மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.12.10

செல்வம் வேண்டுமா? இதைப் படியுங்கள்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
செல்வம் வேண்டுமா? இதைப் படியுங்கள்!
செல்வத்தை வேண்டாமென்பவர்கள் யார் இருக்கிறார்கள்? ஆண்டி முதல் அரசன் வரை (அரசில் உள்ளவர்கள் வரை) அனைவரும் செல்வத்தைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இல்லாதவனும் தேடுகிறான். இருப்பவனும் தேடுகிறான்.

தேடாமல், அதுவாக வர வழியிருக்கிறதா?

இருக்கிறது!

அன்னை லெட்சுமி தேவியை மனம் உருக வணங்குங்கள். செல்வம் உங்கள் வீடு தேடி வரும். உங்கள் இருப்பிடம் தேடி வரும் (சிலர் வீட்டைவிட்டு தூர தேசங்களில் இருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த வரி)

லட்சுமி மீது கொண்ட நிகரில்லா நேயத்தால்தான், திருமாலுக்கே செல்வம் வந்ததாம். வந்து கொண்டிருக்கிறதாம்.

கவியரசர் கண்ணதாசனின் பாடலைக் கீழே கொடுத்துள்ளேன். படித்துப்பாருங்கள். பாராயணம் செய்து பயன் பெறுங்கள்.

அன்புடன்
வத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மாலவன் மார்பில் நிற்கும்
  மங்கலக் கமல செல்வி!
மரகத மலரில் மொய்க்கும்
  மாணிக்க கரும்பு போன்றாய்
நீலமா மேகம் போல
  நிற்கின்ற திருமா லுந்தன்
நேயத்தால் மெய்சி லிர்த்து
  நிகரிலா செல்வம் கொண்டான்
மாலவன் மீது வைத்த
  மாயப் பொன் விழிஇ ரண்டை
மாதுநீ என்னி டத்தில்
  வைத்தனை என்றால் நானும்
காலமாக் கடலில் உந்தன்
  கருணையால் செல்வம் பெற்று
கண்னிறை வாழ்வு கொள்வேன்
  கண்வைப்பாய் கமலத் தாயே!

- கவியரசர் கண்ணதாசன்
பொன்மழைப் பாடல்கள் என்னும் தலைப்பில் கவியரசர் எழுதியது மொத்தம் 336 வரிகளாகும். துவக்க வரிகளை மட்டும் கொடுத்துள்ளேன். மற்ற வரிகள் வேண்டுவோர், நூலை வாங்கிப் படிக்கவும். புத்தகக் கடைகளில் கிடைக்கும்
------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

12 comments:

  1. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

    கவிஞர் கண்ணதாசன் அவர்கள் இயற்றிய பொன்மழைப்
    பாடல்களில் இருந்து தாங்கள் அளித்துள்ள
    பகுதி மிகவும் எளிய நடையில் எழுதப் பெற்று சுலபமாக பொருள் விளங்கும் வகையில் அமைந்துள்ளது.
    நன்றி!
    தங்களன்புள்ள
    வ.தட்சணாமூர்த்தி
    2010 12 10

    ReplyDelete
  2. உண்மைதான் அய்யா..

    இறையன்பே நிறைந்த செல்வம்.

    நான் தங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் கிடைத்ததா?

    பணி மிகுதியில் உங்களை தொந்திரவு செய்ததற்கு மன்னிக்கவும்..

    தங்கள் பதில் வேண்டி ..

    மாணாக்கன்.

    ReplyDelete
  3. ஆசிரியருக்கும் எனது சக வகுப்பறை மாணவர்களுக்கும் வணக்கம்.
    சொந்த அலுவல் பொருட்டு சில நாட்கள் வெளியூர் பயணம் சென்று திரும்பினேன்....

    கடந்த அனைத்துப் பதிவுகளும்... அருமை....
    வாரமலர்களில் நந்தவனப் பூக்களாய்ப் பூத்து குலுங்கி, மனம் எங்கும் மணம் பரப்பிய அற்புதப் படைப்புகள் அதனுள் ஆழ்ந்த பொருள்கள் அத்தனையும் படித்து கண்களும் மனமும் கசிந்தது.....
    யாருக்கு எது தேவையோ... அதை அப்போதுத் தரும் அற்புத குரு.....
    மீனாட்சி (சோம) சுந்தரத்தின் சுந்தரமிகு கல்யாணக் காதல் அரங்கேற்றம், ஆகா அற்புதம்.....

    அப்பாவும், சித்தப்பாவும் அவர்தம் அழகான மனம் கொண்ட குழந்தைகளும்.... ஒருகணம் அவர்களின் சிறப்பை சீர் தூக்கி காண்பித்தது.....
    நடந்தது யாவும் விதி வழி என்றாலும் அதிலும் உயர்மதி செலுத்தி நடாத்தியச் செயல்கள் அற்புத உணர்வைத் தந்தது....

    தன்னை அறிந்த மனிதர், தன்னிலை அறிந்த மனிதர், தன்னாலும் பிறருக்கு உதவ முடியும் என்று வாழ்ந்துக் காட்டிய அற்புத மனிதர்.
    உழைப்பு, பிறருக்கு உதவும் குணம் இவை யாவும் உடல் சம்பந்தப் பட்டது அல்ல அது உயர்ந்த மனம் சம்பந்தப்பட்டது என்பதை நிரூபிக்க வாழ்ந்துக் காட்டிய பெரியப்பாவும், அவரின் நண்பரும்.... நம்மில் யாவும் உயர்ந்த மனிதர்களாய் இருந்திருக்கிறார்கள்.... இது போன்ற மாமனிதர்கள் தான் இந்தக் கலியுகக் கண்ணன்கள் என்று சொல்லத் துணிகிறேன்.... அற்புதப் பதிவு தோழி உமா.

    ReplyDelete
  4. வாத்தியார் ஐயா வணக்கம்.

    "பாசமலர்" படத்தில் "சிவாஜிகணேசன்" அவர்கள் அன்பு தங்கை "சாவித்திரியை" பார்த்து கேட்பார்கள் உனது மகளின் பெயர் என்ன வென்று அதற்க்கு பதில் சாந்தி .............

    எனக்கு வாழ்வில் கிடைக்காத அமைதியை உனது மகளுக்கு சாந்தி என்று பெயர் வைத்துள்ளாயா என்பார் கண்கலங்க....

    இன்றை பாடத்தினை பார்த்த மாத்திரத்தில் மனதில் தோன்றியது என்னோ மேற்கண்ட வசனம் தான்

    கிடைக்க வேண்டி நேரத்தில் கிடைக்காத

    " செல்வம், கல்வி"

    இரண்டுமே அமைதியை தருவதில்லை தமக்கு . .

    ReplyDelete
  5. செல்வம் வேண்டி, செந்தாமரை தேவி கடைக்கண் பார்வை வேண்டி நின்ற செந்தமிழ்ச் செல்வன் கண்ணதாசனின் வரிகளுக்கு பின்னால்....
    அவரின் வரிகளில் திளைத்து....... வந்து விழுந்த சில வார்த்தைகள் அதன் பின் நிற்கட்டுமே....

    தனம் தருவாள்
    தானம் செய்ய தாராள
    குணம் தருவாள்

    மதிமயங்கா மனம் தருவாள்
    மங்களம் அனைத்தும் தருவாள்
    மாயக் கண்ணனின் கண்மணியவள்
    செங்கமலம் அமர்தேவி தாள் பணிவோமே!

    ReplyDelete
  6. அற்புதப் பதிவு தோழி உமா.//

    பாராட்டிற்கு மிக்க நன்றி ஆலாசியம்.

    ReplyDelete
  7. Dear Sir

    Vendum Vendum Selvam Vendum... Venduvana Ellam Vendum. Lakshmiyai Venduvom.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  8. லக்ஷ்மி வீட்டுற்க்குள் வந்த உண்ர்வு... நன்றிகள் பல‌

    ReplyDelete
  9. தேவியின் கடை கண் நோக்கை தினமும் நினைந்து போற்றல்,

    சேவகனுக்கும் எல்லா செல்வங்களும்,

    சேர்த்து வைக்கும் மூவகை பொறிகளாலும்,

    முரஹரன் இதயத்து உற்ற ஆவியாம் அலர்மேல்மங்கை,

    அடி மலர் வணங்குகின்றேன்.

    இதை நன்றாக மன பாடம் செய்தாலே போதும், அன்னை லெட்சுமி தேவியை மனம் உருக வணங்குங்கள். செல்வம் உங்கள் வீடு தேடி வரும்.

    இதை நான் தினமும் செய்கின்றேன்.

    யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்.

    நன்றி ஐயா.

    ReplyDelete
  10. அருமையான வரிகள்.

    ReplyDelete
  11. பெற்ற செல்வம் நிலைக்க வழி சொல்லுகங்க வாத்தியார் அய்யா அன்புடன் பாலாஜீ கண்ணன்.

    ReplyDelete
  12. அய்யா

    அருமையான வரிகள்! லக்ஷ்மி தரிசனம் கிடைத்தது போல் ஒரு பிரமை!

    நன்றி!

    Sridhar

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com