மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.2.12

Astrology அரசனா அல்லது ஆண்டியா?



Astrology அரசனா அல்லது ஆண்டியா?

பயிற்சிப் பாடம்

அரசனா அல்லது ஆண்டியா? இப்படிக்கூடச் சொல்லலாம்: சாம்ராஜ்யமா அல்லது சந்நியாசமா? ஐந்தாம் வீட்டில் கேது இருந்தால் அந்த இரண்டில் ஒன்று கிடைக்கும்.

உங்களுக்கு அதுபோல உள்ளதா?

ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம் - அப்படி இருந்தால் நீங்கள் எதை விரும்புவீர்கள்? 99% சதவிகிதம் பேர்கள் சாம்ராஜ்யத்தைத்தான் விரும்புவார்கள். ஆனால் உண்மையில் இரண்டு நிலைப்பாடுகளும் ஒன்றுதான். சொல்லப்போனால் சந்நியாசம் சற்று மேன்மையானது.

"ஆடு, மாடு இல்லாதவன் அடை மழைக்கு ராஜா
பிள்ளை குட்டி இல்லாதவன் பஞ்சத்துக்கு ராஜா" 

என்று கிராமங்களில் சொல்வார்கள். என்ன மழை, புயல் அடித்தாலும் அல்லது வற்ட்சி, பஞ்சம் எனறு என்ன அவல் நிலை நாட்டில் ஏற்பட்டாலும் அது சநநியாசியை ஒருபோதும் பாதிக்காது. அவருடைய நிம்மதியைக் குலைக்காது. பத்து நாட்கள் கூட அவரால் உணவு இன்றி தாக்குப் பிடிக்க முடியும். அந்த மன வலிமை சந்நியாசிகளுக்கு மட்டுமே உரியது.

அரச்னுக்குப் பல பிரச்சினைகள் இருக்கும்.

"அரண்மனை மகிழ்ச்சியைத் தரவில்லை என்றால், அரச மரத்தடிக்கு வந்துவிடு. அது உனக்கு மகிழ்ச்சியைத் தரும்" என்பார் கவியரசர் கண்ணதாசன்.

ஆனால் பதவியில் இருக்கும் எவனும் அதைச் செய்ய மாட்டான்.

இரண்டிற்கு நான்காக கட்டிங் சரக்கை (சோமபானம், உற்சாகபானம் ) அடித்துவிட்டு, அந்தப்புரத்திற்குபோய் அங்கே மகிழ்ச்சியைத் தேடுவான். நிம்மதி முன் வாயில் வழியாக வெளியே போய்விடும். பிரச்சினைகள் ஒன்று சேர்ந்து பூதகரமாகி ஒரு நாள் அவனைக் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடிக்கும். அப்போதுதான் அவனுக்கு ஞானம் வரும்!

சரி, சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன். ஐந்தில் கேது இருக்கும் ஜாதகம் ஒன்றை உங்களின் பார்வைக்காக/ ப்யிற்சிக்காக இன்று அலசுகிறேன்
--------------------------------------------------------
மகான் ராமானுஜரின் ஜாதகம்
மகான் ராமானுஜர்!

ஸ்ரீபெரும்புதூர் என்னும் திவ்ய ஸ்தலத்தில் அவதரித்த மகான். தன் வாழ்க்கையை பெருமாளுக்கென்று அர்ப்பணித்த தவ சீலர். ஆழ்வார்களில் முதன்மையானவர். அவரைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை இருந்தால், அவரைப் பற்றிய முழு விவரங்களுக்கு விக்கி மகாராஜாவின் தொகுப்பில் இருக்கும் செய்திகளுக்கான சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். முதலில் அதைப் படிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

அதற்கான சுட்டி!
http://en.wikipedia.org/wiki/Ramanuja
---------------------------------------------------------
அவருடைய காலம்: 1017ம் ஆண்டு முதல் 1137ம் ஆண்டுவரை
ஆமாம் அபூர்வமாக 120 ஆண்டு காலம் வாழ்ந்தவர் அவர். அதுதான் அவருடைய ஜாதகத்தின் சிறப்பு! 120 ஆண்டு காலம் வாழ்ந்து மொத்தம் உள்ள ஒன்பது தசா/புத்திக் காலங்களையும் பார்த்துவிட்டுச் செல்வது என்பது லேசான செயலா? அனைவருக்கும் அந்த வாய்ப்புக் கிடைக்குமா என்ன?
இன்று அதைக் கையில் எடுத்து, அலசி, உங்களுக்காகக் கொடுக்கின்றேன்
--------------------------------------------------------------------------------------------------

1. கடக லக்கினக்காரர். தலைமைப் பதவி வகிக்கக்கூடிய (லக்கினத்துடன் உள்ள) ஜாதகம். ஆழ்வார்களில் முதன்மையானவர் என்ற பதவி கிடைத்ததல்லவா? ரெங்கநாதப் பெருமாளின் புகழைப் பாடியவர்களில் முதன்மையானவர் என்ற பட்டம் கிடைத்ததல்லவா? அதைவிட வேறு பெருமை என்ன வேண்டும்?

2. லக்கினாதிபதி சந்திரன் 12ல். விரையத்தில். அதனால் அவருடைய வாழ்க்கை அவருக்குப் பயன்படவில்லை. இறைப் பணி செய்து மேன்மையுற்றார். லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அவருடைய ஆக்கங்கள் பயன்பட்டன. படுகின்றன.

3. லக்கினாதிபதி சந்திரன் 12ல் அமர்ந்தாலும், உடன் பாக்கியாதிபதி குருவும் இருப்பதால், குருச்சந்திர யோகம் இருப்பதால், நல்ல வழியில் அவருடைய வாழ்க்கை அமைந்தது.

4. கடக லக்கினத்திற்கு யோககாரகனாகிய செவ்வாய் இரண்டில் - நட்பு வீட்டில் அமர்ந்து, அவருக்கு அனைத்து யோகங்களையும் பெற்றுத்தந்தான்.

5. ராகுவின் நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில், ராகு திசையில் பிறந்த ராமானுஜர், ராகு திசை திரும்பவும் வரும் காலம்வரை வாழ்ந்து, ராகு திசையில் இயற்கை எய்தினார்.

6. ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடத்து அதிபதியும், காரகனுமான சனீஷ்வரன், அந்த வீட்டிற்குப் பதினொன்றில் அமர்ந்ததுடன், அமர்ந்த இடத்திற்கு அதிபதியான குருபகவானின் பார்வையைப் பெற்றதோடு, லக்கினாதிபதி சந்திரனின் பார்வையையும் பெற்றார். அதனால்தான் அவர் நீண்ட ஆயுளைப் பெற்றார். 120 ஆண்டு காலம் வாந்தவர் என்பதை நினைவில் கொள்ளவும்.

7. ஐந்தாம் வீட்டில் இருக்கும் கேதுவால் அவருக்கு மெய்ஞானம் வசப்பட்டது. பாகவதத்தை எளிமைப் படுத்திச் சொன்னவர் ராமானுஜர். ஆதி சங்கரரின் கோட்பாடுகளை, எளிமைப் படுத்தி எழுதியவர் ராமானுஜர்.

8. ஐந்தில் அமர்ந்த கேதுவும், பதினொன்றில் அமர்ந்த ராகுவும், ராமானுஜரின் உயர் அறிவை வெளிப்படுத்தி, அனைவரையும் கவர, புகழ்பெற அவருக்கு உதவி செய்தன!

9. சந்திரனுக்குப் பன்னிரெண்டில் ராகு அமர்ந்தால் ஜாதகனுக்கு மகாசக்தி யோகம் உண்டாகும். அவருக்கு மகாசக்தியும், இறையருளும் முழுமையாகக் கிடைத்தது.

10. ஐந்தில் கேது அமர்ந்தால் ஒன்று சாம்ராஜ்ய யோகம் அல்லது சந்நியாச யோகம் என்பது விதி. அவர் சந்நியாசியாகிப் புகழ் பெற்றார்.

11. பெரிய மகான்கள் எல்லாம் ராகு அல்லது கேதுவின் நட்சத்திரங்களில்தான் அவதரிப்பார்கள். அதாவது பிறப்பார்கள் அதையும் கவனிக்கவும்.

12. நான்காம் வீட்டிற்கு (இந்த ஜாதகரின் கல்விக்கு) அதிபதியான சுக்கிரன், புத்திசாலித்தனத்திற்கு அதிபதியான புதனுடன் சேர்ந்து இருப்பது மட்டுமல்லாமல், இந்த ஜாதகத்திற்கு இரண்டாம் இடத்திற்கு (வாக்கு ஸ்தானம்) அதிபதியாகவும், உச்சமாகவும் உள்ள சூரியனோடு சேர்ந்து 4ஆம் வீட்டைப் பார்வையில் வைத்திருப்பதைக் கவனிக்கவும். அதனால்தான் அவர் அறிவு ஜீவியாகவும் விளங்கினார்

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

51 comments:

  1. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    மகான் ராமானுஜரின் ஜாதகத்தினை
    பார்க்கும் வாய்ப்பு அளித்து, அதனை
    ஆராய்ந்து தாங்கள் கொடுத்துள்ள
    விளக்கங்கள்
    யாவும் நன்கு புரியுமாறு உள்ளது.
    நன்றி!!

    ReplyDelete
  2. காலை வணக்கம் ஐயா! இன்றைய பதிவு சூப்பர். நன்றி ஐயா.

    ReplyDelete
  3. ஆஹா! அருமை....

    ஸ்ரீ ராமானுஜரின் ஜாதகம் அலசல் அருமை...
    மகாசக்தி யோகம் பற்றிய புதியத் தகவலையும் அறிந்துக் கொண்டேன்...

    ////பெரிய மகான்கள் எல்லாம் ராகு அல்லது கேதுவின் நட்சத்திரங்களில்தான்
    அவதரிப்பார்கள். அதாவது பிறப்பார்கள் அதையும் கவனிக்கவும்.////

    சாமானியர்களும் அப்படிப் பிறக்கும் போது, வேத, வேதாந்த நாட்டம்
    உள்ளவர்களாக இருப்பார்கள் என்று சொல்லலாமா ஐயா! :):)

    பாடத்திற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  4. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    சனி 7 ம் விட்டிற்கும் அதிபதி 7 க்கு 12 ல் உள்ளதால் அவருடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லையோ? தவறு இருந்தால் மன்னிக்கவும். நன்றி.

    ReplyDelete
  5. ///12 பாவங்கள், மூன்று செயல்கள், 9 மகாதிசைகள் /தசாபுத்திகள் என்று ஒரு ஜாதகத்தை வைத்து, 324 கேள்விகள் கேட்கலாம்.///
    ஐயா, ஒரு நாள் இந்த குவெஸ்டின் பேப்பரை அவுட் செய்யக் கூடாதா? ஹி...ஹி...ஹீ..கேட்ட கேள்விக்கு பதில் சொல்வது மட்டுமல்ல, கேள்வி கேட்பதும் எனக்கு கொஞ்சம் தகராறு...:)))

    பாடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எளிமையாக விளக்கி பாடம் நடத்துவது உங்களுக்கு கை வந்த கலை. திருவாட்டி ஜெயலிதா (சிங்கப்பூர் வானொலி செய்திகளில் இப்படித்தான் முதல்வரை குறிப்பிடுகிறார்கள்) அவர்களுக்கு ஐந்தில் கேது. ஜதாக அலசல் பாடத்திற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  6. enrya. pathivu nanrga .erunthu marriage anvuden pona first temple en son udya star thruvathri

    ReplyDelete
  7. ஐயா வணக்கம்!

    எப்படி அக்கு அக்காக ஜாதகத்தை அலசி ஆராய வேண்டும் என்பதை அழகாக விளக்கியதற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  8. ஐயா வணக்கம்,

    என்னுடைய ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் கேது நீசம்,பதினொன்றில் ராகு உச்சம். ராகுவின் நட்சத்திரமான சுவாதி நட்சத்திரம்.லக்கினாதிபதியும் ஆறாம் வீட்டில் மறைவு,பாக்கியாதிபதி சுக்கிரன் மூன்றில் உச்சம் பெற்று ஆட்சி பெற்ற குருவுடன் கூட்டணி. நான்கு மற்றும் பதினொன்றாம் அதிபதியுமான செவ்வாய் லக்னத்தில் உச்சம் பெற்று புதனுடன் கூட்டணி. 8ம் அதிபதி சூரியன் 2ல் பகை.
    7ம் அதிபதி சந்திரன் 10ல்.

    மகர லக்னம்,துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம் 2ம் பாதம்.

    சந்நியாசமா?சாம்ராஜ்யாமா?
    ஒன்றும் நடப்பது போல் தெரியவில்லையே????

    ReplyDelete
  9. எனக்கு ஐந்தில் ரிஷபத்தில் கேது / கூடவே அஷ்டமாதிபதி சூரியனும். அதனால் இந்த யோகம் அடிபட்டுப்போய்விடும் என நினைக்கிறேன், சரியா? என் கணவருக்கு ஐந்தில் கேது, மிதுனத்தில் தனித்தே இருக்கிறது. காலசர்ப்ப தோஷ / யோக ஜாதகம்.

    ஸ்ரீ ராமானுஜரின் ஜாதகத்தில் குரு சந்திர யோகத்துடன் கூட புத ஆதித்ய / நிபுணத்துவ யோகங்களும் இருக்கின்றன.

    எட்டாம் வீட்டிற்கு அதன் அதிபதியும் / ஆயுள்காரகருமான சனி பகவானின் பார்வையும் இருக்கிறது.

    ReplyDelete
  10. Iyya enakku kadaga lagnam 5il sevvai kethuvudan irrukkiran 6il santhiran guruvudan irrukkiran ithu enna poorva punniya saapam udaya jathakama villakkam sollugaiyya?

    ReplyDelete
  11. சில நாட்களாக வகுப்புக்கு முழுமையாக வர முடியவில்லை. இருப்பினும் அவ்வப்போது எட்டி பார்த்து கொண்டுதான் இருந்தேன் .

    வகுப்பிலே எனக்கு அதிகம் பிடித்தது அலசல் பாடம் தான். இப்படி அலசும் போது எனக்கே புதிது புதிதாய் கேள்விகள் முளைக்கும் .கேள்விகள் முளைக்க முளைக்க அறியும் ஆர்வமும் அதிகமாகும் . தொடர்ந்து இது போல் பாடங்கள் கொடுத்துக் கொண்டே இருங்கள் அய்யா.

    ஐந்தில் கேது சந்யாசமா சாம்ராஜ்யமா ? நம் முதல்வருக்கு ஐந்தில் கேது, சாம்ராஜ்யம் தான் .எனது பால்ய நண்பன் ஒருவன் கோயிலில் இறை ஊழியம் செய்கிறார் எந்தவித வருமானமும் எதிர் பார்க்காமல். இந்த காலத்தில் இப்படியும் ஒருவரா என்று நாங்களே பேசிக் கொள்கிறோம் இவருக்கும் ஐந்தில் கேதுதான்.

    அய்யா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் மீண்டும் ஒரு முறை கேள்வி பதில் பகுதியை தொடங்கவும்.

    ReplyDelete
  12. வணக்கம்,
    ஒரு ஆண் ஜாதகத்தில் 7ல் குரு இருந்தால் களத்திர தோஷமா?

    ReplyDelete
  13. Ji, I heared about that Ramanujar's wife was so arrogant and he was escaped from Grahastha life and become sanyasi

    ReplyDelete
  14. வணக்கம் ஐயா,
    "அரச வாழ்க்கையை வெறுத்தவன் அரசமரத்தை நேசிப்பான்"என்ற கவியரசரின் தத்துவம் மிகவும் அருமை...

    இராமானுஜர் மகானின் ஜாதக அலசல் மிக அருமை ஐயா...ராகு தசையில் பிறந்து ராகு தசையில் இறைவனடி சேர்ந்தது என்பதை கேட்பதற்கே மிகவும் அதிசயமாய் உள்ளது...மகான்களின் வாழ்க்கையே அதியம் தான்...

    பூர்வபுண்ணியாதிபதி 5ல் இருக்கும் கேதுவை பார்ப்பதால் அதிகமான ஆன்மிக நாட்டத்தையும்,வாழ்க்கையையும் அளித்துள்ளார் என்று நினைக்கின்றேன்...ஐயா,சிலர் கேது விருச்சகத்திலும் ராகு ரிஷபத்திலும் உச்சம் என்றும்;சிலர் கேது தனுசுவிலும் ராகு மிதுனத்திலும் உச்சம் என்றும் கூறுகின்றார்களே...இதில் எது சரி என்று புரியவில்லை...சில ஜோதிட புத்தகங்களிலும் இதே போலவே உள்ளது...மேற்கண்ட இராமானுஜரின் ஜாதகத்திலும் கேது விருச்சகத்தில் உள்ளதால் வந்த சந்தேகம் ஐயா...நீங்கள் தெளிவுபடுத்தினால் மகிழ்ச்சியடைவேன்...மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  15. மிக்க நன்றி ராமனுஜர் ஜதாகம எடுத்துகாட்டக கொடுதத்ர்கு. அருமையானா விளக்கம். விரிவான அலசல். நன்றி அய்யா

    ReplyDelete
  16. //// V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    மகான் ராமானுஜரின் ஜாதகத்தினை பார்க்கும் வாய்ப்பு அளித்து, அதனை ஆராய்ந்து தாங்கள் கொடுத்துள்ள விளக்கங்கள் யாவும் நன்கு புரியுமாறு உள்ளது.
    நன்றி!!////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி

    ReplyDelete
  17. //// Ananthamurugan said...
    Hare rama!hare krishna!vanakam ayya!////

    Krishna Krishna Hare Hare.....இது எப்படி இருக்கு?

    ReplyDelete
  18. //// Sathish K said...
    காலை வணக்கம் ஐயா! இன்றைய பதிவு சூப்பர். நன்றி ஐயா.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. /// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    ஆஹா! அருமை....
    ஸ்ரீ ராமானுஜரின் ஜாதகம் அலசல் அருமை...
    மகாசக்தி யோகம் பற்றிய புதியத் தகவலையும் அறிந்துக் கொண்டேன்...
    ////பெரிய மகான்கள் எல்லாம் ராகு அல்லது கேதுவின் நட்சத்திரங்களில்தான்
    அவதரிப்பார்கள். அதாவது பிறப்பார்கள் அதையும் கவனிக்கவும்.////
    சாமானியர்களும் அப்படிப் பிறக்கும் போது, வேத, வேதாந்த நாட்டம்
    உள்ளவர்களாக இருப்பார்கள் என்று சொல்லலாமா ஐயா! :):)
    பாடத்திற்கு நன்றிகள் ஐயா!/////

    சொல்லலாம் ஆலாசியம்! நன்றி!

    ReplyDelete
  20. /// vasanth said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    சனி 7 ம் விட்டிற்கும் அதிபதி 7 க்கு 12 ல் உள்ளதால் அவருடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லையோ? தவறு இருந்தால் மன்னிக்கவும்.
    நன்றி.////

    மகான்கள் எல்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள். ஆகவே விமர்சனங்களைத் தவிர்ப்போம்!

    ReplyDelete
  21. //// தேமொழி said...
    ///12 பாவங்கள், மூன்று செயல்கள், 9 மகாதிசைகள் /தசாபுத்திகள் என்று ஒரு ஜாதகத்தை வைத்து, 324 கேள்விகள் கேட்கலாம்.///
    ஐயா, ஒரு நாள் இந்த குவெஸ்டின் பேப்பரை அவுட் செய்யக் கூடாதா? ஹி...ஹி...ஹீ..கேட்ட கேள்விக்கு பதில் சொல்வது மட்டுமல்ல, கேள்வி கேட்பதும் எனக்கு கொஞ்சம் தகராறு...:)))
    பாடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எளிமையாக விளக்கி பாடம் நடத்துவது உங்களுக்கு கை வந்த கலை. திருவாட்டி ஜெயலிதா (சிங்கப்பூர் வானொலி
    செய்திகளில் இப்படித்தான் முதல்வரை குறிப்பிடுகிறார்கள்) அவர்களுக்கு ஐந்தில் கேது. ஜதாக அலசல் பாடத்திற்கு நன்றி ஐயா.////

    பெண்களுக்கா கேள்வி கேட்கத் தெரியாது? அதிசமான பெண்ணாக இருக்கிறீர்களே சகோதரி!:-))))

    ReplyDelete
  22. /// eswari sekar said...
    enrya. pathivu nanrga .erunthu marriage anvuden pona first temple en son udya star thruvathri///

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  23. //// ரமேஷ் வெங்கடபதி said...
    ஐயா வணக்கம்!
    எப்படி அக்கு அக்காக ஜாதகத்தை அலசி ஆராய வேண்டும் என்பதை அழகாக விளக்கியதற்கு மிக்க நன்றி!/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  24. /// redfort said...
    ஐயா வணக்கம்,
    என்னுடைய ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் கேது நீசம்,பதினொன்றில் ராகு உச்சம். ராகுவின் நட்சத்திரமான சுவாதி நட்சத்திரம்.லக்கினாதிபதியும் ஆறாம்

    வீட்டில் மறைவு,பாக்கியாதிபதி சுக்கிரன் மூன்றில் உச்சம் பெற்று ஆட்சி பெற்ற குருவுடன் கூட்டணி. நான்கு மற்றும் பதினொன்றாம் அதிபதியுமான செவ்வாய்

    லக்னத்தில் உச்சம் பெற்று புதனுடன் கூட்டணி. 8ம் அதிபதி சூரியன் 2ல் பகை.7ம் அதிபதி சந்திரன் 10ல்.
    மகர லக்னம்,துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம் 2ம் பாதம்.
    சந்நியாசமா?சாம்ராஜ்யாமா?
    ஒன்றும் நடப்பது போல் தெரியவில்லையே????////

    அதில் பாதி; இதில் பாதி:-))))))

    ReplyDelete
  25. //// Uma said...
    எனக்கு ஐந்தில் ரிஷபத்தில் கேது / கூடவே அஷ்டமாதிபதி சூரியனும். அதனால் இந்த யோகம் அடிபட்டுப்போய்விடும் என நினைக்கிறேன், சரியா? என்

    கணவருக்கு ஐந்தில் கேது, மிதுனத்தில் தனித்தே இருக்கிறது. காலசர்ப்ப தோஷ / யோக ஜாதகம்.
    ஸ்ரீ ராமானுஜரின் ஜாதகத்தில் குரு சந்திர யோகத்துடன் கூட புத ஆதித்ய / நிபுணத்துவ யோகங்களும் இருக்கின்றன.
    எட்டாம் வீட்டிற்கு அதன் அதிபதியும் / ஆயுள்காரகருமான சனி பகவானின் பார்வையும் இருக்கிறது.///

    பரவாயில்லை ஒரளவிற்கு பயிற்சி பெற்றுள்ளீர்கள்.தொடர்ந்து படியுங்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. // pratheesh said...
    Iyya enakku kadaga lagnam 5il sevvai kethuvudan irrukkiran 6il santhiran guruvudan irrukkiran ithu enna poorva punniya saapam udaya
    jathakama villakkam sollugaiyya?

    இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு, தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்வது தவறாகிவிடும். நீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக்
    கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான்
    முறையானதாகும்! எனக்கு தற்சமயம் அதற்கு நேரமில்லை. பிறகு பார்க்கலாம்!

    ReplyDelete
  27. //// thanusu said...
    சில நாட்களாக வகுப்புக்கு முழுமையாக வர முடியவில்லை. இருப்பினும் அவ்வப்போது எட்டி பார்த்து கொண்டுதான் இருந்தேன் .
    வகுப்பிலே எனக்கு அதிகம் பிடித்தது அலசல் பாடம் தான். இப்படி அலசும் போது எனக்கே புதிது புதிதாய் கேள்விகள் முளைக்கும் .கேள்விகள் முளைக்க முளைக்க அறியும் ஆர்வமும் அதிகமாகும் . தொடர்ந்து இது போல் பாடங்கள் கொடுத்துக் கொண்டே இருங்கள் அய்யா.
    ஐந்தில் கேது சந்யாசமா சாம்ராஜ்யமா ? நம் முதல்வருக்கு ஐந்தில் கேது, சாம்ராஜ்யம் தான் .எனது பால்ய நண்பன் ஒருவன் கோயிலில் இறை ஊழியம் செய்கிறார் எந்தவித வருமானமும் எதிர் பார்க்காமல். இந்த காலத்தில் இப்படியும் ஒருவரா என்று நாங்களே பேசிக் கொள்கிறோம் இவருக்கும் ஐந்தில் கேதுதான்.அய்யா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் மீண்டும் ஒரு முறை கேள்வி பதில் பகுதியை தொடங்கவும்./////

    முதலில் புத்தகப் பணி. அவைகள் வெளிவந்த பிறகு கேள்வி பதில் தொடரை வைத்துக்கொள்வோம். மூன்று மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் அன்பரே!

    ReplyDelete
  28. //// venkatesa gurukkal said...
    வணக்கம்,
    ஒரு ஆண் ஜாதகத்தில் 7ல் குரு இருந்தால் களத்திர தோஷமா?////

    யார் சொன்னது? அது உண்மையல்ல!

    ReplyDelete
  29. /// GAYATHRI said...
    Ji, I heared about that Ramanujar's wife was so arrogant and he was escaped from Grahastha life and become sanyasi///

    மகான்கள் எல்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள். ஆகவே விமர்சனங்களைத் தவிர்ப்போம்!

    ReplyDelete
  30. //// R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    "அரச வாழ்க்கையை வெறுத்தவன் அரசமரத்தை நேசிப்பான்"என்ற கவியரசரின் தத்துவம் மிகவும் அருமை...
    இராமானுஜர் மகானின் ஜாதக அலசல் மிக அருமை ஐயா...ராகு தசையில் பிறந்து ராகு தசையில் இறைவனடி சேர்ந்தது என்பதை கேட்பதற்கே மிகவும்

    அதிசயமாய் உள்ளது...மகான்களின் வாழ்க்கையே அதியம் தான்...
    பூர்வபுண்ணியாதிபதி 5ல் இருக்கும் கேதுவை பார்ப்பதால் அதிகமான ஆன்மிக நாட்டத்தையும், வாழ்க்கையையும் அளித்துள்ளார் என்று நினைக்கின்றேன்...ஐயா,சிலர் கேது விருச்சகத்திலும் ராகு ரிஷபத்திலும் உச்சம் என்றும்;சிலர் கேது தனுசுவிலும் ராகு மிதுனத்திலும் உச்சம் என்றும் கூறுகின் றார்களே...இதில் எது சரி என்று புரியவில்லை...சில ஜோதிட புத்தகங்களிலும் இதே போலவே உள்ளது...மேற்கண்ட இராமானுஜரின் ஜாதகத்திலும் கேது விருச்சகத்தில் உள்ளதால் வந்த சந்தேகம் ஐயா...நீங்கள் தெளிவுபடுத்தினால் மகிழ்ச்சியடைவேன்...மிக்க நன்றி ஐயா...////

    ராகு & கேது இரண்டிற்குமே விருச்சிகம்தான் உச்ச வீடு!

    ReplyDelete
  31. //// Bala.N said...
    மிக்க நன்றி ராமனுஜர் ஜதாகம எடுத்துகாட்டக கொடுதற்கு. அருமையானா விளக்கம். விரிவான அலசல். நன்றி அய்யா///

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  32. SP.VR. SUBBAIYA said...
    //Krishna Krishna Hare Hare.....இது எப்படி இருக்கு?///


    "சுப்பையா அய்யா சொன்னால்,சுப்ரமணியரே சொன்னது போல"!!ராமானுஜர் ஜாதகத்தை parts வாரியாக,பிரித்து அலசி காய போட்டுள்ளீர்கள்.மிகவும் அருமை!!??குடிமகனே!நீ குடிமகனே!!?விளம்பரம் நன்று.

    ReplyDelete
  33. Guru Vanakkam,

    Today's class is one of the best for many reasons.
    1. As usual your style of writing
    2. This is similar to my chart with the same kadaga lagna and ketu in 5th.
    3.Alasal
    4. Kannadasan statment

    Excelent. Thank you
    Ramadu.

    ReplyDelete
  34. //ஸ்ரீபெரும்புதூர் என்னும் திவ்ய ஸ்தலத்தில் அவதரித்த மகான். தன் வாழ்க்கையை பெருமாளுக்கென்று அர்ப்பணித்த தவ சீலர். ஆழ்வார்களில் முதன்மையானவர்.//

    ராமானுஜர் ஆழ்வார்களில் ஒருவர் இல்லை என்று திரு KMRK அவர்கள் முன்பொரு குறிப்பிட்டிருக்கிறார். ஆக அவர் ஆழ்வார்களில் முதன்மையானவர் என்ற பேச்சுக்கும் இடமில்லை. குறிப்பிட்ட காலகட்டத்தில் வைணவத்தை பரப்பியவர். அவ்வளவுதான்.

    ReplyDelete
  35. சாம்ராஜ்யமா அல்லது சந்நியாசமா.

    இதற்கு சுருக்கமாக பதில் கண்பதானால் நிறைய ராஜயோகங்களா அல்லது அவயோகங்களா என்று பார்த்தால் புரிந்து விடும். எனக்கு ராகு 5லும் (உடன் உச்ச செவ்வாய்), கேது 11லும் இருக்கிறார்கள். என்ன பலன் என்பது எனக்கு மட்டும் தெரிந்ததாக இருக்கட்டும்.

    ReplyDelete
  36. R.Srishobana said...ஐயா,சிலர் கேது விருச்சகத்திலும் ராகு ரிஷபத்திலும் உச்சம் என்றும்;சிலர் கேது தனுசுவிலும் ராகு மிதுனத்திலும் உச்சம் என்றும் கூறுகின்றார்களே...இதில் எது சரி

    ஆமாம் அய்யா சில புத்தகங்களில் கண்ணியில் கேது நீசம் கும்பத்தில் கேது நீசம் என்றும் உள்ளது .அதேபோல் விருச்ச்கத்தில் ராகு நீசம் கேது உச்சம் என்றும் ரிஷபத்தில் கேது நீசம் ராகு உச்சம் என்றும் உள்ளது , ஆனால் தற்போது அய்யாவின் பாடங்களை மட்டுமே எடுத்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  37. வணக்கம் அய்யா.. வகுப்பறையில் வெகுநாளைக்குப் பிறகு ஒரு அலசல் பகுதி..நன்றி..
    இதில் இரண்டு எக்ஸ்ட்ரீம் துருவங்களாக சாம்ராஜ்யம் அல்லது சந்நியாசம் என்று இரண்டு நிலைக்குமே இந்த கிரக அமைப்பு காரணமாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருப்பதால் எந்த அடிப்படையிலே எந்தத் துருவம் நோக்கி ஜாதகனின் வாழ்க்கைப் பயணம் இருக்கும் என்று எப்படிக் கணிப்பது?இது முக்கியமில்லையா?
    இதே போல ஒவ்வொரு கிரகத்தின் உச்ச வீட்டுக்கும் ஏழாம் வீடு நீசம் என்று பொது விதிப் படி பார்த்தால் ராகு விருச்சிகத்திலே உச்சம் என்றால் ரிஷபத்திலே நீசமாகி விடவேண்டும்..கேதுவுக்கும் இதே நிலைதான்.. ரிஷபத்திலே இரண்டுமே நீசமாகின்றன என்று கொள்வதா?அப்படிக் கொண்டால் (ராகு கேது இரண்டுமே 180 டிகிரியிலேதான் எதிரெதிராகச் சுற்றிவரும். அதாவது ராகு விருச்சிகத்தில் இருக்கும் போது கேது ரிஷபத்திலேதான் இருக்கும்..) ராகு கேது இரண்டில் ஒன்று விருச்சிகத்தில் உச்சமாகும்போது ரிஷபத்திலே மற்றொன்று நீசமாகிவிடும் என்பதும் விளக்கப் படாத விதியாகிறது..இது சரிதானா?
    ஆசிரியர் எனக்காக விளக்கவேண்டாமென்றாலும் வகுப்பிலே சோதிட ஆர்வம் அதிகமுள்ள கண்மணிகளுக்காக விளக்குவது நல்லது என்று வேண்டிக்கொள்கிறேன்..(எனது சோதிட ஆய்வுக்கு/ஆர்வத்துக்கு கொஞ்சகாலம் ஓய்வு கொடுத்திருக்கிறேன்)

    ReplyDelete
  38. /// Ananthamurugan said...
    SP.VR. SUBBAIYA said...
    //Krishna Krishna Hare Hare.....இது எப்படி இருக்கு?///
    "சுப்பையா அய்யா சொன்னால்,சுப்ரமணியரே சொன்னது போல"!!ராமானுஜர் ஜாதகத்தை parts வாரியாக,பிரித்து அலசி காய போட்டுள்ளீர்கள்.மிகவும் அருமை!!??குடிமகனே!நீ குடிமகனே!!?விளம்பரம் நன்று.//////

    அத்தோடு விட்டதற்கு நன்றி!

    ReplyDelete
  39. /// ananth said...
    //ஸ்ரீபெரும்புதூர் என்னும் திவ்ய ஸ்தலத்தில் அவதரித்த மகான். தன் வாழ்க்கையை பெருமாளுக்கென்று அர்ப்பணித்த தவ சீலர். ஆழ்வார்களில் முதன்மையானவர்.//
    ராமானுஜர் ஆழ்வார்களில் ஒருவர் இல்லை என்று திரு KMRK அவர்கள் முன்பொரு குறிப்பிட்டிருக்கிறார். ஆக அவர் ஆழ்வார்களில் முதன்மையானவர் என்ற பேச்சுக்கும் இடமில்லை. குறிப்பிட்ட காலகட்டத்தில் வைணவத்தை பரப்பியவர். அவ்வளவுதான்.

    சும்மா பரப்பியவர் என்று அவரைக் கடாசிவிட முடியாது. ஆழ்வார்களை விட மேலானவர். He is seen by Śrīvaiṣṇavas as the third and most important teacher (ācārya) of their tradition (after Nathamuni and Yamunacharya), and by Hindus in general as the leading expounder of Viśiṣṭādvaita, one of the classical interpretations of the dominant Vedanta school of Hindu philosophy

    ReplyDelete
  40. //// ananth said...
    சாம்ராஜ்யமா அல்லது சந்நியாசமா.
    இதற்கு சுருக்கமாக பதில் கண்பதானால் நிறைய ராஜயோகங்களா அல்லது அவயோகங்களா என்று பார்த்தால் புரிந்து விடும். எனக்கு ராகு 5லும் (உடன் உச்ச செவ்வாய்), கேது 11லும் இருக்கிறார்கள். என்ன பலன் என்பது எனக்கு மட்டும் தெரிந்ததாக இருக்கட்டும்./////

    அப்படியே இருக்கட்டும். எல்லாம் நன்மைக்குத்தான்!

    ReplyDelete
  41. /// thanusu said...
    R.Srishobana said...ஐயா,சிலர் கேது விருச்சகத்திலும் ராகு ரிஷபத்திலும் உச்சம் என்றும்;சிலர் கேது தனுசுவிலும் ராகு மிதுனத்திலும் உச்சம் என்றும் கூறுகின்றார்களே...இதில் எது சரி
    ஆமாம் அய்யா, சில புத்தகங்களில் கன்னியில் கேது நீசம் கும்பத்தில் கேது நீசம் என்றும் உள்ளது .அதேபோல் விருச்ச்கத்தில் ராகு நீசம் கேது உச்சம் என்றும் ரிஷபத்தில் கேது நீசம் ராகு உச்சம் என்றும் உள்ளது , ஆனால் தற்போது அய்யாவின் பாடங்களை மட்டுமே எடுத்துக் கொள்கிறேன்////

    நல்லது. அப்படியே செய்யுங்கள்!

    ReplyDelete
  42. //// RAMADU Family said...
    Guru Vanakkam,
    Today's class is one of the best for many reasons.
    1. As usual your style of writing
    2. This is similar to my chart with the same kadaga lagna and ketu in 5th.
    3.Alasal
    4. Kannadasan statment
    Excelent. Thank you
    Ramadu.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  43. மரணத்திற்கு வழிகாட்டும் பலகை
    மனதிற்கு ஊக்கம் தரும் ஜாதக அலசல்

    வழக்கமான உங்கள் சொல்லடையில்
    பழக்கமான எங்களுக்கு சல்லடையில்

    பாடங்கள் தந்து மகிழும் உங்களுக்கு
    பாசமுடன் தருகிறோம் நன்றிகளை..

    கேது 5ல் இல்லை 12ல்..
    சாது என்று சொல்வது சரியா?

    ReplyDelete
  44. /// திருவாட்டி ஜெயலிதா அவர்களுக்கு ஐந்தில் கேது. ///

    நாளை அம்மாவிற்கு பிறந்த நாள்
    நாமும் அவர்களுக்கு தருவோம் வாழ்த்து

    அய்யா அவைகளை எல்லாம் பார்த்தே
    அந்தெந்த பதிவுகளை தருவார்..

    அம்மாவின் பிறந்த நாள் வாழ்த்து தர
    அன்பு சகோதரி தந்த வாய்ப்புக்குநன்றி

    ReplyDelete
  45. //// thanusu said...
    அய்யா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் மீண்டும் ஒரு முறை கேள்வி பதில் பகுதியை தொடங்கவும்./////

    இந்த கருத்தினை வழி மொழிகிறோம்


    ///முதலில் புத்தகப் பணி. அவைகள் வெளிவந்த பிறகு கேள்வி பதில் தொடரை வைத்துக்கொள்வோம்.///

    இதுவும் சரிதான் எனினும்
    கேள்வி பதிலுக்கென்று ஒரு புத்தகமும் போடலாம்

    பிரசித்த பெற்ற அஸ்வத்தாமன் கேள்விகள் என்ற புத்தகத்திற்கு அடுத்தது அய்யாவின் கேள்விபதில் புத்தகமாகத் தான் இருக்கும்.

    ஞான வெட்டியான் என்று ஒரு கேள்வி பதில் புத்தகம் படித்த நினைவில் இருக்கிறது..

    மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம்

    ReplyDelete
  46. அன்பின் அண்ணன்,

    ஜாதக் அலசல் அருமை; பின்னூட்டங்கள் அதனினும் அருமை. இந்த ஜாதக அலசல்கள்தான் எனக்கு மிக சுவாரசியமான பகுதி.

    புகைப்படம் ஸ்ரீரங்கமா?

    நன்றி
    KC

    ReplyDelete
  47. //ஆழ்வார்களை விட மேலானவர்.//

    அப்படியெல்லாம் உயர்வு தாழ்வு கற்பிக்க முடியாது என்பது என் அபிப்பிராயம். ஆழ்வார்கள் பெருமாளில் ஆழ்ந்தவர்கள். ஸ்ரீ பெரும்புதூர் மகான் வைணவத்திற்கு தத்துவ விளக்கத்தை முறை செய்த ஆசான்.பக்தி பெரிதா, தத்துவம் பெரிதா,வாதத்திதிறமை பெரிதா என்றெலாம் கணக்குப் போட்டு ஆழ்வார்களை மதிப்பிட முடியாது. ஸ்ரீ ரங்கம் கோவிலில் வழிபாட்டு முறைகளை ஒழுங்கு படுத்தியவர் ஸ்ரீராமானுஜர்.ஸ்ரீ ராமானுஜர் போன்றோர் நூல்கள் இயற்ற/விதிமுறைகளை சீர் செய்யத் தங்கள் வாழ்வு முறையால் வழிகாட்டியவர்கள் ஆழ்வார்கள்.இதில் யார் மேலானவர் என்பதை அவரவர்கள்
    சிந்தனைக்கே விட்டு விடுகிறேன். தொன்னைக்கு நெய் ஆதாரமா,நெய்க்கு தொன்னை ஆதாரமா?

    ReplyDelete
  48. உதாரண ஜாதகர் "கூறாமல் சன்னியாசம்" கொண்டவர்.மனைவி சற்றே ஏறுமாறாக‌ நடந்த‌தால்(அவர் ஆச்சார்ய ஸ்தானத்தில் வைத்து வணங்கியவரிடம், ஜாதி வித்தியாசம் பார்த்தார் மனைவியார் என்ற கோபம்)
    சொல்லாமல் குடும்ப வாழ்வைத் துறந்தார்.இது எதனால் என்றால் 7க்குடைய சனி பகவான் 6 ல் பகை வீட்டில் மாறி அமர்ந்தது ஆகும்.

    ReplyDelete
  49. என் இஷ்ட தெய்வத்தின் முதன்மை பக்தர்களுள் ஒருவரான ராமானுஜரின் ஜாதக அலசலை படித்து மகிழ்ந்தேன். சென்ற வருடம் நான் அனுஷ்டித்த 10 விரதங்களில் 8 விரதங்கள் மகாவிஷ்ணுவைக் குறித்தே

    ///முதலில் புத்தகப் பணி. அவைகள் வெளிவந்த பிறகு கேள்வி பதில் தொடரை வைத்துக்கொள்வோம். மூன்று மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் அன்பரே!///

    எனக்கும் ஜீன் மாதம் முதல் குரு தசை புதன் புக்தி மலர்கிறது. உங்கள் நூல்கள் அப்பொழுது வெளிவரும் என்ற செய்தி ஒரு நல்ல சகுனமாக தோன்றுகிறது.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com