மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

7.12.10

Astrology: யாரடி நீ மோகினி?

---------------------------------------------------------------------------------
Astrology: யாரடி நீ மோகினி?

பகுதி ஒன்று!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
    நடிகர் ஜோசப் பிச்சை சந்திரபாபு - அதாங்க நம்ம ஜே.பி. சந்திரபாபு - பன்முகத் திறமை கொண்டவர். சிறந்த நகைச்சுவை நடிகர், பாடகர், நன்றாக நடனமாடக்கூடியவர்.

    வித்தியாசமான குரலால், அவர் பாடிய பல பாடல்கள் அமரத்துவம் பெற்றன. அவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்தது. இருக்கிறது.

    அவர்பாடிப் பிரபலமான பாடல்களில், சிலவற்றின் துவக்க வரிகளை உங்களுக்காகக் கொடுத்துள்ளேன்.

    “புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
       வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை” (படம்: அன்னை)

    “குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே" (படம்: மரகதம் உடன் பாடியவர் ஜமுனா ராணி))

    “பிறக்கும்போதும் அழுகின்றான்" (படம்: கவலை இல்லாத மனிதன் உடன் பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி)

    “பொறந்தாலும் ஆம்பிள்ளையா பொறக்கக்கூடாது" (படம்: போலீஸ்காரன் மகள்)

    “உனக்காக, கண்ணே உனக்காக - இந்த
     உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக” (படம்: புதையல்)

    “நானொரு முட்டாளுங்க - ரெம்ப
       நல்லா படிச்சவங்க நாலுபேரு சொன்னாங்க” (படம்: சகோதரி)
  
    “பம்பரக் கண்ணாலே - காதல்
       சங்கதி சொன்னாளே” (படம்: மணமகன் தேவை)

    “தடுக்காதே என்னைத் தடுக்காதே” (படம்: மன்னாதி மன்னன்)

    “சிரிப்பு வருது சிரிப்பு வருது
       சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
    சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
       செயலைப் பாக்க சிரிப்பு வருது” (படம்: ஆண்டவன் கட்டளை)
  
    “ஒன்னுமே புரியலே உலகத்திலே
       என்னமோ நடக்குது மர்மமா இருக்குது” (படம்: குமாரராஜா. ஆண்டு 1961)

    1927 முதல் 1974 வரை சுமார் 47 ஆண்டுகள் காலமே வாழ்ந்து மறைந்தவர் அவர். ஆனால் பல சாதனைகளைச் செய்து காட்டிவிட்டுப் போயிருக்கிறார்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
    “அந்த ஒன்னுமே புரியலே உலகத்திலே” என்னும் அவருடைய பாடல் சிந்தனையைத் தூண்டிவிடக்கூடிய பாடல்.

    அன்றாடம் நடக்கும் பல விஷயங்கள் புரியாமல், அதாவது பிடிபடாமல் இருக்கிறது.

    இன்றைய செய்தித்தாளில், ‘ மைக்கேல் ஜாக்சனின் கையுறைகளை ஒருவர் ஏலத்தில் எடுத்திருக்கிறார். அவர் செலுத்திய தொகை 1.48 கோடி ரூபாய்கள். ஜாக்சனின் பழைய சட்டை ஒன்று 43.2 லட்ச ரூபாய்களுக்கும், அங்கி  (coat) ஒன்று 32.4 லட்சத்திற்கும் ஏலத்தில் போயிருக்கிறது’ என்ற கலக்கலான செய்தி வந்துள்ளது.

    இது போன்று பல வினோதமான சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். முன்பு ஒருமுறை நடிகை மர்லின் மன்றோவின் உள்ளாடைகள் சில கோடி ரூபாய்களுக்கு ஏலம் போனதாகப் படித்தேன். உள்ளாடைகளை ஏலத்தில் எடுத்த மகானுபாவன், அவற்றை வைத்துக்கொண்டு எதைப் பிடிக்கப் போகிறானோ தெரியவில்லை. அல்லது என்ன செய்யப்போகிறானோ தெரியவில்லை. கலிகாலம்.

    சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் மக்கள் தொகை 30 கோடிகளாக இருந்த சமயத்தில் 50 சதவிகித மக்கள் வறுமையில்   வாடிக் கொண்டிருந் தார்கள். அன்றாட உணவிற்கே சிரமப் பட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் காலத்தில் வளர்ந்த பிள்ளைகள் எல்லாம் காசின் அருமை தெரிந்து வளர்ந் தார்கள். தாய்ப் பாசத்துடன் வளர்ந்தார்கள்.

    “மாவும் கொதிக்கோணும்,
    மக்க(ள்) பசி தீரோணும்”


என்று ஒரு கிராமத்துத் தாய் ஈர விறகுடன் போராடி, தன் மக்களுக்கு (பிள்ளைகளுக்கு) ராகி மாவுக் கஞ்சி காய்ச்சிச் கொண்டிருந்த நிலையை, ஒரு கவிஞன் பாட்டாக எழுதினான்.

    இன்று அப்படியல்ல, நிலைமை மாறிவிட்டது. பெரும்பாலான மக்கள் நன்றாக இருக்கிறார்கள்

    அன்றிருந்த நல்ல எண்ணம், பாசப்பிணைப்பு, தர்ம சிந்தனை, நியாயத்துக் கட்டுப்படுதல் போன்றவை எல்லாம் இப்போது சொல்லும்படியாக இல்லை.

    சுய நலம் மிகுந்து விட்டது. பணத் தேடலின் விளைவாலும், வீடு, வாசல், நிலம் நீச்சு என்று சொத்து சேர்ப்பதன் விளைவாலும் பலர் தங்களது நல்ல இயல்புகளை இழந்துவிட்டார்கள்.

    நிரந்தர வருமானத்திற்கு வழி செய்கிறேன் என்று நித்திய வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக் கிறார்கள்.

    தேவாரம், திருப்புகழ், திருவாசகம், பெரிய புராணம், கந்தபுராணம் போன்ற பெருமை வாய்ந்த நூல்களைப் படிப்பவர்கள் மிகவும் குறைவு. விரல்விட்டு எண்ணிவிடலாம்.

    தொலைக்காட்சிகளின் தாக்கத்தால், வீட்டில் இருக்கும் பெண்மணிகளும் நூல்களைப் படிப்பதில்லை. படிக்கும் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது.

    பணம் சம்பாதிப்பது எப்படி? பங்குச் சந்தையில் பணம் பண்ணுவது எப்படி? என்னும் தலைப்புக்களில் எழுதப்படும் நூல்கள் அபாரமாக விற்றுக்கொண்டிருக்கின்றன. அதுபோல மனவளக் கட்டுரைகளைக் கொண்ட நூல்களும், சுய முன்னேற்றம் குறித்து எழுதப்பெறும் நூல்களும் அதிக அளவில் விற்றுக்கொண்டிருக்கின்றன.

    எல்லோருக்கும் பணம் வந்துவிடுமா என்ன?

    வாரியார் சுவாமிகள் சொல்வார்: “ஒரு செம்பை தண்ணீரில் முக்கி எடுத்தாலும், அல்லது நீருக்குள் வைத்திருந்து அரை மணி நேரம் கழித்து எடுத்தாலும், அந்த செம்பு கொள்ளும் அளவுதான் நீர் கிடைக்கும்.

    அதுபோல தலைவிதிப்படி அல்லது கர்ம வினைப்படி ஒரு மனிதனுக்கு என்ன விதிக்கப் பட்டிருக்கிறதோ, அந்த அளவுதான் செல்வம் சேரும்.

     அதையே கிராமங்களில் உள்ள பாமர மக்கள் இப்படிச் சொல்வார்கள்: “என்னதான் உடம்பில் எண்ணையைப் பூசிக்கொண்டு மண்ணில் உருண்டாலும், ஒட்டுகிற மண்தான் ஒட்டும்”

    உண்மையில் மனிதனுக்கு வேண்டியது இரண்டுதான்: 1. நிம்மதி 2. மன மகிழ்ச்சி

    பணத்தைக் கொடுத்து அவைகளை வாங்க முடியாது. அதுதான் முக்கியம்.

    பின் அவை இரண்டும் எப்படிக் கிடைக்கும்?

    “அதீத இறை உணர்வும், இறை நம்பிக்கையும் வேண்டும்!”

    நமது பிரச்சினைகள், துன்பங்கள் ஆகியவற்றை எல்லாம் இறைவனிடம் விட்டு விட்டு, அவன் பார்த்துக்கொள்வான் என்று நம்பிக்கையோடு இருக்க வேண்டும். அனுதினமும் ஒரு ஐந்து நிமிடமாவது இறைவனைப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    ஆம்னி பஸ்ஸில் சென்னையில் இருந்து கோவைக்குப் பயணைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். பேருந்தின் முன் பகுதியில் அல்லது மையப் பகுதில் இருக்கை கிடைக்குமா என்று மட்டும்தான் கவலைப் படுவீர்கள். அப்படிக்கிடைத்துவிட்டால், ஏறிப் பேருந்து கிளம்பியவுடன் சுகமாகத் தூங்க ஆரம்பித்துவிடுவீர்கள். ஒன்பது மணி நேரப் பயணத்தை, முன் பின் அறியாத அந்த வண்டியின் ஓட்டுனரிடம் விட்டுவிட்டுக் கவலை இல்லாமல் உறங்குவீர்கள்.

    என்றைக்காவது பஸ்ஸில் ஏறியவுடன், ஓட்டுனரிடம் சென்று, “எத்தனை வருடமாக வண்டி ஓட்டுகிறாய், இதுவரை விபத்து எதையும் உண்டாக்காமல் வண்டியை ஓட்டிய அனுபவம் உனக்கு இருக்கிறதா? என்னைக் கொண்டுபோய் பத்திரமாகக் கோவையில் சேர்ப்பாயா? அதற்கு உத்திரவாதம் உன்னால் தரமுடியுமா? உன் லைசென்ஸை எடு நான் பார்க்க வேண்டும்” என்று கேட்டிருக்கிறீர்களா? அல்லது கேட்கத்தான் முடியுமா?

    தெரிந்தோ அல்லது தெரியாமலோ அந்த ஓட்டுனரிடம் ஏற்படும் நம்பிக்கை, ஏன் உங்களுக்கு இறைவன் மேல் இல்லை?

    “இறைவன் மேல் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால், இந்த ஜோதிடம், ஜாதகம் போன்ற புண்ணாக்குகளை எல்லாம் விட்டு விடலாம் இல்லையா?”

    “ஆகா, அவை எல்லாம் தேவையில்லை. ஒதுக்கி வைத்துவிடலாம்”

    “பின் எதற்காக எழுதுகிறீர்கள்?”
   
    “ஆங்... நல்ல கேள்வி. அதற்கு விவரமாகப் பதில் சொல்லும் முகமாகத்தான் இந்தத் தொடர் கட்டுரை”

    (தொடரும்)

    பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். மற்றவை அடுத்த பதிவில்!

    கீழே படத்தில் இருப்பது என்ன? தெரிந்தவர்கள் சொல்லலாம். தஞ்சைப் பெரியவர்கள் இருவரைத் தவிர. அவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்------------------------------------------------------------------------------
   அன்புடன்
    வாத்தியார்
வாழ்க வளமுடன்!

42 comments:

Soundarraju said...

சார் ,
இறைவன் மேல் நம்பிக்கை வந்து விட்டால் ஜோதிடம் எதற்கு ,என்ற நல்ல கேள்வியோடு நிறுத்தி இருக்கிறிர்கள் , அடுத்து பதில் என்ன என்ற ஆவலை தூண்டுகிறது .
நல்ல பதிவு .

படத்தில் நம் வகுப்பறைக்கு copy rights வாங்கும் நேரம் வந்து வித்டதாய் சொல்லுவது போல் உள்ளது

Ganesh Seeniraj said...

soori katthi?

balaji said...

நம்ம வாத்தியார் பாடங்களை திருடுபவர்களுக்கு கத்தி குத்து தான் வேரென்ன?

SHEN said...

”மழை பெய்வது இறைவனின் நாட்டம்..குடை கொண்டு செல்வது அவதியைக் குறைக்கும்..ஜோதிடமும் அதுபோல” என்று சொல்லலாமா?..அந்தப் படத்தில் இருப்பது கத்தியா..கன்னக்கோலா ஐயா?

--செங்கோவி

kmr.krishnan said...

//"சுய நலம் மிகுந்து விட்டது. பணத் தேடலின் விளைவாலும், வீடு, வாசல், நிலம் நீச்சு என்று சொத்து சேர்ப்பதன் விளைவாலும் பலர் தங்களது நல்ல இயல்புகளை இழந்துவிட்டார்கள்"//.

வாஸ்தவமான பேச்சு.!சொத்துதான் முன்னால் வந்து நிற்கிறது.உறவுகள் பின் தங்கி விட்டன.

vprasanakumar said...

sir, enraiya topic migavum nanraka irundhadu.

migavum adhigam makkal nimmidhi & satisfaction rendum marandhu vittaragal.

inriya kaala kattatiruku idhu migavum avasaiyamana topic.

mikka mazhgichi ayya.

vazhga ungal sindhanai.

nandri ayya.

arthanari said...

பணம் பத்தும் செய்யும்.ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா.

Jawahar said...

ஐயா,
வாரியாரின் கருத்துக்களை மேற்கோள் காட்டியது நன்று. படத்திலிருக்கும் பொருளை விட தங்களின் மணியான எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அதிலும் copyrights போன்ற சொற்கள், தாங்கள் இணையதளம் அமைக்கும் பணியில் பல மடங்கு வேகத்திலிருப்பதை அறிகின்றேன்!!. வாழ்த்துக்கள்!
-‍ஜவகர்

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
//////// படத்தில் இருப்பது என்ன? தெரிந்தவர்கள் சொல்லலாம்//////////

class room 2007.blog spot .com
C copy rights க்கு முழுப் பாது காப்பு கிடைக்க வில்லை.திருடுபவர்களுக்கு சாதகமாக உள்ளது
எனவே தற்போது முழுப் பாது காப்புடன்,
/////இனிமேல் திருடர்கள் நுழையாமல் தடுப்பதற்கு, எழுதுபவற்றில் முக்கியமானபாடங்களுக்காக தனி இணைய தளம் தயாராகிக்
கொண்டிருக்கிறது. உண்மையில் ஜோதிடத்தில் ஆர்வம்உள்ளவர்களை மட்டும் அதில் ///////
சேர்ந்து பாடங்களைப் பாதுகாப்புடன் இருந்துக்கொண்டு படித்துப் பயன் பெறலாம்.
* * * * * * * * * * * ** * * * *
எனக்கு மனதில் தோன்றியதைப் பதிவு செய்துள்ளேன் .
நன்றி!
தங்களன்புள்ள

வ.தட்சணாமூர்த்தி
2010-12-08

Vinoth said...

அது கத்தி மாதிரியிருக்கு...
ஆன கத்தி நேரா இருக்குமே..

Uma said...

அடுத்த பகுதிக்காக waiting

Kvp said...

//////// படத்தில் இருப்பது என்ன? தெரிந்தவர்கள் சொல்லலாம்//////////

அரிவாள்மனை??

தமிழ்மணி said...

சிறப்பான பதிவு ஐயா. பொதுவான பதிவு என்றாலும் இதை எனக்கான பதிவாகவே எடுத்துக்கொள்கிறேன். என்னுடைய இன்றைய மனநிலைக்கு ஒரு விதத்தில் பதிலாக அமைந்துள்ளது .... நன்றி

ilayaraja said...

button knife

Pallathur Ramanathan said...

Our Teacher has given a suspense with his words regd the topic and picture also today,

I think the picture given is a Folding knife, which is used in olden days.

minorwall said...

பிச்சுவா கத்தி..

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு
/////////நமது பிரச்சினைகள், துன்பங்கள் ஆகியவற்றை எல்லாம் இறைவனிடம் விட்டு விட்டு, அவன் பார்த்துக்கொள்வான் என்று நம்பிக்கையோடு இருக்க வேண்டும். ///////////
////////தெரிந்தோ அல்லது தெரியாமலோ அந்த ஓட்டுனரிடம் ஏற்படும் நம்பிக்கை, ஏன் உங்களுக்கு இறைவன் மேல் இல்லை?/////
/////“இறைவன் மேல் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால், இந்த ஜோதிடம், ஜாதகம் போன்ற புண்ணாக்குகளை எல்லாம் விட்டு விடலாம் இல்லையா?”///////

ஓட்டுனரை விட இறைவனிடம் நம்பிக்கை அதிகமாக இருப்பதால்,
ஓட்டுனரை இறைவன் நல்லபடியாகவே வழி நடத்துவார்,எல்லாம் அவர்(கடவுள்)பார்த்துக்கொள்வார் என்ற எண்ணம் மேலோங்கி ஓட்டுனரப்பற்றி நினைத்துப் பார்ப்பதே இல்லை.
தானாகவே அவரவரின் விதிப்படிநல்லபடியாகவே அனைத்தும் நடந்துவிடும் என்று எதிர்ப் பார்க்கிறார்கள் .
இறைவனை அடைந்து ஞாயமானவற்றைப் பெறுவதற்கு அதிகப்படியான உழைப்புத் தேவைப் படுகிறது.
அந்த உழைப்பின் படி பலனை பெற முயற்சித்தாலும் அனைவருக்கும் அது சாத்தியப்படுவதில்லை.

இறைவன் மேல் நம்பிக்கை ஏற்படுத்திக்கொண்டு சாதனை செய்வதற்கு,
விதிக்கப் பட்டுள்ள விதி யாது என்பதை அறிந்துக் கொள்வதற்கு ஜோதிடம்
உதவியாக இருக்கும்..
எந்த நேரத்தில், எந்த நாளில் தொடங்கி எத்தனை நாட்களுக்குள் முடிக்கவேண்டும்? எந்த கால கட்டத்தில் சாத்தியமாகும் இதற்கெல்லாம் ஜோதிடம் தேவைப் படுகிறது

ஜோதிடத்தில் ஒன்று (லக்னம்) முதல் பனிரண்டு கட்டங்களுக்கும் உள்ள பலன்களை இறைவன் மேல் நம்பிக்கை வைத்து சாதகமாக பலன்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஜாதகம் தேவையாகிறது.

நன்றி!
தங்களன்புள்ள

வ.தட்சணாமூர்த்தி
2010-12-08

kmr.krishnan said...

திரு வி பிர‌சன்னகுமார் அவர்களே!தமிழில் எப்படி பின்னூட்டாம் இடுவது என்பது வ்குப்பறையின் வலது பக்க ஓரத்தில் உள்ள அறிவுப்புக்களில் உள்ளது. அதனை படித்து பார்த்து இப்போது தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது போலவே எழுதினால் அது தமிழ் எழுத்துக்களிலேயே வெளியாகும்.

Srinath said...

Dear Vaathiyaar,

Looks like you are decided to open the knife (Knife --- legal proceedings for internet-thieves)

Regards,
Srinath G

Ram said...

Dear Sir,

agains seems to be precursor for next big lessons, thanks for starting the same.

SP.VR. SUBBAIYA said...

/////Soundarraju said...
சார் ,
இறைவன் மேல் நம்பிக்கை வந்து விட்டால் ஜோதிடம் எதற்கு ,என்ற நல்ல கேள்வியோடு நிறுத்தி

இருக்கிறிர்கள் , அடுத்து பதில் என்ன என்ற ஆவலை தூண்டுகிறது .
நல்ல பதிவு .
படத்தில் நம் வகுப்பறைக்கு copy rights வாங்கும் நேரம் வந்து வந்துவிட்டதாய் சொல்லுவது போல்
உள்ளது/////

உங்கள் ஆவல் நாளை பூர்த்தியாகும். பொறுத்திருங்கள்

SP.VR. SUBBAIYA said...

/////Ganesh Seeniraj said...
soori katthi?/////

ஐயோ, கத்தியா? வாத்தியாருக்கு எதுக்கு சுவாமி கத்தி கபடாவெல்லாம். வாத்தியார் வயது காரணமாக காந்தி
வழியில் செல்ல விரும்புவார்.

SP.VR. SUBBAIYA said...

/////balaji said...
நம்ம வாத்தியார் பாடங்களை திருடுபவர்களுக்கு கத்தி குத்து தான் வேரென்ன?/////

ஐயோ, கத்திக்குத்தா? வாத்தியாருக்கு எதுக்கு சுவாமி அதெல்லாம்?. வாத்தியார் வயது காரணமாக காந்தி
வழியில் செல்ல விரும்புவார்.

SP.VR. SUBBAIYA said...

////SHEN said...
”மழை பெய்வது இறைவனின் நாட்டம்..குடை கொண்டு செல்வது அவதியைக் குறைக்கும்..ஜோதிடமும்
அதுபோல” என்று சொல்லலாமா?..அந்தப் படத்தில் இருப்பது கத்தியா..கன்னக்கோலா ஐயா? --செங்கோவி/////

கன்னக்கோலா? கன்னக் கோலை வைத்து இங்கே என்ன பாடம் நடத்தமுடியும்?

SP.VR. SUBBAIYA said...

/////kmr.krishnan said...
//"சுய நலம் மிகுந்து விட்டது. பணத் தேடலின் விளைவாலும், வீடு, வாசல், நிலம் நீச்சு என்று சொத்து

சேர்ப்பதன் விளைவாலும் பலர் தங்களது நல்ல இயல்புகளை இழந்துவிட்டார்கள்"//.
வாஸ்தவமான பேச்சு.!சொத்துதான் முன்னால் வந்து நிற்கிறது.உறவுகள் பின் தங்கி விட்டன./////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

/////vprasanakumar said...
sir, enraiya topic migavum nanraka irundhadu.
migavum adhigam makkal nimmidhi & satisfaction rendum marandhu vittaragal.
inriya kaala kattatiruku idhu migavum avasaiyamana topic.
mikka mazhgichi ayya.
vazhga ungal sindhanai.
nandri ayya./////

சைடு பாரில் ஆங்கிலத்தின் மூலம் தமிழில் தட்டச்சும் வசதி உள்ளது. ஒருமுறை முயன்று பாருங்கள்

SP.VR. SUBBAIYA said...

///arthanari said...
பணம் பத்தும் செய்யும்.ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா.////

இரண்டும் தொடர்பில்லாதவை!:-)))

SP.VR. SUBBAIYA said...

/////Jawahar said...
ஐயா,
வாரியாரின் கருத்துக்களை மேற்கோள் காட்டியது நன்று. படத்திலிருக்கும் பொருளை விட தங்களின்

மணியான எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அதிலும் copyrights போன்ற சொற்கள், தாங்கள் இணையதளம் அமைக்கும் பணியில் பல மடங்கு வேகத்திலிருப்பதை அறிகின்றேன்!!. வாழ்த்துக்கள்!
-‍ஜவகர்////

உண்மைதான். ஜனவரி 20ற்குள் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

SP.VR. SUBBAIYA said...

/////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
//////// படத்தில் இருப்பது என்ன? தெரிந்தவர்கள் சொல்லலாம்//////////
class room 2007.blog spot .com
C copy rights க்கு முழுப் பாது காப்பு கிடைக்க வில்லை.திருடுபவர்களுக்கு சாதகமாக உள்ளது
எனவே தற்போது முழுப் பாது காப்புடன்,
/////இனிமேல் திருடர்கள் நுழையாமல் தடுப்பதற்கு, எழுதுபவற்றில் முக்கியமானபாடங்களுக்காக தனி இணைய தளம் தயாராகிக் கொண்டிருக்கிறது. உண்மையில் ஜோதிடத்தில் ஆர்வம்உள்ளவர்களை மட்டும் அதில் ///////
சேர்ந்து பாடங்களைப் பாதுகாப்புடன் இருந்துக்கொண்டு படித்துப் பயன் பெறலாம்.
* * * * * * * * * * * ** * * **
எனக்கு மனதில் தோன்றியதைப் பதிவு செய்துள்ளேன் .
நன்றி!
தங்களன்புள்ள
வ.தட்சணாமூர்த்தி//////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Vinoth said...
அது கத்தி மாதிரியிருக்கு...
ஆன கத்தி நேரா இருக்குமே..//////

சரியான பதில் இல்லை! பொறுத்திருங்கள். விளக்கம் நாளை வரும்!

SP.VR. SUBBAIYA said...

/////Uma said...
அடுத்த பகுதிக்காக waiting////

நல்லது. நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

//////Kvp said...
//////// படத்தில் இருப்பது என்ன? தெரிந்தவர்கள் சொல்லலாம்//////////
அரிவாள்மனை??////

அரிவாள்மனை இப்படியா இருக்கும்?

SP.VR. SUBBAIYA said...

////தமிழ்மணி said...
சிறப்பான பதிவு ஐயா. பொதுவான பதிவு என்றாலும் இதை எனக்கான பதிவாகவே எடுத்துக்கொள்கிறேன்.
என்னுடைய இன்றைய மனநிலைக்கு ஒரு விதத்தில் பதிலாக அமைந்துள்ளது .... நன்றி//////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////ilayaraja said...
button knife/////

இல்லை! இல்லை! இல்லவே இல்லை!

SP.VR. SUBBAIYA said...

////Pallathur Ramanathan said...
Our Teacher has given a suspense with his words regd the topic and picture also today,
I think the picture given is a Folding knife, which is used in olden days./////

செட்டி நாட்டுக்காரர் நீங்கள். உங்களுக்குக்கூடவா தெரியவில்லை?

SP.VR. SUBBAIYA said...

/////minorwall said...
பிச்சுவா கத்தி../////

இல்லை! இல்லை! இல்லவே இல்லை!

SP.VR. SUBBAIYA said...

//////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு
/////////நமது பிரச்சினைகள், துன்பங்கள் ஆகியவற்றை எல்லாம் இறைவனிடம் விட்டு விட்டு, அவன்
பார்த்துக்கொள்வான் என்று நம்பிக்கையோடு இருக்க வேண்டும். /////////// ////////தெரிந்தோ அல்லது தெரியாமலோ அந்த ஓட்டுனரிடம் ஏற்படும் நம்பிக்கை, ஏன் உங்களுக்கு இறைவன்
மேல் இல்லை?/////
/////“இறைவன் மேல் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால், இந்த ஜோதிடம், ஜாதகம் போன்ற புண்ணாக்குகளை
எல்லாம் விட்டு விடலாம் இல்லையா?”///////
ஓட்டுனரை விட இறைவனிடம் நம்பிக்கை அதிகமாக இருப்பதால்,
ஓட்டுனரை இறைவன் நல்லபடியாகவே வழி நடத்துவார்,எல்லாம் அவர்(கடவுள்)பார்த்துக்கொள்வார் என்ற எண்ணம் மேலோங்கி ஓட்டுனரப்பற்றி நினைத்துப் பார்ப்பதே இல்லை. தானாகவே அவரவரின் விதிப்படிநல்லபடியாகவே அனைத்தும் நடந்துவிடும் என்று எதிர்ப் பார்க்கிறார்கள் .
இறைவனை அடைந்து ஞாயமானவற்றைப் பெறுவதற்கு அதிகப்படியான உழைப்புத் தேவைப் படுகிறது.
அந்த உழைப்பின் படி பலனை பெற முயற்சித்தாலும் அனைவருக்கும் அது சாத்தியப்படுவதில்லை.
இறைவன் மேல் நம்பிக்கை ஏற்படுத்திக்கொண்டு சாதனை செய்வதற்கு,
விதிக்கப் பட்டுள்ள விதி யாது என்பதை அறிந்துக் கொள்வதற்கு ஜோதிடம்
உதவியாக இருக்கும்.. எந்த நேரத்தில், எந்த நாளில் தொடங்கி எத்தனை நாட்களுக்குள் முடிக்கவேண்டும்?
எந்த கால கட்டத்தில் சாத்தியமாகும் இதற்கெல்லாம் ஜோதிடம் தேவைப் படுகிறது
ஜோதிடத்தில் ஒன்று (லக்னம்) முதல் பனிரண்டு கட்டங்களுக்கும் உள்ள பலன்களை இறைவன் மேல்
நம்பிக்கை வைத்து சாதகமாக பலன்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஜாதகம் தேவையாகிறது.
நன்றி!
தங்களன்புள்ள
வ.தட்சணாமூர்த்தி/////

உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

SP.VR. SUBBAIYA said...

//////kmr.krishnan said...
திரு வி பிர‌சன்னகுமார் அவர்களே!தமிழில் எப்படி பின்னூட்டாம் இடுவது என்பது வகுப்பறையின் வலது
பக்க ஓரத்தில் உள்ள அறிவுப்புக்களில் உள்ளது. அதனை படித்து பார்த்து இப்போது தமிழை ஆங்கிலத்தில்
எழுதுவது போலவே எழுதினால் அது தமிழ் எழுத்துக்களிலேயே வெளியாகும்./////

அதானே! சைடு பாரை பலர் பார்ப்பதில்லை! அதில் உள்ள செய்திகள் அவர்களுக்குத் தெரியாமல் போகின்றது!

SP.VR. SUBBAIYA said...

/////Srinath said...
Dear Vaathiyaar,
Looks like you are decided to open the knife (Knife --- legal proceedings for internet-thieves)
Regards,
Srinath G/////

இல்லை. தவறு! விளக்கம் நாளைய பதிவில்

SP.VR. SUBBAIYA said...

//////Ram said...
Dear Sir,
agains seems to be precursor for next big lessons, thanks for starting the same./////

ஆமாம். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Arulkumar Rajaraman said...

Dear Sir

Arumayana Thodar...

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

MALA said...

Sir..
It is Folding knife