மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.12.10

அடியேன் வாத்தியாரான கதை!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடியேன் வாத்தியாரான கதை!

எழுத்து என் தொழில் அல்ல! ஜோதிடமும் என் தொழில் அல்ல! செயற்கை இழைகளைச் சந்தைப்படுத்தும் முகவர் தொழிலைச் செய்து வருகிறேன். தீவிரவாசகன். அதோடு கடந்த ஏழு ஆண்டுகளாக எழுதுகிறேன்.

அதுஎன்னுடைய போதாத நேரம். உங்கள் மொழியில் சொன்னால்
It is not my good time!

கல்கி, கண்ணதாசன், எஸ்.ஏ.பி.அண்ணாமலை, சுஜாதா, பாலகுமாரன், வாரியார் சுவாமிகள், ஓஷோ, Jeffery Archer, James Hadley Chase என்று கலக்கலாகப் பலரது நூல்களையும் படித்ததால் எப்படி எழுத வேண்டும்
என்பதைவிட எப்படி எழுதக்கூடாது என்பது எனக்குப் பிடிபட்டது.

விளையாட்டாகப் பத்திரிக்கைகளில் எழுதத் துவங்கினேன். எழுத்து மோகினி என்னப் பிடித்துக்கொண்டு விட்டாள். அவள் அழகில் மயங்கியவன், அவளின் வற்புறுத்தலுக்காக பதிவுகளில் (Blogs) எழுத ஆரம்பித்தேன்.

“எழுதுவதை நன்றாக எழுது
எல்லோரும் படிப்பார்கள்”


என்பதுதான் எழுத்தின் தாரகமந்திரம்.

ஆன்மிகக் கட்டுரைகள், சிறுகதைகள், மனவளக்கட்டுரைகள், நகைச்சுவைக் கதைகள், ஜோதிடக் கட்டுரைகள் என்று  எழுத்தின் எல்லாப் பரிமாணத்தையும் தொட்டு எழுதுகிறேன்.

பத்திரிக்கைகளில் இதுவரை 70 சிறுகதைகளையும் இரண்டு கட்டுரைத் தொடர்களையும் எழுதியிருக்கிறேன். 4 புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். அதன் மூலம் எனக்கு சுமார் 20,000 வாசகர்கள் உள்ளார்கள்.

என் பதிவிற்கு வந்து படிப்பவர்கள் அனைவரும் என்னுடைய
எளிமையான மற்றும் சுவையான நடைக்காகத்தான்  இங்கே வந்து
படிப்பதாகச் சொல்கிறார்கள். அவர்களுக்காகத்தான் ஊக்கத்துடன்
தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஜோதிடத்தை எழுதுவதால்தான் இங்கே இவ்வளவு எண்ணிக்கை என்று யாராவது நினைத்துக்கொண்டிருந்தால்,  அது தவறு என்பதை மனதில் கொள்ளவும். உணராதவர்கள், அதை உணர்வார்கள்.

குடுவைகள், ரசாயனக் கலவைகள், சோதனைச் சாலைகள் என்று வைத்து ஜோதிட ஆராய்ச்சிகள்  செய்வதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. பல்கலைக் கழகங்களில் ஜோதிடத்தில் பட்டம் பெற்ற எனது  மாணவர்களில் சிலர் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்! இறையருளால்  அவர்களுடைய ஆராய்ச்சிகள் வெற்றி பெறட்டும்!

எனக்குத் தெரிந்தவற்றை, நான் கற்றவற்றை, இங்கே என் மொழியில் எழுதிக்கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்.  ஜோதிடம் பெரிய கடல். அதை எவருமே முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது. ஆயுள் பத்தாது.

நான் கற்றுக்கொண்டது கையளவுதான். இன்னும் கற்க வேண்டியது நிறைய உள்ளது.

 “போற்றுவார் போற்றட்டும் - புழுதி வாரித்
  தூற்றுவார் தூற்றட்டும்!”


எழுத்தைக் கையில் பிடித்தவனுக்கு உள்ள தாரக மந்திரம் இது!

நான் எழுதவில்லை. பழநிஅப்பன் என்னை எழுத வைக்கிறான். எல்லாப் புகழும் அவனுக்கே உரியது.

தூற்றல்களையும் புழுதிகளையும் மட்டும் என் கணக்கில் வரவு வைத்துக் கொள்கிறேன்

அன்புடன்
வாத்தியார்


இது ரேசன் கார்டையும், உத்தியோக உத்தரவையும் வைத்துக்கொண்டு
நான் தேடிப்பெற்ற பட்டப் பெயரல்ல. உங்கள் மொழியில் சொன்னால் அடையாளப் பெயரல்ல! பல்சுவை என்ற பதிவில் (http://devakottai.blogspot.com/)
நான்  எழுதிக்கொண்டிருந்த காலத்தில் பதிவுலக நண்பர்களால் வழங்கப்
பெற்ற பெயர். அந்தப் பெயருக்காகவே நான் ‘வகுப்பறை’ என்ற
வலைப்பூவைத் துவங்கியது தனிக்கதை!

மனத்திருப்தி ஒன்றுதான் சமபளமாகக் கிடைத்துக்கொண்டிருக்கிறது.  
2,049 மாணவர்கள்தான் போனசாகக் கிடைத்திருகிறார்கள்.  
அவற்ரைவிட உயர்ந்தது  எது உள்ளது?

வாழ்க வளமுடன்!

15 comments:

  1. //"குடுவைகள், ரசாயனக் கலவைகள், சோதனைச் சாலைகள் என்று வைத்து ஜோதிட ஆராய்ச்சிகள் செய்வதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. பல்கலைக் கழகங்களில் ஜோதிடத்தில் பட்டம் பெற்ற எனது மாணவர்களில் சிலர் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்! இறையருளால் அவர்களுடைய ஆராய்ச்சிகள் வெற்றி பெறட்டும்!

    எனக்குத் தெரிந்தவற்றை, நான் கற்றவற்றை, இங்கே என் மொழியில் எழுதிக்கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். ஜோதிடம் பெரிய கடல். அதை எவருமே முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது. ஆயுள் பத்தாது"//

    முக்காலும் உண்மை அய்யா! மற்றவர்களைப் போட்டியாகக் கருதாமல்,தன் மாணவர்களின் வளர்ச்சி கண்டு வாழ்த்துகிறீர்கள் பாருங்கள். அங்கேதான் நீங்கள்
    உயர்ந்து நிற்கிறீர்கள்.அதனால் தான் நீங்கள் வாத்தியார்

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா!

    சொன்னாள் நம்ம மாட்டீர்கள், இருந்தாலும் சொல்லுகின்றேன். கடந்த ஒரு வருடத்தீர்க்கு மேல் வாத்தியாரின் வகுப்பறையில் வந்து படிக்க காரணமும் தாங்கள் கூறும்

    " பழனியப்பன்!"

    தான். முன்னர் அதற்க்கான காரணம் சொல்லி உள்ளேன். இப்பொழுதும் சொல்லுகின்றேன் ஐயா.

    " அம்மா! அப்பா! தான் உலகம்! " என்று பழனி ஆண்டவர் உபஹெசம் செய்த மந்திரத்தை எமது " குருநாதர்!"

    பழனிக்கு செல்லும் வழியில் மாயமாக வந்து எமக்கு மந்திர உபதேசம் செய்ததை தாங்களும் அப்படியே கூறி இருந்தீர்கள் ஐயா.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா!

    சொன்னாள் நம்ம மாட்டீர்கள், இருந்தாலும் சொல்லுகின்றேன். கடந்த ஒரு வருடத்தீர்க்கு மேல் வாத்தியாரின் வகுப்பறையில் வந்து படிக்க காரணமும் தாங்கள் கூறும் " பழனியப்பன்!" தான். முன்னர் அதற்க்கான காரணம் சொல்லி உள்ளேன். இப்பொழுதும் சொல்லுகின்றேன் ஐயா. " அம்மா! அப்பா! தான் உலகம்! " என்று பழனி ஆண்டவர் உபதேசம் செய்த மந்திரத்தை எமது " குருநாதர்!" பழனிக்கு செல்லும் வழியில் மாயமாக வந்து எமக்கு மந்திர உபதேசம் செய்ததை தாங்களும் அப்படியே கூறி இருந்தீர்கள் ஐயா.

    அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்தது நமது வகுப்பறை ஐயா

    ReplyDelete
  4. I pray GOD that your student list mutiply many times and you get endowed with blessings ,health and imagination to continue your passion

    ReplyDelete
  5. நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. உங்கள் எழுத்தின் எளிமையே என்னை வளைத்துப் போட்டது.

    நன்றிகள் அய்யா.

    ReplyDelete
  6. வாத்தியாருக்கு வணக்கம்.....
    ஜோதிடம் என்ற ஒரு விளக்கை என்போன்றவர்..... இருட்டுச் சிந்தையில் ஏற்றிய பெருமை தங்களையேச் சாரும்... ஆக முதலில் என் போன்றோருக்கு ஜோதிட வாத்தியார் என்பதில் அணுவளவேனும் சந்தேகமில்லை.....அப்படியே எனது நண்பர்களும், எனது குடும்பத்தாரும் தங்களை அறிவார்கள் என பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.....

    அடுத்ததாக....... கதைக் கட்டுரை.... நான் பல நேரங்களில் கொஞ்சம் முன்பே படித்திருந்தாலும்... தங்களின் எழுத்து என்னை நீகள் எழுதியதோடு இன்னும் பலவற்றைப் படிக்கத்தூண்டியது.... அதோடு என்னை எழுதவும் வைத்தது என்று கூறுவதில் நான் பெருமைக் கொள்கிறேன்......அந்த வகையில் தாங்களும் என் போன்றோருக்கு வாத்தியாராகவே விளங்குகிறீர்கள் என்பதும் உறுதியே....

    அடுத்ததாக....... இந்த வகுப்பறைக்கு வந்தமையால் தான்.... தங்களின் இந்த அறியப் பணியால் தான் நல்ல பல நண்பர்களைப் பெற முடிந்தது சந்திக்க முடிந்தது......

    என் போன்றோர் படித்து முடித்து வேலையின்றி இருந்த காலம் தான் சந்தோசமானக் காலம் என்போம்..... அதாவது என்போன்ற நண்பர்களும் எங்களைவிட வயதில் மூத்தவர்களையும்..... அனுபவசாலிகளையும்..... ஒரே நேரத்தில் எங்கள் ஊரில் இருக்கும் வாசகச் சாலைகளிலும்.... பொது இடங்களிலும் சாலை ஊரப் பாலங்களிலும்.... அல்லது அவர்களோடு சேர்ந்து பொதுசேவை செய்யும் போதும்.... விளையாட்டு திடல்களிலும்..... இலக்கியக் கூட்டங்கள் அல்லது மன்றங்களிலும் சந்தித்து அறிவுப்பசிக்கு தீனி போட்ட அந்தக் காலம் தான் என் பொற்றோருக்கு வாழ்வின் வச்டந்தக் காலம்... பொற்காலம் என்பேன்.... அந்தக் காலம் இனி எனக்கு மீண்டும் வராது என்று தான் நினைத்து இருந்தேன் அந்த நினைப்பை மாற்றி மீண்டும் வசந்த காலத்திற்கு அழைத்து வந்தது உங்களிம் வலைபதிவும்..... எழுத்தும்.... பொதுநோக்கும்.....ஆசிரியத்தனமும் தான் என்று நான் பெருமையோடு சொல்லிக் கொள்வேன்....
    பக்கத்து வீட்டாரையே சரியாக புரிந்து நட்பு பாராட்ட முடியாத இந்த உலக வாழ்வு சூழலில்....எனக்கு கோயம்புத்தூரிலும்.... தஞ்சாவூரிலும்....டெல்லியிலும்... சென்னையிலும்...ஜப்பானிலும், ஆஸ்திரேலியாவிலும்,அரபு நாடுகளிலும், இன்னும் பல தேசங்களிலும்....பெரும்பாலும் ஒரே கொள்கை, ரசனை உள்ளவர்கள் நண்பர்களாக கிடைத்தது என்றால் அது இந்த வாத்தியாரின் ஆற்றுப்படுத்துதலால் தான் சாத்தியமானது.... அந்தவகையில்..... உங்களின் இந்த தன்னலம் கருதாத அரும் பணியை எப்படி போற்றுவதென்று தெரியவில்லை.... நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து இன்னும் நிறைய வாசகர்களையும் நல்ல சிந்தனையாளர்களின் சங்கமம் செய்யும் நடுவமாக இந்த வகுப்பறை விளங்க செய்ய வேண்டும் என்பதே எனது ஆவல்.... அதற்கு இறைவனையும் வேண்டிக்கொள்கிறேன்.

    நன்றி வணக்கம்
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  7. ///// அன்று ஆடிக்கார்த்திகை.பெரிய கோலமாகப் போடவேண்டும் என்று தன் வீட்டின் வாசலுக்கு வந்திருந்த ஆச்சிக்குக் கோலம்போடும் மனநிலை மாறிவிட்டது.

    பேருக்காக நான்கு புள்ளி, நான்கு வரிசையில் ஒரு கோலத்தைப் போட்டுவிட்டு, சிவன் கோவிலைப்பார்த்துக் கையெடு த்துக் கும்பிட்டார்கள். தங்கள் வீட்டிற்கு ஏற்பட்டிருக்கும் அவப் பெயரைப் போக்கும்படி வேண்டிக்கொண்டவர்கள், வீட்டிற்குள்ளே திரும்பிச் சென்று விட்டார்கள்./////

    ஆகா, இதை பற்றி சொல்லாமல் விட்டுவிட்டேன்....
    மனது ஆனந்தக் கோலத்தில் திளைத்தால் அன்றி ஒருப் பெண் வாசலில் மாக்கோலம் கூட போட பெரிதும் விரும்பாள் என்ற மனோ தத்துவத்தை எவ்வளவு நுணுக்கமாக கூறியிருக்கிறீர்கள் அதைப்பற்றி எழுதாமல் விட்டு விட்டேன்...
    இது தான் தங்களின் நடையின் பெரும் சிறப்பு. கதைக்காக எதையும் சொல்லாமல்... கதா பாத்திரத்திற்காகவே சொல்லும் பேரறிவு இல்லை பேருணர்வு.... உங்களுக்கு இறைவன் அளித்த பேறு....
    நன்றி வாத்தியார் அவர்களே!

    ReplyDelete
  8. sir,
    Last two to three months, I would have read all your blogs. But i did not take place in your blog. right now i am also your follower. I don't know how to post comments on Blog. Last two days back i came to know that. I appreciate your work. It should be very useful for your followers. right now i am also your follower. The articles written by you are very useful to me too. Thank you!

    ReplyDelete
  9. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    தங்களின் எளிமையான எழுத்து நடையை படித்து வியந்து படிக்கத்துவங்கிய‌
    பிறகே தங்களுடைய ஜோதிட புலமையையும் அதில் தங்களுக்குள்ள ஆர்வத்தையும்,தான் கற்றதை பிறருக்கும் கற்பிக்க வேண்டும் என்னும்
    உயரிய சிந்தனையும் மாணவர்களாகிய நாங்கள் புரிந்துகொண்டதன் அடையாளம்தான் தாங்கள் வகுப்பறை வாத்தியாராக உயர்ந்து நிற்பது என்பதே
    எனது கருத்து.மற்ற மாணவர்களுக்கும் இதே எண்ணம்தான் என்றும் கருதுகிறேன்.
    அன்புடன், அரசு.

    ReplyDelete
  10. Dear Sir

    Vazhga Ungal Ezhuthu Pulamai. Valarga Ungal Ezhuthu Pani Endru Vazhtha Vayadhille..Aanal Pugazhkiren..

    Thanks sir

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  11. அன்புள்ள அய்யா வணக்கம்,

    தாங்கள் எழுதியது முற்றிலும்
    உண்மை.தங்கள் சுவாரசியமான எழுத்து நடை ஜோதிடத்திற்கும் அப்பாற்பட்டு கவருவதாலேயே
    இத்தனை மாணவர்கள் உள்ளார்கள்
    த்ங்கள் பணி இறையருளால் சிறக்கட்டும்
    அன்புடன்
    பவானி கே.ராஜன்

    ReplyDelete
  12. Its a pleasure and blessing for us to be your students. (pl forgive aiyaa when i get time i write in tamil)

    ReplyDelete
  13. நீங்கள் கூறியது நூறு சதவீத உண்மை. நாங்கள் உங்களைத் தொடர்வது உங்களின் எழுத்து நடைக்காகத் தான். அதில் சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு முறையும் மனதில் உள்ள நல்ல எண்ணங்களை அது எழுப்பி விட்டுச் செல்கிறது. "Its not my good time" என்றீர்கள். But its our good time.

    ReplyDelete
  14. கடைசி வரைக்கும் டைட்டிளுக்குண்டான கதையை சொல்லவே இல்லியே?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com