மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.2.12

Magazine பித்துப் பிடித்த மக்களால் என்னென்ன தொலைந்தடா சாமி!

தில்லி உமா அக்காவிற்கான இரட்டையர்கள் படம்
---------------------------------------------------------------------------------------------
மாணவர் மலர்

இன்றைய மாணவர் மலரை 6 கண்மணிகளின் 7 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++



பித்துப் பிடித்த மக்களால் என்னென்ன தொலைந்தடா சாமி!


1
மண் ஆசை 
ஆக்கம்: தனுசு
++++++++++++++++++++++++++++++++++
விளைநிலங்கள் எனும் நில மகள்
புலம் பெயர்ந்து
விண்ணுக்கு சென்றுவிட்டாள்
பொன்மகள் என்ற அடைமொழியோடு.

நன்செய் நிலமும் நலிந்துவிட்டது
புன்செய் நிலமும் பொசுங்கி விட்டது -
இவை யாவும்
பணம்செய் நிலமாய் மாறிவிட்டது.

நெல்லுக்கும் இடமில்லை
கரும்புக்கும் களமில்லை
வாழைக்கும் காலமில்லை-நடக்கும்
வழிதடதிற்கும் வழியில்லை.

மாந்தோப்பும் மறைந்து விட்டது
தென்னந்தோப்பும் தொலைந்து விட்டது
புளியந்தோப்பும் புதைந்துவிட்டது
பூந்தோட்டதிற்கும் பூமாலை போட்டாகிவிட்டது.

கரிசல் மண்ணும் கால்கோடி
களி மண்ணும் முக்கால் கோடி
வெறும் மண்ணும் பலகோடி
கருங்கல் இடமும் நிறைக்கும் கோடி

ஏறுமலை ஏறு என வீறு கொண்டு ஏறுவது
விளைநிலத்தின் நிலையில்லா விலைகளா?- மண்
பித்துகொண்டு அலையும்
பணம் கொண்ட மனங்களின் கொலை வெறியா?.

காலடியில்கிடக்கும் மண் மீது
ஆசைஏனடா மனிதா - நீ
ஊரை சுருட்டி உயிலாக்கி கொண்டாலும்
இறுதியில் இருக்கப்போவது
இலவச மண்ணில்தான்.
-தனுசு- 


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
ராதையும் கிருஷ்ணரும்
ஓவியம் ஆக்கம் தேமொழி

தேமொழி அவர்கள் தன் பதினம் வயதில் தீட்டிய ஓவியங்களில் ஒன்று.  ஒரு மாத நாட்காட்டியில் உள்ள ஓவியம் ஒன்றினைப் பார்த்து அவர் வரைந்தது.  வாட்டர் கலரில் வாஷ் டிராயிங் போல் இல்லாமல் ஆயில் பெயிண்ட்டிங் எஃபெக்ட் வருவது போல வரைவது அவருக்குப்  பிடித்த முறை. அதன்படியே வரைந்துள்ளார். வரைந்து வண்ணம் தீட்ட உபயோகித்து HB  pencil, Water colours, Round Brushes (probably size numbers 0 to 5), and Sketch Pens  (camel products of http://www.camlin.com )


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3

ஜெய்ப்பூர் நகரம்

ஏன் சிரித்தார்கள்?

தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். திருமதி.S. உமா, தில்லி

ஜெய்ப்பூருக்கு முதன்முதலில் கிளம்பும்போது அங்கு மொழிப்பிரச்சனை ஏற்படும் என முதலில் நான் கனவில் கூட நினைக்கவில்லை.  சரி நாம்தான் ஹிந்தி படித்திருக்கிறோமோ, எழுதப்படிக்கத் தெரியும், பேசவும் இரண்டொரு மாதங்களில் வந்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது.  ரயிலில் ஏறியதுமே நான் நினைத்தது தவறு எனப்புரிந்தது.  அவர்கள் ஹிந்தியில் கேட்பது அவ்வளவு எளிதாகப்புரியவில்லை.  இரண்டு மூன்று முறை 'என்ன?  என்ன?' என்று கேட்டபின்பே புரிந்தது.

திரும்ப பதில் பேசுவதிலும் சிரமமிருந்தது.

ஜெய்ப்பூர் போனதும் பிரச்சனை அதிகமாகவே இருந்தது.  ராஜஸ்தானிகள் பேசும்போது அவர்கள் மொழியும் கலந்து பேசுவதால் தலையும் புரியாது, வாலும் புரியாது.  வீட்டில் சித்தப்பா குடும்பத்தினருடன் தமிழில்தான் உரையாடல்.  வேலையில்  ஆங்கிலம், ஹிந்தி என்று கலந்துகட்டி அடித்ததால் ஆறு மாதங்களில் ஓரளவு சமாளிக்கும் அளவு தேறியிருந்தேன்.  ஆனாலும் இன்றுவரை நிறைய வார்த்தைகள் புரியாது.

வேலையில் சேர்ந்து எட்டு மாதங்களிலேயே அதைவிட இன்னொரு நல்ல வாய்ப்பு கிடைக்கவே மாறினேன்.  சித்தப்பா பெண்கள் இருவரும் பார்ட்டி கேட்டதால் சினிமா போகலாம் என முடிவு செய்தோம்.  'ஜுட்வா' (judwah) என்ற
ஹிந்திப்படத்திற்குப்போகலாம் என முடிவானது.  டிக்கெட் வாங்கிவிட்டு வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தோம்.  அப்போது என் கவனம் அங்கே ஒட்டியிருந்த போஸ்டரின் பக்கம் சென்றது.  சல்மான்கான் இரண்டு வேறு வேறு கெட் - அப்புகளில் இருந்தார்.  நான் சும்மா இருக்காமல் தங்கைகளிடம் 'இந்த படத்தில் சல்மான்கான் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் போல' என்றேன்.  அவ்வளவுதான் எல்லாரும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர்.  எதற்கு என்று புரியவில்லை.

அவர்களும் நிறுத்தும் வழியாய் இல்லை.  நானும் பொறுமையை இழந்து 'இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஆளாளுக்கு சிரிக்கிறீர்கள்' என்று கேட்டதற்கு என் பெரிய தங்கை சொன்ன பதில்

"உமாக்கா, ஜுட்வா என்றால் இரட்டைப்பிறவி என்று அர்த்தம்"

- S. உமா, தில்லி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4

குழந்தைகளின் உலகமே தனி!
ஆக்கம்: By K.முத்துராமகிருஷ்ணன், லால்குடி

ஒவ்வொன்றையும் ஆய்ந்து,பார்த்து அறிந்து, தொட்டு, சுவைத்து,கேட்டு அறியும் குட்டி விஞ்ஞானிகள்தான் குழந்தைகள். மலர்கள் மொட்டு அவிழ்வதுபோல அவர்களுக்கு இந்த உலகத்தின் ஆச்சரியங்களும், இந்த உலகத்திற்குக் குழந்தைகளும் மலர்கிறார்கள்.

 இந்த உலகம் கண்கள் விரிய முக மலர்ச்சியுடன் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது.

பதிலுக்குக் குழந்தைகளும் உலகத்தை ஆனந்தமாக அனுபவிக்கின்றன.

'உள்ள நிறைவினில் கள்ளம் புகுந்திடில் உள்ள நிறைவாமோ...?' கள்ளம் அறியாத குழந்தைகள் உள்ள நிறைவுடன் வளைய வரும்.
உலகாயதம் என்ற நஞ்சு கலவாத தேன் போன்றவர்கள் குழந்தைகள்.
போலியான முகத் திரையயோ, உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடமோ குழந்தைகளிடம் இல்லை.

ஒரு குழந்தை துள்ளி விளையாடும் இடத்தில் எல்லா உயிர்களும் புத்துணர்ச்சி அடைகின்றன.8 வயதுவரை இந்த நிலை தொடர்கிறது.

அவர்களுடைய சிந்தனை ஓட்டத்தை யாராலும் கணிக்க முடியாது. நாம் அவர்களிடம் எதிபார்ப்பது ஒற்றைப் பாதை சிந்தனையே. வீட்டிலும், பள்ளியிலும்  நாம் போட்டு வைத்துள்ள சட்டகத்தில் அவர்கள் அடங்க வேண்டும்/பொருத்திக் கொள்ள வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம்.
அதற்குள் தங்களை பொருத்திக் கொள்ள முடியாத குழந்தைகளை மன நிலைக் குறைபாடு உள்ளவர்கள் என்று நாமே முத்திரை குத்துகிறோம்.

அமெரிக்காவில் வித்தியாசமாகப் பள்ளிகள் இருக்கும் என்று ஒரு நினைப்பு இங்கு உள்ளது.அப்படி அல்ல. அங்கேயும் 'நான் சொன்னபடி புரிந்துகொள்' என்ற ஆசிரியர்கள் உண்டு என்பதை அறிந்தேன்.

2 வது வகுப்புப் படிக்கும் மாணவர்களிடம் வித்தியாசமானதைக் காணும் பயிற்சி அளிக்கப்படுகிறது.(Odd man out)

ஒரு மனிதன், ஒரு நாய்,ஒரு பன்றி ஆகியவற்றின் படங்கள் உள்ள தாள் ஒவ்வொரு குழந்தையின் கைகளிலும் கொடுக்கப் பட்டது. 'இவற்றில் எது வித்தியாசமானது' என்று ஆசிரியை கேட்கிறார். ஆசிரியையின் எதிர்பார்ப்பு குழந்தைகள் மனிதனைச் சொல்ல வேண்டும்; ஏனெனில் மற்ற இரண்டும் மிருகங்கள். ஒரு பையன் பன்றியைச் சொல்கிறான்.

காரண்ம் கேட்டதற்கு இப்படிச் சொன்னான்:'நாயும் மனிதனும் ஒன்றாக ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். பன்றியை அதுபோல ஒரு 'பெட்' ஆகப் பெரும் பான்மையோர் வைத்துக்கொள்வதில்லை. அதனால் இந்த மூவரில் பன்றியே
வித்தியாசமானது."

இதில் என்ன தவறு? இப்படிச் சொல்வதும் ஒரு கோணம்தானே?

ஆனால் அந்தப் பையனுக்கு 'கோணப் பார்வை' என்று பெயர் கிடைத்தது.

இன்னொரு பையன் பசுமாட்டைப்பற்றி 4 வரிகள் எழுதச் சொன்னால் இவ்வாறு எழுதினான்: "பசுவிற்கு 4 காலுண்டு.இரண்டு கொம்பு உண்டு. கிட்டப்போனால் முட்டிவிடும்."

தனக்குத் தெரிந்ததை சொந்தமாக தனக்குத் தெரிந்த மொழியில் எழுதினான் சிறுவன்.

ஆசிரியர் எதிர்பார்த்ததோ,"பசு ஒரு சாதுவான பிராணி. அது நமக்குப் பாலைத் தருகிறது. பால் நமது உடல்/எலும்பு வளர்ச்சிக்கு அவசியமாகிறது'

பையனுக்கு வித்தியாசமான மூளை என்று பட்டம் கட்டப்பட்டான்.
********************************************************
இது நான் தஞ்சையில் ஒரு பள்ளியினுடன் தொடர்பில் இருந்த போது நடந்த சம்பவம்.

ஒரு சிறுவன் பிராமண வகுப்பைச் சார்ந்தவன்.வீட்டில் அவர்கள் வழக்கப்படி அசைவம் சமையல் முற்றிலும் விலக்கப்பட்ட சூழல். நல்ல‌ சூடிக்கையான பையன்.அவனால் சும்மா ஒரு நிமிடம் கூட உட்கார முடியாது.

ஒரு நாள் வகுப்பறையின் மூலையில் பெரிய கூட்டம். ஆசிரியை சத்தம் கொடுக்காமல் சிறார்களின் பின்னால் நின்று என்ன‌ என்று க‌வனித்துள்ளர்.
ஒரு சிறிய கண்ணாடிக் குடுவையில் இரண்டு தங்கமீன்கள் வளைய வருகின்றன. அதனை மாணவர்கள் ஆர்வமுடன் போய் போய் பார்க்கின்றனர்.அதனை அவர்களுக்குக் காட்டுபவன் அந்த அந்தணச் சிறுவன்.

ஆசிரியை தன் இருப்பைக் காட்டிக் கொண்டு விசாரணையைத் துவக்குகிறார்.

அந்த 'மீனவ நண்பனை'விசாரிக்கிறார். அவன் அந்த மீன் பற்றிய எல்லாத் தகவல்களையும் சொல்கிறான். அந்த மீனின் அறிவியல் பெயர், அதன் உணவு முறை,அது கிடைக்கும்  கடலின் பெயர், அது இருக்கும் இடத்தில் அமைதியும்
நல்லெண்ணமும் இருக்கும் என்ற மக்களின் நம்பிக்கை, தன் வகுப்பறையில் எல்லோருக்கும் நட்பு வளர்ந்து ,அனைவரின் மதிப்பெண்களும் உயர‌ வேண்டும் என்று தான் எடுத்துள்ள முன் முயற்சி .. என்று ஆர்வத்துடன் ஆசிரியைக்குப் பாடம்  நடத்துகிறான் அந்த மாணவன்.

ஆசிரியர்களுடைய ஒரு மனோபாவம் என்னவெனில், அவர்களுக்கு மற்றவர்கள் விவரமாகப் பேசினால் பிடிக்காது. (நம்ம வாத்தியார் ஐயா மட்டும்தான் எக்ஸெப்ஷன்.)

பையன் வகுப்பின் அமைதிக்கும், கட்டுக் கோப்புக்கும் சவால் விடுகிறான் என்று சத்தம் போட்டார் ஆசிரியை. அந்த மீன்களை அவன் கதறக் கதறக் கேட்காமல் ஜன்னல் வழியே வெளியில் கொட்டினார்.அவற்றினை நாயும், காகமும் வந்து கவ்விப் போவதைப் பார்த்துக் கேவிக் கேவி அழுதான் சிறுவன்.

அதன் பின்னர் அந்தப் பையன் படிப்பில் காட்டிய ஆர்வம் குறைந்தது. அவனுடைய ஊக்கம் தூக்கத்தைத் தழுவியது. வீட்டுக்கு அவன் மீன் வளர்த்த செய்தி சொல்லப்பட்டது.

"ஒரு பிராமணனாப் பொறந்துட்டு இப்படிச் செய்யலாமாடா? நம்ம குல மானமே போச்சுடா"என்று அப்பா அவனை மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கினார்.

அவனால் இந்த சமூகத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

தவறாகச் சொல்கிறேன்.

இந்தச் சமூகத்தால் அவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே சரி.

வீட்டிலும் பள்ளியிலும் மட்டம் தட்டப்பட்டு உதவாக்கரை என்று பெயர் எடுத்தான்.அப்படியே ஆகியும் விட்டான்.

குழந்தைகளைப் புரிந்து கொள்ளுவோம்.குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே.

"இன்பம் எனச் சில கதைகள் -- எனக்கு
ஏற்றம் என்றும் வெற்றி என்றும் சில கதைகள்
துன்பமெனச் சில கதைகள் -- கெட்ட‌
தோல்வி என்றும் வீழ்ச்சி என்றும் சிலகதைகள்
என் பருவம் என்றன் விருப்பம் -- எனும்
இவற்றினுக்கு இணங்க என்னுளம் அறிந்தே
அன்பொடு அவள் சொல்லிவருவாள்; -- அதில
அற்புதமுண் டாய்ப் பரவசம் அடைவேன்."

"கண்ணன் என் தாய்" பாரதியின் பாடலில் கண்டுள்ளபடி தாயோ, ஆசிரியையோ அல்லது இருவருமோ அமைந்து விட்டால் குழந்தையின் மன‌வளர்ச்சி சும்மா 'ஜெட்' வேகம் பிடிக்கும்.

குழந்தைகளைப் புரிந்து கொள்ளுவோம்.குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே. !

நன்றி வணக்கம்! வாழ்க வளமுடன்!

ஆக்கியோன்: கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)

கீழே உள்ள கானொளியும் அவர் அனுப்பியதுதான். அதையும் பாருங்கள்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5
தண்ணீர்மலை முருகன் கோவிலின் நுழைவாயில்
தண்ணீர் மலையானே, தங்கமயில் ஏறி வருவாய் நீயே!
கவிதை ஆக்கம்: ஆலாசியம்.கோ, சிங்கப்பூர்

விநாயகர் காப்பு!

ஆனை முகத்தோனே ஆறுமுகனுக்கு மூத்தோனே  
வினைதீர்க்கும் நாயகனே வேத முதல்வனே 
சுனைக் கடிகமலமலர் பூத்தக் கற்பகமே 
நினைச் சரணமென்று பணிகிறேன்!

வெண்பா!

தண்ணீர்மலை உறையும் முருகா! -நாங்கள்
வேண்டும் வரம்தர வேண்டும் இறைவா! 
வெள்ளை மனம்வேண்டும் முருகா! -வீணான  
தொல்லை தரும் இருள் நீங்கவே - சிறு 
பிள்ளை குணமது வேண்டும் முருகா! -நெஞ்சில் 
கள்ளமில்லா எண்ணமதை நாளும் பெறவே 
உள்ளன்போடு தொழுகிறோம் முருகா! -உணர்வில் 
உயிரில் உறைந்திடுவாய் குமரா! (1)

சத்தியத்தின் திருவுருவே முருகா! -சலிப்பில்லா
சத்திய மனம் தருவாய் சக்திகுமரா!
சங்கடம் தீர்ப்பவனே முருகா! -ஒப்பில்லா
சங்கரனின் புத்திரனே முத்தமிழ் குமரா!
சரவணப் பொய்கையிலே உதித்தவனே முருகா! 
சரணகோஷம் பாடிப்பணிகின்றோம் தலைவா! -சிவ
சக்தியின் மைந்தனே முருகா! -அளவிலா
சக்தியைத் தருபவனே சுவாமிநாதா!(2)

கருணையில்லையோ? என்மேல் உனக்கு கனிவுமில்லையோ?
கருத்தநாயகியின் கணவனேத் தொந்திபெருத்த நாதனின்சோதரனே!
வறுத்து எடுக்குதையா! வறுமையது -எனையாவரும்
வெறுத்து ஒதுக்கிடவே; நொறுக்கியே போட்டதையா! 
தடுத்து நிறுத்துமையா! எந்தன் தரித்திரியம் போய்விடவே 
விடுத்து எழுந்திடேன் நிந்தன் பாதமலர்தனையே! 
பொறுக்க முடியலையே முருகா! நீயுமின்னும் 
பொறுப்பதேனோ? எனைக்காக்க மறுப்பதேனோ?(3)   

நோய்தீர்ப்பாய் முருகா! மனப் பேயால் -வந்த
நோய்தீர்ப்பாய் முருகா! காணும் யாவிலும்
மெய்யதையே கண்டுணரும் வழியதைக் கூறாயோ!
ஐய! தேனினும் இனியனே தென்பழனி முருகனே
மெய்யா! ஊனிளுரைந்து உயிரில் கலந்தோனோ! 
பொய்யர்தம் பொய்யுரையை பொறுக்கும் மனமதை 
மையல் கொள்ளச் செய்வாயே மயில்வாகனனே!
தையல் நாயகியின் புதல்வனே!(4)

வேலை வேண்டும்; வேலையா! ஏதாவதொரு 
வேலை வேண்டும் முருகையா! -நாங்கள்
தங்கவோர் வீடுவேண்டும் வேலையா! தங்கவேலையா!
அங்கமெல்லாம் மின்னவே தங்கவைர நகைவேண்டும்
தங்கமான வேலையா! வைரவேலையா! -உந்தன்
மயில்மேய நன்புஞ்சைக் காடுவேண்டும் கதிர்வேலையா! 
மயிலோடுவந்த சேவல்கூவ கேணிமேடுவேண்டும் கந்தையா!   
மயிலேரிவந்தேநீ வாழ்த்தவேண்டும் சுப்பையா!(5)

இல்லறம் நல்லறமாம் முருகா! -அந்த 
நல்லறம் எனக்குமின்னும் வாய்க்கவில்லையே -திருக்குமரா!
சொல்லறம் கொண்டிங்குனைப் பணிகின்றேன் -நீயெனக்கு
நல்லதைச் செய்வாயென நம்பியுனை போற்றுகின்றேன் 
கள்ளமில்லா நல்லோனை கடமைத்தவறா வல்லோனை
உள்ளமெல்லாம் நினைத்தவிர வேறொன்றை நினையாதானை
நல்கணவனை யான்பெற்றிடவே -எல்லையிலா நினது
நல்கருணை பொழிவாய் தேவதேவனே!(6)

பிள்ளையொன்று வேண்டிநின்றோம் முருகா! -நீயும்
பேசாமல் இருப்பதேன் முத்துக்குமரா
கிள்ளைமொழி  கேட்டிடவேங்கும் நெஞ்சம் -எந்தன்  
சொல்லை நீயும்கேளா மலிருப்பதேனோ? கந்தா!
கொள்ளை இன்பம் கோடிப்பணமிவை -எல்லையில்லா 
பிள்ளையன்பு முத்தத்திற்கு ஈடாகுமோ? நாதா!  
சொல்லித்தான் தெரியுமோ? முருகா! -உந்தன்
பிள்ளைநான் படும்பாடறியாயோ! சிவபாலா! (7)

பாராமுகமேனோ? ஆராமுதனே! ஆறுமுகனே! -பதில்
கூறாயோ! நினது திருவாய் மலர்ந்தே!
தீராயோ! ஏழையென் பாவங்களை வேரோடுப்பிடிங்கி 
ஆரத்தழுவாயோ! உயிர்கசிய ஊனுருக்கி பணிகின்றேன் 
தாராயோ! எனதொப்புள்க் கொடிமுல்லை துயர்போக்கி 
பார்த்தாயோ! பாவிநான் படும்பாட்டை -அன்புக்கடலே 
அருள்வாயோ! அற்பமான வாழ்வதையும் ஆனந்தமாக்க
உதறுவாயோ! இறுகப்பிடித்தேனின் மலர்ப்பாதத்தை.(8)

ஆணவம் போக்கவேண்டும் முருகா! -வாழ்வில்
ஆனந்தம் பூக்கவேண்டும் ஆறுமுகா! - கொடும்
அகந்தையை அழிக்கவேண்டும் முருகா! -மனதில்
அகமாயையை நீக்கவேண்டும் மாயோன் மருகா! 
கர்வம் களையவேண்டும் முருகா! -இப்பிறப்பில்
கர்மவினை யாவும்கரைந்தோட வேண்டும் கந்தா!
சர்வமும் நீயானாய் முருகா! -அந்த 
சர்வேசன் செல்லமான சிவகுமரா!(9)

ஊனமதை போக்குவாய் முருகா -மனயீன
ஊனமதை போக்குவாய், கோபமும்; குரோதமும் 
தானென்ற அகந்தையும்; தகமையில்லா ஆணவமும்;
வீணான ஆசையும்; வேண்டாத மோகமும் 
தானாகப்போகவே தயைசெய்வாய் எந்தையே! ஞானவேலா!
தேனான பாடல்களை தினந்தோறும் வார்த்திடவே
கானமழையில் நாளும் நானுனை நனைத்திடவே 
ஞானமதை எனக்கருள்வாய் ஞானக்கடலே!(10)

எங்கும் நிறைந்தவனே முருகா! இங்கில்லாமல் போவாயோ!
சங்கடத்தில் மூழ்கித் தவிக்கின்றேன் -நான்வலம்புரி
சங்கெடுத்தூதி அழைகின்றேன்நின் சங்குப்பூக் காதில்விழவில்லையோ?
அங்கமெல்லாம் சிலிர்க்கவே ஆறுமுகனுனை நினைகின்றேன் 
தங்கமயிலேறி வாராயோ! வெகுதூரம் சென்றுமறைவாயோ?
பொங்கிப் பெருகும் துக்கத்தால் நெஞ்சடைத்து நிற்கின்றேன்
கங்கையெனப்பெருகும் கண்ணீரால் நின்தங்கப்பாதம் நனைக்கின்றேன்
தயங்காமல் வந்தென்னைக்காவாய் பெம்மானே!(11) 

கனவா இல்லை நினைவா கந்தையா! 
கணநேரம் கண்டக் காட்சியது முருகையா!
மனமது உன்னினைவில் மஞ்சத்தில் படுத்திருந்தேன் 
மணக்கோல உன்படத்தில் மல்லிகைப் பூக்கக்கண்டேன் 
மணம்பரப்பும் மல்லிகைவாசம் என்னுயிர்வரை வீசகொண்டேன் 
நினது கோளவிழிகள் அசையக்கண்டேன் -நினதிருக்கர
ஞானவேலது பறந்தெனைவலம் வந்துனை அடையக்கண்டேன்
தேனான அனுபவமது தேனினுமினியனே!(12)

ஆக்கம்: ஆலாசியம்.கோ, சிங்கப்பூர்
---------------------------------
வாத்தியாரின் அடிக்குறிப்பு:

வெண்பா என்றால் நாலடிதானே வரும் என்று நினைப்பவர்கள், கீழே உள்ள தளத்தைப் பாருங்கள். அதில்வெண்பாவிற்கு உரிய இலக்கணத்தை விவரமாகக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆலாசியம் எழுதிய வெண்பா பஃறொடை வெண்பா என்ற பிரிவில் வரும். 5 முதல் 12 அடிவரையில் அமையும். ஓரெதுகையோ, பல எதுகையோ பெற்று வரும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.


எனக்குத் தெரியாதா கவிதை எழுத? என்று சொல்லி, நமது லால்குடிக்காரரும் ஒரு கவிதை எழுதி அனுப்பியுள்ளார்

இந்தக்கவிதை ஒரு சம்ஸ்கிருதக் கவிதையாம். கவிஞர் பெயர் தெரியவில்லையாம். ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்தவர் பே நா அப்புசாமி. தமிழில் எழுதியவர். கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி

"உந்தன் கல் இதயம்"
==================

உன் கண்களை 
லில்லிபூவின் நீலத்தில் படைத்தான்
உன் எழில் முகத்தை 
அன்றலர்ந்த தாமரையாற் செய்தான்
உன் பற்களை 
வெண்மை பளிரீடும் மல்லியால் செதுக்கினான் 
உன் அதரத்தை 
புத்தம் புதிய துளிர் இலைகளால் ஆக்கினான்
உன் கரங்களை 
சம்பக மலரின் இதழ்களால் உருவமைத்தான்


அது எப்படி, என் அன்பே!
அவன்,(அதுதான் உன்னைப் ப‌டைத்தவன்)
உன் இதயத்தை மட்டும் கல்லால் சமைத்தான்?
- கே.முத்துராமகிருஷ்ணன்

+++++++++++++++++++++++++++++++++++++++++++
7

நகைச்சுவை







ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு பொறியாளராக இருக்கும் நம் நாயகன், ஒரு பெண்ணை மணந்துகொண்டார். சுமாரான அழகு உள்ளவள். அத்துடன் குணக்கேடானவள். இரண்டாண்டு வாழ்க்கைக்குப் பிறகு ஓய்ந்து போன நமது நாயகன் மாமனாருக்கு கோபத்துடன் மின்னஞ்சல் அனுப்பினான்.

Your product not meeting my requirement
உங்களுடைய தயாரிப்பு என்னுடைய தேவைகளுக்குப் பொருந்திவரவில்லை!

உடனே மாமனாரிடம் இருந்து பதில் வந்தது:

Warranty expired.Manufacturer not responsible
வாரன்ட்டி பிரீயட் முடிந்து விட்டது தயாரிப்பாளர் அதற்குப் பொறுப்பில்லை

Sent by G.அனந்தமுருகன்

+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

54 comments:

  1. தனுசுக்காரரின் கவிதையை படித்ததும்
    ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்ற பாடல் தான் நினைவில்...

    நல்ல தோட்டத்தை அழித்து கடன் வாங்கி
    மனிதராக வழிபடுபவருக்கு கோவில் கட்டி வங்கியில் கடன் வாங்கி இன்னமும் க்டனை அடைத்துக் கொண்டிருக்கும் ஒரு செய்தி தெரியுமா,,?

    இத்தனைக்கும் தோட்டம் இருந்த அந்த இடம் இறைவன் அமைந்த இடமாம்..?
    (கேள்வியை கேட்டு விட்டு நிறுத்துவதாக எண்ண வேண்டாம், அது எது எழுதி சர்ச்சையை ஏற்படுத்த விரும்பவில்லை)

    இப்படியும் இருக்கு என்பதற்காக இது..

    .....
    துப்பறியும் சிங்கம்
    சகோதரி தேமொழியாரின் அடுத்த பரிணாமமும் அவர் விரும்பி ஏற்ற கலையும் அற்புதம் ...

    ஓவிய வாணர்களுக்குள்ள பொறுமை ஓவியத்தின் ஒவ்வொரு அசைவிலும் தெரிகிறது..
    நீவிர் துப்பறியும் சிங்கம் தான்
    இல்லை .. இல்லை...
    பொறுமையின் சிகரம்..

    ....

    தில்லி சகோதரி தந்த மொழி விருந்து
    கடைசி punchல் நம்மையும் சிரிக்க வைத்தது.. அந்த காய்ச்சல் இவர்களையும் தொற்றிக் கொண்டதோ..

    ....

    அப்பன் முருகனிடம்
    அவர் வைத்த வேண்டுகோள் பட்டியல்
    அப்பப்பபா....

    இறைவனுக்கு சொல்ல வேண்டும் நன்றி
    இந்த வாழ்க்கை அமையும் துயர் இன்றி

    என சொல்லி வாழ்த்தி அமைகிறோம்
    எமது உள்ளத்து அன்புகளுடன்..

    ,,,,,

    அனந்த முருகனும்
    அய்யர் வேண்டுகோளை ஏற்று

    தமிழில் சமைத்த நகைச்சுவை
    தக்கபடி எத்தனை ஆண்டுகள் வாரன்டி?

    விழிப்புணர்வு செய்திகளை தரும்
    உங்கள் இலாக்கா மாற்றப்பட்டுவிட்டதா

    சென்னை சபரியாரின் பொறுப்பையும்
    கூடுதலாக கவணிக்க ஆனை வந்ததோ..

    எண்களை கொண்டு
    எண்ணத்தை அறிய விரும்பிய

    உமது சிந்தனை பாராட்டுக்குரியது
    உளம் மகிழ்ந்து வாழ்த்துகிறோம்..

    ReplyDelete
  2. ஐயா வணக்கம்!

    1வது ஆக்கத்தில் தெரியும் ஆதங்கம் மனதை சுடுகிறது! சிறுவயதில் திருவரங்கம் செல்லும்போது கண்ட மாம்பழச் சோலைகள்,தற்போது காங்கிரீட் காடுகளாக மாறிப் போனது..ஒரு சான்று!

    ReplyDelete
  3. என் படத்திற்கு பதிவில் வாய்ப்பளித்த வாத்தியாருக்கு நன்றி.
    அதை ரசித்தவர்களுக்கு நன்றி. வாரம் ஒருமுறை எனக்கு பட்டமளிக்கும் ஐயர் ஐயா அவர்களுக்கும் சிறப்பு நன்றி.

    வேடிக்கைப் பார்ப்பதே விபத்திற்கு முக்கிய காரணம்
    என்பதை "மட்டுமே" நான் ஆனந்தமுருகனின் படம் மூலம் புரிந்து கொண்டேன் :))))))

    ReplyDelete
  4. "பன்னிரு விழியோனை
    பன்னிரு பாக்களினால்
    பாங்குடனே போற்றியோர்
    பாங்கினைப் போற்றுதும்"

    படை வீடுகளுக்கீராக மேலுமோர் பன்னிரு பாக்கள் எழுத வேண்டுகிரறேன் சகோதரரை.

    தோடுடைய செவியோனின் பன்னிரு திருமறை படிக்க நேரம் இல்லாதோர்,
    நீங்கள் வடித்த அவர் குமரனைப் போற்றும் எளிய பன்னிரு பாக்கள் படித்து மகிழலாம்.
    வாழ்த்துகள்

    ReplyDelete
  5. எனது ஆக்கத்தை வெளியிட்ட அய்யா அவர்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. ஓவிய அரசி தோழி அவர்களின் கை வண்ணம் மிக்க அருமை .நல்ல திறமை .

    ReplyDelete
  7. காலடியில் கிடக்கும் மண் மீது ஆசை வைக்கக் கூடாதா,கவிஞரே?சரிங்கோ!
    ஆனாப்பாருங்கோ காலடியில் கிடக்கும் காலணியில் இருக்கும் ஆசையே நமக்கு இன்னும் போக‌லேங்கோ.

    2050ல் இந்தியாவின் மக்கட்தொகை 175 கோடியாம். புதிய வீடுகளும் வசிப்பிடங்களும் தோன்றுவது தவிர்க்க முடியாதுங்கோ.எல்லாவற்றிற்கும் இயற்கையிடம் ஒரு பதில் இருக்கும். 1920ல் 30 கோடி! இன்று 100 கோடி! எப்படியோ எல்லாவற்றையும் பூ மாதா தாங்கிக் கொண்டுதான் இருக்கிறாள்.

    கவிதை என்ற அளவில் மிகவும் நன்றாக இருக்கிறது தனுசு சார்!. கருத்து என்ற அளவில் அனைவருடைய ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன‌.

    ReplyDelete
  8. 'எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே'
    'அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே'
    என்ற வரிகள் எவ்வளவு உண்மை!.நிஜமாகவே நெஞ்சம் கனத்துப் போனது.
    ஆலாசியம் சாரின் கவிதைவரிகளும் மிக அருமை. குறிப்பாக குழந்தை வரம் கேட்டு குமரனிடம் வேண்டும் வரிகள் கண்களில் நீரை வரவழைத்தன.

    ReplyDelete
  9. "எப்பப் பார்த்தாலும் கணினியே பார்க்கும் நவீன காலத்துக் கணவனைப் போல‌
    என்ன எப்ப பார்த்தாலும் புல்லாங்குழல்?" பிடிங்கிவிட்டாளோ ராதா? அல்லது நப்பின்னையோ?ருக்மணியோ?

    நல்ல ஓவிய‌ம். வாத்தியார் சொன்ன டெக்னிகல் செய்தியெல்லாம் தலைக்குள்ள போகலிங்கோ. பாராட்டுக்கள் தேமொழி!

    ReplyDelete
  10. மொழிப் பிரச்சனைத் தமிழ் நாட்டில் மட்டுமே இல்லை. எல்லா இடத்திலேயும்தான். இந்தி எல்லா இடத்திலேயும் ஒரே மாதிரி பேசப்படுவதில்லை. வங்காளிகளும், மராட்டியர்களும் நம்மைப் போலவே இந்தியை வேறாக நினைக்கும் மனோ பாவம் உள்ளவர்களே. பகிர்வுக்கு நன்றி உமாஜி!

    ReplyDelete
  11. டெல்லி உமா-மாணவர் மலருக்கு
    வந்தார் தாமதமா-ஆனால்
    சிரிக்க வைத்தார் பலமா..

    இடம் மாறும் எல்லோருக்கும் மொழிப் பிரச்சனை சந்தித்தே தீர வேண்டும் .நானும் புருனெய் சென்ற புதிதில் சீனர்களுடன் பேசும் போது மண்டை வெடிக்கு ஆளானேன் . இவர்களுக்கு R உச்சரிப்பு வராது அந்த R உச்சரிப்பை" L" கொண்டு தான் உச்சரிப்பார்கள். ரூட்என்பதை லூட் என்பார்கள்.நாளடைவில் புரிந்துக் கொண்டேன் .இந்த பிரச்சினைகளால் ஆங்கிலேயர்கள் சீனர்களுடன் அதிகம் ஒட்டுவதில்லை.

    ReplyDelete
  12. இந்தப் பின்னூட்டம் இடும் வரை யாரும் கேஎமார்கேயின் ஆக்கத்தைப்பற்றி ஒன்று சொல்லாததால் அவரே சொல்லிக் கொள்கிறார். ஆக்கம் சுமார். காணொளி ஜோர். அதுவும் கரணம் அடிக்கும் குழந்தை சூப்பர்!

    ReplyDelete
  13. சல்மான்கான் படம் போடாமல் இரட்டையர் போல் தோற்றம் தரும் ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் ஹர்மன் பவீஜா படம் ஏன்.. ஏன்?.. உமாவை வாத்தியார் மேலும் குழப்பப் பார்க்கிறாரோ?

    உமாவின் மொழிப் புலமையை வியந்து அனைவரும் மகிழ்ந்த நிகழ்ச்சியை உமா விவரித்ததை படித்து நானும் மகிழ்ந்தேன்.
    -----

    ஆனந்தமுருகன் நகைச்சுவை நன்றாக இருக்கிறது, தமிழ் இவருக்கு தண்ணீர் பட்ட பாடு போலிருகிறது. பாவம் தரமற்ற துணையைக் கைபிடித்த தரக்கட்டுப்பாடு பொறியாளர், ம்ம் ..ம்ம்ம்... ஆனால் துணையின் தரம் பற்றி புரிய இரண்டு ஆண்டுகள் தேவையா அவருக்கு?
    -----

    முன்பு ஸ்ரீஷோபனா குழந்தைகளைப் புரிந்து கொள்ளுவோம் என்று அருமையான கதை சொன்னார், அதைப் போலவே பாரதியின் மேற்கோளுடன் கட்டுரை தந்துள்ளார் KMRK ஐயா. அவருடைய கட்டுரையும், காணொளியும், கவிதையும் அருமை.
    -----

    வாத்தியாரின் அருமையான பசும் வயல்வெளியின் படத்தைப் பார்த்துவிட்டு தனுசுவின் கவிதையைப் படித்தால் பகீர் என்ற உணர்வு எவருக்கும் தானாக வரும். பரம்பரையாக வந்த விவசாயக் குடும்பத்தினரே இப்பொழுதெல்லாம் விவசாயத்தை விரும்புவதில்லை தனுசு. "காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்" என்று பாரதியார் பாடியதெல்லாம் அந்தக் காலம். "கிரானைட் நிலம் வேண்டும் படையப்பா கிரானைட் நிலம் வேண்டும்" என்பது இந்தக் காலம். உங்களை இப்படி புலம்பும்படி செய்து விட்டார்களே மக்கள்.

    ReplyDelete
  14. பிரார்த்தனைக்கு ஏற்ற கவிதையை அளித்த சிங்கைக் கவிராயருக்குப் பாராட்டுக்கள்.வேண்டுதல்கள் எல்லாம் அந்த அந்த குறை உள்ளவர்கள் அந்த அந்த பத்திகளைப் பாடிக் கொள்ளாலாம். இசை தெரிந்தவர்கள் இதற்கு ஒரு ராகம் போடலாம்.இலக்கண்ம் எல்லாம் நமக்கு வேப்பங்காய்.

    tamilvu அனைவரும் படிக்க வேண்டிய தளம். அறிமுகம் செய்த வாத்தியாருக்கு நன்றி. நாட்டுடமையாக்கப்பட்ட 60 எழுத்தாளர்களின் ஆக்க‌ங்கள் எல்லாம் கிடைக்கும்.பழந்த‌மிழ் இலக்கியம் அனைத்தும்கிடைக்கும்.நூலகத்திற்குப்
    போய் பாருங்கள்.

    ReplyDelete
  15. ஆசிரியருக்கு வணக்கம்,
    நான் சென்ற வாரம் எழுதியக் கவிதைகள் பற்றிய சிந்தனையில் இருக்கும் போது... பேரின்பக் கவிதைகளை நிறைய எழுதி மனதை சாந்தம் செய்ய வேண்டும் என்றெண்ணி... துணிந்தேன்..
    அன்றும் தைப்பூசம் என்பதால் அப்பன் முருகனைப் பற்றி எழுத அவனை மனதில் நினைத்து எழுதினேன்... இதில் பல பாடல்கள் மளமளவென்று வந்து விழுந்தது தான் மிகவும் மகிழ்ச்சி யளித்தது...
    பதிவிட்டதற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  16. ஆஹா! அருமை நமது சகோதிரி தேமொழியாரின் கைவண்ணம் அருமை...
    உண்மையிலே அசந்து போனேன்...

    இத்தனை அருமையாக சித்திரம்செய்ய -அம்ம
    எத்தனைத் தவம் செய்தாயோ!

    ஆக்கத்திற்கும் பகிர்வுக்கும் நன்றிகள் சகோதிரி...

    ReplyDelete
  17. கவிஞர் தனுசு அவர்களின் கவிதை அருமை...
    பகிர்வுக்கு நன்றிகள் கவிஞரே!

    ReplyDelete
  18. சகோதிரி உமா வழக்கம் போலவே அருமையாக எழுதி இருந்தாலும்... உண்மையில் கடைசியில் சிரிக்க வைத்து விட்டார்...
    பகிர்வுக்கு நன்றிகள் சகோதிரி...

    ReplyDelete
  19. நமது கிருஷ்ணன் சார்... நல்லதொரு விஷயத்தை சிந்தனையில் கொண்டு வந்து.... அதை ஒரு தத்துவார்த்தமாக ஆரம்பித்து அருமையாக வடித்து காட்டியுள்ளார்... அருமை சார்..

    ////ஆசிரியர்களுடைய ஒரு மனோபாவம் என்னவெனில், அவர்களுக்கு மற்றவர்கள் விவரமாகப் பேசினால் பிடிக்காது. (நம்ம வாத்தியார் ஐயா மட்டும்தான் எக்ஸெப்ஷன்.)////

    இது போன்ற அனுபவம் பலமுறை இருந்தும் கல்லூரியில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை மறக்க முடியாது... அதை நான் சரி செய்ய நிறைய நாட்கள் எடுத்தது... பொதுவாக நாம் கேட்கிறோம் சொல்பவரை பின்னுக்குத் தள்ளுவது போல் அவர் வினவாமலே நாம் ஏதாவது சொல்லும் போது தான் (இங்கிதம் அங்கே உணர்ச்சி வசத்தால் மறைந்து விடுகிறது) இவைகள் வெளிப்படையாக நடக்கும்.. இருந்தும் தங்களின் கதையில் குழந்தை என்பதால் இப்படி யோசிக்க வழி இல்லை என்றாலும்... தன்னைத் தவிர மற்றவர்களுக்கு ஏதும் தெரியாது என்ற எண்ணமும், சில நேரங்களில் எங்கே நமது அறியாத்தனம் வெளி வந்துவிடுமோ என்ற பயமும் கூட ஆசிரியர்களை ஏன்? அதிகாரிகளை கூட இப்படி நடக்கச் செய்கிறது...

    நல்ல சிந்தனை... காணொளி யும் நன்று... நன்றிகள் சார்.

    தங்களின் கவிதையும் நன்று...

    ReplyDelete
  20. தயாரிப்பின் உத்திரவாதக் கெடு முடிந்தது என்பது செமக் காமடி...

    நண்பர் அனந்த முருகனின் சிரிப்பு அருமை... நன்றிகள் நண்பரே!

    ReplyDelete
  21. சிரிப்பும்,பெண்களைப் பராக்குப் பார்க்கும் இளைஞர்களின் படமும் ஆனந்தமுருகனின் அனபளிப்பு.நன்றி.

    இன்றைய தினமலரில் ஊட்டியில் குதிரைகளின் தெருக் காதலும், செல் போனில் பேசியபடி பயணம் செய்யும் ஒருவரும் உள்ள‌ புகைப்படம் வந்துள்ளது.விபத்து ஏன் நடக்காது?

    ReplyDelete
  22. ஹிந்தி டீச்சரை வகுப்பறையில் குத்தி கொலை செய்த மாணவன் .இரண்டு தினங்களுக்கு முன்பு இது முக்கிய செய்தி .

    விருப்பம் இல்லாமல் ஹிந்தி கற்கும் வெறுப்பில் மாணவன் செய்தது .பிள்ளைகளுக்கு விருப்பம் இல்லாததை அவர்களிடம் திணிப்பதை தயவு செய்து பெற்றோர்கள் கைவிட வேண்டும் .

    kmrk அவர்களின் கட்டுரை அருமை. நம் வகுப்பறையின் கண்மணிகள் பெரும்பாலும் பெற்றோர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கு ஏற்ற கட்டுரை.

    நீதிக்கு தலைவணங்கு படத்தில் தலைவர் பாடுவார்;

    எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
    மண்ணில் பிறக்கையிலே -பின்
    நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்பதிலே ......

    இதில் அன்னை வளர்ப்பு என்பது நல்ல ஒழுக்கத்தை புகட்டுவது மட்டுமல்ல , குழந்தைகள் விரும்புவது எது என்பதை கண்டறிந்து அதை அவர்களுக்கு காட்டி கொடுப்பதும் கூட .நல்ல கட்டுரை நன்றி kmrk அவர்களே .

    ReplyDelete
  23. கல் இதயம் கவிதையை வெளியிட்ட ஆசிரியருக்கு நன்றி. கூடவே குழந்தைகள் பற்றிய‌ ஆக்கத்தையும் வெளியிட்ட ஆசிரியருக்கு நன்றி.

    ஆசிரியைக் குத்திக்கொன்ற சென்னைச் சிறுவன்....? புரிதல் இல்லாத சூழல்களைத் தவிர்க்க வேண்டும் என்பதே நான் கூற வந்தது.

    ReplyDelete
  24. ஆலாசியத்தின் இறைவணக்க கவிதை ,பக்தி நிறைந்தது

    ReplyDelete
  25. kmrk அவர்களின் காதல் கவிதையை,.பாருய்யா....என்றே அட போட வைத்தது ,தொடருங்கள்,தொடருங்கள் இன்னும் பல பொழி மாற்ற கவிதைகளை தாருங்கள்.

    ReplyDelete
  26. அனந்தராமனின் warranty யை நானும் லேசாக வீட்டில் பிட்டு போட்டு பார்த்தேன் ,ஏகப்பட்ட காளிகள் ஒரே ரூபத்தில் வந்துவிட்டார்கள்.

    ReplyDelete
  27. kmr.krishnan said...காலடியில் கிடக்கும் மண் மீது ஆசை வைக்கக் கூடாதா,கவிஞரே?சரிங்கோ!
    ஆனாப்பாருங்கோ காலடியில் கிடக்கும் காலணியில் இருக்கும் ஆசையே நமக்கு இன்னும் போக‌லேங்கோ.

    2050ல் இந்தியாவின் மக்கட்தொகை 175 கோடியாம். புதிய வீடுகளும் வசிப்பிடங்களும் தோன்றுவது தவிர்க்க முடியாதுங்கோ.எல்லாவற்றிற்கும் இயற்கையிடம் ஒரு பதில் இருக்கும். 1920ல் 30 கோடி! இன்று 100 கோடி! எப்படியோ எல்லாவற்றையும் பூ மாதா தாங்கிக் கொண்டுதான் இருக்கிறாள்.
    கவிதை என்ற அளவில் மிகவும் நன்றாக இருக்கிறது தனுசு சார்!. கருத்து என்ற அளவில் அனைவருடைய ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன‌...

    KMRK அவர்களே இது நான் என்னையே மையப் படுத்தி எழுதிய கவிதை.

    ஒருவருக்கு ஒரு வீடு அவசியம் .ஆனால் அதுவே பலவீடுகள் என்பது அனாவசியம் .காசு இருக்கிறது என்பதால் மேலும் மேலும் இடங்கள் வாங்கிப் போடுவது எந்த கணக்கில்..

    எத்தனை தோப்பு துரவுகள் வயல்வெளிகள் இருந்தாலும் அத்தனைக்கும் உயில் செய்கிறார் .ஆனால் உயிர் போன பின் தன் உடல் போக ஒரு இடம் வாங்கி உயிலில் சேர்கிறார?இல்லையே. பொது மயானத்திற்கு தானே கொண்டு செல்கிறோம்.காசு இருக்கிறது என்பதால் வெட்டியாக வாங்கி போடுகிறோம் பின்னுக்கு நான்கு மடங்கு விலை போகும் ஆசைதான் காரணம் .

    வீட்டுசெலவு பிள்ளைகள் படிப்பு செலவு சிறிய தர்மம் போக மீதியை சேமிக்க நினைகையில் நினைவுக்கு வருவது மண்ணும் பொன்னும் தான் .

    நானும் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு என்று இடங்கள் வாங்கத்தான் செய்கிறேன் .எதற்கு இப்படி வாங்கி சேர்க்கிறோம் என்று கேள்வியும் வந்துக் கொண்டு தான் இருக்கிறது . பின்னலில் பிள்ளைகளுக்கு பயன் படும்,சொத்தின் மதிப்பு கூடும் என்று பதில் தெரிந்தாலும்,உள்ளுக்குள் ஒரு வெறுமை ,நம் போன்றவர்கள் ஆசைப் படுவதால் தானே இத்தனை விலை ஏற்றம் நிலங்கள் அழிப்பு போன்றவை வை நடக்கின்றன . அதைதான் எழுதினேன் .
    அரசியல் வாதிகள் செய்யும் காரயத்திப் பார்த்தால் இன்னும் அகோரமாக இருக்கிறது .

    ReplyDelete
  28. பின்னூட்டங்களை அனுப்பிவிட்டு மற்றவர்களின் பின்னூட்டங்களை படிக்கையில் பார்வதி ராமச்சந்திரனின் பின்னூட்டமும் எனது என்னத்தை ஒத்தே இருந்ததை இப்போது தான் கவனித்தேன் .

    ReplyDelete
  29. வணக்கம் ஐயா,
    தனுசு அவர்களின் கவிதை இன்றும் மிக அருமை...மண்ணாசையால் மனிதன் தன்னை அழிப்பதோடு,தான் வாழும் மண்ணையும் பலியாக்கிக் கொண்டிருக்கிறான் என்பதை அருமையான கவிதையால் ஆதங்கப்பட்டிருக்கிறார் தனுசு அவர்கள்...இப்பொழுது பல சுடுகாடுகளையும் "மல்டிப்லக்ஸ்" காம்ப்லக்ஸாக மாறிவிட்டதே...இனி நீங்கள் கூறும் அந்த இலவசமும் "கட்" ஆகும் நிலையில் தான் இன்று இருக்கிறோம்...அதற்காக தானே மின்சார சுடுகாடும் கொண்டு வரப்பட்டது...

    தேமொழி அவர்களுக்கு அந்த வயதிலேயே ஆயில் பெயிண்டிங் எஃப்க்ட்டில் ஓவியம் தீட்டுவது என்றால்,அவர் முன்பு கூறியது போல அவர் தந்தை நன்றாக ஊக்கப்படுத்தியதை உணர முடிகிறது...அழகான ஓவியம்...

    ReplyDelete
  30. உமா அவர்களின் சொ(நொ)ந்த அனுபவத்தை அழகாக பகிர்ந்து கொண்டுள்ளார்...ஹிஹிஹி...இது போன்று வடமாநிலங்களில் மொழி தெரியாது திணறுபவர்கள் அதிகம் தமிழர்கள் தான் அதிகம் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்..."ஜுட்வா" படம் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது,அப்படத்தின் பாடல்களை நானும் என் தோழிகளும் அடிக்கடி முணுமுணுப்போம்...



    இன்றைய மாணவர் மலர் "ஸ்பெஷல்" குழந்தைகள் பற்றிய‌ kmrk ஐயா அவர்களின் ஆக்கம் தான்...நான் இன்று மிகவும் ரசித்து படித்தது தங்களுடைய கட்டுரையை தான்...உண்மையான கருத்தை அழகாக கூறியுள்ளீர்கள்...சென்னையில் அண்மையில் நிகழ்ந்த அந்த மோசமான சம்பவத்தின் தாக்கமாக தான் இதை எழுதியுள்ளீர்கள் என்று நினைக்கின்றேன்...நான் பள்ளியில் படிக்கும் பொழுது தாங்கள் குறிப்பிட்டுள்ள ஆசிரியர் போன்று தான் பலரும் இருப்பார்கள்...ஆயினும் நல்ல ஆசிரியர்கள் ஓரிருவர் இருந்தனர்,மாணவர்களுக்கு நல்ல நெறிகளோடு நல்ல சிந்தனைகளை தூண்டும் விதமாக அவர்கள் பல வகுப்புகளை நடத்துவார்கள்...நல்ல மாணவர்களை நல்ல ஆசிரியர்களால் மட்டும் தான் தர முடியும் என்ற கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன்...நல்ல ஆக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  31. சென்ற வாரம் "கம்பஇராமாயணம்",இன்று "கந்த புராணம்" தந்துந்துள்ளார் ஆலாசியம் அவர்கள்(இந்த முறையாவது சரியாக சொல்லிவிட்டேனா!!!)...எளிய நடையில் கவிதை இருந்ததால் நன்றாக பாடல் வரிகளை ரசிக்க முடிகின்றது...வெண்பா செய்யுள் என்றவுடன் அதில் அமைந்துள்ள "சீர்" பிரித்து பார்க்க ஆரம்பித்து விட்டேன்...அருமையான வெண்பா நடையில் அழகான பாடலை நிறைவாய் தந்துள்ளீர்கள்...நன்றி

    kmrk அவர்களின் கவிதை ஆரம்ப வரிகள் அலை பாயுதே படத்தில் வரும் "பச்சை நிறமே" பாடலை போன்று வர்ணிக்கும் கவிதை என்று நினைத்தேன்...இறுதியில் வரும் வரிகள் என் எதிர்பார்ப்பை பொய்யாக்கி விட்டது!!!...நல்ல "பசுமையான" வர்ணித்த பாங்கு மிகவும் அருமை...உவமைப்படித்திய மலர்கள் பாங்கும் மிக நன்று...நல்ல கவிதையை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  32. வகுப்பறையின் புதிய முகப்பு படங்கள் நன்றாக இருந்தது...அச்சிறுமியின் படம் மிக அருமை ஐயா...


    அனந்த முருகனின் இரு நகைச்சுவையும் "facebook"க்கில் உலா வருபவை தானே?...ரசிக்கும்படி இருந்தது...பொருளை வாங்கியவர் அதை சரியாக உபயோகப்படுத்த(maintain) தெரியாவிட்டால்,தயாரித்தவர் தான் என்ன செய்ய முடியும்?...

    ReplyDelete
  33. ஆசிரியருக்கு வணக்கம்.. இந்த வாரம் மலர் கொஞ்சம் லைட் வெயிட்டாத் தெரியுது..விலைக் குறைப்பு அறிவிப்பை எதிர்பார்க்கலாமா?

    ReplyDelete
  34. தனுசுவின் கவிதை 'எங்கே? எங்கே?' என்ற பழைய கவிதை வரிகளையும் தனுசு ஏற்கனவே இதே கான்செப்டில் எழுதியிருந்த வரிகளையுமே நினைவுபடுத்தியது..

    ReplyDelete
  35. டில்லி ஸ்பெஷல்

    /////////கேட்பது அவ்வளவு எளிதாகப்புரியவில்லை. இரண்டு மூன்று முறை 'என்ன? என்ன?' என்று கேட்டபின்பே புரிந்தது. //////

    அச்சச்சோ..நல்ல ENT ஸ்பெஷலிஸ்ட்ட்டாப் பார்க்குறதுதானே?

    (நான் போனவாரம் சத்தமா கத்திச் சொன்னது காதிலே விழுந்து ஏதோ இந்தவாரம் ஒரு ஆர்ட்டிக்கிளை அனுப்பினீங்களே..அந்தளவுக்கு டீப்பா பாதிக்கலைன்னு நினைக்குறேன்..எதுக்கும் லேட் பண்ணாம சீக்கிரமா பார்த்துடுங்க..)

    ////ஆனாலும் இன்றுவரை நிறைய வார்த்தைகள் புரியாது.///

    அதான் எங்களுக்குத் தெரியுமே..

    ஆனாலும் இந்த உண்மையை எல்லாம் பப்ளிக்கா ஒத்துக்க ஒரு தகிரியம் வேணும்..
    அது உங்ககிட்டே நெறையா இருக்கு..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  36. தேமொழியின் ஓவியம் காவியமாய்க் கவர்ந்திழுக்கும் அழகு..

    கண்ணனின் கண்களைக் காணோம்..எங்கே புதைந்து கிடக்கிறதோ என்று ராதையின் தோளுக்கு மேலிருந்து துழாவ வேண்டியிருக்கிறது..படம் பார்த்துக் கதைக்கும் எனக்கே இப்படி என்றால் நேரில் பார்த்துக் கஷ்டப்படும் கண்ணன் நிலை..பாவம் கண்ணன்..

    ReplyDelete
  37. டைட் வொர்க் லோட் காரணமா இன்னிக்கும் கம்பெனி போகவேண்டியதாப் போச்சு..இந்தப் பக்கம் வர கொஞ்சம் லேட் ஆயிடுச்சு..
    அதுக்குள்ளே தனக்குத் தானே கமென்ட் போட்டிருக்காரே KMRK? சரியான அவசரக்காரர் என்பது சரிதான்.

    ///ஆசிரியர்களுடைய ஒரு மனோபாவம் என்னவெனில், அவர்களுக்கு மற்றவர்கள் விவரமாகப் பேசினால் பிடிக்காது.///

    ரொம்ப தகிரியம்தான் உங்களுக்கு..

    இதையெல்லாம் படிக்க மாமிக்கு எங்கே டைம்ன்னுதான இந்த அலட்சியம்?


    மொத்தத்தில் நல்ல ஆர்ட்டிகிள்..

    காணொளியிலே தொட்டிலுக்குள்ளிருந்து வெளிவர முயற்சித்து தவறி தொட்டிலுக்குள்ளேயே விழும் குழந்தை என்னைக் கவர்ந்தது..

    பொதுவில் ஆசிரியர்கள் "தங்களது வரம்பு என்ன? வேலை என்ன?எதுவரை மாணவனை வழிப்படுத்தும் கடமை தனக்குள்ளது?" என்பதனை புரிந்து நடந்துகொள்ள அவர்களுக்கு இயற்கையின் இந்தத் தலைமுறை சொல்லித்தந்த மோசமான பாடம்தான் சமீபத்து நிகழ்வு..

    திருச்சி டிரைவர் கதையும் கூட இப்படித்தான்..

    உணர்ச்சி வேகத்தில் என்ன செய்கிறோம் என்று புரியாமல் நிகழ்ந்துவிடும் கோரங்களுக்கெல்லாம் தாயை, தாயின் வளர்ப்பைக் குறைகூறும் வழக்கத்திலிருந்து நான் விலகுகிறேன்..

    அதுவும் சோதிட வகுப்பறையில் இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டிருப்பதால் சம்பவம் நிகழக் காரணமாக ஜென்ம ஜாதக கிரக நிலைகளுடன் தசாபுத்தி நடப்புக் கிரக கோச்சார நிலைகளும் இதற்கெல்லாம் முழுமுதற்காரணமான இறைசக்தியின் மீதும் இந்தப் பழியை சுமத்துவதே சரியாக இருக்கும் என்றே நினைக்கிறேன்..

    ReplyDelete
  38. ஆலாசியம் அவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன் சென்று வந்த கோவில் பத்துமலை முருகன் கோவில்தானே?
    திடீர்ன்னு தண்ணீர்மலைக்குத் தாவி 'கந்தர் சஷ்டி கவசம் வெர்ஷன் 2' வை எழுதி அசத்தியிருக்காரே?காரணம் என்னவோ?

    ReplyDelete
  39. இன்னிக்கு மலரை ஆனந்தமுருகன் ஆக்சிடெண்டில் ஆரம்பிச்சு வாரன்ட்டியில் அருமையா முடிச்சு வெச்சுருக்கார்....
    reasons for accident:
    not only the 'tops'
    also the bare bottom..

    ReplyDelete
  40. ////இந்தக்கவிதை ஒரு சம்ஸ்கிருதக் கவிதையாம். கவிஞர் பெயர் தெரியவில்லையாம். ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்தவர் பே நா அப்புசாமி. தமிழில் எழுதியவர். கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி/////

    பே நா அப்புசாமி. ???????
    உண்மையா இப்புடி ஒரு ஆளு இருக்காரா?இல்லே சமஸ்கிருதக் கவிதைதான் இருக்கா?


    எது எப்படியோ லால்குடிகாரர் கவிஞராகப் ப்ரோமோஷன் ஆகிட்டார்..வாழ்த்துக்கள்..
    ஆனா இப்புடித் துணிஞ்சு காதலிக்குக் காதல் கவிதை எழுதுவார்ன்னு நினைச்சுப் பார்க்கலை..
    இதயம் 'கல்' 'மாதுரி' இருக்காமோ?('மாதுரி'ன்னா உங்களுக்கு ரொம்பப் புடிக்குமே?)
    கல் எடுத்து யாரும் தலயிலே போடாம இருந்தா சரி..எதுக்கும் மாமிகிட்டே ஜாக்ரதை..

    ReplyDelete
  41. இன்று பல திருமண நிகழ்ச்சிகள். மாலையில்தான் நேரம் கிடைத்தது. பதிவுகள் நன்றாக இருக்கின்றன. விபத்துக்குக் காரணம் என்று அவ்விருவரும் வாகனம் ஓட்டிக் கொண்டே பெண்களை 'சைட்' அடிப்பது என்பதாகச் சொல்ல வருகிறீர்கள். ஆனால் அந்தப் பெண்களின் உடையை வட்டம் போட்டுக் காட்டியிருந்தால் உண்மையான காரணம் புலப்படும். தனுசு இயற்கையை நாம் சீரழிப்பதைச் சாடியிருக்கிறார். தஞ்சை மாவட்ட எக்ஸ்னோராவின் மாவட்ட ஆலோசகராம நியமிக்கப்பட்டிருக்கும் எனக்கு கவிஞர் தனுசுவின் கவிதை பயனுள்ளதாக இருந்தது. தேமொழி இப்படிப்பட்ட ஓவியர் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிடறீர்களே. இத்தனை திறமையும் தூங்கிக் கொண்டிருக்கிறதா அல்லது வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறதா தெரியவில்லையே. இறைவன் தந்த இந்த அரிய கலையில் முன்னேறுங்கள். வாழ்த்துக்கள். குழந்தைகளிடம் போய்விட்டார் கே.எம்.ஆர். ஆனந்த முருகன் தன்னுடைய நகைச்சுவை வெடிகளால் அசத்துகிறார். வாரண்டி பீரியட் முடிந்து விட்டது என்பது நல்ல நகைச்சுவை. இந்த வாரம் பயனுள்ள பல பதிவுகள்.

    ReplyDelete
  42. டெல்லி சகோதரி உமாவின் கட்டுரை பற்றி தனியாக எழுதத் தோன்ற ஒரு காரணம் உண்டு. நான் மூன்று ஆண்டுகள் இந்தி தெரியாமல் டெல்லியில் ஜனக்புரியில் இருக்க நேர்ந்தது. அப்போது என் மருமகள் வீட்டில் நிறைந்திருந்த குப்பைகளை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வாசலில் வைத்திருந்தாள். மறுநாள் காலையில் தெருக்கூட்டும் நபர் வந்து இந்தியில் என்னவோ திட்டினான். என் மருமகள் இந்திய கலாச்சாரப்படி அவனுக்கு ஏதோ பணத்தைக் கொடுத்து அவன் வாயையும் அடைத்துக் குப்பையையும் எடுத்துக்கொண்டு போகச் செய்தாள். அப்போது அடுத்த வீட்டிலிருந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெரிய அம்மா ஒருவர் வந்து அவனும் உங்களைப் போல ஒரு மதராசி. ராமச்சந்திரன் என்று பெயர். உங்களிடம் காசு வாங்குவதற்காக அப்படிப் பேசி சாமர்த்தியமாக பணத்தை வசூல் செய்து விட்டான் என்றார்கள். மறுநாள் நான் அவனை சற்று மரியாதைக் குறைவாக இங்கே வாடா என்று தமிழில் கூப்பிட அவன் சுயரூபம் வெளியானது. நீயும் தமிழன் என்றால் எங்களிடம் இங்கு குப்பையைப் போடும் வழக்கத்தைத் தெளிவாகச் சொல்வதற்கென்ன என்றேன். அசடு வழிந்தான். அதன் பிறகு அவன் தமிழில் பேசலானான். அதே ஜனக்புரியில் டிஸ்ட்ரிக்ட் பார்க் எனும் இடத்தில் எங்கள் இல்லம். வாரச் சந்தைக்குப் போகும் மாலை நேரம் இரு தமிழ்ப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர் தமிழில். நான் அவர்களை நெருங்கும் நேரம் பார்த்து இருவரும் இந்திக்கு மாறிவிட்டனர். தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாததுதான் காரணமோ? ஆகவே உமா அவர்களுக்கு அங்கு மொழிப் பிரச்சினை ஏற்படுவது சுவாரசியமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  43. R.Srishobana said...//பொருளை வாங்கியவர் அதை சரியாக உபயோகப்படுத்த(maintain) தெரியாவிட்டால்,தயாரித்தவர் தான் என்ன செய்ய முடியும்?...//

    பார்த்தீர்களா, வாங்கிய பொருள் சரியில்லை என்று இத்தனை ஆண்டுகள் கழித்து ஒருவன் சொல்கிறான், நாட்பட்டுப் போனதால் பழுதாகியிருக்கலாம் என்று சொல்லாமல், சகோதரிக்கு இருக்கும் இனப்பற்று காரணமாக பொருளை சரியாக உபயோகிக்காமல் உற்பத்தியாளரை குறை சொல்லலாமா என்கிறார். எல்லாம் இனப் பற்றுதான் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  44. அய்யர் அவர்களின் பாராட்டிற்கு நன்றிகள்...

    /////தேமொழி said...
    "பன்னிரு விழியோனை
    பன்னிரு பாக்களினால்
    பாங்குடனே போற்றியோர்
    பாங்கினைப் போற்றுதும்"////



    கவிதை நன்று அது தரும் கருத்திற்கு மிக்க நன்றி சகோதிரியாரே!



    ////படை வீடுகளுக்கீராக மேலுமோர் பன்னிரு பாக்கள் எழுத வேண்டுகிரறேன் சகோதரரை.

    தோடுடைய செவியோனின் பன்னிரு திருமறை படிக்க நேரம் இல்லாதோர்,
    நீங்கள் வடித்த அவர் குமரனைப் போற்றும் எளிய பன்னிரு பாக்கள் படித்து மகிழலாம்.
    வாழ்த்துகள்////

    தங்களின் விருப்பம் போல் செய்ய நானும் நிச்சயம் முயற்சிக்கிறேன்.

    தங்களது வாழ்த்துக்களுக்கு மீண்டும் நன்றிகள்.



    //// Parvathy Ramachandran said...

    'எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே'
    'அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே'
    என்ற வரிகள் எவ்வளவு உண்மை!.நிஜமாகவே நெஞ்சம் கனத்துப் போனது.
    ஆலாசியம் சாரின் கவிதைவரிகளும் மிக அருமை. குறிப்பாக குழந்தை வரம் கேட்டு குமரனிடம் வேண்டும் வரிகள் கண்களில் நீரை வரவழைத்தன.////

    தங்களின் பாராட்டிற்கு நன்றிகள் சகோதிரியாரே!



    /////kmr.krishnan said...
    பிரார்த்தனைக்கு ஏற்ற கவிதையை அளித்த சிங்கைக் கவிராயருக்குப் பாராட்டுக்கள்.வேண்டுதல்கள் எல்லாம் அந்த அந்த குறை உள்ளவர்கள் அந்த அந்த பத்திகளைப் பாடிக் கொள்ளாலாம். இசை தெரிந்தவர்கள் இதற்கு ஒரு ராகம் போடலாம்.இலக்கண்ம் எல்லாம் நமக்கு வேப்பங்காய்.////

    மிக்க நன்றி சார்...



    //// thanusu said...
    ஆலாசியத்தின் இறைவணக்க கவிதை ,பக்தி நிறைந்தது////

    மிக்க நன்றி திருவாளர் தனுசு அவர்களே!

    ///// R.Srishobana said...
    சென்ற வாரம் "கம்பஇராமாயணம்",இன்று "கந்த புராணம்" தந்துந்துள்ளார் ஆலாசியம் அவர்கள்(இந்த முறையாவது சரியாக சொல்லிவிட்டேனா!!!)...எளிய நடையில் கவிதை இருந்ததால் நன்றாக பாடல் வரிகளை ரசிக்க முடிகின்றது...வெண்பா செய்யுள் என்றவுடன் அதில் அமைந்துள்ள "சீர்" பிரித்து பார்க்க ஆரம்பித்து விட்டேன்...அருமையான வெண்பா நடையில் அழகான பாடலை நிறைவாய் தந்துள்ளீர்கள்...நன்றி////



    நன்றிகள் சகோதிரியாரே! எளிமையாக இருந்தாலே நல்லது என்பது தான் மகாகவியும் நமக்கு சொன்னது!

    ஆமாம், இந்த முறை சரியாக சொல்லிவிட்டீர்கள் :))) நன்றி...

    ReplyDelete
  45. பே நா அப்புசுவாமி தமிழில் அறிவியலைக் கொடுக்க முயன்ற‌ முன்னோடிகளில் ஒருவர்.ஐன்ஸ்டினின் ரிலேடிவிடி தியரியை தமிழில் கொடுக்க முயன்றார் என்றார் பாருங்கள்.பல விஞ்ஞானக் கதைகள் கொடுத்திருக்கிறார்.பல மொழி பெயர்ப்புக்கள் கொடுத்திருக்கிறார்.

    திராவிடத்தின் ஆதிக்கத்தால் அமிழ்ந்துபோன "ஆரியர்"

    ReplyDelete
  46. திரு மைனர் அவர்களே! பெ.நா.அப்புசாமி என்பவர் அறிவியல் கட்டுரைகள் பலவற்றை எழுதிய பிரபலமான எழுத்தாளர், சுமார் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக. ஆகவே அவர் எழுதியிருக்கலாம். அதுமட்டுமல்லாமல் அந்தக் காலத்தில் மொழிபெயர்ப்பு எழுத்தாளர் த.நா.குமாரசாமி என்பவரைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆங்கில "ரீடர்ஸ் டைஜஸ்ட்" போல தமிழில் "மஞ்சரி" எனும் பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. அதில் பெ.நா.அப்புசாமியின் கட்டுரைகள் வெளிவந்தன.

    ReplyDelete
  47. பெருங்குளம் நாராயணன் அப்புசுவாமி என்பதால் 'பெ' என்ற இனிஷியல்தான் சரி. 'பே'என்று நான் எழுதியது சரியல்ல‌. தஞ்சாவூரார் கொடுத்துள்ள இனிஷியல்தான் சரி. கூகுள் புக்ஸ் அவருடைய புத்தகங்களைக் கொடுக்கிறது.
    P.N.Appuswami என்று கேட்டுப்பார்க்கவும். கடந்த 45 ஆண்டுகளாக இவரைப் போன்றவர்களின் நூல்கள் தமிழக நூலகங்களில் கிடையாது. எனவே 45 வயதுக்குள் இருப்பவர்களுக்கு இவர்கள் பெயரெல்லாம் தெரிய வாய்ப்பில்லை.

    ReplyDelete
  48. அருமையான வாரமலர். நன்றி ஐயா.

    ஆசிரியர்க்கும் ஆக்கியவர்களாகிய திரு.தனுசு, சகோதரி தேமொழி, சகோதரி உமா, திரு.கே.எம்.ஆர்.கே., திரு.ஆலாசியம் மற்றும் திரு.ஆனந்த முருகன் அனைவருக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள். ஒவ்வொருவருடைய ஆக்கங்களையும் தனித்தனியாக குறிப்பிட்டு எழுத வேண்டும் என்று தான் விருப்பம். ஆனால் மொபைல் ஃபோனில் அது மிகவும் சிரமமாக உள்ளது. மன்னிக்கவும்.

    ReplyDelete
  49. அருமை... படித்து மகிழ்ந்தேன்...

    ReplyDelete
  50. ////kmr.krishnan said...
    பெருங்குளம் நாராயணன் அப்புசுவாமி என்பதால் 'பெ' என்ற இனிஷியல்தான் சரி. 'பே'என்று நான் எழுதியது சரியல்ல‌. தஞ்சாவூரார் கொடுத்துள்ள இனிஷியல்தான் சரி. கூகுள் புக்ஸ் அவருடைய புத்தகங்களைக் கொடுக்கிறது.
    P.N.Appuswami என்று கேட்டுப்பார்க்கவும். கடந்த 45 ஆண்டுகளாக இவரைப் போன்றவர்களின் நூல்கள் தமிழக நூலகங்களில் கிடையாது. எனவே 45 வயதுக்குள் இருப்பவர்களுக்கு இவர்கள் பெயரெல்லாம் தெரிய வாய்ப்பில்லை./////

    ////Thanjavooraan said...
    திரு மைனர் அவர்களே! பெ.நா.அப்புசாமி என்பவர் அறிவியல் கட்டுரைகள் பலவற்றை எழுதிய பிரபலமான எழுத்தாளர், சுமார் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக. ஆகவே அவர் எழுதியிருக்கலாம். அதுமட்டுமல்லாமல் அந்தக் காலத்தில் மொழிபெயர்ப்பு எழுத்தாளர் த.நா.குமாரசாமி என்பவரைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆங்கில "ரீடர்ஸ் டைஜஸ்ட்" போல தமிழில் "மஞ்சரி" எனும் பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. அதில் பெ.நா.அப்புசாமியின் கட்டுரைகள் வெளிவந்தன.////

    இருவரின் விளக்கத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  51. ஞாயிறு மலரில் வந்த பதிவுகளில் தமிழ்விரும்பியின் கவிதையைத் தவிர மற்றவற்றுக்குப் பின்னூட்டம் இட்டிருந்தேன். அவர் கவிதை பெரிதாக இருந்தது, சற்று கனமாகவும் இருந்தது. ஆகையால் சிறிது தாமதம். மாணிக்கவாசக சுவாமியின் தாக்கம் இவருக்கு இருக்கிறது. தன்னிடம் இல்லாத சிறுமைகள் தன்னிடம் இருப்பதாக (மற்றவர்களிடம் உண்டு, ஆகையால் அதில் தன்னையும் இணைத்துக் கொண்டு பாடுவார் மாணிக்கவாசகர்) இந்தப் பாடலில் தமிழ்விரும்பி அடுக்குகிறார். குழந்தை மனம் வேண்டும் சரி தவறில்லை. நல்ல மனம் வேண்டும்.ஆம், உண்மையான வேண்டுதல். அடுத்ததெல்லாம் பொதுவானவை. தரித்திரம் நீக்குதல், அதென்ன நகை, வீடு, நிலம், கிணற்று மேடு இவையெல்லாம் கேட்கிறார் பாரதியின் காணி நிலம் போல. இல்லறம் நன்கு அமைய நல்ல வேண்டுதல். பாவம் போக்கிடவும், ஆணவம் நீங்கிடவும் மன ஈன உணர்வுகள் போக்கிடவும் ஆறுமுகன் அருள் புரிவான் என்பது தெரிந்தே வேண்டுகிறார். நல்ல கவிதை ஆக்கம். இலக்கண வரம்புக்குள் சில இடங்களில் வர மறுத்தாலும் பாரதி சொல்வது போல "பாதகமில்லை". 'வலம்புரி சங்கெடுத்து ஊதி அழைக்கிறேன், சங்குப்பூ காதில் விழவில்லையா?' என்பது நல்ல கற்பனை. கோல விழிகள் கோள விழிகள் என்று தவறுதலாக அச்சாகிவிட்டது போலும். பெரும்பாலும் புதுக் கவிதைகளையே பலரும் எழுதிவரும் வேளையில் இவர் மரபுக்குள் புகுந்ததே பாராட்டற்குரியது. யாப்பிலக்கணம் சற்று நெருடலானது. நாலடி வெண்பா இயற்றுதல் சற்று சிரமமான வேலை. கவிதை நன்று. நல்ல முயற்சி. மேலும் தொடர்ந்தால் முத்தெடுக்கலாம்.

    ReplyDelete
  52. Uma S
    to me
    என் ஆக்கத்தை ரசித்த ஐயர் (அந்த காய்ச்சல் - எந்த காய்ச்சல்???), கிருஷ்ணன் சார், தனுசு, தேமொழி, ஆலாசியம், ஷோபனா, மைனர்வால் (வழக்கம்போல் தட்டச்சுப்பிழை, ஹி ஹி), கோபாலன் சார் மற்றும் சதிஷுக்கு என் நன்றிகள்.

    எஸ். உமா, தில்லி

    ReplyDelete
  53. Uma S
    to me
    வாரமலர்:

    தனுசு / தேமொழியின் ஆக்கங்கள் ரசிக்கும்படி இருந்தன. தேமொழி வரைந்த ஓவியங்களைப்பார்க்கையில், நான் இதுவரை வரைந்த ஒரு ஓவியத்தையும் பத்திரப்படுத்தவில்லையே என்ற எண்ணம் எழுகிறது.

    கிருஷ்ணன் சாரின் கட்டுரையில் உள்ள அனைத்துக்கருத்துக்களும் ஏற்கவேண்டியவை. மொழிபெயர்ப்புக்கவிதையும், ஆனந்தமுருகனின் நகைச்சுவையும் கலக்கல்.

    ஆஹா, ஆலாசியம் கவிதையிலிருந்து ஒருபடி மேலே போய் வெண்பா எழுத ஆரம்பித்துவிட்டாரே!! படிக்க மிக மிக இனிமை. (அடுத்து இன்னும் என்னவெல்லாம் எழுதப்போறாரோ!!). என்னால் ஒரு நாலுவரி கவிதை கூட யோசிக்க முடியவில்லை. நீங்க கிரேட் தான்.

    எஸ். உமா, தில்லி
    --------------

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com