மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

13.2.12

Astrology வாங்கியதும், வாங்க மறந்ததும்!Astrology வாங்கியதும், வாங்க மறந்ததும்!

பயிற்சிப்பாடம்

பணம் இருப்பவர்களில் சிலர் செய்யும் அக்கிரமங்களுக்கு அளவே இல்லை! அதீத பணம் இருந்தால் அது வைத்திருப்பவனைச் சும்மா இருக்க விடாது.

    "ஒரளவு பணம் இருந்தால் அது உன்னைக் காப்பாற்றும். அதீத, தேவைக்கு மேலே பணம் இருந்தால் அதை நீ காப்பாற்ற வேண்டும்"  என்ற் திரைப்பட வசனம் ஒன்று உண்டு. அது உணமை.

அதீத பணம் வைத்திருப்பவன் அதைக் காப்பாற்றுவதற்காகப் போராட வேண்டியதிருக்கும். வங்கியில் போட்டு வைத்தால், அது பாதுகாப்பாக இருக்கும். ஆனால் அங்கே வட்டி குறைவு. இன்றைய நிலையில் பண வீக்கத்தைவிட (inflation) வங்கியில் போட்டு வைத்திருக்கும் பணம் வளரும் விகிதம் குறைவு.

Definition of 'Inflation' The rate at which the general level of prices for goods and services is rising, and, subsequently, purchasing power is falling. பணப்பபுழக்க விகிதம் Statistically determined measure of the rise in price levels and therefore the decline in the value of money. The inflation rate shows the percentage change in price levels over a given period (month, year).

ஆகவே அதைச் செய்வதற்குத் தயங்குவான். பணம் பல மடங்கு பெருக வேண்டும் என்று ஆசைப் படுவான். இடம், நிலம் அல்லது வீடுகளை வாங்கிப்போட ஆசைப்படுவான்.

வசதிக்குத் தகுந்தாற்போல இரண்டு அல்லது நான்கு மனை இடத்தில் உள்ள பெரிய வீட்டை வாங்குவான். தி.நகர், வடபழநி, விருகம்பாக்கம், வளசரவாக்கம் போன்ற பகுதிகளில் வாங்குவதற்கு ஆசைப்படுவான். செங்கல்பட்டு அல்லது காஞ்சிபுரம் போன்ற ஊர்களின் புறநகர்ப் பகுதிகளில் 4 ஏக்கர் அல்லது 8 ஏக்கர் இடத்தை வாங்கிப்போட ஆசைப்படுவான்.

அப்படிப்போட்டவர்களின் கதையை, அவர்கள் வாங்கிய சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடராக எழுதி பெரிய புத்தகமாகப் போடலாம் அந்தஆளவிற்கு என்னிடம் கதைகள் உள்ளன. அப்படிச் செய்து மேன்மை அடைந்த இண்டு பேர்களை நீங்கள் காட்டினால், சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் நான்கு பேர்களை என்னால் அடையாளம் காட்ட முடியும்.

அதற்கெல்லாம் காரணம் என்ன?

எல்லாம் வாங்கி வந்த வரம்!

இருப்பது போதும். வருவது போதும் என்று உங்களால் ஏன் இருக்க முடியவில்லை?

முப்பது ஆண்டுகள் மாங்கு மாங்கென்று துபாயில் குப்பை கொட்டியவன் என்ன சாதித்திருப்பான் என்று பார்த்தால், சென்னை திருவான்மியூர், அடையாறில் போன்ற பகுதிகளில் இரண்டு வீடுகளை வாங்கியிருப்பான். காரைக்குடி அல்லது புதுக்கோட்டையில் ஒரு வீட்டை வாங்கியிருப்பான். மனைவியை, குழந்தைகளை இங்கே விட்டுவிட்டு, இளமையை, இனிமையைத் தொலைத் திருப்பான். வளைக்கரங்களின் அணைப்பைத் தொலைத்திருப்பான், அவள் கைச் சாப்பாட்டைத் தொலைத்திருப்பான். தொலைத்ததெல்லாம் கணக்கில் வராது. அதுதான் அவலம்!

வாங்கியதெல்லாம் கணக்கில் வரும். வாங்க மறந்தது அல்லது வாங்க விடுபட்டதெல்லாம் (அவனுடைய) கணக்கில் வராது!

தினத்தந்தி, மக்கள் தொலைக்காட்சி, பூப்போன்ற சாதம், கருணைக் கிழங்கு கெட்டிக்குழம்பு, வாழைப்பூ உசிலி, அம்பிகா அப்பளம், தயிர்சாதம், மாங்காய் ஊறுகாய், பாஸந்தி, காராச்சேவு, ஃபில்டர் காப்பி,  மாலை நேரத்தில் கோவில் வளாகத்தில் வீசும் காற்று, மல்லிகைப்பூ பிடறியை மறைக்க பேசும் கண்களை உடைய பெண்கள் என்று வாழ்க்கையின் பல சுவைகளை இழந்திருப்பான்.

இதற்கு விதிவிலக்கானவர்களும் இருக்கிறார்கள். தங்களின் வ்றுமையான குடும்பச் சூழலை மாற்றியமைப்பதற்காகச் சென்ற தியாக மனப்பான்மை உள்ளவர்களும் இருக்கிறார்கள். தியாக உள்ளங்களுக்கு புறச் சுகங்கள் எல்லாம் பெரிதாகத் தெரியாது.

அப்படிப் பலவற்றைத் தொலைத்து வாங்கிய சொத்துக்களை பிறகு பார்ப்போம். சிலருக்கு வம்சா வழியில் வந்த சொத்துக்களும் பிரச்சினைகளை உண்டாக்கும். தந்தையார் தான் உயிரோடு இருக்கும்போதே பிரித்துக்கொடுக்க மாட்டார். பிரித்துக்கொடுத்தால் பசங்க தன்னைத் திராட்டில் விட்டு விடுவார்கள் என்று பிரித்துக்கொடுக்க மாட்டார். புத்திசாலித் தந்தை உயில் எழுதிவைத்துவிட்டுப்போவார். சில அசமந்தங்கள் அதையும் செய்யாது.

டிக்கெட் வாங்கிக்கொண்டு அப்பா மேலே போன பத்தாம் நாள் காரியம் செய்வதற்குள்ளேயே சண்டை வலுத்து அடிதடிவரை போன குடும்பங்களை எனக்குத் தெரியும். எல்லாவற்றிற்கும் ஆசைதான் காரணம்
--------------------------------------------------------
அசையாத சொத்துக்களின் (immovable properties) நிலைமை என்ன?

அசையாத சொத்துக்கள் இல்லாதவர்களைப் பற்றிக் கவலை இல்லை,
இன்று உலகில் பாதிப் பேர்கள் உறவுகளைத் தவிர வேறு சொத்துக்கள் இல்லாதவர்கள்.சொந்த வீடு, நில புலம் இல்லாதவர்கள். அதனால் கவலை இருந்தாலும், அவற்றை வைத்துப் பிரச்சினை இல்லாதவர்கள். அதே நேரம் கொடுத்து வைத்தவர்கள்

  "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
    அதனின் அதனின் இலன்" 

எந்த பெருளின் மீதும் நாம் பற்று வைக்க கூடாது அப்படி இருந்தால் அந்த பெருளினால் நமக்கு ஒரு துன்பமும் வராது.

என்று சொல்லி வைத்துள்ளார் பொய்யாமொழிப் புலவர்.

அவர் சொல்லிவைத்துள்ளார் என்பதற்காகச் சராசரி மனிதனால் பற்றில்லாமல் இருக்க முடியாது. தங்களுடைய சொத்துக்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது கவலைப் படாமல் இருக்க முடியாது .பட்டினத்தார் போன்ற ஞானிகளுக்கு வேண்டுமென்றால் அது சாத்தியப்படலாம்.

சிக்கல் வருவது எல்லாம் நம் கையிலா இருக்கிறது. அது விதிக்கப்பட்டது. அப்படி வரும்போது, அந்தச் சிக்கல் தீருமா? அல்லது தீராதா? எப்போது தீரும் என்பதை மட்டுமே நாம் பார்க்க வேண்டும்.

அசையாத சொத்துக்களுக்கு அதிபதி 4ஆம் வீட்டுக்காரன். அவன் ஆறாம் வீட்டில் குடியிருந்தாலோ, அதாவது அமர்ந்திருந்தாலோ, அல்லது ஜாதகத்தில் நீசமாகியிருந்தாலோ. அசையாத சொத்துக்கள் கிடைப்பது சிக்கலாகிவிடும்

ஒரு உதாரண ஜாதகம் கொடுத்துள்ளேன். பாருங்கள்.1. 4ஆம் அதிபதி சனி நீசம்.
2. 2ஆம் அதிபதி குரு ஆறில்
3. லாபாதிபதி புதன் நீசம். கேதுவோடு கூட்டு! லாப ஸ்தானத்தில் ராகு
4. சுக்கிரன் எட்டில்

இந்த அமைப்புக்களால், சொத்துக்களை வைத்து ஜாதகனுக்கு ஏகப்பட்ட சிக்கல்கள். வம்பு, வழக்கு எதிரிகள் என்று பல அவஸ்தைகளைச் ஜாதகன் சந்திக்க வேண்டியதாயிற்று.

இதுபோன்ற அமைப்பு இருந்தால் சொத்தும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம் என்று சும்மா இருக்க வேண்டியதுதான்

இருக்க முடியுமா?

விதி இருக்க விடாது!

அதுதான் விதி. விதிப்படிதான் வாழ்க்கை!

ஜாதகப்படி சொத்து கிடைக்கும் என்றால் கிடைக்கும்
ஜாதகப்படி சொத்து கிடைக்காது என்றால் கிடைக்காது
ஜாதகப்படி சொத்து நிலைக்கும் என்றால் நிலைக்கும்
ஜாதகப்படி சொத்து நிலைக்காது என்றால் நிலைக்காது

இறைவழிபாடு ஒன்றுதான் சற்று நிம்மதியைத் தரும். கூடுதலாக மகிழ்ச்சியைத் தரும்!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

84 comments:

Ananthamurugan said...

Good morning sir,super lesson.thanks.

Sathish K said...

காலை வணக்கம் ஐயா.

பாடமும் விளக்கமும் தெளிவாக இருந்தது. நன்றி.

அய்யர் said...

ஆறு

அய்யர் said...

பணமும் செருப்பும் ஒன்று தான்

செருப்பு கால் அளவிற்கு சற்று கூடுதலாக அமைந்து விட்டால் இடறிவிடும்

பணமும் அப்படித்தான் தேவைக்கு அதிகமானால் நம்மை வாழ்க்கை ஒழுக்கத்திலிருந்து இடற வைக்கும்

செருப்பு கால் அளவிற்கு சற்று சிறியதானால் காலை கடிக்கும்

பணமும் அப்படித் தான் தேவைக்கு குறைவாக வருமானால் நம் கையை (பையை) கடிக்கும்..

சரியான அளவு செருப்பே நம்மை எளிமையாக அமைதியாக வேகமாக நடக்க வைக்கும்

தேவையான பணத்தினால் வாழ்க்கை
சுவைகள் கூடி மகிழ்வோடு வாழ முடியும்

பணம் அல்ல அது பயம்..

அய்யர் said...

///அப்படிச் செய்து மேன்மை அடைந்த இண்டு பேர்களை நீங்கள் காட்டினால், சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் நான்கு பேர்களை என்னால் அடையாளம் காட்ட முடியும்..///

தேவைக்கு அதிகமாக வரும் பணத்தை வேண்டாம் என மறுத்துச் சொல்லும் நபரை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?

தருகின்ற பணத்தை தர வேண்டாம் என முதலாளியிடம் சொல்லி தகுதிக்கு குறைவாக ஊதியம் வாங்குபவரை உங்களால் அடையாளாம் காட்ட முடியுமா?

எளிமையை மட்டும் கையில் கொண்டு
எல்லோருக்கும் ஒழுக்கத்தை பின்பற்ற தான் ஒழுக்கமாக வாழும் ஒரு நபரை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?

உங்களுக்காக சுழல விடும் பாடலில் அய்யருக்கு பிடித்த வரிகள்

ஆசையில்லா மனிதர் தம்மை
துன்பம் எங்கே நெருங்கும்

பொன்னில் இன்பம் பொருளில் இன்பம்
என்றே நெஞ்சில் மயங்கும்

தலைவர் பாட்டு.. இது
திகட்டுமா சுவைக்கு..?

சிரித்து வாழ வேண்டும் - பிறர்
சிரிக்க வாழ்ந்திடாதே

உழைத்து வாழ வேண்டும் - பிறர்
உழைப்பில் வாழ்ந்திடாதே

அன்பில் வாழும் இதயம் தன்னை
தெய்வம் கண்டால் வணங்கும்

ஆசையில்லா மனிதர் தம்மை
துன்பம் எங்கே நெருங்கும்

பொன்னில் இன்பம் பொருளில் இன்பம்
என்றே நெஞ்சில் மயங்கும்

பூவைப் போல் சிரிக்கும் உன்னைக்
கண்டால் உண்மை விளங்கும்

முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே
முள்ளுக்கு என்ன பெருமை

சிப்பிக்குள்ளே பிறந்ததாலே
முத்துக்கு என்ன சிறுமை

எங்கே நன்மை இருந்த போதும்
ஏற்றுக் கொள்ளும் உலகம்

இங்கே வந்து தழுவிக் கொண்டு
போற்றும் நல்ல இதயம் (சிரித்து)

ரமேஷ் வெங்கடபதி said...

அய்யா வணக்கம்!

அசையா சொத்துக்கள் அமையும் அமைப்பை, எளிய நடையில் விளக்கியுள்ளீர்!கவனமாக மனதில் ஏற்றிக் கொண்டோம்! மிக்க நன்றி!

தேமொழி said...

உதாரணமாக காட்டப் பட்ட ஜாதக படத்துடன் கூடிய ஜாதகப் பாடம் மிகத் தெளிவாக புரிந்தது ஐயா.
அதைவிட பாடத்திற்கு முதலில் நீங்கள் கொடுத்துள்ள விரிவுரை சிறந்த வாழ்க்கைப் பாடமாக இருக்கிறது.

முத்து படப் பாடலும் தவறாமல் நினைவில் வந்தது.....
"மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை
மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம் தான் உணர மறுக்கிறது
கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு"
-வைரமுத்து

நம் தலையில் என்ன எழுதி இருக்கிறதோ அப்படி நடக்கிறது என்பதை உங்கள் வகுப்பின் மூலம் தெளிவாக அறிந்து கொண்டேன்.
அதனால் கிடைத்ததைக் கொண்டு என் முயற்சியால் வந்தது என்ற பெருமையடைவதில்லை.
வருத்தமான சூழல்களில் நொந்து போகாமல் நடப்பது நடக்கட்டும் என்று திடப்படுத்திக் கொள்ளவும் பழகி வருகிறேன்.
"தொலைத்ததெல்லாம் கணக்கில் வராது. அதுதான் அவலம்!"...உண்மையான வார்த்தைகள்.
இன்றைய பாடத்திற்கு நன்றி ஐயா.

(பின் குறிப்பு: நீங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள "மல்லிகைப்பூ பிடறியை மறைக்க பேசும் கண்களை உடைய பெண்"ணின் படத்தை கடைசியில் போட்டால் எல்லோரும் விரு விருன்னு பாடத்தைப் படிக்க வசதியாக இருக்குமே)

kmr.krishnan said...

நல்ல அலசல், நல்ல உதாரண ஜாதகம். 8ல் சுக்ரன் இருப்பது நன்மையே என்று சொல்லப்படுகிறது. இங்கே அவர் யோககாரகன் ஆனதால் 8ல் மறைந்து பலமற்றுப் போய்விட்டார்.அப்படித்தானே?

மற்ற தொலைக்காட்சிகளைக் காட்டிலும் மக்கள் தொலைக்காட்சியில் உங்களைக் கவருவது என்ன என்று ஒரு பதிவு போடுங்கள். மருத்துவர் ஐயாவுக்கு உச்சி குளிர்ந்துவிடும். காடுவெட்டி குருவை வைத்து ஒரு பாராட்டு விழா நடத்திவிடுவோம்.

kmr.krishnan said...

என் தந்தையார் ராஜாஜியின் காந்தி ஆசிரமத்தில் பணியாற்றினார். அவர் 1930ல் அங்கே சேர்ந்த போது அவருக்கு மாதம் 15 ரூபாய் சம்பளம்.

சம்பளம் போதவில்லை என்று ராஜாஜியிடம் அனைவரும் முறையிட்டனராம்.
ராஜாஜி அவர்கள் ஆசிரமத்தின் வரவு செலவு கணக்கு முழுவதையும் அவர்கள்
முன்னால் வைத்து எவ்வளவு சம்பளம் உயர்த்தலாம் என்று அவர்களையே கேட்டாராம். கொடுக்கப்பட வேண்டிய தொகை வரவேண்டியதை விட அதிகமாம்.

"சம்பளத்தைக்குறைத்துக் கொண்டாலே மேற்கொண்டு ஆசிரமத்தை நடத்த முடியும்" என்றாராம் ராஜாஜி.அப்பா 3 ரூபாய் குறைத்து 12 ரூ பெற சம்மதித்தாராம். அப்பாவுக்கு அப்போது திருமணம் ஆகவில்லை.திருமணம் ஆனவர்கள் அப்பாவை விடக் குறைந்த சம்பளம் வாங்க ஒப்புக் கொண்டார்களாம்.
இப்படிப்பட்ட தியாகிகளும் ஒருசிலராவது உண்டு. யாருமே இல்லை என்று நினைக்க வேண்டாம்.

arul said...

arumayana pathivu elithana vilakkam

V Dhakshanamoorthy said...

அன்புள்ள‌ஆசிரியர் அவர்களுக்கு,
"வாங்கியதும், வாங்க மறந்ததும்" தலைப்பில் இன்றய பயிற்சிப்பாடம்
தகுந்த உதாரனஙளுடன் நன்றாக புரியும்படி சிற்ப்புடன் உள்ளது.ந்ன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Ananthamurugan said...
Good morning sir,super lesson.thanks.////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//// Sathish K said...
காலை வணக்கம் ஐயா.
பாடமும் விளக்கமும் தெளிவாக இருந்தது. நன்றி./////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//// அய்யர் said...
ஆறு////

சரி, நானும் சொல்லி விடுகிறேன்: ஏழு!

SP.VR. SUBBAIYA said...

//// அய்யர் said...
பணமும் செருப்பும் ஒன்று தான்
செருப்பு கால் அளவிற்கு சற்று கூடுதலாக அமைந்து விட்டால் இடறிவிடும்
பணமும் அப்படித்தான் தேவைக்கு அதிகமானால் நம்மை வாழ்க்கை ஒழுக்கத்திலிருந்து இடற வைக்கும்
செருப்பு கால் அளவிற்கு சற்று சிறியதானால் காலை கடிக்கும்
பணமும் அப்படித் தான் தேவைக்கு குறைவாக வருமானால் நம் கையை (பையை) கடிக்கும்..
சரியான அளவு செருப்பே நம்மை எளிமையாக அமைதியாக வேகமாக நடக்க வைக்கும்
தேவையான பணத்தினால் வாழ்க்கை
சுவைகள் கூடி மகிழ்வோடு வாழ முடியும்
பணம் அல்ல அது பயம்..////

செருப்பு உதாரணம் ஒரு நல்ல உதாரணம்! உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி விசுவநாதன்.

SP.VR. SUBBAIYA said...

//// அய்யர் said...
///அப்படிச் செய்து மேன்மை அடைந்த இண்டு பேர்களை நீங்கள் காட்டினால், சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் நான்கு பேர்களை என்னால் அடையாளம் காட்ட முடியும்..///
தேவைக்கு அதிகமாக வரும் பணத்தை வேண்டாம் என மறுத்துச் சொல்லும் நபரை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?
தருகின்ற பணத்தை தர வேண்டாம் என முதலாளியிடம் சொல்லி தகுதிக்கு குறைவாக ஊதியம் வாங்குபவரை உங்களால் அடையாளாம் காட்ட முடியுமா?
எளிமையை மட்டும் கையில் கொண்டு
எல்லோருக்கும் ஒழுக்கத்தை பின்பற்ற தான் ஒழுக்கமாக வாழும் ஒரு நபரை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?/////

இல்லை. முடியாது. இந்தக் காலத்தில் அது சாத்தியமில்லை!

SP.VR. SUBBAIYA said...

//// ரமேஷ் வெங்கடபதி said...
அய்யா வணக்கம்! அசையா சொத்துக்கள் அமையும் அமைப்பை, எளிய நடையில் விளக்கியுள்ளீர்!கவனமாக மனதில் ஏற்றிக் கொண்டோம்! மிக்க நன்றி!/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

eswari sekar said...

inrya .padam nanrga .erunthu ungldya .jothida padganli padika start .pannethierthu . jothidarya .parpathlli.

SP.VR. SUBBAIYA said...

//// தேமொழி said...
உதாரணமாக காட்டப் பட்ட ஜாதக படத்துடன் கூடிய ஜாதகப் பாடம் மிகத் தெளிவாக புரிந்தது ஐயா.
அதைவிட பாடத்திற்கு முதலில் நீங்கள் கொடுத்துள்ள விரிவுரை சிறந்த வாழ்க்கைப் பாடமாக இருக்கிறது.
முத்து படப் பாடலும் தவறாமல் நினைவில் வந்தது.....
"மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை
மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம் தான் உணர மறுக்கிறது
கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு"
-வைரமுத்து
நம் தலையில் என்ன எழுதி இருக்கிறதோ அப்படி நடக்கிறது என்பதை உங்கள் வகுப்பின் மூலம் தெளிவாக அறிந்து கொண்டேன்.
அதனால் கிடைத்ததைக் கொண்டு என் முயற்சியால் வந்தது என்ற பெருமையடைவதில்லை.
வருத்தமான சூழல்களில் நொந்து போகாமல் நடப்பது நடக்கட்டும் என்று திடப்படுத்திக் கொள்ளவும் பழகி வருகிறேன்.
"தொலைத்ததெல்லாம் கணக்கில் வராது. அதுதான் அவலம்!"...உண்மையான வார்த்தைகள்.
இன்றைய பாடத்திற்கு நன்றி ஐயா.
(பின் குறிப்பு: நீங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள "மல்லிகைப்பூ பிடறியை மறைக்க பேசும் கண்களை உடைய பெண்"ணின் படத்தை கடைசியில் போட்டால் எல்லோரும் விரு விருன்னு பாடத்தைப் படிக்க வசதியாக இருக்குமே)/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!
குடும்பப் பெண்களைப் பொதுவில், பதிவில் குறிப்பிட முடியாது. நான் குறிப்பிட்டுள்ளபடி தோற்றமுள்ள ஒரு நடிகை இருநதார். அவருடைய பெயரின் முதல் எழுத்தும், உங்களுடைய பெயரின் முதல் எழுத்தும் ஒன்றுதான். எங்கே அந்த நடிகை யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம்!

dubai saravanan said...

அருமை .... நல்ல அலசல்..

SP.VR. SUBBAIYA said...

/////kmr.krishnan said...
நல்ல அலசல், நல்ல உதாரண ஜாதகம். 8ல் சுக்ரன் இருப்பது நன்மையே என்று சொல்லப்படுகிறது. இங்கே அவர் யோககாரகன் ஆனதால் 8ல் மறைந்து பலமற்றுப் போய்விட்டார்.அப்படித்தானே?
மற்ற தொலைக்காட்சிகளைக் காட்டிலும் மக்கள் தொலைக்காட்சியில் உங்களைக் கவருவது என்ன என்று ஒரு பதிவு போடுங்கள். மருத்துவர் ஐயாவுக்கு உச்சி குளிர்ந்துவிடும். காடுவெட்டி குருவை வைத்து ஒரு பாராட்டு விழா நடத்திவிடுவோம்.//////

விருச்ச்சிக லக்கினத்திற்கு சுக்கிரன் 12ஆம் அதிபதியும் ஆவார். அவர் எப்படி யோககாரகன் ஆகமுடியும்? பாராட்டை விட்டுவிடுவோம். உண்மையில் அது ஒரு நல்ல தொலைக்காட்சி சானல்தான் சுவாமி!

SP.VR. SUBBAIYA said...

//// kmr.krishnan said...
என் தந்தையார் ராஜாஜியின் காந்தி ஆசிரமத்தில் பணியாற்றினார். அவர் 1930ல் அங்கே சேர்ந்த போது அவருக்கு மாதம் 15 ரூபாய் சம்பளம்.
சம்பளம் போதவில்லை என்று ராஜாஜியிடம் அனைவரும் முறையிட்டனராம்.
ராஜாஜி அவர்கள் ஆசிரமத்தின் வரவு செலவு கணக்கு முழுவதையும் அவர்கள்
முன்னால் வைத்து எவ்வளவு சம்பளம் உயர்த்தலாம் என்று அவர்களையே கேட்டாராம். கொடுக்கப்பட வேண்டிய தொகை வரவேண்டியதை விட அதிகமாம்.
"சம்பளத்தைக்குறைத்துக் கொண்டாலே மேற்கொண்டு ஆசிரமத்தை நடத்த முடியும்" என்றாராம் ராஜாஜி.அப்பா 3 ரூபாய் குறைத்து 12 ரூ பெற சம்மதித்தாராம். அப்பாவுக்கு அப்போது திருமணம் ஆகவில்லை.திருமணம் ஆனவர்கள் அப்பாவை விடக் குறைந்த சம்பளம் வாங்க ஒப்புக் கொண்டார்களாம்.
இப்படிப்பட்ட தியாகிகளும் ஒருசிலராவது உண்டு. யாருமே இல்லை என்று நினைக்க வேண்டாம்.////////

ஆமாம். அந்தக் கால மனிதர்களிடம் பல நல்ல குணங்கள் இருந்தன! இப்போது அத்தகைய மனிதர்கள் மிக மிகக் குறைவு!

SP.VR. SUBBAIYA said...

/// arul said...
arumayana pathivu elithana vilakkam////

உங்களின் பாராட்டிற்கு நன்றி அருள்

SP.VR. SUBBAIYA said...

//// V Dhakshanamoorthy said...
அன்புள்ள‌ஆசிரியர் அவர்களுக்கு,
"வாங்கியதும், வாங்க மறந்ததும்" தலைப்பில் இன்றய பயிற்சிப்பாடம்
தகுந்த உதாரனஙளுடன் நன்றாக புரியும்படி சிற்ப்புடன் உள்ளது.ந்ன்றி!////

உங்களின் பாராட்டிற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

SP.VR. SUBBAIYA said...

//// eswari sekar said...
inrya .padam nanrga .erunthu ungldya .jothida padganli padika start .pannethierthu . jothidarya .parpathlli.////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

//// dubai saravanan said...
அருமை .... நல்ல அலசல்../////

உங்களின் பாராட்டிற்கு நன்றி ச்ரவணன்!

Govindasamy said...

அய்யா,

8ல் சுக்கிரன் இருந்தால் பூர்வீக சொத்து கிடைக்கும் என்று சொன்னதாகவும் அந்த சமயத்தில் தங்களுக்கும் எட்டில் சுக்கிரன் உண்டு என்று சொன்னதாகவும் நினைவு..

அது சரி.. ஏழு மற்றும் 12க்கு உரியவன் எட்டில் மறைவது நல்லதாகாதா..?

பிழையிருப்பின் திருத்தவும்.
பாடத்திற்கு நன்றிகள்.

தேமொழி said...

///SP.VR. SUBBAIYA said...
நான் குறிப்பிட்டுள்ளபடி தோற்றமுள்ள ஒரு நடிகை இருநதார். அவருடைய பெயரின் முதல் எழுத்தும், உங்களுடைய பெயரின் முதல் எழுத்தும் ஒன்றுதான். எங்கே அந்த நடிகை யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம்! ///

மிக அழகிய பேசும் கண்களுக்கு சொந்தக்காரர் அவர் .....தேவிகா :))))))))))

Ananthamurugan said...

தர வேண்டிய ஊதியத்தியே தர மறுக்கின்ற உலகில்,வேலை செய்தவன் எப்படியையா தனது ஊதியத்தை குறைத்து வாங்குவான்.உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை கொடுக்கும் முதலாளிகளை காட்டினால்,நீங்கள் கேட்ட தொழிலாளியை காட்டமுடியும்.இதுதான் வாழ்கைன் முரண்பாடுகள்.
இறந்தபின் வைகுண்டம் போக வேண்டும்,கைலாசம் போக வேண்டும் என்று இறைவனை தொழுபவர்கள் இறக்க மறுப்பது ஏனோ?? தர்க்கம்.வாதம் எனது நோக்கமல்ல.வாழ்க்கைன் யதார்த்தத்தை சொல்கிறேன்.மதிக்கிறேன்.

மற்றும் ஒன்று:பணக்கார கோவிலான
திருப்பதி கோவிலில் வசதி குறைத்தவர்கள் சாமி tharsanku எவ்வளவு நேரம் அல்லது நாள் கணக்கில் ஆகிறது.பணமிருபவனிடம் அது சில மணிகளில்.இறைவனிடமே இதனை பேதங்கள்!!!

அடுத்தது சனி: பக்கதர்கள் கதறி அழும்பொழுது காலாட்டிக்கொண்டு(பல்குத்திகொண்டு )இருக்கிறார்.இதெல்லாம் ஒரு பொழைப்பா சனீஸ்வரா??என்று கேட்க தோன்றுகிறது.

Ananthamurugan said...

SP.VR. SUBBAIYA said

"உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!
குடும்பப் பெண்களைப் பொதுவில், பதிவில் குறிப்பிட முடியாது. நான் குறிப்பிட்டுள்ளபடி தோற்றமுள்ள ஒரு நடிகை இருநதார். அவருடைய பெயரின் முதல் எழுத்தும், உங்களுடைய பெயரின் முதல் எழுத்தும் ஒன்றுதான். எங்கே அந்த நடிகை யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம்!"

i think devayani

kannan said...

வாத்தியார் ஐயா வணக்கம்.

தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை ஐயா! அரும்பு மீசை முளைத்த காலத்தில் என்னுடைய தந்தையார் தன்னுடைய தலையில் அடித்துக்கொண்டு கூறுவார். நன்றாக படி பிச்சை எடுத்துனாலும் படிக்க வைக்கின்றேன் என்று . நான் போன பின்னால் உனக்கு நிற்க கூட ஒரு அடி நிலம் கூட கிடைக்காது என்று , அந்த சமயத்தில் நான் எண்ணுவேன் . இவருக்கு வேலை இல்லை எப்பம் பார்த்தாலும் இதையே கூறுகின்றார் என்று . ஆனால் தந்தையார் சென்ற பின்னர் தான் தெரிந்தது இருந்த சொத்தீர்க்கு மேல் இரண்டு மடங்கு கடன் இருந்ததை உணர்தேன் .

எல்லா கடனையும் அடிக்கவே வயது 30 ஆகிவிட்டது . அதற்க்கு பின்னர்தான் இந்த மரமண்டைக்கு ஏறியது என்னுடைய ஜாதக அமைப்பு படி பூர்விகமே ஆகாது என்று.

இதனை தங்களுக்கு டைப் பண்ணும்பொழுது கண்களில் எல்லாம் கண்ணீர் ஐயா ! செல்லமாக வளர்ந்து விட்டு " : டீன் ஏஜ் " என்று கூறுவார்களே அந்த கால கட்டத்தை தாண்டிய பின்னர் அனுபவித்த கொடுமையை நினைத்து ஐயா!.

ஐயா! தங்களுடைய மாணவன் வருகின்ற 14 தேதி மினி மாரத்தானில் கலந்து கொள்ள இருக்கின்றேன் குறித்த பட்சம் நிர்ணநித்த தூரத்தையாவது கடக்க தங்களுடைய மற்றும் வகுப்பறையில் உள்ள பெரியவர்களின் ஆசிர்வாதத்தை எதிர்பார்கின்றேன் ஐயா .

SP.VR. SUBBAIYA said...

///// Govindasamy said...
அய்யா,
8ல் சுக்கிரன் இருந்தால் பூர்வீக சொத்து கிடைக்கும் என்று சொன்னதாகவும் அந்த சமயத்தில் தங்களுக்கும் எட்டில் சுக்கிரன் உண்டு என்று சொன்னதாகவும் நினைவு..
அது சரி.. ஏழு மற்றும் 12க்கு உரியவன் எட்டில் மறைவது நல்லதாகாதா..?
பிழையிருப்பின் திருத்தவும்.
பாடத்திற்கு நன்றிகள்./////

நல்ல்தல்ல! (குறிப்பாக ஏழுக்குரியவன்)

SP.VR. SUBBAIYA said...

///// தேமொழி said...
///SP.VR. SUBBAIYA said...
நான் குறிப்பிட்டுள்ளபடி தோற்றமுள்ள ஒரு நடிகை இருநதார். அவருடைய பெயரின் முதல் எழுத்தும், உங்களுடைய பெயரின் முதல் எழுத்தும் ஒன்றுதான். எங்கே அந்த நடிகை யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம்! ///
மிக அழகிய பேசும் கண்களுக்கு சொந்தக்காரர் அவர் .....தேவிகா :))))))))))/////

கரெக்ட்! சரியான விடை! பாராட்டுக்கள்! கவியரசர் கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்த நடிகை அவர்தான்!

SP.VR. SUBBAIYA said...

///// Ananthamurugan said...
தர வேண்டிய ஊதியத்தியே தர மறுக்கின்ற உலகில்,வேலை செய்தவன் எப்படியையா தனது ஊதியத்தை குறைத்து வாங்குவான்.உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை கொடுக்கும் முதலாளிகளை காட்டினால்,நீங்கள் கேட்ட தொழிலாளியை காட்டமுடியும்.இதுதான் வாழ்கைன் முரண்பாடுகள்.
இறந்தபின் வைகுண்டம் போக வேண்டும்,கைலாசம் போக வேண்டும் என்று இறைவனை தொழுபவர்கள் இறக்க மறுப்பது ஏனோ?? தர்க்கம்.வாதம் எனது நோக்கமல்ல.வாழ்க்கைன் யதார்த்தத்தை சொல்கிறேன்.மதிக்கிறேன்./////

நல்ல கேள்வி! சிவபத்விக்கு ஆசைப்படுபவர்கள் சிந்திக்கட்டும்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
////மற்றும் ஒன்று:பணக்கார கோவிலான திருப்பதி கோவிலில் வசதி குறைத்தவர்கள் சாமி tharsanku எவ்வளவு நேரம் அல்லது நாள் கணக்கில் ஆகிறது.பணமிருபவனிடம் அது சில மணிகளில்.இறைவனிடமே இத்தனை பேதங்கள்!!!////

இறைவன் ஒன்றும் உங்களைக் கோவில் கட்டச் சொல்லவில்லை. போட்டி போட்டுக்கொண்டு, இடித்துக்கொண்டு வரச் சொல்லவில்லை. எல்லாம் மனித ஜென்மங்கள் படுத்தும் பாடு. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் போன்று 109 திவ்ய தலங்கள் உள்ளன!, அங்கே போகலாமே! அங்கே மட்டும் பெருமாள் இல்லையா என்ன? அருள்தரமாட்டாரா என்ன?

////அடுத்தது சனி: பக்கதர்கள் கதறி அழும்பொழுது காலாட்டிக்கொண்டு(பல்குத்திகொண்டு )இருக்கிறார்.இதெல்லாம் ஒரு பொழைப்பா சனீஸ்வரா??என்று கேட்க தோன்றுகிறது.////

இது அதிகப் பிரச்ங்கித் தனம். சனி காலாட்டிக்கொண்டு இருப்பதை எங்கே நீங்கள் பார்த்தீர்கள்? அனாவசியமாக அவரைக் குறை சொல்லாதீர்கள். கர்மகாரகன் அவர். என்னுடைய மானசீக நண்பர் அவர்!

SP.VR. SUBBAIYA said...

///Ananthamurugan said...
SP.VR. SUBBAIYA said
"உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!
குடும்பப் பெண்களைப் பொதுவில், பதிவில் குறிப்பிட முடியாது. நான் குறிப்பிட்டுள்ளபடி தோற்றமுள்ள ஒரு நடிகை இருநதார். அவருடைய பெயரின் முதல் எழுத்தும், உங்களுடைய பெயரின் முதல் எழுத்தும் ஒன்றுதான். எங்கே அந்த நடிகை யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம்!"
i think devayani////

தவறு. அது தேவிகா!

Dinesh said...

கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது . கிடைக்காமல் இருப்பது கிடைக்காது

தமிழ் விரும்பி ஆலாசியம் said...

/////டிக்கெட் வாங்கிக்கொண்டு அப்பா மேலே போன பத்தாம் நாள் காரியம் செய்வதற்குள்ளேயே சண்டை வலுத்து அடிதடிவரை போன குடும்பங்களை எனக்குத் தெரியும். எல்லாவற்றிற்கும் ஆசைதான் காரணம் ////
சத்தியமான / உண்மையான வார்த்தைகள். இருந்தும்....
இது கொஞ்சம் தாமதம் சார்... இறந்தவருக்கு கொல்லி வைக்கும்
முன்பு பேசித் தீர்க்க வேண்டும் என்று சுடுகாட்டில் சூரத்தனம்
செய்தவர்களையும் கேள்வியுடுகிறேன்...
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

இன்றையப் பாடம் நன்று...
பொதுவாக இது போன்ற அமைப்பு இருப்பவர்கள் வீட்டில்
உள்ள மற்றவர்களின் பேரில் அந்த சொத்துக்களை
செய்து வைத்துக் கொள்வது நல்லது... சரிதானே ஐயா!

Ananthamurugan said...

SP.VR. SUBBAIYA said...
////அடுத்தது சனி: பக்கதர்கள் கதறி அழும்பொழுது காலாட்டிக்கொண்டு(பல்குத்திகொண்டு )இருக்கிறார்.இதெல்லாம் ஒரு பொழைப்பா சனீஸ்வரா??என்று கேட்க தோன்றுகிறது.////

இது அதிகப் பிரச்ங்கித் தனம். சனி காலாட்டிக்கொண்டு இருப்பதை எங்கே நீங்கள் பார்த்தீர்கள்? அனாவசியமாக அவரைக் குறை சொல்லாதீர்கள். கர்மகாரகன் அவர். என்னுடைய மானசீக நண்பர் அவர்

சனிபகவான் எனக்கும் பால்ய நண்பர்.ஏனென்றல்,சிறு வயதிலே என்னையும் அவருக்கு பிடிக்கும்.(ஹாஹா ரொம்ப பிடிக்கும்).எனக்கும்.

சரி(சனி) எவ்வளவு அடிச்சாலும் தாங்க!! இது தாங்க உதவுது!

வேயுறு தோளி பங்கன் விடமுன்ட கண்டன்,
மிக நல்ல வீணை தடவி ,
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அமர்த்து,
என் உளமே புகுந்தவனால்,
ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,வெள்ளி,சனி,பாம்பு இரண்டும்,உடனே ஆசறு நல்ல நல்ல,அவை நல்ல,நல்ல அடியாரவர்க்கு மிகவே!!

Rajaram said...

ஐயா வணக்கம்,
பொதுவாக ஸ்திர சொத்துக்களைப்பற்றிப் பார்க்கும் போது காரகர் செவ்வாயின் நிலையைப் பார்க்கவேண்டாமா?.

Ananthamurugan said...

kannan said...
ஐயா! தங்களுடைய மாணவன் வருகின்ற 14 தேதி மினி மாரத்தானில் கலந்து கொள்ள இருக்கின்றேன்

கண்டிப்பாக இந்த சாதனையை செய்வீர்கள்.திரு.கண்ணன்.வாழ்த்துகள்!!!

Srividhya said...

Sir,

The lessons with example horoscope and the way in which you teach how to predict is superb. Please increase the lessons with much more examples sir.

I have a question in today's lesson. You said the 4th house lord Sani is neecham but it is joined with Sun which is ucham at that place.

I suppose it contributes to neecha banga raja yoham. Is it not sir?

What will be effect of this sir? Will it lessen the problems with related to assets in this horoscope. Please clarify sir.

thanks and regards
Srividhya

அய்யர் said...

/// இல்லை. முடியாது.
இந்தக் காலத்தில் அது சாத்தியமில்லை!///

முடியாதா...? இல்லை
தெரியாதா,,,?

அய்யர் said...

///////// Ananthamurugan said...
தர வேண்டிய ஊதியத்தியே தர மறுக்கின்ற உலகில்,வேலை செய்தவன் எப்படியையா தனது ஊதியத்தை குறைத்து வாங்குவான்.உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை கொடுக்கும் முதலாளிகளை காட்டினால்,நீங்கள் கேட்ட தொழிலாளியை காட்டமுடியும்.இதுதான் வாழ்கைன் முரண்பாடுகள்.
இறந்தபின் வைகுண்டம் போக வேண்டும்,கைலாசம் போக வேண்டும் என்று இறைவனை தொழுபவர்கள் இறக்க மறுப்பது ஏனோ?? தர்க்கம்.வாதம் எனது நோக்கமல்ல.வாழ்க்கைன் யதார்த்தத்தை சொல்கிறேன்.மதிக்கிறேன்./////

நல்ல கேள்வி! சிவபத்விக்கு ஆசைப்படுபவர்கள் சிந்திக்கட்டும்!/////////

ஐந்தெழுத்தை சொல்லும் விதத்தில் இருந்து அவர் விருப்பத்தை அறிந்து கொள்ளலாம். இது சாத்திர உண்மை.

வாதிற்கு அழைக்காத அன்பருக்காக
வார்த்தைகளில் எழுதி வைக்கிறோம்////மற்றும் ஒன்று:பணக்கார கோவிலான திருப்பதி கோவிலில் வசதி குறைத்தவர்கள் சாமி tharsanku எவ்வளவு நேரம் அல்லது நாள் கணக்கில் ஆகிறது.பணமிருபவனிடம் அது சில மணிகளில்.இறைவனிடமே இத்தனை பேதங்கள்!!!////

இறைவன் ஒன்றும் உங்களைக் கோவில் கட்டச் சொல்லவில்லை. போட்டி போட்டுக்கொண்டு, இடித்துக்கொண்டு வரச் சொல்லவில்லை. எல்லாம் மனித ஜென்மங்கள் படுத்தும் பாடு. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் போன்று 109 திவ்ய தலங்கள் உள்ளன!, அங்கே போகலாமே! அங்கே மட்டும் பெருமாள் இல்லையா என்ன? அருள்தரமாட்டாரா என்ன?....////

"உள்ளே இருப்பானென்றால்
உள்ளுக்கு உள்ளும் இருப்பானடி "
என்ற கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையாரின் பாடல் தான் நினைவில் வருகிறது

////அடுத்தது சனி: பக்கதர்கள் கதறி அழும்பொழுது காலாட்டிக்கொண்டு(பல்குத்திகொண்டு )இருக்கிறார்.இதெல்லாம் ஒரு பொழைப்பா சனீஸ்வரா??என்று கேட்க தோன்றுகிறது.////

இது அதிகப் பிரச்ங்கித் தனம். சனி காலாட்டிக்கொண்டு இருப்பதை எங்கே நீங்கள் பார்த்தீர்கள்? அனாவசியமாக அவரைக் குறை சொல்லாதீர்கள். கர்மகாரகன் அவர். என்னுடைய மானசீக நண்பர் அவர்!...///

உங்களுக்கும் அவர் நண்பரா..அதனால்
எமக்கும் நீங்கள் நண்பராக இருக்கின்றீர்கள்..

R.Srishobana said...

வணக்கம் ஐயா,
இன்று பாடம் அருமை ஐயா...தேமொழி அவர்கள் குறிப்பிட்டது போல வாழ்க்கை பாடமும் மிக அருமை...இன்றைய சூழலில் வகுப்பறையில் "வாழ்க்கை கல்வி"க்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் இன்று விரிவான வாழ்க்கை பாடமா ஐயா...

ஐயா...உதாரண ஜாதகத்தில் 4ம் அதிபதி நீச்சம் அடைந்திருந்தாலும் உச்சம் பெற்ற சூரியனோடு சேர்வதனால் நீச்சபங்க இராஜயோகம் சொத்துக்களை பெற்றாலும் 6ல் மறைந்ததால் வில்லங்களையும் சேர்த்தே கொடுத்துவிட்டார் போலும்...

ஓம் தத் சத் said...

இறைநியதியாக கிரங்கள் எல்லாம் ஜீவன்களுடைய கர்மவினைப்படி கர்ம பரிபாலனத்தை செவனே (சிவனே) என்று செய்கின்றன. இதில் நல்ல கிரகம், கெட்ட கிரகம் என்று எதுவும் கிடையாது. உண்மையில் சொல்ல
போனால் ஜீவன்களுடைய புதிய கர்மத்தினால் கிரகங்களுக்கு சுமை தான் அதிகம் ஆகி கொண்டே இருக்கிறது.

கிரங்களில் சனிஸ்வரனுக்கு ஈஸ்வர பட்டத்தினால் தனி இடம் உண்டு. ஒரு ஜீவனை நன்றாக புடம் போட்டு அடுத்த நல்ல நிலைக்கு கொண்டு செல்வதில் சனிக்கு முக்கிய பங்கு உண்டு.

கஷ்ட காலத்தில் நாம் நம்முடைய வினையை / வினைப்பயனை தான் நொந்து கொள்ள வேண்டுமே தவிர வேறு யாரையும் அல்ல. சனி பகவானின் அருள் கிடைக்க
பைரவரை வழி படுங்கள்.(பைரவர் தான் சனி பகவானின் குரு).

SP.VR. SUBBAIYA said...

///// kannan said...
வாத்தியார் ஐயா வணக்கம்.
தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை ஐயா! அரும்பு மீசை முளைத்த காலத்தில் என்னுடைய தந்தையார் தன்னுடைய தலையில் அடித்துக்கொண்டு கூறுவார். நன்றாக படி பிச்சை எடுத்துனாலும் படிக்க வைக்கின்றேன் என்று . நான் போன பின்னால் உனக்கு நிற்க கூட ஒரு அடி நிலம் கூட கிடைக்காது என்று , அந்த சமயத்தில் நான் எண்ணுவேன் . இவருக்கு வேலை இல்லை எப்பம் பார்த்தாலும் இதையே கூறுகின்றார் என்று . ஆனால் தந்தையார் சென்ற பின்னர் தான் தெரிந்தது இருந்த சொத்தீர்க்கு மேல் இரண்டு மடங்கு கடன் இருந்ததை உணர்தேன் .
எல்லா கடனையும் அடிக்கவே வயது 30 ஆகிவிட்டது . அதற்க்கு பின்னர்தான் இந்த மரமண்டைக்கு ஏறியது என்னுடைய ஜாதக அமைப்பு படி பூர்விகமே ஆகாது என்று.இதனை தங்களுக்கு டைப் பண்ணும்பொழுது கண்களில் எல்லாம் கண்ணீர் ஐயா ! செல்லமாக வளர்ந்து விட்டு " : டீன் ஏஜ் " என்று கூறுவார்களே அந்த கால கட்டத்தை தாண்டிய பின்னர் அனுபவித்த கொடுமையை நினைத்து ஐயா!.///////

பழைய நடிகை கண்ணாம்பா மாதிரி மிகவும் உணர்ச்சிவசப்படுகிறீரே சுவாமி! உங்களை நீங்கள் உங்கள் கட்டுக்குள் வைத்திருங்கள்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஐயா! தங்களுடைய மாணவன் வருகின்ற 14 தேதி மினி மாரத்தானில் கலந்து கொள்ள இருக்கின்றேன் குறித்த பட்சம் நிர்ணநித்த தூரத்தையாவது கடக்க தங்களுடைய மற்றும் வகுப்பறையில் உள்ள பெரியவர்களின் ஆசிர்வாதத்தை எதிர்பார்கின்றேன் ஐயா .

வெற்றி பெற வாழ்த்துக்கள்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

SP.VR. SUBBAIYA said...

///// Dinesh said...
கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது . கிடைக்காமல் இருப்பது கிடைக்காது/////

தெரிவது தெரியாமல் போகாது; தெரியக்கூடாத்து என்ன முயன்றாலும் தெரியாது!

SP.VR. SUBBAIYA said...
This comment has been removed by the author.
SP.VR. SUBBAIYA said...

//// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
/////டிக்கெட் வாங்கிக்கொண்டு அப்பா மேலே போன பத்தாம் நாள் காரியம் செய்வதற்குள்ளேயே சண்டை வலுத்து அடிதடிவரை போன குடும்பங்களை எனக்குத் தெரியும். எல்லாவற்றிற்கும் ஆசைதான் காரணம் ////
சத்தியமான / உண்மையான வார்த்தைகள். இருந்தும்....
இது கொஞ்சம் தாமதம் சார்... இறந்தவருக்கு கொல்லி வைக்கும்
முன்பு பேசித் தீர்க்க வேண்டும் என்று சுடுகாட்டில் சூரத்தனம்
செய்தவர்களையும் கேள்வியுடுகிறேன்...///

நானும் அதுபற்றிக் கேள்வியுற்றிருக்கிறேன்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
////இன்றையப் பாடம் நன்று...
பொதுவாக இது போன்ற அமைப்பு இருப்பவர்கள் வீட்டில்
உள்ள மற்றவர்களின் பேரில் அந்த சொத்துக்களை
செய்து வைத்துக் கொள்வது நல்லது... சரிதானே ஐயா!////

ஆமாம்.அதுதான் நல்ல முன்னேற்பாடு!

SP.VR. SUBBAIYA said...

////Ananthamurugan said...
SP.VR. SUBBAIYA said...
////அடுத்தது சனி: பக்கதர்கள் கதறி அழும்பொழுது காலாட்டிக்கொண்டு(பல்குத்திகொண்டு )இருக்கிறார்.இதெல்லாம் ஒரு பொழைப்பா சனீஸ்வரா??என்று கேட்க தோன்றுகிறது.////
இது அதிகப் பிரச்ங்கித் தனம். சனி காலாட்டிக்கொண்டு இருப்பதை எங்கே நீங்கள் பார்த்தீர்கள்? அனாவசியமாக அவரைக் குறை சொல்லாதீர்கள். கர்மகாரகன் அவர். என்னுடைய மானசீக நண்பர் அவர்/////
சனிபகவான் எனக்கும் பால்ய நண்பர்.ஏனென்றல்,சிறு வயதிலே என்னையும் அவருக்கு பிடிக்கும்.(ஹாஹா ரொம்ப பிடிக்கும்).எனக்கும்.
சரி(சனி) எவ்வளவு அடிச்சாலும் தாங்க!! இது தாங்க உதவுது!
வேயுறு தோளி பங்கன் விடமுன்ட கண்டன்,
மிக நல்ல வீணை தடவி ,
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அமர்த்து,
என் உளமே புகுந்தவனால்,
ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,வெள்ளி,சனி,பாம்பு இரண்டும்
ஆசறு நல்ல நல்ல,அவை நல்ல,நல்ல அடியாரவர்க்கு மிகவே!!////

அது,,,அது... வேண்டும்!

SP.VR. SUBBAIYA said...

///// Rajaram said...
ஐயா வணக்கம்,
பொதுவாக ஸ்திர சொத்துக்களைப்பற்றிப் பார்க்கும் போது காரகர் செவ்வாயின் நிலையைப் பார்க்கவேண்டாமா?.//////

பார்க்க வேண்டும். ஆனால் இந்த ஜாதகத்தில் காரகனின் பார்வை 4ஆன்காம் வீட்டின் மேல் விழவில்லை. அத்துடன் அந்த வீட்டுக்காரனும் அவனும் 1/12 பொஸிசனில் உள்ளதைக் கவனியுங்கள் நோ யூஸ்!

SP.VR. SUBBAIYA said...
This comment has been removed by the author.
SP.VR. SUBBAIYA said...

//// Ananthamurugan said...
kannan said...
ஐயா! தங்களுடைய மாணவன் வருகின்ற 14 தேதி மினி மாரத்தானில் கலந்து கொள்ள இருக்கின்றேன்
கண்டிப்பாக இந்த சாதனையை செய்வீர்கள்.திரு.கண்ணன்.வாழ்த்துகள்!!!////

ஆனந்த முருகன சொல்லிவிட்டார். கவலையை விடுங்கள் கண்ணன்!

SP.VR. SUBBAIYA said...
This comment has been removed by the author.
SP.VR. SUBBAIYA said...

////Srividhya said...
Sir,
The lessons with example horoscope and the way in which you teach how to predict is superb. Please increase the lessons with much more examples sir.
I have a question in today's lesson. You said the 4th house lord Sani is neecham but it is joined with Sun which is ucham at that place.
I suppose it contributes to neecha banga raja yoham. Is it not sir?
What will be effect of this sir? Will it lessen the problems with related to assets in this horoscope. Please clarify sir.
thanks and regards
Srividhya/////

நீங்கள் குறிப்பிடும் அந்த யோகம் ஆறாம் வீட்டில் இருப்பதைக் கவனியுங்கள். இந்த ஜாதகருக்கு அது உதவாமல் போய்விட்டது!

SP.VR. SUBBAIYA said...

/// அய்யர் said...
/// இல்லை. முடியாது.
இந்தக் காலத்தில் அது சாத்தியமில்லை!///
முடியாதா...? இல்லை
தெரியாதா,,,?/////

தெரிந்துதான் சொல்லியிருக்கிறேன் சுவாமி. உங்கள் அனுபவம் வேறாக இருக்கலாம்!

SP.VR. SUBBAIYA said...

///// அய்யர் said...
///////// Ananthamurugan said...
தர வேண்டிய ஊதியத்தியே தர மறுக்கின்ற உலகில்,வேலை செய்தவன் எப்படியையா தனது ஊதியத்தை குறைத்து வாங்குவான்.உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை கொடுக்கும் முதலாளிகளை காட்டினால்,நீங்கள் கேட்ட தொழிலாளியை காட்டமுடியும்.இதுதான் வாழ்கைன் முரண்பாடுகள்.
இறந்தபின் வைகுண்டம் போக வேண்டும்,கைலாசம் போக வேண்டும் என்று இறைவனை தொழுபவர்கள் இறக்க மறுப்பது ஏனோ?? தர்க்கம்.வாதம் எனது நோக்கமல்ல.வாழ்க்கைன் யதார்த்தத்தை சொல்கிறேன்.மதிக்கிறேன்./////
நல்ல கேள்வி! சிவபத்விக்கு ஆசைப்படுபவர்கள் சிந்திக்கட்டும்!/////////
ஐந்தெழுத்தை சொல்லும் விதத்தில் இருந்து அவர் விருப்பத்தை அறிந்து கொள்ளலாம். இது சாத்திர உண்மை.
வாதிற்கு அழைக்காத அன்பருக்காக
வார்த்தைகளில் எழுதி வைக்கிறோம்//////

நன்றி சுவாமி!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
////மற்றும் ஒன்று:பணக்கார கோவிலான திருப்பதி கோவிலில் வசதி குறைத்தவர்கள் சாமி tharsanku எவ்வளவு நேரம் அல்லது நாள் கணக்கில் ஆகிறது.பணமிருபவனிடம் அது சில மணிகளில்.இறைவனிடமே இத்தனை பேதங்கள்!!!////
இறைவன் ஒன்றும் உங்களைக் கோவில் கட்டச் சொல்லவில்லை. போட்டி போட்டுக்கொண்டு, இடித்துக்கொண்டு வரச் சொல்லவில்லை. எல்லாம் மனித ஜென்மங்கள் படுத்தும் பாடு. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் போன்று 109 திவ்ய தலங்கள் உள்ளன!, அங்கே போகலாமே! அங்கே மட்டும் பெருமாள் இல்லையா என்ன? அருள்தரமாட்டாரா என்ன?....////
"உள்ளே இருப்பானென்றால்
உள்ளுக்கு உள்ளும் இருப்பானடி "
என்ற கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையாரின் பாடல் தான் நினைவில் வருகிறது/////

ந்ல்லது சுவாமி!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
////அடுத்தது சனி: பக்கதர்கள் கதறி அழும்பொழுது காலாட்டிக்கொண்டு(பல்குத்திகொண்டு )இருக்கிறார்.இதெல்லாம் ஒரு பொழைப்பா சனீஸ்வரா??என்று கேட்க தோன்றுகிறது.////
இது அதிகப் பிரச்ங்கித் தனம். சனி காலாட்டிக்கொண்டு இருப்பதை எங்கே நீங்கள் பார்த்தீர்கள்? அனாவசியமாக அவரைக் குறை சொல்லாதீர்கள். கர்மகாரகன் அவர். என்னுடைய மானசீக நண்பர் அவர்!...///
உங்களுக்கும் அவர் நண்பரா..அதனால்
எமக்கும் நீங்கள் நண்பராக இருக்கின்றீர்கள்../////

இரட்டிப்பு சந்தோஷம்!

SP.VR. SUBBAIYA said...

/// R.Srishobana said...
வணக்கம் ஐயா,
இன்று பாடம் அருமை ஐயா...தேமொழி அவர்கள் குறிப்பிட்டது போல வாழ்க்கை பாடமும் மிக அருமை...இன்றைய சூழலில் வகுப்பறையில் "வாழ்க்கை கல்வி"க்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் இன்று விரிவான வாழ்க்கை பாடமா ஐயா.../////

ஆமாம் அதை எழுதுவதில் எனக்கு மிகவும் விருப்பம் உண்டு. அத்துடன் அப்பன் முருகனின் அருளால சரளமாக எழுதவும் வரும்!>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
////ஐயா...உதாரண ஜாதகத்தில் 4ம் அதிபதி நீச்சம் அடைந்திருந்தாலும் உச்சம் பெற்ற சூரியனோடு சேர்வதனால் நீச்சபங்க இராஜயோகம் சொத்துக்களை பெற்றாலும் 6ல் மறைந்ததால் வில்லங்களையும் சேர்த்தே கொடுத்துவிட்டார் போலும்...//////

கரெக்ட். கண்டு பிடித்துவிட்டீர்கள். உங்களுக்கு டபுள் புரமோஷன்.

minorwall said...

முயற்சி திருவினையாக்கும்..பூர்வீகத்தில் இல்லாது போனவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் இந்த வசனத்தை நம்புவோம்..

இன்றைய பதிவு பலவித எண்ண அலைகளை எழுப்பும் நல்ல பதிவு..

என் லக்கினத்தை கொண்ட ஒரு ஜாதகரின் ஜாதகத்தை வெளியிட்டிருப்பதால் நாலாம் அதிபதி எவ்வளவு முக்கியமானவன் என்று புரிகிறது..

ஏனெனில் விருச்சிக லக்கினத்துக்கு செவ்வாய் லக்கினாதிபதி எழில் இருந்து லக்கினத்தைத் தன் நேரடிப் பார்வையில் வைத்திருந்துமே செவ்வாய் பூமிகாரகனாய் இருந்துமே கூட இந்த அவலம் என்றால் நாலாம் அதிபதி எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறார் என்பது புரிகிறது..

எனவே ஆனந்த முருகனுக்கு என் ஆழ்ந்த கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..ஏன்னா எனக்கும் விருச்சிக லக்கினம்..
நாலாம் அதிபதி சனிபகவான்..

விளையாட்டுக்காகச் சொன்னாலும் விளக்கியே சொல்கிறேன்..

ஏழெட்டு வருடமாய் அதி தீவிர தேடல், அலைச்சல், வேதாளமாய் முயற்சிக்குப் பல்வேறு காரணங்களால் வந்த நல்ல வாய்ப்புகளைத் தள்ளிவைத்து பின் ஐந்து மடங்கு விலை ஏறியபின் இரண்டு கிலோமீட்டர் தள்ளி ஒரு இடம் அமைந்தது..வாங்கினேன் என்று சொல்லிக்கொள்ளலாம்..இருந்தாலும் பத்திரமாகும் கணம் வரை ஏகப்பட்ட திருப்பங்கள்..டென்ஷன்..

இறுதியாக ஒரே ஒரு முக்கியச் செய்தி..

இது நடந்தது நாலாம் அதிபன் சனி பகவானின் தசை சுய புத்தி சனி புத்தியிலேதான்..மூலத்திரிகோணம் ஆட்சிபெற்ற இரண்டாம் ஆதி குருவின் தசையிலே கூட முடியாதது சனி பகவானின் தசையிலே எதிர்பாராமல் நடந்தேறியது..எனக்கு செவ்வாயின் பார்வையும் நாலாமிடத்துக்கு இருந்தது..அதே சமயம் சனி எழில் கேந்திரமேறி ஒன்பதாம் ஆதி சந்திரனுடன் சேர்க்கை..
சனி எழுதலைமுறைக்கும் அசையாத சொத்துக்களைக் கொடுப்பான் என்று சொல்லப்பட்டது..
அது உண்மையானால் இந்த ஜீவாத்மாவுக்கு பரிபூரண சந்தோஷம்..

kmr.krishnan said...

மகர ராசியை, லக்னம் என்று எடுத்துக் கொண்டு சுக்கிரனை யோக காரகன் என்று சொல்லிவிட்டேன். தவ‌றுதான்.

Ananthamurugan said...

இன்று பின்னூட்ட கணக்கை sani start செய்து வைத்திருக்கு போலும்(நாந்தான் ),இன்னும் முடியலைப்பா!!சாமி!!??நாளைலேர்த்து அக்கா தேமொழி,அய்யா kmrk start செய்யுங்கோ!!?? bye...

ஓம் தத் சத் said...

இறைவன் தன்னை பார்க்க வரும் பக்தர்களில் எவர் உண்மையான
பக்தியுடன், நேரம், காலம் பார்க்காமல் காத்திருந்து வருகிறார்களோ அவரைத்தான் விரும்புகிறான், ஸ்பெஷல் தரிசனம், VIP தரிசனம் போன்றவை எல்லாம் காலப்போக்கில் ஒரு சிலர் வசதிக்காகவும், விருப்பத்திற்காகவும் ஏற்படுத்தி கொண்டவை.

தர்ம தரிசனம் என்ற பெயரிலயே உண்மை இருக்கிறது ஐயா.

SP.VR. SUBBAIYA said...

//// ஓம் தத் சத் said...
இறைநியதியாக கிரங்கள் எல்லாம் ஜீவன்களுடைய கர்மவினைப்படி கர்ம பரிபாலனத்தை செவனே (சிவனே) என்று செய்கின்றன. இதில் நல்ல கிரகம், கெட்ட

கிரகம் என்று எதுவும் கிடையாது. உண்மையில் சொல்ல போனால் ஜீவன்களுடைய புதிய கர்மத்தினால் கிரகங்களுக்கு சுமை தான் அதிகம் ஆகி கொண்டே இருக்கிறது.
கிரங்களில் சனிஸ்வரனுக்கு ஈஸ்வர பட்டத்தினால் தனி இடம் உண்டு. ஒரு ஜீவனை நன்றாக புடம் போட்டு அடுத்த நல்ல நிலைக்கு கொண்டு செல்வதில்

சனிக்கு முக்கிய பங்கு உண்டு.
கஷ்ட காலத்தில் நாம் நம்முடைய வினையை / வினைப்பயனை தான் நொந்து கொள்ள வேண்டுமே தவிர வேறு யாரையும் அல்ல. சனி பகவானின் அருள்

கிடைக்க பைரவரை வழி படுங்கள்.(பைரவர் தான் சனி பகவானின் குரு)./////

உங்கள் பெயரைவைத்து இன்று ஒரு புதிய செய்தி கிடைத்தது. நன்றி நண்பரே!
Om Tat Sat (Sanskrit) is a mantra in Sanskrit IT MEANS THESE ARE THE THREE WORDS OF THREE GODS,
Om refers to the Supreme Infinite Spirit or Person. Om represents the Shabda Brahman.
Tat MEANS THE SECOND GUPTT. NAME OF GOD."AAKSHAR BHAHAM" OM+TAT= SAT-NAAM.
Sat MEANS'THE THIRD GUPTT NAME OF GOD. "PURAN AAKSHAR BHAHAM",OM+TAT+SAT=SAARNAAM.
Om Tat Sat also reflects THAT THESE ARE THE NAME OF THREE GOD AND EVERY HUMAN BEING SHOULD LEARN THIS.
These sacred syllables were integral to religious and material goodness and spiritual pursuit in Vedic age.

SP.VR. SUBBAIYA said...

//// minorwall said...
முயற்சி திருவினையாக்கும்..பூர்வீகத்தில் இல்லாது போனவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் இந்த வசனத்தை நம்புவோம்..
இன்றைய பதிவு பலவித எண்ண அலைகளை எழுப்பும் நல்ல பதிவு..
என் லக்கினத்தை கொண்ட ஒரு ஜாதகரின் ஜாதகத்தை வெளியிட்டிருப்பதால் நாலாம் அதிபதி எவ்வளவு முக்கியமானவன் என்று புரிகிறது..
ஏனெனில் விருச்சிக லக்கினத்துக்கு செவ்வாய் லக்கினாதிபதி எழில் இருந்து லக்கினத்தைத் தன் நேரடிப் பார்வையில் வைத்திருந்துமே செவ்வாய் பூமிகாரகனாய்

இருந்துமே கூட இந்த அவலம் என்றால் நாலாம் அதிபதி எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறார் என்பது புரிகிறது..
எனவே ஆனந்த முருகனுக்கு என் ஆழ்ந்த கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..ஏன்னா எனக்கும் விருச்சிக லக்கினம்..
நாலாம் அதிபதி சனிபகவான்..
விளையாட்டுக்காகச் சொன்னாலும் விளக்கியே சொல்கிறேன்..
ஏழெட்டு வருடமாய் அதி தீவிர தேடல், அலைச்சல், வேதாளமாய் முயற்சிக்குப் பல்வேறு காரணங்களால் வந்த நல்ல வாய்ப்புகளைத் தள்ளிவைத்து பின் ஐந்து

மடங்கு விலை ஏறியபின் இரண்டு கிலோமீட்டர் தள்ளி ஒரு இடம் அமைந்தது..வாங்கினேன் என்று சொல்லிக்கொள்ளலாம்..இருந்தாலும் பத்திரமாகும் கணம்

வரை ஏகப்பட்ட திருப்பங்கள்..டென்ஷன்..
இறுதியாக ஒரே ஒரு முக்கியச் செய்தி..
இது நடந்தது நாலாம் அதிபன் சனி பகவானின் தசை சுய புத்தி சனி புத்தியிலேதான்..மூலத்திரிகோணம் ஆட்சிபெற்ற இரண்டாம் ஆதி குருவின் தசையிலே கூட

முடியாதது சனி பகவானின் தசையிலே எதிர்பாராமல் நடந்தேறியது..எனக்கு செவ்வாயின் பார்வையும் நாலாமிடத்துக்கு இருந்தது..அதே சமயம் சனி எழில்

கேந்திரமேறி ஒன்பதாம் ஆதி சந்திரனுடன் சேர்க்கை..சனி எழுதலைமுறைக்கும் அசையாத சொத்துக்களைக் கொடுப்பான் என்று சொல்லப்பட்டது..
அது உண்மையானால் இந்த ஜீவாத்மாவுக்கு பரிபூரண சந்தோஷம்..////

மைனர், ஜமீன் சொத்துக்கள் என்ன ஆயிற்று? இன்னும் பிரித்து வரவில்லையா?

SP.VR. SUBBAIYA said...

//// kmr.krishnan said...
மகர ராசியை, லக்னம் என்று எடுத்துக் கொண்டு சுக்கிரனை யோக காரகன் என்று சொல்லிவிட்டேன். தவ‌றுதான்./////

யானைக்கும் அடி சறுக்கும். அதனால் என்ன பரவாயில்லை!

SP.VR. SUBBAIYA said...

//// Ananthamurugan said...
இன்று பின்னூட்ட கணக்கை sani start செய்து வைத்திருக்கு போலும்(நாந்தான் ),இன்னும் முடியலைப்பா!!சாமி!!?? நாளைலேர்த்து அக்கா தேமொழி,அய்யா
kmrk start செய்யுங்கோ!!?? bye.../////

உங்களை நீங்களே ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்? தன்னம்பிக்கை முக்கியமில்லையா?

SP.VR. SUBBAIYA said...

//// ஓம் தத் சத் said...
இறைவன் தன்னை பார்க்க வரும் பக்தர்களில் எவர் உண்மையான பக்தியுடன், நேரம், காலம் பார்க்காமல் காத்திருந்து வருகிறார்களோ அவரைத்தான் விரும்புகிறான், ஸ்பெஷல் தரிசனம், VIP தரிசனம் போன்றவை எல்லாம் காலப்போக்கில் ஒரு சிலர் வசதிக்காகவும், விருப்பத்திற்காகவும் ஏற்படுத்தி கொண்டவை.தர்ம தரிசனம் என்ற பெயரிலயே உண்மை இருக்கிறது ஐயா.////

காத்திருந்து தரிசிப்பதிலும் ஒரு சுகம் உண்டு! காதலிக்காக அல்லது மனைவிக்காக அல்லது தங்கள் மேலதிகாரிக்காகக் காத்திருப்பவர்கள், ஏன் இறை தரிசனத்திற்குக் காத்திருக்கக்கூடாது?

அய்யர் said...

///ஆமாம். அந்தக் கால மனிதர்களிடம் பல நல்ல குணங்கள் இருந்தன! இப்போது அத்தகைய மனிதர்கள் மிக மிகக் குறைவு!///

வருமானம் இல்லை அதனால் சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என்ற சொல்லும் நிலையை அறிய ராஜாஜி காலம் வரையில் செல்ல தேவையில்லை

இந்த நுற்றாண்டிலேயே சில ஆண்டுகளுக்கு முன்னால் சம்பள குறைப்பு செய்ததனையும் அதனை ஏற்று பணியாற்றிய software engineer மற்றும் techno cratகளையும் அறிவோம் அவர்கள் இன்று அதே கம்பெனிகளில் கூடுதல் சம்பளம் பெறுவதனையும் கண் முன்னே பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்..

ஆனால்....

ஊதிய உயர்வை தந்த நிறுவனத்திடம் கூடுதலாக தரும் இந்த தொகைக்கு எமக்கு செலவு இல்லை அதனால் ஊதிய உயர்வு தேவையில்லை என்று சொல்பவரை நாம் அறிவோம்..

இதனை வேடிக்கைக்காக சொல்லவில்லை, உண்மையை உண்மையாகவே சொல்கிறோம்,,

அய்யர் said...

///Om Tat Sat (Sanskrit) is a mantra in Sanskrit IT MEANS THESE ARE THE THREE WORDS OF THREE GODS,///

கடவுள் ஒருவரே என்பவர்
மூன்று கடவுளா..

அட கடவுளே...

அய்யர் said...

///ஐயா! தங்களுடைய மாணவன் வருகின்ற 14 தேதி மினி மாரத்தானில் கலந்து கொள்ள இருக்கின்றேன்///

கண்ணனுக்கு வாழ்த்துக்கள்
காதலருக்கான ஓட்டமா.பிப் 14ல் வருதே

பாண்டிய நாட்டு மன்னர் நீவிர்
பாராட்டுகளும் பரிசுகளும் உங்களுக்கே..

தேமொழி said...

கண்ணன், நன்றாக ஓடி இலக்கை சென்றடைந்து சாதனை செய்ய வாழ்த்துக்கள்.
என்னைப் பொறுத்தவரை பங்கு கொள்வதே பெரிய சாதனை.

பிறகு போட்டியில் பங்கேற்ற போது எடுத்த உங்கள் படத்தையும், உங்கள் அனுபவத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

daran said...

அருமையான பதிவு , ஆழ்ந்த அனுபவ பின்னூட்டங்கள். நன்றி ஐயா. இந்த பத்தி தங்களின் பாடங்களுள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்றாகும்.

ஆன்மிகத்தின் விதிகள் - உண்மைகள் இந்த உலகியல் விதிமுறைகள், வாழ்க்கை ஆதர்சங்களுக்கு முற்றிலும் வேறுபட்டவையாக இருக்கின்றன.

இவற்றை எல்லாம் உணர்த்தவே நம் நண்பர் சனியார் இருக்கிறார்.

daran said...

சுக்கிரனால் சுகங்களை எல்லாம் அனுபவிப்பவர்கள், அதுவே சந்தோசம் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு இறை அருள் தேவைப்படுவதில்லை. நினைப்பதுவும் இல்லை. இறைவனை நினைத்து உணர்வதற்கும் இறை அருள் தேவை படுகிறது. ஆகவே இறைவனிடம் எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்பதை விட உன்னை நினைகின்ற மனம் வேண்டும் என்று வேண்டுவதே முக்கியம் என்று படுகிறது.

sundari said...

மைனர் வாள்

விருச்சிக லக்னத்திற்கு உச்ச பெற்ற சந்தரனோடு சனி சேர்ந்த அது ஒரு யோகம் சனி மகா திசை ரொம்ப நல்லா போகும் நான் ரிஷபானந்தர் லக்கனமும் யோகமும் என்ற புத்தகத்தில் படித்தேன்.

SP.VR. SUBBAIYA said...

///// அய்யர் said...
///ஆமாம். அந்தக் கால மனிதர்களிடம் பல நல்ல குணங்கள் இருந்தன! இப்போது அத்தகைய மனிதர்கள் மிக மிகக் குறைவு!///
வருமானம் இல்லை அதனால் சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என்ற சொல்லும் நிலையை அறிய ராஜாஜி காலம் வரையில் செல்ல தேவையில்லை
இந்த நுற்றாண்டிலேயே சில ஆண்டுகளுக்கு முன்னால் சம்பள குறைப்பு செய்ததனையும் அதனை ஏற்று பணியாற்றிய software engineer மற்றும் techno

cratகளையும் அறிவோம் அவர்கள் இன்று அதே கம்பெனிகளில் கூடுதல் சம்பளம் பெறுவதனையும் கண் முன்னே பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்..
ஆனால்....
ஊதிய உயர்வை தந்த நிறுவனத்திடம் கூடுதலாக தரும் இந்த தொகைக்கு எமக்கு செலவு இல்லை அதனால் ஊதிய உயர்வு தேவையில்லை என்று சொல்பவரை

நாம் அறிவோம்..
இதனை வேடிக்கைக்காக சொல்லவில்லை, உண்மையை உண்மையாகவே சொல்கிறோம்,,/////

கூடுதலாக தரும் தொகையை வேண்டாம் என்று சொல்பவன் உண்மையிலேயே மனித வடிவில் உள்ள தெய்வம்தான். அவர்களைப் பற்றிய விவரங்களை முடிந்தால்/விரும்பினால் கொடுங்கள். வலையில் ஏற்றிவிடலாம்.

SP.VR. SUBBAIYA said...

/// அய்யர் said...
///Om Tat Sat (Sanskrit) is a mantra in Sanskrit IT MEANS THESE ARE THE THREE WORDS OF THREE GODS,///
கடவுள் ஒருவரே என்பவர்
மூன்று கடவுளா..
அட கடவுளே.../////

உங்களுக்கும் எனக்கும் கடவுள் ஒருவரே! ஆனால் மற்றவர்களுக்கு அவர்களுடைய குல தெய்வங்களையும் சேர்த்து இறைவன் பல வடிவங்களில் உள்ளார். அவர்கள் நம்பிக்கையை நாம் ஏன் குறைகூற வேண்டும்?

SP.VR. SUBBAIYA said...

//// அய்யர் said...
///ஐயா! தங்களுடைய மாணவன் வருகின்ற 14 தேதி மினி மாரத்தானில் கலந்து கொள்ள இருக்கின்றேன்///
கண்ணனுக்கு வாழ்த்துக்கள் காதலருக்கான ஓட்டமா.பிப் 14ல் வருதே
பாண்டிய நாட்டு மன்னர் நீவிர் பாராட்டுகளும் பரிசுகளும் உங்களுக்கே../////

எனக்கு சட்டென்று நினைவிற்கு வராத காதலர் தினம் உங்களின் நினைவிற்கு வந்தது ஆச்சர்யம்தான். காதலர் தினம் என்றால் உடன் ஓடுபவர்களில் பலர் தங்கள காதலியை நினைத்துக்கொண்டு அல்லவா ஓடுவார்கள். போட்டி பலமாகத்தான் இருக்கும்:-))))

SP.VR. SUBBAIYA said...

//// தேமொழி said...
கண்ணன், நன்றாக ஓடி இலக்கை சென்றடைந்து சாதனை செய்ய வாழ்த்துக்கள்.
என்னைப் பொறுத்தவரை பங்கு கொள்வதே பெரிய சாதனை.
பிறகு போட்டியில் பங்கேற்ற போது எடுத்த உங்கள் படத்தையும், உங்கள் அனுபவத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்./////

அக்காவின் ஆசிர்வாதம் தம்பிக்குப் பலிக்கட்டும்!

SP.VR. SUBBAIYA said...

//// daran said...
அருமையான பதிவு , ஆழ்ந்த அனுபவ பின்னூட்டங்கள். நன்றி ஐயா. இந்த பத்தி தங்களின் பாடங்களுள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்றாகும்.
ஆன்மிகத்தின் விதிகள் - உண்மைகள் இந்த உலகியல் விதிமுறைகள், வாழ்க்கை ஆதர்சங்களுக்கு முற்றிலும் வேறுபட்டவையாக இருக்கின்றன.
இவற்றை எல்லாம் உணர்த்தவே நம் நண்பர் சனியார் இருக்கிறார்./////

ஆமாம் அவர் அதை உணர்த்தாமல் விடமாட்டார். எந்த வயதில் அதை ஒருவன் உணர்கிறான் என்பதே முக்கியம்!

SP.VR. SUBBAIYA said...

//// daran said...
சுக்கிரனால் சுகங்களை எல்லாம் அனுபவிப்பவர்கள், அதுவே சந்தோசம் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு இறை அருள் தேவைப்படுவதில்லை.

நினைப்பதுவும் இல்லை. இறைவனை நினைத்து உணர்வதற்கும் இறை அருள் தேவை படுகிறது. ஆகவே இறைவனிடம் எனக்கு இது வேண்டும் அது
வேண்டும் என்று கேட்பதை விட உன்னை நினைகின்ற மனம் வேண்டும் என்று வேண்டுவதே முக்கியம் என்று படுகிறது.////

அந்த மனம் எல்லோருக்கும் இருந்துவிட்டால் உலகில் எந்தப் பிரச்சினையும் இருக்காது!

ஓம் தத் சத் said...

பெரியபுராணம்:

இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன்
அடியின்கீழ் இருக்க என்றார்.

ஓம் தத் சத் said...

சுக்கிரன் சுகத்திற்கு மட்டும் இல்லை ஐயா, சுக்கிரன் (சுக்கில சம்பந்தம்) மண வாழ்க்கைக்கும் வேண்டியதை தருபவர் மண வாழ்கை இல்லை என்றால் ஏது சந்ததி. சந்ததி இல்லை என்றால் ஏது மனித குலம்.

அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது. அப்படி இருக்கையில் சுக்கிர பகவானின் அருள் பெற இறை அருளும் வேண்டும் ஐயா.

Ravi said...

கிரகங்களும் - கந்த புராணமும்

ஏன் ஒன்பது கிரகங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் ? மற்ற கிரகங்கள் என்னவாயிற்று ? இதற்க்கான பதில் கந்த புராணத்தில் உள்ளது.

பத்மாசுரன் - தனது கோத்திரத்தில் பெண் எடுத்தான் - இது தற்காலத்திய சமூகங்களுக்கு அப்பாற்பட்டு திருமணம் புரிந்தால் பிறக்கும் குழந்தை சிறந்து விளங்கும் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் எடுக்கும் முடிவுகளை போன்ற ஒன்று - இதனால் , எவரும் வெல்ல முடியாத ஒரு நிலை - முருகப்பெருமான் அவதாரத்திற்கு உதவி புரிந்தது - இதனால் தான் இன்றும் ஒரே கோத்திரத்தில் பெண் எடுப்பது என்ற வழக்கம் நம்மிடையே இல்லை.

தனது சூப்பர் டூப்பர் முரட்டு அதிகாரத்தால் பல சூரியக்குடும்பங்களை சேர்த்தான் - இதில் சிலவற்றை தனது சகோதரனுக்கு அளித்தான். இங்கு எத்தகைய கிரஹங்களை அளித்தான் என்று உரைக்கும் போது - மற்றவற்றை கிரகிக்கும் தன்மை உடைய கிரகங்கள் , எந்த ஒரு கிரகிப்பு தன்மையும் இல்லாத உருண்டைகள் - குறைவான கிரகிப்பு தன்மை உடைய கிரகங்கள் -....

கிரகம் என்ற பெயர் கிரகித்தல் என்ற வார்த்தையுடன் சம்பந்தப்பட்டது.
இதில் சில கிரகங்கள் மட்டுமே பூமியை கிரகிக்கும் - இது பிளானெட் அல்லது சாடிளிடே ஆகவும் இருக்கலாம் - இந்த அடிப்படையிலேயே ஒன்பது கிரகங்கள் மற்றும் கிரகிக்கும் துணை கோள்கள் வகுக்கப்பட்டது.
இது எப்படி சாத்தியம் ?
தற்கால மொபைல் போன் போன்று - சிக்னல் சில இடத்தில் தான் கிடைக்கும் - இந்த ஒன்பது கோள்களின் சிக்னல் மட்டுமே நமது பூமிக்கு கிடைக்கும்

ஓம் தத் சத் said...

சுக்கிரனோடு குருவருளும் சேரும் போது மனம் / உடல் இரண்டும்
ஆன்மீகத்தில் பயணப்படும் . கோயில், குளம் புனரமைப்பது, தான தர்மம்
செய்வது போன்ற காரியங்கள் நிகழும்,
மேலும் இந்த அடிப்பொடியின் குருவின் படி சுக்கிர பகவான் நம்மில் இருக்கும் அசுர தன்மையை நீக்கி, குரு பகவானின் தயவிற்கு பாத்திரமாக செய்பவர்

சுக்ராச்சாரியார்(சுக்கிரன்)-அசுர குரு,
ப்ரஹஸ்பதி(குரு)-தேவ குரு

ஓம் குருவே போற்றி