மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.12.10

எதுக்கு எது சாட்சி?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முருகனின் அறுபடை வீடுகளையும், அங்கே உறையும் முருகப்பெருமானின் சிறப்புக்களையும் கவிஞர் ஒருவர்  24 வரிகளில் சிறப்பாகச் சொல்லியிருக் கிறார். இன்றைய பக்தி மலருக்காக அதைப் பதிவிட்டிருக்கிறேன். படித்து மகிழுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எதுக்கு எது சாட்சி?

சுப்பன் சொன்னான் மந்திரத்தை
   சொக்கன் கேட்டான் தலைகுனிந்து
இப்புவி மயங்குது காட்சிகண்டு
   இதற்கு சாட்சி சுவாமிமலை

மாம்பழம் கேட்டது இருபிள்ளை
   மதியால் வென்றது முதல்பிள்ளை
மலைமேல் நின்றது மறுபிள்ளை
   மயிலுமே சாட்சி பழநிமலை

தீயவன் சூரனைக் கொன்றவனே
   செந்தூர் கடலினைக் கொண்டவனே
மாயோன் மருகன் முருகையனே
   மலரொன்று சாட்சி திருச்சீரலை

கானகம் வாழ்ந்தது புள்ளிமயில்
   கந்தனை மணந்தது வள்ளிமயில்
வானகம் வாழ்த்துது பூத்தூவி
   யானையே சாட்சி தணிகைமலை

செந்தமிழ் பாவை தெய்வானை
   செந்தில் முருகனைக் கைபிடித்தாள்
பைந்தமிழ் வாழ்த்திடும் மனக்காட்சி
   பரங்குன்றத்தின் திருக் காட்சி

கோதையர் இருவரும் அருகிருக்க
   குமரனும் மலையினில் கொலுவிருக்க
மாமனும் அன்பால் வாழ்த்திசைக்க
   மங்களக் காட்சி சோலைமலை!

- ஆக்கம்: கவியரசர் கண்ணதாசன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
1.சுவாமிமலை

2. பழநி


3. திருச்செந்தூர்

4. திருத்தணி


5. திருப்பரங்குன்றம்
                
6.பழமுதிர்ச்சோலை

முருகனின் அறுபடை வீடுகள் 1. திருப்பரங்குன்றம், 2. திருச்செந்தூர், 3. பழநி, 4 சுவாமிமலை, 5. திருத்தணி, 6. பழமுதிர்சோலை எனும் வரிசையில் சிறப்பித்துக்கூறப்படுவது வழக்கம். ஆனால் இங்கே பாடல் வரிகளுக்குத் தகுந்தாற்போல படைவீடுகளின் படங்களைக் கொடுத்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

20 comments:

  1. அறுபடை வீடுகளைப் பற்றிய கவிஞரின் பாடலையா, 6 படைவீட்டுக் கோயில்களை அருமையாக வெளியிட்ட உங்களையா,யாரைப் பாராட்டுவது
    முதலில் என்று திகைக்கிறேன். நீங்கள் எஸ் ஏ பி போன்றவர்களிடம் சிறு வயதிலேயே சேர்ந்திருக்க வேண்டும்.நல்ல வார்ப்பில் போட்டு சொக்கத் தங்க ஆபரணமாக வெளி வந்திருபீர்கள் அய்யா!‌

    ReplyDelete
  2. இழந்தது கண்ணதாசனை மட்டுமல்ல இனிய தமிழயும்.

    ReplyDelete
  3. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    ,இன்றைய பக்திமலரில்,
    அறுபடை வீடுகள் பாடல் மற்றும் படங்கள் நன்றாக உள்ளது.காலை வேளையில் அறுபடை வீடுகளின் தரிசனம் அளித்த தங்களுக்கு
    நன்றி!வணக்கம்.
    தங்களன்புள்ள
    வ.தட்சணாமூர்த்தி
    2010-12-03

    ReplyDelete
  4. காலையில் எழுந்த உடன்
    கண்கொள்ளா காட்சி
    ஆறுபடை வீடுகளின்
    அற்புத மாட்சி !!

    சுப்பு ரத்தினம்.
    http://kandhanaithuthi.blogspot.com

    ReplyDelete
  5. நன்றியோ நன்றி வாத்தியாரே..!

    இன்று முதல் தளமாக அப்பன் முருகனின் அறுபடை வீடுகள் பற்றியதே கண்ணுக்குக் கிடைத்துள்ளது..!

    எல்லாம் அவன் செயல்..! நன்றி..!

    ReplyDelete
  6. ஐயா,

    இன்று முருகனுக்கு விரதமிருக்கும் நான், உங்கள் பதிவத் திறந்தால் அங்கும் முருகன்..மிக்க மகிழ்ச்சி ஐயா.

    --செங்கோவி

    ReplyDelete
  7. //////kmr.krishnan said...
    அறுபடை வீடுகளைப் பற்றிய கவிஞரின் பாடலையா, 6 படைவீட்டுக் கோயில்களை அருமையாக வெளியிட்ட உங்களையா,யாரைப் பாராட்டுவது முதலில் என்று திகைக்கிறேன். நீங்கள் எஸ் ஏ பி போன்றவர்களிடம் சிறு வயதிலேயே சேர்ந்திருக்க வேண்டும். நல்ல வார்ப்பில் போட்டு சொக்கத் தங்க ஆபரணமாக வெளி வந்திருபீர்கள் அய்யா!‌/////

    எ.ஏ.பி யிடம் இருந்து வந்த ஜாம்பவான்கள் எல்லாம் இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. பத்திரிக்கைகளில் யார் யாரோ புதியவர்கள். எல்லாம் கலி செய்யும் வேலை! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சார்!

    ReplyDelete
  8. ////arthanari said...
    இழந்தது கண்ணதாசனை மட்டுமல்ல இனிய தமிழையும்.////

    ஆமாம் உண்மை நண்பரே!

    ReplyDelete
  9. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    ,இன்றைய பக்திமலரில்,
    அறுபடை வீடுகள் பாடல் மற்றும் படங்கள் நன்றாக உள்ளது.காலை வேளையில் அறுபடை வீடுகளின் தரிசனம் அளித்த தங்களுக்கு நன்றி!வணக்கம்.
    தங்களன்புள்ள
    வ.தட்சணாமூர்த்தி////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  10. /////sury said...
    காலையில் எழுந்த உடன்
    கண்கொள்ளா காட்சி
    ஆறுபடை வீடுகளின்
    அற்புத மாட்சி !!
    சுப்பு ரத்தினம்.
    http://kandhanaithuthi.blogspot.com/////

    சுப்பு ரத்தினம் சார், எங்கே ஒரு மாதத்திற்கும் மேலாக நீங்கள் கண்னில் படவில்லை. இந்தப் பாட்டைப் பதிவிடும்போதே நினைத்தேன் - நீங்கள் வருவீர்கள் என்று! வந்து விட்டீர்கள்! எல்லாம் முருகன் செயல்!

    ReplyDelete
  11. /////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    நன்றியோ நன்றி வாத்தியாரே..!
    இன்று முதல் தளமாக அப்பன் முருகனின் அறுபடை வீடுகள் பற்றியதே கண்ணுக்குக் கிடைத்துள்ளது..!
    எல்லாம் அவன் செயல்..! நன்றி..!////

    எல்லாம் உங்களைப்போன்ற முருகபக்தர்களுக்காகத்தான் உண்மைத் தமிழரே!

    ReplyDelete
  12. ////SHEN said...
    ஐயா,
    இன்று முருகனுக்கு விரதமிருக்கும் நான், உங்கள் பதிவத் திறந்தால் அங்கும் முருகன்..மிக்க மகிழ்ச்சி ஐயா.
    --செங்கோவி/////

    செவ்வாய்க்கிழமைதானே மாயோன் மருகனுக்கு உகந்த நாள். நீங்கள் வெள்ளிக்கிழமை இருக்கிறீர்களே! எல்லாம் சரிதான், முருகக்கடவுள் தன் பக்தர்களுக்காக எதையும் ஏற்றுக்கொள்வார்!

    ReplyDelete
  13. ஆறுபடை வீடுகளில் சுவாமிமலை தவிர மற்றவை பார்த்ததில்லை. சுவாமிமலை முருகன்தான் குலதெய்வம் என்பதால் அங்கே மட்டும்தான் அடிக்கடி போவது வழக்கம். படங்கள் செல்லும் ஆவலைத் தூண்டுகின்றன.

    இந்த வருடம் விருந்தினருடன் ஜெய்பூர், ஆக்ரா, மதுரா, காசி, ஹரித்வார், ரிஷிகேஷ் போவதாகத் திட்டம். அடுத்த வருடம்தான் அங்கு வரும்போது பார்க்க முடியும்.

    ReplyDelete
  14. ஒரு கவிஞர் எழுதியிருக்கிறார் என்று எழுதியிருந்ததை பார்த்து இந்த காலத்தில் இவ்வளவு அழகிய தமிழில் எழுதியவர் யாராக இருக்ககூடும் என்று யோசித்தேன் கடைசியில் தான் தெரிந்தது கவிஞர் கண்ணதாசன் என்று இதை தொடக்கத்திலேயே சொல்லியிருக்க கூடாதா. ஆயிரம் பேர் எழுதினாலும் அவரைப் போல வருமா. கவிஞர் கவிஞர்தான்.

    ReplyDelete
  15. அடடா! அற்புதமான புகைப்படங்கள். சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கின்றன. குமரன் வாழும் அறுபடை வீடுகளுக்கும் சென்று வந்த திருப்தி ஏற்படுகிறது. நன்றி.

    ReplyDelete
  16. dear sir
    i am a new student of your blog,am studying from basics,your lessons are quiet intersesting,expressive and enthusiastic.i read in ur earlier posts that you r releasing book on astrology.when and where can i get those books?.thank u very much for this wonderful blog of urs for enabling us to have a knowledge about this ancient subject of astrology.

    ReplyDelete
  17. அறுபடை வீடு konda thirumuruga

    migavum arumai.

    ReplyDelete
  18. கந்தன்கருணை திரைப்படத்தில் சீர்காழி அவர்களின் குரலில் அறுபடைவீடுகொண்ட திருமுருகா பாடலின் காணொளி
    http://www.youtube.com/watch?v=SpFGLowZ7S0

    ReplyDelete
  19. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    ஆறு புகைப்படங்களும் அருமை. புகைப்படங்களால் விளக்க முடியாத செய்திகளையும் சேர்த்து விளக்கிய கவிஞரின் கவிதை விரிகள் மிக அருமை.
    ஆசிரியருக்கு நன்றி.
    அன்புடன், அரசு.

    ReplyDelete
  20. சார், பயிற்சி வகுப்பு பற்றி நான் உங்களுக்கு 4 -5 மெயில் அனுப்பினேன். நீங்கள் ஏன் பதில் அனுப்பவில்லை?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com