மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.4.12

மலர்கள் மலர்வது எனக்காக!


............................................................................................................
மலர்கள் மலர்வது எனக்காக!

ஆறாம் எண்ணிற்கான எண் ஜோதிடம்!
+++++++++++++++++++++++++++++++++++
ஆறாம் எண்ணிற்கு உரிய கிரகம் சுக்கிரன்.

காதல், ரசனை, கலைகள்,அழகு, ஆடம்பரம் என்றுள்ளவைகளுக்குக் காரகன் சுக்கிரன். ஆகவே ஆறாம் எண்ணிற்கு உரியவர்களுக்கு அதெல்லாம் இருக்கும். இப்படிச் சொல்லலாம் - அதற்கெல்லாம் உரியவர்கள் இவர்கள்.

ரிஷபம் மற்றும் துலாம் லக்கினத்தில் பிறந்தவர்கள், அத்துடன் 6ற்குரிய தேதிகளில் பிறந்திருந்தவர்கள், அல்லது ஆறாம் எண் விதி எண்ணாக அமையப்பெற்றவர்கள் ஆகியவர்களுக்கு மேற்சொன்ன குணங்கள் எல்லாம் நிறையவே இருக்கும்.

காதல் உணர்வும், கலை உணர்வும் இந்த எண்காரர்களை ஆட்கொண்டுவிடும். பெருந்தன்மை உடையவர்களாக இருப்பார்கள். அனைவருடனும் இசைந்து போவார்கள். பிரச்சினை செய்யாத பிறவிகள் என்று சொல்லலாம்.

இரும்பைக் காந்தம் இழுப்பதுபோல, காதலும், இசையும் இவர்களை இழுக்கும். இவர்கள் வசிக்கும், வீடு, அலுவலகம் என்று எதுவாவானாலும் கலைநயத்துடன் அல்லது அலங்காரத்துடன் இருக்கும். விதம்விதமான உணவுகளை ரசித்து உண்ணக்கூடியவர்கள். சாதுவான, இனிமையான தன்மையுடன் இருப்பார்கள். சிலசமயங்களில் மட்டுமே மற்ற சகமனிதர்களைப்போல நடந்துகொள்வார்கள். அதுவும், இவர்களுடைய உணர்வுகளுக்கு எதிரான செயல்கள் நடக்கும்போது மட்டுமே அப்படி நடந்துகொள்வார்கள்

நீரின்றி அமையாது இவ்வுலகு என்பதுபோல, காதலின்றி அமையாது இவ்வுலகு எனும் நம்பிக்கை உடையவர்கள் இவர்கள். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். திருமண பந்தத்திற்கு, அதாவது இல்லாளுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.

சங்கீதம், நாட்டியம், நாடகம், திரைப்படம், என்று மனதை மகிழ்விக்கும், பொழுது போக்கும் அம்சங்கள் அனைத்திலும் ஈடுபாடு கொள்வார்கள். அதோடு மட்டுமல்லாமல் அவைகளில் தங்களுக்குள்ள திறமைகளையும் வெளிப்படுத்துவார்கள்.

பணமும்,நவீன வாழ்க்கை வசதிகளும் இவர்களைத் தேடிவரும். அதனால் பனத்தைக் கட்டிக்காக்க மாட்டார்கள். செலவுகளுக்கு அஞ்ச மாட்டார்கள்.

எதையும், எவரையும் புன்னகையுடன் எதிர்கொள்வார்கள். அதை மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்வார்களே தவிர, பதிலுக்கு இவர்களுக்கு உதவியாக இருக்க மாட்டார்கள். அதுதான் வாழ்க்கையின் அவலம்!

இந்த எண்காரர்கள் பாசமிக்கவர்கள். பொறுப்பானவர்கள். தியாக உணர்வு உடையவர்கள், சுயநலமில்லாதவர்கள், கொடையாளிகள், அன்பானவர்கள், இரக்கமுள்ளவர்கள், நடுநிலமையுடையவர்கள், கவர்ச்சியானவர்கள். இது அனைத்தும் பொதுக்குணங்கள்.

இதைப்படித்துவிட்டு, சார் என் மகனின் எண் ஆறு. ஆனால் பொறுப்பில்லாமல் இருக்கிறானே என்று யாரும் கேட்க வேண்டாம். அதனால்தான் இவைகளைப் பொதுக்குணங்கள் என்று சொல்கிறேன். ஜாதகத்தில் உள்ள கோளாறுகளுக்குத் தகுந்தபடி இந்தக் குணங்களில் சில இல்லாமலும் போகலாம். அதுதான் வாங்கி வந்த வரம் எனப்படும்.

இந்த எண்காரர்கள் சிறந்த குடும்பஸ்தர்களாக விளங்குவார்கள். சமூக அக்கறை இருக்கும். வாக்கை நிறைவேற்றும் தன்மை இருக்கும். ஒப்புக்கொண்டபடி நடக்கும் செயல்பாடு இருக்கும்.

பாடகர், இசைக்கலைஞர்கள், நடிகர்கள், கைவினைக்கலைஞர்கள், ஆசிரியர்கள், ஓவியர், சிற்பி என்றுள்ள துறைகளில் பணியாற்றத் தகுந்தவர்கள் இவர்கள். அவற்றில் சிறப்பாகப் பணியாற்றுவார்கள்.

They will be too emotional and overly sentimental. They also might sacrifice themselves too much for the sake of others.

உதவிக்கும், குறுக்கீட்டிற்கும் வேறுபாடு தெரியாமல் இருப்பார்கள். அதுதான் இந்த எண்காரர்களின் பலவீனம். எப்போதும் நிம்மதியையும், அமைதியையும் விரும்புபவர்கள் இவர்கள்.



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நட்பு எண்கள் 4, 5, 8
எதிரான எண்கள்: 1, 2
உகந்த நாள்: வெள்ளிக்கிழமை.
நவரத்தினம்: வைரம்
உலோகம்: வெள்ளி
உகந்த தொழில்கள்: Healt care, alchemists, art critics, journalists
வியாபாரத்திற்கும், திருமணத்திற்கும் இசைவான எண்கள்: 3, 6, 9

=========================================================
சுருக்கமாகச் சொன்னால், இந்த எண்காரர்கள் வாழ்க்கையை அணுஅணுவாக அனுபவிக்கப் பிறந்தவர்கள். கவியரசரின் மொழியில் சொன்னால், இந்த உலகம் பிறந்தது எனக்காக என்பார்கள். ஓடும் நதிகள் எனக்காக என்பார்கள். மலரும் அத்தனை மலர்களும் எனக்காக என்பார்கள்.

பாடலின் முக்கிய வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்:

"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக -
அன்னை
மடியை விரித்தாள் எனக்காக

தவழும் நிலவாம் தங்கரதம்

தாரகை பதித்த மணிமகுடம்

குயில்கள் பாடும் கலைக்கூடம்

கொண்டது எனது அரசாங்கம்"

++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!


73 comments:

  1. நமது கவியரசரும் 2+4 = 6 (ஆறில்) பிறந்தவர் அல்லவா!
    (24 /6 /1927)

    ஆறைப் பற்றி ஆறாய்ப் பெருகிய பதிவு...
    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. ஐயா,

    அவர்களைச் சொல்லி என்ன இருக்கிறது எல்லாம் கலைக்கதிபதியான சுக்கிரன் படுத்தும்பாடு.

    இவர்கள் மெல்லிய உணர்வுகளையும்,ஆடம்பரத்தையும்,இசையையும்,அதிகம் விரும்புபவர்கள்.சாதாரண குடிசையில் இருந்தாலும் அதிலும் ஒரு வனப்பை உண்டாக்குவார்கள்,வாயிலில் இரண்டு ரோஜாப்பூத் தொட்டியிருந்தால் நன்றாக இருக்கும் என்பார்கள்.இசையை அணுவணுவாக ரசிக்கத்துடிப்பார்கள்.உலகின் நவீனமயம் முழுவதையும் உடனே அனுபவிப்பவர்களும்,ஆராதிப்பவர்களும் முதலில் இவர்களாகத்தான் இருக்கும்.

    ஆடை விஷயத்தில் துணிக்கடைக்குப்போனால் கூட 60வயதிலும் 20 வயதினற்கான உடைகளையே தேர்ந்தெடுப்பர்.40வயதில் ஒரு முடி நரைத்தாலும் ஐயோ எனக்கு வயதாகிவிட்டதே என வருந்துவார்கள்.அந்த அளவுக்கு அழகையும்,ஆடம்பரத்தையும் விரும்புவார்கள்.

    இளகிய மனம் படைத்தவர்கள்,கஷ்டம் என யாராவது இவர்களிடம் வந்துவிட்டால் அவர்களுக்காக இவர்களது கண்களும் நீர் துளிர்க்கும்.

    சுக்கிர‌ன் ஆளும் ப‌ர‌ணி,பூர‌ம்,பூராட‌ம் ஆகிய‌ ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் அனைத்துமே சுக்கிர‌னுக்கு ப‌கை கிர‌க‌ங்க‌ளான‌ செவ்வாய்,சூரிய‌ன் ம‌ற்றும் குருவால் ஆள‌ப்ப‌டும் ராசிக‌ளில் உள்ள‌ன‌.மேலும் அவை மூன்றுமே நெருப்பு ராசிக‌ள் வேறு,ஆனால் சுக்கிர‌னோ இத‌மான‌,குளிர்வான‌ கிர‌க‌ம்.அத‌னாலே இந்த‌ ந‌ட்ச‌த்திர‌க்கார‌ர்க‌ளுக்கு இத‌ய‌ம் க‌ண‌ன்று கொண்டிருந்தாலும் இத‌ழ்க‌ள் புன்ன‌கைக்க‌ ம‌ற‌க்காது.

    மொத்த‌த்தில் க‌லை போஷ‌க‌ர்க‌ள்.ஆயக‌லைக‌ள் அறுப‌த்து நான்கையும் அடைந்துவிட‌த்துடிக்கும் அதிச‌ய‌ப்பிற‌விக‌ள்.ஆள்வ‌து என்ன‌ சாதார‌ண கிர‌க‌மா?.அசுர‌குருவாயிற்றே!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  3. நல்ல பல தகவல்களை தாங்கி வந்த பதிவு. கலைக்கு அதிபதி சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள், கலா ரசிகர்களாகவும், அதை போஷிப்பவர்களாகவும் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இவர் ஜாதகத்தில் புதனுடன் இருப்பது இவரது குணத்தை இன்னும் அதிகப் படுத்தும் என்று கூறப் படுவதுண்டு. இவர்களுடன் செவ்வாய் பார்வை, சேர்க்கை என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாதது.

    ReplyDelete
  4. இன்னிக்கு நம்ம டோட்டல் நம்பர் வந்திருக்கு..விதியே இவர் வசம்தான்..
    நுமேராலஜியுடன் ஜாதகத்தைப் போட்டுக் குழப்ப வேண்டாம் என்றாலும் என் ஜாதகத்திலே லக்கினாதிபதி செவ்வாய்யுடன் பரிவர்த்தனை ஆகிய சுக்கிரன் லக்கினத்திலே புதனுடன் கூடி ஆட்டத்தைத் துவங்கியிருக்கிறார்.விருச்சிக லக்கினத்துக்கு சுக்கிரன் ஏழுக்கு அதிபதி என்ற வகையிலே பிளஸ் என்றாலும் பன்னிரெண்டுக்குஅதிபதி என்ற வகையில் மைனஸ் ஆக உள்ளது..செலவு ச்சும்மா பின்னி எடுக்குது..போங்க..
    வரவுக்கும் பஞ்சமில்லை..
    என்ன..
    இருக்குற வரைக்கும்தானே ஆட்டம்?
    அதுனாலே அனுபவிச்சுத் தீர்ப்போம்..
    அப்புடியே சேர்த்து வெச்சாலும் போகும் போது யாரு என்னத்தைக் கூடக் கொண்டு போகப்போறோம்?
    (முப்பது கிலோவுக்கு மேலே கொண்டு போக முடியாது..ஃப்ளைட்லே..அதைச் சொன்னேன்..நம்மளையும் தத்துவ ஞானி லிஸ்ட்டிலே சேர்த்துடாதீங்கோ..)

    ReplyDelete
  5. நல்ல பல தகவல்களை தாங்கி வந்த பதிவு.நன்றிகள் ஐயா

    ReplyDelete
  6. ////Blogger ஜி ஆலாசியம் said...
    நமது கவியரசரும் 2+4 = 6 (ஆறில்) பிறந்தவர் அல்லவா!
    (24 /6 /1927)
    ஆறைப் பற்றி ஆறாய்ப் பெருகிய பதிவு...
    நன்றிகள் ஐயா!///

    உலகம் பிறந்தது எனக்காக என்று எழுதிய கவியரசர் இல்லையா? ஆறாம் எண்ணிற்கு உதாரணமாகச் சொல்ல அவரைவிடச் சிறந்தவர் வேறு யாரும் இல்லை!
    அவரைக் குறிப்பிட்டு எழுதியதற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  7. Blogger Rajaram said...
    ஐயா,
    அவர்களைச் சொல்லி என்ன இருக்கிறது எல்லாம் கலைக்கதிபதியான சுக்கிரன் படுத்தும்பாடு.
    இவர்கள் மெல்லிய உணர்வுகளையும்,ஆடம்பரத்தையும்,இசையையும்,அதிகம் விரும்புபவர்கள்.சாதாரண குடிசையில் இருந்தாலும் அதிலும் ஒரு வனப்பை உண்டாக்குவார்கள்,வாயிலில் இரண்டு ரோஜாப்பூத் தொட்டியிருந்தால் நன்றாக இருக்கும் என்பார்கள்.இசையை அணுவணுவாக ரசிக்கத்துடிப்பார்கள்.உலகின் நவீனமயம் முழுவதையும் உடனே அனுபவிப்பவர்களும்,ஆராதிப்பவர்களும் முதலில் இவர்களாகத்தான் இருக்கும்.
    ஆடை விஷயத்தில் துணிக்கடைக்குப்போனால் கூட 60வயதிலும் 20 வயதினற்கான உடைகளையே தேர்ந்தெடுப்பர்.40வயதில் ஒரு முடி நரைத்தாலும் ஐயோ எனக்கு வயதாகிவிட்டதே என வருந்துவார்கள்.அந்த அளவுக்கு அழகையும்,ஆடம்பரத்தையும் விரும்புவார்கள்.
    இளகிய மனம் படைத்தவர்கள்,கஷ்டம் என யாராவது இவர்களிடம் வந்துவிட்டால் அவர்களுக்காக இவர்களது கண்களும் நீர் துளிர்க்கும்.
    சுக்கிர‌ன் ஆளும் ப‌ர‌ணி,பூர‌ம்,பூராட‌ம் ஆகிய‌ ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் அனைத்துமே சுக்கிர‌னுக்கு ப‌கை கிர‌க‌ங்க‌ளான‌ செவ்வாய்,சூரிய‌ன் ம‌ற்றும் குருவால் ஆள‌ப்ப‌டும் ராசிக‌ளில் உள்ள‌ன‌.மேலும் அவை மூன்றுமே நெருப்பு ராசிக‌ள் வேறு,ஆனால் சுக்கிர‌னோ இத‌மான‌,குளிர்வான‌ கிர‌க‌ம்.அத‌னாலே இந்த‌ ந‌ட்ச‌த்திர‌க்கார‌ர்க‌ளுக்கு இத‌ய‌ம் க‌ண‌ன்று கொண்டிருந்தாலும் இத‌ழ்க‌ள் புன்ன‌கைக்க‌ ம‌ற‌க்காது.
    மொத்த‌த்தில் க‌லை போஷ‌க‌ர்க‌ள்.ஆயக‌லைக‌ள் அறுப‌த்து நான்கையும் அடைந்துவிட‌த்துடிக்கும் அதிச‌ய‌ப்பிற‌விக‌ள்.ஆள்வ‌து என்ன‌ சாதார‌ண கிர‌க‌மா?.அசுர‌குருவாயிற்றே!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கும் மேலதிகத்தகவல்களுக்கும் நன்றி ராஜாராம்!

    ReplyDelete
  8. ///Blogger ananth said...
    நல்ல பல தகவல்களை தாங்கி வந்த பதிவு. கலைக்கு அதிபதி சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள், கலா ரசிகர்களாகவும், அதை போஷிப்பவர்களாகவும் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இவர் ஜாதகத்தில் புதனுடன் இருப்பது இவரது குணத்தை இன்னும் அதிகப் படுத்தும் என்று கூறப் படுவதுண்டு. இவர்களுடன் செவ்வாய் பார்வை, சேர்க்கை என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாதது.///

    உண்மைதான். நன்றி மிஸ்டர் ஆனந்த்!

    ReplyDelete
  9. ////Blogger minorwall said...
    இன்னிக்கு நம்ம டோட்டல் நம்பர் வந்திருக்கு..விதியே இவர் வசம்தான்..
    நுமேராலஜியுடன் ஜாதகத்தைப் போட்டுக் குழப்ப வேண்டாம் என்றாலும் என் ஜாதகத்திலே லக்கினாதிபதி செவ்வாய்யுடன் பரிவர்த்தனை ஆகிய சுக்கிரன் லக்கினத்திலே புதனுடன் கூடி ஆட்டத்தைத் துவங்கியிருக்கிறார்.விருச்சிக லக்கினத்துக்கு சுக்கிரன் ஏழுக்கு அதிபதி என்ற வகையிலே பிளஸ் என்றாலும் பன்னிரெண்டுக்குஅதிபதி என்ற வகையில் மைனஸ் ஆக உள்ளது..செலவு ச்சும்மா பின்னி எடுக்குது..போங்க..
    வரவுக்கும் பஞ்சமில்லை..
    என்ன..
    இருக்குற வரைக்கும்தானே ஆட்டம்?
    அதுனாலே அனுபவிச்சுத் தீர்ப்போம்..
    அப்புடியே சேர்த்து வெச்சாலும் போகும் போது யாரு என்னத்தைக் கூடக் கொண்டு போகப்போறோம்?
    (முப்பது கிலோவுக்கு மேலே கொண்டு போக முடியாது..ஃப்ளைட்லே..அதைச் சொன்னேன்..நம்மளையும் தத்துவ ஞானி லிஸ்ட்டிலே சேர்த்துடாதீங்கோ..)//////

    ஆகா, அனுபவியுங்கள்! அனுபவியுங்கள்! அனுபவியுங்கள்!
    மைனர் என்ற பெயருக்கு மேன்மை சேர்க்க வேண்டாமா?

    ReplyDelete
  10. ////Blogger krishnan51972 said...
    நல்ல பல தகவல்களை தாங்கி வந்த பதிவு.நன்றிகள் ஐயா///

    உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  11. /////உதவிக்கும், குறுக்கீட்டிற்கும் வேறுபாடு தெரியாமல் இருப்பார்கள். அதுதான் இந்த எண்காரர்களின் பலவீனம். ./////
    சரியான பலனை கொடுத்துள்ளீர்கள்.
    நன்றி!!

    ReplyDelete
  12. இன்று இன்பம்.

    இன்று அய்யா சொன்ன தகவல்களில் துலா லக்னம் எனும் தலைப்பில் எனக்கு அனைத்தும் பொருந்துகிறது.

    என்னுடைய கூட்டு எண் 6 அத்துடன் துலா லக்னம் .லக்னாதிபதி சுக்கிரன் பதினொன்றில் இருக்கிறார் .லக்னாதி பார்வை பட்ட குரு ஐந்தில் இருந்து தசையை நடத்திக் கொண்டு இருக்கிறார்.இறைவன் அருளால் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருக்கிறது.

    இன்பம் எங்கே ,இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு என்று போய்க் கொண்டு இருக்கிறேன்.

    குறை என்று பார்த்தால் நண்பர்களுக்குகொஞ்சம் செலவு செய்வது மட்டுமே.

    ஆறில் பிறந்த நம் ஊர் இன்பங்கள் ஜெயலலிதா ,அறிஞர் அண்ணாதுரை, கர்ம வீரர் காமராஜர்

    ReplyDelete
  13. minorwall said...இருக்குற வரைக்கும்தானே ஆட்டம்?
    அதுனாலே அனுபவிச்சுத் தீர்ப்போம்..
    அப்புடியே சேர்த்து வெச்சாலும் போகும் போது யாரு என்னத்தைக் கூடக் கொண்டு போகப்போறோம்?

    தத்துவத்தை நடைமுறை படுத்தி கை பிடிக்கிறார் போலிருக்கிறது என்று நினைத்து பின்னூட்டத்தில் என்னென்னமோ சொல்லவேண்டும் என்று நினைத்தேன் .ஆனால்

    minorwall said..முப்பது கிலோவுக்கு மேலே கொண்டு போக முடியாது..ஃப்ளைட்லே..அதைச் சொன்னேன்..நம்மளையும் தத்துவ ஞானி லிஸ்ட்டிலே சேர்த்துடாதீங்கோ..)

    என்ற அடுத்த வரியை படித்ததும்" என்னத்த சொல்ல " என்று ஆகி விட்டது.

    நாளை ஒரு நாட்டிய கோலம் நடக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  14. வணக்கம் ஐயா,
    ஆறாம் எண்காரர்கள் அதிகம் கலைத்துறையில் பிரகாசிக்கலாம் போலிருக்கிறதே...என் தம்பி ரிஷப லக்னம் தான்,இசை என்றால் மிகவும் பிடிக்கும்...சிறந்த கலைஞர்களும் இந்த எண்ணில் உள்ளார்கள்,அவர்களுடன் "சார்லஸ் சோப்ராஜ்" என்ற 'நல்லவரும்'(???!!!) உள்ளது ஜோதிடத்தால் தான் ஒருவரை முழுமையாக அடையாளம் காட்டும் உயிர்நாடி என்று நினைக்கின்றேன்...எண்கணிதம் என்பது இருட்டில் வழிகாட்டும் 'டார்ச்லைட்' போன்று தான்...நன்றி ஐயா...

    ReplyDelete
  15. மீண்டும் கண்ணதாசன் பாடல் மூலம் புரிய வைத்த பதிவிற்கு நன்றி ஐயா, என் மகளுக்கும், கணவருக்கும் விதி எண் ஆறு.

    அதிலும் கணவருக்கு சுக்கிரனின் சுயவர்கப் பரல்கள் எட்டு.
    "திருமண பந்தத்திற்கு, அதாவது இல்லாளுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்" என்று சொல்லியிருக்கிறீர்கள் .....ஆனால் இந்த இடம்தான் சுத்தமா ஒத்து வரல.

    மத்தபடி பாட்டெல்லாம் ரசித்துதான் கேட்பார். ஆனால் பாடும்பொழுதுமட்டும் ஏனோ எல்லாப் பாட்டையும் ஒரே மெட்டில் பாடி அசத்துவார். பிள்ளைகள் சிறுவயதிலேயே, "ஹாப்பி பர்த்டே டு யூ", "டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்", "ஏ ...பி ...சி ...டி" என்று ஒவ்வொரு பாடலுக்கும் தனி மெட்டு இருக்கிறது, அதில்தான் பாட வேண்டும் என்று விளக்கமாக சொல்லியிருக்கிறார்கள்.

    ReplyDelete
  16. வாவ் என் அம்மாவின் எண் ஆறு. நீங்கள் சொன்னதில் அதனையும் ஒத்து போகிறது. மகா பொறுமைசாலி. உறவு பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவரே.
    எப்போதும underplay செய்து விடுவார். ஆனால் அவருடைய இரக்கம் குணத்தை பலரும் பயன்படுத்தி கொள்வர். கொஞ்சம் ஏமாளியாக இருப்பார்கள். முக்கியமாக
    எல்லாரையும் நம்பி விடுவார்கள். எதையும் தாங்கும் மன வலிமை உண்டு. பரிதாபம் பிடிக்காது. என்ன வந்தாலும் தன குணத்தை மாற்றி கொள்ள மாற்றார்கள்.
    எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு இவரை கண்டு பொறாமை வந்து விடும். ஏன் என்றால் இவருக்கு எங்கயும் எப்போதும் imporatance கிடைத்து விடும், then the
    priority. எப்போவது கொஞ்சம் கோபம் வந்தாலும் தாங்க முடியாது. அதாவது அவருடைய ஆயுதம் அமைதி. வீட்டில் எல்லா வேலையும் நடந்து இருக்கும் . நாம் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்லுவார் , ஆனாலும் அந்த அமைதி நம்மை படுத்தி எடுத்திவிடும். ஆதாலால் அம்மாவுக்கு கோபம் வராதபடி நடந்து கொள்வோம். எங்களுக்கும அதுதான் எல்லை என்றும புரிந்து விடும்.அப்படி இருக்கத்தான் ஆசை. நம் ஜாதகம் வேற ஆயிற்றே! என்ன அவர்களை யாராவுது ஏமாற்றும் போதோ , வேண்டுமென்றே இலக்கராம் செய்யும் போதோ, (தெரிந்தும் தெரியாதது போல் இருப்பார் ), பயங்கர கோபமாக வரும். கொஞ்சம் சுதாரிப்பாக இருக்க முடியாதஇந்த ஆறாம் எண் காரர்களால் ?-kalai seattle

    ReplyDelete
  17. When you are having copyright even for simple articles and photos, What is the use of reading your blog.

    ReplyDelete
  18. வாத்தியார் ஐயா வணக்கம்.

    மிகவும் அற்புதமாக கூறி உள்ளீர்கள் .

    ReplyDelete
  19. Guru Vanakkam,

    Mera number aagaya!!!

    RAMADU

    ReplyDelete
  20. பண்டிட் சேதுராமனின் ஆய்வுடன் ஒப்பிடுகையில் வாத்தியாரின் ஆய்விலே நிறைய குணநலன்கள் மாறி எழுதப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்..
    எனக்கென்னமோ பண்டிட் சேதுராமனின் ஆய்வறிக்கை முழுவதும் பொருந்தியிருந்தது..

    ReplyDelete
  21. தொடர்ந்து பிஸி..அதனாலே சக தோழா,தோழியர்,சகோதர சகோதரிகளுடன் அளவளாவிக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள முடியவில்லை..வருந்துகிறேன்..

    ReplyDelete
  22. /////Blogger V Dhakshanamoorthy said...
    /////உதவிக்கும், குறுக்கீட்டிற்கும் வேறுபாடு தெரியாமல் இருப்பார்கள். அதுதான் இந்த எண்காரர்களின் பலவீனம். ./////
    சரியான பலனை கொடுத்துள்ளீர்கள்.
    நன்றி!!/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  23. /////Blogger thanusu said...
    இன்று இன்பம்.
    இன்று அய்யா சொன்ன தகவல்களில் துலா லக்னம் எனும் தலைப்பில் எனக்கு அனைத்தும் பொருந்துகிறது.
    என்னுடைய கூட்டு எண் 6 அத்துடன் துலா லக்னம் .லக்னாதிபதி சுக்கிரன் பதினொன்றில் இருக்கிறார் .லக்னாதி பார்வை பட்ட குரு ஐந்தில் இருந்து

    தசையை நடத்திக் கொண்டு இருக்கிறார்.இறைவன் அருளால் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருக்கிறது.
    இன்பம் எங்கே ,இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு என்று போய்க் கொண்டு இருக்கிறேன்.
    குறை என்று பார்த்தால் நண்பர்களுக்குகொஞ்சம் செலவு செய்வது மட்டுமே.
    ஆறில் பிறந்த நம் ஊர் இன்பங்கள் ஜெயலலிதா ,அறிஞர் அண்ணாதுரை, கர்ம வீரர் காமராஜர்

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தனுசு!

    ReplyDelete
  24. //////Blogger R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    ஆறாம் எண்காரர்கள் அதிகம் கலைத்துறையில் பிரகாசிக்கலாம் போலிருக்கிறதே...என் தம்பி ரிஷப லக்னம் தான்,இசை என்றால் மிகவும்
    பிடிக்கும்...சிறந்த கலைஞர்களும் இந்த எண்ணில் உள்ளார்கள்,அவர்களுடன் "சார்லஸ் சோப்ராஜ்" என்ற 'நல்லவரும்'(???!!!) உள்ளது ஜோதிடத்தால் தான்
    ஒருவரை முழுமையாக அடையாளம் காட்டும் உயிர்நாடி என்று நினைக்கின்றேன்...எண்கணிதம் என்பது இருட்டில் வழிகாட்டும் 'டார்ச்லைட்' போன்று
    தான்...நன்றி ஐயா.../////

    உண்மைதான் நன்றி சகோதரி!

    ReplyDelete
  25. /////Blogger அய்யர் said...
    முருகா... முருகா..////

    கந்தா, கடம்பா, கதிர்வேலா!

    ReplyDelete
  26. ////Blogger தேமொழி said...
    மீண்டும் கண்ணதாசன் பாடல் மூலம் புரிய வைத்த பதிவிற்கு நன்றி ஐயா, என் மகளுக்கும், கணவருக்கும் விதி எண் ஆறு.
    அதிலும் கணவருக்கு சுக்கிரனின் சுயவர்கப் பரல்கள் எட்டு.
    "திருமண பந்தத்திற்கு, அதாவது இல்லாளுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்" என்று சொல்லியிருக்கிறீர்கள் .....ஆனால் இந்த இடம்தான் சுத்தமா
    ஒத்து வரல.
    மத்தபடி பாட்டெல்லாம் ரசித்துதான் கேட்பார். ஆனால் பாடும்பொழுதுமட்டும் ஏனோ எல்லாப் பாட்டையும் ஒரே மெட்டில் பாடி அசத்துவார். பிள்ளைகள்
    சிறுவயதிலேயே, "ஹாப்பி பர்த்டே டு யூ", "டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்", "ஏ ...பி ...சி ...டி" என்று ஒவ்வொரு பாடலுக்கும் தனி மெட்டு இருக்கிறது, அதில்தான் பாட வேண்டும் என்று விளக்கமாக சொல்லியிருக்கிறார்கள்./////

    எல்லாம் பொது விதிகள். எல்லா விதிகளும் எல்லோருக்கும் பொருந்திவர வாய்ப்பில்லை!

    ReplyDelete
  27. ////Blogger Kalai said...
    வாவ் என் அம்மாவின் எண் ஆறு. நீங்கள் சொன்னதில் அதனையும் ஒத்து போகிறது. மகா பொறுமைசாலி. உறவு பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவரே.
    எப்போதும underplay செய்து விடுவார். ஆனால் அவருடைய இரக்கம் குணத்தை பலரும் பயன்படுத்தி கொள்வர். கொஞ்சம் ஏமாளியாக இருப்பார்கள்.

    முக்கியமாக
    எல்லாரையும் நம்பி விடுவார்கள். எதையும் தாங்கும் மன வலிமை உண்டு. பரிதாபம் பிடிக்காது. என்ன வந்தாலும் தன குணத்தை மாற்றி கொள்ள

    மாற்றார்கள்.
    எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு இவரை கண்டு பொறாமை வந்து விடும். ஏன் என்றால் இவருக்கு எங்கயும் எப்போதும் importance
    கிடைத்து விடும், then the
    priority. எப்போவது கொஞ்சம் கோபம் வந்தாலும் தாங்க முடியாது. அதாவது அவருடைய ஆயுதம் அமைதி. வீட்டில் எல்லா வேலையும் நடந்து இருக்கும் . நாம் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்லுவார் , ஆனாலும் அந்த அமைதி நம்மை படுத்தி எடுத்திவிடும். ஆதாலால் அம்மாவுக்கு கோபம்
    வராதபடி நடந்து கொள்வோம். எங்களுக்கும அதுதான் எல்லை என்றும புரிந்து விடும்.அப்படி இருக்கத்தான் ஆசை. நம் ஜாதகம் வேற ஆயிற்றே! என்ன
    அவர்களை யாராவுது ஏமாற்றும் போதோ , வேண்டுமென்றே இலக்கராம் செய்யும் போதோ, (தெரிந்தும் தெரியாதது போல் இருப்பார் ), பயங்கர கோபமாக
    வரும். கொஞ்சம் சுதாரிப்பாக இருக்க முடியாதஇந்த ஆறாம் எண் காரர்களால் ?-kalai seattle/////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  28. ////Blogger MURUGANANDAM said...
    When you are having copyright even for simple articles and photos, What is the use of reading your blog.////

    அந்த அறிவிப்பு திருடர்களுக்கு மட்டும்தான். வாசகர்களுக்கு அல்ல! படிப்பவர்களுக்கு அல்ல! வாசகர்களுக்கும், திருடர்களுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்குத் தெரியுமல்லவா?

    ReplyDelete
  29. ////Blogger Maaya kanna said...
    வாத்தியார் ஐயா வணக்கம்.
    மிகவும் அற்புதமாக கூறி உள்ளீர்கள்/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  30. ////Blogger RAMADU Family said...
    Guru Vanakkam,
    Mera number aagaya!!!
    RAMADU////

    சால சந்தோஷமண்டி ராமுடுகாரு!

    ReplyDelete
  31. ////Blogger minorwall said...
    பண்டிட் சேதுராமனின் ஆய்வுடன் ஒப்பிடுகையில் வாத்தியாரின் ஆய்விலே நிறைய குணநலன்கள் மாறி எழுதப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்..
    எனக்கென்னமோ பண்டிட் சேதுராமனின் ஆய்வறிக்கை முழுவதும் பொருந்தியிருந்தது..////

    ஆக்கங்களை ஒப்பிட்டால் இப்படிக் குழப்பங்கள்தான் வரும். அய்யர் சமையல் வேறு. செட்டி நாட்டு சமையல் வேறு. முனியாண்டிவிலாஸ் சமையல் வேறு.
    நீங்களே அவரைப் பண்டிட் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நான் எளியவன். என்னுடைய போதாத நேரம் பதிவில் எழுதிக்கொண்டிருக்கிறேன். நல்ல நேரம் வரும்போது நிறுத்திவிடுவேன். இன்னும் ஒரு ஆண்டுதான். அதற்குப் பிறகு பதிவில் எழுதுவதை நிறுத்திவிடலாம் என்றுள்ளேன்! என்னுடைய பல்சுவைப் பதிவை முடக்கி வைத்துள்ளதைப்போல, வகுப்பறைப் பதிவையும் முடக்கி வைத்துவிடலாம் என்றுள்ளேன்!

    ReplyDelete
  32. /////Blogger minorwall said...
    தொடர்ந்து பிஸி..அதனாலே சக தோழா,தோழியர்,சகோதர சகோதரிகளுடன் அளவளாவிக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள

    முடியவில்லை..வருந்துகிறேன்..////

    எங்களுக்குத் தெரியாதா? ஜப்பானியர்களின் பொதுக்குணம் பிஸியாய் இருத்தல். மைனரின் பொதுக்குணமும் அதுதான்!

    ReplyDelete
  33. ///என்னுடைய பல்சுவைப் பதிவை முடக்கி வைத்துள்ளதைப்போல, வகுப்பறைப் பதிவையும் முடக்கி வைத்துவிடலாம் என்றுள்ளேன்!///

    இந்த யோசனை சரியில்லை என வன்மையாக எதிர்க்கிறேன்
    >:o
    >:o
    >:o

    ReplyDelete
  34. //minorwall said...
    இன்னிக்கு நம்ம டோட்டல் நம்பர் வந்திருக்கு..விதியே இவர் வசம்தான்.//

    ம்ம்ம்....நமக்கும் அதே.... (என்னா ஒரு ஒற்றுமை) ஆனா,

    //அப்புடியே சேர்த்து வெச்சாலும் போகும் போது யாரு என்னத்தைக் கூடக் கொண்டு போகப்போறோம்?//

    இது மனசுல எப்பவும் ஓடுது. பெரும்பாலான குணங்கள் பொருந்தி வருது. குறிப்பா,

    // They will be too emotional and overly sentimental. They also might sacrifice themselves too much for the sake of others.
    //

    இது ரொம்ம்ப கரெக்ட். எனக்குத் திருமணமும் 6ம் தேதிதான் நடந்தது ( அட, அதுதான் விதி எண்ணா...!!!!)

    ReplyDelete
  35. தேமொழி said...
    ///என்னுடைய பல்சுவைப் பதிவை முடக்கி வைத்துள்ளதைப்போல, வகுப்பறைப் பதிவையும் முடக்கி வைத்துவிடலாம் என்றுள்ளேன்!///

    இந்த யோசனை சரியில்லை என வன்மையாக எதிர்க்கிறேன்//

    நான் அதை வழிமொழிகிறேன். எங்க மேல் என்ன கோபம்?

    ReplyDelete
  36. அற்புதமான பதிவுகளைத் தந்து கொண்டிருக்கிறீர்கள். தங்களின் இந்த முடிவு என்னையும் சேர்த்து எத்தனையோ பேர்களை மனவருத்தத்திற்கு உள்ளாக்கும்.
    தயவு செய்து, தங்கள் முடிவினை மறுபரிசீலனை செய்யக் கோருகிறேன். நன்றி.

    ReplyDelete
  37. நான் உண்மையாகப் பிறந்த தேதி 22 என்றாலும், என்னைப் பள்ளியில் சேர்க்கும் போது 6 என்று கொடுத்து விட்டார்கள். 6 க்குச்சொல்லியுள்ள குணாம்சங்கள்தான் எனக்குப் பொருந்தி வருகிறது என்று தோன்றுகிறது.

    வாத்தியாரின் வகுப்பறை முடக்கம் பற்றிய அறிவிப்புக்குக் காரணமான பண்டிட் இப்போது எங்கே இருக்கிறார்? வாத்தியார் பதிவை முடக்குவாரா மாட்டாரா என்று அவரிடமே எண் ஜோதிடம் கேட்கலாம் என்று பார்க்கிறேன்.

    உடன் பிறவாச் சகோதரி வெளியேற்றம்; உள்ளீடு போல வாத்தியாரும் அறிவிப்பு, அறிவிப்பு வாபஸ் என்றே இருக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  38. நான் உண்மையாகப் பிறந்த தேதி 22 என்றாலும், என்னைப் பள்ளியில் சேர்க்கும் போது 6 என்று கொடுத்து விட்டார்கள். 6 க்குச்சொல்லியுள்ள குணாம்சங்கள்தான் எனக்குப் பொருந்தி வருகிறது என்று தோன்றுகிறது.

    வாத்தியாரின் வகுப்பறை முடக்கம் பற்றிய அறிவிப்புக்குக் காரணமான பண்டிட் இப்போது எங்கே இருக்கிறார்? வாத்தியார் பதிவை முடக்குவாரா மாட்டாரா என்று அவரிடமே எண் ஜோதிடம் கேட்கலாம் என்று பார்க்கிறேன்.

    உடன் பிறவாச் சகோதரி வெளியேற்றம்; உள்ளீடு போல வாத்தியாரும் அறிவிப்பு, அறிவிப்பு வாபஸ் என்றே இருக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. முழு நேர வேலையையும் வைத்துக் கொண்டு இந்த பதிவுகளுக்காக நேரம் ஒதுக்குவதென்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. இதற்கென்று தனி நேரத்தை ஒதுக்கி அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறேன், முழுதுமாக காணாமல் போகாமல். வாத்தியாருக்கும் இந்த பிரச்சினை இருக்கும் போலும், அதனால்தான் இந்த முடக்கம் அறிபிப்பா?

    ReplyDelete
  41. எதையும், எவரையும் புன்னகையுடன் எதிர்கொள்வார்கள். அதை மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்வார்களே தவிர, பதிலுக்கு இவர்களுக்கு உதவியாக இருக்க மாட்டார்கள். அதுதான் வாழ்க்கையின் அவலம்!


    என்னை பொறுத்தவரை இது உண்மை . நானும் 6 (24 ) எண் காரன் தான்

    ReplyDelete
  42. ஐயா
    சுக்கிரனுக்கு குரு பகை அப்படி இருக்க 3 ம் எண் ஏப்படீ
    வியாபாரத்திற்கும், திருமணத்திற்கும் இசைவான எண்கள்: 3, 6, 9. வரிசையில் வந்தது.

    மாணவ‌ன்
    S.A.பாபு

    ReplyDelete
  43. my daughter date 6 th correct aga ullathu

    ReplyDelete
  44. பதிவு அருமை அய்யா. நான் ரிஷப லஹ்னகாரன் தாங்கள் பதிவில் கூறியவை ஓரளவுக்கு ஒத்து வருகின்றது...

    ReplyDelete
  45. ///நல்ல நேரம் வரும்போது நிறுத்திவிடுவேன். இன்னும் ஒரு ஆண்டுதான். அதற்குப் பிறகு பதிவில் எழுதுவதை நிறுத்திவிடலாம் என்றுள்ளேன்! என்னுடைய பல்சுவைப் பதிவை முடக்கி வைத்துள்ளதைப்போல, வகுப்பறைப் பதிவையும் முடக்கி வைத்துவிடலாம் என்றுள்ளேன்///

    ஐயா,இதென்ன திடீரென்று மாணவர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்யும் அறிவிப்பு...தயவு செய்து தங்களது எண்ணத்தை மாற்றி மாணவர்கள் எங்களுக்கு மகிழ்ச்சியை தர வேண்டுகிறேன்...

    ReplyDelete
  46. //////// SP.VR. SUBBAIYA said...
    /////Blogger minorwall said...
    தொடர்ந்து பிஸி..அதனாலே சக தோழா,தோழியர்,சகோதர சகோதரிகளுடன் அளவளாவிக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள

    முடியவில்லை..வருந்துகிறேன்..////

    எங்களுக்குத் தெரியாதா? ஜப்பானியர்களின் பொதுக்குணம் பிஸியாய் இருத்தல். மைனரின் பொதுக்குணமும் அதுதான்!///////

    எப்போதும் போல வேலைப்பளு பிஸி என்றில்லாமல் இந்தத் தடவை எனது,என் மனைவி என்று இருவரின் பெற்றோர்களையும் ஜப்பானைச் சுற்றிப்பார்க்க அழைத்து ஏற்பாடு செய்துள்ளபடியால் நாளை வந்து சேர்கிறார்கள்..அது காரணமான வேலைகள் கூடி விட்டன..அதுதான்..

    ReplyDelete
  47. SP.VR. SUBBAIYA said... பதிவில் எழுதுவதை நிறுத்திவிடலாம் என்றுள்ளேன்! என்னுடைய பல்சுவைப் பதிவை முடக்கி வைத்துள்ளதைப்போல, வகுப்பறைப் பதிவையும் முடக்கி வைத்துவிடலாம் என்றுள்ளேன்!

    படித்த உடனேயே சோர்வு வந்து விட்டது. அய்யா எழுதுவதை நிருத்தி விட்டால் என்ன ஆகும் என்று தெரியவில்லை.

    வேண்டாம் அய்யா.

    ReplyDelete
  48. <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    **"""போதாத"""நேரம் பதிவில் எழுதிக்கொண்டிருக்கிறேன். """நல்ல""" நேரம் வரும்போது நிறுத்திவிடுவேன்******

    நல்ல _ போதாத_இந்த இரண்டு சொற்களும் இடம் மாறிவிட்டதாக
    மேற்படி இரண்டு வரிகளையும் படிக்கும்போதெல்லாம் எனது நினைவில் தோன்றும்.
    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
    *****போதாத நேரம் பதிவில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.நல்ல நேரம் வரும்போது நிறுத்திவிடுவேன்******
    இந்த வரிகளை, பாடம் படிப்பவர்கள் எல்லோரும் அல்லது பெரும்பாலோர் திரும்பத்திரும்ப படிக்கும் போது அதற்கு ஒரு சக்தி ஏற்பட்டு இதற்கு வலு சேர்க்கிறது.எனவே,ஏதோ ஒரு காரணத்திற்காக தடை ஏற்படுவது போல
    ஒரு சூழல் உருவாகி விடுகிறது.
    இந்த வரிகள் இரண்டையும் எடுத்துவிட்டால் என்ன? என்றும் எனக்குத்தோன்றும்.
    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
    மேலும்,தாங்கள் பொது நோக்கில் அனைவரும் பயனுறும் வகையில் மிகுந்த
    முயற்சியின் பேரில்,சிரமங்கள் மற்றும் நேரம் காலம் கருதாமல்,சேவை மனதுடன்,
    வலைப்பதிவு செய்து வருவதை அனைவரும் அறிவார்கள்.

    புதியதாக ஜோதிடம் தொடர்பாக விபரங்களை தங்களிடம் இருந்து தெரிந்துக் கொள்வதர்க்காகவேதான் தங்களின் வகுப்பில் மேலும் மேலும் மாணவர்கள் சேர்ந்து வருகிறார்கள்.தங்களின் எழுத்து நடையில் உள்ள ஈர்ப்புத்தன்மையும் ஒரு
    காரணம்.
    தாங்கள் கூறுவதைப்போல,*** "எல்லாம் என்னுடைய சாதனை அல்ல. பழநி அப்பனின் அருள்"****
    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
    ஆதலால், ******பல்சுவைப் பதிவை முடக்கி வைத்துள்ளதைப்போல, வகுப்பறைப் பதிவையும் முடக்கி வைத்துவிடலாம் என்றுள்ளேன்!******

    என்ற அறிவிப்பை மறு பரிசீலனை செய்து என்றென்றும் வழக்கம்போல், வலைப்பதிவினை பதிவுசெய்து,ஆல் போல் தழைத்து,பதிவுலகின் முன்னோடியாகத் திகழ்வதற்கு "பழநி அப்பன் அருள்" புரிய வேண்டும் என்று
    வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  49. ///////SP.VR. SUBBAIYA said...
    ////Blogger minorwall said...
    பண்டிட் சேதுராமனின் ஆய்வுடன் ஒப்பிடுகையில் வாத்தியாரின் ஆய்விலே நிறைய குணநலன்கள் மாறி எழுதப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்..
    எனக்கென்னமோ பண்டிட் சேதுராமனின் ஆய்வறிக்கை முழுவதும் பொருந்தியிருந்தது..////

    ஆக்கங்களை ஒப்பிட்டால் இப்படிக் குழப்பங்கள்தான் வரும். அய்யர் சமையல் வேறு. செட்டி நாட்டு சமையல் வேறு. முனியாண்டிவிலாஸ் சமையல் வேறு.
    நீங்களே அவரைப் பண்டிட் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நான் எளியவன். என்னுடைய போதாத நேரம் பதிவில் எழுதிக்கொண்டிருக்கிறேன். நல்ல நேரம் வரும்போது நிறுத்திவிடுவேன். இன்னும் ஒரு ஆண்டுதான். அதற்குப் பிறகு பதிவில் எழுதுவதை நிறுத்திவிடலாம் என்றுள்ளேன்! என்னுடைய பல்சுவைப் பதிவை முடக்கி வைத்துள்ளதைப்போல, வகுப்பறைப் பதிவையும் முடக்கி வைத்துவிடலாம் என்றுள்ளேன்!//////

    நான் அவரைப் பார்த்தது கூட இல்லை..அந்தப் புத்தகத்திலே பெயர் பண்டிட் சேதுராமன் என்று இருந்தது..அப்படியே குறிப்பிட்டேன்..அவ்வளவுதான்..

    தங்களை 'வாத்தியார்' என்று நாங்கள் அனைவரும் அன்புடன் கூப்பிடுவதைப் போல..ஒரு விஷயம்தான் இது..

    மற்றபடி ஒரே விஷயம் பற்றி இருவேறு கருத்துக்கள் படிக்க நேர்ந்ததால் அந்த மாறுபாட்டைத் தெரிவித்தேன்..வாத்தியாரின் அனுபவ ஆராய்ச்சிகள் படியான விளக்கங்களைத் தங்கள் பதிவிட்டிருப்பதால் அதனை மறுப்பது எனது நோக்கமல்ல..எனது சுய அனுபவத்தின் படி பல இடங்கள் இருவர் கணிப்பின் படியும் வேறுபடுவதாக சொல்லியிருந்தேன்..

    மற்றபடி மொத்தத்திலே ஜோதிட ஈடுபாடு எனபதை ஆராய்ச்சி என்ற ஆர்வத்திலேயே நான் தங்கள் வகுப்பில் சேர்ந்து படிக்க முயன்றேன்..
    வகுப்பிலே படிக்க வந்த யார்யாரோ விளக்கமோ பாடமோ நடத்தினாலும் வாத்தியார் ஒருவரே..அதிலே யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது..
    மற்றபடி பதிவு முகப்பிலேயே தாங்கள் போதாத காரணத்தினாலே எழுதிக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள்..ஏனிப்படி எழுதவேண்டும் என்று நினைத்ததுண்டு..இன்றும் அதையே குறிப்பிட்டுள்ளீர்கள்..

    தமிழ் இணையதள வரலாற்றிலே follower எண்ணிக்கையிலும் தொடர்ந்து பதிவிடுவதிலும் எத்தனை இடையூறுகள் வந்த போதிலும் தளராது பதிவர்கள் யாருமே செய்திடாத சாதனையை செய்தவர் நீங்கள்..

    அந்த சாதனையினூடே எங்களைப் போன்ற எழுத்தார்வலர்களைக் கண்டறிந்து ஊக்கமளித்து பொழுதுபோக்க வாய்ப்பளித்த தங்களின் பெருந்தன்மைக்கு மீண்டும் நன்றிகூறி தாங்கள் எக்காரணம் கொண்டும் தளராமல் மென்மேலும் பதிவுகளை அள்ளி வழங்க உங்களுக்கு உங்களின் இஷ்டதெய்வம் பழனியப்பன் துணை நிற்பாராக என்றே வேண்டிவிரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்..

    ReplyDelete
  50. //////kmr.krishnan said...

    வாத்தியாரின் வகுப்பறை முடக்கம் பற்றிய அறிவிப்புக்குக் காரணமான பண்டிட் இப்போது எங்கே இருக்கிறார்? வாத்தியார் பதிவை முடக்குவாரா மாட்டாரா என்று அவரிடமே எண் ஜோதிடம் கேட்கலாம் என்று பார்க்கிறேன்.//////

    வாத்தியாரின் நேரவிரையத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று அவர் எண்ணியிருக்கலாம்..நீங்கள் பண்டிட் சேதுராமன் பற்றியும் அவரை இங்கு பேசிய பலரைப் பற்றியும் குறித்து பூடகமான பின்னூட்டத்தை வெளியிட்டிருப்பதால் KMRK அவர்களுக்கான பதில்.

    பண்டிட் அவர்கள் சிவலோகத்துக்குப் பயணித்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன்..


    எனக்கொரு சநதேகம்..நுமேராலாஜி பற்றிய பழைய செய்யுள்கள் அல்லது வேறு இந்திய வேதங்களின் பகுதிகளில் சொல்லப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்ள ஆர்வமாகவுள்ளேன்..

    எதன் அடிப்படையில் எல்லோருக்கும் நுமேராலாஜி பற்றித் தெரிய வந்தது என்கிற ரிஷிமூலம் பற்றி அறிந்துகொள்ள ஆவல்..யாருக்காவது தெரிந்தால் தகவலைத் தெரிந்துகொள்ள ஆர்வம்..
    எனக்குத் தெரியவந்தது பண்டிட் சேதுராமன் அவர்களின் நூல் வாயிலாகவே..

    ReplyDelete
  51. SP.VR. SUBBAIYA said... பதிவில் எழுதுவதை நிறுத்திவிடலாம் என்றுள்ளேன்! என்னுடைய பல்சுவைப் பதிவை முடக்கி வைத்துள்ளதைப்போல, வகுப்பறைப் பதிவையும் முடக்கி வைத்துவிடலாம் என்றுள்ளேன்!

    நான் கொஞ்சம் அவசர வேலையில் இருந்ததால் "வேண்டாம் அய்யா " என்று சுருக்கமாக பின்னூட்டம் அனுப்பி விட்டு போய்விட்டேன் .

    நான் என்ன நினைத்தேனோ அதே பொருள் படும்படியாக தக்ஷனாமூர்த்தி அவர்களும்,மைனர் அவர்களும் கருத்துக் களை பதித்துள்ளார்கள்.

    மூன்றாயிரத்திற்கும் மேலானோர் இங்கு உங்களை பின்தொடர்ந்து வருகிறோம் .பலருக்கும் பலவகையான ஈர்ப்புகள் மூலம் வகுப்புக்கு வந்த்ருப்பார்கள்.

    சிலர் உங்களின் எழுத்தைபார்த்து, பிடித்து ,சிலர் ஜோதிட பாடம் படிக்க , சிலர் தெய்வ செய்திகளை அறிந்துகொள்ள,,சிலர் இன்ன காரணம் என்று தெரியாமல் பின் தொடர்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    இந்த அளவுக்கு வேறு ஒரு "பிளாக்" இருக்க என்றால் இல்லை என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இது இந்த அளவுக்கு வளர்ந்ததுக்கும், வரவேற்ப்புக்கும், காரணம் நீங்கள் மட்டுமே.

    உங்களின் பணிகளுக்கு இடையில் தினசரி ஒரு பதிவும், அதற்கு பின்தொடர்வோரின் கருத்துக்களை கேட்டு அதற்கு பதிலும் இடுவது, பதிவுக்கு தேவையான தகல்வல்களை சேகரிப்பது போன்று பல்வேறு வேலைகளையும் செய்து எண்கள் போன்றோருக்கு தருகிறீர்கள்.

    அதன் சுமையும் உழைப்பும் உங்களுக்கு பெரிதாக தெரியவில்லை. நாங்கள் பின்தொடர்வது தான் பெரிதாக தெரிகிறது.

    தாங்களே ஒருமுறை கோபாலன் அய்யா அவர்களுக்கு சொல்லி உள்ளீர்கள் "வகுப்பறையில் பலரின் profile தாங்களுக்கு தெரியும் சொல்வது முறை அல்ல ஆதலால் சொல்லவில்லை "என்று சொல்லி உள்ளீர்கள்.

    பெரிய பதவிகளில் இருப்போரும், உங்களைவிட வயதில் மூத்தவரும் ,இன்னும் பல வகையானவரும் இங்கு இருக்கிறார்கள்.

    பத்திரிகை நடத்துபர் கூட வியாபார நோக்கில்தான் நடத்துகிறார்கள். ஆனால் நீங்கள் நய பைசா பிரதிபலன் பார்க்காமல் நடத்துகிறீர்கள்.

    இதெல்லாம் யாருக்காக? பின்தொடர்வோருக்காக.

    இங்கு நீங்களே பிரதானம் . இந்த பிளாக் உங்களுடையது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் .ஆனால் பின்தொடர்வோரையும் கொஞ்சம் பாருங்கள்

    "எனக்கு நல்ல காலம் வரும்போது எழ்துவதை நானே நிறுத்தி விடுவேன்" இந்த" நல்லகாலம்" என்பது இறைவனாக நிறுத்தும்போது வருவது என்பதாகவே நாங்கள் அர்த்தம் கொள்கிறோம் ..

    எங்களுக்காக நோய் நொடி இன்றி நீண்ட ஆயுளுடன் நீங்கள் இருப்பீர்கள் , நீங்கள் இருக்கும் வரை எழுதிக் கொண்டே இருப்பீர்கள், எழுதும் வரை நாங்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். .

    இதில் வார்த்தை தவறு ஏதும் இருப்பின் மன்னிக்கவும்.

    ReplyDelete
  52. தனசு சகோதர நானும் நீங்க சொல்வதையே இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்க்கு சார் எழுத்துமீது ரொம்ப காதல் ஒரு நாள் ப்திவு போடவிட்டால் ரொம்ப கஷ்ட படுவேன் ரொம்ப மனசஞ்சலம் 8ம்மிடத்து சந்திரன்
    வாத்தியார் டானிக் 337 அதான் ஜாதகம் அதை அடிகக‌டி ப்டிப்ப்பேன் கூட கவிஞர்
    கண்ணதாசன் பாடலும் கலந்து விடுவார்.

    ReplyDelete
  53. ///minorwall said...என் மனைவி என்று இருவரின் பெற்றோர்களையும் ஜப்பானைச் சுற்றிப்பார்க்க அழைத்து ஏற்பாடு செய்துள்ளபடியால் நாளை வந்து சேர்கிறார்கள்..அது காரணமான வேலைகள் கூடி விட்டன///

    சரி ....பொழுதை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். கடற்கரை பக்கம் சென்றால் மட்டும் கொஞ்சம் கட்டுபாடுடன் இருந்து குடும்பத்தினருக்கு அதிர்ச்சி கொடுக்காமல் சமாளியுங்கள். சுற்றுலா முடிந்தவுடன் "ஜப்பானில் சம்பந்திகள்" என்ற ஆக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  54. sundari said... ஒரு நாள் ப்திவு போடவிட்டால் ரொம்ப கஷ்ட படுவேன்

    அட, நம்மள மாதிரி ஒரு கூட்டமே இருக்கும் போலிருக்கு
    -------
    ///thanusu said...சிலர் இன்ன காரணம் என்று தெரியாமல் பின் தொடர்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்.///

    அது சரி...யாருப்பா இவங்கள்ளாம்....இந்த மாதிரி தொடர்ரவங்க கொஞ்சம் கையத் தூக்குங்க

    ReplyDelete
  55. நன்றி..பீச் பக்கமே போவதில்லை என்றே முடிவெடுத்திருக்கிறேன்.'எப்ப வருமோ?எப்ப வருமோ? சுனாமி..'என்று ஒரு கலக்கம்தான் காரணம்..
    மற்றபடி ட்ரிப் பற்றி எழுத முயற்சிக்கிறேன்..

    ReplyDelete
  56. வாத்தியாரின் பதில்!

    முதலில் உங்கள் அத்தனை பேர்களின் மின்னஞ்சல்களுக்கும், வேண்டுகோள்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

    1
    நான் கற்றுணர்ந்த ஜோதிடம், அடுத்த தலைமுறையினரைச் சென்றடையட்டும் என்ற் ஒரு நல்ல எண்ண்த்துடன்தான் பதிவில் ஜோதிடத்தைப் பாடமாக எழுதத்

    துவங்கினேன். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இதுவரை பதிவில் 544 பாடங்களை சுமார் 2,000 பக்கங்கள் அளவில் எழுதியுள்ளேன்.

    2.
    அவற்றை எல்லாம் ஒழுங்கி படுத்தி, அதாவது முறைப்படுத்தி படிப்பதற்கு வசதியாகத் தலைப்புக்கள், உப தலைப்புக்கள், குறிச்சொற்களுடன் புத்தகங்களாகக்

    கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

    3.
    முதலில் இரண்டு பகுதிகள் வெளிவரும். (ஜூன் மாதம்) மூன்று மாத இடைவெளியில் மற்றும் உள்ள இரண்டு பகுதிகள் வெளிவரும்.

    4
    இணையம் என்பது திறந்தவெளி. நான் எப்போதும் சொல்வதுபோல, இங்கே எழுதுவது என்பது, திறந்த வெளியில் ஒரு இளம்பெண் குளிப்பதற்குச் சமமானது
    பதிவுகள் எழுத எழுதத் திருட்டுப்போய்க்கொண்டிருக்கின்றன. இது விஷயம் திரு கே,முத்துராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். சில

    திருடர்களுடன் அவர் சண்டையும் போட்டிருக்கிறார். தற்போது சகோதரி தேமொழி அவர்களும் ஒரு திருட்டைச் சுட்டிக் காட்டி நடவடிக்கை எடுக்கச் சொல்லி,

    மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்,

    5
    சற்று உஷாராகி மேல் நிலைப் பாடங்களை தனி இணைய தளம் ஒன்றின் மூலம் எழுதிக்கொண்டிருக்கிறேன். அவைகளையும் புத்தகங்களாக வெளியிடும்

    எண்ணம் உள்ளது. அவைகள் எல்லாம் புத்தக வடிவம் பெற்று அடுத்த ஆண்டு துவக்கத்தில் வரும்.

    6
    இணைய தளங்களில் எழுதாமல் கணினியில் எழுதி நேரடியாகப் பத்தகமாக வெளியிடலாம். ஜோதிடம் அறிந்த அல்லது பல நூல்களைப் படித்த கலவையான

    வாசகர்கள் மத்தியில் எழுதப்படும்போது, தவறுகள் மற்றும் எழுத்துப்பிழைகள் சுற்றிக் காட்டப்படும் மேன்மை உள்ளது. ஆகவேதான் எழுதியதைப் பலர் படித்த

    பின்பே அவற்றைப் புத்தகமாக வெளியிடும் எண்ணத்தில் உள்ளேன்

    7.
    ஜோதிடம் என்பது கடல். என்னிடம் நிறைய உதாரண ஜாதகங்கள், செய்திகள் உள்ளன. (30 ஆண்டு சேகரிப்புக்கள்) அவற்றை வைத்துப் பல அலசல்

    பாடங்களை எழுதலாம். அஷ்டகவர்க்கம் தொடர் பாடம் எழுத வேண்டும். பிரசன்ன ஜோதிடம் என்னும் கேள்வி கேட்கும் நேரத்தைவைத்து ஜாதகத்தைக்

    கணித்துப் பலன் சொல்லும் ஜோதிடத்தின் மற்றொரு பிரிவைத் தொடர் பாடமாக எழுத வேண்டும். நிறைய் ஐடியாக்கள் உள்ளன! (அதாவது இன்னும்

    பத்தாண்டுகளுக்குப் பதிவுகள் எழுதலாம். அத்தனை விஷயங்கள் உள்ளன)

    நேரத்திற்கு எங்கே போவது?

    8. பதிவில் வாரம் 4 பாடங்கள், தனி இணைய தளத்தில் வாரம் 2 பாடங்கள் என்று நானே ஒரு நெறிமுறையை வகுத்துக்கொண்டுள்ளேன். இரண்டு

    இடங்களிலும் வரும் பின்னூட்டங்கள் - அதுவும் தங்கள் ஜாதகத்தை வைத்துப் பொதுக்கேள்விபோல் தோற்றமளிக்கும் புத்திசாலித்தனமான பின்னூட்டங்களுக்கு

    (சம்பந்தப்பட்ட நபரின் ஜாதகத்தைப் பார்க்காமல்) எப்படி பதில் அளிப்பது? அதற்கான நேரத்திற்கு என்ன செய்வது?

    9
    தங்கள் ஜாதகத்திற்குப் பலன் கேட்டு தினமும் 10ற்கும் குறையாத தனி மின்னஞ்சல்கள் வருகின்றன. அவற்றிற்கெல்லாம் பதில் எழுத ஆர்வம் இருந்தும்

    நேரமில்லை. ஆனால் அவர்கள் விடாமல் தொடர்ந்து reminder விட்டுக்கொண்டிருப்பார்கள். அவற்றிற்கென்ன சேய்வது?

    10
    இதற்கு இடையில் ஒரு பத்திரிக்கையில் கட்டுரை, மற்றும் சிறுகதைகள் எழுதும் எழுத்துப்பணி (அதுவும் சேவையாகத்தான்) உள்ளது

    11.
    என்னுடைய தலையாய வியாபார மற்றும் சொந்தப் பணிகள்,

    12
    ஒரே நேரத்தில் பல குதிரைகளை ஓட்ட முடியவில்லை. அதனால்தான் எதையாவது ஒன்றை விட்டுவிடலாம் என்ற் யோசனை. முடக்கும் எண்ணம்

    என்ன செய்யலாம்? நீங்களே சொல்லுங்கள்!!!!!!!!

    ReplyDelete
  57. This comment has been removed by the author.

    ReplyDelete
  58. ////Blogger தேமொழி said...
    ///என்னுடைய பல்சுவைப் பதிவை முடக்கி வைத்துள்ளதைப்போல, வகுப்பறைப் பதிவையும் முடக்கி வைத்துவிடலாம் என்றுள்ளேன்!///
    இந்த யோசனை சரியில்லை என வன்மையாக எதிர்க்கிறேன் >:o///

    சகோதரி எதிர்க்க வேண்டாம். அதறகுப் பதிலாகக் கண்டிக்கலாம்! என்னுடைய பதில் கீழே உள்ளது!

    ReplyDelete
  59. ////Blogger Parvathy Ramachandran said...
    //minorwall said...
    இன்னிக்கு நம்ம டோட்டல் நம்பர் வந்திருக்கு..விதியே இவர் வசம்தான்.//
    ம்ம்ம்....நமக்கும் அதே.... (என்னா ஒரு ஒற்றுமை) ஆனா,
    //அப்புடியே சேர்த்து வெச்சாலும் போகும் போது யாரு என்னத்தைக் கூடக் கொண்டு போகப்போறோம்?//
    இது மனசுல எப்பவும் ஓடுது. பெரும்பாலான குணங்கள் பொருந்தி வருது. குறிப்பா,
    // They will be too emotional and overly sentimental. They also might sacrifice themselves too much for the sake of others.
    //
    இது ரொம்ம்ப கரெக்ட். எனக்குத் திருமணமும் 6ம் தேதிதான் நடந்தது ( அட, அதுதான் விதி எண்ணா...!!!!)///////

    பிறந்த எண்ணை அதிஷ்ட எண் (Lucky number) என்பார்கள். மொத்த கூட்டல் எண்ணை விதி எண் (Fate) என்பார்கள்

    ReplyDelete
  60. /////Blogger Parvathy Ramachandran said...
    தேமொழி said...
    ///என்னுடைய பல்சுவைப் பதிவை முடக்கி வைத்துள்ளதைப்போல, வகுப்பறைப் பதிவையும் முடக்கி வைத்துவிடலாம் என்றுள்ளேன்!///
    இந்த யோசனை சரியில்லை என வன்மையாக எதிர்க்கிறேன்//
    நான் அதை வழிமொழிகிறேன். எங்க மேல் என்ன கோபம்?/////

    எனக்குக் கோபம் வராது. சமயங்களில் எழுத்து வீச்சுக்களில் உள்ள வார்த்தைகளால் கோபம் உள்ளது போன்ற தோற்றமளிக்கும். உங்கள் மேல் நாளுக்கு நாள் (உங்களின் வார மலர் ஆக்கங்களினால்) ஒரு மரியாதை கூடிக்கொண்டே போகிறது. என்னைப் சந்திக்கும் ஆவலில் பலர் இருக்க, நான் உங்களையும் தேமொழியையும், திரு.வெ.கோபாலன் அவர்களையும் நேரில் சந்த்தித்துப் பேச ஆவலாக உள்ளேன். காலம் கனியட்டும். பழநிஅப்பன் அதற்கான நேரத்தை உண்டாக்கித்தருவானாக! எனது த்ன்னிலை விளக்கம் கீழே உள்ளது சகோதரி!

    ReplyDelete
  61. /////Parvathy Ramachandran said...
    அற்புதமான பதிவுகளைத் தந்து கொண்டிருக்கிறீர்கள். தங்களின் இந்த முடிவு என்னையும் சேர்த்து எத்தனையோ பேர்களை மனவருத்தத்திற்கு உள்ளாக்கும்.
    தயவு செய்து, தங்கள் முடிவினை மறுபரிசீலனை செய்யக் கோருகிறேன். நன்றி./////

    எனது தன்னிலை விளக்கம் கீழே உள்ளது. படித்துப் பாருங்கள்!

    ReplyDelete
  62. logger kmr.krishnan said...
    நான் உண்மையாகப் பிறந்த தேதி 22 என்றாலும், என்னைப் பள்ளியில் சேர்க்கும் போது 6 என்று கொடுத்து விட்டார்கள். 6 க்குச்சொல்லியுள்ள குணாம்சங்கள்தான் எனக்குப் பொருந்தி வருகிறது என்று தோன்றுகிறது.
    வாத்தியாரின் வகுப்பறை முடக்கம் பற்றிய அறிவிப்புக்குக் காரணமான பண்டிட் இப்போது எங்கே இருக்கிறார்? வாத்தியார் பதிவை முடக்குவாரா மாட்டாரா என்று அவரிடமே எண் ஜோதிடம் கேட்கலாம் என்று பார்க்கிறேன்.
    உடன் பிறவாச் சகோதரி வெளியேற்றம்; உள்ளீடு போல வாத்தியாரும் அறிவிப்பு, அறிவிப்பு வாபஸ் என்றே இருக்க வேண்டுகிறேன்.////

    பதிவின் முகப்பில் என்னைப்பற்றி என்னும் தலைப்பில், எப்போது நிறுத்துவேன் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவைத்துள்ளேன். அதற்கு எந்தப் பண்டிட் இடம் ஜோதிடம் கேட்பீர்கள்?

    ReplyDelete
  63. ////Blogger ananth said...
    முழு நேர வேலையையும் வைத்துக் கொண்டு இந்த பதிவுகளுக்காக நேரம் ஒதுக்குவதென்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. இதற்கென்று தனி நேரத்தை ஒதுக்கி அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறேன், முழுதுமாக காணாமல் போகாமல். வாத்தியாருக்கும் இந்த பிரச்சினை இருக்கும் போலும், அதனால்தான் இந்த முடக்கம் அறிபிப்பா?////

    நீங்கள் அதைச் சரியாண கோணத்தில் புரிந்து கோண்டிருக்கிறீர்கள். நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  64. ////Blogger sekar said...
    எதையும், எவரையும் புன்னகையுடன் எதிர்கொள்வார்கள். அதை மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்வார்களே தவிர, பதிலுக்கு இவர்களுக்கு உதவியாக இருக்க மாட்டார்கள். அதுதான் வாழ்க்கையின் அவலம்!
    என்னை பொறுத்தவரை இது உண்மை . நானும் 6 (24 ) எண் காரன் தான்/////

    நல்லது. உங்கலின் கருத்துப் பகிவிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  65. /////Blogger S A Babu said...
    ஐயா
    சுக்கிரனுக்கு குரு பகை அப்படி இருக்க 3 ம் எண் ஏப்படீ
    வியாபாரத்திற்கும், திருமணத்திற்கும் இசைவான எண்கள்: 3, 6, 9. வரிசையில் வந்தது.
    மாணவ‌ன்
    S.A.பாபு/////

    குரு நம்பர் ஒன் சுபக்கிரகம். அத்னால் மற்றொரு சுபக்கிரகமான சுக்கிரனுக்கு அவருடைய எண் பொருந்தி வருகிறது!

    ReplyDelete
  66. /////Blogger Balamurugan Jaganathan said...
    பதிவு அருமை அய்யா. நான் ரிஷப லஹ்னகாரன் தாங்கள் பதிவில் கூறியவை ஓரளவுக்கு ஒத்து வருகின்றது.../////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  67. /////Blogger R.Srishobana said...
    ///நல்ல நேரம் வரும்போது நிறுத்திவிடுவேன். இன்னும் ஒரு ஆண்டுதான். அதற்குப் பிறகு பதிவில் எழுதுவதை நிறுத்திவிடலாம் என்றுள்ளேன்! என்னுடைய பல்சுவைப் பதிவை முடக்கி வைத்துள்ளதைப்போல, வகுப்பறைப் பதிவையும் முடக்கி வைத்துவிடலாம் என்றுள்ளேன்///
    ஐயா,இதென்ன திடீரென்று மாணவர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்யும் அறிவிப்பு...தயவு செய்து தங்களது எண்ணத்தை மாற்றி மாணவர்கள் எங்களுக்கு மகிழ்ச்சியை தர வேண்டுகிறேன்...//////

    எதற்காக அதிர்ச்சி? என்னுடைய தன்னிலை விளக்கம் மேலே உள்ளது. படித்துப்பாருங்கள் ஷோபனாஜி!

    ReplyDelete
  68. /////Blogger thanusu said...
    SP.VR. SUBBAIYA said... பதிவில் எழுதுவதை நிறுத்திவிடலாம் என்றுள்ளேன்! என்னுடைய பல்சுவைப் பதிவை முடக்கி வைத்துள்ளதைப்போல, வகுப்பறைப் பதிவையும் முடக்கி வைத்துவிடலாம் என்றுள்ளேன்!
    படித்த உடனேயே சோர்வு வந்து விட்டது. அய்யா எழுதுவதை நிருத்தி விட்டால் என்ன ஆகும் என்று தெரியவில்லை.
    வேண்டாம் அய்யா./////

    எதற்க்காக் சோர்வு? மாற்று வழி இல்லாமலா போகும்? என்னுடைய தன்னிலை விளக்கம் மேலே உள்ளது. படித்துவிட்டுச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  69. /////Blogger V Dhakshanamoorthy said...
    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    **"""போதாத"""நேரம் பதிவில் எழுதிக்கொண்டிருக்கிறேன். """நல்ல""" நேரம் வரும்போது நிறுத்திவிடுவேன்******
    நல்ல _ போதாத_இந்த இரண்டு சொற்களும் இடம் மாறிவிட்டதாக
    மேற்படி இரண்டு வரிகளையும் படிக்கும்போதெல்லாம் எனது நினைவில் தோன்றும்.
    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
    *****போதாத நேரம் பதிவில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.நல்ல நேரம் வரும்போது நிறுத்திவிடுவேன்******
    இந்த வரிகளை, பாடம் படிப்பவர்கள் எல்லோரும் அல்லது பெரும்பாலோர் திரும்பத்திரும்ப படிக்கும் போது அதற்கு ஒரு சக்தி ஏற்பட்டு இதற்கு வலு சேர்க்கிறது.எனவே,ஏதோ ஒரு காரணத்திற்காக தடை ஏற்படுவது போல
    ஒரு சூழல் உருவாகி விடுகிறது.
    இந்த வரிகள் இரண்டையும் எடுத்துவிட்டால் என்ன? என்றும் எனக்குத்தோன்றும்.
    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
    மேலும்,தாங்கள் பொது நோக்கில் அனைவரும் பயனுறும் வகையில் மிகுந்த
    முயற்சியின் பேரில்,சிரமங்கள் மற்றும் நேரம் காலம் கருதாமல்,சேவை மனதுடன்,
    வலைப்பதிவு செய்து வருவதை அனைவரும் அறிவார்கள்.

    புதியதாக ஜோதிடம் தொடர்பாக விபரங்களை தங்களிடம் இருந்து தெரிந்துக் கொள்வதர்க்காகவேதான் தங்களின் வகுப்பில் மேலும் மேலும் மாணவர்கள் சேர்ந்து வருகிறார்கள்.தங்களின் எழுத்து நடையில் உள்ள ஈர்ப்புத்தன்மையும் ஒரு காரணம்.
    தாங்கள் கூறுவதைப்போல,*** "எல்லாம் என்னுடைய சாதனை அல்ல. பழநி அப்பனின் அருள்"****
    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
    ஆதலால், ******பல்சுவைப் பதிவை முடக்கி வைத்துள்ளதைப்போல, வகுப்பறைப் பதிவையும் முடக்கி வைத்துவிடலாம் என்றுள்ளேன்!******
    என்ற அறிவிப்பை மறு பரிசீலனை செய்து என்றென்றும் வழக்கம்போல், வலைப்பதிவினை பதிவுசெய்து,ஆல் போல் தழைத்து,பதிவுலகின் முன்னோடியாகத் திகழ்வதற்கு "பழநி அப்பன் அருள்" புரிய வேண்டும் என்று
    வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்./////

    உங்களின் மேலான அன்பிற்கு நன்றி;எல்லாம் நல்லபடியாக நடக்கும் தட்சணாமூர்த்தி! என்னுடைய தன்னிலை விளக்கம் மேலே உள்ளது. படித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  70. என் தம்பியின் பிறந்த தேதி ஆறு. ஆனால் ஒண்ணாம் நம்பர் சோம்பேறி. அவன் திருமண சி.டி. அனுப்பச் சொல்லிக் கேட்டு பின் அலுத்துப்போய் விட்டுவிட்டேன். ஒருவேளை அவனோட அறுபதாம் கல்யாண சி.டி.யையும் சேர்த்து அனுப்பலாம்னு யோசிக்கறான் போல. ஏதாவது சொன்னால் மறுக்காமல் ஆஹா செய்கிறேன் என்று சொல்வான், ஆனால் அவன் இழுத்தடிப்பதைப் பார்த்து சுவரில் முட்டிக்கொள்ளலாம் போல இருக்கும்.

    ReplyDelete
  71. ஆனால் பாடும்பொழுதுமட்டும் ஏனோ எல்லாப் பாட்டையும் ஒரே மெட்டில் பாடி அசத்துவார்.//

    இதையாவது சகித்துக்கொள்ளலாம். என் கணவருக்கு எந்தப் பாட்டாக இருந்தாலும் இரண்டுவரிக்கு மேல் தெரியாது. தேய்ஞ்சு போன டேப் ரெகார்டர் மாதிரி அதையே திரும்பத்திரும்ப பாடுவார். ராகமும் அவர் இஷ்டத்திற்கு, போதாக்குறைக்கு பாடல் வரிகளைத் தப்பும் தவறுமாப் பாடிச் சொதப்பி, கேட்கவே நாராசமா இருக்கும். அதனால அவர் பாட ஆரம்பிச்சதுமே 'போதும் நிறுத்தரேளா' ன்னு கமெண்ட் கேட்கும் (எங்கிருந்துன்னு கேட்கபடாது).

    ReplyDelete
  72. உங்களின் பதிவெழுதுவதை நிறுத்தும் முடிவை நான் வரவேற்கவில்லை. உங்களின் நேரமின்மையையும் உணர்ந்திருக்கிறேன். எனக்குத் தோன்றிய யோசனைகளை கீழே தந்துள்ளேன்:

    நேரத்திற்கு எங்கே போவது?//

    பதிவு எண்ணிக்கைகளைக் குறைத்துக்கொள்ளலாம் (வாரத்திற்கு இரண்டோ, மூன்றோ என). ஒருவர் பத்து பின்னூட்டங்கள் போடும் பட்சத்தில் அவரின் ஒரு பின்னூட்டத்திற்கு மட்டுமே பதில் அளிக்கலாம், அதுவும் தேவையென்று தோன்றினால். மாணவர்களுக்கு உங்களின் நேரமின்மை புரியும் என்பதால் யாரும் தவறாக எண்ண மாட்டார்கள்.

    இணையம் என்பது திறந்தவெளி. நான் எப்போதும் சொல்வதுபோல, இங்கே எழுதுவது என்பது, திறந்த வெளியில் ஒரு இளம்பெண் குளிப்பதற்குச் சமமானது
    பதிவுகள் எழுத எழுதத் திருட்டுப்போய்க்கொண்டிருக்கின்றன.//

    இணைய தளங்களில் எழுதாமல் கணினியில் எழுதி நேரடியாகப் பத்தகமாக வெளியிடலாம். ஜோதிடம் அறிந்த அல்லது பல நூல்களைப் படித்த கலவையான
    வாசகர்கள் மத்தியில் எழுதப்படும்போது, தவறுகள் மற்றும் எழுத்துப்பிழைகள் சுற்றிக் காட்டப்படும் மேன்மை உள்ளது. ஆகவேதான் எழுதியதைப் பலர் படித்த
    பின்பே அவற்றைப் புத்தகமாக வெளியிடும் எண்ணத்தில் உள்ளேன்//

    இணையத்தில் எழுதுவதற்கான காரணத்தை நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். முன்னரும் நான் இதை எழுத நினைத்து எழுதவில்லை. திருட்டு போவதை நம்மால் தடுக்க இயலாது. இதைச் சொல்வதால் நான் திருட்டுக்கு ஆதரவு என்று அர்த்தமில்லை. நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள், திருடுபவர்கள் திருடினாலும், உங்கள் எழுத்துக்களைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு யார் அவர்கள் என்பது தெரிந்துவிடும். அந்த வலைப்பக்கங்களுக்கு நாங்கள் எப்போதும் போகப்போவதுமில்லை. அவரவர்கள் செய்யும் தவறுக்கு இன்றில்லாவிட்டாலும் என்றாவது

    எதிர்வினை தெரியும்.

    இடங்களிலும் வரும் பின்னூட்டங்கள் - அதுவும் தங்கள் ஜாதகத்தை வைத்துப் பொதுக்கேள்விபோல் தோற்றமளிக்கும் புத்திசாலித்தனமான பின்னூட்டங்களுக்கு
    (சம்பந்தப்பட்ட நபரின் ஜாதகத்தைப் பார்க்காமல்) எப்படி பதில் அளிப்பது? அதற்கான நேரத்திற்கு என்ன செய்வது?//

    இதற்கு ஸ்டாண்டர்ட் ஆக ஒரு பதிலைத் தயார் செய்து (நேரமில்லை, அதனால் சொல்ல இயலாது) அனுப்பிவிடுங்கள். பதில் எழுதாத பட்சத்திலேதான் நினைவூட்டல் வரும். அதைத்தவிர்க்க முடியாது என்று பதில் அனுப்பிவிட்டால் அவர்களே ஒரு கட்டத்தில் நிறுத்திவிடுவார்கள்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com