மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

21.6.10

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!

======================================================
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எங்களூரில் - கோவையில் நடைபெறுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக மாநாடு நடைபெறும் 5 தினங்களிலும் (23.6.2010 முதல் 27.6.2010 வரை) வகுப்பறைக்கு விடுமுறை.

தொலைக்காட்சிகளில் எல்லா நிகழ்ச்சிகளும் நேரடியாக ஒலிபரப்பப் படவுள்ளன! பிரம்மாண்டாக ஏற்பாடுகள் செய்யப்பெற்றுள்ளன. அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டுகளியுங்கள்!

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுத் தகவல்களுக்காக தினமலர் நாளிதழ் தனி இணைய தளம் துவங்கியுள்ளது. அதில் அத்தனை விவரங்களும் காணக்கிடைக்கும். அதன் முகவரி http://tamil.dinamalar.com/

கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டோடு இணைந்து நடைபெறும் தமிழிணைய மாநாடு 2010ல் வலைப் பதிவர்களுக்கான நிகழ்வில் உங்கள் வகுப்பறை வாத்தியாரும் உரை நிகழ்த்தவுள்ளார். அழைப்பு வந்தது. ஏற்றுக்கொண்டுள்ளார். பேசும் நாள், பேசும் நேரம், பேசவுள்ள அரங்கத்தின் பெயர், பேசவுள்ள உரையின் தலைப்பு பற்றிய விவரங்கள் 23.6.2010 அன்று காலை உங்களுக்குத் தெரிவிக்கப்படும். முடிந்தவர்கள் வந்து நேரில் கலந்து கொள்ளலாம்.

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

55 comments:

Rathinavel.C said...

மிகவும் ஆவலுடன் உள்ளென்

அன்புடன்
கர்ண ரத்தினவேல்

kmr.krishnan said...

பாராட்டுக்கள் அய்யா! வகுப்பறைக்குக் கிடைத்த பெரிய பாராட்டு இதுதான்! அங்கீகாரமும் கூட!தங்கள் உரையை நேரில் வரமுடியாதவர்களுக்காக வகுப்பறையில் வெளியிடப் பணிந்து வேண்டுகிறேன்.

ஷைலஜா said...

வாழ்த்துகள் சகோதரரே! நாளும் நேரமும் அறிவித்தால் தொலைக்காட்சிப்பெட்டியில் காண இயலும்!

வேலன். said...

வாழ்த்துக்கள் அய்யா...

வாழ்க வளமுடன்.
வேலன்.

Alasiam G said...

செம்மொழிகளுக்கெல்லாம் செம்மொழி
சிங்கார முதுமொழி எனினும் என்றும் இளமைத் ததும்பும் பொன், மென், வன் மொழி!
அம்மொழி தமிழ் மொழி, அதுவும் என் மொழி என்பதில் பெரும் உவகை எய்துகிறேன்!
இறையனார் அருளிய பிள்ளைத் தமிழ்
கம்பனும், வள்ளுவனும், இளங்கோவும் போற்றிய கன்னித் தமிழ்
பாரதியும், பாரதிதாசனும், இவர்களுக்கெல்லாம் இளையோன் கண்ணதாசனும் கண்ட அன்னைத் தமிழ்!
நாம் அனைவும் போற்றும் ஒளவைத்தமிழ்! இன்னும் சொல்வேன், இன்று இப்போது புதிதாய்ப் பிறந்த கணனித் தமிழ்!!

நாயன்மார்களும், ஆழ்வார்களும், அருளிய தெய்வப் பதங்களில் எல்லாம் திகழொளி பரவச் செய்யும் நித்ய சோதியும்,
இன்னும் சொன்னால், வீரமாமுனிவரையும், ஜி,யு, போப்- போற்றோரையும் ஆட்கொண்டு; இனம் நாடு இவற்றையெல்லாம் கடந்து மனித பண்பாட்டின் மணிமகுடமான தனது பண்பாட்டை பூமியின் எத்திசையிலும் தம் மக்கள் கொண்டு பரவச்செய்து; பண்பாட்டுச் சீரழிவுகளுக்கு தடுப்பூசி போட்டு மானுடம் வளர்த்து, உலக மாதாவாய் அருள் புரிபவள்!!!.

அன்னை, அவள் புகழ் பாடும் அரங்கில் தூணாய் நிற்பதே பெரும் பாக்கியம்.....
எமது ஆசிரியர் நீவீர் ஆற்றும் உரையை கண்ணுற்று செவிசுவைக்க,
என்போன்றோருக்கு வழியில்லை....இருந்தும் இன்னொரு வழி செய்வீர்..
ஒளி (முந்திவருவது) - ஒலி வடிவில், வலையுனுள் புகுத்தும் வகைசெய்வீர்- ஆம், எம்போன்றோருக்கு ஒரு நல்வழி செய்வீர்!!
காப்போம், வளர்ப்போம், உயிரும், உணர்வுமாய், நமை ஈன்ற தெய்வ மொழியாளை!!!
நன்றிகள் ஐயா!

ராஜ் said...

Advance wishes!

ராஜ் said...

openses

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

தமிழிணைய மாநாடு 2010ல் வலைப் பதிவர்களுக்கான நிகழ்வில் எங்கள் வகுப்பறை வாத்தியாரும் உரை நிகழ்த்தவுள்ள தகவல் மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
எங்களின் வாத்தியார் சிறப்பாக உரை நிகழ்த்துவதற்குத் தகுந்த அருளினை வழங்குமாறு இறைவனிடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் மிகவும் பயனுள்ள தகவல்கள் அளித்துள்ள தங்களுக்கு மிக்க நன்றி.

வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்

வ.தட்சணாமூர்த்தி

2010-06-21

visu said...

ஆகா. .. .
மட்டற்ற மகிழ்ச்சி .. . .

பல்லாயிரம் மாணவர்களுக்கும் கிடைத்த மகிழ்ச்சி . .

தேனின் எந்த பக்கமும் சுவைக்கும் . .

அதனால் தான்
தேனுக்குள் மூழ்கி எழுந்த கரண்டி (ஸ்பூன்)யைக் கூட முழுவதும் நாக்கினால் நாம் குளிப்பாட்டாமல் இருப்பதில்லை . .

அது போல
சுவை மணக்க பேசும் எழுதும் எங்கள் அன்பு வாத்தியாரின் உரைகளை பதிவு செய்து கொள்ளவும் தயாராகிக் கொண்டு உள்ளோம் . .

வாழ்க . . . வாழ்க . . . .
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களுடன் . .

Arulkumar Rajaraman said...

Dear Sir

Arumai Sir..Mattarra maghilchi kondullom.

Asiriyarukku Valthukkal.

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

Babu said...

congratulations all the best sir

Regards
S.A.Babu

Balasubramanian Pulicat said...

Hearty congratulations. All the very best to you.
Balasubramanian Riyadh

SHEN said...

வாழ்த்துக்கள் ஐயா...என்னைப் போன்ற கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு, தங்கள் உரையினை வகுப்பறையில் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
செங்கோவி

Eswari said...

//கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டோடு இணைந்து நடைபெறும் தமிழிணைய மாநாடு 2010ல் வலைப் பதிவர்களுக்கான நிகழ்வில் உங்கள் வகுப்பறை வாத்தியாரும் உரை நிகழ்த்தவுள்ளார். //

ALL THE BEST. பிச்சு உதருங்க.

'BLUESPACE' ARIVUMANI, GERMANY said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் !!

அயல் நாட்டில் உள்ளதால் உங்கள் சொற்பொழிவினை எங்களுக்குத் தரவும்

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் !!

தமிழ்மணி said...

வணக்கம் அய்யா,

செம்மொழி மாநாட்டிற்கு வர ஆசைதான். ஆனால் விடுமுறை இல்லையே. :)
விடுமுறையாக இருந்தால் அதற்காகவே வரமாட்டோமா?

ஆனாலும் உங்களது உரையை தவறவிடக் கூடாது.முடிந்தால் எங்களுக்காக அந்த உரையை வலையேற்றம் செய்யுங்கள் அய்யா.

Sreenivasan said...

கணப்பொருத்தம் என்பது யாது? அதன் முக்கியத்துவம் என்ன ? எந்தளவுக்கு முக்கியம் ? அதை எவ்வாறு கணிப்பது ?
யாரேனும் விளக்க விளைகிறேன்.

Sreenivasan said...

மிக்க மகிழ்ச்சி குருவே. எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்.

Thanuja said...

Vanakam sir,

Vaalthukal sir for getting this great opportunity...plus really happy for you sir...the hardwork you have done will for sure get recongnized... Best wishes for your speech!!!

Regards,
Thanuja

kmr.krishnan said...

To Sreenivasan
திரும‌ணப் பொருத்தம் பார்க்கும் போது கணப் பொருத்தம் பார்த்தல் அவசியம்.பாம்புப் பஞ்சாங்கம் எனப்படும் "அசல் 28-நெ. சுத்த வாக்யப் பஞ்சாங்கத்தில்" 24ம் பக்கத்தில் நாம நக்ஷத்திரங்கள் என்னும் கட்டத்தில்
ஒவ்வொரு நக்ஷத்திரத்திரத்திற்கும் என்ன கணம் என்று கொடுத்திருக்கும். தேவ, மனித,ராக்ஷச என்று 3 வகையாகப் பிரித்து இருப்பார்கள்.ஆண்,பெண் இருவரும் என்ன கணம் என்று அவரவர்களுடைய நக்ஷத்திரத்திற்கு எதிரில் கொடுத்துள்ள கணத்தைக் குறித்துக் கொள்க.அதே பஞ்சாங்கத்தின் 23 வது பக்கத்தில்"விவாக தசவிதப் பொருத்தம்" என்று இருக்கும்.அதில் 2 வ்து கணப் பொருத்தம். அதில் கூறியுள்ள விதியைப்பார்க்கவும்.ஆண் பெண் இருவரும் ஒரே கணம் ஆனால் உத்தமப் பொருத்தம்.ஒருவர் தேவ கணம் மற்றவர் மனித கணம் ஆனாலும் உத்தமப் பொருத்தம்.ஆண்
ராக்ஷஸம், பெண்
தேவ கணம் என்றால் மத்திமப் பொருத்தம்.பெண் ராக்ஷஸ‌ம்,ஆண் மனித கணமானல் திருமணம் செய்யக்கூடாது.பெண் நக்ஷத்திரத்தையும் சேர்த்து ஆண் நக்ஷத்திரம் வரை எண்ணி வரும் நம்பர் 14க்கு மேல் இருந்தால் பெண்
ராக்ஷ‌ஸம் ஆனாலும் தோஷம் இல்லை.

kmr.krishnan said...

to Arulkumar Rajarman,Babu, Balasubramaniyan Pulicat
-------------------------------
தமிழில் உங்களுடைய விமர்சனத்தை எழுத இதைப் படியுங்கள்!
வகுப்பு அறை முகப்புப் பக்கத்தில் வலது பக்கக் கடைசியில் - அதாவது சைடு பாரில் - "தமிழ் எழுதி" என்ற சுட்டி உள்ளது. அதனை அழுத்தினால் http://tamileditor.org திற‌க்கும். அதில் உள்ள‌ க‌ட்ட‌த்தில் தாங்கள் இப்போது த‌மிழை ஆங்கில‌த்தில் transliterate ப‌ண்ணி எழுதுவது போல‌வே எழுதினால் அது தமிழிலேயே எழுத‌ப்ப‌டும். அதனை செலெக்ட் செய்து காப்பி செய்து கொண்டு,பேக் ப‌ட்ட‌னை அழுத்தி மீண்டும் வ‌குப்ப‌றை முக‌ப்புக்குச் சென்று"போஸ்ட் கமெ‌ன்ட்"ஐ அழுத்தி த‌ற்போது க‌மென்ட் எழுதும் வ‌ழ‌க்க‌ப்ப‌டி அத‌ற்குரிய‌ ‌கட்ட‌த்தில் "பேஸ்ட்"செய்யுங்க‌ள். அப்புற‌‌ம் பிர‌சுரிக்க‌ச் சொன்னால் த‌மிழிலேயே உங்க‌ள் பின்னூட்டம் வெளியாகும்.
By KMR.Krishnan, Thanjavur

Sreenivasan said...

// kmr.krishnan said...
To Sreenivasan
திரும‌ணப் பொருத்தம் பார்க்கும் போது கணப் பொருத்தம் பார்த்தல் அவசியம்.பாம்புப் பஞ்சாங்கம் எனப்படும் "அசல் 28-நெ. சுத்த வாக்யப் பஞ்சாங்கத்தில்" 24ம் பக்கத்தில் நாம நக்ஷத்திரங்கள் என்னும் கட்டத்தில்
ஒவ்வொரு நக்ஷத்திரத்திரத்திற்கும் என்ன கணம் என்று கொடுத்திருக்கும். தேவ, மனித,ராக்ஷச என்று 3 வகையாகப் பிரித்து இருப்பார்கள்.ஆண்,பெண் இருவரும் என்ன கணம் என்று அவரவர்களுடைய நக்ஷத்திரத்திற்கு எதிரில் கொடுத்துள்ள கணத்தைக் குறித்துக் கொள்க.அதே பஞ்சாங்கத்தின் 23 வது பக்கத்தில்"விவாக தசவிதப் பொருத்தம்" என்று இருக்கும்.அதில் 2 வ்து கணப் பொருத்தம். அதில் கூறியுள்ள விதியைப்பார்க்கவும்.ஆண் பெண் இருவரும் ஒரே கணம் ஆனால் உத்தமப் பொருத்தம்.ஒருவர் தேவ கணம் மற்றவர் மனித கணம் ஆனாலும் உத்தமப் பொருத்தம்.ஆண்
ராக்ஷஸம், பெண்
தேவ கணம் என்றால் மத்திமப் பொருத்தம்.பெண் ராக்ஷஸ‌ம்,ஆண் மனித கணமானல் திருமணம் செய்யக்கூடாது.பெண் நக்ஷத்திரத்தையும் சேர்த்து ஆண் நக்ஷத்திரம் வரை எண்ணி வரும் நம்பர் 14க்கு மேல் இருந்தால் பெண்
ராக்ஷ‌ஸம் ஆனாலும் தோஷம் இல்லை.//

ரெம்ப நன்றி கிருஷ்ணன் சார். இன்னும் ஒரே ஒரு சந்தேகம். sorry to bug you with questions. பையன் நக்ஷத்ரம் அஸ்வினி(தேவ கணம்) பொண்ணு நக்ஷத்ரம் கார்த்திகை(ரிஷப ராசி - அசுர கணம்).

இதற்கு கணப்பொருத்தம் உண்டா?

Uma said...

all the best sir

SP.VR. SUBBAIYA said...

/////Rathinavel.C said...
மிகவும் ஆவலுடன் உள்ளேன்
அன்புடன்
கர்ண ரத்தினவேல்//////

எந்த ஊரில் இருக்கிறீர்கள்? கோவைக்கு அருகில் இருந்தால் வாருங்கள்!

SP.VR. SUBBAIYA said...

////kmr.krishnan said..
பாராட்டுக்கள் அய்யா! வகுப்பறைக்குக் கிடைத்த பெரிய பாராட்டு இதுதான்! அங்கீகாரமும் கூட!தங்கள் உரையை நேரில் வரமுடியாதவர்களுக்காக வகுப்பறையில் வெளியிடப் பணிந்து வேண்டுகிறேன்.///////

ஆகா, உரையின் சுருக்கத்தை நிச்சயம் பதிவில் தருகிறேன் கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

////வேலன். said...
வாழ்த்துக்கள் அய்யா...
வாழ்க வளமுடன்.
வேலன்.////

நல்லது. நன்றி வேலன்!

SP.VR. SUBBAIYA said...

//////ஷைலஜா said...
வாழ்த்துகள் சகோதரரே! நாளும் நேரமும் அறிவித்தால் தொலைக்காட்சிப்பெட்டியில் காண இயலும்!/////

பேசவிருக்கும் நாள்: 24.6.2010 வியாழக்கிழமை, நேரம் பிற்பகல் 2:45 முதல் 3:45 வரை. முரசொலி மாறன் அரங்கம், செம்மொழி மாநாட்டு வளாகம், தலைப்பு: இணியது, இணியது, இணையம்! உங்களின் ஆர்வத்திற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Alasiam G said...
செம்மொழிகளுக்கெல்லாம் செம்மொழி
சிங்கார முதுமொழி எனினும் என்றும் இளமைத் ததும்பும் பொன், மென், வன் மொழி!
அம்மொழி தமிழ் மொழி, அதுவும் என் மொழி என்பதில் பெரும் உவகை எய்துகிறேன்!
இறையனார் அருளிய பிள்ளைத் தமிழ்
கம்பனும், வள்ளுவனும், இளங்கோவும் போற்றிய கன்னித் தமிழ்
பாரதியும், பாரதிதாசனும், இவர்களுக்கெல்லாம் இளையோன் கண்ணதாசனும் கண்ட அன்னைத் தமிழ்!
நாம் அனைவும் போற்றும் ஒளவைத்தமிழ்! இன்னும் சொல்வேன், இன்று இப்போது புதிதாய்ப் பிறந்த கணனித் தமிழ்!!
நாயன்மார்களும், ஆழ்வார்களும், அருளிய தெய்வப் பதங்களில் எல்லாம் திகழொளி பரவச் செய்யும் நித்ய சோதியும்,
இன்னும் சொன்னால், வீரமாமுனிவரையும், ஜி,யு, போப்- போற்றோரையும் ஆட்கொண்டு; இனம் நாடு இவற்றையெல்லாம் கடந்து மனித பண்பாட்டின் மணிமகுடமான தனது பண்பாட்டை பூமியின் எத்திசையிலும் தம் மக்கள் கொண்டு பரவச்செய்து; பண்பாட்டுச் சீரழிவுகளுக்கு தடுப்பூசி போட்டு மானுடம் வளர்த்து, உலக மாதாவாய் அருள் புரிபவள்!!!.
அன்னை, அவள் புகழ் பாடும் அரங்கில் தூணாய் நிற்பதே பெரும் பாக்கியம்.....
எமது ஆசிரியர் நீவீர் ஆற்றும் உரையை கண்ணுற்று செவிசுவைக்க,
என்போன்றோருக்கு வழியில்லை....இருந்தும் இன்னொரு வழி செய்வீர்..
ஒளி (முந்திவருவது) - ஒலி வடிவில், வலையுனுள் புகுத்தும் வகைசெய்வீர்- ஆம், எம்போன்றோருக்கு ஒரு நல்வழி செய்வீர்!!
காப்போம், வளர்ப்போம், உயிரும், உணர்வுமாய், நமை ஈன்ற தெய்வ மொழியாளை!!!
நன்றிகள் ஐயா!////

உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

ராஜ் said...
Advance wishes!//////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

///V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
தமிழிணைய மாநாடு 2010ல் வலைப் பதிவர்களுக்கான நிகழ்வில் எங்கள் வகுப்பறை வாத்தியாரும் உரை நிகழ்த்தவுள்ள தகவல் மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
எங்களின் வாத்தியார் சிறப்பாக உரை நிகழ்த்துவதற்குத் தகுந்த அருளினை வழங்குமாறு இறைவனிடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் மிகவும் பயனுள்ள தகவல்கள் அளித்துள்ள தங்களுக்கு மிக்க நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி//////

நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

SP.VR. SUBBAIYA said...

/////visu said...
ஆகா. .. . மட்டற்ற மகிழ்ச்சி .. . .
பல்லாயிரம் மாணவர்களுக்கும் கிடைத்த மகிழ்ச்சி .
தேனின் எந்த பக்கமும் சுவைக்கும் . .
அதனால் தான்
தேனுக்குள் மூழ்கி எழுந்த கரண்டி (ஸ்பூன்)யைக் கூட முழுவதும் நாக்கினால் நாம் குளிப்பாட்டாமல் இருப்பதில்லை .
அது போல
சுவை மணக்க பேசும் எழுதும் எங்கள் அன்பு வாத்தியாரின் உரைகளை பதிவு செய்து கொள்ளவும் தயாராகிக் கொண்டு உள்ளோம் . .
வாழ்க . . . வாழ்க . . . .
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களுடன்///////

உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Arulkumar Rajaraman said...
Dear Sir
Arumai Sir..Mattarra maghilchi kondullom.
Asiriyarukku Valthukkal.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////

நல்லது. நன்றி ராஜாராமன்!

SP.VR. SUBBAIYA said...

/////Babu said...
congratulations all the best sir
Regards
S.A.Babu/////

நல்லது. நன்றி பாபு!

SP.VR. SUBBAIYA said...

/////Balasubramanian Pulicat said...
Hearty congratulations. All the very best to you.
Balasubramanian Riyadh/////

நல்லது. நன்றி பாலா!

SP.VR. SUBBAIYA said...

/////SHEN said...
வாழ்த்துக்கள் ஐயா...என்னைப் போன்ற கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு, தங்கள் உரையினை வகுப்பறையில் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
செங்கோவி//////

உரையின் சுருக்கத்தை நிச்சயம் பதிவில் தருகிறேன் நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//////Eswari said...
//கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டோடு இணைந்து நடைபெறும் தமிழிணைய மாநாடு 2010ல் வலைப் பதிவர்களுக்கான நிகழ்வில் உங்கள் வகுப்பறை வாத்தியாரும் உரை நிகழ்த்தவுள்ளார்.//
ALL THE BEST. பிச்சு உதருங்க.///////

உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

//////'BLUESPACE' ARIVUMANI, GERMANY said...
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் !!
அயல் நாட்டில் உள்ளதால் உங்கள் சொற்பொழிவினை எங்களுக்குத் தரவும்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் !!/////

உரையின் சுருக்கத்தை நிச்சயம் பதிவில் தருகிறேன் நண்பரே!பொறுத்திருங்கள்

SP.VR. SUBBAIYA said...

//////தமிழ்மணி said...
வணக்கம் அய்யா,
செம்மொழி மாநாட்டிற்கு வர ஆசைதான். ஆனால் விடுமுறை இல்லையே. :)
விடுமுறையாக இருந்தால் அதற்காகவே வரமாட்டோமா?
ஆனாலும் உங்களது உரையை தவறவிடக் கூடாது.முடிந்தால் எங்களுக்காக அந்த உரையை வலையேற்றம் செய்யுங்கள் அய்யா.//////

உரையின் சுருக்கத்தை நிச்சயம் பதிவில் தருகிறேன் நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Sreenivasan said...
மிக்க மகிழ்ச்சி குருவே. எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்.//////

நல்லது. நன்றி ஸ்ரீனிவாசன்!

SP.VR. SUBBAIYA said...

/////Sreenivasan said...
கணப்பொருத்தம் என்பது யாது? அதன் முக்கியத்துவம் என்ன ? எந்தளவுக்கு முக்கியம் ? அதை எவ்வாறு கணிப்பது ? யாரேனும் விளக்க விளைகிறேன்./////

தஞ்சாவூர் கிருஷ்ணன் சார் விளக்கம் கொடுத்துள்ளார். கீழே உள்ளது. அதைப்படியுங்கள்

SP.VR. SUBBAIYA said...

////Thanuja said...
Vanakam sir,
Vaalthukal sir for getting this great opportunity...plus really happy for you sir...the hardwork you have done will for sure get recongnized... Best wishes for your speech!!!
Regards,
Thanuja//////

உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

//////kmr.krishnan said...
To Sreenivasan
திரும‌ணப் பொருத்தம் பார்க்கும் போது கணப் பொருத்தம் பார்த்தல் அவசியம்.பாம்புப் பஞ்சாங்கம் எனப்படும் "அசல் 28-நெ. சுத்த வாக்யப் பஞ்சாங்கத்தில்" 24ம் பக்கத்தில் நாம நக்ஷத்திரங்கள் என்னும் கட்டத்தில்
ஒவ்வொரு நக்ஷத்திரத்திரத்திற்கும் என்ன கணம் என்று கொடுத்திருக்கும். தேவ, மனித,ராக்ஷச என்று 3 வகையாகப் பிரித்து இருப்பார்கள்.ஆண்,பெண் இருவரும் என்ன கணம் என்று அவரவர்களுடைய நக்ஷத்திரத்திற்கு எதிரில் கொடுத்துள்ள கணத்தைக் குறித்துக் கொள்க.அதே பஞ்சாங்கத்தின் 23 வது பக்கத்தில்"விவாக தசவிதப் பொருத்தம்" என்று இருக்கும்.அதில் 2 வ்து கணப் பொருத்தம். அதில் கூறியுள்ள விதியைப்பார்க்கவும்.ஆண் பெண் இருவரும் ஒரே கணம் ஆனால் உத்தமப் பொருத்தம்.ஒருவர் தேவகணம் மற்றவர் மனித கணம் ஆனாலும் உத்தமப் பொருத்தம்.ஆண்
ராக்ஷஸம், பெண்
தேவகணம் என்றால் மத்திமப் பொருத்தம்.பெண் ராக்ஷஸ‌ம்,ஆண் மனித கணமானல் திருமணம் செய்யக்கூடாது.பெண் நக்ஷத்திரத்தையும் சேர்த்து ஆண் நக்ஷத்திரம் வரை எண்ணி வரும் நம்பர் 14க்கு மேல் இருந்தால் பெண் ராக்ஷ‌ஸம் ஆனாலும் தோஷம் இல்லை.//////

என்னுடைய வேலையை சுலபமாக்கிய உங்களின் விளக்கத்திற்கு நன்றி சார்!

SP.VR. SUBBAIYA said...

/////Uma said...
all the best sir/////

நல்லது. நன்றி சகோதரி!

sundari said...

சகோதரர் சீனிவாசனுக்கு
அஸ்வினி தேவ க்ணம் பொதுவாக தேவ கணத்தில் பிறந்தவர்கள் ரொம்ப நல்ல்வங்க எந்த கணத்தோடும் ஒத்து போவங்க

பெண் * ஆண்

தேவ*தேவ=உத்தமம்
ராஷிஸ*ராஷிஸா=உத்தமம்
மனுஷ*ம்னுஷ=உத்தமம்
மனுஷ*தேவ‍‍‍=உத்தமம்
மனுஷ*ராஷிசா=உத்தமம்
தேவ*ராஷிஷா‍‍‍‍ ‍=மத்திமம்
ராஷிஷா*மனுஷ=அதம்ம்
தேவ*மனுஷ=மத்திமம்
(தேவ‌ கண நட்சத்திரம் அசுபதி,மிருகஷீரிசம்,புனர்பூசம்,பூசம்,அஸ்தம்,சுவாதி,அனுஷம்,திருவோணம்,ரேவதி)
(மனுஷ கண நட்சத்திரம் பரணி,ரோகிணி,திருவாதிரை,பூரம்,உத்திரம்,பூராடம்,உத்திராடம்,பூரட்டாதி,உத்திரட்டாதி)
(ராஷிஷா கண நட்சத்திரம் கார்த்திகை,ஆயில்யம்,மகம்,சித்திரை,விசாகம்,கேட்டை,மூலம்,அவிட்டம்,சத‌யம்)

sundari said...

Good evening Dear sir,

ALL THE BEST FOR UR SPEECH.
BEST WISHES FROM MY SIDE.
YOUR LOVINGLY
SUNDARI.P

Sreenivasan said...

// sundari said...
சகோதரர் சீனிவாசனுக்கு
அஸ்வினி தேவ க்ணம் பொதுவாக தேவ கணத்தில் பிறந்தவர்கள் ரொம்ப நல்ல்வங்க எந்த கணத்தோடும் ஒத்து போவங்க

பெண் * ஆண்

தேவ*தேவ=உத்தமம்
ராஷிஸ*ராஷிஸா=உத்தமம்
மனுஷ*ம்னுஷ=உத்தமம்
மனுஷ*தேவ‍‍‍=உத்தமம்
மனுஷ*ராஷிசா=உத்தமம்
தேவ*ராஷிஷா‍‍‍‍ ‍=மத்திமம்
ராஷிஷா*மனுஷ=அதம்ம்
தேவ*மனுஷ=மத்திமம்
(தேவ‌ கண நட்சத்திரம் அசுபதி,மிருகஷீரிசம்,புனர்பூசம்,பூசம்,அஸ்தம்,சுவாதி,அனுஷம்,திருவோணம்,ரேவதி)
(மனுஷ கண நட்சத்திரம் பரணி,ரோகிணி,திருவாதிரை,பூரம்,உத்திரம்,பூராடம்,உத்திராடம்,பூரட்டாதி,உத்திரட்டாதி)
(ராஷிஷா கண நட்சத்திரம் கார்த்திகை,ஆயில்யம்,மகம்,சித்திரை,விசாகம்,கேட்டை,மூலம்,அவிட்டம்,சத‌யம்)//

மிக்க நன்றி சகோதரி

sundari said...

சார் வணக்கம்,
இந்த நாள் (மாநாட்டில பேசும் நாள்) தங்கள் வாழ்நாளில் பெரும் நாள்
எனக்கு ரொம்ப சந்தோஷம் தங்கள் மேலும் இம்மாதரி ரொம்ப நிகழ்ச்சயில் கலந்து கொள்ள வேண்டும்.
சுந்தரி.

Rathinavel.C said...

//
எந்த ஊரில் இருக்கிறீர்கள்? கோவைக்கு அருகில் இருந்தால் வாருங்கள்!//

I am in Bangalore,not possible for me to attend....I would like to hear your speech.

Thanks
Rathinavel.C

SP.VR. SUBBAIYA said...

///////sundari said...
Good evening Dear sir,
ALL THE BEST FOR UR SPEECH.
BEST WISHES FROM MY SIDE.
YOUR LOVINGLY
SUNDARI.P//////

உங்களுடைய மனமுவந்த வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

//////sundari said...
சார் வணக்கம்,
இந்த நாள் (மாநாட்டில பேசும் நாள்) தங்கள் வாழ்நாளில் பெரும் நாள்
எனக்கு ரொம்ப சந்தோஷம் தங்கள் மேலும் இம்மாதரி ரொம்ப நிகழ்ச்சயில் கலந்து கொள்ள வேண்டும்.
சுந்தரி.///////

எனக்கு இத்தனை வாசகர்கள்/மாணவர்கள் இருக்கிறீர்கள். உங்களுக்காக பதிவை வலை ஏற்றும் ஒவ்வொரு நாளும் எனக்கு சந்தோஷமான நாள்தான். மற்றதெல்லாம் அதற்கு அடுத்தபடிதான்!

SP.VR. SUBBAIYA said...

////Rathinavel.C said... //
எந்த ஊரில் இருக்கிறீர்கள்? கோவைக்கு அருகில் இருந்தால் வாருங்கள்!//
I am in Bangalore,not possible for me to attend....I would like to hear your speech.
Thanks
Rathinavel.C//////

நல்லது. எனது உரையின் சுருக்கத்தை வலை ஏற்றுகிறேன் நண்பரே! நன்றி!

kmr.krishnan said...

to sreenivaasan
---------------
// பையன் நக்ஷத்ரம் அஸ்வினி(தேவ கணம்) பொண்ணு நக்ஷத்ரம் கார்த்திகை(ரிஷப ராசி - அசுர கணம்).இதற்கு கணப்பொருத்தம் உண்டா?//

க‌ண‌ப்பொருத்த‌ம் கிடையாது.ஆனால் பெண்ணின் ந‌க்ஷ‌த்திர‌த்தில் இருந்து எண்ணினால் ஆண் ந‌க்ஷ‌த்திர‌ம் 14 க்கு மேல் இருப்ப‌தால் பாத‌க‌மில்லை
தின‌ம்,ஸ்த்ரீ தீர்க்க‌ம்,யோனி,ராசி,ராசி அதிப‌தி, ர‌ஜ்ஜு, நாடி,வேதை ஆகிய‌ 8 பொருத்தங்க‌ள் உள்ள‌ன‌.

மாகேந்திரப் பொருத்த‌ம் இல்லை ஆத‌லால் 5ம் இட‌ சுத்த‌ம் ஆர‌ய‌ப்ப‌ட வேண்டும். மேலும் தோஷ சா‌ம்ய‌ம், செவ்வாய் தோஷ‌ம்,ஆயுர் பாவம், தசாசந்திப்பு,அன்யோன்யம், ஆகிய‌வைக‌ளையும் ஆய்வு செய்து சேர்க்க‌ வேண்டும். த‌ச‌ வித‌ப்பொருத்த‌ம் ம‌ட்டும் பார்த்து திரும‌ண‌ம் நிச்ச‌யிக்க‌க் கூடாது.

Sowmya said...

All the best ,Sir.You will rock!!!

SP.VR. SUBBAIYA said...

/////Sowmya said...
All the best ,Sir.You will rock!!!////

உங்களுடைய அன்பிற்கும், நம்பிக்கைக்கும், எதிர்பார்ப்பிற்கும் நன்றி சகோதரி!

Sreenivasan said...

// kmr.krishnan said...
க‌ண‌ப்பொருத்த‌ம் கிடையாது.ஆனால் பெண்ணின் ந‌க்ஷ‌த்திர‌த்தில் இருந்து எண்ணினால் ஆண் ந‌க்ஷ‌த்திர‌ம் 14 க்கு மேல் இருப்ப‌தால் பாத‌க‌மில்லை
தின‌ம்,ஸ்த்ரீ தீர்க்க‌ம்,யோனி,ராசி,ராசி அதிப‌தி, ர‌ஜ்ஜு, நாடி,வேதை ஆகிய‌ 8 பொருத்தங்க‌ள் உள்ள‌ன‌.

மாகேந்திரப் பொருத்த‌ம் இல்லை ஆத‌லால் 5ம் இட‌ சுத்த‌ம் ஆர‌ய‌ப்ப‌ட வேண்டும். மேலும் தோஷ சா‌ம்ய‌ம், செவ்வாய் தோஷ‌ம்,ஆயுர் பாவம், தசாசந்திப்பு,அன்யோன்யம், ஆகிய‌வைக‌ளையும் ஆய்வு செய்து சேர்க்க‌ வேண்டும். த‌ச‌ வித‌ப்பொருத்த‌ம் ம‌ட்டும் பார்த்து திரும‌ண‌ம் நிச்ச‌யிக்க‌க் கூடாது.
//

மிக்க நன்றி அய்யா