மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.7.11

Astrology தலைவன் இருக்கிறான் மயங்காதே!

--------------------------------------------------------------------------------------
Astrology தலைவன் இருக்கிறான் மயங்காதே!

"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே..
தலைவன் இருக்கிறான் மயங்காதே"

- கவியரசர் கண்ணதாசன்

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதி மனதிற்கு நம்பிக்கையூட்டும் பாடல்வரிகளில் மேலே குறிபிட்டுள்ள வரிகளும் ஒன்றாகும். தலைவன் என்று அவர் குறிப்பிட்டுள்ளதை இறைவன் என்று பொருள் கொள்ள வேண்டும்

நமக்கு துன்பங்கள் ஏற்படும்போது, இறைவனைச் சரணடைந்து, அவன் பார்த்துக்கொள்வான் என்று விட்டுவிட்டால், நமக்கு வரும் துன்பங்கள் விலகிவிடும். விலகாவிட்டாலும் அவற்றைத் தாக்குப்பிடிக்கும் சக்தி நமக்கு உண்டாகும்
--------------------------------------------------------------------------------------------------   
சூரியன் ஜாதகத்தில் தந்தைக்கு உரிய கிரகம். அத்துடன் உடலுக்கு உரிய கிரகம். வாட்டசாட்டமாக நல்ல தோற்றத்துடன் ஒருவன் இருந்தால், அவனுடைய ஜதகத்தில் சூரியன் வலுவாக இருக்கும். அதே போல சனிக்கும் இரண்டு பணிகள். அவர்தான் கர்மகாரகன் (authority for work). அத்துடன் ஆயுள்காரகன்.
-----------------------------------------------------------------
தசா புத்திப் பாடல்கள் வரிசையில் சூரிய மகா திசையில், குருபுத்தியில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப் பார்த்தோம். அடுத்து  அதே சூரிய மகாதிசையில் சனி புத்தியில் கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம்.
---------------------------------------------------------------
திசைபுத்தி நடைபெறும் காலம் 11 மாதங்களும் 12 நாட்களும் ஆகும். மொத்த காலமும் தீமைகள் உடையதாக, வருத்தம் தருவதாக இருக்கும். இரண்டும் பிரதான கிரகங்கள். அத்துடன் ஒன்றுக்கொன்று கடும் பகைக்கிரகங்கள்.

பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

வணங்குவார் ரவிதிசையில் சனிபுத்திகேளு
    வாக்கில்லா நாளதுவும் மாதம் பதினொன்று
இணங்குவார் நாளதுவும் முன்னான்காகும்
    இதனுடைய பலத்தையினி இயம்பக்கேளு
குணங்குவார் சத்துருவும் மன்னவருந்தானும்
    குலைபொருளுஞ் சேதமே ஆக்கிவைப்பார்
பிணங்குவார் பிதிரருமா ரகமேயாவார்
     பிலன்கேடு பண்ணிவைப்பான் சனியன்தானே!   

இதற்கு சற்றும் குறைவில்லாத தீயபலன்களை சனி மகா திசையில் சூரிய புத்தியும் நமக்கு உண்டாக்கும்.

பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.

தானென்ற காரிதிசை கதிரோன்புத்தி
    தயவில்லா மாதமது பதினொன்றாகும்
நானென்ற நாளதுவும் பனிரெண்டாகும்
    நன்மையில்லா அதன்பலனை நவிலக்கேளு
ஊனென்ற சுரபீடை இரத்தமேரும்
    உதிரத்தால் சூலைநோய் உடனேகாணும்
மானென்ற மனைவியரும் மக்கள்தானும்
    மயங்குகின்ற நோவதினால் வருத்தங்காணே!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

4 comments:

  1. ///நமக்கு துன்பங்கள் ஏற்படும்போது, இறைவனைச் சரணடைந்து, அவன் பார்த்துக்கொள்வான் என்று விட்டுவிட்டால்///

    துன்பங்களில் மட்டுமல்லாது
    இன்பங்களிலும் அவரிடம் வைத்தால்

    அடுத்து வருமோ அந்த
    இடுக்கன் என்றே கேட்க தோன்றுகிறது

    வாத்தியார் பாடல்
    வரிசையாக வருதே

    இது எம்ஜிஆர் வாராமா
    இருந்தாலும் நல்லாதான் இருக்கு

    வழக்கம் போல்
    வணக்கங்களுடன் குறள் சிந்தனை..

    நன்று ஆம்கால் நல்லவாக் காண்பர்
    அன்று ஆம் கால்அல்லல் படுவது எவன்

    ReplyDelete
  2. சனிதசா சூரிய புத்தி சிறு வயதில் போய்விட்டது.சூரியதசா சனிபுத்தி வர இருக்கிறது. துணிவுடன் எதிர் கொள்ள ஆண்டவன் அருளுவார்.ஆவணி மாதம் பிறந்த எனக்கு சூரியன் ஆட்சியில். கூடவே சனியும் புதனும்.8ம் இடமான சனியின் வீட்டிற்கு சூரியன் சனி புதனின் பார்வைகள். எனவே ஆயுள் ஓரளவு கெட்டிதான் என்று நினைக்கிறேன்.பார்ப்போம்.இறைவனாகிய தலைவன் ஆணைப்படி எல்லாம் நடைபெறும்.நன்றி.

    ReplyDelete
  3. Ayya,
    I've ordered ur Short Stories via Umayal Pathipagam yesterday. Can you please accept me as ur student for the new website, because I'm trying for the past 6months.

    Best Regards,
    Ravi

    ReplyDelete
  4. //கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதி மனதிற்கு நம்பிக்கையூட்டும் பாடல்வரிகளில் மேலே குறிபிட்டுள்ள வரிகளும் ஒன்றாகும்//

    நிச்சயம் நம்பிக்கையூட்டும் வரிகள்.....

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com