மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.8.11

Astrology எது இருந்தா எது இருக்காது?

---------------------------------------------------------------------------------------
Astrology எது இருந்தா எது இருக்காது?

  “அது இருந்தா இது இல்லை
      இது இருந்தா அது இல்லை
   அதுவும் இதுவும் சேர்ந்து இருந்தா
      அவனுக்கு இங்கே இடமில்லை”


    என்றார் கவியரசர் கண்ணதாசன்.

    எல்லாம் கிடைத்துவிட்டால், அவன் இங்கே இருக்க மாட்டான். மேலே போய்விடுவான். போர்டிங்  பாஸைக் கையில் திணித்து, கர்மகாரகன் சனீஷ்வரன் மேலே அனுப்பி விடுவான். டெஸ்டினேசன் தெரியாது.அது  சொர்க்கமாக இருக்கலாம் அல்லது நரகமாக இருக்கலாம். சிவலோகமாக இருக்கலாம் அல்லது வைகுண்டமாக இருக்கலாம். எப்படி வேண்டு மென்றாலும் வைத்துக்கொள்ளூங்கள்

    ஆகவே இல்லாததை நினைத்து ஏங்காமல் இருப்பதைக் கொண்டு மகிழ்வோடு இருக்க வேண்டும்

    அதுதான் வாழ்க்கை!

    ஜாதகப்படி  ஒரு கட்டத்திற்கு (அதாவது ஒரு வீட்டிற்கு) 3 பாக்கியங்கள் வீதம் மொத்தம் 36  பாக்கியங்கள்.

    முதலில் லக்கினம் அதற்கு 3 பாக்கியங்கள். நல்ல உடல்வாகு & தோற்றம் (appearance) அதில் ஒரு பாக்கியம் இரண்டாம் வீட்டிற்கு மூன்று பாக்கியங்கள் அதில் பணம் ஒரு பாக்கியம் அதாவது கைக்காசு. கையிருப்பு. வங்கி இருப்பு. எப்போதும் கையில் பணம் இருக்கும் நிலைமை அம்மூன்றில் முக்கியமான பாக்கியம்  (Second house is the house of finance, family life & speech)

    மூன்றாம் வீடு  House of courage  முக்கிய பாக்கியம். துணிச்சல். எதையும் எதிர்கொள்ளும் துணிவு  முக்கியமான பாக்கியம்

    நான்காம் வீட்டிற்கு நல்ல தாயும், ஒன்பதாம் வீட்டிற்கு நல்ல தகப்பனாரும் முக்கியமான பாக்கியங்கள்

    ஏழாம் வீட்டிற்கு...........சொல்லவே வேண்டாம். நல்ல வாழ்க்கைத்துணை - அதாவது நல்ல, அன்பான மனைவி (Better Half) அமைவது அந்த வீட்டின் முக்கியமான பாக்கியம்.

    பத்தாம் வீடு நல்ல ஜீவனத்திற்கு வழி செய்யும், வேலை அல்லது தொழில் அமைவதற்கான  பாக்கியத்தைக் கொடுக்கும். (House of Profession) அந்த வீட்டின் முக்கியமான பங்களிப்பு அதுதான்.

    இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    “என்ன வாத்தியார் தளை தட்டுகிறதே - ஆறு, எட்டு, பன்னிரெண்டு ஆகிய வீடுகள் ஜாதகத்தில் மறைவிடங்கள் ஆயிற்றே - அது தரும் விளைவுகளை எப்படி பாக்கியமாகக் கொள்வது?” என்று கடைசி பெஞ்ச் கண்மணி ஒருவர் கேட்கலாம்.

    ஆறாம் வீடு கடன்கள், நோய்கள், எதிரிகள் ஆகியவற்றிற்கான வீடு. அந்த வீடு நல்ல நிலைமையில்  (in very strong position) இருந்தால் ஜாதகனுக்குக் கடன்களே ஏற்படாது. நோய் நொடிகளின்றி ஆரோக்கியமாக  இருப்பான். எதிரிகளே இருக்க மாட்டார்கள். இரண்டொருவர் இருந்தாலும் இவனைக்கண்டவுடன் ஜகா வாங்கிவிடுவர்கள். ஓடிப்போய்விடுவார்கள். வந்து நின்றால் துவம்சம் செய்துவிடுவான்.

    இப்போது சொல்லுங்கள். அவைகளும் பாக்கியம்தானே?

    அவற்றை எப்படித் தெரிந்து கொள்வது?

    ஜாதகத்தை முழுமையாக அலசினால் தெரிந்து கொள்ளலாம். அதற்குப் பல உபாயங்கள், சூத்திரங்கள்  உள்ளன. அவற்றை எல்லாம் ஒரே பாடத்தில் சொல்லித் தரமுடியாது. கடல் தண்ணீரைக் குடத்திற்குள் அடக்க  முடியுமா என்ன?

    பல பகுதிகளாக, உதாரண ஜாதகங்களுடன் விரிவாகச் சொல்லித் தர வேண்டும். அவற்றை என்னால்  முடிந்தவரை, என் சிற்றறிவிற்குத் தெரிந்தவரை விரிவாகச் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

    எங்கே? எப்போதிலிருந்து?

    இங்கே எழுதினால் ஒட்டு மொத்தமாகத் திருட்டுப்போய்விடும். பள்ளிக்கூட மதில் சுவருக்குப் பின்னால்  காத்துக்கொண்டிருக்கும் ஆசாமிகள் திருடிக் கொண்டு போய்விடுவார்கள். ஜோதிடம் பொதுவானதுதான். ஆனால்  என் அரிய நேரத்தைச் செலவழித்து, என் உழைப்பில், என் மொழியில், எனது நடையில் எழுதுவதைத் திருடிக் கொண்டு போகின்றவர்களை என்ன செய்வது? எப்படி நியாயப் படுத்துவது? நீங்களே சொல்லுங்கள்?

    இணையம் என்பது திறந்தவெளி. திறந்த வெளியில் நின்று ஒரு பெண் குளித்தால் என்ன ஆகும்? அதுதான் இன்று இணையத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

    ஆகவே தனி இணையதளத்தில் (Own Web site) எழுதிக்கொண்டிருக்கிறேன். ஜனவரி ஒன்று 2011 முதல் எழுதிக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுதவும் உள்ளேன். அதில் குறிப்பிட்ட சிலருக்குத்தான் இடம்  அளித்துள்ளேன்.

    மற்றவர்கள் எல்லாம் பொறுத்துக்கொள்ளூங்கள். அதில் எழுதுகின்ற அனைத்தும் புத்தகங்களாக  வரவுள்ளன (with copy right) முதல் இரண்டு தொகுதிகள் கார்த்திகை மாதம் வெளிவரும். அதைத் தொடர்ந்து  மேலும் இரண்டு புத்தகங்கள் ஏப்ரல் 2012ல் வெளிவரும். அப்போது அனைவருக்கும் அவற்றைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும்.

    இதை எதற்காக எழுதுகிறேன் என்றால், தங்கள் ஜாதகத்தில் சந்தேகம் கேட்டு பல மின்னஞ்சல் எனக்குத் தினமும் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை எல்லாம் சரிபார்த்துக் கேட்டுள்ள கேள்விகளுக்குப் பதில் சொல்ல தற்சமயம் எனக்கு நேரமில்லை. ஆகவே யாரும் தங்கள் ஜாதகத்தை இணைத்து எனக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டாம். இதை ஒரு வேண்டுகோளாகச் சொல்கிறேன்

    அந்தப் பாடங்களை எல்லாம் படித்தால் உங்கள் ஜாதகத்தை நீங்களே அலசலாம். Surf Excel, Vanish Cleaner, Dettol போட்டு துவைத்த துணிகளைப் போல உங்கள் ஜாதகம் பளிச்சிடும். ஆகவே பொறுத்திருங்கள். பொறுமை கடலினும் பெரிது. அதைவிடப் பெரியது உலகில் ஒன்றுமில்லை!

   பொறுத்தார் பூமியாள்வார். நீங்கள் பூமியை ஆளவேண்டும் என் ஆசை அதுதான்!

    அன்புடன்
    வாத்தியார்
----------------------------------------------------------------------------------------------



வாழ்க வளமுடன்!

18 comments:

  1. இதமான இனியக்காலை இன்றுவரும்
    இலக்கியச் சோலை என்றேக் காத்திருந்தேன்
    இனிப்பானச் செய்தி இதுவும் அதுபோன்றே
    இனிகொஞ்சநாள் காத்திருப்பேன் நன்றே.

    ReplyDelete
  2. sir i would like to join your web.
    May i?

    ReplyDelete
  3. புத்தகங்களுக்காக நானும் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. தமிழக அரசின் செய்திக் குறிப்பு: தமிழகத்துக்கு அகதிகளாக வந்து, இங்குள்ள முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களின் நலனில், முதல்வர் ஜெயலலிதா மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். எனவே தான், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத் திட்டங்களும், முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படுமென, கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதைச் செயல்படுத்தும் வகையில், சமூக நலத் துறையால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை, முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால், முகாம்களில் வசிக்கும், 5,544 இலங்கைத் தமிழர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாகப் பெறுவர். இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.
    - நன்றி தினமலர்.

    "தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்
    பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
    பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய
    தமிழச் சாதி தடியுதை யுண்டும்

    காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
    வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
    பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
    செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
    பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்

    நாட்டினைப் பிரிந்த நலிவினார் சாதலும்
    இ·தெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்,
    தெய்வம் மறவார, செயுங்கடன் பிழையார்,
    ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும்,
    இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்"

    -மகாகவி பாரதி.

    நோக்கம் என்று நோயுற்ற பார்வையோடு
    கால்புணர்ச்சிக் கொண்டு இச்செயல் பொறுக்காது
    கடிந்து கொள்வோர் யாவரும் தமிழர் அல்லார்
    மண்ணில் மனிதரும் ஆகார்.

    ReplyDelete
  5. வலைதளத்தில் சிலருக்குத்தான் இடம் அளித்துள்ளேன்;ஜனவரியில் இருந்து எழுதிவருகிறேன் என்கிறீர்களே!அந்த வலைதளத்தில் நான் இல்லையா?
    ஒருமுறை மாடெல் வலைதளம் அனுப்பி ஆலோசனை கேட்டு இருந்தீர்கள் அதன் பின்னர் எனக்கு எந்தத் தகவலும் இல்லை.நான் அதில் மாணவன் இல்லை என்பது சிறிது ஏமாற்றமாகத்தான் உள்ளது.

    ReplyDelete
  6. sir,

    Waiting for the book--- almost six to eight month over .please release as fast as possible.Now days , you are giving hard Tamil lessons which is very difficult to understand.

    Some idiot has spoiled our learning by stealing the lessons. however please release the book in the month of November as mentioned.

    Please try to understand , that I am eager to read the book as i do daily in your bloc.

    ReplyDelete
  7. அறிவு புதையலுக்காக
    அப்படியே காத்திருக்கிறோம்..

    என்ன விலை என சொன்னாலும்
    எடுத்துச் செல்ல நாங்கள் தயார்

    அந்த மேல்நிலை வகுப்பிலும்
    அதே நிலை மாணவராக இருப்பதில்

    மற்றற்ற மகிழ்ச்சியே..
    மறுபடியும் சொல்வதில் திருப்தியே..

    வழக்கம் போல் இந்த
    வகுப்பில் வரும் குறள் சிந்தனை..

    புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
    முக்கிற் கரியார் உடைத்து.

    ReplyDelete
  8. /////Blogger தமிழ் விரும்பி said...
    இதமான இனியக்காலை இன்றுவரும்
    இலக்கியச் சோலை என்றேக் காத்திருந்தேன்
    இனிப்பானச் செய்தி இதுவும் அதுபோன்றே
    இனிகொஞ்சநாள் காத்திருப்பேன் நன்றே./////

    வாரம் ஒரு நாள் இலக்கியச்சோலை உண்டு. இந்தவாரச் சோலை இன்று (4.8.11) மலர்ந்துள்ளது! பாருங்கள்

    ReplyDelete
  9. ///////Blogger sridhar said...
    sir i would like to join your web.
    May i?//////

    ஒரு செமஸ்டர் முடிந்து, அடுத்த செமஸ்டர் ஆரம்பித்துள்ளதே சாமி. இப்போது சேர்ந்து எப்படிப் படிப்பீர்ர்கள். அதற்கு நானாயிற்று என்று தெம்பிருந்தால், உங்கள் மின்னஞ்சலைத் தெரியப்படுத்துங்கள்

    ReplyDelete
  10. //////Blogger Uma said...
    புத்தகங்களுக்காக நானும் காத்திருக்கிறேன்./////

    மன்னிக்கவும். கூடிய சீக்கிரம் புத்தகங்கள் வெளிவரும் உமாஜி!

    ReplyDelete
  11. /////Blogger தமிழ் விரும்பி said...
    தமிழக அரசின் செய்திக் குறிப்பு: தமிழகத்துக்கு அகதிகளாக வந்து, இங்குள்ள முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களின் நலனில், முதல்வர் ஜெயலலிதா மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். எனவே தான், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத் திட்டங்களும், முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படுமென, கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதைச் செயல்படுத்தும் வகையில், சமூக நலத் துறையால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை, முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால், முகாம்களில் வசிக்கும், 5,544 இலங்கைத் தமிழர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாகப் பெறுவர். இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.
    - நன்றி தினமலர்.

    "தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்
    பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
    பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய
    தமிழச் சாதி தடியுதை யுண்டும்
    காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
    வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
    பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
    செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
    பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்
    நாட்டினைப் பிரிந்த நலிவினார் சாதலும்
    இ·தெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்,
    தெய்வம் மறவார, செயுங்கடன் பிழையார்,
    ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும்,
    இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்"
    -மகாகவி பாரதி.

    நோக்கம் என்று நோயுற்ற பார்வையோடு
    கால்புணர்ச்சிக் கொண்டு இச்செயல் பொறுக்காது
    கடிந்து கொள்வோர் யாவரும் தமிழர் அல்லார்
    மண்ணில் மனிதரும் ஆகார்.//////

    நல்லது. தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. ///////Blogger kmr.krishnan said...
    வலைதளத்தில் சிலருக்குத்தான் இடம் அளித்துள்ளேன்;ஜனவரியில் இருந்து எழுதிவருகிறேன் என்கிறீர்களே!அந்த வலைதளத்தில் நான் இல்லையா?
    ஒருமுறை மாடெல் வலைதளம் அனுப்பி ஆலோசனை கேட்டு இருந்தீர்கள் அதன் பின்னர் எனக்கு எந்தத் தகவலும் இல்லை.நான் அதில் மாணவன் இல்லை என்பது சிறிது ஏமாற்றமாகத்தான் உள்ளது.//////

    அந்த ஆலோசனைக் கடிதத்திலேயே உள் நுழைய பயனர் பெயரும் கடவுச்சொல்லும் கொடுத்திருந்தேனே சார். மீண்டும் ஒருமுறை அதைப் பாருங்கள். அதில் User Name & Paasword இல்லை என்றால், அந்தக் கடிதத்தேதியை எனக்குத் தெரியப்படுத்துங்கள் (மின்னஞ்சல் மூலமாக)

    ReplyDelete
  13. //////Blogger seenivasan said... sir,
    Waiting for the book--- almost six to eight month over .please release as fast as possible.Now days , you are giving hard Tamil lessons which is very difficult to understand.
    Some idiot has spoiled our learning by stealing the lessons. however please release the book in the month of November as mentioned.
    Please try to understand , that I am eager to read the book as i do daily in your blog.//////

    மன்னிக்கவும். கூடிய சீக்கிரம் புத்தகங்கள் வெளிவரும் நண்பரே!

    ReplyDelete
  14. Ayya,
    I've sent so many mails to you for joining into new website in last 6months. But I couldnt able to join. Even I've bought Short Stories Gift pack as well for joining into new Website. But no success again. I am undergoing first round of 7 1/2 Shani Bhavan(Thula Raasi). I think Shani Bhavan is not allowing to join into your new website. My id: ravichandran.muthu80@gmail.com.

    Please allow me as student..

    Sincere Student,
    Ravi.

    ReplyDelete
  15. Dear Sir,

    I had requested for access for the website you have created. Is there any reason for not provided me access? I have been visiting here since 2007 and have been requesting since them

    ReplyDelete
  16. //இங்கே எழுதினால் ஒட்டு மொத்தமாகத் திருட்டுப்போய்விடும். பள்ளிக்கூட மதில் சுவருக்குப் பின்னால் காத்துக்கொண்டிருக்கும் ஆசாமிகள் திருடிக் கொண்டு போய்விடுவார்கள். //

    சரியா சொன்னீங்க குருவே

    ReplyDelete
  17. Iyya avarkaluku vanakam nanum unkaludaya valai pathivai thavaramal padithu varukiren jothidam mattumallaml thankal koorum katahikalum arumai valatha vayathillai vanangukiren enkau thankaludaya min anjal padathai Navamsam padriya paadam matrum pira padankalai evaru therinthu kolvathu endru theriya villam enaku uthavi seaiyavum ennudaya jathakathi mattume eppothu arachi seikiren...........

    Nandri

    Saravanankic

    ReplyDelete
  18. sir i would like to join your web.
    May i?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com