மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

19.12.10

நான் சொல்லவில்லை என்றால், யார் சொல்வார்கள்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நான் சொல்லவில்லை என்றால், யார் சொல்வார்கள்?
---------------------------------------------------------------------------
இன்றைய வாரமலரை நம் வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரும், தஞ்சைத் தரணிக்குப் பெருமை சேர்ப்பவருமான திருவாளர். கே முத்துராமகிருஷ்ணன் அவர்களின் கட்டுரை ஒன்று அலங்கரிக்கிறது. படித்து மகிழுங்கள்.

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
நான் சொல்லவில்லை என்றால், யார் சொல்வார்கள்?

"தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்"


இதன் பொருள்:(மு.வ உரை): "தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும் படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்வதாகும்"

அப்ப‌டிப்பட்ட ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய கடிதத்தின் தமிழ் ஆக்கம் இது. மின் அஞ்ச‌லில் வந்தது. தமிழுக்கு மட்டுமே நான் பொறுப்பு. கருத்துக் கூறிய புண்ணியவான் யார் என்று எனக்குத் தெரியவில்லை.

இக்கருத்துக்கள் அனைத்தும் ஒவ்வொருவரும் அறிந்து, வாழ்க்கையில் சிறிதேனும் க‌டைப்பிடித்தால் சண்டை‍‍‍ சச்சரவு, மன முறிவு,போட்டி பொறாமை, மதமாச்சரியங்கள் அற்ற ஒரு சமூகம் அமையும். சாந்தி நிலவும் என்று எனக்குத் தோன்றுகிறது.

படித்துபாருங்கள். விரும்பினால் வாழ்வில் கடைப்பிடியுங்கள். இல்லாவிட்டால்"கெடக்குது 'பெரிசு'; பெரிசா அறிவுரை சொல்ல வந்திருச்சி" என்று சொல்லி 'ஜூட்' விட்டு விடுங்கள்!

மேலே படியுங்கள்:

"அன்பு மகனே! இக்கடிதத்தை மூன்று காரணங்களுக்காக இப்போதே எழுதுகிறேன். முதல் காரணம்: உயிர்  வாழ்வு, செல்வம், விபத்து அல்லது எதிர்பாராத துன்பம் ஆகியவை நம்மால் கணிக்க முடியாத காரணிகள்.

ஒருவருடைய மரணம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. எனவே சில கருத்துக்கள் எவ்வளவு விரைவாகச் சொல்லப் படுகின்றனவோ அவ்வளவுக்கு  நல்லது.

இரண்டாவது காரணம்: நான் உன் தந்தை! நான் இதை உனக்குச் சொல்லவில்லை என்றால் வேறு யார்தான் உனக்கு இதைச் சொல்லப் போகிறார்கள்?

மூன்றாவது காரண‌ம்: இங்கே நான் சொல்வது அனைத்தும் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் ஏற்பட்டது. இதை அறிவதன் மூலம் நீ ப‌ல மன வலிகளில் இருந்து விடுபடக் கூடும்.

வாழ்க்கையை நடத்தும் போது கீழ்க் கண்டவைகளை நினைவில் கொள்!

1. உன்னிடம் நல்லமுறையில் நடந்து கொள்ளாதவர்களைப் பார்த்து மனதில் கருக்கட்டிக்கொள்ளாதே (காழ்ப்பு அடையாதே); எனக்கும் உன் அம்மாவுக்கும் தவிர, உலகில் வேறு யாருக்கும் உன்னை நல்ல முறயில் நடத்த வேண்டும் என்ற பொறுப்புக் கிடையாது. உன்னிடம் நல்ல முறையாக நடந்து கொள்பவர்களுக்கு நீ நன்றி உடையவனாக இருக்கத்தான் வேண்டும்; அதே சமயம், ஒவ்வொருவருடைய நடவடிக்கையும் ஒரு உள்ளர்த்தம்‍‍(மோடிவ்) உடையதுதான் என்பதை நீ எச்சரிக்கையுடன் உணர்ந்து இருக்க வேண்டும். ஒருவர் உன்னிடம் நன்றாக நடந்து கொள்கிறார் என்றால், அவர் உன்னை உண்மையாகவே விரும்புகிறார் என்ற எண்ணத்தினை வளர்த்துக் கொள்ளாதே! அவசர‌ப்பட்டு அவரை உற்ற நண்பர் என்று கருதி விட வேண்டாம்.

2. தவிர்க்க முடியாத நபர் (அவர் இல்லாவிடால் எதுவும் நடக்காது
என்பது போல)என்றோ, தவிர்க்க முடியாத ஒரு பொருளோ,
நிலைமையோ  உலகில் கிடையாது. இக்கருத்தை நீ உள் வாங்கிக்
கொண்டு விட்டால்,பிறர் உன்னை விரும்பாவிடினும்,உன்னுடைய
தொடர்பு தங்க‌ளுக்கு இனித் தேவையில்லை‌ என்ற நிலையினை
அவர்கள் எடுத்தாலும், அல்லது நீ விரும்பும் பொருளோ, நபரோ
உனக்குக் கிடைக்காமல் போனாலும்,அல்லது அதனை வைத்திருந்து இழந்தாலும் அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சுலப‌மாக, எளிமையாகக் கடந்து போகலாம்.

3. வாழ்க்கை குறுகியது.காலத்தை இன்று நீ வீணாக்கினால், நாளை வாழ்க்கை பயனின்றிக் கழிந்து, உன்னை விட்டுவிட்டுச் சென்று கொண்டிருப்பதை உன் கண்முன்னால் பார்ப்பாய். எவ்வளவு விரைந்து வாழ்கையின் சாரத்தை சேமித்துக்கொண்டு பொன் போல் காலத்தை மதிக்கிறாயோ அவ்வளவுக்கு நீ வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கலாம்.

4. காதல் என்பது மேகம் போல் கலைந்துவிடக் கூடிய உணர்வு; கால மாற்ற‌த்தால் மாற‌க்கூடியதுதான் காதல் என்ற உனர்வும். நிலையாக நிற்பது அல்ல. நீ காதலித்தவள் உன்னைத் தவிர்க்கிறாள் என்று கவலை கொள்ளாதே  பொறுமையாக இரு. உன் உள்வலியும் ஏமாற்றமும் கால வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும்.காதலின் சிறப்பைப் பற்றி அதீதமாகக் கற்பனையாகப் பேசுதலும் வேண்டாம்.;காதல் தோல்வி பற்றியும் அதனால் ஏற்பட்ட காயங்க‌ளைப் பற்றியும் அதீதமாக விவரிக்கவும் வேண்டாம்.

5. வாழ்க்கையில் வெற்றி பெற்ற பலருக்கும் முறையான கல்வி கிடைக்கவில்லை. அதனால் படிப்பினால் வெற்றியை அளிக்க முடியாது என்ற முடிவுக்கு நீ வந்துவிட‌க்கூடாது.ஆகவே கடினமாக உழைத்துப் படிக்காமலேயே வாழ்வில் வெற்றி பெற்று விடலாம் என்றும் கருதிவிடாதே! நீ கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு அறிவும் உன் கையில் கிடைக்கும் ஆயுதம் போன்றது.வாழ்க்கைப் போராட்டத்திற்கு அது உதவும்.வறுமை என்ற கீழ் நிலையில் இருந்து செல்வச் செழிப்பு நோக்கிச் செல்ல முடியும். ஆனால் ஏதோ ஒரு கீழ்ப்படியில் இருந்துதான் மேல் நோக்கிய பயணம் துவங்குதல் வேண்டும். இதை அறிந்து கொள்.

6. எனக்கும் உன் தாய்க்கும்  பொருளாதாரப் பாதுகாப்பை நீ அளிக்க
வேண்டும் என்று உன்னை நான் கேட்கவில்லை. என்னாலும் உனக்கு
உன் வாழ்நாள் முழுவதற்கும் ஆன பொருளதாரப் பாதுகாப்பை  அளிக்க முடியாது. உனக்கு நான் அளிக்கும் பொருளாதாரப் பாதுகாப்பு என்பது,
நீ வளரும் வரைதான். அதன் பின்னர் நீதான் முடிவு செய்ய வேண்டும்,
உன் பயணம் பேருந்திலா அல்லது சொந்தக் காரிலா என்பதை!

7. வாக்கினை நீ காப்பாற்ற வேண்டும்; ஆனால் பிறரும் அது போல வாக்கினைக் காப்பாற்றுவார்கள் என்று எதிர் பார்த்து ஏமாறவேண்டாம். பிற‌ருடன் நல்லுறவை நீ வளர்த்துக் கொண்டு அவர்களுக்கு நனமையைச் செய்.ஆனால் அவர்களிடம் அதனை எதிர் பார்க்க வேண்டாம்.

8. நான் லாட்டரி டிக்கெட் என் வாழ் நாள் முழுவதும் வாங்கி வந்துள்ளேன்.ஆனால் ஒரு முறை கூட எனக்குப் பரிசு கிடைக்கவில்லை. இதில் இருந்து நான் அறிந்து கொண்டது என்னவென்றால்,பணக்கார‌ன் ஆவதற்கு சுலபமான வழியேதும் கிடையாது. கடின உழைப்பில் மட்டுமே வெற்றி அமர்ந்து இருக்கும். நம் உண‌வு நமக்கு இலவசமாகக் கிடைக்காது.

9. நான் என் நேரத்தை உன்னுடன் அதிகமாகச் செலவழிக்கவில்லை என்று குறைப்படாதே.நாம் சேர்ந்து இருந்தபோது, அது குறுகிய நேரமானலும், நாம் பேசி மகிழ்ந்த‌தை ம‌னதில் இறுத்து.அடுத்தப் பிறவியில் நாம் சந்திப்போமா என்பது சந்தேகமே! எனவே இங்கே நாம் சந்திப்பது மகிழ்ச்சி உடையதாக இருக்க வேண்டும்.

10. நீ அதிகமாக, என்னைக் காட்டிலும் அதிகமாகக் கற்க வேண்டும். நான் அதிகமாகப் படிக்கவில்லையே என்று இப்போது வருந்துகிறேன். என் தந்தையும் என்னைப் போலவே வருந்தினார். உனக்கு அப்படிப் பட்ட வருத்தம் வராத அளவு நீ படிக்க வேண்டும்.
இப்படிக்கு,
உன் அன்புத் தந்தை
---------------------------------------------------------------------------
ஆக்கம் (கட்டுரையை வசப்படுத்திக் கொடுத்தவர்): கே.முத்துராமகிருஷ்ணன் (KMRK), தஞ்சாவூர், +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

71 comments:

kmr.krishnan said...

ஆக்கத்தை சிறிதும் மாற்றம் செய்யாமல் அப்படியே வெளியிட்டுள்ளீர்கள்.என் எழுத்தாற்றல் கூர்மை அடைந்து வருகிறது என்பதற்கான அங்கீகாரம் இது.என் உளமார்ந்த்த நன்றி=அந்த கந்தப் பழனி வேலருக்கும்,அவருடைய அடியாரான உங்க‌ளுக்கும்!முருகன் அருளால் எல்லா நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்க!

minorwall said...

/////////////////படித்துபாருங்கள். விரும்பினால் வாழ்வில் கடைப்பிடியுங்கள். இல்லாவிட்டால்"கெடக்குது 'பெரிசு'; பெரிசா அறிவுரை சொல்ல வந்திருச்சி" என்று சொல்லி
'ஜூட்' விட்டு விடுங்கள்!\\\\\\\\\\\
உன்னிடம் நல்லமுறையில் நடந்து கொள்ளாதவர்களைப் பார்த்து மனதில் கருக்கட்டிக்கொள்ளாதே (காழ்ப்பு அடையாதே);

minorwall said...

////////////மேலே படியுங்கள்:
"அன்பு மகனே! இக்கடிதத்தை மூன்று காரணங்களுக்காக இப்போதே எழுதுகிறேன். முதல் காரணம்: உயிர் வாழ்வு, செல்வம், விபத்து அல்லது எதிர்பாராத துன்பம் ஆகியவை நம்மால் கணிக்க முடியாத காரணிகள்.
இரண்டாவது காரணம்: நான் உன் தந்தை! நான் இதை உனக்குச் சொல்லவில்லை என்றால் வேறு யார்தான் உனக்கு இதைச் சொல்லப் போகிறார்கள்?\\\\\\\\\\\\\

உங்களை சமீபத்தில் ஒரு நண்பர் 'அருட்தந்தை' என்று சொன்னதை ரொம்ப சீரியஸா எடுத்துகிட்டு இப்புடி அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களே KMRK சார்..
எங்களுக்கெல்லாம் அட்வைஸ் பண்ணுனா புடிக்காதுன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன?
(இந்த எங்கள்லேருந்து என்னை மட்டும் கழட்டி வுட்டுடுங்க..ஏன்னா நான் ரொம்ப நல்லவன்..)

minorwall said...

/////////////////// தவிர்க்க முடியாத நபர் (அவர் இல்லாவிடால் எதுவும் நடக்காது
என்பது போல)என்றோ, தவிர்க்க முடியாத ஒரு பொருளோ,
நிலைமையோ உலகில் கிடையாது. இக்கருத்தை நீ உள் வாங்கிக்
கொண்டு விட்டால்,பிறர் உன்னை விரும்பாவிடினும்,உன்னுடைய
தொடர்பு தங்க‌ளுக்கு இனித் தேவையில்லை‌ என்ற நிலையினை
அவர்கள் எடுத்தாலும், அல்லது நீ விரும்பும் பொருளோ, நபரோ
உனக்குக் கிடைக்காமல் போனாலும்,அல்லது அதனை வைத்திருந்து இழந்தாலும் அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சுலப‌மாக, எளிமையாகக் கடந்து போகலாம்.\\\\\\\\\

நான் நானாகவே எழுதுகிறேன்..எனக்கு இது போன்ற அனுபவங்கள் ரொம்ப அதிகம்..12லே செவ்வாய் இருப்பதாலேன்னு நினைக்கிறேன்..
உறவுகள்,நட்புகள்,மனிதர்கள், விரும்பிய ஆடம்பரப் பொருட்கள் என்று நானாகத் தூக்கி எறிந்தவை பல..தானாக மாயமானதும் பல..கவலைப் படுவதே இல்லை..
அதற்குள் அடுத்த ஒரு விஷயம் புதிதாகத் தோன்றி விடுகிறதே..இதுவும் சிருஷ்டியின் விளையாட்டுத்தானோ?

SUBBIAH said...

miga miga nandru .anubhavathaivida sirantha asan veru illai.

G.Nandagopal said...

உண்மையிலேயே அருமையான அறிவுரைகள்
தோளுக்கு மேலே வளர்ந்துவிட்டால் மகனும் தோழன் தான்
எனவே அறிவுரைகளை பாங்காகத்தான் சொல்ல வேண்டும்
அந்த வகையில் KMRK சொன்ன விதம் பாராட்டுக்குரியது.
என்ன இருந்தாலும் 'அருட் தந்தை' ..'அருட் தந்தைதான்'
என்பதை மறுபடியும் ஒரு முறை நிரூபித்துவிட்டார்.
யார் ஏற்கிறார்களோ இல்லையோ நான் அவசியம்
தங்களின் அறிவுரைகளை கடைபிடிக்க முயல்கிறேன்...அய்யா
பாராட்டுக்கள்
நன்றி
G.Nandagopal

G.Nandagopal said...

மைனர் வாள்
தெரிந்தோ தெரியாமலோ திரு.KMRK அவர்களின் அறிவுரைகளை
கடைப்பிடித்து வருகீறீர்கள். 'நான் அடிப்பது போல் அடிப்பேன் நீ அழுவது போல் அழு'
என்பதாக உங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் வேறு. ஆகையினாலே உங்களுக்கு மட்டுமே
அய்யா அவர்கள் சொல்லுவதாக எடுத்துக்கொள்வதா. அல்லது 'நல்லார் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு எல்லார்க்கும் மலை' என்று எடுத்துக்கொள்வதா.
நந்தகோபால்

G.Nandagopal said...

miga miga nandru .anubhavathaivida sirantha asan veru illai./////////

அவர் (KMRK ) ஆசான் ஆனதே அனுபவத்தினால் தானே அய்யா.
இதைதான் நமது கவியரசர் 'அனுபவமும் ஆண்டவனும்' என்று ஒரு கவிதையில் எழுதியிருப்பார்.
அற்புதமான ஒன்று. அதை நமது வாத்தியார் அவர்கள் இங்கே வெளியிட வேண்டுகிறேன்.
நந்தகோபால்

M. Thiruvel Murugan said...

ஐயா வணக்கம்...!

///வாக்கினை நீ காப்பாற்ற வேண்டும்; ஆனால் பிறரும் அது போல வாக்கினைக் காப்பாற்றுவார்கள் என்று எதிர் பார்த்து ஏமாறவேண்டாம்.///

///நீ அதிகமாக, என்னைக் காட்டிலும் அதிகமாகக் கற்க வேண்டும். நான் அதிகமாகப் படிக்கவில்லையே என்று இப்போது வருந்துகிறேன். என் தந்தையும் என்னைப் போலவே வருந்தினார். உனக்கு அப்படிப் பட்ட வருத்தம் வராத அளவு நீ படிக்க வேண்டும்///

இவை என் தந்தையார் எனக்கு சொன்ன வார்த்தைகள்... நானும் என் மகனுக்கு சொல்ல நினைக்கும் வார்த்தைகள்... நெஞ்சைத் தொட்டுவிட்டீர்கள் KMRK சார்.. சபாஷ் & keep it up!

மா. திருவேல் முருகன்

Jack Sparrow said...

arputhamana varigall...very nice..

kmr.krishnan said...

//"உங்களை சமீபத்தில் ஒரு நண்பர் 'அருட்தந்தை' என்று சொன்னதை ரொம்ப சீரியஸா எடுத்துகிட்டு இப்புடி அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களே KMRK சார்..எங்களுக்கெல்லாம் அட்வைஸ் பண்ணுனா புடிக்காதுன்னு உங்களுக்குத்
தெரியாதா என்ன?"//

பிடிக்காது என்று எதிர்பார்த்துதான் 'ஜூட்' விட்டுக்கலாம் என்று சொல்லி வைத்தேன்.ஊதிடும் சங்கை ஊதிவைப்போம்;விடியும் போது விடியட்டும் என்ற மனப் பான்மையில்தான் எழுதினேன். சொந்தச் சரக்கும் இல்லை. வேறு யாரோ கூறியது.எனக்குப் பிடித்ததால் மொழி பெயர்த்து அனுப்பினேன்.

மேலும் என்னை 'அருட்தந்தை'என்று அழைப்பதை நான் ஏற்கவில்லை.வெறுந் தந்தையாக நான் என் கடமைகளை நிறைவாகச் செய்து உள்ளேனா என்பதை என் 3 மகள்களும்தான் சொல்ல வேண்டும். அப்புறம் அல்லவா 'அருள்' எல்லாம்!
மேலும் அருட்தந்தை என்ற சொல் அப்ரஹாமிக் மதங்கள் பயன்படுத்தும் சொல்.நான் அதைச் சார்ந்து நிற்காத போது அந்தப் பெயர் சிறிதும் பொருத்தம் இல்லாதது. பின்னூட்டத்திற்கு நன்றி மைனர்வாள்.

kmr.krishnan said...

//"யார் ஏற்கிறார்களோ இல்லையோ நான் அவசியம்
தங்களின் அறிவுரைகளை கடைப் பிடிக்க முயல்கிறேன்...அய்யா"

நன்றி நந்தகோபால் அவர்களே!இப்படி யாரவது ஒருவர் மனதிலாவது ஒரு உணர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தே அந்தக் கட்டுரையை மொழி பெயர்த்தேன்.வகுப்பறையின் முக்கியமான, கலகலப்பான மாண‌வர்கள் இருவருடைய கவனத்தைக் கவர்ந்தது மனமகிழ்ச்சி அளிக்கிறது."//

kmr.krishnan said...

"miga miga nandru .anubhavathaivida sirantha asan veru illai."
Thank you Mr.Subbaih

ARASU said...

ஆசிரியருக்கு வணக்கம்.
அய்யா,
NOBODY IS INDISPENSABLE IN THE WORLD என்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட‌
வரிகள் நினைவுக்கு வருகின்றன. பயனுள்ள அறிவுறைகள். அருமையான‌
கட்டுரை.பாராட்டுக்கள்.
அன்புடன், அரசு.

middleclassmadhavi said...

ஐயா, மிகவும் தேவையான பதிவு. விடலைப் பருவத்தை எட்டிக் கொண்டிருக்கும் என் மகனுக்கு இதை சுட்டியிருக்கிறேன். மிக்க நன்றி.

G.Nandagopal said...

மேலும் அருட்தந்தை என்ற சொல் அப்ரஹாமிக் மதங்கள் பயன்படுத்தும் சொல்.////////

இல்லை KMRK அவர்களே. பொதுவாக திரு வேதாத்திரி மகரிஷி அவர்களை எல்லோரும்
அன்புடன் அருட்தந்தை என்று அழைப்பதை நான் கேள்விபட்டிருக்கிறேன். ஆண்டவனுடைய அருளுக்கு
மத சார்பான அறிமுகங்கள் தேவையில்லை என்பது எனது கருத்து. அதுபோன்றே பிரதிபலனை எதிர்பார்க்காமல்
பிறர் நலன் கருதும் பெரியோர்கள் தந்தை பிரிவில் அடங்குவர். அறிவுரைகளுடன் தங்களது அருளாசிகளையும்
சேர்த்து வழங்கும்போது அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 'அருட்தந்தை' ஆகிவிடுவர்.
மறுபடியும் ஒரு முறை கட்டுரையின் தலைப்பைப் பாருங்கள்.
'நீங்கள் சொல்லாவிட்டால் வேறு யார் சொல்வார்கள்'
நந்தகோபால்

kannan said...

உள்ளேன் ஐயா!

வாழை மரமும் கூட
நினைக்குமாம் தமது பரம்பரை
"வாழையடி வாழையாக செழித்து மேலோங்கி வளரவேண்டும்!" என்று .
ஒரு வாழை மரதீர்க்கே இவ்வள வேண்டுதல் இருப்பின் ஆறறிவி பெற்ற மனிதனுக்கு
எவ்வளவிக்கானம் வேண்டுதல்
இருக்கும்.

எமது விடலை பருவத்தில் காலம் சென்ற எமது தந்தையார் கூறியதில் இருந்து எடுத்த சிறு குறிப்புதான்
இன்று இடம் பெற்று உள்ளது எனலாம்.

மிகவும் அருமையாக தந்த எம்பெயர் உடைய ஐயாவிற்கு சிரசு தாழ்ந்த வணக்கம்.
--

kmr.krishnan said...

//"என் மகனுக்கு சொல்ல நினைக்கும் வார்த்தைகள்... நெஞ்சைத் தொட்டுவிட்டீர்கள் KMRK சார்.. சபாஷ் & keep it up!"//

நன்றி திருவேலரே!நீங்கள் மட்டுமல்ல ஒவ்வொரு நடுவயது அடைந்துவிட்ட தந்தையும் தன் மகன்/மகளுக்குப் பக்குவமாகச் சொல்ல வேண்டியது.
'தக்க சமயத்தில் என்னை ஏன் ஜாக்கிரதைப் படுத்தவில்லை' என்று எந்த மகனும் கேட்கும் முன்,விடலைப் பருவப் பையன்க‌ளின் பெற்றோர் நேரே சொல்ல முடியாவிட்டாலும், இப்படி ஏதாவது சிலதை படிக்கவாவது வைத்து விட வேண்டும். ஏனெனில் சுய அனுபவத்தில் கற்றுக்கொள்வது பல சமயங்களில் மிகவும் செலவு வைப்பதாக உள்ளது. எனவே அனுபவப்பட்டவர்களுடைய வார்த்தைகள் கொஞ்சமாவது உட் புகுந்தால் நல்லது.நன்றி!

kmr.krishnan said...

"12லே செவ்வாய் இருப்பதாலேன்னு நினைக்கிறேன்.. "

என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள் மைனர்வாள்!எனக்கும் 12ல் செவ்வேள்!
உறவுகளும் நட்புக்களும் எந்த ஒரு காரணமும் இல்லாமல்,என்னிடமிருந்து
சொல்லிக் கொள்ளாமல் விலகிக் கொள்வார்கள்.

kmr.krishnan said...

Thanks a lot to Arasu ,Jacksparroow, Middlelass Madhavi! May God bless you all!

minorwall said...

அறிவுரைகளுடன் தங்களது அருளாசிகளையும்
சேர்த்து வழங்கும்போது அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 'அருட்தந்தை' ஆகிவிடுவர்.
மறுபடியும் ஒரு முறை கட்டுரையின் தலைப்பைப் பாருங்கள்.
'நீங்கள் சொல்லாவிட்டால் வேறு யார் சொல்வார்கள்'
நந்தகோபால்
அறிவுரைகளுடன் தங்களது அருளாசிகளையும்
சேர்த்து வழங்கும்போது அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 'அருட்தந்தை' ஆகிவிடுவர்.
மறுபடியும் ஒரு முறை கட்டுரையின் தலைப்பைப் பாருங்கள்.
'நீங்கள் சொல்லாவிட்டால் வேறு யார் சொல்வார்கள்'
நந்தகோபால்
////////////////அறிவுரைகளுடன் தங்களது அருளாசிகளையும்
சேர்த்து வழங்கும்போது அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 'அருட்தந்தை' ஆகிவிடுவர்.
மறுபடியும் ஒரு முறை கட்டுரையின் தலைப்பைப் பாருங்கள்.
'நீங்கள் சொல்லாவிட்டால் வேறு யார் சொல்வார்கள்'
நந்தகோபால்///////////

எப்பிடி மாமூ..இப்பிடி..
செமையா கவுண்டர் குடுக்குரீங்களே? உங்க ஊரு பக்கம் இது ஜாஸ்திங்குறதுனாலேயா?

G.Nandagopal said...

எப்பிடி மாமூ..இப்பிடி..
செமையா கவுண்டர் குடுக்குரீங்களே? உங்க ஊரு பக்கம் இது ஜாஸ்திங்குறதுனாலேயா?////////

மாப்பு
எல்லாம் நம் KMRK அவர்களின் அருளாசிகள் தான் காரணம்
ஆமா இதுலே உள்குத்து ஒண்ணும் இல்லேயே
ஒருபக்கம் 'நான் சொல்லாவிட்டால் வேறு யார் சொல்வார்கள்' என்று
கம்பீரமாக சொல்லிவிட்டு நாம் அருட்தந்தை என்றதும்
'அய்யய்யோ அது நான் இல்லீங்க' என்பதும் KMRK அவர்களின்
ஆளுமையையும் தன்னடக்கத்தையுமே ஒருங்கே காட்டுகிறது.
யாருக்கு இருக்கோ இல்லையோ நம் இருவருக்கும் அவரின்
ஆசிகள் என்றும் உண்டு.
நந்தகோபால்

kmr.krishnan said...

"எமது விடலை பருவத்தில் காலம் சென்ற எமது தந்தையார் கூறியதில் இருந்து எடுத்த சிறு குறிப்புதான் இன்று இடம் பெற்று உள்ளது எனலாம்."//

நன்றி கண்ணன் அவர்களே!தங்கள் வாழ்வில் பார்த்த அல்லது கேட்ட செய்திகளை ஒரு கதை,கட்டுரையாகப் படிக்கும் போது அதனுடன் மனத்திற்கு ஒரு இணைப்புக் கிடைத்து மனம் நெகிழும்.அப்படி நெகிழ வைக்கும் எழுத்துக்களே பிரபலமடையும்.இக் கருத்துக்கள்இரவல்தான்.
மொழியாக்கம் மட்டுமே என்னுடையது.எழுதியவருடைய பெயர்,முகவரி எனக்குக் கிடைக்கவில்லை.
கிடைத்திருந்தால் தவறாமல் வெளியிட்டு இருப்பேன்.மீண்டும் நன்றி!

G.Nandagopal said...

என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள் மைனர்வாள்!எனக்கும் 12ல் செவ்வேள்!
உறவுகளும் நட்புக்களும் எந்த ஒரு காரணமும் இல்லாமல்,என்னிடமிருந்து
சொல்லிக் கொள்ளாமல் விலகிக் கொள்வார்கள்/////////////

என்ன செய்யச் சொல்லுகிறீர்கள் அவர்களை. நான் மூணாவது மனுஷன்.
நான் பிரியத்துடன் 'அருட் தந்தை' என்றாலே ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்கிறீர்கள்.
அவர்கள் இன்னும் எத்துனை வாஞ்சையுடன் எப்படி அழைத்தார்களோ.
என் பாசத்தை உதாசீனப்படித்தியது போல் ஏதாவது செய்திருப்பீர்கள் போலும்.
மற்றபடி 12 இல் செவ்வாய், செவ்வேல் (முருகனுடைய வேல் )இருக்க என்ன செய்துவிடும்.
நந்தகோபால்

minorwall said...

//////எங்களுக்கெல்லாம் அட்வைஸ் பண்ணுனா புடிக்காதுன்னு உங்களுக்குத்
தெரியாதா என்ன?//////

சின்ன செட்டை ரெப்ரெசென்ட் பண்ண வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்குங்குறதாலே அப்பிடி எழுதவேண்டியது கட்டாயமாப் போச்சு..

பதினாலு வயசாகுற என் அக்கா பையன்கிட்டே பேசும் போது
iPod , camera ,cellphone, PS2 games டாபிக்னா நல்லா பேசிட்டுருப்பான்..படிப்பு விஷயமா யாராச்சும் கொஞ்சம் ஆரம்பிச்சாப் போதும்..

'மொக்கையப் போட கிளம்பிட்டாங்கையா' ன்னுட்டு அந்த இடத்தையே காலி பண்ணிட்டு 'எஸ்' ஆயிடுறான்..

kmr.krishnan said...

"யாருக்கு இருக்கோ இல்லையோ நம் இருவருக்கும் அவரின்
ஆசிகள் என்றும் உண்டு."//

ஆசியெல்லாம் துறவிகள் தான் கொடுக்க வேண்டும்.நான் உங்க‌ள் இருவருக்காகவும், வகுப்பறையில் வந்து என்னுடன் அறிமுகம் ஆன, ஆகாத எல்லோருக்காகவும் என் பிரார்த்தனையில் வேண்டிக் கொள்கிறேன்.

"லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து!"(உலக மக்கள் அனைவரும் சுகமாக இருப்பார்களாக!)

"ஸ்ர்வே ஜனா ஸுகினோ பவந்து!"(அனைத்து மக்களும் சுகத்தை அடையட்டும்)
"வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!"

kmr.krishnan said...

"நான் மூணாவது மனுஷன்."

Me: objection, your honour!

Judge(Vaaththiyaar):Objection sustained!

minorwall said...

///G.Nandagopal said...
உள்குத்து..? \\\\
கவுண்டர்கள் அதிகம் உள்ள ஊர்..கோயமுத்தூர்..

ஆங்கிலத்துக் 'கவுன்ட்டர்' என்கிற ரீதியிலும் டபுள் மீனிங்குலே அட்டென்ட் பண்ணிப் பார்த்தேன்..

இது மட்டும்தான் உள்குத்து..வேறொண்ணுமில்லை..

G.Nandagopal said...

ஆசியெல்லாம் துறவிகள் தான் கொடுக்க வேண்டும்////////

மனிதன் ஒய்வு பெற்றபிறகு தனெக்கென வாழ்வதில்லை.
அடிப்படைத் தேவைகளைவிட வேறெதையும் அவர்கள் விரும்புவதுமில்லை
துறவிகளோ எப்போதுமே அப்பிடி இருப்பவர்கள்.
தனெக்கென வாழாதவர்கள் யாராயிருந்தாலும்
அவர்கள் தரும் ஆசிகள் என்றும் சக்தி வாய்ந்தவைகளே
நந்தகோபால்

G.Nandagopal said...

Me: objection, your honour!

Judge(Vaaththiyaar):Objection sustained!/////////

உங்கள் அன்புக்கு மிகுந்த நன்றிகள்

kmr.krishnan said...

//"பதினாலு வயசாகுற என் அக்கா பையன்கிட்டே பேசும் போது
iPod , camera ,cellphone, PS2 games டாபிக்னா நல்லா பேசிட்டுருப்பான்..படிப்பு விஷயமா யாராச்சும் கொஞ்சம் ஆரம்பிச்சாப் போதும்..'மொக்கையப் போட கிளம்பிட்டாங்கையா' ன்னுட்டு அந்த இடத்தையே காலி பண்ணிட்டு 'எஸ்' ஆயிடுறான்.."//

ஆமாம் அப்படி ஒரு போக்கு உருவாகி வருகிறது.அமெரிக்கப் பள்ளி மாணவர்களைப் போலவே நமது மாண‌வர்களும் படிப்பில் கவனக்குறைவாகவும்,
பொழுதுபோக்கில் அதிக ஈடுபாட்டுடனும் வளர்ந்து வருகிறார்கள்.அமெரிக்கா,தன் தேவைகளுக்கு நன்கு க‌ற்ற‌ ஆசியா இளைஞர்களைப் பயன் படுத்திக்கொண்டது.
நம் மாணவர்கள் படிக்காவிடில் இந்தியா எந்த நாட்டு இளைஞர்களை வரவழைக்கும் நிலை உருவாகுமோ?

G.Nandagopal said...

ஆங்கிலத்துக் 'கவுன்ட்டர்' என்கிற ரீதியிலும் டபுள் மீனிங்குலே அட்டென்ட் பண்ணிப் பார்த்தேன்..

மைனர் சார்
எனக்கும் புரிந்தது. பிள்ளைப் பிராயத்திலிருந்து நான் வசித்த
கொங்கு மாநகரில் கவுண்டர்கள் அதிகம் என்று. KMRK சார் விவகாரம்
என்பதால் சற்றே ஜாக்கிரதையாக பேச வேண்டும். அவருக்கு மனகஷ்டத்தை
கொடுக்கும் எந்த விசயத்திலும் எனக்கு சற்றும் உடன்பாடில்லை.
நந்தகோபால்

minorwall said...

///// kmr.krishnan said...

என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள் மைனர்வாள்!எனக்கும் 12ல் செவ்வேள்!
உறவுகளும் நட்புக்களும் எந்த ஒரு காரணமும் இல்லாமல்,என்னிடமிருந்து
சொல்லிக் கொள்ளாமல் விலகிக் கொள்வார்கள்.\\\\\\\\\\

அனுபவஸ்தரின் வாக்கும் ஒத்து வருவதால் சமீபத்தில் புகுந்த ஆராய்ச்சியாளன் எனக்கு இது 'பூஸ்ட்' ஆகிப் போகிறது..

kmr.krishnan said...

கிருபானந்த வாரியார் சுவாமிகள் அப்பர் சுவாமிகளைப்பற்றிச் சொல்லும்போது
"அவர் அப்பர்(upper) நாமெல்லாம் லோயர்(lower)" என்பார். அதுபோலவா நீங்க‌ள் சொன்ன கவுன்டர்,(Counter, Gounder) மைனர்வாள்!?

Anyway, that is a sensitive matter. Let us not elaborate.

kmr.krishnan said...

//"KMRK சார் விவகாரம் என்பதால் சற்றே ஜாக்கிரதையாக பேச வேண்டும். அவருக்கு மனகஷ்டத்தை கொடுக்கும் எந்த விசயத்திலும் எனக்கு சற்றும் உடன்பாடில்லை."//

அப்படியெல்லாம் கடிவாளம் போட்டுக் கொள்ள வேண்டாம்.மனக்கஷ்டம் எல்லாம் அடைய மாட்டேன்.மனதில் பட்டதைத் தெளிவாகவும்,
உறுதியுடனும் கூறலாம்.

வாதத்தை வரவேற்கிறேன். பிடிவாதம், விதண்டாவாதம் தவிர்த்தால் நலம் என்று கருதுகிறேன். ஒரு ஜோருக்காக, சுவைக்காக செய்யப்படுமானால் பின் இரண்டையும் கூட மெள‌னமாக,சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் பக்குவம் இப்போது வந்துவிட்டது.

Alasiam G said...

/////வாக்கினை நீ காப்பாற்ற வேண்டும்; ஆனால் பிறரும் அது போல வாக்கினைக் காப்பாற்றுவார்கள் என்று எதிர் பார்த்து ஏமாறவேண்டாம். பிற‌ருடன் நல்லுறவை நீ வளர்த்துக் கொண்டு அவர்களுக்கு நனமையைச் செய்.ஆனால் அவர்களிடம் அதனை எதிர் பார்க்க வேண்டாம்///////.

"..... நன்மையையும் அறிவும்

எத்திசைத் தேனினும், யாவரே காட்டினும்

மற்றவை தழுவி வாழ்வீ ராயின்

அச்சமொன் றில்லை........""தமிழ் சாதி" என்ற தலைப்பில், நமக்குக் கிடைத்துள்ள அரைகுறையான பாட்டொன்றில் மகாகவி மேற்கண்டவாறு கூறுகிறான்.


"தன்னைப் போல பிறரை என்னும் தன்மை வேண்டுமே
அந்தத் தன்மைவர உள்ளத்திலே கருணை வேண்டுமே" --- இது பிறரின் குறையை பொதுநலத்தோடு பொறுத்துப் போக எழுதிய அற்புத வரிகள்....

உலகில் தான் சரியாக நடந்து கொள்கிறேன், மற்றவர்களும் ஏன் அப்படி நடந்து கொள்ள முடியாது..... அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்கிறபோது தான் மறைமுக எதிரி உருவாகுகிறான்..... தந்தை மகனுக்கு கூறிய அத்தனையும் முத்தானாலும்.... மேலே கூறிய இந்த விஷயம் (எண் 7 .) தான் ஆழ்ந்த கருத்துக்களை தன்னகத்தே கொண்டு ஜொலிக்கிறது என்பேன்..... நல்லவர்களாக இருப்பவர்கள் பலபேருக்கு தேவையான ஒரு அற்புதக் கருத்து.......

தங்களின் மொழிபெயர்ப்பு பலரின் வழிபெயர்ப் பாக்கும் அதனால் அவர்களின் உறவுகளின் மன வலி பெயர்ப்பும் ஆகும் என்பது உறுதி.... நன்றி; நன்றி....

Uma said...

எல்லாமே வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்கள்தான்.

ஒவ்வொருவருடைய நடவடிக்கையும் ஒரு உள்ளர்த்தம்‍‍(மோடிவ்) உடையதுதான் என்பதை நீ எச்சரிக்கையுடன் உணர்ந்து இருக்க வேண்டும். ஒருவர் உன்னிடம் நன்றாக நடந்து கொள்கிறார் என்றால், அவர் உன்னை உண்மையாகவே //

ஆனா இந்தக்கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சில உறவுகள் / நட்புகள் இருக்கும் என்பது என் கருத்து.

Uma said...

ஆனால் ஒரு முறை கூட எனக்குப் பரிசு கிடைக்கவில்லை. இதில் இருந்து நான் அறிந்து கொண்டது என்னவென்றால்,பணக்கார‌ன் ஆவதற்கு சுலபமான வழியேதும் கிடையாது. //

இந்த காரணத்தினால்தான் நொந்து நூலாகி தத்துவார்த்தமா பையனுக்கு கடிதம் எழுதினாரோ? ஹி ஹி.

Uma said...

'நல்லார் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு எல்லார்க்கும் மலை' //

ஐயகோ!!!!!!!! என்னடா இது இந்த தமிழுக்கு வந்த சோதனை!!!!!!!!!!!

Uma said...

சின்ன செட்டை ரெப்ரெசென்ட் பண்ண வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்குங்குறதாலே அப்பிடி எழுதவேண்டியது கட்டாயமாப் போச்சு..//

அட அட அட!!!!!!!!

G.Nandagopal said...

மூவேந்தர்களையும் வம்புக்கு இழுப்பது

அவ்வளவு நல்லது இல்லேன்னு நினைக்கறேன்

அதுலே ஒருவர் சக்கரவர்த்தி கூட அப்பிடிங்கரத

மறந்துராதேள்

நந்தகோபால்

Uma said...

மூவேந்தர்களையும்//

எந்தெந்த நாட்டிற்கு?

kmr.krishnan said...

"ஆனா இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை"===உமா!

இது ஒரு மொழி பெயர்ப்பு மட்டுமே! தமிழுக்கு மட்டுமே நான் பொறுப்பு. கருத்துச் சொன்னவர் யாரென்று தெரியாது.எனவே உங்கள் கருத்துக்கு மறுப்போ, ஆதரவோ அளிக்க எனக்கு அருகதை கிடையாது. ஏனெனில் கருத்து என்னுடையது அல்லவே.!

kmr.krishnan said...

///''இந்த காரணத்தினால்தான் நொந்து நூலாகி தத்துவார்த்தமா பையனுக்கு கடிதம் எழுதினாரோ?///===உமா!

நான் லாட்ட‌ரி சீட்டு வாங்கியதும் இல்லை.எனக்கு மகன்களும் இல்லை.அதனால்
நொந்து நூலாக வேண்டிய அவசியம் இல்லை. மீண்டும் சொன்னால் இது வேறு யாரோ முகம் தெரியாதவரின் ஆங்கில ஆக்கம். நான் தமிழ் மொழிபெயர்ப்பு மட்டும் செய்தேன்.மொழி பெயர்ப்பு எனக்கு செய்ய வருகிறதா என்று பார்ப்பதற்கு மட்டுமே செய்தேன்.கருத்துக்கள் பற்றி எனக்கு தனிப்பட்ட விருப்பு, விமர்சனம் எதுவும் இல்லை.

kmr.krishnan said...

// Uma said...
'நல்லார் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு எல்லார்க்கும் மலை' //
ஐயகோ!!!!!!!! என்னடா இது இந்த தமிழுக்கு வந்த சோதனை!!!!!!!!!!//

"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" என்பது சரி. மழை என்பதில் எழுத்துப் பிழை வந்து விட்டது. புரிந்து விட்டது என்றால் எழுத்துப் பிழையை பெரிது படுத்த வேண்டாம்.என் ஆக்கத்திலும் நிறைய எழுத்துப் பிழைகள்.மீள் வாசிப்புச் செய்யாமல் அனுப்பியது தவறு என்று உணர்கிறேன்.

இந்த வாசகங்களை ஒரு நண்பர், மழை பெய்து கொண்டு இருந்த சமயம் இப்படிப் பயன் படுத்தினார்."யாரோ ந‌ல்லவர் தூக்கத்தில் உளறியிருப்பாரோ?
இப்படி அடை மழையாகப் பெய்கிறதே!"

kmr.krishnan said...

///Uma said...
சின்ன செட்டை ரெப்ரெசென்ட் பண்ண வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்குங்குறதாலே அப்பிடி எழுதவேண்டியது கட்டாயமாப் போச்சு..//
அட அட அட!!!!!!!///

என்ன தான் சொல்கிறீர்கள்? மைனர் சின்ன செட்டுக்காக‌ ஆஜர் ஆகக் கூடாதா?
நீங்கள் தான் அந்தப் பதவியை வகிக்க வேண்டுமா? உங்கள் நாற்காலியை அபகரித்துவிட்டாரா?

kmr.krishnan said...

//"மூவேந்தர்களையும்//
எந்தெந்த நாட்டிற்கு?==உமா"//

ஜப்பான், சிங்க‌ப்பூர், தமிழ்நாடு

hotcat said...

Very super!!! Great ideas in simple words....

Alasiam G said...

/////ஆனா இந்தக்கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சில உறவுகள் / நட்புகள் இருக்கும் என்பது என் கருத்து.//////
உண்மைதான் உமா. பெரும்பாலும் என்ற வார்த்தையை சேர்த்திருக்கலாம்....
தங்களின் அபிப்ராயம் எனக்கும் ஏற்புடையதே..... சில நேரங்களில் நம்மையும் மீறி அனிச்சையாக அல்லது எதோ ஒரு உந்து சக்தியாக அது நடந்து விடலாம்....
(ஆனால் இதையும் நாம் ஞாபகத்தில் கொள்ள தான் வேண்டும்.... பலரும் உதவுவது..... சுவர்க்கம் புக வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அதைத் தான் மதங்கள் சொல்லித் தந்துள்ளன... அது இந்த கருத்து (சுவர்க்கம் நரகம், இதில் ஸ்ரீரமணர் கூறும் கருத்தை நான் ஏற்கிறேன் ) சிலரின் பார்வையில் கற்பனை என்று இருந்தாலும் கூட கருத்தின் மறைமுக அர்த்தம் மனித நேயத்தை வளர்கிறது.... ஆக விதியால் தன்னையும் அறியாமல் நடப்பதைத் தவிர பெரும்பாலும் பணம், பொருள், புகழ், மோட்சம் ஏதாவது ஒன்று இருக்கத்தான் செய்யும்..... இது அவசியமும் கூட என்றும் தோன்றுகிறது....)

Uma said...

இது ஒரு மொழி பெயர்ப்பு மட்டுமே! தமிழுக்கு மட்டுமே நான் பொறுப்பு. கருத்துச் சொன்னவர் யாரென்று தெரியாது. நான் லாட்ட‌ரி சீட்டு வாங்கியதும் இல்லை.எனக்கு மகன்களும் இல்லை//

நீங்கள் மொழிபெயர்ப்பு மட்டும்தான் செய்தீர்கள் என்று நன்றாகத் தெரியும். என் கமெண்ட் ஆக்கத்தில் உள்ள கருத்துக்களைப் பற்றி மட்டுமே. உங்களுக்கு 3 பெண்கள் என்று சொன்னதும் நினைவில் உள்ளது.

Uma said...

யாரோ ந‌ல்லவர் தூக்கத்தில் உளறியிருப்பாரோ?
இப்படி அடை மழையாகப் பெய்கிறதே!"//

ஹா ஹா

Uma said...

நீங்கள் தான் அந்தப் பதவியை வகிக்க வேண்டுமா? உங்கள் நாற்காலியை அபகரித்துவிட்டாரா//

அது அவரோட பொறுப்புணர்ச்சியைப் பார்த்து புல்லரித்துப் போய்ப் போட்ட கமெண்ட். மற்றபடி நாற்காலி பயமா? எனக்கா?

Uma said...

ஜப்பான், சிங்க‌ப்பூர், தமிழ்நாடு//

அங்கெல்லாம் மாதம் மும்மாரி மழை பெய்கிறதா வேந்தர்களே?

Uma said...

ஆக விதியால் தன்னையும் அறியாமல் நடப்பதைத் தவிர பெரும்பாலும் பணம், பொருள், புகழ், மோட்சம் ஏதாவது ஒன்று இருக்கத்தான் செய்யும்..//

அடுத்தவர் நலனில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அக்கறை எடுத்துக் கொள்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கையில் குறைவு என்று வேண்டுமானால் சொல்லலாம்.

kmr.krishnan said...

///"அங்கெல்லாம் மாதம் மும்மாரி மழை பெய்கிறதா வேந்தர்களே?"///

ஆம்!பேரரசியாரே! இம்மாதம் முழுவதும் மும்மாரி மட்டுமல்ல முப்பது நாளும் மாரிதான்!டெல்லியில் ராஜ‌ தர்பார் நன்றாக நடக்கிற‌தா? கப்பம் தங்க‌மாக அனுப்பவா? காகித நோட்டே போதுமா! பேரர‌சர் நலமா? வழக்கம் போல் உங்கள் பேச்சைக் கேட்டு நடக்கிறாரா? இல்லையென்றால் சொல்லுங்கள்.நாங்கள் அவருடன் பேசிப் புரிய வைக்கிறோம்.

kmr.krishnan said...

//"அடுத்தவர் நலனில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அக்கறை எடுத்துக் கொள்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள்."//


நமது வாத்தியார் ஐயாவைப் போல!

"நாச்சியார் கோவில்,நாச்சியார் கோவில் டோய்!"என்று டெல்லியில் இருந்து ஒரு குரல் கேட்கிறது!

G.Nandagopal said...

பேரர‌சர் நலமா? ////////

வகுப்பறை டெல்லி பிரதிநிதி நடத்துகிற சர்வாதிகார தர்பாரில் பேரரசர் எப்படி நலமாக இருக்க முடியும் .

G.Nandagopal said...

உங்களுக்கு 3 பெண்கள் என்று சொன்னதும் நினைவில் உள்ளது.////


இது எதோ மிரட்டுகிற தொனியாக தெரிகிறதே

G.Nandagopal said...

இப்படி அடை மழையாகப் பெய்கிறதே!"/////////

டெல்லி பிரதிநிதி பதவி வந்ததிலிருந்தே அவங்க காட்டுலே
ஒரே அடை மழைதான் போலிருக்கு.
நான் சாப்பிடற அடையை சொல்லலீங்கோ.
இனி அதுக்குவேற எதையாவது சொல்வாங்க.
இப்படியெல்லாம் பேசறக்கு 'நெதம் உக்காந்து யோசிப்பாங்களோ'
ரொம்ப தூரத்திலே இருக்கற நம்மளுக்கே இப்படி கண்ண கட்டுதே...............

Uma said...

கிருஷ்ணன் சார், எப்படி இப்படி கலக்குகிறீர்கள்?

கப்பம் தங்க‌மாக அனுப்பவா? //

அப்படியென்றால் இந்த வைரம் / பிளாட்டினம் (இதுக்கு தமிழ்ல என்னன்னு யாராவது சொல்லுங்கப்பா) இதெல்லாம் அனுப்ப மாட்டீர்களா?

பேரர‌சர் நலமா? வழக்கம் போல் உங்கள் பேச்சைக் கேட்டு நடக்கிறாரா? //

ம்ம்ம் வழக்கம் போல் என் பேச்சைக் கேட்டு விட்டு பிறகு தன் இஷ்டப்படி செய்வார்.

Uma said...

நாச்சியார் கோவில்,நாச்சியார் கோவில் டோய்!"என்று டெல்லியில் இருந்து ஒரு குரல் கேட்கிறது!//

இது என்ன? புரியலையே? நாச்சியார் கோவில்னா கல் கருடன் தெரியும்? கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்.

Uma said...

வகுப்பறை டெல்லி பிரதிநிதி நடத்துகிற சர்வாதிகார தர்பாரில்//

யாரங்கே? இந்த நந்தகோபாலைப் பிடித்து மன்னிப்பு கேட்கும் வரையில் பாதாளச் சிறையில் அடையுங்கள்.

Uma said...

காட்டுலே ஒரே அடை மழைதான்//

மழை - ம்ம் இப்படித்தான் எழுத்துப் பிழை இல்லாம சரியா எழுதணும்.

Alasiam G said...

////பிளாட்டினம் (இதுக்கு தமிழ்ல என்னன்னு யாராவது சொல்லுங்கப்பா) /////
அது வெள்ளைத் தங்கம் என்றே கொள்வோம்...

kmr.krishnan said...

///"இது என்ன? புரியலையே? நாச்சியார் கோவில்னா கல் கருடன் தெரியும்? கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்"///

இது கூடத் தெரியாமல் என்ன தஞ்சாவூரில் மேலவேதி, கொங்கணேஸ்வ‌ர வித்யாசாலா, அய்யன் குளம் என்று "பீலா உட்டுண்டு" இருக்கேள்?

கும்பகோணத்துப் பித்தளை/வெங்கல‌ப் பாத்திரங்கள் உற்பத்திக் கேந்திரம் நாச்சியார் கோவில்.முக்கியமாக நாம சங்கீர்த்தனத்துக்குப் பயன்படும் ஜாலர், நாதஸ்வரக் கலைக்குத் தேவையான கைத்தாளம் ஆகியவை நாச்சியார் கோவிலில்தான் உற்பத்தி ஆகிறது.

"ஆமாம் சாமி'களுக்குத் தஞ்சைத் தரணி வைக்கும் பட்டப் பெயர் 'நாச்சியார் கோவில்'."அவனா!? ஜால்ரான்னா ஜால்ரா சரியான நாச்சியார் கோவில் ஜால்ரான்னா!"என்று தஞ்சை வாசிகள் திண்ணையில் அமர்ந்து கொண்டு வேறு யாரைப் பற்றியாவது அவர்கள் இல்லாதபோது 'நக்கல்' அடிப்பது வழக்கம்.
உங்களுடைய‌ பல பின்னூட்டங்களில் உங்களைச் 'சரியான தஞ்சாவூர்'என்று காண்பித்துக் கொள்வீர்கள்.'நாச்சியார் கோவில்' தெரியவில்லை என்று சொன்னவுடன் ஆச்சரியமாகப் போய்விட்டது.

அவ்விடத்து மாமா தங்க‌ளுக்கு 'நாச்சியார் கோவில்' தானே!

kmr.krishnan said...

///"யாரங்கே? இந்த நந்தகோபாலைப் பிடித்து மன்னிப்பு கேட்கும் வரையில் பாதாளச் சிறையில் அடையுங்கள்///

கப்பத்தையும் தங்கம், வைரம், பிளாட்டினம் என்று வாங்கிக் கொண்டு கப்பம் கட்ட வந்த வேந்தர்களை சிறையிலும் அடைக்க‌ உத்தரவு போடும் அள‌வுக்கு அராஜகமா? பொறுத்தது போதும் பொங்கி எழு! டெல்லிக்கு எதிராக கூட்டணி அமைப்போம்.செங்கோட்டையைக் கைப்பற்றுவோம்.ஜெய்!ஜக்கம்மா!வீரமாகாளி!
முப்படை கிளம்பட்டும்.!இறுதி வெற்றி நமதே!

G.Nandagopal said...

தஞ்சாவூரில் பிறந்துவிட்டு அடிப்படை விஷயங்களைக் கூட தெரிந்துகொள்ளாமல்

டெல்ஹியில் இருந்து தாங்கள் இனிமேலும் 'பீலா' விடுவதை நிறுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறோம் .

மீறும்பட்சத்தில் தமிழக கெசட் ஆவணங்களிருந்து தங்களது அனைத்து விவரங்களையும் நீக்கி

தமிழக குடியுரிமையை ரத்து செய்து விடப்படும் என்று பேரரசர் சார்பாக எச்சரிக்கறோம்

Uma said...

கிருஷ்ணன் சார், தங்கள் விளக்கத்துக்கு நன்றி.

அவ்விடத்து மாமா தங்க‌ளுக்கு 'நாச்சியார் கோவில்' தானே!//
உங்களுக்குத்தான் அவரோட ஜாதகம் தெரியுமே?

Uma said...

டெல்லிக்கு எதிராக கூட்டணி அமைப்போம்.செங்கோட்டையைக் கைப்பற்றுவோம்//

எனக்கு எதிராக கூட்டணியா? ஒரு கை பார்த்து விடுகிறேன்.

(ஆமா நீங்க என் ஆத்துக்காரர் பற்றி கேட்டதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லையே? ஒருவேளை அவரையும் உங்க கூட்டணில சேர்த்துக்கற ஐடியா இருக்கோ)

தேடல் said...

// வாக்கினை நீ காப்பாற்ற வேண்டும்; ஆனால் பிறரும் அது போல வாக்கினைக் காப்பாற்றுவார்கள் என்று எதிர் பார்த்து ஏமாறவேண்டாம் //

Sema othai vilunthathu kadaisi callil. 10 adi thalli poi vilunthen.

Naan balance illaamal avasara pattu pesa arambithathu, phonil balance illathathaal cut aayuduchi.

idhuvarai outgoing than innum incoming ethuvaum varalainu solli service temp. disconnect pannittanga. Enakkum recharge panna dabbu yaarum tharalai.

Veetil ellorukkum kadasiyaa poranthuttu ethukku eppave avasarapadanumnu thoninathu.

oru nanbarodu phonil pesumbothu ethesaiyaaga "acho appa" endru sollivitten, appothe avar kannal kanbathuvum, kathaal ketpathuvum poinnu sollivittar.

ennoda poiyaakooda antha kadavull pesa virumbavillainu andre purinthathu. manasu ketkiratha?

enthaoru manonvaliyil oruvan thaan nandri sollum kadavulaium thittuvaanu appappa siru punmuruvaludan sinthippathundu. kaaranam KMRK siroda intha pointu thaan.
Mothathil pathivu superb sir! :)

தேடல் said...

//யாருக்கு இருக்கோ இல்லையோ நம் இருவருக்கும் அவரின்
ஆசிகள் என்றும் உண்டு.
நந்தகோபால்
//

Sir..., unga maappukku santhosathulla mabbu earidapoguthu :)

//தமிழுக்கு மட்டுமே நான் பொறுப்பு.//

Ayya vaguppariyil, kamal sir song mathri ellarum oru poruppu eduthukittanga pola irukku :)