மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

9.6.10

சனைச்சரணைத் தெரியுமா உங்களுக்கு?


திருநள்ளாறு கோவிலின் கோபுரத் தோற்றம்


சனீஷ்வர பகவான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
சனைச் சரணைத் தெரியுமா உங்களுக்கு?

உங்களுக்கு அவனைத் தெரியாவிட்டாலும், அவனுக்கு உங்களைத் தெரியும். நீங்கள் அவனை நம்பாவிட்டாலும், அவன் உங்களை நம்பவைப்பான். அவனை உணராமல் நீங்கள் இந்த உலகைவிட்டுச் செல்ல முடியாது. அவன் தன்னை அடையாளம் காட்டிவிட்டுத்தான் உங்களுக்குப் Boarding Pass தருவான். அதை மனதில் கொள்க!

சனைச்சரண் என்றால் வடமொழியில் மெதுவாகச் செல்பவன் என்று பொருள். அந்தச் சனைச்சரண் என்ற சொல்தான் மறுவி சனீஷ்வரன் என்றாகி விட்டது.
சனீஷ்வரன் எழுந்தருளி அனைவருக்கும் அருள்பாலிக்கும் இடம் திருநள்ளாறு ஆகும்

நவக்கிரகங்களின் கோயில்களிலேயே மிகவும் பிரபலமான கோயில் சனீஷ்வர பகவான் எழுந்தருளியிருக்கும் திருநள்ளாறு கோவில் ஆகும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கோயில், தற்பொழுது புதுச்சேரி மாநிலத்தில் காரைக்காலுக்கு அருகில் உள்ளது. காரைக்காலில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம்.

இங்கே வழக்கம்போல சிவனாரும், திருமதி சிவனாரும்தான் பிரதான தெய்வங்கள். அவர்கள் இல்லாமல் உலகம் ஏது? கிரகங்கள் ஏது? நாம் ஏது?

ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் என்ற பெயரில் சிவபெருமானும், பிராணாம்பிகையாக அம்பாளும் இங்கே குடிகொண்டிருக்கிறார்கள். அவர்களிருவருக்கும் நடுவே சனீஷ்வரனின் சன்னதி உள்ளது. வணங்குபவர்களுக்கு அபயமளிக்கும் தோற்றத்துடன் சனீஷ்வரன் இங்கே வீற்றிருப்பது, இக்கோவிலின் சிறப்பாகும்.

இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பெற்றதாகும். 7-ஆவது நூற்றாண்டில் கட்டப்பெற்றதாகக் கருதப்படும் தர்பாரண்யேசுவரர் திருக்கோயில் காரைக்காலிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சனைச்சரரின் பார்வையால் பாதிக்கப்பட்ட நள சக்கிரவர்த்தி பல இன்னல்களை அனுபவித்து கடைசியாக இக்கோயிலுக்கு வந்து "நள தீர்த்தம்" என இன்றும் பிரபலமாக விளங்கும் இக்கோயிலின் புஷ்கரிணியில் முங்கி எழுந்து, தர்பாரண்யேசுவரரை பிரார்த்தனை செய்து சனி தோஷம் நீங்கி நலமுற்றதாகக் கோவிலின் வரலாறு கூறுகிறது. ஆகவே சுமார் இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி நடைபெறும் நாளன்று இக்கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

ஜாதகத்தில், சனி பகவான் நீசம் பெற்றுள்ளவர்களும், வக்கிரகதி அடைந்துள்ளவர்களும், சனீஷ்வரன் மறைவிடங்களில் அமர்ந்துள்ளவர்களும், மேலும் கோள்சாரப்படி, ஏழரைச்சனி, மற்றும் அஷ்டமச்சனி நடைபெறும் நிலையில் உள்ளவர்களும், இங்கே வந்து வணங்கிச் செல்வது நலன் பயக்கும். சனிஷ்வரனால ஏற்படும் உபாதைகள் குறையும்.

இங்கே வந்து திரும்ப முடியாத தூரத்தில் இருப்பவர்கள், வீட்டில் இருந்தவாறும், அல்லது உள்ளூரில் உள்ள கோவில்களில் இருக்கும் சனீஷ்வரனை சனிக்கிழமையன்று தவறாமல் வழிபட்டு வருவதும் நன்மை பயக்கும்! கோளறு திருப்பதிகம் படிக்கலாம்

சனீஷ்வரன் வசம் முக்கியமான இரண்டு துறைகள் உள்ளன. அவன்தான் கர்மகாரகன். செயல்காரகன். செயல்களுக்குக்காரகன். நமக்கு வேலை போட்டுக்கொடுப்பவன். Taskmaster அத்துடன் ஆயுள்காரகன். நம் ஆயுளை நிர்ணயிப்பவன். இறுதியாக நமக்குப் போர்டிங்க் பாஸ் கொடுத்து இறைவனடிக்கு அனுப்பிவைப்பவன்.

அவனைப்போல கொடுப்பவனும் இல்லை. கெடுப்பவனும் இல்லை! மனிதனை ஒருவழிக்குக் கொண்டு வருபவன் அவன்தான். அதாவது மனிதனுக்கு எல்லாத் துன்பங்களையும் (அனுபவங்களையும்) கொடுத்து நெறிப்படுத்துபவனும் அவனே!

தல வரலாறு:

நளன் பூஜித்ததால் நள்ளாறு எனப்படுகிறது. இறைவனருளால், நளன் சனியின் இடர் நீங்கப்பெற்றான்.

திருஞானசம்பந்தர், திருஆலவாயில் (அதுதாங்க மதுரையில்) சமணர்களோடு நடத்திய அனல் வாதத்தின்போது, இத்தலப் பதிகமான போகமார்த்த பூண்முலையாள் என்ற பதிகத்தை (ஓலைச் சுவடியை) தீயில் இட, அது தீப்பற்றாமல், பச்சைப் பதிகமாய் நின்று, சிவன் மற்றும் சனீஷ்வரனின் பெருமையை நிலைநாட்டியது.

முசுகுந்தச் சக்கரவர்த்தி தோற்றுவித்த சப்தவிடங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும். இங்கே உள்ள சனிபகவான் சன்னதி சிறப்புடையதாகும்.

இங்கே செல்பவர்கள் முதலில் இங்கே உறையும் சிவபெருமானை வழிபட்ட பின்னரே சனிஸ்வரன் சன்னிதிக்குச் செல்ல வேண்டும். இத்தலத்தில் போகமார்த்த பூண்முலையாள் என்ற பதிகத்தைப் பாடி சிவபெருமானை வழிபட சனி தோஷம் விலகும். இது தருமபுரம் ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ள கோவிலாகும். சோழர்காலக் கல்வெட்டுக்களும் இக்கோவில் உள்ளன. அவைகள் இக்கோவிலின் தொன்மையைக்குறிக்கும்!

இறைவரின் திருப்பெயர்கள்: தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீசர். அம்பாளின் திருப்பெயர்கள் போகமார்த்த பூண்முலையாள், பிராணாம்பிகை. ஸ்தலமரம்: தர்ப்பை. தீர்த்தம்: நளதீர்த்தம், சிவகங்கை

திருமால், பிரம்மன், இந்திரன், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனர், நளச் சக்கரவர்த்தி, திக்குப் பாலகர்கள், வசுக்கள், போஜன், முசுகுந்தச் சக்கரவர்த்தி போன்ற பலர் வழிபட்ட பெருமைகளை உடையது இத்தலம்.

சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமும் இது. அதையும் நினைவில் கொள்க!

பேரளம்-காரைக்கால் புகை வண்டிப்பாதையில் இவ்வூர் உள்ளது. புகைவண்டி நிலையத்திற்கு அருகிலேயே திருக்கோவில் உள்ளது. காரைக்கால், நாகைப்பட்டிணம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

அமைதியான, இயற்கை எழில் கொஞ்சும் இடமாகும் இது.

திருவாரூர், திருக்குவளை, திருக்காரைவாசல், திருமறைக்காடு, திருநாகை, திருநள்ளாறு, திருவாய்மூர் ஆகிய ஏழு தலங்களில் உள்ள மூர்த்திகளும், சோழ அரசன் முசுகுந்த சக்கரவர்த்திக்கு இந்திரனால் பரிசாகக் கொடுக்கப்பெற்றதாகக் கருதப்படுகிறது. அந்த ஏழு தலங்களுக்கும் சப்தவிடத்தலங்கள் என்ற பெயர் உண்டு. அந்த ஏழு ஸ்தலங்களிலும் நீங்கள் சோழர்காலச் சிறபக்கலையின் சிறப்பைக் காணலாம்.

ஐந்துகாலப் பூஜைகள் அனுதினமும் உண்டு. அத்துடன் ஆண்டு முழுவதும் சிறப்புப் பூஜைகள் பலவுண்டு. சூரியபகவான் மேஷத்தில் காலடி எடுத்து வைக்கும், சித்திரை முதல் தேதியன்று இங்கே சிறப்புப் பூஜை உண்டு.
வைகாசிமாதம் 18 நாட்கள் கோவிலில் விழாவும் சிறப்புப் பூஜைகளும் உண்டு. ஆனி மாதம் நடராஜருக்காகவும், ஆடி மாதம் சுந்தரமூர்த்தி நாயனாருக்காகவும் விசேஷ பூஜைகள் உண்டு. புரட்டாசி மாதம் நவராத்திரி பூஜையும், ஐப்பசி மாதம் சுப்பிரமணியருக்காகவும் சிறப்புப் பூஜைகள் உண்டு. மார்கழி மாதம் நடராஜருக்காக 10 நாட்களும், பிறகு பங்குனி உத்திரத்தன்று பெரும் விழாவும் இக்கோவிலில் உண்டு,

சனி பகவானுக்கு உகந்தவைகள்:

நிறம்: கறுப்பு
வஸ்திரம்: கறுப்புத் துணி
உகந்த நாள்: சனிக்கிழமை
தான்யம்: எள்
வாகனம்: காகம்
மலர்: கருங்குவளை
உலோகம்: இரும்பு
இரத்தினம்: நீலம்
பலன்: வியாதி, கடன், துன்பங்கள் நீங்கும்!

சனீஷ்வரனுக்கான மந்திரம்:

"Om Hlim Sham Shanaye Namah"

The word 'Hlim' in above mantra denotes Stambhana Shakti, the power of delaying, stopping, holding, and terminating.

The following mantras are also considered very good for planet Saturn. You may opt to recite one of the following mantra if you find it comparatively easy to remember.

"Om praam preem praum sah shanayishraya namah"

"Om sham shanayisharaaye namah"

சனீஷ்வரனுக்கான காயத்ரி மந்திரம்:

ஓம் சனைச்சராய வித்மஹே
சூர்யபுத்ராய தீமஹி
நந்நோ மந்த ப்ரசோதயாத்!

("Om Sanaischaraya vidhamhe,
Sooryaputraya dhimahi,
tanno manda prachodayat")

அதீதமான வறுமை, துன்பம், ஏறுக்குமாறான வாழ்க்கை நிலைமை ஆகியவற்றால் வாடும் அன்பர்கள் இங்கே சென்று வழிபட்டு வருவது நன்மை பயக்கும்! இதுவரை சென்றிராதவர்கள் ஒருமுறை சென்றுவாருங்கள். சனீஷ்வரனின் அருளை வென்று வாருங்கள்!

கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 6 மணிமுதல் மதியம் 1 மணி வரை. பிறகு மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை!

அன்புடன்
வாத்தியார்

மேலதிகத்தகவல்கள்:

Saturn is the planet of responsibility, and symbolizes the ethic of hard work.
Under its influence a person's character is strengthened through trial and difficulty.
Saturn disciplines us until we can learn to discipline ourselves. Saturn is the planet of diligence, self-control and limitation. Its domain is patience, stability, maturity and realism.
Saturn teaches us the lessons we must learn in life. In the grand plan of the universe,
Saturn does not give us more than we can handle.
Under Saturn's influence we achieve by overcoming obstacles and hardship. Sometimes the effort itself is the reward, for effort is what builds character.
In the end, what we learn under Saturn's influence we keep for the rest of our lives.
Saturn's position in your chart indicates how well you accept responsibility, whether you are self-disciplined, and what delays and opposition you can expect to encounter.

As a negative influence, Saturn can make a person overly ambitious, calculating and selfish, solitary, inhibited and unhappy.
Its negative influence is associated with inflexibility, cruelty, humorlessness and pessimism.
Saturn also represents illness, handicaps and misfortune.
Saturn is our destiny. It rules fate, the things we cannot escape

Favorable effect of Saneeshwaran will result in many fortunes and benefits like good health, success in all endeavors, peace of mind, proper respect from members of family and relations, prosperity, interest and enthusiasm in life.


வாழ்க வளமுடன்!

17 comments:

Alasiam G said...

ஆஹா! அற்புதம்!! அருமை!!!
துயர்தீர்க்கும் மருந்து,
துன்பத்தை விரட்டும் சூரியப் புத்திரன்,
கரியவண்ணன், காகவாகணன்,
செங்கண்ணன், ஸ்ரீங்கார திருநள்ளாறு உறை
சனீஸ்வரன் பற்றிய விளக்கங்களுக்கு
நன்றிகள் குருவே!

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

திருநள்ளாறு கோவிலின் கோபுரத் தோற்றம் மற்றும்
சனீஷ்வர பகவான் படங்கள் மிகவும் நன்றாக உள்ளது.

புதுச்சேரி யூனியன் டெரிட்டரி பிரஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில்
இருந்து வந்த இடமாகும்.இதற்கு முன்பு புதுச்சேரி,காரைக்கால்
பகுதிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவைகளாகும்.

புதுச்சேரி யூனியன் டெரிட்டரியில்: புதுச்சேரி,காரைக்கால் (தமிழ் நாடு),
மாஹே(கேரளா),ஏனாம்(ஆந்திரா) ,சந்திரநாகூர்(மேற்கு வங்காளம்)
ஆகிய இடங்கள் இருந்தது.

சந்திரநாகூர்,அரசு நிர்வாகக் காரனங்களுக்காகவும்,அங்குள்ள மக்களின்
விருப்பப் படியும் மக்களிடம் வாக்கெடுப்பினை நடத்திய பின்பு , அவர்களின்
பெரும்பான்மையோரின் விருப்பப்படி,மேற்கு வங்காள மாநிலத்துடன்
இணைக்கப்பட்டுவிட்டது.

நவக்கிரக ஸ்தலங்களின் வரலாற்றில் சனீஷ்வர பகவானுக்கு என்று
உள்ள ஒரே ஸ்தலம் என்ற பெருமை வாய்ந்த இடமான
சனீஷ்வர பகவான் எழுந்தருளியிருக்கும் திருநள்ளாறு கோவில்,
புதுச்சேரி யூனியன் டெரிட்டரியில்உள்ள காரைக்கால் பகுதியைச்
சேர்ந்த காரைக்காலுக்கு அருகில் 5 கிலோ மீட்டர் தூரத்தில்உள்ளது.
இது புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்ப்பதாகும்.

இந்த கோவிலுள்ள மரகத லிங்கத்திற்கு தினமும் பகல்
பனிரண்டு மணியளவில்,அபிஷேகம் நடைபெறுகிறது.
பூஜை முடிந்த பின்பு லிங்கத்தின் மீது சந்தனம் வைத்து,
லிங்கத்தினை ஒரு பாதுகாப்புப் பெட்டகத்தில்(ஒரு சாவி
கோவில் நிர்வாகி இடமும்,மற்றொரு சாவி கோவில்
ஐயரிடமும் இருக்கும்)வைத்துப் பாதுகாப்பாக பூட்டி
வைக்கிறார்கள்.
அடுத்த நாள் அபிஷேகம் செய்வதற்கு மரகத லிங்கத்தினை
எடுத்ததும் முதல் நாள் லிங்கத்தின் மீது சாத்தியிருந்த சந்தனத்தை,
அபிஷேகம் முடிந்ததும் தரிசனம் செய்ய வந்திருக்கும் அங்குள்ள
பக்தர்களுக்குக் கொடுத்து விடுகிறார்கள்.இந்த சந்தனத்திற்கு
நோய் தீர்க்கும் வல்லமை உண்டு என்று கூறுகிறார்கள்.

தாங்கள் தெரிவித்துள்ள திருவாரூர், திருக்குவளை, திருக்காரைவாசல்,
திருமறைக்காடு, திருநாகை, திருநள்ளாறு, திருவாய்மூர் ஆகிய
ஏழு தலங்களிலும் மரகதலிங்கம் உள்ளதாகவும் திருநள்ளாற்றில் உள்ள
மரகத லிங்கம் தனிச்சிறப்பு உடையது என்றும் கூறுகிறார்கள்.

சனீஷ்வரனுக்கான மந்திரம்,காயத்ரி மந்திரம்,ஸ்தல வரலாறு,உகந்தவைகள்,
பரிகாரம்,ஜோதிடத்தில் சனீஷ்வர பகவான்- யாவும் மிக அருமையாக
கொடுத்துள்ள
தங்களுக்கு மிக்க நன்றி.

வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்

வ.தட்சணாமூர்த்தி

2010-06-09

SP Sanjay said...

ஸ்தல வரலாறு / புராணம் அருமை!

பல முறை சென்று வந்துள்ளேன் ...

நன்றி !!

astroadhi said...

அய்யா வணக்கம்.....

சனி பகவான் தளம் பற்றிய உங்கள் பதிவு சிறப்பு....ஒரு சந்தேகம் அய்யா...எனக்கு ஒருவர் சனி காயத்ரி மந்திரம் என்று சொல்லிகொடுத்தார் காகத்வஜயா வித்மஹே கட்க ஹச்தாய தீமஹே தந்நோ மந்த பிரஜோதயாத் என்று இருந்தது அந்த சுலோகம்.....இந்த சுலோகம் சரியானதா அய்யா?

SP.VR. SUBBAIYA said...

/////Alasiam G said...
ஆஹா! அற்புதம்!! அருமை!!! துயர்தீர்க்கும் மருந்து,
துன்பத்தை விரட்டும் சூரியப் புத்திரன்,
கரியவண்ணன், காகவாகணன், செங்கண்ணன், ஸ்ரீங்கார திருநள்ளாறு உறை
சனீஸ்வரன் பற்றிய விளக்கங்களுக்கு நன்றிகள் குருவே!////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
திருநள்ளாறு கோவிலின் கோபுரத் தோற்றம் மற்றும் சனீஷ்வர பகவான் படங்கள் மிகவும் நன்றாக உள்ளது.
புதுச்சேரி யூனியன் டெரிட்டரி பிரஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்து வந்த இடமாகும்.இதற்கு முன்பு புதுச்சேரி,காரைக்கால் பகுதிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவைகளாகும்.
புதுச்சேரி யூனியன் டெரிட்டரியில்: புதுச்சேரி,காரைக்கால் (தமிழ் நாடு), மாஹே(கேரளா),ஏனாம்(ஆந்திரா) ,சந்திரநாகூர்(மேற்கு வங்காளம்)ஆகிய இடங்கள் இருந்தது.
சந்திரநாகூர்,அரசு நிர்வாகக் காரனங்களுக்காகவும்,அங்குள்ள மக்களின் விருப்பப் படியும் மக்களிடம் வாக்கெடுப்பினை நடத்திய பின்பு , அவர்களின் பெரும்பான்மையோரின் விருப்பப்படி,மேற்கு வங்காள மாநிலத்துடன் இணைக்கப்பட்டுவிட்டது.
நவக்கிரக ஸ்தலங்களின் வரலாற்றில் சனீஷ்வர பகவானுக்கு என்று உள்ள ஒரே ஸ்தலம் என்ற பெருமை வாய்ந்த இடமான சனீஷ்வர பகவான் எழுந்தருளியிருக்கும் திருநள்ளாறு கோவில், புதுச்சேரி யூனியன் டெரிட்டரியில்உள்ள காரைக்கால் பகுதியைச் சேர்ந்த காரைக்காலுக்கு அருகில் 5 கிலோ மீட்டர் தூரத்தில்உள்ளது.
இது புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்ப்பதாகும்.இந்த கோவிலுள்ள மரகத லிங்கத்திற்கு தினமும் பகல்
பன்னிரண்டு மணியளவில்,அபிஷேகம் நடைபெறுகிறது.பூஜை முடிந்த பின்பு லிங்கத்தின் மீது சந்தனம் வைத்து,
லிங்கத்தினை ஒரு பாதுகாப்புப் பெட்டகத்தில்(ஒரு சாவி கோவில் நிர்வாகி இடமும்,மற்றொரு சாவி கோவில்
ஐயரிடமும் இருக்கும்)வைத்துப் பாதுகாப்பாக பூட்டி வைக்கிறார்கள்.
அடுத்த நாள் அபிஷேகம் செய்வதற்கு மரகதலிங்கத்தினை எடுத்ததும் முதல் நாள் லிங்கத்தின் மீது சாத்தியிருந்த சந்தனத்தை, அபிஷேகம் முடிந்ததும் தரிசனம் செய்ய வந்திருக்கும் அங்குள்ள
பக்தர்களுக்குக் கொடுத்து விடுகிறார்கள்.இந்த சந்தனத்திற்கு நோய் தீர்க்கும் வல்லமை உண்டு என்று கூறுகிறார்கள். தாங்கள் தெரிவித்துள்ள திருவாரூர், திருக்குவளை, திருக்காரைவாசல், திருமறைக்காடு, திருநாகை, திருநள்ளாறு, திருவாய்மூர் ஆகிய ஏழு தலங்களிலும் மரகதலிங்கம் உள்ளதாகவும் திருநள்ளாற்றில் உள்ள மரகத லிங்கம் தனிச்சிறப்பு உடையது என்றும் கூறுகிறார்கள்.
சனீஷ்வரனுக்கான மந்திரம்,காயத்ரி மந்திரம்,ஸ்தல வரலாறு,உகந்தவைகள்,
பரிகாரம்,ஜோதிடத்தில் சனீஷ்வர பகவான்- யாவும் மிக அருமையாக
கொடுத்துள்ள தங்களுக்கு மிக்க நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி////

மரகதலிங்கம் பற்றிய உங்கள் விளக்கத்திற்கும், நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி தட்சணாமூர்த்தி!

SP.VR. SUBBAIYA said...

////SP Sanjay said...
ஸ்தல வரலாறு / புராணம் அருமை!
பல முறை சென்று வந்துள்ளேன் ...
நன்றி !!////

நல்லது. நன்றி சஞ்சை!

SP.VR. SUBBAIYA said...

/////astroadhi said... அய்யா வணக்கம்.....
சனி பகவான் தளம் பற்றிய உங்கள் பதிவு சிறப்பு....ஒரு சந்தேகம் அய்யா...எனக்கு ஒருவர் சனி காயத்ரி மந்திரம் என்று சொல்லிகொடுத்தார் காகத்வஜயா வித்மஹே கட்க ஹச்தாய தீமஹே தந்நோ மந்த பிரஜோதயாத் என்று இருந்தது அந்த சுலோகம்.....இந்த சுலோகம் சரியானதா அய்யா?/////

நான் படித்த நூலில் இருந்து கொடுத்ததுதான் பதிவில் உள்ளது. அவர் எங்கிருந்து இதைப் பிடித்தார் என்று தெரியவில்லை. என்ன கெட்டுவிடப்போகிறது? இரண்டையும் பாராயணம் செய்யுங்கள்!

ananth said...

தாங்கள் கொடுத்ததும் ஆஸ்ரோ ஆதி கொடுத்ததும் இரண்டுமே சரியான காயத்திரி மந்திரங்கள்தான். சனி பகவானுக்கு மட்டுமல்ல நவகிரகங்களுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட காயத்திரி மந்திரங்கள் உள்ளன.

பெருஞ்சனி பாம்பிரண்டும் பிற்பலனை செய்வார்கள் என்பதற்கொப்ப சனி பகவானும் இரண்டு பாம்புகளான ராகு கேதுக்களும் தங்கள் தசா புத்திகளில் பிற்பகுதியில்தான் பலன் தருவார்கள்.

//ஜாதகத்தில், சனி பகவான் நீசம் பெற்றுள்ளவர்களும், வக்கிரகதி அடைந்துள்ளவர்களும், சனீஷ்வரன் மறைவிடங்களில் அமர்ந்துள்ளவர்களும், மேலும் கோள்சாரப்படி, ஏழரைச்சனி, மற்றும் அஷ்டமச்சனி நடைபெறும் நிலையில் உள்ளவர்களும், இங்கே வந்து வணங்கிச் செல்வது நலன் பயக்கும்.//

இந்த வரிசையில் அஸ்தங்கத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். என் ஜாதகத்திலும் அஸ்தமனமாகிதான் இருக்கிறார். இதற்கான பலன்கள் என்று நான் படித்ததில் சில. self made man and secretive. Material lifeகான சனியின் குணங்கள் சூரியனால் எரிக்கப் பட்டு spiritual lifeகான சனியின் குணங்கள் மேம்படும். இதுவும் ஜாதகத்தின் மற்ற அம்சங்களைப் பொருத்ததுதான்.

Arulkumar Rajaraman said...

Dear Sir

we got lot of information about Sanishwarar and Thirunallaru.

Thank you

Regards
Arulkumar Rajaraman

Subbaraman said...

Nandri ayya..

kmr.krishnan said...

தாங்கள் கொடுத்துள்ள சனீஸ்வர காயத்ரியில் "மண்ட" என்பது " மந்த"என்று
இருக்க வேண்டும் அய்யா! 'மந்த' என்பது மந்த‌மான என்றே பொருள்
படும். ஸ‌ப்த என்றால் ஏழு. டங்கம் என்றால் உளி. விடங்கம் என்றால்
உளியற்ற என்று பொருள்.அந்த ஏழூர் கோவில்களிலும் உள்ளவை உளியில்லாமல் உருவான சுயம்புவான லிங்க மூர்த்தங்கள்.இந்திரன் ஒரிஜினல்
லிங்க‌த்தை முஸுகுந்த சக்கரவர்த்திக்குத் தராமல் ஏழுமுறை ஏமாற்றுகிறார்.
மனம் தளராமல் முஸுகுந்தர் ஏழுமுறை இந்திர லோகம் சென்று ஒவ்வொருமுறை பெற்ற லிங்கத்திற்கும் ஒரு கோயில் கட்டினார். அவையே
ஸப்த விடங்க க்ஷேத்திரங்கள்! ‌‌

SP.VR. SUBBAIYA said...

////ananth said...
தாங்கள் கொடுத்ததும் ஆஸ்ரோ ஆதி கொடுத்ததும் இரண்டுமே சரியான காயத்திரி மந்திரங்கள்தான். சனி பகவானுக்கு மட்டுமல்ல நவகிரகங்களுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட காயத்திரி மந்திரங்கள் உள்ளன.
பெருஞ்சனி பாம்பிரண்டும் பிற்பலனை செய்வார்கள் என்பதற்கொப்ப சனி பகவானும் இரண்டு பாம்புகளான ராகு கேதுக்களும் தங்கள் தசா புத்திகளில் பிற்பகுதியில்தான் பலன் தருவார்கள்.
//ஜாதகத்தில், சனி பகவான் நீசம் பெற்றுள்ளவர்களும், வக்கிரகதி அடைந்துள்ளவர்களும், சனீஷ்வரன் மறைவிடங்களில் அமர்ந்துள்ளவர்களும், மேலும் கோள்சாரப்படி, ஏழரைச்சனி, மற்றும் அஷ்டமச்சனி நடைபெறும் நிலையில் உள்ளவர்களும், இங்கே வந்து வணங்கிச் செல்வது நலன் பயக்கும்.//
இந்த வரிசையில் அஸ்தங்கத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். என் ஜாதகத்திலும் அஸ்தமனமாகிதான் இருக்கிறார். இதற்கான பலன்கள் என்று நான் படித்ததில் சில. self made man and secretive. Material lifeகான சனியின் குணங்கள் சூரியனால் எரிக்கப் பட்டு spiritual lifeகான சனியின் குணங்கள் மேம்படும். இதுவும் ஜாதகத்தின் மற்ற அம்சங்களைப் பொருத்ததுதான்./////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

SP.VR. SUBBAIYA said...

////Arulkumar Rajaraman said...
Dear Sir
we got lot of information about Sanishwarar and Thirunallaru.
Thank you
Regards
Arulkumar Rajaraman////

நல்லது. நன்றி ராஜாராமன்!

SP.VR. SUBBAIYA said...

/////Subbaraman said...
Nandri ayya..////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////kmr.krishnan said...
தாங்கள் கொடுத்துள்ள சனீஸ்வர காயத்ரியில் "மண்ட" என்பது " மந்த"என்று
இருக்க வேண்டும் அய்யா! 'மந்த' என்பது மந்த‌மான என்றே பொருள்
படும். ஸ‌ப்த என்றால் ஏழு. டங்கம் என்றால் உளி. விடங்கம் என்றால்
உளியற்ற என்று பொருள்.அந்த ஏழூர் கோவில்களிலும் உள்ளவை உளியில்லாமல் உருவான சுயம்புவான லிங்க மூர்த்தங்கள்.இந்திரன் ஒரிஜினல்
லிங்க‌த்தை முஸுகுந்த சக்கரவர்த்திக்குத் தராமல் ஏழுமுறை ஏமாற்றுகிறார்.
மனம் தளராமல் முஸுகுந்தர் ஏழுமுறை இந்திர லோகம் சென்று ஒவ்வொருமுறை பெற்ற லிங்கத்திற்கும் ஒரு கோயில் கட்டினார். அவையே ஸப்த விடங்க க்ஷேத்திரங்கள்! ‌‌////////

மந்த என்ற சொல்லைப் பதிவில் மாற்றிவிட்டேன். விடங்கம் என்னும் சொல்லிற்கான விளக்கத்திற்கும், மேலதிகத் தகவல்களுக்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

Srinivasan Krishnamoorthy said...

மேலே குறிப்பிட்ட கோயிலும் சப் விடத்தலங்களில் ஒன்றாகும்.சப்தவிடத்தலங்களுக்கு செல்லும் வழி தெரிவிக்கவும்