மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.6.10

துன்பம் வாராத நிலை!

----------------------------------------------------------------------------------
துன்பம் வாராத நிலை!

புகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 7

புகழ் பெற்ற பாடல் என்றால் என்ன? இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம் புகழ் பெற்ற  பாடல்கள்தான்!
------------------------------------------------------------------------------------------------
பாடியவர்: டி.எம்.சௌந்திரராஜன்
இயற்றியவர்: வாலி

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும் - ஐயன்

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்

ஆராவமுதென அருள்மழை பெய்யும்
ஆராவமுதென அருள்மழை பெய்யும்
கூரான வேல் கொண்டு கொடுமைகளைக் கொய்யும்

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்

சுவாமி மலையில் சிவகுருவென்று
சுவாமி மலையில் சிவகுருவென்று திரு
சீரலைவாயினில் சூரனை வென்று
தேமதுர மொழியாள் ஆ...
தேமதுர மொழியாள் தேவானையை மணந்த
திருப்பரங்குன்றில் தரிசனம் தந்த - அந்த

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்

மாமனைப்போல் இரு மாதுடன் கூடி
மாமனைப்போல் இரு மாதுடன் கூடி
மாலையில் பழமுதிர்ச் சோலையிலாடி
மாமயிலேறிட திருத்தணியைத் தேடி
மாமயிலேறிட திருத்தணியைத் தேடி
மோகமெல்லாம் தீர்ந்து ஆவினன்குடி சேர்ந்த

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும்

--------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

15 comments:

  1. ஆசிரியருக்கு வணக்கம்,
    நெஞ்சில் நின்ற பாடல்களில் இதுவும் ஒன்று
    பாடலுடன் படமும் மிகவும் நன்று.
    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. ////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    நெஞ்சில் நின்ற பாடல்களில் இதுவும் ஒன்று
    பாடலுடன் படமும் மிகவும் நன்று.
    நன்றிகள் ஐயா!/////

    வழக்கம்போல வகுப்பறைக்கு இன்று நீங்கள்தான் முதல் வருகை! உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  3. நெஞ்சில் நின்ற பாடல்கள் அருமை.
    டிஎம்ஸின் கம்பீர குரலில் பக்தியை குழைத்துப் பாடியிருப்பார்.
    இதே வரிசையில் எனக்குப் பிடித்த பாடல்கள்..
    உள்ளம் உருகுதையா...
    அழகென்ற சொல்லுக்கு முருகா..
    மிக்க நன்றி..வாத்தியாரையா!

    ReplyDelete
  4. ////நானானி said...
    நெஞ்சில் நின்ற பாடல்கள் அருமை.
    டிஎம்ஸின் கம்பீர குரலில் பக்தியை குழைத்துப் பாடியிருப்பார்.
    இதே வரிசையில் எனக்குப் பிடித்த பாடல்கள்..
    உள்ளம் உருகுதையா...
    அழகென்ற சொல்லுக்கு முருகா..
    மிக்க நன்றி..வாத்தியாரையா!////

    அந்தக் கம்பீரக்குரல் இப்போது பாடுபவர்கள் யாருக்கும் இல்லை. அதுதான் வருந்த வேண்டிய விஷயம்!
    நன்றி சகோதரி!

    ReplyDelete
  5. திருச்சீர் அலைவாய் என்னும் திருச்செந்தூரில் சன்னதிக்கு நேர் எதிரில் வெளிப்
    பிராகாரத்தில் சதுரமான ஒரு துளை உள்ளது.அதன் வழியே கண்ணால் பார்த்தால் கடல் தெரியும். காதை வைத்துக் கேட்டால் அனாஹத ஒலி என்ற ஓங்காரம் ஒலிக்கும்.அதுவே பிரணவம். அந்தப் பிரணவ சொரூபனே ஆறுமுகன்.அரோஹரா!

    ReplyDelete
  6. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    வள்ளி,தெய்வானையுடன் மயில் மீது இருக்கும் ஆறுமுகம் படம் -- நன்றாக உள்ளது.

    ஓராறு முகமும் ஈராறு கரமும்
    தீராத வினைதன்னைத் தீர்க்கும் - துன்பம்
    வாராத நிலைதன்னைச் சேர்க்கும் --

    இறைவன் புகழ்ப் பாடும் இப்பாடல்,என்றென்றும்
    மனதில் நிலைத்து நிற்கும் அருமையான பாடல்.

    மறக்க முடியாத இப்பாடலை நினைவூட்டும்
    தங்களுக்கு மிக்க நன்றி.

    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-06-12

    ReplyDelete
  7. /////kmr.krishnan said...
    திருச்சீர் அலைவாய் என்னும் திருச்செந்தூரில் சன்னதிக்கு நேர் எதிரில் வெளிப்
    பிராகாரத்தில் சதுரமான ஒரு துளை உள்ளது.அதன் வழியே கண்ணால் பார்த்தால் கடல் தெரியும். காதை வைத்துக் கேட்டால் அனாஹத ஒலி என்ற ஓங்காரம் ஒலிக்கும்.அதுவே பிரணவம். அந்தப் பிரணவ சொரூபனே ஆறுமுகன்.அரோஹரா!/////

    ஆகா, அதை நானும் கேட்டு இன்புற்றிருக்கிறேன். நினைவுறுத்தியமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    வள்ளி,தெய்வானையுடன் மயில் மீது இருக்கும் ஆறுமுகம் படம் -- நன்றாக உள்ளது.
    ஓராறு முகமும் ஈராறு கரமும்
    தீராத வினைதன்னைத் தீர்க்கும் - துன்பம்
    வாராத நிலைதன்னைச் சேர்க்கும் --
    இறைவன் புகழ்ப் பாடும் இப்பாடல்,என்றென்றும்
    மனதில் நிலைத்து நிற்கும் அருமையான பாடல்.
    மறக்க முடியாத இப்பாடலை நினைவூட்டும்
    தங்களுக்கு மிக்க நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி///

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  9. அய்யா நான் வகுப்பிற்கு புதிய மாணவன்.ஒருமுறை என் ஜாதகத்தை கணித்த ஜோதிடர் இது எனது கடைசி பிறவி என்று கூறினார்.அதை எப்படி கணிப்பது என்று சொல்லிகொடுங்கள் அய்யா.
    பெயர் - ராஜவேல்
    D.O.B - 17-05-1989
    time - 11.43 pm
    place - madurai

    ReplyDelete
  10. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம்.
    மயில வாகனத்தில் முருகனின் தரிசனம் அருமை அய்யா. இந்த வாய்ப்பினை
    எஙகளுக்கு வழங்கிய கருணைக்காக ஆசிரியர் அய்யாவுக்கும் மிக்க நன்றி.
    அரசு.

    ReplyDelete
  11. Namaskarams to all.

    Plz can anyone give me the distance between the below routes

    1)Thirunageswaram - Thirunallaru
    2)Thirunallaru - VaitheeswaranKovil
    3)VaitheeswaranKovil - Suryanarkovil
    4)SuryanarKovil - Alangudi
    5)Alangudi - Swamimalai

    Conveying the exact info will be greatful.

    Thanks

    ReplyDelete
  12. //////Blogger Rajavel_2k12 said...
    அய்யா நான் வகுப்பிற்கு புதிய மாணவன்.ஒருமுறை என் ஜாதகத்தை கணித்த ஜோதிடர் இது எனது கடைசி பிறவி என்று கூறினார்.அதை எப்படி கணிப்பது என்று சொல்லிகொடுங்கள் அய்யா.
    பெயர் - ராஜவேல்
    D.O.B - 17-05-1989
    time - 11.43 pm
    place - madurai/////

    மகர லக்கினம். சித்திரை நட்சத்திரம். 12ல் சனி 2ல் ராகு, 8ல் கேது இதுதான் உங்கள் ஜாதகத்தின் முக்கிய நிலை.12ல் கேது இருந்தால் முக்தி என்பார்கள். அடுத்த பிறவி இல்லை என்பார்கள். உங்களுக்கு அப்படிப்பட்ட அமைப்பு இல்லை. அந்த ஜோதிடர் எப்படிச் சொன்னார் என்று அவரையே கேளுங்கள்

    ReplyDelete
  13. /////Blogger ARASU said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம்.
    மயில வாகனத்தில் முருகனின் தரிசனம் அருமை அய்யா. இந்த வாய்ப்பினை
    எஙகளுக்கு வழங்கிய கருணைக்காக ஆசிரியர் அய்யாவுக்கும் மிக்க நன்றி.
    அரசு./////

    நன்றி கூகுள் ஆண்டவருக்கு உரியதாகும். எனக்கல்ல! படத்தை கூகுள் இமேஜஸில் இருந்து எடுத்தேன்!

    ReplyDelete
  14. //////Blogger Sreenivasan said...
    Namaskarams to all.
    Plz can anyone give me the distance between the below routes
    1)Thirunageswaram - Thirunallaru
    2)Thirunallaru - VaitheeswaranKovil
    3)VaitheeswaranKovil - Suryanarkovil
    4)SuryanarKovil - Alangudi
    5)Alangudi - Swamimalai
    Conveying the exact info will be greatful.
    Thanks//////


    Starting to Suriyanarkoil, reaching Suriyanarkoil, Swami darisanam, Starting to Kanjanur, Reaching Kanjanur, Swami dharisanam, Breakfast, Starting to Thirunageswaram, Reaching Thirunageswaram, Swami dharisanam, Lunch at vaitheeswarankoil. Swami dharisanam. Starting to Thirunallar, Reaching Thirunallar, Dinner and stay at Thirunallar.

    Travel Distance Kms
    Kumbakonam- Suryanar koil 25 Kilo meters
    Suryanar koil- Kanjanur 5 Kilo meters
    Kanjanur-Thirunageswarem 30 Kilo meters
    Thirunageswaram -Vaitheeswarankoil 50 Kilo meters
    Vaitheeswarankoil-Thirunallar 70 Kilo meters
    Kumbakonam- Thirubuvanam 20 Kilo meters
    Thirubuvanam-Thirunallar 40 Kilo meters
    Thirunallar- VaitheeswaranKoil 70 Kilo meters
    VaitheeswaranKoil- Mailaduthurai 15 Kilo meters
    Thirunallar to Alangudi is 42 Kilo meters
    Kumbakonam - Swamimalai 5 Kilo meters
    ---------------------------------------------------
    Approximate distances to navagraha temples from Kumbakonam

    Suriyan
    Kumbakonam to Suriyanar Koil - 15 Km
    Chandran
    Kumbakonam to Thingalloor - 30Km
    Chevvai
    Kumbakonam to Vaitheswaran Kovil - 49Km
    Bhudhan
    Kumbakonam to Thiruvenkadu - 60Km
    Guru
    Kumbakonam to Alangudi - 17Km
    Sukkiran
    Kumbakonam to Kanchanoor - 20Km
    Sani
    Kumbakonam to Thirunallaru - 48Km
    Ragu
    Kumbakonam to Thirunageswaram - 5Km
    Kethu
    Kumbakonam to Keezhaperumpallam - 59Km

    ஊர்கள் வரிசையாக இல்லை. கீழும் மேலுமாக இருக்கின்றன. நீங்கள் ஷண்ட்டிங் அடித்துத்தான் ஆகவேண்டும்.
    கூகுள் ஆண்டவரிடம் நவக்கிரக ஸ்தலத்திற்கான மேப் உள்ளது. பார்த்து நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்

    ReplyDelete
  15. // SP.VR. SUBBAIYA said...
    Starting to Suriyanarkoil, reaching Suriyanarkoil, Swami darisanam, Starting to Kanjanur, Reaching Kanjanur, Swami dharisanam, Breakfast, Starting to Thirunageswaram, Reaching Thirunageswaram, Swami dharisanam, Lunch at vaitheeswarankoil. Swami dharisanam. Starting to Thirunallar, Reaching Thirunallar, Dinner and stay at Thirunallar.

    Travel Distance Kms
    Kumbakonam- Suryanar koil 25 Kilo meters
    Suryanar koil- Kanjanur 5 Kilo meters
    Kanjanur-Thirunageswarem 30 Kilo meters
    Thirunageswaram -Vaitheeswarankoil 50 Kilo meters
    Vaitheeswarankoil-Thirunallar 70 Kilo meters
    Kumbakonam- Thirubuvanam 20 Kilo meters
    Thirubuvanam-Thirunallar 40 Kilo meters
    Thirunallar- VaitheeswaranKoil 70 Kilo meters
    VaitheeswaranKoil- Mailaduthurai 15 Kilo meters
    Thirunallar to Alangudi is 42 Kilo meters
    Kumbakonam - Swamimalai 5 Kilo meters
    ---------------------------------------------------
    Approximate distances to navagraha temples from Kumbakonam

    Suriyan
    Kumbakonam to Suriyanar Koil - 15 Km
    Chandran
    Kumbakonam to Thingalloor - 30Km
    Chevvai
    Kumbakonam to Vaitheswaran Kovil - 49Km
    Bhudhan
    Kumbakonam to Thiruvenkadu - 60Km
    Guru
    Kumbakonam to Alangudi - 17Km
    Sukkiran
    Kumbakonam to Kanchanoor - 20Km
    Sani
    Kumbakonam to Thirunallaru - 48Km
    Ragu
    Kumbakonam to Thirunageswaram - 5Km
    Kethu
    Kumbakonam to Keezhaperumpallam - 59Km

    ஊர்கள் வரிசையாக இல்லை. கீழும் மேலுமாக இருக்கின்றன. நீங்கள் ஷண்ட்டிங் அடித்துத்தான் ஆகவேண்டும்.
    கூகுள் ஆண்டவரிடம் நவக்கிரக ஸ்தலத்திற்கான மேப் உள்ளது. பார்த்து நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்//

    மிக்க நன்றி குருவே. i'll make use of it. எனது பணிவான சிரம்தாழ்ந்த வணக்கங்கள். உங்கள் ஆசிகளை எதிர்நோக்கும் மாணவன்.
    - ஸ்ரீநிவாஸன்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com