநின்றளித்தலின்

(- தேசிகரின் மும்மணிக்கோவை)

என்று அந்த முழுமுதற் பரப்பிரம்மத்திடம் சரணடைவோம்.

அன்புடன்,

பார்வதி இராமச்சந்திரன்,
பெங்களூரு.
www.aalosanai.blogspot.in
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2


அம்மாஞ்சி
ஆக்கம் கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி

'அம்மான் சேய்'(தாய் மாமனின் மகன்)என்பதுதான் பேச்சு வழக்கில் 'அம்மான்ஜி' என்று மாறிவிட்டது.அதற்கு ஓர் அடைமொழியும் கொடுத்து 'அசட்டு அம்மான்ஜி'என்று சொல்வார்கள்.மாமனின் மகன்க‌ள் எல்லாம் இதற்காகவே ஒரு மானநஷ்ட வழக்குத் தொடரலாம். மாமன் மகன் என்றால் என்ன இளக்காரம் பாருங்கள். அத்தை மகனான அத்தான் ஒசத்தி, மாமன் மகன் மட்டமா?

மாமனின் மகளுக்கு 'அம்மங்கார்' என்று பெயர். அய்யங்காருடன் 'ரைமிங்'கா  இருந்தாலும் இது வேறு; அது வேறு!அதுபோலவே அத்தை மகள் அத்தங்கார்.

இதெல்லாம் 'அவாள்,இவாள்' சொல்லாடல். பொதுவில் பெரும்பான்மை சமூகங்களில்  எப்படி இந்த உறவு முறைகள் விளிக்கப்படுகின்றன என்று எனக்குத் தெரியவில்லை.சொன்னால் கேட்டுக் கொள்கிறேன்.

'இது எதற்கு எங்க‌ளுக்கு? இளைஞர்களான எங்களுக்கு இதில் எல்லாம் அக்கறையில்லை; ஏதோ பழம் பெருச்சாளிகளுக்கான செய்திகள் இவை" என்று ஒதுங்குபவர்களுக்கு 'டாட்டா பை' சொல்லிவிட்டு விஷயத்துக்கு வருகிறேன்.

எனக்கு நான்கு தாய் மாமன்கள். அதில் ஒருவரைப் பற்றி இங்கே  சொல்ல நினைத்தேன். அவருடைய மகனான என் அம்மான்ஜியைப் பற்றியும் சிறிது சொல்வேன். விருப்பமுள்ளவர்கள் தொடருங்கள்.

என் மாமனகள் நால்வரில் இரண்டாவது மாமனைப் பற்றிதான் இந்த ஆக்கம்.

என் சிறு வயது ஆளுமைத் தாக்கங்களில் இந்த மாமனுக்கு முக்கிய இடமுண்டு.

குழந்தையாயிருக்கும் போது என்னுடைய ஒரு லட்சியம் சிதம்பரம் பேருந்து ('கொல்லப் பட இருந்த 35 வயது குழந்தை'என்ற என் ஆக்கம் 24 அக்டோபர் 2010 பார்க்கவும்) ஓட்டுனராகப் போக வேண்டும் என்பதே.அதனால் எப்போதும் பஸ் ஓட்டுவது போல, ஸ்டியரிங்கைக் கைகளில் பிடித்துள்ள பாவனையுடன்  அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு இருப்பேன்.

அப்படி இருக்கும் போது ஒரு நாள் இரவு வேளையில் எங்க‌ள் இல்லத்திற்கு முன்னர் ஒரு ஃபர்கோ லாரி  'க்ரும் க்ரும் க்ரும்'என்ற உறுமலுடன் வந்து நின்றது.லாரி ஓட்டுனர் இருக்கையில் இருப்பவர் முகவரி விசாரித்தார்.

"வாங்க வாங்க என் அப்பாவின் வீடுதான் அது!"என்று வரவேற்றேன்.

"ஏண்டா உன் அப்பா வீடுதான் என்றால், உனக்குத் தனி ஜாகையோ?" என்ற எகத்தாளக் கேள்வியுடன் லாரியின் உறுமலை நிறுத்தி விட்டுக் கீழே குதித்தார்.

அதற்குள் வெளியில் வந்த அம்மா, "வா வா தோதாத்திரி!செள‌க்கியமா? இது உன் மாமாடா! எனக்கு நேர் அண்ணா" என்றார்கள்.

தோதாத்ரிநாதன் என்ற பெயர் நாங்குநேரி பெருமாள் பெயர். நாங்குநேரி நெல்லை நாகர்கோவில் சாலையில் உள்ள ஒரு வைணவத் தலம். தென்கலை வைணவர்களுக்கு முக்கியமான ஊர்.வானமாமலை என்ற வைணவ மடம் அங்கு உள்ளது.

தன் அண்ணனைக் கண்ட மகிழ்ச்சி அம்மாவுக்கு.எனக்கோ 'அவ்ளோ' பெரிய லாரி வீட்டு வாசலில் வந்து நின்றது மிகப் பெரிய மகிழ்ச்சி. வெறுங்கையால் ஈ ஓட்டிக்கொண்டு இருந்தவனுக்கு ஈ ஓட்ட கொம்பு கிடைத்தது போன்ற மகிழ்ச்சி.

உண்மையான ஸ்டியரிங்கைப் பிடித்துக்கொண்டு 'ட்ர் ட்ர் ட்ர்' என்று வாயால் ஒலி எழுப்பியபடி 'ஃபீடா' லாரி ஓட்டினேன். லாரிக்குக் கீழே நின்று கொண்டு என் தெரு நண்பர்களெல்லாம் வேடிக்கைப் பார்த்தது எனக்கு ஏகப் பெருமையாக இருந்தது.

அதில் ஒரு நண்பன் வீட்டில் ஃபியட் கார் புதிதாக வாங்கியிருந்தார்கள்.அந்தக் காரை எங்களைத் தொட விட மாட்டான் அவன். 'போடா போடா' என்று விரட்டுவான்.

ஆனைக்கு ஒரு காலம் வந்தால்  பூனைக்கு ஒரு காலம் வராதா? இப்போ என் முறை. அவனைக் குறிப்பாக 'லாரியைத் தொடாதே'என்று சீண்டினேன். நான் சொல்லும் நண்பர்கள் மட்டும் லாரியில் ஏறலாம். நான் 'டூ கா' விட்டுள்ளவர்கள்  லாரியை விட்டுத் தள்ளி நிற்கணும்.சில பேர் உடனே சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு 'சேர்த்தி' சொல்லி லாரியில் ஏறி விளையாடினார்கள். ஒரே 'அமளி துமளி'தான்.

'லாரி ஒசத்தியா ஃபியட் கார் ஒசத்தியா' என்ற பட்டிமன்ற‌ம் நடத்தி லாரிதான் எல்லா வகையிலும் ஒசத்தி என்று நானே நடுவராக இருந்து தீர்ப்பளித்தேன்.முக்கியமான வாதம் என்ன வென்றால் லாரியைக்கொண்டு ஃபியட் காரைமோதினால் ஃபியட் கார் அப்பளமாகிவிடும் என்பதுதான்.

மாமா அதிகம் பள்ளிப் படிப்பு இல்லாதவர்.வாத்தியார் பிள்ளை மக்கு அல்லாவா? அது இந்த மாமா விஷயத்தில் நிரூபணம் ஆயிற்று.

அக்கால வழக்கப்படி படிப்பு வராதவர்கள் ராணுவத்தில் சேர்ந்து விடுவார்கள். அப்படி ராணுவத்தில் சேர்ந்த மாமா 'டிரக்' ஒட்டப் பயிற்சி எடுத்து, லைசென்ஸ் பெற்று ராணுவத்தில் டிரக் ஓட்டுனராகப் பணி செய்தார்.ராணுவத்திலிருந்து ஒய்வு பெற்று வந்தவுடன் ஒரு ஃபர்கோ லாரியை வாங்கி ஓட்டத் துவங்கினார். 'ஓனர் கம் டிரைவர்!'

அம்மானுக்கு ஏற்ற அம்மாமி எனக்கு. சீதாலட்சுமி மாமி மாமாவைவிட படிப்புக் குறைந்தவர்கள்.பெரும்பாலும் பள்ளிக்கே அவர்கள் போயிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

என் வாழ்நாளில் நான் பார்த்த அன்னியோனியமான தம்பதிகள் அவர்கள்.

கணவன் வாயைப் பார்த்துக் கொண்டு மலைத்து நிற்கும் அம்மாமியின் தோற்றம் இன்னும் என் கண்களில் நிற்கிறது.

மாமா முன்னிரவில் வீடு வந்து சேருவார். அம்மாமி அவருக்கு வென்னீரில் குளிக்க உதவியாக இருப்பார்கள்.குளியல் அறையிலேயே தன் பிரதாபங்களை அள்ளி வீச ஆரம்பித்துவிடுவார்.

"சீதே!உன் தாலிபாக்கியம்தான் நான் இன்னிக்கு உயிரோட வந்தது தெரியுமோ?"என்பார்."ஆமாம்! வாளையார் தாண்டல சீதே, நடுரோட்டில் கொம்பன் ஆனை வந்து வழி மறிக்கிறது. நா அப்படியே லாரி ஹெட் லைட்டை அணைச்சிட்டு பதுங்கிட்டேன். தும்பிக்கையை லாரிக்குள்ள விட்டு துழாவறது. ஒரு முட்டு முட்டு முட்டியிருந்தா அப்படியே விறகு லோடோட  லாரி மலையிலிருந்து உருண்டிருக்கும். எதோ உன்னோட தாலி பாக்கியந்தான் நான் தப்பிச்சு வந்திருக்கேன்"

மாமி தாலியை எடுத்து ஒத்திக்கொண்டு ஏகப்பட்ட தொண்டுகள் அவருக்குச் செய்வார்கள். நான் வளர்ந்த பிறகுதான் மாமாவின் டெக்னிக்கை புரிந்து கொண்டேன். என் மனைவியிடம் அந்த டெக்னிக் செல்லுபடியாகவில்லை. அது செல்லுபடியாக மனைவி படிக்காத நபராக இருக்க வேண்டும்.

ஒரு நாள் மாமாவிடம் வசமாக மாட்டிக்கொண்டேன். 'டேய்! 'சீப்டி'என்றால் என்னடா? என்றார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. '  தெரியலையே'என்றேன். 'இதுகூடத்'தெரியாமல் என்னடா பள்ளிகூடம் படிச்சுக் கிழிக்கிற‌?' என்று போட்டு துளைத்துவிட்டார்.

நீண்ட நேர சீண்டலுக்கு பின்னர் தெரிந்தது அது 'சீ ஃப் டி'  அதாவது கன அடி; 'க்யுபிக் ஃபுட்'

என் அப்பா மாமாவிடம் 'இதுவரை எனக்கு என்னடா செஞ்சு இருக்கீங்க மச்சினன் மாரெல்லாம்?' என்று கேட்டு, மாமா செய்து வந்து கொடுத்த இரண்டு நீள பெஞ்சு (சேர்த்துப் போட்டால் கட்டில்) இதுவரை என் வீட்டில் உள்ளது .அதைப் பார்க்கும் போதெல்லாம் மாமாவும் அப்பாவும் நினைவுக்கு வருவார்கள்.

மாமவின் மூத்த பிள்ளை பொன்னுச்சாமி. 7 மாதத்தில் பிறந்துவிட்டான். அதனால் அவன் நீண்ட வருடங்கள் சாதாரணக் குழந்தைகளைப்போல வளர்ச்சி அடையவில்லை. என்னைவிட 2 வயதுதான் இளையவன். அவனை வாழை மட்டையில் வைத்து வளர்த்தார்களாம்.

அவனுடைய மிகச்சிறிய உடம்பைப் பார்த்து நான் எலிக்குட்டி என்று பயப்படுவேனாம்.சித்தி சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்கள்.

அவனுடைய‌ மொழியை அவன் தாயாரை காட்டிலும் என் சித்திதான் நன்கு புரிந்து கொள்வார்கள்.

'அந்தக்கப் பியா சக்கப்பியா ஆஆ ஆ ஆ!"என்றால் சக்கைப்பழம் அதாவது 'பலாப்பழம் வேண்டும்'என்று பொருள்.

'சா பூ செபா' என்றால் 'சாதம் போடு செம்பா'. சித்தியின் பெயர் செம்பா என்ற செண்பகம்.

கோவையில் தண்ணீர் கஷ்ட காலத்தில் தெருவில் தண்ணீர் வண்டி வரும். அதற்கு அறிவிப்பாளர் என் அம்மான் சேய் தான். 'ண்ணி ண்டி'என்று கத்திக்கொண்டு தெரு முழுதும் ஓடுவான் அப்போது உண்மையாகவே அவனும் தண்ணி வண்டியைப் போலவே உடலில் இருந்து  தண்ணீரை இறைத்துக் கொண்டே ஓடுவான்.

இப்போது 60 வயதைக் கடந்து தனியாளாக தன் வயிற்றுப் பாட்டைத் தானே பார்த்து கொண்டு கோவையில் ஓர் அரசு மருத்துவமனையில் எடுபிடியாக இருக்கிறானாம்.

அம்மாஞ்சியைப் பார்க்க ஆசையாக இருக்கிறது. தேடுவதற்கு எனக்கு உடலில் தெம்பு இல்லையே!

வாழ்க வளமுடன்!
ஆக்கம்:கே முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)  
+++++++++++++++++++++++++++++++++++++++++
3


அம்மனோ சாமியோ!!!
ஆக்கம் தேமொழி

என் சிறு வயதில் ஒரு நாள்... வயது எனக்கு அப்பொழுது என்ன ஒரு எட்டோ அல்லது ஒன்பதோ இருந்திருக்கலாம் என நினைக்கிறேன், சரியாக நினைவில்லை, அந்த நாள் வழக்கம் போல் ஒரு சாதாரண முக்கியத்துவம் இல்லாத நாளாகத்தான் தொடங்கியது.  பள்ளியில் இருந்து திரும்பிய பிறகு வீட்டின் கொல்லைப்புறம் விளையாட ஆரம்பித்தேன்.  உடன் விளையாடியவர்கள் என்னைவிட ஒரு வயது சிறிய தங்கை, ஐந்து வயது சிறிய தம்பி மற்றும்  எங்கள் அண்டை அயல் வீட்டுச் சிறுவர் சிறுமியர் கூட்டம் என ஒரு ஏழெட்டு பேர்.

எங்கள் வீடு தெருவில் கடைசி வீடு.  அதனால் மற்ற வீடுகளை விட வீட்டின் இடதுபுறம் அதிகப்படியான இடம் இருந்தது.  உடன் படிக்கும் தோழர் தோழிகளும் பக்கத்து வீடுகளிலேயே குடியிருந்தது வசதியாகிப் போனது.  பள்ளி முடிந்து திரும்பியவுடன் மீண்டும் ஒன்றுகூடி எங்கள் வீட்டின் குட்டி மைதானத்தில் ஏதாவது விளையாடிக் கொண்டிருப்போம்.  ஒரு சிறிய பள்ளி நடப்பது போல கூச்சலும் களேபரமும் அமர்க்களமாக இருக்கும்.

வழக்கத்திற்கு மாறாக கொல்லைப்புறம் விளையாட சென்றதன் காரணம் அன்று எங்களுடன் விளையாடிய பக்கத்து வீட்டுப் பிள்ளைகளான ராஜேஸ்வரி, ரஞ்சனி மற்றும் ஆனந்த்.  ராஜேஸ்வரி என் வகுப்பு, ரஞ்சனி என் தங்கை வகுப்பு, என் தம்பியும் ஆனந்தும் பள்ளியில் சேரும் வயதைத் தொட்டிருக்கவில்லை.  பக்கத்து வீட்டின் மதில் சுவர் பக்கம் எங்கள் அம்மாவும், பக்கத்து  வீட்டு ராஜேஸ்வரியின் அம்மாவும்  அவரவர் வீட்டில் இருந்தபடி மதில் மேல் சாய்ந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள்.  எங்கள் மீதும் ஒரு கண் வைத்துக்கொள்ளும் பொருட்டு அவர்கள் பார்வையில் கொல்லைப்புறத்தில் அன்று  விளையாட விட்டிருந்தார்கள்.

இவர்கள் பேச்சில் வீட்டில் கைவேலைகளுக்கு உதவியாக இருக்கும் முஷீராவும் கலந்து கொண்டார்கள்.  முஷீரா கல்லுரலில் மாவு ஆட்டும் முன் அரிசி களைந்து கொண்டே பேசிக்கொண்டிருக்க, அவர் மகள் தாவணி போட்ட வயதில் இருந்த நூர்ஜஹான் எங்களுடன் விளையாட வந்துவிட்டாள்.  அவசரத் தேவைக்கு அவ்வப்பொழுது நூரை முஷீரா அழைத்து வருவது வழக்கம்தான்.  அன்று நூர் நடன ஆசிரியையாக மாறி எங்களை கொல்லைப்புற படிக்கட்டில் கொலுபொம்மைகள் போல் வரிசைக்கு மூவர் என நிறுத்தி, கலா மாஸ்டர் அவதாரம் எடுத்து நடனம் சொல்லிக் கொடுத்தாள்.

“மாடி வீட்டுப் பொண்ணு ஒரு ஜோடி தேடும் கண்ணு
ஆடி ஆடி நடக்கும்போது அதிருதடா மண்ணு
ஐயயோ வாட் ஷல்  ஐ டூ, டெல் மீ வாட் டு டூ
அமம்ம்மோ  வாட் கேன்  ஐ டூ, ஐயாம் மாட் ஆஃப்ட்டர் யு
கொக்கர கொக்கோ, கொக்கர கொக்கோ, கோ கோ கோ கோ”
என்ற பாடலைப் பாடி ஆடிக் கொண்டிருந்தோம்.

பெரும்பாலும் டுவிஸ்ட்தான். சின்ன பசங்களுக்குப் பல வார்த்தைகள் தெரியாமல் பாடுவதாக பாசாங்கு செய்தாலும், எல்லோருக்கும் "கொக்கர கொக்கோ" மட்டும் நன்றாகத் தெரிந்தது.  அந்த வார்த்தைகள் மட்டும் உற்சாகம் மீறிட உரத்த குரலில் பாடப்பட்டு, சிரிப்பும் கும்மாளமுமாக கொல்லைப்புறம் அதிர்ந்தது.

பேசிகொண்டிருந்த அம்மாக்கள் குழந்தைகள் கூக்குரலினால் பேச்சு தடைபட்டு, கோபத்துடன் எங்களை அடக்க நினைத்தவர்கள் அதை மறந்து எங்கள் ஆட்டத்தைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தார்கள்.  இதன் பிறகு அம்மாக்கள் தங்களுடைய விவாதத்தின் தலைப்பை மாற்றி தங்கள் மழலைப் பட்டாளத்தின் குறும்புகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.  ராஜேஸ்வரியின் அம்மா அன்று தன் மகள்கள் செய்த குறும்பைப் பற்றி சொன்னவர்கள், இவர்களை குச்சியினால் விளாசினால்தான் அடங்குவார்கள் என்று கூறி  தண்டனையைப் பற்றி எண்ணி தன் அடுத்த கட்ட நடவடிக்கைக்குப் போனார்கள்.

இதற்குள் நூரு நாங்கள் அனைவரும் சூழ்ந்திருக்க வித்தை காண்பித்தாள்.  அவள் கையில், நடுவில் சிறிய சதுரக் கண்ணாடி வைத்து, பக்கத்திற்கு நான்கு நடிகர் நடிகைகள் படம் அச்சடித்த இரண்டு தாள்கள், நட்சத்திரங்களின் படம் வெளிப்புறம் தெரியுமாறு ஒட்டப்பட்ட ஒரு வித்தை சாமான் இருந்தது.  நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களின் பெயராக மஞ்சுளா, ஜெயலலிதா, சிவாஜி, எம்.ஜி. ஆர்., முத்துராமன், வாணிஸ்ரீ, ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா எனச் சொன்னால், அவள் படத்தாள்களை  லாவகமாக மடித்து கண்ணாடியின் பின்புறம் வைத்து நாங்கள் தேர்ந்தெடுத்த நட்சத்திரம் கண்ணாடி வழியே தெரியும்படி  செய்து எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தாள்.

மழலைப் பட்டாளம் வித்தையில் மயங்கியிருக்க, ராஜேஸ்வரியின் அம்மா என்னைக் கூபிட்டு "அம்மாடி இங்க வா, மாடில போயி ஒரு வேப்பங்குச்சி ஒடிச்சிட்டு வா, இன்னைக்கு போடுற போடுல, இவளுங்க இனிமே பம்பரமா நான் சொல்றபடி ஆடனும்", என்றார்கள்.  உடனே அம்மா, "ச்சே..வேணாங்க பாவம்" என்று இடை மறித்துவிட்டு, "ஏய், நீ போகாத" என்று தோழிகளுக்குத் தண்டனை வழங்க குச்சி ஒடிப்பதில் இருந்து என்னைத் தடுத்தார்கள்.  ராஜேஸ்வரியின்  அம்மாவோ "நீ போம்மா" என்று என்னைத் தூண்டினார்கள்.

என் கண்களோ நூரின் வித்தையில் இருந்தது.  பாதியில் விட்டுப் போகவோ மனமில்லை.  இருந்தாலும் குச்சி கொண்டு வந்து கொடுத்துவிட்டால் தொந்தரவு இன்றி வித்தை பார்க்கலாம் என்று எண்ணி, பள்ளியில் வந்து இன்னமும் மாற்றாத நீல-வெள்ளைச் சீருடையுடன், மடித்துக் கட்டப்பட்ட இரட்டை சடைகளில் ஒன்று வால் போன்று அவிழ்ந்து தொங்க மாடியை நோக்கி ஓடினேன்.  எங்கள் வீட்டின் முன்புறம் இரு பெரிய வேப்ப மரங்கள் வளர்ந்து, வளைந்து மொட்டைமாடியில் தலைக்கு  மேல் பந்தல் போட்டிருக்கும்.  அதனால் சிறுவயதினரும் சுலபமாக அதை எட்ட முடியும்.

நானும் மொட்டைமாடியின் அறைக்கதவைத் திறந்து சென்று ஒரு குச்சியும் ஒடித்துக் கொண்டு வந்துவிட்டேன்.  ஆனால் மொட்டைமாடிக்கதவை திறப்பதற்கு என்றும் அம்மாவின் சிறப்பு அனுமதி தேவை.  அது நவ்டால், திண்டுக்கல் என்று எந்த ஒரு பூட்டும் போடமுடியாத, சாதாரணக் குமிழ்க் கைப்பிடி வைத்த தாழ்ப்பாள் உள்ள கதவு.  வீட்டில் சிறுபிள்ளைகள் இருப்பதால் அம்மாவிடம் அனுமதி கிடைத்தால் மட்டுமே, அவர்கள் மேற்பார்வையிலோ அல்லது அம்மாவின் நம்பிக்கைக்குரிய  ஆள் என அங்கீகாரம் பெற்றவர் முன்னிலையிலோதான் அந்த சொர்க்க வாசல் திறக்கப்படும்.  ஏதோ ஒரு தர்ம நியாத்திற்குக் கட்டுப்பட்டு நாங்களும் அந்த வயதில் அதைக் கடைபிடித்தோம்.

நான் அவசரமாக திரும்பி வருவதற்குள் வித்தையை முடித்துவிட்டு நூர் தன் அம்மாவிற்கு உதவியாக மாவாட்டப் போய்விட்டிருந்தாள். மற்றவர்களும் வேறு ஏதோ விளையாட ஆரம்பித்துவிட, நான் ஒடித்து வந்த குச்சியை ராஜேஸ்வரியின் அம்மாவிடம் சேர்த்துவிட்டு விளையாட்டில் கலந்துகொண்டேன். அம்மாக்களும் உரையாடல்களைத் தொடர்ந்தார்கள்.  அப்பொழுது திடீரென வார்த்தைகள் குழறிய வண்ணம் பயத்தில் ஒரு கூக்குரல் கேட்டது.  வீட்டின்  பக்கத்தில் உள்ள தெரு தாண்டி அடுத்த வரிசையில் வசிக்கும் லதாவின் அம்மா வானத்தை  நோக்கி கையை விரித்து ஆதிமூலமே எனக் கூப்பாடு போடுவது போல, "ஐயோ புள்ள புள்ள" என்று ஏதோ சொல்ல முயற்சித்தார்கள், ஆனால் பாவம் திகிலில் வார்த்தைகள் கோர்வையாக வரவில்லை. எல்லோரும் அவர் காட்டிய திசையில் நோக்கினால் ...அங்கே என் தம்பி மாடியில்.  மொட்டைமாடியின் பின்புற மற்றும் பக்கவாட்டு கைப்பிடி மதில்சுவர்கள் இணையும் இடத்தில்  உள்ள சமையலறைப் *புகைபோக்கியின் மேல் ஏறி நின்று கொண்டிருந்தான்.

பாவி..எனக்குத் தெரியாமல் என்னைப் பின் தொடர்ந்து வந்து,  எப்படியோ சுவரின் வலையத்தில் வானொலிக்காக நட்டு வைக்கப்பட்ட ஏரியல் கம்பில்  ஏறி, கையகல மதிலிலும் நடந்து, புகைபோக்கியிலும் ஏறி, இமயத்தின் மேல் வெற்றி வாகை சூடி நின்ற கரிகாலன் போல் நின்று கொண்டிருந்தான்.  அவசரம் போலும், ஏனோ கையில் புலிக்கொடியை மட்டும் எடுத்துச் செல்ல மறந்துவிட்டிருந்தான்.  அவன் அங்கு நின்றுகொண்டு விமானத்தில் இருந்தவாறு வெள்ள  சேதத்தைப் பார்வையிடும் அமைச்சர் போல வீட்டின் சுற்றுப்புறத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.  எல்லோருக்கும் அதிர்ச்சி.  அடுத்து என்ன நடக்குமோ, அவன் இன்னமும் நகர்ந்து கீழே விழுந்துவிடுவானோ என அச்சம். இரண்டு பெண்கள் நமக்குப் போதும் என்று அப்பா சொல்ல சொல்லக் கேட்காமல், அம்மா ஆசை ஆசையாக  வேண்டும் என்று மூன்றாவதாகப் பெற்றெடுத்த மகன் அவன்.  அன்று அவன் அவ்வாறு ஒரு 'உயர்ந்த' இடத்தில் இருப்பதைப் பார்த்தும் அம்மாவிற்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போல் இருந்திருக்க வேண்டும்.

அம்மா உடனே சமயோசிதமாக, "அவனோட யாரும் பேசாதீங்க, நகரப் பார்த்தான்னா நில்லுன்னு கத்துங்க" என எங்களிடம் சொல்லிவிட்டு, அவன் கவனத்தைக் கவராமல் இருப்பதற்காக வீட்டின் பின் வாசலைத் தவிர்த்து, வீட்டின் பக்கவாட்டில் உள்ள சந்து வழியாக ஓடி, முன்புற வாசல் வழியாக மொட்டைமாடிக்கு பி. டி. உஷா போல ஓடினார்கள்.  ராஜேஸ்வரியின் அம்மா சுலபமாக மதில் ஏறிக் குதிப்பவர்.  எங்கள் வீட்டிற்கு அவர்கள் வழக்கமாக அப்படித்தான் வருவார்கள்.  அவரும் மதிலை லாவகமாத் தாண்டிக்குதித்து உஷாவைத் தொடர்ந்து ஓடும் ஷைனி ஆப்ரஹாம் போல அம்மாவைத் தொடர்ந்தார்கள்.  இதற்குள் லதாவின் அம்மா, குடத்தில் தண்ணீருடன் சென்ற பெண்கள், பூக்காரி, சைக்கிளில் கோலமாவு விற்றவர், கடைக்குப் போகிறவர்கள், சோன்பப்டி வண்டிக்காரர், வீடு திரும்பும் மாணவர்கள் போன்ற பார்வையாளர்கள் என சிறு கூட்டமே பக்கத்துக்கு தெருவில் நின்று அண்ணாந்து தம்பியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மொட்டைமாடியை அடைந்த அம்மா சத்தமில்லாமல் பையப் பைய அடியெடுத்து வைத்து தம்பியை பின்புறமாக நெருங்கினார்கள்.  முதுகுப் பக்கம் எக்ஸ் போல உள்ள சஸ்பெண்டார்  வைத்த  கால்சட்டை மட்டுமே தம்பி அணிந்திருந்தான்.  தம்பியின் கால்சட்டையின் முதுகு வாரை அம்மா கபால் எனப் பிடித்ததுத் தூக்கியதும், அவன் பயத்தில் அந்தரத்தில் நீந்துவது போல் கை கால்களை உதைத்துக் கொண்டு வீரிட்டு அழ ஆரம்பித்தான்.  அதுவரை மூச்சைப் பிடித்துக் கொண்டு அசையாமல் இருந்த அனைவரும்,  "நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாம்" எனத் தம்பி பாடியது போல் உடனே அசைய ஆரம்பித்தோம்.  தெருவில் போனவர்கள் பிள்ளை பெற்றும் வளர்க்கத் தெரியாத அம்மாவின் துப்புக் கெட்டத்தனத்தை விமரிசித்த வண்ணம் அம்மாவின் மேல் வசை பாடியவாறு கலைந்து சென்றார்கள்.  சிறுவர் சிறுமியர் நாங்களும் வீட்டின் குறுக்கே புழுதி நிறைந்த கால்களுடன் தட தடவென ஓடி மாடியை அடைந்தோம்.

தம்பி எப்படி மாடிக்கு வந்தான்? யார் மொட்டைமாடிக் கதவைத் திறந்தது? என்று அம்மாவின் மூளை துப்புத் துலக்க ஆரம்பித்தது.   அடுத்த வீட்டுப் பிள்ளைகளைத் தண்டிக்க ஒடித்த வேப்பங்குச்சியில் இருந்து உருவிப் போட்ட வேப்பிலைகள் தரையில் சிதறிக் கிடக்க, என்னை சுற்றிலும் என் குற்றத்திற்கான தடயங்களுடன் நான் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தேன்.

என் நிலைமையைப் புரிந்து கொண்ட ராஜேஸ்வரியின் அம்மா தவறு தன்மேல் என்று அப்ரூவராக மாறி என்னை அடிக்ககூடாது என்று வேண்டிக் கேட்டுக் கொண்டார்கள்.  அம்மாவும் மரியாதையின் பொருட்டு சரி ...சரி என்று சொல்லி அவரைச் சமாதானப்படுத்தி அவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.  பின்னர் "அடுத்தவங்கள அடிக்க குச்சி ஒடிக்கிறையா  நீ" என்று கூறி அதே வேப்பமரத்தில் இருந்து குச்சியை ஒடித்து எனக்கு அம்மா பூசை நடத்தினார்கள்.  சாமியாடிக்குதான் வழக்கமாக வேப்பிலை அடிப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.  அன்று முதன் முறையாக சாமியாடியே வேப்பிலை அடித்தார்.

[* இந்த விளக்கம் புகைபோக்கி என்னவென்று தெரியாத இந்தக்காலத்து எக்சாஸ்ட் விசிறி உபயோகிக்கும் மக்களுக்கு: ஒரு காலத்தில் தமிழகம் விறகு அடுப்பை விடுத்தது மண்ணெண்ணெய், எரிவாயு அடுப்புகளுக்கு மாறிக்கொண்டிருந்தாலும், சமையல் மேடைக்குமேல், மேல் சுவரில் இருந்து மேல் கூரையின் ஒரு ஓட்டை வழியே சமையலறைப் புகையை வெளியேற்ற வடிவமைக்கப்பட்ட கட்டிடக்கலை அமைப்புதான் இந்த புகைபோக்கி என்பது. மொட்டைமாடியில் அது மூன்றடிக்கு  மூன்றடி அல்லது அதற்கும் குறைவான ஒரு மேடைபோல் இருக்கும்.  பக்கவாட்டில் புகை வெளியேற செங்கல் அளவில் பல ஓட்டைகளும் இருக்கும்.  மொட்டைமாடியில் இருந்து, "அம்மா, அம்மா நான் ஐய்யப்பு  பட்டத்த டீல் போட்டு வெட்டிடேன்மா" என்று சமயலறையில் இருக்கும் அம்மாவுடன் அந்த ஓட்டைகள் வழியே கூவித் தொடர்பு கொள்ளமுடியும்.  உடனே அம்மாவும், "எருமை மாடு, எருமை மாடு, எத்தன வாட்டி சொல்றது உனக்கு புகைபோக்கி வழியே கத்தாதேன்னு, இங்க காய்ச்சிற பால்ல கரி உழுவுது பாரு" என்று ஆசீர்வதிப்பதும் அதன் வழியே உடனே கேட்கும்] 


http://youtu.be/YPeqKpTI63E
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4


கடலம்மா!
ஆக்கம் தனுசு

கடல்வாணியே - நீலக்
கடல்வாணியே
என்னை தாலாட்டும் கலைவாணியே
என்றென்றும்  தோள்மீது கைபோட்டு வாநீயே.

சமுத்திரதேவியே என் கருத்தம்மா
கடல்ஜாதி உயிர்களுக்கு தெய்வம் நீயம்மா
உன்னை போற்றவந்தேன்  தனிமையிலே
உன் அழகோ எக்காலமும் தளிர் மயிலே.

நீ அதிகாலையில் அமைதியின் அழகு
அந்திமாலையில் அலையோடு அழகு
நள்ளிரவில் ஆர்ப்பரிப்போடு  அழகு
நெடும் பயணத்தில் நம் நட்பும் அழகு.

கண்விழித்தால் கை நீட்டி அழைப்பவளே
துயில் கொண்டால் தூளியாய் அசைபவளே-உன்னை
நுரையோடு பார்த்தாலும் சலிப்பதில்லை
பெரும் குறையோடு இருந்தாலும் புளிப்பதில்லை

தூதின்றி வருபவளே
துணையாக இருப்பவளே
தெம்மாங்கு  படிப்பவளே
என் கவிதைக்கு அரங்கேற்ற மேடை அமைத்தவளே

நிலவோடு நான்பேச
நின்றென்னை ரசிப்பவளே
விண்மீனை நான் பாட
அலையடித்து ஆட்டம் போட இசையாக சேர்பவளே.

என் கண்பார்த்து களைப்பாற
மீன்குஞ்சை மேய்ப்பவளே
வெண்பாம்பை வரவழைத்து
சுறாவோடு இறாவையும் விளையாட வைப்பவளே

இத்தனை தந்தென்னை காப்பவளே - இனி
எத்துனை நான் இங்கே கேட்பது?
என் உடல் பொருள் ஆவி அத்தனையும்
உன் தடம் அருள் தூவி நிற்பதன்றோ.
.-தனுசு- 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
5
இந்தியாவில் மட்டுமே இது நடக்கும்
ஆக்கம்.ஜி.ஆனந்தமுருகன்

1

2

3


 4

 5

 6

7

 8

9

10

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

74 comments:

  1. அரியும் அரனுமாக இருவரும் ஒன்றாகி ஒருவராக வந்திங்கே அருள்பாலிக்கிறார்கள்.
    எத்தனை பெரும் பகுதிகளைப் பற்றிய ஆய்வுத் தொகுப்பு...
    அற்புதம் அற்புதம் அருமை. எனது வேண்டுகோளை செவி மடுத்தி இத்தனை அற்புதம் செய்த தங்களுக்கு நன்றிகள் பல சகோதரியாரே!

    கம்பனையும், பரஞ்ஜோதியாரையும் மாலையாகத் தொடுத்து அதற்கு எனதுப் பாடல்களையும் நார்கலாக்கி (இதுவே பெரும் பாக்கியம் என்பதால் இப்படிக் கூறி ஆனந்தம் அடைகிறேன்) அங்கே அரியையும், அரனையும் மாலையில் இருக்கும் மலர்களின் வண்ணமும் வாசமுமாக ஆக்கி அற்புதமாக வடித்த அருமையானக் கட்டுரை.

    ////இவரைப் பிற்காலத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் வாதில் வென்றார்.///
    இந்த வாதில் நடுவராக இருந்தவரைப் போல் தான் வருகாலத்தில் யாவரும் வரவேண்டும் என்று தான் மஹாகவி எத்தனையோப் பாடல்களையும் பாடியும் சென்று இருக்கிறான்.

    பூர்வமீமாம்சை, உத்ரமீமாம்சை பற்றிய ரத்தினச் சுருக்கம்...
    பக்தியின் சிரத்தை / வைராக்கியம் எத்தனை உயர்வானது என்பதும்...
    அப்பப்பா எத்தனை தகவல்கள் நவரத்தினமாக ஜொலிக்கிறது என்றால் அது மிகையாகாது...

    அருமையானப் பதிவு,இது போன்று தொடர்ந்து பல ஆராய்சிக் கட்டுரைகளை எழுத வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் சகோதரியாரே!

    பகிர்விற்கும், பதிவிட்ட ஆசிரியருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

    ReplyDelete
  2. எனது ஆக்கத்தை வெளியிட்ட வாத்தியார் அவர்களுக்கும் படிக்கின்ற வாசகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. எனது வலைப்பூவின் முகவரிக்கு சுட்டி வெளியிட்டமைக்கு நன்றி. ஆனால் அதில் ஒரு இடைவெளி அதிகமாக இருப்பதால், வலைப்பூவின் முகவரியோடு, %20 என்று வருகிறது. என் வலைப்பூவின் முகவரி www.aalosanai.blogspot.in. நன்றி.

    ReplyDelete
  3. ஜி ஆலாசியம் said...

    //எனது வேண்டுகோளை செவி மடுத்தி இத்தனை அற்புதம் செய்த தங்களுக்கு நன்றிகள் பல சகோதரியாரே!//

    நான் தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். தங்கள் யோசனையே இந்த தொகுப்பிற்கு முதல் தூண்டுகோல். தங்களது ஆக்கங்களே என் போன்றவர்களுக்கு வழிகாட்டி. தங்கள் பாராட்டிற்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
  4. //இவரைப் பிற்காலத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் வாதில் வென்றார்.///
    இந்த வாதில் நடுவராக இருந்தவரைப் போல் தான் வருகாலத்தில் யாவரும் வரவேண்டும் என்று தான் மஹாகவி எத்தனையோப் பாடல்களையும் பாடியும் சென்று இருக்கிறான்.//

    சகோதரர் தயவு செய்து மன்னிக்க வேண்டும். தாங்கள் மண்டனமிச்ரரைச் சொல்கிறீர்கள். அவர் மனைவி சரசவாணி என்ற பெயருடைய சரஸ்வதியின் அம்சம்.

    குமாரில பட்டரை ஸ்ரீஆதிசங்கரர், துஷாக்னி பிரவேசத்தில் (தலைக்குக் கீழ் உமியால் மூடி, அடியில் தீ வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக வெந்து உயிர் துறப்பது) சந்தித்தார். . இந்த தண்டனையை, தன் மதத்துக்காகப் பிரசாரம் செய்ய என்றாலும், பௌத்தர்களை ஏமாற்றியது பாவம் என்பதால் அதற்குப் பிராயச்சித்தம் செய்யத் தேர்ந்தெடுத்தார் குமாரில பட்டர். அந்த நிலையிலும் வாதத்திற்குச் சம்மதித்து, முடிவில், ஸ்ரீ ஆதிசங்கரரின் கொள்கைகளை ஒப்புக் கொண்டு, தான் தேஹ விநியோக சமயம் நெருங்கி விட்டதால், மற்றொரு குருவான, மாகிஷ்மதி நகரத்தில் வசித்து வந்த மண்டனமிச்ரரை சந்தித்து வாதில் வெல்லுமாறும் அவ்வாறு செய்து விட்டால், ஞானமார்க்கத்தைப் பரப்புவதற்கு தடையொன்றும் இராது என்று கூறி அனுப்பினார். மீண்டும் தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
  5. அன்பே கடவுள் .

    பக்தி முழுமையாக இருக்க வேண்டும் .அதனை ஆராயக் கூடாது. பக்தியில் சந்தேகம் கூடாது

    இந்த கருவை வைத்து,மதுரையில் வந்து இறங்கிய இறைவன் திருவிளையாடல் நடத்தியது போல், பட்டர் கதை, நரசிம்மர் கதை, பிரகலாதனின் கதை, என்று A. P நாகராஜனின் பக்திப் படம் போல் புரியும் தமிழில் எழுதி பட்டையை கிளப்பி விட்டீர்கள்.

    சிந்து பைரவி படத்தில் , சிவக்குமார் சமஸ்கிருத பாடல்களைப் பாட, வந்திருக்கும் பார்வையாளர்கள் கொட்டாவி விடுவாரகள், சுகாசினி இடையில் எழுந்து ,நானொரு சிந்து, காவடி சிந்து, என்று தமிழில் பாட கைதட்டல் அள்ளும் ,அதற்கு ஈடாக நானும் உங்களின் உண்மை பக்தியை படிக்கையில் மேஜையை தட்டினேன்.

    மார்ஜால நியாத்தை எழுதுகையில், உண்மையான திருவிளையாடலை உங்கள் கை ஆக்கத்தில் கொண்டு வந்தது, கூடுதல் சிறப்பு.

    அதில் நான் எழுதிய நான்கு வரிகளை 'பானபத்தருக்கு "போட்டு துவக்கி வைத்தது என்ன சொல்ல ,சொல்ல வார்த்தைகள் இல்லை.

    விறகு காரனாக வரும் இறைவன் ,
    ஹேமநாத பாகவதருக்கு பாடம் சொல்ல பாடும் பாடலான

    ஆ.......அ....ங்.....யா.......
    ஹா....ஆ...ங்.....யா.......
    ஆ...ஆ...ஆ..............
    பாட்டும் நானே பாவமும் நானே
    பாடும் உனைநான் பாட வைத்தேனே ....

    என்று வாசலின் திண்ணையில் அமர்ந்து பாடும் 'திருவிளையாடல்" படத்தின் பாடலையும் காணொளியாக சேர்த்திருந்தால் இன்னும் உச்சத்திற்கு போய் இருக்கும் இன்றைய உங்கள் ஆக்கம் .

    அருமை, அருமை பார்வதி.

    குறிப்பு;அய்யா அவர்களின் கவனத்திற்கு "பாட்டும் நானே பாவமும் நானே " பாடலின் காணொளியை சேர்த்து விட முயற்சிக்கவும்.

    ReplyDelete
  6. திரு.கே.எம்.ஆரின் அனுபவப் பகிர்வு அழகு. எழுத்தாக்கம் அருமை. மதுரை வட்டார வழக்கில் தாய் மாமனும் மாமா, அவர் மகனும் மாமா. நாத்தானாரைப் பெயர் சொல்லி அழைப்பது மரியாதைக் குறைச்சலாகக் கருதப்பட்ட காலம் என்பதால், என் பாட்டி, அத்தைப் பாட்டியை 'அம்மங்காரே' என்றுதான் அழைப்பார்.

    திருமணமான புதிதில் என் கணவரை 'அம்மாஞ்சி' என்றழைக்கப்போய் (அவர் என் மாமா மகன் முறை) அவர் தலையிலடித்துக் கொண்டு, ' பேர் சொல்லியே கூப்பிடு' என்றார்.

    ReplyDelete
  7. அன்பான அம்மாஞ்சிக்கு அன்புடன் kmrk வின் நெஞ்சில் நிறைந்த ஏக்கங்கள் அருமை.

    நீங்கள் லாரி ஒட்டியது போல் நானும் நானும் செய்திருக்கிறேன் .

    மாமி செய்யும் தொண்டுக்காக,உங்களுடைய டெக்னிக் எடுபடாதது போல் இப்போது உள்ள வர்களிடமும் இதுபோன்ற டெக்னிக் எடுபடுவதில்லை . நம்முடைய பேச்சை நம்புவதில்லை காலம் முத்தி போச்சு.

    இதுபோன்ற ஆக்கங்களை படிக்க எங்களுக்கும் ஆசையாய் இருக்கு

    ReplyDelete
  8. கிருஷ்ணன் சார் இளமை நினைவுகளை கோர்த்து சமைத்திருக்கிறீர்கள்...
    லாரிக் கட்சிகள் சுவாரஷ்யம் இருந்தும் கதையின் முடிவில் கூறியது மனது கனத்தது.
    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  9. ///சகோதரர் தயவு செய்து மன்னிக்க வேண்டும். தாங்கள் மண்டனமிச்ரரைச் சொல்கிறீர்கள். அவர் மனைவி சரசவாணி என்ற பெயருடைய சரஸ்வதியின் அம்சம்.////
    அச்சோ ஏன்? பெரிய வார்த்தை எல்லாம் எதற்கு.
    உண்மையில் அவரின் பெயர் சரியாக ஞாபகம் இல்லை சகோதரியாரே:):)
    இருந்தும் அடுத்த தங்களின் ஆக்கம் இந்தக் கருத்துக்களையும் தாங்கி வரும் என ன்புகிறேன்.
    நன்றிகள் சகோதரியாரே!

    ReplyDelete
  10. தேமொழியின் பிள்ளை பிராயம் ,மல்லிப் பூவாய் மனத்தது.

    கரிகாலன், புலிக்கொடியின் மறதி, உஷாவின் ஓட்டமும், ஷைனி ஆப்ரஹமின் தொடர் ஓட்டமும், திருவிளையாடல் பாடலும் நல்ல உதாரணத்தோடு வந்தன.

    வேப்பிலையும் இனித்தது

    ReplyDelete
  11. என்னுடைய கவிதையை வெளியிட்ட அய்யா அவர்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  12. ஆனந்த முருகனின் ஆல்பம்

    1 . வழக்கம் போல் பெண்களுக்கே இன்றும் முன் உரிமை

    2 . உஷாறையா உஷாரு -
    பூட்டோட சாவி இருக்கும் இடம் அரைஞான் கயிறுக்கு கிழேயா?

    3 . பொன்னையும் தூக்கிக்கிட்டு சீரையும் அள்ளிக்கிட்டு வருகிறார்"பாத்திரக்கடை பிருத்விராஜன்"

    4 . "காமாச்சியே கல்லா நிரப்புவாய்"

    5 . 2020 கனவு நனவாகியது நாம் வளர்ந்து நிறைந்துவிட்டோம் -வருகைக்கு நன்றி நன்றி.

    6 . முதியோர் இல்லத்திலிருக்கும் தாத்தாவுக்கு கொண்டுபோகிறோம்

    7 . லாபமே துணை .

    8 . எங்க A.T.M கார்டு பிரம்பு சைசுலதான் இருக்கும்

    9 . என்னத்த சொல்ல

    10 . ஆரம்பித்த இடத்திலேயே முடிச்சுட்டிங்க -வாழக் .

    ReplyDelete
  13. சகோதரியார் தேமொழி மலரும் நினைவுகள்...
    காட்சிகள் யாவும் அந்த ரசத்தோடு படம் பிடித்துக் காண்பிக்கப் பட்டு இருந்தது...
    சேரன் செங்குட்டுவன் தான் இமயம் வரை வென்று இமய வரம்பன் சேரன் செங்குட்டுவன் என்ற ஞாபகம்... சோழ நங்கை கண்ணகிக்கு கல் கொணர்ந்து சிலை வடித்தானாம்..
    கரிகாலப் பெருவளத்தானும் அப்படிப் புலிக் கொடி நாட்டியதாக இப்போது அறிகிறேன்!? (படித்து இருக்கலாம் மறந்து விட்டது)

    சோழர்கள் கடாரம் வரை வந்தது பற்றிப் படித்தது ஞாபகத்தில் உள்ளது.

    தங்களின் ஆக்கம் அந்தக் கால வீதிகளின் காட்சி அபாரம்... ரசிக்கும் படி இருக்கிறது.
    பகிர்வுக்கு நன்றியும் பாராட்டும் சகோதரியாரே!

    ReplyDelete
  14. ///நீ அதிகாலையில் அமைதியின் அழகு
    அந்திமாலையில் அலையோடு அழகு
    நள்ளிரவில் ஆர்ப்பரிப்போடு அழகு
    நெடும் பயணத்தில் நம் நட்பும் அழகு.///
    என்னை ஆட்கொண்ட வரிகள் அற்புதம் அருமை..
    பாராட்டுக்கள் கவிஞரே!

    ReplyDelete
  15. ஆனந்த முருகன் அவர்களின் படங்கள் வழக்கம் போல் சிரிக்கச் செய்தன..
    நன்றிகள் சகோதரரே!

    ReplyDelete
  16. பெங்களூரு பார்வதி அம்மையாரின் ஆக்கம் படித்து அவருடைய படிப்பின் ஆழமும், அதனைத் தெளிவுற எடுத்துக்கூறும் அவருடைய திறனையும் கண்டு வியந்தேன்.நல்லதோர் ஆக்கத்திற்காக அவருக்குப் பாராட்டுக்கள்.

    வேடன் நரசிம்மரை சிக்கெ'னப்பிடித்து 'எங்கு எழுந்து அருளுவது இனியே!?'
    என்று கேட்காத குறைதான்.நரசிம்மருக்கு ஹிரண்யகசிபுவை வதம் செய்தபின்னர் நீண்ட நேரம் சினம் தணியவில்லை. அவர் சினம் தணிய பக்தரான‌ பிரஹாலாதன் அவ்ர் முன் நின்று துதித்த பின்னரே சாந்தமானாராம்.

    நம்பிக்கையுடன் கிருஷ்ணரைக் கூப்பிட்ட சிறுவனுக்கு கிருஷ்ணர் கண்ணுக்குத் தெரிந்தாராம். அவனுடைய‌ குரு சற்று சந்தேகப்பட்டதால் குருவுக்குக் குரல் மட்டும் கேட்டதாம். நம்பிக்கையுடன் வந்த பால்காரி கங்கையின் மீது நடக்க முடிந்ததாம் அதனை அவளுக்குச் சொல்லிய அந்தணரால் கங்கையின் மீது நடக்க முடியவில்லயாம். இவையெல்லாம் பக்திக்காக மட்டும் பக்தி செய்ய வலியுறுத்திப் பரமஹம்சர் சொன்னா கதைகள்.

    பார்வதி அம்மையார் மேலும் பல நல்ல ஆக்கங்கள் தர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  17. என் 'அம்மாஞ்சி' ஆக்கத்தை ஏதோ ஒரு அசட்டு அம்மாஞ்சியின் பிதற்றல் என்று தள்ளிவிடாமல் வெளியிட்ட ஐயாவுக்கும்,பொறுமையுடன் படிக்க இருக்கும் அனைத்து தோழர்கள் தோழியர்களுக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  18. தேமொழியின் சிறு வயது நினைவுகள் நல்ல தேர்ந்த எழுத்தாள‌ர் எழுதியதைப் போல அருமை. அந்தக் காலப் படங்களில் சண்டைக் காட்சிகளில் கூட காமெடி நடிகர் தானும் காமெடியாகச் சண்டை போடுவதைக் காண்பிப்பார்கள் .இப்போது போல ரத்தம் சொட்டச் சொட்ட அடிப்பதெல்லாம் கிடையாது. அதுபோல தேமொழியும் திகில் நிறைந்த சூழலிலும் நகைச்சுவையை விடாமல் சொல்லியுள்ளது படிக்க‌ இனிமையாக உள்ளது.

    புகைபோக்கி இன்று வரை இங்கிலாந்தில் வழக்கத்தில் உள்ளது. அங்கு இன்னமும் குளிருக்கான தணுப்புக்கு விற‌கு பயன் பாட்டில் உள்ளது. எனவே வீடுகளில் புகை போக்கி அங்கே அவசியம்.

    ReplyDelete
  19. தேமொழியின் சிறுவயது அனுபவம் நானும் அங்கிருந்தது போல் ஒரு உணர்வை ஏற்படுத்தியது. ' புகை போக்கி' எலக்ட்ரிக் சிம்னியாக மாறிவிட்ட காலத்தில் அது குறித்த பகிர்வுக்கு நன்றி( நாங்களும் புகைபோக்கியைத்தான் அம்மாவுடனான தகவல்தொடர்பு சாதனமாக உபயோகித்து அர்ச்சனை பெறுவோம்).

    //இமயத்தின் மேல் வெற்றி வாகை சூடி நின்ற கரிகாலன் போல் நின்று கொண்டிருந்தான். அவசரம் போலும், ஏனோ கையில் புலிக்கொடியை மட்டும் எடுத்துச் செல்ல மறந்துவிட்டிருந்தான்.//

    உங்கள் இயல்பான நகைச்சுவை ஊடாடியது அழகு.

    //"அடுத்தவங்கள அடிக்க குச்சி ஒடிக்கிறையா நீ" என்று கூறி அதே வேப்பமரத்தில் இருந்து குச்சியை ஒடித்து எனக்கு அம்மா பூசை நடத்தினார்கள்.//

    கொஞ்சம் கூட 'காம்ப்ரமைஸ்' செய்து கொள்ளாமல் உண்மையைச் சொன்னதற்கு ஸ்பெஷல் பாராட்டு (இதெல்லாம் அப்போ எல்லாரும் செய்யறதுதான்). ஆனால், எல்லாவற்றிலும் விஞ்சி நின்றது. உங்கள் அம்மாவின் பதறாத, சமயோசிதம் கலந்த, செயல்பாடுதான்.

    ReplyDelete
  20. 1.
    அய்யரின் கடவுள் கருத்தும் பக்தியின் நிலைப்பாடும் வேறானது. பக்தி பற்றி முன்னர் தஞ்சை சகோதரர் அழைத்த வாதம் நினைவுக்கு வர அமைதி கொள்கிறோம். கருத்தேதும் சொல்லாமல்

    2., 3.
    தொடர்ந்து வந்த பதிவுகள் இரண்டும் பதிவரின் மலரும் நினைவாக வந்தமையால் அவர்கள் மகிழ்ச்சியில் புயலடிக்க விரும்பவில்லை..

    4.
    தை, விதை, கவிதை என
    தனுசாரரின் கவிதையில்
    காற்றழுத்த தாழ்வு பற்றி இல்லையே
    அமைதியாய் உள்ள குமரியா..
    அளப்பரித்து ஆராவரிக்கும் அதுவா..
    நீங்கள் இருக்கும் இடத்தில்
    எங்களையும் அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளீர் ஆனாலும் எங்கள் ரசனை வேறு... அதை எதிர்பார்த்தே காத்திருக்கிறோம்

    5.
    வழக்கம் போல்
    வாரி தெளித்துவிட்டார்

    ஆனந்த முருகன்..
    ஆனாலும் சில படங்கள் ஏற்கனவே வந்துள்வையே..

    ஈஸ்டர் வாழ்த்துக்களை
    இன்முகத்கதுடன் வழங்கியபடி..

    ReplyDelete
  21. "கடலோரம் வ்வ்வாங்கிய காற்று..."தனுசுவை கடலைப் பற்றி சிந்திக்கத் தூண்டியுள்ளது போலும். ஆம்! நாம் வாழும் சூழலில் இருந்து கிளம்பும் இலக்கியமே நாளை பேர் சொல்லும். அவ்வகையில் கப்பல் தளத்திலிருந்து கடலைக் கண்டு அவளுக்கு ஓர் வந்தன‌ம் சொல்லியுள்ளது உங்களுடைய நன்றி உணர்வைக் காட்டுகிறது.

    " நெடும் பயணத்தில் நம் நட்பும் அழகு"நம் சூழலை நாம் நட்பாக்கிக் கொண்டு விட்டால் பின்னர் துன்பம் ஏது? தனுசுவுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  22. ஆனந்த முருகனின் படங்களில் 1,5,10 மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  23. //அருமை, அருமை பார்வதி. //

    மிக்க நன்றி சகோதரரே. இந்தக் கட்டுரை எழுதுவதற்குமுன் உங்கள் கவிதையையும் ஏதாவது ஒரு இடத்தில் எடுத்தாள வேண்டும் என்று நினைத்தேன். அண்ணா ஆலாசியத்தின் கவிதைகள் எல்லா நாயன்மார் கதைகளிலும் பொருந்தின. தங்கள் 'வெஞ்சினக் கவிதை' பாணபத்தருக்குச் சரிப்படும் என்று தோன்றியது. மேலும் அழகிய கவிதைகளை தங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

    அலையாடிடும் கடல்வாணியின் அழகு சொல்லும் கவிதைகள் அருமை.
    //இத்தனை தந்தென்னை காப்பவளே - இனி
    எத்துனை நான் இங்கே கேட்பது?//
    கவிஞர் தனுசுவின் கவிதைகள் அடுத்த தளத்திற்குப் போய்விட்டன.
    எத்தனை தந்தாலும் ஈடாகாத சமுத்திரகுமாரியின் சேவைக்குக் கவிதையால் கைம்மாறு செய்திருக்கும் சகோதரரை எத்தனை பாராட்டினாலும் தகும். நன்றி.

    ReplyDelete
  24. என் ஆக்கத்தினைப்பாராட்டிய பார்வதிராமச்சந்திரம், நன்பர் ஹாலாஸ்யம், தனுசுவுக்கு நன்றிகள்.


    //2., 3.
    தொடர்ந்து வந்த பதிவுகள் இரண்டும் பதிவரின் மலரும் நினைவாக வந்தமையால் அவர்கள் மகிழ்ச்சியில் புயலடிக்க விரும்பவில்லை..//

    அப்போ மனதிற்குள் ஏதோ ஒரு புயல் இருக்கிறது. அப்புறம் அமைதி எப்படி....?

    ReplyDelete
  25. ஆனந்தமுருகன் படங்கள் அருமை. குறிப்பாக, 'கவனிக்கிற' படம்.
    சகோதரி தேமொழியிடமிருந்து ,கடைசி படத்துக்கு 'எதிர்ப்பாட்டை' எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  26. //நல்லதோர் ஆக்கத்திற்காக அவருக்குப் பாராட்டுக்கள்.//

    திரு.கே.எம்.ஆர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

    என் வலைப்பூவின் சுட்டி சரியாக இயங்குகிறது. வாத்தியார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
  27. என் படைப்புக்கும் வாரமலரில் வாய்ப்பளித்த வாத்தியாருக்கு நன்றி. என்ன படத்தை தேர்வு செய்வீர்கள் என ஆவலாக இருந்தேன். நான் விவரித்த நிகழ்ச்சியை நினைவுக்கு கொண்டு வரும் படம்தான், நன்றி ஐயா. அத்துடன் மற்ற படங்களும் பொருத்தமாக மனதைக் கவர்ந்தது. அதிலும் அம்மாஞ்சி படம் மிகவும் பொருத்தம்.

    என் ஆக்கத்தை படித்தவர்களுக்கும், ரசித்தவர்களுக்கும், கருத்து சொன்னவர்களுக்கும், அமைதி காத்தவர்களுக்கும் நன்றி.

    இந்த முறை பார்வதியின் ஆக்கத்தில் குறிப்பிடப்பட்ட கஜேந்திரனின் ஆதிமூலமே அலறலும், பாணபத்திரர் திருவிளையாடல் கதையும் என் கட்டுரையிலும் இடம் பெற்றுவிட்டது. இதுபோல் எப்படி நடக்கிறது என்று நான் கொஞ்சம் ஆராய வேண்டும்.

    ReplyDelete
  28. சென்ற வாரமலரில் வெளியான தஞ்சாவூர் ஐயாவின் கதையின் தொடர் போல உள்ளது பார்வதியின் பக்தியின் மேன்மை கட்டுரை.
    பார்வதியின் மூலம் அறிந்துகொண்ட புதிய செய்திகள் மர்க்கட நியாயம், மார்ஜால நியாயம் பக்தி வகைகள்; மற்றும் பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை போன்ற வைதீக பிரிவுகள் பற்றிய செய்திகள். மகாபலி பிரகலாதனின் பேரன் என்பதும் இப்பொழுதான் தெரிகிறது. மண்டனமிச்ரர், அவர் மனைவி சரசவாணி, துஷாக்னி பிரவேசம் என்று மேலும் மேலும் கேள்விப்படாத செய்திகள் பின்னூட்டத்தில். நிறையத்தான் தெரிந்து வைத்திருகிறீர்கள், ஏற்கனவே நான் உங்கள் குண்டலினியைப் படித்துவிட்டு கதிகலங்கிப் போயிருக்கிறேன். என் சிற்றறிவிற்கு புலப்படாத என்னென்னமோ எழுதறீங்கன்னு சொல்லி நானும் மைனரோட சேர்ந்துக்கிறேன்.

    திருவிளையாடல் திரைப்படத்தின் பாணபத்திரர் கண்ணதாசன் பாடல்களைப் பாடினார். பார்வதியின் கட்டுரையில் வரும் பாணபத்திரரோ தனுசு, ஆலாசியம் ஆகியோரின் கவிதைகளைப் பாடி அசத்துகிறார். பார்வதியின் மூளையே மூளை. எப்படி இப்படி தோன்றுகிறது என்று ஆச்சர்யமாக இருக்கிறது. நீயே கதி என்று என்று இறைவன் மேல் சந்தேகம் இல்லாமல் சரணாகதி அடைவதுதான் உண்மையான பக்தி என்று கட்டுரை விளக்கமாக கூறுகிறது, அருமையான கட்டுரை நன்றி பார்வதி (நான் சரியா புரிஞ்சுகிட்டேன்னு நிரூபிக்க என் கடைசி இரண்டு வரிகளே சாட்சி).

    ReplyDelete
  29. ///இதெல்லாம் 'அவாள்,இவாள்' சொல்லாடல். பொதுவில் பெரும்பான்மை சமூகங்களில் எப்படி இந்த உறவு முறைகள் விளிக்கப்படுகின்றன என்று எனக்குத் தெரியவில்லை.சொன்னால் கேட்டுக் கொள்கிறேன்.///

    KMRK ஐயா, நாங்கள் மாமா அத்தை பிள்ளைகளை அத்தான், அத்தாச்சி என்று அழைப்போம். அது அந்தக் காலம். இப்பொழுதெல்லாம் பெயர் சொல்லி அழைப்பதுதான் சுலபமாக இருக்கிறது. அம்மாஞ்சியை சந்தித்த பின் மீண்டும் அதைப் பற்றி எழுதுங்கள். நீங்கள் உங்களுக்குப் பிடித்த நண்பர்களை மட்டுமே சேர்த்துக் கொண்டு லாரி ஒட்டியதை விவரித்தது, அந்த நிகழ்ச்சியைக் கண் முன் கொண்டு வந்துவிட்டது.

    ReplyDelete
  30. "அலைமகள் அன்பில் ஆடியவன் - அந்த
    அன்னையை மார்பில் சூடியவன்
    கலைமணம் மிகுந்திடும் தமிழ் தந்தான்
    கானங்கள் பிறந்திட அருள் தந்தான்"
    என்று அகத்தியர் படத்தில் நாரதர் திருமாலைப் பாடுவதாக ஒரு பாடல் வரும். தனுசுவின் இந்தவாரக் கவிதையைப் படித்த பின் தனுசுவுக்கும் இந்த வரிகள் மற்றொரு வகையில் பொருந்துவதாகத் தோன்றியது.

    "நீ அதிகாலையில் அமைதியின் அழகு
    அந்திமாலையில் அலையோடு அழகு
    நள்ளிரவில் ஆர்ப்பரிப்போடு அழகு
    நெடும் பயணத்தில் நம் நட்பும் அழகு"
    என்ற வரிகள் கடலுடன் உங்களுக்குள்ள நட்பின் ஆழத்தைக் காட்டுகிறது.

    "இத்தனை தந்தென்னை காப்பவளே - இனி
    எத்துனை நான் இங்கே கேட்பது?
    என் உடல் பொருள் ஆவி அத்தனையும்
    உன் தடம் அருள் தூவி நிற்பதன்றோ"
    என்ற வரிகள் உங்கள் வாழ்வு கடலுடன் பின்னிப் பினைந்துள்ளதையும் விளக்குகிறது.

    மேலே குறிப்பிட்ட வரிகள் எனக்குப் பிடித்த வரிகள்.
    உங்கள் வாழ்வாதாரப் பின்னணியைப் பற்றித் தெரியாதவர்களுக்கு இந்தக் கவிதை ஒரு மீனவனின் பாடல் அல்லது ஒரு கடலோடியின் பாடலாகத் தோன்றக் கூடும்.

    ReplyDelete
  31. ஆனந்த முருகனின் படத்தேர்வுகள் வழக்கம்போல் சிரிக்க வைத்தன.
    அதற்கு தனுசுவின் தலைப்புகளும் அருமை...தயிர் சாதத்துக்கு ஊறுகாய் போல (இல்லை பட்டை சாராயத்திற்கு ஊறுகாய் ???)

    நீங்களே சொல்லுங்க, "எனக்கொரு கேர்ள் ஃபிரெண்ட் வேண்டுமடா" என்றுத் தேடித் தேடி தெருத் தெருவாக சுற்றினால் பெட்ரோல் ஏன்தான் செலவாகாது?

    வெற்றி பெற்ற மனிதர்களின் பின்னணியாக உள்ள பெண்கள் புத்திசாலிகள்தான். ஆனால் அப்துல் கலாமின் அம்மா அப்படி கணக்குப் போட்டுதான் பிள்ளை பெற்றார்களா எனத் தெரியவில்லை. அரைடிக்கெட் வயதில் கஸ்தூரிபா காந்தி இப்படி கணக்குப் போட்டபின் திருமணம் செய்து கொண்டார்களா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. மற்றபடி பெண்கள் புத்திசாலிகள் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.
    (என்ன பார்வதி சரியா? )

    ReplyDelete
  32. ///thanusu said... வேப்பிலையும் இனித்தது ///

    உங்களுக்கு இனித்தா?!?!?!
    எது நான் அடி வாங்கியதா?

    ReplyDelete
  33. ///ஜி ஆலாசியம் said... கரிகாலப் பெருவளத்தானும் அப்படிப் புலிக் கொடி நாட்டியதாக இப்போது அறிகிறேன்!? (படித்து இருக்கலாம் மறந்து விட்டது)...///

    எனக்கும் அந்த சந்தேகம் வந்தது, கொஞ்சம் தேடிப் பார்த்துவிட்டுத்தான் எழுதினேன்...

    சயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப் பரணி
    8. இராச பாரம்பரியம்
    இமயத்தில் புலிக்கொடி

    178
    செண்டு கொண்டுகரி காலனொரு காலி னிமயச்
    சிமய மால்வரை திரித்தருளி மீள வதனைப்
    பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற்
    பாய்பு லிக்குறிபொ றித்தது மறித்த பொழுதே. 1

    http://tinyurl.com/78bf962
    &
    http://tinyurl.com/7go5md3

    பாண்டிய மன்னர்களையும் பதினோரு வேளிரையும் வெற்றிகொண்ட கரிகாலனுடைய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணை இவனது காலத்தது ஆகும். இவன் இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்று கூறப்படுகிறது.

    http://tinyurl.com/698juue

    ReplyDelete
  34. ///அப்போ மனதிற்குள் ஏதோ ஒரு புயல் இருக்கிறது. அப்புறம் அமைதி எப்படி....?////

    காற்று வரும் திசையில் தான் புயல் உருவாகும் என தெரியும் தானே.,..

    மனதிற்குள் புயல் இல்லை..
    மயக்கம் கொண்ட சில(ர்) அமைதியை கலைக்கலாம்.
    "எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
    இறுதி வரைக்கும் அமைதி நிலவும்" என்ற கவிஞரின் வரிகளை சுழற்றி

    கலங்காமலிருப்பதுவே
    கடமையாற்றும் பணி என

    உங்களுக்காக ஒரு இனிமையான பாடலை சுழல அனுமதி தாருங்களேன்

    மயக்கமா? கலக்கமா?
    மனதிலே குழப்பமா?
    வாழ்க்கையில் நடுக்கமா?...

    வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல்தோறும் வேதனையிருக்கும்

    வந்த துன்பம் எதுவென்றாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை

    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
    இறுதி வரைக்கும் அமைதி நிலவும்
    (மனதை தொட்ட வரிகள்)

    ஏழை மனதை மாளிகையாக்கி
    இரவும் பகலும் காவியம் பாடு

    நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
    நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

    ReplyDelete
  35. ////தேமொழி said...///ஜி ஆலாசியம் said... கரிகாலப் பெருவளத்தானும் அப்படிப் புலிக் கொடி நாட்டியதாக இப்போது அறிகிறேன்!? (படித்து இருக்கலாம் மறந்து விட்டது)...///

    எனக்கும் அந்த சந்தேகம் வந்தது, கொஞ்சம் தேடிப் பார்த்துவிட்டுத்தான் எழுதினேன்...
    ஆஹா! மேலதிகத் தகவல்களுக்கு நன்றி சகோதரியாரே!

    ReplyDelete
  36. //வெற்றி பெற்ற மனிதர்களின் பின்னணியாக உள்ள பெண்கள் புத்திசாலிகள்தான். ஆனால் அப்துல் கலாமின் அம்மா அப்படி கணக்குப் போட்டுதான் பிள்ளை பெற்றார்களா எனத் தெரியவில்லை. அரைடிக்கெட் வயதில் கஸ்தூரிபா காந்தி இப்படி கணக்குப் போட்டபின் திருமணம் செய்து கொண்டார்களா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. மற்றபடி பெண்கள் புத்திசாலிகள் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.
    (என்ன பார்வதி சரியா? )//

    ஹை, இத... இத..... இதத்தான் நான் எதிர்பார்த்தேன். நன்றி, நன்றி.

    ReplyDelete
  37. //கட்டுரையில் வரும் பாணபத்திரரோ தனுசு, ஆலாசியம் ஆகியோரின் கவிதைகளைப் பாடி அசத்துகிறார்//

    நன்றி தேமொழி. உண்மையில் அந்த இரண்டு சகோதரர்களும் தான் பாராட்டிற்கு உரியவர்கள். முன்பே நான் பின்னூட்டத்தில் கூறியது போல், சகோதரர் ஆலாசியத்தின் கவிதை, இறைவனை போற்றும் வகையில் அமைந்திருந்ததால், குமுறல், கதறல் இறுதியாக உவகை போன்ற எல்லா உணர்ச்சிகளிலும் பொருத்த முடிந்தது. பாணபத்தர், 'சோப்பு', ' பூம் பூம் காளை' என்றெல்லாம் பாட மாட்டேன் என்று அடம் பிடித்தார். அந்த வார்த்தைகளை உள்ளடக்கிய கவிதைகள், இந்த சூழ்நிலைக்கு சிறப்பாகப் பொருந்தின. என்ன செய்வது?. உண்மையில் இவர்கள் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தில் தான் சிரமமின்றி கட்டடம் கட்ட முடிந்தது.

    ReplyDelete
  38. //இந்த முறை பார்வதியின் ஆக்கத்தில் குறிப்பிடப்பட்ட கஜேந்திரனின் ஆதிமூலமே அலறலும், பாணபத்திரர் திருவிளையாடல் கதையும் என் கட்டுரையிலும் இடம் பெற்றுவிட்டது. இதுபோல் எப்படி நடக்கிறது என்று நான் கொஞ்சம் ஆராய வேண்டும்.//

    'க்ரேட் வுமன் திங்க் அலைக்' ஹி....ஹி..... இருந்தாலும் இது ஒருவகையில் 'டெலிபதி' என்று தான் கூற வேண்டும்.

    இந்தக் கட்டுரை நான் எழுதி முடித்துவிட்டு, தொலைக்காட்சியைப் போட்டால், ஒரு சேனலில் சிவாஜி, 'பாட்டும் நானே' பாடிக் கொண்டிருந்தார். 'குண்டலினியைப்' பற்றிய பதிவில் ஸ்ரீ அருணகிரிநாதரின் திருப்புகழைத் தேடிய போது (நாலு சதுர என்ற வரி மட்டும் தான் நினைவில் இருந்தது) கிடைக்கவில்லை. சஷ்டி கவசம் மூன்று முறை சொல்லிவிட்டு, இணையம் திறந்து, வேறு ஏதோ தேடியபோது முன்னால் வந்து குதித்தது. எனவே இதை இறையருள் என்றும் சொல்லலாம்.

    ReplyDelete
  39. கடலம்மா கவிதை நன்றாக உள்ளது.

    ReplyDelete
  40. வணக்கம் ஐயா,
    பார்வதி அவர்களின் பக்தியின் மேன்மை குறித்த ஆக்கம் மிக அருமை...
    ///பக்திஏற்படவும், அந்த பக்தி உறுதியாக, நம்பிக்கையோடு இருக்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்///
    முற்றிலும் உண்மை...அதை தான் அடியார்கள் பலரும் வேண்டுவது...மார்ஜால‌ம் ப‌க்தியையே நானும் இனி வேண்டுவேன்...

    உண்மையான‌ ப‌க்தியின் உன்ன‌த‌த்தை மூன்று வெவ்வேறு க‌தைக‌ளின் வாயிலாக‌ அறிய‌ த‌ந்துள்ளீர்க‌ள்...மீண்டும் ந‌ல்ல‌தொரு ஆன்மிக‌ த‌க‌வ‌ல்க‌ளை ப‌கிர்ந்து கொண்ட‌மைக்கு மிக்க‌ ந‌ன்றி...

    kmrk ஐயா அவர்களின் கட்டுரை "ஜோர்"...
    ///'அம்மான் சேய்'(தாய் மாமனின் மகன்)என்பதுதான் பேச்சு வழக்கில் 'அம்மான்ஜி' என்று மாறிவிட்டது.அதற்கு ஓர் அடைமொழியும் கொடுத்து 'அசட்டு அம்மான்ஜி'என்று சொல்வார்கள்///
    நானும் இன்று தான் 'அம்மான்ஜி' சொல்லுக்கு உண்மையான பொருளை அறிந்து கொண்டேன்...
    ///'லாரி ஒசத்தியா ஃபியட் கார் ஒசத்தியா' என்ற பட்டிமன்ற‌ம் நடத்தி லாரிதான் எல்லா வகையிலும் ஒசத்தி என்று நானே நடுவராக இருந்து தீர்ப்பளித்தேன்.முக்கியமான வாதம் என்ன வென்றால் லாரியைக்கொண்டு ஃபியட் காரைமோதினால் ஃபியட் கார் அப்பளமாகிவிடும் என்பதுதான்///
    வெரி குட் பாய்ன்ட்...சபாஷ்,சரியான தீர்ப்பு...ஹிஹிஹி...

    ///இப்போது 60 வயதைக் கடந்து தனியாளாக தன் வயிற்றுப் பாட்டைத் தானே பார்த்து கொண்டு கோவையில் ஓர் அரசு மருத்துவமனையில் எடுபிடியாக இருக்கிறானாம்.
    அம்மாஞ்சியைப் பார்க்க ஆசையாக இருக்கிறது. தேடுவதற்கு எனக்கு உடலில் தெம்பு இல்லையே///
    'அம்மான்ஜி'யை காண இயலவில்லை என்றாலும் அவரை இன்றும் நினைவில் வைத்து காண ஆவல் கொண்ட தங்களுடைய எண்ணம் நிச்சயம் ஈடேறும்...

    ReplyDelete
  41. தேமொழி அவர்களின் ஆக்கம் சுவையான 'காலப் பயணம்'...வழக்கம் போல தங்களுடைய எழுத்து நடை பயணத்தை இனிமையாக்கி தந்துள்ளது...

    ///இதற்குள் நூரு நாங்கள் அனைவரும் சூழ்ந்திருக்க வித்தை காண்பித்தாள். அவள் கையில், நடுவில் சிறிய சதுரக் கண்ணாடி வைத்து, பக்கத்திற்கு நான்கு நடிகர் நடிகைகள் படம் அச்சடித்த இரண்டு தாள்கள், நட்சத்திரங்களின் படம் வெளிப்புறம் தெரியுமாறு ஒட்டப்பட்ட ஒரு வித்தை சாமான் இருந்தது///
    எப்படி அப்படியொரு வித்தை கண்ணாடி என்று புரியவில்லை...ஆனால் எனக்கும் எங்கோ அறிந்த ஞாபகம்...சரியாக நினைவில்லை...

    ///மழலைப் பட்டாளம் வித்தையில் மயங்கியிருக்க, ராஜேஸ்வரியின் அம்மா என்னைக் கூபிட்டு "அம்மாடி இங்க வா, மாடில போயி ஒரு வேப்பங்குச்சி ஒடிச்சிட்டு வா, இன்னைக்கு போடுற போடுல, இவளுங்க இனிமே பம்பரமா நான் சொல்றபடி ஆடனும்", என்றார்கள்///
    ரசித்து கொண்டிருந்தவருக்கு அப்படி என்ன திடீர் கோபம்?...

    தங்கள் வீட்டில் நடந்ததை போலவே எங்கள் வீட்டிலும் நிகழ்ந்தது...எனக்கும் எட்டு வயது தான் இருக்கும் என்று நினைக்கின்றேன்...நானும் என் அண்ணன் முதல் மாடியின் பால்கனியில் நின்றுக் கொண்டிருந்தோம்...அப்பொழுது டிவி ஆன்டெனாவில் துண்டைப் போட்டு விளையாடிக் கொண்டிருந்த என் அண்ணன் அதில் துண்டு மாட்டிக் கொண்டதால் அதை எடுக்க முயற்சி செய்யவே...பயத்தில் கூச்சலிட்டபடியே அழுதேன்...என் அலறல் சத்தம் கேட்டு என் அம்மா வருவதற்குள் என் அண்ணன் கீழே விழுந்து விட்டார்...விழுந்த இடத்தில் லேசான பின்பு கடவுளின் அருளால் சற்று பலமான‌ காய‌ங்க‌ளுட‌ன் பிழைத்து வ‌ந்தார்...இச்ச‌ம்ப‌வ‌ம் இன்று நினைத்தாலும் என்னுள் அச்ச‌த்தை ஏற்ப‌டுத்தும்...

    த‌ங்க‌ளுக்கே உரிதான‌ ந‌டையில் ர‌சிக்கும்ப‌டியான‌ ஆக்க‌த்தை த‌ந்த‌மைக்கு ந‌ன்றிக‌ள் தேமொழி சகோத‌ரி...

    ReplyDelete
  42. தனுசு அவர்களின் "கடலோரக் கவிதைகள்", இனிமை...

    ///நிலவோடு நான்பேச
    நின்றென்னை ரசிப்பவளே
    விண்மீனை நான் பாட
    அலையடித்து ஆட்டம் போட இசையாக சேர்பவளே///
    மிகவும் அழகான வரிகள் இவை...தாங்கள் சேர்ந்தே பயணிக்கும் 'கடல் வாணி'யின் புகழ்பாடி நன்றியை செலுத்திவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன்...அழகான கவிதையை தந்த தங்களுக்கு நன்றிகள்...

    ஆனந்த முருகனின் படங்களில் பல 'ஃபேஸ்புக்'கில் வலம் வருபவை...
    இதில் முதல் படத்தை போன்று 'மொபைல் ஷாப்'களில்,

    "Avoid Boyfriends;it Save 90% of ur Mobile Balance" என்றும் வைக்கலாம்...ஹிஹிஹி...

    அதைப் போலவே ஆண்கள் தங்களது வெற்றிக்கு பின்னால் இருக்கும் பெண்ணை முன்னால் அடையாளப்படுத்துவதை நினைப்பதும் கிடையாதே!!!...

    ReplyDelete
  43. ஜி ஆலாசியம் said...
    நீ அதிகாலையில் அமைதியின் அழகு
    அந்திமாலையில் அலையோடு அழகு
    நள்ளிரவில் ஆர்ப்பரிப்போடு அழகு
    நெடும் பயணத்தில் நம் நட்பும் அழகு.///
    என்னை ஆட்கொண்ட வரிகள் அற்புதம் அருமை..
    பாராட்டுக்கள் கவிஞரே

    நன்றிகள் ஆலசியம் பதினைந்து வருட நட்பு. அதைத்தான் சொன்னேன்.

    ReplyDelete
  44. அய்யர் said... தனுசாரரின் கவிதையில்
    காற்றழுத்த தாழ்வு பற்றி இல்லையே
    அமைதியாய் உள்ள குமரியா..

    குமரிதான்...
    சாதுவான குமரிதான்,ஆனால்
    மிரட்டினால்(rough-sea)இதயம் தாங்காது.

    அதைத்தான் சுனாமியை யும் சேர்த்து
    "பெரும் குறையோடு இருந்தாலும் புளிப்பதில்லை' என எழுதினேன்

    இரண்டு மீட்டருக்கு மேல் அலை (waves) வந்தால் பனி நிறுத்தம் .மூறு மீட்டருக்கு மேல் வந்தால் உடனடியாக safe ஆன பகுதிக்கு போய்விட வேண்டும் .

    "safety is our top priority" என்பதே Brunei shell company சொல்லும் தாரக மந்திரம்

    ReplyDelete
  45. kmr.krishnan said... கப்பல் தளத்திலிருந்து கடலைக் கண்டு அவளுக்கு ஓர் வந்தன‌ம் சொல்லியுள்ளது உங்களுடைய நன்றி உணர்வைக் காட்டுகிறது.

    " நெடும் பயணத்தில் நம் நட்பும் அழகு"நம் சூழலை நாம் நட்பாக்கிக் கொண்டு விட்டால் பின்னர் துன்பம் ஏது? தனுசுவுக்குப் பாராட்டுக்கள்.

    ஆமாம் கிருஷ்ணன் சார், பல கப்பல்கள் தான் மாற்றமாகுமே தவிர கடல் மாறவில்லை. அவ்வப்போது சிங்கப்பூர் கடல், மலேசியா கடல், இந்தோனேஷியா கடல், தாய்லாந்த் கடல், வியட்நாம் கடல், ஓமன் கடல், துபாய் கடல், கொரியா கடல், ஹாங்காங் என கப்பலின் உள் கட்டமைப்பை inspection செய்ய போனாலும் mobilizations என ஒரு வாரம் பத்து நாட்கள் தங்கி விட்டு புருனிக்கே வந்து விடுவேன்.

    ReplyDelete
  46. Parvathy Ramachandran said... இத்தனை தந்தென்னை காப்பவளே - இனி
    எத்துனை நான் இங்கே கேட்பது?//
    கவிஞர் தனுசுவின் கவிதைகள் அடுத்த தளத்திற்குப் போய்விட்டன.
    எத்தனை தந்தாலும் ஈடாகாத சமுத்திரகுமாரியின் சேவைக்குக் கவிதையால் கைம்மாறு செய்திருக்கும் சகோதரரை எத்தனை பாராட்டினாலும் தகும். நன்றி.

    நன்றி பார்வதி அவர்களே.

    என் தாத்தாவிடம் நிறைய செல்வம் இருந்தது, என் தந்தையின் அஜாக்கிரைதையால் அவரின் உடன் பிறப்புகளிடம் இழந்து விட்டார். சொந்த வீடு கூட இல்லை.. கடன்கள் அதிகமாகி ஏறக்குறைய தலை மறைவு வாழ்கைக்கு உட் பட்டார். எனது படிப்பு பாதியில் நின்றது. மூன்று வீடுகள் தள்ளி இருந்த எனது தாய் மாமன் மட்டும் என் படிப்பின் ஆர்வம் பார்த்து என்னை மட்டும் அவர் வீட்டில் தங்க வைத்து படிக்க வைத்தார்.மாமா வீட்டில் தங்கினாலும் எண்கள் வீட்டிலும் போக வர இருப்பேன் (ஆறாம் அதிபதி ஐந்தில் இருந்தாள் மாமன் வீட்டில் வளர்வான் என்ற குறிப்பு உண்மையா,புதன் ஆட்சியில் இருந்தாள் மாமன் உறவு சிறக்கும் என்பதும் சரி போலிருக்கிறது.)

    ஜீரோவிலிருந்து கூட இல்லை மைனஸ் சிலிருந்து வாழ்கையை தொடங்கினேன். தங்கைகளுக்கு திருமணம் செய்து கொடுத்தேன் இன்று வீடு, கார்கள் நானே நினைத்து பார்க்க முடியாத அளவு வளமுடன் உள்ளேன் .

    முதல் பணியே கப்பல் தான் . பயமுறுத்தினார்கள் என்னை. துணிந்தே வந்தேன்.

    ,காக்கும் கடலுக்கு நன்றி சொல்ல வந்து பழைய நினைப்புகள் வந்துவிட்டது.

    ReplyDelete
  47. ///அதைத்தான் சுனாமியை யும் சேர்த்து
    "பெரும் குறையோடு இருந்தாலும் புளிப்பதில்லை' என எழுதினேன்///

    அது குறையல்ல
    அதுவே இயல்பு..

    ஒவ்வொருவருக்கும் உள்ள
    மற்றொரு முகம் அது எப்படி குறையாகும்?

    (நீங்கள் சொல்ல வருவது இதைத்தான் என புரிந்தாலும்)

    அதனால் தான் அதை வெளிப்படுத்தி இல்லை என்று கருத்து சொன்னோம்.

    உணர்வுகளை பகிர்ந்து கொண்டமைக்கு
    உளமாற வாழ்த்துக்கள் நன்றிகள்..

    ReplyDelete
  48. ///ஜீரோவிலிருந்து கூட இல்லை மைனஸ் சிலிருந்து வாழ்கையை தொடங்கினேன். தங்கைகளுக்கு திருமணம் செய்து கொடுத்தேன் இன்று வீடு, கார்கள் நானே நினைத்து பார்க்க முடியாத அளவு வளமுடன் உள்ளேன் ///

    முயற்சிக்கு வாழ்த்துக்கள்..
    அது சரி..
    சம்பாதித்தது போதும் என்ற எண்ணம் வந்து விட்டதா...?

    வளம் நிறைந்த
    வாழ்க்கை செழுமையடைய

    திருமுன்
    தினமும் வேண்டி நிற்கிறோம்

    ReplyDelete
  49. @தனுசு

    தங்கள் நெகிழ்வான பின்னூட்டத்திற்கு நன்றி. தங்களை மேலும் மேலும் வளமோடு வாழவைக்க இறைவனை வேண்டுகிறேன்.

    //அவர் வீட்டில் தங்க வைத்து படிக்க வைத்தார்.மாமா வீட்டில் தங்கினாலும் எண்கள் வீட்டிலும் போக வர இருப்பேன் //

    'எங்கள்' என்பதற்குக் கூட 'எண்கள்' என்பதைப் பயன்படுத்திய உங்கள் எண்கணிதக் காதல் வாழ்க.

    ReplyDelete
  50. தேமொழி said...
    நெடும் பயணத்தில் நம் நட்பும் அழகு"
    என்ற வரிகள் கடலுடன் உங்களுக்குள்ள நட்பின் ஆழத்தைக் காட்டுகிறது.

    புருனேயில் பணியில் சேரும் முன் மலேசியாவிலும் சில ஆண்டுகள் பனி புரிந்தேன் அது ஆழ கடல் இல்லை. முகத்துவாரம் .ஆனால் புருனேயில் தான் கால் ஊன்றினேன்.

    தேமொழி said...
    என் உடல் பொருள் ஆவி அத்தனையும்
    உன் தடம் அருள் தூவி நிற்பதன்றோ"
    என்ற வரிகள் உங்கள் வாழ்வு கடலுடன் பின்னிப் பினைந்துள்ளதையும் விளக்குகிறது.

    ஆமாம் தேமொழி கடலோடு தான் என் வாழ்வாதாரம் அமைந்திருக்கிறது.
    என்னை அறியாமலேயே சில செய்திகள் பார்வதி அவர்களின் பின்னூட்டத்தில் பதிவாகி இருக்கிறது.

    நன்றிகள் தோழி அவர்களே.

    ReplyDelete
  51. rajesh said...கடலம்மா கவிதை நன்றாக உள்ளது.

    நன்றி ராஜேஷ்.

    ReplyDelete
  52. R.Srishobana said...தனுசு அவர்களின் "கடலோரக் கவிதைகள்", இனிமை...கடல் வாணி'யின் புகழ்பாடி நன்றியை செலுத்திவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன்...

    ஒரு வாய்ப்பு கிடைத்தது. எழுதிவிட்டேன். இப்படிதானே நன்றி காட்டமுடியும் .

    ReplyDelete
  53. தேமொழி said...உங்களுக்கு இனித்தா?!?!?!
    எது நான் அடி வாங்கியதா?

    இதுகூட இனித்தது.

    உங்களை அடித்தவரை நான் பார்த்திருந்தால் ,அவர் கையை உடைத்திருப்பேன்.

    ReplyDelete
  54. தேமொழி said... பட்டை சாராயத்திற்கு ஊறுகாய் ???)

    அக்கா என்ற அடைமொழியோடு நீங்கள் அழைக்கப் படுகிறீர்கள், தூள் பட "சொர்ணாக்கா" என்று இப்போதுதான் தெரிகிறது.

    எனக்கும் இதுமாதிரி வார்த்தைகள் சமயத்தில் வரும் ஆனால் அப்படி எழுதினால் அவை அத்தனை மரியாதையாக இருக்காதே என்ற எண்ணத்தில் கை விட்டு விடுவேன் .பிரியாணியை கூட யோசித்தே எழுதுவேன் அனால் துணிச்சலாக நீங்கள் அனுப்பி விட்டீர்கள். மனதில் படுவதை அப்படியே தெரிவிகிரீர்களே அதுதான் தேமொழி.பாராட்டுகள் .

    சொர்ணாக்கா என்றது ச்சும்மா )

    ReplyDelete
  55. Gee Tax Clinic said...
    உணர்வுகளை பகிர்ந்து கொண்டமைக்கு
    உளமாற வாழ்த்துக்கள் நன்றிகள்..

    அய்யர் said...வளம் நிறைந்த
    வாழ்க்கை செழுமையடைய
    திருமுன்
    தினமும் வேண்டி நிற்கிறோம்

    மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன் . அய்யர்(டபுள் M.G.R) அவர்களே, நன்றிகள்.

    ReplyDelete
  56. ///thanusu said... உங்களை அடித்தவரை நான் பார்த்திருந்தால் ,அவர் கையை உடைத்திருப்பேன்///

    நன்றி தனுசு, ஆனால் அது எங்கம்மா கையாக்கும். நீங்கள் செயலில் இறங்க நினைத்திருந்தால், பிறகு நானும் நீங்களும் வாத்தியார் படத்தில் காண்பித்திருந்த சிறுவர் சிறுமியர் போல உருண்டு புரண்டுதான் சண்டைதான் போட்டிருப்போம். என்ன இருந்தாலும் வருங்கால சொர்ணாக்கா ஆச்சே. :))))

    ///ஆறாம் அதிபதி ஐந்தில் இருந்தால் மாமன் வீட்டில் வளர்வான் என்ற குறிப்பு உண்மையா,///

    பொதுவிதியாக இருக்கலாம். எனக்கும் என் கணவருக்கும் ஆறாம் அதிபதி புதன். புதன் இருப்பது ஐந்தாம் வீட்டில். ஏதோ மாமா வீடு உறவு வரப் போக உண்டு. பாசமலர் பிணைப்பெல்லாம் கிடையாது. பெற்றோருடன்தான் வளர்ந்தோம்.

    ReplyDelete
  57. ஸ்ரீஷோபனா என் ஆக்கத்தைப்படித்துவிட்டு பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  58. வாத்தியார் ஐயா
    வணக்கம்.

    வர வர அடியவன் வாத்தியாரை விட்டு வெகு தூரம் செல்லுகின்றேன் .

    ReplyDelete
  59. மாயக் கண்ணா! அது ஏன் அப்படி தொலை தூரம் செல்கிறீர்கள்?எங்கள் ஆக்கங்களின் தாக்க‌மோ?

    ReplyDelete
  60. பார்வதியின் உண்மை பக்தியின் மேன்மையை விளக்கும் ஆக்கமும், கிருஷ்ணன் சாரின் அம்மாஞ்சி பற்றிய ஆக்கமும் அழகாக எழுதப்பட்டுள்ளன.

    தனுசுவின் கவிதை இந்த வாரமும் சுபெர்ப்.

    தேமொழியின் மலரும் நினைவுகள் அருமை. இதேபோல் குழந்தையாயிருந்தபோது நான் புளியங்கொட்டையை மூக்கில் போட்டுக்கொண்டுவிட, எல்லோரும் பதறி வெளியில் எடுக்க முயற்சித்ததில் இன்னும் உள்ளே போய் மாட்டிக்கொண்டுவிட்டதாம் (எனக்கு நினைவு தெரியாத வயதில் நடந்தது). உடனே என் இரண்டாவது மாமா சமயோசிதமாக பக்கத்தில் இருக்கும் மிளகாய்ப்பொடி அரைக்கும் இடத்திற்குத் தூக்கிச் செல்ல, நான்கைந்து தும்மல்களுக்குப்பின் வெளியில் வந்துவிட்டது. இதை என் அம்மா ஒவ்வொரு முறை சொல்லும்போதும், என் மாமாவின் அறிவுத்திறனையும், சமயோசிதத்தையும் யோசித்து வியந்திருக்கிறேன்.

    ஆனந்தமுருகன் அனுப்பிய படங்களும் சிரிப்பை வரவழைத்தன.

    ReplyDelete
  61. ஆனந்தமுருகன் அனுப்பிய படங்களுக்கு தனுசுவின் கமெண்ட்ஸ் ரசித்தேன்.

    ReplyDelete
  62. (ஆறாம் அதிபதி ஐந்தில் இருந்தாள் மாமன் வீட்டில் வளர்வான் என்ற குறிப்பு உண்மையா,புதன் ஆட்சியில் இருந்தாள் மாமன் உறவு சிறக்கும் என்பதும் சரி போலிருக்கிறது.)//

    எனக்கு புதன் ஆறில் ஆட்சி, இன்றுவரை என் மூன்று மாமாக்களிடமும், அவர்களுக்கு என்னிடமும் பாசம் அதிகம். பத்து வயதுவரை வளர்ந்ததும் தாத்தா (மாமா) வீட்டில்தான்.

    ReplyDelete
  63. உங்களை அடித்தவரை நான் பார்த்திருந்தால் ,அவர் கையை உடைத்திருப்பேன்.//

    பதிவை சரியாகப் படிக்காமலேயே பின்னூட்டம் இட்ட தனுசுவுக்கு என் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  64. ஆசிரியரின் நேரடி பெயரில் ஒரு பின்னேட்டமுமில்லை.

    2020 க்கு எவ்வித கேள்வியுமில்லை. வருகைக்கு நன்றிமட்டும் சொல்லப்பட்டுள்ளது. கேள்வி இல்லை என்றால் பதிலுக்கும் இட‌மில்லைப்போலும்.

    அனந்தமுருகன் அவரின் 10 வது நகைக்கு, ஆச்சியின் பதிலைக்கேட்டு வகுப்பரை அய்யா பதிவிட வேண்டுகிறேன் :)

    ReplyDelete
  65. Uma said... பதிவை சரியாகப் படிக்காமலேயே பின்னூட்டம் இட்ட தனுசுவுக்கு என் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மன்னிக்கவும் பதிவை சரியாகபடிக்கவில்லை என்பது அவ்வளவு பொருத்தமில்லை , எனக்கு தெரியும் அவரின் தாயார் அடித்தார் என்று. உணர்ச்சி மேலிட அவசரத்தில் வந்த பின்னூட்டம் அது.

    (ஹீ... ஹீ.. பாருங்க எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு என்று.- சொர்னாக்கவும் சிங்கமும் சேர்ந்தால் நான் என்ன செய்ய கடைசியாக நானும் பல்லிளித்து விட்டேன்ஹீ... ஹி... )

    ReplyDelete
  66. ஆச்சி!!!
    நான்???
    நன்றி ...நன்றி...நன்றி ...காலிங்கன்
    :)))))))))))

    ReplyDelete
  67. //பார்வதியின் உண்மை பக்தியின் மேன்மையை விளக்கும் ஆக்கமும், கிருஷ்ணன் சாரின் அம்மாஞ்சி பற்றிய ஆக்கமும் அழகாக எழுதப்பட்டுள்ளன.//

    என்ன ஆயிற்று உமாவுக்கு? இதெல்லாம் உமாவின் பின்னூட்டமாகவே தெரியவில்லையே.
    மைனர் வேற காணவில்லை!

    ReplyDelete
  68. என்ன ஆயிற்று உமாவுக்கு? இதெல்லாம் உமாவின் பின்னூட்டமாகவே தெரியவில்லையே.
    மைனர் வேற காணவில்லை!//

    அலுவலக வேலைப்பளுதான் காரணம் சார். கடந்த பதினைந்து நாட்களாக இதே நிலைமைதான். அக்கௌன்த்ஸ் இல் இருக்கும் பையன் செய்த
    சொதப்பலைச் சரி செய்யவேண்டிய பொறுப்பு என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளது. (என்னிக்கு இந்த தனுசு டைம் நோட் பண்ணினாரோ, அன்றிலிருந்து கண்பட்டுவிட்டது, முதல்ல திருஷ்டி சுத்திப் போட்டுக்கணும்).

    ReplyDelete
  69. என்ன ஆயிற்று உமாவுக்கு? இதெல்லாம் உமாவின் பின்னூட்டமாகவே தெரியவில்லையே.
    மைனர் வேற காணவில்லை!//

    அலுவலக வேலைப்பளுதான் காரணம் சார். கடந்த பதினைந்து நாட்களாக இதே நிலைமைதான். அக்கௌன்த்ஸ் இல் இருக்கும் பையன் செய்த
    சொதப்பலைச் சரி செய்யவேண்டிய பொறுப்பு என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளது. (என்னிக்கு இந்த தனுசு டைம் நோட் பண்ணினாரோ, அன்றிலிருந்து கண்பட்டுவிட்டது, முதல்ல திருஷ்டி சுத்திப் போட்டுக்கணும்).

    ReplyDelete
  70. Uma said...(என்னிக்கு இந்த தனுசு டைம் நோட் பண்ணினாரோ, அன்றிலிருந்து கண்பட்டுவிட்டது, முதல்ல திருஷ்டி சுத்திப் போட்டுக்கணும்).

    நல்லகண்ணு
    நாயகன்னு
    பேய்கன்னு
    பிசாசுகன்னு
    தனுசுகன்னு
    எல்லாம் கண்ணும் பொசுங்கட்டும்

    கற்பூரம் ஏத்தி சுத்தி போட்டாச்சி.
    திருஷ்டியும் முறிஞ்சிபோச்சு
    பரிகாரமும் பண்ணியாச்சு.

    ReplyDelete
  71. நல்லக் கண்ணு தெரியுது, கம்யூனிஸ்டு தாத்தாதானே? அப்புறம் தனுசுகண்ணு தெரியுது?புலிகட்! நாய் கண்ணு, பேய் கண்ணு, பிசாசு கண்ணு மூவரும் யார்?
    மூன்றில் ஒன்று நானில்லையே?

    ReplyDelete
  72. This comment has been removed by the author.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com