மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

18.12.10

ஏன் கடவுளுக்கு அது தெரியவில்லை?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏன் கடவுளுக்கு அது தெரியவில்லை?

இன்றைய இளைஞர் மலரை, நமது வகுப்பறை மாணவி ஒருவரின் ஆக்கம் அலங்கரிக்கிறது. படித்து மகிழுங்கள். பிடித்திருந்தால், அவரை ஊக்கப் படுத்தும் முகமாக ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்
---------------------------------------------------------------------------------------------------------------------
ஏன் கடவுளுக்கு அது தெரியவில்லை?

இறைவன் இல்லை என்பது சிலபேர்களின் வாதம்: சில பேர் இறைவன்  இருக்கிறான் என்பர்கள்

ஒரு வழிப்போக்கன் ரொம்ப தூரம் நடைப்பயணத்தை மேற்கொண்டதன் காரணமாக களைப்படைந்து ஒரு  ஆலமரத்தின் அடியில் அமர்ந்தான். அப்பொழுது அவனுடைய எண்ணங்கள் இவ்வாறாகவிருந்தது.

“ச்சே, என்ன கடவுள் இவர். இவ்வளவு பெரிய ஆலமரத்திற்கு இவ்வளவு சிறிய அளவில் பழமா? அவ்வளவு  சிறிய பூசனிக்கொடிக்கு அத்தனை பெரிய காயா?... ச்சே ரொமப வெட்கமாயிருக்கிறது கடவுளின் படைப்பை  நினைத்து!”

கடவுள் இருக்கிறார் என்று சொன்னதற்கு, “ச்சீச்சீ இறைவனில்லை இருந்திருந்தால் இப்படிச் செய்வாரா?" என்று கூறினான். தூக்கம் வரவே தன் துண்டை மரத்தடியில் விரித்து  தூங்கிவிட்டான்.

திடீரென்று அந்த ஆலமரத்தின் பழம் ஒன்று அவனுடைய நெற்றியில் வந்து விழுந்தது. திடுக்கிட்டுக் கண்விழித்துப் பார்த்த அவன், “அப்பா நான் தப்பித்தேன் இந்த மரத்திற்குக் கடவுள் பூசணிப்பழம் போன்ற  பழத்தை கொடுத்திருந்தால் நான் இப்பொழுது செத்து அல்லவா போயிருப்பேன். நல்ல காலம் பழம் மிகச்சிறியது எனக்கு  ஒன்றும் ஏற்படவில்லை இறைவன் இருக்கிறார்” என்று முனுமுனுத்துவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தான். 

யார் யாருக்கு எதைக்கொடுப்பது. எதை எதை எங்கே வைப்ப‌து  என்ப‌து இறைவ‌னுக்கு தெரியும் புலியும்  பூனையும் ஒரே மாதிரி முக‌ச்சாய‌ல். தெருவுக்கு தெருவு பூனைமாத‌ரி புலிருந்தால், என்ன ஆகும்?

ம‌லைமேல் விளையும் நார்த்த‌ங்காய்க்கும் க‌ட‌லில் விளையும் உப்பிற்கும் முடிச்சுப் போடுப‌வ‌ன் இறைவ‌ன்.

ம‌லையின் மேலிருந்து அருவி தன்னுடைய ஓட்டத்தைத் துவங்கினாலும், இறுதியில் அது க‌ட‌லில்தான் சென்று  சேரும்.

என‌வே ந‌மக்கு  எது கிடைத்ததோ அதை எற்றுக்கொள்வோம்  திரும‌ண‌ம், வேலை, சொத்து, சுகம் என்று  எல்லாமுமே இறைவ‌ன் தருவ‌தாகும். அவைகள் ந‌ல்லதாக‌வே இருக்கும். நமக்கு ஏற்றதாகவே இருக்கும். ஏற்றுக்கொள்வோம்.

இப்போது சொல்லுங்கள். கடவுளுக்குத் தெரியாதது எதாவது உண்டா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++
சிறுத்தையும் நாயும் உணர்த்தும் தத்துவங்கள்:

மனம் பல பொருட்களின் மீது ஆசைப்படும். அந்த ஆசையை நிறைவேற்ற நாம் முயற்சிக்குபோது ஆசைப் பட்ட  பொருள் கிடைக்கும். கூடவே துன்பமும் வந்து சேரும் அதைத்தான் புத்தர் பெருமான் துன்பத்திற்கு காரணம்
ஆசையே என்று கூறினார்.

கிராமத்தில் வயல்வெளி பகுதியில் தரைக்கிணறு ஒன்றிருந்தது. அதற்குள் நாயும் சிறுத்தையும் ஒரு சேர ஒன்றை  மற்றொன்று துரத்தி வரும்போது விழுந்துவிட்டன.  அந்த நாயைச் சிறுத்தை அடித்துச் சாப்பிடவில்லை. சிறுத்தை  நாயை தூரத்திக் கொண்டு வந்தது. நாய் உயிரை காப்பாற்றி கொள்ளும் பொருட்டு ஒடிவரும் பொழுது அந்த  கிணற்றுக்குள்ளே விழுந்துவிட்டது  தொடர்ந்து வந்த அந்த சிறுத்தையும் அந்த கிணற்றுக்குள்ளே விழுந்துவிட்டது

அந்த நாயைச் சிறுத்தை அடித்துச் சாப்பிடாமல், கிணற்றிலிருந்து தப்பிக்கும் வழியை மட்டும் தேடியது.  தன்னுடைய பசியை மறந்துவிட்டது. நாயோ அந்த சிறுத்தை நம்மைக் கொன்றுவிடும் என்று அஞ்சியபடி இருந்தது.

ஊர்மக்கள் ஓன்று கூடி சிறுத்தையையும் நாயையும் காப்பாற்றினார்கள்.

ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் மனிதனும், அப்படித்தான் இருப்பான். அந்த ஆபத்தில் இருந்து தான் தப்பித்தால்  போதும் எனும் சிந்தனை மட்டுமே அவனிடம் மேலோங்கி இருக்கும்.

அதுதான் வாழ்க்கை.
=============================================
ஆக்கம்: பெயரைக் குறிப்பிடாத, நமது வகுப்பறை மாணவிகளில் ஒருவர்! அவருக்கு வாழ்த்துக்கள். அத்துடன் ஒரு வேண்டுகோள்:  “தொடர்ந்து  எழுதுங்கள். அடுத்த முறை உங்களின் பெயரைக் குறிப்பிடுங்கள்!”

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

24 comments:

Ganesan said...

Good. As said by Vathiyar, we expect more articles.

kmr.krishnan said...

மிகப் பெரிய தத்துவங்க‌ளை மிக எளிய சொற்களில் சொல்லிய சகோதரிக்குப் பாராட்டுக்கள்.அடுக்கு மொழி, அலங்கார சொற்றொடர் எல்லாம் பயிற்சி எடுத்தால் வந்துவிடும்.சுருக்கமாகவும், எளிமையாகவும், இயல்பாகவும் சொல்ல வந்ததைச் சொல்வது தான் கடினம்.மிகப் பெரிய அள‌வில் இன்று பின் தொடர்பவர்கள் இருக்கும் மத நிறுவனர்கள் அனைவரும் மக்கள் மொழியிலேயே பேசினார்கள்.
புத்தர் பாலி என்ற ம‌க்கள் மொழியில் பேசினார்.சகோத்ரியின் எளிய நடையும், ஆழ்ந்த கருத்துக்களும் நன்றாக உள்ளன.

பூசணிக்காய் உதாரணம் வாழ்க்கையில் பலமுறை அனுபவித்துள்ளேன். சுமார் 18 வருடங்கள் ஒரு குறிப்பிட்ட பேருந்தில் என் மனைவியார் காலையில் பணிக்குச் செல்வார்கள்.ஒரு நாள் அப் பேருந்து விபத்துக்கு உள்ளானது. பலபேர் மாண்டனர். பல பேருக்குப் பெரிய அளவில் காயம்.இத்தனையும் என் மனைவி இறங்கி விட்ட பின்னர் நடந்தது. இறைவனுக்கு நன்றி சொன்னேன்.ஆனால் மனதில் ஒரு குறு குறுப்பு. எனக்கு நனமை செய்த கடவுள் வேறு பலருக்கு ஏன் தீமை செய்தார்? எவ்வளவு படித்தாலும்,நடைமுறையில் சந்தேகம் வந்து விடுகிறது

Thanjavooraan said...

பேராசை பெரு நஷ்டம் என்றும் விரலுக்கேற்ற வீக்கம் என்றும் இதைத்தான் நம்மவர்கள் சொல்லி வைத்தார்கள். இறைவன் கருணை இருக்குமானால் நமக்கு என்னவெல்லாம் கிடைக்க வேண்டுமோ அத்தனையும் கிடைத்தே தீரும். நம்மாலேயே நம்ப முடியாது இவையெல்லாம் எப்படி முடிந்தது என்று. அதுதான் கடவுள் செயல் என்பது. வாழ்க்கையை ஒரு சக்கரம் என்பார்கள். உச்சத்தில் உட்கார்ந்திருக்கும் ஒருவன் எந்த நேரத்திலும் கீழே விழலாம்; கீழ்மட்டத்தில் வருந்திக் கிடப்பவன் நேர்மையாக வாழ்ந்து, உழைத்து இறைவனிடம் பக்தி செலுத்தினால் நிச்சயம் வாழ்க்கையில் உயர்வான். இது முற்றிலும் சத்தியம். "நான்" எனும் அகந்தை, உலகத்தில் என்னால் சாதிக்கமுடியாதது என்று எதுவும் இல்லை என்ற ஆணவம் நிச்சயம் நம்மை வீழ்த்திவிடும். இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் போதும்; வேறென்ன வேண்டும். இன்றைய உங்கள் சிந்தனை மிகவும் உயர்ந்தது. வாழ்க உங்கள் பணி.

Uma said...

இரண்டுமே நன்றாக இருந்தன.

“தொடர்ந்து எழுதுங்கள். அடுத்த முறை உங்களின் பெயரைக் குறிப்பிடுங்கள்//

இதை நானும் வழிமொழிகிறேன்.

kannan said...

உள்ளேன் ஐயா!

மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளாம் ............

என்று பாசுரம் தொடங்கி மார்கழி மாதத்தில் எம்பெருமான்

"கார்முகில் வண்ணன் கண்ணனின்!"

மீது கொண்ட கொண்ட காதலால் கண்ணனை அடைய வேண்டி நோன்பு
நோற்ற

"கோதை நாச்சியார் எம்பெருமாட்டி ஆண்டாள் தாயார்!"

விரதம் இருந்தது போல நல்ல வரங்கள் அமைய,
பாவை நோன்பு இருக்கும் சகல மாணவ மாணவியருக்காக யாமும் வேண்டுகின்றோம்

kannan said...

ஐயா!


எம்பெருமாட்டி சூடி கொடுத்த சுடர்கொடியாள் பெரியாழ்வாரின் தவப்புதல்வி கோதைநாட்சியார்

"ஸ்ரீ ஆண்டாள்!"

பாவை நோன்பு இருந்த புனித மாதம் மான மார்கழி மாதத்தில் அற்புதமான படைப்பை தந்த சக தோழிக்கு மனம் மார்ந்த பாராட்டுகள்.

பாரதத்தில் கண்ணனின் வாக்கு மாதம்களில் நான் "மார்கழி!" என்பது.

perumal sundaram said...

migavum unmaiyaana unmai !
manam thelivutren !
mikka nandri !
vaazhththukkal .
good morning to all students and sir.

perumal sundaram said...

erukka vhendiya edaththil erunthaal eallam nanraaga erukkum enbaargal.
vaaththiyaaroda ezhuththil pazhagi eallaarum nallaa sinthikka aramichitaanga !

ARASU said...

ஆசிரியருக்கு வணக்கம்.
அய்யா,
பூசணிக்காய் கதையும், நாய் சிறுத்தை கதையும் சிறுவர்களும் ரசித்துப்படிக்கும்
வகையில் உள்ளதை கவனித்தால் இதை ஆக்கப்படுத்தியவர் ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியையாக‌ இருக்கும் என்று தோன்றுகிறது,ஆக்கங்களைத்
தொடர வாழ்த்துகிறென்.
நல்வாழ்த்துகளுடன், அரசு.

G.Nandagopal said...

உண்மையிலேயே இது மிகவும் அருமையான ஆக்கம்
ஆம் நமக்கு எது நல்லதென்று நம்மை விட நம்மை படைத்தவனுக்குத் தெரியும்.
ஆனால் எதோ ஒரு மெல்லிய சோகத்தின் கீதம் ஒன்று இந்த கதையிலோ அல்லது
இந்த கதையை எழுதியவரிடம் ஒலிக்கரமாதிரி எனக்குப் படுகிறது
ஒருவேளை பிரமையாககூட இருக்கலாம்
இப்படிப்பட்ட ஆக்கத்தைப் புனைந்தவர் பெயர் வெளியிடாதது கூட அதற்குக்
காரணமாக இருக்கலாம்
தொடர்ந்து எழுதுங்கள்
உங்களுக்கு ஆண்டவன் அருள் பூரணமாக கிட்ட எனது
வலிமையான பிரார்த்தனைகள் நிச்சயம் உண்டு.
நந்தகோபால்

sundari said...

//Ganesan said...
Good. As said by Vathiyar, we expect more articles.

ச‌ரி ச்கோத‌ரா தொட‌ந்து எழுதுவேன்//

sundari said...

//kmr.krishnan said...
மிகப் பெரிய தத்துவங்க‌ளை மிக எளிய சொற்களில் சொல்லிய சகோதரிக்குப் பாராட்டுக்கள்.அடுக்கு மொழி, அலங்கார சொற்றொடர் எல்லாம் பயிற்சி எடுத்தால் வந்துவிடும்.சுருக்கமாகவும், எளிமையாகவும், இயல்பாகவும் சொல்ல வந்ததைச் சொல்வது தான் கடினம்.மிகப் பெரிய அள‌வில் இன்று பின் தொடர்பவர்கள் இருக்கும் மத நிறுவனர்கள் அனைவரும் மக்கள் மொழியிலேயே பேசினார்கள்.
புத்தர் பாலி என்ற ம‌க்கள் மொழியில் பேசினார்.சகோத்ரியின் எளிய நடையும், ஆழ்ந்த கருத்துக்களும் நன்றாக உள்ளன

தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ச்கோதர நமப் ஆன்ந்து ச்கோதரக்கு உடமயு சரியல்லை பாவம் உங்களுக்கு தெரியும்மா? நீங்க saitha தருமமதான் அண்ணி இறங்கிவிட்டப்பிறகு நடந்தது//

sundari said...

//Uma said...
இரண்டுமே நன்றாக இருந்தன.

“தொடர்ந்து எழுதுங்கள். அடுத்த முறை உங்களின் பெயரைக் குறிப்பிடுங்கள்//

இதை நானும் வழிமொழிகிறேன். //
த‌ங்க‌ளுக்கு என் பெய‌ர் தெரியும். பின்னூட்ட‌த்திற்க்கு ந‌ன்றி.

sundari said...

)//kannan said...
ஐயா!


எம்பெருமாட்டி சூடி கொடுத்த சுடர்கொடியாள் பெரியாழ்வாரின் தவப்புதல்வி கோதைநாட்சியார்

"ஸ்ரீ ஆண்டாள்!"

பாவை நோன்பு இருந்த புனித மாதம் மான மார்கழி மாதத்தில் அற்புதமான படைப்பை தந்த சக தோழிக்கு மனம் மார்ந்த பாராட்டுகள்.

பாரதத்தில் கண்ணனின் வாக்கு மாதம்களில் நான் "மார்கழி!" என்பது.)//

தங்களின் பாராட்டுக்கு ந‌ன்றி ச்கோத‌ரா.

sundari said...

)// perumal sundaram said...
migavum unmaiyaana unmai !
manam thelivutren !
mikka nandri !
vaazhththukkal .
good morning to all students and sir.)//

தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி. ச்கோதர துன்பத்தை சந்திக்க நேர்ந்தால் ஈயம் போல இள்கி விடா கூடாது எக்கு போல இருக்கணும்

sundari said...

ARASU said...
ஆசிரியருக்கு வணக்கம்.
அய்யா,
பூசணிக்காய் கதையும், நாய் சிறுத்தை கதையும் சிறுவர்களும் ரசித்துப்படிக்கும்
வகையில் உள்ளதை கவனித்தால் இதை ஆக்கப்படுத்தியவர் ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியையாக‌ இருக்கும் என்று தோன்றுகிறது,ஆக்கங்களைத்
தொடர வாழ்த்துகிறென்.
நல்வாழ்த்துகளுடன், அரசு. //
ஆரம்பப்பள்ளி ஆசிரியை இல்லை வாணிகவியல் பட்டம் பெற்றவர் உங்கள் வாழ்த்துக்கு நன்றி தொடர்ந்து எழுதுவேன்.

sundari said...

//G.Nandagopal said...
உண்மையிலேயே இது மிகவும் அருமையான ஆக்கம்
ஆம் நமக்கு எது நல்லதென்று நம்மை விட நம்மை படைத்தவனுக்குத் தெரியும்.
ஆனால் எதோ ஒரு மெல்லிய சோகத்தின் கீதம் ஒன்று இந்த கதையிலோ அல்லது
இந்த கதையை எழுதியவரிடம் ஒலிக்கரமாதிரி எனக்குப் படுகிறது
ஒருவேளை பிரமையாககூட இருக்கலாம்
இப்படிப்பட்ட ஆக்கத்தைப் புனைந்தவர் பெயர் வெளியிடாதது கூட அதற்குக்
காரணமாக இருக்கலாம்
தொடர்ந்து எழுதுங்கள் //
த‌ங்க‌ளின் பின்னூட்ட‌த்திற்கு ந‌ன்றி எல்லாருக்கும் சோக‌மிருக்கும்.

sundari said...

//Thanjavooraan said...
பேராசை பெரு நஷ்டம் என்றும் விரலுக்கேற்ற வீக்கம் என்றும் இதைத்தான் நம்மவர்கள் சொல்லி வைத்தார்கள். இறைவன் கருணை இருக்குமானால் நமக்கு என்னவெல்லாம் கிடைக்க வேண்டுமோ அத்தனையும் கிடைத்தே தீரும். நம்மாலேயே நம்ப முடியாது இவையெல்லாம் எப்படி முடிந்தது என்று. அதுதான் கடவுள் செயல் என்பது. வாழ்க்கையை ஒரு சக்கரம் என்பார்கள். உச்சத்தில் உட்கார்ந்திருக்கும் ஒருவன் எந்த நேரத்திலும் கீழே விழலாம்; கீழ்மட்டத்தில் வருந்திக் கிடப்பவன் //
வ‌ண‌க்க‌ம் ச்கோத‌ர‌ இன்றுதான் த‌ங்க‌ளுக்கு பின்னூட்ட‌மிட‌ பாக்கியம் கிடைத்த‌து தாங்க‌ளின் பின்னூட்ட‌த்திற்கு ரொம்ப‌ந‌ன்றி.

minorwall said...

வாங்க..வாங்க..சுந்தரிம்மாவ எங்கடா ரொம்ப நாளாக் காணோமுன்னு நினைச்சேன்..கதை கட்டுரைன்னு சும்மா ரவுசு கட்டுறீகளே?பூசணிக்காய்,ஆலம்பழம்,நார்த்தங்காய்,உப்பு,புலி,பூனை,சிறுத்தை,நாய் ன்னு செம காட்டு காட்டிருக்கீங்க..கலக்குங்க..

'இப்போது சொல்லுங்கள். கடவுளுக்குத் தெரியாதது எதாவது உண்டா?' ன்னு கேள்வி வேற கேட்டுருக்கீங்கோ..

உங்களுக்காக ஒத்துக்கிறேன்..அவுருக்குத் தெரியாமே ஒண்ணுமே நடக்காது..

உங்க மூலமா இப்பிடி ஒரு கேள்வி வந்து என்னை மாதிரி ஆளுங்க இப்பிடி பதில் சொன்னால் ஒத்துக்கிட்டமாதிரித்தானே?

sundari said...

வாத்தியார் ஐயா,
வணக்கம், தங்கள் என் பதிவை வெளியிட்டதற்கு நன்றி உங்கள் ஆசிர்வதத்தோடு தொடர்ந்து எழுதுவேன்.

minorwall said...

அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம்..
எங்கள் பகுதியிலே மார்கழி மாசத்துக் கோலத்துக்கு பூசணிப் பூ வைப்பது வழக்கம்..இங்கே நீங்கள் இந்த சுந்தரி வரைந்த மார்கழிக் கோலத்துக்கு பெரிய பூசணிப் பழமே வைத்து ஆராதனை செய்து விட்டீர்கள்..படம் நன்றாக இருக்கிறது..

Alasiam G said...

Bcom பட்டதாரி be calm -ஆக இருந்து இப்போது Beckham போல் அருமையான இரண்டு goal -களைப் போட்டு அசத்தி விட்டீங்க.... முல்லாக் கதைகளின் முகாந்திரம் இருந்தாலும் முடிச்சுகளை அருமையாக்கி நான் பூனை அல்ல புலி என பாய்ந்த என அன்பிற்குரிய சகோதிரி சுந்தரி (அழகி என்று பொருள்) தமிழ் சுந்தரி (தமிழ் அழகி) ஆகிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.............தொடர்ந்து எழுதுங்கள்........

sundari said...

minorwall said...
வாங்க..வாங்க..சுந்தரிம்மாவ எங்கடா ரொம்ப நாளாக் காணோமுன்னு நினைச்சேன்..கதை கட்டுரைன்னு சும்மா ரவுசு கட்டுறீகளே?பூசணிக்காய்,ஆலம்பழம்,நார்த்தங்காய்,உப்பு,புலி,பூனை,சிறுத்தை,நாய் ன்னு செம காட்டு காட்டிருக்கீங்க..கலக்குங்க..

'இப்போது சொல்லுங்கள். கடவுளுக்குத் தெரியாதது எதாவது உண்டா?' ன்னு கேள்வி வேற கேட்டுருக்கீங்கோ..

உங்களுக்காக ஒத்துக்கிறேன்..அவுருக்குத் தெரியாமே ஒண்ணுமே நடக்காது..

உங்க மூலமா இப்பிடி ஒரு கேள்வி வந்து என்னை மாதிரி ஆளுங்க இப்பிடி பதில் சொன்னால் ஒத்துக்கிட்டமாதிரித்த //

மைன‌ர்வாள் ச‌கோத‌ர‌ உங்க‌ள் பின்னூட்ட‌த்திற்கும் என‌க்காக் ஒத்துகொண்ட‌த‌ற்கும் ந‌ன்றி உண்மையில் நீங்க‌தான் என‌க்கு ந‌ல்ல் ச‌கோத‌ர‌ நான் என்ன‌ சொன்னாலும் ஜே போடுவிங்க‌

sundari said...

// Alasiam G said...
Bcom பட்டதாரி be calm -ஆக இருந்து இப்போது Beckham போல் அருமையான இரண்டு goal -களைப் போட்டு அசத்தி விட்டீங்க.... முல்லாக் கதைகளின் முகாந்திரம் இருந்தாலும் முடிச்சுகளை அருமையாக்கி நான் பூனை அல்ல புலி என பாய்ந்த என அன்பிற்குரிய சகோதிரி சுந்தரி (அழகி என்று பொருள்) தமிழ் சுந்தரி (தமிழ் அழகி) ஆகிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.............தொடர்ந்து எழுதுங்கள்........//

த‌ங்க‌ளின் வாழ்த்துக்கு ந‌ன்றி ச்கோதரா தொட‌ர்ந்து எழுதுவேன்.