மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

7.2.12

Astrology: எப்போது (டா) என் பணப்பிரச்சினை தீரும்?

7..2..2012 செவ்வாய்க் கிழமை

Astrology: எப்போது (டா) என் பணப்பிரச்சினை தீரும்?
பயிற்சிப்பாடம்

"காசேதான் கடவுளப்பா - அந்தக்
கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே
நீதேடும்போது வருவதுண்டோ
விட்டுப்போகும்போது சொல்வதுண்டோ

என்ற பாடல் வரிகள் 1972ஆம் ஆண்டு வந்த திரைப்படப் பாடல் ஒன்றின் வரிகள். பாடல் அசத்தலாக இருக்கும். காணொளியின்  சுட்டியைக்
கீழே கொடுத்துள்ளேன். அதைக் கிளிக்கிப் பிறகு பாருங்கள்.  
இப்போது பதிவைப் படியுங்கள்
-----------------------------------------------------------------
பெற்ற தாய், தந்தையைத் தவிர மனிதனால்
எதையும் விலைக்கு  வாங்கமுடியும். ஆனால் காசை வைத்து
அப்படிச் சொல்லும் மனிதனையே விலைக்கு வாங்கமுடியும்.
அதுதான் இன்றைய நிலை!

பொருளாதாரம் சார்ந்த நவ நாகரீக உலகில் அனைவருக்கும் பணம் அதி முக்கியமாகத் தேவையானதாகும். யாரும் பணத்தைத்  தேவையில்லை
என்று சொல்ல முடியாது. பணத்தை வேண்டாம் என்று சொல்ல முடியாது. துறவறம் மேற்கொண்டுள்ளவர்கள் கூடப் பணம் இன்றி உயிர் வாழமுடியாது. பிறந்தது முதல் இறைவனடி சேரும்வரை பணம் இன்றி வாழ்க்கையில்லை.
-----------------------------------------------------------------
தேவை வேறு ஆசை வேறு!

எல்லோருக்கும் தேவையான அளவு பணம் கிடைக்கிறதா?

அதுதான் இல்லை.

தொகைதான் வித்தியாசம். எண்ணிற்குப் பின்னால் வரும் ஜீரோக்கள்தான் வித்தியாசம். உங்களுக்கும் எனக்கும் பணம் ஆயிரங்களில் வேண்டும். ஆனால் அம்பானிகளுக்கும், பிர்லாக்களுக்கும், மோடிகளுக்கும், மிட்டல்களுக்கும் கோடிகளில் வேண்டும்.

சரி தேவையை விட்டு விடுவோம்.

பணம் பற்றாமல் short fall ல் வாழ்பவர்களையும், கடன் சுமையோடு வாழ்பவர்களையும் எண்ணிப்பாருங்கள்.

அவர்கள் மனதில் தோன்றுவதெல்லாம் அல்லது கேட்பது எல்லாம் “எங்கள் பணப்பிரச்சினை எப்போது தீரும்?”

அதற்குரிய நேரம் வரும்போது தீரும்.

நேரம் எப்போது வரும் என்று எப்படித் தெரிந்துகொள்வது?

ஜாதக ரீதியாக ஒரு சிறு அலசல் அலசுவோம்!

1. ஏழரைச் சனி நடைபெறும்போது பணப் பிரச்சினைகள் உண்டாகும்
2. ஆறாம் இடத்து அதிபதியின் திசை அல்லது புத்தி நடைபெறும்போது பணப் பிரச்சினைகள் உண்டாகும்
3. ஜாதகத்தில் மாந்தி அமர்ந்த இடத்தின் அதிபதியின் திசை அல்லது புத்தி நடைபெறும்போது பணப் பிரச்சினைகள் உண்டாகும்
4. ஆறாம் இடத்து அதிபதி, பத்தாம் இடத்தானுடன் கூட்டாக இருந்து, தீய கிரகத்தின் பார்வை பெற்றிருந்தால், அவர்களுடைய திசை

அல்லது புத்தி நடைபெறும்போது பணப் பிரச்சினைகள் உண்டாகும்

ஜாதகத்தைப் பாருங்கள்.

1. இரண்டாம் அதிபதி சுக்கிரன் 4ஆம் அதிபதி சந்திரனுடன் சேர்ந்து பன்னிரெண்டில். நான்கில் ராகு. சுகக்கேடான ஜாதகம்.
2. இரண்டாம் அதிபதி  (Lord for house of finance) சுக்கிரன் பன்னிரெண்டில் அமர்ந்ததால், ஜாதகனுக்குக் கடும் பணப் பிரச்சினை உண்டானது.

ஆனால் அவன் ஜாதகத்தில் உச்சம் பெற்று நல்ல நிலையில் உள்ளதால், தன்னுடைய திசையில் ஜாதகனின் பணப்பிரச்சினைகள  அனைத்தையும் தீர்த்துவைத்தான்.

உச்சமான கிரகங்கள், தங்களுடைய திசைகளில் பலத்த நன்மைகளைச் செய்யும். அதுவும் சுபக்கிரகமாக இருந்தால் நன்மையான பலன்களே அதிகமாக இருக்கும். அதை மனதில் வையுங்கள்.

பண வரவிற்கு இன்னும் சில அமைப்புக்கள் உள்ளன. அது மேல் நிலைப் பாடத்தில் வரும். இங்கே அல்ல. இங்கே வந்தால்  திருட்டுப்போய்விடும். ஆகவே வாத்தியாரின் தனி இணைய தளத்தில் வரும். இரண்டு ஆண்டுகள் கழித்து மேல் நிலைப் பாடங்கள் புத்தகமாக வரும் அப்போது அனைவரும் படிக்கலாம்.
-----------------------------------------------
"வாத்தி (யார்), இரண்டு ஆண்டுகள் எதற்கு? அதற்கு முன்னதாகவே வராதா?"

"முதலில் இதுவரை எழுதிய பாடங்கள் அனைத்தும் புத்தகங்களாக வரும். மொத்தம் 3 அல்லது 4 பகுதிகள். அவைகளுக்கு உள்ள ஆதரவைப் பார்த்துவிட்டு, அவைகள் விற்றுத் தீர்ந்தவுடன், அடுத்த பகுதிகள் அச்சிடப்பெறும். அதற்குத்தான் அந்த இடைவெளி கண்ணா!

"அதெல்லாம் விற்றுவிடும். பதிப்பகத்தாரிடம் சொல்லி, வரிசையாகத் தொடர்ந்து வெளியிடுங்கள்"

"எனக்கு மக்களின் மேல்  பாதி நம்பிக்கை உள்ளது. ஆனால் மக்களுக்கு இலவசங்கள் மீதல்லவா காதல் இருக்கிறது!"

http://youtu.be/2gNNDIjDXKE:  Our sincere thanks to the person who uploaded the video clipping
-----------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

47 comments:

Kalai said...

அய்யா , இன்றைய பாடம்தான் அதிகமானோரை , ஜாதகத்தை பார்க்க தூண்டுவது. இன்னும் கொஞ்சம் டிப்ஸ் கொடுத்து இருக்கலாமோன்னு தோன்றியது .
ஏன் என்றால் என்னை போன்றவர்கள் கொஞ்சம் எங்கள் கட்டத்தையும் பார்த்து ஒரு ஆறுதல் அடைந்து கொள்வோம்.

தமிழ் விரும்பி ஆலாசியம் said...

வகுப்பறையில் நின்று அருள் பாலிக்கும் அப்பன் முருகன் அழகனின் படம் அருமை...
அனைவரையும் காக்கவேண்டும் முருகா!
ஆனந்தமே அளிக்க வேண்டும் திருமுருகா!

"நச் என்று எதைச் சொன்னார் நம்ம வாத்தியார்!"

"எனக்கு மக்களின் மேல் பாதி நம்பிக்கை உள்ளது. ஆனால் மக்களுக்குஇலவசங்கள் மீதல்லவா காதல் (அதீத நம்பிக்கை) இருக்கிறது!"

தாங்கள் சொல்வதும் உண்மை தான்... எவ்வளவுப் பணம் இருந்தாலும் போதாது என்று அலையும் தரித்திர யோகம் தான் நிறையப் பணக்காரர்களுக்கும் இருக்கிறது! காரணம் அவர்கள் தான் பெரும்பாலும் மலிவு, தள்ளுபடி, கழிவு, ஏன்? ஒன்னுக்கு ஒன்னு இலவசமேன்றுத் தரக் கூடாது என்று கேட்கிறான்... இல்லாதவன் தான் அந்தப் பக்கமே போவதில்லையே!

நன்றிகள் ஐயா!

தமிழ் விரும்பி ஆலாசியம் said...

ஜாதகத்தின் பலம் லக்னாதிபதி, பூர்வ புண்ணியாதிபதி, பாக்யாதிபதி (திரிகோண அதிபதிகள்) யாவரும் ஒட்டுமொத்தமாக கூட்டப் போட்டு பதினொன்றில் சிறப்பு!
இரண்டுக்கு உரியவன் அந்த வீட்டிற்கு பதினொன்றில் உச்சம் கூடவே கேந்திராதிபதியும் சுபருமான சந்திரன் இதுவும் சிறப்பு...
நான்குக்கு உரியவன் அந்த வீட்டிற்கு திரிகோணத்தில் இதுவும் சிறப்பு....
ஆனால், இரண்டில் அமர்ந்த மாந்திரும்... நான்கில் அமர்ந்த ராகுவும் தான் வில்லங்கமே... (நான்கிற்கு உரியவன் பன்னிரெண்டில்) அதிலும் அதை சாதகனின் மனத்தை... அல்லது தாயை, அல்லது சுகத்தை இவைகள் யாதானும் ஒன்றை இரண்டில் இருக்கும் மாந்தியால் பொருளாதார ரீதியிலே பாதித்து இருக்கும் என்றும் சொல்லலாம்...

இதில் இன்னொரு அமைப்பு மகர கேதுவும், கடக ராகுவும்.... வாழ்க்கையில் ஞாப பெறவேண்டுமானால் மேலே உள்ள அந்த அமைப்பும் இப்படி செயல் பட்டு தான் ஆக வேண்டும்...

சரி தானே ஐயா!

தேமொழி said...

ஜாதகருக்கு காலசர்ப்ப தோஷம் ஜாதகம், பாவம்...

அடுத்து எந்த ஜாதக அமைப்பு இருந்தால் எதிர்பாராத பணவரவு (உழைப்பின்றி) கிடைக்கும் என்பதையும் ஒரு முறை பாடத்தில் குறிப்பிடமுடியுமா? என் தம்பிக்கு பத்திரிகைகளில் நடக்கும் போட்டிகளில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பரிசுகள் கிடைப்பது வழக்கம். பெரிய தொகைகள் இல்லைதான். ஆனாலும் Statistically random occurrence என எப்போதோ ஒருமுறை நடக்க வேண்டியது அடிக்கடி நடப்பதற்கு எந்த அமைப்பு இருக்கும்.

பாடத்திற்கு நன்றி ஐயா.

Sathish K said...

காலை வணக்கம் ஐயா.

பதிவிற்கு நன்றி. ஆலாசியம் அவர்கள் சொல்வது போல் மாந்தியும் ராகுவும் கேம் ஆடிவிட்டார்கள்.

புத்தக வெளியீடுகள் எப்பொழுது ஐயா?

iyer said...

12

iyer said...

பணம் இருந்தால் புத்தகம் வாங்கலாம்
அறிவை வாங்க முடியுமா?

பணம் இருந்தால் சோறு வாங்கலாம்
பசியை வாங்க முடியுமா?

பணம் இருந்தால் மருந்து வாங்கலாம்
ஆரோக்கியத்தை வாங்க முடியுமா?

பணம் இருந்தால் மெத்தை வாங்கலாம்
உறக்கத்தை வாங்க முடியுமா?

பணம் இருந்தால் software வாங்கலாம்
skillயை வாங்க முடியுமா?

eswari sekar said...

sir enriya pathivu nanrga erunthu ungalyda books 2008 .2010 engu kidakkum jothida books

Govindasamy said...

2 க்கு உரியவன் வலுத்து 12ம் வீட்டில் நாலுக்குரியோனுடன் இருப்பதாலும், 9 க்கு உரிய குரு 11ல் 5 க்குடைய சூரியனுடன் இருப்பதாலும், 10 க்கு உரியோன் சனி தன் வீட்டில் பலத்துடன் இருப்பதாலும் இவருக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய வருமானமோ அல்லது இவர் வெளிநாட்டில் செட்டில் ஆனவராகவோ இருக்க வாய்ப்புள்ளது..

சரிதானே அய்யா..?

பாடத்திற்கு நன்றிகள்

Anbu said...

Thaipusam valthukkam sir.

Anbu said...

தை பூசம் வாழ்த்துக்கள் ஐயா. இந்த ஜாதகத்தில் 2, 10, 11 பாவங்களில் பிளஸ் அண்ட் மைனஸ் சேர்ந்து இருகின்றன. இரண்டாம் அதிபதி 12 இல் இருந்தாலும் உச்சம் அடைந்திருகிறது. பத்தாம் அதிபதி ஆட்சி அடைந்தாலும் ஆறாம் அதிபதியுடன் சேர்ந்திருக்கிறது. அதனால் செய்யும் தொழிலில் பிரச்சனைகள். 11 இல் சூரியன் இருதாலும் அது அவருக்கு பகை வீடு. அதுமட்டும் இல்லாமல் எட்டாம் அதிபதி செவ்வாயும் இருக்கிறது. இருந்தாலும் சூரியன் பூர்வ புண்ணிய அதிபதி. செவ்வாய் லக்கினாதிபதி. அதனால் பெரிய தீமையை செய்ய மாட்டார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது பணம் ஜாதகருக்கு அதிகமாவும் கிடைக்காது. குறைவாகவும் போகாது. சரிதானே அய்யா?

thanusu said...

வரிசையாக திணற திணற பதிவுகள் வந்துக் கொண்டே இருக்கின்றன. இதை போல திணற திணற பண வரவு வந்தாலும் நன்றாக இருக்கும். இன்றைய பாடத்திற்கும் பதிவுகளுக்கும் ஒரு பொருத்தம் இருப்பது போல் தெரிகிறது .

பணவரவின் பாடம் ஆரம்ப நிலையில் உள்ள என் போன்றோருக்கு நன்றாக விளங்குகிறது.இன்றைக்கு வகுப்பறையின் ஹிட்ஸ் அதிகமாக இருக்கும் . பின்னூட்டங்களும் வரும் என்று நினைக்கிறேன்

ரமேஷ் வெங்கடபதி said...

ஐயா வணக்கம்!

லக்னாதிபதியும்,ஆறாமிடத்து அதிபதியும் ஒருவராக இருந்து,அந்த அதிபதியின் திசையில் பலன்கள் மிக்ஸட் ஆக இருக்கும் எனலாமா?

பணத்தட்டுப்பாடு பெரும்பான்மையாக நேரத்தில் இருந்து,படுத்தி எடுத்துவிட்டு,திடீரென விலகிச் செல்லும்!

இது சரியான எண்ணம்,புரிதல் இல்லையெனில் அறிவுறுத்தவும்!

kmr.krishnan said...

கடனாளி ஆனதைச் சொன்னீர்கள். கொடுத்த கடன் எப்போது திரும்பிவரும்? ஏன் அப்படி முடங்குகிறது? அதற்கான ஜாதக நிலைப்பாடு என்ன?

இப்படி ஒரு பதிவினைப் போடுங்கள் ஐயா.

வகுப்பறையில் ஒரு கவுண்ட் டவுன் நடக்கிறதே. கவனித்தீர்களா?

சிவராத்திரி கவுண்ட் டவுனா?

அல்லது ஏதாவது உண்மையாகவே குண்டு வெடிக்கப் போகிறதா?

அல்லது ராக்க்கெட் பறக்கப் போகிறதா?

kmr.krishnan said...

http://azhiyasudargal.blogspot.com/

மேற்கண்ட வலைப்பூ இருபதாம் நூற்றாண்டு தமிழ் எழுத்துக்க்ளின் ஆவணக் காப்பகம். பெயர்மட்டுமே கேள்விப்பட்டு, அந்த எழுத்தாளரின் ஆக்கங்கள் ஒன்றைக் கூடப் படிக்கவில்லையே என்று நீங்கள் ஆதங்கப்பட்டால் உங்களுக்கான வலைப்பூ இது.

தமிழ் விரும்பி ஆலாசியம் said...

/////kmr.krishnan said...
http://azhiyasudargal.blogspot.com/

மேற்கண்ட வலைப்பூ இருபதாம் நூற்றாண்டு தமிழ் எழுத்துக்க்ளின் ஆவணக் காப்பகம். பெயர்மட்டுமே கேள்விப்பட்டு, அந்த எழுத்தாளரின் ஆக்கங்கள் ஒன்றைக் கூடப் படிக்கவில்லையே என்று நீங்கள் ஆதங்கப்பட்டால் உங்களுக்கான வலைப்பூ இது./////

ஆஹா! அருமை.. அருமை...
கிருஷ்ணன் சார் தங்களின் ஆற்றுப் படுத்துதலுக்கு ஆயிரம் நமஸ்காரம்.
மிக்க நன்றி..

minorwall said...

இன்றைய பதிவின் பின்னூட்டத்தில் வந்த அய்யரின் கேள்வியை ரிபீட் விட்டுக் கொள்கிறேன்..

நீங்கள் சொன்ன அந்தக் கோடியில் புரளும் லிஸ்ட் ஆட்கள் இந்தக் கோடியின் உழைப்பாளிகளின் உடல் வலுவைச் சார்ந்துதான் பிழைத்துவருகிறார்கள்..

ஒருநாள் இவர்களெல்லாம் வேலைநிறுத்தம் செய்தால் முதலாளிகளுக்கு ஏற்படும் இழப்பு பல கோடிகளைத் தாண்டும்..இப்படி நிறைய பாலன்ஸ் இருக்கிறது..

தேமொழி எழுதியதைப் போல ஒரு நல்ல கதையை நீங்கள் சொன்ன ஆட்களில் ஒருவரை சுயமாக எழுதச் சொல்லுங்கள் பார்ப்போம்..

பணம் மட்டுமே இருக்கும் பரிதாபத்துக்குரிய ஜென்மங்களில் இவர்களும் அடக்கம் என்பதே என் கருத்து..

minorwall said...

///"வாத்தி (யார்), இரண்டு ஆண்டுகள் எதற்கு? அதற்கு முன்னதாகவே வராதா?"

"முதலில் இதுவரை எழுதிய பாடங்கள் அனைத்தும் புத்தகங்களாக வரும். மொத்தம் 3 அல்லது 4 பகுதிகள். அவைகளுக்கு உள்ள ஆதரவைப் பார்த்துவிட்டு, அவைகள் விற்றுத் தீர்ந்தவுடன், அடுத்த பகுதிகள் அச்சிடப்பெறும். அதற்குத்தான் அந்த இடைவெளி கண்ணா!
"அதெல்லாம் விற்றுவிடும். பதிப்பகத்தாரிடம் சொல்லி, வரிசையாகத் தொடர்ந்து வெளியிடுங்கள்"
"எனக்கு மக்களின் மேல் பாதி நம்பிக்கை உள்ளது. ஆனால் மக்களுக்கு இலவசங்கள் மீதல்லவா காதல் இருக்கிறது!"////

ஆமா சார்..எதுக்கும் நீங்க ரொம்ப உஷாராவே இருக்குறது நல்லது..

ஆர்டர் எடுத்து ரிசெர்வேஷன் பண்ணின ஆட்களை மட்டுமே கணக்கில் எடுத்து பிரிண்ட் பண்ண ஆர்டர் கொடுப்பது நல்லது..
மங்குனிப் பாண்டியர்கள் எதுக்கும் அசையாத கல்லுளி மன்னர்கள்..சத்தமே போடாம கவுத்தாலும் ஆச்சரியப் படுறதுக்கில்லே..
நேர விரயம் ஏதோ பொழுதுபோக்கா போகும்..பணவிரயம் நல்லதுக்கில்லை..
ஆமா..உங்களுக்கு இப்போ ஆறாம் இடத்து அதிபதி / மாந்தி சம்பந்தப் பட்ட தசா புக்தி ஏதும் நடக்கலியே?

SP.VR. SUBBAIYA said...

////Blogger Kalai said...
அய்யா , இன்றைய பாடம்தான் அதிகமானோரை , ஜாதகத்தை பார்க்க தூண்டுவது. இன்னும் கொஞ்சம் டிப்ஸ் கொடுத்து இருக்கலாமோன்னு தோன்றியது. ஏன் என்றால் என்னை போன்றவர்கள் கொஞ்சம் எங்கள் கட்டத்தையும் பார்த்து ஒரு ஆறுதல் அடைந்து கொள்வோம்.///

பணத்தையும் ஜாதகத்தையும் கோர்த்து ஒரு தனிப் புத்தகம் போடும் அளவிற்கு விவரமாக எழுதலாம். எழுத உள்ளேன்.பொறுத்திருங்கள் சகோதரி

SP.VR. SUBBAIYA said...

////Blogger தமிழ் விரும்பி ஆலாசியம் said..
வகுப்பறையில் நின்று அருள் பாலிக்கும் அப்பன் முருகன் அழகனின் படம் அருமை...
அனைவரையும் காக்கவேண்டும் முருகா!
ஆனந்தமே அளிக்க வேண்டும் திருமுருகா!
"நச் என்று எதைச் சொன்னார் நம்ம வாத்தியார்!"
"எனக்கு மக்களின் மேல் பாதி நம்பிக்கை உள்ளது. ஆனால் மக்களுக்குஇலவசங்கள் மீதல்லவா காதல் (அதீத நம்பிக்கை) இருக்கிறது!"
தாங்கள் சொல்வதும் உண்மை தான்... எவ்வளவுப் பணம் இருந்தாலும் போதாது என்று அலையும் தரித்திர யோகம் தான் நிறையப் பணக்காரர்களுக்கும் இருக்கிறது! காரணம் அவர்கள் தான் பெரும்பாலும் மலிவு, தள்ளுபடி, கழிவு, ஏன்? ஒன்னுக்கு ஒன்னு இலவசமேன்றுத் தரக் கூடாது என்று கேட்கிறான்... இல்லாதவன் தான் அந்தப் பக்கமே போவதில்லையே!
நன்றிகள் ஐயா!/////

தன்மானம் உள்ளவன் போவதில்லை. சுயகெளரவம் உள்ளவன் போவதில்லை.

SP.VR. SUBBAIYA said...

Blogger தமிழ் விரும்பி ஆலாசியம் said...
ஜாதகத்தின் பலம் லக்னாதிபதி, பூர்வ புண்ணியாதிபதி, பாக்யாதிபதி (திரிகோண அதிபதிகள்) யாவரும் ஒட்டுமொத்தமாக கூட்டப் போட்டு பதினொன்றில் சிறப்பு! இரண்டுக்கு உரியவன் அந்த வீட்டிற்கு பதினொன்றில் உச்சம் கூடவே கேந்திராதிபதியும் சுபருமான சந்திரன் இதுவும் சிறப்பு...
நான்குக்கு உரியவன் அந்த வீட்டிற்கு திரிகோணத்தில் இதுவும் சிறப்பு....
ஆனால், இரண்டில் அமர்ந்த மாந்திரும்... நான்கில் அமர்ந்த ராகுவும் தான் வில்லங்கமே... (நான்கிற்கு உரியவன் பன்னிரெண்டில்) அதிலும் அதை சாதகனின் மனத்தை... அல்லது தாயை, அல்லது சுகத்தை இவைகள் யாதானும் ஒன்றை இரண்டில் இருக்கும் மாந்தியால் பொருளாதார ரீதியிலே பாதித்து இருக்கும் என்றும் சொல்லலாம்...
இதில் இன்னொரு அமைப்பு மகர கேதுவும், கடக ராகுவும்.... வாழ்க்கையில் ஞாப பெறவேண்டுமானால் மேலே உள்ள அந்த அமைப்பும் இப்படி செயல் பட்டு தான் ஆக வேண்டும்...
சரி தானே ஐயா!////

சரிதான் ஆலாசியம். ஒரு குடம் பாலில், ஒரு கோப்பை விஷம் போல மாந்தி தான் இருக்கும் வீட்டை விஷமாக்கிவிடும்

SP.VR. SUBBAIYA said...

////Blogger தேமொழி said...
ஜாதகருக்கு காலசர்ப்ப தோஷம் ஜாதகம், பாவம்...
அடுத்து எந்த ஜாதக அமைப்பு இருந்தால் எதிர்பாராத பணவரவு (உழைப்பின்றி) கிடைக்கும் என்பதையும் ஒரு முறை பாடத்தில் குறிப்பிடமுடியுமா? என் தம்பிக்கு பத்திரிகைகளில் நடக்கும் போட்டிகளில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பரிசுகள் கிடைப்பது வழக்கம். பெரிய தொகைகள் இல்லைதான். ஆனாலும் Statistically random occurrence என எப்போதோ ஒருமுறை நடக்க வேண்டியது அடிக்கடி நடப்பதற்கு எந்த அமைப்பு இருக்கும்.
பாடத்திற்கு நன்றி ஐயா.//////

பணத்தைப் பற்றிய அனைத்து அம்சங்களையும் குறிப்பிட்டு ஒரு தொடர் பாடம் எழுதவுள்ளேன். பொறுத்திருங்கள் சகோதரி

SP.VR. SUBBAIYA said...

Blogger Sathish K said...
காலை வணக்கம் ஐயா.
பதிவிற்கு நன்றி. ஆலாசியம் அவர்கள் சொல்வது போல் மாந்தியும் ராகுவும் கேம் ஆடிவிட்டார்கள்.
புத்தக வெளியீடுகள் எப்பொழுது ஐயா?////

ஏப்ரல் மாதம் புத்தகங்கள் வெளிவரும்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger iyer said...
12////

பழ்நிஅப்பா, எதற்கு இந்தக் கவுன்ட் டவுன்? அன்பர் விசுவநாதன் take off ஆகிவிடாமல் பார்த்துக்கொள்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger iyer said...
பணம் இருந்தால் புத்தகம் வாங்கலாம்
அறிவை வாங்க முடியுமா?
பணம் இருந்தால் சோறு வாங்கலாம்
பசியை வாங்க முடியுமா?
பணம் இருந்தால் மருந்து வாங்கலாம்
ஆரோக்கியத்தை வாங்க முடியுமா?
பணம் இருந்தால் மெத்தை வாங்கலாம்
உறக்கத்தை வாங்க முடியுமா?
பணம் இருந்தால் software வாங்கலாம்
skillயை வாங்க முடியுமா?/////

பணம் இருந்தால் அறிவாளிகளை விலக்கு வாங்கலாம்
a small portion of a food or drink taken before or at the beginning of a meal will stimulate the desire to eat.(appitiser)
பணம் இருந்தால் சொந்தத்தில் ஒரு மருத்துவமனைக்கு ஏற்பாடு செய்துகொள்ளலாம். வீட்டிலேயே ஒரு மருத்துவரை வேலைக்கு வைத்துக்கொள்ளலாம்
உறக்கம் வருவதற்கு ஒரு வழி உள்ளது. அதைப் பொதுவில் எழுத முடியாது
பணம் இருந்தால் skill உள்ளவர்களை விலைக்கு வாங்கலாம்
(எல்லாம் ஒரு தமாஷ்ற்காக எழுதினேன். டென்சன் ஆகிவிடாதீர்க்ள்)

SP.VR. SUBBAIYA said...

////Blogger eswari sekar said...
sir enriya pathivu nanrga erunthu ungalyda books 2008 .2010 engu kidakkum jothida books////

புத்தகங்கள் முதல் இரண்டு தொகுதிகள் (சுமார் 1,000 பக்கங்கள் அளவில்) ஏப்ரல் மாதம் வெளிவரும். முறையான அறிவிப்பு பதிவில் வெளியாகும். அப்போது வாங்கிக்கொள்ளுங்கள் சகோதரி

SP.VR. SUBBAIYA said...

////Blogger Govindasamy said...
2 க்கு உரியவன் வலுத்து 12ம் வீட்டில் நாலுக்குரியோனுடன் இருப்பதாலும், 9 க்கு உரிய குரு 11ல் 5 க்குடைய சூரியனுடன் இருப்பதாலும், 10 க்கு உரியோன் சனி தன் வீட்டில் பலத்துடன் இருப்பதாலும் இவருக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய வருமானமோ அல்லது இவர் வெளிநாட்டில் செட்டில் ஆனவராகவோ இருக்க வாய்ப்புள்ளது..
சரிதானே அய்யா..?
பாடத்திற்கு நன்றிகள்////

2ல் மாந்தி இருப்பதாலும், 11ஆம் வீட்டுக்காரன் சனி அந்த வீட்டிற்குப் 12ல் இருப்பதாலும் நீங்கள் சொல்கின்ற வருமானம் எல்லாம் அவருக்குக் கிடைக்கவில்லை. பணப் பிரச்சினைகள் தீரும் அளவிற்குப் பணம் கிடைத்தது. அவ்வளவுதான்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Anbu said...
Thaipusam valthukkam sir.////

ஆகா, உங்களுக்கும் வகுப்பறையின் சார்பில் வாழ்த்துக்கள்!

SP.VR. SUBBAIYA said...

Blogger Anbu said...
தை பூசம் வாழ்த்துக்கள் ஐயா. இந்த ஜாதகத்தில் 2, 10, 11 பாவங்களில் பிளஸ் அண்ட் மைனஸ் சேர்ந்து இருகின்றன. இரண்டாம் அதிபதி 12 இல் இருந்தாலும் உச்சம் அடைந்திருகிறது. பத்தாம் அதிபதி ஆட்சி அடைந்தாலும் ஆறாம் அதிபதியுடன் சேர்ந்திருக்கிறது. அதனால் செய்யும் தொழிலில் பிரச்சனைகள். 11 இல் சூரியன் இருதாலும் அது அவருக்கு பகை வீடு. அதுமட்டும் இல்லாமல் எட்டாம் அதிபதி செவ்வாயும் இருக்கிறது. இருந்தாலும் சூரியன் பூர்வ புண்ணிய அதிபதி. செவ்வாய் லக்கினாதிபதி. அதனால் பெரிய தீமையை செய்ய மாட்டார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது பணம் ஜாதகருக்கு அதிகமாவும் கிடைக்காது. குறைவாகவும் போகாது. சரிதானே அய்யா?

கஷ்ட காலங்களில் கஷ்டங்கள் அதிகமாக இருந்திருக்கின்றனவே! அதனால் நன்மையான காலத்தில் பலன்கள் சமமாக இருக்கும் என்பது சரியில்லையே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger thanusu said...
வரிசையாக திணற திணற பதிவுகள் வந்துக் கொண்டே இருக்கின்றன. இதை போல திணற திணற பண வரவு வந்தாலும் நன்றாக இருக்கும். இன்றைய பாடத்திற்கும் பதிவுகளுக்கும் ஒரு பொருத்தம் இருப்பது போல் தெரிகிறது .
பணவரவின் பாடம் ஆரம்ப நிலையில் உள்ள என் போன்றோருக்கு நன்றாக விளங்குகிறது.இன்றைக்கு வகுப்பறையின் ஹிட்ஸ் அதிகமாக இருக்கும் . பின்னூட்டங்களும் வரும் என்று நினைக்கிறேன்////

நான் அப்படி நினைக்கவில்லை. எப்போதும் போலவே இருக்கும்!

SP.VR. SUBBAIYA said...

///Blogger ரமேஷ் வெங்கடபதி said...
ஐயா வணக்கம்!
லக்னாதிபதியும்,ஆறாமிடத்து அதிபதியும் ஒருவராக இருந்து,அந்த அதிபதியின் திசையில் பலன்கள் மிக்ஸட் ஆக இருக்கும் எனலாமா?
பணத்தட்டுப்பாடு பெரும்பான்மையாக நேரத்தில் இருந்து,படுத்தி எடுத்துவிட்டு,திடீரென விலகிச் செல்லும்!
இது சரியான எண்ணம்,புரிதல் இல்லையெனில் அறிவுறுத்தவும்!////

லக்கினாதிபதின் இருப்பிடம், சேர்க்கை, சுப கிரங்களின் பார்வை போன்ற விஷயங்களை வைத்துப் பலன்கள் மாறுபடும்

SP.VR. SUBBAIYA said...

////Blogger kmr.krishnan said...
கடனாளி ஆனதைச் சொன்னீர்கள். கொடுத்த கடன் எப்போது திரும்பிவரும்? ஏன் அப்படி முடங்குகிறது? அதற்கான ஜாதக நிலைப்பாடு என்ன?
இப்படி ஒரு பதிவினைப் போடுங்கள் ஐயா.
வகுப்பறையில் ஒரு கவுண்ட் டவுன் நடக்கிறதே. கவனித்தீர்களா?
சிவராத்திரி கவுண்ட் டவுனா?
அல்லது ஏதாவது உண்மையாகவே குண்டு வெடிக்கப் போகிறதா?
அல்லது ராக்க்கெட் பறக்கப் போகிறதா?////

உலக மக்களின் நன்மைக்காகத்தான் இருக்கும். எதற்கு என்று தெரியவில்லை. அப்பன் முருகன் வந்து சொன்னால்தான் உண்டு!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
http://azhiyasudargal.blogspot.com/
மேற்கண்ட வலைப்பூ இருபதாம் நூற்றாண்டு தமிழ் எழுத்துக்க்ளின் ஆவணக் காப்பகம். பெயர்மட்டுமே கேள்விப்பட்டு, அந்த எழுத்தாளரின் ஆக்கங்கள் ஒன்றைக் கூடப் படிக்கவில்லையே என்று நீங்கள் ஆதங்கப்பட்டால் உங்களுக்கான வலைப்பூ இது./////

பார்த்தேன், நன்றாக உள்ளது. தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger தமிழ் விரும்பி ஆலாசியம் said...
/////kmr.krishnan said...
http://azhiyasudargal.blogspot.com/
மேற்கண்ட வலைப்பூ இருபதாம் நூற்றாண்டு தமிழ் எழுத்துக்க்ளின் ஆவணக் காப்பகம். பெயர்மட்டுமே கேள்விப்பட்டு, அந்த எழுத்தாளரின் ஆக்கங்கள் ஒன்றைக் கூடப் படிக்கவில்லையே என்று நீங்கள் ஆதங்கப்பட்டால் உங்களுக்கான வலைப்பூ இது./////
ஆஹா! அருமை.. அருமை...
கிருஷ்ணன் சார் தங்களின் ஆற்றுப் படுத்துதலுக்கு ஆயிரம் நமஸ்காரம்.
மிக்க நன்றி../////

அந்த்ப் பதிவிற்குச் சென்று பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். பார்த்தேன். உங்கள் சுறுசுறுப்பிற்கு நன்றி ஆலாசியம்

sundari said...

சார் வணக்க்ம்,
என்க்கும் வேண்டும் ஜாதக புத்தகங்கள் சார் 2 புத்தகம்மா எத்தனை தொகுதி 1,2
1000 பக்கம்மா அப்போ 2,000 பக்கம்மா

josphin said...

ஐயா,
வணக்கம்,தங்கள் முதல் பதிப்பு தேர்ந்தெடுத்து கொடுத்தது போல இந்த தடவையும் செய்வீர்களா?
எப்போது அடுத்த வெளியீடு?
‍‍‍‍முரளிகுமார்

Jeyram said...

ஐயா வண‌க்கம்,
2ம் வீட்டு அதிபதி 12ம் வீட்டில் இருந்து, 12ம் வீட்டு அதிபதி வேறு இடத்தில் உச்சம் அடைதால் ஏதாவது தேறுமா சார்?

SP.VR. SUBBAIYA said...

/////Blogger minorwall said...
இன்றைய பதிவின் பின்னூட்டத்தில் வந்த அய்யரின் கேள்வியை ரிபீட் விட்டுக் கொள்கிறேன்..
நீங்கள் சொன்ன அந்தக் கோடியில் புரளும் லிஸ்ட் ஆட்கள் இந்தக் கோடியின் உழைப்பாளிகளின் உடல் வலுவைச் சார்ந்துதான் பிழைத்துவருகிறார்கள்..
ஒருநாள் இவர்களெல்லாம் வேலைநிறுத்தம் செய்தால் முதலாளிகளுக்கு ஏற்படும் இழப்பு பல கோடிகளைத் தாண்டும்..இப்படி நிறைய பாலன்ஸ் இருக்கிறது..
தேமொழி எழுதியதைப் போல ஒரு நல்ல கதையை நீங்கள் சொன்ன ஆட்களில் ஒருவரை சுயமாக எழுதச் சொல்லுங்கள் பார்ப்போம்..
பணம் மட்டுமே இருக்கும் பரிதாபத்துக்குரிய ஜென்மங்களில் இவர்களும் அடக்கம் என்பதே என் கருத்து../////

உண்மைதான். accumulated money will make one ugly என்பார்கள்.
சின்னச் சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை"
எல்லாம் இல்லாத அல்லது கிடைக்காத மனிதர்கள் அவர்கள்

SP.VR. SUBBAIYA said...

///Blogger minorwall said...
///"வாத்தி (யார்), இரண்டு ஆண்டுகள் எதற்கு? அதற்கு முன்னதாகவே வராதா?"
"முதலில் இதுவரை எழுதிய பாடங்கள் அனைத்தும் புத்தகங்களாக வரும். மொத்தம் 3 அல்லது 4 பகுதிகள். அவைகளுக்கு உள்ள ஆதரவைப் பார்த்துவிட்டு, அவைகள் விற்றுத் தீர்ந்தவுடன், அடுத்த பகுதிகள் அச்சிடப்பெறும். அதற்குத்தான் அந்த இடைவெளி கண்ணா!
"அதெல்லாம் விற்றுவிடும். பதிப்பகத்தாரிடம் சொல்லி, வரிசையாகத் தொடர்ந்து வெளியிடுங்கள்"
"எனக்கு மக்களின் மேல் பாதி நம்பிக்கை உள்ளது. ஆனால் மக்களுக்கு இலவசங்கள் மீதல்லவா காதல் இருக்கிறது!"////
ஆமா சார்..எதுக்கும் நீங்க ரொம்ப உஷாராவே இருக்குறது நல்லது..
ஆர்டர் எடுத்து ரிசெர்வேஷன் பண்ணின ஆட்களை மட்டுமே கணக்கில் எடுத்து பிரிண்ட் பண்ண ஆர்டர் கொடுப்பது நல்லது..
மங்குனிப் பாண்டியர்கள் எதுக்கும் அசையாத கல்லுளி மன்னர்கள்..சத்தமே போடாம கவுத்தாலும் ஆச்சரியப் படுறதுக்கில்லே..
நேர விரயம் ஏதோ பொழுதுபோக்கா போகும்..பணவிரயம் நல்லதுக்கில்லை..////

இதுவும் உண்மைதான். அந்த அனுபவம் எனக்கு உண்டு. நான் எழுதியுள்ள 4 நூலகளுக்கான செய்திகள் நம் பதிவின் சைடுபாரில் பல மாதங்களாக உள்ளது.
என் எழுத்துகளைச் சிலாகிக்கும் எத்தனை பேர்கள் அதனைக் கேட்டு வாங்கியிருக்கிறார்கள் என்று தெரியுமா? வெகு சிலரே பத்திற்கும் குறைவானவர்களே.
இலவசம் என்றால் எனக்குப் பத்து, என் பெண்டாட்டிக்குப் பத்து என்பார்கள். காசு என்றால் காணாமல் போய்விடுவார்கள்! அது தமிழர்களின் பொதுக்குணம். அதை நன்கு அறிந்து, பயன் படுத்திக்கொள்பவர்கள் தமிழக் அரசியல்வாதிகள்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
///ஆமா..உங்களுக்கு இப்போ ஆறாம் இடத்து அதிபதி / மாந்தி சம்பந்தப் பட்ட தசா புக்தி ஏதும் நடக்கலியே?////

ஆறாம் இடத்தான் பரிவர்த்தனையாகி கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்துள்ளான். ராமன வந்தாலும், ராவணன் வந்தாலும் எனக்கொரு கவலை இல்லை என்று பாட்டு வேறு பாடுகிறான் மைனர்!

SP.VR. SUBBAIYA said...

///Blogger sundari said...
சார் வணக்க்ம்,
என்க்கும் வேண்டும் ஜாதக புத்தகங்கள் சார் 2 புத்தகம்மா எத்தனை தொகுதி 1,2
1000 பக்கம்மா அப்போ 2,000 பக்கம்மா///

500 பக்கங்கள். இரண்டு தொகுப்புக்களும் சேர்ந்து மொத்தம் 1,000 பக்கங்கள். உங்களுக்குத்தான் முதல் பிரதிகள்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger josphin said...
ஐயா,
வணக்கம்,தங்கள் முதல் பதிப்பு தேர்ந்தெடுத்து கொடுத்தது போல இந்த தடவையும் செய்வீர்களா?
எப்போது அடுத்த வெளியீடு?
‍‍‍‍முரளிகுமார்////

முதல் பதிப்பா? தேர்ந்தெடுத்துக்கொடுத்தேனா? என்ன ராசா சொல்கிறீர்கள்?

SP.VR. SUBBAIYA said...

////Blogger Jeyram said...
ஐயா வண‌க்கம்,
2ம் வீட்டு அதிபதி 12ம் வீட்டில் இருந்து, 12ம் வீட்டு அதிபதி வேறு இடத்தில் உச்சம் அடைதால் ஏதாவது தேறுமா சார்?///

அதற்கு benefits by the dispositors of a house என்று பெயர். விரிவான மேல் நிலைப் பாடம். விவரமாக எழுதியுள்ளேன். புத்தகம் வரும் வரை பொறுமையாக இருங்கள்

iyer said...

///ஆர்டர் எடுத்து ரிசெர்வேஷன் பண்ணின ஆட்களை மட்டுமே கணக்கில் எடுத்து பிரிண்ட் பண்ண ஆர்டர் கொடுப்பது நல்லது..
மங்குனிப் பாண்டியர்கள் எதுக்கும் அசையாத கல்லுளி மன்னர்கள்..சத்தமே போடாம கவுத்தாலும் ஆச்சரியப் படுறதுக்கில்லே..///

அதற்கு தான் வாத்தியாருக்கு முன்னரே
ஆலோசனை தந்தோம்..

Pre-Price Publication என ஒரு அறிவிப்பை தந்து ஆர்டர்களை மட்டுமல்ல தொகையையும் வசூல் செய்து விட்டால்

கையை கடிக்காது பொருளாதார ரீதியில்
கையில் புரளும் மாணவர் மத்தியில்

விரும்பினால் தரமான தாளில்
கூடுதல் வண்ணங்களுடன் என

வித்தியாசமாகவே தரலாம்..
விவரங்களை சொல்லிட்டோம்

மற்றது உங்கள்
மாணவர்கள் கையில்... (புத்தகம்)

தேமொழி said...

Pre-Price Publication?

இது நல்ல ஆலோசனை, Paypal வழியாக முன்பணம் செலுத்தி புத்தகங்களுக்கு முன்பதிவு செய்ய வகை செய்து கொடுத்தால் உதவியாக இருக்கும் ஐயா...ஆர்வமுள்ள மாணவியின் வேண்டுகோள் இது. நன்றி.

minorwall said...

////SP.VR. SUBBAIYA said...
இலவசம் என்றால் எனக்குப் பத்து, என் பெண்டாட்டிக்குப் பத்து என்பார்கள். காசு என்றால் காணாமல் போய்விடுவார்கள்! அது தமிழர்களின் பொதுக்குணம். அதை நன்கு அறிந்து, பயன் படுத்திக்கொள்பவர்கள் தமிழக் அரசியல்வாதிகள்!/////

நல்ல பன்ச்..என்ன வேணும்னும் சொல்லமாட்டார்கள்..என்ன வேண்டாம்னும் சொல்ல மாட்டார்கள்..அதனாலேதான் பஸ், பால் என்று என்ன விலையேற்றம் செய்ய முடிவெடுத்தாலும் 'இந்த மக்கள் எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள். எந்த அளவு பேய் மழை பெய்தாலும் இவர்கள் தன் பாட்டுக்குப் போய்க் கொண்டிருப்பார்கள்' என்றுதான் துணிந்து முடிவெடுக்கிறார்கள்.. அங்கே இருந்தா, இதுலே கலந்து, கரைஞ்சு போறதைத் தவிர வேறு வழியில்லை..வாழ்க தமிழகம்..வாழிய மக்கள்..

சுந்தரச் செல்வன் said...

ஐயா,

எனக்கு லக்னத்தில் (கும்பம்) கேது, சூரியன், புதன், ஏழாம் வீட்டில் (சிம்மம்) குரு, ராகு, சந்திரன், செவ்வாய் உள்ளன. ஆனால், மூன்றில் சுக்கிரனும் எட்டில் சனியும் உள்ளன.

தயை கூர்ந்து இந்த அமைப்பு கால சர்ப யோகமா என கூறவும்.

இப்படிக்கு,
சுந்தரச்செல்வன்.

SP.VR. SUBBAIYA said...

//// சுந்தரச் செல்வன் said...
ஐயா,
எனக்கு லக்னத்தில் (கும்பம்) கேது, சூரியன், புதன், ஏழாம் வீட்டில் (சிம்மம்) குரு, ராகு, சந்திரன், செவ்வாய் உள்ளன. ஆனால், மூன்றில் சுக்கிரனும் எட்டில் சனியும் உள்ளன.
தயை கூர்ந்து இந்த அமைப்பு கால சர்ப யோகமா என கூறவும்.
இப்படிக்கு,
சுந்தரச்செல்வன்.////

கேது & ராகுவின் பிடியில் அத்தனை கிரகங்களும் இருந்தால் கால சர்ப்ப தோஷம். உங்கள் ஜாதகத்தில் சனி அவர்களின் பிடியில் இருந்து வெளியே வந்துவிட்டார். ஆகவே அத்தோஷம் இல்லை!