மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.7.11

திருநீற்றையே உட‌ல் முழுதும் ஆடையாக அணிந்து கொண்ட அரசனின் கதை!

-------------------------------------------------------------------------------------------------

திருநீற்றையே உட‌ல் முழுதும் ஆடையாக அணிந்து கொண்ட அரசனின் கதை!

பக்தி மலர்

வாத்தியார் என்பதற்காக மாணவர்கள் வேண்டுமென்றால் கருணை காட்டுவார்கள். அகண்டவரிசை இணைய இணைப்பு கருணை காட்டுமா என்ன? இன்று அதிகாலை 4 மணியில் இருந்து படுத்தி எடுத்துக்கொண்டிருக்கிறது. நாளைதான் சரியாகும்.வெள்ளி மலரை வலையேற்ற வேண்டும் என்பதால், நண்பரின் Data card மூலம் அவசரம் அவசரமாக அதாவ்து வெள்ளி முடிந்துவிடுவதற்குள் வலை ஏற்றியுள்ளேன் படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
===============================================

தெய்வச் சேக்கிழார் அருளிச் செய்த பெரியபுராணம் த‌மிழர்களின்  பண்பாட்டுக் கருவூலம்.

63 நாயன்மார்களின் கதைகளைச் சொல்ல வந்த அந்த மாபெரும் நூலில் தமிழர்களின் கலை,கலாச்சாரம் வாழ்வியல், பண்பாடு ஆகியவற்றினை அடிநாதமாக வைத்துக் கதையினைச் சொல்லியுள்ளார் சேக்கிழார் பெருமான்.‌

பெரியபுராணம் முழுவதுமே இனிமையும், அழகும் கொண்டு விள‌ங்குகிறது. அந்தப்புனித நூலில் இருந்து எந்தக் கதையினை எடுத்து எழுதலாம் என்று எண்ணிய போது என் மனக் கண்ணுக்கு முன்னால் வந்து நின்றது மூர்த்தி நாயனாரின் கதைதான்.எல்லா கதைகளுமே அற்புதம் என்றாலும், எந்தக் கதை நம்மை மிகவும் கவர்ந்துள்ளதோ

அதுதானே முதலில் நம் எண்ணத்தில் வரும்? எனவே என் மனதில் முதல் இடத்தினைப் பெற்ற மூர்த்திநாயனாரின்  கதையினை இங்கு எழுதுகிறேன்.

நமது கதையின் நாயகரான‌ மூர்த்திநாய‌னார் ம‌துரையில் வா‌ழ்ந்தார். இறைத்தொண்டு என்ப‌தே த‌ன் வாழ்வாக‌க் கொண்டு

வாழ்ந்து வ‌ந்தார்.‌இறைவ‌னுக்குச் செய்யும் தொண்டுக‌ள் ப‌லப்பல‌.இறைவ‌னின் திருக்கோயிலை சுத்த‌ம் செய்த‌ல்,  பூசைக்கான‌ பாண்ட‌ங்க‌ளைத் துல‌க்குத‌ல், பூக்கொய்த‌ல்,ம‌ல‌ர்மாலை க‌ட்டுத‌ல்,கோயில் ச‌ன்னிதான‌ங்க‌ளில் விள‌க்கு
ஏற்றுத‌ல்,குங்குலிய‌ப் புகை, அகில் புகை ஆகிய‌வ‌ற்றை கோயிலில் ப‌ர‌வ‌விடுத‌ல்..இப்ப‌டிப் ப‌ல‌ப்ப‌ல‌ ப‌ணிக‌ள் இறைத்தொண்டாகும்.

ந‌ம‌து மூர்த்திநாய‌னார் தேர்ந்தெடுத்த‌து இறைவ‌னின்  அபிஷேக‌, அல‌ங்கார‌த்திற்கான‌ ச‌ந்த‌ன‌ம் அரைத்துக் கொடுத்த‌ல்.இப் ப‌ணியைப் ப‌ல்லாண்டு கால‌ங்க‌ள் இடைவிடாது, நாள் த‌வ‌றாது செய்துவ‌ந்தார் மூர்த்திநாய‌னார். இந்த‌ப்ப‌ணியைத் த‌விற‌ வேறு சிந்த‌னை ஏதும் இன்றி ம‌ழையானாலும், காற்ற‌டித்தாலும்,ப‌க‌ல‌வ‌ன் காய்ந்தாலும்,  புய‌ல் அடித்தாலும் நாய‌னாரின் ப‌ணியில் மாற்ற‌ம் என்ற‌ ஒன்று இருக்காது.

மூர்த்தி நாய‌னாரின் ப‌க்தியை உல‌குக்கு உண‌ர்த்த‌ வேண்டிய‌ த‌ருண‌ம் வ‌ந்துவிட்ட‌து என்று இறைவ‌ன் திரு உள்ள‌ம் கொண்டான்.அத‌ற்குத் த‌குந்த‌வாறு த‌ன் திருவிளையாட‌ல்க‌ளை அமைத்தான்.ம‌துரையைப் பாண்டிய‌ ம‌ன்ன‌ன் ஆண்டு  வ‌ந்தார். அப்போது க‌ன்ன‌ட‌ தேச‌த்தில் இருந்து வ‌டுக‌ ம‌ன்ன‌ன் ஒருவ‌ன் ம‌துரையை நோக்கிப் ப‌டை எடுத்து வ‌ந்தான். பாண்டிய‌ர் ப‌டை வீர‌த்துட‌ன் போர் புரிந்தும், வ‌டுக‌ ம‌ன்ன‌ன் பாண்டிய‌ ம‌ன்ன‌னைக் கொன்று போட்டான். த‌லைவ‌னை இழ‌ந்த‌ பாண்டிய‌ர் ப‌டை சித‌றிய‌து. பாண்டி நாட்டுக்குத் தோல்வி ஏற்ப‌ட்ட‌து.

ம‌துரையின் ஆட்சி கை மாறிய‌து. வ‌டுக‌ ம‌ன்ன‌ன் பாண்டி நாட்டு அர‌ச‌ன் ஆனான். அந்த‌ வ‌டுக‌ ம‌ன்ன‌ன் ச‌ம‌ண‌ ம‌த‌த்தை சேர்ந்த‌வ‌ன்.சைவ‌ ச‌ம‌ய‌த்தின் மீது வெறுப்புக் கொண்ட‌வ‌ன்.ப‌ல‌ சைவ‌ர்க‌ளையும் ச‌ம‌ண‌‌த்தை த‌ழுவ‌
வைத்துவிட்டான் வ‌டுக‌ன்.

மூர்த்தி நாய‌னாருக்கும் 'ச‌ம‌ண‌த்தைத் த‌ழுவ‌ வேண்டும்' என்று அழுத்த‌ம் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. 'என் உயிர் போனாலும்  சைவ‌த்தை நான் துற‌க்க‌ மாட்டேன்' என்று உறுதியுட‌ன் நின்றார் மூர்த்தி நாய‌னார். அவ‌ர் செய்துவ‌ந்த‌ இறைத்
தொண்டுக்குத் த‌ட‌ங்க‌ல் செய்தால் அவ‌ர் ம‌ன‌ம் மாற‌லாம் என்று திட்ட‌ மிட்டான் வ‌டுக‌ன்.

'அவ‌ருக்கு அரைப்ப‌த‌ற்குச் ச‌ந்த‌ன‌ம் கிடைக்காம‌ல் இருக்கும் ப‌டி பார்த்துக் கொள்ளுங்க‌ள்' என்று த‌ன்  அமைச்ச‌ர்க‌ளுக்கு ஆணையிட்டான் வ‌டுக‌ன்.ஒரு நாள் மூர்த்தி நாய‌னார் ஒரு சிறிய‌ துண்டு ச‌ந்த‌ன‌க் க‌ட்டைக்காக‌ ம‌துரை முழுதும் அலைந்தார்.அர‌சு ஆணைக்குப் ப‌ய‌ந்த‌ வ‌ணிக‌ர்க‌ளும், ம‌க்க‌ளும் ச‌ந்த‌ன‌க் க‌ட்டையைக் க‌ண்ணிலும் காண்பிக்க‌வில்லை.எங்கும் ச‌ந்த‌ன‌ க்க‌ட்டை கிடைக்காம‌ல் சோர்வுட‌ன் கோயிலுக்குத் திரும்பினார் மூர்த்தி நாய‌னார். அப்போதுதான் அந்த‌ அருள் ஆவேச‌ம் அவ‌ரைப் ப‌ற்றிக் கொண்ட‌து.

"ச‌ந்த‌ன‌க்க‌ட்டை கிடைக்காவிடில் என்ன‌? என் முழ‌ங்கையைக் க‌ல்லில் தேய்த்து இறைவ‌னுக்குச் ச‌ம‌ர்ப்பிப்பேன்"  என்று ச‌ங்க‌ல்பித்தார்.தான் பூண்ட‌ உறுதியின் ப‌டி த‌ன் முழ‌ங்கையைக் க‌ல்லில் வைத்து ச‌ந்த‌ன‌ம் அரைப்ப‌துபோல‌  அரைக்க‌த் துவ‌ங்கினார். தோல் வ‌ழ‌ண்ட‌து.அவ‌ர் நிறுத்த‌வில்லை.ந‌ர‌ம்பு,ச‌தை பிழ‌ன்ற‌து.அப்போதும்  நிறுத்த‌வில்லை. எலும்பு தெரிந்த‌து.அப்போதும் நாய‌னார் ஆவேச‌த்துட‌ன் கையை அரைப்ப‌தைத் தொட‌ர்ந்தார். தெய்வ‌ச்சேக்கிழார் கூறுவார்:

"ந‌ட்ட‌ம் புரிவார் அணி ந‌ற்றிரு மெய்ப்பூச்சு இன்று
முட்டும் ப‌ரிசாயினும் தேய்க்கும் கை முட்டாதென்று
வ‌ட்ட‌ம்திக‌ழ் பாறையின் வைத்து முழ‌ங்கை தேய்த்தார்
க‌ட்டும் புற‌ந்தோல் ந‌ர‌ம்பு என்பு க‌ரைந்து தேய‌"

இத‌ற்குமேல் சொக்க‌நாத‌ரால் பொறுக்க‌ முடிய‌வில்லை.

"மூர்த்தி நாய‌னாரே!கையை அரைப்ப‌தை நிறுத்தும்.நீர் நினைப்ப‌து விரைவில் நிறைவேறும் இப்போது இருக்கும் பிற‌ ச‌ம‌ய‌த்தைச் சேர்ந்த‌ அர‌ச‌ன் நீங்குவான். நீரே அடுத்த‌ ம‌ன்ன‌ன் ஆவீர். ந‌ல்லாட்சி செய்து திரும்பி எம்முட‌ன் வ‌ந்து
சேருவீர்"என்று இறைவ‌ன் அச‌ரீரியாக‌க் கூறினார்.

அன்று இர‌வே அந்த‌ வ‌டுக‌ன் திடீர் ம‌ர‌ண‌ம் எய்தினான்.வாரிசு இல்லாமையால் யானையின் கையில் மாலை  கொடுக்க‌ப்ப‌ட்டு அந்த‌ யானை யாருக்கு மாலை இடுகிற‌தோ அவ‌ரே அர‌ச‌ன் என்று அக்கால‌ முறைப்ப‌டி தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌து.

வ‌ழ‌க்க‌ம் போல‌ இறைத‌ரிச‌ன‌த்திற்கு வ‌ந்த‌ மூர்த்தினாய‌னாரின் க‌ழுத்தில் யானை மாலையிட்டு அவ‌ர் முன்ன‌ர் ப‌ணிந்து  வ‌ண‌ங்கிய‌து.ம‌க்க‌ள் யாவ‌ரும் ம‌கிழ்ந்து ஆர‌வார‌ம் செய்த‌ன‌ர்.அமைச்ச‌ர்க‌ள் மூர்த்தியாரை வ‌ண‌ங்கி அர‌ச‌ ப‌த‌வியை  ஏற்க‌ அழைத்த‌ன‌ர்.

"இது இறைவ‌ன் சித்த‌ம் எனில் அர‌ச‌ப‌த‌வியை ஏற்கிறேன் ஆனால் வா‌ச‌னை திர‌விய‌த்திற்கு ப‌திலாக‌ திருநீற்றையே  உட‌ல் முழுதும் அணிவேன். ஆப‌ர‌ண‌மாக‌ உருத்திராக்க‌ மாலையே அணிவேன். ம‌குட‌மாக‌ ச‌டாமுடி‌யே அணிவேன். சைவ‌ நெறியே என் நெறி.அத‌னை வ‌ள‌ர‌செய்ய‌ நான் எடுக்கும் ந‌ட‌வ‌டிக்கைக‌ளுக்கு நீங்க‌ள் ஆத‌ர‌வ‌ளித்த‌ல் வேண்டும்.  இத‌ற்கெல்லோரும் ஒப்புத‌ல் அளித்தாலே ப‌த‌வி ஏற்பேன்" என்றார்.

அமைச்ச‌ர்க‌ளும் ம‌க்க‌ளும் ஒப்புத‌ல் அளிக்க‌வே மூர்த்தி நாய‌னார் அர‌ச‌ரானார். ப‌ல்லாண்டுக‌ள் அர‌சு புரிந்து ந‌ல்லாட்சி

செய்து சைவ‌ நெறி த‌ழைக்க‌ச்செய்தார். அவ‌ரின் அவ‌தார‌ப் ப‌ணி முடிந்த‌வுட‌ன் இறைவ‌ன் அவ‌ருக்கு முக்தி அளித்து த‌ன் திருப்பாத‌ங்களில் அடைக்க‌ல‌ம் அளித்தார்.

பெரிய‌புராண‌ம் கூற‌ வ‌ரும் செய்தி ஒருவ‌ர் தான் மேற்கொண்ட‌ ப‌ணியினை கூலிக்குவேலை என்று க‌ருதாம‌ல்,  இறைத்தொண்டாக‌ எண்ணி ஆழ்ந்த‌ ப‌ற்றுட‌ன் தீவிர‌ வைராக்ய‌த்துட‌ன் செய்த‌ல் வேண்டும் என்ப‌தே. அந்த‌க்க‌ருத்தை  ந‌ன்கு புல‌ப்ப‌டுத்துவ‌து மூர்த்திநாய‌னாரின் ச‌ரித்திர‌ம்.

இதை‌ப் ப‌டித்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் ப‌க்தியும், இறை அருளும், ச‌க‌ல‌ வித‌மான‌ வ‌ள‌ங்க‌ளும் பெற்று உய்ய‌ இறைவ‌னை  வேண்டுகிறேன்.

வாழ்க‌ வ‌ள‌முட‌ன்!

இல‌ண்ட‌ன் மாந‌க‌ர‌த்தில் இருந்து,
கே. முத்துராம‌கிருஷ்ண‌ன், லால்குடி
*******************************************************
பிகு: ம‌துரையில் மீனாட்சி ச‌ன்னிதிக்கு வெளியில் மூர்த்தி நாய‌னார் ச‌ந்த‌ன‌ம் அரைத்த‌ ச‌ந்த‌ன‌க்க‌ல் இன்றும்  இருக்கிற‌து.ஒரு சிறிய‌ அறிவிப்புப் ப‌ல‌கையும் உள்ள‌து. அங்கு செல்ப‌வ‌ர்க‌ள் த‌வ‌றாம‌ல் அக்க‌ல்லை த‌ரிசித்துத் தொட்டு  வ‌ண‌ங்கி வாருங்க‌ள்.நீங்க‌ள் செய்யும் ப‌ணி சிற‌க்கும்.



வாழ்க வளமுடன்!

8 comments:

  1. மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும்
    அடியேன் என்று சுந்தரர் போற்றும்
    மூர்த்தி நாயனாரது வரலாறு கண்டு மகிழ்ந்தோம்.

    வையம் முறை செய்குவனாகில் வயங்கு நீறே செய்யும் அபிடேகமுமாக, செழுங்கலன்கள் ஐயன் அடையாளமுமாக, அணிந்து தாங்கும் மொய் புன்சடை முடியே முடியாவது என்றார்..

    என்று,

    திருநீறு, உருத்திராக்கம், சடைமுடி
    ஆகிய மூன்றையும் உயிர் மூச்சாகக் கருதி வாழ்ந்த இப் பெருமகனாரை தொழுது உய்கிறேன் ஐயா..

    மிக்க மகிழ்ச்சி ஐயா..

    ReplyDelete
  2. உங்களுடைய மேன்மைக்குக் காரணமே செய்யும் செயலில்,அதுவும் பொருளதாரப் பயன் ஏதும் இல்லாத இப்பணிக்கு,அதிக முக்கியத்துவம் கொடுத்து மிகுந்த ஆர்வத்துடன் பதிவிடுவதுதான். தாங்கள் வெளியூர் பயணமோ என்று எண்ணியிருந்தேன்.நான் அனுப்பிய ஆக்கங்களில் மனதுக்கு சாந்தி அளித்த இந்தப் பதிவினை வெளியிட்டு ஆதரவு அளித்ததற்கு வந்தனங்கள்

    ReplyDelete
  3. நல்ல பதிவு,
    பதிவிற்கு நன்றி...

    ReplyDelete
  4. திருநீறுக்கு இவ்வளவு மகத்துவமா?

    ReplyDelete
  5. அன்புடன் வணக்கம் திரு kmrk....
    மிக அருமையான பதிவு . படிக்கும்போது மனம் களிபபடைகிறது ,,

    ReplyDelete
  6. நல்ல பதிவு,
    பதிவிற்கு நன்றி...

    ReplyDelete
  7. font used: TSCu_SaiIndira (TAMIL)

    ¸ñ§¼ý,,, Å¢¨¼¾¨Éô ¦Àü§Èý,,,
    ¯õ À¾¢¨Åì ¸ñÎ
    ±ýÛû§Ç ¯¨ÈÔõ ±õ þ¨ÈÅÉ¡ÕìÌ
    ¬üÚõ ¦¾¡ñ¨¼ ¯Ä¸õ À¡Ã¡ð¼ §ÅñÎÁ¡?
    ¬¸¡,,,¯ñ¨Á¨Â ¯¨È ¨ÅòÐÅ¢ðÊ÷ ÍÅ¡Á¢,
    ÍÅ¡º¢ì¸ ÁÈó¾¡Öõ þó¾ ¯Â÷ó¾ À¾¢Å¢¼
    ÁÈÅ¡¾£÷, Å¡Æ¢÷,,,

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com