மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

21.12.10

Astrology என்ன பார்வை உந்தன் பார்வை?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology என்ன பார்வை உந்தன் பார்வை?

“என்ன பார்வை உந்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பார்வை!”

என்று துவங்கும் கவியரசரின் பாடலும், பாடல் வரிகளும் பிரபலம்.

காதலியின் இடை மெலியும் அளவிற்கு காதலனின் பார்வை அப்படி சக்தி வாய்ந்ததாம். அதுபோல பெண்ணின் பார்வையில் பித்தானவர்களும் இருக்கிறார்கள்.

பெண்ணின் கண்களைப் பேசும் கண்கள் என்பார்கள். ஆணின் கண்களை தீட்சண்யமானதென்பார்கள்.

சாதாரண மனிதப் பிறவியின் கண்களுக்கே இத்தனை வலிமை என்றால், கிரகங்களின் கண்களுக்கு - அதாவது கிரகங்களின் பார்வைக்கு எத்தனை வலிமை இருக்கும்?

அதுதான் இன்றையப்பாடம்
+++++++++++++++++++++++
சீட்டாட்டத்தில் 13 சீட்டுக்கள். அவற்றைக் கையில் பிடித்துக் கொண்டுதான் விளையாட வேண்டும். ஒரு சீட்டைக் கீழே இறக்கினால், பதிலுக்கு ஒரு சீட்டை எடுத்து சொருகிக் கொள்ள வேண்டும். ரம்மியைக் கையில் வைத்துக்கொண்டு மற்ற சேர்க்கைகளுக்காக ஆடி அசர்பவர்களும் உண்டு. அதேபோல 4 அல்லது 5 ஜோக்கர்களை வைத்துக்கொண்டு எப்படியும் ஜெயித்துவிடுவோம் என்று ரம்மிக்காக ஆடி ஓய்பவர்களும் உண்டு. சீட்டு ஆடுபவர்களுக்கு மட்டுமே அதன் சிக்கல் தெரியும்.

ஆரம்பத்திலேயே மடக்கினால், 20 புள்ளிகள் போய்விடும். இடையில் மடக்கினால் 40 புள்ளிகள் போய்விடும். கேட் என்று எதிரே அமர்ந்திருப்பவன் மடக்கினால், சமயத்தில் 80 புள்ளிகள் போய்விடும். சிலருக்கு மட்டும் எடுக்கும் கார்டுகள் எல்லாம் வசப்பட்டதாக இருக்கும்.

ஆனால் பலரும் ஆடுவதற்குக் காரணம் நமக்கும் அடுத்த களைப்பில் அல்லது குலுக்கலில் நல்ல சீட்டுக்கள் வரும் எனும் நம்பிக்கையில்தான்.

வாழ்க்கையும் அப்படித்தான். நாளையப் பொழுது நன்மையாக இருக்கும் எனும் நம்பிக்கையில்தான் அத்தனை மனிதர்களூம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எதிர் காலத்தைத் தெரிந்து கொள்வதுதன் ஜாதகம் பார்ப்பதின் தலையாய நோக்கம். எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளும் குறுகுறுப்பு ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும். அது இல்லாதவன் ஜோதிடத்தின் பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டான்.

சீட்டாட்டத்தில் உள்ள எண்ணிக்கை பதிமூன்று என்றால், ஜாதகத்தில் உள்ள கட்டங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டு. அந்தப் பன்னிரெண்டை வைத்துக்கொண்டுதான் நம் ஆட்டம் இருக்கும்.

1, 9, 10, 11 ஆம் வீடுகள் முக்கியமானவை என்பார்கள்.

மற்றவீடுகள் முக்கியமில்லையா?

எல்லா வீடுகளுமே முக்கியமானதுதான்.

வீடுகள் முக்கியம்

வீட்டின் அதிபதி சென்று அமரும் இடம் முக்கியம்

அதோடு அந்த வீடு பெறும் பார்வைகளும் முக்கியம்.

செங்கல், சிமெண்ட், மணல், தண்ணீர், முறுக்குக் கம்பிகள் என்று பல அயிட்டங்கள் சேர்ந்து ஒரு வீடு அமைவதைப்போல, அதிபதி, காரகன், பார்வை, சேர்க்கை, அஷ்டகவர்க்கப்பரல் என்று பல அயிட்டங்கள் சேர்ந்துதான் ஜாதகத்தில் உள்ள வீடுகள் அமையும். மேன்மையாக இருக்கும் அல்லது மேமையில்லாமல் இருக்கும்

ஒவ்வொன்றாகப் பார்ப்போம். இது மேல் நிலைப் பாடம் ஒவ்வொன்றாகத்தான் பார்க்க முடியும். 
+++++++++++++++++++++++++++++++++++++++++
கிரகங்களில் எதெதற்கு என்னென்ன பார்வை என்று அடிப்படைப் பாடத்தில் படித்திருப்பீர்கள். இருந்தாலும் அதை தேடிப் பிடித்துப் பார்ப்பதற்கு நீங்கள் சிரமம் கொள்ள வேண்டாம் என்று மீண்டும் ஒரு முறை அவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.

சூரியன் - தான் இருக்கும் இடத்தில் இருந்து 7ஆம் வீட்டை மட்டும் பார்க்கும்.
சந்திரன் - அதுவும் அப்படித்தான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 7ஆம் வீட்டை மட்டும் பார்க்கும்.
புதன் & சுக்கிரன் ஆகிய இருவருக்கும் 7ஆம் பார்வை மட்டுமே
செவ்வாய் - தான் இருக்கும் இடத்தில் இருந்து 4, 7 & 8 ஆம் வீடுகளைப் பார்க்கும்
குரு - தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7 & 9 ஆம் வீடுகளைப் பார்க்கும்
சனி - தான் இருக்கும் இடத்தில் இருந்து 3, 7 & 10 ஆம் வீடுகளைப் பார்க்கும்
ராகு & கேது ஆகிய இரு கோள்களுக்கும் சொந்த வீடும் கிடையாது பார்வையும் கிடையாது. ஆகவே இந்தப் பார்வை ஆட்டத்தில் அவர்கள் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்கள்.

பார்வையால் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. சுபக்கிரகங்கள் பார்க்கும்போது நன்மைகள் உண்டு. தீய அல்லது பாபக் கிரகங்கள் பார்க்கும்போது தீமைகளே அதிகமாக இருக்கும். அல்லது நன்மைகள் வெகுவாகக் குறைந்துவிடும்.

உங்கள் வீட்டிற்கு எதிர் வீடு காவல்துறையில் உள்ள மிகப் பெரிய அதிகாரியின் வீடு என்றால், இயற்கையாகவே உங்கள் வீட்டிற்கும் சேர்த்து பாதுகாப்பு இருக்கும். அதே நேரத்தில், எதிர் வீட்டுக்காரன் பேட்டை தாதா என்றால் உங்கள் வீட்டின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்
+++++++++++++++++++++++++++++++++++++++++
7ஆம் வீட்டில் சனி இருந்தால் அது லக்கினத்தைப் பார்க்கும்
4ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால் அது 10ஆம் வீட்டைப் பார்க்கும்.

4ஆம் வீட்டில் அமர்ந்த சந்திரனால், ஜாதகனின் 4ஆம் வீடும் நன்மை பெறும், அத்துடன் 10ஆம் வீடும் நன்மையடையும்.

பொதுவாக சனி அமர்ந்த வீடும் நன்மையடையாது. பார்வை பெறும் வீடும் நன்மையளிக்காது. 4ல் சனி அமர்ந்தால் சுகக்கேடு. 2ல் சனி அமர்ந்தால் கையில் காசு தங்காது. அத்துடன் சிலர் குடும்ப வாழ்க்கையைத் துறந்து விட்டு, பொருள் ஈட்டும் முகமாகத் தூர தேசங்கள் வாழ நேரிடும்.

அவ்வாறு இடம், இருப்பிடம், பார்வை, சேர்க்கை, அஷ்டகவர்க்கம் என்று எல்லாக் கிரகங்களின் நிலைமையையும் அலசலாம். அலசுவோம்.

இங்கே அலச முடியாது.

அலசிக் கொடியில் காயப்போட்டால், காயுமுன்பாகத் துணிகளைத் தூக்கிக் கொண்டு போய்விடும் அன்பர்கள் பலர் இணையத்தில் இருக்கிறார்கள். ஆகவே ஜோதிடத்தைப் பல உதாரணங்களுடன் பாதுகாப்பாக அலசுவோம்.

தனி இணையதள வகுப்பு 20.1.2011 அன்று துவங்க உள்ளது. User Name, Password, content theft protection & copy right  ஆகியவற்றுடன் அது இருக்கும். ஆகவே சற்றுப் பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

33 comments:

arthanari said...

பத்தாம் விட்டில் அமர்ந்த சந்திரனால் என்ன பலன்? சனி லக்னாதிபதி பத்தாம் விட்டில் இருந்தால் எனன பலன்?

Alasiam G said...

கிரகங்களின் பார்வை சரி.... கிரகம் இவளின் பார்வை படுத்திய பாடைப் பாருங்கள்.....

உன் நீல விழிப் பார்வை
என் நித்திரைக் கெடுத்ததடி!
உன் மூன்றாம் பிறை நெற்றி
என்(னை) முழுதாய் கட்டியதடி!

உன் புருவம் அரும்பிய ரோமங்கள்
என் இதயம் வருடியதடி....
உன் இமைகள் கட்டிய மயிர்(ற்) தோகை கட்டில்கள்
என்(னை) எங்கோ அழைத்துச் சென்றதடி...
உன் சந்திர மலர்வதனக் குளிர்ச்சியில்
என்(னை) உன் சுவாச வெப்பம் பதப் படுத்தியதடி...

சகியே...கதியே... மதி நிறை முகியே.....
என் உயிரினில் புகுந்த என் உயிரின் உயிரே!
உன் பார்வை ஒன்றே போதுமே என் வாழ்வும்
நூறுகோடி ஆகுமே......

Thank you Sir...

Alasiam G said...

//////தனி இணையதள வகுப்பு 20.1.2011 அன்று துவங்க உள்ளது. User Name, Password, content theft protection & copy right ஆகியவற்றுடன் அது இருக்கும். ஆகவே சற்றுப் பொறுத்திருங்கள்//////

நல்ல செய்தி ஒன்று அதன் நலம் பெற குறித்த நாள் சனவரி 20 2011 என்று அறிந்து ஆனந்தம் பெற்றோம் இன்று...
நன்றிகள் ஆசிரியரே......
ஆவலுடன் ஆலாசியம். கோ.

Uma said...

பொதுவாக சனி அமர்ந்த வீடும் நன்மையடையாது. பார்வை பெறும் வீடும் நன்மையளிக்காது.//

சனி தான் அமர்ந்த இடத்தை வாழவைக்கும் என்று கேள்விப்பட்டேன். அது சரி இல்லையா? மேலும் சனி 6 ஆம் இடத்தில் அமர்ந்தால் நிறைந்த செல்வம் என்று கூறப்படுவது உண்மையா?

மேலும் சனி 2 ல் இருப்பவர்கள் எந்த விஷயத்தையும் பாதியில் விட மாட்டார்கள், ஒரு கை பார்த்து விடுவார்கள் என்பது குறித்து உங்கள் கருத்து என்ன?

CJeevanantham said...

Dear sir,
Thank you very much for your announcement of date for opening website.
Mandhi -- is it having the aspect effect?

arun balaji said...

Hello Sir,

How we can calculate Mandi. Is there any calculation or web link.

Please advise.

Thanks in advance,
your student,
Thiyagararaja

Uma said...

Mandhi -- is it having the aspect effect?//

How we can calculate Mandi.//

ஜீவானந்தம் / அருண் பாலாஜி, வாத்தியார் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையில் இந்த பதில் (எத்தனை நாளைக்குத்தான் கடைசி பெஞ்சிலேயே இருக்கறது).

மாந்திக்கு பார்வை / அஷ்டவர்க்கப் பரல்கள் கிடையாது. ஒவ்வொரு வீட்டிற்கும் 3 போர்ட்போலியோ இருக்கும். மாந்தி அந்த மூன்றில் ஒன்றைக் கெடுத்துவிடும்.

Alasiam G said...

சிவல் புரியார் பாணியிலே.....
"எந்தக் கிரகமும் நல்லக் கிரகம் தான் விண்ணில் இருக்கையிலே அவை நமக்கு நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அவரவர் ஜாதகத்தின் அமைப்பைப் பொறுத்தே"....

சனி என்பவன் ஜாதகத்தில் 1 2 4 5 7 9 10 11 வீடுகளின் அதிபதி என்பதற்கும் 3 6 8 12 வீடுகளின் அதிபதி என்பதற்கும் அதோடு உச்சம் நீசம் என்பதற்கும்... தகுந்தாற்போல் அவனின் இருப்பு, பார்வை பலன் வேறுபாடும் அல்லவா?

எவ்வளவு கெட்டவன் என்றாலும் தனது பிள்ளையாய் நன்றாகப் பார்த்துக்கொள்வான் இல்லையா?
"காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல்"
இப்படி சனி நல்லவனாகப் போனவனின் ஜாதகத்திலும்... 3 6 8 12 வீடுகளும் அவர்களின் அதிபதிகளும் இருக்கத்தானே செய்வார்கள் இல்லையா?....
அதனால் தான் நீங்கள் பொதுவாக என்றும் கூறி இருக்கிறீர்கள்...
சரிதானே ஆசிரியரே!
shortly 337...

Alasiam G said...

////(எத்தனை நாளைக்குத்தான் கடைசி பெஞ்சிலேயே இருக்கறது)./////
என்ன உமா இப்படி டக்குனு சொல்லாம கொள்ளாம முன்னாடிப்போய் உட்காந்திட்டீக....
சரி சரி இந்த வகுப்பு முடுஞ்சதும் பின்னாடி வந்திடுவீங்கனும் நம்புறேன்..

Uma said...

சரி சரி இந்த வகுப்பு முடுஞ்சதும் பின்னாடி வந்திடுவீங்கனும் நம்புறேன்..//

ஹி ஹி வேற வழி? ஏதோ தெரிஞ்ச கேள்வியா இருந்ததால பதில் சொன்னேன். இல்லன்னா நாமெல்லாம் எதுக்கு வாயைத் திறக்கப்போறோம்?

ARASU said...

ஆசிரியருக்கு வணக்கம்.
அய்யா,
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி வகுப்பறையில் பலித்துவிட்டது.
தை பிறந்தவுடன் இணையதள வகுப்பு துவங்கப்பட உள்ள செய்தி அறிய கரும்பு போல் இனிக்கிறது. நன்றி அய்யா.
அன்புடன, அரசு.

G.Nandagopal said...

ஆலாசியம் சார்

போகிறபோக்கைப் பார்த்தால் இன்றைய இளைஞ்சர்களே

உங்களிடம் training எடுத்துக்கொள்ளவேண்டும் போல் தெரிகிறதே.

அநேகமாக இது உங்களின் சிறு வயதில் எழுதிய தொகுப்புகளில் இருந்து

எடுக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.

பிரமாதம் போங்கள்.

kmr.krishnan said...

///"வாழ்க்கையும் அப்படித்தான். நாளையப் பொழுது நன்மையாக இருக்கும் எனும் நம்பிக்கையில்தான் அத்தனை மனிதர்களூம் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்."///

எவ்வளவு உண்மையான கருத்து ஐயா! சிறுவயதில் விதவிதமாகக் கற்பனை செய்து கொண்டு கவலைப்படுவேன்.ஒரு சமயம் 'இந்த பூமி அந்தரத்தில் மிதந்து கொண்டே இருக்கிறதே, கீழே விழுந்து விட்டால் என்ன ஆகும்' என்றகவலை வந்துவிட்டது.என் கவலை தோய்ந்த முகத்தைப்பார்த்து மடத்து சந்நியாசி ஒருவர் கேட்டார்.என் கவலையைச் சொன்னவுடன்,"அட அசட்டுப் பயலே!இதற்கா கவலைப்படுகிறாய்? இந்தப் பிரபஞ்சத்துக்கு எது மேல்? எது கீழ்?
எங்கே விழ முடியும்?அதற்கு விழுவதற்கு எந்தப் பரப்பு இருக்கிறது?ஒரு வேளை வேறு கிரஹத்துடன் மோதிவிட்டால் எல்லோருக்கும் ஆவது, நமக்கும் ஆகட்டும்
என்று கவலையைத் தொலைத்துவிட்டு நம்பிக்கையோடு இரு" என்று
பலவாறாகத் தேற்றினார்.நம்பிக்கை இல்லாவிட்டால் வாழ்வே இல்லை ஐயா!

Arulkumar Rajaraman said...

Dear Sir

Arumai Aiyya... Thoranumum mavilayum kalai katta Arampithuvittana..

Kalakkunga..anna..(Sir) kalakkunga..

Thanks sir.

Loving Student
Arulkumar Rajaraman

Alasiam G said...

இல்லை நண்பரே... சும்மா போற போக்கில ஏதாவது கிருக்கிவிடுறது அவ்வளவு தான்.
நம்ம வாத்தியாரின் வகுப்பறையில் பலதுறை மாணவர்களும் இருப்பது தானே உண்மை...
உடலும் அது சார்ந்த அமைப்பும் தானே இளமை முதுமை என்ற வரையரையிற்குள் வரும்....
ஏதோ நீங்கள் ரசிக்கும் அளவிற்கு இருந்தால் மகிழ்ச்சியே... பாராட்டுக்கும் நன்றி...
எல்லா வற்றிற்கும் மேலாக இங்கு எழுத வாய்ப்புத் தந்த வாத்தியாருக்குத் தான்
நாம் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும்..

sundari said...

எவ்வளவு உண்மையான கருத்து ஐயா! சிறுவயதில் விதவிதமாகக் கற்பனை செய்து கொண்டு கவலைப்படுவேன்.ஒரு சமயம் 'இந்த பூமி அந்தரத்தில் மிதந்து கொண்டே இருக்கிறதே, கீழே விழுந்து விட்டால் என்ன ஆகும்' என்றகவலை வந்துவிட்டது.என் கவலை தோய்ந்த முகத்தைப்பார்த்து மடத்து சந்நியாசி ஒருவர் கேட்டார்.என் கவலையைச் சொன்னவுடன்,"அட அசட்டுப் பயலே!இதற்கா கவலைப்படுகிறாய்? இந்தப் பிரபஞ்சத்துக்கு எது மேல்? எது கீழ்?
எங்கே விழ முடியும்?அதற்கு விழுவதற்கு எந்தப் பரப்பு இருக்கிறது?ஒரு வேளை வேறு கிரஹத்துடன் மோதிவிட்டால் எல்லோருக்கும் ஆவது, நமக்கும் ஆகட்டும்
என்று கவலையைத் தொலைத்துவிட்டு நம்பிக்கையோடு இரு" என்று
பலவாறாகத் தேற்றினார்.நம்பிக்கை இல்லாவிட்டால் வாழ்வே இல்லை//
ஐயா நீங்க‌ யாரு கிருஷ்ண‌ சாரா இல்ல‌ என்.ஸ் கிருஷ்ண‌வா ரொம்ப‌ ஜோக்
அடிக்கிறீங்க‌ ரொம்ப‌ சிரிப்பு வ‌ருது செத்து போயிடுவோம் க‌வ‌லைப்ப‌ட்டீங்க‌ளா?

SP.VR. SUBBAIYA said...

/////arthanari said...
பத்தாம் விட்டில் அமர்ந்த சந்திரனால் என்ன பலன்? சனி லக்னாதிபதி பத்தாம் விட்டில் இருந்தால் எனன பலன்?////

பத்தாம் வீட்டைப்பற்றிய பாடம் பெரிய பாடம் பதிவில் உள்ளது. படித்துப்பாருங்கள். புதிதாக வருபவர்கள் முதலில் பழைய பாடங்கள் அனைத்தையும் படிப்பது அவர்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது!

SP.VR. SUBBAIYA said...

/////Alasiam G said... கிரகங்களின் பார்வை சரி.... கிரகம் இவளின் பார்வை படுத்திய பாடைப் பாருங்கள்.....
உன் நீல விழிப் பார்வை
என் நித்திரைக் கெடுத்ததடி!
உன் மூன்றாம் பிறை நெற்றி
என்(னை) முழுதாய் கட்டியதடி!
உன் புருவம் அரும்பிய ரோமங்கள்
என் இதயம் வருடியதடி....
உன் இமைகள் கட்டிய மயிர்(ற்) தோகை கட்டில்கள்
என்(னை) எங்கோ அழைத்துச் சென்றதடி...
உன் சந்திர மலர்வதனக் குளிர்ச்சியில்
என்(னை) உன் சுவாச வெப்பம் பதப் படுத்தியதடி...
சகியே...கதியே... மதி நிறை முகியே.....
என் உயிரினில் புகுந்த என் உயிரின் உயிரே!
உன் பார்வை ஒன்றே போதுமே என் வாழ்வும்
நூறுகோடி ஆகுமே......
Thank you Sir..////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

Alasiam G said...
//////தனி இணையதள வகுப்பு 20.1.2011 அன்று துவங்க உள்ளது. User Name, Password, content theft protection & copy right ஆகியவற்றுடன் அது இருக்கும். ஆகவே சற்றுப் பொறுத்திருங்கள்//////
நல்ல செய்தி ஒன்று அதன் நலம் பெற குறித்த நாள் சனவரி 20 2011 என்று அறிந்து ஆனந்தம் பெற்றோம் இன்று... நன்றிகள் ஆசிரியரே......
ஆவலுடன் ஆலாசியம். கோ.////

நல்லது. நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

///Uma said...
பொதுவாக சனி அமர்ந்த வீடும் நன்மையடையாது. பார்வை பெறும் வீடும் நன்மையளிக்காது.//
சனி தான் அமர்ந்த இடத்தை வாழவைக்கும் என்று கேள்விப்பட்டேன். அது சரி இல்லையா? மேலும் சனி 6 ஆம் இடத்தில் அமர்ந்தால் நிறைந்த செல்வம் என்று கூறப்படுவது உண்மையா?
மேலும் சனி 2 ல் இருப்பவர்கள் எந்த விஷயத்தையும் பாதியில் விட மாட்டார்கள், ஒரு கை பார்த்து விடுவார்கள் என்பது குறித்து உங்கள் கருத்து என்ன?////

சனியைப் பற்றி நிறைய எழுதியுள்ளேன். பழைய பாடங்களில் உள்ளது சகோதரி. சிரமம் பார்க்காமல் மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள்.

SP.VR. SUBBAIYA said...

////CJeevanantham said...
Dear sir,
Thank you very much for your announcement of date for opening website.
Mandhi -- is it having the aspect effect?////

மாந்திக்குப் பார்வை பலம் கிடையாது!

SP.VR. SUBBAIYA said...

///arun balaji said...
Hello Sir,
How we can calculate Mandi. Is there any calculation or web link.
Please advise.
Thanks in advance,
your student,
Thiyagararaja////

ஜாதகத்தில் மாந்தியின் இருப்பிடத்தைக் கணினி ஜாதகம் நொடியில் குறித்துக்கொடுத்துவிடும். நீங்கள் கணக்கிட்ட வேண்டாம்!

SP.VR. SUBBAIYA said...

////Uma said...
Mandhi -- is it having the aspect effect?//
How we can calculate Mandi.//
ஜீவானந்தம் / அருண் பாலாஜி, வாத்தியார் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையில் இந்த பதில் (எத்தனை நாளைக்குத்தான் கடைசி பெஞ்சிலேயே இருக்கறது).
மாந்திக்கு பார்வை / அஷ்டவர்க்கப் பரல்கள் கிடையாது. ஒவ்வொரு வீட்டிற்கும் 3 போர்ட்போலியோ இருக்கும். மாந்தி அந்த மூன்றில் ஒன்றைக் கெடுத்துவிடும்.////

உங்களின் விளக்கத்திற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////Alasiam G said...
சிவல் புரியார் பாணியிலே.....
"எந்தக் கிரகமும் நல்லக் கிரகம் தான் விண்ணில் இருக்கையிலே அவை நமக்கு நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அவரவர் ஜாதகத்தின் அமைப்பைப் பொறுத்தே"....
சனி என்பவன் ஜாதகத்தில் 1 2 4 5 7 9 10 11 வீடுகளின் அதிபதி என்பதற்கும் 3 6 8 12 வீடுகளின் அதிபதி என்பதற்கும் அதோடு உச்சம் நீசம் என்பதற்கும்... தகுந்தாற்போல் அவனின் இருப்பு, பார்வை பலன் வேறுபாடும் அல்லவா?
எவ்வளவு கெட்டவன் என்றாலும் தனது பிள்ளையாய் நன்றாகப் பார்த்துக்கொள்வான் இல்லையா?
"காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல்"
இப்படி சனி நல்லவனாகப் போனவனின் ஜாதகத்திலும்... 3 6 8 12 வீடுகளும் அவர்களின் அதிபதிகளும் இருக்கத்தானே செய்வார்கள் இல்லையா?....
அதனால் தான் நீங்கள் பொதுவாக என்றும் கூறி இருக்கிறீர்கள்...
சரிதானே ஆசிரியரே!
shortly 337...////

ஆமாம். நல்லது நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

////Alasiam G said...
////(எத்தனை நாளைக்குத்தான் கடைசி பெஞ்சிலேயே இருக்கறது)./////
என்ன உமா இப்படி டக்குனு சொல்லாம கொள்ளாம முன்னாடிப்போய் உட்காந்திட்டீக....
சரி சரி இந்த வகுப்பு முடுஞ்சதும் பின்னாடி வந்திடுவீங்கனும் நம்புறேன்..////

வரமாட்டார். இப்போதுபோல அவர் முன்னணியில்தான் இருப்பார்!

SP.VR. SUBBAIYA said...

///Uma said...
சரி சரி இந்த வகுப்பு முடுஞ்சதும் பின்னாடி வந்திடுவீங்கனும் நம்புறேன்..//
ஹி ஹி வேற வழி? ஏதோ தெரிஞ்ச கேள்வியா இருந்ததால பதில் சொன்னேன். இல்லன்னா நாமெல்லாம் எதுக்கு வாயைத் திறக்கப்போறோம்?///////////

அதெல்லாம் செய்யுங்கள். சான்ஸ் கிடைத்தால் விடக்கூடாது!

SP.VR. SUBBAIYA said...

////ARASU said...
ஆசிரியருக்கு வணக்கம்.
அய்யா, தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி வகுப்பறையில் பலித்துவிட்டது.
தை பிறந்தவுடன் இணையதள வகுப்பு துவங்கப்பட உள்ள செய்தி அறிய கரும்பு போல் இனிக்கிறது. நன்றி அய்யா. அன்புடன, அரசு.////

கரும்புபோல இனித்தால் சரிதான்.

SP.VR. SUBBAIYA said...

////G.Nandagopal said...
ஆலாசியம் சார்
போகிறபோக்கைப் பார்த்தால் இன்றைய இளைஞர்களே
உங்களிடம் training எடுத்துக்கொள்ளவேண்டும் போல் தெரிகிறதே.
அநேகமாக இது உங்களின் சிறு வயதில் எழுதிய தொகுப்புகளில் இருந்து
எடுக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.
பிரமாதம் போங்கள்.////

எழுதுவதற்கு வயது எதற்கு சாமி?

SP.VR. SUBBAIYA said...

////kmr.krishnan said...
///"வாழ்க்கையும் அப்படித்தான். நாளையப் பொழுது நன்மையாக இருக்கும் எனும் நம்பிக்கையில்தான் அத்தனை மனிதர்களூம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்."///
எவ்வளவு உண்மையான கருத்து ஐயா! சிறுவயதில் விதவிதமாகக் கற்பனை செய்து கொண்டு கவலைப்படுவேன்.ஒரு சமயம் 'இந்த பூமி அந்தரத்தில் மிதந்து கொண்டே இருக்கிறதே, கீழே விழுந்து விட்டால் என்ன ஆகும்' என்றகவலை வந்துவிட்டது.என் கவலை தோய்ந்த முகத்தைப்பார்த்து மடத்து சந்நியாசி ஒருவர் கேட்டார்.என் கவலையைச் சொன்னவுடன்,"அட அசட்டுப் பயலே!இதற்கா கவலைப்படுகிறாய்? இந்தப் பிரபஞ்சத்துக்கு எது மேல்? எது கீழ்?
எங்கே விழ முடியும்?அதற்கு விழுவதற்கு எந்தப் பரப்பு இருக்கிறது?ஒரு வேளை வேறு கிரஹத்துடன் மோதிவிட்டால் எல்லோருக்கும் ஆவது, நமக்கும் ஆகட்டும்
என்று கவலையைத் தொலைத்துவிட்டு நம்பிக்கையோடு இரு" என்று
பலவாறாகத் தேற்றினார்.நம்பிக்கை இல்லாவிட்டால் வாழ்வே இல்லை ஐயா!////

நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

////Arulkumar Rajaraman said...
Dear Sir
Arumai Aiyya... Thoranumum mavilayum kalai katta Arampithuvittana..
Kalakkunga..anna..(Sir) kalakkunga..
Thanks sir.
Loving Student
Arulkumar Rajaraman////

நல்லது. நன்றி ராஜாராமன்!

SP.VR. SUBBAIYA said...

/////Alasiam G said...
இல்லை நண்பரே... சும்மா போற போக்கில ஏதாவது கிருக்கிவிடுறது அவ்வளவு தான்.
நம்ம வாத்தியாரின் வகுப்பறையில் பலதுறை மாணவர்களும் இருப்பது தானே உண்மை...
உடலும் அது சார்ந்த அமைப்பும் தானே இளமை முதுமை என்ற வரையரையிற்குள் வரும்....
ஏதோ நீங்கள் ரசிக்கும் அளவிற்கு இருந்தால் மகிழ்ச்சியே... பாராட்டுக்கும் நன்றி...
எல்லா வற்றிற்கும் மேலாக இங்கு எழுத வாய்ப்புத் தந்த வாத்தியாருக்குத் தான்
நாம் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும்..////

மாணவர்கள் இல்லாமல் வாத்தியார் ஏது? நன்றிதான் எதற்கு?

SP.VR. SUBBAIYA said...

//////sundari said...
எவ்வளவு உண்மையான கருத்து ஐயா! சிறுவயதில் விதவிதமாகக் கற்பனை செய்து கொண்டு கவலைப்படுவேன்.ஒரு சமயம் 'இந்த பூமி அந்தரத்தில் மிதந்து கொண்டே இருக்கிறதே, கீழே விழுந்து விட்டால் என்ன ஆகும்' என்றகவலை வந்துவிட்டது.என் கவலை தோய்ந்த முகத்தைப்பார்த்து மடத்து சந்நியாசி ஒருவர் கேட்டார்.என் கவலையைச் சொன்னவுடன்,"அட அசட்டுப் பயலே!இதற்கா கவலைப்படுகிறாய்? இந்தப் பிரபஞ்சத்துக்கு எது மேல்? எது கீழ்?
எங்கே விழ முடியும்?அதற்கு விழுவதற்கு எந்தப் பரப்பு இருக்கிறது?ஒரு வேளை வேறு கிரஹத்துடன் மோதிவிட்டால் எல்லோருக்கும் ஆவது, நமக்கும் ஆகட்டும்
என்று கவலையைத் தொலைத்துவிட்டு நம்பிக்கையோடு இரு" என்று
பலவாறாகத் தேற்றினார்.நம்பிக்கை இல்லாவிட்டால் வாழ்வே இல்லை//
ஐயா நீங்க‌ யாரு கிருஷ்ண‌ சாரா இல்ல‌ என்.ஸ் கிருஷ்ண‌வா ரொம்ப‌ ஜோக்
அடிக்கிறீங்க‌ ரொம்ப‌ சிரிப்பு வ‌ருது செத்து போயிடுவோம் க‌வ‌லைப்ப‌ட்டீங்க‌ளா?/////

சிரிப்பு மட்டும் வரவில்லை. சிந்தனையும் வருகிறது!

sabaripandiyan said...

sir,
I want to be the part of your new blog open at 20th January 2011. what should i do for that?