மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

17.7.11

எல்லாநாட்டுப் பெண்களும் ஒரே மாதிரிதானா?

------------------------------------------------------------------------------------------
 எல்லாநாட்டுப் பெண்களும் ஒரே மாதிரிதானா?

வாரமலர்

சென்ற பதிவில் என் விமானப் பயண அனுபவத்தை எழுதியிருந்தேன். இப்போது இலண்டனில் என் அனுபவங்களை சிறுகச் சிறுக எழுதத் துணிகிறேன்.

'ஜெட்லாக்' என்னும் நேர மாறுதலால் ஏற்படும் மயக்கம் எனக்கு 4 நாட்கள் இருந்தது.மேலும் குளிர் தாங்காமல் கபமும் வைத்துக் கொண்ட‌து. இத்தனைக்கும் இது இங்கு கோடைகாலம்.இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே அதிக வெய்யில் அடித்து ஓய்ந்து, இப்போது நமது ஊட்டியைப் போன்ற வெப்பநிலை.தண்ணீர் மாற்றம், தூக்க நேரத்தில் தடுமாற்றம் , விமானப் பயணத்தில் நீண்டநேரம் குறுகிய இடத்தில் அமர்ந்து வந்தது எல்லாமும் சேர்ந்து சிறிது உடல் நலக்குறைவு.5ஆம் நாளில் சாதாரண நிலையை அடைந்தேன். உடனே வெளியில் அழைத்துச் செல்ல மாப்பிள்ளை எத்தனித்தார்.

'முதலில் கோவிலுக்குச்செல்வோம்' என்றார்.என் மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் பல வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொடுத்த ஸ்ரீராஜராஜேஸ்வ‌ரி அம்மன் ஆலயம் அழைத்துச்சென்றார்.
ஸ்டோன்லே  என்ற இடத்தில் இந்த ஆலயம் உள்ளது. இங்கிலாந்து
நாட்டில் 150க்கும் மேற்ப‌ட்ட இந்து ஆலயங்கள் உள்ளன. இலண்டன்
மாநகரில் மட்டும் 40  இந்துக் கோவில்கள் உள்ளன.ஸ்ரீராஜராஜேஸ்வரி
அம்மன் ஆலயத்தில் பிரதான மூலவர் அம்மன் தான். விநாயகர், முருகன், அண்ணாமலையார், மதுரை மீனாட்சி அம்மன்,பெருமாள், பள்ளிகொண்ட பெருமாள் அரங்க‌நாதர், நவக்கிரஹங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன.குறைவில்லாமல் பால் அபிஷேகம் நடந்தது.4 குருக்கள் உள்ளனராம்.அதில் மூவர் ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளார்.மன நிறைவுடன் வீடு திரும்பினோம்.

தினமும் காலையில் பெயர்த்தியை நர்சரி பள்ளியில் கொண்டு சேர்க்கும் பணியை விரும்பி ஏற்றோம்.நான் ஒருபக்கமும், என் மனைவியார் ஒருபக்கமும் பெயர்த்தியின் கைகளைப் பிடித்துக் கொண்டு பள்ளி நோக்கிச் செல்லும் போது பெயர்த்தி சொல்லும் கதைகள், ஆனந்த அநுபவம்.இதற்காகத்தானே ஆசைப்பட்டு இலண்டன் வந்தோம். 'ஸ்கைப்'பிலும், தொலைபேசியிலும் பார்த்துக்கொண்டு, பேசிக்கொண்டு இருந்த பெயர்த்தியினை நேரில் கண்டு பழக, பேச வாய்ப்பளித்த ஆண்டவனுக்கு நன்றி!

பள்ளியில் இருந்து அப்படியே ஒரு நடைப்பயணம் மேற்கொள்வோம்.ஆரோக்கிய நடைப்பயணம்! மருத்துவர் ஆலோசனை அல்லவா?தவறாமல் கடைப்பிடிக்க வேண்டாமா?

சீரான நடை வழிப்பாதைகள்.எதிரில் வரும் நபர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கினால் தவறாமல் நன்றி சொல்லும் பாங்கு.தினசரி சந்திக்கும் நபர்கள் மிகுந்த நட்புணர்வுடன் 'ஹலோ, ஹாய்' சொல்லுவது. நம்முடன் சேர்ந்து தினசரி வரும் நபர் ஒரு நாள் வராவிட்டாலும் அவ‌ர்களைப் பற்றிய விசாரிப்பு.நற்பண்புகள் என்றால் அவர்களிடம் இருந்து கற்க வேண்டும்.

ஒரு விஷயத்தில் எல்லா நாட்டுப் பெண்களும் ஒரே மாதிரிதான். வெள்ளைப் பெண்களும் நமது தமிழக நங்கையரும் ஒன்று போலத்தான்.

நாங்கள் தினமும் காலையில் செல்லும் நர்சரிக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை அழைத்து வரும் இளம் தாய்மார்கள் பலர் உண்டு. எல்லோரும் ஒன்று போல குழந்தை பிறந்த பின்னர் உடலை சீரக வைத்து இருப்பதில் கவனம் செலுத்தாமல் விட்டு ஊதிய உடலுடன் உள்ளனர்.'ஒபீசிடி' உள்ள பெண்களையே  அதிகம் காணக் கிடைக்கிறது.

ஒருவேளை ஏதாவது கல்லூரி பல்கலைப் ப‌க்கம் சென்றால் மெல்லிடை நங்கையரை சந்திக்கலாம் என்று எண்ணுகிறேன்.(அதற்காக அழைத்துச் செல்லக் கேட்டால் என் வயதுக்கு என்னை ஒரு மாதிரி பார்க்க மாட்டார்களா?ஆகவே மூச்!)

மஹாத்மா காந்திஜியை 'அரை நிர்வாணப் பக்கிரி' என்று வின்ஸ்டன்
சர்ச்சில் அழைத்தார்.இங்கு வந்து பார்த்தபின்னர்தான் தெரிகிறது,   
இங்கு உள்ள ஆண் பெண் எல்லோரும் முக்கால் நிர்வாணமாக 
இருப்பது. விளையாடும் போது அணியும் குட்டி டவுசர், மேலே ஒரு 
முண்டா பனியன் மட்டும்  அணிந்து பூங்காவிலும் 'பப்' என்னும் குடிக்குமிடங்களிலும் ஆண் பெண் அனைவரும் நடமாடுகிறார்கள்.
இது கோடைகாலமாதலால் அப்படியாம்!சரி!ஏதோ நம்மால் முடிந்தது அரைக்கண்ணால் பார்த்துவிட்டு பார்க்காதது போல போய்க்
கொண்டே இருக்க வேண்டியதுதான்.நமக்கேன் இந்த வம்பெல்லாம்
சிவ சிவ!

(அனுபவம் தொடரும்)
இலண்டன் மாநகரத்தில் இருந்து
கே.முத்துராமகிருஷ்ணன்,லால்குடி

----------------------------------------------------------------------------------
Sunday Jokes. Please take them as jokes

1
What Is FACEBOOK ?
Its A Place Where Boy Posts Joke, Gets No Response...
And If Girl Posts The Same Joke, She Gets 150 Likes, 300 Comments & 60 Friends Requests..
-----------------------------------------
2
Two CA's getting married.
During marriage ceremony, wife vomits
Husband asks the reason?
Wife - Capital gain arising out of previous partnership
----------------------------------------
3
Angry husband is not satisfied with his wife & sends an sms to his Mother
in law. "Your product is not matching my requirements.*

*Smart Mother in law replys - Warranty expired, manufacturer not responsible
after seal is broken.*
-----------------------------------------
4
A guy who was married to one of the twin sisters was asked "You are
married to one of the twin sisters how do you recognize your wife."
The guy answered, "You are right I don't"
-----------------------------------------
Wishing you a happy week end
With affection and love
Vaaththiyaar


வாழ்க வளமுடன்!

5 comments:

Thanjavooraan said...

'சிவ, சிவ' எனும்போதே கண்கள் இரண்டும் நன்றாகத் திறந்திருக்க வேண்டுமே. சிவனைத் தரிசிப்பதற்காக. என்ன? அப்படித்தானே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Thanjavooraan said...
'சிவ, சிவ' எனும்போதே கண்கள் இரண்டும் நன்றாகத் திறந்திருக்க வேண்டுமே. சிவனைத் தரிசிப்பதற்காக. என்ன? அப்படித்தானே!//////

கண்கள் இரண்டும் நன்றாகத் திறந்திருக்கும்போது, சிவனாரைத்தவிர, மற்றதெல்லாம் கண்முன் வந்து நிற்கிறதே / ஆடுகிறதே சுவாமி! என்ன செய்வது? எல்லாம் இந்த பாழாய்ப்போன மனது படுத்தும்பாடுதான்! மன்னித்துவிடுங்கள் சுவாமி!!!! (எல்லோரையும்தான்)

iyer said...

2nd joke make us to WAKE
because it is Timely JOKE

As usual, a WISHES
for Great week end at DASH(board)

It is not just END..
but there is a bEND..

Ramachandranwrites said...

மாமா பப்ல நீங்க எங்க போனேங்க ? தேவையா இது, இந்த வயசுல ?

kmr.krishnan said...

அய்யா ஸ்ரீராம் மருமக‌னே! உம்மை ஒரு பின்னூட்டம் போட வைக்க மாமா தப்பு செய்த‌ மாதிரி காண்பிக்க வேண்டியுள்ளது பாருமேன்!

நாங்கள் 'வாக்' போகும் பாதையில் 'க்ரெளன்வுட் ஷாப்ஸ்' என்று ஒரு 'காம்ப்ளெக்ஸ்'. பல் பொருள் அங்காடி. அதனுடன் இணைந்த 'பப்'
சாலை ஓரத்திலேயே இருக்கும். இப்போது கோடையாதலால் மேசை நாற்காலியெல்லாம் வெளியில் கிடக்கும்.அதில் ஜாலியாக அமர்ந்து மது அருந்துபவர்களைப் பார்த்துக்கொண்டே போவோம். அப்போது பார்த்ததுதான் அவர்களுடைய ஆடை அலன்காரங்கள் எல்லாம்.