மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

17.12.10

நினைத்தது நடக்குமா?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நினைத்தது நடக்குமா?

நடக்கும்.

எப்போது நடக்கும்?

வைகுந்த வாசனை மனம் உருகிப் பிரார்த்தனை செய்தால் நடக்கும்!

எப்படிச் சொல்கிறீர்கள்?

பாடல் ஒன்றைக் கொடுத்திருக்கிறேன். படித்துப் பாருங்கள் தெரியும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா

(திருப்பதி)

அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்
அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்
என் மனம் உருகிடவே பாடி வந்தேன்
உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்

(திருப்பதி)

நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா
மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா
உரைத்தது கீதை என்ற தத்துவமே
அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே

(திருப்பதி)

பாடல் ஆக்கம்: கவியரசர் கண்ணதாசன்.
++++++++++++++++++++++++++++++++++++++++
நீங்கள் நினைத்ததை நடத்தி வைப்பார் அவர்!

எல்லோருக்குமா?

மனம் உருக தன்னைப் பிரார்த்திப்பவர்களுக்கு அவர் நடத்தி வைப்பார்.

இன்று வைகுண்ட ஏகாதசி. அவருக்கு உகந்த நாள். இந்த நந்நாளில் அவரைப் பிரார்த்திப்போம்!

வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு தெரிய வேண்டுமா? இந்தத் தளத்திற்குச் சென்று பாருங்கள்.அன்புடன்
வாத்தியார்.

வாழ்க வளமுடன்!

3 comments:

kmr.krishnan said...

வைகுண்ட ஏகாதசிப் பதிவில் கவியரசரின் பாடலின் முன்னோடிப்பாடல்கள் இதோ:
பூதத்தாழ்வார் எழுதியது
‍======================
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக‌
இன்புருகு சிந்தை இடுதிரியா‍=ந‌ன்புருகி
ஞானச் சுடர்விளக்குஏற்றினேன் நாரணர்க்கு ஞானத் தமிழ் புரிந்த நான்

(தகளி=அகல்விளக்கு)


பொய்கை ஆழ்வார் கூறியது:
===========================
வையம் தகளியா வார் கடலே நெய்யாக‌
வெய்யக் கதிரோன் விள‌க்காக‌ சுட‌ர் ஆழியான்
அடிக்கே சூட்டினேன் சொன் மா‌லை
இட‌ர்ஆழி நீங்குக‌வே என்று

kannan said...

வணக்கம் ஐயா!

நாராயணா என்னும் பாராயணம்
நலம் யாவும் தருகின்ற தேவார்மிதம்
தேவார்மிதம்!
கோவிந்தணாம சங்கீர்த்தனம் குடிகொண்டார் நெஞ்சம் தான்
திருவேங்கடம்! திருவேங்கடம்......

படி ஏறி வருவோர்க்கு பயம் இல்லையே
பாவங்கள் தீர்க்கத்தான் வழி இல்லையே! வேறு வழி இல்லையே

ஐயா!
இப்பாடல் இடம் பெற்ற படம் அல்லது முழு பாடலை கிடைக்கப்பெறும் தகவலை தர முடியுமா ?

arthanari said...

மனமுருகி தொழுதால் எழுமலையான் வேண்டடூதலை ஏற்பான்.