----------------------------------------------------------------------------------------
அங்கேயும் ஒரு சூப்பர் ஸ்டார்!
வாரமலர்
இலண்டன் மாநகரில் உள்ள இடங்களைப்பற்றி எழுதுவது ஒன்றும் புதுமையில்லை.ஏனெனில் பலரும் எற்கனவே எழுதிய செய்திதான் அது. அல்லது 'இலண்டன் டூர்' என்று யார் வேண்டுமானாலும் கூகுள் ஆண்டவரைக் கேட்டால் எல்லா இடங்களையும் பற்றி அழகிய படங்களுடன் முழு விவரமும் கொடுப்பார். அதனால் அந்த முயற்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன்.
ஆனால் கண்டதும் கேட்டதும் படித்ததும் ஆகிய செய்திகளைச் சொன்னால்சுவையாகவும் இருக்கும், பயனுள்ளதாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. எனவே என் ஆக்கத்தை அப்படி அமைத்துக் கொள்கிறேன்.
சென்னை மாநகர் வாசிகளுக்கு 'மாம்பலம் டயம்ஸ், அண்ணாநகர் டயம்ஸ்'போன்ற இலவச வாரப் பத்திரிகைகள் அறிமுகமுண்டு.
நிறைய விளம்பரங்களும்,கொஞ்சம் உள்ளூர்,பேட்டை செய்திகளும்
இருக்கும். இப்போது 'அண்ணாநகர் டயம்ஸி'ல் பிரபல எழுத்தாளர்
திருவாளர் ரா.கி ரெங்கராஜன் எழுதி வருகிறார் என்பது உங்களுக்கு
ஓர் உபரிச் செய்தி.
மேற்சொன்ன இலவசப் பத்திரிகைகள் போலவே இங்கே இலண்டன் மாநகரிலும் அந்தஅந்தப் பகுதிக்கான பத்திரிகைகள் உண்டு. வியாழன்
தோறும் வீட்டில் இலவசமாக வந்து விழுகின்றது.அதுவே விலை
கொடுத்து வாங்கினால் அரைப்பவுண்டு கொடுக்க வேண்டும்.அதாவது
நம்மூர் ரூ 38/= ஆகும்.
அந்தப் பத்திரிகையில் வந்த சுவையான சில செய்திகளை உங்கள் முன் வைக்கிறேன்.
முதலில் என் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது இந்தத் தலைப்புத்தான்:
"HAPPY ENDING FOR SUPERSTAR"
இந்தச்செய்தி வந்தபோது சூப்பர் ஸ்டார் சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிவர தேதி வெளியாகி இருந்தது.சரி நம்ம ரஜினி இங்கேயும் பிரபலமா என்று ஆர்வத்துடன் வாசித்தேன்.அந்த செய்தியில் குறிப்பிட்டது ஒரு குதிரை. அதன் பெயர் சூப்பர் ஸ்டார்! இங்குள்ள ஒரு குதிரைப் பண்ணையில் குதிரைகளுக்கு கண்டுபிடிக்க முடியாத ஒரு தொற்று நோய் வந்து பல குதிரைகள் மாண்டன.உயிருடன் இருந்த குதிரைகளை இங்குள்ள மிருக வதைத் தடுப்புச் சங்கத்தினர் மீட்டு, இடம் மாற்றி அவைகளுக்கு உணவும் சிகிச்சையும் அளித்து நல்ல ஆரோக்கியத்திற்குத் திருப்பிவிட்டனர்.
அப்படி உயிர் பிழைத்த குதிரைகளில் சூப்பர் ஸ்டாரை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கான பள்ளியில் சேர்ப்பித்தனர். அங்கே சூப்பர் ஸ்டார் குழந்தைகளின் நிலையைப் புரிந்து கொண்டு, அவர்களைத் தன் மீது சுமக்கும் போது தள்ளிவிடாமல் பாதுகாப்பாக நடந்து கொள்கிறதாம். அதனால் குழந்தைகளுக்கு சூப்பர் ஸ்டார் மிகவும் பிடித்துப்போய் அந்தப் பள்ளியின் 'பெட்' ஆகி விட்டது. இப்போது அதன் வாழ்க்கை மகிழ்ச்சியுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் ஆகிவிட்டது.அதைத்தான் சூப்பர் ஸ்டாருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி'என்று விரிவான செய்தி ஆக்கியிருந்தனர்.
எப்படியோ இரண்டு சூப்பர் ஸ்டார்களும் மற்றவர்களை மகிழச் செய்கிறார்கள்.அந்த ஒற்றுமை ஒன்று போதாதா?
-------------------------------------------------------------------------------------------------
இரண்டாவதாக என் கவனத்தைக் கவர்ந்தது இரண்டு சின்னத் திருட்டுக்கள்.
முதல் திருட்டு ஒரு சைக்கிள். அதனை தொலைத்தவருடைய வேண்டுகோள் நெஞ்சைத்தொட்டது.
"நான் அந்த சைக்கிளை வாங்கி இரண்டு நாள் தான் ஆகிறது.500 பவுண்டு செலவு செய்துள்ளேன்.மேல் உபகரணங்களுக்கு மேலும் 100 பவுண்டு செலவு செய்துள்ளேன்.நான் ஒரு கட்டிட வேலை செய்யும் தொழிலாளி. என்னிடம் கார் இல்லை.நான் வேலைக்குச்செல்ல இந்த சைக்கிளையே நம்பியுள்ளேன்.அந்த சைக்கிள் நான் மிகவும் சிரப்பட்டு சேமித்த தொகையில் வாங்கியது. இனி சுலபமாகவும், சரியான நேரத்திற்கும் வேலைக்குச் செல்லலாம் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.அந்த 'பைக்'கில்தான் என் வாழ்க்கையே அடங்கியுள்ளது.
அந்த சைக்கிள் எனக்கு இன்னொரு காரணத்திற்காகவும் தேவைப்படுகிறது. நானும் என் மனைவியும் பிரிந்து வாழ்கிறோம். என் குழந்தைகள் என் மனைவியின் வீட்டில் உள்ளனர். நான் வாரக் கடைசியில் சென்று காணவும், அவர்களை வெளியில் அழைத்துச் சென்று ஐஸ்கிரீம், சாக்லேட் வாங்கித்தரவும் பூங்காவிற்கு அழைத்துச் செல்லவும் அந்த சைக்கிள் எனக்கு மிகவும் தேவையாக உள்ளது. எனவே விளையாட்டுக்காக யாராவது எடுத்துச் சென்று இருந்தால் என் முகவரியில் கொண்டு வைத்துவிடக் கோருகிறேன். அப்படிச் செய்தால் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்."
பெயர் முகவரியும் கொடுத்துள்ளார்.அவர் குழந்தைகள் பற்றி எழுதியுள்ளது மனதை மிகவும் தொட்டது.
இன்னொரு திருட்டு கொஞ்சம் வேடிக்கை ஆனது.திருட்டுப்போன பொருள் 'சோளக்கொல்லை பொம்மை'!ஆம்! காக்காய், குருவி விரட்ட வைக்கும் பொம்மைதான். ஒரு தாயும் மகளும் தோட்டம் போட ஆசைப்பட்டனர். தாங்கள் போட்ட விதைகளை பறவைகள் கொத்திவிடலாம் என்று எதிர்பார்த்து, தோட்டக்கலை அலுவலகத்தில் இருந்து 20 பவுண்டுக்கு ஒரு காகம் விரட்டும் பொம்மையை வாங்கிவந்து தோட்டத்தில் மாட்டி வைத்தனர்.ஒரு நாள் இரவு பொம்மையைக் காணவில்லை.அந்தத் தாயும் மகளும் அக்கம்பக்கம் எல்லாம்விசாரித்தனர். நாயைப் பிடித்துக்கொண்டு நடைப்பயணம் செய்யும் தாத்தா ஒருவர் ஒரு தடயம் சொன்னார்.
"உங்கள் பொம்மைக்கு நீலக் கலர் ஜீன்ஸ் அணிவித்து இருந்தீர்களா?"
"ஆமாம்!"
"ஒரு நீலக் கலர் ஜீன்ஸ் இங்கிருந்து மூன்று பேருந்து நிலையம் தள்ளி ஒரு மரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறது."
"அப்படியா?நன்றி!"
தாயும் மகளும் விரைந்து சென்று பார்த்தனர். பொம்மையைத் திருடியவர்கள் குடி ஜோரில் பொம்மையை உதைத்து விளையாடி இருக்கலாம் என்று ஊகித்தனர். இந்த செய்தியை காவல்துறைக்குத்தெரிவித்தனர்.பத்திரிகைக்கும் கொடுத்தனர்.
"அற்பப் பொருள்தானே என்று அலட்சியம் காட்ட வேண்டாம்.இதை நீங்கள் கண்டு பிடிக்காவிட்டால் யார் வேண்டுமானாலும் யார் வீட்டுக்குள்ளும் வந்து எதை வேண்டுமானாலும் தூக்கிச் செல்லாலாம் என்ற துளிர் விட்டுவிடும் .எனவே கவனத்துடன் அந்தத் தறுதலைகளைக்கண்டு பிடித்து தண்டிக்க வேண்டுகிறேன்" என்று புகார் கொடுத்துள்ளார்.பத்திரிகை இதற்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரம் செய்துள்ளது.
எப்படி இருக்கிறது? நம்மூரில் இது நடக்குமா?
------------------------------------------------------------------------------------------------------
நம்மூரைப் போலவே பள்ளிகளில் இலவச உணவளிக்கும் திட்டம் இங்கு உள்ளது.எப்போதும் 25 சதவிகித குழந்தைகளும்,இளைஞர்களும் இந்த உணவினைப்பெற இருக்க வேண்டிய பொருளாதார அளவுகோல்களுக்கு மிக அருகாமையில் உள்ளனர் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.ஆனால் நாம் இந்த இலவசத்தைப் பெறத் தகுதி உள்ளவர்தானா என்பதை பள்ளியில் வந்து நேரில் அறிந்து கொள்வதில் பெற்றோர், அல்லது தனித்த தாய், தந்தைக்கு ஏதோ மனத்தடை இருப்பதை அரசு கவனித்து உள்ளது. எனவே இப்போது அந்த மன உறுத்தலைப் போக்கும் வண்ணம் ஒரு மாற்று ஏற்பாட்டை அரசு அறிவித்து உள்ளது. இந்தப் புதிய முறைப்படி, தங்கள் விசாரணையை பள்ளிக்கு நேரில் வந்து செய்து கொள்ள வேண்டியது இல்லை.மாற்றாகத் தொலைபேசி மூலமோ அல்லது வலைதளம் மூலமோ தங்கள் பிள்ளைக்கு இலவச உணவு பள்ளியில் கிடைக்க ஏற்பாடு செய்துகொள்ளலாம். நேரில் வருவதால் ஏற்படும் 'அவமான'உணர்வைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
இதனை நம்மூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது.
தொழுநோய் கண்டுபிடிப்புத் துறைக்கு யாரோ தலைமைச் செயலகத்தில் அமர்ந்து உள்ள அதிகாரி சுற்றறிக்கை அனுப்பினார்.அதாவது பள்ளிப் பிள்ளைகளுக்குத் தொழுநோய் உள்ளதா என்று சோதிக்க உத்தரவு ஆயிற்று.அதனை ஏற்று ஒரு பள்ளிக்கு வந்தனர் அக்குழுவினர். ஒரு சில பிள்ளைகளுக்கு தேமல் இருந்தது. அவர்கள் எல்லாம் தொழுநோய் வரச் சாத்தியமானவர்கள் என்று தீர்மானித்து அவர்களுக்கு மாத்திரை கொடுக்க ஏற்பாடாயிற்று. இந்த மாத்திரையை எல்லாப் பிள்ளைகளும் பார்க்க அந்தப் பிள்ளைகளுக்கு வாயில் போடப்பட்டு தண்ணீரும் ஊற்றப்பட்டது. என்ன எதிர் விளைவு என்று சொல்லவும் வேண்டுமா? அந்தப் பிள்ளைகள் பள்ளியில் தனிமைப் படுத்தப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாயினர்.
நுண் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது என்பது நம் சமூகத்தில் குறைவுதான்.
(இன்னும் வரும்)
வாழ்க வளமுடன்!
கே. முத்துராமகிருஷ்ணன்,லால்குடி
முகாம்:இலண்டன் மாநகர்
----------------------------------------------------------------------
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
31.7.11
அங்கேயும் ஒரு சூப்பர் ஸ்டார்!
Subscribe to:
Post Comments (Atom)
என் ஆக்கத்தை வெளியிட்டு ஆதரவு அளித்ததற்கு வந்தனங்கள் அய்யா!
ReplyDelete2 நாட்களாக வகுப்பறை முடங்கி இருந்த போது கையும் ஓடவில்லை காலும் ஓட்வில்லை. இன்று மீண்டும் பதிவினைப் பார்த்த பின்னரே மகிழ்ச்சி அடைந்தேன்.
/////////////எப்படியோ இரண்டு சூப்பர் ஸ்டார்களும் மற்றவர்களை மகிழச் செய்கிறார்கள்.அந்த ஒற்றுமை ஒன்று போதாதா?///////////////////
ReplyDeleteஇந்த ஒரு ஒற்றுமையைப் பத்தி ரஜினியே ஒத்துக்கிட்டுருக்காரு..
ரஜினியைப்பத்தி சொல்லனுமின்னா சில வருஷங்களுக்கு முன்னால் தயாரிப்பாளர்கள் மீட்டிங்கிலே ஹீரோக்களுக்கு அதிகமா சம்பளம் கொடுக்குறதைப்பத்தி
எதிர்ப்பா முன்பொருதரம் பேச்சுவந்தபோது
"ரேசுலே நல்லா ஓடுற குதிரை மேலதானே எல்லாருமே பணம் கட்டுவாங்க?"அதுனாலே
படம் நல்லா ஓடி வசூல் சாதனை பண்ணினா தயாரிப்பாளர் லாபத்திலே ஹீரோவுக்கு பங்கு குடுத்திடப்போறாராக்கும்? என்கிற ரீதியிலே
வேகப்பட்டு பேசியிருந்தார்..நல்ல விஷயங்களைப் பத்தி எழுதியிருந்தீர்கள்..
நல்ல விஷயங்களைப் பத்தி எழுதியிருந்தீர்கள்..
ReplyDeleteவெளிநாட்டில் நடக்கும் பலவிஷயங்களை கண்ணுறும்போது நமது நாட்டு விஷயங்களை ஒப்பிட்டுப்பார்ப்பது தவிர்க்க இயலாதது..
நம் நாட்டு மேலிருக்கும் அக்கறைதான் இப்படி எண்ணமிடக் காரணம்..
பாவம்..எண்ணமிட மட்டுமே முடியும்..
மாஷே! நமஸ்காரம்.
ReplyDeleteசைக்கிள் திருட்டு செய்தி உண்மையிலே மனதை மிகவும் வருடுவதாக இருந்தது ஐயா.
ஏழ்மை என்பது எல்லா இடத்திலையும் உண்டு என்பது இந்த சம்பவத்தில் இருந்து உணர்த்தும் பாடம் ஆகும்.
ஸ்ரீ முத்து ராம கிருஷ்ண சார் மிகவும் நயம் பட தந்து உள்ளதை பார்க்கும் பொழுது ஐயாவிற்கு ஈடு ஐயாதான்.
///நம்மூரில் இது நடக்குமா?///
ReplyDeleteநம்மிடமுள்ள நல்லதை மறந்து
நம்மை மற்றதுடன் ஒப்பிடுவது..
இயலாத கோழைத்தனமல்ல..
முயலாத சீழ்கைத் தனம்..
விதிவிலக்குகளை கொண்டு கையில்
விலங்கிடும் தன்மை வேறு நிலையே
விலக்கி வைத்தாலும்
விலகி நின்றாலும் உண்மை இதுவே
காலமே எல்லாவற்றிக்கும் மருந்து..
கசப்பாக இருந்தாலும் பேணிகாக்கும்
மருந்து அது அதனால்
மறக்காமல் பேணுவோம் மாமருந்தை
வணக்கமும் வாழ்த்துக்களும்
வழக்கம் போல் அனைவருக்கும்
Super KMRK sir. Hope you are enjoying your stay at London.
ReplyDelete