மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.2.12

பக்தியும் மனிதாபிமானமும் ஒன்றா அல்லது வெவ்வேறா?

 மாணவர் மலர்
இன்றைய மாணவர் மலரைப் பத்து ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள். உங்கள் கருத்தைப் பின்னூட்டமிடுங்கள். அதற்கு செலவு ஒன்றுமில்லை. ஆகவே தயக்கமின்றிப் பின்னூட்டமிடுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------------------------------
1

 மாற்றம் நிச்சயம் வேண்டுமடா!
ஆக்கம்: தனுசு
++++++++++++++++++++++++++++++++++++++
போனால் போகட்டும் போடா
பழமையை நினைப்பது ஏனடா
சூரியன் மறைந்தால் சூனியம் இல்லையடா
சீக்கிரம்  புலரும் இன்னும் ஒரு பொழுதடா

பூத்த பூ உதிர்ந்தால் என்னடா? புதிதாய்ப் பூக்க
மொட்டு ஒன்று துளிர்த்திருக்கு பாரடா! - கொடியில்
பழுத்த கனி கெட்டால் என்னடா? பழுக்க
பச்சை காய் ஒன்று காத்திருக்கு பாரடா !

குழந்தை வளர்ந்தால் குமரியடா
குமரி பழுத்தால் கிழவியடா
குமரியாவது வளர்ச்சியடா
கிழவியாவது இயற்கையடா .

இரவு முடிந்தால் என்னடா
இன்னொரு பொழுது புலருமடா
விட்டதை நினைப்பது வீனடா
தொட்டதை மீட்டிப் பாரடா.

நேற்றையப் பொழுது நினைவடா - அதைவிட
இன்றையப் பொழுது இனிமையடா
பின்பாதம் விட்டாலே - அடுத்து உன் 
முன்பாதம் செல்லுமடா

பழைமை என்பது பொக்கிஷம்
புதுமை என்பது வேஷம்
வேஷமும் பொக்கிஷமாகும் -அந்த 
பொக்கிஷமும் நமக்கே வேதமாக மாறும் .

சீற்றமின்றி கேளடா - பெரும் 
குற்றம் ஒன்றும் இல்லையடா 
ஏற்றம் என்றும் வேண்டுமென்றால்
மாற்றம் நிச்சயம் வேண்டுமடா!

-தனுசு- 
+++++++++++++++++++++++++++++++++
2
 
பக்தியும் மனிதாபிமானமும் ஒன்றா அல்லது வெவ்வேறா?
ஆக்கம்: வெ.கோபாலன், தஞ்சாவூர்

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பக்தி என்பதைக் குழந்தைப் பிராயத்திலிருந்து நம் மனங்களில் ஊட்டிவிடுகிறார்கள். அனேகமாக எல்லோருடைய வீட்டிலும் சில கடவுளர்களின் படங்கள் மாட்டப்பட்டிருக்கும். அதற்கு தினசரி விளக்கேற்றி, பூக்களைச் சூட்டி, நெற்றியில் திருநீறு, குங்குமம், சந்தனம், ஸ்ரீசூர்ணம் இதில் எதையாவது அணிந்து கொண்டு கண்களை மூடிச் சிறிது நேரம் தியானம் செய்து (அல்லது தனக்கு இன்னன்ன வேண்டுமென்று) கடவுளிடம் முறையிட்டுச் சென்றால் அது பக்தியின் ஒரு அங்கமாகக் கருதப்படுகிறது.

மற்ற சிலர் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அவ்வப்போது இறைவனை சிந்தை செய்துகொண்டு மானசீகமாக வணங்கிவிட்டுக் காரியங்களைத் தொடங்குவார்கள். சில திருமணங்களில் மணமக்கள் திருமண பந்தத்தில் ஈடுபடும் சடங்கிற்கு முன்பாக உறவினர்கள் மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் ஒரே மாலையைத் திரும்பத் திரும்ப அணிவித்து அவையைப் பார்த்து, அல்லது ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து கண்களை மூடி ஏதோ தியானித்துவிட்டு அந்த மாலையை மணப்பெண் அல்லது மாப்பிள்ளை கழுத்தில் அணிவிப்பார்கள்.

கோயிலுக்குப் போனால் பக்தியின் பன்முகப் பரிமாணங்களைப் பார்க்கலாம். ஆலய வழிபாடு என்பது நமது பண்பாட்டில் வழிவழியாக வந்ததொன்று. முதலில் எங்கு செல்ல வேண்டும், எதையெதையெல்லாம் வழிபட வேண்டும் என்கிற முறை இருக்கிறது. சிலர் வழியில் தென்படும் எல்லா தூண்கள், மேடைகள், படிகள் என்று அனைத்தையும் பக்தி சிரத்தையோடு தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டு போவார்கள். அதுவும் நம் பண்பாட்டில் வந்த ஒன்றுதான். நமது முன்னோர்கள் கோயிலின் வாயிற்படியிலும், புஷ்கரணி அல்லது திருக்குளப் படிக்கட்டில் தன் உருவத்தை கல்வெட்டில் செதுக்கி வைத்து, அதன்மீது அடியார்கள் பாதங்கள் படவேண்டுமென்று விரும்பியிருக்கிறார்கள்.

சிலர் சாலையில் செல்லும் போது வழியில் தென்படும் ஆலயங்கள் முன்பெல்லாம் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டுச் செல்வார்கள். அதிலும் பெண்கள் கும்பிடுவது சற்று விசித்திரமாக இருக்கும். அவர்கள் கைகளைக் கூப்பி வணங்குவதில்லை. ஒரு கையால் நெஞ்சில் கைவைத்துவிட்டுப் பின்னர் உதட்டில் முத்தமிடுவதைப் போல தனது வழிபாட்டைச் செய்வார்கள். அது என்ன என்பது தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.

ஆலயங்களில், அதிலும் சாலையோரச் சின்ன கோயில்களில் பக்தர்கள் வரும்போதெல்லாம் அங்கு பூசை செய்யும் மனிதர் ஒரு தட்டில் சிறிது கற்பூரத்தை வைத்து ஏற்றி தீபாராதனை காட்டிவிட்டுப் பின்னர் பக்தர்கள் வரிசைக்கு வந்து அந்த தட்டிலுள்ள விபூதியை எடுத்துக் கொடுக்க, பக்தர்கள் கும்பிட்டு முடிந்து அந்த விபூதி பிரசாதத்தை வாங்கி நெற்றியில் பூசிக்கொள்கிறார்கள்.

சில வசதி படைத்த பெரிய மனிதர்கள் கிராமக் கோயில்களுக்குக் காரில் வரும்போது பூ, பழம், வெற்றிலை பாக்கு, மாலைகள் என்று வாங்கிக் கொண்டு வந்து எல்லா சந்நிதிகளிலும் அர்ச்சனை செய்யச் சொல்லி வணங்கிவிட்டு பக்தி சிரத்தையோடு செல்கிறார்கள். அப்படி பிரபலமான சில கோயில்களில் வரும் மனிதர்களுக்குச் சிறப்பு வரவேற்பினை பூஜை செய்பவர்கள் தருவார்கள். நம்மைப் போல வெறும் கையோடு வந்து தினசரி சுவாமியைக் கும்பிட்டுவிட்டு தட்சணை எதுவும் போடாமல், அவர் கொடுக்கும் விபூதியை வாங்க கைமேல் கைவைத்து பவ்யமாக வாங்கி பூசிக்கொண்டு நகர்ந்துவிடும் நபர்களை அவர்கள் அவ்வளவாக மதிப்பதில்லை.

மிக பிரபலமான ஒரு கோயிலுக்குச் சென்றிருந்தேன். அங்கு சாதாரணமாக உள்ளே செல்வதே முடியாது. அத்தனை கூட்டம் இருக்கும். நான் போன நேரம் அங்கு கூட்டமே இல்லை. தெரியாமல் உள்ளே சென்று சிறப்பு தரிசனம் செய்ய நுழைவுச் சீட்டினை வாங்கிவிட்டேன். அங்கிருந்த ஒருவர் என் கையில் சீட்டு இருப்பதைப் பார்த்து, இன்னும் உள்ளே வந்து தரிசனம் செய்யச் சொல்லி கூப்பிட்டார். அவர் நல்ல மனதைப் பாராட்டிவிட்டு உள்ளே சென்று சிவலிங்கத்தை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து அங்கு உட்கார்ந்துகொண்டு வைசையில் வருபவர்களுக்கு விபூதி கொடுத்தவரை நெருங்கினேன். அவர் தட்டில் பத்து ரூபாய் வைத்தவர்களுக்கு ஒரு பூ, ஒரு விபூதி பொட்டலம் கொடுத்தார். என்னைப் போன்ற வெறும் ஆள் கையை நீட்ட நினைத்தபோது, ஊம் ஊம் தட்சனை என்று உரத்த குரலில் கேட்டார். நான் வேண்டுமென்றே கொடுக்காமல் கையை நீட்டினேன். கையில் ஒன்றும் விழவில்லை, அடி உட்பட. காசு கொடுத்தால்தான் விபூதியா, தெரியவில்லை. அப்படியொரு பக்தி.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு மார்கழி மாதக் குளிரில் விடியற்காலை நான்கு மணிக்கு வாயிலில் சிலர் ஒன்றுகூடி பஜனைப் பாடல்களை, பக்க வாத்தியங்களோடு பாடிக்கொண்டு வருவார்கள். பனிக்கு பாதுகாப்பாக தலைக்கு மஃப்ளர் அல்லது துண்டு கட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்களோடு கோயிலுக்கோ அல்லது பஜனை மடத்துக்கோ சென்றால் சுடச்சுட வெண்பொங்கல் கிடைக்கும்.

இப்போதும் பெரு நகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் ஆங்காங்கே சிறு கோயில்களை அந்தப் பகுதி மக்களே நிர்வாகம் செய்து வருகிறார்கள். அங்கு வாழும் மக்கள் மிகச் சிறப்பாக விசேஷ நாட்களில் கோயிலில் விழாக்களை நடத்தி, கலை நிகச்சிகள் உட்பட நடத்தி முடிவில் நல்ல பிரசாதம் வழங்குகிறார்கள்.

இப்படி நமது பக்தி என்பது பன்முகப் பரிமாணத்தோடு விதம் விதமாக இருந்தாலும், அடிப்படையில் பக்தி என்பது நம் மனம், வாக்கு, காயம் அனைத்தையும் சர்வ வல்லமை படைத்த இறைவன் முன்பாக அடைக்கலமாக்கி விடுவது என்பதுதான். அப்படிச் செய்யும்போது தனிப்பட்ட வேண்டுதல்கள் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டாலும், இறுதியில் இவ்வுலக ஜீவராசிகள் அனைத்தும் துன்பம் நீங்கி இன்புற்று வாழ அருள்புரிவாயாக என்று வேண்டிக் கொள்வதே சிறப்பு.

முன்பெல்லாம் நம் கிராமங்கள், சிறு ஊர்கள் இங்கெல்லாம் ராமர் கோயில், பஜனை மடம் இங்கெல்லாம் விசேஷ நாட்களில் அல்லது வாரத்தில் சில நாட்களில் பஜனை என்பது நடப்பது உண்டு. ஆனால் இப்போதெல்லாம் பெரு நகரங்களில் அந்த பஜனையை மியுசிக் அகாதமி, நாரத கான சபா போன்ற இடங்களில் எப்படி எம்.எஸ்., டி.கே.பட்டம்மாள், மகாராஜபுரம் இவர்கள் கச்சேரிகளைக் கேட்கக் கூடுவார்களோ அப்படி சில பஜனை கோஷ்டியினர் மேடையில் அமர்ந்து பக்க வாத்தியங்களுடன் பாட, கூடியிருக்கும் ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன் கரங்களைத் தலைக்கு மேலே தூக்கி தாளம் போட்டுக் கொண்டு இரண்டு மணி நேரம் கேட்டு இன்புறுகிறார்கள். இப்படி நவநாகரிக பஜனைகளில் பாடல் அருமையாக அமைந்து விடுகிறது. எல்லோருமே இசையில் தலைசிறந்தவர்களாகவும், நல்ல குரல் வளம் மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். கூட்டமாக மேடையில் அமர்ந்து ஒவ்வொரு பாட்டை ஒவ்வொருவர் பாட மற்றவர்கள் எடுத்துப் பாடுவதும் சுகமாகத்தான் இருக்கிறது. இதில் ஒன்றுமட்டும் புரியவில்லை. இவைகள் எல்லாம் பொழுது போக்கா, இசையை ரசிக்கவா, அல்லது பக்தியினாலா?

பெரிய புராணத்தில் பூசலார் நாயனார் புராணம் உண்டு. அதில் பூசலார் ஈசனுக்குக் கோயில் கட்ட விரும்பியும் வசதி இல்லாததால் தன் வீட்டுத் திண்ணையில் தியானத்தில் அமர்ந்துகொண்டு மனத்திற்குள் ஒரு கோயில் கட்டத் தொடங்கினார். சும்மா ஜீ பூம்பா போல நினைத்த மாத்திரத்தில் ஒரு கோயிலை மனதில் கொண்டு வரவில்லை. ஒருவன் கட்டுமானத்துக்கு எத்தனை நாள் மண் தோண்டுவானோ, கற்கள் கொண்டுவருவானோ, பின் கட்டடம் கட்டுவானோ அப்படி ஒவ்வொரு வேலையையும் மனத்தால் செய்து கட்டி முடித்தார். அதே நேரம் பல்லவ மன்னனும் ஒரு கற்கோயில் எழுப்பி அதற்கு குடமுழுக்குக்கு நாளும் குறித்தான். ஒரு அதிசயம், பூசலார் தன் மனக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்வதாக நினைத்திருந்த அதே நாளில்தான் பல்லவ மன்னனும் நாள் குறித்திருந்தான்.

ஒரு நாள் இரவில் இறைவன் பல்லவ மன்னன் மனதில் தோன்றி, மன்னா! நீ குடமுழுக்கு செய்ய நினைக்கும் நாளில் எம் பக்தன் ஒருவன் கட்டியுள்ள கோயிலுக்கும் குடமுழுக்கு நடக்கிறது. நான் அன்று அங்கு இருப்பேன், நீ வேறொரு நாளில் வைத்துக் கொள் என்றார். விழித்தெழுந்த மன்னனுக்கு அதிசயம். நான் மன்னன், பெரும் கோயில் எழுப்பினேன், ஈசன் இங்கு வராமல் யாரோ கட்டியிருக்கிற கோயிலுக்குப் போகிறாராமே. உடனே அரசன் திருநின்றவூர் எனும் பூசலார் வாழ்ந்த ஊருக்குச் சென்று இங்கு எங்கே கோயில் கட்டப்பட்டிருக்கிறது என்று வினவினான். மக்கள் அப்படியொரு கோயில் இங்கு கட்டப்படவில்லையே என்றனர்.

அப்போது ஒருவர் சொன்னார், இங்கு பூசலார் என்றொரு அடியார் இருக்கிறார். அவரைக் கேளுங்கள் என்றார். மன்னன் அவர் எங்கே இருக்கிறார் என்று கேட்க, தூரத்தில் ஒரு குடிசை வாயிலில் கண்களை மூடி அமர்ந்திருந்த பூசலாரைக் காண்பித்தார். அரசன் போய் அவரிடம் ஐயா தாங்கள் கட்டிய கோயில் எங்கே என்றான். ஐயா நான் கல்லையும் மண்ணையும் கொண்டு கோயில் எதுவும் கட்டவில்லையே. என் மனத்தில் மானசீகமாகவல்லவா கோயில் கட்டினேன் என்றார்.

மன்னனுக்கு அதிசயம். நடந்தவற்றை அவரிடம் சொல்லிவிட்டு அவர் காலில் வீழ்ந்தான். பூசலாரின் பக்தியை மெச்சினான்.

இந்த கதை என் நினைவில் அசைபோட சாலையில் நடந்து கொண்டிருந்தேன். அப்போது உணவு இடைவேளை. ஒரு அலுவலகத்திலிருந்து ஒருவர் வெளியே வந்தார். அவருடன் மற்றொருவர், கையில் பெரிய கூடையைச் சுமந்து கொண்டு வந்தார். இருவரும் ரயில் நிலையத்துக்கு வெளியே, வெயிலிலும், மர நிழலிலும் சுருண்டு படுத்துக் கொண்டிருக்கும் சிலரை எழுப்பி அவர்கள் கைகளில் தாங்கள் கூடையில் கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலங்களைக் கொடுத்தார்கள். அவர்கள் கண்கள் விரிய வாயில் அடைத்துக் கொண்டு தின்றுவிட்டுத் தண்ணீர் என்று கேட்க, கூடையில் இருந்த பாட்டிலில் இருந்து தண்ணீரையும் கொடுத்துவிட்டு அலுவலகத்துக்குத் திரும்பிவிட்டனர்.

யார் ஐயா இது. இப்படியும் ஒரு தர்மமா என்று நீங்கள் நினைப்பவராக இருந்தால், அவரைச் சென்று பார்க்க வேண்டுமென்று விரும்பினால் நீங்கள் லால்குடி வரை போகவேண்டியிருக்கும். போகலாமா?

பக்தி என்பது என்ன மனிதாபிமானம் என்பது என்ன, இரண்டும் ஒன்றா, வெவ்வேறா, பக்திக்கு புறச் செயல்கள் எவை, மனிதாபிமானத்துக்குச் செயல்பாடுகள் எவை. இவ்விரு பக்தியில் குளிர்சாதன வசதியூட்டப்பட்ட ஹாலில் கைதட்டி அனுபவிக்கும் பஜனையா, நட்டநடு வெயில் வேளையில் கூடையைச் சுமந்துகொண்டு சென்று தேவைப்படும் ஏழைகளுக்கு உணவளிப்பதா? எனக்கு உண்மை விளங்கவில்லை. உங்களுக்கு விளங்கினால் சொல்லுங்கள் கேட்கத் தயாராக இருக்கிறேன்.

ஆக்கம்: வெ.கோபாலன், தஞ்சாவூர்
++++++++++++++++++++++++++++++++++++++
3

சொல்லடைவா அல்லது சொல்லடையா?
ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி

சொல்லடைவு என்பதையே சொல்லடை என்றும் சொல்கிறார்கள்.

"கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்."

ஒரு புத்தகம் எழுதி விளங்க வைக்க வேண்டிய ஒரு நுணூக்கமான செய்தியைஓரிரு சொற்களில் அடைத்துப் 'பளிச்' என்று புரிந்து கொள்ளச் செய்வது சொல்லடைவு.

கும்பகோண‌ம் நகரில் நாராயணன் என்பவர் குளத்தில் தவ‌றி விழுந்து இறந்து விட்டார்.இந்த சாவுச் செய்தியை ஊர் முழுதும் சொல்ல சாவோலை எழுதி ஒரு ஆள்காரனிடம் கொடுத்து செய்தி பரப்பச் சொன்னார்கள்.

சாவோலை கூறியது:

"திருக்குடந்தை திருநகர் திருவைணவ திருநாரயண‌ஸ்வாமி,  திருக்குளத்தில்
திருமுழுக்குச் செய்யச் சென்ற போது திருப்படி வழுக்கி திருக்குளத்தில் விழுந்து திருமேனி துறந்து திருவைகுண்டம் திருத்தேர் ஏறி ஏகினார்"

செய்தி பரப்பாளன் இதை அப்படியே இரண்டு இடத்தில் படித்தான்.அதன் பின்னர்சலிப்படைந்தான் மூன்றாவது இடத்தில் இருந்து "கும்பகோணத்துப் பார்ப்பான் குட்டையில் விழுந்து செத்தான்"என்று சுருங்கச் சொல்லி விட்டு விரைந்தான்.

இப்படித்தான் செய்திகளை ஒரு சிறுவாக்கியத்தில் பொருள் செரிவோடு(அர்த்த புஷ்டியுடன்) சொவதுதான் சொல்லடைவு. சொல்லடை அல்லது சொலவடை (அதென்ன ஆமைவடை,மெதுவடை, தவலைவடை, த‌யிர்வடை போல ஒரு வடையா என்னும் சாப்பாட்டுப் பிரியர்கள் பதிவை விட்டு விலகவும்)  என்றும் பேச்சு வழக்கில் கூறுவார்கள்.

"BE BRIEF"  என்பதுதான் சொல்லடைவுகளின் இலக்கணம்.இக்கால பேச்சு வழ்க்கப் படி 'நச்' சென்று சொல்வதுதான் சொல்லடைவு. சொல்+அடைவு=சொல்லடைவு.அடைவு என்பது 'packed'    என்று பொருள் படும்

முன்னர் ஒரு 10 சொல்லடைவுகளை எழுதியுள்ளேன்.இப்போதும் ஒரு சில சொல்லடைவுகளைக் கூறுகிறேன்.
***********************************************************************
ஒரு ஊரில் மூன்று வாழைப்பழ சோம்பேரிகள் இருந்தார்கள். ஊர் சத்திரத்தில் சாப்பிட்டுவிட்டு சத்திரத்து திண்ணையிலேயே உறங்கிக் கொண்டு காலம் கழிப்பார்கள்.இப்படி வழிப் போக்கர்களுக்கான சத்திரத்தில் ஒவ்வொரு நாளும் உண்டு கொண்டு வேலை ஏதும் செய்யாத மூவரையும் வெளியேற்ற எவ்வளவோ முயற்சி செய்தார் சத்திர நிர்வாகி. ஒன்றும் உதவத‌தால் ஒரு நாள் கோவத்தில் சத்திரத்தையே கொளுத்திவிட்டார்.

சத்திரம் பற்றி எரிவதைப் பார்த்த முதல் சோம்பேரி"அமபலம் வேகுது"என்று சொல்லி விட்டுத் திரும்பிப் படுத்தான்.

இரண்டாம் சோம்பேரி"அதைச் சொல்லுவானேன், வாய்தான் நோவானேன்" என்று கூறிவிட்டு மறு பக்கம் ஒருக்களித்துப் படுத்தான்.

மூன்றாம் சோம்பேரி, "சந்தை இரைச்சலிலே குடியிருந்து கெட்டேனே" என்று அங்கலாய்த்தான்.

இந்த மூன்று கூற்றுக்களையும் சேர்த்து இந்தக் கதையை உள் வாங்கிய சொல்லடைவு மிகவும் பிரபலம்.
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍************************************************************************
சொல்லடைவுகளைச் சொல்லும் போது ஓரோர் தலைப்பாகக் கொஞ்சம் சொல்லலாம் என்று எண்ணுகிறேன். இந்த வாரம் சோதிடம் பற்றிய சொல்லடைவுகளைக் காண்போமா?

1. ஆகாத வேளையில் பிள்ளை பிறந்தால் பஞ்சாங்கக்காரனை என்ன செய்யும்?

பிள்ளைக்கு ஜாதகம் எழுதச் சொன்னாள் ஒரு தாய். சோதிடனும் எழுதிக் கொடுத்தான்.பையன் ஜாதகம் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை. இதைச் சொன்ன பஞ்சாங்கக்காரனை 'நாசமாகப்போ' என்று சாபமிட்டாளாம் தாய்.
அந்த சாபம் பஞ்சாங்கம் சொன்னவனை என்ன செய்யும்?

2.சாகிற வரை வைத்தியன் விடான்.
 செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.

உயிரைப் பிழைக்க வைக்கத் தனக்குத் தெரிந்த அனைத்தையும் முயற்சி செய்வான் ஒரு மருத்துவன்.இறந்தபிறகுதான் நிறுத்துவான். சிலசமயம் செய்யும் வைத்தியத்தாலேயே சாவு வந்துவிடும்.(இப்போதெல்லாம் செத்த பிணத்தை வைத்துக்கொண்டு பணம் கற‌க்கிறார்கள்)

செத்தபின்னர் ஆரம்பிகிறது சடங்கு செய்விக்கும் பஞ்சாங்கக்கார அந்தணனின் வேலை.அவன் பிழைப்பு அதில்தான். என்ன செய்ய?

3.பால சோதிடனும் விருத்த வைத்தியனும் நன்று.

பால சோதிடன் காலக் கணக்கை சரியாகப் போடுவான் தவறு இருக்காது.
அது போல உள்ளது உள்ளது போலச் சொல்லி விடுவான். சொற்களில் மறைத்துப் பக்குவமாகச் சொல்ல மாட்டான்.

விருத்த என்றால் வயது முதிர்ந்த என்று பொருள்.வயதான டாக்டர் நிறைய நோயாளிகள் பார்த்துப் பழகியதால் அவருடைய 'டயக்னோசிஸ்' சரியாக இருக்கும்.

4.வைத்தியம், ஜோசியம், சங்கீதம் மந்திரம் தெரியாதவர்கள் இல்லை.

இந்த நான்கும் தெரிந்தவர்களை அறிஞர்களாகப் போற்றும் வழக்கம் இருந்துள்ளது. என‌வே தன்னை அறிவாளியாகக் காட்டிக் கொள்பவர்கள் அனைவரும் இந்த நான்கைப் பற்றி சிறிதாவது தெரிந்து கொண்டிருப்பார்கள்.
தெரியாது என்றால் முட்டாள் பட்டம் கிடைத்துவிடுமே.எனவே எல்லோரும் தனக்குத் தெரியும் என்பார்கள்.

5.பொங்கு சனி போய் மங்கு சனி வந்தது
    மங்கு சனி போய் குங்கு சனி வந்தது

சனி பகவான் மாறி மாறி வந்து கொடுக்கும் கஷ்டத்தைச் சொல்கிறது இது

இனி, அதிகமாக சொல்லடைவு பெற்றவர் சனிபகவானே! அந்தப் பட்டியலைத் தருகிறேன்:

 அஷ்ச்டமத்துச்சனியை வட்டிக்கு வாங்கியதுபோல‌

அஷ்டமத்துச்சனி பிடித்தது புட்டத்துத்துணியும் உரிந்து கொண்டது

அவன் எனக்கு அஷ்டமத்துச் சனி

போன சனியனை தாம்பூலம் வைத்து அழைத்ததுபோல‌

காலைப் பிடித்த சனியன் ஊரைச்சுற்றி அடிக்கும்

அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச்சனி;ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு

சளிபிடித்ததோ சனிபிடித்ததோ.

சூரியனை ராகு பிடித்தது போல என்னைச் சனி பிடித்தது

போன சனியன் போச்சுது என்று இருந்தேன், முடிக்குள் இருந்து கீச் கீச் என்கிறது

ஊரைப் பிடித்த சனி பிள்ளையாரையும் பிடித்தது.
பிள்ளையாரைப் பிடிதத சனி அரச மரத்தையும் பிடிததது

சந்திரனைப் பார்த்த கண்ணுக்கு சனியனைப் பார்த்தது போல.

வாழ்க வளமுடன்!
தொகுத்தோன்: கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4


கைமாறும் கம்பெனிகள்.
ஆக்கம்: மைனர், ஜப்பான்

இருமருங்கிலும் பசுமையான வயல்களினூடே அந்த வேன்  ஊரிலிருந்து கிளம்பி அரைமணிநேரம் கடந்திருந்தது.. திருவாரூர் கடந்து பேரளம்போய்ச் சேர்ந்து அங்கிருந்து திருநள்ளார் போவதுதான் மைலேஜ் கம்மி என்பதுதான்  டிரைவர் கணக்குப் பண்ணிய வழி இருந்தாலும் வண்டி புக் பண்ணிய சின்னவர் போட்ட  ஆர்டரின் படி திருவாரூர் தாண்டி நாகப்பட்டினம் வந்து அங்கிருந்து காரைக்கால் போவது கொஞ்சம் சுத்துதான் என்றாலுமே நேஷனல் ஹைவே ரோடு நல்லா இருக்கும் என்பதால்  இந்த வழியில் போய்க்கொண்டிருந்தார் டிரைவர்.

இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் போய்ச் சேர்ந்துவிடலாம் என்பதே அவர்களின் கணக்கு. பதினாலு பேர் அமரக்கூடிய ஃபோர்ட்டீன் சீட்டர் டொயோட்டா கோஸ்ட்டர் வேனில்  ரிக்ளைனிங் சீட்டிலே சாய்ந்தவாறு சுகமாகவே பயணித்த போதிலும் அவர்களுக்குள் மனச்சுமையின் அழுத்தத்தால் சூழல் மிகவும்  இறுக்கமாகவே இருந்தது..

கனவிலும் எதிர்பார்க்காத ஒரு பெரிய மாறுதலால் நிலைகுலைந்து போயிருந்த அந்தப் பதினாலு பேரும் குடும்பமாக திருநள்ளார் போக வேண்டிய சூழல்.

சின்னவர் தான் பேச்சை ஆரம்பித்தார்.

“என்னதான் இருந்தாலும் நீங்க இப்படிப் பண்ணியிருக்கக் கூடாது சித்தப்பா! எங்களை எல்லாம் இந்தக் கதிக்கு ஆளாக்கினது நீங்கதான்.நீங்க போட்ட
திட்டம்தான்.” என அடக்கமுடியாத ஆதங்கத்தை வெளிக் காட்டினார்.

வேகவேகமாய் வேனைக் கடந்து சென்ற தூரத்து வயல்களை வெறித்துப் பார்த்தபடியே சித்தப்பா ஆழ்ந்த மவுனத்தையே பதிலாகக் கொண்டிருந்தார்.

“அவரைக் குத்தம் சொல்றதை நிறுத்து முதல்லே....பேசி ஒண்ணும் ஆகப் போறதில்லே.....மேற்கொண்டு  எதுவும் பேசவேண்டாம்..எல்லாத்துலேயும்
எல்லோருக்குமே பங்கிருக்கு..நீயும் ஒண்ணும் செய்யாமலில்லே..ரீசண்ட்டா சைலன்ட்டா இருந்துட்டதாலே உன் மேல தப்பே இல்லேன்னு ஆகிடுமா?” என்று  அழுகையும் ஆத்திரமுமாய் வேகமாய் பொரிந்த சின்னம்மாவின் கண்களில் தெரிந்த கோபக்கனல் சுட்டெரிக்க, சின்னவர் அப்படியே அடங்கிப் போனார்..

பேச்சுதான் வேகமாக இருந்ததே தவிர அந்த அம்மாவால் பொத்துக் கொண்டு பீறிட்ட அழுகையை அடக்கமுடியாமல் கண்களில் இருந்து பொலபொலவென
கண்ணீர் தாரை தாரையாய்க் கொப்புளித்துக் கொட்டியது, ஆற்றாமையால். சேலைத் தலைப்பை எடுத்து கண்களைத் துடைத்தபடி வாயை அடைத்தபடி கேவிக் கேவி அழுத அவரை ஆறுதலாகத்  தாங்கிப் பிடித்துத் தேற்றும் எண்ணத்துடன் பக்கத்தில் இருந்த பெரியவர் கைகளை அந்த அம்மாவின் கரங்களை இறுகப் பற்றிய வண்ணம் விரல்களால் நீவி விட்டபடியே, “ஏய்..விடு..விடு..இன்னும் எத்தினி நாளைக்குத்தான் அதையே நினைச்சு அழுவே..என்னைத்தானே பேசினான்..

அவன்தான் ஏதோ கோவத்துலே பேசினான்னா நீயும் பதிலுக்குக் கோபப்பட்டுட்டு..” என்று ஆறுதலாக ஏதோ பேச வேண்டுமேயென்று பேசிக் கொண்டிருந்தார்.

திரும்பவும் சட்டென்று ஆழ்ந்த மவுனம் அங்கே புகுந்து தன் நங்கீரத்தை ஆழமாகப் பாய்ச்சிக்கொண்டது.உதட்டுக்கு பூட்டு போடும் அளவில்மட்டுமே இருந்தது

அந்த நங்கீரத்தின் பவரெல்லாம். மனத்தில் சுனாமியாய் எழுந்து ஆர்ப்பரித்த வேக அலைகளைத் தாங்கும் சக்தி கொஞ்சமும் அந்த நங்கூரத்துக்கு
இருக்கவில்லை. கோல்ட் பிரேம் போட்ட அந்தக் கண்ணாடியைக் கழட்டாமலே பெரியவர் தன் கனத்த இமைகளை மூடினார்.

அது ஒரு வசந்த காலம்.. நல்லதோர் மாலைப் பொழுதில் நண்பர்களுடன் கிளப்பில் ஜாலியாக அரட்டை அடித்து ரம்மி ஆடிக் கொண்டிருந்தபோதுதான்
ராஜராஜனுக்கு அவரைத் தன் நண்பர் விக்னேஷ் அறிமுகப்படுத்தினார்.

ஏதோ வழக்கமான சந்திப்பு என்று அலட்சியமாக பேசிக் கொண்டிருந்தவர் அந்த பிரமுகர் கிளப்பை விட்டு கிளம்பியதும் அந்த ஆளின் பின்புலத்தைப் பற்றி 
விக்னேஷ் சொல்லக்  கேட்டதும் சற்று அரண்டே போய்விட்டார். ஆமாம், இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நடந்த அந்த சந்திப்பு தன் வாழ்க்கையையே  புரட்டிப் போடும் என்று அவர் அன்று வரை கனவிலும் கூட நினைத்ததில்லை.

அந்தப் பிரமுகர் ஒரு மிகப் பெரிய ஃபார்ச்சூன் பைவ் ஹன்ட்ரட் கம்பெனியின் ஏகபோக உரிமையாளர் ஜெயசிம்மன்...பிக் ஷாட். நினைத்ததை முடிக்கும்
அதிசயப் பிறவி.. சராசரிகள் வாழ்க்கையில் கனவாக எண்ணி எண்ணி ஏங்கும் அனைத்தையுமே அனுபவித்து அனுபவித்துச் சிறுவயதிலேயே சலிப்புத்
தட்டிவிட்டது. மது ஒன்றைத் தவிர.

புதிதாய் முளைத்த குடும்பச் சிக்கல்கள்வேறு தலைதூக்க..தனிமரமாகிப் போனார். ஆமாம்..குடியைத் தவிர வேறெல்லாம் அவரைவிட்டுக் காணாமல் போகத் தொடங்கியிருந்தது. இந்தக் காரணங்களால் கம்பெனி நிர்வாகமும் இழுபறியில் இருக்க கொஞ்சம் கொஞ்சமாய் வாழ்க்கையில் பிடிப்பு விடுபட்டுப் போய்க் கொண்டிருந்த காலகட்டத்திலேதான் ராஜராஜனுக்கு இந்த அறிமுகம் கிடைத்தது.

பின்வந்த நாட்களில் கிளப்பிலே அடிக்கடி சந்திப்புகள் நிகழ ராஜராஜனின் கைகளில் இருந்த சீட்டைக் கட்டும் மாயமந்திர வித்தைக்கு அந்த கோமான்
ஜெயசிம்மன் கட்டுண்டு போனார். கோல்ஃப் க்ளப்..டென்னிஸ். சினிமாப் பட ஷூட்டிங் ஸ்பாட்டுகள். சில முன்னணி நடிகைகள் தொடர்பு என்று ராஜராஜன்
இறக்கிய ஒவ்வொரு கார்டுக்கும் ஜெயசிம்மன் கொஞ்சம்கொஞ்சமாகச் சரிய ஒரு கட்டத்தில் ஆட்டத்துக்கு ‘ஸ்கூட்’ விட்டுக் கவிழ்ந்தே போனார்.

நீங்களே தொடர்ந்து ஆடுங்கள் என்று ராஜராஜனையே ஆடச் சொல்லி வேடிக்கை பார்க்கும் அளவுக்கு வந்துவிட, ஒருகட்டத்தில் ராஜராஜன், ஆட்டத்தை  டிக்ளேர் செய்துவிட்டார்.

கம்பெனி நிர்வாகத்துக்கு ராஜராஜன் நுழைந்தபோது கொஞ்சம் மலைப்பாகத்தான் இருந்தது. ஆனாலும் ஜெயசிம்மனின் எழுதபடாத பவர் ஆஃப் அட்டர்னி  என்ற அந்தஸ்து ராஜராஜனுக்குப் புரியுமுன்பே ஜெயசிம்மனின் கம்பெனி போர்டு ஆஃப் டைரக்டர்களுக்கும் ஆடிட்டர்களுக்கும் தெளிவாகப் புரிந்திருக்க  ராஜராஜன் சீஃப் எக்ஸ்ஸிக்யுட்டிவ் ஆஃபிசராக ஆனதும் அதன்பின் மளமளவென அவனின் ஆதிக்க சாம்ராஜ்யம் கம்பெனியில் எல்லையில்லாது  விரிந்தததும்  ஒன்றும் பெரிய கடினமான சாதனையில்லை..

சரியான வாய்ப்புகள் கிடைக்கும் வரை இந்த மனிதன் இதுவரை எங்கிருந்தான் என்று யாருக்குமே தெரிவதில்லை..எல்லோருக்குமே வாழ்வில் அப்படி
வாய்ப்புகள் கிடைத்துவிடுவதுமில்லை. அப்படித்தான் இந்த அசுர வளர்ச்சியை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தது சுற்றுவட்டாரம்.

பெரிய இடத்துப் பிள்ளைகளுக்கே என்று எடுப்பார் கைப்பிள்ளையாக ஒரு தினுசான குணங்கள் இருக்கும். அது ஜெயசிம்மனுக்கும் இருந்தது. சுய உழைப்பு  இல்லாமல் வசதி வாய்ப்புகள் வந்துவிடுவதால் தன் உண்மையாக சுயபலம் என்ன என்பதெல்லாம் இவர்களுக்குத் தெரியாது. வெகு நைச்சியமாக முகஸ்துதி  மகுடி ஊதத் தெரிந்தவன் காட்டில் அடைமழைதான். அது ராஜராஜனுக்குக் கைவந்த கலை. திறமை பலவகை. அதில் இது ஒருவகை.

தலைநகருக்கு வந்து செட்டிலாகுமுன் சொந்த ஊரில் ஜோசியர் குமார்  'உங்க வீட்டுக்காரம்மா ஜாதகத்திலே செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை ஆகியிருக்கு. அது உங்களை எங்கேயோ உசரத்துக்குக் கொண்டு போகப் போகுது. ஆறாமாதிபதி செவ்வாய் பனிரெண்டாமிடத்தில் பரிவர்த்தனையில் உச்ச பலம் பெற்று  இருப்பதால் எதிரிகளை வென்று வாகை சூடி அடுத்தவனின் யோகத்தை  பறித்து உங்களை அனுபவிக்க வைக்கும் அமைப்பு இது' என்று சொன்னபோது ‘ஏதோ  புகழ்ந்து சொல்லி நம்மிடம் காசுபறிக்கப் ப்ளான் பண்றான், கதையைக் குடுக்குறான் இந்தாளு’ என்று நம்பாத ராஜராஜனுக்கு வாழ்விலே இப்படி எதிர்பாராமல்  வந்தமைந்துவிட்ட வசதி வாய்ப்புகளில் அந்த சோதிடத்தை மறந்து ஒதுக்கிவிடமுடியவில்லை. நம்பாமல் இருந்தும் விடமுடியவில்லை..

           ********************************************************************

அந்தக் கம்பெனி ஒரு வெளிமாநிலத்தவரின் கம்பெனி.

ஃபுட் ப்ராடக்ட் மனுபாக்ச்சரிங் கம்பெனி.. தரமான உணவைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தருவதாய் வாக்குறுதியை மனதில் பதியவைத்துக்
வெற்றிக்கொடிகட்டிக் கொண்டிருந்த கம்பெனி அது.. அதில் இந்தக் கம்பெனி 'அல்வா' ரொம்ப ரொம்பப் பிரசித்தம். நிறுவனர் கம்பெனியை நிறுவி 'ஓகோ' என்ற  நிலைக்குக் கொண்டு வந்துவிட்டு 'அம்போ' வென்று மேலே போய்விட்டார்..எடுத்து நடத்தச் சரியான ஆளில்லாது இருந்தபோதுதான்  ஜெயசிம்மனின் பிரசன்னம்.. ஜெயசிம்மனின் கைக்குக் கம்பெனி வந்ததே வேறு தனிக் கதை..

தலைமையிலிருப்போருக்கு யாரோ ஒருவரிடம் திடீரெனத் தோன்றும் அளவுகடந்த அபிமானமும் இனம்புரியாத கவர்ச்சியும் காரணமாய் இந்தக் கம்பெனித் தலைமை ஒருத்தரிடமிருந்து வேறொருத்தருக்கு கைமாறிப் போய்க் கொண்டிருக்கும் வரலாறு தொடர்வது கண்டு உண்மையில் விசுவாசியாய்க் பதினெட்டு  வயதில் கம்பெனிக்குள் நுழைந்து காலங்காலமாய் உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து கொண்டிருக்கும் கம்பெனியின் கடைக் கோடி ஊழியன் ஒவ்வொருவனும் தினமும் கம்பெனி இடைவேளை நேரங்களில் சக ஊழியர்களுடன்  பெரும்பாலும் ஆறாமல் புலம்பிக் கொண்டிருக்கும் விஷயமே இதுதான். FMCG கம்பெனி என்பதால் பலத்த டீலர் நெட்வொர்க் தேவையாக இருந்தது.. கம்பெனி மேலிடத்து ஆட்கள் வெளிமாநிலத்துக்காரர்கள் என்பதால் இந்த  அடிமட்டத்துக் கட்டமைப்பை அமைப்பதில் அதிகமான சிரமங்கள் இருந்ததன..இந்தக் சிரமத்தை அடையாளம் கண்டுகொண்ட ராஜராஜன் சொந்த ஊரில்  படித்துவிட்டு வேலை வெட்டி அமையாமல் சுற்றித் திரிந்த உறவினர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாய் கம்பெனி நிர்வாகத்துக்குள் இழுத்தான்..சிறிய  கூட்டமல்ல அது.. வெகுநாட் களாய் வெறியுடன் வேலையில்லாமல் காசுக்கும் வழியில்லாமல் ஏங்கித் தவித்திருந்த கூட்டம்..அந்த வெறி தீப்பொறியாய்ப் பற்றி ஜ்வாலையாய்க் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது..கம்பெனி நிர்வாகம் இப்படியாய்ச் சூடுபிடிக்க நாடெங்கிலும் நாளெங்கிலும் வர்த்தகம் மேம்பாடு அடைந்து
படுத்த படுக்கையாய்க் கிடந்த கம்பெனி  ப்ராஃபிட் கர்வேச்சர்  கிராஃப் அப்வார்ட் ட்ரென்ட்டிலே கொஞ்சம்கொஞ்சமாய் எழும்பஆரம்பித்தது..

கொஞ்சம் கொஞ்சமாய் டீலர்ஷிப்புகளை அதிகரித்து வலுவான தமது உறவினர்களுக்கே என்று கவர்ச்சிநிறைந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி டிவி,லோக்கல்  சான்னல்கள் மூலமும் விளம்பரங்கள் செய்து  மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாய் ஒவ்வொரு பெரு ,சிறு , குறு நகரங்கள், வீதிகள், சந்து பொந்துகள்,  இண்டு இடுக்குகள் என்று பெரிய பெரிய விளம்பரங்கள் செய்து  ஏற்கனவே நன்கு பிரபலமாகியிருந்தும் நடுவிலே ஜெயசிம்மனின் போக்கால் சரிவைக் கண்டிருந்த கம்பெனியின் பசுமையான சின்னத்தை மக்களின் மனத்திலே பதியவைப்பதிலே நவநாகரீக யுத்திகள் அனைத்தையும் கையாண்டு வெற்றியும்  பெற்றுவிட்டான்..போட்டி நிறைந்த வியாபாரக் களத்திலே எதிராளிகளை நாடி பிடித்து சாம, பேத, தான தண்ட வகைகளில் எல்லா வகையையும்  சாமர்த்தியமாகக் கையாண்டு எதிரிகளை வீழ்த்தி பல கில்லாடி உள்ளடிவேலைகள் செய்து யாரையும் குறுக்கே வராமல் சுக்கு நூறாய் உடைத்துத் துவம்சம்  செய்து சாதித்துக் காட்டிவிட்டான்.. எங்கிருந் தாவது யாராவது இவனின் ராஜ்ஜியத்துக்கெதிராக புலம்புவதாக செய்தி உளவாளிகள் மூலம் கிடைத்தாலுமே இப்படி  புலம்பும் ஆட்களைக் கூடத் தூக்கிக் கடாசிவிடுவான் ராஜராஜன்.. யாராவது  எதிராக பேச மனதிலே நினைத்தால் கூட அவர்கள் இருக்குமிடம் தெரியாமல் போகப் பண்ணிவிடுவது அவனுக்குப் பொழுதுபோக்காக ஆகியிருந்தது..

நல்ல யோகமான காலகட்டத்தில் கண்மண் தெரிவதில்லை..நெருங்கியவர் சொல்லும் அறிவுரைகள் காதில் ஏறுவதில்லை..'நான் வைத்ததுதான் சட்டம்..நீ
அடிபணிந்து கிட'என்று ஆணவம் போதையாகத் தலைக்கேறி உடலை முறுக்கேற்றி விடுகிறது..துரதிர்ஷ்டவசமாக வெற்றியுடன் கூட்டணி சேர்ந்து இந்த மமதையும் வந்துவிடுவதுதான் வேதனை..இதனை பில்ட்டர் பண்ணி வெற்றிபோதையை மட்டுமே சுவைப்பது பொதுவாக எல்லோருக்கும் கடினம்..இதே  நிலையில்தான் ராஜராஜனும் இருந்தான்.

கம்பெனிக்கு ரா மெட்டேரியல் சப்ளையாரில் இருந்து ஸ்டாஃப் டிஸ்பேட்ச் கம்பெனி, சிஸ்டம் மெயின்டேனன்ஸ் கம்பெனி, லாஜிஸ்டிக்ஸ் ஆபெரேடர்   லொட்டு  லொசுக்கு என்று அத்தினி கஸ்டமர் வகையறாக்களும் இவர் வைத்த ஆட்கள்தான்.

பிசினஸ்டெவெலோப்மென்ட் மானேஜர்ஸ், நெட்வொர்க்கிங் அஸ்ஸோ சியேட்ஸ் என்று ஏரியா வாரியாக இன்சென்டிவ்ஸ்கீம்களை அறிவித்து எதிர் கம்பெனிக் கார ஆட்களையும் தனதாக்கி கமிஷன் அடித்து ரீடைலிங் கடைகளில் தன் சரக்கு மட்டுமே சந்தையில் நிற்கும்படிப் பார்த்து உள்ளடி வேலைகளைச் செய்துவிட்டான்.. ஆங்காங்கே கிரெடிட்டில் சரக்கை இறக்கிவிட்டு மெதுவாக வசூல் என்று ஆரம்பித்து காலகட்டத்துக்குள் கடனைத் திருப்பிக் கட்டாதவர்களின் வட்டியை உயர்த்தி கந்துவட்டியாக்கி ஒரு கட்டத்தில் அவர்களை ஆட்டத்தைவிட்டே கவிழ்த்தி தன் சொந்தங் களையே ஆங்காங்கே கோலோச்ச வைத்தான்.. இந்த இருபத்து ஐந்து வருஷங்களில்  இத்தனையயும் செயல்படுத்த மூளையாய் இருந்து ரகசியக் கூட்டங்கள் நடத்திய தூங்காத இரவுகளின் எண்ணிக்கையே ஒருசில வருஷங்களைத் தாண்டும்.
 
இப்படியான அதிரடி வேலைகளால் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் நடக்கும் நேஷனல் லெவல் காம்பெடிஷன்னிலே கம்பெனியை முதலிடத்துக்கு கொண்டு  வந்துவிட்டிருந்தான்.

இப்படியாக பாதிக்கப்பட்ட மறைமுக எதிராளிகளும் அதிகரிக்க ஒரு கட்டத்தில் ராஜராஜனின் கடைக்கண் பார்வை பட்டுவிட்டாலே கோடீஸ்வரன்தான் என்கிற  அளவிற்கு  இன்ஃப்ளுயென்ஷியலான ஆளாக மிரட்டலுடன் கூடிய அடியாட்கள் சகிதம் வலம் வர ஏக தடபுடலான சாம்ராஜ்யம்தான்..
எதிராளிகள் பயம் வரவர வெகுஜனங்களை நேரிடையாய்ச் சந்திக்கும் பழக்கமும் குறைந்து போக கூண்டுக் கிளியாய் அடைந்து மிருத்யங்க யாகம் நடத்தும்  அளவிற்கு எந்த நேரத்தில் எது வருமோ என்ற பயத்தில் இருந்தாலும் பணபலமும் படைபலமும் கொடுத்த தைரியத்தில் காலத்தை ஓட்ட வேண்டியதாய்ப்  போயிற்று.. இதை காரணமாக்கி  இவன் வளர்த்துவிட்ட  உறவினர் கூட்டம் ஆங்காங்கே குறுநில மன்னர்களாய் வசூல்வேட்டையிலும் பஞ்சாயத்துக்களிலும்  இறங்கி ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்தது..டீ சென்ட்ரலைசேஷன் ஓஃப் பவர்ஸ் என்ற தத்துவ ரீதியிலே கண்டும் காணாததுமாகவே இருந்து வைப்பது  ராஜராஜனுக்கு வழக்கமாகியிருந்தது.. மொத்தத்தில் இப்படிப் பெரியமனுஷத்தனத்தின் வீச்சு ராஜராஜனின் வாழ்க்கையில் அதிகமாகவே இருந்தது..

இடையிடையே ஆஸ்தான ஜோசியரின் வழிகாட்டலுக்கேற்ப ஆங்காங்கே கோவில்களுக்குப் போக ஆரம்பிக்க அவ்வப்போது நன்கொடை, ஆலயத் திருப்பணி,  யாகங்கள்,திருவிழாக்கள் என்று ஆன்மீக கலாட்டாக்களையும் செய்துவைக்க எங்கு சென்றாலும் பூரண கும்பம் முதல் மரியாதை என்று ஒரே ஏகபோகம்தான்..

சராசரி மக்களை மலைக்கவைத்தே பழகிவிட்ட பணக்காரவர்க்கத்தின் இந்த வகை அணுகுமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாக ராஜராஜனுக்கும் பழகிப்
போய்விட்டது.. யாருக்கும் எளிதில் கிடைக்காத இந்த சுகபோக ராஜவாழ்க்கை இயல்பிலே வந்தமைந்ததாகவே எண்ணிஅசந்து நிம்மதியாய் சுகபோதையில்
திளைத்துக் கண்ணயர்ந்திருந்தான் ராஜராஜன்.
 
'க்ரீச்'என்று பெரும் சத்தத்துடன் வேன் குலுங்கி நிற்க டிரைவர் போட்ட சடன் ப்ரேக்கில் ஆடிப்போய்க் கண் விழித்தார் பெரியவர் இராசராசன்..வேன் மேலும்
சிலகணங்கள் முன்புறமாய் குலுங்கலைத்  தொடர்ந்தது.

வேனின் குலுக்கலில் அவரது கோல்ட் பிரேம் கண்ணாடி விசிறி எறியப்பட்டு இரண்டு சீட்டுகள் முன்னால் போய் விழுந்திருந்தது..சமாளித்து கையை உயர்த்தி  முன்சீட்டின் மேல் புறத்தைத் தாங்கிப் பிடித்து எழுந்தவர் வேஷ்டி கொஞ்சம் நழுவியிருக்க ஒருமுறை கொஞ்சம் இடுப்பு முடிச்சைத் தளர்த்தி இறுகக் கட்டிக் கொண்டார்..இதே குலுக்கலில் சின்ன மைத்துனரும் தான் கண்டுகொண்டிருந்த கனவு கலைந்திருக்க கண்ணைக் கசக்கியவண்ணம் தன் மீது வந்து விழுந்துகிடந்த  மாமாவின் கண்ணாடியை எடுத்து பவ்வியமாக நீட்ட வாங்கி அணிந்துகொண்டவர் மீண்டும் இருக்கையில் அமர்ந்தார்..பெண்கள் அயர்ந்து தூங்கி  விட்டிருந்தார்கள்.

'டிரைவர்..என்னாச்சுப்பா?'

'ஒண்ணும் இல்லீங்கையா..ஒரு நாய் திடீர்ன்னு குறுக்கே பூந்துடுச்சி..அதான்..'

'சரி..சரி..பார்த்துப் போப்பா'

'சரீங்கையா'

'இன்னும் எவ்வளோ நேரம் ஆகும்?'

'ட்ராபிக்கா இருக்குறதாலே ஒரு இருபது நிமிஷம்..'

'சரி.. பார்த்து மெதுவா ஒட்டு..'

இந்த நாய் மட்டும் குறுக்கே புகாமல் இருந்திருந்தால் இனிமையான நினைவுகளில் மூழ்கிக் கிடந்திருப்பார் இராசராசனார்.(ஆமாம் இப்போதெல்லாம்  எல்லோருமே இராசராசனார் என்றுதான் அழைக்கிறார்கள்.)

இராசராசனாரின் வாழ்க்கையிலும் அதே போல சில ஆட்கள் சமீபத்தில் குறுக்கே புகுந்திருந்தார்கள்.யாரோ ஜெயசிம்மனின் தூரத்து சொந்தமாம்.. இருபத்துஐந்து வருடமாக இல்லாமல் இப்போது என்ன சொந்தம் கொண்டாடப் புதிதாகக் கிளம்பி வந்திருக்கிறார்கள் இவர்கள்.?.ஜெயசிம்மன் ஒண்டிக்கட்டை யாய் கிடந்து அவஸ்தைப் பட்டபோது இவர்களெல்லாம் எங்கே ஓடினார்கள் என்று  தெரியவில்லை..கம்பெனி நல்ல நிலையில் ஓடிக்கொண்டிருக்கிறது.. கொள்ளை லாபம் பார்க்கலாம் என்றதும் வந்து சேர்ந்துவிடுகிறார்கள்..இந்த ஜெயசிம்மனுக்கும்  புத்தி எங்கே போச்சு என்று தெரியவில்லை..அவர்கள் சொல்படிக் கேட்டு ஆடிக் கொண்டிருக்கிறார்..கொஞ்சம் கூடப் பழசை யெல்லாம்  நினைச்சுப் பார்க்கவே

இல்லை..என்ன மாயமந்திரம் ஓதினார்களோ என்னவோ கம்பெனிப் பொறுப்பில் இராசராசனாரின்  விசுவாசிகளாய்ப் பார்த்துக் கழட்டித் தூக்கி வெளியில்  எறிந்திருக்கிறார்கள்..கொஞ்சம் கொஞ்சமாய் நாலாவட்டங்களில் இருந்தும் இதே செய்தியைக்  கேட்டுக் கேட்டு வெறுப்பே தட்டிவிட்டது இராசராசனாருக்கு..ஒரு  கட்டத்தில் குடும்பத்தார் அனைவரையுமே கம்பனியிலிருந்து விலக்கிவிட்டதாகச் சொல்லி சுற்றறிக்கையும் ஆர்டரும் வந்துவிட்டது.

இந்த இருபத்து ஐந்து வருட உழைப்பை இந்தக் குடும்பம் வேறெந்தக் கம்பெனியிலாவது செலவிட்டிருந்தால் இந்நேரம் கம்பெனியே அல்லவா சொந்தமாகி இருந்திருக்கும்..வெறும் அதிகாரப் பதவிகளில் மட்டுமே இருந்துவிட்டு செயல்பட வைத்து உழைப்பைச் சுரண்டி லாபம் பார்த்துவிட்டு இப்போது  கறிவேப்பிலையாக வெளியில் எறிந்திருக்கிறார்கள்..பத்து வருடம் குடியிருந்துவிட்டாலே வாழும் வீட்டிலே உரிமை கோரலாம் என்றெல்லாம் சட்டங்கள்  இருந்தும் இப்படி ப்ரைவேட் கம்பெனியின் குட்வில் மற்றும் நீண்டகால லாபத்திலே பங்குகள் எதுவும் கிடைக்காது என்பது எந்தநிலை

மேல்மட்டமானேஜ்மென்ட் ஆட்களுக்கும் எப்படிப் பொதுவானதோ அதேபோல ஒரு நிலையிலேயே தொடர்ந்து இருந்துவிட்டு இன்று அதுவும் இல்லை ஒரு
ஒரு மண்ணும் இல்லை.. என்று விரட்டப்பட்டுவிட்டதால் சுற்றத்தார் எல்லோரயுமே அவலநிலையில் இழுத்து விட்டுவிட்டார் என்று சின்னவன் கோபப்படுவதில் உள்ள தார்மீக அர்த்தம் புரிந்ததுதான் என்றாலும் ஒன்றுமே செய்யமுடியாமல் இயற்கையின் விளையாட்டு என்று எடுத்துக் கொள்ளவும் முடியாமல் குழம்பிக்  கிடக்கிறார்.. இராசராசன்.

“எது சரி?..எது தவறு?..அவரவருக்கு அவரவர் செய்வது சரி..நான் நல்லவனா?கெட்டவனா?எது நல்லது?எது கெட்டது?இதுநாள் வரை கால் செஞ்சுரி  காலகட்டமாய் இந்த நிலையை ஆதரித்து தொடர் வெற்றியை வழங்கிய மக்கள் சார்ந்த இந்த இயற்கை இன்று திடீரென்று மாறிப் போன மர்மம் என்ன? வெற்றி  தோல்வியின் பக்கம்  நிர்ணயிக்கப் படுவது எந்த அடிப்படையில்?”

என்று எல்லோருக்கும் வரும் வழக்கமான கேள்விகள் இராசராசனார் மனதிலும்..எல்லாம் சனிப் பெயர்ச்சியால் வந்த வினையாம்..குடும்பத்தாரின் சொல்படி  திருநள்ளார் சென்று பிரார்த்தனை செய்துவந்தால் ஏதும் மாற்றம் வருமாம்..வருமா?
ஆக்கம்: மைனர், ஜப்பான்
++++++++++++++++++++++++++++++++++++++
 5



"சற்றே இளைப்பாற"
ஆக்கம்: தேமொழி

பந்தலடியில் இருந்து காந்தி ரோடில் வடக்கு நோக்கித் திரும்பி கொஞ்சதூரம்தான் நடந்திருப்பேன்.  சட்டென்று மின்விளக்குகள் அணைந்து தெருவே இருளில் மூழ்கியது.  யாரோ ஒரு அம்மா "நாசமாப் போக, இப்படி சொல்லாம கொள்ளாம கரண்ட்ட எடுத்து உயிர வாங்குரானுவோ, புள்ளைங்க பரிட்சைக்கு படிக்கிறதா வேணாமா?" என்று தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு விட்ட சாபம் அசரீரியாகக் கேட்டது.

இரண்டு நாளில் வரும் தோழி வீட்டு திருமணத்தைப் பற்றி எண்ணிக்கொண்டே வந்ததால் சரியாக எங்கிருக்கிறோம் என்று கவனிக்கவில்லை.  வாணக்கார வீதி பக்கத்தில் வந்திருக்கலாம் எனத் தோன்றியது.  எதிர்பாராமல் இருட்டைப் பார்த்ததும் ஆபத்து என்றால் உதவிக்கு கூப்பிட வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் எச்சரிக்கையாக கையில் கைபேசியை எடுத்துக் கொண்டேன்.   கைபேசி மணி மாலை 7:33 எனக் காட்டியது.  தெரு முழுவதும் மங்கலாகத் தெரிந்தது.  யாரோ இரண்டு இளவட்டங்கள் நாளைக்கு வெளியாகப் போகும் படம் ஒன்றைப் பற்றிய தீவிர விவாதத்தில் இருந்தவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைப் பார்த்ததும் சிறிது நிதானித்து திரும்பி திரும்பிப் பார்த்துவிட்டு, குரலைத் தாழ்த்தி பேசிவிட்டு, மீண்டும் திரும்பிப் பார்த்தார்கள்.  கொஞ்ச தூரம் போனவுடன் நின்றுவிட்டார்கள்.

தனியாக வரும் ஆள் கொள்ளை அடிக்கலாம் எனத் திட்டம் போடுகிறார்களோ? எதிர்பாராமல் இருளை சந்திக்க நேர்ந்ததால் நானும் அச்சத்தில் என் பங்குக்கு மின்சார வாரியத்தை மனதில் திட்டினேன்.  என்னையறியாமல் என் கை தோள்பையின் கைப்பிடியை இறுகப் பற்றியது.  மேற்கொண்டு நடந்தால் அவர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  அவர்கள் நல்லவர்களா? அல்லது இருளைப் பார்த்ததும் அவர்களுக்கு மனதில் கெட்ட எண்ணம் எதுவும் துவங்கி விட்டிருக்குமோ? என எண்ணி என் நடையில் தயக்கம் ஏற்பட்டது.

அப்பொழுது "எங்கம்மா போறீங்க?" என்ற ஆண் குரல் பின்னாலிருந்து கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது.  அதிர்ச்சியுடன் திரும்பியபொழுது பின்னால் ஒருவர்  லைட்டரை க்ளிக் செய்து சிகரட்டைப்  பற்ற வைத்தபடி இருப்பது தெரிந்தது. லைட்டர் வெளிச்சத்தில் அவர் மிக வயதானவர் என்று தெரிந்தது.  வெள்ளெழுத்து கண்ணாடியும், முற்றிலும் நரைத்த முடியுமாக, வெட வெட என்று ஒடிசலாக, உயரமாக இருந்தார். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை,  கையில் ஒரு கைத்தடி, தோளிலும் ஒரு துண்டு.  வயது அறுபத்தி ஐந்து அல்லது அதற்கு மேலும் இருக்கலாம், புகையை மெதுவாக உள்ளிழுத்தார்.

மற்ற நேரத்தில் நான் எங்கே போகிறேன் என்பது உங்களுக்கு அநாவசியம் என்றோ, இல்லை முறைத்துப் பார்த்து விட்டோ போகும் எனக்கு அவர் துணையாக  வருவாரா என்ற ஆசையில் "இங்கே உள்ளூர் காலேஜ்ல லெக்ச்சரரா இருக்காங்க சித்ரான்னு ஒருத்தங்க அவங்க வீட்டுக்குப் போறேன், திருப்பாற்கடல் தெருவில், லக்ஷ்மி நாராயணா கோயில்தாண்டி கொஞ்ச தூரம் தள்ளி வீடு" என்றேன்.

"அட நம்ம வீட்டு பக்கந்தானா? அப்போ, வாங்க நாம பேசிக்கிட்டே போகலாம்"  என்றார்.  இருவரும் சேர்ந்து அந்த இளவட்டங்களைத் தாண்டி நடந்தோம்.  இருளில் இளவட்டங்களின் முகபாவம் சரியாகத் தெரியவில்லை.  என்னைத் தாக்கலாம் என்று எண்ணியிருந்திருந்தால் அவர்கள் எண்ணத்தில் மண் விழுந்து ஏமாந்து போயிருப்பார்களோ?

தாத்தா மீண்டும் புகையை உள்ளிழுத்தார்.  "யார் வீடும்மா நீங்க? நான் உங்கள இந்தப்  பக்கம் பார்த்ததே இல்லியே" என்றார்.

"நான் சென்னையிலிருந்து வரேன் சார்.  நீடாமங்கலத்தில என் ஃப்ரெண்ட் வீட்டு கல்யாணம், அவ எனக்கு ஒருவகையில தூரத்து சொந்தம்.  அவளும், நானும், இங்க திருப்பாற்கடல் தெருவில இருக்கிற சித்ராவும் ஒண்ணாவே காலேஜ் வரை படிச்சோம்.  அதான் இவளும் நானும் சேர்ந்து அவ வீட்டுக் கல்யாணத்திற்கு போலாம்னு ஒரு பிளான்."

"என்னம்மா வெளியூர்க்காரங்க நீங்க, இப்படி புது ஊருக்கு இருட்டுல தனியா வரலாமா? வண்டி ஏதாச்சும் புடிச்சாவது வரலாமில்ல, வீட்டு அட்ரெஸ்வாது சரியாத் தெரியுமா?"

"இல்லேங்க, வண்டி ஏதும் கிடைக்கல, காத்திருக்கிறதுக்குப் பதில் இருபது நிமிஷம்தானே நடந்திடலாம்னு  நினைச்சேன். அத்தோட பஸ்ல வந்தப்ப கால ஒரே இடத்தில வச்சி நோவு, நடந்தா கொஞ்சம் நல்லா இருக்குமேன்னு தோணிச்சு.  எனக்கு ஊரு புதுசில்லீங்க,  நான் இந்த ஊர்ல கொஞ்ச வருஷம் இருந்திருக்கேன், கான்வெண்ட் ஸ்கூல்லதான் படிச்சேன்.  அப்பதான் சித்ரா ஃப்ரெண்ட்டானா. அப்பாவுக்கு கான்பூர்ல மாற்றலாகிப் போனதும் நானும் அண்ணனும் இங்கே பெரியப்பா வீட்ல தங்கி கொஞ்சநாள் படிச்சோம்."

"அண்ணனா? அவர் எந்த ஸ்கூல்மா? ஃபின்லே ஸ்கூல்லா?"

"இல்ல சார், நேஷனல் ஸ்கூல்,  பங்குனி தேர்த் திருவிழால ஸ்கூல் பிள்ளைங்களோட தேரெல்லாம் இழுத்திருக்கான்"

"ஆமாம் அந்த ஸ்கூல் பிள்ளைங்க தேர் இழுக்கிறது வழக்கம்தான், ஏம்மா நீங்க உங்க பெரியப்பா வீட்ல போய்  தங்கலியா? அவங்க வீடு எங்கிருக்கு?"

"பெரியப்பா போனதற்கு அப்புறம் பெரியம்மா குடும்பத்தோட அவங்க சொந்த ஊர் திருத்துறைப்பூண்டிக்குப் போய்ட்டாங்க,  இப்போ இங்கே யாருமில்ல. காசுக்கார செட்டித் தெருல ஒரு பெரிய வீட்ல இருந்தோம்.  வீட்டு வாசல் இருக்கிறது ஒரு தெருன்னா, கொல்லைபக்கம் இருக்கிறது பின்புறத் தெரு. பின்னாடி கதவ  திறந்தா அப்படியே கல்கி தியேட்டருக்கு  படம் பார்க்கப் போய்டலாம்"

"இப்ப கல்கி தியேட்டருக்குப் பதில் அங்க பெட்ரோல் பங்க்தான்  இருக்கு.  உங்க கான்வெண்ட் ஸ்கூல் ஒரு காலத்தில அங்க பின்புறத் தெருவில் இருக்கிற பழனி ஆண்டவர் தீர்த்த குளம் பக்கம்தான் ஒரு சின்னக் கட்டடித்தில இருந்திச்சு, அது ஐம்பதுகளில். அப்புறம்தான் பஸ் ஸ்டாண்ட் பக்கம் போய்ட்டாங்க."

"ஆமாம் சார் கேள்விப் பட்டிருக்கிறேன்"

பேசிக்கொண்டே யானை வாகன மண்டபம்  தாண்டி, கோவிலையும் தாண்டி வந்து விட்டோம்.  தாத்தா மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்து, லைட்டரை கிளுக்கினார்.  சங்கிலித் தொடராக தொடர்ந்து புகைக்கும் பழக்கம் போலிருக்கிறது.  மீண்டும் லைட்டர் வெளிச்சத்தில் அவர் முகம் தெரிந்தது.  அவர் மூக்கு கருடாழ்வார் மூக்கு போலிருந்தது.  எங்கேயோ பார்த்த சாயலும் இருந்தது. அவர் லைட்டர் புராதனக்  கலைப் பொருள் போல அலங்காரத்துடன் இருந்தது.  வெள்ளியில் செய்ததாக இருக்கலாம்.  நான் பார்ப்பதை அவரும் கவனித்தார்.

"என்னம்மா பாக்கறீங்க, சற்றே இளைப்பாற" என்று அந்தக்கால 'சார்மினார் சிகரெட்' விளம்பரம் போல் தன்  கையை ஸ்டைலாக ஆட்டி சொன்னார்.

இப்பொழுது என் கண்கள் கோவில் வரிசையில் இருந்த இருளில் மூழ்கியிருந்த  வீடுகளைப் பார்க்க ஆரம்பித்தது.

"என்ன பாக்கறீங்க? உங்க சித்ரா வீடு இங்க  இல்லை"

"ஆமாம் சார், இன்னம் கொஞ்சம் தூரம் போகணும்"  மீண்டும் என் கண்கள் அந்த பக்கமே போனது.

"என்ன? அப்புறம் என்னம்மா பாக்கறீங்க அங்கே?"

"வந்து ...இந்த வீடுங்களுக்குப் பின்னாடிதான பாமினி ஆறு ஓடுது?"

"ஆமாம்"

"சின்ன வயசில ஸ்கூல்ல பேசிப்பாங்க, இங்க ராத்திரில பேய் துணி தோய்க்கிற சத்தம் கேக்கும்னு," மெதுவாகத் திக்கி திக்கி சொன்னேன்.

தாத்தா சத்தமாகச் சிரித்தார்.  "என்னம்மா பேய்க்கு வேற வேலையில்லையா?  துணி தோய்க்கிறதுதான் வேலையா? படிச்சவங்க நீங்க இப்படி பேய்க்கு பயப்படலாமா?  இப்ப என்னோட வர்றீங்கல்ல, அப்புறம் பாருங்க பேய் பிசாசுக்கெல்லாம் பயப்படலாமா? கூடாதான்னு? உங்களுக்கே நல்லாப் புரியும்", என்று சொன்னவர் அவர் கைத்தடியை உயர்த்தி ஒரு வீட்டை சுட்டிக்  காட்டி இதுதான் நீங்க சொன்ன வீடு இல்லையா?" என்றார்.

அவர் கைத்தடியை உயர்த்தவும் மந்திரம் போட்டது போல் மின்சாரம் வந்து, எங்கும் விளக்குகள் எரிந்து ஒளி வரவும் சரியாக இருந்தது.  அவர் கைத்தடியும் மயில்தலை போன்ற முகப்பு வைத்து அழகாக இருந்தது.  அவருக்கு நன்றியும்,  குட் நைட்டும் சொல்லிவிட்டு கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்து அழைப்பு மனியணியை அழுத்தினேன்.

"வா, உமா, வா, வா, நீதான் கரெண்ட் கொண்டு வந்த மகராசியா? ஏன் இவ்வளவு லேட்டு? எதுக்கு நடந்து வர்ற?" என்று மூச்சு விடாமல் கேள்வி கேட்டாள் சித்ரா.  அவள் பெண் செல்வியும், கணவரும் கரெண்ட் வந்ததும் டி. வி. பார்க்க ஓடிவிட்டார்கள்.  கேம் என்ன ஆயிற்றோ என்ற கவலை அவர்களுக்கு.  சித்ராவின் கணவர் சின்னத் திரையில் இருந்து பார்வையைத் திருப்பாமலே "வாங்க" என்றார்.  அவர் வரவேற்றது என்னையா? அல்லது டி. வியில் தோன்றிய கிரிக்கெட் வீரர்களையா என்று குழப்பமாக இருந்தது.

அந்த வீடு மிகப் பழைய வீடு.  சித்ராவிற்கு அவள் பாட்டியிடம் இருந்து பூர்வீக சொத்தாகக் கிடைத்தது.  எப்பொழுதோ பள்ளி நாட்களில் அவள் வீட்டிற்கு வந்த பொழுது பார்த்தது போலவே இப்பொழுதும் இருந்தது.  நான் பெரியப்பா வீட்டில் தங்கி படித்து போல், அவள் தன்  பாட்டியின்  வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்தாள்.  அவள் பெற்றோர்கள் துபாய்க்குப் போய்விட்டிருந்தார்கள்.  எங்கள் இருவருக்கும் இருந்த  வளர்ப்பு சூழலின்  ஒற்றுமை எங்கள் நட்பை வளர்த்து, கல்லூரி வரை தொடர்ந்து பலப் படுத்தியிருந்தது.  சித்ராவின் தங்கையையும், பாட்டியையையும் தவிர இதுவரை யாரும் அவள் குடும்பத்தில் எனக்குப் பரிச்சயமில்லை.  தாத்தா, பாட்டி மறைவுக்குப் பிறகு, இதே ஊர்க்காரருடன் திருமணமானதால் பாட்டியின் அதே பழங்காலத்து வீட்டினில் நவீன வசதிகள்  செய்து குடியிருக்கிறாள்.

சமையலறையில் அவள் சுட்டுக் கொடுத்த தோசையை சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது, என்னுடன் அரட்டை அடித்தவண்ணம் நான் வழியில் வாங்கி வந்த இனிப்புகளை சித்ரா சுவைத்துக் கொண்டிருந்தாள்.

அரட்டை போதும் தூங்கலாம் என முடிவெடுத்தவுடன், பாத்ரூம் எங்கிருக்கிறது எனக் காட்டிவிட்டு, கூடத்திற்கு பக்கத்திலிருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றாள்.  அங்கு ஒற்றைப் படுக்கையுடன், அது ஒரு அலுவலக அறை போலவோ,  படிக்கும் அறை போலவோ அல்லது நூலகம் போலவோ இருந்தது.

"செல்வி இன்னைக்கு எங்களோட படுத்துப்பா, இது அவளோட ரூம், நீ இங்கேயே படுத்துக்கோ, நைட்டி ஏதும் வேணுமா?"

"நானே கொண்டு வந்திருக்கிறேன்".
என் தோள் பையை மேஜை மேல் வைத்து நைட்டி ஒன்றை உருவி நாற்காலியில் போட்ட பொழுது மேஜை மேல் பேழை போன்றிருந்த ஒரு மரப் பெட்டியில் அந்த வெள்ளி லைட்டரை மீண்டும் பார்த்தேன். உடனே கையில் எடுத்தேன்.

துணைக்கு வந்த தாத்தா வைத்திருந்தது போலவே இருந்தது.  "சித்ரா இந்த லைட்டர்  ...."  என்று ஆரம்பிக்குமுன், சித்ரா அதை வாங்கி "இது வேலை செய்யாது, பழசு, தாத்தாவோடது, அவருக்கு யாரோ பரிசா கொடுத்தது, அவரோட ஃப்பேவரிட் லைட்டர்"  என்று சொல்லியதுடன் நிற்காமல் அதை கிளிக் செய்து சிகரட் பற்ற வைப்பதுபோல் பாவனை செய்து "சற்றே இளைப்பாற" என்று ஸ்டைலாக சொன்னாள்.  உடனே மகள் ஏதும் தன் செய்கையை  பார்த்து விட்டிருப்பாளோ என்று அவசரமாக கூடத்தையும் திரும்பிப் பார்த்துக் கொண்டாள்.  அவள் பார்வையைத் தொடர்ந்து சென்ற என் பார்வை கூடத்திற்கு போகும் வாசல் கதவின்  மேல் மாட்டியிருந்த அந்த படத்தைப் பார்த்ததும் நிலை குத்தி நின்றது.

அங்கே அந்த துணைக்கு வந்த தாத்தாவின் படம் நெட்டி மாலை போட்டு, குங்குமப் பொட்டு வைத்து மாட்டப் பட்டிருந்தது.  பக்கத்தில் அந்த மயில்தலை முகப்பு வைத்த கைத்தடியும் அலங்காரமாக வைக்கப் பட்டிருந்தது.

"சித்ரா இது...இது..யார் படம்?" என்றேன் உதறும் கைகளை கட்டுப் படுத்த முடியாமல்.  "செத்துப்போன என் தாத்தா படம், அவர் இருந்த பொழுது இது அவர் ரூம்தான்" என்றாள், அதே கருடாழ்வார் மூக்கு சாயலை உடைய சித்ரா.

"இப்ப என்னோட வர்றீங்கல்ல, அப்புறம் பாருங்க பேய் பிசாசுக்கெல்லாம் பயப்படலாமா? கூடாதான்னு? உங்களுக்கே நல்லாப் புரியும்," என்று தாத்தா சொன்னது மீண்டும் காதில் ஒலிக்க, "பே..பே..பேய்....பே..பே..பேய்"  என்று உடல் உதறலுடன், வாயும் உளற ஆரம்பித்தது எனக்கு.
"ஏய் ...ஏய் என்னாச்சு உனக்கு, என்ன சொல்றே?" என்று சித்ரா என்னை உலுக்கினாள்.

"அம்மாடி,  இந்தால பாரு... என்னாச்சு... என்னாச்சு?" என்று பக்கத்திலிருந்த  வயதான அம்மா உலுக்கவும் கண்விழித்தேன்.  அப்பொழுதான் இன்னமும் பஸ்சில் இருப்பதும், தூங்கியிருப்பதும் புரிந்தது.  தோழி வீட்டுக்  கல்யாணத்திற்கு வந்த வழியில் உள்ள ஊர்மக்கள் திடீரென போராட்டம் நடத்தி பேருந்துகளை நிறுத்திவிட்டார்கள். வால் போன்று நீண்டிருந்த பேருந்துகள் வரிசையில் கடைசியாக நின்றிருந்த எங்கள் வண்டிக்கும் பின்னே, இன்னமும் வால் வளர்ந்து விட்டது போல் மேலும் பல வண்டிகள் இப்பொழுது நிறுத்தப் பட்டிருந்தது.  வாகாக ஒரு மரத்து நிழலில் வண்டி நின்றதால், சிலு சிலுவென்று வீசிய காற்றில் தூங்கியதுடன்  நிறுத்தாமல் கனவு வரை போய் உளறி இப்பொழுது மானம் போகிறது.

மணி என்ன இருக்கும் என கைபேசியை எடுத்து நேரம் பார்த்தேன்.  இந்நேரம் ஊர் போய் சேர்ந்திருக்க வேண்டும்.  இன்னமும் எவ்வளவு நேரம் ஆகுமோ என்ற தவிப்பு வந்தது.  பக்கத்தில் இருந்த அம்மா நான் உளறியதைப் பார்த்து சிரிக்கிராரோ என்ற சந்தேகத்தில் கைபேசியை மெதுவாக திருப்பி அதில் அவர் பிரதிபலிப்பை பார்த்தேன்.  அவர் ஏதோ புத்தகம் படிப்பதில் மூழ்கியிருந்தார்.

யார் யாரோ பெரிய தலைகள் வந்து, ஊர்மக்களை சமாதனம் செய்து, அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவாதாக வாக்குறுதி கொடுத்து ஒரு வழியாகப் போராட்டம் கைவிடப் பட்டது.   வண்டி  மெல்லக் கிளம்பி ஊர் வந்து சேரும் பொழுது சூரியன் மறைந்து தெரு விளக்குகள் ஒளிர ஆரம்பித்தது.  நின்றிருந்த ஒன்றிரண்டு வண்டிகளையும் மற்றவர்கள் பிடித்துவிட, மற்ற ஆட்டோவோ, ரிக்க்ஷாவோ எதுவும் கண்ணில் படவில்லை.

சித்ரா வீட்டிற்கு போகும் வழியில் அவளுக்கு பெரியக்கடைத்தெருவில் இருக்கும் குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடையில் இருந்து பக்கோடா, பலகாரம் எல்லாம் வாங்கிக் கொண்டு பிறகு வண்டி பிடித்துக் கொள்ளலாம் என்று நடக்க ஆரம்பித்தேன்.  பலகாரமும் வாங்கியாகிவிட்டது, ஆனால் வழியில் வண்டி எதுவும் கிடைக்கவில்லை.  தொடர்ந்து நடந்து பந்தலடியும் தாண்டி காந்தி ரோட்டில் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.  சட்டென்று மின்சாரம் நின்றுபோய் விளக்குகள் அணைந்து தெரு இருளில் மூழ்கியது.
ஆக்கம்: தேமொழி
++++++++++++++++++++++++++++++++++++++
6


நண்பனே
சிறுகதை: ஆக்கம்: ஸ்ரீஷோபனா ராஜ்குமார்

பஜ்ஜியின் மணம் வீடெங்கும் கமகமத்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மதியம் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்ற மூர்த்தியை, பார்வதியின் பஜ்ஜியின் மணம் தான் எழுப்பியிருக்கவேண்டும். விழித்தவுடன்லேசாக முகத்தை அலம்பிக் கொண்டு சமையலறையில் போய் நின்றார்.

"ம்ம்ம்...என்ன பாரு ஏதோ சமைக்கிற மாதிரி தெரியுதே?"

"ம்...என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது - தூங்குறமாதிரியாயிருக்குது?"

"இல்லே...ஏதோ வாசனை வருதேன்னு கேட்டேன்"

பார்வதி பேசாது அமைதியாக இருந்தாள்.

"சரி நான் காத்தாற பால்கனியிலே இருக்கேன், நீ சூடாகாபியும் கூடவே பஜ்ஜியும் எடுத்துட்டு வா"

காபியுடன் பஜ்ஜியையும் மூர்த்திக்குப் பறிமாறினாள் பார்வதி.

"நீ சாப்பிடலையா? இந்தா எடுத்துக்கோ"

"வேண்டாம்..." பார்வதியின் குரலில் எரிச்சல் கலந்திருந்தது.

"இப்போ உன்னோட கோபம் என் மேலயா இல்ல இந்த பஜ்ஜி மேலயா?"

"ம்...பஜ்ஜி மேலயும் அதை சாப்பிடுற ஆளு மேல இன்னும் அதிகமாவே கோபம் வருது"

"இந்த‌ இர‌ண்டுஅப்பிராணிக‌ள் மீது உன‌க்கு எதுக்கு இவ்வ‌ளவு கோபம்?"

""அம்பத்தெட்டு வயசு ஆச்சே, இன்னும் இப்படியா பஜ்ஜியும் சொஜ்ஜியும் சாப்பிடறது?"

"சொஜ்ஜியா? அது எப்படியிருக்கும் நான் சாப்பிட்டதேயில்லையே?"

"ஆ..அது உங்க தலைக்குள்ள இருக்குதே அந்தக் களிமண்ணு மாதிரிதான் இருக்கும்...நான் எவ்வளவு சீரியசாப் பேசிட்டுயிருக்கேன், கவலையேயில்லாம ஜோக் பண்ணுரீங்களா?"என்று எரிச்சலில் கத்தினாள் பார்வதி.

"ஏன் நானும் சீரியசாகத் தானே சொன்னேன், மாடுலேஷனை மாற்றி ட்ரை பண்ணிப் பார்க்கட்டுமா?" 

"ச்சே...திருந்தாத பிறவி" பார்வதி சலித்துக் கொண்டாள்.

அதற்குள் அங்கே யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு பார்வதி சென்று பார்க்க,மூர்த்தியின் நண்பர் வாசலில் நின்று கொண்டிருந்தார்.

"மூர்த்தி அண்ணனா, வாங்க...வாங்க, உட்காருங்க" என்று லக்ஷ்மணனை வரவேற்றாள் பார்வதி.

"எங்கேமா மூர்த்தி?"

"பால்கனியிலே உட்கார்ந்திருக்கிறார் பாருங்கள், நான் போய் காபி எடுத்துக் கொண்டு வருகிறேன்"

"சரிம்மா...டேய் மூர்த்தி..."

அழைக்கும் குரலை கேட்டு லக்ஷ்மணன்தான் என்று புரிந்து கொண்ட மூர்த்தி தான் கையில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பஜ்ஜி தட்டை எங்கே மறைப்பது  என்று தேடிக் கொண்டிருக்கும்போதே லக்ஷ்மணன் வந்துவிட்டார்.

"என்ன,மூர்த்தி கீழே என்ன தேடுற, எல்லாம் தட்டுலதான் பத்திரமாயிருக்குதே" என்று கிண்டலடித்தார் லக்ஷ்மணன்.

"அது ஒண்ணுமில்லப்பா...எதோ வண்டு ஓடுற மாதிரி தெரிஞ்சுது அதான்"

"அது போகட்டும்,அந்த தட்டுல ஏதோ தெரியுதே?" என்று லக்ஷ்மணன் கேட்கவும் பார்வதி காபியைப் பரிமாறியபடியே, "பாருங்க அண்ணா,இப்படியா இந்த    வயசுலயும் சாப்பிடுவாங்க...நீங்களாவது உங்க ஃபிரெண்டு கிட்ட சொல்லுங்க"

"என்னடா மூர்த்தி இது, நானே உன்னைவாக்கிங் போக கூப்பிட்டுட்டுப் போகலாமான்னு வந்தா, நீ இங்கே ஒரு முனியாண்டி விலாஸை நடத்திக்கிட்டுயிருக்கே?"

"நல்லாக் கேளுங்கண்ணா, வாரத்துல நாலு நாளும் இப்படியே சாப்பிட்டா உடம்பு என்னவாகும்?"

"மூணு நாள் பஜ்ஜியேசாப்பிடாமல் இருந்து அதைத்தான் சரி செஞ்சிடுறேனேடி பாரு...அதை சொல்ல மாட்டியே" என்று சமாளிக்கப் பார்த்தார் மூர்த்தி

"மூர்த்தி, போன வாரம் நான் எடுத்துக் கொண்ட‌ஃபுல் பாடி செக்அப் ரிப்போர்ட்டில் கொழுப்பு அளவு கொஞ்சம் அதிகமாயிருக்குதுன்னு தினமும் என்னை என் பையன் நச்சரிச்சதால இனிமேல் தினமும் வாக்கிங் போக முடிவு பண்ணியிருக்கேன்டா...வா, நாம ரெண்டு பேரும் சேர்ந்தே தினமும் வாக்கிங் போகலாம் -

ரிடைர்மென்ட் வாங்கிட்டாலே உடம்பு ரிப்பேரும்ஆகிடுதுலே"

"என்ன வாக்கிங்கா? நானா...வாய்ப்பே இல்லை"

"ம்...நம்பமுடியலையே...நீ என்னோட‌ ஃப்ரெண்டுடா எனக்கு உன்ன பத்தி தெரியாதா...உண்மையை சொல்லு என்ன‌ விஷயம்?" மூர்த்தியின் பேச்சில் சந்தேகம்  தோனித்திருந்தது

"அச்சச்சோ...மேகம் இருட்டுற மாதிரில்ல தெரியுது...நான் மாடியிலே போய் துணியை எடுத்துட்டுவர்றேன்...வர்ற மழை ராத்திரிக்கு மேலே வருதா..ச்சே" என்று  புலம்பியபடியே மாடிப்படியை நோக்கி ஓடினாள் பார்வதி.

"உண்மை தான் மூர்த்தி...நம்மள புரிஞ்சிக்கிட்டவங்ககிட்ட உண்மையை நிச்சயமா மறைக்கவே முடியாது" என்று சோகம் தோய்ந்த குரலில் மேலும் தொடர்ந்தார்  ல‌க்ஷ்ம‌ண‌ன்.

"என் மருமகள் எப்போதும் என்னை ஜாடையாவே திட்டினாலும் ஜடமாவேஇருந்துடனும் என்றே காதே கேட்காத மாதிரி எப்பவுமே இருப்பேன்... ஆனா.. இன்னிக்கு"

"இன்னிக்கு...என்னவாச்சு லக்ஷ்மணா?" கவலையுடன் வினவினார் மூர்த்தி

"மூர்த்தி...என் கண்ணாடியை எங்கேயோ மறந்து வச்சுட்டேன்...எங்கே வச்சேன்னு தேடிட்டு இருக்கும்போது, எனக்காக என் பேத்தியும் சேர்ந்து தேடினாள்.  அப்போ தெரியாம என் கைப்பட்டு ஃப்ளவர்வேஸ் கீழே விழுந்துடுச்சு"

"சரி தெரியாம விழுந்திடுச்சு,அதுக்கா உன் மருமகள் திட்டினாள்?"

"அப்படி ஏதாவது சொல்லி இருந்தாலும் விதியேன்னு கேட்டுட்டுப் போயிடுவேனேடா...என் பையனுக்கு உடனே ஃபோன் போட்டு எனக்கு பைத்தியம்  பிடிச்சிடுச்சுன்னும், வீட்டிலே உள்ள பொருளையெல்லாம் போட்டு உடைச்சதுல என் பேத்தியை நானே காயப்படுத்திட்டேன்னு என்னென்னவோ சொல்லி  இப்ப என் பையன் மனநலஆஸ்பிட்டல்ல என்னை சேர்க்க போறேன்னுசொல்லிட்டான்" என்று அவர் கூறி முடிக்கவும் கண்களில் கண்ணீர் பெருகியது

"வருத்தப்படாதேலக்ஷ்மணா...இவ்வளவு நடந்திருக்குது, ஏன் வந்ததும் எங்கிட்டேசொல்லல நீ...வா, உடனே போய் உன் பையனை பார்த்து நாலு வார்த்தை  கேட்கணும்"

"வேண்டாம் மூர்த்தி, அவ‌ன் என்னை எடுத்தெரிஞ்சி பேசற மாதிரி உன்னையும் பேசிடுவான்...வேண்டாம் விடு"

"ம்ஹும்...இதை இப்படியே விட்டால் நான் ஒரு நல்ல நண்பனாக கூட இல்லே மனுஷனாக கூட வாழ தகுதியில்லாதவனாகி விடுவேன்"

"பார்த்தியா...இதுக்கு தான் நான் உன்கிட்ட சொல்லவே கூடாதுன்னு இருந்தேன்...ஆனா இப்போ நான் பயந்த மாதிரியே" என்று பதறினார் லக்ஷ்மணன்

"லக்ஷ்மணா, இப்படிப் பெத்தவங்களக் கவனிக்காது விடுறவங்களைத் தண்டிக்கனும்ன்னு சுப்ரீம்கோர்டே தீர்ப்பு சொல்லிருக்கிறது; இன்னும் சொல்லப் போனால்  பராமரிப்புத் தொகையும் கொடுக்க வேண்டும் என்றும் சட்டம் நிறைவேறிருக்கிறது - உனக்கும் இது நல்லாவே தெரியும்தானே?" பொரிந்து தள்ளினார் மூர்த்தி

"தெரியும் மூர்த்தி...ஆனா"என்று இழுத்தார் லக்ஷ்மணன்.

"ஓ...குடும்ப கெளரவம் பற்றி கவலைப்படுறியா?அதை பற்றி உன் பையனேகவலைப்படாமல் தானே உன்னை வீட்டை விட்டு விரட்ட இந்த அளவுக்கு  மோசமான காரியங்களை செய்கிறான்...அப்புறம் நாம மட்டும் ஏன் அவனுக்காக இரக்கப்படனும் சொல்லு"

"இல்லேடா...அவன் செய்யறான்னு அவனை மாதிரி நானும் செய்யறதால எனக்கு தொலைஞ்சு போன என் நிம்மதி நிச்சயம் கிடைக்காது மூர்த்தி"

"நீ,இப்படி பேசறது தான் உன் மருமகள் சொன்னது உண்மையோன்னு நினைக்க தோணுதுஎனக்கு"கோபம்பத்திக்கொண்டு வந்தது மூர்த்திக்கு.

"மூர்த்தி,இப்போ நான் இங்கே வந்தது கூட நான் தங்கறதுக்கு ஒரு வீடு பார்த்து தர முடியுமான்னுகேட்க‌ தான்"அமைதியாகதோனித்ததுலக்ஷ்மணனின் குரல்

"இல்லேலக்ஷ்மணா...நீ எப்பவும் எப்படியிருப்பே,ஆனா உன்னை இப்படி பார்க்க என்னாலமுடியலடா..."சோகத்தில்தோய்ந்திருந்தனமூர்த்தியின் வார்த்தைகள்.

"விடு மூர்த்தி...நான் என் மகனுக்கு ஒரு சுமைதாங்கியாக எப்பவும் இருக்கனும்நினைச்சேன்...ம்...ஆனால் அவன் என்னை சுமையா நினைத்து

இடிதாங்கியாகஇருக்கனும்ன்னு நினைக்கின்றான் போல... உன்னோட வீடு பக்கத்துலஇருக்குற மாதிரி பார்க்க முடியுமா,அப்போ தான் எனக்கு நாளைக்கு
ஏதாவது ஆச்சுன்னா..."

"டேய்...போதும் நிறுத்து உன்னோட உளறல்ல...டிஆர் மாதிரி அடுக்கு மொழியாஅடிக்கிட்டு போகாதே,இது நிஜ வாழ்க்கைக்குஉதவாது…கீழ் போர்ஷன்ல  காலேஜ் பசங்க தான் தங்கிருக்காங்க...இன்னும் ஒரு மாசத்துல காலி செய்திடுவாங்க,அதுவரைக்கும் நீ நம்மவீட்டுல்ல தங்கு"

"ரொம்ப தாங்ஸ் மூர்த்தி...ஆனா இன்னும் ஒரு மாசம் வரைக்கும் எப்படி இங்கே தங்குறதுன்னு"என்று இழுத்தார் லக்ஷ்மணன்

"பார்த்தீயா...நீ இங்கே தங்க ஒத்துக்கமாட்டேன்னுதெரிஞ்சு தான் கீழே போர்ஷன்ல்லஇருந்துக்க சொன்னேன்...நீ என்னன்னா ஒரு மாசம் கூடஇருக்க மாட்டேன்னுசொல்றியே....இதோ பார் லக்ஷ்மணா...நானும் பாருவும்,உன் பையன்,மருமகளை மாதிரி கிடையாது.நீ எப்பவும் என் கூடவே இங்கேயே இருந்தால்  நான் இன்னும் சந்தோஷப்படுவேன்"என்று சொல்லி முடிக்கவும் மாடிக்கு சென்ற பார்வதி கோபத்துடன் நிற்பதை பார்த்தார்.

"ஆமா...என்ன நடக்குது இங்கே...?"கோபத்துடன் பார்வதிநின்று கொண்டிருந்தார்

"பாரு...அது வந்து...லக்ஷ்மணன் ரொம்ப பாவம்மா...அவன் பையன்"

"அதுக்குன்னு?"

"இல்லேம்மா...ஒண்ணும் இல்லை..."என்று இழுத்தார் லக்ஷ்மணன்

மூர்த்தியும்,லக்ஷ்மணனும்பார்வதியின் முகத்தில் தெரிந்த கோபத்தைக் கண்டு சற்று தடுமாறி போனார்கள்

"அதுக்குன்னு...இப்படி தான் வந்தவங்களுக்கு எதுவுமே சாப்பிடவிடாமல் சாப்பிடுறதா"என்று பார்வதி கூறிய பிறகு தான் இருவரும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

"ஓ...நீ இந்த பஜ்ஜியைசொன்னியா...நான் பயந்துட்டேன்"என்றார் மூர்த்தி

"நான் ஒண்ணும் பஜ்ஜியைசொல்லலை...அதை சாப்பிடுற ஆளை தான் சொல்றேன்"

"ஓ...அப்படியா…ஹிஹிஹி"என்றுநமட்டுக் சிரிப்பு சிரித்தார் மூர்த்தி

"அண்ணா,நான் நீங்க பேசினதை கேட்டுட்டு தான் இருந்தேன்...நான் உங்க குடும்ப விஷயத்துலதலையிடுறதா நினைச்சிக்க வேண்டாம்...அண்ணா,ஏன் நீங்கள்  உங்க உறவுக்காரார்கள் நாலு பேரை கூப்பிட்டு சமாதானம் பேசி பார்த்தா என்ன?"என்று தயக்கத்தோடுகூறினாள் பார்வதி

"இல்லைம்மா...அதுகெல்லாம் காலம் கடந்து போச்சு...நான் எப்போ எந்த ஜென்மத்துல செஞ்ச பாவமோ,இப்போ இந்த பிறவியிலே அனுபவிக் கனும்ன்னு  விதின்னு நினைக்கின்றேன்"என்றுவிரக்தியின்உச்சியில் இருந்த லக்ஷ்மணனின் வார்த்தைகள் மூர்த்திக்குஎரிச்சலடைய செய்தது

"லக்ஷ்மணா...நீ ஒரு முட்டாள்ன்னு இப்படி தான் அடிக்கடி உறுதி படுத்துவியா...நீ அனுபவிக்கிறதுவிதின்னா,அதே மாதிரி விதியை உன் பையனும் அனுபவிக்க வேண்டாம்...இது ஒன்றும் பழிக்குபழி யில்லை...நியாயத்தை தான் கேட்க போகின்றோம்"

"நீங்க கொஞ்சம் நிதானமாபேசுறீங்களா...அவரே நொந்து போயிருக்கிறார்.அவரை போலீஸ்,கோர்ட்டுன்னு சொல்லி குழப்பாதீர்கள்"

"மூர்த்தி...முதல்ல இந்த முடிவை எடுக்க கொஞ்சம் தயங்கினேன்; வருத்தப்பட்டேன்,ஆனால் இப்போ நான் எடுத்த இந்த முடிவு தான் சரியாக இருக்கும் என்று  என் மனதிற்குதோன்றுகிறது"என்றலக்ஷ்மணனின் குரலில் ஒரு புத்துயிர் தெரிந்தது

"ம்...கலியுகத்துல சொந்த பந்தம் பாசங்கள் எல்லாம் பலியாகிடும்ன்னு என் ஆச்சி அடிக்கடி சொல்லுவாங்க...அது இன்னிக்கு சரியாகத் தான் இருக்கு"என்று
புலம்பினார் பார்வதி

"ஆமா...இதே கலியுகத்துல தான்உன் ஆச்சியோடதொல்லைகளைதாங்கிட்டு அவரை கடைசி வரைக்கும் பார்த்துக்கிட்டவர்கள்அனுபவித்தகஷ்டங்களைப் பற்றி  ஏதாவது சொல்கிறாயா,பாரு"

"அதானே பார்த்தேன்,எங்கஉங்களோடஇராமயணத்தை இன்னுமா படிக்க ஆரம்பிக்கலைன்னு...‌எங்க வீட்டு ஆட்களைபற்றிபத்துபேருகிட்ட குறை சொல்லாமல்  தூக்கமே வராதே உங்களுக்கு"என்று பொய் கோபத்துடன் கூறிவிட்டுதிரும்பிக் கொண்டார் பார்வதி

"மூர்த்தி,இத்தனை நாள் கவலைப்பட்டுக்கொண்டே மனதிற்குள் புழுங்கிக்கொண்டேயிருந்து விட்டேன்...இனியாவது உன்னை பார்த்தாவது வாழ்க்கையை வாழ பழகிக்கொள்ளவிரும்ப்கிறேன்...என்னை என் மகன் வேதனைப்படுத்தினாலும்நான் பதிலுக்கு அவனை சிரிக்க வைக்கவே விரும்புகின்றேன்" என்று கூறிய லக்ஷ்மணனின் குரலில் முழுமையான தெளிவு பிறந்திருந்ததைஉணரமுடிந்தது.அந்த முடிவை ஏற்று கொள்வதைப் போலவே மூர்த்தியும்,பார்வதியும் பேசுவதறியாது மெளனமாய் நின்று கொண்டிருந்தார்கள்
ஆக்கம்: ஸ்ரீஷோபனா ராஜ்குமார்
 ++++++++++++++++++++++++++++++++++++++
7


CLEAN YOUR KIDNEYS IN Rs. 1.00 OR EVEN LESS

Years pass by and our kidneys are filtering the blood by removing salt, poison and any unwanted entering our body. With time, the salt accumulates and this needs to undergo cleaning treatments and how are we going to overcome this?

It is very easy, first take a bunch of parsley (MALLI Leaves) KOTHIMBIR (DHANIYA) and wash it clean

Then cut it in small pieces and put it in a pot and pour clean water and boil it for ten minutes and let it cool down and then filter it and pour in a clean bottle and keep it inside refrigerator to cool.

Drink one glass daily and you will notice all salt and other accumulated poison coming out of your kidney by urination also you will be able to notice the difference which you never felt before.

Parsley is known as best cleaning treatment for kidneys and it is natural!

Hope you will forward this to all your loved ones

Visit: www.MumbaiHangOut.Org 
ஆக்கம்: Ananthamurugan.G

++++++++++++++++++++++++++++++++++++++
8

உன்மத்தம் ஆனேனடி சகியே!
ஆக்கம்: ஆலசியம்.கோ, சிங்கப்பூர்

என்மன வானில் உலாவரும் முகிலே! 
தேனூறிய மலரே! வானூரும் நிலவே!
தேமாங்கனி சுவையே! திகட்டா அமுதே!
வானோர் மயங்கும் பேரழகின் பிறப்பே!

கானவர்; கந்தர்வர்; இந்திரர்; சந்திரர்
யாவரும் நினைக் கண்டிலரோ -பிரம்ம
தேவரே தவமிருந்து படைத் தாரோ!
மூவரே வியப்பரே! மூவேந்தர் தடுத்திலரோ!

தாமரைமுகம் கண்டு தவித்திடும் என்மனமே!
தாமரையாய் தாவிக் குத்திடும் இக்கணமே!
மாதுளை இதழில் மாங்கனி ரசமே 
மயங்கிப் போனதென் மனம் உன்வசமே
பொய்கையில் நீந்திய கயல்களோ -நின்
மைவிழிகளில் நீந்தி எனை மாயத்ததுவே!

மெல்லிடை காட்டும் நளினமோகநடை  - அதனால்  
வல்லிய கனங்குலை மேலாடை நழுவுமே!
சொல்லிய யாவும் கொஞ்சமே எனச் 
சொல்லியே நோவுது என் நெஞ்சமே

சொல்லவும் கூடுமோ? சொல்லுக்குள் அடங்குமோ?
சொல்லாமற் போனால் சொர்க்கமும் விளங்குமோ? 
ஆலிலை மூடிய மேகலை அது
ஆலிங்கனம் செய்யும் நூலிடை - வண்ணப்
பாவாடை தாங்கிடும் நூலாடை அது  
பாலாடை மேனி மூடிய மேலாடை

தழுவுதோ…! இல்லை அது நழுவுதோ…! 
தழுவும் போது இறக்கிறேன் அது
நழுவும் போது மீண்டும் உயிர்கிறேன்!

வேனில் தென்றலும் உன்னை உரசியே  
மேனி சிலிர்த்ததோ? மெல்லிடை நெளிந்ததே! 
காலைப் பரிதியின் கண்களும் கூசியதோ?
கார்முகில் கொண்டே கண்களை மூடியதே!

சோலைக் குயிலும்; சொர்க்கமும் வேண்டிடுமோ?
மாலைநீ வரும்வரை; சோகத்தில் ஆழ்ந்திடுமோ!
அழகினழகே, நினைப் பார்த்து பார்த்து 
அழகு மயில்களின் கண்களும் பூத்ததே! 

பூங்காவனமே பூத்துக் குலுங்குதே! -அது 
பொங்கித் தேனை எங்கும் வார்த்ததே!
அங்கமெல்லாம் சிலிர்த்து நிற்கிறதே -அந்த
அன்னமும் உன்னிடம் ஆசை கொண்டே!

இன்பத்தேன் சுமந்தத் தங்கக்குடமோ! -நீ 
துன்பமில்லா பெருவாழ்வு தரும் அமுதக்கடலோ!
அங்கமெலாம், மின்னும் வைரமோ! – எனை
ஆட்டிப்படைக்கவே வந்த அணங்கோ -இத்தனை 
மேன்மைகளை மேவிய நின்னை அடையவே 
எத்தனை ஜன்மம் தவமிருந் தேனோ!

'நின் பணிமொழி வாலெயிறு ஊறியநீர் 
பாலோடுத்தேன் கலந்ததோ' நானறியேன் -என்
ஊனில் தேனூறுதே; நினதருகே இருக்கையிலே 
வானில் மீனூருதே; நீ கண் சிமிட்டுகையிலே!

இதயம் துடிப்பதை கேட்கிறேன் -ஒரு
இனம் புரியா மயக்கம் ஏனோ? -என்னுள்
இயக்கம் பெறுவதை உணர்கின்றேன் 
உதடுகள் துடிக்கின்றன; உதிரமும் கொதிக்கின்றது
உள்ளம் மட்டும் உயிர்தளிர்ப்ப  உன்மத்தமாகுதே!

அடிப் பெண்ணே! ஆணிப் பொன்னே!
விண்ணின் அதிசயமே! மண்ணின் சொர்க்கமே!
உயிரின் ஓவியமே! என்னுயிரின் இருப்பிடமே!

விதிசெய்த சதியால் அல்ல - என்  
மதி மயங்கி உயிர்கசிய உன் 
கரம் பற்றினேன்  சகியே! 
**************************************************************************************
கவிதையின் கடைசி மூன்று வரிகள் தாம் எனை இக்கவிதைக்குத் தூண்டியது.
அந்த அழகுக் கிறுக்கல் வகுப்பறைப் பின்னூட்டத்தில் உதிர்ந்த முறுவலே!
வரிகளை வார்த்தவருக்கு வண்ணமிகு நன்றிகள்.

சிற்றின்பத் தேரேற்றினேன் வாருங்கள்  இனி 
பேரின்பக்கடலில் நீந்திக் களிப்போம்!

***************************************************************************************
பேற்றைத் தருவாய் பிரம்மபுரப் பிதாவே!
ஆக்கம்: ஆலாசியம்.கோ
தோடணிந்த திருச்செவியுடைய உமையம்மையை 
தோன்றும் யாவிலும் இயக்கமாகி உயிர்பிக்கும்
ஞான்று நல்லுலகுக்கு நலம்தரும் நாயகியினை
இடப்பாகம் கொண்டே; சிவசக்தியாய் - செக்க
சிவந்த ஞானப் பேரொளியாகஅருளென்னும்
குளிர்க் கொட்டும் சூரியனாய்; ஒப்பில்லா வெண் 
குளிர்பிறைதனை முடிவில்லா முடியில் சூடியே
பிரளயத்தில் விளைந்த சாம்பல் என்னும் 
திருவெண்ணீற்றை தளிர் மேனியில் பூசியே
வானுலா வந்தேறும் பேரழகே; பேரின்பக் கடலே
தீதிலா வாழ்வதனை வழங்கி - எனைப்  
பிறப்பில்லா பேறு பெற வைப்பவனே!

தாமரை மலர் அமர்நான்முகனும் 
வீணை கானம் பொழியும் அன்னையவள்
ஞான வல்லியோடு; முன்னைய நாளிலே
தேவ தேவனை! தேவி யொருபாகனை!
நாதனை! நடராசப் பெருமானை! - நல் 
அறக்கடவுளாம்  நந்தியின் மீதேறி வந்தபோது ; 
நான்முகன் தான் விரும்பிய தொழிலாம்
படைத்த லெனும் அருந்தொழிலை தனக்கருள
வேண்டியே வரம் பெற்ற பிரமபுரம்!
பிரம்மனுக்கு வரமளித்து இப்பேரூரில் உறைவோனே! 
பித்தசித்தனே! பெருஞ்ஞானக்கடலேமுக்தனே! ஈசனே!
ஏனிந்தயோசனை தடுத்தாள்வாயெனை அப்பனே! 

திருச்சிற்றம்பலம்.
அன்புடன்,
கோ. ஆலாசியம்,
சிங்கப்பூர். 
+++++++++++++++++++++++++++++++++++++++++++
9

26.1.2012 ஞாயிறு அன்று  ஆஸ்திரேலியா சிட்னி முருகன் கோவில் குடமுழுக்கு படு விமர்சையாக நடந்தது. அதில் எடுத்த சில புகைபடங்களை நம் பார்வைக்கு அனுப்பியுள்ளார் வகுப்பறை மாணவர். AL. நடராஜன்














+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
10

நகைச்சுவை:

Husband texts to wife on cell..

"Hi, What r u doing Darling?"

Wife: I'm dying..!

Husband jumps with joy but types:

"Sweet Heart, how can I live without U?"

Wife: "U idiot! I'm dying my hair..

"Husband: "Bloody English Language!

-S.சபரி நாராயணன், சென்னை
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

114 comments:

  1. மாற்றம் என்றும் வேண்டும்தான் தனுசு அவர்களே!
    குழந்தை குமரிதான் ஆகுமோ? என்னைப் போல குமரன் ஆகாதோ?
    உங்கள் கவிதை முதலிடம் பிடிப்பதே அதன் தர நிர்ணயம் தான்!
    அதுசரி அடாபுடா என்று போட்டுத் தாக்குகிறீர்களே!அதுதான்....கொஞ்சம்..ஹிஹிஹி!

    பெரியவர் தஞ்சாவூராரின் சந்தேகம் ஒவ்வொருவராகத் தெளிவு படுத்துங்கள்.

    எவ்வளவு 'கீன் அப்செர்வேஷன்' பாருங்கள் மைனர்!இளம் பெண்கள் வழிபடும் முறையினைச் சொல்லியுள்ளார் பாருங்கள் அபாரம்!கட்டாயம் என்றும் பதினாறு மன்றத்தலைவர் பதவி அவருக்குத்தான்.அப்படி மாரில் கை வைத்துக் கையை முத்தமிடும் பெண்கள் கிறித்துவப் பள்ளியில் படித்தவர்களாக இருப்பார்கள்.மாரில் தொங்கும் சிலுவையை எடுத்து முத்தமிடும் பழக்கத்தை கன்னிகா ஸ்த்ரிகளிடமிருந்து பார்த்துக் கற்றுக் கொண்டது.

    பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்பது நாம் அறிந்ததுதானே!
    பணம் அதிகமாகப் புழங்கும் கோவில்கள் எல்லாவற்றிலுமே குருக்கள் மேலும் மேலும் பணத்திற்கு ஆசைப்படுவதுதான் வேதனை. பெரிய நகரிங்களிலும், புகழ்பெற்ற ஸ்தலங்களிலும் இருப்பது போன்ற நிலை பல்லாயிரக்கணக்கான குக்கிராமக் கோவில்களில் இல்லை. அறநிலைத்துறை அளிக்கும் மிக சொற்பமான சம்பளத்திற்கு 15 மணி நேரம் வேலை பார்க்கும் குருக்களின் எண்ணிக்கையே அதிகம்.தட்டுக்காசு மிகவும் குறைவு.

    கார்பொரேட் பஜனை கோஷ்டி பற்றிய அங்கலாய்ப்பும் சரிதான்.சென்னை போன்ற நகரங்களில் ஸ்பான்சர்ஷிப் கிடைப்பதால் லட்சக்கணக்கான பணம் இதி புழங்குகிறது. பணம் வந்துவிட்டால் பக்தி பண‌த்தின் மேல்தானே விழும்?.

    ReplyDelete
  2. மைனர் சொல்லியுள்ள கம்பெனிகள் தமிழகத்தில் இரண்டு உண்டு. அவருடைய 'கதையில்' திருவாரூர் வந்தாலும் அது மன்னார்குடி கம்பெனி கதைதான். திருவாரூர் கம்பெனி கதை ஏற்கனவே எழுதிவிட்டார். இப்போ மன்னார்குடி கம்பெனி!விஷயத்தை மறைவாக வைத்து எழுதுவது மைனருக்குக் கைவந்த கலை.இந்தக் கதையிலும் அசத்தி இருக்கிறார். என்ன 25 வருடக் கதையைச் சொல்லும் போது நீளம் தான் கூடிவிட்டது.அதனால் பரவாயில்லை. விவரமான ஆளு,விவராமாச் சொல்லியிருக்கிறார். நன்றாக உள்ளது.

    தேமொழி இப்படி பேய்க் கதை எழுதி டெல்லிக்காரங்க‌ போர்ட்ஃபோலியவ ஒதுக்கிக்கலாமா?மைனர் சொல்லாமல் விட்ட மன்னார்குடிய தேமொழி சொல்லிவிட்டார். ஃபின்லேபள்ளி, நேஷனல் ப‌ள்ளி எல்லாம் பின்னே எங்கே இருக்கிறதாம்? எல்லாம் அந்த வெண்ணைத் தாழிக்காரன் ஊரில்தான்.
    அந்த சிகரெட் லைட்டர் குலை நடுங்க வைத்துவிட்டது.இனிமே சிகரெட் லைட்டெரைப்பார்த்தலே பே..ய்..ய்ய்..ய்ய்ய்..'தான்! கதை சிறப்பு!

    ReplyDelete
  3. என் கட்டுரையைப் பதிவிட்டமைக்காக ஆசிரியர் ஐயா அவர்களுக்கு நன்றி. தனுசுவின் கவிதையைப் படிப்பதற்கு முன்பாக நேற்று அவர் என் இல்லம் தேடி வந்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது. தனுசுவின் கவிதை, சிங்கப்பூர் ஆலாசியம் கவிதைகளை நிதானமாகப் படித்துவிட்டு எழுதுகிறேன். சகோதரிகள் இருவர் சிறந்த கதாசிரியர்களாக ஆகிவிட்டது குறித்து மகிழ்ச்சி. அவற்றையும் முழுமையாகப் படிக்க வேண்டும். ஜப்பான் மைனர் அவர்கள் சற்று விரிவாக இந்த வாரம் எழுதியிருக்கிறார். இன்று மாலைக்குள் அனைத்தையும் படித்துவிட்டுப் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  4. தேமொழியின் கதையை ஒரே மூச்சிலே படித்து முடித்ததும் உண்மையிலே கைகளைத் தட்டி ஒரு 'கிளாப்' பண்ணினேன்.

    அவர் எழுத்திலே இருந்த உரைநடைத்தொனி மாறி எழுத்து இலகுவாக,இனிமையாக வந்திருக்கிறது..

    'சித்திரமும் கைப்பழக்கம்..செந்தமிழும் டைப்பழக்கம்' என்று நன்றாகவே பழகியிருக்கிறார் தேமொழி..

    கதையினை ஒரு 'லூப்' வடிவிலே சொல்லிச் சாதனை படைத்திருக்கிறார்..நன்றாக அமைந்த வரிகள் ஒவ்வொன்றிலுமே பலப் புதுமையான விஷயங்களைத் திணித்து 'டைட் பேக்' ஆகச் சொல்லிச் சென்றிருப்பதால் வரிக்கு வரி ரசித்து விளக்கிப் பின்னூட்டமிடத் தோன்றுகிறது..

    உதாரணத்துக்கு மின்வெட்டுக்காகச் சாபமிடும் அம்மாவில் ஆரம்பித்து கரண்ட் கொண்டு வந்த மகாராசியாகித் தனக்கு கிரெடிட் சேர்க்கும் இடத்திலும் சரி..
    'பாமினியாத்துக்கரை மேல பேயொன்னு துவைக்குதுன்னு சொல்லிவைப்பாங்க..நம்பாதே' என்று சொல்லி அப்படியே பேயே வந்தாலும் பேயாய் வந்தவர்,வருபவர் உன் தாத்தா வகைதான்.அதனால் பயமில்லை..வழித்துணைதான்..இளவட்டப் பேய்கள்தான் பயம் தருபவை..'என்கிற போதனையை இலாவகமாகச் சொல்லும் இடங்களிலும் சரி..
    கனவு கலைந்து உளறலில் தன்மானம் பாதிக்கப்பட்டு செல்போனிலே பக்கத்துக்கு சீட் அம்மாவின் முகத்தைப் பார்க்கும் இடத்திலும் சரி..
    ஊர்ப் பிரச்சினைகளுக்காக பொதுமக்கள் பயணிக்கும் பேருந்துகளைச் சிறைபிடித்து கோரிக்கைகளை நிறைவேற்றும் வழியறியாப் பெருந்தலைகளின் இன்றைய நிலையைச் சுட்டுவதிலும் சரி..

    மன்னார்குடி பாமினியாத்தக்கரையிலே வெளுத்துக் காட்டியிருக்கிறார்..
    தேமொழி..
    என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. பத்து படைப்புக்களுடன் இன்றைய மலர் ரொம்ப கனமாக இருக்கிறது..

    மலரின் விலையை ஆசிரியர் உயர்த்தாமல் இருந்தால் சரி..

    தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சிரத்தை எடுத்துப் பொழுதுபோக்கை உபயோகமான படைப்புத் திறனை வளர்க்கும் முயற்சியில் செலுத்தி வழித்துணையாய் வரும் சுப்பையா ஆசிரியருக்கு நன்றி..

    அடிப்படையில் நான் ஒரு கதைஞன் என்ற காரணத்தால், படிக்க எளிது என்ற காரணத்தால் வரிசையில் அதற்கே முன்னுரிமை கொடுத்து பின்னூட்டங்களை இட்டிருக்கிறேன்..

    இனிவரும் காலங்களிலும் இப்படியே தொடரும் என சக எழுத்தார்வலருக்குச் சொல்லிக் கொள்கிறேன்....

    ReplyDelete
  6. தனுசுவின் கவிதை கேட்டு 'மரியாதையாப் பேசு'
    என்று முதுகில் சொருகி வைத்திருக்கும் அரிவாளை வெளியில் எடுத்து வீசும் ஆட்கள் வரலாம் ஜாக்கிரதை..தனுசு..ஜாக்ரதை..

    ReplyDelete
  7. கோவில்களுக்கு நாம் செல்வதே மன நிம்மதியைத்தேடித்தான்.அது எங்கே கிடைக்கிறது?. ஆண்டவன் முன்னால் அனைவரும் சமம் அல்ல அங்கே. தர்ம தரிசனம்(மிடில் க்ளாஸ்),விரைவு தரிசனம்(அப்பர் மிடில் க்ளாஸ்),அதிவிரைவு தரிசனம்(ஹை க்ளாஸ்),மிக மிக விரைவு தரிசனம்(இது என்னன்னு கேட்டா, சாமியே நேர்ல வந்து குதிச்சிடுவாருன்னு சொல்றான் என் குறும்புக்காரத்தம்பி),என்று ஏகத்துக்கும் பிரிவினைகள்.பெரிய கோவில்களான திருச்செந்தூர், திருவரங்கம் என்று எல்லாக் கோவில்களிலும் இந்த முறைதான்.தர்ம தரிசனக்காரர்கள் கால் கடுக்க நிற்க வேண்டியுள்ளது. மேலும்,தனித் தனி வழி ஏற்படுத்தி இருப்பதால் முறையாக ஆகம முறைப்படி தரிசனம் செய்ய முடிவதில்லை. ஏற்கனவே பக்தி குறைந்து வருகிற சூழலில்,இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.(Parvathy Ramachandran).

    ReplyDelete
  8. பத்தாய் மலர்ந்த மலர் வகுப்பின்
    சொத்தாய் நிற்கிறதே..

    வகுப்பறையின் ஆஸ்தான கவிஞரின்
    வரிகள் ஒவ்வொன்றிலும் சீவலபேறியே

    தெளிவாக தெரிகிறது..அத்தனையும்
    தெவிட்டாத தெள்ளமுது..

    மாறதாது மாற்றம் ஒன்றே மற்றதெல்லாம் மாறிவிடும் தானே..

    தனுசு.. உமது தமிழ் அன்(ம்)புகள்
    தன் மானத்தை தட்டி எழுப்புகிறது..

    வாழ்க.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. பக்தியா.. ? மனிதாபிமானமா..?

    தலைப்பினை பார்த்ததும்
    பட்டி மண்டபம் தொடங்கியதோ என
    நினைத்தோம்..

    அது மக்களின் மனநிலையை வெளிப்படுத்திய ஒரு செயல் என்று..

    இந்த பதிவில் நீங்கள் கேட்டிருந்த கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக பதில் சொல்லும் முன்னர்.. இந்த சூழலை சொல்கிறோம்...

    மல்லி வாசம் தெரியும்..
    (மதுரைகாரவுகளுக்கு மல்லியை பத்தி சொல்லனுமா)
    இது யார் வந்தாலும் வராவிட்டாலும் காலம் வந்ததும் நேரம் புலர்ந்ததும் வாசம் வீச தொடங்கிவிடும்..

    மல்லி வாசனையில் சென்டு(உடலில் தெளிக்கும் வாசனை திரவியம்) உண்டு

    அது உடலில் படும் போது மட்டும் தான் வாசம் வீசும்.. மற்ற நேரங்களில் பெட்டியிலோ வீட்டின் அறையிலோ(பீரோ) அமைதியாக உட்கார்ந்து இருக்கும்..

    என்ற கூறிய படி முதல் சுற்று வாதத்தினை நிறைவு செய்கிறோம்..
    (தஞ்சை சகோதரர் தந்த இந்த தலைப்பினை பட்டி மண்டபமாக நினைத்து எழுதியவை..பதிவை பாதிக்கும்படி சொல்லவில்லை என்பதை சொல்லாமலே புரியும் என நம்புகிறோம்)

    ReplyDelete
  10. மின் பழுது பணி நடக்கவிருப்பதால்
    மீண்டும் மற்ற பதிவுகளுக்கு

    கருத்துஊட்டகளுடன்..
    களிப்படைய செய்ய வருகிறோம்

    வணக்கமும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  11. ஆசிரியருக்கு வணக்கம்,
    எனதுக் கவிதைகளை வெளியிட்டதற்கு மிக்க நன்றி...
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  12. பக்தியும் மனிதாபிமானமும் ஒன்றாய் இருந்தால் அது சிவசக்தியைப் போன்றதொன்று என்று சொல்லியதாகவே உணர்கிறேன்...
    மனிதாபிமானம் இல்லாமல் பக்தி இருக்குமானால் அது அஸ்திவாரம் இல்லா கோட்டையைப் போன்றதே என்பதே உண்மையும் கூட...
    கதையில் கூறப் பட்ட பூசலார் நாயனார் அவர்களின் கதை அதிசயம் கேட்டதில் ஆனந்தம்...
    மிக எளிதாகக் கட்டினாலும் தன்னிடம் இருக்கும் விலை மதிக்க முடியாத ஒன்றைக் கொண்டு கட்டிய கோவிலில் தான் ஆண்டவன் கூட முதலில் குடியிருக்க விரும்புகிறான்...
    அருமை... நன்றிகள் ஐயா!
    "அந்த மனிதாபிமான கர்ம வீரருக்கும் எனது வணக்கங்கள்."

    ReplyDelete
  13. கவிஞர் தனுசுவின் கவிதை வழக்கம் போல் நன்றாக தன்முனைப்புத் தருவதாக இருக்கிறது...
    //போனால் போகட்டும் போடா
    பழமையை நினைப்பது ஏனடா///

    இங்கே தாங்கள் கூறும் பழமை என்பது சென்ற கெட்ட அனுபவங்கள் என கொள்கிறேன்... ஏனென்றால் பழமை, பழைமை இரண்டும் இருவேறாகாது என்பது எனது எண்ணம்...

    ///பழைமை என்பது பொக்கிஷம்
    புதுமை என்பது வேஷம் /// இங்கு தான் எனது எண்ணம் சற்று வேறுபடுகிறது... புதுமை அது 'அவசியம்' அதுவே 'உசிதம்' அறிவின் உழைப்பின் முயற்சியின் வெளிப்பாடு புதுமை. ஆக, அது வேசமாகாது என்பதே எனது எண்ணம்... சீரமைக்க வந்த வார்த்தைகள் என நினைக்கிறேன்... குறை கூறுவதாக எண்ண வேண்டாம்... அப்படித் தோன்றினால் இதை மட்டும் அசட்டை செய்து விடுங்கள்...

    ///பூத்த பூ உதிர்ந்தால் என்னடா? புதிதாய்ப் பூக்க
    மொட்டு ஒன்று துளிர்த்திருக்கு பாரடா! - கொடியில்
    பழுத்த கனி கெட்டால் என்னடா? பழுக்க
    பச்சை காய் ஒன்று காத்திருக்கு பாரடா !////
    என்னை மிகவும் கவர்ந்த வரிகள்... அருமை.

    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  14. சொல்லடைவுகளை சுரமும் நிறமும் பிரித்து நிறைந்த கட்டுரையை ஆக்கிய கிருஷ்ணன் சார் நன்றிகள் பல!

    ReplyDelete
  15. மைனர் உண்மைக் கதையை தனது பாணிக்கு தனது அபிப்ராயங்களையும் அழகுற இணைத்து பசுமையான சின்னமாகவே கதைப் படைத்து இருக்கிறார்... ராசராசனாரின் சாமர்த்தியம் தான் அந்த நிறுவனத்தின் வளர்சிக்கு எல்லாம் ஜெயசிம்மன் சும்மா என்பது கதையின் துணிபு...
    நல்லப் புனைவு. பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே!

    ReplyDelete
  16. சகோதிரி தேமொழியின் ஆக்கமும் மிகவும் நன்று.... பல இடங்களை சுவாரஸ்யமாகவும்.... இன்றைய சூழலில் சின்னத்திரையின் தாக்கமும் மின்வாரியத்தார்களுக்கு கிடைக்கும் இலவச சாபமும் இன்னும் பலவும் நன்று..

    பகிர்வுக்கு நன்றிகள் சகோதிரி...

    ReplyDelete
  17. சகோதிரி சோபனா தங்களின்
    ஆக்கம் ஆரம்பம் so fun-ஆ... ஆரம்பம் ஆனாலும்
    அதுவே முடித்தது அர்த்தமுள்ள ஒண்ணா...
    கோபப் படுவோரையும் சிரிக்க வைத்தோமுன்னா
    வாழ்க்கை செழிக்கும் நன்னா!
    என்று கூறிய விதம் அருமை..
    பகிர்விற்கு நன்றிகள் சகோதிரி...

    ReplyDelete
  18. கொத்தமல்லி கொதிக்கவைத்தே வடித்து இருத்தால் அதுவும்
    தன் பங்கிற்கு உப்பை வடித்து இருத்துவிடும்
    என்ற அரிய அறியாத் தகவலைத் தந்த அன்பருக்கும் நன்றிகள்...

    ReplyDelete
  19. ஆஸ்திரேலியாவில் நின்று அருள்பாலிக்கும்!
    நினைத்த மாத்திரத்திலே சட்டென்று வருவான்
    சிட்னி முருகன்!!!
    அவனின் திரு உருவங்களை காண வாய்ப்புத் தந்த
    முருகனடிமை அழ.நடராசன் அவர்களுக்கும் நன்றிகள் பல...

    ReplyDelete
  20. ///"நீ,இப்படி பேசறது தான் உன் மருமகள் சொன்னது உண்மையோன்னு நினைக்க தோணுதுஎனக்கு"கோபம்பத்திக்கொண்டு வந்தது மூர்த்திக்கு.////
    'u ' டர்ன் அடித்து மருமக சொன்னபடி 'பயித்தியக்காரன் மாதிரியே பேசுறியே?' என்று ரசிக்க வைத்த வரிகள்..

    ///"விடு மூர்த்தி...நான் என் மகனுக்கு ஒரு சுமைதாங்கியாக எப்பவும் இருக்கனும்நினைச்சேன்...ம்...ஆனால் அவன் என்னை சுமையா நினைத்து
    இடிதாங்கியாகஇருக்கனும்ன்னு நினைக்கின்றான் போல...
    "டேய்...போதும் நிறுத்து உன்னோட உளறல்ல...டிஆர் மாதிரி அடுக்கு மொழியாஅடிக்கிட்டு போகாதே,இது நிஜ வாழ்க்கைக்குஉதவாது…/////
    'நிஜ வாழ்க்கைக்குஉதவாது' என்று சொல்லிவிட்டு சுமைதாங்கி இடிதாங்கி என்று அதே அடுக்கு மொழிகளைக் கையாண்டிருக்கும் விதம் வசனத்தில் நல்ல கான்ட்ராஸ்ட்.

    ///"இப்போ உன்னோட கோபம் என் மேலயா இல்ல இந்த பஜ்ஜி மேலயா?"
    "ம்...பஜ்ஜி மேலயும் அதை சாப்பிடுற ஆளு மேல இன்னும் அதிகமாவே கோபம் வருது"
    "இந்த‌ இர‌ண்டுஅப்பிராணிக‌ள் மீது உன‌க்கு எதுக்கு இவ்வ‌ளவு கோபம்?"
    ""அம்பத்தெட்டு வயசு ஆச்சே, இன்னும் இப்படியா பஜ்ஜியும் சொஜ்ஜியும் சாப்பிடறது?"
    "சொஜ்ஜியா? அது எப்படியிருக்கும் நான் சாப்பிட்டதேயில்லையே?"
    "ஆ..அது உங்க தலைக்குள்ள இருக்குதே அந்தக் களிமண்ணு மாதிரிதான் இருக்கும்...நான் எவ்வளவு சீரியசாப் பேசிட்டுயிருக்கேன், கவலையேயில்லாம ஜோக் பண்ணுரீங்களா?"//
    என்று ஆரம்பித்து
    ///"ஓ...நீ இந்த பஜ்ஜியைசொன்னியா...நான் பயந்துட்டேன்"என்றார் மூர்த்தி
    "நான் ஒண்ணும் பஜ்ஜியைசொல்லலை...அதை சாப்பிடுற ஆளை தான் சொல்றேன்"///
    முடிவிலும் நகைச்சுவைக் குறும்புடன் செல்லமாக சம்பாஷணையில் தம்பதியின் அன்னியோன்னியத்தை வெளிக் கொணர்ந்திருக்கும் விதம் ஷோபனாவின் பஜ்ஜியை ரு(ர)சிக்கத் தூண்டியது..

    மொத்தத்தில் இன்னிக்கும் கலக்கிட்டீங்க..கங்கிராட்ஸ்..கீப் இட் அப்.. வாழ்த்துக்கள் ஷோபனா..

    ReplyDelete
  21. ///kmr.krishnan said...
    மைனர் சொல்லியுள்ள கம்பெனிகள் தமிழகத்தில் இரண்டு உண்டு. அவருடைய 'கதையில்' திருவாரூர் வந்தாலும் அது மன்னார்குடி கம்பெனி கதைதான். திருவாரூர் கம்பெனி கதை ஏற்கனவே எழுதிவிட்டார். இப்போ மன்னார்குடி கம்பெனி!விஷயத்தை மறைவாக வைத்து எழுதுவது மைனருக்குக் கைவந்த கலை.இந்தக் கதையிலும் அசத்தி இருக்கிறார். என்ன 25 வருடக் கதையைச் சொல்லும் போது நீளம் தான் கூடிவிட்டது.அதனால் பரவாயில்லை. விவரமான ஆளு,விவராமாச் சொல்லியிருக்கிறார். நன்றாக உள்ளது.///

    என் ஆக்கத்தைப் படித்துப் பாராட்டிய KMRKஅவர்களுக்கு நன்றி..
    'கதையில்' ன்னு இதக் கொட்டேஷனுக்குள்ளே கொண்டு வந்தீங்க பாருங்க..அங்கதான் சார் நீங்க நிக்குறீங்க..
    புரிந்துகொள்ளக் கூடிய ஷார்ப்பான ஆளுங்கள் லிஸ்ட்டிலே முதலிடம் எப்போதுமே உங்களுக்குத்தான் என்று தட்டிப் பறிப்பதிலேயே குறியாய் இருக்கீங்களே?
    நன்றி..நன்றி..
    இந்த ஆக்கம் குறித்து நேரில் இங்கே பின்னூட்டம் இடத் தயங்குவதற்கான முகாந்திரங்கள் சிலருக்கு இருக்கலாம்.. அப்படி இருக்கும் பட்சத்தில் கருத்துப் பகிர்வு வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்காக எனது மெயில் ஐடிminorwall@gmail.com லே தொடர்பு கொள்ளும்படி அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்..
    இப்படியே பலரும் தங்கள் ப்ளாகிலே (ஆக்டிவாக இல்லாவிட்டலுமே) தொடர்புக்கான மெயில்ஐடி கொடுத்துவைப்பது நல்லது என்று நினைக்கிறேன்..
    நன்றி..

    ReplyDelete
  22. ஹா!..ஹா!...சபரியாரின் ஜோக்கும் நன்று.
    பகிர்விற்கு நன்றிகள்..

    ReplyDelete
  23. பஜ்ஜியைப் பற்றி எழுதியும், மினு மினு என்று மினுக்கும் படத்தையும் போட்டு
    இப்படி ரவுசு பண்ணலாமா? எங்கள் வீட்டில் பல விஷயங்களுக்கு என் வயதைக் காரணம் காட்டி 144! அதில் முதல் இடம் பஜ்ஜிக்குத்தான்!
    'எக்காரணம் கொண்டும் வீட்டில் பஜ்ஜி, போண்டா செய்யச் சொல்லக் கூடாது.வெளியிலும் வாங்கித் தின்னக் கூடாது.'

    என் கனவில் மஹாவிஷ்ணு புஷ்பகவிமானத்தில் ஏறிக்கொள் என்று சொன்னார்.திரு வைகுண்டம்(நேர்வழி) என்று விமானத்தின் முகப்பில் போர்டு வேற போட்டிருந்தது."பகவானே! ஸ்ரீவைகுண்டத்தில் பஜ்ஜி கிடைக்குமா?"என்று கேட்டேன்."பஜ்ஜியா?அப்படியென்றால்...?"கேட்டார் பகவான்."கிழிஞ்சதுபோ,நான் வரவில்லை, ஸ்ரீவைகுண்டம்" என்றேன்!

    லக்ஷ்மண, மூர்த்தி, பார்வதி சம்வாதம் அருமை.முதியோர் பிரச்சனையை எடுத்து ஆண்ட விதம் அருமை,ஸ்ரீஷோபனா அவர்களே!

    கிட்னிக்கு ஒரு ஆனந்த வழி சொன்ன ஆனந்த முருகனுக்கு ஒரு ஜே!

    'பாலாடை மூடிய மேலாடை'!!!! எங்கியோ போய்டீங்க சிங்கப்பூர் கவிசிம்மம் அவர்களே!பிரம்மபுர பிதாவும் சிலிர்க்க வைத்தார்.

    நம்மை கும்பாபிஷேகம் பார்க்க வைத்த அன்பர் நடராஜனுக்கு நன்றிகள்.

    dying, dieing வைத்து விளையாடிய பன் ந்ன்றாக இருந்தது
    Bombay dying ல் வாங்கினால் அபசகுனம். வாங்கும் போதே 'டையிங்' என்று சொல்லலாமா? சபாஷ் சபரி !

    என் ஆக்கத்தை வெளியிட்டு ஆதரவு அளித்த ஐயாவுக்கும் வாசிக்கும் அனைவருக்கும் என் நன்றி.

    ReplyDelete
  24. தஞ்சாவூராரின் கட்டுரைக்கதை நெஞ்சைத் தொட்டது..கடைசியில் சொல்லியிருந்த விஷயங்கள் KMRK வின் தானமும் சேர்ந்துதான்..
    பட்டாபிராமிலே கொஞ்ச காலம் இருந்தேன்..திருநின்றவூரை அடிக்கடிக் கடந்ததுண்டு..
    அங்கே வசிக்கும் நண்பர்கள் ஜெயா காலேஜ்க்கு சாப்ட்வேர் மார்க்கெட்டிங் என்று செல்ல நேர்ந்ததுண்டு..
    இருந்தும் பூசலார் பற்றிய விஷயம் கதையைக் தனித்தனியாகக் கேள்விப்பட்டிருந்தும் திருநின்றவூரைச் சேர்ந்தவர் என்று இதுவரை
    தெரியாது..
    பக்தியா? பஜனையா?மனிதாபிமானமா? என்றால் கண்டிப்பாக மனிதாபிமானம்தான்..
    வேளைக்கு உணவு கொடுக்கும் இவர் போன்றவர்களை வாழ்த்திப் பாராட்டி புகழ்வதா
    வேலைக்கு வழியேற்படுத்திக் கொள்ளாமல் தானத்துக்கு ஏங்கிக் கிடக்கும் தன்மானமில்லாத ஜென்மங்களை ஏசுவதா என்று புரியவில்லை..
    இந்த நிலை தொன்று தொட்டு தொடர்வது ஒரு ஆரோக்கிய சமுதாயத்துக்கு இழுக்கு என்றே நான் நினைக்கிறன்..
    ஒரு பக்கம் இந்த ஆண்டின் ஆயுதக் கொள்முதலிலே உலகத்தின் முதன்மையான கொள்முதலை இந்தியா செய்திருக்கிறது என்று
    வல்லரசு ஆவதற்கான அறிகுறிகள்..
    மறுபக்கம் அடித்தட்டிலே வறுமை..உழைப்பின்மை..வேலயில்லாத் திண்டாட்டம்..ஊழல்..சுகாதாரமின்மை..
    கோவில்களில் அர்ச்சனை செய்வோர் கேட்கும் கவுரவப் பிச்சைமட்டுமல்லாது ,
    ஆபீஸ்களில் காரியம் நடத்திக்கொடுக்கக் கையேந்தும் அலுவலர்களின் பிச்சை எடுக்கும் மனோபாவம்..பொதுப் பணத்தை வெட்கமின்றிக் கையாடல் செய்து ரவுடித்தனம் செய்யும் அரசியல் ஆட்கள் என்று
    ஈனத்தனமான ஒழுங்கீனத்திலே ஊறிப் போயிருக்கும் பெரும்பான்மை மக்கள்
    மனநிலை.. என்று பட்டியல் நீளுகிறது..
    இப்படித் திருத்தலங்களுக்குச் சென்று திரும்பும் நுழைவாயில்களில் படிக்கட்டுக்களில் சிறுகுழந்தைகள் கால்களைக் கட்டிக் கொண்டு பிச்சை கேட்கும் போது
    ஏற்படும் மனநிலை பரிதாபம் சிலநேரம், அருவெறுப்பு சிலநேரம்.. மொத்தத்தில் கேவலமாக உணர்ந்த தருணங்களே மனதில் நிலைத்து நிற்கிறது..
    தாய்நாடு என்று தவறைச் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை..
    இதிலேநாடு திரும்பும் NRIகளுக்கு பென்ஷன் திட்டம்
    அறிவித்து அவர்களை நாடு திரும்ப ஊக்குவிக்கப் போகிறார்களாம். நாடு திரும்புவார்களா NRIகள்?
    வளர்ந்த மற்ற நாடுகளைப் பார்த்தாவது அவலங்களைப் பட்டியலிட்டு சீர்படுத்தும்
    எண்ணம் அரசியல்வாதிகளுக்கு வருமா? இழிந்த நிலைக்கு மூலக் காரணமான மக்கள் மனநிலைதான் மாறுமா?
    சாபக்கேட்டிலிருந்து சீர்படுமா இந்த தேசம்?

    ReplyDelete
  25. எனது ஆக்கத்தை வெளியிட்ட ஆசிரியருக்கு நன்றிகள் .

    இன்று பத்து வகை சுவையோடு பெரி.............................ய்............ய.................... விருந்து படைத்து விட்டார் ஆசான்.

    இப்போதுதான் சுவைக்க துவங்கி உள்ளேன்.

    ReplyDelete
  26. ஐயா, என் படைப்பினை வெளியிட்டதற்கு நன்றி. இளவயதில் வார இறுதியில் குமுதம் படிக்க காத்திருப்பது போல் இருக்கிறது மாணவர் மலர் படிக்க காத்திருக்கும் உணர்வு. நீங்கள் தேர்வு செய்த படங்கள் அனைத்தும் சிறப்பானவை.

    ஆனந்தமுருகனின் வாரம் ஒரு தகவல், நடராஜன் அனுப்பிய படங்கள், மனைவியின் எழுத்துப் பிழையால் அற்ப சந்தோஷம் அடைந்து பிறகு ஏமாந்தான் கணவன் என்னும் சபரியின் நகைச்சுவை பகுதிகளும் இணக்கப்படிருப்பது வழக்கமாக கவிதை, கதை, கட்டுரைகள் நிறைந்த மாணவர் மலரை ஒரு முழுப் பரிமாணம் கொண்ட வார மலராக்கிவிட்டது. நன்றி.

    என்கதையைப் படித்தவர்களுக்கும், அது குறித்து கருது தெரிவித்தவர்களுக்கும் நன்றி. குறிப்பாக மைனரின் கைதட்டலுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  27. தஞ்சாவூர் ஐயா சிந்திக்க வைத்துள்ளார். உண்மையில் சிறு வயதில் பழக்காவிட்டால் மனிதகுலம் பக்தி என்ற பண்பு இன்றி எப்படி இருந்திருக்கும்? மதத்தின் பேரில் அடிதடி சண்டையில்லாமல், பாகுபாடு இல்லாமல் மேலும் மனித நேயத்துடன் இருந்திருக்க வாய்ப்புள்ளதோ? பூசலார் நாயனார் உதாரணமும் 'நெஞ்சுக்கு நிம்மதி, ஆண்டவன் சந்நிதி நினைத்தால் எல்லாம் நமக்குள்ளே' என்பதை நினவு படுத்துகிறது.

    பக்தி என்பதும் மனிதாபிமானம் என்பதும் இரண்டும் ஒன்றா, வெவ்வேறா? இது மிக சுலபமான கேள்வி. இரண்டும் வெவ்வேறு, எனக்கு சந்தேகமே இல்லை. இது என் அனுபவ வார்த்தை. என் தந்தை பெரியார் பாசறை மாணவர். கடவுள் பக்தி இல்லாததால் அவருக்கு மனிதாபிமானம் இல்லை என்று சொல்ல முடியாது. எத்தனையோ முறை பலர் தங்கள் பிள்ளைகளுக்கு தேர்வுக் கட்டணம், மகனுக்கு இறுதி காரியத்திற்கு பணம் என பொய் சொல்லி ஐந்திலிருந்து ஐந்தாயிரம் வரை சுருட்டிக் கொண்டு போனதை, என் அம்மா சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லி அப்பா எளிதில் ஏமாற்றப் படுவதைக் கிண்டல் செய்வார்கள். மனித நேயம் கொண்ட இளகிய மனதிற்கும் பக்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    தனக்கு என்ன பலன் என்று கணக்கு பார்த்து உபயம் இன்னார் என்று பெயர் வரும்படி உதவி செய்யும் பக்தர்களுக்கு மனிதாபிமானம் இருப்பதாகக் கூற முடியாது. "ஆடை அணிகலன் ஆடம்பரங்களை ஆண்டவன் விரும்புவதில்லை, அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழி பாடில்லை" என கவியரசர் அறிவுறுத்தியுள்ளார். அன்னை தெரசா போல் இரண்டும் ஒரு சேர, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என உணர்துபவர்களும் உண்டு. லால்குடியாரின் மேன்மையை உணர வாய்ப்பளித்ததற்கு நன்றி

    ReplyDelete
  28. தனுசு அறிவுறுத்துவது போல ஏற்றம் என்றும் வேண்டுமென்றால் மாற்றம் நிச்சயம் வேண்டும்தான். நல்ல தன்னம்பிக்கையூட்டும் எளிய வரிகளைக் கொண்ட பாடல். ஊர் கிளம்பும் முன் நம் தனுசு கோடம்பாக்கத்தை ஒரு முறை பார்த்தாரானால், தனுஷ் கவிதைக் கொலைவெறியில் இருந்து நமக்கும் ஒரு மாற்றம் கிடைக்கக்கூடும் என்ற நப்பாசை.

    -----
    KISS is an acronym for Keep it simple, Stupid!
    KMRK ஐயா, இதுவும் நன்றாக இருக்கிறதல்லவா? :)))) யாரையாவது திட்டும்போழுது கூட 'சனியனே' என்றுதான் திட்டுவார்கள், மற்ற கிரகங்களுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை, ராகு கேதுவுக்கு கூட இல்லை. சொல்லடைவுகளைச் சொல்லும் போது ஓரோர் தலைப்பாகக் கொஞ்சம் சொல்ல நினைக்கும் திட்டம் நன்றாக இருக்கிறது. தொடருங்கள். நன்றி.

    -----
    மைனர் தமிழக அரசியல் மாற்றங்களை நீங்கள் கதையாக வடிக்கும் அழகே அழகு. உங்கள் கதையில் நான் ரசித்த இடங்கள்...
    "சரியான வாய்ப்புகள் கிடைக்கும் வரை இந்த மனிதன் இதுவரை எங்கிருந்தான் என்று யாருக்குமே தெரிவதில்லை..எல்லோருக்குமே வாழ்வில் அப்படி
    வாய்ப்புகள் கிடைத்துவிடுவதுமில்லை."
    ஆமாம் உண்மை...உண்மை..

    "ஆறாமாதிபதி செவ்வாய் பனிரெண்டாமிடத்தில் பரிவர்த்தனையில் உச்ச பலம் பெற்று இருப்பதால் எதிரிகளை வென்று வாகை சூடி அடுத்தவனின் யோகத்தை பறித்து உங்களை அனுபவிக்க வைக்கும் அமைப்பு இது'"
    அப்படியா மைனர்? ஹி.ஹி. ஹீ.... இந்த ஜாதகம் மிகவும் பரிச்சயமானதாக இருக்கிறதே, அத்தோடு அந்த விருச்சிக லக்கினத்து ஜாதகத்திற்கு லக்கினத்தில் சுக்கிரனோடு புதனும் இருக்கிறதோ? மாண்புமிகுவிற்கு ராஜயோகம்னு சொல்லுங்க.

    "அதில் இந்தக் கம்பெனி 'அல்வா' ரொம்ப ரொம்பப் பிரசித்தம்."
    ம்ம்..ம்... உங்கள் குசும்புக்கு ஒரு அளவே இல்லையா?

    ஜெயசிம்மனின் கைக்குக் கம்பெனி வந்ததே வேறு தனிக் கதை..
    இந்த தனிக்கதையையும் இன்னொரு நாள் உங்க நடையில் விவரித்து எழுதினால் நான்றாக இருக்குமே. ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்

    -----
    ...நான் என் மகனுக்கு ஒரு சுமைதாங்கியாக எப்பவும் இருக்கனும்நினைச்சேன்...ம்...ஆனால் அவன் என்னை சுமையா நினைத்து இடிதாங்கியாகஇருக்கனும்ன்னு நினைக்கின்றான் போல...

    இந்த வரிகள் மூலம் வேதனை நிறைந்த பெற்றமனதை நன்றாகப் படம் பிடித்துள்ளீர்கள் ஸ்ரீஷோபனா. நிகழ்காலத்தில் அதிகமாகிக் கொண்டிருக்கும் மனதைப் பாதிக்கும் சமுதாயப் பிரச்சினையை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். லக்ஷ்மணன் எதார்த்தமாக எப்படி வாழ்கையை எடுத்துக்கொண்டு தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறார். நல்ல கதை, நன்றி.

    ஆனாலும் பார்வதி சமைத்தும் கொடுத்துவிட்டு மூர்த்தியை என்னமாக வைகிறார்கள். எனக்கு மூர்த்தியைப் பார்க்க பாவமாக இருந்தது.
    -----

    "விதிசெய்த சதியால் அல்ல - என்
    மதி மயங்கி உயிர்கசிய உன்
    கரம் பற்றினேன் சகியே!"

    நம் உளறல் கூட ஒருத்தருக்கு கவிதை எழுத கருத்து எடுத்துக் கொடுக்கிறதா? ஹி. ஹி. ஹீ....இனிமே பின்னூட்டத்தில யோசிக்காம நிறைய கிறுக்கிட வேண்டியதுதான். சகோதரர் ஆலாசியத்தின் இரண்டு கவிதைகளும் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  29. தஞ்சாவூர் அய்யா அவர்கள் எழுதிய பக்தியும் மனிதாபிமானமும் நமது kmrk அவர்களை காட்டுகிறது என்று நினைக்கிறேன் .

    பக்தி இருக்கும் இடத்தில் பணிவு ,இறை அச்சம், மரியாதை ஆகியவை இருக்கும். மனிதாபிமானம் உள்ள இடத்தில் இவை யாவும் இருக்கவும் செய்யும் இல்லாமலும் இருக்கும்.மனிதாபிமானம் உள்ளவர்களிடம் பக்தி எதிபார்க்கமுடியாது. உண்மையில் பக்தி உள்ளோர் எதையும் இறைவனிடம் முறை இடுவார்கள். மனிதாபிமானம் உள்ளோர் நேரடியாக இறங்கி விடுவார்கள்.பக்தி என்பது இறைவனிடம் காட்டுவது. மனிதாபிமானம் என்பது சக உயிர்களிடம் காட்டுவது.இறைவனுக்கு உணவுகளை படைத்து வழிபடுவதைவிட வயிற்று பசியோடு இருப்போருக்கு அதை கொடுப்பது உத்தமம் என்பது எனக்கு பிடித்தமான ஒன்று.

    பக்தி வேறு மனிதாபிமானம் வேறுதான். இரண்டும் சேர்ந்து இருந்தால் அவர் மனிதனைவிட மேலானவர்.

    ReplyDelete
  30. சொல்லடைவா சொல்லடையா விளக்கங்களை கொடுத்து kmrk சொல்லின்செல்வர் போல் திகழ்கிறார்.படிக்க நன்றாகவே உள்ளது சனிஸ்வரனை பற்றி எழுதியது நடைமுறையில் ஏதும் சிக்கல் வரும்போது பலரும் சொல்ல கேட்டுள்ளேன்.

    ReplyDelete
  31. கும்பகோணத்துப் பார்ப்பானைக் குட்டைக்கு அனுப்பிய KMRKவின் சொல்லடை அருமை..
    (அதென்ன ஆமைவடை,மெதுவடை, தவலைவடை, த‌யிர்வடை போல ஒரு வடையா என்னும் சாப்பாட்டுப் பிரியர்கள் பதிவை விட்டு விலகவும்)
    எல்லடையை விட்டுடீங்களே?
    பதிவை விட்டு விலகச் சொல்லும் வாத்தியாரின் பாணி KMRKக்கும் தொற்றிக் கொண்டுவிட்டது..
    பழங்காலத்தில் தமிழர்கள் சொல்லடை என்ற வழக்கிலே இருந்து வந்த விஷயங்களைத் தொகுத்து
    புது வேலையை டிஜிடல் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் KMRKவை
    பாராட்டுகிறேன்..

    ReplyDelete
  32. ////kmr.krishnan said...எவ்வளவு 'கீன் அப்செர்வேஷன்' பாருங்கள் மைனர்!இளம் பெண்கள் வழிபடும் முறையினைச் சொல்லியுள்ளார் பாருங்கள் அபாரம்!கட்டாயம் என்றும் பதினாறு மன்றத்தலைவர் பதவி அவருக்குத்தான்.///

    அதானே?

    ReplyDelete
  33. கதைபடித்து விமர்சித்த ஆலாசியம் அவர்களுக்கு நன்றி..

    ReplyDelete
  34. வாங்க வாங்க வகுப்பறையின் சோ அவர்களே .

    கைமாறும் கம்பெனிகள் .தலைப்பை பார்த்தபோது முன்பு போல அலுவலக கதை என்று நினைத்தேன் .டிவி ல் மேட்ச் பார்த்துக் கொண்டு படித்தேன்.கடைசி வரிகளை நெருங்கும் போது ஒரு பொடி தெரிந்தது மீண்டும் ஒருமுறை படித்தேன் புரிந்தது. .சாதரணாமாக kmrk அவர்களைத்தான் தொடுவீர்கள் இம்முறை காரண கர்த்தாக்களை தொட்டு இருக்கிறிர்கள் .மைனர் கலக்குங்கள்.

    ReplyDelete
  35. ///பக்தி என்பதும் மனிதாபிமானம் என்பதும் இரண்டும் ஒன்றா, வெவ்வேறா? இது மிக சுலபமான கேள்வி. இரண்டும் வெவ்வேறு, எனக்கு சந்தேகமே இல்லை. இது என் அனுபவ வார்த்தை. என் தந்தை பெரியார் பாசறை மாணவர். கடவுள் பக்தி இல்லாததால் அவருக்கு மனிதாபிமானம் இல்லை என்று சொல்ல முடியாது. எத்தனையோ முறை பலர் தங்கள் பிள்ளைகளுக்கு தேர்வுக் கட்டணம், மகனுக்கு இறுதி காரியத்திற்கு பணம் என பொய் சொல்லி ஐந்திலிருந்து ஐந்தாயிரம் வரை சுருட்டிக் கொண்டு போனதை, என் அம்மா சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லி அப்பா எளிதில் ஏமாற்றப் படுவதைக் கிண்டல் செய்வார்கள். மனித நேயம் கொண்ட இளகிய மனதிற்கும் பக்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.///////

    I repeat it..

    இதே பாரம்பரியம்..இதே வகை அனுபவங்கள்..
    'தானம் கொடுப்பதை பெருந்தன்மையாக நினைப்பதை இளிச்சவாய்த்தனம் என்று அடுத்தவன் நினைக்கிறான்..
    அடுத்தவன் நினைத்தால் கூட பரவாயில்லை..தானம் பெறுபவனே நினைக்கிறான் என்பதுதான் அவலம்..'
    உதவி பெரும் சொந்த பந்தங்களும் உறவினர்களும் நண்பர்களும் இதற்கு விதிவிலக்கல்ல..இப்படி நன்றிகெட்ட கேடுகெட்ட ஜென்மங்கள் பல உண்டு..
    இதை பலமுறை என் ,தாய் தகப்பனாரிடம் விவாதித்ததுண்டு..
    'தன்னைப் பேணி' என்று நேற்று ஒரு வார்த்தை பேச்சில் அடிபட்டது..அதற்கும் இதுதான் பதில்..
    தன்னையும் தனக்கு நெருங்கியவர்களின் அபிலாஷைகளையும்
    தீர்த்து வைக்கவேண்டியது குடும்பஷ்தனின் முக்கியக் கடமைகளில் ஒன்று..இதற்கே உலகம் திண்டாடும் போது ஊரை அடித்து உலையில் போட்டு மக்கள் பணத்தில் விளையாடும்
    முக்கியஸ்தர்கள் வேண்டுமானால் கடைத்தேங்காயை எடுத்து
    வழிப் பிள்ளையாருக்கு உடைக்கலாம்..

    ReplyDelete
  36. சற்றே இளைப்பாற ; தேமொழி அவர்களே நீங்கள் பேய்கதை மன்னன் P.T.சாமியின் பேத்தி என்று நினைக்கிறேன். படிக்கையில் ஒரு பயம் வரத்தான் செய்தது .தடுக்கல் திணறல் இல்லாத நடை .

    சரி உங்களுக்கு எப்படி பேயை கண்டால் பயமா இலையா(இருக்கா இல்லையா எனபது வேறு விஷயம்).

    ReplyDelete
  37. கொத்தமல்லி இங்கே ஜப்பானில் கிடைக்காது..
    என்ன செய்யலாம் ஆனந்தமுருகன்..?
    ஒரு வழி சொல்லுங்க?

    ReplyDelete
  38. அத்தி பூத்தார் போன்று எப்போவாவது வருகிறார் ஷோபனா அவர்கள். அப்படி வந்தாலும் நச் என்று தருகிறார். பச்சியை சாப்பிட்டு முடித்துதும் நாக்கு இன் னொன்று கேட்கும் அதை போலவே படித்து முடிக்கையில் இன்னும் ஒரு முறை படிக்க தோன்றுகிறது.

    ReplyDelete
  39. சிற்றின்பத் தேரேற்றி
    உலாவந்தார் சிங்கைக்கவி

    பேரின்பத்தேரில் ட்ரான்ஸ்சிட்டும் செய்தார் - சரிதான்..

    கடைசியில் கைவிட்டார்..
    தடுத்தாள்வாய் எனை

    எனத்தனைமட்டும் பிரித்து
    பிரம்ம புரத்துக்கு..

    கூட்டிவந்த டிக்கெட்டைக்
    கழட்டிவிட்டு

    போட்டாரே சிங்கிள்டிக்கெட்-
    அது நியாயமா?

    ReplyDelete
  40. 'Husband jumps with joy but types '
    the story lies in this single line..
    english is a bloody language always.
    thanks for repeating it..சபரி.

    KMRKசொல்வார்.
    'தமிழ் என்தாய்மொழி..
    சமஸ்கிருதம் என்தந்தைமொழி' என்று.

    ஆங்கிலம் யார்மொழி?
    அந்நியன் மொழி..
    அதிலும் எதிரியின் மொழி.

    விருந்தாளியின் மொழி
    என்றாலே அதுகேவலம்..
    தாய்தந்தை மொழியைக் கொண்டாடலாம்..ரத்த
    உறவு உள்ளதால்..
    எதிரியையோ விருந்தாளியையோ இந்தலிஸ்ட்டிலே சேர்த்தால்
    கேவலம் யாருக்கோ?
    எதிரியின் மொழிக்கேன்
    இத்தனை பல்லாக்கோ?

    ReplyDelete
  41. வணக்கம் ஐயா,
    தனுசு அவர்களின் கவிதையின் ஆரம்ப வரிகள் எனக்கு பிடித்த சிவாஜி கணேசனின் சோக பாடலை தான் முதலில் நினைவுபடுத்தியது...பின்னர் படிக்க படிக்க வாழ்க்கைக்கான "எனர்ஜி"பானம் என்று புரிந்தது...மீண்டும் நல்லதொரு அருமையான கவிதையை தந்துள்ளீர்கள்...நன்றி...

    தஞ்சாவூரார் அவர்களின் கட்டுரைகள் எப்பொழுதும் படிப்பவர்களுக்கு நிச்சயம் அறிந்திடாத நல்ல தகவல்களை அறிந்திட செய்யும்...கட்டுரையில் கூறியுள்ள விஷயங்கள் அனைத்தும் தினமும் நாம் காண்பவையே,மிகவும் அழகான நடையில் யதார்த்தங்களை ஐயா தந்துள்ளார்...‌இறைவன் குடிக்கொள்வது நிச்சயம் நல்ல மன‌தில் என்பதை அழகாகவும் ஆழமாகவும் தந்துவிட்டார்...நன்றி ஐயா...பெண்கள் மனதார அல்லது ஆத்மார்த்தமாக வணங்குவதற்காக அவ்வாறு வணங்குகின்றார்கள் என்று நினைக்கின்றேன்...

    ReplyDelete
  42. ஆனந்த முருகனின் மருத்துவ குறிப்புக்கு நன்றி.பொதுவாகவே நம்மவர்கள் பொதினா-மல்லி இரண்டையும் அதிகமாகே உபயோகப் படுத்துவார்கள் , மீன் கோழி ஆட்டு இறைச்சி, பிரியாணி இவைகளில்.

    கிட்னியை சுத்தப் படுத்த வாழைத்தண்டு வாழைப் பூ இவைகளும்
    பெரிதும் உதவுகின்றன. இவைகளை சமையல் செய்து சாப்பிட்டால் கிட்னி கோளாறுகள் குணமாகும்.அதேபோன்று வெள்ளை முள்ளங்கியும் பெரிதும் உதவுகிறது.

    ஆனால் முதன்மையானது பார்லி தான்.இதனை சோற்றுக் காஞ்சி பதத்திற்கு வேகவைத்து பார்லி யோடு தண்ணீரையும் குடித்து வந்தாள் கிட்னியின் பிரச்சினைகள் நூறு சதவிகிதம் குணமாகிவிடும் இதனை சீனர்கள் தினமும் அதிகாலையில் செய்து குடிக்கிறார்கள் .

    நம்மவர்களுக்கு ஒரு tipps . பீர் செய்ய அத்தியாவசிய மூலப் பொருள் பார்லி.இந்த பார்லி யைக் கொண்டுதான் பீர் தயாரிகிறார்கள் .பீர் சாப்பிட்டால் கிட்னி சுத்தமாகும் .

    பாருங்கள் கெட்டதிலும் ஒரு நன்மை இருக்கிறது.

    ReplyDelete
  43. சகியை தெள்ள தெளிவாகவே ஆலாசியம் மனதில் நிறைத்து வைத்துள்ளார் என்று நினைக்கிறன் .பெண்ணையும், பெண்மையையும் , பதுமையையும் தாங்கி வந்த பதங்கள் தந்ததோ இதங்கள்.

    ReplyDelete
  44. அவர்களின் "சொல்லடைவு"கள் அனைத்தும் சுவாரசியமாக இருந்தது...அதில் எனக்கு பிடித்தது அனைவரையும் "பிடிக்கும்" சனிப்பகவனுக்கு கூறப்படும் சொல்லடைவுகள் தான்...என் ஆச்சி அடிக்கடி கூறும் ஒரு சொல்லடை அதன் வரிகள் எனக்கு சரியாக நினைவில்லை...அதன் பொருள்,ஊரில் பலரின் எதிர்காலத்தை மாற்றிட அல்லது அறிந்திட‌ ஜோதிடர் உதவிடுவார்,ஆயினும் அவரது துன்பங்களை போக்க யாரும் இலர் என்பன போன்று வரும்..."ஷார்ட் அன்ட் ஸ்வீட்",எப்பொழுதும் அனைவரையும் கவரும் தானே...நல்ல ஆக்கத்திற்கு நன்றிகள் ஐயா...

    மைனர் அவர்கள்,மீண்டும் "பிசினஸ்மேன்" ஆகிவிட்டார்...ஜப்பானில் இருப்பதால் என்னவோ "சுனாமி"யை மறக்காமல் நினைவுப்படுத்திவிட்டார்...கூடவே கதையில் வரும் ஜோதிடர் பற்றிய சம்பவங்கள் நம் வகுப்பறையின் தாக்கம் தானே...இறுதியிலும் அதை கையாண்டது மிகவும் அருமை...சனீஸ்வரர் அவருக்கு இனி "இராஜ"போகமான "நிம்மதியான" வாழ்க்கையை தன் பெயர்ச்சியில் தரலாம் என்று நினைக்கின்றேன்...ஒரு இந்திய தொழிலதிபர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பதை சுவாரசியாமான எழுத்து நடையால் ரசிக்க செய்து விட்டீர்கள்...இக்கதையின் அடிப்படை "பிர்லா"குடும்ப பிரச்சனையில் ஏற்பட்ட நிகழ்வுகளை ஒட்டி எழுதப்பட்டதோ?...நல்ல கதைக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  45. kmr.krishnan said...அடாபுடா என்று போட்டுத் தாக்குகிறீர்களே!

    minorwall said...தனுசுவின் கவிதை கேட்டு 'மரியாதையாப் பேசு'
    என்று முதுகில் சொருகி வைத்திருக்கும் அரிவாளை வெளியில் எடுத்து வீசும் ஆட்கள் வரலாம் ஜாக்கிரதை..தனுசு..ஜாக்ரதை..

    மரியாதை குறைவாகவோ திமிராகவோ எழுதவில்லை .அப்படி ஒரு வடிவம் வந்ததிற்கு வருந்துகிறேன்.

    இந்த கவிதை உருவான சூழல் விளக்கி விடுகிறேன் . ஒரு மாதத்திற்கு முன் புதுகை செந்தில்குமார் எழுதிய எங்கே?எங்கே? என்ற கவிதை யை படித்து முடித்த பின் அவருக்கான பின்னூட்டம் தான் இந்த கவிதை .

    எங்கே எங்கே என்று ஏன் தேடுகிரிர்கள் "போனதை விடு இருப்பதை கொண்டாடு"என்று அவருக்கான பின்னூட்டம் எழுதி விட்டு படித்து பார்த்தேன் .இந்த பின்னூட்டம் ஏதோ பதில் கொடுப்பது போல் உணர்ந்தேன் .போட்டிக்கு எழுதியது போன்றும் ஒரு தோற்றம் எனக்கே தோன்றியது ,அதனால் அதனை அப்போது பின்நூட்டாமாக அனுப்பவில்லை .இப்போது அத்தனை கவிதையாக அனுப்பி உள்ளேன்

    வரும் காலங்களில் இப்பிழை வராமல் பார்த்துக் கொள்கிறேன்

    கவிதையை ரசித்த் அனைவருக்கும் நன்றி .

    ReplyDelete
  46. தேமொழி அவர்களின் சிறுகதை "அபாரம்"...மிகவும் நேர்த்தியான சொல்நடை மற்றும் கொண்டுச் சென்ற விதம் நான் உண்மையில் ஒரு திகில் சம்பவத்தை அருகில் நின்று பார்ப்பது போலவே இருந்தது...ஆரம்பத்தில் உமா பயப்படும் இடங்களை போலவே நான் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது எனக்குள்ளும் இது போன்று தோன்றியுள்ளது...நல்ல ஆன்மாக்கள் இறந்த பின்னும் நல்லவர்களாகவே வாழ்கின்றனர்...இவ்வாறு அருமையான "திகிலான" திகில் கதைகளை தான் நான் மிகவும் விரும்பிப் படிப்பேன்;படித்து விட்டு என் அம்மாவை விட்டு எங்கேயும் செல்ல மாட்டேன்,இன்று வரை...ஹிஹிஹி...ராஜேஷ் குமார் கதையை படித்தது போலவேயிருந்தது எனக்கு...ர‌சிக்கும்ப‌டியான‌ அருமையான‌ க‌தையை த‌ந்த‌ தேமொழிக்கு ந‌ன்றிக‌ள்...வாழ்த்துக‌ளும்,பாராட்டுக‌ளும் குவியும் பாருங்க‌ள்!!!

    ReplyDelete
  47. அலோசியம் அவர்களின் கவிதை படிப்பதற்கு "கம்ப இராமயணம்" போன்று தோன்றியது எனக்கு...அந்த அளவிற்கு அழகாக வர்ணித்து எழுதியுள்ளார்...தேமொழி எழுதிய பின்னூட்டத்தில் அவர் எழுதியது அன்றே எனக்கு ஏதோ கவிதை போலவே தோன்றியது...ஆச்சரியம் பாருங்கள் நான் நினைத்ததை நீங்கள் கவிதையாய் வடித்து விட்டீர்கள்...நல்லதொரு ரசிக்கும்படியான கவிதையை தந்த அலோசியம் அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகும்;தேமொழி அவர்களுக்கும் நிச்சயம் சேரும்...

    ReplyDelete
  48. ஆனந்த முருகனின் குறிப்பு புதிதான தகவல்...பயனுள்ள தகவலை பகிர்ந்து கொண்டுள்ள அவருக்கு நன்றிகள்...

    சிட்னியில் உள்ள முருகக் கோவிலின் வெளிப்புறத் தோற்றம் மிகவும் அழகாக உள்ளது...சிட்னியில் உள்ள முருகப் பெருமானின் அருளால் ஆவது "தூங்கிக்" கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி விழிக்கட்டும்;கோப்பையை வெல்லட்டும் என்று பிரார்த்திக்கின்றேன்...

    சபரி அவர்களின் நகைச்சுவை நன்றாக இருந்தது...ஓர் எழுத்தால் அவர் அடைந்த சந்தோஷம் ஒரு நிமிடம் கூட நிலைக்கவில்லை...பாவம்

    ReplyDelete
  49. கோவில்களில் சிறப்புக் கட்டண வசூல் பற்றி இன்று தினமலரில் பலரின் அபிப்பிராயங்கள் வெளி வந்துள்ளன.ஓரிருவர் அதனை வரவேற்றும் கூறியுள்ளனர்.

    மாற்று மதங்களில் உறுப்பினர் வசூல் போல ஏற்பாடு உள்ளது.அவர்கள் சார்ந்துள்ள மத அமைப்பினரிடம் தொகை செலுத்தி ரசீது வாங்கி பாதுகாக்க வேண்டும்.இறந்தவர்களை அவர்களுக்கு உரிமையான‌ இடுகாட்டில் புதைக்க அந்த மத உறுப்பினர் தனது உறுப்பினர் உரிமையை நிரூபிக்க வேண்டும்.இது போன்ற நிர்பந்தங்கள் நமது அமைப்பில் இல்லை.

    கூட்டம் உள்ள கோவில்களைத் தவிர்த்து, கூட்டம் இல்லாத கோவில்களுக்குப் போய் நமது பக்தியை காண்பிக்கலாம்.கோவிலுக்கு வரவில்லையென்றாலும் நமது தெய்வங்கள் கோபம் அடையமாட்டார்கள். தேர்த் திருவிழா, வீதியுலா என்று வந்து காட்சி கொடுப்பார்கள்.

    பணக்காரக் கோவில்களில் நடைபெறும் பாகுப்பாட்டினை நான் நியாயப்படுத்தவில்லை. ஒரு கோவில் ந‌மது கவனத்தை இவ்வாறு திசை திருப்புகிறது எனில் அதனை நாம் தவிர்ப்பதே விவேகம்.

    ReplyDelete
  50. //போட்டிக்கு எழுதியது போன்றும் ஒரு தோற்றம் எனக்கே தோன்றியது ,அதனால் அதனை அப்போது பின்நூட்டாமாக அனுப்பவில்லை .இப்போது அத்தனை கவிதையாக அனுப்பி உள்ளேன்
    வரும் காலங்களில் இப்பிழை வராமல் பார்த்துக் கொள்கிறேன் //

    உங்களுடைய வாதம் தவிர்க்க வேண்டும் என்ற மனோபாவத்தைப் பாராட்டுகிறேன். ஆனால் ஆரோக்கியமான வாதங்களும் பிரதிவாதங்களும்தான் இரு பக்கங்களையும் மக்களுக்குக் கொண்டு செல்லும். நமது ஞானமரபு வாதம்க்=பிரதிவாதம் செய்தே வள‌ர்ந்தது.

    'அடாபுடா' ஒன்றும் தவறல்ல. மேலும் ஒரு கவிஞர் இப்படியெல்லாம் கட்டுப்பாடு விதித்துக்கொண்டு எழுத முடியாது.கவிதை என்பதே 'சட்' டென்று பொங்கியெழும் உணர்ச்சிப் பிரவாகமே.

    மேலும் எல்லோருமே 'அடாபுடா' என்று எழுதியுள்ளார்கள்.

    'வில்லினை எடடா..அந்தப் புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா..'

    'தமிழன் என்று சொல்லடா..'

    'பாட்டுக்கொரு புலவன் பாரதியடா...'

    'அச்சம் என்பது மடையமடா...'

    'போனால் போகட்டும் போடா...'

    'போடா போடா புண்ணாக்கு..'

    ReplyDelete
  51. //வாழ்த்துக‌ளும்,பாராட்டுக‌ளும் குவியும் பாருங்க‌ள்!!!//

    ஆமாம் ஆமாம் அள்ளுவதற்கு கூடையோடு தயாராக இருங்கள் தேமொழி!அப்ப‌டி பாராட்டாதவர்களை சிகரெட் லைட்டெர் தாத்தா வந்து ராத்திரி பயமுறுத்துவார் என்று ஒருவரி சேர்த்துவிட்டிருக்கலாம்தானே!

    மொத்தமா நாம்ப ஒரு பத்துபேர் Mutual Admiration Society
    நடத்திகிட்டு இருக்கோம்.இதிலே பாராட்டு வந்து குவியுமாங்காட்டியும்..அடபோங்க அம்மணி..! டமாஸ் பண்ணவும் ஒரு அளவில்லையா?

    ReplyDelete
  52. பின் தொடர்வோர் எண்ணிக்கை 3000 தொட்டது! வகுப்பறை ஒரு பார்ட்டி வைக்கலாம்.

    பின்னூட்டம் இடுவோர் எண்ணிக்கை. ஒரு 100 ஆகவாவ‌து ஆக வேண்டாமோ?
    20 கூட இல்லையே!

    ReplyDelete
  53. இன்றைய பதிவுகள் அனைத்தையும் நிதானமாகப் படித்தேன். தனுசுவும் ஆலாசியமும் வழக்கம் போல் புதுக் கவிதையில் நம்மை மகிழ வைத்து விட்டார்கள். இன்றைய அதிர்வு எனக்கு சகோதரி தேமொழியின் கதையில்தான் ஏற்பட்டது. படிக்கும்போதே அந்த தாத்தாவிடம் ஏதோ கோளாறு என்று நினைத்தது சரியாகப் போயிற்று. கதைசொல்லும் பாணி அருமை. தொடரட்டும் பணி. ஆசிரியர் புதிய கதாசிரியர்களைத் தோற்றுவிக்கும் பணியில் முதன்மையிடம் பெறுகிறார். ஷோபனா அவர்கள் எழுத்தில் நல்ல விறுவிறுப்பு இருக்கிறது. தொய்வு இல்லாமல் எழுதிச் செல்வது பாராட்டுக் குரியது. நமது மைனர் அவர்களின் கதையை முதலில் படித்துவிட்டு பின்னர் பலருடைய பின்னூட்டங்களையும் படித்தபின்னர்தான் அவர் வைத்திருந்த பொடி தெரிந்தது. நல்ல தமிழ். வாழ்க! ஒரு கணவன் மனைவி என்றிருந்தால் ஆத்மார்த்தமான ஒற்றுமை இருக்கக்கூடாதா. நமது 'ஜோக்'குகள் எல்லாம் பார்த்தால், அப்பாடா ஒழிந்தாள் என்றோ, ஒழிந்தான் என்றொ மனோபாவம் உள்ளவர்கள் அதிகம் போல் தெரிகிறதே. சரி!சரி! ஜோக்தானே, ஏற்றுக் கொள்ளலாம் எதார்த்தத்தில் அப்படி யாரும் இருக்க மாட்டார்கள். இன்றைய ஞாயிறு மலர் திணரத் திணரப் பதிவுகளைக் கொடுத்து படிக்க வைத்துவிட்டது. நன்றி ஆசிரியர் ஐயா! எல்லா எழுத்தாளர்களும் தொடர்ந்து எழுதுங்கள். உங்களில் ஒரு சுஜாதா, ஒரு ஜெயகாந்தன், ஒரு தேவன் அவ்வளவு ஏன் ஓர் புதிய திகில் கதை மன்னன்/மன்னி தோன்றலாம்.

    ReplyDelete
  54. என் ஆக்கத்தை வெளியிட்ட வாத்தியார் ஐயாவுக்கு முதலில் என் நன்றிகள்...
    \\
    சகோதிரி சோபனா தங்களின்
    ஆக்கம் ஆரம்பம் so fun-ஆ... ஆரம்பம் ஆனாலும்
    அதுவே முடித்தது அர்த்தமுள்ள ஒண்ணா...
    கோபப் படுவோரையும் சிரிக்க வைத்தோமுன்னா
    வாழ்க்கை செழிக்கும் நன்னா!
    என்று கூறிய விதம் அருமை..
    பகிர்விற்கு நன்றிகள் சகோதிரி...\\
    என் ஆக்க‌த்தினை ப‌டித்து பாராட்டிய‌மைக்கு மிக்க‌ ந‌ன்றி அலோசிய‌ம் அவ‌ர்க‌ளே!
    \\minorwall said...
    ///"நீ,இப்படி பேசறது தான் உன் மருமகள் சொன்னது உண்மையோன்னு நினைக்க தோணுதுஎனக்கு"கோபம்பத்திக்கொண்டு வந்தது மூர்த்திக்கு.////
    'u ' டர்ன் அடித்து மருமக சொன்னபடி 'பயித்தியக்காரன் மாதிரியே பேசுறியே?' என்று ரசிக்க வைத்த வரிகள்..
    ஆஹா...என் கதையை ரசித்து குறிப்பிட்டுக் காட்டி பாராட்டிய மைனர் அவர்களுக்கு எனது நன்றிகள்...உங்களைப் போன்று பலரும் பாராட்டுவதால் தான் இன்னும் நல்ல கதைகளை எழுதவே தோன்றுகிறது...இக்கதையில் அடிக்கரு(பைத்தியம் என்னும் பழி சுமத்தப்படுவது) நான் நிஜத்தில் கண்ட ஒரு உண்மை நிகழ்வு தான்...அதை சுவாரசியத்திற்காக நகைச்சுவையாக இருக்கும் என்பதற்க்காக நான் சேர்த்துக் கொண்டது தான் அந்த ஆரம்ப உரையாடல்கள்...ர(ரு)சித்து பாராட்டியமைக்கு மீண்டும் என் நன்றிகள்...

    ReplyDelete
  55. ////'பாலாடை மூடிய மேலாடை'!!!! எங்கியோ போய்டீங்க சிங்கப்பூர் கவிசிம்மம் அவர்களே!பிரம்மபுர பிதாவும் சிலிர்க்க வைத்தார்.///
    நன்றிகள் சார்... கொஞ்ச விரமாக உணரப் படுமோ என்ற ஒரு உறுத்தல் இருந்தது... எனினும் சங்ககால கவிதைகளின் சாயலில் வந்த புதுக் கவிதையின் முயற்சி என்பதால் அது பேசப் படாது என்று நம்பினேன்... நன்றிகள் சார்...

    ////"விதிசெய்த சதியால் அல்ல - என்
    மதி மயங்கி உயிர்கசிய உன்
    கரம் பற்றினேன் சகியே!"

    நம் உளறல் கூட ஒருத்தருக்கு கவிதை எழுத கருத்து எடுத்துக் கொடுக்கிறதா? ஹி. ஹி. ஹீ....இனிமே பின்னூட்டத்தில யோசிக்காம நிறைய கிறுக்கிட வேண்டியதுதான். சகோதரர் ஆலாசியத்தின் இரண்டு கவிதைகளும் நன்றாக இருக்கிறது./////

    உணர்வில் பிறந்த வார்த்தைகள் மனதில் நின்றன...
    அந்த அதிர்வு என்னையும், சகோதிரி ஷோபனாவையும்
    சில அதிர்வுக்கு ஆளாக்கியதை தெரிவிக்கிறது இப்போது...
    தொடர்ந்து கிறுக்குங்கள்... கிறுக்கர்கள் தானே கவிஞர்கள்...

    தங்களின் பாராட்டிற்கு நன்றிகள் சகோதிரி...

    ////minorwall said...
    சிற்றின்பத் தேரேற்றி
    உலாவந்தார் சிங்கைக்கவி

    பேரின்பத்தேரில் ட்ரான்ஸ்சிட்டும் செய்தார் - சரிதான்..

    கடைசியில் கைவிட்டார்..
    தடுத்தாள்வாய் எனை

    எனத்தனைமட்டும் பிரித்து
    பிரம்ம புரத்துக்கு..

    கூட்டிவந்த டிக்கெட்டைக்
    கழட்டிவிட்டு

    போட்டாரே சிங்கிள்டிக்கெட்-
    அது நியாயமா?////

    என்ன செய்வது மைனர்வாள் தனியாக வந்தோம் (வரவு பற்றுடன்) தனியாகத்தான் போவோம்... மீண்டும் வரவும் பற்றும் தனியாகத்தான். உண்மை அதுவானாலும், இருந்தும் தாங்கள் சொல்வது போல் உலகம் அனைத்தையும் ஒளிபெறச் செய்வாய் இறைவனே என்று தான் சொல்லி இருக்க வேண்டும்...



    நண்பர் கவிஞர் தனுசு தங்களின் பாராட்டிற்கு நன்றிகள்...



    சகோதிரி ஷோபனா தங்களின் பாராட்டிற்கும் நன்றிகள்...

    சகோதிரிக்கு எனது அன்பான வேண்டுகோள்... எனது பெயரை தட்டச்சு செய்யும் போது ஆலாசியம் என்பதற்கு 'aalaaasiyam' entru எழுத்துக்களை பயன் படுத்துங்கள் சகோதிரி, நன்றிகள் பல.

    ReplyDelete
  56. //// Thanjavooraan said...
    இன்றைய பதிவுகள் அனைத்தையும் நிதானமாகப் படித்தேன். தனுசுவும் ஆலாசியமும் வழக்கம் போல் புதுக் கவிதையில் நம்மை மகிழ வைத்து விட்டார்கள். இன்றைய அதிர்வு எனக்கு சகோதரி தேமொழியின் கதையில்தான் ஏற்பட்டது. படிக்கும்போதே அந்த தாத்தாவிடம் ஏதோ கோளாறு என்று நினைத்தது சரியாகப் போயிற்று. கதைசொல்லும் பாணி அருமை. தொடரட்டும் பணி. ஆசிரியர் புதிய கதாசிரியர்களைத் தோற்றுவிக்கும் பணியில் முதன்மையிடம் பெறுகிறார். ஷோபனா அவர்கள் எழுத்தில் நல்ல விறுவிறுப்பு இருக்கிறது. தொய்வு இல்லாமல் எழுதிச் செல்வது பாராட்டுக் குரியது. நமது மைனர் அவர்களின் கதையை முதலில் படித்துவிட்டு பின்னர் பலருடைய பின்னூட்டங்களையும் படித்தபின்னர்தான் அவர் வைத்திருந்த பொடி தெரிந்தது./////



    காலமாறியக் கவிதை பாணி விரசம் இருக்கும் இடத்தை காண்பித்து மோதிரக் கையால் கொட்டு வாங்க வேண்டுமோ! என்று தயாராகக் காத்திருந்தேன் இருந்தும் தாங்கள் கண்டும் காணாமல் இருந்து விட்டீர்கள் என்றே நம்புகிறேன்.

    தங்களின் பாராட்டிற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  57. /////Blogger kmr.krishnan said...
    பின் தொடர்வோர் எண்ணிக்கை 3000 தொட்டது! வகுப்பறை ஒரு பார்ட்டி வைக்கலாம்.
    பின்னூட்டம் இடுவோர் எண்ணிக்கை. ஒரு 100 ஆகவாவ‌து ஆக வேண்டாமோ?
    20 கூட இல்லையே!/////

    பின் தொடர்வோர் எண்ணிக்கை 3000 தொட்டதால் எனக்குக் கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது. எல்லா வயதினரும் இருக்கிறார்கள். அத்தனை
    பேர்களின் எதிர்பார்ப்பிற்கும் நான் எழுத வேண்டும்.

    பதிவில் உள்ள நிறைகுறைகளைச் சொல்வதற்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த 20 பேர்கள் போதுமே சுவாமி!

    அத்தனை பேர்களும் பின்ணூட்டமிட்டால், அவர்களின் பின்னூட்டங்களைப் படித்துப் பதில் சொல்வதற்கே ஒரு வாரம் ஆகிவிடும். வாரம் ஒரு பதிவுதான் எழுதிப் பதிவிட முடியும்.

    2006 ஆம் ஆண்டு வலைப்பதிவுகளில் நான் எழுதத் துவங்கிய காலத்தில் முதல் மூன்று மாதங்கள் வரை, தினசரி வந்துபோவோரின் எண்ணிக்கை 10ற்கும்
    குறைவாகவே இருந்தது.

    எண்ணிக்கையைப் பற்றி நான் எப்போதும் கவலைப்படுவதில்லை.

    எனது சிந்தனைகளை, அறிவை, அனுபவத்தைப் பதிவிடுகிறேன். ஆவணப்படுத்துகிறேன் என்னும் எண்ணம்தான் என்னைத் தொடர்ந்து எழுதவைக்கிறது.

    'தலைப்பை நன்றாகப் போடு
    தானே வருவார்கள்
    எழுதுவதை நன்றாக எழுது
    எல்லோரும் படிப்பார்கள்"

    இதுதான் எழுத்தின் தாரகமந்திரம். அதைக் கெட்டியாகப் பிடித்துகொண்டிருக்கிறேன். துவக்கத்தில் இருந்து அதையே கடைப்பிடிக்கின்றேன்.

    ReplyDelete
  58. \\லக்ஷ்மண, மூர்த்தி, பார்வதி சம்வாதம் அருமை.முதியோர் பிரச்சனையை எடுத்து ஆண்ட விதம் அருமை,ஸ்ரீஷோபனா அவர்களே!\\
    த‌ங்க‌ள‌து இந்த‌ பாராட்டிற்கு மிக்க‌ ந‌ன்றி ஐயா!!!உண்மையில் நானும் "ப‌ஜ்ஜி"பைத்திய‌ம் தான்...அதையே கதையில் ஒரு (நகைச்)சுவைக்காக‌ எழுதிவிட்டேன்...ஹிஹிஹி...ப‌ட‌த்தில் காட்டியிருக்கும் "ப‌ஜ்ஜி"யை பார்த்துவிட்டு வீட்டில் செய்து சாப்பிடாம‌ல் இருக்க‌ முடிய‌வில்லை...என் க‌தையைவிட 'பஜ்ஜி' படம் தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...

    \\ஆனாலும் பார்வதி சமைத்தும் கொடுத்துவிட்டு மூர்த்தியை என்னமாக வைகிறார்கள். எனக்கு மூர்த்தியைப் பார்க்க பாவமாக இருந்தது. \\
    ரசித்து படித்து பாராட்டிய தேமொழி அவர்களுக்கு என் நன்றிகள்...நான் சாலையோரத்தில் நடக்கவே இயலாது மிகவும் நலிந்திருந்த ஒரு வய‌தான பாட்டியை மனதில் கொண்டு தான் எழுதினேன்...என் மனதை மிகவும் பாதித்தது அதனால் தான் அதனை அடிப்படையாகக் கொண்டு எழுத நினைத்தேன்...

    ReplyDelete
  59. ///// தேமொழி said...மைனர் தமிழக அரசியல் மாற்றங்களை நீங்கள் கதையாக வடிக்கும் அழகே அழகு. உங்கள் கதையில் நான் ரசித்த இடங்கள்...
    "சரியான வாய்ப்புகள் கிடைக்கும் வரை இந்த மனிதன் இதுவரை எங்கிருந்தான் என்று யாருக்குமே தெரிவதில்லை..எல்லோருக்குமே வாழ்வில் அப்படி
    வாய்ப்புகள் கிடைத்துவிடுவதுமில்லை."
    ஆமாம் உண்மை...உண்மை.. ///////

    எழுதும்போதே எனக்குப் பிடித்து நானும் ரசித்து எழுதிய வரிகள் இவை..
    ரசித்த இடங்களைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி..

    ReplyDelete
  60. /// தேமொழி said..."ஆறாமாதிபதி செவ்வாய் பனிரெண்டாமிடத்தில் பரிவர்த்தனையில் உச்ச பலம் பெற்று இருப்பதால் எதிரிகளை வென்று வாகை சூடி அடுத்தவனின் யோகத்தை பறித்து உங்களை அனுபவிக்க வைக்கும் அமைப்பு இது'"
    அப்படியா மைனர்? ஹி.ஹி. ஹீ.... இந்த ஜாதகம் மிகவும் பரிச்சயமானதாக இருக்கிறதே, அத்தோடு அந்த விருச்சிக லக்கினத்து ஜாதகத்திற்கு லக்கினத்தில் சுக்கிரனோடு புதனும் இருக்கிறதோ? மாண்புமிகுவிற்கு ராஜயோகம்னு சொல்லுங்க.////
    இது உங்களின் விசாலமான ஜாதக அறிவையும் மெமெரி பவரையும் வெளிக்காட்டுகிறது..இந்த ஜாதக டிப்ஸ் உண்மையில் எழுதப்பட்ட கற்பனைக் கதையில் சொல்லப்பட்ட நபரின் ஜாதகத்தைப் பார்த்துப் பலன் சொன்னதாகச் சொல்லி தாங்கள் குறிப்பிட்ட விருச்சிக இலக்கின ஜாதகத்துக்கும் இது பொருந்தும் என்றும் கதையில் உண்மைப் பெயரில் வந்த அந்த ஒரு ஜோசியரால் சொல்லப்பட்டது..ஜோசியர் சொல்வதை நம்பி கற்பனையிலேயே வாழ்க்கை நடத்தும் ஆட்களல்ல விருச்சிக லக்கினக்காரர்கள்..நன்றி..

    ReplyDelete
  61. /// தேமொழி said..."அதில் இந்தக் கம்பெனி 'அல்வா' ரொம்ப ரொம்பப் பிரசித்தம்."
    ம்ம்..ம்... உங்கள் குசும்புக்கு ஒரு அளவே இல்லையா?///////

    'அல்வா' இனிப்பாக இருக்கும்..சுவையாக இருக்கும்..ஆனால் உடலுக்கு நல்லதல்ல..சாப்பிட்டால் சுகர் அதிகரிக்கும்..ஆய்லி கன்டென்ட் அதிகம்..எனவே பாதிப்புக்களும் அதிகம்..
    ஆனாலும் எல்லாம் தெரிந்தாலுமே அதிகமாக மக்களால் தங்கள் பாக்கெட்டில் இருப்பதைச் செலவழித்து வினையை விலை கொடுத்து வாங்கி விரும்பிச் சுவைக்கப்படும் ஒரு ஸ்வீட் வகையறா..ஹல்டிராம்ஸ் சோன் பப்டி போல அந்தக் கம்பெனி 'அல்வா' பிரசித்தம் என்று அதைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன்..
    நீங்கள் 'குசும்பு' 'கிசும்பு' என்றெல்லாம் சொல்வதைப் பார்த்தால் ஏதோ 'அமைதிப்படை அல்வா' என்று கணக்குப் பண்ணிட்டீங்களோ?

    ReplyDelete
  62. ////Blogger kmr.krishnan said...
    பின் தொடர்வோர் எண்ணிக்கை 3000 தொட்டது! வகுப்பறை ஒரு பார்ட்டி வைக்கலாம்.
    பின்னூட்டம் இடுவோர் எண்ணிக்கை. ஒரு 100 ஆகவாவ‌து ஆக வேண்டாமோ?
    20 கூட இல்லையே!////

    படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. படிப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நேரம் கிடைப்பது ஒரு முக்கியமான பிரச்சினை.
    இன்றையப் பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கை முறையில், பணத் தேடலுக்கு மட்டுமே மக்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள்

    பெரு நகரங்களில் உள்ளவர்களுக்கு ஒரு இடத்தில் இருந்து இன்னொரு நிடத்திற்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரம் பயணிக்க வேண்டியதாக உள்ளது. அம்பத்தூர் அல்லது ஆவடியில் இருக்கும் ஒரு மனிதர், தி.நகர் அல்லது தாம்பரத்திற்கு வந்து திரும்புவதென்றால் எத்தனை நேரம் பிடிக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

    படித்தால் போதும். பின்னூட்டங்கள் முக்கியமில்லை. இன்றையப் பதிவு அருமை என்றோ அல்லது சூப்பர் என்றோ ஒரு நூறுபின்னூட்டங்கள் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனால் என்ன பயன் என்று நீங்களே சொல்லுங்கள் முத்துராமகிருஷ்ணன்

    ReplyDelete
  63. thanusu said...
    அத்தி பூத்தார் போன்று எப்போவாவது வருகிறார் ஷோபனா அவர்கள். அப்படி வந்தாலும் நச் என்று தருகிறார். பச்சியை சாப்பிட்டு முடித்துதும் நாக்கு இன் னொன்று கேட்கும் அதை போலவே படித்து முடிக்கையில் இன்னும் ஒரு முறை படிக்க தோன்றுகிறது.

    என்ன செய்வது...நான் இக்கதையை ஆரம்பித்தது மூன்று வாரங்களுக்கு முன்பு,முடித்தது சென்ற வாரத்தில் தான்...நான் அமரும் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் எழுத சரியாக நேரம் கிடைப்பதில்லை...இனி அதிகம் எழுத முயற்சிக்கிறேன்...தங்களது பாராட்டிற்கு மிக்க நன்றிகள்...

    ReplyDelete
  64. /////தேமொழி said...ஜெயசிம்மனின் கைக்குக் கம்பெனி வந்ததே வேறு தனிக் கதை..
    இந்த தனிக்கதையையும் இன்னொரு நாள் உங்க நடையில் விவரித்து எழுதினால் நான்றாக இருக்குமே. ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.////

    தங்களின் ஆர்வத்துக்கு மிக்க நன்றி..சாலமன் ருஷ்டி,தஸ்லிமா நஸ்ரின் போன்ற ஆட்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள்.. எனக்கு ஜப்பானில் சிடிசன்ஷிப் கிடைத்ததும் இதை எழுதுகிறேன்..ஏற்கனவே இந்த சப்ஜெக்ட் படமாக்கப்பட்ட போது அதன் ப்ரிவியூ பார்த்துவிட்டு மக்கள் தலைவர் டைரக்டர் மீது ஆத்திரப்பட்டார் என்று என் நண்பர் சொல்லக் கேள்விப்பட்டிருந்தேன்..சென்சிடிவ் ஆன விஷயங்களைச் சொல்லும்போது கொஞ்சம் இடறினாலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்திவிடும்..அப்படி ஆத்திரமூட்டும் வகையில் படைத்துவிட்டார் அந்த டைரெக்டர் என்று வேகப்பட்டதாக அறிந்தேன்..

    ReplyDelete
  65. \\//வாழ்த்துக‌ளும்,பாராட்டுக‌ளும் குவியும் பாருங்க‌ள்!!!//

    ஆமாம் ஆமாம் அள்ளுவதற்கு கூடையோடு தயாராக இருங்கள் தேமொழி!அப்ப‌டி பாராட்டாதவர்களை சிகரெட் லைட்டெர் தாத்தா வந்து ராத்திரி பயமுறுத்துவார் என்று ஒருவரி சேர்த்துவிட்டிருக்கலாம்தானே!

    மொத்தமா நாம்ப ஒரு பத்துபேர் Mutual Admiration Society
    நடத்திகிட்டு இருக்கோம்.இதிலே பாராட்டு வந்து குவியுமாங்காட்டியும்..அடபோங்க அம்மணி..! டமாஸ் பண்ணவும் ஒரு அளவில்லையா?\\
    ஐயா,நீங்கள் சொல்வது உண்மையான வார்த்தைகள் தான்...இன்று வகுப்பறைக்கு வந்தவர்கள் படித்து நிச்சயம் தங்கள் மனதிற்குள்ளே பாராட்டியிருப்பார்கள் அதை ஏன் பின்னூட்டத்தில் தெரிவிக்க யோசிக்கிறார்கள் என்று தான் புரியவில்லை...ஒரு வேளை வாத்தியார் நடத்தும் வகுப்பறையில் இவர்களுக்கு என்ன வேலை என்று யோசிக்கின்றார்களோ?!!!

    ReplyDelete
  66. //////thanusu said...
    வாங்க வாங்க வகுப்பறையின் சோ அவர்களே .

    கைமாறும் கம்பெனிகள் .தலைப்பை பார்த்தபோது முன்பு போல அலுவலக கதை என்று நினைத்தேன் .டிவி ல் மேட்ச் பார்த்துக் கொண்டு படித்தேன்.கடைசி வரிகளை நெருங்கும் போது ஒரு பொடி தெரிந்தது மீண்டும் ஒருமுறை படித்தேன் புரிந்தது. .சாதரணாமாக kmrk அவர்களைத்தான் தொடுவீர்கள் இம்முறை காரண கர்த்தாக்களை தொட்டு இருக்கிறிர்கள் .மைனர் கலக்குங்கள்./////////

    என்ன இது 'சோ' அப்பிடி இப்பிடின்னுகிட்டு..எனக்கும் மொட்டை cum பட்டை போட்டிடலாம்ன்னு ப்ளான் பண்றீங்களா?நந்தகோபால் ஆரம்பித்து வைத்தார்..நீங்களும் இப்போ இதையே சொல்றீங்க..'சோ' ன்னு சொல்லி என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலியே?

    படித்து விமர்சித்ததற்கு மிக்க நன்றி தனுசு அவர்களே..

    உங்கள் கவிதையை விமர்சித்தது சும்மா கிண்டலாகத்தான்..நீங்க யாரை வேணும்னாலும் 'டா' போட்டுக் கூப்பிடுங்க..என்னைத் தவிர..

    ReplyDelete
  67. ////SP.VR. SUBBAIYA said...
    ////Blogger kmr.krishnan said...
    பின் தொடர்வோர் எண்ணிக்கை 3000 தொட்டது! வகுப்பறை ஒரு பார்ட்டி வைக்கலாம்.
    பின்னூட்டம் இடுவோர் எண்ணிக்கை. ஒரு 100 ஆகவாவ‌து ஆக வேண்டாமோ?
    20 கூட இல்லையே!////

    படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. படிப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நேரம் கிடைப்பது ஒரு முக்கியமான பிரச்சினை.
    இன்றையப் பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கை முறையில், பணத் தேடலுக்கு மட்டுமே மக்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள்

    பெரு நகரங்களில் உள்ளவர்களுக்கு ஒரு இடத்தில் இருந்து இன்னொரு நிடத்திற்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரம் பயணிக்க வேண்டியதாக உள்ளது. அம்பத்தூர் அல்லது ஆவடியில் இருக்கும் ஒரு மனிதர், தி.நகர் அல்லது தாம்பரத்திற்கு வந்து திரும்புவதென்றால் எத்தனை நேரம் பிடிக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

    படித்தால் போதும். பின்னூட்டங்கள் முக்கியமில்லை. இன்றையப் பதிவு அருமை என்றோ அல்லது சூப்பர் என்றோ ஒரு நூறுபின்னூட்டங்கள் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனால் என்ன பயன் என்று நீங்களே சொல்லுங்கள் முத்துராமகிருஷ்ணன்//////

    வாத்தியாரின் பதிலை நானும் ரிபீட் விட்டுக் கொள்கிறேன்..

    தவிர படிக்கும்போது வாசகருக்குப் பிடிக்காத அம்சங்களோ
    பிடிக்காத ஒரு இமேஜ் உள்ள எழுத்தாளனாகவோ ஆகிவிட்டாலும் கூட விமர்சனங்கள் வெளிவராது..

    இல்லை எதிர்மற விமர்சனங்களே வரும்..

    'அப்படியெல்லாம் இல்லாமல் யாரும் வராவிட்டாலும் சரி..
    தோணுவதை எழுதுவோம்' என்று எதார்த்தமாக எடுத்துக் கொள்வது நல்லது..
    உண்மையில் படித்துப் பாராட்டும் அன்பு உள்ளங்களுக்குப் பதில் எழுதவே நேரம் போதவில்லை..
    'ஒரு நாள் போதுமா?' என்று பாட வேண்டியிருக்கிறது..
    'இத்துணை பேர் படித்து விமர்சித்திருக்கிரார்களே?பொழுது போன இடம் தெரியவில்லையே?'என்று அங்கலாய்ப்பது நல்லது.
    காரணம்..'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்' என்றொரு சொல்லடை உள்ளதே?KMRKவுக்கு தெரியாதா என்ன?

    ReplyDelete
  68. //// Thanjavooraan said...
    இன்றைய பதிவுகள் அனைத்தையும் நிதானமாகப் படித்தேன். நமது மைனர் அவர்களின் கதையை முதலில் படித்துவிட்டு பின்னர் பலருடைய பின்னூட்டங்களையும் படித்தபின்னர்தான் அவர் வைத்திருந்த பொடி தெரிந்தது./////
    மிக்க நன்றி..அய்யா.சிரத்தை எடுத்துப் படித்து விமர்சித்த தங்கள் பெருந்தன்மைக்கு நன்றி..

    ReplyDelete
  69. Thanjavooraan saiதனுசுவின் கவிதையைப் படிப்பதற்கு முன்பாக நேற்று அவர் என் இல்லம் தேடி வந்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது.

    எனக்கும்மகிழ்ச்சியளித்தது. இப்படி ஒரு நல்ல குழுவை இத்தனை நாள் தவறவிட்டுவிட்டு Facebook, twitter என்று இருந்துவிட்டோமே என்ற ஏக்கமும் வந்தது

    நம் வகுப்பறையின் கண்மணிகள் அனைவரையும் சந்திக்க வேண்டும் என்பதே என் ஆசை.அதைவிட பெரும் ஆசை வாத்தியார் அய்யாவை சந்திக்க வேண்டும் என்பதுதான் .காலமும் நேரமும் அமையாததை எண்ணித்தான் வருந்துகிறேன். தஞ்சாவூர் அய்யா அவர்களை சந்தித்தது கூட குறுகிய நேர சந்திப்பாகவே அமைந்து விட்டது .காரணம் அதே காலம் நேரம் தான் .இன்னும் ஒரு வாரத்தில் கிளம்பிவிடுவேன் ஆனால் ஹாங்காங் சென்று பனி நிமித்தம் நான்கு நாட்கள் இருந்துவிட்டு அதன் பின் தான் புருனெய் செல்வேன் . நான்கு மாதங்கள் கழித்து மீண்டும் வரும்போது வாத்தியாரை சந்திக்க இருக்கிறேன்.போடும் திட்டங்கள் சமயத்தில் கடைசி நிமிடங்களில் திட்டமிட்டபடி முடிக்க முடிய வில்லை ஆகவே வாத்தியார் அய்யா அவர்களை சந்திக்க இறைவன் அருள் புரியட்டும்.

    ReplyDelete
  70. kmr.krishnan said...அடாபுடா' ஒன்றும் தவறல்ல. மேலும் ஒரு கவிஞர் இப்படியெல்லாம் கட்டுப்பாடு விதித்துக்கொண்டு எழுத முடியாது.கவிதை என்பதே 'சட்' டென்று பொங்கியெழும் உணர்ச்சிப் பிரவாகமே.

    நன்றி kmrk அவர்களே

    R.Srishobana said.. ."எனர்ஜி"பானம் என்று புரிந்தது...மீண்டும் நல்லதொரு அருமையான கவிதையை தந்துள்ளீர்கள்...நன்றி

    இப்படி எழுதி எனக்கு எனர்ஜி கொடுத்தமைக்கு நன்றி

    .iyer said...வகுப்பறையின் ஆஸ்தான கவிஞரின்
    வரிகள் ஒவ்வொன்றிலும் சீவலபேறியே

    தெளிவாக தெரிகிறது..அத்தனையும்
    தெவிட்டாத தெள்ளமுது..

    மாறதாது மாற்றம் ஒன்றே மற்றதெல்லாம் மாறிவிடும் தானே..

    தனுசு.. உமது தமிழ் அன்(ம்)புகள்
    தன் மானத்தை தட்டி எழுப்புகிறது..

    வாழ்க.. வாழ்த்துக்கள்..

    மிக்க நன்றிகள் iyer அவர்களே.

    ReplyDelete
  71. நமது வகுப்பறைக் கண்மணிகளில் சில் பேர், வீட்டில் கணினி, அகண்டவரிசை இணைய இணைப்பு போன்ற வசதிகள் இன்மையால், தங்கள் அலுவலகத்தில், இடைவேளை நேரத்தில், அல்லது தங்கள் மேலாளர் ஆட்டைபோடப் போயிருக்கும் நேரத்தில், நமது பதிவை நேரடியாகவோ அல்லது கூகுள் ரீடர் மூலமாகவோ படிப்பார்கள். வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே அவர்களால் படிக்க முடியும். அவர்களுக்கு வசதியாக நேற்றையப் பதிவை இன்றும் முகப்புப் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளேன். புதிய பதிவு தயாராக இருந்தும் போடவில்லை. இன்று மாலை புதிய பதிவு வலை ஏறும். பொறுத்திருங்கள் கண்மணிகளே!
    அன்புடன்
    வாத்தியார்
    6.2.2012 - 4:55 AM

    ReplyDelete
  72. //மேலாளர் ஆட்டைபோடப் போயிருக்கும் நேரத்தில், நமது பதிவை நேரடியாகவோ அல்லது கூகுள் ரீடர் மூலமாகவோ படிப்பார்கள். வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே அவர்களால் படிக்க முடியும். //

    என்னங்க சார்!இப்படி 'டமால்னு' போட்டு உடைக்கிறீங்களே!

    அது சரி, பல மேலாளர்களே நம்ம சக மாணவர்களாமே!

    'அசட்டுக் காமாச்சி'யின் தங்கைதான் 'கூகிள் காமாச்சி'.
    அப்பொவெல்லாம் வீதிக்கு ஒரு அசட்டுக் காமாச்சி உண்டு. இப்பொவெல்லாம் வீட்டுக்கு வீடு கூகிள் காமாட்சிதான்.

    அந்த அருவிக்கரை சிம்ம வாஹினி எந்த ஊர் சார்?

    ReplyDelete
  73. ///படித்தால் போதும். பின்னூட்டங்கள் முக்கியமில்லை. இன்றையப் பதிவு அருமை என்றோ அல்லது சூப்பர் என்றோ ஒரு நூறுபின்னூட்டங்கள் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனால் என்ன பயன் என்று நீங்களே சொல்லுங்கள் ///

    இதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
    இதற்காகவா பதிவிடுகிறோம்..


    மாறாக வேறு மாதிரி வந்தால்
    மத்திமத்தில் பொறுப்பாருமில்லை..

    சொல்லும் கருத்துக்களை
    சொன்னபடியே ஏற்பாருமில்லை

    வளமுடன் .. வாழ்க..
    நலமுடன் .. வளர்க..

    ReplyDelete
  74. தஞ்சை சகோதரர் எதனை பக்தி என சொல்கிறார் என தெரியவிலைலை..

    எதனை மனிதாபிமானம் என சொல்கிறார் என்பதும் புரியவில்லை..

    மாரில் கை வைத்து உதட்டில் தட்டிக் கொடுப்பது ...
    மனதில் உள்ள இறைவனை கை(காயத்தால்)களினால் எடுப்பது போன்ற பாவனையில் உதட்டில் வைத்து (வாக்கினிலும் அமையட்டும் என) தட்டித் தருவது

    மனம் வாக்கு காயத்தால் இறைவனை வணங்குதல் வேண்டும் என

    கிருத்துவர்களுக்கு தமிழர்கள் சொலலித் தந்த பாடம் அது அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடமில்லை..

    கற்றுக் கொடுப்து தமிழினம்
    கற்றுக் கொடுக்க நினைப்பது அறிவீனம்

    என்ற வசனம் நினைவுக்கு வருகிறதா தோழர்களே...


    திருக்கோயிலில் அல்லது திருமடத்தில்
    அன்னதானத்திற்கு பணம் தருவது எது

    பக்தியா மனிதாபிமானமா..

    சகோதரி தேமொழியார் சொன்னது போல்
    இரண்டும் ஒன்று அல்ல..
    ஒன்றுபடமுடியாத வெவ்வேறே..

    முன்னர் தந்த பின் ஊட்டத்தில் சொன்னது போல் ..

    பக்தி தோட்டத்தில் மலரும் மல்லிகை
    யார் வந்தாலும் வராவிட்டாலும் மணம் வீசும்..

    பின்னது மற்றவர் உடலில் தெளிக்கும் வாசனை திரவியம் போல் (சென்டு) நம் துர்வாசம் தெரியக் கூடாது என்பதற்காக அல்லது மற்றவர்களுக்கு வாசம் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக பூசிக்கொள்வது..

    முன்னது கருணை சார்ந்தது
    பின்னது ஈகை சார்ந்தது..

    முன்னது இறையை மட்டுமல்ல இனிய தேசத்தையும் சார்ந்து இருக்கலாம்..
    பின்னது மனிதரை மட்டுமே சார்ந்து இருக்கும்..


    முன்னதால் பயன் தேடிவரும்
    பின்னதால் பயனை தேடி போகனும்..

    முன்னதால் பயன் பெறாவிடினும் நன்மை உண்டு
    பின்னதால் பயன் பெறாவிடின்
    negative energy வந்து விடும்..

    உங்களுக்கு தெரியாது இல்லை..
    நாங்கள் என்ன சொல்லப்போகிறோம் என்றே தாங்கள் தந்த பட்டி மண்டப தலைப்பிற்கு ஏற்ப சிலவற்றை தந்து உள்ளோம்..

    வழக்கம் போல் சுழல விட திரையிசை
    பாடலிருந்தும்.. உங்கள் அனுமதியுடன்
    இந்த பாரதியின் பாடல் வரிகள் சில வற்றை பதிவு செய்கிறோம்..




    பக்தியினாலெ - இந்தப்
    பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளடீ!

    கல்வி வளரும் - பல
    காரியங்கையுறும், வீரியமோங்கிடும்
    அல்லல் ஒழியும் -

    நல்லஆண்மையுண்டாகும் அறிவு தெளிந்திடும்‘ சித்தந்தெளியும் - இங்கு
    செய்கையனைத்திலும் செம்மை பிறந்திடும்
    வித்தைகள் சேரும் - நல்ல
    வீரருறவு கிடைக்கும், மனத்திடைத்
    தத்துவம் உண்டாம் - நெஞ்சிற்
    சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கும்.

    ReplyDelete
  75. பேய் கதையை கேட்டிருந்த அய்யரின்
    எண்ணத்தை நிறைவு செய்த சகோதரியே நீவிர் வாழ்க..

    உமது எண்ணங்களும் எழுதுகோலும்
    "எழுத்துலக ராணி" என பெயர் பெறட்டும்

    (பேய்கள் கூட்டம் மகுடம் சூட்டட்டும் -இது தாமாஷூக்கு)

    வாழ்க.. வாழ்க. வாழ்க

    ReplyDelete
  76. அன்பர் ஆலாசியத்தின் கவிதையை
    அலசி பார்க்க வில்லை..

    அது அகப் பாடலாக அமைந்ததால் சமன காவியம் போல் இருந்ததால் மேலோட்டமாக படித்து விட்டு விட்டுவிட்டோம்..

    தன் மறுபக்கத்தை காட்டிய சிங்ககை செல்வர் தரும் அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்பார்த்தபடி..

    வணக்கமும் வாழ்த்துக்களும்..

    ReplyDelete
  77. ஆனந்த முருகன்..
    அற்புதமாக தந்த ரகசிய பொக்கிஷம்..

    தொடங்கிவிட்டோம் இன்று முதல்..

    வாழ்த்துக்கள் தோழரே...
    இதனை தமிழாக்கம் செய்திருக்கலாமே
    இருக்கட்டும் அடுத்த அறிவிப்பில் அதனை எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  78. பஜ்ஜியா அது...
    பலதும் கலந்த நல்ல சுவை..

    எழுத்தோட்டத்துடன்
    எண்ணோட்டமும் அதனை
    நிறைவு செய்த பாங்கும் அருமை..

    கருத்துக்கள் குறைக்காமல்
    கதையின் அளவை குறைத்து இருந்தால்

    பதிவிற்கேற்ற பலன் கிடைத்திருக்கும்
    அதாவது வேகாமாக படிப்பவருக்கு சுவையிருக்கும்..

    மங்கையர் மலரில் வரும் 1 column கதை போல..

    அடுத்த முயற்சி அப்டிபயாகட்டுமே

    ReplyDelete
  79. சிட்னி முருகனை
    சிந்தைக்கு தந்து ..

    காண்...
    ஒளி வரும் உள்ளத்தில்.. என

    அள்ளித் தந்த
    அன்பு சகோதரர் நடராசுக்கு நன்றிகள்..

    வணக்கம் வணக்கம் வணக்கம்

    ReplyDelete
  80. சென்னை தோழர்
    சபரியார் வழக்கம் போல்

    ஆங்கிலத்தில் சுவைக்க தந்த நகை
    இனி தமிழில் தொடரட்டும்

    தமிழ் படிப்பை கட்டாயமாக்கப் போறாங்களால்.. பாத்துக்கோங்க..

    வணக்கமும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  81. மைனரின் கைமாறும்
    கைகளுக்கு என்ன கைமாறு..

    அவர்விரும்பியபடியே..
    அவருக்கு தனி மின்னஞ்சல் செல்கிறது..

    நன்றி தோழரே..

    ReplyDelete
  82. அகில உலகத்திற்கும் சாப்பிடுவதில் இருந்து தூங்குவது வரை தமிழன் தான் கற்பித்தான்.தமிழன் யாரிடம் இருந்து எதையுமே கற்றுக் கொள்ள மாட்டான்.
    சபாஷ்!தமிழா! வாழ்க நீயும்! உன் பண்பாடும்!

    ReplyDelete
  83. மானுட சேவையில் பயனை எதிர்பாராமல் செய்தல் என்று ஒன்று இருக்கிறது. பயன் கருதாமல் செய்பவர்கள் பயனைத் தேடி ஒன்றும் செய்வதில்லை. மழைக்குப் பொழிகிறோம்,குளிர்கிறோம் என்று தானே உணர்வதில்லை. நெருப்பு தான் சுடுகிறோம், வெப்பம் தருகிறோம் என்று தானே அறியாது.அதுபோலவே தான் காற்றும், நிலமும்,வெளியும். அவைகள் தன் கடமை இன்னதென்று உணராதது போல, பலரும் தாங்கள் செய்வ‌து நனமை,தீமை என்றெல்லாம் கணக்குப் போடாமல், பயன் வருமா என்று கண்க்குப் போடாமல்,பலனை தேடிச் செல்கிறோமா என்று எண்ணாமல், இயல்பாகச் செய்வோரும் பலர் உண்டு.
    அவர்களால் தான் 'உண்டாலம்ம இவ்வுலகம்!'

    ReplyDelete
  84. நீண்ட நாட்களுக்கு பின் அய்யரின் விருப்பப்படி முகப்பு புத்தகத்திற்கு வந்தமைக்கு நன்றி..

    அது சரி
    இனி என்ன செய்யப்போகிறோம்
    இங்கு..ஆலோசனை சொல்லட்டுமா சில

    இந்திய கலாச்சாரத்தை உலகத்திற்கு சொல்லனும்
    இளிச்சவாயன் இல்லை தமிழன் என புரிய வைக்கனும்

    தமிழுக்கு இழுக்கு தரும் தமிழர்களை சுட்டி திருத்தனும்
    தமிழ் தான் மற்ற மொழிகளுக்கு தாய் மொழி எனவும்

    தமிழன் சிந்தனையில் வந்தது தான் இத்தனை மாற்றம்
    தட்டி பழகும் கணினி வரையில்..

    எண்ணும் எழுத்தும் கண் என தகும் என ஔவையும்
    எண் என்ப ஏனை எழுத்து இரண்டும் என வள்ளுவரும்

    தந்தஅடிப்படையிலே binary யை மட்டும் வைத்து கணினி
    தரப்பட்ட இவ்வுலகில் இதனை செய்ய

    இந்த புத்தகம் உதவட்டும்..
    இனிய உமது விரல்கள் தடம் பதிக்கட்டும்..

    இன்னும் ஒர் தமிழ் புரட்சி
    இனிதாய் மலரட்டும்

    ReplyDelete
  85. 'தஞ்சைச் சகோதரர்'சிலவற்றைச் சொல்லி நமது அபிப்பிராயத்தைத்தான் கேட்டு இருக்கிறார்.அவராக ஒன்றும் இது தான் பக்தி, இதுதான் மனிதாபிமானம் என்று சுட்டவில்லை. நமக்குத் 'தெரிந்தது, புரிந்தது' என்பவை பற்றி நாம் தான் விவராமகச் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  86. 'இது அகப் பாடல் மேலோட்டமாகப் பார்க்க வேண்டும்' என்ற எண்ணமே போதுமே அதில் கண்டிருக்கும் செய்தியை மனதிற்குச் சொல்ல. மேலோடமாகப் பார்த்தாலும், பக்க வோட்டமாகப் பார்த்தாலும், நிமிர்ந்து பார்த்தாலும், குனிந்திருந்து பார்த்தாலும் எல்லாம் ஒன்றுதான்.
    'சிவ சிவ..ஆமையை கவிழ்த்துப்போட்டு அடிச்சா சாகும்.
    சிவ சிவ இதை நம் வாயால் சொல்வானேன்'

    ReplyDelete
  87. என்னுடைய ஆக்கங்கள் மட்டுமே பல மாதங்கள் வாரம் இருமுறை வந்து கொண்டிருந்த போது பின்னூட்டங்கள் ஒற்றைப் படையை தாண்டாமல் இருந்தது. நான் அப்போது இதனை சுட்டிக் குறையாக எழுதவில்லை.இப்போது ஒரே நாளில் 10 பேர் பங்கேற்கும் போது பின்னூட்டங்கள் குறைவாக உள்ளனவே என்று அங்கலாய்க்கிறேன். இப்போது என் நோக்கம் என்ன என்பது புரிந்தவர்களுக்குப் புரியட்டும்.புரிந்து கொள்ள‌ மறுப்பவர்கள் வழக்கம் போல 'பக்கத்து இலைக்குப்பாயசம் கேட்கிறான்' என்று பூடகமான பின்னூட்டம் இடட்டும். வாழ்க பின்னூட்டங்கள்!

    ReplyDelete
  88. கேரளாவில் உள்ள கொச்சிக்கு 36 கிலோமீட்டர் வடக்கில் அமைந்துள்ள சாலக்குடி என்னும் ஊரில் உள்ளது. கன்னட நடிகர் தர்ஷன் நடித்த சாரதி என்ற திரைப்படத்திற்காக போடப்பட்ட சாமுண்டி தேவி செட் ('காட்சி அரங்கம்' என்பது சரியா?).

    இந்தப் படம் சென்ற ஆண்டு செப்டம்பரில் வெளிவந்து 57 கோடி வசூல் பார்த்தது என "விக்கி விசாலாட்சி' சொல்றாங்க. யு ட்யூப் காணொளி சுட்டி இதைப்பற்றி மேலும் விவரிக்கும் (மொழி புரியவில்லை)
    http://www.youtube.com/watch?v=Hhxf3h5sTnE

    ReplyDelete
  89. /////Blogger தேமொழி said...
    கேரளாவில் உள்ள கொச்சிக்கு 36 கிலோமீட்டர் வடக்கில் அமைந்துள்ள சாலக்குடி என்னும் ஊரில் உள்ளது. கன்னட நடிகர் தர்ஷன் நடித்த சாரதி என்ற திரைப்படத்திற்காக போடப்பட்ட சாமுண்டி தேவி செட் ('காட்சி அரங்கம்' என்பது சரியா?).
    இந்தப் படம் சென்ற ஆண்டு செப்டம்பரில் வெளிவந்து 57 கோடி வசூல் பார்த்தது என "விக்கி விசாலாட்சி' சொல்றாங்க. யு ட்யூப் காணொளி சுட்டி இதைப்பற்றி மேலும் விவரிக்கும் (மொழி புரியவில்லை)
    http://www.youtube.com/watch?v=Hhxf3h5sTnE/////

    தேமொழி அக்கா, விக்கி விசாலாட்சியிடம் கேட்டு மேலதிகத்தகவலைக் கீழே கொடுத்துள்ளேன். அது கன்னடப் படம். அதனால்தான் அவர்கள் சாமுண்டி செட் போட்டதைப்பற்றி விவரிப்பது நமக்குப் புரியவில்லை.

    படம்: சாரதி (2011)
    தயாரிப்பளர்: சத்ய பிரகாஷ்
    இயக்கம்: தினகர்
    இசை: ஹரி கிருஷ்ணா
    நடிப்பு: தர்ஷன், தீபா சந்நிதி

    ReplyDelete
  90. 'பாலாடை மூடிய மேலாடை' விரசமென சொல்வோமோ என்று தமிழ்விரும்பி சொல்கிறார். இதை விரசம் என்று சொல்வதானால், பல ஆண்டுகளுக்கு முன் 'குமுதம்' இதழில் ஜ.ரா.சுந்தரேசன் எழுதிய "டீச்சர்" என்ற கதையில் வந்த வர்ணனையை என்னவென்று சொல்வது? அந்த வர்ணனை என்ன என்பதைச் சொன்னால்தானே உங்களுக்குப் புரியும். ஒரு மாணவனுக்குத் தன் டீச்சர் மீது ஒரு இது. ஒரு நாள் நல்ல மழை. டீச்சர் குடைபிடித்துப் போகும்போது மாணவன் மழையில் நனைவதைப் பார்த்து அவனையும் தன் குடைக்குள் அழைத்துக் கொண்டு நடக்கிறாள். நடக்கும்போது அவன் கை ஏதோ படக்கூடாத இடத்தில் பட்டுவிடுகிறது. "பட்டுத் துணியில் கட்டி வைத்திருந்த அரைத்த சந்தனத்தைத் தொட்டதுபோல அவன் உணர்ந்தான்" என்று எழுதியிருக்கிறார்.

    சரி போகட்டும். மைனர் அவர்கள் தன் தாத்தா நாத்திகர் ஆனால் மனிதாபிமானி என்று குறிப்பிட்டிருந்தார். என் கேள்வியும் அதுதான். பக்தியும், மனிதாபிமானமும் வெவ்வேறா? என்று. அவர் பதில் ஆம்! வெவ்வேறுதான் என்பது. சரி "பக்தி" எனும் சொல் கடவுளை வழிபடுவதற்கு மட்டுமே பொறுத்தமானது என்று நாம் கருதிக் கொண்டதால் வந்த வினை இது. எந்த ஒரு பொருளிடம், அல்லது சக்தியிடம், அல்லது மனைவியிடம் அல்லது பெற்றோரிடம் கொண்டிருக்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையையும் பக்தி எனலாம். பெற்றோர் மீதுள்ள பக்தி 'பித்ரு பக்தி''மாத்ரு பக்தி' என்பர்.எனக்குத் தொழில் பக்தி உண்டு என்றால், அவன் செய்யும் தொழிலில் அக்கறையும் ஈடுபாடும் உண்டு என்பது கருத்து. ஆகவே பக்தி என்பது கடவுளிடம் மட்டும் இல்லை என்பது தெளிவு. ஆதிசங்கரர் போதித்த "அத்வைத சித்தாந்தம்" எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்று கிருஷ்ண பரமாத்மா சொன்னதுதான். பாரதியின் வாக்கால் சொல்வதென்றால் "கேளப்பா சீடனே, கழுதையொன்றைக் கீழான பன்றியினைத் தேளைக் கண்டு, தாளைப் பார்த்து இரு கரமும் சிரமேல் கூப்பி சங்கரா சங்கரா என்று பணிதல் வேண்டும். கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும். கூடிநின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம். மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன். விண்மட்டும் கடவுளன்று, மண்ணும் அஃதே". ஆகவே 'நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாத்தியே, சுற்றிவந்து முணுமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள் இருக்கையில்". ஆக முடிவாக என் கருத்து: "ஏ.சி.ஹாலில் உட்கார்ந்து கைதட்டி பஜனைப் பாடலை ரசிக்கும் "கார்பொடரேட் பக்தி"யைவிட, கோயிலுக்குச் சென்று பாவனையாக வணங்கிவரும் பக்தியைவிட, ஒரு பசித்த வயிற்றுக்கு (சோம்பேறிகளுக்கோ, இப்படி உட்கார்ந்த இடத்தில் சாப்பாட்டை எதிர்பார்க்கும் உழைக்காத மாந்தருக்கோ அல்ல (மைனர் சொன்னது இவர்கள் போன்றவர்களை ஊக்குவிக்கக்கூடாது என்பது ‍‍அதை நானும் வழிமொழிகிறேன்) உண்மையில் சோற்றுக்கு வழியின்றி தவிக்கும் ஒருவனுக்கு அளிக்கும் உதவிதான் உண்மையான பக்தி. அத்வைதமும் அதைத்தான் சொல்கிறது.

    ReplyDelete
  91. எது கடவுள்? மகாகவி பாரதியின் வாக்கால் பார்க்கலாம்.

    "சுத்த அறிவே சிவம் என்று உரைத்தார் மேலோர்
    சுத்த மண்ணும் சிவம் என்றே உரைக்கும் வேதம்
    வித்தகனாம் குரு சிவம் என்று உரைத்தார் மேலோர்
    வித்தை இலாப் புலையனும் அஃதென்னும் வேதம்
    பித்தரே! அனைத்து உயிரும் கடவுள் என்று
    பேசுவது மெய்யானால் பெண்டிர் என்றும்
    நித்தம் உமது அருகினிலே குழந்தை என்றும்
    நிற்பனவும் தெய்வம் அன்றோ? நிகழ்த்துவீரே.

    உயிர்கள் எல்லாம் தெய்வம் அன்றிப் பிற ஒன்றில்லை
    ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்
    பயிலும் உயிர் வகை மட்டும் அன்றி இங்குப்
    பார்க்கின்ற பொருள் எல்லாம் தெய்வம் கண்டீர்
    வெயில் அளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
    மேலும் இங்குப் பலபலவாம் தோற்றம் கொண்டே
    இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்
    எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்."

    ReplyDelete
  92. 'மூவாயிரம் தலை வாங்கிய அபூர்வ வலைப்பூமணி' அண்ணல் SP.VR.சுப்பையா வாத்தியார் அவர்களை
    'வாழ்க பல்லாயிரமாண்டு' என
    வாழ்த்தி வணங்கி
    இந்தப் பொன்னாடையை போர்த்தி
    இந்தத் தங்க எழுத்தாணியை அன்புப்பரிசாக அளித்து மகிழ்கிறேன்..

    ReplyDelete
  93. ///Thanjavooraan said...
    மைனர் அவர்கள் தன் தாத்தா நாத்திகர் ஆனால் மனிதாபிமானி என்று குறிப்பிட்டிருந்தார். என் கேள்வியும் அதுதான். பக்தியும், மனிதாபிமானமும் வெவ்வேறா? என்று. அவர் பதில் ஆம்! வெவ்வேறுதான் என்பது. சரி "பக்தி" எனும் சொல் கடவுளை வழிபடுவதற்கு மட்டுமே பொறுத்தமானது என்று நாம் கருதிக் கொண்டதால் வந்த வினை இது. எந்த ஒரு பொருளிடம், அல்லது சக்தியிடம், அல்லது மனைவியிடம் அல்லது பெற்றோரிடம் கொண்டிருக்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையையும் பக்தி எனலாம். பெற்றோர் மீதுள்ள பக்தி 'பித்ரு பக்தி''மாத்ரு பக்தி' என்பர்.எனக்குத் தொழில் பக்தி உண்டு என்றால், அவன் செய்யும் தொழிலில் அக்கறையும் ஈடுபாடும் உண்டு என்பது கருத்து. ஆகவே பக்தி என்பது கடவுளிடம் மட்டும் இல்லை என்பது தெளிவு. ///

    நன்றி..இந்த வகை அர்த்தத்தில் பொருத்தி பக்தியை எடுத்துப் பார்த்தால் அது நீங்கள் சொல்லும்படியே ஏற்புடையதாகி பொருந்தி வருகிறது..

    ///ஒரு பசித்த வயிற்றுக்கு (சோம்பேறிகளுக்கோ, இப்படி உட்கார்ந்த இடத்தில் சாப்பாட்டை எதிர்பார்க்கும் உழைக்காத மாந்தருக்கோ அல்ல (மைனர் சொன்னது இவர்கள் போன்றவர்களை ஊக்குவிக்கக்கூடாது என்பது ‍‍அதை நானும் வழிமொழிகிறேன்) உண்மையில் சோற்றுக்கு வழியின்றி தவிக்கும் ஒருவனுக்கு அளிக்கும் உதவிதான் உண்மையான பக்தி. அத்வைதமும் அதைத்தான் சொல்கிறது.///

    இதை நானும் ஏற்கிறேன்..நன்றி..

    ReplyDelete
  94. Uma S
    to me

    மாணவர் மலர் வரவர விதவிதமான ஆக்கங்களால் களைகட்டுகிறது.

    தனுசுவின் கவிதையை படித்துக்கொண்டு வரும்போதே பொறி தட்டியது, அதை அவரே பின்னூட்டத்திலும் குறிப்பிட்டுள்ளார்.
    கனமான நடையில் ஆலாசியத்தின் கவிதைகள், சில இடங்களில் புரிந்து கொள்ள சிரமம் ஏற்பட்டாலும் படிக்க நன்றாகவே இருந்தது.
    பக்தியும், மனிதாபிமானமும் வேறு வேறுதான். நேம நிஷ்டைப்படி பூஜை செய்து பக்திமான் போல தோற்றமளிப்பவர்களும் கூட சிறு குழந்தைகளையோ, உதவி கேட்டு வரும் வயதானவர்களையோ கடுகடுவென்ற முகத்துடன் விரட்டியடிப்பதைப்பார்த்திருக்கிறேன். பக்தியிலும் கர்வமும், ஆடம்பரமும் கலப்பது விரும்பத்தகாதது. அதற்காக பக்தியை விட மனிதாபிமானம் உயர்ந்தது என்பதை என்னால் ஏற்கமுடியவில்லை. இரண்டுமே அவசியம். நாம் பிறருக்கு ஏதாவது உதவி செய்வதுகூட, இறைவனால் தூண்டப்பட்டு ஒரு கருவியாகத்தான் என்பது என் கருத்து.
    இந்த வாரம் ஜோதிடம் பற்றிய சொல்லடைவுகள் அருமை. நிறைய கேள்விப்பட்டதாக இருந்தாலும், எல்லாவற்றையும் தொகுத்து அளித்த முயற்சிக்குப் பாராட்டுக்கள்.
    இந்த முறை மானசீகத்தலைவரின் எதிர்க்கட்சி பற்றிய கதை. கதையைக்கொண்டு சென்றவிதம் அருமை. படிக்கும்போதே ஊகித்துவிட்டேன், இது யாரைப்பற்றியது என்பதை. நடுவிலே ஜோசியர் குமாரை இழுத்து, அவர் சொன்ன பலனைப்பற்றி சொல்லி, யாராவது அதை உறுதி செய்யமாட்டார்களா என்று பகல் கனவில் ஆழ்ந்தது புரிகிறது. எனக்குப்புரியாத ஒன்று இருபத்து ஐந்து வருடங்களாக இவர்களைப்பற்றி ஒன்றுமே தெரியாதது போலவும், இப்போதுதான் தெரிந்தது போலவும் கழட்டிவிட்டதுதான். 'ஒண்ணுமே புரியல உலகத்துல...............................'
    இதுவரை வந்த தேமொழியின் ஆக்கங்களில் சிறந்த ஆக்கமாக இந்த கதையைத்தான் குறிப்பிடுவேன். இருப்பினும் இதைத் தோற்கடிக்கும் விதமாக மேலும் எழுத என் வாழ்த்துக்கள். எழுத்து நடை ஒரு தேர்ந்த எழுத்தாளருடையது போன்று தோன்றியது.
    ஷோபனாவின் கதையில் முடிவு எனக்கு சரியாகப்புரியவில்லை, கொஞ்சம் குழப்பும்படி இருந்தது. எனக்கு மட்டும்தான் அப்படிததோன்றியதா எனப்புரியவில்லை.
    'தகவல்' முருகன் இந்த வாரமும் முக்கியமான தகவலைப்பகிர்ந்திருக்கிறார்.
    முருகன் படங்களில் இரண்டு மட்டுமே தெரிந்தது.
    சபரியின் ஜோக் சுபெர்ப்.

    S.Uma, Delhi

    ReplyDelete
  95. //// iyer said...
    அன்பர் ஆலாசியத்தின் கவிதையை
    அலசி பார்க்க வில்லை..

    அது அகப் பாடலாக அமைந்ததால் சமன காவியம் போல் இருந்ததால் மேலோட்டமாக படித்து விட்டு விட்டுவிட்டோம்..

    தன் மறுபக்கத்தை காட்டிய சிங்ககை செல்வர் தரும் அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்பார்த்தபடி..

    வணக்கமும் வாழ்த்துக்களும்..////



    தங்களின் வாழ்த்துக்களுக்கு முதற்கண் நன்றிகள் ஐயர் அவர்களே....

    ஹி..ஹி..ஹி.. இல்லறத்தான், நாற்பதைக் கடந்து இரண்டாண்டுகளே: கிரஹஸ்தனும் அல்லவே:):)

    இல்லை! தாங்கள் மறுபக்கம் என்பதை குழம்பிய நிலையில்?!

    வேறொரு பரிமாணப் பரிணாமம் என்றிருந்தால் வெண்ணையில் நுழைந்த விரலாக இருந்திருக்கும்...

    உண்மைதான் அகப் பாடல் என்பதால் அலசியிருக்க மாட்டீர்கள் தான்...

    இன்னும் சொல்லப் போனால், இதில் சில வரிகள் தணிக்கை செய்தேன்... அது ஒரு புறம் இருக்க, அப்படி ஒரு கவிதையை எழுதிய மனம் சஞ்சலமடைத் ததையும் உணர்ந்தேன்! இதை எதற்காக சொல்கிறேன் என்றால்.... இதையே ஆன்மீக சிந்தனையில் ஆழ்த்தினாலும் இதே பிரதிபலிப்பு அங்கேயும் நிகழும் என்பதற்கு ஒரு அனுபவம் தந்தப் பாடமாக நினைக்கிறேன். அதை இந்த சமயத்தில் நமது சக தோழர்களிடமும் கூறவும் ஆசைப் படுகிறேன்... அனைவருக்கும் தெரிந்தது என்றாலும் நான் உணர்ந்தது அதனால்.. அதனால் யார் யாருக்கு எது வேண்டுமோ அதை ஆழ்மனதில் பதியுங்கள். நன்றிகள் யாவருக்கும்.

    ReplyDelete
  96. ////கனமான நடையில் ஆலாசியத்தின் கவிதைகள், சில இடங்களில் புரிந்து கொள்ள சிரமம் ஏற்பட்டாலும் படிக்க நன்றாகவே இருந்தது.////
    எனது சகோதிரி உமாவிற்கு நன்றிகள் பல...

    ReplyDelete
  97. //(சோம்பேறிகளுக்கோ, இப்படி உட்கார்ந்த இடத்தில் சாப்பாட்டை எதிர்பார்க்கும் உழைக்காத மாந்தருக்கோ அல்ல (மைனர் சொன்னது இவர்கள் போன்றவர்களை ஊக்குவிக்கக்கூடாது என்பது ‍‍அதை நானும் வழிமொழிகிறேன்)//

    நேரடி அனுபவம் உள்ளதால் நான் சற்றே மாறுபடுகிறேன்.இந்த விஷயத்தில் அவர்கள் சோம்பேறியா இல்லையா என்பதை நாம் நீதிபதிகளாக இருந்து முடிவு செய்ய வேண்டாம் என்பதே என் அபிப்ராயம்.
    'யார்க்கும் இடுமின் இவர் அவர் என்னன்மின்' என்பதே என் கொள்கை.

    ஒரு நாள் ஓர் அழகிய 18 வயது பெண்ணும், 20 வயதுப்பையனும் நல்ல தோற்றத்துடன் கையேந்திக் கொண்டிருந்தனர்.பெண்ணின் கழுத்தில் தாலியில்லை.நின்று விசாரித்தேன்.'எலோபிங்' ஜோடி. அந்த விடலையை நம்பி பெண் தன்னை இழந்துவிட்டாள். ஊருக்குப் போனால் அவளை வெட்டிச் சாய்ப்பது உறுதி.வெட்கத்தை விட்டு பசிக் கொடுமையால் கையேந்தி விட்டனர். அமைதியாக அவர்களை அழைத்துச் சென்று மதிய உணவு ஹோட்டலில் செய்வித்தேன். எந்த அறிவுரையும் கூறவில்லை.சிறிது தொகையை அளித்துவிட்டு அமைதியாக விடைபெற்றேன்.

    என்னை சமூகம் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டோருக்கு ஆதரவளித்ததாகத் தூற்றக்கூடும்.இப்படி நான் செய்ததால் இவர்களைப் போன்றொருக்குத் துளிர் விட்டுவிடும் என்று சமூகம் கூறலாம்.

    என் கண்களுக்கு அவர்களுடைய பசித்து வாடிய முகங்கள் மட்டுமே அப்போது தெரிந்தன‌.

    ReplyDelete
  98. //// Thanjavooraan said...
    'பாலாடை மூடிய மேலாடை' விரசமென சொல்வோமோ என்று தமிழ்விரும்பி சொல்கிறார். இதை விரசம் என்று சொல்வதானால், பல ஆண்டுகளுக்கு முன் 'குமுதம்' இதழில் ஜ.ரா.சுந்தரேசன் எழுதிய "டீச்சர்" என்ற கதையில் வந்த வர்ணனையை என்னவென்று சொல்வது? அந்த வர்ணனை என்ன என்பதைச் சொன்னால்தானே உங்களுக்குப் புரியும். ஒரு மாணவனுக்குத் தன் டீச்சர் மீது ஒரு இது. ஒரு நாள் நல்ல மழை. டீச்சர் குடைபிடித்துப் போகும்போது மாணவன் மழையில் நனைவதைப் பார்த்து அவனையும் தன் குடைக்குள் அழைத்துக் கொண்டு நடக்கிறாள். நடக்கும்போது அவன் கை ஏதோ படக்கூடாத இடத்தில் பட்டுவிடுகிறது. "பட்டுத் துணியில் கட்டி வைத்திருந்த அரைத்த சந்தனத்தைத் தொட்டதுபோல அவன் உணர்ந்தான்" என்று எழுதியிருக்கிறார்.////



    தங்களின் விமர்சனத்திற்கு நன்றிகள் ஐயா!

    நான் விரசம் என்று அச்சப் பட்ட வரிகளை யாரும் கூப்பிடவில்லை...

    இருந்தும் மைனரும் அதை ஆழ்ந்துப் படிக்கவில்லை என்பதை அறிகிறேன்...

    இப்போதெல்லாம் மைனரின் போக்கும் ஆன்மீக நாட்டம் தட்டுவதையே இதுக் காட்டுகிறது...

    அதையே அவரின் பின்னூட்டமும் கூறுகிறது...

    நமது மைனர் வாழ்க வளமுடன்.. நன்றிகள் யாவருக்கும்.

    ReplyDelete
  99. ///Uma said,கதையைக்கொண்டு சென்றவிதம் அருமை. ///
    நன்றி..

    ///Uma saidஎனக்குப்புரியாத ஒன்று இருபத்து ஐந்து வருடங்களாக இவர்களைப்பற்றி ஒன்றுமே தெரியாதது போலவும், இப்போதுதான் தெரிந்தது போலவும் கழட்டிவிட்டதுதான். 'ஒண்ணுமே புரியல உலகத்துல...................'////

    யாருக்குத்தான் புரிஞ்சுது..உங்களுக்கு மட்டும் தெளிவா புரிய..அதுனாலேதான் ஒரு சேஞ்சுக்கு இப்படி ஒரு வித்தியாசமான கோணத்தில் என் பார்வையைத் திருப்பினேன்..

    எல்லாம் சரிதான்..அம்மணிக்கு வெறும் விமரிசகராவே காலம் தள்ளிடலாம்னு நினைப்போ? சீக்கிரம் ஃபீல்ட்லே இறங்கி கலக்குவீங்களா?
    சொம்மா..கமென்ட் அடிக்குராகலாம்?கமென்ட்..

    ReplyDelete
  100. ஐயா, முன்பு பதிவுகள் திருட்டு போன பொழுது சிறிதும் நம்பிக்கை தளராமல், இன்னும் ஒரு ஆண்டில் என்னால் வகுப்பறை பதிவுகளை பின்தொடரும் 3000 வாசகர்களைப் பெறமுடியும் என்று சொன்னீர்கள். நடத்திக் காட்டிவிட்டீர்கள். இந்த சாதனை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  101. நூறாவது பின்னூட்டமும் என்னுடையதாக இருக்க வேண்டும் என்ற ஒரு அற்ப ஆசை. அதனால் இன்னொன்று. ஹி. ஹி. ஹீ ...நான்தான் நூறாவதா என்று பொறுத்திருந்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  102. What next to 13?

    14! 15! 16! ................

    ReplyDelete
  103. If interested in controversy about the Sahithya Academy price winning novel please read this link.

    http://maduraimarxist.blogspot.in/2012/02/blog-post_04.html

    ReplyDelete
  104. //////// kmr.krishnan said...
    //(சோம்பேறிகளுக்கோ, இப்படி உட்கார்ந்த இடத்தில் சாப்பாட்டை எதிர்பார்க்கும் உழைக்காத மாந்தருக்கோ அல்ல (மைனர் சொன்னது இவர்கள் போன்றவர்களை ஊக்குவிக்கக்கூடாது என்பது ‍‍அதை நானும் வழிமொழிகிறேன்)//

    நேரடி அனுபவம் உள்ளதால் நான் சற்றே மாறுபடுகிறேன்.இந்த விஷயத்தில் அவர்கள் சோம்பேறியா இல்லையா என்பதை நாம் நீதிபதிகளாக இருந்து முடிவு செய்ய வேண்டாம் என்பதே என் அபிப்ராயம்.
    'யார்க்கும் இடுமின் இவர் அவர் என்னன்மின்' என்பதே என் கொள்கை.

    ஒரு நாள் ஓர் அழகிய 18 வயது பெண்ணும், 20 வயதுப்பையனும் நல்ல தோற்றத்துடன் கையேந்திக் கொண்டிருந்தனர்.பெண்ணின் கழுத்தில் தாலியில்லை.நின்று விசாரித்தேன்.'எலோபிங்' ஜோடி. அந்த விடலையை நம்பி பெண் தன்னை இழந்துவிட்டாள். ஊருக்குப் போனால் அவளை வெட்டிச் சாய்ப்பது உறுதி.வெட்கத்தை விட்டு பசிக் கொடுமையால் கையேந்தி விட்டனர். அமைதியாக அவர்களை அழைத்துச் சென்று மதிய உணவு ஹோட்டலில் செய்வித்தேன். எந்த அறிவுரையும் கூறவில்லை.சிறிது தொகையை அளித்துவிட்டு அமைதியாக விடைபெற்றேன்.

    என்னை சமூகம் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டோருக்கு ஆதரவளித்ததாகத் தூற்றக்கூடும்.இப்படி நான் செய்ததால் இவர்களைப் போன்றொருக்குத் துளிர் விட்டுவிடும் என்று சமூகம் கூறலாம்.

    என் கண்களுக்கு அவர்களுடைய பசித்து வாடிய முகங்கள் மட்டுமே அப்போது தெரிந்தன‌.///////

    காதலர் காவலனே..
    காதலர்பசி தீர்த்த தூயவனே..
    வாழ்க..நீஎம்மான்..
    இந்த வையத்து நாட்டிலெல்லாம்..

    ReplyDelete
  105. /// தமிழ் விரும்பி said...இருந்தும் மைனரும் அதை ஆழ்ந்துப் படிக்கவில்லை என்பதை அறிகிறேன்...

    கவிதை ன்னாலே கொஞ்சம் கிர்ருன்னு தலைய சுத்தும்..
    நானொன்னு நினைக்க தெய்வம்?(அதாங்க சூப்பர் ஸ்டார் சொன்ன படைப்பாளி ) வேறொண்ணு நினைச்சுருக்கும்..அதான்..
    நமக்கு எதுக்கு
    இந்த கம்பராமாயண வம்பெல்லாம்?(இது ஷோபனாவுக்காக..)

    ///தமிழ் விரும்பி said...இப்போதெல்லாம் மைனரின் போக்கும் ஆன்மீக நாட்டம் தட்டுவதையே இதுக் காட்டுகிறது...

    அதையே அவரின் பின்னூட்டமும் கூறுகிறது...

    நமது மைனர் வாழ்க வளமுடன்.. நன்றிகள் யாவருக்கும்.///

    'நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..
    நடப்பது நலமாகும் நானிருந்தால் உன்னோடு '
    என்று நினைத்ததை முடிப்பவன் நானாக இருக்க
    என்ற அடிப்படையில் காரியக்கார சராசரிக் கூட்டணி
    அளவிலேதான் எங்கள் ஆன்மீக நாட்டமெல்லாம்..
    பிரம்மபுரத்துக்கு டிக்கெட் போடும் அளவுக்கெல்லாம் இல்லை..
    காரியம் நடந்தால் கூட்டணி தொடரும்..இல்லை..முறிவுதான்..
    கூட்டணி தர்மம்னு ஒண்ணு இருக்கே..காப்பாத்த வேணாம்?

    ReplyDelete
  106. //காரியம் நடந்தால் கூட்டணி தொடரும்..இல்லை..முறிவுதான்..
    கூட்டணி தர்மம்னு ஒண்ணு இருக்கே..காப்பாத்த வேணாம்?//

    முறியும் அன்று நாக்கைத் துறுத்தி வச்சிக்கிறேன் பாரு என்று விரலை ஆட்டிப் பேசாமல் விலகிக்கணும். அப்புறம் ஒண்டிக்கு ஒண்டி வர்ரியா என்று பகவான் ஆரம்பிச்சா நம்மால தாக்குப் பிடிக்க முடியுமா?

    ReplyDelete
  107. //காதலர் காவலனே..
    காதலர்பசி தீர்த்த தூயவனே..//

    இதானே வேண்டங்கிறது. நான் 'எலோபிங் ஜோடி'என்று சொன்னதில் இருந்தே புரிய வேண்டாம், அவர்களுடைய செயலுக்கு நான் அங்கீகாரம் அளிக்கவில்லை என்பது?அவர்கள் பசிக்கொடுமை மட்டுமே கண்ணில் பட்டது.

    சமபவத்தைச் சொன்ன காரணம், பசி என்று வந்துவிட்டவர்களை நாம் ஜட்ஜ் பண்ண வேண்டாம் என்பதுதான். கையேந்துபவர்களில் இவன் சோம்பேறி, அவன் தகுதியானவன் என்ற பேதம் நாம் பார்க்க வேண்டாம்.

    நான் தானம் அளிக்க வேண்டும் என்பதற்காக ஆண்டவனை கூன் குருடு முடம்
    உள்ளவர்களை படைக்கச் சொல்வதா?

    ReplyDelete
  108. ///Blogger iyer said...
    13///

    இல்லை ஐயா, 13 என்பதையும் சேர்த்துக் கொண்டீர்களானால் மொத்தம் 14 ஆகிவிட்டது.

    ReplyDelete
  109. //// kmr.krishnan said...
    //காரியம் நடந்தால் கூட்டணி தொடரும்..இல்லை..முறிவுதான்..
    கூட்டணி தர்மம்னு ஒண்ணு இருக்கே..காப்பாத்த வேணாம்?//

    முறியும் அன்று நாக்கைத் துறுத்தி வச்சிக்கிறேன் பாரு என்று விரலை ஆட்டிப் பேசாமல் விலகிக்கணும். அப்புறம் ஒண்டிக்கு ஒண்டி வர்ரியா என்று பகவான் ஆரம்பிச்சா நம்மால தாக்குப் பிடிக்க முடியுமா?////

    பரமாத்மாவுடன் கூட்டாட்சி..
    ஜீவாத்மாவுக்கு சுயாட்சி..

    இதுதான் நம்ம பாலிசி. கொள்கை.

    ஜீவாத்மாவின் ஜீவாதார நலன்களில் பாதிப்பு ஏதும் விளையுமானால் பரமாத்மாவுடன் கூட்டணி முறிவுதான்..
    ஜீவாத்மாவுக்கு பரிபூரண சுதந்திரம்..
    தனிநாடு அடைந்ததைப் போலே..

    356 /456 /556 ஆட்சிக் கலைப்பு அஸ்திரத்துக்கெல்லாம் பயப்படுறதா இல்லே..

    கொஞ்சம் பிசகினாலும் பொதுக்குழுவைக் கூட்டி தெளிவா அறிக்கை விட்டுடுவோம்..

    அப்புறம் பரமாத்மா ஜீவாத்மாவை வெச்சு ரீஜினல் பாலிடிக்ஸ் வேலையெல்லாம் பண்ணமுடியாது..

    பரமாத்மாவின் சீக்ரெட் ஏஜெண்டுகள் இந்த தகவலைக் கொண்டு சேர்க்கவும்..
    உரக்கக் கத்திக் கத்திச் சொன்னாலும் பரமாத்மாவுக்கு காதிலே உறைக்கவே மாட்டேங்குது..

    இப்புடியாவுது உறைக்குதான்னு பார்ப்போம்..

    ReplyDelete
  110. //பரமாத்மாவின் சீக்ரெட் ஏஜெண்டுகள் இந்த தகவலைக் கொண்டு சேர்க்கவும்..//

    நம்மக்கிட்ட எந்த சீக்ரெட்டும் இல்லையாதலால் நான் சீக்ரெட் ஏஜெண்ட் இல்லை. மேலும் சீக்ரெட் ஏஜெண்ட் தாடி வைக்கணும் என்று சட்டம் உள்ளதாம். எனவே அந்த வகையிலும் நான் டிஸ்குவாலிஃபைடு

    ReplyDelete
  111. sir,
    தங்கள் வகுப்பு super!super!super!super!super!super!super!super!super!super! but, என்னால தான் அடிக்கடி வரமுடியல, ரொம்ப miss
    பண்ணினாலும் எல்லாத்தையும் சேர்த்து படித்துவிடுவேன்.

    ReplyDelete
  112. //வால் போன்று நீண்டிருந்த பேருந்துகள் வரிசையில் கடைசியாக நின்றிருந்த எங்கள் வண்டிக்கும் பின்னே, இன்னமும் வால் வளர்ந்து விட்டது போல் மேலும் பல வண்டிகள் இப்பொழுது நிறுத்தப் பட்டிருந்தது//

    //வாகாக ஒரு மரத்து நிழலில் வண்டி நின்றதால், சிலு சிலுவென்று வீசிய காற்றில் தூங்கியதுடன் நிறுத்தாமல் கனவு வரை போய் உளறி இப்பொழுது மானம் போகிறது//

    நிகழ்காலத்தை நயமாக பதிவுசெய்த நல்ல கதை. ரசிக்கத் தக்க கற்பனையும் திகட்டா மொழிநடையும் வசீகரிக்கிறது சகோதரி. நேரம் கிடைக்கையில் நிறைய எழுதுங்கள். அன்பும் வாழ்த்தும்!!

    வித்யாசாகர்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com