மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

28.12.10

Astrology உனக்கு எது சொந்தம்? பகுதி இரண்டு!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology  உனக்கு எது சொந்தம்? பகுதி இரண்டு!

இதன் முதல் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வந்து, இதைப் படிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதல் பகுதியின் சுட்டி (URL) இங்கே உள்ளது!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க்கையின் முடிவில், நமக்கு சொந்தமாக இருப்பதெல்லாம், காணாமல் போகப்போகிறது என்பதும், நாம் மட்டும், அதாவது நமது ஆத்மா மட்டும் தனிமைப் படுத்தப்பெற்று, இறைவனடியைச் சேரப்போகிறது என்பதும் நிதர்சனமான வாழ்வியல் உண்மை.

வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை

என்று எழுதியவர்,
பல்லவியின் கடைசிவரியை “கடைசிவரை யாரோ?” என்று எழுதினார்.

அதை உணர்கிறவர்கள் உணரட்டும், உணராதவர்கள் உணராமல் போகட்டும் என்பதை வலியுறுத்தித்தான் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் “கடைசிவரை யாரோ?” எழுதினார்

அதைத் தொடர்ந்து அவர் எழுதிய சரணங்களும் அந்தப் பாடலில் அசத்தலாக இருக்கும்.

ஆடும்வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா?


என்ற கேளிவியையும் எழுப்பி நம்மை, ஏன் பாடலைக் கேட்கும் அனைவரையுமே சிந்திக்க வைத்தார்!!
=============================================
பதவியிலேயே உயர்ந்த பதவி சிவபதவிதான்.

எங்கள் பகுதியில் ஒருவர் இறந்துவிட்டால், உறவினர்களுக்கு, அவரின் இறப்பை அறிவிக்கும் முகமாக எழுதும் கடிதங்களில், இறந்து விட்டார், செத்து (சுண்ணாம்பாகிப்) போனார் என்று எல்லாம் எழுதாமல், அவரின் பெயரைக் குறிப்பிடுவதோடு, சிவபதவி அடைந்து விட்டார் என்றுதான் எழுதுவார்கள்.
---------------------------------------------------------------------------
அதெல்லாம் போகிற காலத்திற்குப் பொருந்தும். இருக்கிறவரை என்ன செய்வது? என்பது பாமரனின் கேள்வி.
சில படித்தவர்களின் கேள்வி.

இருக்கிறவரை எல்லாம் வேண்டும்.

எல்லாம் வேண்டும். எல்லாவிதமான சொத்துக்களும் வேண்டும்.

சொத்துக்கள் என்றால் பொருள் உடைமை மட்டுமல்ல எல்லாவிதமான உடைமைகளுமே பொருள் பொதிந்ததுதான்.

நல்ல தாய்தான் மனிதனின் முதல் உடமை.

தாய்க்குப்பின் நல்ல தாரம் அடுத்த முக்கியமான உடைமை.

கல்வி நல்ல உடைமை. திருட்டுப்போகாத உடைமை.

சொன்னபேச்சைக் கேட்கின்ற, தாய் தகப்பனை மதித்துப்போற்றுகின்ற குழந்தைகளும் நல்ல உடைமைதான்.

நல்ல வேலை. ஆக்கபூர்வமான வேலை. அல்லது தொழில், கூட்டுத்தொழில் என்றால் நல்ல பங்குதாரர். வளர்ச்சி மிக்க தொழில் என்றால் நம்பிக்கை வைக்கும் வாடிக்கையாளர் என்று உடைமைகளை வரிசைப் படுத்திக்கொண்டே போகலாம். அல்லது அடுக்கிக்கொண்டே போகலாம்.

அத்தனையும் கிடைக்குமா?

அதெப்படிக் கிடைக்கும்?

அது வாங்கிவந்த வரம்.

முற்காலத்தில் காலத்தின் ஒரு பகுதியை ஒரு மண்டலம் என்று பிரித்துச் சொல்வார்கள். இறைவனை வழிபடுவதற்கு, ஒரு மண்டலம் (அதாவது 48 நாட்கள்) விரதம் இருங்கள் என்பார்கள் படுத்தும் உடல் நோய் குணமாவதற்கு மருந்தைச் சாப்பிடுவதற்கு ஒரு மண்டலம் (அதாவது 48 நாட்கள்) தொடர்ந்து சாப்பிடுங்கள் என்பார்கள்.

அதென்ன 48 நாட்கள் என்ற கணக்கு?

27 நட்சத்திரங்கள்,12 இராசிகள், 9 கிரகங்கள் என்று நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும் அமைப்பைக் கூட்டுங்கள் 48 என்ற எண் கிடைக்கும். அந்த அமைப்பில் உள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு நாள் என்பது கணக்கு.

நீங்கள் அஸ்வினி நட்சத்திரம், உங்களுடைய ராசி மேஷராசி, உங்களின் ராசி அதிபதி செவ்வாய் என்றாலும், அந்த மூன்று மட்டும் போதும் என்று நீங்கள் நினைக்க முடியாது. அந்த 48ம் சேர்ந்ததுதான் உங்கள் ஜாதகம்.

எல்லாமுமே நன்றாக அமையாதா?

அதெப்படி அமையும்?

சந்திரன், குரு, சுக்கிரன் என்று சுபக்கிரகங்கள் இருப்பதைப்போல, சனி, ராகு & கேது என்ற தீமை செய்யும் கிரகங்களும் உண்டல்லவா?

லக்கினம், ராசி, கேந்திரம், திரிகோணம் என்று இருப்பதைப்போல, 6, 8 & 12ஆகிய மறைவிடங்களும் (inimical places) உண்டு அல்லவா?

ஆகவே எல்லாமுமே நன்றாக அமைவது நடக்காத காரியம்.

ஒரு வீட்டிற்கு மூன்று பலாபலன்கள் என்று கணக்கிட்டால் மொத்தம் உள்ள 36 பலன்களில் 18 அதாவது சரிபாதி ஒழுங்காக இருந்தாலே போதும்.

இங்கே நாம் சம்பாதிக்கும், சேர்க்கும் அல்லது குவிக்கும் சொத்துக்களைப் போலவே, நாம் பிறக்கும்போதே பட்டாப் போட்டு வாங்கிவந்த சொத்துக்களும் உண்டு.

அதை அலசுவது பெரிய பாடம். அதை இங்கே அலச விரும்பவில்லை. அலசிய துணிகள் காய்வதற்குள் திருட்டுப் போய் விடும். பொறுத்திருங்கள். தனி இணைய தளம் 20.1.2011 அன்று துவங்கப்பட உள்ளது. அப்போது அலசுவோம். அதில் அலசுவோம். அது மேல்நிலைப் பாடங்களில் ஒன்று. மேல் நிலைப் பாடங்கள் அனைத்தும் அங்கேதான்.

அது, அதில் சேர்ந்துள்ள உறுப்பினர்களுக்கு மட்டும்தான். கள்ளர்களுக்கு அதில் இடமில்லை!

இங்கேயும் (வேறு) பாடங்கள் - பொதுப் பாடங்கள் தொடரும். அனைவரும் படிக்கலாம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடம் பொதுவானதுதானே? யாரும் பிறக்கும்போதே ஜோதிட அறிவுடன் பிறப்பதில்லை. நீங்கள் கற்றுத் தேர்ந்ததை, உங்களுக்குத் தெரிந்ததை, வழக்கம்போல இங்கேயே சொல்லுங்கள். இங்கேயே, வகுப்ப்றையிலேயே எழுதுங்கள் என்று அன்பர் ஒருவர் மின்னஞ்சலில் வலியுறுத்தி எழுதியிருந்தார்.

சென்ற நான்கு ஆண்டுகளாக, மொத்தம் 413 பாடங்களை அனைவரும் படிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இங்கே எழுதினேன். அடிப்படைப் பாடங்கள் மொத்தத்தையும் எழுதியுள்ளேன். பாடங்கள் நான் படித்துணர்ந்த பாடங்கள்தான் என்றாலும், எளிமைப் படுத்தி என் மொழியில் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக கடுமையான உழைப்பிற்கிடையே அவற்றை எழுதினேன்

அத்தனையும் திருட்டுப்போய் உள்ளது. அதுதான் வருந்த வேண்டிய, கவனிக்க வேண்டிய விஷயம்.

“பதிவில் உள்ளவைகள் படிப்பதற்கு மட்டுமே. வாசகர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே! வேறு எந்த மாற்று உபயோகத்திற்கும் என் அனுமதியின்றி பிரதி எடுப்பது மறுக்கப்படுகிறது!” என்ற எச்சரிக்கையையும் பதிவில் வைத்திருந்தேன். வைத்திருக்கிறேன். அதையும் மீறி ஒட்டுமொத்தமாகத் திருடப்பெற்றிருக்கிறது.

எவ்வளவோ பண்டைய ஜோதிட நூல்கள் படிக்கக் கிடைக்கின்றன. அவற்றை படித்துப் பொருள் உணர்ந்து எழுதுகிறவர்கள் எழுதலாம். யார் வேண்டாம் என்கிறது? உங்கள்மொழியில் உங்கள் விளக்கங்களுடன் எழுதலாம் யார் தடுக்க முடியும்? அல்லது குறை சொல்ல முடியும்?

அரசு பழைமாயான நூல்கள் அனைத்தையும் பொதுவுடையாக்கியுள்ளது.

ஏன் அடுத்தவன் எழுதியதைத் திருடி நீங்கள் எழுதியதைப்போல போட்டுக்கொள்கிறீர்கள்?

காடு பொதுவானதுதானே என்று காட்டிற்குள் நுழைந்து மரங்களை வெட்டிக் கொண்டுவர முடியுமா? நிலம் பொதுவானதுதானே என்று சொல்லி, தோட்டங்களில் உள்ள விளை பொருளைச் சுருட்டிக் கொண்டுவர முடியுமா?

பொள்ளாச்சி பகுதியில் 25 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. நிலம் பொதுவானதுதானே? அத்தனை மரங்களும் நமக்குச் சொந்தம் என்று அதில் காய்க்கும் காய்களை நீங்கள் விற்பனை செய்ய முடியுமா?

தொட்டியம், குளித்தலை பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் உள்ளன. குலை தள்ளிய 10 வாழை மரங்களை வெட்டிக்கொண்டு வர முடியுமா?

முடியதல்லவா?

பதிவுகளில் அது முடியும்.

பயனர் பெயர், காப்புரிமை, கடவுச் சொல் ஆகியவற்றுடன் இருக்கும் தனிப்பட்ட இணைய தளங்களில் மட்டும் அது சாத்தியமில்லை. உதாரணம் வங்கிகளின் இணைய தளங்கள்.
+++++++++++++++++++++++++++++++++
ஜோதிடம் பொதுவானதுதானே என்று கேள்வி கேட்கும் மேதைகளுக்காக இரண்டு ஜோதிடப் பாடல்களைக் கீழே கொடுத்துள்ளேன். பொருள் உணர்ந்து அதற்கு விளக்கத்தை எழுதட்டும் அவர்கள்!

1
“அம்முதலோர் நான்கதும்வல் விருநான்குள்ள துக்கு
மகாவிரண்டிரு மூன்று மெய்ம்முத லாய்மூன்று
மம்முதலா றல்லதும்பந் தான் கிரண்டல்ல துந்தவ்
வாகவிரண்டேழுநக ரத்ததுவாயாறு
நெம்முதலோர் மூன்றுயுயூ வுகரமுதலைந்து
நின்றதுமக்க வினான்கு ஞம் முதலோர் மூன்றுந்
தொம்முதலோர் மூன்றதுநொம் முதன்மூன்றுயாவும்
சொல்சவினான் கைந்தொருமுன் தலுமீன் றெட்டுளதே”


2
“வதுவைமனன்புகர் பொனிவர்கேந்திரகோ ணேறி
மாகளர்ப்பெறாதுதனித் திருக்கமனன் பெலக்கி
லதிகபெலமாயிவர்களர வொழியவுது வூழ்க
கருகிலுறிலல்ல வெனிலைந்ததற்குள்ளாகின்
முதியவர்தம்குற்பெற மற்றவரபெலமா கின்
முதல்வணும்பொன்னுதய முறின்முகமதனுக்குடையோர்
நிதிமதியுற்றியவை சேரில்வாலி பவிவாக
நிறைவேறுமிகவர்க ளின்பநெடு நாளைக்குளதே”


இப்பாடல்களுக்கு விளக்கம் தெரியாதவர்கள் அல்லது வேண்டுவோர், தனி மின்னஞ்சலில் கேளுங்கள். விளக்கம் கிடைக்கும்.

இதுபோன்று ஆயிரக்கணக்கான பாடல்கள் உள்ளன. புரிந்து
கொண்டு படிப்பதற்கு வேண்டிய மொழி அறிவும், நேரமும்,
சொல்லிக் கொடுப்பதற்கு உயர்ந்த குருகுலங்களும்  அன்று
இருந்தன. இன்று இல்லை!

இன்று, பரபரப்பான செய்திகளைப் படிப்பதற்கும், கஃப்பிற்கும், பஃபிற்கும் செல்வதற்கே நமக்கு நேரம் பத்த வில்லை. அதை எல்லாம் படி என்றால் என்ன செய்வது? எங்கே போய் முட்டிக்கொள்வது?

வயதானவர்களுக்கு நேரமிருந்தாலும், வேறுவிதமான பிரச்சினைகளும் அவர்கள் தோள்களின்மேல் ஏறி அமர்ந்துகொண்டுள்ளன. ஆகவே அவர்களுக்கும் நேரம் கிடைப்பது சாத்தியமல்ல.

இங்கே வருகின்றவர்களில் 90% பேர்கள், தங்கள் ஜாதகத்தை ஒத்துப்பார்ப்பதற்கு, பலன் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது செய்தி கிடைக்குமா என்றுதான் வருகிறார்கள். 10% பேர்கள் மட்டும்தான் உண்மையிலேயே ஜோதிடத்தைக் கற்றுத் தேர்வோம் என்று வருகிறார்கள். அவர்களுக்காகத்தான் அடியேன் உற்சாகமாகப் பாடங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். என் உயிருள்ளவரை அது தொடரும். அதையும் மனதில் கொள்க!
=============================================
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
வாழ்க வளமுடன்!

52 comments:

kmr.krishnan said...

///'பொள்ளாச்சி பகுதியில் 25 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. நிலம் பொதுவானதுதானே? அத்தனை மரங்களும் நமக்குச் சொந்தம் என்று அதில்
காய்க்கும் காய்களை நீங்கள் விற்பனை செய்ய முடியுமா?"///

வடிவேலு நகைச்சுவைக்காட்சி போல் அல்லவா உள்ளது."இது உங்கள் சொத்து"என்று போட்டுள்ள அரசுப் பேருந்தை விற்க முயற்சிப்பார் ஒரு படத்தில்.தட்டிக் கேட்கும் நடத்துனரிடம் வாசகத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்டு, "பாத்தியா இது என் சொத்து" என்பார்.நடத்துனர் வடிவேலுவை அதே வாசகத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்டு,"என் சொத்து. நீ விற்கலாமா?"என்பார். அடியை வாங்கிக் கொண்டு வடிவேலு சொல்வார்,"அட!போய்யா நான் படிச்சா உன் சொத்து;நீ
படிச்சா என் சொத்து.." என்று சொல்லிவிட்டு எஸ்'ஆவார்.
பொள்ளாச்சி பக்கம் போய் இப்படி தேங்காய் வியாபாரம் மைனர் துணைக்கு வந்தால் செய்யலாம்
என்று இருக்கிறேன்.
இந்தப்பல்லை உடைக்கும் பாட்டுக்கான பொருளை பாண்டிச்சேரி மாட்டுக்காரர் சொல்வாரா

arthanari said...

போற்றூவார் போற்றலும் தூற்றூவார் துற்றலும் போகட்டூம் கண்ணனுக்கே, உங்கள் பணி தொடரட்டும்.

Success said...

வணக்கம்.

யாரோ உங்களை அவர்களுடைய இழிசெயளால் காயபடுத்தி இருக்கின்றனர் என்பது தெளிவாகின்றது. விரைவில் அவர்கள் வருந்துவார்கள். உங்களுடய சேவை தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிப்பான்.

வாழ்க வளமுடன்

Alasiam G said...

///ஏன் அடுத்தவன் எழுதியதைத் திருடி நீங்கள் எழுதியதைப்போல போட்டுக்கொள்கிறீர்கள்?////
உண்மைதான் களிமண் வேண்டுமானால் ஊரில் உள்ள பொதுவான இடத்தில் யார் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்... அதே நேரம் அதை கொண்டுவந்து தனது திறமையும் நேரத்தையும் ஏன் அதற்காக பணத்தையும் செலவளித்து.... அழகிய பொம்மைகளைச் செய்து... நெருப்பில் சுட்டு... அதன் தேவைக்கும், பார்ப்பவரின் ரசனைக்கும் தகுந்தாற் போல் பல வண்ணங்களையும் பூசி... கடைசியாக அதை தனது ஆத்மா திருப்திக்காக... வருவோர் போவோருக்கு எல்லாம் இனாமாக தருபவரிடம் இருக்கும்; அத்தனை பொம்மைகளையும் அவர் அறியாமல்.. வேறொருவர் கொண்டு சென்று அதையும் அவர் விற்று காசாக்கினாள் அது எப்படி தர்மமாகும்.....

களிமண் வேண்டுமானால் பொதுவாகலாம்... ஆனால் செய்த பொம்மை அது உங்களுடையதே....
விகண்டவாதம்... அல்லது தான் புத்திசாலி அல்லது மற்றவர்களிடம் இருந்து (எல்லாவற்றிலும்.. எதற்கெடுத்தாலும்) தன்னை வேற்படுத்திக் காண்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அது போன்று தங்களிடம் மின்-அஞ்சலில் கேட்டு இருக்கலாம் என்று நம்புகிறேன்.... அல்லது உண்மையிலே புரியாமல் கூட கேட்டு இருக்கலாம்...
எதுவானாலும் சரி... கொஞ்சம் களிமண் எடுத்து... நாமும் ஒரு பொம்மை செய்து பார்ப்போமே என்று முயன்ற என்னைப் போன்றவர் (உலகத்தின் அனைத்துக் கண்டங்களிலும்)... நண்பர்கள் பலர் நமது வகுப்பறையில் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் அறிவர் உங்களின் சிரமம் என்னவென்று.... நான் கூறுவது சரி தானே ஐயா!

////அவர்களுக்காகத்தான் அடியேன் உற்சாகமாகப் பாடங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். என் உயிருள்ளவரை அது தொடரும். அதையும் மனதில் கொள்க!/////

நன்றி... நன்றி....நன்றிகள் பல...

Vinoth said...

நீஙகள் சொல்வது உண்மைதான்.
ஆலசியம் சொலவதுபோல் களிமண் பொதுதான் ஆனால் பானை பொது என்பதை உழைப்பவர் எவ்வாறு ஏற்பர்.

நான் உஙக்ளுக்கு அனுப்பிய சுட்டிதான் உங்களை காயப்படுத்தியாதா ?

அதை நான் எழுதவில்லை, உங்களை எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதை நீங்கள் அறியவே அனுப்பினேன். தவறாக் இருந்தால் மன்னிக்கவும் .

kannan said...

ஆத்மார்த்தமான வணக்கம் ஐயா!

ஆத்மார்த்தமான வணக்கம் ஐயா!
என்ன ஒரு பெரும் பாக்கியம். அடியேன் வாத்தியாரின் வகுப்பறைக்கு வந்ததீர்க்கு .
இரத்த பந்தம் எல்லாம்
நமக்கு ஏன் வீன் வேலை ,
வீணான அலைச்சல் என்று ஒதுங்கும் இன்றைய தேதியில்
மாப்பிளை தோழனாக வரும் மைனர்வாள் மைத்துனனோ பெண்தேட , என்றுமே உள்ளதை விட்டு மறையாத "மாண்புமிகு ஐயவோ வாழ்த்து கூற!" .
"வாத்தியாரோ தலைமைதாங்க!" அன்புள்ளம் படைத்த "பாசமலர் சகோதரிகள் மணப்பெண் தோழியாக வர , அவர்களுடைய குழந்தை செல்வம் மான மருமகன், மருமகள் மண்டபத்தில் ஓடி ஆடி விளையாட,
அன்னிமார்களோ (மதினி மார்களோ) கேள்வியும் கிண்டலும் செய்ய,
நல்ல உள்ளம் படைத்த
"சான்றோர்களோ ஆண்டவனின் பிரதிநிதியாக வந்து எங்களைவாழ்த்த!"

சக சகோதன்மார்கள் அனைத்து கல்யாண வேலையை முன்னின்று செய்ய "வாசு மாநகரம் விழாகோலம் ஆக!"
ஆக வேண்டிய செல்வத்தை மணமகனே ஏற்க்க, பாசமார் படசித்திரத்தில் "கவியரசரின்!" பாடல் வரிகளில் எதற்குமே ஈடு இணையாகாத ஒரு வைர வரி
வருமே

"தங்க கடிகாரம் வைர மணியாவிம் தந்து மனம் பேசுவார் பொருள் தந்து மனம் பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை ......... பேசுவார் என்ற கடைசியாக வருமே ஒரு வரி அது போல
"நல்ல பாக்கியம் உள்ள பெண் மட்டும் கிடைத்தால் போதும்!"
"ஆண்டவனை சாட்சியாக வைத்து கூறுகின்றேன்!"
மனதில், உடலில், ஒழுக்கத்தில் உள்ள முழு தகுதி கொண்டு
>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<
kmr.krishnan has left a new comment on the post "நீ பாதி நான் பாதி பெண்ணே!":

மாமுவும்,ம‌ருமவனுமா பெண் தேடும் படலத்தில் இறங்கியாச்சா?!டெல்லிக்கார அத்தையிட்மும் சொல்லி வையுங்கள். எல்லோருமா சேர்ந்து கண்ணனுக்கு ஏற்ற
ராதையைக் கண்டுபிடியுங்கள்.தஞ்சாவூர்‍=நெல்லை சம்பந்தம் அவ்வளவு சிலாக்கியமில்லை. எனவே இந்தப் பக்கம் பெண் நான் பார்க்கவில்லை.திருமண நாள் அன்று வாழ்த்துரை வழங்க மட்டும் வருகிறேன்.விருந்து பலமாக இருக்க வேண்டும். செட்டிநாட்டு சமையல் மேஸ்திரிகளை அய்யாவிடம் சொல்லி
ஏற்பாடு செய்யவும். மெனு அய்யாதான் போடவேண்டும்.தஞ்சாவூர் தலை வாழை இலை, கும்பகோணம் வெற்றிலை,வறுவல் சீவல்,வாசனை சுண்ணாம்பு,வண்ணாத்தி புருஷன் கடை விடயம்(பீடா) நம்ம சப்ளை. ஓகேயா?

Post a comment.
Unsubscribe to comments on this post.

Posted by kmr.krishnan to வகுப்பறை at Tuesday, December 28, 2010 2:29:00 AM

Arulkumar Rajaraman said...

Dear Sir

Nandri Sir. You are really hardworking person. We know... Everybody Know...

Oru Sila Thiruttu kootam arivadhiallai..

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

Ramachandran S said...

ஆசிரியருக்கு வணக்கம்,

48 நாள் மண்டலம் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தேன். இன்று அந்த குறை தீர்ந்தது.

நன்றிகள் பல....

//உண்மையிலேயே ஜோதிடத்தைக் கற்றுத் தேர்வோம் என்று வருகிறார்கள். அவர்களுக்காகத்தான் அடியேன் உற்சாகமாகப் பாடங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன்//....

உங்கள் உற்சாகதிற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்....

sundarkmy said...

சென்ற சில மாதங்களாக தாங்களுடய மனம் சஞ்சலம் அடைந்துல்லதை அறிவோம்.

வருந்த வேண்டிய விஷயம்,வருந்துகிரோம்!

But we need to take this situation as an oppurtunity to become more smart, complete internet security such as user name & passward, copyrigh etc., Good decision.
and nothing to worry more.

பழநிஅப்பன் அருள் தாங்களுக்கு உண்டு.

Sundar.K
Malaysia

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
///////ஜோதிடம் பொதுவானதுதானே என்று கேள்வி கேட்கும் மேதைகளுக்காக இரண்டு ஜோதிடப் பாடல்களைக் கீழே கொடுத்துள்ளேன். பொருள் உணர்ந்து அதற்கு விளக்கத்தை எழுதட்டும் அவர்கள்!///////
கேள்வி கேட்கும் மேதைக்கு மிகவும் சரியான சவால்!!
பொருள் உணர்ந்து அதற்கு விளக்கத்தை அளிக்குமளவிற்கு திறமை இருந்தால் இவ்வாறெல்லாம் பேச மாட்டார்கள்.
இத்தகையோர்க்கும் ஆண்டவன் நல்ல புத்தியைக் கொடுத்து நேர்மையாக வாழவும்,ஞாயத்தினை சிந்திக்கவும், செயல்படவும் அருள் பாளிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வோம்.
தங்களன்புள்ள
வ.தட்சணாமூர்த்தி
2010-12-28

Naveen said...

அய்யாவின் நான்கு வருட கடின உழைப்பு இப்படி திருடு போயிருப்பது மிகவும் வருதடிற்கு உள்ளான விஷயம்.
இணையம் என்பது சிக்கி பின்னப்பட்ட வலை எங்கு எப்படி செல்கிறது என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது.
எனவே நாம் தான் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். சுமார் ஆறு மாதத்திற்கு முன்னரே ஒரு கயவர் புகைப்படத்துடன் திருடியதை ஒரு அன்பர் ஐயாவிற்கு சுட்டிக்காட்டினர். அய்யா அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
அய்யா உங்கள் பதிவுகளை வெட்டி ஓட்டும் வசதி மற்றும் வலது மவுசு கிளிக் (Right mouse click - disabled) வசதிகளை துண்டித்து இருந்தால் நாம் பதிவுகளை காத்திருக்க முடியும்.

SUNRAYS said...

அடுத்தவன் வியர்வையை சுரண்டிப்பிழைப்பவர்தான் அடுத்தவர் படைப்புகளையும் விழுங்குவான். ஒருநாள் அவனும் வீழ்வான்...உண்மையில் சரக்கு ஏதும் இல்லாமல்...

இரா. கதிரவன்

SUNRAYS said...

தங்களின் அனுபவங்களும், அலசும் திறனும் உங்களுக்கே உரியவை...அவை மாறாது...மங்காது...
வாழ்க வளமுடன்..

இரா. கதிரவன்

தகடூரான் said...

//பெயரைக் குறிப்பிடுவதோடு, சிவபதவி அடைந்து விட்டார் என்றுதான் எழுதுவார்கள்//

Ayya naanga idharkku "Late" endru surukkamaa solluvom.

//சனி, ராகு & கேது என்ற தீமை செய்யும் கிரகங்களும் உண்டல்லவா?//
Ayya enakku, Sani thisayil Raagu buthi, innum 1 varudathirkku mel ullathu. neenga sonna badi padaatha paadu paduthi kadavul nambikkai vara vaithuvidum pola irukku.

// ஏன் அடுத்தவன் எழுதியதைத் திருடி நீங்கள் எழுதியதைப்போல போட்டுக்கொள்கிறீர்கள்? //

Ungalin manavali purigindrathu ayya.

//என் உயிருள்ளவரை அது தொடரும். அதையும் மனதில் கொள்க!//
Ungal eluthu pani nalla padi thodara vendi kadavulidam prarthikkindren ayya.

தகடூரான் said...

Success ஐயா,

நல்லவை எல்லாம் தவறாகவே போய் சேர்கின்றன என்பதுவும் இதில் இருந்து தெரிகின்றது அல்லவா, அப்படி இருக்க ஆசிரியரிடமும் அது தவராகவர வாய்ப்பு இருக்கின்றது. எனவே யாரையும் Success ஐயா "வருந்துவார்கள்" என திட்டாமல் "திருந்துவார்கள்" என சொல்வது உங்களின் மேன்மையும் காட்டும் என நினைக்கின்றேன். சிறியவன் நான் தவறாக சொல்லிருந்திருந்தால் மன்னிக்கவும்.

minorwall said...

படைப்பாளிகள் சங்கம் சார்பாக அண்ணன் ஆலாசியம் அவர்கள் எழுப்பிய குரலை களிமண் கைகளை கோர்த்து உயரத் தூக்கி அனைவரும் ஆமோதிக்கிறோம்..சொல்றாப்லே..படைப்பாளிகள் எண்ணிக்கை செம ஸ்பீடால்லே எகிறுது..

minorwall said...

/////kmr.krishnan said...
பொள்ளாச்சி பக்கம் போய் இப்படி தேங்காய் வியாபாரம் மைனர் துணைக்கு வந்தால் செய்யலாம்
என்று இருக்கிறேன்.\\\\\\

ஏற்கனவே மாமூகிட்டே அனுப்பி வெச்ச பொள்ளாச்சி based coconut oriented ப்ராஜெக்ட் ரிப்போர்ட் ப்ரோசெஸ்லே இருக்குற விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்?
வாத்தியார் வேற பதிவுலேயே போட்டுட்டாரு..மாமூ உங்க மெயில் id ய hack பண்ணிட்டாங்களா?
இதைத்தான் நீங்கள் நிறுவ ஆசைப் பட்டீர்களாக்கும்?இதுக்குத்தான் மூவர் பார்ட்னரா ?

SP.VR. SUBBAIYA said...

/////kmr.krishnan said...
///'பொள்ளாச்சி பகுதியில் 25 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. நிலம் பொதுவானதுதானே? அத்தனை மரங்களும் நமக்குச் சொந்தம் என்று அதில்
காய்க்கும் காய்களை நீங்கள் விற்பனை செய்ய முடியுமா?"///
வடிவேலு நகைச்சுவைக்காட்சி போல் அல்லவா உள்ளது."இது உங்கள் சொத்து"என்று போட்டுள்ள அரசுப் பேருந்தை விற்க முயற்சிப்பார் ஒரு படத்தில். தட்டிக் கேட்கும் நடத்துனரிடம் வாசகத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்டு, "பாத்தியா இது என் சொத்து" என்பார்.நடத்துனர் வடிவேலுவை அதே வாசகத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்டு,"என் சொத்து. நீ விற்கலாமா?"என்பார். அடியை வாங்கிக் கொண்டு வடிவேலு சொல்வார்,"அட!போய்யா நான் படிச்சா உன் சொத்து; நீ படிச்சா என் சொத்து.." என்று சொல்லிவிட்டு எஸ்'ஆவார்.
பொள்ளாச்சி பக்கம் போய் இப்படி தேங்காய் வியாபாரம் மைனர் துணைக்கு வந்தால் செய்யலாம்
என்று இருக்கிறேன்.
இந்தப்பல்லை உடைக்கும் பாட்டுக்கான பொருளை பாண்டிச்சேரி மாட்டுக்காரர் சொல்வாரா?///////

பொள்ளாச்சியில் இன்று நம்பர் ஒன் வியாபாரம் தேங்காய் நார் பிஸினஸ். பெரிய அளவில் ஏற்றுமதியாகிறது. அதை முயற்சி செய்யுங்கள். கார் சீட்டுக்கள் செய்யும் கம்பெனிகளும், படுக்கை மெத்தைகள் செய்யும் நிறுவனங்களும் அதிக அளவில் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். மைனர் கை கொடுத்தால், ஜப்பானைத் தேங்காய் நார்களால் மூடிவிடலாம்.

SP.VR. SUBBAIYA said...

//////arthanari said...
போற்றூவார் போற்றலும் தூற்றூவார் துற்றலும் போகட்டூம் கண்ணனுக்கே, உங்கள் பணி தொடரட்டும்.////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Success said...
வணக்கம்.
யாரோ உங்களை அவர்களுடைய இழிசெயளால் காயபடுத்தி இருக்கின்றனர் என்பது தெளிவாகின்றது. விரைவில் அவர்கள் வருந்துவார்கள். உங்களுடய சேவை தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பான்.
வாழ்க வளமுடன்/////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//////Alasiam G said...
///ஏன் அடுத்தவன் எழுதியதைத் திருடி நீங்கள் எழுதியதைப்போல போட்டுக்கொள்கிறீர்கள்?////
உண்மைதான் களிமண் வேண்டுமானால் ஊரில் உள்ள பொதுவான இடத்தில் யார் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்... அதே நேரம் அதை கொண்டுவந்து தனது திறமையும் நேரத்தையும் ஏன் அதற்காக பணத்தையும் செலவளித்து.... அழகிய பொம்மைகளைச் செய்து... நெருப்பில் சுட்டு... அதன் தேவைக்கும், பார்ப்பவரின் ரசனைக்கும் தகுந்தாற் போல் பல வண்ணங்களையும் பூசி... கடைசியாக அதை தனது ஆத்மா திருப்திக்காக... வருவோர் போவோருக்கு எல்லாம் இனாமாக தருபவரிடம் இருக்கும்; அத்தனை பொம்மைகளையும் அவர் அறியாமல்.. வேறொருவர் கொண்டு சென்று அதையும் அவர் விற்று காசாக்கினாள் அது எப்படி தர்மமாகும்.....

களிமண் வேண்டுமானால் பொதுவாகலாம்... ஆனால் செய்த பொம்மை அது உங்களுடையதே....
விகண்டவாதம்... அல்லது தான் புத்திசாலி அல்லது மற்றவர்களிடம் இருந்து (எல்லாவற்றிலும்.. எதற்கெடுத்தாலும்) தன்னை வேற்படுத்திக் காண்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அது போன்று தங்களிடம் மின்-அஞ்சலில் கேட்டு இருக்கலாம் என்று நம்புகிறேன்.... அல்லது உண்மையிலே புரியாமல் கூட கேட்டு இருக்கலாம்...
எதுவானாலும் சரி... கொஞ்சம் களிமண் எடுத்து... நாமும் ஒரு பொம்மை செய்து பார்ப்போமே என்று முயன்ற என்னைப் போன்றவர் (உலகத்தின் அனைத்துக் கண்டங்களிலும்)... நண்பர்கள் பலர் நமது வகுப்பறையில் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் அறிவர் உங்களின் சிரமம் என்னவென்று.... நான் கூறுவது சரி தானே ஐயா!
////அவர்களுக்காகத்தான் அடியேன் உற்சாகமாகப் பாடங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். என் உயிருள்ளவரை அது தொடரும். அதையும் மனதில் கொள்க!/////
நன்றி... நன்றி....நன்றிகள் பல.../////

களிமண் நல்ல உதாரணம். நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

////Vinoth said...
நீஙகள் சொல்வது உண்மைதான்.
ஆலசியம் சொலவதுபோல் களிமண் பொதுதான் ஆனால் பானை பொது என்பதை உழைப்பவர் எவ்வாறு ஏற்பர். நான் உங்களுக்கு அனுப்பிய சுட்டிதான் உங்களை காயப்படுத்தியாதா ?
அதை நான் எழுதவில்லை, உங்களை எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதை நீங்கள் அறியவே அனுப்பினேன். தவறாக் இருந்தால் மன்னிக்கவும் //////.

காயம் கொஞ்சம்தான். பழநி அப்பன் இருக்கிறான். பார்த்துக்கொள்வான்! அதை மறந்து நான் என் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

SP.VR. SUBBAIYA said...

/////kannan said...
ஆத்மார்த்தமான வணக்கம் ஐயா!
ஆத்மார்த்தமான வணக்கம் ஐயா!
என்ன ஒரு பெரும் பாக்கியம். அடியேன் வாத்தியாரின் வகுப்பறைக்கு வந்ததற்கு .
இரத்த பந்தம் எல்லாம் நமக்கு ஏன் வீண் வேலை ,
வீணான அலைச்சல் என்று ஒதுங்கும் இன்றைய தேதியில்
மாப்பிளை தோழனாக வரும் மைனர்வாள் மைத்துனனோ பெண்தேட , என்றுமே உள்ளதை விட்டு மறையாத "மாண்புமிகு ஐயவோ வாழ்த்து கூற!" .
"வாத்தியாரோ தலைமைதாங்க!" அன்புள்ளம் படைத்த "பாசமலர் சகோதரிகள் மணப்பெண் தோழியாக வர , அவர்களுடைய குழந்தை செல்வம் மான மருமகன், மருமகள் மண்டபத்தில் ஓடி ஆடி விளையாட,
அன்னிமார்களோ (மதினி மார்களோ) கேள்வியும் கிண்டலும் செய்ய,
நல்ல உள்ளம் படைத்த
"சான்றோர்களோ ஆண்டவனின் பிரதிநிதியாக வந்து எங்களைவாழ்த்த!"
சக சகோதன்மார்கள் அனைத்து கல்யாண வேலையை முன்னின்று செய்ய "வாசு மாநகரம் விழாகோலம் ஆக!"
ஆக வேண்டிய செல்வத்தை மணமகனே ஏற்க்க, பாசமார் படசித்திரத்தில் "கவியரசரின்!" பாடல் வரிகளில் எதற்குமே ஈடு இணையாகாத ஒரு வைர வரி வருமே
"தங்க கடிகாரம் வைர மணியாவிம் தந்து மனம் பேசுவார் பொருள் தந்து மனம் பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை ......... பேசுவார் என்ற கடைசியாக வருமே ஒரு வரி அது போல
"நல்ல பாக்கியம் உள்ள பெண் மட்டும் கிடைத்தால் போதும்!"
"ஆண்டவனை சாட்சியாக வைத்து கூறுகின்றேன்!"
மனதில், உடலில், ஒழுக்கத்தில் உள்ள முழு தகுதி கொண்டு
>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<

உணர்ச்சி வசப்படாதீர்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும். வாழ்த்துக்கள்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
kmr.krishnan has left a new comment on the post "நீ பாதி நான் பாதி பெண்ணே!":
மாமுவும்,ம‌ருமவனுமா பெண் தேடும் படலத்தில் இறங்கியாச்சா?!டெல்லிக்கார அத்தையிட்மும் சொல்லி வையுங்கள். எல்லோருமா சேர்ந்து கண்ணனுக்கு ஏற்ற
ராதையைக் கண்டுபிடியுங்கள்.தஞ்சாவூர்‍=நெல்லை சம்பந்தம் அவ்வளவு சிலாக்கியமில்லை. எனவே இந்தப் பக்கம் பெண் நான் பார்க்கவில்லை.திருமண நாள் அன்று வாழ்த்துரை வழங்க மட்டும் வருகிறேன்.விருந்து பலமாக இருக்க வேண்டும். செட்டிநாட்டு சமையல் மேஸ்திரிகளை அய்யாவிடம் சொல்லி
ஏற்பாடு செய்யவும். மெனு அய்யாதான் போடவேண்டும்.தஞ்சாவூர் தலை வாழை இலை, கும்பகோணம் வெற்றிலை,வறுவல் சீவல்,வாசனை சுண்ணாம்பு,வண்ணாத்தி புருஷன் கடை விடயம்(பீடா) நம்ம சப்ளை. ஓகேயா?///////

அதெல்லாம் ஜமாய்த்துவிடலாம்! பொறுத்திருங்கள். நேரம் வரட்டும்!

SP.VR. SUBBAIYA said...

/////Arulkumar Rajaraman said...
Dear Sir
Nandri Sir. You are really hardworking person. We know... Everybody Know...
Oru Sila Thiruttu kootam arivadhiallai..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman//////

நல்லது. நன்றி ராஜாராமன்!

SP.VR. SUBBAIYA said...

///Ramachandran S said...
ஆசிரியருக்கு வணக்கம்,
48 நாள் மண்டலம் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தேன். இன்று அந்த குறை தீர்ந்தது.
நன்றிகள் பல....
//உண்மையிலேயே ஜோதிடத்தைக் கற்றுத் தேர்வோம் என்று வருகிறார்கள். அவர்களுக்காகத்தான் அடியேன் உற்சாகமாகப் பாடங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன்//....
உங்கள் உற்சாகதிற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்....////

அதுதான் வேண்டும்! நன்றி ராமச்சந்திரன்!

SP.VR. SUBBAIYA said...

////sundarkmy said...
சென்ற சில மாதங்களாக தாங்களுடய மனம் சஞ்சலம் அடைந்துள்ளதை அறிவோம்.
வருந்த வேண்டிய விஷயம்,வருந்துகிறோம்!
But we need to take this situation as an oppurtunity to become more smart, complete internet security such as user name & passward, copyrigh etc., Good decision and nothing to worry more.
பழநிஅப்பன் அருள் தாங்களுக்கு உண்டு.
Sundar.K
Malaysia///

உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி சுந்தர்!

SP.VR. SUBBAIYA said...

//////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
///////ஜோதிடம் பொதுவானதுதானே என்று கேள்வி கேட்கும் மேதைகளுக்காக இரண்டு ஜோதிடப் பாடல்களைக் கீழே கொடுத்துள்ளேன். பொருள் உணர்ந்து அதற்கு விளக்கத்தை எழுதட்டும் அவர்கள்!///////
கேள்வி கேட்கும் மேதைக்கு மிகவும் சரியான சவால்!!
பொருள் உணர்ந்து அதற்கு விளக்கத்தை அளிக்குமளவிற்கு திறமை இருந்தால் இவ்வாறெல்லாம் பேச மாட்டார்கள்.
இத்தகையோர்க்கும் ஆண்டவன் நல்ல புத்தியைக் கொடுத்து நேர்மையாக வாழவும், நியாயத்தினை சிந்திக்கவும், செயல்படவும் அருள் பாளிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வோம்.
தங்களன்புள்ள
வ.தட்சணாமூர்த்தி//////

ஆமாம். பிரார்த்திக்கொள்வோம். நன்றி தட்சணாமூர்த்தி!

SP.VR. SUBBAIYA said...

////Naveen said...
அய்யாவின் நான்கு வருட கடின உழைப்பு இப்படி திருட்டுப் போயிருப்பது மிகவும் வருத்ததிற்கு உரிய விஷயம்.
இணையம் என்பது சிக்கி பின்னப்பட்ட வலை எங்கு எப்படி செல்கிறது என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது.
எனவே நாம் தான் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். சுமார் ஆறு மாதத்திற்கு முன்னரே ஒரு கயவர் புகைப்படத்துடன் திருடியதை ஒரு அன்பர் ஐயாவிற்கு சுட்டிக்காட்டினர். அய்யா அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
அய்யா உங்கள் பதிவுகளை வெட்டி ஓட்டும் வசதி மற்றும் வலது மவுசு கிளிக் (Right mouse click - disabled) வசதிகளை துண்டித்து இருந்தால் நாம் பதிவுகளை காத்திருக்க முடியும்.//////

எல்லாம் நன்மைக்கே. என்ன நன்மை அதில் வரவுள்ளது என்று இப்போது எப்படித் தெரியும்? நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////SUNRAYS said...
அடுத்தவன் வியர்வையை சுரண்டிப்பிழைப்பவர்தான் அடுத்தவர் படைப்புகளையும் விழுங்குவான். ஒருநாள் அவனும் வீழ்வான்...உண்மையில் சரக்கு ஏதும் இல்லாமல்...
இரா. கதிரவன்//////

யாரும் வீழ வேண்டாம். அவரவர்கள் வழியில் அவரவர்கள் நடந்தால், அதில் வீழ்ச்சிக்கு இடமிருக்காது!

SP.VR. SUBBAIYA said...

////SUNRAYS said...
தங்களின் அனுபவங்களும், அலசும் திறனும் உங்களுக்கே உரியவை...அவை மாறாது...மங்காது...
வாழ்க வளமுடன்..
இரா. கதிரவன்/////

நல்லது. நன்றி கதிரவன்!

SP.VR. SUBBAIYA said...

/////தகடூரான் said...
//பெயரைக் குறிப்பிடுவதோடு, சிவபதவி அடைந்து விட்டார் என்றுதான் எழுதுவார்கள்//
Ayya naanga idharkku "Late" endru surukkamaa solluvom./////

இல்லை இறந்த சமயத்தில் மட்டும் அந்தச் சொல்லைப் பயன் படுத்துவார்கள். அதற்குப் பிறகு அவரிப்பற்றி எழுதும்போது, தெய்வத்திரு’ என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
//சனி, ராகு & கேது என்ற தீமை செய்யும் கிரகங்களும் உண்டல்லவா?//
Ayya enakku, Sani thisayil Raagu buthi, innum 1 varudathirkku mel ullathu. neenga sonna badi padaatha paadu paduthi kadavul nambikkai vara vaithuvidum pola irukku./////
// ஏன் அடுத்தவன் எழுதியதைத் திருடி நீங்கள் எழுதியதைப்போல போட்டுக்கொள்கிறீர்கள்? //
Ungalin manavali purigindrathu ayya.
//என் உயிருள்ளவரை அது தொடரும். அதையும் மனதில் கொள்க!//
Ungal eluthu pani nalla padi thodara vendi kadavulidam prarthikkindren ayya.//////

நல்லது நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////தகடூரான் said...
Success ஐயா,
நல்லவை எல்லாம் தவறாகவே போய் சேர்கின்றன என்பதுவும் இதில் இருந்து தெரிகின்றது அல்லவா, அப்படி இருக்க ஆசிரியரிடமும் அது தவராகவர வாய்ப்பு இருக்கின்றது. எனவே யாரையும் Success ஐயா "வருந்துவார்கள்" என திட்டாமல் "திருந்துவார்கள்" என சொல்வது உங்களின் மேன்மையும் காட்டும் என நினைக்கின்றேன். சிறியவன் நான் தவறாக சொல்லிருந்திருந்தால் மன்னிக்கவும்.//////

தங்கள் கருத்தைச் சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. அதில் மன்னிப்பு என்ற பதம் எதற்கு?

SP.VR. SUBBAIYA said...

////minorwall said...
படைப்பாளிகள் சங்கம் சார்பாக அண்ணன் ஆலாசியம் அவர்கள் எழுப்பிய குரலை களிமண் கைகளை கோர்த்து உயரத் தூக்கி அனைவரும் ஆமோதிக்கிறோம்..சொல்றாப்லே..படைப்பாளிகள் எண்ணிக்கை செம ஸ்பீடால்லே எகிறுது..//////

படைப்பாளிகள் அதிகமாகிக் கோண்டிருக்கிறார்கள். படிப்பவர்கள் எண்ணிக்கைதான் குறைந்து கொண்டு வருகிறது - பத்திரிக்கைச் செய்தி!

SP.VR. SUBBAIYA said...

/////minorwall said...
/////kmr.krishnan said...
பொள்ளாச்சி பக்கம் போய் இப்படி தேங்காய் வியாபாரம் மைனர் துணைக்கு வந்தால் செய்யலாம்
என்று இருக்கிறேன்.\\\\\\
ஏற்கனவே மாமூகிட்டே அனுப்பி வெச்ச பொள்ளாச்சி based coconut oriented ப்ராஜெக்ட் ரிப்போர்ட் ப்ரோசெஸ்லே இருக்குற விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்?
வாத்தியார் வேற பதிவுலேயே போட்டுட்டாரு..மாமூ உங்க மெயில் id ய hack பண்ணிட்டாங்களா?
இதைத்தான் நீங்கள் நிறுவ ஆசைப் பட்டீர்களாக்கும்?இதுக்குத்தான் மூவர் பார்ட்னரா?//////

பொள்ளாச்சியில் இன்று நம்பர் ஒன் வியாபாரம் தேங்காய் நார் பிஸினஸ். பெரிய அளவில் ஏற்றுமதியாகிறது. அதை முயற்சி செய்யுங்கள். கார் சீட்டுக்கள் செய்யும் கம்பெனிகளும், படுக்கை மெத்தைகள் செய்யும் நிறுவனங்களும் அதிக அளவில் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் நினைத்தால், ஜப்பானைத் தேங்காய் நார்களால் மூடிவிடலாம்.

minorwall said...

/////SP.VR. SUBBAIYA said...
பொள்ளாச்சியில் இன்று நம்பர் ஒன் வியாபாரம் தேங்காய் நார் பிஸினஸ். பெரிய அளவில் ஏற்றுமதியாகிறது. அதை முயற்சி செய்யுங்கள். கார் சீட்டுக்கள் செய்யும் கம்பெனிகளும், படுக்கை மெத்தைகள் செய்யும் நிறுவனங்களும் அதிக அளவில் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் நினைத்தால், ஜப்பானைத் தேங்காய் நார்களால் மூடிவிடலாம்.\\\\\\

உண்மையிலேயே நான் அக்டிவேடேட் கார்பன் ப்ராஜெக்ட் விஷயமா மாமூகிட்டே சொல்லியிருந்தேன்..
அவுரு காசை மண்ணாக்கிட்டாரு..
எங்க அவுகளக் காணோம்?

Alasiam G said...

//// படைப்பாளிகள் சங்கம் சார்பாக////
சொல்லவே இல்லை.... ஒ அது தான் இதுவா...
சரி கத்தார் கண்ணன் அவர்கள் திருமணத்திற்கு ஒரு.... லட்சத்து ஒன்னு மொய் எழுதிக்கப்பா...
நம்ம தம்பி மைனர் அவர்கள் ஜப்பான் yen ஆகவே காசோலை அனுப்பி விட்டார்கள்....

மேலும் ஒரு முக்கிய அறிவிப்பு.. உறுப்பினர்கள் (படைப்பாளர் சங்க உறுப்பினர்கள்) தங்களது சந்தாவை தலைவர் மற்றும் பொருளாளர் வாத்தியார் ஐயாவுக்கோ அல்லது செயலாளர் தஞ்சை திரு KMRK அவர்களுக்கோ அனுப்பி வைக்கும் படி கெளரவத் தலைவர் தஞ்சை திரு ராம கோபாலன் அவர்கள் சார்பாக உங்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
அடுத்த நிர்வாக கமிட்டி கூட்டம் சங்க பேச்சாளர் ஜப்பான் மைனர் அவர்களின் விருப்பப் படி தொக்கியோவிலே வைக்க வேண்டும் என்று விரும்புபவர்களும் தங்களது விருப்பத்தை எழுதலாம்.
நன்றி வணக்கம்.

kmr.krishnan said...

அடுத்த நிர்வாக கமிட்டி கூட்டம் சங்க பேச்சாளர் ஜப்பான் மைனர் அவர்களின் விருப்பப் படி தொக்கியோவிலே வைக்க வேண்டும் என்று விரும்புபவர்களும் தங்களது விருப்பத்தை எழுதலாம்."////

இதை நான் வழி மொழிகிறேன்! டோக்கியோ செல்லத் தனி விமானம் ஏற்பாடு செய்கிறோம்.முன்பதிவுக்கு உடனே எழுதவும்.விசா விண்ணப்பப் ப்டிவம் வேண்டுவோர் உடனே எழுதவும்.டோகீயொவில் விருந்து உபசாரமும்,தஙும் செலவும் மைனர் ஏற்பாடு(இலவசமாக). வாய்ப்பைத் தவறவிடாமல் அனைவரு வந்திருந்து,மைனரின் விருந்தோம்பலின் அழகை அனுபவிக்க வேண்டுகிறோம்.

G.Nandagopal said...

எனது சார்பாக திரு கண்ணன் திருமண வைபவத்திற்கு 100 கிலோ பேரிச்சம்பழமும் பத்து லிட்டர் ஒட்டக திரட்டுப்பாலும் நேற்றைக்கே திரு KMRK அவர்கள் இல்ல விலாசத்திற்கு அனுப்பிவிட்டேன்

G.Nandagopal said...

நமது தென்னை மர பொருட்கள் ஏற்றுமதி வியாபாரத்தின் ஜப்பான் நாட்டின் COUNTRY MANAGER ஆக உங்களை நியமித்து kmrk அவர்கள் ஏற்கெனவே நியமனகடிதத்தை தலைமைச் செயலகத்திற்கு அனுப்பிவிட்டார்கள் மைனர் அவர்களே. மேலும் திரு ஆலாசியம் அவர்கள் சிங்கப்பூர் நாட்டிற்கும் என்னை அரபு நாட்டு கூட்டமைப்பிற்கும் நியமித்து தனித்தனியே நியமன கடிதங்களை அனுப்பிவிட்டார்கள். இதில் வரும் லாபத்தை மாத்திரம் கஷ்டப்பட்டு தாம் ஒருவரே நிர்வகித்துக்கொள்வதாக அய்யா அவர்கள் (kmrk ) ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்

minorwall said...

//////////// Alasiam G said... சரி கத்தார் கண்ணன் அவர்கள் திருமணத்திற்கு ஒரு.... லட்சத்து ஒன்னு மொய் எழுதிக்கப்பா...
நம்ம தம்பி மைனர் அவர்கள் ஜப்பான் yen ஆகவே காசோலை அனுப்பி விட்டார்கள்..../////////////
இன்னும் பொண்ணே பார்த்து முடிக்கலையாம்..இதுலே மொய் விருந்து..அது..இதுன்னு..எல்லாமே கற்பனைலேயே போறீங்களே?

minorwall said...

//////////// Alasiam G said... மேலும் ஒரு முக்கிய அறிவிப்பு.. உறுப்பினர்கள் (படைப்பாளர் சங்க உறுப்பினர்கள்) தங்களது சந்தாவை தலைவர் மற்றும் பொருளாளர் வாத்தியார் ஐயாவுக்கோ அல்லது செயலாளர் தஞ்சை திரு KMRK அவர்களுக்கோ அனுப்பி வைக்கும் படி கெளரவத் தலைவர் தஞ்சை திரு ராம கோபாலன் அவர்கள் சார்பாக உங்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
அடுத்த நிர்வாக கமிட்டி கூட்டம் சங்க பேச்சாளர் ஜப்பான் மைனர் அவர்களின் விருப்பப் படி தொக்கியோவிலே வைக்க வேண்டும் என்று விரும்புபவர்களும் தங்களது விருப்பத்தை எழுதலாம்.
நன்றி வணக்கம்.\\\\\\\\\\\\\

பிரச்சார பீரங்கியாக்கி அழகு பார்க்க நினைக்கும் அண்ணார் ஆலாசியம் அவர்களுக்கு வணக்கம்..

பொறுப்பற்ற பேச்சாளராக இருக்க விரும்பாததால் என்றென்றும்
மக்கள் அன்புடன்
பொறுப்புள்ள நிர்வாகியாகவே
இருந்து விடுகிறேன்..

minorwall said...

////////////////////// kmr.krishnan said... அடுத்த நிர்வாக கமிட்டி கூட்டம் சங்க பேச்சாளர் ஜப்பான் மைனர் அவர்களின் விருப்பப் படி தொக்கியோவிலே வைக்க வேண்டும் என்று விரும்புபவர்களும் தங்களது விருப்பத்தை எழுதலாம்."////
இதை நான் வழி மொழிகிறேன்! டோக்கியோ செல்லத் தனி விமானம் ஏற்பாடு செய்கிறோம்.முன்பதிவுக்கு உடனே எழுதவும்.விசா விண்ணப்பப் ப்டிவம் வேண்டுவோர் உடனே எழுதவும்.டோகீயொவில் விருந்து உபசாரமும்,தஙும் செலவும் மைனர் ஏற்பாடு(இலவசமாக). வாய்ப்பைத் தவறவிடாமல் அனைவரு வந்திருந்து,மைனரின் விருந்தோம்பலின் அழகை அனுபவிக்க வேண்டுகிறோம்.\\\\\\\\\\

என்னத்தை சொல்வது..? இப்படி ஒரு நிலைமை வந்ததற்கு KMRK சாரை குறை சொல்லிப் புண்ணியமில்லை..எங்கும் இலவசம்..எதிலும் இலவசம்..என்று இலவசமயமாகிக் கிடக்கும் நாட்டில்,ஊரில் இருப்போரின் எதிர்பார்ப்பை என்னதான் செய்யமுடியும்?கடும் உழைப்பாளிகளுக்கு உலகில் உதாரணமாய் விளங்கும் ஜப்பானில் இருந்து வாழ்ந்து பார்த்தால் தெரியும்..இலவசம் என்ற வார்த்தை கூட இங்கே கிடையாது..மக்கள் பணத்திலான அரசு கஜானா பவர் இருந்தால் இலவசமாகக் கொடுப்பதில் என்ன சிரமம் இருக்க முடியும்?

ஆனால் மைனர் செலவில் இந்த கனவுச் சுற்றுலா ஏற்பாட்டை செய்ய மைனருக்கும் ஆவல்தான்..இதற்கு முன்னேற்பாடாக படைப்பாளிகள் சங்கப் பொதுத் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்து படைப்பாளிகள் அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் (நல்ல) சந்தா தொகை நிர்ணயிக்கப்பட்டு கஜானா கை கொடுக்குமானால் படைப்பாளிகளுக்கு என்று இந்த சிறிய வேலையை செய்ய முடியாதா என்ன?

minorwall said...

////////////////
G.Nandagopal said...
இதில் வரும் லாபத்தை மாத்திரம் கஷ்டப்பட்டு தாம் ஒருவரே நிர்வகித்துக்கொள்வதாக அய்யா அவர்கள் (kmrk ) ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்\\\\\\\\\\\\\\\\\\\

ஜப்பான் நாட்டின் COUNTRY MANAGER ஆக நான் இதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்..

minorwall said...

'முதலில் வருவோர்க்கு முன்னுரிமை' என்று தொலைத் தொடர்பு துறையில் வளர்ந்து கிடக்கும் சிக்கல் இந்திய தேசிய அரசியலையே உலுக்குவது போலே

'முதலில் பிறந்தோர்க்கு முன்னுரிமை' என்ற முறை படைப்பாளிகள் சங்க ஆரோக்கியத்தை பாதிக்கும் வாய்ப்புகள் உண்டு என்ற பொறுப்புடன்..கட்டற்ற சுதந்திரம் கொண்ட படைப்பாளிகளின் விருப்பத்திற்கிணங்க அவர்களின் ஓட்டுரிமை அடிப்படையில் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பது என்றும் அதுகுறித்தான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்..படைப்பாளிகளின் கனவுகளை நிறைவேற்றும் வண்ணம் தீவிர ஆலோசனைக்குப் பின் முழு செயல் வடிவம் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்..இது தொடர்பான ஆலோசனைகளை வேண்டுகிறோம்..

Alasiam G said...

/////இன்னும் பொண்ணே பார்த்து முடிக்கலையாம்..இதுலே மொய் விருந்து..அது..இதுன்னு..எல்லாமே கற்பனைலேயே போறீங்களே?/////
மைனர்வால்.... இதைத்தான் இப்படிச் சொல்லுவாக ஊர்ல...
"அடிஎன்னுக் கூப்பிட ஆம்புள இல்லையாம்
வெங்கட்டுன்னு பேரு வைக்கிறாளாம்ன்னு"

Alasiam G said...

////..இது தொடர்பான ஆலோசனைகளை வேண்டுகிறோம்../////
மூத்தோரின் மதியுரையோடு (Mentoring )
இளையோரின் துடிப்போடு....
இளையோரின் மூத்தோரின்....
சங்கமம் நடக்கட்டும்
அங்கம் (உறுப்பினராக) வகிக்க
ஆவலுடன் உள்ளோம்
பங்கம் வராமல் பார்த்துக் கொள்ள
கங்கணம் கொள்வோம்...
தங்கமான நல்ல காரியமும் நடாத்துவோம்....

G.Nandagopal said...

மாப்பு

காசை மண்ணாக்கி அந்த மண்ணில் மரம் நட்டு வளர்ந்த மரத்தில் காய் பறித்து அந்த கையில் நாருரிக்க முயலவில்லை நான்.

காசை மண்ணில் போட்டு அதை மடங்குகளாக்கி பின்னர் பெரிய அளவில் அய்யா kmrk நிர்வாகத்தில் ஆரம்பித்து உங்களின் ஒத்தாசையோடு வியாபாரத்தை நடத்த உள்ளேன் என்பதை மிகுந்த பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

minorwall said...

/////Alasiam G said...
இளையோரின் மூத்தோரின்....
சங்கமம் நடக்கட்டும்
அங்கம் (உறுப்பினராக) வகிக்க
ஆவலுடன் உள்ளோம்
பங்கம் வராமல் பார்த்துக் கொள்ள
கங்கணம் கொள்வோம்...
தங்கமான நல்ல காரியமும் நடாத்துவோம்....\\\\\\\\\

நீங்க T . R . சாரின் சிஷ்யர்ன்னு தெரியாமல் போச்சே..

சங்கமம், அங்கம், பங்கம், கங்கணம், தங்கம் ....ன்னு செம காட்டு காட்றீங்களே?

minorwall said...

KMRK சார் ஆண்டறிக்கை..- ஜப்பான் country manager தொடர்பாக இன்னும் விஷயங்கள் நிலுவையில் உள்ளதால் இதுவரை KMRK சாரிடமிருந்து பதில் வராததால்
'ஆகட்டும்...பார்க்கலாம்..' என்ற பழைய பதிலையே எடுத்துக் கொள்வோமா?..
எல்லோருக்கும் பொதுவா ரொடேஷன்லே நிர்வாகத்தை வுட்டா என்ன? ஆளுக்கு ஒரு குவார்ட்டர்?
உங்க இஷ்டப் படி உங்க குவாட்டரோட நீங்க எங்க வேணா போங்க..

Alasiam G said...

//// நீங்க T . R . சாரின் சிஷ்யர்ன்னு தெரியாமல் போச்சே..////
நல்லவேலையாப் போச்சு....
அதுக்கு நீங்க இது மாதிரி இனி எழுத வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம்.....
TMS .. TR ... SSR ... இவர்களோட பேட்டிய தொலைக்காட்ச்சியில் பார்த்து அதிர்த்து போயிருக்கிறேன்.....
அவுங்க தலையத் தாங்க அவுங்க கழுத்து படும் பாடு இருக்கே.. அப்பப்பா... அத நினச்சா இப்பவும்.... நடுங்குது...

minorwall said...

//////////Alasiam G said...
நல்லவேலையாப் போச்சு....
அதுக்கு நீங்க இது மாதிரி இனி எழுத வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம்.....\\\\\\

அப்படியில்லை சார்..எதுகை மோனையோட அந்த flow ச்சும்மா எல்லாருக்கும் வந்துடாது..T .R . அந்த விஷயத்தில் திறமையானவர்தான்..
மத்தவர்கள் பத்தி அவ்வளவா எனக்குத் தெரியாது..எக்ஸ்ட்ரா பிட்டிங் இல்லாம நார்மலா நடிக்க, பேச அவருக்கு முடியாமல் போனதுதான் கேலிக்குரிய விஷயமாகிப் போய்விட்டது..
நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.

Alasiam G said...

////T .R . அந்த விஷயத்தில் திறமையானவர்தான்../////
உண்மைதான் மைனர்வாள் நானும் அப்படியே ஏற்கிறேன்...
நானும்... இன்றும் பல நேரங்களில் அவருடைய பாடல்களை முனு முணுப்பது உண்டு...
முக்கியமாக.... சலங்கை இட்டாள் ஒரு மாது.. என்னை மிகவும் கவர்ந்தது..
திறமை எங்கு இருப்பினும் நாம் ஏற்கத்தான் வேண்டும் என்பதில் எனது கருத்தும் உங்களைப் போலத்தான்..
நானும் வேறு அர்த்தம் கொள்ளவில்லை... சும்மா அவரைப் பற்றிய எனது சிறு ஆதங்கம் தான்.. நுணலும் தன வாயால் கெடும் என்பதாக... திறமைசாலி பாதையும் பயனும் மாறி போய்விட்டது.... அவ்வளவே....இரண்டாம் இடமும்... ஏழாம் இடமும் நன்றாக இருக்க வேண்டுமல்லவா.. அவர் யூனிட்டில் வேலை பார்த்த ஒருவர் எனது நண்பரின் நண்பர்.... அவர் கூற கேள்வி பட்டேன்....
நன்றிகள் நண்பரே...