மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

23.2.12

Cinema நம்மைக் கிறங்க அடிக்கும் குரல்கள் - பகுதி 2Cinema நம்மைக் கிறங்க அடிக்கும் குரல்கள் - பகுதி 2

குரல் வளம் மிக்கவர்கள் என்று சொல்லும்போது, பலரையும் சொல்லலாம். நம்மைக் கிறங்க அடிக்கும் குரல்கள் என்று சொல்லும்போது, ஒரு சிலரைத் தான் குறிப்பிட முடியும்.

என் மனத்திரையில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் சிலருடைய குரல்களில் ஒன்றை - பின்னணிப் பாடகர் முகமது ரஃபி, அவர்களின் இனிய குரலை சென்றவாரம் (9.2.2012) பதிவிட்டேன். இன்று இன்னொரு மேன்மையான குரலைப் பதிவிடுகிறேன்.

யார் அவர்?

நீங்களே பாருங்கள்!

வரிசை எண். 3

கிஷோர் குமார்

பெற்றோர்கள் வைதத் பெயர் Abhas Kumar Ganguly
4.8.1929ல் பிறந்தவர் சுமார் 58 வயதுவரையே வாழ்ந்து 13.8.1987ல் காலமானார்
பிறந்த ஊர் Khandwa, Central Provinces and Berar
பாடகர், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என்று பன்முகத் திறமை காட்டியவர்
திரையுலகில் கோலோச்சிய காலம் 1946 முதல் 1987 வரை சுமார் 41 ஆண்டுகள்
-----------------------------------------------------
படம்: அந்தாஸ்
பாடல்: ஜிந்தகி ஏக் ச்ஃபர் ஹை சுஹானா

வாழ்க்கை என்பது ஒரு அழகான பயணம். ஆனால் அந்தப் பயணத்தில் நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது Life is a beautiful journey, One never knows what's going to happen tomorrow என்பது பாடலின் பல்லவியாகும்

படம் வெளிவந்த ஆண்டு 1971
பாடலாக்கம் கவிஞர் ஹஸ்ரத் ஜெய்புரி
பாடியவர்: கிஷோர் குமார்
இசை: ச்ங்கர் ஜெய்கிஷன்

வெளிவந்தபோது மொத்த இந்தியாவையும் கலக்கிய படம். இந்தப் படத்தின் மூலம் நடிகர் ராஜேஷ்கன்னாவும், நடிகை ஹேமமாலினியும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் புகழைப் பெற்றார்கள். திரை உலகின் உச்சத்தைத் தொட்டார்கள். இததனைக்கும் நடிகர் ராஜேஷ்கன்னா இந்தப் படத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். படத்தின் கதாநாயகன் ஷம்மி கபூர்.

இன்னொரு செய்தி படத்திற்கு இசையமைத்த இரட்டையர்களில் ஒருவரான ஜெய்கிஷனுக்கு இந்தப் படமே இறுதிப்படமாக அமைந்துவிட்டது. படம் வெளியான பிறகு கணயத்தில் ஏற்பட்ட கோளாறுக்காக அறுவை சிகிச்சைக்கு உள்ளான அவர், திரும்பவில்லை. காலமாகிவிட்டார். பாடலின் வரிகள் அவருக்கே பலித்துவிட்டன.

இப்போது பாடலைக் கேளுங்கள்.

இந்தப் பாடலின் மூலம் கிஷோர் குமாரும் புகழின் உச்சத்தைத் தொட்டார். ஹம்மிங் செய்வதில் யோடலிங் என்னும் ஒரு புது யுக்கிதையை அவர் கையாண்டார். அதையும் கவனித்துக்கேளுங்கள். யோடலிங்கில் அவர்தான் மன்னர். அது பாட்டிற்கு ஒரு துள்ளளைக் கொடுக்கும்

Yodeling (or yodelling) is a form of singing that involves singing an extended note which rapidly and repeatedly changes in pitch from the vocal or chest register (or "chest voice") to the falsetto/head register; making a high-low-high-low sound.
---------------------------------------------------------
காணொளி:
Video clipping : Andaz
http://youtu.be/8wZDU-DDTOU
Our sincere thanks to the person who uploaded the video clipping

------------------
கிஷோர் குமாரின் இன்னொரு புகழ்பெற்ற பாடலையும் கொடுத்துள்ளேன்

பாடல்: ஆஜ் உன்சே பஹ்லி முலாகத்
படம் பரயாதன்
இசை: ஆர்.டி.பர்மன், 
நடிப்பு: ராகேஷ் ரோஷன்

காணொளி:
Aaj unse pahliulakat
video clipping
http://youtu.be/O56NC4OoXsM
Our sincere thanks to the person who uploaded the video clipping
---------------------------------
அவர் குரலில் ஒலித்த பல பாடல்களில் மிக்ச் சிறந்த சில பாடல்களின் பட்டியல் கீழே உள்ளதுஎன்ன ரசித்துக் கேட்டீர்களா?

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

23 comments:

Ananthamurugan said...

Good morning!ayya !itu varugai pathivu.

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
மொழி வித்தியாசமின்றி ரசித்துக்கேட்ட பாடல்கள்,தற்போதும் மனதில்
நினைத்ததும்,"ஜிந்தகி ஏக் ச்ஃபர் ஹை சுஹானா"_மற்றும் "ஆஜ் உன்சே பஹ்லி முலாகத்"_
அந்த மெட்டுக்களை
ரசிக்க முடிகிறது.
நன்றி

தேமொழி said...

எழுபதுகளின் பிற்பகுதி முதல் எண்பதுகளின் முற்பகுதி வரை தமிழகத்தில் திரையரங்குகள் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட காலத்தில், மூச்சை முட்டும் சிகரெட் புகை போட்டு, குளிருக்காக கதவை அடைத்து, இடைவேளைகளில் ஹிந்தி பாடல்கள் போட்ட பொழுது ஹிந்தி பாடல்களை கேட்க நேர்ந்ததுதான் என் அனுபவம்.

ஆங்கில மற்றும் ஹிந்தி...பொதுவாக பிற மொழிப் படங்களுக்கு வீட்டில் அழைத்துச் சென்றதில்லை. தமிழ்ப் படங்களே குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படம் என்ற பெயர்வாங்கினால் மட்டுமே அழைத்துப் போவார்கள். அதனால் இது போன்ற காணொளிகளை பார்த்ததில்லை. எனக்கு தெரிந்து நான் கேட்ட ஹிந்தி பாடல்கள் நினைவில் உள்ளது
Qurbani - Aap Jaisa Koi
Ek Duuje Ke Liye - Tere Mere Beech Mein
Kabhi Kabhie - Kabhi Kabhie Mere Dil Mein
Chitchor - Aaj Se Pehle Aaj se Zyada
Sholae - Mehbooba Mehbooba
Satyam Shivam Sundaram - Satyam Shivam Sundaram
Hum Kisi Se Kum Nahin - Kya Hua Tera Vada

பதிவில் உள்ள இரண்டு காணொளிகளும் மனதைக் கவர்ந்தது. முதல் பாடல் மிகவும் நன்றாக இருந்தது. அந்தக் கால இந்தியாவில் நெருக்கடியற்ற மும்பை சாலைகளும், அம்பாசடர் கார்களும், பஜாஜ் ஸ்கூட்டர்களும் சாலைகளை ஆக்கிரமித்த காலம். இளம் வயதினர் உல்லாசமாக பாடி ஆட்டம் போட்டு வயதிற்கேற்ற கவலையற்ற மகிழ்ச்சியுடன் இருப்பது மனத்தைக் கவர்கிறது.

தமிழில் ஏ எல் ராகவனும், எஸ் பி பாலாவும் யோடலிங் முறையில் ஹம்மிங் செய்வதில் வல்லவர்கள். பழைய நாட்களை நினைவிற்கு கொண்டு வந்த பதிவிற்கு நன்றி. கிஷோரும் உங்களுக்குப் பிடித்தவர் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

மிகவும் பிடித்தது உன்னால் முடியும் தம்பி படம். அதை சேகரித்து வைத்துக் கொண்டேன். பதிவிற்கு நன்றி ஐயா.

Kalai said...

அன்பின் அண்ணன்,

நன்றி. வள்ளல் அழகப்பர் ஜாதகத்தையும், ஈழ மாவீரன் பிரபாகரன் ஜாதகத்தையும் நேரம் கிடைக்கையில் விளக்க இயலுமா?

நன்றி,
KC

Parvathy Ramachandran said...

இன்றைய பதிவு மிக அருமை. புகழ் பெற்ற நடிகரும் பாடகருமான திரு. கிஷோர்குமார்,அன்றைய கால கட்டத்தில், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தி திரையுலகில் கொடி கட்டிப் பறந்த இயக்குனர் ஸ்ரீதரின் 'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தின் இந்திப் பதிப்பான 'பியார் கியே ஜா' வில் திரு. முத்துராமன் நடித்த பாத்திரத்தில் நடித்தார். சில காரணங்களால் படப்பிடிப்பின் நடுவே இடைவெளி ஏற்பட்ட போதும்,மீண்டும் அழைத்தபோது வந்து,நடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார். இதை,ஒரு பேட்டியில்'மனிதாபிமானமுள்ள, பிறர் கஷ்டத்தை உணர்ந்து நடக்கத்தெரிந்த மிக அருமையான மனிதர் கிஷோர்குமார்' என இயக்குனர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
திரு.ஜெய்கிஷன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கண்ணீருடன் திரு.ஷங்கர்,தன் குழுவினருடன் 'ஜிந்தகி ஏக் சஃபர்' பாடலை வாசித்தபடி சென்ற போது ஒட்டுமொத்த மும்பை நகரமே அழுகையில் குலுங்கியதாகவும், மறுநாள் அனைத்துப் பத்திரிகைகளும் இதை குறிப்பிட்டு எழுதியதாகவும் என் தந்தையார் கூறியுள்ளார்.

அய்யர் said...

எழுபதை தட்டி அந்த பக்கம்
எழுந்து நிற்கும் சிந்தனைக்கு வந்தனம்

தொழில் வணிக முறையில் மொழி பல தொடர்ந்தாலும் அன்பு தமிழ்தரும்

இன்பம் எமக்கு எதிலும் இல்லை.
இன்று சுலுழ விடுகிறோம் இப்பாடலைஇன்பம் எங்கே
இன்பம் எங்கே என்று தேடு - அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு

இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை - இதை

எண்ணிடாமல் சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை

கனிரசமாம் மதுவருந்திக்
களிப்பதல்ல இன்பம்

கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்

இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம் - அவள்

இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்

மாடி மனை கோடி பணம்
வாகனம் வீண் ஜம்பம்

வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம்

மழலை மொழி வாயமுதம்
வழங்கும் பிள்ளைச் செல்வம் - உன்

மார் மீது உதைப்பதிலே கிடைப்பது தான் இன்பம்

தமிழ் விரும்பி ஆலாசியம் said...

எழுபதுகளில் பிறந்த எங்களுக்கெல்லாம்
இந்திப் பாடமும் இல்லை
இந்திப் பாடலும் இல்லை...
இருந்ததோர் ஒன்று -அது
இளையராசா தான்....
இருந்தும் இந்தப் பாடல்களின்
இனிமையை சுவைக்கத் தந்த
இதயம் நிரப்பியப் பதிவுக்கு
இன்முக நன்றிகள் ஐயா!

thanusu said...

பழையன என்றும் இனிமை .என் தந்தை இந்த பாடல்களை ஹம்மிங் செய்தது எனக்கு நினைவுக்கு வந்தது இதனை படிக்கும் போது.இறை அடி சேர்ந்துவிட்ட என் தந்தையும் எனக்கு நினைவில் வந்தார் .அதனால் என் தந்தையை மறந்து விட்டதாக அர்த்தமில்லை.என் தந்தைக்ககவே மூன்று முறை கேட்டேன்.

பழையனையை தேடி தரும் அய்யாவுக்கு நன்றிகள்.

seenivasan said...

Dear SIR,
All are super songs, I use to enjoy by listening these songs + Tamil songs while drive daily House to office and office to house. All ways old is gold.Thank you very much for giving the list of the jobs.some of the songs I have to collect.
Once again thank you very much for the multi-class room sir.
G.seenivasan
New Delhi

SP.VR. SUBBAIYA said...

///// V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
மொழி வித்தியாசமின்றி ரசித்துக்கேட்ட பாடல்கள்,தற்போதும் மனதில்
நினைத்ததும்,"ஜிந்தகி ஏக் ச்ஃபர் ஹை சுஹானா"_மற்றும் "ஆஜ் உன்சே பஹ்லி முலாகத்"_
அந்த மெட்டுக்களை ரசிக்க முடிகிறது.
நன்றி/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

SP.VR. SUBBAIYA said...

//// தேமொழி said...
எழுபதுகளின் பிற்பகுதி முதல் எண்பதுகளின் முற்பகுதி வரை தமிழகத்தில் திரையரங்குகள் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட காலத்தில், மூச்சை முட்டும் சிகரெட் புகை போட்டு, குளிருக்காக கதவை அடைத்து, இடைவேளைகளில் ஹிந்தி பாடல்கள் போட்ட பொழுது ஹிந்தி பாடல்களை கேட்க நேர்ந்ததுதான் என் அனுபவம்.
ஆங்கில மற்றும் ஹிந்தி...பொதுவாக பிற மொழிப் படங்களுக்கு வீட்டில் அழைத்துச் சென்றதில்லை. தமிழ்ப் படங்களே குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படம் என்ற பெயர்வாங்கினால் மட்டுமே அழைத்துப் போவார்கள். அதனால் இது போன்ற காணொளிகளை பார்த்ததில்லை. எனக்கு தெரிந்து நான் கேட்ட ஹிந்தி பாடல்கள் நினைவில் உள்ளது
Qurbani - Aap Jaisa Koi
Ek Duuje Ke Liye - Tere Mere Beech Mein
Kabhi Kabhie - Kabhi Kabhie Mere Dil Mein
Chitchor - Aaj Se Pehle Aaj se Zyada
Sholae - Mehbooba Mehbooba
Satyam Shivam Sundaram - Satyam Shivam Sundaram
Hum Kisi Se Kum Nahin - Kya Hua Tera Vada
பதிவில் உள்ள இரண்டு காணொளிகளும் மனதைக் கவர்ந்தது. முதல் பாடல் மிகவும் நன்றாக இருந்தது. அந்தக் கால இந்தியாவில் நெருக்கடியற்ற மும்பை சாலைகளும், அம்பாசடர் கார்களும், பஜாஜ் ஸ்கூட்டர்களும் சாலைகளை ஆக்கிரமித்த காலம். இளம் வயதினர் உல்லாசமாக பாடி ஆட்டம் போட்டு வயதிற்கேற்ற கவலையற்ற மகிழ்ச்சியுடன் இருப்பது மனத்தைக் கவர்கிறது.
தமிழில் ஏ எல் ராகவனும், எஸ் பி பாலாவும் யோடலிங் முறையில் ஹம்மிங் செய்வதில் வல்லவர்கள். பழைய நாட்களை நினைவிற்கு கொண்டு வந்த பதிவிற்கு நன்றி. கிஷோரும் உங்களுக்குப் பிடித்தவர் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
மிகவும் பிடித்தது உன்னால் முடியும் தம்பி படம். அதை சேகரித்து வைத்துக் கொண்டேன். பதிவிற்கு நன்றி ஐயா./////

உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கும் மேலதிகத் தகவல்களுக்கும் நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

//// Kalai said...
அன்பின் அண்ணன்,
நன்றி. வள்ளல் அழகப்பர் ஜாதகத்தையும், ஈழ மாவீரன் பிரபாகரன் ஜாதகத்தையும் நேரம் கிடைக்கையில் விளக்க இயலுமா?
நன்றி,
KC/////

அழகப்பரது ஜாதகம் கிடைத்தால் பிடித்துக்கொடுங்களேன் சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

//// Parvathy Ramachandran said...
இன்றைய பதிவு மிக அருமை. புகழ் பெற்ற நடிகரும் பாடகருமான திரு. கிஷோர்குமார்,அன்றைய கால கட்டத்தில், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தி திரையுலகில் கொடி கட்டிப் பறந்த இயக்குனர் ஸ்ரீதரின் 'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தின் இந்திப் பதிப்பான 'பியார் கியே ஜா' வில் திரு. முத்துராமன் நடித்த பாத்திரத்தில் நடித்தார். சில காரணங்களால் படப்பிடிப்பின் நடுவே இடைவெளி ஏற்பட்ட போதும்,மீண்டும் அழைத்தபோது வந்து,நடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார். இதை,ஒரு பேட்டியில்'மனிதாபிமானமுள்ள, பிறர் கஷ்டத்தை உணர்ந்து நடக்கத்தெரிந்த மிக அருமையான மனிதர் கிஷோர்குமார்' என இயக்குனர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
திரு.ஜெய்கிஷன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கண்ணீருடன் திரு.ஷங்கர்,தன் குழுவினருடன் 'ஜிந்தகி ஏக் சஃபர்' பாடலை வாசித்தபடி சென்ற போது ஒட்டுமொத்த மும்பை நகரமே அழுகையில் குலுங்கியதாகவும், மறுநாள் அனைத்துப் பத்திரிகைகளும் இதை குறிப்பிட்டு எழுதியதாகவும் என் தந்தையார் கூறியுள்ளார்.////

தங்களின் நெகிழ்வான பின்னூட்டத்திற்கும் மேலதிகத் தகவல்களுக்கும் நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

//// அய்யர் said...
எழுபதை தட்டி அந்த பக்கம்
எழுந்து நிற்கும் சிந்தனைக்கு வந்தனம்
தொழில் வணிக முறையில் மொழி பல தொடர்ந்தாலும் அன்பு தமிழ்தரும்
இன்பம் எமக்கு எதிலும் இல்லை.
இன்று சுலுழ விடுகிறோம் இப்பாடலை

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு - அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு

இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை - இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை
கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்
இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம் - அவள்
இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்

மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம்
மழலை மொழி வாயமுதம்
வழங்கும் பிள்ளைச் செல்வம் - உன்
மார் மீது உதைப்பதிலே கிடைப்பது தான் இன்பம்/////

இசைக்கு மொழி ஏது சுவாமி? எல்லா இசையையும் ரசிக்க வேண்டியதுதான்!

SP.VR. SUBBAIYA said...

//// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
எழுபதுகளில் பிறந்த எங்களுக்கெல்லாம்
இந்திப் பாடமும் இல்லை
இந்திப் பாடலும் இல்லை...
இருந்ததோர் ஒன்று -அது
இளையராசா தான்....
இருந்தும் இந்தப் பாடல்களின்
இனிமையை சுவைக்கத் தந்த
இதயம் நிரப்பியப் பதிவுக்கு
இன்முக நன்றிகள் ஐயா!////

உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

//// thanusu said...
பழையன என்றும் இனிமை .என் தந்தை இந்த பாடல்களை ஹம்மிங் செய்தது எனக்கு நினைவுக்கு வந்தது இதனை படிக்கும் போது.இறை அடி சேர்ந்துவிட்ட என் தந்தையும் எனக்கு நினைவில் வந்தார் .அதனால் என் தந்தையை மறந்து விட்டதாக அர்த்தமில்லை.என் தந்தைக்ககவே மூன்று முறை கேட்டேன்.
பழையனையை தேடி தரும் அய்யாவுக்கு நன்றிகள்./////

பழையது புதியது என்று பிரிக்காமல், நன்றாக உள்ளது அனைத்தையும் ரசிப்போம் தனூர்ராசிக்காரரே!

SP.VR. SUBBAIYA said...

//// seenivasan said...
Dear SIR,
All are super songs, I use to enjoy by listening these songs + Tamil songs while drive daily House to office and office to house. All ways old is gold.Thank you very much for giving the list of the jobs.some of the songs I have to collect.
Once again thank you very much for the multi-class room sir.
G.seenivasan
New Delhi////

உங்களின் பாராட்டிற்கு நன்றி ஸ்ரீனிவாசன்!

R.Srishobana said...

வணக்கம் ஐயா,
இதுவரை நான் பார்த்தும்,கேட்டும் இல்லாத பாடல்கள் இவை...எனக்கு இப்பாடல்கள் அனைத்தும் புதிதாக உள்ளது...நன்றாகவும் உள்ளது...ஆயினும் பாடகர்,நடிகர் மற்றும் நடிகைகளின் பெயர் மட்டுமே எனக்கு தெரியும்;அவர்கள் பற்றிய விவரங்கல் எதுவும் தெரியாது...தெரியாத தகவல்களை இன்றைய ஆக்கத்தின் மூலமாகவும்,பின்னூட்டங்களின் மூலமாகவும் தெரிந்து கொண்டேன்...நம் வகுப்பறையின் சிறப்பே பல்சுவைகளையும் சுவைப்பட பகிர்வது தான்;இதன் மூலம் பலரும் அறிந்திடாத தகவல்களை அறிய முடிகின்றது...பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி...மிக்க நன்றி ஐயா...

Sathish K said...

வாத்தியார் கலக்கல்.! உங்கள் MULTILINGUAL SKILL கண்டு வியக்கிறான் இந்த மாணவன்.
நன்றி.

ananth said...

முதல் பாடல் நான் கேட்ட இந்திப் பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்தது. இதை மீண்டும் ஞாபகப் படுத்திமைக்கு எனது நன்றி. இந்தியில் இறவாப் புகழ் பல பாடல்கள் இன்னும் இருக்கின்றன. அவற்றை அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது கேட்பதுண்டு.

காலிங்கன் said...

//"Cinema நம்மைக் கிறங்க அடிக்கும் குரல்கள் - பகுதி 2"//

ஆனால்

வரிசை எண். 3

ஏன்? புரியவில்லை அய்யா.

காலிங்கன் said...

ஹிந்தி (புரிவதில்லை அதனால்) படங்களதிகம் பார்த்ததில்லை. கடைசியாக ஒரு படத்தில் (சோலேனு நினைக்கிறேன் :)) கையில்லாத மனிதராக நடித்ததுப்போல ஒரு நினைவு. ஆனா இந்த முகம் எங்கோ பார்த்த ஞாபகம்.

- கா.லிங்கன்

Kalai said...

அன்பின் அண்ணன்,

அழகப்பர் ஜாதகம் திரு. பட்டமங்கலம் (இப்போது காரைக்குடியில் வசிக்கும்) ஜோதிடரிடமோ அல்லது தங்கள் நண்பர் திரு. சிவல்புரி சிங்காரம் அவர்களிடமோ இருக்கலாம். நான் வெளிநாட்டில் இருப்பதால் இவர்களிடம் முயற்சிக்க முடியவில்லை. நெட்டில் தேடுகிறேன். இருவரும் முயற்சிப்போம்.

நன்றி,
KC