மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

11.2.12

Cinema கதாநாயகி குதித்த குதியில் பூமிக்குள் போய்விட்ட பாடல்!

Cinema கதாநாயகி குதித்த குதியில் பூமிக்குள் போய்விட்ட பாடல்!

கதாநாயகி இந்தக் குதிகுதித்தால் பாடல் எப்படி விளங்கும்? அதாவது மண்டைக்குள் போகும். கண்ணை மூடிக்கொண்டு பார்த்தால்தான் பாடல் வரிகளும், இசையும், அத்துடன் யுவனின் அதிரடி டண்டனக்கா டக்கா தாளமும் நமக்குப் பிடிபடும். இல்லையென்றால் நோ சான்ஸ்

முதல் தடவை பார்க்கும்போது தமன்னா மட்டும்தான் தெரிகிறார். 100 கோடி ரூபாய்கள் லாட்டரியில் விழுந்தது போல அவர் அந்த்க் குதி குதிக்கிறார்.
அவர் குதிக்கும் அழகு மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறது. பாடலுடன் சேர்ந்து நாமும் பூமிக்குள் போய்விடுகிறோம்.

அதனால் கண்ணை மூடிக்கொண்டு பாடலை மட்டும் கேட்பது உத்தமம். அதாவது நல்லது

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
நெஞ்சைத் தொட்ட புதுப் பாடல் - பகுதி ஆறு

பாடல்: 
    "அடடா மழைடா அட மழைடா
         அழகா சிரிச்சா புயல் மழைடா"

காணொளி
http://youtu.be/e22QxrZ86Oc
Our sincere thanks to person who uploaded the video clippingபாடல் வரிகள்: 

அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா


மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு


மயில் தோக போல இவ மழையில் ஆடும் போது
ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு


அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா


பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழை தான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வெச்ச
மழைக்கொரு சலாம் போடு


என்னை கொஞ்சம் காணலயே
உனக்குள்ளே தேடி பாரு
மந்திரம் போல இருக்கு
புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு
தல மத்தியில் சுத்துது கிறுக்கு


தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே


உன்னப்போல வேறாறும் இல்ல
என்னவிட்டா வேறாறு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்ட
கொடுத்தென்ன அனுப்பி வெச்சான்
இந்த கண்ணு போதலயே
எதுக்கிவள படைச்சி வெச்சான்


பட்டாம்பூச்சி பொண்ணு
நெஞ்சு படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒண்ணு
என்னை கொன்னுப்புட்டா கொன்னு


போவது எங்கே நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே


அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா


பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்ச்சு
என் மூச்சு காத்தால மழை கூட சூடாச்சு


குடையை நீட்டி யாரும்
இந்த மழையை தடுக்க வேணாம்
அணைய போட்டு யாரும்
என் மனச அடக்க வேணாம்
கொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு 
--------------------------------
படம்: பையா (2010)
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: ராகுல்நம்பியார், சந்தவி
பாடலாக்கம்: கவிஞர். நா. முத்துக்குமார்
நடிப்பு: தமன்னா
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

24 comments:

kmr.krishnan said...

அடடா அடடா என்னா குதிடா
குதியா குதிச்சா குலை நடுங்குண்டா

நடடா நடடா நண்டு நடடா
நண்டா நடந்தா நா வருவேண்டா... :) :) :)

தமில் வால்க! தமிலன் வால்க!

SP.VR. SUBBAIYA said...

////kmr.krishnan said...
அடடா அடடா என்னா குதிடா
குதியா குதிச்சா குலை நடுங்குண்டா
நடடா நடடா நண்டு நடடா
நண்டா நடந்தா நா வருவேண்டா... :) :) :)
தமில் வால்க! தமிலன் வால்க!//////


பிடிடா பிடிடா காசைப் பிடிடா
பிடிக்காம விட்டீன்னா பைத்தியம் நீயடா
அடிடா அடிடா தாளம் அடிடா
தாளத்தோடு சேர்ந்து நீ குதிடா

நூறு நாளு ஓட வேண்டும் அதை நினைடா
இயக்குனர் சொன்னாக்க எல்லாம் சரிடா
இன்பத்தமிழ் போனாக்க நமக்கு என்னடா?
தமிழைவச்சுப் பிழைச்சவன் எவன் சொல்லடா?

தேமொழி said...

ஹ...ஹ...ஹா ....எனக்கு இன்றைய பதிவில் பிடித்தது விமர்சனமும், இதுவரை வந்த பின்னூட்டங்களும்.

கால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு? .....பொருள் புரியவில்லை
ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு?..... இது போல ஒரு ஆடும் ரயில் பாலத்தையும் நான் பார்த்ததில்லை

மனிதர்கள் குடையுடன் கம்பத்தில் உட்கார்ந்திருக்கும் நோக்கம் புரியவில்லை
முல்லை பெரியாரின் நீர் மட்டத்தை கண்காணிப்பவர்களோ?
மொத்தத்தில். ..
பம்பரம் போல எனக்கு தல மத்தியில் சுத்துது கிறுக்கு?..... கதாநாயகனுக்கு மட்டுமல்ல எனக்கும்தான்

அய்யர் said...

8

Kalai said...

Dear Ayya,

Im there! Read both "adada" and last blog "devotion" at the same time. 2 differnet worlds. As said, "each friend of you, represents each world in you", I could see varied personalities of you in each of your writing Ayya.
Have a great weekend.

regards, Kalai

csekar2930 said...

//அடடா அடடா என்னா குதிடா//

இந்த பாடலை கேட்டவுடன் என் நினைவுக்கு வருவது இந்த பாடல் தான் .
" ஜிஞ்சுனக்க சின்னக்கிளி
சிரிக்கும் பச்சைக்கிளி
ஓடி வந்த மேடையிலே ஆட்டமாட ஆ ..
ஜிஞ்சுனக்க சின்னக்கிளி
சிரிக்கும் பச்சைக்கிளி
ஓடி வந்த மேடையிலே ஆட்டமாட ஆஆ .
ஆட வந்த மேடையிலே
பாட வந்த என்ன மட்டும்
அழ விட்டு ஓட விட்ட கூட்டதொடே
ஆட வந்த மேடையிலே
பாட வந்த என்ன மட்டும்
அழ விட்டு ஓடி விட்ட கூடதொடே
நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வரல்லே
நான் அழுகுறேன் அழுகுறேன் அழுக வரல்லே
ஹ ஹ ஹா ஹாa.. ஹோ ஹோ ஹூ "

நடிகர் திரு. சிவாஜியும் குதியோ குதி என்று குதித்தார்
ஆனால் , இந்த பாட்டு பூமிக்குள் போகவில்லையே
எல்லோருடைய காதுகளுக்கும் தானே சென்று விட்டது.
எப்படி ?

ரமேஷ் வெங்கடபதி said...

ஐயா வணக்கம்!
அலங்கார முருகனின் அழகு சிங்காரம்! மனதைக் கவர்ந்தது!

அடடா மழைடா பாடலை ரசித்து தாங்கள் அளித்த சிருங்கார ரசமும் கவர்ந்தது!

thanusu said...

ஒருடா
ரெண்டுடா
மூனுடா
நாலுடா
அஞ்சுடா
ஆருடா -இது
யாருடா
அடாடா
ரசிடா -என
வயது வித்தியாசமின்றி அனைவரையும் கவர்ந்த பாடல் ,இதுக்கு வந்த தலைப்பை பாருங்க, எப்படி இப்படி தலைப்பிலேயே காந்தத்தை வைக்கிறார் வாத்தியார், யோசிக்கையில் தல மத்தியில் எனக்கும் தான் கிர்.....................ருன்குது . தலைப்பை வைக்க சில பாடங்களை வாத்தியார் நடத்தினால் நன்றாக இருக்கும்.

SP.VR. SUBBAIYA said...

//// தேமொழி said...
ஹ...ஹ...ஹா ....எனக்கு இன்றைய பதிவில் பிடித்தது விமர்சனமும், இதுவரை வந்த பின்னூட்டங்களும்.
கால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு? .....பொருள் புரியவில்லை
ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு?..... இது போல ஒரு ஆடும் ரயில் பாலத்தையும் நான் பார்த்ததில்லை/////

கற்பனைக்கு ஏது அடைக்கும் தாள்? தமன்னாவைப் பார்த்தால் ரயில் பாலம் ஆடாதா என்ன?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
////மனிதர்கள் குடையுடன் கம்பத்தில் உட்கார்ந்திருக்கும் நோக்கம் புரியவில்லை
முல்லை பெரியாரின் நீர் மட்டத்தை கண்காணிப்பவர்களோ?
மொத்தத்தில். ..பம்பரம் போல எனக்கு தல மத்தியில் சுத்துது கிறுக்கு?..... கதாநாயகனுக்கு மட்டுமல்ல எனக்கும்தான்/////

நீங்கள் படைப்பாளி. தலை சுற்றக்கூடாது. சுக்குக் காஃபி சாப்பிடுங்கள்! சரியாகிவிடும்!

SP.VR. SUBBAIYA said...

//// அய்யர் said...
8 /////

விதி யாரை விட்டது விசுவநாதன்?

SP.VR. SUBBAIYA said...

/////Kalai said...
Dear Ayya,
Im there! Read both "adada" and last blog "devotion" at the same time. 2 differnet worlds. As said, "each friend of you, represents each world in you", I could see varied personalities of you in each of your writing Ayya.
Have a great weekend.
regards, Kalai/////

பாதி மனதில் பக்தி இருந்து பார்த்துக் கொள்ளூமடா
மீதி மனதில் ரசனை கிடந்து ஆட்டிவைக்குமடா

SP.VR. SUBBAIYA said...

//// csekar2930 said...
//அடடா அடடா என்னா குதிடா//
இந்த பாடலை கேட்டவுடன் என் நினைவுக்கு வருவது இந்த பாடல் தான் .
" ஜிஞ்சுனக்க சின்னக்கிளி
சிரிக்கும் பச்சைக்கிளி
ஓடி வந்த மேடையிலே ஆட்டமாட ஆ ..
ஜிஞ்சுனக்க சின்னக்கிளி
சிரிக்கும் பச்சைக்கிளி
ஓடி வந்த மேடையிலே ஆட்டமாட ஆஆ .
ஆட வந்த மேடையிலே
பாட வந்த என்ன மட்டும்
அழ விட்டு ஓட விட்ட கூட்டதொடே
ஆட வந்த மேடையிலே
பாட வந்த என்ன மட்டும்
அழ விட்டு ஓடி விட்ட கூடதொடே
நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வரல்லே
நான் அழுகுறேன் அழுகுறேன் அழுக வரல்லே
ஹ ஹ ஹா ஹாa.. ஹோ ஹோ ஹூ "
நடிகர் திரு. சிவாஜியும் குதியோ குதி என்று குதித்தார்
ஆனால் , இந்த பாட்டு பூமிக்குள் போகவில்லையே
எல்லோருடைய காதுகளுக்கும் தானே சென்று விட்டது.
எப்படி ?////

அந்தக் காலத்தில் துள்ள வைக்கும்/அதிர வைக்கும் மின்னிசை இல்லையே!
எளிமையான இசை. இனிமையான இசை. அதனால் காதுக்குள் சென்றது.
ஜிக்கி பாடிய 'துள்ளாத மனமும் துள்ளும், சொல்லாத கதைகள் சொல்லும்' பாடலைக் கேட்டு பாருங்கள் நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//// ரமேஷ் வெங்கடபதி said...
ஐயா வணக்கம்!
அலங்கார முருகனின் அழகு சிங்காரம்! மனதைக் கவர்ந்தது!
அடடா மழைடா பாடலை ரசித்து தாங்கள் அளித்த சிருங்கார ரசமும் கவர்ந்தது!////

நல்லது. நன்றி. எனக்குப் பிடித்தது செட்டிநாட்டின் சமையல் மேஸ்திரிகளின் பைனாப்பிள் ரசம்!

SP.VR. SUBBAIYA said...

/// thanusu said...
ஒருடா
ரெண்டுடா
மூனுடா
நாலுடா
அஞ்சுடா
ஆருடா -இது
யாருடா
அடாடா
ரசிடா -என
வயது வித்தியாசமின்றி அனைவரையும் கவர்ந்த பாடல் ,இதுக்கு வந்த தலைப்பை பாருங்க, எப்படி இப்படி தலைப்பிலேயே காந்தத்தை வைக்கிறார் வாத்தியார், யோசிக்கையில் தல மத்தியில் எனக்கும் தான் கிர்.....................ருன்குது . தலைப்பை வைக்க சில பாடங்களை வாத்தியார் நடத்தினால் நன்றாக இருக்கும்.////

தலைப்பை நன்றாகப் போடு
தானே வருவார்கள்
என்பதுதான் தலைப்பின் இலக்கணம்!

thanusu said...

kmr.krishnan said...

அடடா அடடா என்னா குதிடா
குதியா குதிச்சா குலை நடுங்குண்டா

நடடா நடடா நண்டு நடடா
நண்டா நடந்தா நா வருவேண்டா... :) :) :)

SP.VR. SUBBAIYA said..

.பிடிடா பிடிடா காசைப் பிடிடா

பிடிக்காம விட்டீன்னா பைத்தியம் நீயடா
அடிடா அடிடா தாளம் அடிடா
தாளத்தோடு சேர்ந்து நீ குதிடா

நூறு நாளு ஓட வேண்டும் அதை நினைடா
இயக்குனர் சொன்னாக்க எல்லாம் சரிடா
இன்பத்தமிழ் போனாக்க நமக்கு என்னடா?

ஆஹா ...ஆஹா
சென்ற வாரம் நான் போட்டேன் ஒருடா
இன்று வருது கோடானுகோடி டா
டாவில் இவ்வளவு சந்தோஷமும்
அன்யோன்யமும் இருக்கும்போது
ஏன் சொல்லவேண்டும் .

டாவுக்கு" டாட்டா
வாங்கிக்கொள்வோம் அதற்கும் ஒரு பட்டா.

arul said...

muruganin raja alangaram super manathukul athanai magilchi muruganai parthathum post seithatharku mikka nandri

தமிழ் விரும்பி ஆலாசியம் said...

////பிடிடா பிடிடா காசைப் பிடிடா
பிடிக்காம விட்டீன்னா பைத்தியம் நீயடா
அடிடா அடிடா தாளம் அடிடா
தாளத்தோடு சேர்ந்து நீ குதிடா

நூறு நாளு ஓட வேண்டும் அதை நினைடா
இயக்குனர் சொன்னாக்க எல்லாம் சரிடா
இன்பத்தமிழ் போனாக்க நமக்கு என்னடா?
தமிழைவச்சுப் பிழைச்சவன் எவன் சொல்லடா?///

:):)....:):)

தமிழ் விரும்பி ஆலாசியம் said...

பாடலை முன்பே படத்தில் பார்த்திருந்தாலும் வரிகளை வாசித்து விட்டு மீண்டும் பார்க்கும் போது வார்த்தைகள் விளங்குது....
இருந்தும் பாடலின் ஆரம்பத்தில் வரும் முக்கள் முனங்கள் படத்தைப் பார்க்கும் போது கேட்கவில்லை... இசையமைப்பாளர் சரக்கை விற்பதற்கு எடுத்துக் கொண்ட உத்தி போலும்..

படமெடுக்கப் பட்ட இடம் நன்றாக வந்துள்ளது இருந்தாலும், தமன்னாவை தனிப் பட்டமுறையில் ரசிப்பவர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும்..

வாத்தியார் சொன்னது போல் ஆவதைத் தவிர்ப்பதற்கு முன்பே வரிகளை படித்துப் பார்த்துவிட்டேன்... நாமு குமார் சிரமப் பட்டுத் தான் வார்த்தைகளைக் கோர்த்து இருக்கிறார் போலும்.. சினிமாப் பாடல் இசை பரவாயில்லை...

பதிவுக்கு நன்றிகள் ஐயா!

SP.VR. SUBBAIYA said...

//// thanusu said...
kmr.krishnan said...
அடடா அடடா என்னா குதிடா
குதியா குதிச்சா குலை நடுங்குண்டா
நடடா நடடா நண்டு நடடா
நண்டா நடந்தா நா வருவேண்டா... :) :) :)
SP.VR. SUBBAIYA said..
.பிடிடா பிடிடா காசைப் பிடிடா
பிடிக்காம விட்டீன்னா பைத்தியம் நீயடா
அடிடா அடிடா தாளம் அடிடா
தாளத்தோடு சேர்ந்து நீ குதிடா
நூறு நாளு ஓட வேண்டும் அதை நினைடா
இயக்குனர் சொன்னாக்க எல்லாம் சரிடா
இன்பத்தமிழ் போனாக்க நமக்கு என்னடா?
ஆஹா ...ஆஹா
சென்ற வாரம் நான் போட்டேன் ஒருடா
இன்று வருது கோடானுகோடி டா
டாவில் இவ்வளவு சந்தோஷமும்
அன்யோன்யமும் இருக்கும்போது
ஏன் சொல்லவேண்டும் .
டாவுக்கு" டாட்டா
வாங்கிக்கொள்வோம் அதற்கும் ஒரு பட்டா./////

பறவைக்குப் பட்டா எதுக்கு நீ சொல்லடா?
கறவைக்குப் பட்டா இருந்தும் பயன் என்னடா?

SP.VR. SUBBAIYA said...

//// arul said...
muruganin raja alangaram super manathukul athanai magilchi muruganai parthathum post seithatharku mikka nandri////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
////பிடிடா பிடிடா காசைப் பிடிடா
பிடிக்காம விட்டீன்னா பைத்தியம் நீயடா
அடிடா அடிடா தாளம் அடிடா
தாளத்தோடு சேர்ந்து நீ குதிடா

நூறு நாளு ஓட வேண்டும் அதை நினைடா
இயக்குனர் சொன்னாக்க எல்லாம் சரிடா
இன்பத்தமிழ் போனாக்க நமக்கு என்னடா?
தமிழைவச்சுப் பிழைச்சவன் எவன் சொல்லடா?
:):)....:):)//////

தமிழைவச்சுப் பிழைச்சவன் எவன் சொல்லடா
அதை நினச்சு சிரிச்சாரு தெரிந்து கொள்ளடா!

Ananthamurugan said...

kmr.krishnan said...
தமில் வால்க! தமிலன் வால்க!//////

SP.VR. SUBBAIYA said...

இன்பத்தமிழ் போனாக்க நமக்கு என்னடா?
தமிழைவச்சுப் பிழைச்சவன் எவன் சொல்லடா?

வாலபலம் சாப்பிட்டது போழ இருகீது?!

R.Srishobana said...

வணக்கம் ஐயா,
இணையத்திற்கு வரும் காய்ச்சலால் வகுப்பறைக்கு அடிக்கடி "லீவ்" எடுக்க செய்கிறேன்...
இப்பாடலை முதலில் ஒலி வடிவில் கேட்கும் பொழுது இருந்த பிடிப்பு,இப்பாடலின் ஒளி வடிவில் எனக்கு இருக்கவில்லை...ஆனால்,என் சகோதரர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் இது(என் தந்தை இந்த பாடலை பார்த்தால்,இக்கால பாடல்களை மீண்டும் வசைப்பாட ஆரம்பித்து விடுவார்!!!)ஒரு வேளை ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும் போல...ஆயினும் இப்பாடல் முழுவதும் வரும் பசுமையான காட்சிகளும்,மழையும் தான் நான் மிகவும் ரசித்தவை...அடடா,மழையினை ரசிக்காத மகளிர் உண்டோ?

அய்யர் said...

//// அய்யர் said...
8 /////

விதி யாரை விட்டது விசுவநாதன்?

ஆம்...
எண் கணிதப் படி
8ஆம் எண்னை விதி எண் என்றே குறிப்பிடுவோம்..

நினைவு கூர்ந்தமைக்கு நன்றி..