மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.12.10

மகிழ்ச்சியும் வருத்தமும் ஒருசேர வரும்போது!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மகிழ்ச்சியும் வருத்தமும் ஒருசேர வரும்போது!

பாரதிராஜா  படங்களில் வரும்  ஒரு  கிராமத்தை  நினைத்துக்
கொள்ளுங்கள். அங்கே நாட்டாமைக்காரனின் வீடு.

அன்று துவாதசி. வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த நாள்.

நாட்டமைக்காரரின் மனைவி அதிகாலையிலேயே எழுந்து நன்றாக சமையல் செய்து, நாட்டாமைக்காரர் உட்பட, சொந்த பந்தங்கள் என்று மொத்தம் 20 பேர்களுக்கு சாப்பாடு பறிமாறினார்.

அற்புதம் என்று சொல்லியவாறு அனைவரும் சாப்பிட்டார்கள். துவாதசி ஆகையால் பாரம்பரியச் சமையல். கத்தரிக்காய் புளிக்குழம்பு, கருணைக் கிழங்கு கெட்டிகுழம்பு, லெட்சுமி குழம்பு (இது என்ன குழம்பு என்பதை வேறு ஒரு நாள் தனியாக எழுதுகிறேன்.) மஞ்சள் தூவி வாழைக்காய் பொரியல், பரங்கிக்காய் கூட்டு, புடலங்காய் துவட்டல், அகத்திக்கீரை பொரியல், மாங்காய் பச்சடி, வடை, பருப்பு, நெய், அப்பளம், அரிசி - வெல்லம், முந்திரி போட்டுப் பாயாசம், கெட்டித்தயிர், நெல்லிக்காய் ஊருகாய்.

சமையல் அதி ருசியாக இருந்தது. வந்திருந்த அனைவரும் ஒரு பிடிபிடித்தனர். நாட்டாமைக்காரரும் ஆனந்தமாகச் சாப்பிட்டார். வந்தவர்கள் எல்லாம் சென்று விட்டனர். நாட்டாமையின் மனைவி, தன் மகளைத் துணைக்கழைத்துக் கொண்டு, பக்கத்துக் கிராமத்தில் இருக்கும் தன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

“மதியம் வருகிறேன். கதவைத் தாள் போட்டுக்கொள்ளுங்கள்” என்று நாட்டாமையிடம், ஒரு முறைக்கு, இரு முறைகள் சொல்லிவிட்டுத்தான் போனார்.

பகலில் எவன் வரப்பொகிறான் என்று நாட்டமையும் அதைச் செய்யவில்லை.

காலையில் வயிறுமுட்டச் சாப்பிட்டால் தூக்கம் வராதா என்ன? தூக்கம் கண்ணைச் சொருகியது. கயிற்றுக்கட்டிலை, முற்றத்துக்குச் செல்லும் நடையில் போட்டு, நாட்டாமை சற்று நேரம் கண் அயர்வோம் என்று படுத்துக்கொண்டார். தென்றல் வருட, நித்திராதேவி அணைக்க நாட்டாமை நன்றாகத் தூங்கிவிட்டார்.

தூக்கத்தில் மனதுக்கு இதமாக இரு கனவு!

நாட்டாமைக்கு பெரிய பதவி கிடைத்துவிடுகிறது. மத்திய அரசில் நிதி அமைச்சராகி விடுகிறார். கட்சிக்கும் அவர்தான் பொருளாளர். அவருடைய ஒரே மகளுக்கு, சென்னை ராஜேஷ்வரி திருமண மண்டபத்தில் திருமணம் நடக்கவுள்ளது. அவருடைய நண்பர்களும், உதவியாளர்களும், கட்சித் தொண்டர்களும் திரளாகத் திரண்டு பம்பரமாக வேலை செய்கிறார்கள்.

முதல் நாள் இரவு மாப்பிள்ளை அழைப்பு. அந்த விருந்தே, பதினோரு வகைப் பலகாரங்களுடன் அருமையாகப் பறிமாறப்பெற்றது. (அவைகள் என்று KMRK  கேட்டால் சொல்லலாம் என்றுள்ளேன்) மொத்தம் பத்தாயிரம் பேர்களுக்குமேல் விருந்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களில் கணிசமான அளவு பிரபலங்கள்.

பாதுகாப்பிற்காக வந்த காவல் துறையினரே 500 பேர்கள். மற்றவர்களை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.

விடிந்தால் கல்யாணம்!

அப்போதுதான் அது நடந்தது.

முதுகில் பொளேர் என்று அடி விழுந்தது. எழுந்து உட்கார்ந்து விட்டார். கண்டது கனவு என்பதும், முதுகில் அடித்தது மனைவி என்றும் பத்து நொடிகளுக்குப் பிறகு புரிந்தது.

பகல் கனவு என்றால் பலிக்கும் என்பார்களே? விளங்காதவள் வந்து அடித்து எழுப்பிவிட்டாளே என்று கோபம் முட்டிக்கொண்டு வந்தது.

“ஏன்டா செல்லம் எழுப்பினே? தூங்கும்போது எழுப்பலாமா? எத்தனை பெரிய பாவம் தெரியுமா?” என்று பிரகாஷ்ராஜ் குரலில் இவர் கேட்கவும், அந்த அம்மணி அதற்குச் சற்றுக் குறையாத பாவத்துடன் பதில் சொன்னார்கள்.

“நல்லா இருக்குதே சாமி! இப்படிக்கதவைத் திறந்து போட்டுவிட்டுத் தூங்கினால் என்னத்தைச் சொல்வது? திருடர்கள் உள்ளே நுழைந்து இரும்பு அலமாரியை உடைத்து, உள்ளே இருந்த  வெள்ளிச் சாமான்களை
யெல்லாம் லவட்டிக்கொண்டு போயிருக்கிறார்கள்? மொத்தம்
பத்துக்கிலோ வெள்ளிச்சாமானும் களவு போயிருக்கிறது. தங்க நகைகளெல்லாம் வங்கி லாக்கரில் இருப்பதால், தப்பிப் பிழைத்திருக்கிறது.”

நாட்டாமை கிஞ்சித்தும் கவலைப் படாமல் சொன்னார்: “ வெள்ளிச் சாமன்கள்தானே போயிருக்கிறது. கவலைப்படாதேடா செல்லம். அடுத்த வெள்ளாமையில் செய்து தருகிறேன். என் மகளின் கல்யாணத்தைப் பார்க்க விடாமல் எழுப்பிவிட்டாயே?”

“என்ன மகளின் கல்யாணமா? என்ன உளறுகிறீர்கள்” ஒன்றும் புரியாமல் அம்மணி அப்பிராணியாகக் கேட்டார்கள்.

“அதெல்லாம் சொன்னால் உனக்குப் புரியாது” என்று சொன்ன நாட்டாமை, மீண்டும் படுத்து உறங்க ஆரம்பித்துவிட்டார் - விட்ட கனவு தொடரும் என்ற நைப்பாசையில்

உண்மைதான். மகளின் திருமணத்தைக் கண் குளிரக் காணும் அவரது மகிழ்ச்சி பெரிதா? அல்லது களவு போனதற்காக உட்கார்ந்து வருத்தப்படும் மனநிலை முக்கியமா?

நீங்களே சொல்லுங்கள்!

கிராமத்தானின் கதை என்று ஒரு பத்திரிக்கையில்முன்பு படித்த பத்து வரிக்கதை இது. ஊதிப் பெரிதாக்கி என்  நடையில் எழுதியிருக்கிறேன். 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
”வாத்தி (யார்) எதற்காக இந்தக் கதை?”

“என் நிலையும் அதேதான். வகுப்பறையில் பின் தொடரும் மாணவர்களின் எண்ணிக்கை 2,000 ஐத்தைத் தாண்டியதற்காக நான் மகிழ்ச்சி கொள்ளவா? அல்லது 4 வருட உழைப்பில் எழுதப்பெற்ற எனது பதிவுகள் திருட்டுப் போனதற்குக் கவலைப் படுவதா? எதைச் செய்ய வேண்டும்? நீங்களே சொல்லுங்கள்!:-))))”

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++===


வாழ்க வளமுடன்!

21 comments:

  1. அதிகாலைப்பொழுது வணக்கம் ஐயா!

    ஐயா! நீங்களே இப்படி கலங்கி போகி நின்றால் எப்படி ஐயா
    ( இதை எழுதும்பொழுது நடிகர் வடிவேலுவின் ஒரு படத்தின் நகைச்சுவைதான் நினைவீர்க்கு வருகின்றது.அதிலைகூட நாட்டாமை உட்பட திருட்டு வழக்கு தான் சபைக்கு வரும் )

    2000 மாணவர்களை பெற்றது பெரும் பாக்கியம் அல்லவா?
    தர்மத்தை போதிக்கும் தங்களுக்கே தர்மத்தை பற்றியும் கூற வேண்டுமா ஐயா!

    பாரதத்தில் ஒரு சம்பவம்.
    கொடைவள்ளல் கர்ணன் எண்ணை தேய்த்து குளிக்க வேண்டி எண்ணை தேய்த்து கொண்டு உள்ளார் அப்பொழுது ஒரு வழிபோக்கு யாசிகன் யாசனம் தேடி கர்ணனை நோக்கி வருகின்றார் . அவ்வாறு வந்தவர் கர்ணன் உடல் முழுவதும் எண்ணை தேய்த்து இருப்பதை அறிந்தவர் பின்னர் வருகின்றேன் என்று கூறிவிட்டு செல்ல முற்படும் பொழுது அவரை தடுத்து கர்ணன் எண்ணை ஊற்றி வைக்க வைத்து இருந்த தங்க குமிழியை தருகின்றார் அந்த குமிழியில் இருந்த எண்ணையை வலது கையில் ஊற்றிக்கொண்டு இடது கையால். ஆனால், வந்த யாசகனோ வாங்க மறுக்கின்றார் . அப்பொழுது நம்ம ஆள் கர்ணன் கூறுகின்றார் ஐயா மனிதனின் மனம் மாறக்கூடியது ஆதலால் தாங்கள் தற்பொழுது கிடைப்பதை சாஸ்திரம் பாராமல் வாங்கி செல்லுங்கள் என்று .

    ஆகையால் வாத்தியார் ஐயா மனம் தளராமல் மேற்கண்டது போல . மேலும், தங்களால் பல வழிபோக்கு யாசகன்கல் செல்வந்தன் ஆகினார்கள் என்று வைத்துகொள்ளுங்களேன் ஐயா!

    வேறு என்னத்தை ஐயா செய்ய முடியும் சொல்லுங்க ?

    ReplyDelete
  2. /////kannan said...
    அதிகாலைப்பொழுது வணக்கம் ஐயா!
    ஐயா! நீங்களே இப்படி கலங்கி போகி நின்றால் எப்படி ஐயா
    ( இதை எழுதும்பொழுது நடிகர் வடிவேலுவின் ஒரு படத்தின் நகைச்சுவைதான் நினைவீர்க்கு வருகின்றது.அதிலைகூட நாட்டாமை உட்பட திருட்டு வழக்கு தான் சபைக்கு வரும் )
    2000 மாணவர்களை பெற்றது பெரும் பாக்கியம் அல்லவா?
    தர்மத்தை போதிக்கும் தங்களுக்கே தர்மத்தை பற்றியும் கூற வேண்டுமா ஐயா!
    பாரதத்தில் ஒரு சம்பவம்.
    கொடைவள்ளல் கர்ணன் எண்ணை தேய்த்து குளிக்க வேண்டி எண்ணை தேய்த்து கொண்டு உள்ளார் அப்பொழுது ஒரு வழிபோக்கு யாசிகன் யாசனம் தேடி கர்ணனை நோக்கி வருகின்றார் . அவ்வாறு வந்தவர் கர்ணன் உடல் முழுவதும் எண்ணை தேய்த்து இருப்பதை அறிந்தவர் பின்னர் வருகின்றேன் என்று கூறிவிட்டு செல்ல முற்படும் பொழுது அவரை தடுத்து கர்ணன் எண்ணை ஊற்றி வைக்க வைத்து இருந்த தங்க குமிழியை தருகின்றார் அந்த குமிழியில் இருந்த எண்ணையை வலது கையில் ஊற்றிக்கொண்டு இடது கையால். ஆனால், வந்த யாசகனோ வாங்க மறுக்கின்றார் . அப்பொழுது நம்ம ஆள் கர்ணன் கூறுகின்றார் ஐயா மனிதனின் மனம் மாறக்கூடியது ஆதலால் தாங்கள் தற்பொழுது கிடைப்பதை சாஸ்திரம் பாராமல் வாங்கி செல்லுங்கள் என்று .
    ஆகையால் வாத்தியார் ஐயா மனம் தளராமல் மேற்கண்டது போல . மேலும், தங்களால் பல வழிபோக்கு யாசகன்கல் செல்வந்தன் ஆகினார்கள் என்று வைத்துகொள்ளுங்களேன் ஐயா!
    வேறு என்னத்தை ஐயா செய்ய முடியும் சொல்லுங்க ?/////

    அப்பன் இருக்கையில் அடியேனுக்கு ஏது கலக்கம்? கதையின் முடிவைப்பார்த்தீர்களா? அடுத்த வெள்ளாமையில் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு நாட்டாமை கனவைத் தொடர்ந்தார் இல்லையா? அதுபோல நானும் இன்னும் ஊக்கத்துடன் எழுதி இதே 2,000 எண்ணிக்கையை, 2011ஆம் ஆண்டு முடிவதற்குள் 3,000 அல்லது 4,000 ஆக்கிக்காட்டுவேன்! நன்றி

    ReplyDelete
  3. கலங்காதிரு மனமே கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே. கண்ணதாசன்.

    ReplyDelete
  4. ஐயா,

    சைபர் கிரைமில் புகார் கொடுத்தாயிற்றா?..எப்படியும் அவர்கள் பதிவில் இருப்பதை நீக்க வைக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது..முருகனருள் முன்னிற்கும்!

    --செங்கோவி

    ReplyDelete
  5. வாத்தியாருக்கு தெரியாததா? மகிழ்ச்சி தரும் விஷயம் ஆனாலும் வருத்தம் தரும் விஷயமானாலும் சம நிலையில் அல்லவா இருக்க வேண்டும்!

    ReplyDelete
  6. லெட்சுமி குழம்பின் ரெசிப்பி அவசியம் வேண்டும்.(மாமிக்கு செய்து போடவா என்று டெல்லிக்கார அம்மா பின்னூட்டம் இடுவார் பாருங்கள்.}

    ராஜேஸ்வ‌ரி கல்யாண மண்டபத்தில் நடந்த கனவுக் கல்யாண விருந்து பற்றி கேட்டு விட்டேன் அய்யா!அவசியம் பட்டியல் போடுங்கள்.நிற்க.

    தப்பும் தவறுமான தமிழில் வசைபாடத் துவங்கி விட்டார் மாடு ஓட்டுபவர்.
    அவரிடம் நாம் நெருங்கினால் நம் மேல் தான் ந‌ரகல் விழும்.

    ஒருவன் திட்டினான் இப்படி:"டேய்!நீ போய் சாணத்தைத் தின்னு! நரகலைத் தின்னு!நாறலைத்தின்னு!கழுதை மூத்திரம் குடி!"

    கேட்டுக்கொண்டு இருந்தவன் சொன்னான் இப்படி:"நீ போய் லட்டைத் தின்னு!
    ஜிலேபியத் தின்னு!வெள்ளையப்பத்தைத் தின்னு.பழப் பாயசத்தைக் குடி!"

    சண்டையை வேடிக்கைப் பார்த்த நான் இரண்டாமவனைக் கேட்டேன்:"என்ன அவன் உன்னை வாய்க்கு வந்தபடி திட்டறான். நீ என்னடா என்றால் அழகாக பதில் சொல்கிறாயே!?"

    அதற்கு இரண்டாமவன் சொன்ன பதில்: "என்னங்க பண்றது? நான் சாப்பிடற‌து எனக்கு நினைவு வருது.அவன் சாப்பிடறது அவனுக்கு நினைவு வருது!"

    ReplyDelete
  7. sir, nambigai than vazhkai. nallathe nadakum.

    ungalakum, ungal students aagiya engalum, oru kuraiyum varadhu sir.

    ReplyDelete
  8. நாட்டாமை பேரில் பிரபலமான ஆளுங்க எல்லாம் கிரிமினல் கேஸ் விஷயமா போலீசுக்குப் போகும் நிலையில் நீங்க இப்பிடி நாட்டாமைக் கதையை வெளியிட்டுருக்கீங்க..

    கதவைப் பூட்டிட்டு அப்துல் கலாம் சொன்னது போலே கனவை continue பண்ணியிருந்தா இந்தப் பிரச்சினையே இல்லே..இப்பிடி ஆனதுக்கப்புறமாவுது உஷாரா பூட்டிட்டு கனவு காணுங்க..கல்யாணக் கனவோட நிறுத்தினா சரிதான்..நமீதா கனவெல்லாம் வேண்டாம்..சொல்லிட்டேன்..

    ReplyDelete
  9. வாவ் 2000!
    எண்ணிக்கை தொடர வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    விபின்

    ReplyDelete
  10. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    ///////நானும் இன்னும் ஊக்கத்துடன் எழுதி இதே 2,000 எண்ணிக்கையை, 2011ஆம் ஆண்டு முடிவதற்குள் 3,000 அல்லது 4,000 ஆக்கிக்காட்டுவேன்! ////////// நல்ல முயற்சி.
    தங்களின் உழைப்பு என்றும் வீண்போகாது.
    “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்…”
    "நடப்பவை யாவும் நன்மைக்கே"

    தங்களன்புள்ள

    வ.தட்சணாமூர்த்தி
    2010-12-06

    ReplyDelete
  11. Dear Sir

    Kavalai Vidungal Aiyya. Magilchiyanan ninavu onre podhum Aiyya..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  12. Sir ,
    Positive Thinking will give us anything & Everything inducing Happy ,...

    ReplyDelete
  13. in double entry system of accounts, debit will equals the credit. so, if somethings come, there will be something to go out.

    ReplyDelete
  14. வருத்தப்படவேண்டாம். முருகனே பார்த்துக்கொள்ளட்டும் என்று விட்டு விடுங்கள். (கனவைத் தொடருங்கள்).

    ReplyDelete
  15. மாமிக்கு செய்து போடவா என்று டெல்லிக்கார அம்மா பின்னூட்டம் இடுவார் பாருங்கள்.}//

    ஹி ஹி அதான் நீங்களே சொல்லிட்டேளே?

    ReplyDelete
  16. ஐயா,
    கீதையின் சாரத்தை சற்று மனதில் வையுங்கள்.
    கடமையை செய்யுங்கள்.....
    நடப்பவை யாவும் நன்மைக்கே

    என்றும் அன்புடன்
    இரா.புரட்சிமணி

    ReplyDelete
  17. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    களவு போன வெள்ளிச்சாமான்கள் தொலையட்டும், கைவசம் உள்ள தங்கம்
    மற்றும் வைர நகைகளை காப்பாற்ற இனியாவது வீட்டை பூட்டி வையுங்கள்.
    அன்புடன், அரசு.

    ReplyDelete
  18. We students know who is the real teacher and who have great skills to bring peoples togather for learning one of the divine art gave by god. Dont worry sir your effort will not go waste.We'll support you.

    ReplyDelete
  19. ஐயா,

    எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். இதனால் வகுப்பறை மேலும் பிரபலம் ஆகும், மிக விரைவிலேயே 3000 எட்ட உதவும் என்று நம்புகிறேன்.

    நன்றி,
    சுதாகர்

    ReplyDelete
  20. வணக்கம். பதிவுத் திருட்டைத் தடுக்க ஒரு வழி என்ற என் பதிவைப் பார்க்கவும். அனேகமாக உங்களுக்கு பயன்படும். http://karthikai.com/2011/09/06/stop-article-plagiarism/

    இதில் நீங்கள் தான் புகாரளிக்க வேண்டும் என்பதில்லை, மாணவர்கள் அல்லது யார் வேண்டுமானாலும் புகாரளிக்கலாம். அதிகப்படி புகார்கள், தளத்தையே முடக்கும்படி கூகிளைத் தூண்டும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com