மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.8.11

Astrology கண்ணதாசனின் ஜாதகம்!

--------------------------------------------------------------------------------------------
Astrology கண்ணதாசனின் ஜாதகம்!

இவருக்கு அறிமுகம் தேவையில்லை.

நான் அடிக்கடி இப்படிச் சொல்வேன்: கண்ணதாசனை ஒருவன் அறிந்திருக்க வில்லை என்றால் அவன் தமிழனே அல்ல!

Gifted Poet கடவுளின் அருளைப்பெற்ற கவிஞர் அவர். சரஸ்வதி அவருடைய நாக்கில் குடியிருந்தாள். ஒரு  பாடலுக்கு சர்வசாதாரணமாக பத்து பல்லவி களை அடுத்தடுத்துச் சொல்லி,  கேட்கும் இசையமைப்பாளரையும், இயக்குனரையும் திணற அடிக்கும் வல்லமை பெற்றவர் அவர்.

அவர் ஒரு திறந்த புத்தகம். 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். பின்னர் பல நூல்களை சுயமாகக் கற்றுத்  தேறியவர். தன்னுடைய இளம் வயதில் பல இன்னல்களையும், துயரங்களையும், துரோகங்களையும் சந்தித்து பல  அனுபவங்களைப் பெற்றவர். அவருடைய அனுபவங்கள்தான் அவருடைய பாட்டில் எதிரொலிக்கும்.

தன்னைப் பற்றி, தான் உயிருடன் இருக்கும் போதே, நல்லது கெட்டது என்று எதையும் மறைக்காமல் உள்ளதை  உள்ளபடியே - உண்மைகளை இரண்டு பெரிய புத்தகங்களாக எழுதிவைத்துவிட்டுப் போனார்.

வனவாசம், மனவாசம் என்னும் அந்த 2 நூல்களை அவசியம் வாங்கிப் படியுங்கள். அசத்தலாக இருக்கும் அவருடைய சுய சரிதங்கள் அவை!

ஆன்மீகத்துக்கு ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்னும் 10 பகுதிகள் கொண்ட நூலை எழுதிவைத்தார். மத நல்லினக்கத்திற்கு, ஏசு காவியம் என்னும் நூலையும் எழுதினார்.

நூற்றுக்கணக்கான தத்துவப் பாடல்களையும், மனதிற்கு நம்பிக்கையூட்டும் பாடல்களையும் எழுதியவர் அவர்

பெருந்தன்மைகள், தர்ம சிந்தனைகள் கொண்ட கவிஞனை, கால தேவன் விட்டு வைக்கவில்லை. 54 வயதிலேயே  கூட்டிச் சென்று விட்டான். இருந்திருந்தால் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு மேலும் ஒரு ஐயாயிரம் பாடல்களை  எழுதிக்கொடுத்திருப்பார்

அவர் எழுதிய பாடல்களில் எனக்குப் பிடித்த சிறந்த வரிகள் சிலவற்றை உங்களுக்காகக் கொடுத்துள்ளேன்
--------------------------------------
1
கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம்
   கனியிருக்கும் வண்டுக்கெல்லாம் துணையிருந்த தெய்வம்

நெல்லுக்குள்ளே மணியை நெருப்பினிலே ஒளியை
   உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம்
   உனக்கு இல்லையா - தம்பி
   நமக்கு இல்லையா - தம்பி
   நமக்கு இல்லையா

2
பணத்தின்மீதுதான் பக்தி என்றபின் பந்த பாசங்கள் ஏனடா
   பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
   அண்ணன் தம்பிகள் தானடா!
   அண்ணன் தம்பிகள் தானடா!

3
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
   இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்  - அதில்
   பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
   அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
   எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

4
அங்கும் இங்கும் அலைபோலே - தினம்
   ஆடிடும் மானிட வாழ்விலே
எங்கே நடக்கும் எது நடக்கும் - அது
   எங்கே முடியும் யாரறிவார்

5
வாழநினைத்தால் வாழலாம்
   வழியாயில்லை பூமியில்
ஆழக்கடலும் சோலையாகும்
   ஆசையிருந்தால் நீந்திவா!

6
அது இருந்தா இது இல்லை
   இது இருந்தா அது இல்லை
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தா
   அவனுக்கு இங்கே இடமில்லை!

(அதாவது மேலே போய்விடுவான்!)

7.
பார்த்தா பசுமரம்
   படுத்துவிட்டா நெடுமரம்
சேர்த்தா விறகுக்காகுமா - ஞானத்தங்கமே
   தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா?

8
பருவம்வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
   காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
   சேர்ந்துவாழ்ந்த அனைவருமே சேர்ந்து போவதில்லை!

9
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
   நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா
   அதில் நமக்கும் ஒரு வழியில்லையா என்னையா

10
அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
   இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
   ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
   கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
   காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

இன்னும் நூற்றுக் கணக்கான வரிகள் உள்ளன. இடம் கருதி சிலவற்றை மட்டுமே கொடுத்துள்ளேன்
-----------------------------------------------------------------------
இன்று அவருடைய ஜாதகத்தை அலசுவோம்!



1. சிம்ம லக்கினக்காரர். சிம்ம லக்கினமே நாயகர்களுக்கு உரிய லக்கினம். காட்டில் சிங்கம் எப்படி நாயகனோ,  அப்படி நாட்டில் சிம்ம லக்கினக்காரர்கள் எல்லாம் நாயகர்களே! (They are the heroes)

2. லக்கினாதிபதி சூரியன் பதினொன்றில். அதாவது லாபஸ்தானத்தில். லக்கினாதிபதி லாபத்தில் அமர்ந்தால்  ஜாதகன் அதிர்ஷ்டமானவன். குறைந்த முயற்சி, அதிக பலன் அதன் பயன். ( Minimum efforts: Maximum benefits)

3. கற்பனை, கவிதைகள், எழுத்தாற்றலுக்கு உரிய இடமான இரண்டாம் வீடு, குரு பகவானின் நேரடிப்பார்வையில். அத்துடன் அந்த வீட்டு அதிபதி புதன் அந்த வீட்டிற்குப் பதினொன்றில். அதனால்தான் அவர் நாடறிந்த  கவிஞரானார்.

4. நான்கில் சனி. சிம்ம லக்கினத்திற்குக் கடும்பகைவன். படிப்பைக் கெடுத்தான். பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட நேர்ந்தது.

5. புதனும் சுக்கிரனும் கூட்டாகச் சேர்ந்ததால் அவர் கலைத் துறைக்குச் சென்றார். சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனாகிய செவ்வாயும், அவர்களுடன் சேர்ந்ததால், அந்தத்துறையில் அவருக்குப் பெரும் புகழை  அவர்கள் மூவரும் சேர்ந்து கொடுத்தார்கள்.

6. பாக்கிய ஸ்தானத்தில் (9ல்) சுபக்கிரகம் சந்திரன். ஆனால் அந்த வீட்டிற்குரிய செவ்வாய், நீசமாகி 12ல் அமர்ந்தான். அவருக்கு சில பாக்கியங்கள் கிடைத்தன. சில பாக்கியங்கள் கிடைக்கவில்லை. Mixed Results  கலவையான பலன்கள். பூரண ஆயுள் இல்லாமல் போய்விட்டதே - அது முக்கியமான பாக்கியம் இல்லையா?

7. கேது 5ஆம் வீட்டில் இருப்பதைப் பாருங்கள். கேது 5ல் இருந்தால், ஜாதகன் அரசனாக வாழ்வான். அல்லது  ஆண்டியாகி மடத்தில் சேர்ந்து விடுவான். இவர் அரசனாகவே வாழ்ந்தார். கவியரசர் என்றால் அவர் ஒருவர்தான்!

8. பதினொன்றாம் வீட்டில் ராகு இருப்பதால், சகலகலா வல்லவனாக ஜாதகன் இருப்பான். சகல அனுபவமும்  கிடைக்கும் அதீதமான பெண் சுகம் உட்பட. அவர் அப்படித்தான் வாழ்ந்து மறைந்து போனார்.

9 சூரியனும், ராகுவும் ஒன்று சேர்ந்தால், ஜாதகன் அபாரமான சுய சிந்தனைகளை உடையவனாக இருப்பான்.  சுயமாக இயங்கக்கூடியவன். சுதந்திரப் பறவையாக இருக்கக்கூடியவன். அவர் அப்படித்தான் இருந்தார்.

10. 11ல் இருக்கும் ராகு, தன் திசையில் அவரைப் புகழின் உச்சத்திற்குக் கொண்டு போனான். அவரை அரசவை  கவிஞராகவும் ஆக்கி அழகு பார்த்தான்.

11. ஐந்தில் அமர்ந்த கேது அவருக்குப் பலவிதமான மனக் கஷ்டங்களைக் கொடுத்தாலும், அவனே அவரை  ஞானம் மிகுந்தவராகவும் ஆக்கினான். அனுபவங்களால் மட்டும்தான் ஒருவர் ஞானம் பெறமுடியும். அவர்  விஷயத்தில் அது சரியாக இருந்தது. (5th House is the house of mind) கேதுதான் அவருக்கு ஞானத்தைக்  கொடுத்து, எளிமையாகவும், ஆழ்ந்த கருத்துக்களை உடையதாகவும் உடைய பல பாடல்களை எழுத வைத்தான்.

12. சூரியன் - ராகு கூட்டணி 11ல் இருந்து அரசின் சலுகைகளையும் பெற்றுத் தந்தன. அதே நேரத்தில் ஆட்சியாளர்களின் தவறுகளையும் விமர்சனம் செய்ய வைத்தன. அந்தக் கூட்டணி இரண்டையும் செய்யும்  என்பதற்கு, அவருடைய ஜாதகமே உதாரணமாகத் திகழ்கிறது.

விளக்கங்கள் போதுமா? அனைவரும் ஒரு வரி எழுதுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
22.8.2011
+++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

23 comments:

  1. வாத்தியாருக்கு வணக்கம்!

    நீசமான செவ்வாயால் சம்பாதித்த அளவிற்கு, நிலபுலங்கள் அமையவில்லை! 12 ம் இட சுக்கிரனால், பிற பெண்கள் சகவாசமும், அதனால் பொருள் இழப்பும்! தவறாயின் திருத்தவும்!

    ReplyDelete
  2. கவியரசரின் ஜாதகத்தை அருமையாக அலசியுள்ளீர்கள் ஐயா! ஐந்தில் கேது இருப்பதாலேயே குழந்தைச்செல்வம் பாதிப்பு என்று சொல்லக் கூடாது என்பதற்கு அவர் ஜாதகம் ஒரு எடுத்துக்காட்டு. கவிஞருக்கு நிறையக் குழந்தைகள் அல்லவா?

    ReplyDelete
  3. Ayya,

    He was expert in writing poems bcoz of Bhudhan & Sukran combination(Nuputhuva Yogam). Is that right?

    Sincere Student,
    Ravi

    ReplyDelete
  4. ஆசிரியருக்கு வணக்கம்,

    அலசல் அருமை...
    ஜன்ம நட்சத்திரமும் அந்த ஞான காரகன் கேதுவின் நட்சத்திரமே.... ஆக, இளமையிலே குட்டிச் சுக்கிரனும் வந்தே விளையாடி இருப்பான். கேது பகவான் வலுமிகுந்திருப்பது தத்துவ வேதாந்த ஞானத்திற்கே... என்றால் ஞானம், சுயமாகக் கற்றும் அனுபவத்தாலும் வந்தது ஞானம்..

    ஞாலத்திலே பட்டபின்பு ஞானியானார்.
    ஞானப் பட்டினிக்குத் தீனியும் ஆனார்
    அனுபவ அறிவென்னும் கேணியானார்
    அவதியுற்றோர் கரைசேர தோணியானார்
    ஏறியபின்பு பலர் எட்டி உதையும் ஏணியானார்
    முத்தையா தனது முத்தானப் பாடல்களிலே
    முக் கனியு மானார்.

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  5. how to calculate parals.where the software to calculate paral has been given in website

    ReplyDelete
  6. * 12 aam athipathi santhiran 9-l siru vayathileye thanthaiyai ezhanthirukka koodum. erupinum santhiran sevvay parivarththanaiyaal vaazhkkaiyai phoraadum balam petriruppaar.

    *thaayalum perithaay anbu kaatti erukka mudiyaathu. 4aam athipathi neecham,athil 6aam athipathi sani pagaiyil.

    *guru nirkkum edam keduthi paarkkum edame balam 8-l aachiyil erunthaalum kuraintha aayule kidaiththathu.

    *sukkiran-sevvaay(athitha sex), sevvaay-puthan(bhothai) kuligai serkkai pengalaal enbamum thunbamum nirayave undu . ellaavitha pazhakkamum erunthirukkum. 2,11-kku athipathi puthan 12-l ellaa varumaanamum(panam) vantha vazhiyileye phoyirukkum. and 12-l naangu giragam pagai neetcham ? nimmathiye erunthirukkaathu ??? enge nimmathi paadal evarthaan ezhuthinaaro???

    *5-l raaguthaan erukka koodaathu khethu erunthaal thappillai kuzhanthai,gnanam,arivu,theyva anugiragam + eamaatram ,thunbam ellaame undu .(gnanam summaa varumaa?)

    *11-l sooriyan pazham nazhuvi paalil vizhuthal.+ raagu vetri athistam (sun+raagu aan vaarisu enmai)

    * mhesa raasi + simma lagnam = double hero + aswini satar-hourse

    * sukkiran+puthan(santhiran veedu) = kalai,kavi,+ 9-aam athibathi(bakya) serkkai evai yaavum guru paarvai petru 12-l eruppathaal pothu shevai ,thondu ,arappani ,makkal nalam . kalai moolam namakku arivu sevai seythaar allavaa.!3,10 aam athipathi sukkiran enbathaal athaiye (kalai)thozhilaaga kondaar oor sutri thirinthu .

    navamsam koduththirunthaa nalla erunthirukkum. oru giragamum utchaththil eillaye???

    anbudan s.perumal

    ReplyDelete
  7. //4. நான்கில் சனி. சிம்ம லக்கினத்திற்குக் கடும்பகைவன். படிப்பைக் கெடுத்தான். பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட நேர்ந்தது.//

    அத்துடன் வித்தைக்கு காரகனான புதன் 12ல் இருப்பதும் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    5ல் கேது இருந்தாலும் புத்திர காரகனும், புத்திர ஸ்தானாதிபதியுமான குரு ஆட்சியாக இருக்கிறார். He has the prime say on progeny. மேலும் சொந்த வீடில்லாத, ராகு கேது தங்கள் இருக்கும் வீட்டின் அதிபதியின் பலனைப் பிரதிபலிப்பார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

    ReplyDelete
  8. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    கவியரசரின் ஜாதக அலசல் வகுப்பறை மாணவர்களுக்கு ஒரு practical
    examination போல அமைந்துள்ளது.விளக்கங்கள் அருமை. ஆயினும் ஒரு
    சில அய்யங்களுக்கு தயவு செய்து பதிலளிக்க வேண்டுகிறேன்.
    1. கவியரசரின் ஜாதகத்தில் 2.3,4,9,10,11 ஆகிய 6 பாவங்களின் அதிபதிகளாகிய செவ்வாய்,புதன்,சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் 12 ஆம்
    இடத்தில் மறைந்த போதும் இந்த 6 பாவங்களின் நற்பலன்களை இவர் நிறைய‌
    அனுபவித்திருக்கிறார். இது எவ்வாறு சாத்தியமாயிற்று?
    2. அஷ்டமாதியாகிய குரு ஆட்சி பெற்று அஷ்டமத்திலேயே அமர்ந்தும்,
    ஆயுள் காரகராகிய சனி குருவின் பார்வை பெற்றிருந்தும் அற்பாயுளாகப்
    போனது எப்படி? தயவு செய்து விளக்க வேண்டுகிறேன்.
    அன்புடன் தங்கள் மாணவன்
    அரசு.

    ReplyDelete
  9. ஆசானே வணக்கம்.

    நடந்த சம்பவம் நல்லதோ அல்லது கெட்டதோ அப்படியே மறைக்காமல் கூறுவதற்கு மிகவும் தைரியம் வேண்டும் அதனிலும் தனி புஸ்தகமாக வெளி இட்டுள்ளார் என்றால் கண்ணதாசனுக்கு ஈடு கண்ண தாசனே.

    ஐயா தாங்கள் இன்றைய வகுப்பறையில் வெளி இட்டு உள்ள பாடல்களில் முதல் பாடலிலே அனைவரையும் தங்கள் வசம் மெய்மறக்க வைத்து விட்டீர்கள்.

    என்ன ஒரு இரத்தின வரி துளிகள் இல்லையா ஐயா.

    ReplyDelete
  10. புருவத்தை உயர்த்தி
    புதிதாய் பார்க்கிறேன்..

    தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம் அது
    தெரியாமல் போனாலே வேதாந்தம்

    என்ற அந்த வரிகள்..
    எப்போதும் வைச சித்தாந்தத்திற்கு

    கட்டியம் கட்டுவது போல
    காலத்தால் அழியாதது..

    ஒன்பது பரிணாமங்களில்
    ஒப்பிட முடியாத பதிவுகளுடன்

    அலசிப்போடும் இன்றைய வகுப்பு
    அந்த கவி கடலை கடைந்துள்ளது

    ReplyDelete
  11. //////Blogger ரம்மி said...
    வாத்தியாருக்கு வணக்கம்!
    நீசமான செவ்வாயால் சம்பாதித்த அளவிற்கு, நிலபுலங்கள் அமையவில்லை! 12 ம் இட சுக்கிரனால், பிற பெண்கள் சகவாசமும், அதனால் பொருள் இழப்பும்! தவறாயின் திருத்தவும்!///////

    4ஆம் அதிபதி நீசம். அத்துடன் 4ல் சனி, அதனால் பெரும் சொத்துக்கள் அமையவில்லை. ஆனால் 4ஆம் அதிபதி குருவின் விஷேச பார்வையில் இருப்பதால், அவர் குடியிருந்த தி.நகர் வீடு மிஞ்சியது. அத்துடன் அவர் இல்லம் அமைந்த சாலையின் பெயர் கண்ணதாசன் சாலை என்றே இன்று அழைக்கப்பெறுகிறது. 12ல் மாந்தி இருந்தாலே இழப்புக்கள் உண்டாகும். சில திரைப் படங்களைச் சொந்தமாக எடுத்து பல லட்சங்களை இழந்தவர் அவர்!

    ReplyDelete
  12. //////Blogger kmr.krishnan said...
    கவியரசரின் ஜாதகத்தை அருமையாக அலசியுள்ளீர்கள் ஐயா! ஐந்தில் கேது இருப்பதாலேயே குழந்தைச்செல்வம் பாதிப்பு என்று சொல்லக் கூடாது என்பதற்கு அவர் ஜாதகம் ஒரு எடுத்துக்காட்டு. கவிஞருக்கு நிறையக் குழந்தைகள் அல்லவா?//////

    லக்கினாதிபதி 11ல் அமர்ந்து வலுவாக இருக்கிறார். அத்துடன் 5ஆம் வீட்டைப் பார்வையில் வைத்துள்ளார். குழந்தைக்குக் காரகன் குரு ஆட்சி பலத்துடன் இருக்கிறார். அதனால் அவருக்கு ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 13 குழந்தைகள்

    ReplyDelete
  13. //////Blogger Ravichandran said...
    Ayya,
    He was expert in writing poems bcoz of Bhudhan & Sukran combination (Nuputhuva Yogam). Is that right?
    Sincere Student,
    Ravi/////

    உண்மைதான். அத்துடன் கற்பனைகளுக்கு உரிய கிரகமான சந்திரன் திரிகோணம் ஏறியிருக்கிறார். 9ல் இருக்கிறார் அதையும் கவனியுங்கள்

    ReplyDelete
  14. //////Blogger தமிழ் விரும்பி said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    அலசல் அருமை...
    ஜன்ம நட்சத்திரமும் அந்த ஞான காரகன் கேதுவின் நட்சத்திரமே.... ஆக, இளமையிலே குட்டிச் சுக்கிரனும் வந்தே விளையாடி இருப்பான். கேது பகவான் வலுமிகுந்திருப்பது தத்துவ வேதாந்த ஞானத்திற்கே... என்றால் ஞானம், சுயமாகக் கற்றும் அனுபவத்தாலும் வந்தது ஞானம்..
    ஞாலத்திலே பட்டபின்பு ஞானியானார்.
    ஞானப் பட்டினிக்குத் தீனியும் ஆனார்
    அனுபவ அறிவென்னும் கேணியானார்
    அவதியுற்றோர் கரைசேர தோணியானார்
    ஏறியபின்பு பலர் எட்டி உதையும் ஏணியானார்
    முத்தையா தனது முத்தானப் பாடல்களிலே
    முக் கனியு மானார்.
    நன்றிகள் ஐயா!//////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. ///////Blogger reka said...
    how to calculate parals.where the software to calculate paral has been given in website///////

    பழைய பாடங்களில் உள்ளது சகோதரி. உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுங்கள். விளக்கப் பாடத்தை அனுப்பிவைக்கிறேன்

    ReplyDelete
  16. /////Blogger perumal shivan said...
    * 12 aam athipathi santhiran 9-l siru vayathileye thanthaiyai ezhanthirukka koodum. erupinum santhiran sevvay parivarththanaiyaal vaazhkkaiyai phoraadum balam petriruppaar.
    *thaayalum perithaay anbu kaatti erukka mudiyaathu. 4aam athipathi neecham,athil 6aam athipathi sani pagaiyil.///////

    அவருடைய தந்தையார் பெயர் சாத்தப்பன். தாயாரின் பெயர் விசாலாட்சி ஆச்சி. வறுமையின் காரணமாக அவர் வெறும் ஏழாயிரம் ரூபாய் பணத்திற்காக பெற்றோரைப் பிரிந்து, வேறு ஒரு குடும்பத்திற்கு சுவீகாரப் புத்திரனாக செல்லும் நிலைமை ஏற்பட்டது.

    ///////*guru nirkkum edam keduthi paarkkum edame balam 8-l aachiyil erunthaalum kuraintha aayule kidaiththathu.///////

    அத்துடன் ஆயுள்காரகன் சனியின் பார்வை ஆயுள் ஸ்தானத்திற்குக் கிடைக்காமல் போய்விட்டது.

    /////////*sukkiran-sevvaay(athitha sex), sevvaay-puthan(bhothai) kuligai serkkai pengalaal enbamum thunbamum nirayave undu . ellaavitha pazhakkamum erunthirukkum. 2,11-kku athipathi puthan 12-l ellaa varumaanamum(panam) vantha vazhiyileye phoyirukkum. and 12-l naangu giragam pagai neetcham ? nimmathiye erunthirukkaathu ??? enge nimmathi paadal evarthaan ezhuthinaaro???//////

    இரண்டு, பதினொன்றாம் அதிபதியான புதன் மாந்தியுடன் சேர்ந்து 12ல் அமர்ந்ததால் பலவிதத்தில் பொருள் இழப்பு ஏற்பட்டது.

    ///////*5-l raaguthaan erukka koodaathu khethu erunthaal thappillai kuzhanthai,gnanam,arivu,theyva anugiragam + eamaatram ,thunbam ellaame undu .(gnanam summaa varumaa?)////////

    ஐந்தில் கேது இருந்தால் ஒன்று அரசன் அல்லது துறவி. இரண்டுவித மன நிலையும் அவருக்கு இருந்தது

    ///////*11-l sooriyan pazham nazhuvi paalil vizhuthal.+ raagu vetri athistam (sun+raagu aan vaarisu enmai)//////

    சூரியனின் வலுவான பார்வையால் அவருக்கு மூன்று ஆண் குழந்தைகள்.


    ///////navamsam koduththirunthaa nalla erunthirukkum. oru giragamum utchaththil eillaye???
    anbudan s.perumal ///////

    பின் ஒருமுறை கொடுக்கிறேன். அப்போது விரிவாக அலசுவோம். இங்கே எழுதப்படுவது அனைத்தும் திருட்டுப்போவதால் விரிவாக எழுதவில்லை. இணையம் என்பது திறந்த வெளி. திறந்த வெளியில் ஒரு பெண் நின்று குளித்தால் என்ன நடக்குமோ, எத்தனை கண்கள் மொய்க்குமோ அதுதான் வகுப்பறையில் நடந்து கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  17. /////Blogger ananth said...
    //4. நான்கில் சனி. சிம்ம லக்கினத்திற்குக் கடும்பகைவன். படிப்பைக் கெடுத்தான். பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட நேர்ந்தது.//
    அத்துடன் வித்தைக்கு காரகனான புதன் 12ல் இருப்பதும் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
    5ல் கேது இருந்தாலும் புத்திர காரகனும், புத்திர ஸ்தானாதிபதியுமான குரு ஆட்சியாக இருக்கிறார். He has the prime say on progeny. மேலும் சொந்த வீடில்லாத, ராகு கேது தங்கள் இருக்கும் வீட்டின் அதிபதியின் பலனைப் பிரதிபலிப்பார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்./////

    உண்மைதான்!!! உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  18. //////Blogger ARASU said...
    ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    கவியரசரின் ஜாதக அலசல் வகுப்பறை மாணவர்களுக்கு ஒரு practical
    examination போல அமைந்துள்ளது.விளக்கங்கள் அருமை. ஆயினும் ஒரு
    சில அய்யங்களுக்கு தயவு செய்து பதிலளிக்க வேண்டுகிறேன்.
    1. கவியரசரின் ஜாதகத்தில் 2.3,4,9,10,11 ஆகிய 6 பாவங்களின் அதிபதிகளாகிய செவ்வாய்,புதன்,சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் 12 ஆம் இடத்தில் மறைந்த போதும் இந்த 6 பாவங்களின் நற்பலன்களை இவர் நிறைய‌ அனுபவித்திருக்கிறார். இது எவ்வாறு சாத்தியமாயிற்று?//////

    அவர்களுடைய சேர்க்கைதான் (association) காரணம்

    ////// 2. அஷ்டமாதியாகிய குரு ஆட்சி பெற்று அஷ்டமத்திலேயே அமர்ந்தும்,
    ஆயுள் காரகராகிய சனி குருவின் பார்வை பெற்றிருந்தும் அற்பாயுளாகப்
    போனது எப்படி? தயவு செய்து விளக்க வேண்டுகிறேன்.
    அன்புடன் தங்கள் மாணவன்
    அரசு.//////

    அற்ப ஆயுளில் அவர் போகவில்லை. 54 வயதில் மத்திம வயதில்தான் அவர் காலமானார்

    ReplyDelete
  19. Blogger kannan said...
    ஆசானே வணக்கம்.
    நடந்த சம்பவம் நல்லதோ அல்லது கெட்டதோ அப்படியே மறைக்காமல் கூறுவதற்கு மிகவும் தைரியம் வேண்டும் அதனிலும் தனி புஸ்தகமாக வெளி இட்டுள்ளார் என்றால் கண்ணதாசனுக்கு ஈடு கண்ண தாசனே.
    ஐயா தாங்கள் இன்றைய வகுப்பறையில் வெளி இட்டு உள்ள பாடல்களில் முதல் பாடலிலே அனைவரையும் தங்கள் வசம் மெய்மறக்க வைத்து விட்டீர்கள்.
    என்ன ஒரு இரத்தின வரி துளிகள் இல்லையா ஐயா.////////

    ஆமாம் கண்ணன். அதனால்தான் அதை முதலில் வைத்தேன்!

    ReplyDelete
  20. ///Blogger iyer said...
    புருவத்தை உயர்த்தி
    புதிதாய் பார்க்கிறேன்..
    தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம் அது
    தெரியாமல் போனாலே வேதாந்தம்
    என்ற அந்த வரிகள்..
    எப்போதும் வைச சித்தாந்தத்திற்கு
    கட்டியம் கட்டுவது போல
    காலத்தால் அழியாதது..
    ஒன்பது பரிணாமங்களில்
    ஒப்பிட முடியாத பதிவுகளுடன்
    அலசிப்போடும் இன்றைய வகுப்பு
    அந்த கவி கடலை கடைந்துள்ளது//////

    எல்லாம் உங்களைப் போன்ற மாணவர்களுக்காகத்தான் விசுவநாதன்! உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  21. Super. Teaching with example is a great way.

    I am reading Guru (SVS) lessons for a long time. I will be happy if I get a invite to this blog and eager to get to read his books.

    ReplyDelete
  22. is 5th house kethu has the same palan in any rasi or it is good only in dhanus

    ReplyDelete
  23. வணக்கம்

    இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/08/blog-post_13.html?showComment=1376394509465#c5525602230858939555


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com