மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

2.2.12

Devotional Song கோடி செம்பொன் போனாலென்ன, குறு நகை போதுமடி!

வள்ளி, முருகன், காதலுக்குத் துணை போன கஜமுகன்Devotional Song  கோடி செம்பொன் போனாலென்ன, குறு நகை போதுமடி!

இன்றைய பக்திப்பாடலை, நமது வகுப்பறை மாணவி தேமொழி அவர்கள் தெரிவு செய்து அனுப்பியுள்ளார்கள். பாடல் அருமையாக உள்ளது. கேட்டுப்
பாருங்கள். அனுபவித்து ரசித்தவர்கள் பின்னூட்டத்தில் ஒரு வார்த்தை சொல்லுங்கள். அதற்கு என்ன காசா - பணமா?
அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------------------------------------------------
பாடலுக்கான விளக்கமும் தேமொழி அவர்களே எழுதியுள்ளார்கள். அதை அப்படியே கொடுத்துள்ளேன்
---------------------------------------------------------------------------------------------
அன்புடையீர்

இந்தப் பாடலை இசை மேதை டி. கே. பட்டம்மாள் அவர்கள் பாடியதாக தகவல்.  இப்பொழுது அவர் பேத்தியும் பாடியுள்ளார்.

பாட்டியின் பாடல் வரிகள் ஒரு காதலி முருகனிடம் பாடுவதாக அமைந்துள்ளது.

அந்த வரிகளை நீக்கிவிட்டு பாட்டை சுருக்கிப் பொதுவாக ஒரு பக்தர், முருகனிடம் பாடுவதுபோல் தோற்றமளிக்கும் வண்ணம் பேத்தி நித்யஸ்ரீ பாடியுள்ளார். சுருக்கப் பட்ட பாடல் மிக அருமை.

பாட்டை கேட்டால் உங்களை அறியாமல் தலைஅசைத்து ரசிப்பீர்கள், அத்துடன் பாடல் முடிந்தாலும் மனதில் நாள் முழுவதும் ரீங்காரமிடும்.
அதிலும் "மாடு மனை போனாலென்ன" வரிகள் திரும்ப திரும்ப முணுமுணுக்கத் தோன்றும். பாடலை எழுதியவர் யார் என கண்டுபிடிக்க முடியவில்லை, ராகம்: காவடி சிந்து கிளிக்கண்ணி, தாளம்:  ஆதி என்று கானொளியில் குறிப்பிட்டதன் மூலம் அறிந்தேன்.

தாயற்று தன் அத்தை வீட்டில் சிறு குழந்தையாய் வளர்ந்த என் அம்மா அவர்களின் அத்தை (என் பாட்டி முறை) அருமையாய் இந்தப் பாட்டை பாடுவார்கள் எனக் குறிப்பிட்டதும் நினைவில் உள்ளது

இப்பொழுது பாடலின் இரு வடிவங்களும்: பாடியவர்: நித்யஸ்ரீ  மகாதேவன் (பேத்தி) கிளிக்கண்ணி, காவடி சிந்து, ஆதி தாளம்

அன்புடன்
தேமொழி

------------------------------------------------------------------
பாடியவர்: திருமதி நித்யஸ்ரீ மகாதேவன்
வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும்
வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும்
வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி கிளியே
உள்ளம் குழையுதடி கிளியே
ஊனும் உருகுதடி கிளியே
ஊனும் உருகுதடி கிளியே
ஊனும் உருகுதடி கிளியே
ஊனும் உருகுதடி

மாடு மனை போனால் என்ன மக்கள் சுற்றம் போனால் என்ன
மாடு மனை போனால் என்ன மக்கள் சுற்றம் போனால் என்ன
கோடி செம்பொன் போனால் என்ன கிளியே
கோடி செம்பொன் போனால் என்ன கிளியே
கோடி செம்பொன் போனால் என்ன கிளியே
குறு நகை போதுமடி
முருகன் குறு நகை போதுமடி
முருகன் குறு நகை போதுமடி
அய்யன் குறு நகை போதுமடி

கூடி குலாவி மெத்த குகனோடு வாழ்ந்ததெல்லாம்
கூடி குலாவி மெத்த குகனோடு வாழ்ந்ததெல்லாம்
வேடிக்கை அல்லவடி கிளியே
வேடிக்கை அல்லவடி கிளியே
வேடிக்கை அல்லவடி கிளியே
வெகு நாளை பந்தமடி கிளியே
வெகு நாளை பந்தமடி கிளியே
வெகு நாளை பந்தமடி கிளியே

எங்கும் நிறைந்திருப்போன் எட்டியும் எட்டாதிருப்போன்
எங்கும் நிறைந்திருப்போன் எட்டியும் எட்டாதிருப்போன்
குங்கும வர்ணனடி கிளியே
குங்கும வர்ணனடி கிளியே
குமரப் பெருமானடி கிளியே
குமரப் பெருமானடி கிளியே
குமரப் பெருமானடி கிளியே
குமரப் பெருமானடி
குமரப் பெருமானடி
குமரப் பெருமானடி

----------------------------------------------------------
முன்பு நித்யஸ்ரீயின் பாட்டி D K பட்டம்மாள் அவர்கள் பாடிய பாடலின் வரிகள்

வள்ளிக் கணவன் பேரை
வழிப் போக்கர் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி - கிளியே
ஊனும் உருகுதடி - கிளியே
ஊனும் உருகுதடி!

மாலை வடிவேலவர்க்கு
வரிசையாய் நானெழுதும்
ஓலைக் கிறுக்காச்சுதே - கிளியே
உள்ளமும் கிறுக்காச்சுதே - கிளியே
உள்ளமும் கிறுக்காச்சுதே!
 
காட்டுக் கொடி படர்ந்த
கருவூரின் காட்டுக்குள்ளே
விட்டுப் பிரிந்தானடி - கிளியே
வேலன் என்னும் பேரோனடி - கிளியே
வேலன் என்னும் பேரோனடி!

மாடுமனை போனாலென்ன
மக்கள் சுற்றம் போனாலென்ன
கோடிச் செம்பொன் போனாலென்ன - கிளியே
குறுநகை போதுமடி - கிளியே
முருகன் குறுநகை போதுமடி!

கூடிக் குலாவி மெத்த
குகனோடு வாழ்ந்த தெல்லாம்
வேடிக்கை அல்லவடி - கிளியே
வெகு நாளை பந்தமடி - கிளியே
வெகு நாளை பந்தமடி!

எங்கும் நிறைந் திருப்போன்!
எட்டியும் எட்டா திருப்போன்!
குங்கும வர்ணனடி - கிளியே
குமரப் பெருமானடி - கிளியே
குமரப் பெருமானடி!

++++++++++++++++++++++++++++++++
காணொளி video Link:
http://youtu.be/zdZiGrEcBq0
காணொளியை வாளாஈ ஏற்றிய அந்த முகம் தெரியாத அன்பருக்கு நமது நன்றியைத் தெரிவித்துகொள்வோம்!
Our sincere thanks to the person who uploaded the video clipping in the net-------------------------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

45 comments:

RAMADU Family said...

Guru Vanakkm,

Idhu ennoda ammavin favourite song and she sings that well too.

Regards
Ramadu

Parvathy Ramachandran said...

மிகவும் அருமையான பாடல்.கர்நாடக இசை,பாமர மக்களையும் சென்றடைய வேண்டுமானால்,இப்படிப்பட்ட எளிமையான பாடல்களையும் பாடினால் தான் முடியும்.மேலும் தமிழிசையை மேன்மைப் படுத்துவதில் பாட்டியும் பேத்தியும் ஆற்றிய, ஆற்றிவரும் பங்கு அளவிட முடியாது. பார்வதி இராமச்சந்திரன், பெங்களூரு.

kannan said...

வாத்தியார் ஐயா!
வணக்கம் ஐயா!

தாங்கள் கூறி உள்ளீர்கள் காசா பணமா என்று ஆனாலும் பாருங்கோ காசு பணத்தை விட நேரம் கிடைப்பது என்பது என்னை போன்று வெளி நாட்டில் வசுப்பவருக்கு மிகவும் அரிதாக படுகின்றது.

மூல கடவுல் முருகனின் பாடல் என்றால் சும்மாவா குருநாதன்னாட்சே ஐயா!.

SP.VR. SUBBAIYA said...

///////Blogger RAMADU Family said...
Guru Vanakkm,
Idhu ennoda ammavin favourite song and she sings that well too.
Regards
Ramadu//////

தகவலுக்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

///////Blogger Parvathy Ramachandran said...
மிகவும் அருமையான பாடல்.கர்நாடக இசை,பாமர மக்களையும் சென்றடைய வேண்டுமானால்,இப்படிப்பட்ட எளிமையான பாடல்களையும் பாடினால் தான் முடியும்.மேலும் தமிழிசையை மேன்மைப் படுத்துவதில் பாட்டியும் பேத்தியும் ஆற்றிய, ஆற்றிவரும் பங்கு அளவிட முடியாது. பார்வதி இராமச்சந்திரன், பெங்களூரு.///////

ஆமாம். புரியாத மொழியில் பலரும் பாடுவதால், மக்களை அது சென்றடையவில்லை!

SP.VR. SUBBAIYA said...

///////Blogger kannan said...
வாத்தியார் ஐயா!
வணக்கம் ஐயா!
தாங்கள் கூறி உள்ளீர்கள் காசா பணமா என்று ஆனாலும் பாருங்கோ காசு பணத்தை விட நேரம் கிடைப்பது என்பது என்னை போன்று வெளி நாட்டில் வசிப்பவருக்கு மிகவும் அரிதாகப் படுகின்றது.
மூலக் கடவுள் முருகனின் பாடல் என்றால் சும்மாவா குருநாதனாச்சே ஐயா!.////////

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. எழுதுவதற்கு எனக்கு எப்படி நேரம் கிடைக்கிறது? பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்வதற்கு எனக்கு எப்படி நேரம் கிடைக்கிறது?

sundarji said...

வாத்தியார் கூறினால் சரியாகத்தான் இருக்கும். எதற்குமே
"மனம் இருந்தால் மார்க்கம் உண்டு".

முருகனைப் பற்றிய பாடல் பார்த்தேன்,படித்தேன் குடித்தேன்.(புர‌ட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களிடம் இருந்து கற்றது)

kmr.krishnan said...

பாரம்பரியம் மாறாமல் திருமதி நித்யஸ்ரீ கர்னாடக இசையை முன்னெடுத்துச் செல்கிறார்.மூத்தோருக்கு நாம் செய்யும் மரியாதையே அவர்களுடைய திற‌னை உள் வாங்குவதிலும், அதில் உள்ள நல்ல அடிப்படைகளை நம் காலத்துகு ஏற்றார்ப் போல மாற்றிப் பொது நலனுக்கு வைப்பதிலும் தான் அமைந்துள்ளது. பல கலைகள் 'மாடர்னிடி' என்ற அரக்கனின் காலகளில் அரை பட்டு, குடும்பத்தாரின் அவதானிப்புக் கூடப்பெறாமல் அழிந்துவிட்டன.
பட்டமாளுக்கு க்கிடைத்தது போல பேத்தி எல்லோருக்கும் கிடைத்தால்....?

பாடல்களுக்கு நன்றி ஐயா!

தமிழ் விரும்பி said...

அமுதகானம் அதை கேட்டேன் -தேன்
அமுத குரலிலே திவ்விய முடனே
நாத முனிகளும் ஏத்திய அவனே
வேதநாயகனின் தம்பி முருகனின் புகழ்பாடும்
தேவகானம் கேட்டேன் அதை சகோதிரி
தேமொழியின் தேர்வாகவே கேட்டேன்!...

அருமையானப் பாடல் தேர்வுக்கும், பகிர்வுக்கும்
நன்றிகள்!

suthank said...

வாத்தியார் ஐயா வணக்கம்.
முருகப்பெருமானின் பக்திப்பாடல் அருமை தேமொழிக்கு நன்றிகள்.
நித்தியஸ்ஸிறீ பட்டம்மாளின் பேத்தி என்பதும் எனக்கு புதிய தகவல்.
மேலும் ஐயா உங்களின் முகவரிக்கு சில தகவல்கள் நேற்று அனுப்பியுள்ளேன்.தயவு செய்து உங்களின் பதிலை இயலுமாயின் கூடியவரையில் தெரியத்தரவும்.
சுதன்.க
கனடா.

csekar2930 said...

Kavadi Chindu is the lyrical and musical outbursts of poet Annamalai Reddiar of Chennimalai, in Tirunelveli district.

It is dedicated to lord Muruga of Kazhugumalai in Tirunelveli. It is powerful and evocative for its brilliance in poetry and music. Kavadi Chindu is a light form of music which is sung in concerts at the tail-end as Tukkadas.

Known for its melody, it suits well the kavadi dance – kavadi attam - which is performed during Kanda Sashti to propitiate lord Muruga.

A well-known Kavadi Chindu is ‘Valli Kanaven Perai Vazhipokkan Chonnalum’ in raga Senchurutti.

Annamalai Reddiar has set to music in ragas like Sindhu Bhairavi, Chakravaham, Ananda Bhairavi, etc.

It is Tamil folk songs popularised by Annamalai Reddiar which has no musical divisions like pallavi, anu pallavi and charanam.

Information Source from : Tamil Isai Sangam

Thanjavooraan said...

'வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும்' என்கிற பாடல் நான் குழந்தையாக இருந்த காலத்திலிருந்தே அதாவது 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடப்பட்டு வருகிறது. கிளிக்கண்ணிகள் என்று இவ்வகைப் பாடல்களைச் சொல்வார்கள். இந்தப் பாடலின் தாக்கம் மகாகவி பாரதியிடம் இருந்திருக்கிறது. இதே கிளிக்கண்ணியில் "நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறனுமின்றி, வஞ்சனை செய்வாரடி, கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி" என்ற பாடலை, காங்கிரஸ் மிதவாதிகளைச் சாடி பாடியிருக்கிறார். பழைய பாடல்கள் பொருள் பொதிந்தவை; நெஞ்சில் நிற்பவை. அப்படிப்பட்டப் பாடல்களை நினைவு படுத்திய ஆசிரியர் அவர்கள் வாழ்க!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger sundarji said...
வாத்தியார் கூறினால் சரியாகத்தான் இருக்கும். எதற்குமே "மனம் இருந்தால் மார்க்கம் உண்டு".
முருகனைப் பற்றிய பாடல் பார்த்தேன்,படித்தேன் குடித்தேன்.(புர‌ட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களிடம் இருந்து கற்றது)/////

நல்லது. தொடர்ந்து அமுதத் தேனை (பாடல்களைக்) குடியுங்கள்

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
பாரம்பரியம் மாறாமல் திருமதி நித்யஸ்ரீ கர்னாடக இசையை முன்னெடுத்துச் செல்கிறார். மூத்தோருக்கு நாம் செய்யும் மரியாதையே அவர்களுடைய

திற‌னை உள் வாங்குவதிலும், அதில் உள்ள நல்ல அடிப்படைகளை நம் காலத்துக்கு ஏற்றார்ப் போல மாற்றிப் பொது நலனுக்கு வைப்பதிலும் தான்

அமைந்துள்ளது. பல கலைகள் 'மாடர்னிடி' என்ற அரக்கனின் காலகளில் அரை பட்டு, குடும்பத்தாரின் அவதானிப்புக் கூடப்பெறாமல் அழிந்துவிட்டன.
பட்டமாளுக்கு க்கிடைத்தது போல பேத்தி எல்லோருக்கும் கிடைத்தால்....?
பாடல்களுக்கு நன்றி ஐயா!/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger தமிழ் விரும்பி said...
அமுதகானம் அதை கேட்டேன் -தேன்
அமுத குரலிலே திவ்விய முடனே
நாத முனிகளும் ஏத்திய அவனே
வேதநாயகனின் தம்பி முருகனின் புகழ்பாடும்
தேவகானம் கேட்டேன் அதை சகோதிரி
தேமொழியின் தேர்வாகவே கேட்டேன்!...
அருமையானப் பாடல் தேர்வுக்கும், பகிர்வுக்கும்
நன்றிகள்!/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger suthank said...
வாத்தியார் ஐயா வணக்கம்.
முருகப்பெருமானின் பக்திப்பாடல் அருமை தேமொழிக்கு நன்றிகள்.
நித்தியஸ்ரீ பட்டம்மாளின் பேத்தி என்பதும் எனக்கு புதிய தகவல்.
மேலும் ஐயா உங்களின் முகவரிக்கு சில தகவல்கள் நேற்று அனுப்பியுள்ளேன்.தயவு செய்து உங்களின் பதிலை இயலுமாயின் கூடியவரையில் தெரியத்தரவும்.
சுதன்.க
கனடா./////

பார்க்கிறேன். நன்றி சுதன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger csekar2930 said...
Kavadi Chindu is the lyrical and musical outbursts of poet Annamalai Reddiar of Chennimalai, in Tirunelveli district.
It is dedicated to lord Muruga of Kazhugumalai in Tirunelveli. It is powerful and evocative for its brilliance in poetry and music. Kavadi Chindu is a

light form of music which is sung in concerts at the tail-end as Tukkadas.
Known for its melody, it suits well the kavadi dance – kavadi attam - which is performed during Kanda Sashti to propitiate lord Muruga.
A well-known Kavadi Chindu is ‘Valli Kanaven Perai Vazhipokkan Chonnalum’ in raga Senchurutti.
Annamalai Reddiar has set to music in ragas like Sindhu Bhairavi, Chakravaham, Ananda Bhairavi, etc.
It is Tamil folk songs popularised by Annamalai Reddiar which has no musical divisions like pallavi, anu pallavi and charanam.
Information Source from : Tamil Isai Sangam//////

மேலதிகத் தகவல்களுக்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Thanjavooraan said...
'வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும்' என்கிற பாடல் நான் குழந்தையாக இருந்த காலத்திலிருந்தே அதாவது 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடப்பட்டு வருகிறது. கிளிக்கண்ணிகள் என்று இவ்வகைப் பாடல்களைச் சொல்வார்கள். இந்தப் பாடலின் தாக்கம் மகாகவி பாரதியிடம் இருந்திருக்கிறது. இதே கிளிக்கண்ணியில் "நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறனுமின்றி, வஞ்சனை செய்வாரடி, கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி" என்ற
பாடலை, காங்கிரஸ் மிதவாதிகளைச் சாடி பாடியிருக்கிறார். பழைய பாடல்கள் பொருள் பொதிந்தவை; நெஞ்சில் நிற்பவை. அப்படிப்பட்டப் பாடல்களை நினைவு படுத்திய ஆசிரியர் அவர்கள் வாழ்க!///////

நல்லது. உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி கோபாலன் சார்!

thanusu said...

தேமொழி அவர்கள் தேர்வாளராக மாறி வகுப்பறையின் பகுதி நேர ஆசிரியராக உயர்ந்த்துள்ளார். அவர் தேர்வு செய்த பாடல் நித்யா ஸ்ரீ குரலில் பாடல் நன்றாக உள்ளது.

எனக்கு இந்த கர்நாடக் சங்கீதம் , ராகம் இவைகளை பற்றி அவ்வளாக தெரியாது.பரத நாட்டியத்தோடு வரும் பாடல்கள் நன்றாக ரசிப்பேன். அந்த வகையில் இவரின் "கண்ணோடு காண்பதெல்லாம்" பல முறை கெட்டு இருக்கிறேன்.

உயர்வு பெற்றுள்ள தேமொழி அவர்களிடம் வகுப்பறை கண்மணிகள் சார்பாக தேநீர் விருந்து எதிர் பார்க்கிறோம்.

iyer said...

பாடலை ரசித்தபடியே..
மெய்சிலிர்த்த படி...

அமைதி கொள்கிறோம்..
அன்பு வணக்கங்களுடன்..

GAYATHRI said...

Good song Sir. I like Nithyashri's voice very much.

Sir, i wanted to type the comments in tamil how to do that?

kmr.krishnan said...

//GAYATHRI said...

Good song Sir. I like Nithyashri's voice very much.

Sir, i wanted to type the comments in tamil how to do that?//

முகப்புப் பக்கத்தில் என்னுடைய விளக்கம் ஐயா முழுமையாகக் கொடுத்து உள்ளாரே! கண்ணில் படவே இல்லையா? வலது மார்ஜினில் கீழ் இறக்கிப் பார்க்கவும்.தமிழில் உங்கL விமர்சனைத்தைப் பதிவு செய்வது எப்படி என்று விளக்கம் உள்ளது.

chithrs said...

ood morning sir
I read only the song. liricks is good. songs liricks are very sweet(inimaiyaka irukkirathu.)
yaro anupathi ullam uruki ezhuthiya varikal ivai. Thankyou sir for good song to u and thomozhi sister.

God is always great.
k. chithrakamaraj

R.Srishobana said...

வணக்கம் ஐயா,
அழகன் முருக பெருமானின் பெருமையை அழகான,தெளிவான சொற்களால் வடித்திருக்கிறார்கள்...தேமொழி அவர்களுக்கு நல்ல இசை ஞானம் உள்ளது என்று நினைக்கின்றேன்...இராகம்,தாளங்களுடன் தெளிவான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்...நீங்கள் எடுத்துக் கொண்ட சிரத்தைக்கு என் நன்றிகள்...நல்ல ஆக்கத்தை வெளியிட்ட வாத்தியார் ஐயாவுக்கும் நன்றிகள் பல...

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
ரசித்துக் கேட்பதற்கு அருமையான
பாடல்.
நன்றி!

thanusu said...

GAYATHRI said...Sir, i wanted to type the comments in tamil how to do that?

kmr.krishnan said...முகப்புப் பக்கத்தில் என்னுடைய விளக்கம் ஐயா முழுமையாகக் கொடுத்து உள்ளாரே! கண்ணில் படவே இல்லையா? வலது மார்ஜினில் கீழ் இறக்கிப் பார்க்கவும்.தமிழில் உங்கL விமர்சனைத்தைப் பதிவு செய்வது எப்படி என்று விளக்கம் உள்ளது.

மேலும் ஒரு வழி.

வகுப்பரையை திறந்த பின் add ல் gmail திறந்துக் கொள்ளவும்

gmail திறந்து compose mail கிளிக் செய்து தமிழ் மொழிக்கு மாற்றிக்கொள்ளுங்கள் .தேவையானதை எழுதி copy அல்லது cut செய்துக்கொண்டு வகுப்பறையின் leave your comment பகுதியில் பேஸ்ட் செய்து publish your comment கிளிக் செய்தால் போதும்.

இது mozila firefox மற்றும் Google chrome இந்த இரண்டில் மட்டுமே செய்ய முடியும் explorer ல் முடியவில்லை.

GAYATHRI said...

நான் கன்டுபிடிததுவிட்டேன். நன்றி.

ட்ய்ப் செய்வ்து கடின்மாக உல்லது. பழகினால் வந்துவிடும்.

minorwall said...

நல்லது..நல்லது..நடத்துங்க..
கொஞ்சம் கொஞ்சமா கர்நாடகமா ஆகிட்டீங்களே தேமொழி?

kmr.krishnan said...

//GAYATHRI said...

நான் கன்டுபிடிததுவிட்டேன். நன்றி.

ட்ய்ப் செய்வ்து கடின்மாக உல்லது. பழகினால் வந்துவிடும்.//

மிக்க மகிழ்ச்சி!

சுந்தரி அம்மையாருக்கும் நான்தான் சொல்லிக் கொடுத்தேன்.அவர் அடிக்கடி வகுப்பறையில் இருந்து காணாமல் போய் விடுகிறார்.

'ன்' 'ண்' ஆக கேப்ஸ் லாக் போட்டுக் கொள்ளவும்.
'ல்' 'ள்' ஆகவும் கேப்ஸ் லாக்தான்.

ட்ய்ப் டைப் என்று நினைக்கிறேன். tai போட்டால் டை கிடைக்கும்

minorwall said...

///GAYATHRI said...
ட்ய்ப் செய்வ்து கடின்மாக உல்லது. ////

நல்லா டைப் பண்ணியிருக்கீங்க..கங்க்ராட்ஸ்.....

உங்க தமிழார்வம் உண்மையிலேயே பாராட்டப் படவேண்டியது..

ஆங்கிலம் இனி மெல்லச் சாகும்..நன்றி..

தமிழையும் காப்பாத்த வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு இருக்கு..ஞாபகத்துலே வெச்சுக்குங்க..

SP.VR. SUBBAIYA said...

/////Blogger thanusu said...
தேமொழி அவர்கள் தேர்வாளராக மாறி வகுப்பறையின் பகுதி நேர ஆசிரியராக உயர்ந்த்துள்ளார். அவர் தேர்வு செய்த பாடல் நித்யா ஸ்ரீ குரலில் பாடல் நன்றாக உள்ளது.
எனக்கு இந்த கர்நாடக் சங்கீதம் , ராகம் இவைகளை பற்றி அவ்வளாக தெரியாது.பரத நாட்டியத்தோடு வரும் பாடல்கள் நன்றாக ரசிப்பேன். அந்த வகையில் இவரின் "கண்ணோடு காண்பதெல்லாம்" பல முறை கெட்டு இருக்கிறேன்.
உயர்வு பெற்றுள்ள தேமொழி அவர்களிடம் வகுப்பறை கண்மணிகள் சார்பாக தேநீர் விருந்து எதிர் பார்க்கிறோம்./////

வகுப்பறையில் வாத்தியார், மாணவர் என்ற பேதம் இல்லை. எல்லோருமே வாத்தியார்கள்தான், எல்லோருமே (என்னையும் சேர்த்து) மாணவர்கள்தான்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger iyer said...
பாடலை ரசித்தபடியே..
மெய்சிலிர்த்த படி...
அமைதி கொள்கிறோம்..
அன்பு வணக்கங்களுடன்../////

மெய்சிலிர்த்தமைக்கு நன்றி விசுவநாதன்!

SP.VR. SUBBAIYA said...

Blogger GAYATHRI said...
Good song Sir. I like Nithyashri's voice very much.
Sir, i wanted to type the comments in tamil how to do that?

அடுத்துவரும் பின்னூட்டங்களைப் படியுங்கள். பலர் உதவிக்கு வந்துள்ளார்கள்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger kmr.krishnan said...
//GAYATHRI said...
Good song Sir. I like Nithyashri's voice very much.
Sir, i wanted to type the comments in tamil how to do that?//
முகப்புப் பக்கத்தில் என்னுடைய விளக்கம் ஐயா முழுமையாகக் கொடுத்து உள்ளாரே! கண்ணில் படவே இல்லையா? வலது மார்ஜினில் கீழ் இறக்கிப் பார்க்கவும்.தமிழில் உங்கள் விமர்சனைத்தைப் பதிவு செய்வது எப்படி என்று விளக்கம் உள்ளது.//////

எடுத்துச் சொல்லி என் வேலையைக் குறைத்த உங்களின் உதவிக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger chithrs said...
Good morning sir
I read only the song. liricks is good. songs liricks are very sweet (inimaiyaka irukkirathu.)
yaro anupathi ullam uruki ezhuthiya varikal ivai. Thankyou sir for good song to u and thomozhi
God is always great.
k. chithra kamaraj/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger R.Srishobana said...
வணக்கம் ஐயா,
அழகன் முருக பெருமானின் பெருமையை அழகான,தெளிவான சொற்களால் வடித்திருக்கிறார்கள்...தேமொழி அவர்களுக்கு நல்ல இசை ஞானம் உள்ளது என்று நினைக்கின்றேன்...இராகம், தாளங்களுடன் தெளிவான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்...நீங்கள் எடுத்துக் கொண்ட சிரத்தைக்கு என் நன்றிகள்...நல்ல ஆக்கத்தை வெளியிட்ட வாத்தியார் ஐயாவுக்கும் நன்றிகள் ////

நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, ரசித்துக் கேட்பதற்கு அருமையான பாடல்.
நன்றி!//////

நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger thanusu said...
GAYATHRI said...Sir, i wanted to type the comments in tamil how to do that?
kmr.krishnan said...முகப்புப் பக்கத்தில் என்னுடைய விளக்கம் ஐயா முழுமையாகக் கொடுத்து உள்ளாரே! கண்ணில் படவே இல்லையா? வலது மார்ஜினில் கீழ் இறக்கிப் பார்க்கவும்.தமிழில் உங்கL விமர்சனைத்தைப் பதிவு செய்வது எப்படி என்று விளக்கம் உள்ளது.
மேலும் ஒரு வழி.
வகுப்பரையை திறந்த பின் add ல் gmail திறந்துக் கொள்ளவும்
gmail திறந்து compose mail கிளிக் செய்து தமிழ் மொழிக்கு மாற்றிக்கொள்ளுங்கள் .தேவையானதை எழுதி copy அல்லது cut செய்துக்கொண்டு வகுப்பறையின் leave your comment பகுதியில் பேஸ்ட் செய்து publish your comment கிளிக் செய்தால் போதும்.
இது mozila firefox மற்றும் Google chrome இந்த இரண்டில் மட்டுமே செய்ய முடியும் explorer ல் முடியவில்லை./////

One more easy way. Download NHM writer from the net. It is free. Instal it in your system. Key board practice is not necessary. You can type in all the applications right from notepad to ms word, excel and power point.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger GAYATHRI said...
நான் கன்டுபிடிததுவிட்டேன். நன்றி.
டைப் செய்வது கடினமாக உள்ளது. பழகினால் வந்துவிடும்.//////

முதலில் அப்படித்தான் இருக்கும். இரண்டு நாட்களில் வந்துவிடும்!

SP.VR. SUBBAIYA said...

Blogger minorwall said...
நல்லது..நல்லது..நடத்துங்க..
கொஞ்சம் கொஞ்சமா கர்நாடகமா ஆகிட்டீங்களே தேமொழி?////

எல்லாமே மைனா (மைனர்) வாக இருந்தால் என்ன ஆவது? குருவி, கிளி, புறா, மயில் என்று வெரைட்டி வேண்டாமா? அப்போதுதானே வகுப்பறைப் பூங்கா களைகட்டும்!

minorwall said...

/////SP.VR. SUBBAIYA said...
/////Blogger thanusu said...
தேமொழி அவர்கள் தேர்வாளராக மாறி வகுப்பறையின் பகுதி நேர ஆசிரியராக உயர்ந்த்துள்ளார். அவர் தேர்வு செய்த பாடல் நித்யா ஸ்ரீ குரலில் பாடல் நன்றாக உள்ளது.
எனக்கு இந்த கர்நாடக் சங்கீதம் , ராகம் இவைகளை பற்றி அவ்வளாக தெரியாது.பரத நாட்டியத்தோடு வரும் பாடல்கள் நன்றாக ரசிப்பேன். அந்த வகையில் இவரின் "கண்ணோடு காண்பதெல்லாம்" பல முறை கெட்டு இருக்கிறேன்.
உயர்வு பெற்றுள்ள தேமொழி அவர்களிடம் வகுப்பறை கண்மணிகள் சார்பாக தேநீர் விருந்து எதிர் பார்க்கிறோம்./////

வகுப்பறையில் வாத்தியார், மாணவர் என்ற பேதம் இல்லை. எல்லோருமே வாத்தியார்கள்தான், எல்லோருமே (என்னையும் சேர்த்து) மாணவர்கள்தான்!//////////

என்னைக் கவர்ந்த பதில்..இதே நிலையில் தொடர்வது கடினம்..
ஆனால் தொடர்வது நல்லது..

தேமொழி said...

///SP.VR. SUBBAIYA said...
One more easy way. Download NHM writer from the net. It is free. Instal it in your system. Key board practice is not necessary. You can type in all the applications right from notepad to ms word, excel and power point.///

ஐயா இது நல்ல தகவல், நீங்கள் குறிப்பிட்டுள்ள NHM போலவே "Google Transliteration IME" ஐயும் கணினியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் எனத் தெரிகிறது, ஆனால் application வரை எடுத்துச் சென்று உபயோகிக்கும் அளவுக்கு எனக்குத் தேவை இல்லாமலிருப்பதால் முயன்று பார்க்கவில்லை.

வகுப்பறை பின்னூட்டங்கள், சில மின்னஞ்சல்கள் தவிர தமிழில் எழுதும் வாய்ப்பு எனக்கு குறைவு. அதனால் நான் - http://www.google.com/transliterate/Tamil தளத்தை உபயோகிக்கிறேன். இதுவே என் தேவைக்கு எளிய வழியாகத் தோன்றுகிறது. இத்தளத்தை "bookmarks toolbar" இல் "bookmark" செய்து வைத்துக்கொண்டால் மற்றொரு "tab" open செய்து அதில் தமிழில் தட்டச்சு செய்து வெட்டி ஒட்டி விடலாம்.

This approach can be used in all the major browsers such as Firefox by Mozilla, Google Chrome, Internet Explorer and Safari .

ஆனால் "ஔ" மற்றும் "ஃ" வரும் வார்த்தைகள் எழுதுவது சிரமம். "flower" என்பதை "ப்ளவர்" என்று எழுத வேண்டியிருக்கும் "ஃப்ளவர்" என்று எழுத "ஃ" ஐ வேறு இடத்தில் இருந்து எடுத்து வரவேண்டும்.

SP.VR. SUBBAIYA said...

////Blogger minorwall said...
///GAYATHRI said...
ட்ய்ப் செய்வ்து கடினமாக உல்லது. ////
நல்லா டைப் பண்ணியிருக்கீங்க..கங்க்ராட்ஸ்.....
உங்க தமிழார்வம் உண்மையிலேயே பாராட்டப் படவேண்டியது..
ஆங்கிலம் இனி மெல்லச் சாகும்..நன்றி..
தமிழையும் காப்பாத்த வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு இருக்கு..ஞாபகத்துலே வெச்சுக்குங்க..////

தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் எதுவும், எவரும் சாக வேண்டாம்!
எப்போதும்போல தமிழர்களுக்கான நாட்டுப் பாடலைப் பாடுவோம்:

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்

பூப்போன்ற என் உள்ளம் யார் கணடது
பொன்னான மனமென்று பேர் வந்தது
வழியில்லாத ஊமை எது சொன்னாலும் பாவம்
என் நெஞ்சும் என்னோடு பகையானது

கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்
அது கடனாக வந்தாலும் தடை போடுவேன்
நியாயங்கள் தெளிவாக நாளாகலாம்
நான் யாரென்று அப்போது நீ காணலாம்

உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது
உன் எண்ணம் எதுவென்று தெரிகின்றது
நான் இப்போது ஊமை மொழியில்லாத பிள்ளை
என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்

உன் பாதை நீ கண்டு நீ வாழலாம்
இனி என் பாதை நன் கண்டு நான் போகலாம்
எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம்
நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம்

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்

SP.VR. SUBBAIYA said...

/////Blogger minorwall said...
/////SP.VR. SUBBAIYA said...
/////Blogger thanusu said...
தேமொழி அவர்கள் தேர்வாளராக மாறி வகுப்பறையின் பகுதி நேர ஆசிரியராக உயர்ந்த்துள்ளார். அவர் தேர்வு செய்த பாடல் நித்யா ஸ்ரீ குரலில் பாடல் நன்றாக உள்ளது.
எனக்கு இந்த கர்நாடக் சங்கீதம் , ராகம் இவைகளை பற்றி அவ்வளாக தெரியாது.பரத நாட்டியத்தோடு வரும் பாடல்கள் நன்றாக ரசிப்பேன். அந்த வகையில் இவரின் "கண்ணோடு காண்பதெல்லாம்" பல முறை கெட்டு இருக்கிறேன்.
உயர்வு பெற்றுள்ள தேமொழி அவர்களிடம் வகுப்பறை கண்மணிகள் சார்பாக தேநீர் விருந்து எதிர் பார்க்கிறோம்./////
வகுப்பறையில் வாத்தியார், மாணவர் என்ற பேதம் இல்லை. எல்லோருமே வாத்தியார்கள்தான், எல்லோருமே (என்னையும் சேர்த்து) மாணவர்கள்தான்!//////////
என்னைக் கவர்ந்த பதில்..இதே நிலையில் தொடர்வது கடினம்..
ஆனால் தொடர்வது நல்லது../////

எல்லாவற்றிற்கும் மனம்தான் காரணம். மனம் பக்குவப்பட்டுவிட்டால் சாத்தியமில்லாதது எதுவுமே இல்லை மைனர்!

Bhama said...

மிக மிக அருமையான பாடல்.அனுபவித்து எழுதியிருக்கிறார்கள்..இதை சுதா ரகுநாதன் அவர்கள் பாடியும் கேட்டிருக்கிறேன்!